Collateral (2004) – English

by Rajesh February 24, 2010   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

இந்தப் படத்தைப் பற்றி, நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இங்கு எழுதப்படுவது, நம் வலைத்தளத்தில் தரமான action படம் ஒன்று இடம்பெற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டன. மட்டுமல்லாமல், திரைக்கதை அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தின் பல காட்சிகள் விளங்குகின்றன. எனவே, இன்று இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

மைக்கேல் மேன்.

ஹாலிவுட்டின் தரமான action பட இயக்குநர்களில் ஒருவர். சுவாரஸ்யமாக ஒரு அதிரடிப் படத்தை எடுப்பது எப்படி என்பதற்கு இவரது படங்களைப் பார்த்தாலே போதும். உதாரணம் – ஹீட், லாஸ்ட் ஆஃப் த மொஹிகன்ஸ், மியாமி வைஸ், த இன்சைடர் போன்ற பல படங்கள். விறுவிறுப்பு சற்றும் குறையாத அதே நேரத்தில், கதையிலும் கோட்டை விட்டு விட மாட்டார். பல முன்னணி சினிமாப் பத்திரிக்கைகளின் சர்வேயில், தவறாமல் முதல் பத்துக்குள் ஒரு இடத்தைப் பிடிக்கும் இயக்குநர் இவர். நம்ம ஹான்னிபல் லெக்டர் சீரீஸில் (அனஃபிஷியலாக) முதல் படத்தை எடுத்த பெருமை இவரையே சேரும். 1986ல், தாமஸ் ஹாரிஸின் நாவலான ரெட் ட்ராகனை, மேன் ஹண்டர் என்ற பெயரில் படமாக எடுத்தார். ரீசண்டாக வெளிவந்த படத்தை விட, இவர் எடுத்த படம் தான் சூப்பர் என்று மொத்த இணையதளமும் சத்தியம் செய்கிறது.

டாம் க்ரூஸ்.

ஹாலிவுட்டின் அழகான நடிகர்களில் முதலிடம் இவரையே சேரும். க்யூட், சாக்லேட் பேபி, அமுல் பேபி என்ற பதங்களுக்கெல்லாம் ஒரிஜினல் சொந்தக்காரர். என்னதான் ஜாலியான முகத்தையே வைத்துப் பல படங்களில் நடித்தாலும், இவருக்குள்ளும் ஒரு நல்ல நடிகன் உண்டு (உதா: ஐஸ் வைட் ஷட், லாஸ்ட் சாமுராய், ரெய்ன்மேன், வா(ல்)கைர்) . . ஒரு நல்ல இயக்குநர் கையில் இவர் கிடைத்தால், இவரை வைத்து(ம்) நல்ல படங்கள் கொடுக்கலாம் என்பது ஹாலிவுட் சங்கதி.

ஜாமி ஃபாக்ஸ்.

தனது வாழ்க்கையை ஒரு காமெடியனாகத் துவக்கியவர். மெல்ல மெல்ல ஹாலிவுட்டில் கால் பதித்து, நல்ல நடிகர் என்று அறியப்பட்டவர். ‘ரே’ படத்துக்காக ஆஸ்கர் வாங்கியவர். இந்தக் கொலாட்டரலிலேயே, சிறந்த துணை நடிகருக்காக நாமிநேட்டானவர். அதுவும், ஒரே வருடத்தில், நடிப்புக்காக இரண்டு நாமிநேஷன்களை வாங்கிய இரண்டாவது நடிகர் (முதல் நடிகர்: அல் பசீனோ) – படங்கள்: ரே – சிறந்த நடிப்பு, கொலாட்டரல் – சிறந்த துணை நடிகர்.

இந்த மூன்று பேரும் சேர்ந்தால் – வேறு என்ன? அட்டகாசமான அதிரடி சரவெடி – கொலாட்டரல்.

இடம்: லாஸ் ஏஞ்சலீஸ். நாள் – ஜனவரி 24 2004 – இரவு ஆறரையிலிருந்து , மறுநாள் விடியற்காலை 5.40 மணி வரையில்.

