Sun DTH – டிஷ் ரீ அலைன் செய்வது எப்படி (அல்லது) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

by Rajesh October 26, 2010   Comedy

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

நீங்கள் சன் டிடிஹெச் பயன்படுத்துபவரா? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். சிறிது காலமாகவே, சன் டிடிஹெச்சில் சாடலைட் பிரச்னைகள் மிகுந்து இருந்தன. இன்ஸாட்4பியிலிருந்து, இப்போது மீஸாட்3க்கு சன் டிடிஹெச் மாறியுள்ளது. இதன் காரணமாக, பல நாட்களாகவே, டிஷ்ஷை ரீ அலைன் செய்ய, தங்களது டீலர்கள் வீட்டுக்கே வந்து இலவசமாகவே மாற்றிக்கொடுப்பார்கள் என்று சன் டிடிஹெச்சின் இன்ஃபோ சேனலில் விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. மட்டுமல்லாது, இப்போது இருக்கும் ஸ்டார் மூவீஸ், ராஜ் டிவி, ஜெயா ப்ளஸ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் திடும்மென மறைந்துவிட்டன. டிஷ் ரீ அலைன் செய்தால் தான் எல்லாச் சேனல்களும் தெரியும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

இதனால், பெங்களூரில் வசிக்கும் கருந்தேள் என்ற நபர், அனைத்து சேனல்களையும் பார்க்க வேண்டும் என்ற அவா மேலிட்டு, சன் டிடிஹெச்சுக்கு ஃபோன் செய்து, இந்த இலவச சேவையைத் தனது வீட்டுக்கும் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். அவருக்குப் பதிலளித்த கஸ்டமர் கேர் ஆட்கள், மூன்று நட்களுக்குள் இது நடந்துவிடும் என்றும், அதன்பின், சந்தோஷமாக அத்தனை சேனல்களையும் அவர் பார்க்கலாம் என்றும் சொல்லி, கருந்தேளின் வயிற்றில் பாலை வார்த்தனர்.

இதனைத் தனது வெள்ளை உள்ளத்தால் நம்பிய கருந்தேள், இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என்று தனது வாசல் கதவையே பார்த்துக்கொண்டு காலம் கழித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நான்கு நாட்கள் கழித்தும் யாரும் வராததால், சற்றே கடுப்பான அன்னார், மறுபடி சன் கஸ்டமர் கேருக்குத் தொலைபேச, அப்போதுதான் ஒரு உண்மை அவருக்குத் தெரிந்தது. அது என்னவென்றால், இந்த இலவச சேவையை, சன் டிடிஹெச்சின் டீலர்கள் மட்டுமே செய்து தருவதே. நாம் இதை வாங்கிய இடத்தில் சென்று பேசினால், அவர்கள் வந்து இதைச் செய்து தருவார்களாம். அப்படி சில செல்பேசி எண்கள் கருந்தேளுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த எண்களுக்குப் பேசினால், உடனடியாக டிஷ் ரீ அலைன் செய்யப்படும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் உடனடியாக நம்பிய கருந்தேள், அந்த எண்களுக்குப் பேச, கரடுமுரடான கன்னடத்தில், ‘அடப்போய்யா.. நாங்கெல்லாம் வரமாட்டோம்’ என்று ஒரு பதில் அவருக்குக் கிடைத்தது. மட்டுமல்லாது, செல்லும் கட் செய்யப்பட்டது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத மேற்படி கருந்தேள் என்ற நபர், மறுபடி கஸ்டமர் கேருக்குப் பேச, அவரிடம் ஆங்கிலம் என்ற மொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு செக்கஸ்லோவேக்கியா மொழியிலே பேசிய ஒரு கஸ்டமர் கேர் நபர் தெரிவித்த தகவல்களை, ஜேம்ஸ்பாண்டு படங்களைப் பார்த்திருந்தமையால், டீகோட் செய்த கருந்தேளுக்குக் கிடைத்த அல்டிமேட் தகவலானது: சன் கஸ்டமர்கள் அடிக்கடி இந்த ரீ அலைன்மெண்ட் சேவைகளுக்காகக் கூப்பிடுவதால், அத்தனை டீலர்களும் தங்களது செல்களை அணைத்துவிட்டு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டனர் என்பதே.

