The Isle (Seom) – 2000 – South Korean

by Rajesh June 24, 2010   world cinema

Sharing is caring!

சென்ற பதிவில், பஸோலினி எடுத்த கடைசிப் படமான ’ஸாலோ’ பற்றி மிகச்சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். இப்படத்தைப் பற்றி யோசிக்கையில், இன்னும் சில படங்கள் நினைவு வந்தன. அவற்றில் ஒன்றே இந்த ‘ஐல்’.

இப்படத்தைப் பற்றி எழுதும் முன், இன்னொரு விஷயத்தையும் பார்த்து விடலாம்.

கோவையில் சாய்பாபாகாலனியில், ‘ஹாலிவுட் டிவிடி ஷாப்’ என்ற பெயரில், கடந்த சில வருடங்களாக மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டு வரும் கடை ஒன்று உண்டு. இந்த உலகின் அத்தனை சிறப்பான உலக சினிமாக்களும் அங்கு கிடைக்கும். இக்கடையின் உரிமையாளர், திரு. பாஸ்கரன் அவர்கள். அவரை நான் சந்தித்ததே ஒரு மிகச்சுவாரஸ்யமான நிகழ்ச்சி. சில வருடங்களுக்கு முன், ஐந்து வருடங்களாகத் தேடியும் ‘விக்ரம்’ படம் கிடைக்காததால், மிகவும் சோர்ந்து போய், ஒரு நண்பர் ‘ரெஃபர்’ செய்ததால், இக்கடைக்குச் சென்றேன். திரு. பாஸ்கரனிடம், விக்ரம் பற்றி (எப்படியும் கிடைக்காது என்று தெரிந்திருந்ததால்), சும்மா பேச்சுவாக்கில் கேட்டேன். அடுத்த நொடியே, ’வாங்க போயி டீ சாப்புடலாம்’ என்ற தோரணையில், ‘இதோ இருக்கே’ என்று சொல்லியபடி, அட்டகாசமாக அந்த டிவிடியை எடுத்துக் கொடுத்தார். அன்று ஆரம்பித்தது அவரின் நட்பு.

அன்றுமுதல், அவரது கடையில், குறைந்தது இருநூறு டிவிடிக்கள் வாங்கியிருப்பேன். பல அருமையான உலக சினிமாக்கள் எனக்குத் தெரிய வந்தது, அவரது அறிமுகத்தால் தான். உலகில் யாருக்குமே தெரியாத ஒரு படம் என்று ஒன்று இருந்தாலும், அந்தப் படத்தைப் பற்றி இவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். இவர் காட்டியதாலேயே, பஸோலினி, ஹெர்ஸாக், க்யுப்ரிக், குரஸவா, பெர்க்மன், கிம் கி டுக் போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்க்கத் துவங்கினேன்.

சில காரணங்களினால், அவரது கடை மூடப்பட்டு, இந்த வாரம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுவிட்டது. கோவையில் வாழும் நண்பர்கள், உலக சினிமா பார்க்கவேண்டுமாயின், இவரது கடைக்குப் படையெடுக்கலாம்.

கடை, சாய்பாபாகாலனி NSR ரோட்டில், K.R பேக்கரிக்கு எதிர்ப்புறம், முதல்மாடியில் இருக்கிறது. எப்பொழுது சென்றாலும், திரு. பாஸ்கரனின் இனிமையான சிரிப்புடன் கூடிய நட்பு உங்களுக்குக் கிடைக்கும்.

சரி. இப்பொழுது, ‘ஐல்’ படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

இப்படத்தைப் பார்க்கும் முன்னர், ஒரு எச்சரிக்கை. இப்படத்தில் சில விரும்பத்தகாத (அதாவது, சில மக்களுக்குப் பிடிக்காத) காட்சிகள் உண்டு. இப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்த மக்கள், வாந்தியெடுத்ததாக இப்படத்தைப் பற்றிய செய்திகள் கூறுகின்றன. அதேபோல், சிலர் மயங்கியதாகவும் தகவல்கள் உண்டு. எனவே, இரண்டு ரவுண்டுகள் போட்டுவிட்டு, பின் இப்படத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெர்ஸனலாகக் கேட்டால், முழுப்படம் பார்த்தபிறகும், எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்தக் காட்சிகள், எனக்கு நிரம்பப் பிடித்திருந்தன (நான் தான் ஸேடிஸ்ட் ஆயிற்றே).