மேக்ஸ் (ஜேமி ஃபாக்ஸ்) – ஒரு டாக்ஸி ட்ரைவர். லாஸ் ஏஞ்சலீஸில் இரவுகளில் டாக்ஸி ஓட்டுபவன். ஒரு பெரிய பிஸினஸைத் தொடங்குவதற்காக இரவு பகலாகப் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பவன். ஒரு அழகான பயணியான ஆன்னீ ஃபேரல் (ஜாடா பிங்கெட் ஸ்மித்- நம்ம வில் ஸ்மித்தின் மனைவி) இவனது டாக்ஸியில் ஏறுகிறார். அவர் ஒரு அட்டர்னி. அவரை ட்ராப் செய்யும் வேளையில், அவருடன் இயல்பாகப் பேசி, ஆன்னீயின் விசிட்டிங் கார்டையும் பெறுகிறான் மேக்ஸ்.

ஆன்னீயை விட்டுவிட்டு, அங்கேயே காரில் அமர்ந்து, எதனையோ யோசித்துக்கொண்டிருக்கையில், அவனது டாக்ஸிக் கதவு தட்டப்படுகிறது. ஒரு கஸ்டமர். மேக்ஸ், தனது யோசனையினால், அந்தப் பயணியைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறான். அவர் வேறு டாக்ஸியை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்போதுதான் சுயநினைவு வந்து, அந்தப் பயணியை சத்தம்போட்டு அழைத்து, தனது டாக்ஸியில் ஏற்றிக் கொள்கிறான்.

அந்தப் பயணி – வின்செண்ட் (டாம் க்ரூஸ்). அப்பொழுதுதான் லாஸ் ஏஞ்சலீஸ் வந்து இறங்கியிருக்கும் ஒரு நபர்.

ஒரு குறிப்பிட்ட முகவரியைச் சொல்லும் வின்செண்ட், அந்த இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்று கேட்க, சரியாகப் பதிமூன்று நிமிடங்கள் (அல்லது ஏழா? மறந்து விட்டது) ஆகும் என்று சொல்லி, கச்சிதமாக சொன்ன நேரத்தில் அவரை இறக்கி விடுகிறான் மேக்ஸ். மேக்ஸின் தொழில்நேர்த்தியில் கவரப்பட்ட வின்செண்ட், அந்த இரவில் தனக்கு சில வியாபாரங்களை முடிக்க வேண்டியிருப்பதாகவும், எல்லா இடங்களுக்கும் மேக்ஸ் வந்தால், 600 டாலர்கள் தருவதாகவும் சொல்லி, அதில் 300 டாலர்களை முன்பணமாக வேறு கொடுத்து விடுகிறான்.

சபலப்படும் மேக்ஸ், ஒத்துக் கொள்கிறான். அந்த முகவரியில் மாடியேறிச் செல்லும் வின்செண்ட்டைப் பார்த்துக் கொண்டே வண்டியில் இருந்து இறங்கி நிற்கிறான். திடீரென்று, வண்டியின் மீதே ஒரு ஆள் தடாலென்று மாடியிலிருந்து விழுகிறான். அரண்டு போகும் மேக்ஸ், படியிலிருந்து இறங்கி வரும் வின்செண்டிடம் பரபரப்பாக இதைச் சொல்கிறான். ஆனால், அலட்டிக் கொள்ளாமல் புன்னகைக்கும் வின்சென்ட்டைப் பார்த்து, இந்த ஆளைக் கொன்றதே வின்செண்ட் தான் என்று மேக்ஸுக்குப் புரிந்து விடுகிறது.

துப்பாக்கி முனையில், மேக்ஸிடம் பிணத்தின் ஒரு பக்கத்தைப் பிடிக்கச் சொல்லும் வின்செண்ட், பிணத்தைக் காரின் டிக்கியில் போடுகிறான். இன்னமும் சில வியாபாரங்களை ‘முடிக்க’ இருப்பதாகவும், மேக்ஸ் ஒத்துழைத்தால், எல்லாமே சுமுகமாக முடியும் என்றும் சொல்கிறான். வேறு வழியே இல்லாமல், மேக்ஸ் சம்மதிக்கிறான்.