வெறித்தனமான கோபத்தை அடைந்த கருந்தேள் என்ற அந்த அப்பாவித் தமிழர், மறுநாளும் சன்னுக்குக் கூப்பிட்டார். அப்போது அவரிடம் பேசிய கஸ்டமர் கேர் அதிகாரி, அடிக்கடி இப்படி நீங்கள் கூப்பிடக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். அவர் ஒருமுறை கூப்பிட்டாலே போதும் என்றும் , அவருக்கு உரிய சேவை, ஒரு சில நாட்களில் வழங்கப்படலாம் என்று ஒரு பொன்மொழியை உதிர்த்தார். மேலும், கருந்தேளின் வீட்டுக்குப் பக்கத்திலேயே, பேருந்து நிலையம் என்ற ஒரு இடம் இருப்பதாகவும், அதற்குப் பக்கத்தில் டீலர் அலுவலகம் இருப்பதாகவும், பொடிநடையாக அங்கு சென்றால், டீலர் என்ற நபரிடம் கருந்தேளே நேரில் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசலாம் என்றும் தெரிவித்தார். ஆனால், கருந்தேளின் வீட்டுக்குப் பக்கத்தில், வரிசையாகப் பல பேருந்து நிலையங்கள் இருப்பதைக் கூறிய கருந்தேள், இதில் எந்த இடம் அது என்று வினவ, அவருக்குக் கிடைத்த பதில்: ‘அதான், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான்.. நடந்தே போயிருங்க’.

இனி வாழ்வில் எந்தக் கஸ்டமர் கேர் நபரிடமும் பேசவே கூடாது என்ற ஞானம், திடீரென கருந்தேளுக்குக் கிடைத்தது. புத்தருக்கு ஒரு போதிமரம் போல, கருந்தேளுக்கு, இந்த நபர். அவரது புகைப்படம் கிடைத்தால், தனது வெப்சைட்டிலேயே நிரந்தரமாக அதனைப் பெரிதாக்கிப் போட்டு வழிபடத் தயாராக இருப்பதாக, கண்ணீர் மல்கிய நிலையில் கருந்தேள் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

இதன்பின், இன்று காலையில், ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து, தனது டவுசரை மடித்துக் கட்டிக் கொண்டு, மொட்டை மாடியில் குதித்த கருந்தேள், சன் டிடிஹெச்சின் டிஷ்ஷின் ஆணிகளை, வெறிகொண்டமட்டும் பிடுங்கத் தொடங்கினார். அவரது இந்தச் செயல், குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போலவே இருந்ததாக, அதனை நேரடி ஒளிபரப்பு செய்த நமது நிருபர் குரங்கு கண்ணாயிரம் தெரிவித்தார்.

கருந்தேளின் இச்செயலுக்குக் காரணம்: இண்டர்நெட்டில், சன் டிடிஹெச்சை எப்படி ரீஅலைன் செய்வது என்று அருண் செராய் என்ற நண்பர் எழுதி வைத்திருந்த கட்டுரையே ஆகும். இதனை கண்டபடி மனப்பாடம் செய்த கருந்தேள், அதில் போட்டிருந்தபடியே டிஷ்ஷைத் திருப்பி, கீழே வந்து செட்டாப் பாக்ஸில் எண்களை மாற்ற, அடடே !!! ரீ அலைன் ஆகி விட்டது டிஷ் !!

வெற்றி !! வெற்றி !! சக்சஸ் !! சக்ஸஸ்!!

இதோ அந்த வலைப்பூ – இங்கே க்ளிக்குங்கள் . உங்கள் யாருக்காவது இந்த பிரச்னை இருந்தால், மிக எளிதாக அதனை சரி செய்து விடலாம். சன்னில் இருந்து ஆட்கள் வர நீங்கள் காத்திருக்கத் தேவையே இல்லை.

