கருந்தேள் டைம்ஸ் – 3

by Rajesh December 16, 2010   Charu

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது? இப்போதெல்லாம் மினரல் வாட்டர் குடிப்பதற்குப் பதில் லிம்கா குடிப்பதுதான் எனக்குப் பிடிக்கிறது. லிம்காவில் உள்ள ஒரு ‘ஜிவ்’ness தான் காரணம். எனவே, லிம்கா பாட்டில்கள் வாங்கிக்கொண்டு, சென்னை சென்றேன்.

காமராஜர் அரங்கத்தை, நண்பன் சுரேஷோடு அடையும்போது மணி – 5.25. ஒரு காப்பியை அடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், நண்பர் கீதப்ரியன். பல நாட்கள் கழித்து அவரை முதன்முதலில் பார்த்ததுபோலவே இல்லை. ஏற்கெனவே பல முறை பார்த்துப் பழகிய உணர்வே இருந்தது. சரியாக அதே நேரத்தில், பெங்களூரில், ஷ்ரீயின் வண்டியில் இடித்துவிட்ட ஒரு தடிப்பயல் (பின்னே? நின்றுகொண்டிருந்த வண்டியின் மீது வந்து இடிப்பவனை வேறு என்னவென்று அழைப்பது? அதிலும், அவனது வண்டியில் மொத்தம் மூன்று பேர். ஓட்டிய எருமை, கர்ப்பிணி மனைவி ப்ளஸ் அவனது பையன்), ஷ்ரீயிடம் பிரச்னை செய்ய, அவனைத் திட்டிவிட்டு எனக்கு அழைத்தாள் ஷ்ரீ. அவளிடம் சற்றுநேரம் பேசினேன். பெங்களூரின் கடுமையான ட்ராஃபிக் நெரிசலில், சமயத்தில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துவிடுகின்றன. அதிலும், ஓட்டுவது பெண் என்று தெரிந்தால், எகிறும் ஆண்கள் இங்கே அதிகம். நல்லவேளையாக, ஷ்ரீக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஷ்ரீயிடம் பேசியபிறகு, அரங்கின் வாயிலுக்குச் சென்றேன். சுரேஷுடன். நண்பர்கள் தயாநிதி மற்றும் முரளி வந்து இணைந்துகொள்ள, கலந்துகொள்ள வரும் வாசக நண்பர்களுக்கு இனிப்பும் தண்ணீரும் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தோம். இடையிடையே பல நண்பர்களையும் சந்தித்தேன். கருந்தேளைத் தொடர்ந்து படித்து, ஆதரவு அளித்துவரும் நண்பர்கள். அத்தனை பேரும் ஃபேஸ்புக் பக்கம் வரவும். அடி பின்னலாம். மட்டுமல்லாமல், நண்பர் ஜாக்கி சேகரையும் முதல்முறையாக சந்தித்தேன்.

சரியாக அந்த நேரத்தில், நண்பர் மயிலிடம் இருந்து ஒரு ஃபோன். அவர் எப்படியோ அரங்கினுள் சென்றுவிட்டார். வாயிலில் இருந்த எனக்கே தெரியாமல். அங்கே கீதப்ரியனைப் பிடித்த அவர், சக பதிவர்களுடன் சென்று அமர, அவரைப் பாதி நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவரையும் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன் (இதைப் பற்றி ஏற்கனவே எழுத மறந்துவிட்டேன். மயிலிடமிருந்து வந்த காரசாரமான ஃபோனைப் பார்த்ததுமே நினைவு வந்துவிட்டது 🙂 .. )

