பியா ஹாஜி அலி . . .

by Rajesh February 11, 2010   Song Reviews

அர்ஸியா(ன்) பாடலைப் பற்றிய எனது சென்ற பதிவை, தனது வலைத்தளத்தில் வெளியிட்ட நமது சாருவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல பேர் நமது தளத்தை வந்து பார்க்க அது உதவியது. மட்டுமல்லாது, அவருக்கும் அது பிடித்தது பற்றி மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சாரு.

இதோ அந்த வரிசையில் அடுத்த பாடல். உண்மையில், ரஹ்மானின் மூன்று முத்திரைப் பாடல்களில், இது தான் முதலாவது. 2000ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிஸா’ என்ற படத்தில் வரும் பாடலே இது. இதன் எல்லாப் பாடல்களையும் இசையமைத்தவர், அனு மாலிக். ரஹ்மானின் பல தமிழ்ப் பாடல்களை ஹிந்தியில் முதன்முதலில் ஈயடிச்சாங்காப்பி அடித்த பெருமை இவரையே சேரும். இந்த ‘பியா ஹாஜி அலி’ பாடலை மட்டும் ரஹ்மான் இசையமைத்திருப்பார். அதன் அனைத்துப் பாடல்களும் சாதாரண மசாலாப் பாடல்களாக இருக்க, இசையிலும், குரலிலும், அனுபவத்திலும் ஒரு அற்புதமான படைப்பாக இப்பாடல் அமைந்திருப்பது, ரஹ்மானால் மட்டுமே.

ஹாஜி அலி தர்கா என்பது மும்பையில் சையத் பீர் ஹாஜி அலி ஷா புகாரி என்ற முஸ்லிம் வணிகரால் 1431ல் கட்டப்பட்ட மசூதி. தனது சொத்துக்களையெல்லாம் தானம் செய்துவிட்டு, மெக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உலகெங்கிலும் சுற்றிய ஒரு முஸ்லிம் துறவி அவர். அவரைப் பற்றிய பல அற்புதமான கதைகள் உலவுகின்றன. ஒவ்வொரு நாளிலும் ஆயிரக்கணக்கானவர்களால் தொழப்படும் ஒரு மசூதி அது.

இந்த ஹாஜி அலியைப் பற்றிய பாடலே ‘பியா ஹாஜி அலி’. படத்தில், ஹ்ருத்திக் ரோஷன் கரிஷ்மா கபூரைத் தேடி இந்த மசூதிக்கு வரும்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு பாடல் இது.

இந்தப் பாடல், ஹாஜி அலியைப் போற்றும் ஒரு பாடல். கேட்பதற்கு மிகவும் இனிமையான ஒரு மெட்டில், அருமையான வரிகள் இசைந்து வரும் ஒரு இனிய அனுபவம். இதோ மொழிபெயர்ப்பு.

இப்படலைப் பாடியவர்கள், ரஹ்மானும் குலாம் முஸ்தஃபாவும், நம் ஸ்ரீனிவாஸும்.

பாடலை இந்தச் சுட்டியில் தரவிறக்கிக் கொள்ளலாம் (டவுன்லோட்).

இறைவன், அவரது தோழர்கள் பரிந்துரைக்கும்போது, ஒப்புக் கொள்வார் . .

இந்த வாயிலில் இருந்து, நமக்கு விடுதலையும், நம்பிக்கையும் கிடைக்கும் . .

உங்கள் இதயத்தின் அடியாழத்திலிருந்து கேளுங்கள் . . இது ஹாஜி அலியின் இடம் . .

ஹாஜி அலி, கடவுளின் நண்பர் . .

சமுத்திரங்களின் அரசரே . . ஹைதரின் தோன்றலே . .

ஒரே ஒரு பார்வை பாருங்கள் . .

விருப்பத்திற்குறிய ஹாஜி அலியே . . நீங்களே சமுத்திரங்களில் அடங்கியுள்ள புதையலாகும் . .

உங்களது இந்தக் வாயில், ஒரு தூய்மையான, சக்திவாய்ந்த, விருப்பத்திற்குறிய வாயிலாகும் . .

ஒளி மிகுந்தவரே . . இயல்பானவரே . . கள்ளங்கபடம் இல்லாதவரே . .