கிம் கி டுக்கின் ஒரு படமாவது பார்த்திருந்தால், அவரது படங்களில் இழையோடும் கவிதையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ’திரைப்படம் என்பது காட்சிகளால் ஆனது’ என்ற உண்மையை மிகத்துல்லியமாக இவரது படங்களில் காணமுடியும். மிகை நடிப்பு, மிகை வசனம் போன்ற ஒன்றை இவரது படங்களில் காணவே முடியாது (அட.. மிகை வசனமா.. சாதாரண வசனம் கூட இருக்காது பாஸ்).. தென் கொரிய மக்களால் ஏற்கப்படாத ஒரு இயக்குநர் கிம் கி டுக். அவரது படங்கள், வெளிநாடுகளில் மட்டுமே பிரபலம். சமகாலத் உலகத் திரைப்படங்களில், சற்றும் தவிர்க்கமுடியாத ஒரு அருமையான இயக்குநர் இவர் (முடிந்தால் இவரது 3-Iron, Samaritan Girl, Spring Summer fall winter and Spring படங்களைப் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறேன்).

படம், மிகத்தெள்ளிய ஒரு நீர்ப்பரப்பில் ஆரம்பிக்கிறது. மிக மிக அருமையான ஒளிப்பதிவுக்கு இப்படத்தின் முதல் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். அழகான ஒரு நீர்ப்பரப்பில், மிதக்கும் சில படகு வீடுகளை நமக்குக் காண்பித்து, Fade In ஆகிறது காமெரா.

ஹீ ஜின்னைப் பார்க்கிறோம். அந்த இடத்தின் ஒரே கொரியர் சர்வீஸ், இவள். படகு வீடுகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொண்டுவந்து கொடுப்பது இவளது வேலை. கரையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் தனிமையான வாழ்வு வாழ்ந்துகொண்டு இருக்கிறாள் ஹீ ஜின். படம் முழுதுமே வாய் பேசாமல் இருக்கிறாள் அவள்.

ஹ்யூன் ஷிக், அங்கு உள்ள ஒரு படகு வீட்டில், தங்க வருகிறான். அவனை, அவனது படகு வீட்டுக்கு ஹீ ஜின் படகில் அழைத்துச் செல்கிறாள். அன்று இரவு, ஒரு படகு வீட்டில் இருக்கும் சில மனிதர்கள், ஹீ ஜின்னுடன் விளையாட, சற்றுநேரத்தில் அவர்கள், தண்ணீரில் இருந்து எழும் ஒரு மர்ம உருவத்தால் தாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நாட்கள் செல்லச்செல்ல, மெதுவாக, ஹ்யூன் ஷிக்கை, ஹீ ஜின் கவனிக்கத் துவங்குகிறாள். ஒருமுறை, ஹ்யூன் ஷிக், தற்கொலை முயற்சியில் ஈடுபடும்போது, அவனது படகுவீட்டின் தளத்தில் இருந்து, ஒரு கம்பியில் குத்தப்படுகிறான். அதனால், ரத்தம் சிந்தி, தற்கொலை முயற்சியைக் கைவிடுகிறான்.

சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளின் மூலம், ஹ்யூன் ஷிக், அவனது காதலியையும், அவளது காதலனையும் (இந்த வாக்கியத்தின் முரண்பாட்டைக் கவனியுங்கள்) கொன்றுவிட்டு, அங்கு தப்பித்து வந்திருப்பதை அறிகிறோம். ஒருநாள், அங்குள்ள ஒரு விலைமகளைத் தனது வீட்டுக்கு அவன் வரவழைக்கிறான். இது ஹீ ஜின்னுக்குப் பிடிப்பதில்லை. அவளைப் பொறாமையுடன் நோக்குகிறாள்.

