கருந்தேள், ஷ்ரீ மற்றும் யாஹூ . .

by Rajesh March 15, 2010   Announcements

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

பத்தாண்டுகளுக்கு முன்.  வருடம் 2000. அவன் தனது இளங்கலைப் படிப்பை முடித்திருந்த காலம்.  அப்பொழுதுதான் இண்டெர்நெட் தனது வேர்களை இந்தியாவில் பரப்பிக்கொண்டிருந்த வேளை. ஒரு இரவு நேரம்.  கோவை. ஆர் எஸ் புரம். அவன், அப்பொழுதெல்லாம் விளையாட்டாய் யாஹூ சாட் அறைக்குச் சென்று, முகமறியாத பலருடன் பேசிக்கொண்டிருப்பான். அதில் அவனுக்கு ஒரு த்ரில்.  பல பேரை அவனே உருவாக்கியிருந்த போலி ஐடிக்களில் சென்று கலாய்ப்பதும் உண்டு. மிக விளையாட்டுத்தனமாகக் கழிந்த அந்த இரவுகளில் ஒரு இரவு.

நண்பனின் இண்டர்நெட் கடையில் அமர்ந்து, யாஹூவின் கோவை அறையில் உள்ள ஐடிக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் ஒரு ஐடி மிக வித்தியாசமாக இருந்தது. அது ஆணா பெண்ணா என்றே கண்டுபிடிக்க இயலாமல். உடனே அதற்கு ஒரு மெஸேஜ் அனுப்பி வைத்தான். அடுத்த நொடியில் பதிலும் வந்தது. உடனே உற்சாகமானவன், சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு, அவலது தொலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டான்.

வெளியே வந்து, அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தான். மறுமுனையில் அந்தப் பெண். அத்தனை நேரம் தன்னை யாரோ கலாய்ப்பதாகவே எண்ணியிருந்தவன், அப்பொழுதுதான் தெளிவடைந்தான். இருவரும் சற்றுநேரம் பேசினர்.

அதன்பின் எப்பொழுது அவன் ஆன்லைன் வந்தாலும், அப்பெண்ணைத் தேடத் துவங்கினான். எப்பொழுதாவது அவள் இருப்பாள். ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு ஓடி விடுவாள்.  இருவருமே ஒருவரையொருவர் பார்த்ததில்லை.

இது இப்படியே ஓட, அவன் முதுகலை சேர்ந்தான். அவளும். அவள் முதுகலை முடித்துக் கொண்டு, பெங்களூரில் கணினி வேலைக்குச் சேர, அவன் கோவையிலேயே ஒரு கணினி நிறுவனத்தில் சேர்ந்தான்.

அந்த நிறுவனத்தின் மூலம் பெங்களூருக்கு ஒரு ட்ரைனிங்குக்காக அவன் செல்ல நேர்ந்தது. அப்பொழுதுதான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். முதல்முறையாக. அந்த நொடியே, வெல் . . கண்டதும் காதல். . அதன்பின், கஷ்டப்பட்டு அவனும் பெங்களூருக்கு வந்து விட்டான்.

இந்த நேரத்தில், இரு வீட்டாரிடமும் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதமும் பெற்றுவிட, திருமணம் இதோ இந்த வார இறுதியில், கோவையில், வடவள்ளி சங்கரநாராயணா மஹாலில்.

21 மார்ச் –ஞாயிற்றுக்கிழமை மாலையில் வரவேற்பு.  22 மார்ச் – திங்கட்கிழமை காலை திருமணம்.

அவன் – கருந்தேளாகிய நான் – ராஜேஷ்.

அவள் – ஷ்ரீவாணி (ஸ்ரீவாணி என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு ஷ்ரீ என்று அழைத்தால் தான் பிடிக்கிறது).

எனவே, அனைத்து நண்பர்களும் வந்து, இத்திருமணத்தை நடத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமணத்தன்று காலை, 22ஆம் தேதி, எனக்கும் ஷ்ரீ வாணிக்கும் நெருங்கிய நண்பர், நமது அன்பிற்குரிய சாரு நிவேதிதா கலந்து கொள்கிறார்.

