கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்

by Rajesh November 13, 2010   Charu

Sharing is caring!

ஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, இவ்விஷயத்தைப் பற்றி அவரது கருத்துக்களைக் கூறினார். அவற்றை எனது பதிவில் சேர்க்கவில்லை. ஏனெனில், ஒரு தனிப்பதிவாக அதனை வெளியிட்டால் தான், அவர் கூறிய விஷயத்தின் முக்கியத்துவம் நமக்குப் புரியும் என்பதால்தான். சாரு கூறியவற்றை, அவரது வார்த்தைகளிலேயே தரப்பார்க்கிறேன். இனி, ஓவர் டு சாரு.

‘அலெக்ஸா ரேங்கிங், அது இதுன்னு எதாவது சொல்லி, சண்டைக்குக் கூப்பிடுறாங்க.. ஆனால், இந்த எண்ணிக்கை ரீதியிலான பாப்புலாரிட்டி பத்தி என்னோட ஸ்டேன்ஸ் என்னன்னா, அதுக்கும் இலக்கியத்தின் தீவிரத்துக்கும் சம்மந்தமே இல்லைன்றதுதான். காஃப்கா, தாஸ்தாயவ்ஸ்கி பத்தித் தெரிஞ்சிருக்கும். அவர்களுடைய கொடிய வறுமையைப் பத்தியும், அவர்கள் காலத்தில் அவர்களின் புத்தகங்கள் விக்காதது பத்தியும்.. ஆனா இப்ப அவங்களை நாம கொண்டாடுறது இல்லையா? இதெல்லாம், சும்மா நம்மளை சண்டைக்கு வர அழைக்கிற வீண் முயற்சி.. இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்றதே இல்லை.

ஒரு சின்ன உதாரணம் : இப்ப, கேரளால நடக்கிற ‘ஹே’ ஃபெஸ்டிவல்ல, ஒரு எழுத்தாளர் கலந்துக்குறாரு. அவரு பேரு, ஹோர்ஹே வால்பி (Jorge Volpi). மெக்ஸிகோல இருந்து வர்ராரு. அவர், இப்போ அங்க இருக்குற ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளர். வயசு, ரொம்பக் கம்மி. நாற்பது இருந்தால் ஜாஸ்தி. ஆனால், அந்த ஊர் அரசு, அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து, அவரோட எழுத்தைக் கொண்டாடுது. ஆனால், இங்க என்ன நடக்குது? பல்ப் பல்ப்பா எழுதிக் குவிப்பவர் தான்