The Gospel according to Saint Matthew (1964) – Italian

by Rajesh June 21, 2010   world cinema

Sharing is caring!

ஒரு கவிஞர்; மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்; கம்யூனிஸ்ட்; பழுத்த நாத்திகர்; எழுத்தாளர்… வெல்.. இவ்வளவையும் தாண்டி, மனித வாழ்வின் துயரத்தை உள்ளபடி புரிந்து கொண்ட மனிதர். ஒரு ஹோமோசெக்‌ஷுவலும் கூட. தனது ஐம்பத்து மூன்றாம் வயதில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பஸோலினி, வாழ்வின் புதிர்களைப் புரிந்து கொண்ட மனிதராகத் திகழ்ந்தார். இவரது ஒவ்வொரு படமும், இப்பொழுது உலகத் திரைப்பட ரசிகர்களால் மறக்கவியலா வண்ணம் சாகா வரம் பெற்று விளங்குகின்றன. பஸோலினி இயக்கிய மூன்றாவது திரைப்படமே இந்த ‘Gospel according to Saint matthew’.

இத்திரைப்படம், இப்பொழுதும், ஏசுவின் வாழ்க்கையைக் குறித்த மிகத் தத்ரூபமான படமாக விளங்குகிறது. இத்தனைக்கும், இயக்குநரான பஸோலினி, ஒரு நாத்திகர். ஒரு நாத்திகரான பஸோலினி, ஏன் ஏசுவின் கதையைத் திரைப்படமாக்க வேண்டும்? அதுதான் ஒரு கலைஞனின் திறமை. ஒரு முறை, பஸோலினி, இத்தாலியின் ஒரு ஹோட்டலில் பைபிளின் ஒரு பிரதியைப் படிக்க நேர்ந்தது. அதில் உள்ள விஷயங்களினால் பெரிதும் கவரப்பட்ட பஸோலினி, உடனேயே இத்திரைப்படத்தை எடுத்து முடித்தார்.

ஏசு பிறந்ததிலிருந்து, அவரது வாழ்வை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாக இத்திரைப்படம் திகழ்கிறது. ஏசுவின் கூடவே பயணிக்கும் இப்படம், அவரது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளை மிகத்தத்ரூபமாகப் பதிவும் செய்கிறது. ஆனால், இது ஒரு பிரச்சாரப் படமல்ல. முந்தைய காலத்தில், ஏசு என்ற மனிதன் வாழ்ந்து, மனிதர்களுக்குச் சேவை செய்து, மனிதர்களை நல்ல வாழ்வு வாழச்செய்து, பின் இறந்து போன கதையின் துயரத்தை இப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இப்படத்துக்கு வசனங்கள், பைபிளிலிருந்தே எடுக்கப்பட்டவை. புனித மேத்யூவின் பைபிளில் இருக்கும் முக்கிய வசனங்கள் இப்படம் நெடுகிலும் வருகின்றன.

ஏசு, ஒரு மார்க்ஸிஸ்டாகவே இப்படம் முழுக்க வருகிறார். ஏழைகளுக்காகவே உழைக்கும் அவர், பணம் படைத்த முதலாளிகளைக் கடுமையாகச் சாடுகிறார். இதனிடையில், அவரது வாழ்வின் அதிசயங்களான ரொட்டியையும் மீனையும் பல்கிப்பெருக வைத்தல், மேரி மாக்தலேனை அரவணைத்தல், முடவர்களை குணமாக்குதல், மீனவர்களுக்கு அதிக மீன் கிடைத்தது போன்ற விஷயங்கள், மிக இயற்கையாக வந்து செல்கின்றன.

சற்றே யோசித்துப் பார்த்தால், ஏசு வாழ்ந்த காலத்தில் மக்கள், அவரை ஒரு அதிசயத்துடனும் அசூயையுடனுமேதான் பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதுவரை இருந்த முட்டாள்தனமான மதத்தின் பேரால் மக்களைத் துன்புறுத்தும் கோமாளிக்கூத்தை அவர் மாற்ற முயல்வதும், அது குறித்து மக்களின் ஞாயமான ஒதுங்குதலும், மிக இயற்கையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது.

