Blueberry A.K.A கேப்டன் டைகர்

by Rajesh April 5, 2010   Comics Reviews

Sharing is caring!

இது காமிக்ஸ் டைம். ஆல்ரைட். நம்மில் லயன் காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்றென்றும் மறவாத அருமையான பல காமிக்ஸ் ஹீரோக்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. லயன், திகில், மினிலயன் மற்றும் ஜூனியர் லயன் காமிக்ஸ்கள், தமிழுக்கு ஆற்றியுள்ள பணி, அற்புதமானது. மிகச்சிறு வயதிலேயே, க்ராண்ட் கேன்யன், அரிசோனா, வின்செஸ்டர், டெர்ரிஞ்ஜர், கோல்ட், சிஹுவாஹுவா, செவ்விந்தியர்கள், பாலைவனம் இன்னும் நிறைய அருமையான விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தது லயன் காமிக்ஸ் தான். இதன் மூலம், இன்று இண்டெர்நெட்டின் உதவிகொண்டு அறியப்படும் பல விஷயங்களை, டெக்ஸ் வில்லர், ஸ்பைடர், ஆர்ச்சி, ஜானி நீரோ, மாஸ்கோவில் மாஸ்டர், ரிப்போர்ட்டர் ஜானி, இன்னும் பல கதைகளின் மூலம் சிறுவயதிலேயே அறிந்தேன். பல அயல் நாடுகளின் தன்மை, மக்களின் பழகும் முறை, அந்த நாடுகளின் முக்கியமான இடங்கள் ஆகிய பல அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன். நான் ஓரளவிற்காவது தமிழில் எழுதுகிறேன் என்றால், அதற்கு லயன் காமிக்ஸே பிரதான காரணம். திரு விஜயனுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

இவ்வளவு முன்னுரை ஏனெனில், இன்று காலை, ஒரே மூச்சில் காற்றில் கரைந்த கூட்டம் மற்றும் புயல் தேடிய புதையல் ஆகிய கதைகளைப் படித்து முடித்தேன். அவற்றை இதுவரை எவ்வளவோ முறைகள் படித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுதும், அவைகளின் புதிய தன்மை என்னைச் சிலிர்க்க வைக்கிறது. அவற்றைப் படித்து முடித்தவுடன், நான் இதுகாறும் படிக்காத அவற்றின் ப்ரீக்வெல்களை நெட்டில் தேடத் துவங்கினேன் (மின்னும் மரணம் சீரீஸ்). நம்முடைய ரஃபீக் ராஜா சாட்டில் வந்து, இவற்றின் ஆங்கிலப் பெயர்களைக் கொடுத்துதவ, சுலபமாக அவற்றைப் பிடித்து, டௌன்லோடி, இதோ ப்ளூபெரி சீரீஸின் முதல் மூன்று கதைகளைப் படித்தாயிற்று. அசந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தக் காமிக்ஸ் பற்றித் தெரியாத நண்பர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டம்: அமெரிக்க சிவில் யுத்தம் நடந்த பின்னணியில், அமெரிக்க ராணுவத்தில் லெஃப்டினண்ட்டாக இருக்கும் டைகரிடம் (ஆங்கிலத்தில் ப்ளூபெர்ரி) ஒரு பணி, ஜனாதிபதி க்ராண்ட்டின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மெக்ஃபேர்ஸனால் ஒப்படைக்கப்படுகிறது. கான்ஃபெடரேட் படையின் தங்கம், மெக்ஸிகோவில் ஏதோ ஒரு இடத்தில் புதைந்திருக்க, அதனை மீட்டுக் கொண்டுவரும் பணியே அது.

தங்கத்தைத் தேடிக் கிளம்பும் டைகருக்கு எத்தனையோ சவால்கள்; எத்தனையோ எதிரிகள்.

இந்த சீரீஸின் முதல் கதை: சிஹுவாஹுவா பேர்ல். இக்கதையில், டைகர் மெக்ஸிகோ நோக்கிச் செல்வதும், புதையலைப் பற்றி அறிந்த ஒரே நபரான சிஹுவாஹுவா பேர்ல் என்ற அழகியைச் சந்திப்பதும் சொல்லப்படுகிறது. மிகவும் விறுவிறுப்பான நடையில்.