நிகழ்ச்சி தொடங்கும் அறிகுறிகள் தெரிந்ததும் உள்ளே சென்றோம். மனுஷ்யபுத்திரன் பேசினார். அதன்பின், நல்லி குப்புசாமி செட்டியார் பேச, அவரைத் தொடர்ந்து நடராஜன் பேசினார். பேச்சின் விபரங்கள் எல்லாம் நான் தரப்போவதில்லை. எனக்கு மிகவும் பிடித்த பேச்சு, எஸ். ராமகிருஷ்ணனுடையது. ‘தேகம்’ பற்றிய அற்புதமான அலசலாக அது இருந்தது. தேகத்தில் கையாளப்படும் வாதையைப் பற்றியும், இலக்கியத்தில் அதன் தேவையைப் பற்றியும் மிகச் சுவாரஸ்யமாக நீண்ட நேரம் பேசினார். தான் இப்படி ஒரு நாவலை எழுத மாட்டேன் என்று சொன்னவர், இலக்கியத்தில் இதன் தேவையை மனதார வரவேற்பதாயும் சொன்னார்.

அதேபோல், அதற்குமுன் பேசிய மதனின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது. உலக இலக்கியத்தில் இருந்து சில உதாரணங்களைக் கொடுத்து, கலகலப்பூட்டினார். எதிர்க்குரல் எழுப்புவது அவசியம் தேவையான ஒன்று என்றும், அப்படி சாரு அவரது கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்துவதை ஆதரிக்கவே அவர் இங்கே வந்து அமர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அதே சமயம், சாருவின் மிகக் கடுமையான கருத்துக்களைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு, இனி எழுத வேண்டும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே சொன்னதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

கனிமொழியும் தமிழச்சியும் வழக்கப்படியே சுவாரஸ்யமாகப் பேசிச் சென்றனர்.

அதன்பின் மேடையேறிய மிஷ்கினின் பேச்சு, நந்தலாலாவின் பாஸ்கர் மணியே வந்து பேசியதைப் போல் படு காமெடியாக அமைந்தது. முன்னுக்குப் பின் முரணாகப் பல கருத்துகளை எடுத்துவைத்த மிஷ்கின், பேச்சு ஆரம்பித்த சில நொடிகளிலேயே நந்தலாலாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து, இது காப்பியே அல்ல என்றும், அவரது சொந்தக்கதைதான் என்றும் கூறி, காப்பி காப்பி என்று சொல்கிறீர்களே.. படத்தின் இந்த ஷாட்டுக்கு எனக்கு இருபது நாட்கள் ஆயின.. அந்த ஷாட்டுக்கு எனக்கு முப்பது நாட்கள் ஆயின என்றும் ஆவேசப்பட்டு, இதைப்பற்றி ஒரு பயலாவது இதுவரை சொல்லவில்லை என்றும் கூறி அவரது கோபத்தை வெளிப்படுத்தினார். சமாளிப்புகளை வாரி வழங்கிய மிஷ்கின், ஒரு விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டார். படத்தின் ஷாட்டுகள் எடுக்க அவருக்கு எவ்வளவு நாட்கள் எடுத்திருந்தாலும், காப்பி அல்ல காப்பி அல்ல என்றே பல சமாளிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தபோதே அது காப்பி என்று அவர் ஒத்துக்கொண்டதாகத்தான் அர்த்தம் அல்லவா?

மேலும், அவர் என்ன சால்ஜாப்புகள் வழங்கினாலும் சரி, கிகுஜிரோவின் காப்பிதான் நந்தலாலா என்பதனை, தமிழ்நாட்டின் கடைக்கோடி சினிமா ரசிகனிலிருந்து அனைவரும் தெரிந்துகொண்டாயிற்று. இனி அதனை எப்படி சோற்றில் மறைக்க முடியும்? நிற்க. ’தேகம்’ நாவலை விமர்சனம் செய்யவந்த மிஷ்கின், ‘நைட்டு சரக்கடிச்சிக்கினே அதைப்பத்தி பேசலாம்’ என்று இரண்டுமுறை குறிப்பிட்டார். சென்றவருடம் பேசியபோதும் இதையே சொன்ன மிஷ்கின், இரவு விருந்துக்கு வரவே இல்லை. அதேபோல், தேகம், சரோஜாதேவி புத்தகம் போலவே இருந்தது என்று வேறு ஒரு அறிக்கையைப் போகிறபோக்கில் வீசினார். ஆனால் தேகத்தை அவர் படிக்கவே இல்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிந்துபோனது.

