Inception (2010) – விமர்சனம்

by Rajesh July 17, 2010   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றன. இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னுடைய சாய்ஸ், ப்ரஸ்டீஜ்). ஆனால், அதற்கு மிஞ்சிய படம் – ஏன் – இதுவரை அவர் எடுத்த படங்களிலேயே பட்டையைக் கிளப்பும் படம் என்று, இன்செப்ஷனைத் தாராளமாகச் சொல்லலாம்.

சரி. அப்புடி என்னய்யா இந்தப் படத்துல பட்டைய கிளப்புது?’ என்றால்….நிறைய இருக்கிறது. முடிந்தவரை, ஒவ்வொரு அம்சமாகப் பார்க்க முயற்சி செய்யலாம்.

’மேட்ரிக்ஸ்’ படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். முற்றாக வேறு ஒரு தளத்தில், எண்ணவோட்டங்களின் நெட்வொர்க் ஒன்றில், அந்த நெட்வொர்க்கில் நாம் இணைக்கப்பட்டவுடன் நடக்கும் ஒரு கதையே அது. அதே போன்றதொரு கதையை, ஒட்டுமொத்தமாகக் கற்பனையே செய்யமுடியாத அளவு பெர்முடேஷன்ஸ் கொண்ட ஒரு தளத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் நோலன். அது என்ன? மிக எளிமையாக இப்படத்தின் மையக் கருவைப் பார்ப்போம்.

கனவுகள் !

ஒவ்வொரு மனிதனின் மனதிலும், ஒவ்வொரு விதமான ஆளுமை பதிந்துள்ளது. அந்த ஆளுமையின் விளைவாகக் கனவுகள் நேர்கின்றன. இக்கனவுகளில், பல சமயம், நம்முள் ஒரு எண்ணம் விதைக்கப்படுகின்றது. நம்மையறியாமல் நம் மனதில் விதைக்கப்பட்ட இந்த எண்ணம், சிறிது சிறிதாக நமது செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது. இந்த அடிப்படைக் காரணத்தை நோக்கியே, நாம் மெதுவாக நமது முடிவுகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறோம். அதுவே நமது லட்சியமாக மாறிப்போகிறது. அந்த லட்சியம், நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

ஒரு உதாரணமாகச் சொல்லப்போனால், நமது ’நித்தி’யை எடுத்துக்கொள்வோம். என்றோ ஒரு நாள், அவனது மனத்தில் தோன்றிய ஒரு சிறு பொறி (சாமியாருங்க என்னமா எஞ்சாய் பண்ணுறாங்கைய்யா), சிறிதுசிறிதாக அவனது வாழ்க்கையை மாற்றி, போலிச்சாமியாராக அவன் ஆகி, பலவகையில் எஞ்சாய் செய்துவிட்டு, விடியோவும் வெளியாகி, களி தின்றுவிட்டு, மறுபடியும் இப்போது வெளியே வந்து, பேக் இன் ஃபார்ம் ஆகிவிட்டானல்லவா?

இதற்கெல்லாம் மூல காரணம், என்றோ அவன் மனதில் தோன்றிய ஒரு சிறு எண்ணம். இது, நம் எல்லோருக்கும் பொருந்தும்.

ஆகவே, கனவு என்பது, விலைமதிக்கமுடியாத ஒரு விஷயம்.

இங்குதான், இன்செப்ஷனின் மூலக்கரு அமைந்துள்ளது.

படத்தின் கதாநாயகன், காப் (Cobb). காப்பின் தொழில் என்னவென்றால், இப்படிக் கனவுகளில் இருக்கும் முக்கிய விஷயங்களைத் திருடுவது. மட்டுமல்லாமல், அவனால், எத்தகைய மனித மனத்திற்குள்ளும் ஊடுருவி, அங்கு செய்திகளைப் பதிக்க முடியும். இதற்காகவே, அவனோடு ஒரு டீமே செல்படுகிறது.

படம் ஆரம்பிக்கும் நிமிடங்களில், காப், ஒரு கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்படுகிறான். அங்கு, அவனைத் துப்பாக்கி ஏந்திய சில காவலாளிகள், மிக வயதான ஒரு ஆசாமியிடம் அழைத்துப் போகிறார்கள். காப்பிடம் இருந்து கைப்பற்றிய ஒரு துப்பாக்கியும், இன்னொரு சிறிய வஸ்துவையும், அந்த வயதான மனிதனிடம் கொடுக்கிறார்கள்.

கட். நிகழ்காலம். ‘ஸைடோ’ என்று ஒரு வியாபார காந்தம். அந்த மனிதனுக்கு, தனது தொழிலில் முக்கியப் போட்டியாளரான ’ராபர்ட் ஃபிஸ்ச்சர்’ என்ற ஆளை (பேட்மேன் பிகின்ஸில் ஸ்கேர்க்ரோவாக வந்த ஸிலியன் மர்ஃபி) முடக்க வேண்டும். இல்லையெனில், தன்னை மீறிய ஒரு தொழிலதிபராக அவன் வந்துவிடுவான். எனவே, ஸைடோ, காப்பை ஒரு இக்கட்டான சூழலில் சிக்க வைத்து, தனக்கு அவன் உதவ வேண்டும் என்றும், அப்படி உதவினால், தனது குழந்தைகளிடம் காப் சென்று சேர உதவுவதாகவும் சொல்கிறான்.

காப், பல வருடங்களாகத் தனது குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறான். அதற்கு ஒரு இருண்ட காரணம் உண்டு.

எனவே, வேறு வழியில்லாமல் காப் சம்மதிக்க நேர்கிறது.

அவர்களது குறிக்கோள் : ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தை இழுத்து மூடும் எண்ணத்தை விதைக்க வேண்டும்.

ரைட். படத்தின் ப்ளாட் தெளிவாகிவிட்டது. இப்போது, ஃபிஸ்ச்சரின் கனவில் ஊடுரூவ வேண்டுமென்றால், அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு, கனவுகளில் வருகின்ற சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஒரு ஆர்க்கிடெக்ட் தேவை. ஏனெனில், ஃபிஸ்ச்சரின் கனவில் சென்று அவனது மனதில் ஒரு எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றால், அது ஒரு, நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகத்தைப் போன்ற ஒரு விஷயம். அதில் வருகின்ற அத்தனை விஷயங்களையும், முன்னரே முடிவு செய்துகொண்டு, அதன் பின்னரே கனவில் நுழையமுடியும்.

