கிஷோர் குமார் – சல்தே சல்தே….

by Rajesh October 16, 2010   Hindi Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

ஹிந்திப் பாடல்களுக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு, ரங்கோலி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய ஆரம்ப நாட்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அந்நாட்களில், இருந்த ஒரே தொலைக்காட்சி அதுதான் என்பதனால், தூர்தர்ஷனின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்ப்பது எங்களது வழக்கம். குறிப்பாக ரங்கோலி, சித்ரஹார், சித்ரமாலா ஆகியவை. என்னவென்றே புரியாமல் பார்க்கத்தொடங்கிய நாட்கள் அவை. அப்படிப் பார்க்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கி, ஒரு அளவு குன்ஸாகப் புரிய ஆரம்பித்தது ஹிந்தி. அதன்பின், சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஹிந்திப்படத்தைப் பார்க்கத் துவங்கினேன். இதனால், ஹிந்திப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின் பல சேனல்கள் வந்தபின்னரும், தொலைக்காட்சியில் ஹிந்திப் பாடல்கள்.. அதுவும் பழைய பாடல்கள் என்றால், பார்க்க அமர்ந்துவிடுவேன். அப்படி எனது மனம் கவர்ந்த ஒரு சில பாடல்களைப் பற்றியதே இப்பதிவு. இப்பதிவுக்கு இன்னொரு காரணம், பத்து வருடங்கள் கழித்து ஒரு பாடலைக் கேட்க நேர்ந்ததே. அப்பாடல், இதோ – அங்கியோன்கே ஜரோகோ ஸே.

ஆபாஸ் குமார் கங்குலி – இது நம் சௌரவ் கங்குலியின் உறவுக்காரர் இல்லை. கண்ட்வா என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்து, பிரம்மாண்டமான புகழைச் சம்பாதித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்துபோன கிஷோர் குமாரே அவர். எனக்கு மிகமிகப் பிடித்த வெகுசில மனிதர்களில் ஒருவர்.

ஐம்பதுகளில், ஹீரோ. பாடகர். அறுபதுகளில், தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா.. பாடலாசிரியர்.. நடிகர்.. இத்தனை விஷயங்களையும் ஜாலியாகச் செய்த மனிதர். இவ்வளவுக்கும் மேல், மனிதருக்கு ஒன்றின் பின் ஒன்றாக நான்கு திருமணங்கள் வேறு. எக்ஸெண்ட்ரிக் என்று ம் பெயரெடுத்தவர். ’கிஷோர் குமார் ஜாக்கிரதை’ என்று தனது வீட்டின் வாயிலில் எழுதி ஒட்டிவைத்தவர். அதேபோல், பணமில்லையெனில், என் வீட்டுக்கே வந்துவிடாதீர்கள் என்று ஒரு கறாரான கொள்கை வைத்திருந்தவர். ஸ்டுடியோ வரை சென்று, பணம் கொடுக்காததால் பாட மறுத்து வீடு திரும்பிய நிகழ்ச்சிகள் ஏராளம். தன் மீது கேஸ் போட்ட ஒரு தயாரிப்பாளரை, தனது வீட்டு அலமாரியில் இரண்டு மணி நேரம் பூட்டி வைத்தவர்.

இத்தனை விசித்திர குணாதிசயங்கள் இருந்தும், ஹிந்தித் திரையுலகம், கிஷோர் குமாரைத் தலையில் தூக்கி வைத்து மரியாதை செய்தது. அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டது. காரணம்………?

அவரது கணீரென்ற கம்பீரமான குரல். அந்தக் குரலுக்கு இணை என்று யோசித்தால், மலேசியா வாசுதேவனை மட்டுமே உதாரணமாகச் சொல்லலாம்.

அக்காலத்தில் ஹிந்தித் திரையுலகில், அமைதியான, மென்மையாக குரலே பின்னணிப் பாடல்களில் பிரபலமாக இருந்தது. மொஹம்மத் ரஃபி, முகேஷ், மஹேந்திர கபூர், ஹேமந்த் குமார் ஆகிய பாடகர்களே இவ்வகையில் மிகப்பிரபலமாக விளங்கிய காலகட்டம் அது. இவர்களின் திறமையில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே பின்னணிப் பாடல்களில் உச்சம் காட்டி வந்தனர்.

