Broken Embraces (2009) – Spanish

by Rajesh November 18, 2010   world cinema

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

இதற்கு முன்னரே, பெத்ரோ அல்மதோவாரின் சில படங்களைப் பார்த்திருந்தும், அவற்றை எழுத அமரும்போதெல்லாம், எதாவது வந்து குறுக்கிடும். வேறு ஒரு படத்தைப் பார்க்க நேரும். அந்த ஜோரில், இந்தப் படம் பற்றி எழுத மறந்துவிடும். ஆனால் இம்முறை, எழுதியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பனிரண்டரைக்கு உட்கார்ந்து இதை அடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இதுவரை பார்த்த அல்மதோவாரின் படங்களிலெல்லாம், பொதுவான அம்சமாக இருந்தவை, மனித உணர்வுகளே. இந்த வகையில், இவரும் கிம் கி டுக்கும் ஒன்று எனலாம். ஆனால், இருவருக்குமான ஒப்பீடு, அத்துடன் முடிவடைந்துவிடுகிறது. கிம் கி டுக், பேரிரைச்சலோடு வழியில் இருக்கும் அத்தனையையும் கபளீகரம் செய்துகொண்டே நம்மை நோக்கி முன்னேறிவரும் சுழல்காற்று என்றால், அல்மதோவார், அமைதியான ஒரு பாலைவனத்தில் சுழன்று அடிக்கும் மணற்புயல் எனலாம். இரண்டிலுமே அழிவு நிச்சயம். ஆனால், கொடூரமான முறையில் அலறிக்கொண்டு அழியாமல், மணற்புயலின் அழகியலை ரசித்துக்கொண்டே மரணமடையலாம். இது அல்மதோவாரின் சிறப்பு (இருந்தாலும் எனக்கு அலறிக்கொண்டு சாகும் கிம் கி டுக் தான் பிடித்தமானவர்).

இந்தப் படம், எதை முன்வைக்கிறது? அளவுக்கு மீறிய பற்றுதல், தந்தையின் அன்புக்கு ஏங்கும் சிறுவனின் மனம், அளவுகடந்த காதலில் காமத்தைக் கரைக்கும் உயிர்கள் இப்படிப் பல விஷயங்கள் இதில் உள்ளன. இருந்தாலும், இவற்றுக்கு இடையே எந்தக் குழப்பங்களும் இல்லை.

மேட்டியோ ப்ளான்கோ, ஒரு பிரபல இயக்குநர். தற்போது ஹேரி கேய்ன் என்ற புனைப்பெயரில் வாழ்ந்துவருபவர். அவரது திரைக்கதைகள் அத்தனையையும் இதே புனைப்பெயரில் எழுதிவந்திருக்கிறார். கண்பார்வை அற்றவர். இவருடன் வாழ்வது, அவரது மேனேஜரான யூடித்தும், அவளது மகன் டியேகோவும். மேனேஜர் என்பதை விட, ஏஜண்ட் என்று எடுத்துக்கொள்ளலாம். அங்கெல்லாம், இப்படி ஒரு திரைக்கதையாசிரியருக்கோ அல்லது இயக்குநருக்கோ அல்லது வெற்றி பெற்ற செலிப்ரிட்டி யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஏஜண்ட் இருப்பார். அவர் மூலமாகத்தான் இவரை நாம் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் நம்மூரில் மேனேஜர் என்றே அழைப்பது வழக்கமல்லவா? எனவே அப்படிச் சொன்னேன்.

ஒருநாள், தான் வேலை செய்துவரும் பப்பில், கடுமையான போதைமருந்து கலந்த கோக்கைக் குடிக்க நேரும் டியேகோ, கோமாவில் விழுந்துவிடுகிறான். அவனது தாய் யூடித், வேலைநிமித்தமாக வெளியூர் சென்றிருக்க, விஷயம் அறியும் ஹாரி, மருத்துவமனை வந்து டியேகோவுடன் தங்குகிறார். ஆறு மணி நேரங்கள் கழித்து விழித்தெழுகிறான் டியேகோ.

