கருந்தேள் டைம்ஸ் – 2

by Rajesh November 21, 2010   Game Reviews

Sharing is caring!

சென்ற வாரம், பெங்களூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் காண நேரிட்டது. தமிழ் ஸ்டால்கள் மிகக் குறைவு. இருந்த ஆங்கில ஸ்டால்களிலும், ஃபோட்டோக்ராஃபி, சமையல், பல்ப் நாவல்கள் ஆகியவை மட்டுமே முக்கியத்துவம் பெற்றதைக் கண்டேன். இங்கே ப்ளாஸம்ஸ் (Blossoms) என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய புத்தகக்கடை, சர்ச் ஸ்ட்ரீட்டில் உள்ளது. அங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை எனலாம். கேள்வியே படாத புத்தகத்திலிருந்து, பிரபலமான புத்தகம் வரை அத்தனையும் இங்கே கிடைக்கும். தள்ளுபடி விலையில். இங்கே, ஆயிரக்கணக்கில் காமிக்ஸ்களும் உண்டு. அத்தனையும் கிடைப்பதற்கரிய காமிக்ஸ்கள். இவர்களது ஸ்டால், இம்முறை ஜொலித்தது எனலாம். உலக இலக்கியவாதிகளின் பல புத்தகங்களை அங்கே கண்டேன். முக்கியமாக, ஓரான் பாமுக்கின் புத்தகங்கள். சலுகை விலையிலேயே கிடைத்தது. இவர்களது வலைப்பூவில் சென்று, நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேடும் வசதியும் உள்ளது. பெங்களூரில் உள்ள புத்தக ரசிகர்கள் தவறவே விடக்கூடாத ஒரு கடை இது. இவர்களது வலைப்பூ செல்ல, இங்கே க்ளிக்கவும்.

அதே போல், நான் கண்ட இன்னொரு விஷயம், ஸலாம் செண்டர் (Salaam Centre) என்ற முஸ்லிம் அமைப்பின் ஸ்டால்கள், மொத்தம் ஆறு இடங்களில் இருந்தன. ஒவ்வொரு ஸ்டாலும் பெரிய அளவில் இருந்தது. அங்கு சென்ற நாங்கள், பல நாட்களாகக் குரான் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம். குரான் எங்களுக்கு இலவசமாகவே அளிக்கப்பட்டது. அத்தோடுகூட, முகம்மது நபியின் வாழ்வைப் பற்றியும், குரானின் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஒரு டிவிடி வழங்கப்பட்டது. எனக்குப் பொதுவில் பிடித்த ஒரு மதம், இஸ்லாம். உயிரை உருக்கக்கூடிய உர்தூக் கவிதைகள், கவ்வாலிகள் போன்ற பல நல்ல விஷயங்கள் அதில் உண்டு. கரீப் நவாஸ் என்ற க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி, எனக்குப் பிடித்த ஒரு மகான். அவரைப் பற்றிய ரஹ்மானின் பாடலுக்கு நான் செய்த மொழிபெயர்ப்பை இங்கே படிக்கலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்குப் பிடிக்காத ஒரே அம்சம் என்னவெனில், இவர்களது ஸ்டால்கள் அத்தனையிலும் ஒரு பெரிய டிவியை வைத்து, ஹிந்துமதத்தை விமர்சிக்கும் உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர். அதுவும், ஹிந்துமதத்தின் கடவுள்களின் பெயரைச் சொல்லியே. அவ்வளவு பெரிய அரங்கில், இப்படிச் செய்வது, வீண் சண்டைகளுக்கு வழிவகுத்துவிடும் அல்லவா? மேலும், நாங்கள் அங்கு இருக்கும்போதே, பட்டு வேட்டியும் வெள்ளைச் சட்டையும், நெற்றியில் விபூதியும் அணிந்த ஒரு நபர், இந்த ஒளிபரப்பைப் பொருமிக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது. தனது நண்பரிடம், உரத்த குரலில் அவர் விமர்சித்ததையும் கேட்டோம். இதைப் போன்ற பொது நிகழ்ச்சிகளில், எந்த மதத்தையும் யாரும் விமர்சிப்பது, பிரச்னையை வரவழைக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. குறிப்பாக இந்தியாவில்.