ஆகவே, ஒரு டீம் உருவாக்கப்படுகிறது. கனவினுள் எத்தகைய உருவத்தையும் எடுக்கக்கூடிய திறன் படைத்த ஈம்ஸ், அக்கனவில் வரக்கூடிய சுற்றுப்புறத்தை டிஸைன் செய்யக்கூடிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், இவர்களுக்கு உதவும் வகையில், காப்பின் பழைய ஆர்க்கிடெக்ட் நேஷ். கூடவே, ஃபிஸ்ச்சரின் கனவில் நுழைவதற்கு ஏதுவாக, மயக்க மருந்தைக் கலந்து கொடுக்கும் நபர், யூஸுஃப் (திலீப் ராவ். இந்தியர். Drag me to hell படத்தில் நமக்கு அறிமுகமான முகம்).

புதிய ஆர்க்கிடெக்ட் ஏரியேன், ஒரு கல்லூரி மாணவி. அவள், காப்பின் கனவுகளில் நுழைந்து, பயிற்சி எடுக்கிறாள். பலவகையான கனவுகளையும், அவற்றில் வரக்கூடிய சுற்றுப்புறங்களையும் பற்றிப் பயில்கையில், ஒரு திடுக்கிடும் உண்மையைக் கண்டுபிடிக்கிறாள். காப்பின் கனவுகள் அத்தனையிலும் வந்து, அவனது கனவில் சில முக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தும் மால் என்ற பெண்ணைப் பற்றிய உண்மை அது. மால், காப்பின் இறந்துபோன மனைவி. அவளது நினைவு, அவனது மனதை விட்டு இன்னமும் அகலாமல் இருப்பதால், அவனது கனவுகளில் மால் அடிக்கடி வருகிறாள். ஆனால், அத்தனை கனவுகளிலும், ஒரே வகையில் மால் நடந்துகொள்ளும் மர்மம் என்ன? அதேபோல், மாலின் நினைவுகள், காப்பின் மனதை ஆழமாக ஊடுரூவியுள்ளதன் காரணம் என்ன?

ஓகே. டீம் ரெடி. இவர்கள் செய்யவேண்டிய விஷயம், ஃபிஸ்ச்சரின் கனவுகளில் ஊடுரூவி, அவனது மனதில், தனது நிறுவனத்தைக் கலைக்கும் எண்ணத்தை விதைப்பது.

இப்போது, இதனை செயல்படுத்துவது எப்படி? ஃபிஸ்ச்சர் செல்லும் ஒரு விமானத்தில், அவனுடனேயே பயணித்து, அவனது மதுவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அவனது கனவில் நுழைந்துவிடுகிறார்கள் நமது காப்பும் அவனது டீமும்.

இங்கு, ஒரு சிறிய கணக்கு. நிகழ்காலத்தில் கழியும் காலத்துக்கும், கனவில் கழியும் காலத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. நிகழ்காலத்தில் ஐந்து நிமிட நேரம் என்றால், கனவில் அது ஒருமணி நேரம். இது ஏனெனில், கனவில், நாம் எத்தகைய பரிமாணத்தையும் கடக்க இயலும் என்பதால், இந்த நேர வித்தியாசம் கட்டாயம் நேர்ந்தே தீரும்.

அந்த விமானம் செல்லும் நேரம், பத்து மணி நேரம். ஆகவே, ஃபிஸ்ச்சரின் கனவில் தாங்கள் ஊடுரூவும் வேலையை, இரண்டாகப் பிரிக்கிறார்கள் காப் அணியினர். அதாவது, இந்த எண்ணம் ஃபிஸ்ச்சரின் மனதில் விதைக்கப்படுவதற்கு, ஒரு வாரம். அடுத்து, அந்த எண்ணம் செயல்பட ஆரம்பிப்பதற்கு, பத்து வருடங்கள். அதாவது, கனவுக்குள் நிகழும் காலம் இது. நிகழ்காலத்தில், பத்து மணி நேரத்தில் விமானம் பயணித்து நிற்பதற்குள், இக்காரியம் முடிந்து, அவரவர்கள் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.

அதேபோல், இன்னொரு விஷயம் என்னவெனில், வழக்கமாக, கனவுகளில் பயணிக்கும்போது மரணம் நேர்ந்தால், நிகழ்காலத்தில் நாம் கண் விழித்துக் கொள்ளலாம். வேறு ஒன்றும் ஆகாது. ஆனால், இந்த முறை, சக்திவாய்ந்த மருந்துகள் உபயோகப்படுத்தப்படுவதால், ஃபிஸ்ச்சரின் கனவில் இருக்கையில் மரணம் சம்பவித்தால், நிகழ்காலத்துக்கு வர இயலாது. அதற்குப் பதில், அண்டவெளியின் ப்ளாக் ஹோல் போன்றதொரு கனவு உலகில் நாம் மாட்டிக்கொண்டு விடுவோம். அதில் இருந்து வெளிவருவதற்கு, பல்லாண்டுகள் ஆகக்கூடும். காப்பின் டீமைச் சேர்ந்தவர்களுக்கு, இவ்வுண்மை சொல்லப்படுவதில்லை. காப்புக்கும், ஆர்க்கிடெக்டான ஏரியேனுக்கும் மட்டுமே இவ்வுண்மை தெரியும் (மர்ம மனிதன் மார்ட்டின் நினைவு வருகிறதா?)

ஃபிஸ்ச்சரின் கனவில் மெதுவாக நுழைகிறார்கள் காப் அணியினர். ஃபிஸ்ச்சரின் கனவில் நிகழும் நாடகம் தொடங்குகிறது.

இதில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜெட் வேகத்தில் செல்லும் கதையில், பல திருப்பங்கள் உண்டு. பல பரிமாணங்களும் உண்டு.

இந்த இடத்தில், படம் பார்க்கும் நண்பர்கள், கனவு எது, நிகழ்காலம் எது என்று பகுத்தறிவது அவசியம். இல்லையெனில், படம் குழப்பு குழப்பு என்று குழப்பிவிடலாம். அதேபோல், படத்தின் தொடக்கத்திலிருந்து நமக்குச் சொல்லப்படும் விஷயங்களை நினைவு வைத்திருப்பது அவசியம்.

படத்தின் துவக்கத்தில் நாம் பார்த்த வயதான மனிதர் யார்? காப்பின் மனைவி இறந்தது எப்படி? ஃபிஸ்ச்சரின் மனதில் நுழைந்த காப்பும் அவனது அணியினரும் சந்திக்கும் அபாயங்கள் என்னென்ன? அவற்றில் இருந்து வெளிவர, காப் செய்யும் வேலைகள் பயனளித்தனவா? காப்பினால் தனது குழந்தைகளுடன் சேர முடிந்ததா?

இக்கேள்விகளுக்கு, படத்தைப் பார்க்க வேண்டியதுதான்.

