Salaam Bombay ! (1988) – Hindi

by Rajesh April 15, 2010   Hindi Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

மிகப்பல நாட்கள் கழித்து ஒரு உலகப்படத்தைப் பற்றிய பதிவு. இனி அடிக்கடி இம்மாதிரிப் பதிவுகள் வரும்படி பார்த்துக்கொள்கிறேன்.

நண்பர்களுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் நினைவிருக்கலாம். அப்படம் வெளிவந்த போது, ஒரு சாரார், அது இந்தியாவின் ஏழ்மையை உலகிற்கு விற்கிறது என்றும், இப்படம் தடை செய்யப்படவேண்டும் என்றும் கருத்துகளை வெளியிட்டனர். இன்னொரு சாராரோ, அப்படம், உண்மையை அப்பட்டமாகக் காட்டியிருப்பதால், அதில் தவறு ஒன்றும் இல்லை என்று வாதிட்டனர். நமது கமல் கூட, இப்படத்தில் தவறில்லை என்றும், வீட்டை விட்டு வெளியே வந்து நடக்கத் தொடங்கினால், இந்தியாவில் அடிக்கடி நாம் சேரிகளைத் தான் பார்க்கிறோம் என்றும், அதை திரையில் காட்டுவதில் என்ன தவறு என்றும் ஒரு நிகழ்ச்சியில் கருத்துச் சொன்னார். இத்தனைக்கும், ஸ்லம்டாக், ஒரு அப்பட்டமான மசாலா. மனதில் தைக்குமாறு இந்திய ஏழ்மையை அப்படம் பதித்திருந்தாலும், பல இடங்களில் அது ஒரு மசாலா என்று நன்றாக நமக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஒரு படத்துக்கே இவ்வளவு விமர்சனம் என்றால், அதற்கு இருபத்தோரு வருடங்கள் முன்பு வெளிவந்த ‘சலாம் பாம்பே’ படத்தை இன்றைய மக்கள் பார்த்திருப்பார்களேயானால்?

வெல்.. சலாம் பாம்பே, இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஒரு சவுக்கடி என்றே சொல்லலாம். ஒரு சேரிச் சிறுவனை நம்முன் நிறுத்தும் இப்படம், அவனது இந்திய வாழ்வை அப்பட்டமாகப் பதிவு செய்து, நமது மனதில் பல கேள்விகளை உருவாக்குகிறது.

படத்தின் இயக்குநர், மீரா நாயர். அவரது முதல் திரைப்படம் இது. இப்படத்திற்கு முன், ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அதில் ஒன்றுதான், மும்பை கேபரே பெண்களைப் பற்றி அவர் எடுத்த ஒரு ஆவணப்படமான, ‘இண்டியா கேபரே’. இது பல விருதுகளை வாங்கிக் குவித்தது. அந்த ஆவணப்படத்தை எடுத்த கையோடு, களத்தில் குதித்தே விட்டார்.

படம், ஒரு சர்க்கஸில் ஆரம்பிக்கிறது. கிருஷ்ணா, அங்கு வேலை செய்யும் ஒரு எடுபிடிப் பையன். அன்று, ஷோ முடிந்ததும், முதலாளி அவனை, ஊரில் உள்ள கடைக்குச் சென்று, பான் மசாலா வாங்கிவரச் சொல்கிறார். படு உற்சாகத்துடன் ஓடிச் செல்லும் கிருஷ்ணா, வெகு தூரத்திலிருக்கும் ஊருக்குச் சென்று, பான் மசாலா வாங்கி வருகிறான். திரும்பி வந்து பார்க்கும் கிருஷ்ணா, அவனது பிஞ்சு வாழ்வின் உச்சபட்ச அதிர்ச்சிக்குள்ளாகிறான்.

அங்கு சர்க்கஸ் இருந்த சுவடே இல்லை ! அந்த இடமே காலியாக இருக்கிறது.

மெதுவாக நடக்க ஆரம்பிக்கும் கிருஷ்ணா, பக்கத்தில் உள்ள புகைவண்டி நிலையத்துக்குச் சென்று, அருகே உள்ள ‘பெரிய’ ஊருக்கு, முதலாளி கொடுத்த பாக்கிப்பணத்தில் டிக்கட் எடுக்கிறான்.

அந்தப் பெரிய ஊரான பம்பாயில் வந்து இறங்கும் கிருஷ்ணா, உடனேயே அங்கிருக்கும் சில தெருவோரச் சிறுவர்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். அவனிடமிருக்கும் பான் மசாலா பறிபோகிறது. அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடும் கிருஷ்ணா, அவர்களில் ஒருவனோடு நட்பாகிவிடுகிறான்.

