June2010

கிம் கி டுக் – ஸாடிஸ்டா?

June 30, 2010
/   Personalities

போன பதிவில் நான் எழுதிய ‘The Isle’ படத்தைப் பற்றிய சில கேள்விகளை எனது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு பதிலும் எழுத நேர்ந்தது – ஃபேஸ்புக்கில். ஆனால், முழுப்பதிலும் எழுதிய பின், அந்தப் பதிலே ஒரு பெரிய பதிவைப் போல் இருக்கவே, அதனை இங்கே...

The Isle (Seom) – 2000 – South Korean

June 24, 2010
/   world cinema

சென்ற பதிவில், பஸோலினி எடுத்த கடைசிப் படமான ’ஸாலோ’ பற்றி மிகச்சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். இப்படத்தைப் பற்றி யோசிக்கையில், இன்னும் சில படங்கள் நினைவு வந்தன. அவற்றில் ஒன்றே இந்த ‘ஐல்’. இப்படத்தைப் பற்றி எழுதும் முன், இன்னொரு விஷயத்தையும் பார்த்து விடலாம். கோவையில் சாய்பாபாகாலனியில், ‘ஹாலிவுட் டிவிடி...

The Gospel according to Saint Matthew (1964) – Italian

June 21, 2010
/   world cinema

ஒரு கவிஞர்; மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்; கம்யூனிஸ்ட்; பழுத்த நாத்திகர்; எழுத்தாளர்… வெல்.. இவ்வளவையும் தாண்டி, மனித வாழ்வின் துயரத்தை உள்ளபடி புரிந்து கொண்ட மனிதர். ஒரு ஹோமோசெக்‌ஷுவலும் கூட. தனது ஐம்பத்து மூன்றாம் வயதில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பஸோலினி, வாழ்வின் புதிர்களைப் புரிந்து...

ராவணன் (2010) – விமர்சனம்

June 19, 2010
/   Tamil cinema

ஒரு ஊரில், ராமன் ராமன் என்று ஒரு இளவரசன் வாழ்ந்துவந்தான். அவனது மனைவியின் பெயர், சீதை. இந்த சீதையை, ராவணன் என்ற ஒருவன் கடத்திவிட்டான். காரணம், இந்த ராவணனின் தங்கை சூர்ப்பனகையை, ராமன் & ஃபேமிலி அவமானப்படுத்திவிட்டதுதான். எனவே, சீதை கடத்தப்படுகிறாள். அப்போது ராமன் என்ன செய்தான்?...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்

June 16, 2010
/   80s Tamil

இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

June 10, 2010
/   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் ?

June 8, 2010
/   Social issues

நான் செய்திகள் படிப்பதோ பர்ப்பதோ இல்லை. இண்டர்நெட்டிலும் கூட, நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு விஷயம் அது. சோம்பேறித்தனம் காரணமில்லை. பல காலமாக இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து சோர்ந்துபோய், அறவே செய்திகளின் மேல் உள்ள ஆர்வம் போய்விட்டது. இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிப் பதிவே...

Death in the Andes – மரியோ பர்காஸ் யோசா

June 3, 2010
/   Book Reviews

எனக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம், திரைப்படங்கள் தவிர – புத்தகம் படிப்பது. சிறுவயதில், காமிக்ஸ்களிலிருந்து வாசித்தல் ஆரம்பமாகி, ஆங்கிலப் புத்தகங்கள் மீது (ஆங்கில பல்ப் . . ஹாட்லி சேஸ் இத்யாதி) தாவி, சிறுகச்சிறுக உலக இலக்கியத்தின் மேல் திரும்பியது. நான் உலகின் சில நல்ல...