மொத்தத்தில், படு உளறலாக அமைந்த அவரது பேச்சுக்குப் பிறது வந்த ராமகிருஷ்ணன், தேகத்தைப் பற்றி அட்டகாசமாகத் தனது கருத்துகளை எடுத்து வைத்தார்.

பிறகு நன்றியுரையை வழங்கிய சாரு, தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் மீடியாவினால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வருவதை ஒரு பிடி பிடித்தார். அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றியுரைத்து, விழாவை இனிதே முடித்தார் சாரு.

விழாவின் புகைப்படங்கள் – நண்பர் செல்வகுமார் க்ளிக்கியவை – இங்கே.

விழா முடிந்ததும், நமது பட்டர்ஃப்ளை சூர்யாவைப் பார்த்துப் பேச முடிந்தது, சென்ற விழாவில், எதிரெதிரே அமர்ந்து நாங்கள் இருவரும் ‘லிம்கா’ அருந்தியபோதும், ஒருவரையொருவர் அடையாளம் தெரியாமல் போய், பேசவே இல்லை. அதற்கு வட்டியும் முதலுமாக, இம்முறை, சூர்யாவுடன் கொஞ்ச நேரம் அளவளாவ முடிந்தது. அதேபோல், கேபிளை, ஒரு வருடம் கழித்து சந்தித்தேன்.

அதன்பின், அரங்கிலிருந்து நேரே பெனின்சுலாவுக்கு வண்டியை விட்டோம். அங்குதானே முக்கியமான கச்சேரியே !

இருபது நண்பர்கள் முன்னிலையில், ‘லிம்கா’வோடு, அளவளாவல் ஆரம்பித்தது. கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் (பிச்சாவரத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஒரு கேங்), நமது மனோஜ், நண்பர்கள் பாஸ்கர், முரளி, சுரேஷ், ஸ்ரீனிவாசன், நர்சிம், கேபிள் சங்கர், நமது தர்மசேனர் மற்றும் பல நண்பர்கள் குழுமியிருக்க, இரவு மூன்று வரை பேச்சு தொடர்ந்தது.

அதன்பின் மறுநாள் கிளம்பி, பங்களூர் வந்து சேர்ந்தேன். வரும் வழியிலேயே, பஸ்ஸிலேயே ஏழு புத்தகங்களையும் படித்தாயிற்று.

மறக்கவியலாத ஒரு விழாவாக மாறிப்போனது இந்த விழா.

தொலைக்காட்சி பார்க்கும் நண்பர்களுக்கு ஒரு கேள்வி: சமையல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டா? நம்மூரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் பார்த்துப்பார்த்து சலித்துப்போய், தொலைக்காட்சி பக்கமே செல்லாமல் இருந்த எங்களை, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது. அது, Star World சேனலில் வரும் ‘Masterchef Australia’ என்ற அட்டகாசமான நிகழ்ச்சி. இது ஒரு போட்டி. சுமாராக சமைக்கும் சிலரைத் திரட்டி, ஒவ்வொரு வாரமும் ஒருவரை வெளியேற்றி, அவர்களுக்குள் பல போட்டிகளை அமைத்து, இறுதியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சுவாரஸ்யமான நிகழ்ச்சியே அது.

’அடப்போய்யா’ என்று கிளம்புவதற்குள் மேலும் சில தகவல்களைச் சொல்லிவிடுகிறேன். இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிஸோடுகளில், ஆஸ்த்ரேலியப் பிரதமர் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையே வேறு ஒரு தேதிக்குத் தள்ளிவைத்த தமாஷ் நடந்தது. ரேட்டிங் குறைந்துவிடும் என்பதால். அதேபோல், இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிஸோடை, 4.63 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததாக விகிபீடியா கூறுகிறது.

