Shutter Island (2010) – English

by Rajesh July 26, 2010   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

டிஸ்கி 1 – இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 • என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா?
 • என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா?
 • என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா?

ரைட். சொல்லியாயிற்றா?

டிஸ்கி 2 – இந்தக் கட்டுரை, இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கீழே உள்ளது, முதல் பாகம். அது, படத்தின் கதையைப் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பாகம், படத்தைப் பற்றிய அலசல். அதில், படு சுவாரஸ்யமான, நம்மெல்லோருக்கும் மிகப் பரிச்சயமான ஒருவரின் கருத்தும் உண்டு.

இப்போது கட்டுரைக்குச் செல்லலாம்.

பாகம் 1

வேறொன்றுமில்லை. ஷட்டர் ஐலாண்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்ததிலிருந்து, அந்தப் படத்துக்குச் செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று நான் போட்ட திட்டங்கள் அத்தனையும் தவிடுபொடியாகி, கடைசியில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முகுந்தா தியேட்டரில் படம் வெளியாகி, அங்கே சென்றுபார்க்க வேண்டும் என்று நினைத்து ஆன்லைனில் டிக்கட் செக் செய்யும்போதுதான் தெரிந்தது, அதற்கு முந்தைய வாரம் தான் படத்தைத் தூக்கினார்கள் என்று.

அதன்பின், டிவிடிக்குக் காத்திருந்து, இதோ சனிக்கிழமையன்றுதான் அட்டகாசமான ஒரிஜினல் பிரிண்ட் கிடைத்து, அதனை நேற்று பார்த்தோம்.

வழக்கமாக நாங்கள் இருவரும் படம் பார்க்கும் முறை எப்படியிருக்கும் என்றால்:
ஹோம் தியேட்டரில் படத்தைப் போட்டவுடன், அத்தனை ஜன்னல்களையும் சாத்தி, ஒரு இருண்ட எஃபக்டை உருவாக்கி, அதன்பின் சவுண்டைக் கூட்டி, டோட்டலாக ஒரு தியேட்டர் எஃபக்டில் படம் ஓடும். அது அழுகைப்படமாக இருந்தாலும் சரி, காமெடியாக இருந்தாலும் சரி. இதுதான் வழக்கம்.

இப்படி இருக்க, முந்தாநாள் மாலை. . சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரவு, தனது நீண்ட கரும் இறக்கைகளால் பெங்களூரை மெல்ல மெல்லப் போர்த்தி மூடிக்கொண்டிருந்தது. இருட்டைப் பார்த்ததும், பயத்தில் கடகடவென்று நடுங்கிய இரண்டு கைகள், மெல்ல டிவிடியைப் பிரித்து, படத்தை ஆன் செய்தன (அட.. நம்ம கைதான் அது.. இருட்டுல திரில்லர் / பேய்ப்படம் பார்க்கணும்னா அவ்ளவு பயம் நைனா)..

திடும். திடும். திடும்.

ஆண்டு – 1954. பனியைக் கிழித்துக் கொண்டு கடலில் தோன்றும் அந்த விசைப்படகு. அதில் நின்றுகொண்டிருக்கும் ’டெட்டி டேனியல்ஸ்’ – யுஎஸ் மார்ஷல்.. எங்கோ தனது எதிரில் விரியும் அடிவானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனது அருகில் சக் (Chuck)– அவனது புதிய பார்ட்னர். அவர்களுக்கு எதிரில், பிரம்மாண்டமான ஒரு தீவு – ஷட்டர் ஐலாண்ட். பூதாகாரமான ஒரு கரும் பிசாசைப்போல் தண்ணீருக்கு நடுவே தெரிகிறது.

அந்தத் தீவில், ஆஷ்க்ளிஃப் மருத்துவமனை, அமெரிக்காவின் மிக மோசமான மனநோயாளிகளுக்கென்றே நிறுவப்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சிகிச்சையளித்து, அவர்களைக் குணப்படுத்துவதே அந்த மருத்துவர்களின் லட்சியம்.

அந்தத் தீவில், மனநோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மூன்று. ஒரு வார்டு, ஆண்களுக்கானது. இன்னொரு வார்டு, பெண்களுக்கானது. மூன்றாவது வார்டில் – வார்ட் சி – இருப்பதிலேயே மிக மோசமான, ஆபத்தான மனநோயாளிகள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் எத்தகைய ஆபத்தும் நேரக்கூடும்.

இப்படி ஒரு தீவில், முந்தைய நாள், ரேச்சல் சொலாண்டோ என்ற பெண், காணாமல் போய்விடுகிறாள். அவளது அறை, நன்றாகப் பூட்டப்பட்டிருந்தும், காற்றைப் போல் அறையில் இருந்து மறைந்து விடுகிறாள். இதனைப் பற்றிய உண்மையை ஆராயவே, டெட்டியை வரவழைத்திருக்கின்றனர்.

விசைப்படகில் இருக்கையில், தனது மனைவி டோலோரஸ், ஒரு தீ விபத்தில் இறந்து போனதாகவும், அதற்குக் காரணம், ஆண்ட்ரூ லாடிஸ் என்பவன் பற்றவைத்த தீக்குச்சி என்பதையும் டெட்டி, சக்கிடம் சொல்கிறான்.

தீவுக்கு வந்து இறங்கும் டெட்டியையும் சக்கையும், அந்த மருத்துவமனையின் டெபுடி வார்டன், தலைமை ஸைக்யாட்ரிஸ்ட் டாக்டர் ஜான் கா(வ்)லியிடம் அழைத்துச் செல்கிறார்.