உயிர்மை ஸ்டாலில் சென்று ஒரு நோட்டம் விட்டேன். சாரு, எஸ்.ரா மறும் ஜெயமோகன் புத்தகங்கள் பெருமளவில் இருந்தன. இன்னமும் பல புத்தகங்களையும் கண்டேன். அங்கே சென்று நான் வாங்கியது, ‘புனைவின் நிழல்’. நமது மனோஜ் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. பல வருடங்களாக வாங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம். இப்புத்தகத்தைப் பற்றிய நல்ல விமர்சனக் கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இன்னமும் புத்தகம் படிக்க ஆரம்பிக்கவில்லை. சென்னைக்கு, வரும் டிசம்பரில் செல்வதற்குள் படித்து முடித்துவிடுவேன். இதைப்பற்றி அவருக்கு ஃபேஸ்புக்கில் நான் மெஸேஜ் செய்தபோது, அவரது பதில் இங்கே: ‘படிச்சுட்டு வாங்க காமராஜர் அரங்க ஜோதியில் கலக்கும்போது பேசலாம். என்னுடைய புத்தக வெளியீட்டை நேரு வெளிவிளையாட்டு அரங்கில் வைக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். உங்கள் கருத்து என்ன?’ . மனிதருக்கு நக்கலைப் பார்த்தீர்கள் அல்லவா? 🙂பல நாட்களாகச் சொல்லி வைத்து, நேற்று வாங்கிய அடுத்த கேம், Assassin’s Creed II. ஸப்னா புக் ஹௌஸில் வாங்கினேன். கேம் பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கம். 80 ஃபீட் ரோடில், சிஎம்ஹச் மருத்துவமனைக்கு மிக அருகில் உள்ளது. அத்தனை வகைக் கேம்களும் இங்கே உள்ளன. உள்ளே சென்றால், எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாமல் விழிப்பீர்கள். அஸாஸின்’ஸ் க்ரீட் முதல் பாகத்தின் விமர்சனம் இங்கே படிக்கலாம். அதை விளையாடும்போதே இரண்டாவது பாகத்தை உடனே விளையாடவேண்டும் என்று விரும்பி, ஆனால் எங்கும் கிடைக்காமல் ஸப்னாவில் சொல்லி வைத்திருந்தேன். அதனை இப்போது தான் வாங்க நேரிட்டது. முதல் பாகத்தை விட, இதில் கிராஃபிக்ஸ் கலக்கலாக இருக்கிறது. அதேபோல், நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நேற்று இரவு தான் ஆரம்பித்தேன்.

யூபிஸாஃப்ட், பயங்கரமாக சொதப்பிய ஒரு கேமும் இது ஆகும். விஷயம் என்னவெனில், காப்பியடிப்பதைத் தவிர்க்க, இண்டர்நெட் இருந்தால்தான் இதனை விளையாட முடியும் என்ற ஒரு முட்டாள்தனமான விஷயத்தை இதில் வைத்திருக்கிறார்கள். இதனால், ஆடும்போது இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டால், உடனே கேம் நின்று, வெளியே உள்ள மெனுவுக்கு வந்துவிடுகிறது. இது எவ்வளவு எரிச்சலான விஷயம்? எனவே, கேமை இன்ஸ்டால் செய்த உடனே, ஆஃப்லைனில் விளையாடும் க்ராக்கை இண்டெர்நெட்டில் பிடித்து, இன்ஸ்டால் செய்துவிட்டேன். இப்போது அருமையாக விளையாடமுடிகிறது. இண்டெர்நெட் இல்லாமலேயே. பாவம் யூபிஸாஃப்ட். அவர்கள் கண் முன்னரே இது நடந்தாலும், அவர்கள் இப்போது ‘ஙே’ என்று விழித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.

கேம் பிரியர்கள் இந்த்க் கேமைத் தவறவிட்டுவிடாதீர்கள். பதிமூன்றாம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் வளமிக்க நகரங்களில் நடக்கும் ஒரு அசத்தலான கேம் இது. ஒரு கொலையாளி. அவன் செய்யும் கொலைகளால், ஐரோப்பாவின் தலையெழுத்தே மாறுகிறது. ஆரம்பித்த சில நிமிடங்களில், லியனார்டோ டவின்சியைச் சந்தித்துவிட்டேன். மனிதர் வெகு இளமையாக இருக்கிறார். கேமின் நாயகன் என்ஸியோவின் தாயாரின் நண்பர். இப்பொழுதுதான் ஓவியங்கள் வரைய ஆரம்பித்திருக்கிறார். வருங்காலத்தில் புகழடைய வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார். அவரிடம் உள்ள பல வரைபடங்களை இந்தக் கேமில் இனிவரும் பகுதிகளில் உபயோகிக்க வேண்டிவரும்.