இந்தப் பொறாமையினால், ஒரு தவளையை உயிருடன் பிடித்து, அதனை ஒரு பாறையில் அடி அடியென்று அடித்துக் கொன்று, அதனைப் பிய்த்து, ஹ்யூன் ஷிக்கின் கிளிக்குக் கொடுக்கிறாள் ஹீ ஜின்.

ஒருநாள், போலீஸ், அங்குள்ள காட்டேஜ்களை ரெய்டு செய்ய, பதற்றத்திற்குள்ளாகும் ஹ்யூன் ஷிக், நான்கு மீன்பிடிக் கொக்கிகளைச் சேகரித்து, அந்தக் கூர்மையான கொக்கிகளைத் தனது தொண்டைக்குள் விட்டுக்கொண்டு, அவற்றின் நுனியிலுள்ள கயிற்றைப் பலமாகப் பிடித்து இழுப்பதன் மூலம், தனது தொண்டையைக் கிழித்துக் கொண்டு சாகப் பார்க்கிறான். ஆனால், அதற்குள் அங்கு வந்துவிடும் ஹீ ஜின், தரையில் வலியால் துடித்துக்கொண்டிருக்கும் ஹ்யூன் ஷிக்கின் தொண்டையில் உள்ள கொக்கிகளை எடுத்துவிடுகிறாள். அவனோடு உறவும் கொள்கிறாள்.

அன்றிலிருந்து, ஹீ ஜின், ஹ்யூன் ஷிக்கின் காட்டேஜுக்கு அடிக்கடி வருகிறாள். இருவருக்கும் ஒரு புதிய உறவு மலர்கிறது. ஆனால், ஹீ ஜின்னின் வன்முறை கலந்த அன்பு, இந்த உறவைப் பாதிக்கிறது. ஒரு சண்டையின்போது, ஹ்யூன் ஷிக்கின் கிளியை உயிரோடு தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்கிறாள் ஹீ ஜின். இதனால் ஆத்திரமடையும் ஹ்யூன் ஷிக், அவளை அங்கிருந்து வெளியேறச் சொல்லிவிடுகிறான்.

மறுநாள் அங்கு வரும் விலைமகளை, ஹீ ஜின் கடத்திக் கொண்டு சென்று, ஒரு படகுவீட்டில் கட்டி வைத்துவிடுகிறாள். அன்றிரவே, தப்பிக்க முயன்று தண்ணீரில் விழுந்து சாகும் அவளை, ஒரு பெரிய பாறையில் கட்டி, ஆற்றில் மூழ்கடித்து விடுகிறாள் ஹீ ஜின்.

அவளைக் காணாமல் அங்கு தேடி வரும் லோக்கல் மாமாவையும், ஹீ ஜின் கொன்று விடுகிறாள். இருவரும் சேர்ந்து, அந்தப் பிணத்தை ஒரு பழைய பேட்டரியில் கட்டி, மூழ்கடித்து விடுகிறார்கள்.

எப்பொழுதும் ஹ்யூன் ஷிக், தன்னுடனே இருக்கவேண்டும் என்ற வெறியில் ஹீ ஜின் செய்யும் காரியங்கள் தனக்குப் பிடிக்காததனால், அங்கிருந்து ஒருநாள் வெளியேறிவிடுகிறான் ஹ்யூன் ஷிக். அவன் பாதிவழியில் படகில் சென்றுகொண்டிருக்கும்போது, காட்டேஜின் வெளியே அமைதியாக வந்து நிற்கும் ஹீ ஜின், சில மீன்பிடிக் கொக்கிகளைச் சேர்த்து, அந்தக் கொக்கிகளைத் தனது உறுப்பில் நுழைத்து, வெறிகொண்டமட்டும் இழுத்துக் கொள்கிறாள். அவளது உறுப்பில் இருந்து ரத்தம் பீறிடுகிறது. இதைக்கண்டு அங்கு திரும்ப வந்துவிடும் ஹ்யூன் ஷிக், அவளைப் படுக்க வைத்து, அந்தக் கம்பிகளை மெதுவாக வெளியே எடுக்கிறான்.