இரண்டாவது ஆளைக் கொல்ல வின்செண்ட் செல்கையில், மேக்ஸின் கைகளை ஸ்டியரிங்கோடு கட்டிவிடுகிறான். அப்பொழுது, உதவிக்குக் குரல் கொடுத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பலாம் என்றெண்ணி, மேக்ஸ் கத்த, அவ்வழியே செல்லும் இருவர், அங்கு வந்து, மேக்ஸின் பர்ஸையும், வின்செண்டின் பையையும் களவாடிச் செல்கின்றனர். அப்போது அங்கு வரும் வின்செண்ட், அவ்விருவரையும் கொன்று விடுகிறான். இனிமேல் இப்படிக் கத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பினால், அது அவர்களது மரணத்தில் தான் முடியும் என்றும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சொல்லிவிட்டு, வண்டியில் ஏறிக்கொள்கிறான் வின்செண்ட்.

தான் சீக்கிரமாக இரண்டு வேலைகளை முடித்துவிட்டதால், சிறிது இசை கேட்கலாம் என்று கூறி, ஒரு ஜாஸ் பாருக்கு வண்டியை விடச் சொல்கிறான் வின்செண்ட். அந்த விடுதியில், உரிமையாளர் டேனியல், மேடையில் இசைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இசைத்து முடிக்கும் வரை காத்திருக்கும் வின்செண்ட், அவரைத் தங்களுடன் மது அருந்த அழைக்கிறான். மது அருந்துகையில், ஜாஸ் இசையைப் பற்றியும், அதில் வித்தகரான மைல்ஸ் டேவிஸைப் பற்றியும் பேச்சு செல்கிறது.

மைல்ஸ் டேவிஸ் தன்னுடைய விடுதிக்கு அறுபதுகளில் ஒரு முறை வந்ததாகச் சொல்லும் டேனியல், அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போகிறார். அதே நேரத்தில், அவருக்கு வின்செண்ட் தன்னைக் கொல்ல வந்துள்ளான் என்பது தெரிகிறது. பயத்தில், வின்செண்ட் தன்னை விட்டுவிட்டால், அந்த ஊரை விட்டே ஓடிவிடுவதாகச் சொல்கிறார். அவரிடம் மைல்ஸ் டேவிஸைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்கும் வின்செண்ட், அவர் சரியாகச் சொல்லிவிட்டால், அவரை விட்டுவிடுவதாகச் சொல்கிறான். அவர் சரியான விடையைச் சொன்னதும், அவரது தலையில் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.

அதுவரை சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த தன் வாழ்க்கை, இப்படி ஒரு கொலைகாரனுடன் அந்த இரவில், அவன் செய்யும் கொலைகளுக்குச் சாட்சியாக இருக்கும்படி அமைந்துவிட்டதை நம்பவே முடியாமல், தலையை ஆட்டிக்கொண்டே தனது டாக்ஸிக்கு வரும் மேக்ஸுக்கு, வயர்லெஸ்ஸில் ஒரு அழைப்பு வருகிறது. தினமும் இரவு மருத்துவமனையில் இருக்கும் தனது தாயைச் சென்று பார்ப்பது மேக்ஸின் வழக்கம். அன்று, வின்செண்ட்டுடன் மாட்டிக் கொண்டதால், அங்கு செல்ல மறந்து விடுகிறான். எனவே அவன் தாய், டாக்ஸி அலுவலகத்துக்குத் தொலைபேசி, மேக்ஸைப் பற்றிக் கேட்கிறாள்.

மேக்ஸ் மருத்துவமனைக்குச் செல்லாவிடில், அவன் மேல் சந்தேகம் ஏற்படும் என்று சொல்லும் வின்செண்ட், தானும் அவனுடன் மேக்ஸின் தாயைப் பார்க்கச் செல்கிறான்.இன்னமும் இருவர் பாக்கி.

மருத்துவமனையில் . . . . . .

அதகளம் ஆரம்பம். ஏற்கெனெவே ஜெட் வேகத்தில் செல்லும் படம், இங்கிருந்து சூப்பர்சானிக் வேகத்தில் செல்கிறது. இதன்பின் வரும் காட்சிகள், டிபிக்கல் மைக்கேல் மேன் முத்திரை பதிக்கப்பட்டவை.