சக மனிதனை மதிப்பதிலேயே அவர் பெரும்பாலும் தனது நேரத்தை ஒதுக்குகிறார். எப்பொழுதும் பொறி பறக்கும் ஞானச்சுடர் தெறிக்கும் வாசகங்களைப் பேசுகிறார். இதையெல்லாம் விட, பிற மனிதர்கள் தன்னிடம் இயற்கையாகப் பழகுவதை ஆதரிக்கிறார். இவையத்தனையும், ஒரு நாத்திகரின் பார்வையில் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும் விந்தையை இப்படத்தில் நாம் காணலாம்.

இவையத்தனையும் படித்து, இது ஒரு சாதாரண ’பிரச்சாரப் படம்’ என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பஸோலினி என்ற மகத்தான கலைஞனுக்கு நாம் செய்யும் மரியாதை, இப்படத்தைப் பார்ப்பது. இது மட்டுமல்ல. அவர் இயக்கிய பிற படங்களான அக்கத்தோனே, மம்மா ரோமா, டெக்கமரான் கதைகள், கேண்டர்பரி கதைகள், ஈடிபஸ் ரெக்ஸ் மற்றும் அவரது இறுதிப்படமான Salo, or the 120 days of Sodom (உலகின் மிக அதிகமான வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் ஒரு படம் – மர்க்கி தே ஸாத்தின் நாவல்) ஆகிய படங்களையும் முடிந்த வரை பார்க்க முயற்சி செய்யுங்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இந்தப் படம் முழுவதுமே, தொழில்முறை நடிகர்கள் அல்லாதவர்களைக் கொண்டே படமாக்கப்பட்டிருப்பது, பஸோலினியின் ஸ்டைல். படத்தில் வரும் அத்தனை பேரும் படம் இயக்கப்பட்ட பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். ஏசுவாக நடித்தவர், 19 வயதே நிரம்பிய ஒரு மாணவர். ஏசுவின் வயது முதிர்ந்த தாயாராக வருவது, பஸோலினியின் தாயாரேயாகும்.

இப்படத்தின் இசை, பெரும்பாலும் பாக்ஹ் உபயோகப்படுத்திய இசை. இத்தோடு இன்னபிற இசை வகைகளும் சேர்ந்து, மிக அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றன. இரவில், அமைதியாக இப்படத்தைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மொத்தத்தில், இந்தப் பூமியில் வாழ்ந்தவர்களில் மிகவும் புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான ஏசு என்ற மனிதனைப் பற்றிய அற்புதமான ஆவணம் இப்படம். அந்த மனிதனது உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த புரட்சித்தீ, பஸோலினியின் வழியாக வெளியே வந்து எரிந்ததை நாமெல்லோரும் பார்க்க முடியும், இப்படத்தின் வாயிலாக.

பி.கு – பஸோலினி, தனது காரின் மூலமாகவே கொல்லப்பட்டார். அவரது புரட்சிகரமான சிந்தனைகளுக்கு எதிரான சில விஷமிகள் செய்த சதியின் காரனமாக, அவரது காரை அவரின் மீதே கொடூரமாகப் பல முறை ஏற்றிக் கொலை செய்தனர். இன்னமும் கொலைகாரர்களைத் தேடிவருகிறது இத்தாலிய அரசு! ஏசுவின் வாழ்க்கையிலும் பஸோலினியின் வாழ்க்கையிலும் உள்ள இந்த ஒற்றுமையைக் கவனியுங்கள்.

The Gospel According to Saint Matthew படத்தின் டிரைலர் இங்கே

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

30 Comments

 1. தலைவா.. என்னமோ போங்க .. என்னவோ பண்றீங்க..கலக்குங்க…அப்புறம்……..