ஜான் காலி, மிகவும் அழுத்தமான மனிதராக டெட்டிக்குத் தெரிகிறார். எந்தப் பரபரப்பும் இல்லாமல், ஆனால் அதே சமயம், சற்றே வெறுப்புடன் அவர் பேசும் விதம், ஆரம்பத்திலிருந்தே டெட்டியின் மூளைக்குள் அபாய மணியை அடித்தவண்ணம் இருக்கிறது. அவர் சொல்லும் எந்த விஷயத்தையும் எளிதில் நம்ப மறுக்கிறான் டெட்டி.

ரேச்சல் சொலாண்டோவைப் பற்றி, மருத்துவர் ஜான் காலி, டெட்டிக்குச் சொல்கிறார். தனது மூன்று குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, நிதானமாக உணவைச் சமைத்து சாப்பிட்ட ஒரு ஸைக்கோ அவள் என்று விளக்குகிறார். அவளது புகைப்படத்தைப் பார்க்கும்போதே, டெட்டிக்குத் தலை சுற்றுகிறது. அவனது நினைவில், மெல்ல மெல்ல அவன் உலகப்போரில் பங்கெடுத்துக் கொண்ட நிமிடங்கள் நினைவு வருகின்றன.

பனியில் உறைந்த பிணங்கள்.. தாயைக் கட்டிக்கொண்டே இறந்த பிஞ்சுக் குழந்தைகள்…

தலை சுற்றுவதால், ஜான் காலியிடம் ஆஸ்பிரின் வாங்கிச் சாப்பிடுகிறான் டெட்டி.

காணாமல் போன ரேச்சல் சொலாண்டோவின் அறையை அலசும் டெட்டிக்கு, ஒரு சிறிய குறிப்பு கிடைக்கிறது. அந்தக் குறிப்பில், ‘The Law of Four – Who is 67?’ என்று மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்பைக் கண்டவுடன், ஜான் காலி, சற்றே திடுக்கிட்டாற்போல் டெட்டிக்குத் தெரிகிறது. ஆனால் அது என்னவென்று அவர்களுக்குப் புரிவதில்லை.

அன்று, தீவைச் சுற்றியும், ரேச்சல் சொலாண்டோவைத் தேடும் செக்யூரிட்டிகளுடன் டெட்டியும் இணைந்து கொள்கிறான். அப்போது, தொலைவில், இருண்டு நிற்கும் ஒரு பழைய கலங்கரை விளக்கத்தைப் பார்க்கிறான். அதனுள் கழிவு நீர் வெளியேற்றிகள் மட்டுமே இயங்குவதாகச் சொல்லும் டெபுடி வார்டன், அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார்.

அன்று இரவு, மருத்துவர் ஜான் காலியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் டெட்டியும் சக்கும்.

அங்கு இசைக்கப்படும் சேம்பர் இசை – ஜெர்மானிய இசை – மாஹ்லருடையது – அதைக் கேட்கையில், டெட்டிக்குத் தனது உலகப்போர் நினைவுகள் மீண்டு எழுகின்றன. அங்கு இருக்கும் இன்னொரு மருத்துவர், ஜெரமையா நையரிங், டெட்டிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் பேசும் தொனி, டெட்டிக்குப் பிடிக்காததால், அவருடைய பாணியிலேயே அவருக்குப் பதிலடி கொடுக்கிறான் டெட்டி.

அன்று இரவு, தூங்குகையில், டெட்டிக்கு ஒரு கனவு. தனது மனைவி டோலோரஸ், தன்னிடம், தனது வீட்டில் பேசுவதாக. ரேச்சல் இன்னமும் இங்குதான் இருக்கிறாள் என்று அவள் சொல்கிறாள். அவர்களைச் சுற்றி, சாம்பல் மழை பொழியத் துவங்குகிறது. டோலோரஸின் வயிற்றிலிருந்து ரத்தம் வழியத் துவங்குகிறது. சாம்பலாக மாறி, டெட்டியின் கைகளிலிருந்து உதிர்ந்து போகிறாள் டோலோரஸ்.

ஒவ்வொரு மனநோயாளியையும் விசாரிக்கிறார்கள் டெட்டியும் சக்கும். அவர்கள் விசாரிக்கும் அத்தனை நோயாளிகளும், கொடூரமான கொலைகள் புரிந்தவர்கள். ஒவ்வொருவரிடமும், காணாமல் போன ரேச்சல் சொலாண்டோவைப் பற்றிய கேள்விகள். அதற்குப் பல வகையான பதில்கள்.

மிஸஸ் கேர்ன்ஸ் என்ற மாதுவிடம் டெட்டி விசாரிக்கையில், ரகசியமாக அவள் எழுதிக்கொடுக்கும் குறிப்பில், ‘ஓடு’ என்ற ஒரே வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளியிடமும், தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான ஆண்ட்ரூ லாடிஸைத் தெரியுமா என்று டெட்டி கேட்கிறான். லாடிஸ் இந்தத் தீவில் தான் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதைப் பற்றித் தன்னிடம், இந்தத் தீவின் முன்னாள் கைதி ஒருவன் – பெயர் ’ஜார்ஜ் நாய்ஸ்’ – சொன்னதாகவும், அதன்பிறகு லாடிஸ் மாயமாக மறைந்துபோய் விட்டதாகவும் சொல்லும் டெட்டி, அவனைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடித்து, இந்தத் தீவில் நடக்கும் சித்ரவதைகளை வெளியுலகுக்குச் சொல்லுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகவும், உண்மையைப் போட்டு உடைக்கிறான்.

அமெரிக்க அரசு, மனநோயாளிகளிடம் பலவிதமான பரிசோதனைகளை நடத்துகிறது. இதனால், அவர்கள் இறந்து போகிறார்கள். ஆண்ட்ரூ லாடிஸ் காணாமல் போனதால், அவன் கொல்லப்பட்டிருக்கலாம் – அல்லது வார்ட் சி யில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்பது டெட்டியின் யூகம்.