இந்த கேமில் வரும் லியனார்டோவின் முக்கியமான ஒரு வரைபடம், ஆர்நிதோப்டர் (Ornithopter) என்பதே. பெரியதொரு பறவை போல வடிவமைக்கப்பட்ட இந்த ஆர்நிதோப்டரின் இறக்கைகளை அடித்துக் கொள்வதன்மூலம், பறக்க இயலும். 1485ல், லியனார்டோ டவின்சி, ஒரு வரைபடத்தை உருவாக்கினார். ஒரு பெரிய மரப்பலகையில் படுத்துக்கொண்டு, இருபுறமும் உள்ள இறக்கைகள் போன்ற அமைப்புகளை ஒரு விசையின் உதவியோடு இயக்குவதால், மனிதன் வானில் பறக்கவியலும் என்று வலியுறுத்தும் வரைபடம் அது. ஆனால், இதற்குச் செயல்வடிவம் கொடுக்க அவரால் இயலவில்லை. முதல் ஆர்நிதோப்டர், 1870ல் வடிவமைக்கப்பட்டதாக இணையம் கூறுகிறது.

அதனால் என்ன? இந்தக் கேமில் ஆர்நிதோப்டர் வருகிறது. லியனார்டோவால் வடிவமைக்க முடிந்த ஒரு கருவியாகவே இது இந்தக் கேமில் சொல்லப்படுகிறது. இதனை, ஹீரோ எஸியோ ஒரு குறிப்பிட்ட எபிஸோடில் இயக்குகிறான். அந்த எபிஸோடுக்காகக் காத்திருக்கிறேன்.


நேற்றுப் பார்த்த ஒரு அருமையான உலகப்படம், அபர்ணா சென்னின் ‘The Japanese Wife(2010). ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சற்றுக்கூட அலுக்காமல், மிக அழகான படமாக்கத்துடன் இருந்த படம் இது. வெகு நாட்களுக்குப் பின்னர், படத்தின் இறுதியில், என்னையறியாமலே அழுதுகொண்டு இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவர், நண்பர் கீதப்ரியன். அவரது பதிவை, இங்கே படிக்கலாம். அதேபோல், நண்பர் உமாஷக்தி, அபர்ணா சென்னையும் இப்படத்தையும் பற்றி எழுதிய இடுகையை இங்கே படிக்கலாம். நண்பர்கள், இப்படத்தைத் தவற விட்டுவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கடைசிப் பதிவாக இது இருக்கலாம். இந்த வாரம் முழுவதும் அருமையாகச் சென்றது. தமிழ், கொரியன், ஸ்பானிஷ் மற்றும் வங்காளப்படங்களைப் பார்க்க முடிந்தது. அவை அனைத்துமே மணிமணியான படங்களும் கூட. இப்போது ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் எழுத நினைத்திருந்த படம், உண்மையில் முள்ளும் மலரும் படமேயாகும். ஆனால், பார்த்தபோது, அவ்வளவு சுவாரஸ்யமாக அது செல்லவில்லை. பல இடங்களில் போர் அடித்தது. ஆகையால்தான் முதல் மரியாதை எழுதினேன். இப்படம், எந்த இடத்திலும் போர் அடிக்கவே இல்லை. ஜாலியாகவும் சென்றது. இது எனது தனிப்பட்ட கருத்து.

அதேபோல், தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில், எனது தளத்தில், ‘சில நல்ல வலைப்பூக்கள்’ என்ற பகுதியில் வந்துகொண்டிருக்கும் வலைப்பூக்கள் அனைத்துமே மிக நல்ல வலைப்பூக்கள். சுவாரஸ்யம் மிக்கவை. இவர்கள் அனைவருக்கும், இந்த வார நட்சத்திர வாய்ப்பை அவர்கள் வழங்க வேண்டும். இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே. பல துறைகளிலும் இருக்கும் நல்ல செய்திகளைப் பற்றி இந்த வலைப்பூக்கள் மூலம் அறிய முடிகிறது. படிப்பவர்களுக்கும் விருந்தாக அமைகின்றன இந்த வலைப்பூக்கள்.