இதில் வரும் போட்டியாளர்கள் சமைக்கும் உணவுகள், பார்த்தமாத்திரத்தில் நமது வாயில் இருந்து நீரை கேலன் கேலனாக வெளியே தள்ளுகின்றன. உதாரணத்துக்கு இந்தப் படங்களைப் பாருங்கள்.

சிக்கன், மட்டன், போர்க், பீஃப், மீன், ப்ரான்கள், இளம்புறா, பெரிய வாத்து, வான்கோழி ஆகிய அனைத்து அயிட்டங்களும், அபார ருசியோடு தயாரிக்கப்பட்டு, நடுவர்களுக்குப் பரிமாறப்படும். அவர்கள் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டு, சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது, இரண்டாம் சீசனின் கடைசி வாரம். சஸ்பென்ஸ் தாங்காமல், ஜெயித்தது யார் என்று நெட்டில் பார்த்துவிட்டேன். இந்தப் போட்டியில் எனக்குப் பிடித்த போட்டியாளர், க்ளேய்ர் ( Claire). பொறுமையாக, ஆனால் ஒருவித elegenceஉடன் இவர் சமைப்பது அழகு. அதேபோல், ஆடம் (Adam), கேல்லம் (Callum) ஆகியவர்களும் அருமையான ஆட்கள். இந்த கும்பலிலேயே, ஜிம்மி (Jimmy) என்ற இந்தியர் தான் காமெடியன். படு மொக்கையாகச் சமைத்தாலும் (எப்போது பார்த்தாலும் பிரியாணி, பால் பாயாசம், புலாவ் என்று இந்திய உணவுகளைச் சமைத்து டோஸ் வாங்கிக்கொள்வது இவரது ஸ்பெஷாலிடி), எப்படியாவது கடைசியில் உள்ளே நுழைந்துவிடுவார்.

இதே நிகழ்ச்சி, ‘Masterchef India’ என்ற பெயரில், Star Plus சேனலில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடுவர் – அக்‌ஷய்குமார். அவரது குரங்கு சேஷ்டைகளும், அளவுக்கு மீறிய கத்தல்களும், நாடகத்தனமான அசைவுகளும், இந்த ஹிந்தி நிகழ்ச்சியின் மீது வெறுப்பை வரவழைத்துவிட்டதால், இதனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டோம். ஒரிஜினல், பட்டையைக் கிளப்புகிறது. தினமும் இரவு ஒன்பதிலிருந்து பத்துவரை ஒளிபரப்பாகும் மாஸ்டர்செஃப் ஆஸ்த்ரேலியா நிகழ்ச்சியின் ஒரே ஒரு எபிஸோடைப் பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் (சைவப் பிரியர்களும் பார்க்கலாம். அத்தனை அழகாக மாமிசம் வெட்டப்படும்).

Masterchef Australia Season 2 பற்றிய ஒரு சிறிய துணுக்கை இங்கே காணலாம்.

சரி. மீண்டும் சந்திப்போம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

19 Comments

 1. hi …………….enna romba naal aachu neenga post paani………….enna aachu…..naan dhinamum vandu unga blog check panninean…………………ippa than blog nenapu vanducha…………………………….

  Reply
 2. unga blog design nalla irukku……………………appadiyea downloads la shutter island movie post pannuga…naan cbe’la romba naalla thedi kidaikavillai

  Reply
 3. @ இராமசாமி கண்ணன் – ஆமாம் .. கொஞ்ச நாளா பிசியாயிட்டேன்… ஆனா இனிமே பிரச்னையில்ல.. இனி அடிக்கடி வருவோம்ல 🙂 … டெம்ப்ளேட் பத்தி கருத்து சொன்னதுக்கு நன்றி.. நாளைக்குள்ள இன்னமும் இம்ப்ரவைஸ் பண்ணிருவேன் 🙂

  @ padma hari nandan – என்னங்க பண்றது? வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிருச்சி 🙂 .. இனி பாருங்க அடி பின்னலாம்.. ஷட்டர் ஐலாண்ட் லின்க் இதோ – http://isohunt.com/torrents.php?ihq=Shutter+Island. இதுல போயி பாருங்க.. எஞ்சாய்.. 🙂