அன்று இரவு, தீவெங்கும் புயல் அடிக்கத் தொடங்குகிறது. அங்கு மருத்துவர்கள் கலந்துகொள்ளும் ஒரு மீட்டிங்கில் பேசப்படும் விஷயங்களிலிருந்து, அந்தத் தீவில், வார்ட் சி யில் மொத்தம் 24 நோயாளிகள் இருப்பதாகவும், மற்ற வார்டுகளில் 42 பேர் இருப்பதாகவும் தெரிந்து கொள்ளும் டெட்டிக்கு, ரேச்சலின் அறையில் காணப்பட்ட குறிப்பு புரிய ஆரம்பிக்கிறது. 67வது நோயாளி யார்? அது, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்ட்ரூ லாடிஸ் தான் என்று டெட்டி தெரிந்து கொள்கிறான்.

ரேச்சல் சொலாண்டோ திரும்பக் கிடைத்துவிட்டாள். என்று மருத்துவர் ஜான் காலி சொல்லி., அவனை அவளிடம் அழைத்துப் போகிறார்.

அன்று இரவு, மறுபடி கனவு காண்கிறான் டெட்டி. கனவில், ரேச்சல் வருகிறாள். அவள் கொன்ற மூன்று குழந்தைகள், டெட்டியின் காலடியில் கிடக்கின்றன. ஒவ்வொரு குழந்தையாக எடுத்துச் சென்று, ஆற்றில் மூழ்கடிக்கச்சொல்கிறாள் ரேச்சல். குழந்தைகளை எடுத்துச் செல்லும் டெட்டியிடம், ‘ஏன் எங்களைக் காப்பாற்றவில்லை?’ என்று ஒரு குழந்தை கேட்கிறது. தன்னால் சரியான தருணத்தில் அங்கு வர இயலவில்லை என்று அழுதுகொண்டே பதிலளிக்கும் டெட்டி, ஒவ்வொரு குழந்தையாக மூழ்கடிக்கிறான். கனவு கலைகிறது.

அடுத்த நாள் அடிக்கும் புயலில், சிறையின் அத்தனை இயந்திரப் பூட்டுகளும் செயலிழக்க, வார்ட் சி க்குள் செல்ல டெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

தனது மனைவியின் இறப்புக்குக் காரணமான ஆண்ட்ரூ லாடிஸ், வார்ட் சி யின் உள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கிறானா என்று தெரிந்து கொள்ள அருமையான சந்தர்ப்பம் டெட்டிக்கு.

மெல்ல மெல்ல வார்ட் சி யின் இருளில் நுழைகிறார்கள் டெட்டியும் சக்கும்…..

அங்கே . . . . . . .

இதற்குப் பின் நடக்கும் சம்பவங்களைக் குறித்து அறிந்துகொள்ள, படத்தைப் பாருங்கள். இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள் அனைத்துமே ட்ரெய்லர் தான். படம் இனி தான் தொடங்குகிறது.

பாகம் 2

இதுவரை, பல த்ரில்லர்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு வகை. ஆனால், ஷட்டர் ஐலாண்டின் பக்கலில் கூட, மற்ற த்ரில்லர்கள் வர முடியாது என்று தோன்றுகிறது. அப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் இது. ஒவ்வொரு காட்சியிலும், படத்தின் உள்ளே நம்மை இழுக்கும் பல காரணிகள் உள்ளன. கதையில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்காமல், அந்தக் காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.

1. டெட்டி – யுஎஸ் மார்ஷல். தனது கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மறக்க இயலாதவன். தனது இறந்து போன மனைவியின் நினைவுகள், அவனது மனதில் எப்பொழுதும் எழுகின்றன. கனவுகளில், அவளது இறப்பைப் பற்றி அடிக்கடி உணர்ந்து, அதனாலேயே நிம்மதி இழக்கிறான்.

2. சக் – டெட்டியின் நம்பிக்கையான வலது கரம். அவனது சைட் கிக். டெட்டி எங்கு சென்றாலும் அவனை நிழல் போலத் தொடரும் மனிதன். டெட்டி நிதானமிழக்கும் சில தருணங்களில், அவனை சாந்தப்படுத்தும் நண்பன்.

3. மருத்துவர் ஜான் காலி – உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு இரும்பு மனிதர். தீவில் நடக்கும் விஷயங்களை, டெட்டியிடம் வெளிப்படையாகச் சொல்லாமல், அவனது மூவ்களை கவனித்துக் கொண்டிருக்கும் நபர்.

4. ரேச்சல் சொலாண்டோ – தொலைந்து போன பெண். படத்தின் மிக முக்கிய அம்சம். கதையின் முடிச்சுகள் அவிழ்வதற்கான முழுமுதல் காரணி. தனது மூன்று குழந்தைகளை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்றவள்.

5. டோலோரஸ் – டெட்டின் மனைவி. தீவிபத்தில் இறந்தவள். இவளது இறப்பிற்குக் காரணம், ஆண்ட்ரூ லாடிஸ் என்ற ஒரு சைக்கோ.

இந்தக் கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதம், நம்மை முழுமையாக இப்படத்தில் ஆழ்த்தி விடுகிறது. எங்கள் இருவரைப் பொறுத்த வரை, படம் முடிந்த பிறகும், படத்தின் பாதிப்பு எங்களை விட்டு அகலவில்லை. இன்றும் அதனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அதேபோல், படத்தின் இன்னொரு மிக முக்கிய அம்சம், இப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் ‘பேக் ப்ரொஜக்‌ஷன்’ காட்சிகள். படத்தின் கதை, இந்தக் காட்சிகளின் மூலமாகவே புலப்படுகிறது.