நாங்கள் பார்த்த தியேட்டரில், ஒலியமைப்பு மிகத்துல்லியமாக இருந்ததனால், இக்கேள்விகளுக்கு விடையாக, படத்தின் வசனங்களில் வரும் விஷயங்கள் எங்களுக்குப் புரிந்தது. ஆனால், அதுவுமே, உற்றுக் கவனித்ததால் மட்டுமே. எனக்குப் புரியாத / கேட்காத சில விஷயங்களை, ஷ்ரீயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஆகவே, படம் முடியும்போது, தெளிவாக என்னால் வெளிவர முடிந்தது. எனவே, படம் பார்க்கும் நண்பர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது. உற்றுக் கவனியுங்கள். இல்லையேல், படம் உங்களைக் குழப்பி விடலாம். படம் மட்டும் தமிழில் பெங்களூரில் வெளிவந்திருந்தால், அதற்குத்தான் சென்றிருப்போம் (காமிக்ஸ் படித்த எஃபக்ட் கிடைத்திருக்கும்).

ஆனால் சத்தியமாக ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். டோப்பு, சரக்கு, நாட்டுச் சாராயம் ஆகிய எதை அடித்துவிட்டு யோசித்தாலும், இப்படி ஒரு திரைக்கதை எழுதுவது முடியாத காரியம் என்றே சொல்வேன். குறிப்பாக, ஃப்ஸ்ச்சரின் கனவில் காப் டீம் நுழைந்ததும் நடக்கும் நிகழ்வுகள் !! அட்டகாசம்!

படத்தைப் பாருங்கள். நிகழ்காலத்தின் அதிமுக்கியமான இயக்குநராக க்ரிஸ்டோஃபர் நோலன் இப்படத்தின் மூலமாக உருவாகிவிட்டார் என்றே தோன்றுகிறது.

இன்ஸெப்ஷன் படத்தின் ட்ரெய்லர் இங்கே

பி.கு – படத்தில், நமக்கு ‘எ குட் இயர்’ படத்தில் பரிச்சயமான ‘மரியன் கோடில்லார்ட்’ உண்டு 😉

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

56 Comments

 1. எனக்கெல்லாம் புரியுமோ என்னமோ?

  Reply
 2. இன்னும் ஒரு வாரத்துல நிரைய பேரு எழுதப்போற விசயமா இதுதான் இருக்குன்னு நினைக்கிறேன். கண்டிப்பா பார்க்க வேண்டியதுதான்.

  Reply
 3. நீங்க சொன்ன மாதிரி ப்ரெஸ்டீஜ் பார்த்து விட்டு அசந்து போனேன். இந்தப் படம் அதைவிட அருமை என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். ப்ரஸ்டீஜ் விட சூப்பர் என்றால், வாவ்….

  இவரின் படம் பார்க்க ஆரம்பித்து முடிக்கும் போது, அந்த கதாப்பாத்திரங்களுடன் 2 மணி நேரம் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும். நோலன் சிம்பிளி சூப்பர்ப்.

  Reply
 4. படம் தந்த பிரமிப்பு இன்னும் தீரவில்லை நண்பரே! உறைந்து போய் உள்ளேன். சினிமா வரலாற்றில் இப்படம் ஒரு benchmark தான்.

  Reply
 5. நித்திய பத்தி இப்போதான் பதிவு எழுதி முடிச்ச கையோடஉங்க பதிவை பாக்கிறேன் ,, இதுலயும் நித்தி வந்துட்டாரா?

  இயக்குனரின் சிந்தனை தளம் வேறு….நம்மவர்கள் பார்பதோ வேற வேற வேட்டை காரனும் ..குத்துப்பாட்டும் தான்..

  விரைவில் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்..

  Reply
 6. நான் பார்த்துட்டேன்.. 🙂

  //இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’.//
  நோலன் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது following தான் .. அடுத்தது ப்ரஸ்டீஜ் தான்.. அப்பறம் தான் மெமெண்டோ எல்லாம்..
  அதே நேரம், இன்செப்ஷன், ப்ரஸ்டீஜெ விட கம்மிதான் என்பது என் அபிப்ராயம்.. இன்னொரு தடவ இன்செப்ஷன் பார்த்துட்டு சொல்றேன், எதுக்கும்..

  Reply
  • vetri

   inception Climax இன்ன??

   அவருடைய கனவில தா இருக்காரா இல்ல.

   நிஜ உலகம் வந்துட்டாரா???

   Reply
   • Ramesh

    After successful implementation of plan …cob moved to limbo state and saw saito who have been waiting for him for very long years ….then cob made saito to do self suicide in limbo state and they both come to real world (back to the business class flight room)
    At last cob mission is successfully accomplished

    Reply
 7. திரைகதையை ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் போல் விளக்கீட்டீங்களே,அருமை.டைரக்‌ஷனை மட்டுமே சிலாகிச்சீங்க,டி காப்ரியா,ஆக்டிங்க் பற்றி ஒன்னும் சொல்லலையே

  Reply
 8. நண்பரே,

  அட்டகாசமான விமர்சனம். காமிக்ஸ் படித்த எஃபக்ட், மர்ம மனிதன் மார்ட்டின் என்று கலக்கல் எடுத்துக்காட்டுக்கள். மரியான் கோட்டிலார்டை எம் கனவில் ஜாலி ஜோலியாக வரச் செய்வாரா காப் 🙂

  Reply
 9. தல.. புட்டு புட்டு வச்சுட்டீங்க… இந்த படத்துக்கு இப்படி ஒரு கோர்வையான ப்ளாட் எங்கயுமே நான் படிக்கல… ஆனா, பார்த்துட்டு வந்ததை எழுதறதுக்கே நமக்கு இப்படி இருக்குதே.. இதை எப்படி யோசிச்சு…

  A brief history of time படிச்சு இருக்கீங்களா? ஸ்டீஃபன் ஹாகிங்-னு 21ம் நூற்றாண்டின் பெரும் விஞ்ஞானி எழுதுனது.. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நம்ம ரேஞ்சுக்கு இறங்கி வந்து எழுதியிருப்பாரு.. அப்பவும் பாதி புரியாது… அப்படிதான் இருந்துச்சு இந்த படம் பார்த்தப்போ… நம்மை சுத்தி சுத்தி குழப்ப ஏகப்பட்ட வாய்ப்பு இருந்தும், போனாப்போவுதுன்னு அப்பப்ப லெக்சர் எடுத்து கான்செப்டை சொல்லி இருக்காரு.. மெமெண்டோ மாதிரி “நான் இப்படித்தான் எடுப்பேன்.. புரிஞ்சா பாரு… இல்லைன்னா கிளம்பு”-ன்னு எடுத்து இருந்தா காலிதான் நாம..

