Reviews with a sting

 
 
Random Article

 
13
Posted May 7, 2010 at 6:22 AM. by Rajesh Da Scorp in Announcements
 
 

ஒரு சிறிய விஷயம் . .


நண்பர்களே . .

சென்ற டிசம்பரிலிருந்து நமது வலைப்பூ இயங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை, நல்ல முறையில் திரைப்படங்களையும் காமிக்ஸ்களையும் பற்றி அதில் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் . . இப்படி இருக்க, இன்று ஒரு விஷயம் எனது கவனத்துக்கு வந்தது.

‘கருந்தேள் கண்ணாயிரம்’ என்ற பெயரில், சில – பல ஆபாசப் பின்னூட்டங்கள் சில வலைப்பூக்களில் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு – http://thatstamil.oneindia.in/comment/2010/05/2/100515.html – இந்த லின்க்கில் பார்க்கலாம். அந்தக் கமெண்டையே இங்கு படமாகவும் இட்டுள்ளேன்.

இந்த வலைபூவைப் படித்து வரும் நண்பர்களுக்கு, இது எனது வேலை இல்லை என்பது தெளிவாகவே தெரியும். அதேபோல், இந்த வேலையைச் செய்யும் ‘நல்லவர்களை’ அடையாளம் காணும் பணியும் துவங்கிவிட்டது. அது மிகச்சுலபம்.

எனவே, ஒருவேளை எனது பெயரில் ஏதாவது ஆபாசமான பின்னூட்டம் உங்கள் வலைப்பூவில் இடப்பட்டால், தயங்காது karundhel[at]gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். அதன்பின், அந்த நபரை அடையாளம் கண்டு, கிழித்தலைத் தொடங்குவோம்.

இப்படிப் போலிப் பெயரில் ஒளிந்துகொண்டு, கக்கூஸ் பின்னூட்டங்கள் எழுதும் ‘அன்பர்களுக்கு’ – சூரியன் டயலாக் தான் – ‘இந்த வேலைக்குப் போய்ப் பிச்சையெடுக்கலாம்’ . . :-)

உங்களது ஐடெண்டிடியைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அப்படிக் கண்டுபிடித்தாயிற்று என்றால், அதன்பின் உங்கள் பாடு – அதோகதி தான். எனக்கு இது மிகப்பிடித்த விளையாட்டு. எனவே, பார்த்துவிடலாம். .

Facebook comments

comments


13 Comments


  1.  

    கருந்தேள் பற்றி தெரிந்தவர்களுக்கு இப்படி ஒரு பதிவு தேவையே இல்லை. ஏனென்றால் உங்கள் நடவடிக்கைகள் நமக்கு நன்கு தெரியும். ஆகையால் இது புதிய பதிவர்களுக்கு / அறிமுகம் இல்லாதவர்களுக்கு. உங்களின் கமென்ட் ஸ்டைல் தெரிந்தவர்கள் உங்களின் கமெண்ட்டை கண்டு கொள்வார்கள். Don;t worry, we are with you.

    About this comment, என்ன கொடுமை கருந்தேள் இது? இப்படி செய்தவர்களை கடுமையாக “விமர்சிக்க” வேண்டும். விடவே கூடாது.

    ஒரு கெஸ் என்னவென்றால் “உங்களை தெரியாமல் – உங்களின் வலைத்தளம் – புனைப்பெயர் தெரியாமல்” மற்ற யாராவது அப்படி இட்டு இருக்கலாம்.

    ஆனால் அந்த தட்ஸ் தமிழ் தளத்தில் லிங்க் இல்லாமல் தான் கமென்ட் இருந்தது. மற்றபடி பிளாக்குகளில் அப்படி கமென்ட் இட்டு இருந்தால் , லிங்குடன் இருந்தால் அது சட்டப்படி குற்றம்.

    அப்படி ஏதாவது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம், கவலை கொள்ளாதீர்கள். சைபர் கிரைம் எதற்கு உள்ளது, ஒரு கை பார்த்து விடலாம்.




  2.  

    நீங்கள் சொன்னபடியும் நான் யோசித்தேன் . . என்னுடைய பொஉனைபெயர் தெரியாமல் கூட யாராவது இப்படிச் செய்திருக்கலாம் என . . ஆனாலும், இந்த ரீதியிலேயே அந்த வலைப்பூவில் பல கமெண்டுகள் உள்ளன. . அதுவும் படு கேவலமாக. . எனவே தான் ஒரு பதிவு போட்டுவிடலாம் என்று முடியு செய்தேன் . .

    பொறுத்திருந்து பார்ப்போம் . . வீ ஆர் வாட்சிங் தெம் . . :-) நன்றி விஸ்வா . .




  3.  

    நண்பா.உங்க பேர்ல கமெண்ட் போடும் கபோதிகளுக்கு விளம்பரம் செய்யாதீர்கள்.பெயர் ஃபேன்ஸியா இருக்குன்னு போட்டிருப்பானோன்னு டவுட்டா இருக்கு.லின்க் குடுத்து போட்டிருந்தா கிழிக்கலாம்.நாரப்பயல்கள்,அவன் போட்டது கன்றாவி கமெண்ட்.

    இதே போல தட்ஸ் தமிழில் நிறைய பேர் இருந்தனர்.உதாரணம் கனடா என்பவன்.அவன் அதற்கு பின் காணாமல் போனான்.




  4.  

    நண்பரே,

    அது நீங்கள் இல்லை என்பது எங்களிற்கு தெரியாதா. அமைதியாகுங்கள். சுறா பாருங்கள் :) )




  5.  