உங்கள் நிழலை எங்கள் அனைவரின் மேலும் படர விடுங்கள் . .

இங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவருக்கும் வேண்டியது கிடைக்கிறது . .

இந்த சமுத்திரம், உங்களது வாயிலைத் தினந்தோறும் காக்கிறது . .

உங்கள் திருமுகம், ஒளி நிரம்பியதாக இருக்கிறது . .

(பியா ஹாஜி அலி . . . )

முஹம்மது முஸ்தஃபாவின் பெயரால் தானம் செய்யுங்கள் . .

இந்த வாயிலில் இருந்து ஒருவரும் மனமுடைந்து திரும்பியதில்லை . .

ஓ துறவியே . . ஒருவரும் மனமுடைந்து திரும்பியதில்லை . .

ஒருவரது இதயத்தில் மறைந்திருப்பது அனைத்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் . .

உங்கள் மேன்மைக்குரிய செயல்களை, சொர்க்கத்திலிருப்பவர்களும் வியந்து போற்றுகின்றனர் . .

ஏழைகளாகிய எங்களின் கதறல்களைச் செவிமடுத்து, எங்கள் மேல் உங்களது அருளைப் பொழியுங்கள் . .

(பியா ஹாஜி அலி . . . )

அகிலம் முழுவதும், உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறது . .

கொடும் விதியும், உங்களது வாயிலில், நல்லதிர்ஷ்டமாக மாறுகிறது . .

எனது வேண்டுதல்கள் நிறைவேறாமல் இருக்கும் வரை, எனது வாழ்வு உங்கள் வாயிலில் நின்று கண்ணீர் வடிக்கும் . .

துறவியே . .எவரெல்லாம் உங்களுடையவர்கள் ஆகிவிட்டனரோ, அவர்களிடம் கர்வமும், கொடுமதியும் ஏது?

(பியா ஹாஜி அலி . . . )

இத்துடன் பாடல் முடிகிறது . . இப்பாடலை இரவில், நிசப்தத்தில் கேட்டுப் பாருங்கள் . . கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும் . .

அடுத்து, கரீப் நவாஸ் (க்வாஜா மேரே க்வாஜா) பாடலோடு உங்களைச் சந்திக்கிறேன். .

fb Comments

comments

  Comments

20 Comments

 1. இதோ கோவைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் . .எனவே, நாளைக் காலையில் தான் பின்னூட்டங்களுக்கு மறுமொழி . . நாளை சந்திப்போம் பாஸு ..பை பை . .

  Reply
 2. நண்பரே,

  சாருவைக் கவர்ந்ததற்குப் பாராட்டுக்கள். நல்லதொரு மொழிபெயர்ப்பு. அடுத்த மொழிபெயர்ப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  Reply
 3. சாருவே பாராட்டிருக்காரா? அவரு திட்ட மட்டுமதானே செய்வாரு,
  சூப்பர் தல… அடுத்தது இன்னும் ஒரு நல்லபாட்டோட வாங்க…

  Reply
 4. நண்பரே,உங்களைபோன்ற அற்பபதர்களையெல்லாம் மேலே தூக்கிவிடும்,சாருவின் பெயரைச்சொல்லி முன்னேற துடிக்கும் உங்களை போன்ற அல்பங்களை நினைத்தால் என் நெஞ்சம் பதறுகிறது.சாருவின் கு(ஞ்)சுவிற்கு ஈடாகுவீர்களா நீங்கள்…..கடப்பாரை கந்தன்.

  Reply
 5. இந்தப் பாட்டும் கேட்டதே இல்லையே? எப்படி நம்மாளு பாடலை மிஸ் செய்தேன்? அந்தப் படத்துல சுஷ்மிதா ஆடுற பாட்டத் தான் கேட்டிருக்கேன். 🙂

  ரஹ்மான் தான் பரசுராம்னு ஒரு மொக்க படத்துக்கு இசைன்னு சமீபத்தில கேள்வி படுறேன்.. எ.கொ.ச.இது? இது ரஹ்மானெனத் தெரியுமா? ரொம்ப இன்சிக்னிஃபிகண்டான் ஆல்பம்… யாருக்கும் இது தெரியல