  Reply
 10. ஜெய் விமர்சனம் படிச்சே பாதி கிறுகிறுத்துடுச்சு இப்போ முழுசா ஆயிடுச்சு… மெமன்ட்டோவே ஏன்டா பார்த்தோம்ங்கற நிலைமை… படத்துக்கு தலைகால் புரியல…. கஜினி வந்தப்புறம்தான் புரிஞ்சுது… இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறேன்.

  Reply
 11. enna da innum review podalayaenu paathen

  Reply
 12. பாஸ்.. நான் உங்க‌ விம‌ர்ச‌ன‌த்த‌தான் பாத்துட்டு இருந்தேன்.. நானெல்லாம் ச‌ப் டைட்டில் வ‌ச்சு இங்கிலீசு ப‌ட‌ம் பாக்குற‌ ச‌ங்க‌த்த‌ சேந்த‌வ‌ன்க‌..இல்ல‌ன்னா கிராபிக்ஸ்..அடிபுடின்னா பாத்துட‌லாம்.. எங்க‌ளுக்கு புரியுமா?? என்ன‌ சொல்றீங்க‌ ??போக‌லாமா??

  Reply
 13. @ சின்னசாமி – கண்டிப்பா புரியும் தலைவா.. போய் பார்த்துட்டு வாங்க.. நிச்சயம் உங்களுக்குப் புடிக்கும் . .

  @ Kolipaiyan – அட அதெல்லாம் வேணாம் தல.. கட்டாயம் போய் படத்த பாருங்க.. 😉

  @ இராமசாமி கண்ணன் – நீங்க சொல்றது ரொம்ப உண்மை.. கட்டாயம் இதப் பத்தி இன்னும் பல பதிவுகள் எழுதப்படும். டாக் ஆஃப் த டௌனா இது இருக்கும்.. அவ்வளவு முக்கியமான படம் இது!! நீங்க கட்டாயம் பாருங்க.. பார்த்துபுட்டு சொல்லுங்க..

  @ பின்னோக்கி – //இவரின் படம் பார்க்க ஆரம்பித்து முடிக்கும் போது, அந்த கதாப்பாத்திரங்களுடன் 2 மணி நேரம் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும். நோலன் சிம்பிளி சூப்பர்ப்.//

  ரொம்ப உண்மை. இவரது படங்களின் வெற்றிக்குக் காரணமே அதுதான் . . . நீங்க பார்த்தாச்சா இந்தப் படத்த?

  @ Ben – அது !!! என்னா மாதிரி யோசிச்சிருக்கான் மனுஷன் !! பின்னி எடுத்துட்டான் !!

  @ தமிழன்07 – அட !! நீங்களும் நித்திய பத்தி பதிவு போட்டுட்டீங்களா?? சூப்பரு தல 😉 கட்டாயம் பாருங்க இந்தப் படத்த…

  @ சரவணகுமார் – கண்டிப்பா சொல்லுங்க.. ப்ரஸ்டீஜ் வேற தளம்.. இன்ஸெப்ஷன் வேற தளம்.. ஆனா, எனக்கு கண்டிப்பா ப்ரஸ்டீஜ்ஜ விட இது புடிச்சிது 😉

  @ சிபி. செந்தில்குமார் – நண்பா..லியனார்டோ பத்தி என்னத்த சொல்ல?? அருமையான நடிப்பு. எனக்கு, லியனார்டோ தெரியவே இல்ல.. காப் தான் தெரிஞ்சான்.. பின்னிட்டாரில்ல!!!

  @ ஜெய் – Brief History of Time படிச்சிட்டேன்.. 😉 நானு ஸ்கூல் படிச்சப்பலேர்ந்து அந்த புக்கு மேல ஒரு கண்ணு.. ஸோ, காலேஜ் சேர்ந்ததும் வெறித்தனமா படிச்சேன் … ரொம்பப் புடிச்ச புக்கு.. நீங்க சொன்னமேறி, நம்ம லெவலுக்கு இறங்கிவந்து பொறுமையா வெளக்கிருப்பாரு மனுஷன் 😉

  நோலன் மட்டும் புரிஞ்சா பாரு.. இல்லேன்னா போய்யான்னு எடுத்து வெச்சிருந்தா… அம்பேல் தான் நாம 😉

  @ நாஞ்சில் பிரதாப் – இந்தப் படம் மெமெண்டோ அளவு சிக்கல் இல்ல.. இத கட்டாயம் பார்க்கலாம்.. கண்டிப்பா உங்களுக்குப் புடிக்கும் தல..

  @ ShaggyLad – ஹாஹ்ஹா… நீங்க நினைச்சது எனக்குக் கேட்டுச்சி.. அதான் போட்டுட்டேன் 😉 ஹீ ஹ்ஹீ

  @ பாரதி – //நானெல்லாம் ச‌ப் டைட்டில் வ‌ச்சு இங்கிலீசு ப‌ட‌ம் பாக்குற‌ ச‌ங்க‌த்த‌ சேந்த‌வ‌ன்க//

  அய் !! வெல்கம் டு த க்ளப் !! நானும் அப்புடித்தான் நானும் அப்புடித்தான் ;–) சப் டைட்டிலே புரியாம, ஸ்க்ரீன்ப்ளே தேடிப் படிச்சிப் புரிஞ்சிக்குறவன் நானு 😉 . . ஆனா, கட்டாயம் இந்தப் படத்துக்குப் போகலாம் பாரதி.. உங்களுக்குப் புடிக்கும்.. கண்டிப்பா போங்க

  Reply
 14. @ காதலரே – மரியன் கோடில்லார்டைப் பார்த்த நொடி முதல், ‘எங்கேயோ பார்த்த முகமாயுள்ளதே??’ என்று யோசித்த வண்ணமிருந்தேன்.. அப்புறம், சடாரென்று ஸ்ட்ரைக் ஆனது !! குட் இயரில் பார்த்த அந்த அழகு, இதில் சற்று மிஸ்ஸிங் ;–(.. என்ன ஆனதோ.. யார் கண் பட்டதோ ;–(

  கனவு உறுதி 😉 ஆனால், அதற்கு, மறுபடி குட் இயர் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது 😉

  Reply
 15. கருந்தேள்… இந்த வாரம் படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்… சஸ்பென்ஸ் உடைந்து விடாமல் இருக்க படம் பார்த்தவுடன், ரிடர்ன் வருகிறேன்.