கிஷோர் குமாரிடம் இருந்தது, இவர்கள் யாவரிடமும் இல்லாத ஒரு கணீர்க்குரல். நாற்பதுகளில், கே. எல். ஸாய்கல் என்ற பாடகரைப் பற்றி ஹிந்திப் பாடல் விரும்பிகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஹிந்தித் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக விளங்கியவர் (நமது தியாகராஜ பாகவதரைப் போல்). தேவதாஸாக நடித்த சிலரில் ஒருவர். பிரம்மாண்டமான புகழைப் பெற்று, அகாலமாக இறந்து போனவர். இறந்ததற்குக் காரணம், மதுவில் திளைத்தது.

இந்தக் கே. எல் ஸாய்கலே, கிஷோர் குமாரின் ஆதர்சம். இவரது பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாடியே தனது குரலைக் கிஷோர் குமார் செம்மைப்படுத்தினார். இயற்கையாகவே இருந்த ஒரு கணீர்க்குரலை மேலும் மெருகூட்டி, இவர் பாடிய ஆரம்பப் பாடல்கள் பல, இன்றளவும் சூப்பர் ஹிட்டுகள். எஸ்பிபியைப் போலவே, எந்த வித இசைப்பயிற்சியும் இல்லாமல் திரையுலகுக்கு வந்தவர் இவர்.

பின்னணிப் பாடல்கள் பாடிப் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பம்பாய் வந்த கிஷோர் குமாருக்குக் கிடைத்தது, நடிக்கும் வாய்ப்புகள் (இது மலேசியா வாசுதேவனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை). இவரது மூத்த சகோதரரான அஷோக் குமார் பெற்றிருந்த புகழின் காரணமாக, கிஷோர் குமாருக்கு நடிக்கும் வாய்ப்புகள் பல வந்தன. இதன் காரணமாக, ’ஷிகாரி (1946)’ என்ற படத்தில் நடித்தார். ’ஸித்தி (ziddi) என்ற படத்தில், பின்னணிப் பாடல் ஒன்றும் பாடி, தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில், ஹிந்திப் படங்களின் மிக பிஸியான நடிகராக மாறினார் கிஷோர் குமார். அவரது படங்களில், பாடல்களையும் அவரே பாடி வந்தார். அவரது நேரமின்மை காரணமாக, ஒரு படத்தில், கிஷோர் குமாருக்கு மொஹம்மது ரஃபி பின்னணி பாடிய விஷயமும் நடந்தது. ஷராரத் (1959) என்ற அப்படத்தின் ‘அஜப் ஹை சாத் சாத் தெரி யே ஸிந்தகி’ என்ற பாடலை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.

அதே காலகட்டத்தில் கிஷோர் குமார் பாடிய பல பாடல்கள், மிகவும் அருமையாக இருக்கும். ஆஷா (1957) படத்தின் ’ஈனா மீனா டீகா’ (ஒரு ஆங்கிலப்பாடலின் ஈயடிச்சாங்காப்பி), சல்தி கா நாம் காடி (1958) படத்தின் ‘எக் லட்கி பீகி பாகி ஸி’, (நடிப்பும் அவரே), ஃபன்தூஷ் (1956) படத்தின் ‘துக்(ஹி) மன் மேரே’, பேயிங் கஸ்ட் (1957) படத்தின் ‘மானா ஜனாப்னே புகாரா நஹி(ன்)’, நௌ தோ க்யாரா (1957) படத்தின் ’ஹம் ஹெய்ன் ராஹி ப்யார் கே’, முஸாஃபிர் (1957) படத்தின் ‘முன்னா படா ப்யாரா’ (இப்படம் தான் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். இவர் ஹிந்தியில் எனக்குப் பிடித்த ஜனரஞ்சக இயக்குநர். நமது தில்லுமுல்லு, இவரது ‘கோல்மால்’ படத்தின் ரீமேக்கே ஆகும். இவர் எடுத்த ‘பவர்ச்சி’ படமே, தமிழில் ‘சமையல்காரன்’ என்ற பெயரில் வெளிவந்து, மு.க. முத்துவிற்கு ஒரு சூப்பர்ஹிட்டாக மாறியது). ஹிந்தி இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன், கிஷோர் குமாரைத் தொடர்ந்து பாட வைத்து, வாய்ப்புக்கள் கொடுத்து வந்தார். பர்மனைப் பொறுத்த வரை, கிஷோர் குமாரின் குரல், ஒரு அருட்கொடை என்றே நம்பி வந்தார். ஆகையால், தனது படங்களான ஃபன்தூஷ், பேயிங் கஸ்ட், நௌ தோ க்யாரா ஆகிய படங்களில் சில அட்டகாசமான பாடல்களைக் கிஷோருக்கு வழங்கினார்.