  அன்புடன்,
  லக்கி லிமட்

  Reply
 2. எல்லாரும் கேட்டுக்கிட்டீங்களா…???

  போனப் பதிவில் நான் கண்டுபுடிச்சது சரிதான்..!! நீங்க அவிங்கதான்!!!!

  —–

  அப்பால… குட் கோயிங். முன்னாடி சொன்னா மாதிரி.. இன்னும் 1 ரைட்டு, 2 லெஃப்டு. அங்கதான் அத்தனை ஊமைப் படமும் இருக்கு!!! 🙂

  Reply
 3. அப்புறம் இவரை கொன்னதுக்கு ரீஸன்.., Salo எடுத்ததுதான்னு படிச்சேன்.

  Reply
 4. hai karundhel when did you became christian now onwards we see lot of these things right, welcome to the board.

  Reply
 5. எங்க இருந்துதான் இந்த மாதிரியான படங்களை பார்த்து விமர்சம் எழுதுரின்களோ… நல்லா இருக்கு .

  Reply
 6. நாளைதான் அடுத்த பதிவு வரும் என்று சென்ற பதிவின் கமென்ட் பகுதியில் கூறிவிட்டு ஒன்றிரவே பதிவிட்டு, மீ தி பர்ஸ்ட் என்று கமென்ட் போடும் வாய்ப்பை இழக்க செய்த திரு கருந்தேள் அவர்களை கண்டித்து, (ஹாலிவுட் பாலா அவர்களின் Blog’ல் கும்மியடிக்க) இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

  Reply
 7. ஹலோ… கார்த்திக்கேயன் பதிவுல கமெண்ட் ஓப்பன்ல இருக்கு. யாருனா ஜாய்ன் பண்ணுறீங்களா??

  Reply
 8. //சற்றே யோசித்துப் பார்த்தால், ஏசு வாழ்ந்த காலத்தில் மக்கள், அவரை ஒரு அதிசயத்துடனும் அசூயையுடனுமேதான் பார்த்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. // பழமையிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

  Reply
 9. நண்பா இந்த படம் பற்றி படிச்சதில்லை,தரவிறக்கம் ஸ்டார்டட்,இதையும் உலகசினிமால ஏத்திடுறேன்.செம விமர்சனம் நண்பா.பஸோலினி, தலைசிறந்த இத்தாலிய இயக்குனர்னு படிச்சிருக்கேன்.நல்ல அறிமுகம்.

  Reply
 10. @ லக்கி – சூப்பரப்பு ! அப்புறம், நீங்க கேக்க வர்ரது எனக்கு நல்லாவே தெரியுது.. ஆக்‌ஷன் படங்க தானே.. இதோ அடுத்த பதிவு, ஒரு ஸ்லாம் டங் ஆக்‌ஷன் தான் !! 😉

  @ பாலா – //எல்லாரும் கேட்டுக்கிட்டீங்களா…???

  போனப் பதிவில் நான் கண்டுபுடிச்சது சரிதான்..!! நீங்க அவிங்கதான்!!!!//

  அடங்கொக்கமக்கா… முடிவே பண்ணிட்டீங்களா ?? நானு அவிங்க இல்ல.. நானு அவிங்க இல்ல.. அபிராமி அபிராமி.. 😉 நானு இந்தப் படத்தைப் பத்தி எழுதும்போதே நீங்க இப்புடித்தான் எழுதப்போறீங்கன்னு தெரிஞ்சிது.. 😉 ஆனாலும் கலைச்சேவை (அடுத்த கேள்வி – இது எந்த ஹோட்டலில் கிடைக்கும்?) பண்ணுற எயிம்ல எளிதிப்போட்டேன்.. நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவுமே தப்பில்ல. . (டொண்டொடொடொடொடொய்ங்….)

