8mm (1999) – English

by Rajesh March 3, 2010   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக – 20 நிமிடங்கள்) பார்த்தவுடன், சட்டென்று இப்படம் நினைவு வந்தது. எனவே, இதோ ஆரம்பித்தாயிற்று.

வீடியோ என்பது இந்நாட்களில் நமது வாழ்வோடு மிகவும் ஒன்றிவிட்ட ஒரு விஷயம். அதனை நல்லதாகவும் பயன்படுத்தலாம்; கெட்டதாகவும். நேற்று வெளிவந்த வீடியோ ஒரு நல்ல விஷயத்துக்காகப் பயன்பட்டிருக்கிறது. ஒரு பன்னாடையைத் தோலுரித்துக் (அந்த மொள்ளமாறி, நடிகையிடம் ப்ளோஜாப் அனுபவிப்பதை வேறு அந்த வீடியோ பதிவு செய்திருக்கிறது. ப்ளோஜாப் தப்பில்லை; ஆனால் சாமியார் வேடமிட்டு அதைச் செய்தது தவறு) காட்டியிருக்கிறது. ஆனால், ஒரு வீடியோ, ஒரு குரூரமான விஷயத்துக்குப் பயன்பட்டால்?

சில வருடங்கள் முன், இப்படத்தைப் பார்க்க நேர்கையில், அந்த பாதிப்பு அடுத்த இரு நாட்களுக்கு நீடித்தது. மனதை விட்டு அகலவேயில்லை இந்தப் படம். தம்ப்பிங் என்று சொல்வார்களே – அப்படி ஒரு படம்.

டாம் வெல்ஸ் ஒரு துப்பறியும் ஆசாமி. ஒருநாள், அவருக்கு, ஒரு மிகப்பெரிய, வயதான செல்வச் சீமாட்டியிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்தச் சீமாட்டியின் கணவர் சமீபத்தில் இறக்கவே, அந்தக் கணவரின் சேஃப்டி லாக்கரைத் திறந்த போது, ஒரு படச்சுருள் அகப்படுகிறது. அந்தச் சுருளை டாமிடம் அளிக்கும் சீமாட்டி, அதனைப் பார்க்கச் சொல்கிறாள். அவர்களது திரைஅறையில் அதனை ஓடவிடுகிறார் டாம்.

ஒரு இளம் பெண். படுக்கையில் உள்ளாடைகளோடு அமர்ந்திருக்கிறாள். அவள் கண்களில் போதை. குழப்பமான மனநிலையில் இருக்கிறாள். அப்போது, அவளருகே ஒரு தடியன் வருகிறான். முகத்தை மறைத்திருக்கிறான். அவளைப் பலமாக அறைகிறான். ஒரு மேஜையில் இருக்கும் பல இரும்புக் கருவிகளிடையே தேடி, ஒரு கத்தியை எடுக்கிறான். மெல்ல கேமிராவைப் பார்த்துக்கொண்டே நடந்து, அவளருகில் நின்றுகொண்டு, அவளது உடல் மேல் கத்தியை மெதுவாக நகர்த்துகிறான். பின்னர், ஒரு திடீர் வேகத்தில், கத்தியை அவள் உடலெங்கும் குத்தி, அவளை கிழித்துக் கொல்கிறான். இதைப் பார்க்கும் டாமின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

வெளியே வரும் டாமிடம், இந்த வீடியோ உண்மையா அல்லது பொய்யா? உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மை ஆகியனவற்றைக் கண்டுபிடிக்கச் சொல்லி, பணத்தையும் அளிக்கிறாள் அந்த மாது.

வீட்டிற்கு வரும் டாம், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு, துப்பறியத் துவங்குகிறார். அவருக்கு ஒவ்வொன்றாகக் கிடைக்கும் தகவல்கள், ஒரு பெரிய குற்ற சாம்ராஜ்யத்தையே இருளிலிருந்து வெளியே கொணர்கின்றன.