இவ்வளவு பிஸியாக இருந்த கிஷோர் குமார், அறுபதுகளின் துவக்கத்தில், மெல்ல மெல்ல ஹிந்திப் பட உலகால் புறக்கணிக்கப்படத் துவங்கினார். ஆரம்ப அறுபதுகளில் இருந்து, 1969 வரை, மிகச் சில பாடல்களே அவரால் பாட முடிந்தது. அக்காலகட்டத்தில், சில படங்களிலும் நடித்தார். அவரே தயாரித்து, இயக்கி நடித்த படங்களான ஜும்ரூ (1961), தூர் ககன் கி சாவோன் மேய்ன் (1964) ஆகிய படங்கள், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. எஸ். டி பர்மனின் மகனான ஆர். டி. பர்மனும், தனது தந்தையைப் போலவே, கிஷோர் குமாருக்கு வாய்ப்புகளை வழங்கினார். இதனாலேயே, படோசன் (1968) படத்தில் சில அருமையான பாடல்கள், கிஷோர் குமாருக்குக் கிடைத்தன. மட்டுமல்லாமல், படோசனில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கதாநாயகன் சுனில் தத்தின் நண்பனாக, ஒரு இசையமைப்பாளராக அவர் கலக்கியிருப்பார். இந்தப்படம், தமிழில், ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் முதலிலேயே வெளிவந்துவிட்டது. அதன் காப்பி தான் படோசன். தங்கவேலு தமிழில் நடித்த கதாபாத்திரமே கிஷோர் குமார் ஹிந்தியில் செய்தது.

’கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ பாடல் நினைவிருக்கிறதா? இதன் ஹிந்தி வடிவம், ‘மேரே சாம்னேவாலே கிட்கி மேய்ன் எக் சாந்த் கா துக்டா ரெஹ்தா ஹை’ (எனது பக்கத்து ஜன்னலில், நிலவின் ஒரு பிம்பம் வசிக்கிறது) என்ற சூப்பர்ஹிட் பாடல். இப்படத்தின் ‘கெஹ்னா ஹை’ என்ற அருமையான காதல் பாடலும் கிஷோரின் குரல் வண்ணமே.

இப்படி இருக்கையில், கிஷோர் குமாரின் வழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை, 1969ல் வந்தது. ஆராதனா என்ற படத்தை, ஷக்தி சமந்தா என்றவர் இயக்கத் தொடங்கிய காலம் அது. அப்படத்தின் இசையமைப்பாளர், எஸ்.டி .பர்மன். வழக்கப்படி, இப்படத்தில் சில பாடல்களைக் கிஷோர் குமாருக்கு அவர் கொடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த பாடல்களாக அவை மாறின. ‘மேரி சப்னோங்கி ரானி கப் ஆயேகி தூ’, ’கோரா காகஸ் தா யே மன் மேரா’, ‘ரூப் தெரா மஸ்தானா’ (பாதிக்கு மேல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்) என்ற அப்பாடல்கள், கேட்டவர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தன. இதன்மூலம், கிஷோர் குமார், ஐம்பதுகளில் தான் இருந்த இடத்தை மீண்டும் பிடித்தார்.

அதன் பின் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. வரிசையாகப் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளிவந்தன. கிஷோர் குமாரின் பாடல்கள் இருந்தாலேயே, படம் ஓடும் என்ற நிலை உருவானது.