சரி. இப்பொழுது, நமது கட்டுரையின் Prologueல் பார்த்த ஒரு விஷயத்துக்கு வருவோம்.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் – இரவு 12 மணி. எதிரே LCDல் ஷட்டர் ஐலாண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. எனது நண்பரான நமது சாருவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். இப்படத்தைப் பற்றி.

இதில் இன்னொரு விஷயம் என்னவெனில், அவர் இப்படத்தை சென்னையில் சென்ற மாதம் பார்த்துவிட்டார். அவருக்கு இப்படம் மிகவும் பிடித்தது. என்னையும் அவசியம் இப்படம் பார்க்கச் சொன்னார். அதன்பின், இன்செப்ஷன் பார்த்தார்.

அவருக்கு நான் தட்டிவிட்ட குறுஞ்செய்தியில், எனக்கு இன்செப்ஷன் அளித்த உணர்வினை விட, ஷட்டர் ஐலாண்ட் அளித்த உணர்வு மறக்க இயலாதது என்று குறிப்பிட்டிருந்தேன்.

பதிலாக, கூப்பிட்டே விட்டார் சாரு. அவருடன் இந்த இரவில், இன்செப்ஷன் மற்றும் ஷட்டர் ஐலாண்ட் பற்றிப் பேசியது, மறக்க இயலாத ஒரு உரையாடலாக மாறிவிட்டது.

அவரது கருத்தை அப்படியே இங்கு தர முயற்சி செய்கிறேன்.

’ஷட்டர் ஐலாண்ட் மற்றும் இன்செப்ஷன் ஆகிய இரண்டு படங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவெனில்: ஷட்டர் ஐலாண்ட், சமூகத்தில் நம்மிடையே நடக்கக்கூடிய விஷயங்களைத் தனது கருவாகக் கொண்டுள்ளது. அது, முற்றிலும் ஒரு Sociology based subject. சமூகத்தில் நிகழக்கூடிய இதைப் போன்ற எந்த நிகழ்ச்சியாயினும், ஒரு நுண்ணுணர்வு கொண்ட மனிதன், அதை நமக்கு ஒரு கலைப்படைப்பாகத் தந்துவிட இயலும். அது ஒரு நாவலாகவோ, அல்லது க்ராஃபிக் நாவலாகவோ, அல்லது ஒரு படமாகவோ வந்தது, அதையே குறிக்கிறது. ஆகவே, ஷட்டர் ஐலாண்ட், ஒரு சமூக நிகழ்வின் கலையாக்கத்தைக் குறிக்கிறது.

ஆனால், இன்செப்ஷனின் கதையே வேறு. அது எடுத்துக் கொண்ட கருவானது, ஒரு extraordinary விஷயம். இன்செப்ஷன், இலக்கிய மேதைகளில் ஒருவரான போர்ஹேஸின் கதைகளில் வரும் puzzle, maze ஆகியவற்றின் திரை வடிவம். இன்செப்ஷனில் வரும் கதையைப் போன்று ஒரு விஷயத்தை, ஒரு இயக்குநரால் படமாக அளிக்க இயல்வது, மிக மிகக் கடினம். படமாக அல்ல.. அதனை யோசித்து, எழுதுவது கூட அசாத்தியம். அப்படி ஒரு அற்புதம் அது.

அவர் சொன்ன வாக்கியம் – Inception is not humanly possible !

இன்செப்ஷனைப் பற்றி அவரது கருத்தை எழுதும்போது, இன்னொரு விஷயம் நினைவு வருகிறது. படத்தைப் பார்த்ததும், என்னிடம் பேசிய சாரு, க்ரிஸ்டோஃபர் நோலனுக்கு, உலக இலக்கியப் பரிச்சயம் கட்டாயம் உண்டு என்றும், கனவுகள், அவற்றின் குணங்கள் பற்றிய இலக்கியவாதிகளின் படைப்புகளை (உதா: கார்ஸியா மார்க்கேஸ் மற்றும் போர்ஹேஸின் கதைகள்) அவர் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். இத்தனைக்கும் அவருக்குக் க்ரிஸ்டோஃபர் நோலனின் background பற்றி அந்த நேரத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நோலன் (நிஜமாகவே)கல்லூரியில் படித்தது, ஆங்கில இலக்கியம் !

Epilogue

ஷட்டர் ஐலாண்ட், நமது நண்பர்கள் பலரும் பார்த்தாயிற்று என்று எனக்குத் தெரியும். குறிப்பாக, பாலா மற்றும் காதலரின் விமர்சனங்கள், ஃபெப்ருவரியிலேயே வந்து விட்டன. ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்போனால், படத்தை சனியன்று பார்த்துவிட்டு, எனக்குத் தோன்றிய கருத்து என்னவெனில்: இப்படத்தை நான் மறக்கவே போவதில்லை என்பது தான். எனது பெர்சனல் ஒபீனியன் – இன்செப்ஷனை நான் மறக்கக்கூடும். அதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், ஷட்டர் ஐலாண்ட், எனது நினைவுகளில் என்றும் நிழலாடக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்பதே. இப்படம் எனக்கு அளித்த ஒரு effect, இதுவரை நான் எந்த மொழியில் பார்த்த எந்தப்படமும் அளித்ததில்லை (Including Shawshank redemption).

ஷட்டர் ஐலாண்ட் படத்தின் ட்ரெய்லர் இங்கே

பி.கு – சாருவின் இந்தப் புகைப்படத்தை எடுத்தது – அடியேன் ;-).

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

54 Comments

 1. //சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இரவு, தனது நீண்ட கரும் இறக்கைகளால் பெங்களூரை மெல்ல மெல்லப் போர்த்தி மூடிக்கொண்டிருந்தது.
  //
  இலக்கியம்.. இலக்கியம் 🙂

  Reply
 2. //திடும். திடும். திடும்.//

  திகிலூட்டறாங்களாமா.. சீப்பு சீப்பா வருது 🙂

  Reply
 3. மீ த செகண்டு…

  இந்தியாவுல, மீ த ஃபர்ஸ்டு.. :))

  நான் தூங்கப்போறேன்… காலையில மொத வேலையா படிச்சுடறேன்… பாய்..