சரி. கருந்தேள் டைம்ஸின் இரண்டாவது எபிஸோடை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வெகுவிரைவில், இன்னொரு பட விமர்சனத்தோடு சந்திப்போம். நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கூறி ஆதரவளித்த நண்பர்களுக்கு எனது நன்றிகளும் அன்பும். வாழ்த்துக் கூறாத நண்பர்களுக்கு – இன்னமும் ஒரு நாள் இருக்கிறது 🙂 . There is still a day left, guys.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

30 Comments

 1. யார் அந்த ரகுமான்? அடி வவுத்துல புண்ணு வந்தா மாதிரி கத்துவானே அவனா?அட்ரா அட்ரா

  Reply
 2. நண்பா
  அட்டகாசமான ஒன்று
  Assassin’s Creed II. பற்றிய அறிமுகத்திற்கும்.புத்தக கண்காட்சியை பற்றி பகிர்ந்தமைக்கும் நன்றி,மத நல்லிணக்கம் பேணுவதில் இந்துக்கள் முஸ்லிம்கள் இருவரின் பங்கும் இன்றியமையாதது,நீங்கள் மேலே சொன்ன அது போல துவேஷிகளால் தான் அதற்கும் பங்கம் வந்துவிடுகிறது,இவர்களும் ஆர் எஸ் எஸ் போன்றே ஆபத்தானவர்கள்.

  Reply
 3. This comment has been removed by the author.

  Reply
 4. pathivirku vanthanam

  Reply
 5. நண்பரே நல்ல பதிவு.

  அந்த இஸ்லாமிய கடைகளில் சில DVD-களை எனக்கு விலைக்குக்கூட கொடுக்க மறுத்துவிட்டனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதனால் குர்ரான் வாங்க ஆசைப்பட்டாலும், தயக்கத்தில் வாங்கவில்லை.

  Stand Bookstall-தான் பெங்களூரில் புத்தகங்களுக்கு எனக்கு மிகவும் பிடித்த கடை. Blossoms-ஐயும் சென்று பார்க்கிறேன்.

  நான் ஏற்கெனவே சொன்னதுபோல, Games-களை Hyper Books-ல் வாங்குங்கள். 10% தள்ளுபடி தருகிறார்கள். நேற்று Assasin’s Creed I வாங்க நினைத்து, வாங்காமல் வந்துவிட்டேன். இன்று இதைப் படித்ததும் வருந்துகிறேன். ஆனால், Oblivion IV விறுவிறுப்பாகச் செல்வதால் (சினிமா, Games இதுக்கெல்லாம் நான் ரொம்ப லேட்டு), அதை முடித்துவிட்டுத்தான் வாங்கவேண்டும்.

  //அதேபோல், தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில், எனது தளத்தில், ‘சில நல்ல வலைப்பூக்கள்’ என்ற பகுதியில் வந்துகொண்டிருக்கும் வலைப்பூக்கள் அனைத்துமே மிக நல்ல வலைப்பூக்கள்//

  அதில் நீங்கள் என்னுடய தளத்தை இணைத்த பிறகுதான், அதிகம் பேர் வருகிறார்கள். நெல்லுக்கு இரைத்த நீர்….

  இப்போது உரம் வேறு கிடைக்கும் போலிருக்கிறதே 🙂

  Anyway, இந்த வாரக் கருந்தேள் டைம்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது. (காரணம் சொல்லணுமா, என்ன?)

  Reply
 6. இதை இதை இதை தான் எதிர்பார்க்கிறேன்…. கருந்தேள் டைம்ஸ் wonderful
  Raaj !!! keep it up.

  காலமும் ரகசியுங்களுக்காக ஏங்கி கிடக்கும் ரம்மியமான அதிகாலை பொழுதுகளில் , அன்று புலர்ந்த பசும்புல் தென்றலுடன் சஞ்சரிக்கும் அற்புத தருணங்களில் மட்டுமே பனித்துளிகள் காணக்கிடைக்கின்றன.

  அது போல , வாழ்வின் வெகு சில உன்னத தருணங்களில், நம்மை நாம் தொலைத்து வேறொரு உலகில் உலவும் கணங்களில் மட்டுமே விழிநீர் திரையில் எட்டி பார்க்கிறது.