    கருந்தேள் நண்பா,

    இணையத்தில் இப்படி திரியும் புல்லுருவீகளை நானும் சந்தித்திருக்கிறேன். வித்தியாசமான பெயர்களில் டைப் டைப்பாக கமெண்ட் அடித்து கொண்டு, இன்னொரு உண்மையான பெயரில் ஒண்ணுமே நடக்காத அப்பாவி போல உலாத்தி கொண்டிருக்கும் கொடிய நோய் கொண்ட மிருக ஜாதி அவர்கள்.

    இவர்களை மதித்து அதற்கு நாம் முக்கியத்துவம் குடுக்காமல் இருந்தாலே, அவர்கள் டப்பா டான்ஸ் ஆடி விடும்.

    எனக்கு இருக்கும ஒரே சந்தேகம், இப்படிபட்ட பேர்வழிகள் தாங்கள் செய்யும் செயல்களை அவர்களின் குழந்தைகளுக்கு அறிய தருவார்களா என்பதே… அப்படி நடந்தால் அவர்களை அவர்கள் குடும்பமே வெறுக்கும் நிலை தான் வரும்… கழிசடைகளுக்கு அது தான் சிறந்த தண்டனை.




  6.  

    நானும் பலமுறை அந்த இணைய தளத்தின் மிக மிக அச்சில் ஏறமுடியாத பின்னூடங்கள் கண்டு மனம் வெதும்பியிருக்கிறேன். தமிழர்களை பற்றி எந்த விதமான் பிம்பங்களை இந்த பின்னூட்டங்கள் உருவாக்கும் என்று எண்ணி வருந்தியிருக்கிறேன். ஆனால் இது தமிழ் இணைய பக்கங்கள் மட்டுமல்ல எங்கெல்லாம் moderation இல்லாமல் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இதே தான் நடக்கிறது. உண்மையான பெயரைப் போட வக்கில்லை, பொய்யான பெயரில் ஒளிந்து கொண்டு இவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கவில்லை. இப்படிப் பட்ட பின்னூட்டங்களை அந்த பத்திரிக்கை ஏன் இன்னும் அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    நான் உங்கள் வலை பக்கத்தை விரும்பி படிக்கிறேன், இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கொஞ்ச நாளில் மறைந்துவிடும். எழுத்தை தொடருங்கள், வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    மீனாட்சி சுந்தரம்




  7.  

    டீல்ல விடுங்க கருந்தேள். நானும் விஸ்வா மாதிரிதான் நினைக்கிறேன். தெரியாம நடந்திருக்கத்தான் வாய்ப்பிருக்கு.

    கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்..!!! :)




  8.  

    அப்பிடியே உங்க பழைய ‘நான் கடவுள்’ மேட்டரையும் லைட்டா சொல்லியிருக்கலாம் இப்பதிவில்.அண்ணாமலையான் பாணியில் சொன்னால் ‘காண்டம்க்கு தப்புனதுங்க’ எதோதான் இப்படி பண்ணியிருக்குங்க. (கடுஞ்சொற்களுக்கு மன்னிக்கவும்). இந்த மாதிரி சம்பவங்களைப் பார்க்கும்போது ரட்சகன் பட நாகார்ஜூன் போல நரம்பெல்லாம் ஏறுது…என் செய்ய?




  9.  

    கருத்துச் சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். . அந்தத் தளத்தில் வரும் பின்னூட்டங்களை சற்றுப் பார்த்தோமேயானால், கண்டிப்பாகக் கொலைவெறி கிளம்பிவிடும் என்பது திண்ணம். அந்த அளவு கக்கூஸ் பின்னூட்டங்கள் அவை.

    எனக்கும், இது தற்செயல் தான் என்ற எண்ணம் இருக்கிறது. . இருந்தாலும், வேறு இடங்களில், பல பதிவர்களின் பெயரைப் போட்டு வரும் பின்னூட்டங்களையும் படித்துள்ளதால், எதற்கும் ஒரு எச்சரிக்கை விடுவோம் என்ற எண்ணத்தில் தான் இப்பதிவை இட்டேன் . .

    விஸ்வா, கார்த்திகேயன், கனவுகளின் காதலர், ரஃபீக், மீனாட்சி சுந்தரம், தலைவர் பாலா, மயில்ராவணன் ஆகிய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .. ஃப்ரீயா உட்டுட்டு, இதோ அடுத்த பதிவு போட்டாச்சி . .

    இன்னாது சுறா பார்க்கணுமா? இதுக்கு பதில், விஷம் குடிச்சி, தூக்க மாத்திர சாப்புட்டு, மர்டர் செஞ்சி, துப்பாகில சுட்டு, கத்தில குத்தி சாகலாம்னு சொல்லிருக்கலாமே . . :(




  10.  

    நண்பரே, நீங்கள் சிறந்த இடுகையாளர். இதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள். உங்களை நாங்கள் அறிவோம்.




  11.  

    Don’t worry we are with you. I think this is a coincidence……இந்த பொழைப்புக்கு………………..




  12.  

    boss.. dont worryy..we knw ur writting style!!!
    :)




  13.  

    நண்பரே..என்னுடைய தளத்திற்கும் இந்த மாதிரி வேறு ஒருவர் பெயரில் பின்னூட்டம் இடவது நடந்துள்ளது. சமிபத்தில் தான் அதைக்கண்டு பிடித்து, அதைப்பற்றி அறிவிப்பு செய்துள்ளேன். பார்க்கலாம். இவர்கள் திருந்துவார்களா என்று.





Leave a Reply