மிக எளிதாகத் தமிழில் இதனை விளக்கப் பார்க்கிறேன்.

இப்போது டிஷ் இருக்கும் நிலையிலிருந்து, இரண்டே இரண்டு மில்லிமீட்டர் இடதுபுறம் நகர்த்தவும். அப்படிச் செய்ய, அதன் இரண்டு ஸ்க்ரூக்களை சற்றே லூஸ் செய்துகொள்ள வேண்டும். பழைய பொசிஷனை மார்க் செய்து கொள்ளவும். பின்னர் கீழே இறங்கி வந்து, செட்டாப் பாக்ஸில், மெனு –> அட்வான்ஸ்ட் ஆப்ஷன்ஸ் –> ஹோம் ட்ரான்ஸ்பாண்டர் செட்டிங்ஸ் செல்லவும். பின் நம்பர் – 0000. அதில் இருக்கும் – கீழே நான் குறிப்பிட்டுள்ள எண்களை மட்டும், இப்படி மாற்றவும்.

Frequency – 11030ல் இருந்து, 12316
Symbol Rate – 27500ல் இருந்து, 30000
POlarization – verticalல் இருந்து, Horizontal

இதன்பின், ரிமோட்டில் இருக்கும் சிவப்பு பொத்தானை அமுக்கினால், ரெடி !

இன்ஃபோ சேனலில் ஒரு டிக் மார்க் தெரியும். அப்படித் தெரிந்தால், சரியாகி விட்டது என்று பொருள். இல்லையெனில், அந்தத் தளத்துக்குச் சென்று, மறுபடி ஒருமுறை எல்லாவற்றையும் செய்யவும்.

அவ்வளவே.

இதை நானே எப்பொழுதோ செய்திருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு, ஆட்கள் வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தது என்னுடைய தவறு. என்னமோ போடா மாதவா ….. 🙂

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

44 Comments

 1. நண்பா
  என்ன கொடுமை?
  அண்ட லோகத்திலேயே சிறந்த சேவையை வழங்குகிறோம் என மார்தட்டும் பன் டிவி லட்சனம் சந்தி சிரிக்கிறதே!!!கட்டணம் கட்டாட்டி ஆட்டொமேட்டிக்கா காலாவதி ஆகுதுல்ல?இதுக்கு தக்க நடவடிக்கை எடுக்கனும் என்னும் அடிப்படை சிந்தனை கூட இல்லாதவர்கள்.என்ன செய்வது அவர்கள் காட்டில் தான் மழை.எனக்கு சென்னைல கேபிள் டிவி தான்,இந்த டிடிஎஹ் பற்றி எதுவுமே தெரியாது

  Reply
 2. சிரிக்கிற‌தா அழுவுற‌தா தேள்..உங்க‌ அவ‌ஸ்தையே ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு உத‌வியாய் அமைந்துவிட்ட‌து.. செல்போன் க‌ம்பெனி க‌ஸ்ட‌ம‌ர் கேருக்குக்கார‌ய்ங்க‌ கொடுக்கிற‌ இம்சை இதைவிட‌ மேல் ந‌ண்பா…

  Reply
 3. நண்பர் வீட்டில் 2 டிவி,2 டி.வி.டி.என்று இருந்ததைப்பற்றி கேட்டதற்கு எந்த ரிப்பெராயினும் புத்தகத்தை படித்து தானே சரி செய்ய முயன்று,மேலே கிடக்கும் உதிரி எலக்ரோனிக் பொருள்களை காட்டி,பல ஆயிரங்கள் வீனாகிவிட்டதாக அவர் மனைவி கூற நான் ஓடத்தயாராகி, இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஜோசியம் சாப்ட்வேர் தயார் செய்கிறேன் என்றார்.விடு ஜூட்.!!!(இருவரும் அரசு வேலையில் இருப்பதால் தாங்குவார்கள்).