அவன் மூலமாக, ‘சில்லம்’ என்ற கஞ்ஜா விற்பனை செய்யும் நபரின் அறிமுகம் கிடைக்கிறது. சில்லமின் அறிமுகத்தால், அந்த ஏரியாவில் உள்ள சிறிய டீக்கடையில் கிருஷ்ணா வேலைக்குச் சேர்கிறான்.

டீ கொடுப்பவர்களை, ‘ச்சாய்பாவ்’ என்று அழைப்பது வழக்கம். எனவே, அன்றிலிருந்து கிருஷ்ணா, ச்சாய்பாவ் ஆகிவிடுகிறான். மும்பையிலிருக்கும் கோடானுகோடி மனித இயந்திரங்களில் ஒரு இயந்திரமாக மாறிப்போகிறான்.

அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு விபசார விடுதிக்கு அடிக்கடி டீ கொடுக்கச் செல்வது கிருஷ்ணாவின் வழக்கம். அப்படி ஒரு நாள் செல்லும்போது, அங்கு ஒரு மிக இளம் பெண் பலவந்தமாகக் கொண்டுவரப்படுவதைப் பார்க்கிறான். தனியே அடைக்கப்படும் அந்தப் பெண்ணுக்கு (அவள் பெயர் – சோலா சால் – 16 வயது என்று அர்த்தம்) டீ கொடுக்கிறான். அதனை அவள் அழுதுகொண்டே கோபத்தில் தட்டிவிட்டு விடுகிறாள். மறுபடியும் இன்னொரு டீ க்ளாசை அவன் கொடுக்க, அவள் அதனை வாங்கி, ஒன்றும் சொல்லாமல் குடிக்கிறாள். அதிலிருந்து, இருவருக்கும் நட்பு மலர்கிறது.

அந்த விடுதியை நடத்துபவன், லோக்கல் தாதாவான ‘பாபா’. அவனே சில்லமுக்கு கஞ்ஜாவும் விநியோகம் செய்பவன். அவனது மனைவி ரேகாவும் செக்ஸ் வொர்க்கராக இருக்கிறாள். அவளது மகள் மஞ்சு. ரேகாவும் மஞ்சுவும் கிருஷ்ணாவின் மேல் அன்பு செலுத்துகிறார்கள்.

சில்லம், கஞ்ஜா அடித்து அடித்து, மிகவும் சுகவீனமாகி விடுகிறான். பாபாவோ, ஒரு பிரச்னையால் அவனைத் துரத்தி விடுகிறான். கஞ்ஜா இல்லாமல், பைத்தியமாகும் சில்லமுக்கு, ரேகாவிடம் பணம் வாங்கி வந்து, கிருஷ்ணா கஞ்ஜா கொடுக்கிறான். சிறிது நாட்களிலேயே, சோலா சாலை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிக்கப் பார்க்கையில், பிடிபடுகிறான். அடித்துத் துரத்தப்படுகிறான்.

கிருஷ்ணாவுக்கு வேலை போகிறது. சில்லமும், கஞ்ஜாவினால் இறக்கிறான். அவனுடனே சுற்றிக்கொண்டிருந்த சிறு பையன்கள், அவனது பிணத்தை, அந்தத் தெருக்களின் வழியே, கடவுளின் பெயர்களை இயந்திரத்தனமாகச் சொல்லிக்கொண்டே எடுத்துச் செல்கின்றனர்.

ஒரு நாள், ஒரு திருமணத்தில் வேலை செய்துவிட்டுத் திரும்பும் வழியில், கிருஷ்ணாவையும் மஞ்சுவையும் போலீஸ் கைது செய்துவிடுகிறது. கிருஷ்ணா குழந்தைகள் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட, மஞ்சு, ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்படுகிறாள். மஞ்சுவின் தாய் ரேகா அங்கு ஓடி வருகிறாள். ஆனால், மஞ்சுவை அழைத்துச்செல்ல, அவளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. அவளுடன் இருந்தால், மஞ்சுவும் ஒரு செக்ஸ் வொர்க்கராக மாறும் நிலை இருப்பதால், காப்பகத்தில் இருப்பதே அவளுக்கு நல்லது என்று அந்த வார்டன் சொல்லிவிடுகிறாள்.

கிருஷ்ணா, தப்பிக்கிறான். மஞ்சு இல்லாமல், மனமுடைந்து போய், தனது கிராமத்துக்குக் கிளம்பும் ரேகாவை, பாபா தடுக்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் கிருஷ்ணா, பாபாவைக் கத்தியால் குத்தி விட்டு, ரேகாவை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து ஓடுகிறான்.

தெருவெங்கும் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம். பலத்த கூட்டத்தினிடையே, இருவரும் பிரிகின்றனர். ரேகாவின் பெயரைச் சொல்லிச்சொல்லி கிருஷ்ணா கத்துகிறான். பலனில்லை. கூட்டம் மெல்ல வடிகிறது.