அழைப்பிதழ் இதோ . .

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

48 Comments

 1. உங்கள் திருமண வழ்ழ்க்கை சிதப்பாக அமைய வாழ்த்துக்கள்!

  Reply
 2. நண்பா ராஜேஷ்,அருமையான திருமண செய்தி சொன்னீர்கள்.
  இன்று போல் என்றும் அன்புடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

  Reply
 3. எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே.

  Reply
 4. இனிய திருமண நல் வாழ்த்துகள்!

  Reply
 5. திருமண அழைப்பிதழுடன் அருமையாக கொசு வர்த்தி.

  இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  Reply
 6. நண்பரே,

  என்றும் அன்புடன், வாழ்க வளமுடன். அன்பு ஜோடிகளிற்கு மனதார்ந்த வாழ்த்துக்கள்.

  Reply
 7. உங்கள் மணவாழ்வு இனிதாக தொடங்க மனமார்ந்த வாழ்த்துகள்..

  Reply
 8. ஆஹா.. ஆஹா…

  வாங்க.. வாங்க..! வந்து ஜோதியில் ஐக்கியமாய்டுங்க. 🙂 🙂

  ====

  நம்ம கருந்தேளை கொட்ட.. ஒரு பெருந்தேள் அவர் வாழ்க்கையில் நுழையறாங்களா?!!!!

  இன்னும் கொஞ்ச நாளைக்கு.. உங்களை ஏரியா பக்கம் பார்க்க முடியாதா?

  வாழ்த்துகள் ராஜேஷ் & ஷ்ரீவாணி!!!! 🙂 🙂

  Reply
 9. ஆகா… தேளுக்கு கல்யாணமா-??? ஐ டங்கு டக்கா… கொளுத்துங்கய்யா பட்டாசை….பதிவுலகமே சும்மா அதிரனும்…

  வாழ்த்துக்கள் தேளு… ஷ்ரிவாணிக்கும் வாழ்த்துக்கள்.

  இனிமே தேளை எல்லாரும் அங்கிள்னுதான் கூப்பிடுங்கப்பா… எங்க யூத்து கிளப்ல உங்களுக்கு இனி இடம் கிடையாது…:))

  Reply
 10. மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  Reply
 11. பாஸ், கதைன்னு நினைச்சு ஊ.. சொல்லிட்டிருந்தா கல்யாணம் என பொசுக்கென சொல்லிட்டீங்க. பிரபல எழுத்தாளர்(இதைப் பத்தி சர்ச்சை பண்ணிடாதீங்க:) ) வேற கலந்துக்குறாரா? நல்வாழ்த்துக்கள்

  Reply
 12. வாழ்வில் அனைத்து சந்தோஷங்களும் பெற்று நலமோடு வாழுங்கள். Happy life Rajesh & family 🙂

  Reply
 13. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  May GOD bless you two………..

  Reply
 14. இனிய திருமண நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!!

  Reply
 15. hello Rajesh
  Wishing you and shree a happy married Life
  Selvamuthukumar

  Reply
 16. புது சங்கத்துல சேரும் மச்சான் கருந்தேள் ராஜேஷுக்கு,
  மச்சான்ஸ் சார்பில் குதூகல வாழ்த்துக்கள்…!!! 🙂

  Reply
 17. Dear Rajesh and Shree,

  Vazha Valamudan, Vazha Pallandu

  Reply
 18. இனிய திருமண நல் வாழ்த்துகள்!

  Reply
 19. Anonymous

  இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ராஜேஷ் & ஷ்ரீவாணி

  ~ஷா

  Reply
 20. வாழ்த்துக்கள் ராஜேஷ் 🙂

  Reply
 21. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ராஜேஷ் & ஷ்ரீவாணி.

  Reply
 22. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  Reply
 23. உங்களின் பழைய ஒரு பதிவை படித்துவிட்டு எப்போ கல்யாணம் என்ற கேள்வி கேட்டேன். பதில் கிடைத்தது இன்று.

  திருமண நல் வாழ்த்துக்கள்.