  Reply
 4. ஆணியே புடுங்க வேணாமுன்னு அந்த டிஷ்ஷை கழட்டி புடுங்கி போட்டுட்டு வேற கம்பெனிக்கு ஒரு சில நூறு பேர் மாறினால் தான் இவனுங்களுக்கு புத்தி வரும்…

  Reply
 5. அண்ணே வீடியோகான் DTH ரொம்ப நல்லாருக்குண்ணே, சூப்பர் ப்ராம்ப்ட் சர்வீஸ்! DTH சர்வீசுகள்லேயே அதிகமான தமிழ் சேனல் கொடுப்பது இவங்கதான். மத்த சேனல்களுக்கும் காசு கம்மியாத்தான் இருக்கு!

  Reply
 6. பணம் கட்டிட்டு நாம அலைகிற அலைச்சல்! அதை நீங்க விவரித்த அருமை! (வாய்விட்டு சிரிச்சேன்!) எப்படியோ ஒரு வழி கிடைச்சிடுச்சி!

  Reply
 7. நண்பரே..கஸ்டமர் கேர் செண்டர் என்பது கஸ்டமர் டார் செண்டர்.நாம் தொடர்பு கொள்வது கால் செண்டரை.இவர்கள் கிளிப்பிள்ளைகள்.இவர்களிடம் சொல்வதற்க்கு பதில் பிள்ளையாருக்கு உக்கி போட்டு வேண்டினால் உடனடி தீர்வு கிடைக்க சான்ஸ் அதிகம்.

  Reply
 8. வீட்டுக்கு வீடு சன்..டண்…டணா…டண்…[டண்..டணா..டண் என்ப ஆப்படிக்கும் ஒலியின் வரிவடிவம்]

  Reply
 9. @ராஜேஷ்,

  நல்லா வயிறு வலிக்க சிரித்தேன். பின்னே ‘இடுக்கண் வருங்கால் நகுக’ன்னு சும்மாவா சொல்லியுருக்காங்க…

  Reply
 10. ராஜேஷ்…

  கஸ்டமர் கேர் என்பது வளரும் நிறுவனங்களில் சரியாக இருக்கும் மிதமிஞ்சிய நிறுவனத்தில் பதில் மரியாதை சாத்தியம் இல்லை.

  என் வீட்டில் சன் டிஷ் பரணில் படுத்து கொறட்டை விட்டுக்கொண்டு இருக்கின்றது..இப்போது நான் கேபிளில் பார்க்கின்றேன்..

  Reply
 11. நீங்கள் மாடிக்கு போன வேகத்தில் டிஷ்சை புடிங்கி வீசி இருப்பிங்கனு நினைச்சேன்….. திரும்பவும் இதே பிரச்சனை வந்தால் என்ன பண்ணுவீர்கள்….. வேற நல்ல டிஷ்க்கு மாறுங்கள்…… இந்த பதிவை நானும் முடிந்தவரை அனைவருக்கும் அனுப்புகிறேன்……

  Reply
 12. @ கீதப்ரியன் – நண்பா… கொடும நண்பா.. அவங்க வருவாங்கன்னு காத்திருந்து காத்திருந்து மண்டை காய்ஞ்சது தான் மிச்சம்.. பயங்கர மன உளைச்சல்ல நானே சரி பண்ணிட்டேன்… எல்லாப் புகழும் நம்ம நண்பருக்கே.. அழகா சன் டிடிஹெச் ரீ அலைன் பண்றதுக்குப் ப்ரோசீஜர் நெட்ல போட்டாரே.. அவர் வாழ்க…

  @ அஹமது இர்ஷாத் – கட்டாயம் சிரிங்க 🙂 . . . அய்யய்யோ செல்ஃபோன் கஸ்டமர் கேர் பத்தி எழுத பல பதிவுகள் வேணும்.. அத்தோட, இண்டர்நெட் கஸ்டமர் கேரையும் சேர்த்திக்குங்க….