இப்படத்தின் ஆக்‌ஷன் தவிர, என்னைக் கவர்ந்த விஷயம், இதன் மிக இயல்பான வசனங்கள். இப்படத்தின் வேகத்துக்கு முற்றிலும் ஈடுகொடுத்திருக்கின்றன. மேக்ஸும் வின்செண்ட்டும் பேசிக்கொள்ளும் வசனங்கள் தான் பெரும்பாலும். ஆனால், அந்த வசனங்களின் ஊடே கதையை நகர்த்திச் செல்லும் மேஜிக் மைக்கேல் மேனுக்குக் கைவந்த கலை. க்வெண்டினைப் போல் புத்திசாலித்தனமாக இல்லாமல், மிக இயல்பாக இருக்கின்றன இதன் வசனங்கள்.

ஜேமி ஃபாக்ஸ் இதில் மேக்ஸாகவே வந்து போயிருக்கிறார். கொலைகாரனைப் பின்னால் வைத்துக் கொண்டு டாக்ஸி ஓட்டும்போது, அவரது பயத்தை முகத்திலேயே தேக்கி வைத்துக் கொண்டு, அவ்வப்போது தனது ஆத்திரத்தை – இயலாமையைக் கொட்டுகிறார். டாம் க்ரூஸோ, மிக இயல்பான ஒரு ஆள். கொலையைச் செய்வது, தம்மடிப்பது போன்ற ஒரு விஷயம் அவருக்கு. அவ்வப்போது ஜேமி ஃபாக்ஸுக்கு அட்வைஸ் வேறு செய்கிறார். கோபமே படாமல், தான் நினைப்பதை ஜேமி ஃபாக்ஸ் செய்ய வைக்கிறார்.

மொத்தத்தில், கொலாட்ரல், ஒரு பக்கா டைம்பாஸ். ஆனால், அதே சமயம், ஒரு தரமான படமும் கூட.

கொலாட்ரலின் ட்ரெய்லர் இங்கே.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

22 Comments

 1. 🙂

  நல்ல ஆக்சன் படத்தை பற்றிய பகிர்வு.. முன்னாடியே பாத்தாச்சு!

  Reply
 2. இந்த மாதிரி படங்கள தான் பாஸ் உங்ககிட்ட இருந்து எதிர்பாக்குறேன்.டவுன்லோட் போட்டு விட்டாச்சு.இந்த படத்த நான் இப்பதான் கேள்விபடுறேன்.

  அன்புடன்,
  லக்கி லிமட்
  அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க

  Reply
 3. டாம் உதிர்க்கும் தத்துவங்களும் செம தான்

  ஜாடா பிங்கட் ஸ்மித் – வில் ஸ்மித் மனைவியா? தெரியாதே!

  //அவர் சரியான விடையைச் சொன்னதும், அவரது தலையில் சுட்டுக் கொன்றுவிடுகிறான்.///

  அது தவறென டாம் விளக்கம் குடுப்பார்.

  Reply
 4. தேளு…நான் ஸ்பார்டகஸ் விமர்சனத்துல போட்ட கமண்ட் எங்கப்போச்சுவே… அப்புறம் இங்க வர்றதேயில்லைன்னு கம்ப்ளெயிண்ட் பண்றது… (•(*(&*&**&^&%&%&%^%%^

  Reply
 5. நண்பரே,

  அசத்தலான படம்தான், டிஜிடல் கமெராவில் படம் பிடித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அந்த அனுபவம் திருப்தி தராத ஒரு உணர்வை தந்தாலும், மைக்கேல் சுளுவாக படத்தை நகர்த்துவார். டாம் க்ரூஸ் கூட அலட்டிக் கொள்ளாமல் உயிர்களைப் பறித்து அதிரடி தருவார். சிறப்பான விமர்சனம்.

  Reply
 6. @ சென்ஷி – 🙂 ஆமாங்க . .இது பாப்புலர் படந்தேன் . . 🙂 மீண்டும் வருக . .