  Reply
 4. நல்ல விமர்சனம் தேள். இது வரைக்கும் இந்த படத்த பாக்கற சான்ஸ் கிடைக்கல. பாத்துடறேன் கண்டிப்பா..

  Reply
 5. இன்னும் பாக்கலைங்க தேள்… உங்களோட பாகம் இரண்ட மட்டும் படிச்சேன்… இந்த படத்த இந்த வாரம் தான் டவுன்லோட் பண்ணேன்… சீக்கிரம் பாக்குறேன் 🙂

  Reply
 6. பாஸ்.. Inception க்கு முன்னாடியே பார்த்துட்ட‌ன். நான் “புளூ ரேயில்” பாத்த‌ முத‌ல் ப‌ட‌ம் இது….ஒவ்வொரு காட்சியும் ம‌ன‌தில் அப்பிடியே ப‌திஞ்சு இருக்கு..முக்கிய‌மா அந்த‌ ம‌ழை சீன்..ஒரு ம‌ழை சீன் பார்த்து ப‌ய‌ந்த‌ ப‌ட‌ம்னா இதுதான்( நைட்ல‌ பார்த்த‌து காதுல‌ இய‌ர் போன் மாட்டிகிட்டு).. டிக்காப்பிரியோட‌ ந‌டிப்ப‌ப‌த்தி ஒன்னுமே சொல்லிலீயே நீங்க‌..!!ம‌த்த‌ப்ப‌டி ப‌ட‌ம் உண்மையிலேயே சூப்ப‌ர் த்ரில்ல‌ர்..!

  Reply
 7. வழக்கமாக நாங்கள் இருவரும் படம் பார்க்கும் முறை எப்படியிருக்கும் என்றால்:

  ஹோம் தியேட்டரில் படத்தைப் போட்டவுடன், அத்தனை ஜன்னல்களையும் சாத்தி, ஒரு இருண்ட எஃபக்டை உருவாக்கி, அதன்பின் சவுண்டைக் கூட்டி, டோட்டலாக ஒரு தியேட்டர் எஃபக்டில் படம் ஓடும். அது அழுகைப்படமாக இருந்தாலும் சரி, காமெடியாக இருந்தாலும் சரி. இதுதான் வழக்கம்.//

  இதுதான் நம்ம டேஸ்ட்டும்…

  Reply
 8. நானும் இந்த படத்தை பார்க்க நினைத்தேன் ஆனால் முடியவில்லை …Inception இனிமேல் தான் போய் பார்க்கணும்.

  இந்த படத்தோட டிவிடி வந்துருச்சா ???? ..நான் இன்னும் 2009 யில் வாங்கின டிவிடி மற்றும் புத்தகங்களையே இன்னும் வாசித்தும் பார்த்தும் முடிக்கவில்லை…. இதை வாங்கி நான் எப்போ பார்ப்பது ….ம்ம்ம்ம்

  (நான் எப்பொழுதும் இரவு நேரங்களில் தான் படம் பார்பேன்…..அதனால always dark effect தான்)

  Reply
 9. இப்போதைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  பின்னர் விரிவான கமென்ட்டுடன், மீ த பேக்.

  Reply
 10. இந்த படம் எப்பிடியோ மிஸ் ஆயிருச்சு. அடுத்து படம் பாக்கும்போது எனக்கு குருஞ்செய்தி அனுப்புங்க.நான் கூப்பிடறேன் உங்கள..(அப்பிடியே எம்பட போட்டோல்லாம் போட்டு என்ர கருத்தும் போடுவீங்க!! சொல்லவேண்டியது இல்ல..தேளு நல்லவரு….மெய்யாலுமேபா)

  Reply
 11. அப்புரம் அந்த படம் பாக்குற முறையில பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வந்த பகுதிலாம் மிஸ்ஸிங்.அடுத்த பதிவுல எதிர்பாக்குறோம்.

  Reply
 12. அப்பிடியே படத்தின் இடையே ஓடி ஓடி போய் குளிர்சாதனப் பெட்டிய திறந்து ஏதோ சாப்புடுவீகளே….அதுவும் விட்டுப் போச்சு 🙂

  Reply
 13. ஒரு முக்கியமான விசயம்.தயவுசெஞ்சு ‘கீதப்பிரியன்’,’உண்மைத்தமிழன்’ பழக்கத்தெல்லாம் கட் பண்ணிருங்க.பாருங்க இவ்ளோ பெரிய கட்டுரை. கைல டூத்பிரஸ வெச்சிக்கினு படிக்கிறேன் படிக்கிறேன்.நீண்டுக்கினே போவுது.ஓகே.மீ தி எஸ்கேப் 🙂

  Reply
 14. சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா. ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சுட்டே இருந்தேன். உங்க விமர்சனம் படிச்சதும் உடனே பார்க்கணும்னு ஆவலா இருக்கு. இன்னிக்கே டி.வி.டி வாங்கிடுறேன்.

  நீங்கள் படம் பார்க்கும் முறை பற்றி விளக்கியிருந்தது சிறப்பு. எனது ரசனையும் அதுவே.

  Reply
 15. அருமையா எழுதியிருக்கீங்க..