  @ thamizhan – ஆஹா… கண்டிப்பா அவர்கள் தாங்குவார்கள் 🙂 ஆனா நாம எந்த மூலை ? 🙂 அதான் நானே சரிபண்ணிப்பிட்டேன் 🙂

  @ சந்தோஷ் = santhosh – அதே முடிவுக்குத் தான் நான் வந்தேன்.. ஆனா கடைசியா ஒரு முறை முயற்சி பண்ணிரலாம்னு செஞ்சதுல, வொர்க் அவுட் ஆயிருச்சி நண்பா… 🙂 உங்க கருத்துக்கு நன்றி…

  @ பன்னிக்குட்டி ராம்சாமி – நண்பா.. நாங்க டிடிஹெச் வாங்கும்போதே டீலர் சொன்னாரு… வீடியோகான் நல்லா இருக்குன்னு.. ஆனா பாழும் மனசு, சன் டிவி வாங்கச்சொல்லி வற்புறுத்திச்சி… அதான்… இனிமே வீடியோகான் பத்தி யோசிச்சே ஆகோணும்.. 🙂

  @ எஸ்.கே – என்ன பண்றது… அலையோ அலைன்னு அலைஞ்சியும் நானே தான் கடைசில சரி பண்ண வேண்டியதாயிருச்சி… எல்லாம் நேரக்கொடுமை.. இதுவே ஒரு தமிழக எம்மெல்லே இல்லைன்னா எம்ப்பி வீட்ல இப்புடி நடந்திருக்குமா? எல்லாம், இவங்களை நாம அனுமதிச்சி வெச்சிருக்கோமே.. நம்மளை செருப்பால அடிக்கணும்..

  @ உலக சினிமா ரசிகரே – உக்கி தான் போடோணும்.. எல்லாம் இவங்க மமதைல பண்றது.. அடுத்த தேர்தல்ல ஆப்பு அடிச்சா, அப்புறம் என்ன பண்ணுவானுங்கன்னு தெரியும் 🙂

  @ சு. மோகன் – ஒரு வாரம் இவனுங்க வருவானுங்கன்னு வெயிட் பண்ணா, கடேசில, பஸ் ஸ்டாண்ட் நடந்து போங்க.. அங்கன தான் கடை இருக்குன்னு அட்வைஸ் பண்ணூறானுங்க.. அதுலயும், இவங்க கஸ்டமர் கேர் மக்கள் பேசுற ஆங்கிலத்தைக் கேட்டீங்கன்னா, மதம் மாறி கன்வர்ட் ஆயிருவீங்க.. எல்லாம் நம்ம நேரம்.. மக்களுக்கு சர்வீஸ் பண்ணுங்கன்னு இவனுங்களை நோக்கி யாரு அழுதாங்க.. ? பேசாம டிவியோட நிறுத்திருக்கலாம்ல ? வந்துட்டானுங்க.. டிடிஹெச்ல.. நானே இவனுங்களை விட ஆங்கிலம் நல்லாப் பேசுவேன்.. தூ…

  @ சென்ஷி – 🙁 🙁

  @ ஜாக்கி சேகர் – நீங்க சொல்றது ரொம்பச்சரி.. சன் டிஷ், பரணில் கொறட்டை விடத்தான் லாயக்கு… கேபிளுக்கு லாயக்கே இல்லை.. எல்லாம் என் நேரம்.. தெரியாம இதை எடுத்துத் தொலைச்சிட்டேன்… கருமம் 🙁

  Reply
 13. @ denim – கட்டாயம் வேற டிடிஹெச்சுக்கு மாறியே ஆகணும்.. இப்ப நானே சரிபண்ணீட்டேன்ல.. கொஞ்ச நாள் பாக்குறேன்.. மறுபடியும் இதே ப்ரச்னை வந்தா, கட்டாயம் இத தூக்கி குப்பைத்தொட்டில வீசிட்டு, வேற எடுத்துற வேண்டியதுதான்…

  Reply
 14. சரி இந்த பதிவுல வர்ற கருந்தேள் யாருங்க,பாவம்

  Reply
 15. ஆனா கஷ்டத்தையும் காமெடியா எப்படி எழுதி இருக்கிங்க…….நானா இருந்த செம tension ஆகி இருந்து இருப்பேன்………..