ராஜேஷ் கன்னாவின் ஆஸ்தானப் பாடகராக மாறினார் கிஷோர் குமார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த யே ஷாம் மஸ்தானி’ (கடீ பதங் – 1970), ’ஸிந்தகி ஏக் சஃபர் ஹை சுஹானா (அந்தாஸ் – 1971) – இந்த அந்தாஸில் ராஜேஷ் கன்னா செய்த கதாபாத்திரமே, மௌன ராகத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம்; ’ச்சிங்காரி கோயி பட்கே’ (அமர் ப்ரேம் – 1970);, ’ஸிந்தகி கா சஃபர் (சஃபர் – 1971) – இப்பாடலே கிஷோரின் மிகப் பிடித்தமான பாடலும் ஆகும்; ’மேரே தில் மே ஆஜ் க்யா ஹை’ (தாக் – 1972); ‘மேரே நைனா சாவன் பாதோன்’ (மெஹ்பூபா – 1976); ‘ஹமே(ன்) தும்ஸே ப்யார் கித்னா (ஹுத்ரத் – 1980)’ ஆகிய பாடல்கள், வெறித்தனமான ஹிட்டுகள் ஆயின. இவை சில சாம்பிள்களே. இது தவிர, இன்னமும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன.

ராஜேஷ் கன்னாவுக்குப் பாடிக்கொண்டு இருக்கையிலேயே, அமிதாப் பச்சன் என்ற வளரும் நடிகருக்கும் கிஷோர் குமார் பாடினார். அமிதாப் பச்சன் சூப்பர் ஸ்டாராக ஆனபின், இவர்கள் கூட்டணி மிகப் பிரபலமடைந்தது. ‘காய்க்கே பான் பனாரஸ் வாலா’ (டான்) – தமிழில் வெத்தலையைப் போட்டேண்டி; ’அரே தீவானோ.. முஜே பெஹச்சானோ’ (டான்), ‘கே பக் குங்ரூ பாந்த் மீரா நாச்சிதி’ (நமக் ஹலால்) – தமிழில், தோட்டத்துல பாத்தி கட்டி; ’ரோதே ஹுவே ஆதே ஹைன் சப்’ (முகத்தர் கா சிகந்தர்); ’இந்தெஹா ஹோகயி இந்தஸார் கி’ (ஷராபி); ’மீத் நா மிலாரே மன் கா’ (அபிமான்); ’தில் பர் மேரே’ (சத்தே பே சத்தா); ’ஓ சாத்தி ரே’ (முகத்தர் கா சிகந்தர்); ‘ஜஹான் தேரி ஏ நஸர் ஹை’ (காலியா) – தமிழில் கூலிக்காரன் ஆகியவை ஒரு சில சேம்பிள்கள்.

இன்னமும் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவ்வப்போது பகிருகிறேன்.

கிஷோர் குமார், புகழின் உச்சியில் இருக்கையில், 1987ல், தனது 58ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

பி.கு 1 – கிஷோர் குமார், நமது ஸ்ரீதர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ ப்டத்தின் ஹிந்தி வடிவமான ‘பியார் கியே ஜா’ படத்தில், முத்துராமனின் வேடத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ படத்தில் இவர் கிஷோர் குமாரைச் சந்தித்த ரசமான நிகழ்ச்சியைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். கல்கியில் இது தொடராக வந்தபோது படித்திருக்கிறேன்.

பி.கு 2– – நல்ல பாடல்கள் எங்கிருந்தாலும் கேட்பேன் என்ற கொள்கை உடைய நண்பர்களுக்கு மட்டும் – கீழே எனக்கு மிகப்பிடித்த கிஷோர் குமாரின் பாடல்களின் பட்டியல் கொடுத்திருக்கிறேன். இப்பாடல்களைத் தரவிறக்கி, அமைதியான சூழலில், விளக்குகளை அணைத்துவிட்டு, கேளுங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.

 1. கோரா காகஸ் தா யே மன் மேரா – ஆராதனா
 2. பல் பல் தில் கே பாஸ் – ப்ளாக்மெய்ல்
 3. சல்தே சல்தே மேரே யே கீத் – சல்தே சல்தே
 4. ஓ ஷாம் குச் அஜீப் தி – (க்)ஹாமோஷி
 5. கில் தே ஹைன் குல் யஹான் – ஷர்மிலீ (தமிழில் ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே)
 6. பூலோன் கி ரங் ஸே – ப்ரேம் பூஜாரி
 7. காதா ரஹே மேரா தில் – கைட்
 8. யே ஷாம் மஸ்தானி – கடீ பதங்
 9. மேரே சாம்னே வாலி கிட்கி மேய்ன் – படோசன்
 10. ஓ சாத்தி ரே – முகத்தர் கா சிகந்தர் (இந்த சுட்டியில், அமிதாப்பின் நடிப்பைக் கவனியுங்கள்.. தான் சிறுவயதிலிருந்து காதலிக்கும் பெண், தனது அருகாமையில் இருந்தும், தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் துன்பத்தைத் தனது கண்களில் உருக்கமாகக் காட்டியிருப்பார்).