  Reply
 16. நண்பா,அருமை,அருமை,
  என்ன படம்.என்ன நடிப்பு,என்னா இயக்கம்,முக்கியமா அந்த அமெரிக்கன் ட்ரூப் கான்செண்ட்ரேஷன் கேமபை காலி செய்யும் அந்த ரியல் சம்பவம் முதுகில் ஐஸ் சொருகும்,அப்படி ஒரு தத்ரூபம்,மேலும் எமிலி மார்டைமரின் நடிப்பு,குறிப்பிட்டு சொல்லவேண்டும்,அந்த குழந்தைகளை கொலைசெய்துவிட்டு அழும் காட்சிகள் எல்லாம் செம டீடெய்ல்.நல்ல் த்ரில்லர்.அருமையான படம்.வசனம் புரிந்து பார்த்தால் இப்படம் பல கதை சொல்லும்.ஸ்கார்சசிக்கு இப்படம் மணிமகுடம்,வேறென்ன சொல்ல..பென்கிங்ஸ்லியின் நடிப்பு வீராப்பாய் இருந்ததாலோ,அல்லது டைகார்ப்பியோமீதான ஆர்வத்தாலோ எனக்கு அந்த ஆளை அடிக்கனும் போல் இருந்தது உண்மை.ஸ்கார்சஸி நிறைய படம் இதுபோல செய்யணும்,நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்கட்டும்.
  இதையும் பார்க்க.
  http://en.wikipedia.org/wiki/Dachau_massacre

  லேட்டா வந்தாலும் லேட்டஸ்டு விமர்சனம்.

  Reply
 17. சூப்பரா எழுதியிருக்கீங்க ராஜேஷ்… நல்ல படம்…வெளிவந்தபோதே பார்த்தாச்சு, என்ன கடைசி காட்சிதான் பார்த்தவுடன் எனக்கு புரிய சில நிமிடங்கள் ஆனது 🙂
  – மச்சான்ஸ்

  Reply
 18. இரண்டு பாகமாய் தொகுத்த விதமும் அருமை.
  உண்மையில் பதிவு நீளமாகிறது என்று சொல்லவேண்டிய விஷயங்களை எழுதுதாம் விடமுடியாதுல்ல,

  Reply
 19. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க.
  எவ்வளவு பேர் எழுதியிருந்தா என்ன ? ஒவ்வொரு படமும் ஒவ்வொருவரின் பார்வையில் வித்தியாசமானதே. நானெல்லாம் காட்ஃபாதர் vs நாயகன்னு 2 மாசத்துக்கு முன்னாடி பதிவு போட்டேன் :).

  நம்ம ஆளுங்க.. நடிப்பு.. நடிப்புன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த லியானோ..யோ.. கலக்குறான் மனுஷன். டைட்டானிக் கோட பையன் காலின்னு எவ்வளவு பேர் நினைச்சாங்க. எல்லாரையும் பிரம்மிப்பா பார்க்க வைக்கிறான்.

  Reply
 20. நண்பரே,

  இன்ஷெப்ஷன் டிகாப்ரியோவா அல்லது ஷட்டர் ஐலண்ட் டிகாப்ரியோவா என்று கேட்டால் என் விடை ஷட்டர் ஐலண்டிற்குதான். அற்புதமான இயக்கம், அட்டகாசமான நடிப்பு என அது ஒரு அனுபவம்.

  கதையை கிராபிக் நாவல் வடிவில் படித்துவிட்டதால் கதையின் முடிவில் நாவல் தந்த பாதிப்பை படத்தில் பெற முடியவில்லை. [முடிவும் படத்தில் சிறிது மாற்றம் பெற்றிருக்கும்]

  நல்ல சினிமா என்பது ஒரு ரசிகனிற்கு தர வேண்டிய உணர்வுகளை இன்ஷெப்ஷனும் சரி ஷட்டர் ஐலண்டும் சரி தாராளமாகவே வழங்கியிருக்கின்றன.

  வழமைபோலவே சிறப்பானதொரு பதிவு.

  [மனைவியுடன் திகில் படம் பார்க்கும் துணிச்சல் உங்களை விட்டால் யாரிற்கு வரும் :))]

  Reply
 21. //நம்மெல்லோருக்கும் மிகப் பரிச்சயமான ஒருவரின் கருத்தும் உண்டு//

  இது யாருன்னு கடைசி வரைக்கும் சொல்லாமலேயே விட்டுட்டீங்களே தல?!

  Reply
 22. //க்ரிஸ்டோஃபர் நோலனுக்கு, உலக இலக்கியப் பரிச்சயம் கட்டாயம் உண்டு என்றும், கனவுகள், அவற்றின் குணங்கள் பற்றிய இலக்கியவாதிகளின் படைப்புகளை (உதா: கார்ஸியா மார்க்கேஸ் மற்றும் போர்ஹேஸின் கதைகள்) அவர் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்றும் சொன்னார் //

  தல… அவரு அப்படியா சொன்னாரு?

  எனக்கென்னமோ… கேப்ரியல் ரமீரஸ் மற்றும் நூரி ஹெஸ்லர் மாதிரி தெரிஞ்சது!!!

  Reply
 23. //கேப்ரியல் ரமீரஸ் மற்றும் நூரி ஹெஸ்லர் //

  இப்படியெல்லாம் பேரு போட்டு பயமுறுத்துறானே… ரொம்பப் படிப்பானோன்னு நெனச்சிக்காதீங்க தல.

  இவங்க.. நம்ம கூட நம்மள மாதிரியே ஆஃபீஸில் வேலை செய்யறமாதிரி நடிச்சிகிட்டு இருக்கறவங்க. சும்மா!! 🙂 🙂

  Reply
 24. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  🙂

  Reply
 25. யாருப்பா இந்த சுவேதா.. கொசு தொல்லை தாங்க முடியலப்பா எங்க போனாலும் தொரத்திட்டு வருது 🙂

  Reply
 26. Honestly not sure why you were so inspired by this movie!Not a bad movie but definetly not the best for Scorcesse or for leonardo.A very disappointing ending which has been already repeated in tonnes of movies before.