  Reply
 16. நல்ல வேலை எங்க owner இந்த கஷ்டம் எல்லாம் கொடுக்கல…..Tata sky இங்க மும்பைலையும் எல்லா தமிழ் Channels ம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பாக்க முடியுது…..

  Reply
 17. நல்லா வயிறு வலிக்க சிரித்தேன். பின்னே ‘இடுக்கண் வருங்கால் நகுக’ன்னு சும்மாவா சொல்லியுருக்காங்க…

  Reply
 18. ஆனா இவனுங்கள ஏதாவது பண்ணனும் கருந்தேள்….

  Reply
 19. மொட்டை மாடி சேட்டலைட் மர்மம்… சைகை காட்டிய இளம் பெண்கள்!!!
  முழுத்தகவலும் அறிய நாடுங்கள் துப்பறியும் புலி இலுமினாட்டி[இப்பதிவில் வெளிவராத மர்மங்கள்] 🙂

  Reply
 20. @ டெனிம் – இனிமே இந்தப் ப்ரச்னை கண்டின்யூ ஆச்சுன்னா, கட்டாயம் வேற டிடிஹெச் தான்.. அதுல ச்ந்தேகமே இல்லை..

  @ raja – அடப்பாவி.. இதே கமெண்டை, மேல சு. மோகன்றவர் போட்டுப்பார்த்த மாதிரி ஒரு சந்தேகம் 🙂

  @ denim – இவங்களை நாம என்ன செய்யிறது? வோட்டுப்போட்டுத்தான் நம்ம எதிர்ப்பைக் காட்ட முடியும்.. ஆனா நம்ம பேர்ல ஆல்ரெடி கள்ள வோட்டு போடப்பட்டிருக்குமே … ஒண்ணுமே பண்ண முடியாதுன்றதுதான் நிதர்சனம்… அது இன்னும் கொடுமை..

  @ காதலரே – 🙂 துப்பறியும் புலி இலுமியின் பதிவை எதிர்பார்க்கிறேன் 🙂 ஆமாம்.. அது யார் சைகை காட்டிய இளம்பெண்கள்???? 🙂

  Reply
 21. This comment has been removed by the author.

  Reply
 22. பதிவில் நீங்க போட்ட படங்கள் அப்படியே தமிழர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது….அருமையான பதிவு… நிச்சயம் நீங்கள் வேறு dthற்கு மாறுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்… இப்படியும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமே நண்பா… (ஹப்பா.. எனக்கு இந்த பிரச்சனையே இல்ல.. என் ரூம்ல டிவியே இல்ல…)

  Reply
 23. @ RNS – அட வேற டிடிஹெச்சுக்கு மாறும் பிரச்னை, இதைவிட பெரிசு… 🙁 அதுல ஏகப்பட்ட ப்ரொஸீஜர் கீது.. கொஞ்ச நாள் பாக்குறேன்… இதே ப்ரச்னை மறுபடி வந்தால், கட்டாயம் வீடியோகான் தான்..

  எல்லாம் நம்ம நேரம் 🙂

  Reply
 24. This comment has been removed by the author.

  Reply
 25. //இதன்பின், இன்று காலையில், ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து, தனது டவுசரை மடித்துக் கட்டிக் கொண்டு, மொட்டை மாடியில் குதித்த கருந்தேள்.//

  எப்புடி தல டவுசரை மடிச்சு கட்டுரிங்க., You Great.

  Reply
 26. /////ராஜகோபால் said…
  //இதன்பின், இன்று காலையில், ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து, தனது டவுசரை மடித்துக் கட்டிக் கொண்டு, மொட்டை மாடியில் குதித்த கருந்தேள்.//

  எப்புடி தல டவுசரை மடிச்சு கட்டுரிங்க., You Great./////

  கையால தான் மடிச்சிக் கட்டியிருப்பாரு, பின்னே இதுக்காக வாடகைக்கா கை வாங்கிட்டு வரமுடியும்?