  நோலன் சந்தேகமே இல்லாமல் ரசிகனின் மூளைக்கு வேலை கொடுக்கும் மிக சில இயக்குனர்களில் ஒருவர். லியனோர்டோ ஷட்டர் ஐலேண்டில் தொடங்கிய நேர்த்தியை மீண்டும் வெளிகொணர்ந்திருக்கிறார் போல. பார்த்து விட வேண்டியது தான்.

  வெள்ளிக்கிழமை வெளிவந்த படத்திற்கு அதற்குள் ஆய்வா… கலக்குங்கோ.. 🙂

  Reply
 16. நண்பா,
  அருமையான தெளிவான விமர்சனம்,வரிக்கு வரி பிடித்தது,
  நச்சுன்னு சொன்னீங்க,ப்ரெஸ்டீஜ் எனக்கு மெமெண்டோவை விட பிடித்தது.
  இதை ஜாக்கியும் எளிமையாய் புரிவதுபோல எழுதினார்.

  மேலும் புரியாததை உங்க பார்ட்னரிடம் கேட்டு புரிந்ததாய் சொன்னீங்க பாருங்க,க்ரேட்

  Reply
 17. ப்ரஸ்டீஜ் நான் வாழ்கைல மறக்க முடியாத படம் தல….. ஸ்டார் மூவீஸ் ல அந்த படத்த பத்தி பாத்துட்டு மீதி படத்துக்கு அலையோ அலன்னு அலைஞ்சேன்……

  சூப்பர் விமர்சனம்……

  //கனவுகளின் காதலன் said…
  நண்பரே,

  அட்டகாசமான விமர்சனம். காமிக்ஸ் படித்த எஃபக்ட், மர்ம மனிதன் மார்ட்டின் என்று கலக்கல் எடுத்துக்காட்டுக்கள். மரியான் கோட்டிலார்டை எம் கனவில் ஜாலி ஜோலியாக வரச் செய்வாரா காப் 🙂
  //

  waiting list la irukeenga boss 😉 Nangalam already dreamukkulla poyachu 😉

  Reply
 18. @ ரஃபீக் – சூப்பர் ! கட்டாயம் பார்த்துட்டு, உங்க கருத்த சொல்லுங்க.. ஆனா, சஸ்பென்ஸ் உடையக்கூடாதுன்னு சொல்லிருக்கீங்க.. அங்க ஃபேஸ்புக்ல, ஸ்பாய்லரா ஓடிக்கினு இருக்கு 😉 அதையெல்லாம் படிச்சிராதீங்க 😉

  லியனார்டோ, ஷட்டர்லயும் சரி, இதுலயும் சரி… பின்னித் தள்ளிட்டாரு… அவரு ஒரு மிகத்தேர்ந்த நடிகரா மாறிட்டாருன்றது இப்படம் பார்த்தாலே தெரியும் .. கலக்கப்போறாரு இனின்னு நினைக்குறேன்

  Reply
 19. @ கார்த்திகேயன் – நன்றி நண்பா.. நீங்களும் ப்ரஸ்டீஜ் க்ளப்ல மெம்பர்ன்னு தெரிஞ்சி, சந்தோஷம் !! 😉

  //மேலும் புரியாததை உங்க பார்ட்னரிடம் கேட்டு புரிந்ததாய் சொன்னீங்க பாருங்க,க்ரேட்//

  சப்டைட்டில் வருமோன்னு கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியாம வேற உக்காந்துக்கினு இருந்தேன்.. ஆனா அது ரகசியம்.. யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் 😉 ஹீ ஹீ

  Reply
 20. @ ஆனந்த் பாபு – ஹாஹ்ஹா… மடியன் கோடில்லார்ட் மட்டும் நம்ம கனவுல வந்துட்டா… அப்புறம் அடி தூள் !! 😉

  //ப்ரஸ்டீஜ் நான் வாழ்கைல மறக்க முடியாத படம் தல….. ஸ்டார் மூவீஸ் ல அந்த படத்த பத்தி பாத்துட்டு மீதி படத்துக்கு அலையோ அலன்னு அலைஞ்சேன்……//

  டிட்டோ !! சேம் பின்ச்! ஹெச் பீ ஓல பார்த்துட்டு, எப்படியோ ஒரு நண்பர்ட்ட இருந்து டிவெக்ஸ் காப்பி வாங்கிப் பார்த்தேன் 😉

  Reply
 21. //நானெல்லாம் ச‌ப் டைட்டில் வ‌ச்சு இங்கிலீசு ப‌ட‌ம் பாக்குற‌ ச‌ங்க‌த்த‌ சேந்த‌வ‌ன்க//

  அண்ணே!நாங்களும் அதே சங்கம் தான்! 🙂

  கருந்தேள் அண்ணாத்த,படத்தோட கதைய தவிர அம்புட்டும் படிச்சேன்.இப்போதைய talk of the town இந்தப் படம் தான்.கொஞ்சமாவது சச்பென்ஸ் வேணாம்?படத்துக்கு போயிட்டு வந்து எனக்கு தோணினத சொல்றேன்.ஆனா,நானு ஒண்ணாம் நம்பர் சோம்பேறி.படத்துக்கு போகவே கண்டிப்பா ஒரு வாரமாவது ஆவும். 😉

  அப்புறம்,நோலன் படங்கள்ல எனக்கு பிடிச்சது The Dark knight.அதுல அவரு ஜோக்கர உருவாக்கி இருந்த விதம்,திரைக்கதை,வசனத்துல இருந்த brilliance,நடிப்பு னு பல விஷயங்கள் காரணம்ன்னாலும்,இன்னொரு முக்கிய காரணம் இருக்கு.நானு காமிக்ஸ்,பேட்மேன் ரசிகன். 🙂
  அப்புறம்,நேத்து தான் “There is something about mary” பார்த்தேன்.நல்ல,அட்டகாசமான நகைச்சுவைப் படம்.

  Reply
 22. தேளு எங்கேயோ போய்ட்டீருய்யா! அது சரி வெளியூர்கார பயபுள்ள படமெல்லாம் ’ஆஹா ஓஹோ’ உள்ளூர்காரன் தரமா ‘மதராசப்பட்டிணம்’னு ஒரு அற்புதமான படத்த பார்த்த இதுல அந்த சாயல் இருக்கு, எனக்கு இந்த படத்தோட ஞாபகம் வர்றத மறக்கமுடியலன்னு எதாவது சொல்ல வேண்டியது.
  என்னயா உங்க நியாயம்? அதுக்கு பின்னாடி எவ்வளவு பேரோட உழைப்பு இருக்கு தெரியுமா உங்களுக்கு?சும்மா எத வேண்ணா எழுதுவீகளோ?
  (எப்புடியோ இன்னிக்கு டைம்பாஸ் ஆயிரும் :))

  Reply
 23. //@ கீதப்பிரியன்
  இதை ஜாக்கியும் எளிமையாய் புரிவதுபோல எழுதினார்.
  //

  அப்போ ஜாக்கி அண்ணே புரிஞ்சு எழுதலயா? புரிவதுபோலத்தான் எழுதினாரா? எங்கள் அண்ணன் ஜாக்கி எங்கிருந்தாலும் உடனே ’பல்ஸர்’ல மேடைக்கு வரவும் 🙂

  Reply
 24. arumaiyaana vimarsanam thala, actually i am expecting your review.. ha ha ha, ellorudaiya point of view vaiyum paarkkanumnnu oru aasai.

  muthal thadavaiye purinjathaala ithu than en choice. nolan-in master piece avarudaiya adutha padamaaka irukkalaam.

