December2010

புனைவின் நிழல்

December 30, 2010
/   Book Reviews

சிறுகதைகள் மேல் எனக்கு ஒரு கண் உண்டு. சிறுகதைகள் எழுதத் தொடங்கலாம் என்றெல்லாம் எப்பொழுதாவது ஒரு விபரீத ஆசை என்னுள் எழும். ஆமாம். பின்னே? எப்படி சில நடிகர்கள், தேமேயென்று சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்துவிட்டு, பின்னர் திடீரென்று தனக்கு எழும் விசிறிகள் கூட்டத்தைக் கண்டு மதிமயங்கி...

மன்மதன் அம்பு (2010) – விமர்சனம்

December 25, 2010
/   Tamil cinema

மன்மதன் அம்பு படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இன்னொரு படத்தைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். Romance on the High Seas என்பது படத்தின் பெயர். வெளிவந்த ஆண்டு – 1946. படத்தின் கதை? கணவன், மனைவி ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல். அந்த...

Dersu Uzala (1975) – Russian

December 22, 2010
/   world cinema

மறுபடியும் குரஸவா. இம்முறை, ஆஸ்கர்களில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது (1976ல்) பெற்ற ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம். ஆனால், இது ஜப்பானியப் படம் அல்ல. ரஷ்யப் படம். குரஸவா முதன்முதலில் இயக்கிய ஜப்பானியப் படமல்லாத ஒரு வெளிநாட்டுப் படம் இது. தலைசிறந்த இயக்குநர்களுக்கு எங்கே சென்றாலும்...

பெண்ணியம்? கிலோ என்ன விலை ?

December 20, 2010
/   Social issues

ஒரு அருமையான உலகப்பட விமர்சனம் எழுதவேண்டிய நேரத்தில், அதற்குச் சற்றும் சம்மந்தமில்லாத வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவும் முக்கியம்தான். நேற்று விஜய் டிவியில் நீயா நானா பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு, ‘பெண்ணியவாதிகள் Vs குடும்பத்தலைவிகள்’ என்பது. இந்த இருசாராரின் பக்க...

Stephen King and the Darabont Redemption – கட்டுரை

December 18, 2010
/   English films

திரைப்பட ரசிகர்களால் என்றுமே மறக்கவியலாத ஒரு திரைப்படம் – The Shawshank Redemption. நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்ததற்கு முதல் காரணி, இந்தப் படம்தான். 2000த்தில், HBO வந்த புதிதில், ஒரு நாள் நள்ளிரவில் இத்திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க ஆரம்பித்து, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றேன். அன்றிலிருந்து...

கருந்தேள் டைம்ஸ் – 3

December 16, 2010
/   Charu

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது?...

நந்தலாலா – மூலமும் நகலும்

December 2, 2010
/   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....