இதற்கு முன், இவருடன் வேலை செய்ய விரும்புவதாக, ரே எக்ஸ் என்ற ஒரு இயக்குநன் இவரது வீட்டுக்கு வருகிறான். ஆனால், அவனுடன் வேலை செய்ய விரும்பாத ஹாரி, அவனைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். இவனைப்பற்றிய உண்மையை, யூடித் ஹாரிக்குச் சொல்கிறாள். அன்றையதினம் இறந்துபோன பெரும் செல்வந்தர் எர்னெஸ்டோ மார்ட்டெல்லின் மகனே இந்த ரே என்பது ஹாரிக்குத் தெரியவருகிறது. தனது வீட்டுக்கு வரும் டியேகோவை, ஒரு பழைய புகைப்படத்தை எடுக்கச்சொல்லி, அதில் இருக்கும் இளவயது ரேவை அடையாளம் காட்டி, தனது பழைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை இவனிடம் சொல்லத்தொடங்குவதாக, ஃப்ளேஷ்பேக் ஆரம்பிக்கிறது.

1992 – மேட்ரிட். செல்வந்தர் எர்னெஸ்டோவைப் பார்க்கிறோம். அவரது காரியதரிசி, மாக்தலேனா. நோயில் விழும் அவளது தந்தைக்கு எல்லா உதவிகளும் எர்னெஸ்டோ செய்கிறார்.

1994. அதே மாக்தலேனா, இப்போது எர்னெஸ்டோவுடன் வாழ்ந்துவருகிறாள். திருமணம் செய்யாமல். அன்றைய காலத்தில் மிக வெற்றிகரமாக விளங்கும் இயக்குநர் மேட்டியோ ப்ளாங்கோவிடம் ஆடிஷன் செய்ய ஆசைப்பட்டு மாக்தலேனா வருகிறாள். அவரது புதிய படமான ஒரு நகைச்சுவைப் படத்தில் இப்படியாக அவள் தேர்வாகிறாள். அவளுக்கு நடிப்பில் ஆசை. மட்டுமல்லாமல், சில நாடகங்களிலும் நடித்திருக்கிறாள்.

இது, பணக்காரர் எர்னெஸ்டோவுக்குப் பிடிப்பதில்லை. வயதான அவர், இளவயது மாக்தலேனா மீது வைத்திருக்கும் அபரிமிதமான காமமும் ஆசையும், அவரை சந்தேகக் கடலில் அமிழ்த்துகிறது. எனவே, மாக்தலேனாவின் கூடவே இருக்கும்படித் தனது மகனான எர்னெஸ்டோ ஜூனியரை அனுப்புகிறார் (ரே எக்ஸ்). இவன், மாக்தலேனாவின் ஒவ்வொரு செயலையும் வீடியோ எடுத்து, தனது தந்தைக்குப் போட்டுக் காட்டுகிறான். உதட்டசைவை வைத்துப் பேசுவதைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண்ணை வைத்து, அவள் பேசும் அத்தனை விஷயங்களையும் பற்றி எர்னெஸ்டோ அறிகிறார்.

இந்த சமயத்தில் தான், இயக்குநர் ப்ளாங்கோவுக்கும் மாக்தலேனாவுக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு நமக்குப் புரிகிறது. இருவரும் ஆவேசமாக உறவு கொள்வதைப் பார்க்கிறோம். இருவரும் ஒருவரையொருவர் வெறித்தனமாகக் காதலிக்கின்றனர். மெதுவாக இதனைப் புரிந்துகொள்ளும் எர்னெஸ்டோ, ஒருநாள் மாக்தலேனாவை அழைத்துக்கொண்டு வெளியூர் சென்றுவிடுகிறார். அங்கே, இரண்டு நாட்கள், அவளைத் தூங்கவே விடாமல், அவளுடன் வலுக்கட்டாயமாகப் பலமுறை உறவுகொள்கிறார். இது பிடிக்காத மாக்தலேனா, கழிவறையில் வாந்தியெடுத்தாலும், அவரது முன்னே, இது பிடிப்பது போல நடிக்கிறாள். இதனைப் பற்றி ப்ளாங்கோவிடம் அவள் பேசும் வீடியோவையும் எர்னெஸ்டோ பார்த்துவிடுகிறார்.