  Reply
 4. thank you ……………very much………..naan ippo kudichikittu irukkean(jump)……….i am haappppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppy……thanks fooooooooor the link…………..இனி பாருங்க அடி பின்னலாம்

  Reply
 5. @ ஹரி நந்தன் – பின்றீங்க போங்க . . வியாழன் நைட்டே வீக்கெண்டு கொண்டாட்டமா? அடிங்க அடிங்க 🙂 .. நானு இப்ப தூங்கப்போறேன்.. நாளை வர்ரேன் 🙂

  Reply
 6. தல என்ன இந்த கேப்புல அதிமுகவுக்கு மாறிட்டீங்களா…டெம்ப்ளேட் கலரப்பார்த்தா அப்படித்தான் தெரியுது…..:))

  அப்புறம் விழா இனிதே முடிஞ்சதா….நம்ம கீதப்பிரியனுக்கு தயிர்சாதமும், வெங்காய வடையும் வாங்கிகுடுத்தீங்களா இல்லயா?…..:))))

  சமையல் நிகழ்ச்சியை கூட விடறதாயில்லையா? ம்ம் வீட்டுல யார் சமையல்னு இப்போ புரிஞ்சுது…..

  Reply
 7. என்ன இது…? test post ன்னு சொல்லிட்டு பிம்பிளிக்கி பிளப்பின்னு டைப் பண்ணி சின்னப்பிள்ளைத்தனமா விளையாடிட்டு இருக்கீங்க… போங்க தம்பி…

  Reply
 8. @Karundhel”””””””@ ஹரி நந்தன் – பின்றீங்க போங்க . . வியாழன் நைட்டே வீக்கெண்டு கொண்டாட்டமா? அடிங்க அடிங்க

  @Karundhel:-“””””””naan sonnathu குதிக்கிறது not குடிக்கிறது………i download the movie its toooooooo gooooooood thanks for the links……………………….

  Reply
 9. நல்ல பகிர்வு. கூட்டத்தில் எஸ்.ரா பேசியதை ஏன் நீங்கள் தொகுத்து கூறியிருக்கக் கூடாது. என்னைப் போன்று வர இயலாதவர்களுக்கு உதவியாக இருந்திருக்குமல்லவா ?

  Reply
 10. பிச்சைப்பாத்திரம் இந்நிகழ்ச்சி பற்றி விரிவாக எழுதியிருந்தார்.சாருவை வாரியிருந்தார்.எஸ்.ராவை பாராட்டியிருந்தார் உங்களைப்போல.

  Reply
 11. சாருவின் நிகழ்ச்சி குறிப்பு அருமையாக இருந்தது. மிஷ்கின் பேசும் பொது ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானிய திரைபடத்தின் தழுவல் என்பதை ஒத்து கொண்டார். உங்கள் நந்தலாலா பதிவை படித்தப்பின் அவர் பேச்சை கேட்டதால் அவரின் உளறல்களை ரசிக்க வில்லை. நீங்கள் பதிவில் குறிப்பிட்டதை போல் தழுவி படம் எடுத்து இருந்தாலும் அந்த இயக்குனர் தகேஷிக்கு ஒரு நன்றி தெரிவித்து இருக்கலாம். அப்படி சொல்லாதவரை காப்பி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லுவது ? ஒரு பிழை திருத்தம் : வாதை என்பதை வதை என்று மாற்றுங்கள்

  Reply
 12. நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய கூட்டம் இதுதான். எஸ் ரா, தமிழச்சி மற்றும் மதனின் பேச்சுகளை ரொம்பவே ரசித்தேன். தவிரவும் உங்களைப் பார்த்து சில வார்த்தைகள் பேசியது மகிழ்ச்சி.