  //அப்பால… குட் கோயிங். முன்னாடி சொன்னா மாதிரி.. இன்னும் 1 ரைட்டு, 2 லெஃப்டு. அங்கதான் அத்தனை ஊமைப் படமும் இருக்கு!!! :)//

  வேணாம்.. உட்ருங்க.. அளுதுடுவேன் 😉 😉

  //அப்புறம் இவரை கொன்னதுக்கு ரீஸன்.., Salo எடுத்ததுதான்னு படிச்சேன்.//

  இருக்கலாம் தல.. மர்க்கி தே ஸாத்தின் நாவல்கள் புடிக்காத ஒரு வெறியர் கூட்டமே இருக்கு.. அத படமா வேற இவுரு எடுத்துப் போட்டாரு.. அந்தக் காண்டும் காரணமா இருக்கலாம்… படம், பயங்கரமான சித்ரவதைக் காட்சிகள் உள்ளது (ஆனா இப்பல்லாம் இந்தக் காட்சிகள் சாதாரணம்)..

  @ Sans – //hai karundhel when did you became christian now onwards we see lot of these things right, welcome to the board//

  அடப்பாவிகளா.. நானு அவிங்க இல்ல. . இல்ல .. இல்ல. . 😉 (அப்ப அடுத்த பதிவுல எந்தத் தீம்ல எழுதலாம்??)..

  @ Romeo – பாஸ்.. இது நம்ம சாரு அறிமுகப்படுத்தின படம்.. ‘அலைந்து திரிபவனின் அழகியல்’ல… 😉 படிச்சிருப்பீங்க..

  @ விஸ்வா – ஆமா.. அப்புடித்தான் சொன்னேன்.. ஆனா, நேத்து இரவு, ப்ரயன் லாரா கிரிக்கேட் ஆடிப்புட்டு பார்த்தா, ஜொஞ்சம் நேரம் மிச்சமிருந்திச்சி.. அதான் எளுதிப்போட்டேன்.. உங்களோட ‘மீ த ஃபர்ஸ்ட்’ ஆப்பர்ச்சூனிட்டி மிஸ்ஸனதக் கண்டிச்சி, நானு கொத்துபரோட்டா திங்கும் போராட்டம் ஆர்கனைஸ் பண்ணுரேன் . . 😉

  @ அன்புடன் மல்லிகா – //விமர்சனம் விமர்சனமாய்…//

  சத்தியமா புரியலீங்க.. நானு ஒரு ட்யூப்லைட்டுங்க.. சாதாரணம சொன்னாலேயே புரியாது.. இப்புடி பூடகமா வேற பயமுறுத்துறீங்களே . . தயவு செஞ்சி இத புரிய வெச்சிருங்க மேடம்.. 😉

  @ Robin – கரெக்டா சொன்னீங்க.. பழமையிலிருந்து விடுபடுவது மிகக்கடினம்.. அதுவும், ஏசு வாழ்ந்த காலத்தில், அவரை உள்ளபடி புரிந்துகொண்டவர்கள் மிகக்குறைவு வேறு இல்லையா..

  Reply
 11. @ கார்த்திகேயன் – கண்டிப்பா பாருங்க நண்பா.. மிகச்சிறந்த ஒரு படம். சற்றுக்கூட மிகையே இருக்காது..

  அப்பறம், பாலா சொன்னதை இப்பதான் பார்த்தேன் 😉 நேத்தே நீங்க என்கிட்ட சொல்லிருந்தாலும், அத சுத்தமா மறந்து வெச்சிட்டேன்.. (என் மறதில கொள்ளிக்கட்டைய வெக்க).. இப்பதான் அங்க கமெண்டு போட்ருக்கேன் 😉

  Reply
 12. அருமையான பதிவு…

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்….
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

  Reply
 13. எப்டித் தல இந்த மாதிரி படம் எல்லாம் உங்க கண்ணுல மாட்டுது, நம்ம ஹாலிவுட் தல சொன்ன மாதிரி

  “அப்பால… குட் கோயிங். முன்னாடி சொன்னா மாதிரி.. இன்னும் 1 ரைட்டு, 2 லெஃப்டு. அங்கதான் அத்தனை ஊமைப் படமும் இருக்கு!!! :)”