ஸ்னஃப் படங்கள் என்று ஒரு வகை உண்டு. உலக மக்களில் பெரும்பாலானோர் மிதவாதிகள் (அல்லது அப்படி நடிப்பவர்கள்). இவர்களுக்கு, எந்த வகை சந்தோஷமாக இருந்தாலும், அது பொதுவில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு விஷயமாக இருந்தாலே போதுமானது. ஆனால், வேறுவகையைச் சேர்ந்த சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆர்கஸம் வரவழைக்க, குரூரமான விஷயங்கள் தேவைப்படும். பிணங்களுடன் உறவு கொள்வது (நெக்ரோஃபீலியா), ஒரு உயிரைக் கொல்வது மூலம் சந்தோஷம் அடைவது, ரத்தத்தைப் பார்ப்பதன் மூலம் உச்சபட்ச இன்பம் அடைவது போன்ற சில விஷயங்கள் இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

நீலப்படங்கள் பொதுவில் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னைக் கொண்டிருக்கும். முக்காலே மூன்றரை வீசம் (நன்றி: கல்கி) நீலப்படங்கள் இப்படித்தான். ஆனால், ஸ்னஃப் படங்கள் வேறுவகை. உறவு கொண்டு முடித்த பின், அந்தப் பெண்ணையோ சிறுமியையோ அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்துக் கொல்வது இந்தப் படங்களின் ஸ்பெஷாலிட்டி. இப்பொழுதும் இந்தவகைப் படங்கள் இருக்கின்றன (இதைப்பற்றி ஒருநாள் விகடனில் மதன் எழுதியிருந்தது நினைவு வருகிறது).

இப்படிப்பட்ட ஒரு ஸ்னஃப் படமே டாம் அந்த வீட்டில் பார்த்தது. அது எங்கு உருவானது, அந்தப் பெண் யார் என்பதை டாம் சிறிது சிறிதாகக் கண்டுபிடிக்கிறார்.
ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல அதிர்ச்சிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன. டாம் கண்டுபிடிக்கும் உண்மைகளைப் படத்தில் காணுங்கள். ஒரு அருமையான த்ரில்லர் இது.

டாமாக நம்ம நிகோலஸ் கேஜ். எந்த ரோலைக் கொடுத்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செஇவது இவரது ஸ்பெஷாலிட்டி. இதிலும் மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு அசாதாரண ஹீரோவாக இல்லாமல், சாதாரண மனிதராக இவரைக் காட்டியிருப்பது அருமை.

சமுதாயத்தில் ஏதோ ஒரு இடத்தில் நிகழும் ஒரு சிறிய அனாமலியை – ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சியை – எடுத்துக்கொண்டு, அதன் மூலம், இருளில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான உலகத்தையே கண்டுபிடிக்கும் வகையைச் சேர்ந்தது இந்தப் படம்.

இயக்கம்: ஜோயல் ஷூமாக்கர். பல அதிரடிப்படங்களின் இயக்குநர்.

8mm பாருங்கள். உங்கள் மதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.

8mm படத்தின் ட்ரைலர் இங்கே.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

21 Comments

 1. செம படம் நண்பா,
  முகம் ஊர் பேர் தெரியாத பெண்ணுக்கு இரக்கப்படும் மனிதனின் கதை.
  க்ளைமேக்ஸ் சூப்பர்.
  ஜோக்வன் பினிக்ஸும் கலக்கியிருப்பார்.
  இந்த மது மாது போதையே என்றைக்கும் டேஞ்சர் தான்.
  காமன் மேன்களால் நினைத்துகூட பார்க்க முடியாத காட்சிகள்.

  Reply
 2. On my way....

  Brrrrrrrr!!!!! Blood chilling. Will watch it some time.

  Reply
 3. பாஸ் அவரு என்னைக்காவது நான் செக்ஸ் வச்சுக்கலைன்னு சொன்னாரா? நம்ம சொந்த விஷயத்த வீடியோ எடுத்து போடுறது ப்ரைவஸி இன்வேஷன் இல்லையா? அந்த செக்ஸ் வைக்க கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு…
  பாலா, எங்க போனீங்க..