இரண்டாவது கதை: ஹாஃப் எ மில்லியன் டாலர் மேன். தங்கம் இருக்குமிடம் சிஹுவாஹுவா பேர்லின் கணவனான ட்ரெவருக்கு மட்டுமே தெரியும். அவன் இருப்பதோ ஒரு சிறையில். அவனை எப்படி டைகர் விடுவிக்கிறார் என்பது, படு த்ரில்லிங்காக சொல்லப்பட்டிருக்கிறது.

மூன்றாவது கதை: பேல்லட் ஃபார் எ காஃபின். இதில், புதையலை ட்ரெவர் உதவியோடு எப்படி எடுக்கிறார்கள் என்பதும், இவர்களை விடாமல் துரத்தும் கும்பல்களிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்ற கதை. மேலும், அப்படி எடுத்த புதையல் ஒரு பொய் என்பதும், புதையலை ஒளித்த குற்றம் டைகர் மேல் ஜோடிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவதும் அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

நான்காவது கதை: த ஔட்லா. இதில், பொய்யாக முப்பது ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்ற டைகர், சிறையிலிருந்து நியாயம் தேடி எப்படித் தப்பிக்கிறார் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. அப்படித் தப்பிக்கும் டைகர், எப்படித் தன்னையறியாமலே பிரசிடண்ட் க்ராண்ட்டைக் கொல்லும் ஒரு முயற்சியில் பலிகடா ஆகிறார் என்பதும் உள்ளது இந்தக் கதையில்.

ஐந்தாவது கதை: ஏஞ்ஜல் ஃபேஸ். இதில், அந்த முயற்சி எப்படித் தோற்கிறது என்பதும், அங்கு நடக்கும் ஒரு தீ விபத்தில், பிரதான கொலைகாரனான ஏஞ்ஜல் ஃபேஸின் முகம் எவ்வாறு கருகுகிறது என்பதும் டக்கராக சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் பின் வரும் கதைகளான ப்ரோக்கன் நோஸ், த லாங் மார்ச், த கோஸ்ட் ட்ரைப் ஆகிய கதைகளே தமிழில் நான் முதலில் சொன்ன காற்றில் கரைந்த கூட்டம். செவ்விந்தியர்களான சியோக்ஸ்களுடன் டைகர் இணைந்து கொள்வதும், அவர்களின் கூட்டத்தை வெற்றிகரமாக மெக்ஸிகன் எல்லையில் அவர் விடுவதும், மயிக்கூச்செறியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சீரீஸிலேயே படு அட்டகாசமான கதைகள் இவை.

இதன் கடைசி இரு கதைகள்: த லாஸ்ட் கார்ட் மற்றும் த எண்ட் ஆஃப் த ட்ரயில் என்பவை, டைகர் தன் மேல் சுத்தப்பட்டுள்ள வீண்பழிகளை எவ்வாறு துடைக்கிறார் என்பதைப் பற்றியன. அருமையான முடிவினை இவை நல்குகின்றன. இவையே தமிழில் புயல் தேடிய புதையல் என்ற பெயரில், முத்து காமிக்ஸின் 300 ஆவது இதழாக, அருமையான லே அவுட்டில் வந்தன.

திரு விஜயன் எப்பொழுதும் சொல்வார். இதுவரை வந்த தமிழ் காமிக்ஸ் சரித்திரத்திலேயே, கேப்டன் டைகர் போல் ஒரு ஹீரோ வந்ததில்லை என்று. அவருக்குமே மிகப்பிடித்த ஒரு காமிக்ஸ் இது. எனக்கும். நண்பர் ரஃபீக்கும் இதையே சொன்னார்.

இந்த லின்க்கில், இந்த மேலே சொல்லப்பட்ட ப்ளூபெர்ரி (டைகர்) காமிக்ஸ்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவற்றை டௌன்லோட் செய்ய, இந்த மற்றும் இந்த லின்க்குகளை நீங்கள் உபயோகிக்கலாம். அருமையான கலரில், எளிமையான ஆங்கிலத்தில் படித்து இன்புறலாம்.

இவை சிபிஆர் எனப்படும் வகையைச் சேர்ந்தவை. இலவச சிபிஆர் ரீடர்கள் நெட் எங்கிலும் கிடைக்கின்றன. அவற்றை உபயோகப்படுத்தி, படித்து மகிழுங்கள்.