பி.கு 3 – கிஷோர் குமாரின் வெகுசில நேரடி இசை நிகழ்ச்சிகளின் இணைப்புகள் இங்கே..

http://www.youtube.com/watch?v=GVD-r4MU3Wc
http://www.youtube.com/watch?v=W74jCTBB_jo
http://www.youtube.com/watch?v=M7-hW5Uyemg
http://www.youtube.com/watch?v=ENGSNgzodSA
http://www.youtube.com/watch?v=uVBwAAeIo3g&feature=related
http://www.youtube.com/watch?v=qxdveuLmBoI&feature=related
http://www.youtube.com/watch?v=lTowqyzp2-E&feature=related

இவைகளைப் பார்த்தால், சந்திரபாபுவுக்கும் கிஷோருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

31 Comments

 1. நான் தான் 1st

  Reply
 2. பதிவ படிச்சுட்டு வரேன்

  Reply
 3. எவ்வளவு தகவல்கள், கிஷோர் குமாரை பற்றி நன்கு தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும்,

  தமிழ்ல ஏதாவது பாடி இருக்கார,கண்டிப்பாக முடிந்தவரை பாடல்களை கேட்கிறேன்

  இசையை பற்றி நமக்கு கொஞ்சம் ஆறிவு கம்மி தான்…

  Reply
 4. தமிழ்ல இவரு பாடல்கள் பாடினதில்லை மோகன்.. ஆனா ரஃபி ஒரு பாட்டு பாடிருக்காரு . . எனக்கும் இசையைப் பத்தி அறிவு கம்மி தான் 🙂

  Reply
 5. என்னது கம்மியா….. அப்ப இசையை பற்றிய ஆறிவுனா என்ன தல

  Reply
 6. அது, ரஹ்மான் மாதிரி ஆளுங்களுக்கு இருக்குறது 🙂 .. நாமெல்லாம்…

  ’இசைன்னா… இசை..!’… இசை, இந்தா அவர்ட்ட இருக்கு.. இந்தா இவர்ட்ட இருக்கு… ‘ – இந்த கேடகரி 🙂

  Reply
 7. கிஷோர் குமார் ஒரு நடிகர் என்ற தகவல்கள் எனக்கு புதுசாக இருக்கிறது தேளு. என்னிடம் கிறைய கலெக்ஷ்ன் இருக்கிறது. mohd Rafee யின் குரலில் இல்லாத ஒரு ஆண்மைத்தனமான குரல்(manly voice) கி.குமார் குரலில் உண்டு. ம.வாசுதேவன் குரலை இதனுடன் ஒப்பிடுவது எனக்கு முரண்பாடாகவே தோன்றுகிறது. ம.வாசுதேவனின் சில பாடல்களில் அவர் குரல் நன்றாக இருக்கும் அளவுகு பல பாடல்களில் அவர் பாட்டை சிதைக்கிறாரே என எனக்கு தோன்றியதுண்டு. ஆனால் அவரின் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்.

  கிஷோர் குமாரின் பாடலகளின் எனது ஆல்டைம் பேரிவட் julie படத்தில் வரும் தில் க்யா ரே….மற்றும் ராத் கலி ஏக் காப்..(புடா மில்கயா).