  @ அண்ணாமலையான் – கண்டிப்பா கலக்கலான படம்தான் தல . . .சூப்பரு!!

  @ லக்கி – அப்பப்ப நிச்சயமா இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்க பத்தி போடுரேன் பாஸு . .உறுதியா !! கண்டிப்பா உஙளுக்குப் புடிக்கும் . .

  @ பப்பு – அது தவறுன்னு சொல்ல மாட்டாரு . .அந்த விடையை இன்னும் இம்ப்ரொவைஸ் பண்ணுவாரு . .மைல்ஸ் ம்யுசிக் காலேஜ் விட்டு வந்து, இன்னொருத்தரு கிட்ட படிச்சாருன்னு சொல்லுவாரு . .

  @ அப் நாஞ்சில் பிரதாப் – அய்யய்யோ . .உங்க கமெண்டு எங்கன போச்சுன்னு தெரியலையே . . என்ன கொடும இது! ! சீக்கிரமே கண்டுபுடிக்குறேன்வே . . .

  @ நினைவுகளுடன் நிகே – மிக்க நன்றி பாஸு . .அடிக்கடி உங்க கருத்துகள சொல்லுங்க . .

  @ காதலரே – ஆமாம் . .ஒளிப்பதிவு பளீரென இருந்தது . .டிஜிட்டலாக இருக்கலாம் . .எனக்குப் பிடித்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்று . . நன்றி நண்பரே . .

  Reply
 7. மைக்கெல் மான் படங்கள் எல்லாம் ஆக்‌ஷனுக்கும், சைக்காலஜிக்கும் நடுவில் இருக்கும். கேரக்டர் டெவலப்மெண்ட்டுக்கு ரொம்ப மெனக்கெடுவார். எல்லோருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது.

  ஆனா இந்தப் படம் விதிவிலக்கு!!!! போன வருசம் எழுதலாம்னு நினைச்சி அப்படியே போச்சி..!!!

  (ஸாரி.. வேலை… வேலை.. வேலை!! 🙁 🙁 )

  Reply
 8. பழய படமாப் போட்டு பட்டயக் கெளப்புறீங்க. சீக்கிரம் பாத்துர வேண்டியதுதான். VTV இந்த வாரம் ரிலீஸ்..டிக்கெட் மெயில்ல அனுப்பி வைக்கவும்.நன்றி.

  Reply
 9. @ பாலா – ஆமாம் தல . .கேரக்டர் டெவலப்மென்ட் அவரோட ஸ்பெஷாலிட்டி . .

  வேளைகள நிதானமா முடிச்சிகினு வாங்க . . செய்யும் தொழிலே தெய்வம் . .:-)

  @ மயிலு – டிக்கட் வாங்கி அனுப்பிச்சாச்சு . . ஆல்ரெடி . . 🙂 தல பார்த்துட்டு எழுதும் . .:-)

  Reply
 10. நல்ல விமர்சனம். இந்த படத்தையும் நம்ம ஆளுங்க பாலிவுட்ள் ஏற்கனவே காப்பி அடிச்சுட்டாங்க. The killer(2006) இர்பான் கானும், இம்ரான் ஹஸ்மியும் நடிச்சுருப்பாங்க. ஒங்க விமர்சனம் சூப்பர்.

  Reply
 11. ரொம்ப நல்ல விறுவிறுப்பான படம்.
  மீண்டும் பார்க்க ஆசை.
  ஃபார்மாலிட்டி டன் நண்பா
  ஃப்ரென்ச் கனெக்‌ஷன் -1971 பார்த்தேன்.(நேரம் கிடைக்கையில் பார்க்க)ஒர்த்
  த மிஷன் (1986)அவதாருக்கு முன்னோடி(செம ஒர்த்)மருதநாயகம் கமல் போலவே ராப்ர்ட் டெனீரோ மின்னுகிறார்.லியாம் நீசன் வேறு உண்டு.
  பார்த்துட்டு சொல்லுங்க நண்பா.ஃப்ளாக்ஸ் ஆஃப் த ஃபாதர்ஸ் -க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பார்த்தேன்,அதுவும் நல்ல ஒர்த் நண்பா.
  எழுத நேரம் இருந்தால் எழுதவும்

  Reply
 12. கார்த்திக்கேயன்…

  Flags of our Fathers, பார்த்திருந்தீங்கன்னா… கண்டிப்பா.. Letter from Iwo Jima பார்த்திருக்கணும். அதுதான் அதன் முதல் பாகம். அதே போரின் ஜப்பானிய கண்ணோட்டத்தில், ஈஸ்ட்வுட் எடுத்திருப்பார்.