  Reply
 14. நீங்க சொல்லித்தான் இந்த மாதிரி உலக படமெல்லாம் தெரியுது.. கழுத கெட்டா குட்டிசெவுருன்னு ஹாலிவுட் படம் பாக்கறதே எனக்கு பொழப்பா போச்சு…

  Salo பத்தி படிச்சு மட்டும்தான் இருக்கேன்… Cannibal Holocaust-க்கே கொஞ்சம் மிரண்டுபோனதுல, Salo பாக்கணும்னு தோணல…

  Reply
 15. Anonymous

  இதே மாதிரி The Last Temptation of Christ வந்தல்லவா?

  The Gospel According to Jesus Christ – ஜோஸ் சரமாகோ எழுதியது நன்றாக இருக்கும் (இது படமாக்க படவில்லை என்று நினைக்கின்றேன் )

  Ajay

  Reply
 16. நண்பரே,

  இந்த திரைப்படம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. உங்கள் பதிவின் மூலம் அதன் அறிமுகம் கிடைத்தது மிக்க நன்றி. சிறப்பான பதிவு.

  Reply
 17. ஹிட் லிஸ்டுல இந்த படத்தையும் சேர்த்துக்க வேண்டியதுதான்

  ரொம்ப தேங்க்ஸ்பா

  Reply
 18. இது ஓக்கே.விமர்சனம் நல்லா இருக்கு.ஆனா யாரும் தயவுசெய்து ‘சாலோ(salo)பாக்காதீங்க.நான் பார்த்த மிக மிக கேவலமான,வக்கிரமான, அருவருப்பான,அசூசையான,வாந்தி வரக்கூடிய படம்.கிட்டத்தட்ட ‘காலிகுலாCALIGULA’ மாதிரி வெச்சுக்கலாம்.ஆனா படைப்பாளியக் கொல்றதெல்லாம் த்ரீ மச். 🙂

  Reply
 19. @ RK Guru – நன்றி.. உங்க பதிவு படிச்சேன்.. நல்லாருந்திச்சி..

  @ Phantom Mohan – பாஸ்.. அதெல்லாம் தொளில் ரகசியம்… கேக்கக்கூடாது 😉 .. . ஆஹா.. பாலா கூட நீங்களும் சேர்ந்துட்டீங்களா? 😉 அப்ப அடுத்த படம் ஏதாவது புச்சா எளுதிரவேண்டியதுதான் . .

  @ ஜெய் – ஓ கேனிபல் ஹாலோகஸ்ட் பார்த்தாச்சா ? 😉 அப்புடியே கேலிகுலா, ஸாலோ, ஆடிஷன், த ஐல் மாதிரி படங்களயும் பாருங்க.. அப்பதான் சைக்கிள் கம்ப்ளீட் ஆகும்.. ஒரே இன்பமா இருக்கும் 😉

  @ அனானி – ஆமாம்.. லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஇஸ், நம்ம ஸ்கார்ஸெஸி படம்.. அந்தப் படம், நான் இப்ப படிச்சிக்கினு இருக்குற ’கஸான்ஸாக்கிஸ்’ அப்புடீங்குற கிரேக்க இலக்கியவாதியின் நாவல். இதுல யேசு, கொஞ்சம் வில்லங்கமா காண்பிக்கப்பட்டிருப்பார். . 😉

  அதே மாதிரி, ஜோஸ் ஸரமாகோவின் அந்தப் புத்தகம், இன்னும் படமாக்கப்படவில்லை. இதைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தும், இன்னமும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இவ்ளோ நல்ல பின்னூட்டம் போட்டுட்டு, ஏன் ‘அஜய்’ன்ற உங்கள் பேர்லயே இத எழுதக்கூடாது ? ;-௦)