  Reply
 6. சென்ற பதிவு போலவே இதுவும் சூப்பர்.சூஃபி பாட்டு அனைத்தும் எழுதிவிடுங்கள்.நன்றி

  Reply
 7. Anonymous

  @ கடப்பாரை கந்தன்
  இதுக்கு என்ன ராசா பதில் சொல்லுற

  Reply
 8. viki

  இந்த ஒன்றையன்னா இசை விமர்சகன் ஷாஜிக்கும் மற்றும் சாருவிற்கு இளையராஜா தவிர யாரை புகழ்ந்தாலும் பிடிக்கும்.கேட்டால் இளையராஜா எத்தனை மக்களை வாழவைத்தார் அவருக்கு மனித நேயம் இல்லை என்றெல்லாம் பிதற்றுவர் .(என்னமோ ஏ ஆர் ரகுமான் தினம் நூறு குடும்பத்துக்கு சோறு போடுவது போல!!)இசைக்கும் மனித நேயத்திற்கும் முடித்து போட்ட இவ்விரு மேதைகளை என் சொல்வது?ஆனால் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மைக்கேல் ஜாக்சனை ஆஹா ஓஹோ என்று புகழ்வார்.மேலும் ராஜாவின் தனிப்பட்ட மத நம்பிக்கையை கேலி செய்து எழுதிய ஷாஜி உயிர்மையில் பல வாசகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார்.மனித நேயத்தின் கலங்கரை விளக்கு என இவர்கள் புகழும் ஏ ஆர் ரகுமான்தான் ஆஸ்திரேலியாவில் பல இந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் தனது இசை நிகழ்ச்சியை ரத்து செய்யாமல்(அது வேறு இது வேறு என்றார்)நடத்தியவர் ..ஹ்ம்ம் என்ன சொல்ல ..யாரையும் தாக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல..(நானும் ரகுமான் ரசிகன்தான்)ஆனால் இவர்கள் விமரிச்க்கும் பொது இசையை விமரிசிக்காமல் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்கும் போதுதான்இவ்வாறு எழுத வேண்டியுள்ளது

  Reply
 9. It is surprise to see that people like u all comments ARRahman songs. That too Haji Ali song and next you are going to Khawaja mere…Ya Allah save from these bloggers!

  Reply
 10. சாருவை கவர்ந்தமைக்கு பாராட்டுகள் ராஜேஷ்.. 🙂

  Reply
 11. பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
  வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
  உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

  http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html

  Reply
 12. ஊருக்குப் போயிட்டு இன்னிக்கி தான் வந்தேன் . .அதான் இன்னும் எந்தப் பின்னூட்டத்துக்கும் பதில் போட முடியல. . இதோ பதில் . .

  @ காதலரே – அடுத்த மொழிபெயர்ப்பு இதோ இன்னும் சில மணித்துளிகளில் . .புதிய ரிலீஸ் . .:-)

  @ அண்ணாமலையான் – எல்லாம் உங்க வழி தான் தல . .அதிர்ரதுல . .:-)

  @ நாஞ்சில் பிரதாப் – அவரு பாராட்டவும் செய்வாரு பாஸு . .:-) நல்ல பாட்டு இதோ இன்னும் சில மணி நேரத்துல . .:-)

  @ கடப்பாரை கந்தன் – நீ தொடப்பக்கட்டையோட உறவு தானே . . 🙂 . .

  அதாவது கழுத மேய்கிற பையனுக்கு இவ்வளவு
  அறிவான்னு எல்லாருக்கும் பொறாம…
  நீ சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துலேயே உக்காந்துக்க…
  உனக்கு பின்னால வர்ற சந்ததிகள்
  அத பாத்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க…. 🙂

  @ பப்பு – இது ரொம்ப நாளு முன்னால வந்துச்சி . .அதான் மிஸ் பண்ணிருப்பீங்க . .அப்பறம், அந்த பரசுராம் மேட்டர் கரிகிட்டு தான் . .அது ஏதோ தமாசுக்கு நம்ம தல போட்டுட்டாரு . .:-)

  @ மயில் – மிக்க நன்றி . .இதோ அடுத்த பாடல் . .