  ரெண்டு படங்களும் 2 மாத இடைவெளியில் வந்துச்சி. ஆனா.. Iwo Jima தான் பெஸ்ட்.!

  Reply
 13. @ ராமசாமி – அடடே . .ஹிந்தில அடிச்சிட்டானுன்களா . .எனக்குத் தெரியாதே . .இந்தப் படத்த நம்ம ஊர்ல எப்புடி இன்னும் உட்டு வெச்சானுங்கன்னு மண்டைய பிச்சிகினு இருந்தேன் . .:-)

  @ கார்த்திகேயன் – கண்டிப்பா ஃப்ரென்ச் கனெக்‌ஷன் மற்றும் ஒர்த்
  த மிஷன் பார்த்துர்றேன் . .அப்பறம், Flags of our Fathers மற்றும் Letter from Iwo Jima ரெண்டுமே பாலா எழுதுறேன்னு சொல்லியிருந்ததா நினைவு . .இதுல ஏதோ ஒரு படத்த எழுதிட்டாருன்னு நினைக்குறேன் . .அவரே இன்னொன்னையும் எழுதுவாரு . .

  Reply
 14. @தல,
  அதுவும் பாத்துட்டேன் தல,பேர் கொஞ்சம் ஈஸியா இல்லாததால தப்பா எழுதிடுவோமோன்னு எழுதல.தல.எங்க போனாலும் பாத்துக்கமுடியுது.
  ==========
  நண்பா ராஜேஷ்
  அது வெறும் த மிஷன்.
  நான் ஒர்த் என்று தரத்தை பற்றி சொன்னேன்.
  உங்களுக்கு பிடித்த 1700களின் செட்டில் டேஞ்சரஸ் லியாசன்ஸ் என ஒரு படம் உண்டு.மால்கோவிச் நடித்தது.உமா தர்மன் செம ஃபார்ம்.ரோசா மொட்டா இருக்காங்க. அலுக்காம போகும்.அதே கதை கொண்ட க்ரூயெல் இண்டென்ஷன்ஸ் 1&2 வும் மிஸ் பண்ணாமல் பாருங்க.நம்ம தல இதையெல்லாம் 18+ல் சொன்னதா நினைவு.சரியா தல.
  ஹார்ட் டிஸ்கில் இன்னும் 300 படங்கள் பார்க்காமல் இருக்கு.
  அதை 100 ஆக குறைக்கனும்.ஒருபக்கம் தரவிற்க்கம் ஆகிகிட்டே இருக்கு.
  சென்னை பக்கம் வந்தால் ஏப்ரலில் வாங்கிக்கலாம்.

  Reply
 15. @ கார்த்திகேயன் – ஹீ ஹீ . . .கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் . .:-) டேஞ்சரஸ் லியேசன்ஸ் ரொம்ப நாளு முன்னாடி ஹெச் பி ஓ ல பார்த்தது . க்ருயல் இன்டன்ஷன்சும் அப்படியே . .நீங்க நிதானமா ஒவ்வொரு படத்தையும் பார்த்து எழுதிக்கினே இருங்க . .உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்து . .

  @ பேநா மூடி – 🙂 🙂

  Reply
 16. எனக்கென்னமோ இந்த படம் ஒரு சாதாரண படம் மாதிரிதாங்க இருந்துச்சு

  Reply
 17. Average Movie…
  Jamie fox acting is mediocre…

  Tomcruise acting was good…
  this movie dont deserve 7.7 rating in IMDB…

  Michael mann the director was making same kind of movie…
  like..Heat

  Great writing….
  keep on writing….Nanba…

  Reply

Join the conversation