ஹீ ஜின் குணமாகிக்கொண்டு வருகையில், ஒரு விலைமகள், தற்செயலாக, ஒருவனின் ரோலக்ஸ் வாட்ச்சைத் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுகிறாள். இதனால், போலீஸின் உதவியோடு தண்ணீரில் வாட்ச் தேடும் படலம் தொடங்குகிறது. அப்பொழுது, தண்ணீரின் உள்ளே இருக்கும் இரண்டு பிணங்களும் போலீஸுக்குக் கிடைக்கின்றன.

இதனைக் கண்டவுடன், ஹ்யூன் ஷிக்கின் காட்டேஜில் ஒரு மோட்டாரைப் பொறுத்தி, அங்கிருந்து தப்பிக்கிறார்கள் இருவரும். அழகான ஆற்றில் அந்தக் காட்டேஜ் நகரும் காட்சி, மெதுவாக Fade Out ஆகிறது. இப்படம் முடிந்து விட்டதாக நாம் நினைக்கிறோம்.

ஆனால், அடுத்த ஒரு நிமிடம், இப்படத்தின் ஆரம்பத்தில் நாம் பார்த்த மர்மங்களின் காரணத்தை நமக்குப் புரிவிக்கிறது. ஆனாலும், இவ்வளவு நேரம் படத்தை ஒரு ரீதியில் பார்த்துவிட்டு, கடைசி ஒரு நிமிடத்தில் முற்றிலும் வேறான ஒரு கோணத்தைப் பல பேர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று தெரியவில்லை. எனவே, இப்படம் தரும் கவிதை உணர்வை அனுபவிக்க விரும்பும் நண்பர்கள். முந்தைய காட்சி முடிந்ததும் டிவிடியை அணைத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வெல்.. அகில உலகின் கவனமும் கிம் கி டுக்கின் பக்கம் திரும்பக் காரணமாக இருந்த முதல் படம் இது . 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இப்படம், தனது மாஸ்டர்பீஸான ‘Spring, Summer, Fall, Winter and Spring..’ படத்திற்கு மூன்று வருடங்கள் முன் கிம் கி டுக் எடுத்த படமாகும். இப்படத்தின் கலையும் கிம் கி டுக்கினாலேயே கையாளப்பட்டது. மிக அருமையான இசை, ஒளிப்பதிவு மற்றும் கலை ஆகியவை, இப்படத்தை முற்றிலும் வேறான ஒரு கோணத்துக்கு நம்மை எடுத்துச் செல்கின்றன.

இப்படத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட மிருகங்கள், உண்மையிலேயே கொல்லப்பட்டவை. இதில், நாம் ஏற்கெனவே பார்த்த, தவளை கொல்லப்படும் காட்சி, ஒரு சாம்பிள். இதைப்போலவே, ஒரு மீன், உயிரோடு அறுக்கப்பட்டு, அதன் வயிறு பிய்க்கப்பட்டு, மறுபடியும் கடலில் விடப்படுகிறது. அந்த வயிற்றுப்பகுதியை அப்படியே சாப்பிடும் மனிதர்களையும் (உலகின் மிகச் சுவையான உணவு இது – பச்சை மீன் – சுஷி) பார்க்கிறோம்.

இதைப் பற்றி (அமெரிக்க) மிருக ஆர்வலர்களும், விமர்சகர்களும் எதிர்ப்புக்குரல் கொடுக்க, அதற்குக் கிம் கி டுக் கொடுத்த பதிலைப் பாருங்கள்.

‘அமெரிக்காவில் மக்கள், ஆடு, மாடு, பன்றி, கோழி போன்ற பல உயிர்களைக் கொன்று உண்கின்றனர். ஆனால், அவைகள் கொல்லப்படும்போது அவை என்ன பாடு படுகின்றன என்று அவர்களுக்குக் கொஞ்சம் கூடக் கவலையில்லை. ஆனால், அதேபோல் சில மிருகங்கள் கொல்லப்படுவதை நான் காட்டினால் மட்டும், குதிக்கின்றனர். அமெரிக்கர்களுக்கு மற்ற நாட்டுக் கலாச்சாரங்களின் மேல் மதிப்பு இருக்குமென்றால் – மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்களை அவர்கள் மதிக்கக் கற்றுக்கொண்டால் பரவாயில்லை !’