  ஏனோ,சிறுகதைகள் வாசிக்கும் போதும், அரிதான சில திரை படக்காட்சிகளிலும் மட்டுமே உண்மையாய் அழ முடிகிறது.

  The peer pressure in this materialistic world blunts all our emotions in reality Raaj…. am shameless to say that, I got used to pass through tough moments with the eyes wide open and ears unshut and pass through it.

  juz now watched Guzaarish movie…. tears rolled down my eyes twice in this bhansalis masterpiece. After black, he proved it again. juz try to watch in movie halls if you can.

  note- Heard rave reviews of Black and Guzaarish, by comparing with Helen kellers story and Christopher Nolans THE PRESTIGE , but I welcome his move a lot. Bollywood is improving a lot, while Tamil cinema is moving 2 stone age under the shield of யதார்த்த சினிமா (sadly these directors consider unshaven faces and dirty lungies as the only yadartham !!!)

  Reply
 7. Assassin’s Creed II செம கிராபிக்ஸ் உள்ள கேம்தான்! நான் இன்னும் விளையாடி பார்க்கவில்லை!
  The Japanese Wife நன்றாக இருந்தது.
  தமிழ்மண நட்சத்திர வாரத்திற்கு மீண்டும் வாழ்த்துக்கள்!

  Reply
 8. சிறப்பான வாரம் ராஜேஷ். ஜப்பானிஷ் வொய்ப்.. பார்க்க நினைத்துக்கொண்டிருக்கும் படம்.

  முள்ளும் மலரும் படம் போரடிக்கிறது என்றா சொல்கிறீர்கள்? அந்தப் படத்தைப் பற்றியும் எழுதுங்கள் பாஸ்.

  Reply
 9. அன்பின் ராஜேஷ் தமிழ்மணநிறைவுக்கு வாழ்த்துக்கள்.. அதே போல கருந்தேள் டைம்ஸ் அற்புதம்தொடர்ந்து கலக்குங்கள்.

  Reply
 10. நண்பரே,

  அஸஸான் க்ரீட்- பிரதர்ஹூட் எனும் விளையாட்டு இங்கு இம்மாதம் 18ம் திகதி வெளியானது. செமையான விளம்பரங்களுடன். நீங்கள் கூறியிருப்பதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சிறுகதை தொகுப்பை குறித்து தவறாது பதிந்திடுங்கள். வரும் மாதங்களில் புத்தக கண்காட்சி- சென்னை- ரவுண்ட் அப்பையும் போட்டுத் தாக்குங்கள். இந்த வார அல்லது மாத சிட்டு எனும் பகுதி பல இளம் உள்ளங்களை கவரும் என்பதை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் :))

  Reply
 11. புத்தகங்களை மட்டுமில்லாது புத்தகக் கடைகளையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பா!

  Reply
 12. உங்கசைட்டுக்கு என்னோட மெக்காஃபே சவுண்டுவிடுது. என்னன்னு கவனிங்க!

  Reply
 13. மறுபடியும் இன்னொரு 1500 மைல் ரோட் ட்ரிப். நேற்றுதான் வீடு வந்தேன் நண்பரே.

  நட்சத்திர வாழ்த்துகள் தோழர்!!!!!!!!! 🙂

  Reply
 14. Assassin’s creed 1st part விளையாடிட்டு இருக்கேன். 2ண்ட் டொந்ன்லொஅடிங். ஒரிஜனல் கேம்வாங்கிதான் விளையாடுறீங்களோ?

  Reply
 15. அப்புறம் ஒரு கேம்ல இருந்து ட்ரஸ்ஸ சுட்டுபோட்டிருக்கோம்னு வேலாயுதத்திலன்னு டேரடக்கரே சொன்னாரு, அது இதுதானா?

  Reply
 16. ம்க்கும்..ம்க்கும்…:))

  Japanese Wife கார்த்திகேயன் விமர்சனம் போடமுன்னாடியே பார்த்துட்டேன் தல…நானும் போட்டிருந்தா எம்பேரும் வந்திருக்கும்.:)) ஜஸ்ட் மிஸ்…கருந்தேள் பிளாக்ல நம்மபேருவர்றது சாதாராண விசயமா
  ( உள்குத்தும் எதுவும் இல்லை) 🙂

  Reply
 17. // யார் அந்த ரகுமான்? அடி வவுத்துல புண்ணு வந்தா மாதிரி கத்துவானே அவனா?அட்ரா அட்ரா//