  @ அனானி- ப்ரீயா உடு மாமு . .அவன் கெடக்குறான் . .

  @ விக்கி – தனிப்பட்ட கருத்துக்களை எனக்கு மெயிலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன் . . இது சாருவைப் பற்றிய பதிவு அல்ல. . நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு சாருவே பல முறை பதில் சொல்லியிருக்கிறார். . இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்களுக்கு, மனுஷ்யபுத்திரன் இந்தமாத உயிர்மையில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். . அதுதான் எனது கருத்தும். . ஒரு விஷயத்தைப் பற்றி எல்லா விமர்சனங்களும் வைக்கப் பட வேண்டும். அத்தனைக் கருத்துகளும் விவாதிக்கப்பட வேண்டும். சாரு இளையராஜாவைப் பற்றி சொல்லியுள்ள கருத்துகள் அவரது விமர்சனம். அதற்காக உடனே அவரை நாம் தாக்க வேண்டும் என்பது அவசியமல்ல. நீங்கள் சொல்லியுள்ளபடி, யாரையும் நாம் தாக்க வேண்டாமே. . சாரு, பொதுவான இசையைப் பற்றியும் பல எழுதியுள்ளார். அந்த இசையமைப்பாளர்கள் கொண்டுள்ள பார்வையைப் பற்றி அவர் எழுதும்போது, அவர்களது நிலைப்பாட்டைப் பற்றி எழுத வேண்டியதாகிறது. ஆனால், அவர்மேல் தனிப்பட்ட காழ்ப்பு எதுவும் சாருவிற்கு இல்லை. அது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு மெயில் செய்தால், நாம் இன்னும் நல்ல முறையில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள அது உதவும். நன்றி . .

  @ Thameez – உங்க பிரச்னை என்ன? ரஹ்மானின் பாடல்களைப் பற்றி எழுதுவது யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு ஏதேனும் வரையறை நிர்ணயிக்க நீங்கள் முற்பட்டால், அது சிறுபிள்ளைத் தனம். ஏன் இப்புடி காமெடி பண்ணிகினு இருக்கீங்க . .:-) ஏதோ நீங்க பெர்ர்ர்ரிய கடவுள் மாதிரி இல்ல கமென்ட் பண்ணிருக்கீங்க. . மொதல்ல உங்க ப்ளாக்ல ஒரு எழுத்தாவது எழுதுங்க. . அப்பறம் மத்த பிளாக்கர்கள பத்தி திருவாய் மலரலாம் .. இந்த இலவச தீர்ப்புகள மொதல்ல நிறுத்துங்க . .:-)

  @ ரகுநாதன் – மிக்க நன்றி . . இது அவரோட பெருந்தன்மை . .

  @ ILLUMINATI – இதோ வந்தாச்சு . .. 🙂

  @ கார்த்திக் – எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே . .:-)

  Reply
 13. ஹி ஹி…, இந்த சூஃபி பட்டெல்லாம் நமக்கு தெரியாது.., நெக்ஸ்ட் வரேன்

  Reply
 14. @ பேநா மூடி – கவலையே படாதீங்க தல . .இதோ முடிஞ்சாச்சு . . இனிமே படங்கள் தான் . . :–)

  @ நினைவுகளுடன் -நிகே – நன்றி உங்கள் கருத்துக்கு . . அடிக்கடி வாருங்கள் . .

  Reply
 15. “தீன் இசை மழை” என்ற ஒரு இஸ்லாமிய பாடல் தொகுப்பு ‘ரோஜா’ படம் வருவதற்கு முன் ரஹ்மானால் இசையமைக்கப் பட்டு வெளியிடப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் பாடலின் கச்சாவான பதிப்பு அந்த தொகுப்பில் உள்ளது…

  Reply
 16. @ பிரசன்னா – மிக்க நன்றி . . அந்த இசைத்தொகுப்பு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் . . ஆனால் அது ரோஜாவுக்குப் பின் அல்லவா வந்தது? எனிவே , அதைப் பற்றி நெட்டில் தேடுகிறேன் . . கிடைத்தால் டௌன்லோட் செய்து கேட்பேன் . . ஆல்பத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி . .

  Reply

Join the conversation