அதுதான் கிம் கி டுக்!

‘The Isle (Seom)’ படத்தின் டிரைலர் இங்கே

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

25 Comments

 1. நண்பரே,

  கொரியப்படங்களில் ஒளிந்திருக்கும் அழகு தனித்துவமானது. எவ்வளவு வன்முறை இருந்தாலும் அதை அதிரவைக்கும் அழகுடன் சொல்வார்கள். கிம் கி டுக்கின் படங்களை நான் அறிந்திருக்கிறேன் பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் இத்திரைப்படம் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது.

  டிவிடி கவர் பிரம்மாதம். என்ன ஒரு கலை வெளிப்பாடு. வொண்டர்ஃபுல். மேலும் வாந்தி எடுப்பது என்று கூறுவது மிகையான ஒன்றாகவே எனக்கு தோன்றுகிறது. நான் பாடசாலையில் இருந்தபோது நீலப்படங்களை பார்க்காமல் அது பற்றி புளுகும் ஆசாமிகள்தான் இவ்வகையான கமெண்ட்களை அடிப்பார்கள். நான் இதுவரை எந்தப் படத்திற்கும் வாந்தி எடுத்ததில்லை என்று கூறுவதுடன் க்லைரசம் சொட்டும் காட்சிகளின் பெரும் ரசிகன் என்பதையும் அறிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் :))

  Reply
 2. நண்பா இந்த படம் பார்த்துவிட்டேன்.போஸ்டரே கலக்குது.
  கிம் கி டுக்கின் படங்கள் தரவிறக்கி பார்த்துள்ளேன்.கொரிய மொழி இழுத்து இழுத்து கொஞ்சி கொஞ்சி பேசுவது தான் காமெடி,நான் கிம் கி டுக்கின் டீடெய்லை பார்த்திருக்கிறேன்,இவர் வித விதமான அசைவ உணவுகளை படத்தில் காட்டுவார்.ஒரு படத்தில் இரு பெண்கள் பன்றியின் காலை ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல சாப்பிட்டு எலும்பை தூக்கி போடுவர்.நல்ல அறிமுகம்,அந்த டிவிடி நபரின் பெயர் பாஸ்கரனா?
  இவர் தளம் தான் பார்த்தோமா?அதில் சரத்சந்திரன் என இருந்தது,

  Reply
 3. தல,கிம் கி டுக் படங்கள் நானும் பார்த்து இருக்கேன்.இந்த படம் டவுன்லோட் பண்ணி வச்சு இன்னும் பார்க்கப்படாம இருக்கு.(இதுவும் ஓல்ட் பாய்யும் 🙂 )

  சீக்கிரமே பார்துட்றேன்.அப்புறம்,நானு ஏற்கனவே பார்த்த லா பெல்லேக்கும்(பதிவு) இதுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. முக்கியமா,அந்த ஹீரோ.

  Reply
 4. அப்புறம்,இன்னொரு மேட்டர். கிம் கி டுக் இயக்கிய Spring, Summer, Fall, Winter and Spring மற்றும் 3 iron எல்லோரும் பார்க்க வேண்டிய படங்கள்.
  கருந்தேள் அண்ணாத்த சொல்றது கரெக்ட். இவரு படத்துல இருக்க வேண்டிய வசனம் கூட இருக்காது.ஆனா என்ன சொல்றாங்கன்னு தெளிவா புரியும். கொரிய சினிமாவ எகிடு தகிடா மாத்தின இயக்குனர்கள்ல ஒருத்தர் இந்த கிம்.