  Reply
 25. இரண்டாம் முறை பார்த்த பின்பே படத்தின் பல புதிர்கள் விளங்கின. படத்தின் ஒவ்வொரு ப்ரேமையும் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன். Cobbன் குழந்தைகள் பேசும் வசனங்கள், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், ஏர்போர்ட் காட்சி, Cobb கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரம் போன்றவைகள் தாம் நமது சந்தேகங்களை விடுவிக்கும், படத்தின் பெரும் பலம் Hans Zimmer ன் பின்னணி இசை. நம்மை இரண்டரை மணி நேரம் முழுவதும் படத்துடன் முழுமையாக ஒன்றிப் போக செய்கிறது. Cobb கடைசிக் காட்சியில் இருப்பது நிஜ உலகமா அல்லது கனவுலகமா என்பதை நாமே கண்டுபிடிக்க விட்டு விடுக்கிறார் இயக்குனர். Christopher Nolar சந்தேகமின்றி ஒரு genius தான்.

  Reply
  • vetri

   நிஐ உலகமா??? கனவு உலகமா ???

   Reply
 26. கருந்தேள் சும்மா சொல்லகூடாது நோலன் வந்து அவர் படத்துக்கு அவரே தெளிவுரை எழுதினாலும் இவ்வளவு தெளிவா [தமிழ்ல]எழுதுவாரானு சந்தேகம் தான். எப்படியோ தமிழ் திரைப்பட துறைக்கு ஒரு நோலன் உங்க ரூபத்துல இருக்கார்னு தோணுது,மிக்க நன்றி முதல் முறையா நோலன் இயக்கிய படத்துக்கு மிகவும் தைரியமா SUB-TITLE பார்க்காம படம் பார்க்க போறேன் உங்கள் எழுத்தால்,மறுபடியும் ஒரு நன்றி.

  Reply
 27. @ இலுமி – //படத்துக்கு போயிட்டு வந்து எனக்கு தோணினத சொல்றேன்.ஆனா,நானு ஒண்ணாம் நம்பர் சோம்பேறி.படத்துக்கு போகவே கண்டிப்பா ஒரு வாரமாவது ஆவும். ;)//

  அதெல்லாம் பிரச்னையே இல்ல.. 😉 நிதானமா பார்த்துக்கினு வாங்க 😉 நாங்களும் இன்னொரு வாட்டி பார்க்கப்போறோம்ல 😉

  //அப்புறம்,நோலன் படங்கள்ல எனக்கு பிடிச்சது The Dark knight.அதுல அவரு ஜோக்கர உருவாக்கி இருந்த விதம்,திரைக்கதை,வசனத்துல இருந்த brilliance,நடிப்பு னு பல விஷயங்கள் காரணம்ன்னாலும்,இன்னொரு முக்கிய காரணம் இருக்கு.நானு காமிக்ஸ்,பேட்மேன் ரசிகன். :)//

  இங்கயும் அதேதான்.. 😉 ஆனாலும், ப்ரஸ்டீஜ் எனக்குப் புடிச்சது.. பட் இனிமே இதுதான் 😉

  ஸம்திங் அபௌட் மேரி புடிச்சது பத்தி சந்தோஷம் 😉

  @ மயிலு – எவ்வளவு நாளா இப்புடி?? 😉 சீக்கிரம் சென்னை வருவேன்.. மக்கா வூட்டுக்கு வந்து ஒரே போடு ! 😉 இதுல கார்த்தி கூட வேற சண்டையா? கார்த்தி – நானு ஃபேஸ்புக்ல சொன்ன மாடசாமி இந்த மயிலுதாண்ணா 😉

  @ முரளிகுமார் பத்மநாபன் – //muthal thadavaiye purinjathaala ithu than en choice. nolan-in master piece avarudaiya adutha padamaaka irukkalaam.//

  நச்சுன்னு சொல்லிருக்கீங்க 😉 அதான் உண்மை.. அவரோட அடுத்த படத்துக்காக (மோஸ்ட் ப்ராபப்ளி பேட்மேன் அடுத்த பாகம்) வெயிட்டிங் 😉

  @ பென் – அடடே ரெண்டாவது வாட்டி ஓவரா? நாங்க நெக்ஸ் வீக் தான்.. கண்டிப்பா நீங்க சொன்ன விஷயங்கள் அத்தனையும் கவனிப்போம்.. ஆல்ரெடி கவனிச்சோம்.. ஆனா சில மேட்டர்ங்க விட்டுப் போயிருச்சு.. கண்டிப்பா நெக்ஸ்ட் வீக் போவோம்.. அப்ப கவனிப்போம்.. நன்றி பாஸ்..

  அதேபோல், ஹேன்ஸ் ஸிம்மரின் இசை.. வாவ்!! அது, ஜீனியஸின் உச்சம். இந்த ரெண்டு ஜீனியஸுங்களும் சேர்ந்து, நம்மை அசர வெச்சிட்டாங்க.. ஸிம்மர் சொல்லிருக்கார் – The most accomplished moment in my life is that I didn’t die composing Inception and I came out alive’ன்னு.. 😉

  @ Keanu – நன்றி பாஸ்.. அது வேறொண்ணுமில்லை.. படம் புடிச்சிட்டதுனால, அந்த வேகத்துல உக்காந்து எளுதுனது.. 😉 கண்டிப்பா போயிப் பாருங்க.. சப் டைட்டில் வேணாம்.. ஓரளவு புரியுது.. எப்படியும் இன்னொரு முறை கண்டிப்பா பாப்பீங்க.. 😉 நாங்களும் நெக்ஸ் வீக் போவோம்.. 😉

  நோலன் அது இதுன்னு நீங்க வேற.. அந்த ஆள் ஒரு மனுஷனே இல்ல பாஸ்.. திரைக்கதை எழுதுறதுக்குன்னே பூமில பொறந்த மனுஷன் அவர் ! 😉 அவருக்கு முன்னாடி நாமெல்லாம் காமெடி பீஸு.. 😉