அந்தப் பெரிய தெருவில், கிருஷ்ணா தனித்து விடப்படுகிறான். மெதுவே அந்தத் தெருவில் நடக்கிறான்.

அந்தத் தெருவில், ஒரு திண்ணையில் தனித்து அமர்ந்திருக்கும் கிருஷ்ணாவைப் பார்க்கிறோம். அத்தனை பெரிய பாம்பேயில், அவன் தனித்து விடப்பட்டு விடுகிறான். அவன் கையில் பணமில்லை; துணைக்கு யாருமில்லை. அவன்மேல் கொஞ்சமாவது பரிவு காட்டிய சில்லமும் ரேகாவும் அவனது அருகில் இல்லை. பிரம்மாண்டமான அண்டவெளியில் தனித்து விடப்பட்ட ஒரு அணுவைப் போல் அவன் அங்கு அமர்ந்திருக்கிறான். வாழ்க்கை அவனுக்கு என்ன பாக்கி வைத்திருக்கிறது? இனிமேல் அவன் என்ன செய்யப்போகிறான்? அவனுக்குத் துணை யார்?

அவனது முகத்தின் டைட் க்ளோஸப்போடு, படம் முடிகிறது.

உண்மையைச் சொன்னால், ஸ்லம்டாக்கை விட, சலாம் பாம்பே ஆயிரம் மடங்கு அருமை என்றுதான் கூறுவேன். இது, உண்மையான ஒரு கலைப்படைப்பு. கொஞ்சம் கூட செயற்கையில்லாமல், வெகு உண்மையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாம்பேயின் சேரிக்குழந்தைகளே பெரும்பாலும் நடித்தனர்.

சலாம் பாம்பே, போலி விளம்பரங்கள் அற்ற, நிர்வாணமான இந்தியாவைக் கண்முன் நிறுத்துகிறது. மனிதர்களை இரக்கமின்றிக் கொல்பவர்களையும், இளம்பெண்களை விபசாரத்துக்கு உள்ளாக்குபவர்களையும், தங்களது தாய்மார்கள் விபசாரத்தில் ஈடுபடுவதை அப்பாவித்தனமாகப் பார்க்கும் குழந்தைகளையும், தெருவில் விடப்படும் அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்க வக்கில்லாத அரசியல்வாதிகளையும் நாம் கண்முன் பார்க்கிறோம். பாம்பே, ஒரு பெரிய பூதத்தைப் போன்று, இந்த அநாதைக் குழந்தைகளை விழுங்கிவிடுகிறது.

இப்படம், 1988ல் வெளியிடப்பட்டது. பல விருதுகளைக் குவித்த இப்படம், ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்காக நாமிநேட்டும் செய்யப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

மொத்தத்தில், நம்மைக் கலங்கடிக்கும் ஒரு படமாக இந்த சலாம் பாம்பே இருக்கும். நம்மை வெகுவாக யோசிக்கவும் வைக்கும்.

சலாம் பாம்பே படத்தின் ட்ரெய்லர் இங்கே.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

16 Comments

 1. கருந்தேளுக்கு வணக்கங்கள்.

  // இனி அடிக்கடி இம்மாதிரிப் பதிவுகள் வரும்படி பார்த்துக்கொள்கிறேன்.//

  வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  //உண்மையைச் சொன்னால், ஸ்லம்டாக்கை விட, சலாம் பாம்பே ஆயிரம் மடங்கு அருமை என்றுதான் கூறுவேன்.//

  ரிபிட்டே

  Reply
  • Anonymous: You're right, of course. Salt House is a great restaurant full stop. Perhaps I'm too obsessed with context, and th#&3ree9;s no need to be. You're not the only one to pick me up on this, and I will try to be less so in the future.Salt House is a bloody brilliant restaurant, and that it's in Liverpool means nothing other than it's more difficult for me to get to. You lucky bugger you 🙂

   Reply
 2. நல்ல விமர்சனம் கருந்தேள்! எனக்கு படத்தின் ஒளிபதிவும் மற்றும் இசையும் பிடித்தது. நம்ம எல். சுப்ரமணியம் திரைப் படத்திற்கு இசை அமைச்சு இருக்கார்னு இந்த படத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

  Reply
 3. @ கார்த்திகேயன் – சூப்பர் !! இங்க வரீங்களா . . வாங்க வாங்க . . 🙂 வந்து நல்லா ரெஸ்ட் எடுத்துகினு போங்க . . 🙂

  @ விஸ்வா – கண்டிப்பாக . . . உங்களுக்கும் எனது பிலேடட் பிறந்த நாள் வாழ்த்துகள் . . 🙂

  @ சிந்து – மிக்க நன்றி . . அடிக்கடி வரவும் . .