  Reply
 27. @ஹாலிவுட் பாலா
  தல நீங்களும் ஆங்கில இலக்கியம் இளங்கலை தானே?
  என்னமா?பேரையெல்லாம் அடிச்சி விடுறீங்க.நீங்க ஆங்கிலத்தில் பிஸ்து காட்டும் போதே நினைச்சேன்,உங்களுக்கு உலக இலக்கியப் பரிச்சயம் கட்டாயம் உண்டுன்னுட்டு.தல இது கலாசல் இல்ல,நிஜம் தான்,ஆங்கில இலக்கிய செம்மல் பாலா வாழ்க வாழ்க

  Reply
 28. //வேணும்னா.. ஃபர்ஸ்ட் நேம் மட்டும் சொல்லுறேன்.

  ஹில்டா//
  தல நான் ஒரு பேரு சொல்றேன் டில்டா ஸ்விண்டன்

  Reply
 29. shutter island – பார்க்கணும் நண்பா.. ”the presige”பார்த்திருக்கீங்களா? அதப் பத்தி எழுதுங்க.. நோலனோட மாஸ்டர்பீச்னு சொல்லலாம்..:-))))

  Reply
 30. இந்தப்படம் மார்ட்டினின் மற்றொரு மாஸ்டர்பீஸ்.கடைசிக்காட்சி எல்லா கணிப்புகளையும் தகர்த்து விடுகிறது.சிக்கலான படத்துக்கு சீரான விமர்சனம்.தேளின் கொடுக்குக்கு வேலை இல்லாமல் செய்ததே மார்ட்டின் ஜாலம்.

  Reply
 31. நண்பரே….

  நீங்கள் விமர்சனம் எழுதியுள்ள முறையிலேயே படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எஃபெக்டை தந்து விட்டீர்கள்….

  நிச்சயமாக பார்க்க வேண்டும்…

  Reply
 32. இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் எப்புடி பாக்காம இருக்குறது

  டவுன்லோட் ஸ்டார்ட் பண்ணியாச்சு 🙂

  .

  Reply
 33. நான் கருந்தேளின் விமர்சனங்களை படித்து விட்டு படங்களை பார்க்கத் துவங்கியுள்ளேன். டொரண்ட் மூலம் பதிவிறக்க முகவரியையும் பதிவில் இணைக்கலாம் என கருதுகிறேன். பின்றீங்க. இப்படி ஒரு உலகை நான் எவ்வாறு இது நாள் வரை தவற விட்டேன் என புரியவில்லை. இப்போது அனுபவிக்கிறேன். நன்றிகள் பல.

  Reply
 34. கட்டாயம் பாக்கனும் என்னோட பாக்கவேண்டிய படங்கள் லிஸ்ட்ல இந்தப்படமும் இருந்தது…இப்ப உங்க விமர்சனத்தைப் படிச்சிட்டு…அதுல முதல் இடத்துக்கு வந்திடுச்சி இந்தப் படம்..சீக்கிரம் பாத்திடறேன்…

  http://rameshspot.blogspot.com/

  Reply
 35. இதோ download போட்டாச்சு, பார்த்துட்டு வந்து பேசறேன்

  /என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா?/

  அடடா…இது கூட ஒரு வரலாற்று சம்பவமாயிடுச்சா இப்போ உங்க ஊர்ல?

  Reply
 36. இப்பதிவில் பின்னூட்டம் இட்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றி. கடந்த சில நாட்களாக வேலை கொஞ்சம் கடுமையாக இருப்பதால், இந்தப் பக்கமே வர இயலவில்லை. தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். எனவே, மறுபடி ஒரு நன்றியைக் கூறி, எஸ்கேப் ஆகிறேன். மறுபடி சந்திப்போம்.

  Reply
 37. நண்பர் கருந்தேள் கண்ணாயிரத்திற்கு,

  shutter Island பற்றிய உங்கள் பதிவை நான் பாரிசில் ஆணி புடுங்கும் இடைவெளியில் படித்தேன். அங்கிருந்து திரும்பியவுடன் டவுன்லோட் செய்து பார்க்க நினைத்திருந்தேன். பாரிசிலிருந்து ப்ருசெல்ஸ் வந்து விமானத்தை தவறவிட்டுத் தெருவில் நின்றபோதுகூட இந்தப் படம்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் ஷெரட்டன் எனும் மொக்கை ஹோட்டலில் கழித்து விட்டு, ப்ருசெல்ஸ் டு அபுதாபி வரும் வழியில் பிளைட் டிவி-ல் தேடியபோது சிக்கிய படம் “shutter Island”. வேறென்ன சொல்வது – ஆச்சர்யம். நடுவானில் ஒரு பக்கா உளவியல் திரில்லர் படத்தை ஹெட்போனுடன் பார்ப்பது ஒரு மகத்தான அனுபவம். படம் முடிந்த போது என் இரண்டுநாட்கள் எனக்கு இருந்த கடுப்பும் இல்லாமல் போயிருந்தது. அருமையான படம்.

  கூட்டமாக சேர்ந்துகொண்டு எல்லோரும் திரும்பத் திரும்ப ஒரு விசயத்தைச் சொன்னால் அது உண்மை ஆகிவிடும். ஆனால் சொல்லப்படுவதே நம்மை பற்றித்தான் என்று உணரும் பொது வரும் அதிர்ச்சி —— தாங்கவே முடியாதது. அதுவும் கடைசியில் வரும் அந்த வசனம் ஒட்டுமொத்தக் கதையையும் சொல்லிவிடும் – மிருகமாய் வாழ்வதா அல்லது மனிதனாய் சாவதா? எது நல்லது என்று டிகாப்ரியோ கேட்பது நம்மை பார்த்துதான் இல்லையா?