  நண்பரே ராம்சாமி உங்களுக்கு பிடிக்கலைன்னா…அவர் புண்ணுவந்து கத்துபவரா… அவரைப்பற்றி என்னத்தெரியும் உங்களுக்கு… அவரின் தமிழ் பாடல்கள் அல்லாமல் சூஃபி பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? ஒருவரை பற்றி விமர்சனம் பண்ண அவரைப்பற்றி பாதியாவது தெரிந்திருக்கவேண்டும்…

  Reply
 18. புத்தக கண்காட்சியல் இந்தமத பிரசங்கங்கள் நடப்பது இப்போ சாராணவிசயமாகிவிட்டது. கண்காட்சிக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லாமல் நடக்கிறது. எங்கள் ஊரில் நடந்த பு.கண்காட்சியில் இதைப்பார்த்தேன். சைக்கிள் கேப்புல பாயாசம் வச்சிடறானுங்க…:))

  Reply
 19. Tamil said…

  மறுபடியும் இன்னொரு 1500 மைல் ரோட் ட்ரிப். நேற்றுதான் வீடு வந்தேன் நண்பரே.

  நட்சத்திர வாழ்த்துகள் தோழர்!!!!!!!!! 🙂

  ===============
  இங்க பாருய்யா,ஓ புதுசா தோழர் வேற!!!முதல்வன் மச்சம் மாதிரியா?

  புது பேரு,தல,நீங்க அக்கரைச்சீமைல ஒழிக ஒழிகன்னு போடும்போதே அது பாலா தான்ன்னு தெரிஞ்சிபோச்சி.ஹாஹாஹா. நீங்க மீண்டும் வரும் வரை ஓயாமல் மீள்பதிவுகள் தொடரும்,மீள்வாசிப்பும் பிரமிக்க வைக்கிறது.
  அது போல நடை எழுத நீங்க மட்டும் தான்.

  Reply
 20. எனக்கு பிடித்த உங்கள் பதிவுகளில் கண்டிப்பாக இதுவும் ஒன்று…..படித்த பிறகு ரொம்பவே திருப்தியா இருந்தது….

  Reply
 21. ஒழுங்கா போய்கிட்டியிருக்குறத யாரும் கெடுக்காம இருந்தா சரி…

  (ஆனாலும் நாகர்கோயில்காரங்களுக்கு ரொம்பதான் கோபம் வருது)

  Reply
 22. assassins creed 2 is really better than the first ,especially the da vinci episodes ,in thz episode there are really lot of villains to assassin .then ac 3 is released for x box waiting for the pc release .in thz second part expect an unexpected climax

  Reply
 23. //இங்க பாருய்யா,ஓ புதுசா தோழர் வேற!!!முதல்வன் மச்சம் மாதிரியா?

  புது பேரு,தல,நீங்க அக்கரைச்சீமைல ஒழிக ஒழிகன்னு போடும்போதே அது பாலா தான்ன்னு தெரிஞ்சிபோச்சி.ஹாஹாஹா. நீங்க மீண்டும் வரும் வரை ஓயாமல் மீள்பதிவுகள் தொடரும்,மீள்வாசிப்பும் பிரமிக்க வைக்கிறது.
  அது போல நடை எழுத நீங்க மட்டும் தான்.//

  நண்பரே கருந்தேள்…! யாரிவர்? ஏனிப்படி என்னிடம் பேசுகிறார்? யார் அந்த தலை? பரவாயில்லை விடுங்கள்.

  தாங்கள்.. ‘Call of Duty’ தொடரை முயற்சி செய்திருக்கிறீர்களா? விளையாட்டுக்கள் அனைத்தும் PC-யிலிருந்து PS3/XBox-ற்கு மாறி வருடங்கள் ஆகின்றன நண்பரே.

  ஒரு PS3 வாங்கினீர்கள் என்றால்… ஒரு குழுமத்தை அதில் ஏற்படுத்தி… நாம் விளையாடலாமே?!

  தோழர் கார்த்திக்கேயன்.., நீங்களும்தான்!!!