  @ சிபி – ரொம்ப தேங்க்ஸ்பா… 😉

  @ மயிலு – அடப்பாவி.. ஸாலோ என்ன ஒரு படம் ! 😉 அதைப்போய் இப்புடி சொல்லிப்புட்டீங்களே பாஸு . . . 😉 இருங்க உங்க வீட்டுக்கு இந்த ரீதியான படங்கள் எல்லாமே பார்சல் பண்றேன் 😉

  Reply
 20. //அப்புடியே கேலிகுலா, ஸாலோ, ஆடிஷன், த ஐல் ///

  Cutting Moments, Guinnea Pig Series, Murder Set-Pieces, பெண் சிங்கம் படத்தையெல்லாம் விட்டுட்டீங்களே..!!

  மயிலு… மொதல்ல பெ.சி பார்த்துட்டு அப்பாலிக்கா Salo பத்தி பேசுங்க.

  Reply
 21. அன்ன்னத்தே சுறா படத்த வுட்டுட்டீங்கலே

  மறக்காம கணக்குல எடுத்துக்கோங்க

  டவுட்டா இருந்தா நம்ம காதலரின் சுறா விமர்சனம் பார்க்கவும்

  Reply
 22. அசத்துறீங்க. எங்க இருந்து பிடிக்கிறீங்க இப்புடி. பகிர்வுக்கு நன்றி

  Reply
 23. Padam eduthathuke murder ah.. Apo namma ramadoslam dummy piece thana.. Apo nengale andha salo padathai pathi eludhitinga..

  Reply
 24. @ பாலா – //Cutting Moments, Guinnea Pig Series, Murder Set-Pieces, பெண் சிங்கம் படத்தையெல்லாம் விட்டுட்டீங்களே..!!

  மயிலு… மொதல்ல பெ.சி பார்த்துட்டு அப்பாலிக்கா Salo பத்தி பேசுங்க//

  அங்க புடிச்சீங்க பாயிண்ட்ட ! மயிலு மட்டும் பெ.சி பார்த்தார்ன்னா, ஆளு அம்பேல் ! அதுல மக்களை சித்ரவதை பண்ணுறமாதிரி, வேற எந்தப் படத்ஹுலயும் பண்ணுரதில்ல . . ;- )

  @ சிபி – ஆஹா.. ஆமாம் ! சுறா மிஸ்ஸாயிடுச்சே ! நானுமே ‘ஐ லவ் சுறா’ ஆயுள் மெம்பர்தான்… 😉

  @ எட்வின் – மிக்க நன்றி நண்பா.. அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கோள் ! இந்த மாதிரி பல நல்ல படங்கள் இங்கு அலசப்படும்.. ௦

  @ சுரேஷ்கண்ணன் – மிக்க நன்றி தல.. நீங்க இங்கன வந்தது ரொம்ப சந்தோஷம்..

  @ பேநா மூடி – 😉 அதுல உங்களுக்கு என்ன தலைவரே சந்தேகம்? 😉 அதெல்லாம் எப்பவோ காமெடிபீஸாயிட்ட மெகா டம்மி பீஸு.. அப்பறம், நீங்க சொன்னபடியே செஞ்சிரலாம் தல.. சீக்கிரமே..