பி.கு 1– எக்காரணம் கொண்டும், இதே பெயரில் (ப்ளூபெர்ரி) வந்த ஆங்கிலப் படத்தை மட்டும் பார்த்து விடாதீர்கள். பார்த்தீர்கள்… தொலைந்தீர்கள் !! ஆமாம். .

பி.கு 2 – காமிக்ஸைப் பற்றி எழுதும்போது, இந்தத் துறையில் ஜாம்பவான்களான ரஃபீக் ராஜா, கிங் விஸ்வா, கனவுகளின் காதலன் மற்றும் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

18 Comments

 1. வாத்தியாரு பாடம் நடத்த, நான் காமிக்ஸ் படிக்க, ஒரு நல்லவன் போட்டு கொடுக்க, வாத்தியாரு என்ன அடிக்க அன்னையோட அத விட்டாச்சு. இப்பொ மறுபடியும்.

  Reply
 2. அட,அட,அட……..
  எனக்கு பிடிச்ச ப்ளுபெர்ரி பத்தி எழுதி இருக்கிங்களே…….
  அது என்னமோ தெரியல பாஸ்…..
  காமிக்ஸ்னா ஒரு இனம் புரிஞ்சுக்க முடியாத கவர்ச்சி…….அதுலயும் ப்ளுபெர்ரி செரீஸ்,just wow……..
  ஆமா,Arizona love படிச்சீங்களா?லிங்க் இருக்கு உங்க கிட்ட?யாருகிட்டயாவது லிங்க் இருந்தா கொடுங்கப்பா ப்ளீஸ்…..

  Reply
 3. ஏண்ணே இப்படி………சரி ஓகே…..அடிச்சு ஆடுங்க(நிறைய எடத்துல இந்த பின்னூட்டம் பாத்தேன்.அதேன் சரின்னு உங்களுக்கு போட்டுப்புட்டேன்)

  Reply
 4. //எக்காரணம் கொண்டும், இதே பெயரில் (ப்ளூபெர்ரி) வந்த ஆங்கிலப் படத்தை மட்டும் பார்த்து விடாதீர்கள். பார்த்தீர்கள்… தொலைந்தீர்கள் !! ஆமாம்.//

  ஆமாம், இதோ அந்த விளைவுகள்:ப்ளூபெர்ரி ரெனகேட்

  Reply
 5. ப்ளூபெர்ரி கதைகளின் இன்ஸ்பிரேஷன் பற்றிய ஒரு முழு நீள ஆராய்ச்சி பதிவை விரைவில் எதிர்பாருங்கள். (நேரமின்மை ஒரு முக்கிய காரணம்).

  You’ll be surprised to know.

  Reply
 6. @ ஜீவன்பென்னி – நல்லவேள காமிக்ஸ் படிச்சீங்க . . வேற ஏதாவது புக்கு படிக்காம.. படிச்சிருந்தீங்க. . வாத்தியாரு அத புடுங்கிட்டு போயிருப்பாரு . . 🙂

  @ இல்ல்யூமினாட்டி – அந்தக் கதை டாரண்ட்டுல தேடிப் பாருங்க . . .எப்புடியும் கிடைச்சிரும் . . சேம் பின்ச் !! 🙂

  @ மயில்ராவணன் – 🙂 பின்னுங்க !! ஹீ ஹீ . . .

  @ கிங் விஸ்வா – சூப்பர் . . பதிவுக்கு வெயிட்டிங் . . பட்டைய கிளப்புங்க . .

  @ கார்த்திகேயன் – ஃபோட்டோக்கு நானே வெயிட்டிங் . . 🙂 பசங்க எடுத்த சில ஃபோட்டோ தான் ஆர்க்குட்லயும் ஃபேஸ்புக்லயும் போட்ருக்கேன் . . இதோ அஃபிஷியல் ஃபோட்டோஸ் வந்தவுடனே அப்லோட் பன்னிடரேன் . . கொஞ்ச நாளு பொறுத்துக்குங்க . .

  Reply
 7. நண்பரே,

  இனிய ஆச்சர்யம், சினிமாப் பதிவுகளிற்கிடையில் காமிக்ஸ் குறித்தும் நீங்கள் பதிவை வழங்கியிருப்பது மகிழ்ச்சி. உங்கள் பணி தொடரட்டும்.