  Reply
 27. அட நீங்க வேற…பெங்களூருல இருக்கறதுனால தப்பிச்சீங்க..இங்க அரசு கேபிள் ரூ 75 இக்கு வழங்கப்படும் என யாரோ (ஆமாப்பு யாரோதான்..நபர் பெயர் சொல்லி சவுக்கு சங்கர் மாதிரி அவஸ்தை பட முடியாதுங்கோ!!)
  அப்புறம் குடும்பம் கூடியதால் அரசு கேபிள் டண்டனாடன்!! ..நானூறு கோடி மக்கள் பணம் ஏப்பம் விடப்பட்டது!அதற்கு இயக்குனாராக நியமிக்க பட்டிருந்த உமா ஷங்கர் பழி வாங்கப்பட்டு….blah blah blah!!! 😉
  அரசியலுக்கு மன்னிக்கவும்.ஆனால் அரசியல தொடாம இந்த “வம்சங்கள்” பற்றி பேச முடியாது.
  ஆழ்ந்த அனுதாபம் கருந்தேள்!வேறென்ன சொல்ல?

  Reply
 28. வீட்டுக்கு வீடு சன் !!!
  வாங்கினவங்களுக்கு டன் டனா டன்!!!

  Reply
 29. பதிவை வரவேற்கும் முதல் படம் அருமை…
  ஆனால் எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே???

  Reply
 30. //இப்போது டிஷ் இருக்கும் நிலையிலிருந்து, இரண்டே இரண்டு மில்லிமீட்டர் இடதுபுறம் நகர்த்தவும் //
  Is it from the front of the dish or from behind ??

  //அப்படிச் செய்ய, அதன் இரண்டு ஸ்க்ரூக்களை சற்றே லூஸ் செய்துகொள்ள வேண்டும்//
  Only screws ?? or any other things also ??

  Reply
 31. //Frequency – 11030ல் இருந்து, 12316

  Symbol Rate – 27500ல் இருந்து, 30000

  POlarization – verticalல் இருந்து, Horizontal//

  எண்கள் எனக்கும் தேறும் போல தெரியுதே.நீங்க ஆங்கிலப்பட விமர்சகரா இருப்பதால் உங்களுக்கும் இது ஒரு வேளை தேறலாம்.கூடவே இந்தியாவுக்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை.

  சீனா,கொரியா STB நிறுவனங்கள் யார் தலையில் மசாலா அரைக்க நினைக்கிறாங்கன்னு தெரியல.காசு கொடுத்தாத்தான் பிலிம் காட்டுவேன்னு சொல்ற நிறுவனங்களுக்கெல்லாம் வேட்டு வெச்சிடறாங்க.சூப்பர் மூவிகள் சூப்பரா கிடைக்குது.பார்க்கத்தான் நேரம் பத்த மாட்டேங்குது.

  Reply
 32. கொளந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை,காணாமல் போகும் போது வெள்ளை நிற பனியனும்,ஊதா நிற அறை கால் டவுசரும் அணிந்து இருந்தார்,இவரை யாராவது கண்டு பிடித்தால் காதை பிடித்து தரதர வென இழுத்து வருமாறு கேட்டுகொள்ளபடுகிறோம்..

  Reply
 33. நல்ல வேளை…நான் சன் டிடிஎச் வாங்கலாம்னு இருந்தேன்…நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்….ஹிஹிஹி

  Reply
 34. என்ன பாஸ் பேசறிங்க. ஒரு 8 நாளுக்கே இப்படி பீல் பண்றீங்களே, எனக்கெல்லாம் இன்னியோட 16 நாள் ஆகிடுச்சு. சரி 16 வது நாள் அந்த எழவு எடுத்த சனியனுக்கு பால் ஊத்திரலம்னு நெனச்சப்பதான் உங்க மேட்டரப் படிச்சேன். செம காமெடி.