ப்ளாங்கோவின் வீட்டுக்குப் போய் வரும் மாக்தலேனாவின் வீடியோவும் எர்னெஸ்டோவுக்குப் போய்ச் சேர்கிறது. இது தெரிந்த மாக்தலேனா, எர்னெஸ்டோவுடன் இனி இருக்க இயலாது என்று சொல்லிக் கிளம்பும் வேளையில், எர்னெஸ்டோ செய்யும் சதியால், அவளது கால்கள் உடைகின்றன.

இதற்குப் பின் என்ன ஆனது? மாக்தலேனாவும் இயக்குநர் ப்ளாங்கோவும் சேர முடிந்ததா? ப்ளாங்கோ ஏன் கண்களை இழந்தார்? அவர் ஏன் தனது பெயரை ஹாரி கேய்ன் என்று மாற்றிக்கொண்டார்? படத்தில் காணுங்கள். இதுவரை சொன்னது, படத்தின் கொஞ்சக் கதையைத்தான்.

இப்படத்தில், மாக்தலேனாவுக்கும் ப்ளாங்கோவுக்கும் இடையே நிலவும் காமம் கலந்த காதலாகட்டும், எர்னெஸ்டோ மாக்தலேனா மீது வைத்திருக்கும் காமம் கலந்த ஆசையாகட்டும், இரண்டுமே மிகச்சரியான முறையில், இக்காட்சிகளைக் காட்டத்துவங்கும்போதே நமக்குப் புரிய வைத்துவிடுகிறார் அல்மதோவார். அதேபோல், படத்தில் பல இடங்களில், அட்டகாசமான உணர்ச்சிபூர்வமான ஷாட்களை வைத்திருக்கிறார். கவனிக்கவும் – ஷாட்கள். நீளமான காட்சிகள் அல்ல. இப்படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், எந்த முக்கியக் காட்சியிலும், இசை என்பது துளிக்கூட இல்லை. இது, படத்தின் கனத்தை அதிகரிக்கிறது. அதேபோல், இப்படத்தின் கதையில், மேலும் பல திடுக்கிட வைக்கும் அம்சங்கள் உண்டு. படத்தின் ஒரு கட்டத்தில், இது த்ரில்லரோ என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது.

இப்படம் முழுதுமே, மிக மிக இயல்பாக, நமது கண் முன் விரியும் கதையாகவே இருக்கிறது. உதாரணம்: எர்னெஸ்டோ, மிகப்பெரும் பணக்காரராக இருப்பினும், அவருக்கு அடியாள் படை போன்ற அபத்தங்கள் எதுவும் இல்லை. முக்கால்வாசி, தனது செயல்களைத் தானே தான் செய்துகொள்கிறார். வில்லத்தனமான செயல்களாக இருந்தாலும் சரி. படம் நெடுகவும், நமது உள்ளத்தைத் திருகும் காட்சிகள் உண்டு. பிரம்மாண்டமான வயலின் கோரஸ் பின்னணி இசையுடன் அல்லாது, எந்த இசையுமே இல்லாமல் இக்காட்சிகள் விரிவதனால், நாமும் அவற்றுடன் ஒன்ற முடிகிறது.

மனித உயிர்களுக்குள் நிலவும் அன்பும், காதலும், இன்னபிற உணர்ச்சிகளும் அழகாகக் காண்பிக்கப்பட்ட படங்களில் இது தலையாய ஒன்று என்று சந்தேகமில்லாமல் சொல்வேன். அதேபோல், இப்படத்தில் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும், படு இயல்பாகவே உள்ளன. கதையை முழுதாகச் சொல்லாமல் இவற்றைப் பற்றி மேலும் எழுதுவது தகாது. ஆனால், கதையையும் சொல்லமாட்டேன். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மொத்தத்தில், Broken Embraces, ஒரு அழகியல் அனுபவம்.