  என்னையா இது ஒரு சாமியார் ஜல்சா பண்ண கூடாதா?

  Reply
 4. @ இராமசாமி – பாருங்க நண்பரே . . 🙂

  @ கார்த்திகேயன் – அதே ! மனசைத் தொடும் சில காட்சிகள் . . நல்ல நடிப்பு . . காமன் மேன்களால் நினைத்துப் பார்க்க முடியாது. . ஆனால் காம மேன்களால் நினைத்துப் பார்க்க முடியும் . . (ஆஹா என்ன ஒரு எதுகை . . ஹீ ஹீ) . .

  @ ஆன் மை வே – கண்டிப்பா . .அசத்தல் படம் இது . .

  @ பப்பு – அவரு எப்ப பார்த்தாலும் அதத்தானே சொல்லிகினு இருந்தாரு . .:-) நானு ப்ரம்மச்சாரி ப்ரம்மச்சாரின்னு . . அவரு ஜல்ஸா பண்ணது ப்ரச்னை இல்ல. . ஆனா அந்த வீடியோல எந்த ‘கில்மாவும்’ இல்ல . .சப்புன்னு போயிருச்சு . .அத இன்னும் கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ணிருக்கலாம்ண்ட்றது தான் மேட்டரு . . ஹீ ஹீ

  Reply
 5. @பப்பு+ராஜேஷ்
  அவர் ஒரு ஓஷோத்தனமான சாமியார் போல.
  சாமியார்களுக்கு வேட்கை இருக்காதா?என்ன.
  எந்நேரமும் இறையையே நினைக்க முடியுமா?
  இரையையும் நினைத்துதானே ஆகவேண்டியிருக்கிறது.
  எங்க பார்த்தாலும் காமிரா மயம்.எல்லாருமே உஷாராய் இருக்கணும்பா.

  Reply
 6. அய்யோ ஆமாம் . . எங்க பார்த்தாலும் காமெரா மயம் தான் . .இனிமே சைட்டு கூட அடிக்க முடியாது போலயே . . என்ன கொடும சார் இது . . (இந்த மேரி நம்ம (தமிழ்நாட்டு)அரசியல்வாதிங்கள யாரும் எடுக்குறதில்லையே அது ஏன்? )

  Reply
 7. //நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக – 20 நிமிடங்கள்) பார்த்தவுடன்//

  என்ன கொடுமை சார் இது?

  இருந்தாலும் டைமிங்கான போஸ்ட். படம் உண்மையிலேயே நான் இன்னும் பார்காத ஒரு படம்.

  ஒரு காலத்தில் நிகோலஸ் கேஜ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அதுவும் அவரின் Matchstick Men என்ற படம் எனக்கு மிகவும் பிடித்த படம். முடிந்தால் பாருங்கள்.

  Reply
 8. அடிஷனல் இன்போ: அந்த படம் ஹிந்தியில் ஏற்கனவே வந்துள்ளது. ப்ளப் மாஸ்டர் Bluff Master. உண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று, Inspite of the pressence of Abisheik Bachchan.

  Reply
 9. விஸ்வா . .என்ன ஒரு ஆச்சரியம் !!!!!!!!!! சத்தியமாக இப்படத்தைப் பற்றி நான் ஆரம்பிக்கையிலேயே, மேட்ச்ஸ்டிக் மென் பற்றிய நினைவு மின்னி மறைந்தது. கட்டாயம் அடுத்த பதிவு அது தான் என்று முடிவு செய்திருந்தேன் . . சூப்பர் !!! ரிட்லி ஸ்காட்டின் நல்ல படங்களில் ஒன்று . ப்ளஃப்மாஸ்டரும் எனக்குப் பிடித்தது. . 🙂 என்ன ஒரு டெலிபதி !!

  Reply
 10. கருந்தேள்,

  பல விஷயங்கள் நமக்குள் ஒற்றுமையாக இருப்பது இது முதல் தடவை அல்லவே?