  Reply
 25. Anonymous

  இயக்‌குநர்‌ தங்‌கர்‌ பச்‌சன்‌ ஒரு இடத்தில் பே‌சுகை‌யி‌ல்‌… “பு‌தி‌தா‌க படம்‌ தயா‌ரி‌க்‌க வரும்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌களுக்‌கு கவு‌ன்‌சி‌லி‌ங்‌ கொ‌டுக்‌க வே‌ண்‌டும்‌. ஏனெ‌ன்‌றா‌ல்‌? இங்‌கே‌ படம்‌ எடுக்‌கவருபவர்‌களி‌ல்‌ தொ‌ன்‌னுற்‌று ஒன்‌பது சதவி‌கி‌தம்‌ பே‌ர்‌ வீ‌ழ்‌ந்‌து வி‌டுகி‌ன்‌றனர்‌. அவர்‌கள்‌ கா‌ப்‌பா‌ற்‌றபட வே‌ண்‌டும்‌. தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌தி‌ல்‌ வந்‌து பதி‌வு‌ செ‌ய்‌த உடனே‌ அவர்‌கள்‌ படம்‌ எடுக்‌க செ‌ன்‌று வி‌டுகி‌ன்‌றனர்‌. ‌அவ்‌வா‌று அவர்‌கள்‌ சி‌னி‌மா‌ மா‌யை‌ பு‌ரி‌ந்‌து கொ‌ள்‌ளா‌மல்‌ அவர்‌களுடை‌ய பொ‌ருளை‌ இழந்‌து செ‌ன்‌று வி‌டக்‌ கூடா‌து. சி‌லவற்‌றை‌ நா‌ன்‌ சொ‌ல்‌லலா‌ம்‌ என்‌று நி‌னை‌த்‌தா‌ல்‌ அவர்‌களை‌ சந்‌தி‌க்‌கவே‌ முடி‌யவி‌ல்‌லை‌. அதற்‌குள்‌ வி‌ளம்‌பரங்‌களும்‌‌ வந்‌து வி‌டுகி‌ன்‌றன.

  இப்‌போ‌து இத்‌துறை‌க்‌குள்‌ அரசி‌யலும்‌ நுழை‌ந்‌து வி‌ட்‌டது. அது சீ‌ரமை‌க்‌கப்‌பட வே‌ண்‌டும்‌. கதை‌ கே‌ட்‌டே‌ன்‌ நல்‌லா‌யி‌ருந்‌தது அதனா‌ல்‌ படம்‌ எடுத்‌தே‌ன்‌ என்‌று சொ‌ல்‌கி‌றா‌ர்‌கள்‌. கதை‌ சொ‌ல்‌லக்‌கூடா‌து அது திரை‌யி‌ல்‌ தெ‌ரி‌ய வே‌ண்‌டும்‌. அப்‌போ‌துதா‌ன்‌ அதன்‌ உண்‌மை‌ பு‌ரி‌யு‌ம்‌.

  தி‌ருட்‌டு சி‌டி‌ க்‌கள்‌ பா‌ர்‌ப்‌பவர்‌களும்‌, வி‌ற்‌பவர்‌களை‌யு‌ம்‌ மட்‌டும்‌ குற்‌றவா‌ளி‌கள்‌ அல்‌ல. நா‌ம்‌ என்‌ன செ‌ய்‌ய வே‌ண்‌டும்‌ டி‌க்‌கெ‌ட்‌ கட்‌டணங்‌களை‌ குறை‌க்‌கு வே‌ண்‌டும்‌. ஐம்‌பது கோ‌டி‌ ரூ‌பா‌ய்‌க்‌கு எடுக்‌கப்‌படுகி‌ன்‌ற படங்‌களுக்‌கும்‌, சி‌ன்‌ன சி‌ன்‌ன பட்‌ஜெ‌ட்‌ படங்‌களுக்‌கும்‌ ஒரே‌ மா‌தி‌ரி‌யா‌ன டி‌க்‌கெ‌ட்‌ வி‌லை‌ வை‌ப்‌பதை‌ தவி‌ர்‌க்‌க வே‌ண்‌டும்‌. நடி‌கரி‌ன்‌ முகத்‌தை‌ நம்‌பி‌ பணம்‌ கட்‌டா‌தீ‌ர்‌கள்‌. பா‌துகா‌ப்‌பு‌ இல்‌லா‌மல்‌ இருக்‌கி‌றது இந்‌தத்‌துறை‌” என்‌றா‌ர்‌ அவர்‌.

  தங்கர் பச்சான் போன்ற வாழ்வியலை படமாக்கி உயிரூட்டும் ஆட்கள் படம் இயக்கவேண்டுமென்றால் மணிரத்னம் போன்ற ஆட்கள் கோல்ஃப் விளையாட போகலாம் தப்பில்லை.

  Reply

Join the conversation