  [என்ன எழவுடா சாமி. தமிழ்ல எழுதறது ரொம்ப கஷ்டமடா ராசா]

  Reply
 24. எல்லா மதங்களும்(கடவுள்களும் )மனிதனால் உருவாக்கப்பட இரண்டே இரண்டு காரணங்கள் :
  1.மக்களை ஒருவித பயத்திலேயே வைத்துகொண்டு பிரித்தாளும் சூழ்ச்சி
  2. பெண்களை அடிமைப்படுத்த
  அனைத்து மதங்களின் கடவுள்களும் உண்மையெனில் இப்போது உலகில் மனிதனை விட கடவுளே அதிகம் இருக்கும்.
  எல்லாம் Bertand Russell ‘s Teapot theory தான் .மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
  மதம் இன்றைய தேவை இல்லை.மனிதம்தான் தேவை.
  நான் தலைவர் சே வழியில் வாழ்பவன்
  நன்றி

  Reply
 25. நண்பரே ராம்சாமி உங்களுக்கு பிடிக்கலைன்னா…அவர் புண்ணுவந்து கத்துபவரா… அவரைப்பற்றி என்னத்தெரியும் உங்களுக்கு… அவரின் தமிழ் பாடல்கள் அல்லாமல் சூஃபி பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? ஒருவரை பற்றி விமர்சனம் பண்ண அவரைப்பற்றி பாதியாவது தெரிந்திருக்கவேண்டும்…////
  .
  .
  அப்பா உனக்கு அவன பத்தி எல்லாம் டேஹ்ரியுமா?அவனுக்கு எங்க அரிக்கிது உட்பட?
  அப்புறம் எதோ ஆஸ்கார் வாங்கிட்டா பெரிய இசையமைப்பாலரா?அதே 2008 ஆண்டு வந்த curious case of benjamin button அப்புறம் The reader இந்த இரண்டு படங்களை விட slumdog பின்னணி இசை ஒன்னும் பெருசா இல்லை(படமும்தான்).
  அப்புறம் Dark knight படத்த விட sound effects slumdog படத்துல ஒன்னும் இல்ல.எல்லாம் பளுக் தான்.இதை எந்த நடுநிலையாளரும் ஒப்பு கொள்வர்.
  சூப் சூபி இத வச்சி மட்டும் ஒருவரின் தெறமைய கணக்கு போடணும்னா மசூதி முன்னால் உட்கார்ந்து பாடும் சாதாரண ஒரு ஏழை இசையமைப்பாளரே சிறந்தவர்.
  ஏதோ லக் அவ்வளுவ்தான்(இதுக்கு மேலையும் ஒனக்கு புரியலனா ஷாஜி கட்டுரையை படிக்கவும். )

  Reply
 26. //ஏதோ லக் அவ்வளுவ்தான்(இதுக்கு மேலையும் ஒனக்கு புரியலனா ஷாஜி கட்டுரையை படிக்கவும்//

  ஓகோ…நீரு அந்த கோஷ்டியா…. அடதேவுடா…இதுதெரியுமா….கமணட்போட்டு தொலைச்சுட்டேனே…ஒருகமண்ட்டு வேஸ்டுய்யா……

  Reply
 27. ஆமா நீ அந்த பீரு நிவேதிதா கோஷ்டியா?
  சரி 2000 திற்கு பிறகு அவன் போட்ட மியூசிக் ஏதாவது ஒழுங்கா இருக்கா?
  பரசுராம், அள்ளி அர்ஜுனா, கண்களால் கைது செய், ஸ்டார்,எனக்கு ஒன்பது உனக்கு பத்து இது போன்ற இசையில் கிழித்த படங்களின் பாடல்களை கேட்டுட்டு மூடு நீ
  அவனே என்..டிரா எந்தத்…இரா..உட்கா..ர்ருரா அப்படின்னு கத்துறான்..அது இசையா?
  எல்லா புகழும் இறைவக்குனாம்..அப்போ எல்லா 5 கோடி சம்பளமும் ஆஸ்கார் அவார்டும் இவனுக்கே..அச்சாடா .
  துபைல ___கழுவுரவன்லாம் இணையம் பயன்படுத்த ஆரம்பிச்ச இப்படிதான்

  Reply
 28. //துபைல ___கழுவுரவன்லாம் இணையம் பயன்படுத்த ஆரம்பிச்ச இப்படிதான்//

  :)) I like it…

  Reply
 29. ‘காந்தி செதுதுட்டாரான்னு கேக்காதீங்க’. இப்ப தான் நீங்க தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதை பார்த்தேன். வாழ்த்துக்கள்…

  Reply

Join the conversation