  மன்னா டே பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்கள்(மானச மைனே வரு)மறக்க முடியாத மலையாளப்பாடல்…

  Reply
 8. அண்ணே…இது ஞாயமே இல்ல..தூர்தர்சன்-ரங்கோலி-ஆலிப் லைலா-சந்திரகாந்தா பத்திதான் அடுத்து ஒரு பதிவு போடலாம்னு நினைச்சிருந்தேன். இப்ப நீங்க ஃபர்ஸ்ட்

  Reply
 9. எங்க வீட்டில டி.வி வந்ததே ரொம்ப லேட். தூர்தர்சன் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில போடுற ரங்கோலிதான் பல ஹிந்திப் பாடல்களை தெரிந்து கொள்ள வழிவகுத்தது. எங்கப்பா சில ஹிந்தி படங்கள் பேர்-நடிகர்கள் பேர் சொல்லுவார். அதை வெச்சே பலது தெரிச்சுகிட்டேன்.
  நீங்க சொன்ன லிஸ்ட்ல பத்துல 8 பாடல்கள் எப்பவுமே எனக்கு ரொம்ப பிடித்தமானது. நா ரொம்ப அபூர்வமான கேட்குற பழைய ஹிந்தி பாடல்களில் இவையே அதிகம் இடம் பெரும். மற்றுமொரு பிடித்த பாடல் “சூக்கர் மேரே மன் கோ” – அமிதாப் நடிச்சதுதான..என்ன படம் அது?

  Reply
 10. தல…
  maintenance போய்கிட்டுயிருந்தா தயவுசெய்து தேவைப்படாத widgetகள் சிலதை தூக்கிவிட முடியுமா..ரொம்ப நேரம் ஆகுது லோட் ஆக…

  Reply
 11. நண்பரே,

  எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத பாடகர், மற்றும் பாடல்கள். அறிமுகத்திற்கு நன்றி.

  Reply
 12. எனக்கும் கிஷோர் குமார் தான் பிடித்த பாடகர்.குறிப்பாக ராஜேஷ் கன்னா படங்களில் அவர் பாடல்கள் அற்புதமாக அமைந்தன.

  Reply
 13. வாவ்.. சூப்பர் பதிவு சார்.. மொழி புரியாவிட்டாலும் கிஷோர் குமாரின் குரலுக்காகவேண்டியே கேட்கலாம்..

  //நல்ல பாடல்கள் எங்கிருந்தாலும் கேட்பேன் என்ற கொள்கை உடைய நண்பர்களுக்கு மட்டும்//
  ம்ம்ம்ம் உணமை.. உங்கள் நிறைய பதிவை படித்தருக்கேன் எல்லாம் அருமை.. இதுவே என் முதல் பின்னூட்டம்

  Reply
 14. தேளு ஒரு அருமையான இசைப்பதிவு இது. ஒன்னியுமே தெரியாம ஷாஜி மாதிரி ஆளுங்க பண்ணுற இம்சை தாங்க முடில. ஆனா இவ்ளோ விசயங்கள உள்வாங்கி எழுதிட்டு ’எனக்கு இசை அறிவு கம்மி’ன்னு சொல்ற தன்னடக்கம்
  மெய்யாலுமே வியக்க வைக்கிறாது. வாழ்க வளமுடன்.

  Reply
 15. டுவிட்டர் போர்டுல இருக்க உங்க போட்டோ நல்லாருக்கு

  Reply
 16. கிஷோர் குமார் பற்றி இவ்வளவு தகவல்கள்! சூப்பர்ப்! நன்றி! வாழ்த்துக்கள்!

  Reply
 17. //தேளு ஒரு அருமையான இசைப்பதிவு இது. ஒன்னியுமே தெரியாம ஷாஜி மாதிரி ஆளுங்க பண்ணுற இம்சை தாங்க முடில. ஆனா இவ்ளோ விசயங்கள உள்வாங்கி எழுதிட்டு ’எனக்கு இசை அறிவு கம்மி’ன்னு சொல்ற தன்னடக்கம்
  மெய்யாலுமே வியக்க வைக்கிறாது. வாழ்க வளமுடன்.//

  ஆக மொத்தம் ஷாஜி ஒரு ஞானசூன்யம் என்று உன் வாயாலயே சொன்னயே மக்கா சூப்பர்.எப்போ ஜெயமோகன் ஒரு ஞான் சூனியம் என்று விளங்கிக்கபோறே?!!!!

  Reply
 18. நண்பா
  கிஷோர்குமார் பாடல்கள் என் ஃபேவரிட் நண்பா,இரவில் சளைக்காமல் கேட்கலாம்

  Reply
 19. Raaj,
  you took me back to my school days by posting about doordarshan days !!!! I am speechless( and sleepless too) remembering oliyum oliyum and the blessed sunday evening .

  yes, these google, facebook , orkut stuffs weren’t available then- I used to watch chitramala, chitrahaar and at times vayalum vazhvum (!!!) too.