  ஒரு 7 customer care executives கிட்ட பேசிட்டேன். எல்லாரும் 2 நாள்னு ஆரம்பிப்பாங்க. 2 நாள் கழிச்சு நம்மளும் வேலை வெட்டி இல்லாம போன் பண்ணுவோம். இன்னொருத்தர் எடுப்பார். இதுக்கு முன்னாடி பேசுனவர் பேர சொல்லி, அவர்ட என்ன கம்ப்ளைன்ட் பண்ணிருக்கோம், அதுக்கு அவர் என்ன சொன்னார், இது எல்லாத்தையும் விலாவரியா சொல்லி, இதுக்கு முன்னாடி நமக்கு குடுத்த complaint number-அ சொல்லி, அந்த பழைய ஆள் கிட்ட போன் குடுக்க சொன்னா…”சாரி சார், call transfer பண்ற option இல்லன்னு” சொல்லுவாங்க. கோவம் சுள்ளுன்னு தலைக்கு ஏறும். “அப்பறம் என்ன _______க்கு பேர், ஊர், கம்ப்ளைன்ட் நம்பர் எல்லாம் குடுக்கறிங்கனு” கேட்டா…. “சாரி சார், தகாத வார்த்தைகள் யூஸ் பண்ணிட்டிங்க. அதுனால இந்த கால disconnect பண்றோம்னு சொலிட்டு, disconnect பண்ணிருவாங்க.

  அப்பறம்…….சரி விடுங்க பாஸ்…இந்த கதை ஒரு நாவலா எழுதலாம். அவ்ளோ interesting. ஆனா இதுனால எனக்கு ஒரு நன்மை இருந்துச்சு. ;P . எதாவது tension-ல எப்போ சரக்கு அடிச்சாலும் இவிங்களுக்கு phone போட்டு ஏறு ஏறுனு ஏறிடுவேன். எனக்கும் நல்லா மப்பு ஏறிடும்.

  And I thank you very much for your information. Wil try today.


  karthik

  Reply
 35. அந்த கருமம் புடிச்ச கஸ்டமர் கேர்ல இதே பிரச்சினை தான்…ஆனா இங்க கேரளாவுல டீலர்கள் பரவாஇல்லை..போன் செய்த பத்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சரி செய்து கொடுத்தனர்…

  உங்களுக்கு சரியா வழி தெரியலைன்னு நெனக்கிறேன்..அவங்கதான் கரெக்டா சொல்லி இருக்காங்களே..
  “‘அதான், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான்.. நடந்தே போயிருங்க”… lol..

  Reply
 36. I am calling the customer care for the last one month. My dealer has changed his business to TataSky. I have changed the settings as per your instructions and it worked. Thanks for sharing the info

  Reply
 37. Hi Rajesh,

  I am not able to follow the steps mentioned by Arun’s blog. Please help me how did you manage these steps?

  1) How to update the new software(step 2)? OTA Option is not enabled in my STB

  2) Also Transponder option is not editable.

  I believe my STB is of Home Cast (Not sure! stb s.no starts with H)

  Thanks In Advance!!!
  Mohan

  Reply
 38. sathish

  /இதனை தனது வெள்ளை உள்ளத்தால் நம்பிய கருந்தேள்/ முடியல‌

  Reply
 39. DTH வாங்கும்போது சன் DTH தான் வாங்கலாம்னு நெனச்சேன், சொல்லாம சைலண்டா ஒரு சில சானல் கட் பண்றதா நண்பர் ஒருவர் சொன்னார். அதன் விளைவு இப்போ என் வீட்டு மாடியில் Airtel DTH வானத்த வெறிச்சு பாத்துட்டு இருக்கு. சிக்னல் பிரச்சனை எதுவும் இல்ல, DTH-க்கு ஆகுற செலவு கொஞ்சம் ஓவரோனு தோணுது. monthly 600/- normal with some HD channels. 🙂

  Reply
  • Haa haa haa… Boss. I suggest you to subscribe to cable operators like Hathway. You will get all channels for as much as 250/-. I have done that, and now I am happy 🙂 .. Sorry for typing in english

   Reply

Join the conversation