இப்படம், 2010 ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு நாமிநேட் செய்யப்பட்டது, சிலருக்கு நினைவிருக்கலாம். மேலும், கான் பட விழா போன்ற பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. அல்மதோவார் படங்கள் அப்படித் திரையிடப்படவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

Broken Embraces படத்தின் ட்ரெய்லர் காண இங்கே க்ளிக்கவும்

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

17 Comments

 1. அடடா
  நண்பா மிக அருமையான விமர்சனம்.நான் இது பற்றி பேச வேண்டும் என்று இருந்தேன். பெதரோ அல்மடாரின் bad education இன்று தான் பார்த்தேன்,இந்த படமும் வைத்திருக்கிறேன் நண்பா,ஏற்கனவே டாக் டு ஹர் பார்த்துள்ளேன்,நீங்கள் இவரை இவர் படங்களை பற்றி சொன்னது 100 சதம் உண்மை,வாழ்வின் கொடுமையான இன்னல்களை அனுபவிக்கும் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை இவர் செலுல்லாய்டில் படைக்கிறார்.

  Reply
 2. நல்ல பகிர்வு.நன்னி.

  Reply
 3. இன்னும் பார்க்கவில்லை இதை. Talk to Her கையில் இருக்கிறது, பார்த்துவிடுகிறேன்….

  Reply
 4. நல்லா இருக்கு படம்.

  Reply
 5. டிரெய்லர் நல்லாயிருக்கு, கதையும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கு பார்க்க முயற்சிக்கிறேன்!

  Reply
 6. நல்லவிமர்சனம் தல :-))
  படம் இருக்கு பாக்கனும்

  Reply
 7. நம்மூர் கதாநாயகிகள் ஆங்கிலம் தவிர ஒரு எழவும் தெரியாமல் குப்பை கொட்டும் நிலையில் (இதில் “டமில் தெர்யாது” என ஸ்டைலாக பேட்டி வேறு..அட கருமமே!) பெனிலோப் க்ரூஸ் பல மொழிகள் தெரிந்துவைத்து கொண்டு நடிப்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று.
  இந்த படமும் Volver படமும் பதிவிறக்கம் செய்து ஆன மாதங்கள் இரண்டு .இன்னும் பார்க்கவில்லை (சிறந்த சோம்பேறி நாமினேஷன் எல்லாம் வானாம்!)சீக்கிரமே பார்த்துவிட்டு சொல்கிறேன்.நன்றி

  Reply
 8. நண்பரே,

  இத்திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். திரையில் புள்ளிகளாக ஓடும் தன் காதலை தன் விரல்களால் ஸ்பரிசிக்க முயலும் அந்த இறுதிக் கணம் என்னவோ செய்யும். மனிதர்கள் அன்பிற்காக ஆடும் ஆட்டங்களின் விசித்திரங்கள் புதிரானவை. பெனிலோப்பெ குருஸின் கால் விரல்களின் அழகை திரையில் அழகாக கொணர்ந்த படைப்பு இதுதான் என்று எண்ணுகிறேன் 🙂

  Reply
 9. அண்ணே அண்ணே எங்கே இருந்தன்னே இந்த மாதிரி படங்களா புடிக்கிறீங்க 😉
  .

  Reply
 10. க்கும் ..நமக்கு சகீலா படம் பார்க்கறதுக்கே நேரம் பத்தல!!!பாக்கலாம்…

  Reply
 11. @ இராமசாமி கண்ணன் – நன்றி 🙂 . நீங்க சொன்ன யோசனைய இதுல இன்னும் இம்ளிமெண்ட் பண்னலையேன்னு யோசிக்காதீங்க.. அதைப் பண்ணியாச்சு.. அடுத்த வாரம் சொல்றேன் 🙂

  @ கீதப்ரியன் – நண்பா…Talk to her ரொம்ப நல்ல படம். எனக்கும் புடிக்கும் 🙂 .. உருக்கமாவும் அதே சமயம் நல்லாவும் இருக்கும். உங்க கருத்தை அப்படியே வழிமொழியுறேன்