  Reply
 5. ச்ச… இப்படி ஒரு போஸ்டரைப் பார்த்து நம்பி உள்ள வந்தா, ஆளாளுக்கு கொக்கி போடறது, கொட்டை அரைக்கறதுன்னு டரியல் பண்ணறீங்களே…

  // பெர்ஸனலாகக் கேட்டால், முழுப்படம் பார்த்தபிறகும், எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்தக் காட்சிகள், எனக்கு நிரம்பப் பிடித்திருந்தன (நான் தான் ஸேடிஸ்ட் ஆயிற்றே) //
  ம்க்கும்… இதுல பெருமை வேற… 🙂

  Reply
 6. அப்பு ஜெய்,

  நாங்க எல்லாம் கொடூரமான நாதாரிங்கனு உங்களுக்கு யாருமே சொல்லலையா? 🙂

  Reply
 7. தல, இங்க பெங்களூர்ல உங்களுக்கு எதாவது டிவிடி கடை தெரியுமா? இல்ல, உங்க கோயம்பத்தூர் டிவிடி கடை நண்பர் படங்களை கொரியர் அனுப்புவாரா?
  ஏதாவது ஒரு வகையில ஹெல்ப் கிடைக்குமான்னு பாக்குறேன்:)

  Reply
 8. @ இராமசாமி கண்ணன் – அது ! போட்ருங்க.. பார்த்துபுட்டு செப்புங்க..

  @ காதலரே – //கொரியப்படங்களில் ஒளிந்திருக்கும் அழகு தனித்துவமானது. எவ்வளவு வன்முறை இருந்தாலும் அதை அதிரவைக்கும் அழகுடன் சொல்வார்கள்// மிக மிக உண்மை.. அதுவும், நம்ம கிம் கி டுக், அதில் கில்லாடி.

  மேலும், அந்த வாந்தி சமாச்சாரம், நமக்கு அல்ல. நாமெல்லாம் எதையும் தாங்குபவர்கள் ஆயிற்றே 😉 உங்களைப்போலவே நானும் கலைரசம் சொட்டு சொட்டென்று சொட்டும் காட்சிகளின் ரசிகன் தானே 😉 . மிக்க நன்றி நண்பரே..

  @ கார்த்திகேயன் – நண்பா.. நீங்க கொடுத்திருக்கும் உணவு வர்ணனை அபாரம் 😉

  அப்புறம், அந்த டிவிடி கடை நண்பரின் பெயர் பாஸ்கரன் தான். ஆனால், அந்த சைட் நடத்துபவர்,அவரல்ல. திரு. பாஸ்கரன், அந்தத் திரையிடலில் ஆர்வமாகப் பங்கேற்பவர். அதுதான் அவரது பங்களிப்பு நண்பா..

  @ இல்யூமினாட்டி – பாருங்க பாருங்க.. நிங்க சொன்னது சரிதான்.. இந்த ரெண்டு ஹீரோக்களும், இண்ட்ராவெர்ட்ஸ்.. கிம் பத்தி நீங்க எழுதிருக்குற விஷயங்கள் ரொம்ப உண்மை..

  @ முத்துபாலகிருஷ்ணன் – ஓ அப்புடியா? இது புதுத் தகவல். உங்க கருத்துக்கு நன்றி..

  @ ஜெய் – அதையும் தான் பாருங்களேன். அப்புறம்தான், இந்தக் காட்சிகள் உங்களுக்குப் புடிக்க ஆரம்பிச்சப்புறம்தான், உங்களுக்குள்ள ஒளிஞ்சிக்கினு கீற ஹான்னிபல் லெக்டர் வெளில வருவாரு.. அப்பறம் நீங்களும் எங்க கேங்ல ஐக்கியமாயிறலாம்.. கீழ இலுமி போட்ருக்குற கமெண்ட்ட கவனிங்க.. 😉

  @ இலுமி – கொடூரமான நாதாரிகள் – இந்த வார்த்தையை நான் எதிர்க்கிறேன் 😉 அது, ஸேடிஸ்டிகல் பாஸ்…. வெல்.. இந்த ரீதில வரணும் 😉

  @ பேபி ஆனந்தன் – அவரோட மெயில் ஐடி உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பறேன்.. அவருக்கு லிஸ்ட் அனுப்பி வெச்சிட்டா, உங்களுக்கு டிவிடி அனுப்பிருவாரு.. அதுக்கப்புறம் அவரோட அக்கவுண்ட்ல நீங்க பணம் போட்றலாம்.. ஆனா, அதுக்கு, என்னோட மெயிலுக்கு ஒரு சின்ன டெஸ்ட் மெயிலு அனுப்புங்க தல.. ஹீ ஹீ… சோம்பேறித்தனம் தான் (எனக்கு.. உங்க சைட்டு போயி உங்க மெயில எடுக்க)..