  தேளும் கொடுக்கும் போல இணைபிரியாமல் இருக்க வாழ்த்துக்கள்.

  Reply
 24. உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  Reply
 25. பின்னோக்கி,

  தேள் வேணும்னா.. ராஜேஷா இருக்கலாம். ஆனா. கொடுக்கு அவரில்லை. 🙂

  Reply
 26. Anonymous

  Wishing you a very happy married life Rajesh &Shree..
  Maaya From Srilanka

  Reply
 27. வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி . .

  நானு தேளா இருக்கலாம் . . ஆனா இனிமே கொடுக்கு நானு இல்ல நானு இல்ல நானு இல்ல . . . பாலா சொன்னது சரி 🙂 . . நெக்ஸ்ட்டு மீட் பண்றேன் . . 🙂

  Reply
 28. all the best rajesh.wish u all u wish in life .

  Reply
 29. அடடா….ஒரு வாரமா ப்ளாக் பக்கம் வராம இருந்ததுல கோவையில் இருந்தும் முக்கியமான நிகழ்வை விட்டுட்டேனே… ;(

  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது.

  என்று நம்ம அய்யன் வழியில் வாழ்த்துகிறேன் ராஜேஷ் -:)

  Reply
 30. Miga iyalbaana, azhagaana ungal nesam vetri adaindhadhil manam sollavonna niraivu ondrai arigiradhu! Enadhu kaalam thaazhndhalum ulamaarndha thirumana nalvaazhthukal!

  Reply
 31. அபி

  என்னாது? சாருவா? அவுரு வந்து ஆசிர்வாதம் பண்ண உங்க கல்யாணம் உருப்படுமா? இன்னா சார் விளையாடுறீங்களா?

  Reply
 32. வாழ்த்துக்கள் கருந்தேள்ஜி..!

  பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

  Reply
 33. கருந்தேள் அன்பரே, இனிய இல்லற வாழ்க்கை அமைய வாழ்த்துகள். உங்கள் அழைப்பிதழ் கண்டவுடனே பதில் எழுத முனைந்தேன், ஆனால் வேலை பளுவில் அது மறந்தே போயிற்று… இப்போது தான் பதிவை பார்க்க ஆரம்பித்த பின், நியாபகம் வந்தது.

  விண்ணைத்தாண்டி வருவாயா விமர்சனத்தின் போது ஒரு தெனாவட்டு வாசகரின் நக்கலுக்கு நீங்கள் ஆத்மார்த்தமாக பதிலளித்த போது, எனக்கு அது சரியாக புரியவில்லை. அது உங்கள் வாழ்க்கையில் இருந்து கூறிய சொல் என்று இப்போது புரிகிறது.

  அம்மணியிடம் மொத்த நேரத்தையும் செலவழித்து விட்டு, அவர்கள் அனுமதிக்கும் நேரங்களில் பதிவுலகில் தலை காட்டவும். இப்போதைக்கு தலையாய காரியம் அது மட்டும் தானே. அருமையான சொல்நடையுடன் அறிவிப்பு பதிவு… கலக்குங்கள்.

  முடிக்கும் முன்,மீண்டும் கல்யாணமான அதிர்ஷ்டசாலிகளின் கூட்டணிக்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.

  Reply
 34. பத்மா, ரகுநாதன், சிந்து ஷங்கர், அபி, உண்மைத்தமிழன், ஜெயமார்த்தாண்டன், அண்ணாமலையான், ஹாய் அரும்பாவூர். . வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் . .

  @ ரஃபீக் – உண்மை தான் . . விதாவ பதிவில், அவருக்கு அளித்த பதில், எனது மனதில் இருந்து வெளியானது . . எனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், அப்படத்தைக் காட்டிலும் விறுவிறுப்பு கொண்டவை . .:-) நீங்கள் சொன்னது போல், கல்யாணமானவர்களின் அதிர்ஷ்டக் கூட்டணியில் சேர்ந்தாயிற்று . . 🙂 மிக்க நன்றி . .

  Reply
 35. உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! நண்பா !!

  Reply

Join the conversation