  How one can forget serials like EN INIYA IYANDHIRA, RAYIL SNEHAM, AMMAVUKKU KALYANAM, SUHASINIS PEN ( do you remember amala as doctor and that small kid who keeps longing for urulaikizhangu poriyal) and those tuesdays dramas.

  Ignorance was a bliss those days- things were not available at finger tips- be the remote / internet. I still remember how long i was confused thinking about one puzzle- the fact that one cannot percieve sweetness in coffee after taking sweets: conversely one feel more hotter when we take hot foods after namkeens. I also used to watch turning point programme with widely open eyes.

  what a coincidence- even i got to hear an old hindi song nearly after 17 years in the form of a patients ringtone- it is ghoonghat ki aad se me song from hum hain rahi pyar hai movie- infact i added it to my profile.

  THANKS A LOT RAAJ for bringing those nostalgic moments.

  lingering with sweet memories I was remembering MUDHAL MARIYADHAI movie- a sudden flash in my mind- what kind of review i can get for that movie from you ( we might contradict- who knows even a fight can occur !!!).

  Reply
 20. @ நாஞ்சில் பிரதாப் – அவரு ஒரு டைம்ல பெரிய நடிகரா இருந்தவரு … அப்புறம் பாட்டுகள்ல concentrate பண்ண ஆரம்பிச்சிட்டாரு ..என்ன மலேசியா பத்தி இப்புடி சொல்லிபுட்டீங்க 🙂

  தில் க்யா கரே மற்றும் ராத் கலி எக் க்வாப் மே ஆயி பாட்டுகள் எனக்கும் ரொம்பப் புடிக்கும்.. சேம் பின்ச் 🙂

  மன்னாடே பத்தி குறிப்பிட மறந்துட்டேன்.. அவரையும் புடிக்கும்..

  @ கொழந்த – அது பத்தி நான் ஏற்கெனவே ஆங்கில ப்ளாக்ல போட்ருக்கேன்… இதோ – தூர்தர்ஷன் என்ற ஆளுமை படிச்சிப் பாருங்க.. ஸோ யூ த தேர்ட் 🙂

  அப்புறம், சூக்கர் மேரே மன்கோ பாட்டு, யாரானா (1981) படம்.. பச்சனோடது.. ராஜேஷ் ரோஷன் இசை..

  @ காதலரே – உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .. இதோ மேலே இருப்பவர் தான் கொழந்தை.. அவரை சீக்கிரம் ரேப் டிராகனில் அறிமுகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் 🙂

  @ bogan – உங்களுக்கும் கிஷோர் பிடித்திருப்பதைக்குறித்து மகிழ்ச்சி.. கோல்மால பாட்டு – ஆனே வாலா பல் – தமிழில் ராகங்கள் பதினாறு – விட்டுப்போய் விட்டது… நினைவூட்டியதற்கு நன்றி ..

  @ உலக சினிமா ரசிகரே – ஆஹா.. சூப்பர் ! சல்தே சல்தேவை மறக்கவே முடியாது … உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி

  @ Riyaz – நன்றி.. நானும் முதலில் கிஷோரின் குரலுக்காகவே தான் கேட்க ஆரம்பித்தேன்.. உங்கள் பின்னூட்டத்துக்கு எனது நன்றி.. அடிக்கடி வாருங்கள் இனி நண்பரே..

  @ மரா – நல்லாப் புடிச்சி ஓட்டிருக்கீங்கன்னு தெரியுது 🙂 இண்ணிக்கி நாந்தேன் மொதோ போணியா? 🙂

  @ ராஜகோபால் – ஃபோட்டோவை ஃபேஸ்புக்ல பார்த்தீங்களோ? நன்றீ தலைவா

  @ எஸ்.கே – மிக்க நன்றி.. இனி அடிக்கடி இதுபோன்ற பதிவுகள் வரும் 🙂 .. ஜாக்கிரதையாக இருங்கள் 🙂