  Reply
 9. அண்ணாத்த,எப்புடி சொன்னா என்ன? மொள்ளமாறி மொள்ளமாறி தான். 🙂

  Reply
 10. Anonymous

  thala, கிம் கி டுக் perey kastama irukku. padam partha puriumanu doubta irukku.. subtitle-ley epti adjust panni pakkuringa?

  Reply
 11. அருமை.ஆகா.கிம் கி டுக்கை நீரும் உம் நண்பரும் விடமாட்டீர் போலிருக்கு!!
  இது ஒரு அருமையான படம்.ரொம்ப நாளா இருக்கு, இன்னும் பாக்கல. உங்க புண்ணியத்துல கதை தெரிஞ்சிருச்சு, இன்னிக்கு பாத்துற வேண்டியதுதான்.

  Reply
 12. சென்னைவாழ் பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி… என் நண்பரும் பிரபல பதிவருமான ஒரு விலங்கினபெயர் பதிவர் நாளை சென்னை வருகிறார். இப்பவே மின்னஞ்சலில் அப்பாயின்மெண்ட் வாங்கிட்டா நாளை சந்திப்பாராம் 🙂

  Reply
 13. indha padam apram The gospel according to saint mathew pathi kelvi patathu illanga… Arimugapaduthiyadharkku nandri…

  indha padam paapenanu theriyathu aana Yesu-vai pathuna padatha kandipa paathuruven.. 🙂

  Indha DVD kadaya pathi oru maasam munnadi neenga solli irukkalam.. Naan Kovai vandhu irundhen.. 🙁

  Reply
 14. இந்த படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்..

  Reply
 15. கிம் கி டக்கின் மற்றுமொரு நல்ல படம், நல்ல review. Flat hollywood படம் பார்ப்பவர்களுக்கு இதில் வரும் காட்சிகள் மிரள வைப்பது நிச்சயம்.. இவர் படங்களில் மரணம் கூட நாம் எதிர்பார்க்காத விதத்தில் ஏற்படும். உதா. Address Unknown: வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு சேற்றில் தலை கீழாக விழுந்து, இடுப்பு வரை மூழ்கி இறப்பது
  Spring Summer:உறைந்து கிடக்கும் தண்ணிரின் ஓட்டை வழியாக உள்ளே விழுந்து..

  ஆனால் பாஸ் இந்த படத்தில், எனக்கு க்ளைமாக்ஸ் புரியவில்லை!!!. (அந்த கடைசி ஒரு நிமிடம்)….

  Reply
 16. மக்களே,
  நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

  இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
  வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

  Reply
 17. // டிவிடி கவர் பிரம்மாதம். என்ன ஒரு கலை வெளிப்பாடு //

  அப்படியே நாங்களும் அதை வழி மொழிகிறோம்

  Reply
 18. கொரிய மொழி படம் இதுவரை பார்த்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி! பார்க்கவேண்டிய படங்களின் லிஸ்டில் போட்டாச்சு.

  Reply
 19. ulaga cinema neyan

  கான் இச்சிக்காவா இயக்கிய படம் பார்க்கவும் painted fire

  Reply
 20. Climax la enna solla varanga…andha oru nimidam puriyavillai..

  Reply
 21. giri

  It took some….time to understand this movie. Your review helps in understanding it.
  Here the detailed analysis is here. it is very nice. when your free time you can read it. worth reading

  http://kanavuthirutan.blogspot.com/2014/03/3.html

  Reply

Join the conversation