  காமிக்ஸ் பதிவுகளில் நான் ஜாம்பவான் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஃப்ளுபெரியின் கதைகளின் சுவாரஸ்யம் வார்த்தைகளில் சொல்லவியலாதது, படித்தால்தான் தெரியும். பந்தாவில்லாத ஒரு ஹீரோ என்று ஃப்ளுபெரியைக் கூறலாம். அவரது முதிய நண்பர் கூட கலக்கல் பேர்வழிதான்.

  ஆனால் ஜான் மிசெல் சார்லியரின் மரணத்தின் பின்பு ஜான் ஜிரோ கதையையும் தன் பக்கம் எடுத்துக் கொண்டு மிஸ்டர் ஃப்ளுபெரி எனும் தொடரை கொண்டு சென்றார். சார்லியரின் அருமையை அக்கதைகளைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

  மிகச் சிறப்பான பதிவு.

  Reply
 8. பாஸ் , நம்ம டைகர பிடிக்காத காமிக்ஸ் ரசிகர்களே இருக்க முடியாது . தங்க கல்லறை(The Lost Dutchman’s Mine) படிசீங்கள பாஸ் .. என் வலைப்பூவில் ஒருகாலத்தில் அனைத்து டவுன்லோட் லிங்க்குகளும்போட்டிருந்தேன்

  Reply
 9. @ காதலரே – இப்பொழுதுதான் ஒவ்வொரு கதையாகப் படிக்கத் தொடங்கியுள்ளேன் . . ஆனால், தமிழில் படித்ததை விட, ஆங்கிலத்தில் படிப்பது மிகவும் பிடித்துள்ளது. . இன்னமும் உயிரோட்டம் அதிகமாகத் தெரிகிறது . . அத்தனை ப்ளூபெர்ரி கதைகளையும் ஒவ்வொன்றாகத் தரவிறக்கிக் கொண்டிருக்கிறேன் . . அத்தனையும் படித்துவிட்டு, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் . . நன்றி . .

  @ அண்ணாமலையான் – நன்றி . .:-)

  @ லக்கி – பாஸு . . லாஸ்ட் டட்ச்மேன்’ஸ் மைன் இன்னமும் படிக்கல.. ஆனா டௌன்லோட் பண்ணியாச்சி . . அத படிச்சிட்டு வாரேன் . . 🙂 உங்க வலைப்பூவ இப்பொவே பாக்குறேன் . . சூப்பர் !!

  Reply
 10. கருந்தேள், ப்ளுபெர்ரிக்கு இன்னொரு காதலனா…. காமிக்ஸ் படிக்கும் அனைவருக்கும் அவர் பிடித்த ஹீரோவாக இருப்பார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

  காமிக்ஸ், அதுவும் கவ்பாய் கதைகள் என்றாலே ஸ்லாம் பேம் ஆக்ஷன் என்ற கூற்றை உடைத்த முதல் கதாநாயகர்… எதிரியுடன் கட்டிபிடித்து சண்டையிட்டு அதில் தோற்கவும் வாய்ப்பிருக்கும் மனிதர்… அழுக்கு சட்டைகளுடன் தான் கவ்பாய் தோற்றம் என்றால், மூக்கொடிந்த அவலட்சணத்தில் ஒரு சாகசக்காரர், கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற கோட்பாடுகளை உடைக்கும் ஒரு புரட்சியாளர்

  என்று பல பரிணாமங்களை காட்டி இருப்பார் கதாசிரியர்… காதலர் கூற்றுபடி, தற்போதை ப்ளுபெர்ரி கதைகளின் போக்கு அதன் தன்னிகரில்லா பெருமைக்கு ஒரு இழுக்கு

  அது ஏனோ, நாம் நேசித்த கதாபாத்திரங்கள் அவர்கள் கர்த்தாக்களில் ஒருவர் தவறியோ, அல்லது விழகி போனவுடன், இன்னொருவர் கையில் பட்டு சின்னாபின்னாமாவது வழக்கமாக போயிற்று… லக்கி லூக், ஆஸ்ட்ரிக்ஸ், XIII, வரிசையில் ப்ளுபெர்ரியும் சேர்ந்து விட்டது நம் துரதிஷ்டம் தான்.

  Reply
 11. anna thanx for your writing about blueberry
  you are rocking
  can you plz give the link for The Lost Dutchman’s Mine???

  Reply
 12. Hi

  I am a fan of lion comics…. Can u pls tell me How to get Tex viller series comics…

  Thanks in advance,
  John.

  Reply

Join the conversation