  @ மொக்கராசா – ஹாஹ்ஹா 🙂 நானும் உங்க கமெண்ட்டை படிச்சாச்சு… பதில் கமெண்டு போட்டாச்சு

  @ மயிலு – டெம்ப்ளேட் பின்னூட்டம் போடும் உரிமை, தமிழ் வலையுலகத்திலேயே என்னிடம் மட்டும் தான் உள்ளது. எனவே அபராதம் வந்து சங்கத்துல கட்டிருங்க 🙂

  @ சு. மோகன் – Talk to her பாருங்க.. அப்புறம் இதுக்கு வாங்க.. இல்லேன்னா, இதைக்கூட மொதல்ல பார்க்கலாம்.

  @ சதீஷ்பாண்டியன் – நன்றி பாஸ்

  @ எஸ்.கே – ரைட்டு.. 🙂

  @ கார்த்திக் – நன்றி.. அவசியம் பார்த்துருங்க

  @ viki – ஹாஹ்ஹா 🙂 உங்க ‘அட கருமமே’ ரொம்ப ரசிச்சேன் 🙂 .. கரெக்டான இடத்துல அதைப் போட்ருக்கீங்க 🙂 . பீனலோபி க்ருஸ்ஸின் அர்ப்பணிப்பை நானும் பாராட்டுறேன்… அட இன்னுமா பார்க்கல? பார்த்துப்புடுங்க தல 🙂

  @ காதலரே – அந்தக் கடைசிக் காட்சி எனது மனத்தை உருக்கியது.. கொடுமை… 🙁 .. கால் விரல்களின் அழகு – 🙂 .. மிகச்சரி 🙂 ..

  @ சிபி – ஓ அதா? தொழில் ரகசியத்தையெல்லாம் இப்புடி பப்ளிக்கா கேட்கும் இந்த சிபி, ராணி காமிக்ஸில் வந்திட்ட மாடஸ்தியின் சாகசங்களை ஒன்றுவிடாமல் படிக்கக் கடவதாக 🙂

  @ இப்போ ராம்சாமி – அண்ணா வனக்கமுங்ணா… நீங்க பன்னிக்குட்டி ராம்சாமிக்குப் போட்டியா கெளம்பிருக்கீங்களாண்ணா? சந்தோஷமுங்ணா.. அட எனக்கும் அதே பிரச்னை தான்.. ஆனா நல்லவேளை இப்பதான் சகீலா படமெல்லாம் பார்த்து முடிச்சேன் 🙂

  Reply
  • 巔兄何出此言? 年齡只是一個數字, 身體可以去鍛鍊, 但你的智慧經歷卻回不去嘛!space… heard that story too, very inspiring though! helping others / making others happy does let us feel great!

   Reply
 12. யோவ் தமாசு!Penelope Cruz னு வார்த்தைய சொல்லி இருந்தா அடிச்சு பிடிச்சு போய் படத்தை பார்த்து இருப்போம் இல்ல? எதுக்கு இம்புட்டு மொக்க?ஹிஹி.. 😉

  Reply
 13. அண்ணா அது யாரு பன்னிகுட்டி ராமசாமி எனக்கு தெரியாதுங்க்னா..
  *************
  என்னாது தம்மாதூண்டு தொப்புள சுத்தி 128 ஊசி போடப்போறீங்களா!!!

  Reply
 14. அண்ணா நேரம் இருந்தால் இந்த படங்களை பத்தியும் எழுதுங்களேன் உங்கள் எழுத்துகளில் விமர்சனம் படிக்க ஆவலாய் உள்ளது
  1.Perfume: The Story of a Murderer
  2.The Magnificent Seven
  3.The Naked Prey
  4.The Longest Day
  5.the guns of navarone
  6.The Good, the Bad and the Ugly
  7.It’s a Mad Mad Mad Mad World
  8.Master and the commander

  Reply

Join the conversation