  @ இராமசாமி கண்ணன் – நன்றி நண்பா . .

  @ மீனாட்சி சுந்தரம் – அது !! எல் சுப்ரமணியம் பற்றி எழுத மறந்துவிட்டேன் . . அவரு ஒரு அருமையான இசையமைப்பாளர் . . நல்லவேளை நியாபகப்படுத்தினீங்க !

  Reply
 4. விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு! இந்தப்படம் ஏற்க்கனவே தரவிறக்கம் செய்து விட்டேன்..பார்க்க வேண்டும். இதைப்போல படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதாவது செயற்க்கைதனமில்லாத படங்கள்.

  Reply
 5. நல்ல படம்.. நல்ல விமர்சனம் கருந்தேள்.. இன்னும் பாக்கலை. சொல்லிடீங்க இல்ல.. பாத்துடறேன்..

  Reply
 6. என் மனதை ரொம்ப பாதித்த படங்களில் இதுவும் ஒன்று. அருமையான விமர்சனம்.

  Reply
 7. நண்பரே,

  மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது உங்கள் வரிகள். அருமையான பதிவு.

  Reply
 8. இந்தப் படத்தப் பத்தி நெறைய கேள்விப்பட்டுருக்கேன், ஆனா பார்த்ததில்ல…எனக்கு slum dog சுத்தமா புடிக்கல, இது நல்லா இருக்கும்னு நெனைக்கேன்

  நீங்க ஏன் Children of Heaven, bicycle thief’s பத்தி எழுதிரத்தில்ல, children of heaven படம் பார்த்து நெறைய இடத்துல கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கேன் (இப்போ நெனச்சாலும் கண்ணுல தண்ணி முட்டுது, உட்றா பருப்பு… பருப்பு மனசளவுல குயந்த மாதிரிங்க)

  Reply
 9. \ஸ்லம்டாக்கை விட, சலாம் பாம்பே ஆயிரம் மடங்கு அருமை \

  நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஸ்லம்டாக் பார்த்த பிறகு தான் இந்தப் படம் பார்த்தேன்.. வீட்டை விட்டு, ஊரை விட்டு இங்கு எத்தனையோ ‘ச்சாய்பாவ்கள்’ ஹோட்டல்களிலும், கடைகளிலும் வேலை செய்வதைப் பார்த்துப் பார்த்து சகித்துப்போய்விட்டது எனக்கு… இவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது யாரென்றே தெரியவில்லை.

  Reply
 10. நான் உங்க ப்ளாக் உள்ள வந்ததும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். நான் ஒன்று ஒன்றாக வாசிச்சிட்டு கமெண்ட் போட்றேன்

  Reply
 11. @ கிரி – இதையும் பார்த்துருங்க . . இது உங்களுக்கு கண்டிப்பா ரொம்ப புடிக்கும் !! மனச சும்மா டச் பண்ணிரும் . . 🙂

  @ ஜெய் – பாருங்கோள் . . பார்த்து விட்டு சொல்லுங்கோள் !

  @ ஜீவன்பென்னி – சூப்பரப்பு !! உங்க மனச பாதிச்சது போல , என்னோட மனசையும்தேன் . .

  @ காதலரே – மிக்க நன்றி . . உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ந்தேன் . .

  @ பருப்பு – அட சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஒரு பைபிள் மாதிரில்லா . . அது பத்தி பிதாமகர்கள் பலர் எளுதிப்புட்டாயிங்களேப்பு . . பைசைக்கிளும் அதே மேரிதானே . . இருந்தாலும், உங்களுக்காக சீக்கிரம் எளுதிரலாம் . .

  @ ஆனந்தன் – ஆமாம் பாஸு . . ரொம்பக் கொடுமையான நிகழ்வு தான் இது . . 🙁 இதுக்கு நம்மளால ஒன்யும் பண்ண முடியாதுன்னு நினைக்கும்போது, அந்தக் கொடுமை இன்னும் ஜாஸ்தியாகுது நண்பா . .

  @ ஏஞ்சல் – என்னாது ஷாக்காயிட்டீங்களா . . அப்புடி ஷாக்காகுற மேரி இன்னாங்கோ கீது இங்க . . இதுக்குப் பதில் சீக்கிரம் போடுங்க . .

  Reply
 12. List of Iranian Movies directed by Majid Majidi

  Children of Heaven

  The Color of Paradise – Story of Blind boy

  Baran – Beautiful love story… last scene where the get seperated is very touching

  The Song of Sparrows

  The Willow Tree – When a Blind Man gets his sight he lost in childhood, how it affects his relationship with his family & wife.. There is a beautiful scene, when he returns to his home country after getting his sight back, he eagerly looks for known faces( his mother)…

  I hope you write review for all these movies.. All these movies are very beautiful, visually great…

  Reply

Join the conversation