  இன்னொரு முக்கியமான விஷயம் அதில் வரும் உளவியல் சார்ந்த பேச்சுக்கள் அனைத்தும் – அந்த சோதனை உட்பட எல்லாம் நடத்தப் படுபவை. lobotomy – ஐ விடக் கொடுமையான சில பரிசோதனைகள் இருக்கின்றன. தூக்கு தண்டனை ஒழிக்கப் பட்ட நாடுகளில் அந்தக் கைதிகளை வைத்து நடத்தப் படும் உளவியல் ஆராய்ச்சிகளும் – சிகிச்சைகளும் (???????????) மரணத்தை விடக் கொடுமையானவை.

  alive படம் பார்த்திருக்கிறீர்களா? முடிந்தால் பார்க்கவும்….. 🙂

  Reply
 38. நண்பர் கருந்தேள் கண்ணாயிரத்திற்கு,

  shutter Island பற்றிய உங்கள் பதிவை நான் பாரிசில் ஆணி புடுங்கும் இடைவெளியில் படித்தேன். அங்கிருந்து திரும்பியவுடன் டவுன்லோட் செய்து பார்க்க நினைத்திருந்தேன். பாரிசிலிருந்து ப்ருசெல்ஸ் வந்து விமானத்தை தவறவிட்டுத் தெருவில் நின்றபோதுகூட இந்தப் படம்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் ஷெரட்டன் எனும் மொக்கை ஹோட்டலில் கழித்து விட்டு, ப்ருசெல்ஸ் டு அபுதாபி வரும் வழியில் பிளைட் டிவி-ல் தேடியபோது சிக்கிய படம் “shutter Island”. வேறென்ன சொல்வது – ஆச்சர்யம். நடுவானில் ஒரு பக்கா உளவியல் திரில்லர் படத்தை ஹெட்போனுடன் பார்ப்பது ஒரு மகத்தான அனுபவம். படம் முடிந்த போது என் இரண்டுநாட்கள் எனக்கு இருந்த கடுப்பும் இல்லாமல் போயிருந்தது. அருமையான படம்.

  கூட்டமாக சேர்ந்துகொண்டு எல்லோரும் திரும்பத் திரும்ப ஒரு விசயத்தைச் சொன்னால் அது உண்மை ஆகிவிடும். ஆனால் சொல்லப்படுவதே நம்மை பற்றித்தான் என்று உணரும் பொது வரும் அதிர்ச்சி —— தாங்கவே முடியாதது. அதுவும் கடைசியில் வரும் அந்த வசனம் ஒட்டுமொத்தக் கதையையும் சொல்லிவிடும் – மிருகமாய் வாழ்வதா அல்லது மனிதனாய் சாவதா? எது நல்லது என்று டிகாப்ரியோ கேட்பது நம்மை பார்த்துதான் இல்லையா?

  Reply
 39. இன்னொரு முக்கியமான விஷயம் அதில் வரும் உளவியல் சார்ந்த பேச்சுக்கள் அனைத்தும் – அந்த சோதனை உட்பட எல்லாம் நடத்தப் படுபவை. lobotomy – ஐ விடக் கொடுமையான சில பரிசோதனைகள் இருக்கின்றன. தூக்கு தண்டனை ஒழிக்கப் பட்ட நாடுகளில் அந்தக் கைதிகளை வைத்து நடத்தப் படும் உளவியல் ஆராய்ச்சிகளும் – சிகிச்சைகளும் (???????????) மரணத்தை விடக் கொடுமையானவை.

  alive படம் பார்த்திருக்கிறீர்களா? முடிந்தால் பார்க்கவும்….. 🙂

  Reply
 40. ரொம்ப நாலா பாக்கணும் நெனைக்கிற படம்… ஏனோ ஒவ்வொரு முறையும் தள்ளி போகுது! வீட்டுலே டிவிடி வேற இருக்குது… இந்த வார இறுதியிலே கண்டிப்பா பாக்கணும்!!!

  Reply
 41. I am looking for such type of informative news and i get through this blog so i am very much thankful to you for sharing such a great information.
  magento development

  Reply
 42. I would have preferred to see a few more examples that didn’t have anything to do with Nevertheless, your advice has me going back to an upcoming post on my own blog so I can “fine tune the Website Design Delhi

  Reply
 43. என் தோழர் ஒருவர் ரொம்ப நாளா சொல்லி நான் இந்த படத்த பார்த்தேன். பொதுவா நான் ஒரு படம் நல்லாஇருக்குன்னு சொன்ன அவனுக்கு பிடிக்காது அவன் நல்ல இருக்குன்னு சொன்ன எனக்கு பிடிக்காது (Exceptional caseம் உண்டு) எனக்கு ஒத்துவராது. பத்தாதுக்கு நான் விரும்பாத genre. ஆகா இந்த படமும் அப்படியே போய்டுச்சு. இந்த படம் ஆரம்பிச்சு பாதிலேயே (இன்னும் சொல்ல போன கொஞ்சம் முன்னாலேயே) இந்த படம் எப்படி முடியும்னு தெரிஞ்சிபோச்சு. It was ok.

  Reply
 44. The presentation is Excellent, I like the way.

  Reply
 45. நான் ஷட்டர் ஐலண்ட் படம் பார்த்திருக்கிறேன், ஒரு மறக்க முடியாத அனுபவம்…. படத்தின் இறுதியில் அனைத்து முடிச்சுகளையும் தெளிவாக்கியுள்ளது அருமை…

  Reply
 46. சரி! நிஜம் என்ன? டெட்டியின் மனைவியை கொன்றவர்கள் யார்?

  Reply
 47. Nizhal

  Watch Identity. It more interesting than this movie…..

  Reply
 48. எனக்கு ஒரு சிறந்த திரைப்படத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி G

  Reply

Join the conversation