  Reply
 28. படம்னா எப்படி எடுக்கணும்-னு சொல்லிட்டார்… எவ்ளோ உழைப்பு… நாம யோசிக்கிறது வேற… அத அப்படியே காட்சியா படத்துல கொண்டு வர்றது வேற… அத அற்புதமா செய்திருக்கார்…

  அற்புதமா அதோட கதைய எழுதி இருக்கீங்க 🙂 உண்மையிலேயே இவ்ளோ கோர்வையா ஒரே வாட்டி நோலனோட படத்த பாத்துட்டு எழுதுறது கஷ்டம்…

  Reply
 29. Dear Sir

  I am yet to see the picture. But from the review of yours, I think you have not seen the picture THE CELL – a 2000 film directed by an Indian Director Tarsem Singh. If you have not seen this picture kindly see and write a review. Inception is only an extension of the concept of The Cell in an elaborate way. But seeds are already sworn by an Indian in the year 2000.

  July 19, 2010 12:26 PM

  Reply
 30. @ mythoughtsintamil – ரைட்டு!! படம்னா இது படம் ! ரொம்ப அருமையான உழைப்பு!! அப்பாலிக்கா, நானு கதையை இவ்வளவு கோர்வையா எழுதுனதுக்குக் காரணம், பதிவுலயே சொல்லிட்டேனே 😉 என்னோட வைஃப் படத்த நல்லா கவனிச்சதுனால, அப்பப்ப கேட்டுத் தெரிஞ்சிக்கினேன் 😉

  @ manian – வணக்கம். செல் – படத்தை நான் பார்த்தாச்சு… அந்தப் படம் வந்த டைம்லயே பார்த்துட்டேன்.. அதோட கான்செப்ட், மனசுக்குள்ள நுழையுறது.. அத அற்புதமா பண்ணிருப்பாங்க.. அதுவும், அந்த கொலைகாரனின் மனசுக்குள்ள வர்ர கேரக்டர்கள் அற்புதம்! இந்தப் படத்த பத்தி நானு மறந்தே போயிட்டேன்.. அத கரெக்டா இப்ப நினைவுபடுத்துனதுக்கு என்னோட நன்றிகள் பல..

  இந்தப் படத்த பறுபடி பார்த்துட்டு, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளவு சீக்கிரம் எழுதுறேன்..

  ஆனா, ரெண்டு படத்துக்கும் மிகச்சில ஒற்றுமைகள் உண்டு. மனசுக்குள் =நுழையறது – கனவுக்குள் நுழையுறது.. இப்புடி.. பட், இன்ஸெப்ஷன்ல, ஸ்க்ரீன்ப்ளே சும்மா வெளையாடிருக்கு 😉 அந்த ஸ்க்ரீன்ப்ளேக்குதான் ஃபுல் மார்க்ஸ் . .

  உங்க கருத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..

  Reply
 31. உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி

  Reply
 32. வீடு மாத்திகிட்டு இருக்கோம் கருந்தேள். இன்னும் 1 வாரத்துக்கு பார்க்க நேரமிருக்காது. ஏகப்பட்ட அன்பேக்கிங் வேலை மிச்சம்.

  பார்த்துட்டு வந்து சொல்லுறேன்!!

  Reply
 33. guru where did you watch this movie in Bangalore … karudan mall ?? this week end i am planning

  Reply
 34. உங்கள் கருத்துக்களை மிக அருமையாக மற்றும் எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்

  கண்டிப்பாக பார்த்துருவோம் ( தமிழில் ) 🙂

  .

  Reply
 35. மனசுல இன்னொன்னு தோனுச்சு இவ்வளவு கஷ்ட பட்டு இந்த படத்த பாக்குறதுக்கு
  பதிலா மதரசபட்டினம் பாத்துட்டு ரிலாக்ஸ்சா இருக்கலாமே :))

  .

  Reply
 36. // ஒரு உதாரணமாகச் சொல்லப்போனால், நமது ’நித்தி’யை எடுத்துக்கொள்வோம். என்றோ ஒரு நாள், அவனது மனத்தில் தோன்றிய ஒரு சிறு பொறி (சாமியாருங்க என்னமா எஞ்சாய் பண்ணுறாங்கைய்யா), சிறிதுசிறிதாக அவனது வாழ்க்கையை மாற்றி, போலிச்சாமியாராக அவன் ஆகி, பலவகையில் எஞ்சாய் செய்துவிட்டு, விடியோவும் வெளியாகி, களி தின்றுவிட்டு, மறுபடியும் இப்போது வெளியே வந்து, பேக் இன் ஃபார்ம் ஆகிவிட்டானல்லவா? //

  Sooooopper Example

  எங்கியோ போயிட்டீங்க தல :))

  .

  Reply
 37. This comment has been removed by the author.

  Reply
 38. // மர்ம மனிதன் மார்ட்டின் நினைவு வருகிறதா? //

  உங்களுக்கும் தோணுச்சா கரெக்டா பாய்ன்ட கப்புன்னு புடிட்சிட்டீங்கலே தல

  .

  Reply
 39. நண்பரே,

  சிறப்பான விமர்சனம்… அதிலும் தமிழ் காமிக்ஸ் வேறு சேர்த்து விட்டீர்கள். உங்கள் விமர்சனம் படிக்கும் போது எனக்கு “கனவே கொல்லாதே” என்ற டிடெக்டிவ் காமிக்ஸ் நினைவுக்கு வந்தது.

  Reply
 40. @ கோவி. கண்ணன் – ரைட்டு 😉 பார்த்துருங்க படத்த 😉

  @ பாலா – தல.. நிதானமா பார்த்துபுட்டு வாங்க.. வந்து வெச்சிக்கலாம் நம்ம கச்சேரிய 😉

  @ sans – நானு இந்தப் படத்த பார்த்தது, முகுந்தா தியேட்டரு.. பாணஸ்வாடில கீது.. நல்ல தியேட்டர்.. நல்ல சௌண்டு.. 😉

  @ சிபி – //மனசுல இன்னொன்னு தோனுச்சு இவ்வளவு கஷ்ட பட்டு இந்த படத்த பாக்குறதுக்கு
  பதிலா மதரசபட்டினம் பாத்துட்டு ரிலாக்ஸ்சா இருக்கலாமே :))//