  ஆச்சர்யங்கள் தொடரட்டும்.

  அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  Reply
 11. நண்பரே,

  நல்லதொரு பதிவு. நான் ஒரு ஆச்ரமம் ஆரம்பிக்கப் போகிறேன். கூடவே ஒரு தொலைக்காட்சி சேனலும். எல்லாம் நேரடி ஒளிபரப்பு 🙂

  Reply
 12. @ சூர்யா – மிக்க நன்றி . .

  @ அஷ்வின் – கண்டிப்பா எழுதுங்க . .காத்துக்கொண்டு இருக்கிறேன் . .

  Reply
 13. இதுல கொடுமை எண்னனா, இந்த படத்தோட டி.வி.டி.என் கையில மூணு வருடமா இருக்குது.நான் இன்னும் பார்க்கவே இல்லை. பார்க்க தோணவே இல்லை .விமர்சனம் பார்த்தபின்தான் பார்க்க ஆர்வம் பிறந்தது .நன்றி கருந்தேள் .

  Reply
 14. நிக்கோலஸ் கேஜின் ஆரம்ப கட்ட படங்கள் அவருக்கு ஒரு நல்ல நடிப்பு தீனியை அளித்தது என்பதில் எந்தவித ஐயமுமில்லை. 8 எம்எம் அப்படிபட்ட ஒரு படம். அதற்கு ஏற்ப அருமையான விமர்சனம்….

  நித்யானந்தா மேட்டர் போது டைமிங்காக வெளியிட்டிருக்கிறீர்கள்… காதலரின் ஆசிரமத்தில் இடம் கிடைக்காது போலிருக்கிறது… சரி லைவ் டெலிவிஷன் ஒளிபரப்பையாவது கண்டு கழித்து விட்டு போகிறேன்…. சீக்கிரம் ஆரம்பிங்கப்பா…. 🙂

  ஆமாம், கருந்தேள்… உமக்கு மட்டும் எப்படிப்பா புல் காட்சி கிடைச்சிது… இதெல்லாம் அநியாயமா தெரியல 🙂

  Reply
 15. தல செம படம் இது, .. நம்ம தல பாலா விமர்சனம் படிச்சுட்டு பார்க்கனும்னு இருந்தேன்…நம்ம ஸ்டான்லிதான் அவர் பிளாக்குல படத்தை போட்டு வுட்டாரு… செம படம் தல… சான்ஸே இல்ல…

  Reply
 16. @ மைதீன் – அடக்கொடுமையே . .போயி இப்பவே பாருங்க பாஸு . . .:-) பார்த்துப்புட்டு செப்புங்கோ . .

  @ ரஃபீக் – அது ஒன்யுமில்ல . . நம்ம நக்கீரன் சைட்ல முழு வீடியோவும் போட்ருந்தாங்கோ . .ஆனா சப்ஸ்க்ரைப் பண்ணா தான் பாக்க முடியும்னிட்டாங்கோ . .நாம தான் தமிழனாச்சே . .போயி ஒரு மாசத்துக்கு மட்டும் சப்ஸ்க்ரைப் பண்ணி, கண்டு களிச்சிட்டேன் . . நித்யா மேல பொறாமையா வேற இக்குது . .:-)

  @ நாஞ்சில் – நீங்க என்ன படத்த சொல்றீங்க . . போலிச்சாமியின் அஜால்குஜால் படத்தையா . . 🙂 அதுவும் செம படந்தேன் . .

  Reply
 17. அட… இந்தப் பதிவு எப்படி மிஸ்ஸாச்சின்னு தெரியலை. எழுதின டேட்டை பார்த்தா.. என்ன நடந்திருக்கும்னு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் போகுது.

  தமிழ்மணத்தோட.. தமிழ் தலைப்புக்கு சண்டை போட்டுகிட்டு, அஞ்சலியை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு திரிஞ்ச நாட்கள்..!! 🙁

  Reply

Join the conversation