  Reply
 13. புத்தக விழா – என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய மாலை பொழுது, தங்களையும் பார்த்தேன், பேசவில்லை ,, தயக்கம் தான் காரணம் … அனைவரையும் கடைசி வரிசையில் உட்கார்ந்து பார்த்துவிட்டு இனிய நினைவுகளுடன் ஏழு புத்தகங்களையும் வாங்கி விட்டு வீடு சென்றேன் ( பேருந்திலேயே தேகம் படித்து முடித்துவிட்டேன் – ராசலீலாவின் பாதிப்பிலிருந்து வெளிவருவதற்குள் தேகம் போன்ற கிளாசிக்)….

  Reply
 14. @ நாஞ்சில் பிரதாப் – 🙂 டெம்ப்ளேட் பத்தி எது வந்தாலும் அப்பலேர்ந்து இப்ப வரைக்கும் கப்பு கப்புன்னு புடிக்கிறீங்க 🙂 .. என்னாது ஆத்தீமூக்காவா? மம்மியப் பாத்த எம்மெல்லே மாதிரி பம்புற கட்சி தானே 🙂 .. அய்யோ நானில்ல..

  அப்புறம், ஃபங்ஷன்ல தயிர்சாதமெல்லாம் இல்லன்னுட்டாய்ங்க.. ஒன்லி ரம் 🙂

  @ philosophy prabakaran – 🙂 பிம்பிளிக்கி பிளாப்பி போட்டது நிஜம்மாவே டெஸ்டிங் தான். ஃபார்மேட்டிங் எல்லாம் எப்புடி வருதுன்னு பார்க்க 🙂 .. அதையும் கரெக்டா புடிச்சிட்டீங்க 🙂 .. பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுமா 🙂

  @ padma hari nandan – அடச்சே… ஒரு எழுத்துல மீனிங்கே மாறிப்போச்சே 🙂 .. படம் புடிச்சிருந்தது குறிச்சி சந்தோஷம் நண்பா 🙂

  @ கனாக்காதலன் – கவலையே படாதீங்க.. எஸ். ரா பேசினது சீக்கிரமே யூட்யூப்ல வரும்.. 🙂 அதுல பார்க்கலாம்

  @ உலக சினிமா ரசிகரே – வாங்க .. நம்ம சுரேஷ் கண்ணன், கண்மூடித்தனமா சாருவை தாக்குறவரு.. அவருக்கு சாருவாண்ட ஏதோ மனவருத்தம் போல.. ஆனா ஜெயமோகன் என்ன பண்ணாலும் பாராட்டுவாரு 🙂 .. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்கி 🙂 ..

  @ Ravikanth – அதை வாதைன்னும் சொல்லலாம் நண்பா.. வதையின் ரிசல்ட், அதுனால ஏற்படுற வாதை தானே.. அதைத்தான் சொன்னேன்.. அப்புறம், நந்தலாலா பத்தி உங்க கருத்தை முழுமையா வழிமொழியுறேன்

  @ Ben – வணக்கண்ணா.. 🙂 உங்களைப் பார்த்துப் பேசினது மிக்க மகிழ்ச்சி.. சீக்கிரமே மறுபடி சந்திப்போம் தலைவா.. ஃபேஸ்புக் பக்கம் வாங்க .. ஜாலியா பேசலாம்

  @ Shivam – அடடா.. நீங்களும் வந்திருந்தீங்களா.. என்னங்க தயக்கம்.. வந்து பேசிருக்கலாமே.. பரவால்ல உடுங்க.. சீக்கிரமே மறுபடி சந்திக்கலாம்.. விழா, கண்டிப்பா நீங்க சொன்னமாதிரி மறக்கவியலா நிகழ்வாத்தான் இருந்திச்சி.. ரொம்ப சந்தோஷம் நண்பா..

  Reply
 15. சந்தித்ததில் மகிழ்ச்சி.

  கலக்குங்க..

  வாழ்த்துகள்.

  Reply
 16. Hello. Very cool blog!! Guy .. Beautiful .. Wonderful .. I’ll bookmark your web site and take the feeds additionally…I am happy to locate a lot of useful info here in the article. Thanks for sharing..

  Reply

Join the conversation