  உங்க கனவுல ராமநாராயணன் வந்து குட்டிப்பிசாசு 2 ட்ரைலர போட !! 😉

  மர்ம மனிதன் மார்ட்டின மறக்க முடியுமா?? அங்க நிக்குறோம் நாம 😉

  @ cap tiger – ஆஹா… கனவே கொல்லாதே பத்தி தெரியாதே… அதப் பத்தி சொல்லுங்க பாஸ்.. வாங்கிப் படிச்சிரலாம்

  Reply
 41. நண்பரே,

  கனவே கொல்லாதே கதை மட்டுமே எனக்கு ஞாபகமிருக்கிறது. மனோதத்துவ டாக்டர் ஒருவர் பிறரின் மன அலைவரிசையை??! தன்னிடம் உள்ள கருவி மூலம் பதிவு செய்து கொண்டு ஒரு மனிதனை அவர்களின் கனவில் உலவ விடுகிறார். அந்த மனிதனோ கனவிலேயே தனக்கு பிடிக்காதவர்களை கொல்கிறான். தூக்கத்திலேயே மரணம் என்று போலீஸ் கேஸை மூட, டிடெக்வ் கதாநாயகன் அதை கண்டுபிடிக்கிறார். முடிவு வித்தியாசமாக இருக்கும்..

  Reply
 42. INCEPTION பார்க்க வேண்டும்…. இதை கூட தமிழில் சுடச்சுட ஏ.ஆர்.முருகதாஸ் “ஏழாம் அறிவு” என்று பெயரிட்டு இயக்குகிறாமே (!!).

  நம்மாளுங்க எப்படி ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டு படமெடுக்கறாங்கன்னு ஒரு பதிவு போடுங்களேன்… சுவாரசியமா இருக்கும்.

  Reply
 43. சில பேருக்கு தான் தான் பார்த்த விசயத்தை எழுத்து மூலமா விஷ்வலா கண் முன்ன நிறுத்த கூடிய திறமை இருக்கும். அதுல பெஸ்ட் ஆளா உங்கள நான் பார்க்கிறேன். உங்களுடாய எழுத்துக்கு தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் நான். ஒவ்வரு விமர்சனம் படிச்ச பிறகு அந்த படத்தை பார்த்தேய் ஆகணும் மனசு கங்கணம் கட்டி கொண்டு அலைகிறது. என்ன செய்யலாம் சொல்லுங்க ஸார். ஒரு சின்ன தகவல் கிட்ட தட்ட ஆறு வருஷமா நெட் ல பல விசயம் படிச்சுருக்கேன் ஆனா ஒரு தடவை கூட கமெண்ட் பண்ணினது கிடையாது இதுவே என் முதல் கமெண்ட் .ஹாட்ஸ் ஆஃப் தொ யூ

  Reply
 44. தலைவரே பேசாம திரை விமர்சனம் எழுதுவதர்கு பதிலா யென் நீங்க சினிமாவிர்க்கு கதை எழுத கூடாது.

  Reply
 45. Nice review.. you missed to comment on Hans Zimmer. couple of other corrections/ minor omissions..

  a) the dreams are collective (so all team members can be in the same dream)
  b) The idea is not for Fisher to close his company down, but to split it into multiple (two) entities – like what happened to Reliance. Saido fears that an unbroken, large conglomerate will surpass and edge his company out.

  Reply
 46. இந்தப் படத்தைப் பார்க்க மூட் இன்றி இருந்தேன்… உங்களுடைய இந்த விமர்சனத்தைப் படித்ததும் பார்க்கத் தூண்டி விட்டீர்… நோலனின் திறமை எனக்குப் புரிந்தது the dark knight படத்தில் தான்.. பேட்மேன் என்னுடைய எவர்க்ரீன் ஹீரோ .. எனவே.. இந்த படத்தையும் அதே நேர்த்தியில் கொடுத்திருப்பார் என்று திண்ணமாக நம்புகிறேன்.. பார்த்து விட வேண்டியது தான்…

  Reply
 47. //INCEPTION பார்க்க வேண்டும்…. இதை கூட தமிழில் சுடச்சுட ஏ.ஆர்.முருகதாஸ் “ஏழாம் அறிவு” என்று பெயரிட்டு இயக்குகிறாமே (!!).

  நம்மாளுங்க எப்படி ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டு படமெடுக்கறாங்கன்னு ஒரு பதிவு போடுங்களேன்… சுவாரசியமா இருக்கும்.
  //

  அடடா.. இந்த ஏழாம் அறிவு படம் இந்தப் படத்தின் பிட்டா… எனக்குத் தெரியாமல் போயிற்றே… கஜினியும் நோலனின் கதையில் இருந்து பிட் அடிக்கப் பட்டது தானே…..

  Reply
 48. Nice review. easy to understand every one. First i watched Movie in Sathyam Cinemas in Chennai. they screened this Movie with Subtitle. but i couldn’t understand this Movie.After i watch it in Tamil and got the Storyline. Superb Screenplay..stunning BGM.

  Reply
 49. Hi, really good Review, I went with my Friend and we really enjoyed.
  And ‘Prestige’ – One of My Fav film I watch every time with the Same Enthusiasm.

  Reply
 50. பிரமாதமான படம். அவதார் வந்த போது James cameron இந்த கரு 90s லேயே இருந்ததுன்னு சொன்னாரு. அதே போல Christopher Nolanம் ரொம்ப வருஷத்துக்கு முன்னாலேயே இந்த கதை கரு இருந்ததா சொல்லறாரு. பெரிய பெரிய படைப்புகளெல்லாம் இப்படி தான் வருமோ. நீங்க சொன்ன மாதிரி தான் எப்படிதான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ. நீங்க Inceptionனா இல்ல Shutter Islandடா கேட்ட நீங்க Shutter Islandன்னு சொன்னிங்க. நான் Inceptionன்னு சொல்லறேன். நீங்க Shutter Island, Shawshank Redemtionன விட நல்ல இருக்குன்னு சொன்னத எடுத்துக்கவே முடியல பா. Opinion differsனு எடுத்துக்க வேண்டிதான். Memento படத்தோட திரைக்கதையும் வித்தியாசமானது இதுவும் பிரமாதமான திரைகதை. நான் பல முறை பார்த்த படங்களுள் Matrix ஒன்று. Inceptionனையும் பல முறை சலிக்காம பாக்கலாம்.

  Reply
 51. இன்ஸெப்ஷன் படத்த நான் பாத்திருக்கேன். பட் சரியா விசயம் படல. இந்த கட்டுரைய வாசிச்சிட்டேன். இன்னுமொரு தடவ படத்த பாத்தா புரியும்னு நெனக்கிறேன்.
  இந்த படம் பத்தின கட்டுரைய ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன். கெடச்சிது. ரொம்ப நன்றிகள்.

  Reply

Join the conversation