வணக்கண்ணோவ் . . . . .

by Rajesh November 30, 2009   Announcements

Sharing is caring!

எல்லாருக்கும் வணக்கம். நான். . கருந்தேள் கண்ணாயிரம். அது ஒண்ணுமில்லீங்கண்ணா . .நாம ரொம்ப நாளா ஒரு இங்கிலீசு ப்ளாக்கு போட்டுகினு இருந்தோம்.ஏதோ நாலு படம் பார்த்தோமா அத பத்தி ஒரு நாலு வரி எளுதினோமான்னு. அதுல பாருங்க, எளுதிக் கிளிக்க ஆரம்பிச்சதுல இருந்தே அந்த மொளிலயே எளுதிக்கினு இருந்துட்டோம். இப்ப திடீர்னு ஒரு எண்ணம். என்னடா தமிள்ல எளுதித்தான் பார்ப்பமே களுதன்னு. . .அத்தோட நம்ம ஆலிவுட்டு பாலாவும், தமிள்ல எளுதுடாங்கொக்க மக்கான்னு சொல்லிகினே இருந்தாரா . . சரி எளுதீர வேண்டியதுதான்னு வந்தாச்சு. . .இதோ இப்பத்தான் இந்த டெம்ப்ளேட்டு, லொட்டு லொசுக்குன்னு எல்லாத்தயும் முடிச்சேன். . இதுதான் நம்ம மொதல் தமிள் பதிவு.

இனிமே, ரெண்டு பிளாக்குலேயும் படங்கள பத்தின விமரிசனத்த எதிர்பாக்கலாம் (‘இவம்பெர்ர்ர்ர்ரிய விமர்சகன்.. . கால்மேல காலு போட்டுகினு உக்காந்த எடத்துலயே ஒளரிக்கிளிக்கப்போரான்’ அப்புடீன்னு நெனைக்குரீங்களா . . உங்க எண்ணம் சரிதானுங்கோ . .. நாம தமிழனாச்சே . . .தமிளனுக்கு, ஊர்வம்பு பேசுறதுல ஒரு தனி சொகம் இருக்கத்தான் செய்யுது) . .

சரி . . ஆட்டத்த ஆரம்பிப்போம். . . இதோ இப்பதான் ஒரு படம் பார்த்தேன் . . அத பத்தி எளுதி நம்ம அத்தியாயத்தத் தொடங்குவோம் . . .

டிஸ்கி:- இந்த பிளாக்குல வர்ர மேட்டர் எல்லாமே நம்ம தனிப்பட்ட எண்ணந்தானுங்கோ . . அது யாரு மனசயாவது காயப்படுத்திருச்சுன்னா, நமக்கு ஒரு பின்னூட்டமோ இல்லாட்டி ஒரு மெயிலோ போட்டீங்கன்னா, சரி பண்ணிரலாம் . . .ரைட்டா . . .

Sharing is caring!

fb Comments

comments

  Comments

6 Comments

 1. அடிச்சி தூள் கெளப்புங்கண்ணா…! 🙂

  விமர்சனமெல்லாம்.. சும்மா கருந்தேள் மாதிரியே கொட்டணும். 🙂 🙂

  வாழ்த்துகள்.! 🙂

  அப்படியே.. தமிழ்மணம் & தமிழிஷ் பட்டைகளை இணைச்சிட்டீங்கன்னா… ஒரு முழுமையான.. தமிழ் ப்லாகராய்டுவீங்க.

  Reply
 2. வாழ்த்துகளுக்கு நன்றி பாலா . .பின்னிடுவோம் !! 🙂 நீங்க சொன்ன பட்டைகள இப்போ இணைக்க போறேன் . . மறுபடியும் நன்றி . .

  Reply
 3. வாழ்த்துக்கள்… இதுலயாச்சும் அடிக்கடி எழுதுங்க…

  Reply
 4. எப்படி ஆரம்பிச்ச விஷயம் 😉

  Reply

Join the conversation