  @ கீதப்ரியன் – ஹாஹ்ஹா… ஜெ பத்தி மரா சொல்ற அண்ணிக்கி ஆடு வெட்டிக் கொளம்பு வெச்சிருவோம்ல 🙂 .. அதேபோல், இரவில் சளைக்காமல் கேட்கலாம்.. ஆமாம்.. உங்க பாயிண்ட்டே தான் நானும் ஃபாலோ பண்ணினுகீறேன்.. இளையராஜா சாங்ஸ் மாதிரியே இவருதையும் நைட்டு கேட்பேன்

  @ karuna – நீங்கள் சொல்லியுள்ள அத்தனை விஷயங்களும் – தூர்தர்ஷன் பற்றி – நானும் ஒப்புக்கொள்கிறேன்.. இதோ எனது தூர்தர்ஷன் பதிவு தூர்தர்ஷன் என்ற ஆளுமை – இங்கே படித்துப் பாருங்கள்.. முதல் மரியாதை எனக்குப் பிடிக்கும்.. மறூபடி ஒரு முறை பார்த்து விட்டு, எழுத முயற்சி செய்கிறேன்.. கண்டிப்பாக.. உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி.. அடிக்கடி வாருங்கள்.. ’கூங்கட் கி ஆட் ஸே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.. சேம் பின்ச் 🙂

  Reply
 21. nice, thanks for reminded him in the festival moment …

  thanks
  sivam

  Reply
 22. நானும் ரொம்ப கேட்டு ரசிக்கும் பாடல்.நீண்ட நாட்களாகிவிட்டது.நினைவு படுத்தியதற்கு நன்றி!

  Reply
 23. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

  Reply
  • I enjoy noting how many commenters on iSteve really believe there's an evolved pacifist, neuter-man genetically predisposed to civilized behavior.Hunsdon replied: If there is such a people, there are heavy counter-selection pressures working against them. I'm reminded of a clan from the Anglo-Scottish borders, the Rutledges. They were referred to as "Every man's prey."

   Reply
 24. எனக்கும் மிக மிக அபிமானப் பாடகரான கிஷோர் பற்றிய பதிவு படித்து மகிழ்ந்தேன். அவரை மலேஷியா வாசுதேவனோடு ஒப்பிடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. முகம்மது ரஃபி தமிழில் பாடியது இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் தெலுங்கில் பாடியுள்ளார். கே எல் செய்கால் போல அவர் ரோஜர் என்ற ஒரு ஆங்கிலப் பாடகரையும் அபிமானித்து அவர் பாணியில் சலா ஜாத்தா ஹூம் போன்ற பாடல்கள் பாடியுள்ளார். நான் ரசிக்கும் அவர் பாடல்கள் எல்லாம் என்னிடம் இருந்தாலும் “து லாலி ஹை சவேரே வாலி..” என்று ஆஷா வுடன் அவர் பாடும் பாடல் மட்டும் கிடைக்கவில்லை. கடவுள் அவருக்கு அழகிய குரலை வழங்கினார். நமக்கு அவர் பாடல்கள் கேட்கும் பாக்கியத்தை வழங்கினார்.

  Reply
 25. மேரே நைனா சாவன் பாதோன் என்ற பாடலை பாட R.D.பர்மன்

  அழைத்தபோது (சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தது)முதலில்

  லதா மங்கேஷ்கரை பாடச்சொல்லி அந்த ஒலி நாடாவை கேட்டு

  ஒரு வாரம் பயிற்சி செய்து பிறகு பாடியிருப்பார் .

  நண்பர் ஸ்ரீராம் தேடிக்கொண்டிருக்கும் Tu lali hai saverewali என்ற

  பாடலுக்கான இணைப்பு இது :

  http://www.mediafire.com/?l4a4akxr239teqp

  ரவி

  Reply
 26. rasul

  ஜானே ஜான்..தூ கஹான்..மே யஹான்..
  கிஷோர்ஜீ பாடிய அட்டகாசமான டூயட்
  பாடல்களை பற்றியும் எழுதுங்க பாஸ்.
  சூப்பர் பதிவு.

  Reply
 27. Kishor,Rajesh kanna,r.d.burman,wat a lovely romantic combination,check out bheegi bheegi ratoon mein and hum dono,don’t watch the zeenat aman,lol

  Reply

Join the conversation