The Good, the bad, the Weird (2008)–South Korean

by Rajesh June 19, 2011   world cinema

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

செர்ஜியோ லியோனியின் (நம்ம திண்டுக்கல் லியோனியின் தூரத்து உறவுக்காரர் அல்ல) ஸ்மேஷ் ஹிட் படமான ‘The Good, bad and the Ugly’ படத்தை யாராலும் மறக்க இயலாது. படு ஸ்டைலிஷான படம் அது. ஒரு காலத்தில், காட்ஃபாதர் படம் ஆங்கிலத்தில் வந்தபின், தொடர்ந்து பல நாடுகளிலும் அதைப்போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. ராம் கோபால் வர்மா, தனது சர்க்கார் படத்தை, காட்ஃபாதருக்கான ட்ரிப்யூட் என்றே சொல்லியிருந்தார். படத்து டைட்டிலிலும் அப்படியே வரும். இதைப்போன்று, தன்னைக் கவர்ந்த ஒரு படத்தை வைத்து, திரைப்படங்கள் எடுப்பது சகஜம்தான் (தமிழ் இயக்குநர்கள் செய்யும் ஈ. காப்பி, இதில் சேராது). அப்படி, செர்ஜியோ லியோனியின் படத்தால் கவரப்பட்ட ஒருவர், தனது சொந்த மொழியில் அப்படத்துக்கு ஒரு ட்ரிப்யூட் செய்தால் எப்படி இருக்கும்? அதுவும், தென் கொரிய மொழியில்?

மஞ்சூரியா. சென்ற நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். மஞ்சூரியா என்பது, சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிரதேசம் என்பது தெரிந்திருக்கும். அக்காலத்தில், ஜப்பான் வேறு மஞ்சூரியாவின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. உலகப்போர்களின் சமயத்தில், மஞ்சூரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கவும் செய்தது. அப்படிப்பட்ட ஒரு வறண்ட பூமியில் நடக்கும் ஜாலியான கதையே இப்படம்.

மஞ்சூரியாவிலும், திருடர்கள் இல்லாமல் போகவில்லை. அப்படிப்பட்ட திருடர்களைப் பிடித்துக் கொடுத்து, அவர்களின் தலைக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளும் பௌண்டி ஹண்டர், பார்க்-தோ-வூன். அவனிடம், மஞ்சூரியப் புரட்சிப் படையைச் சேர்ந்தவர்கள், ஒரு கோரிக்கை விடுக்கிறார்கள். அதாகப்பட்டது, பண்டைய சீனாவின் மன்னர்கள் சேர்த்துவைத்த பெரும் புதையலுக்கான வரைபடம், ஒரு ஜப்பானிய அதிகாரியிடம் இருப்பதாகவும், அந்த வரைபடத்தைக் கைப்பற்றிக் கொடுத்தால், அப்பணத்தை வைத்து, மக்களுக்காகப் போராட முடியும் என்பதே கோரிக்கை. இதனை ஒப்புக்கொண்டு, தனது ‘மிஷனுக்காக’ ரெடியாகிறான் பார்க் – தோ – வூன். இவனே, இப்படத்தின் ‘the Good’.

அதே சமயம், பார்க் – சாங்-யி என்னும் வில்லனிடமும், இதே வரைபடத்தைத் திருடும் பணி ஒப்புவிக்கப்படுகிறது. இவனே, படத்தின் ‘the Bad’. இவர்கள் இருவரும், ரயிலில் வரும் அதிகாரியை அட்டாக் செய்து, மேப்பைத் திருட முனையும் இடைப்பட்ட நேரத்தில், மொக்கைத் திருடன் ஒருவன், ரயிலில் புகுந்து, அந்த மேப்பைத் தன்னிச்சையாகத் திருடிவிடுகிறான். அவனது பெயர், யூன் –டே-கூ. இவன் தான் இப்படத்தின் ‘the Weird’.

அதிலிருந்து, இந்தத் திருடனுக்குக் கேடுகாலம் தொடங்குகிறது. பின்னே? கொடூர வில்லன் பார்க் – சாங்- யியைப் பகைத்துக்கொண்டால் எப்படி? அவன் செல்லுமிடமெல்லாம், கும்பல் கும்பலாக வந்து அடிக்கும் மங்கி குல்லாய் அடியாட்கள் ஒருபுறம். தன்னந்தனியாக வந்து டார்ச்சர் செய்யும் கதாநாயகன் பார்க்- தோ-வூன் மறுபுறம். சிரிப்புத் திருடன் யூண்டே-கூ, கண்டபடி ஓடுகிறான். அப்படி ஓடும் நேரத்தில்தான், அந்த மேப்பைப் பற்றியும் தெரிந்து கொள்கிறான். இவனிடம் மேப் இருப்பதைத் தெரிந்துகொண்ட லோக்கல் ரவுடி கும்பல் ஒன்றின் கையில், போலி மேப்பை இவனது கூட்டாளி தந்துவிடுகிறான் வேறு. ஆகவே, எங்கோ கடைக்கோடியில், கடலைத் தப்பாக அடைந்து, கொலைவெறியில் இவனைத் தேடுகிறது அந்த ரவுடி கும்பல்.

இப்படி நாலாபக்கமும் தன் மீது பாயும் ஆட்களை, காமெடித் திருடன் எப்பெடிச் சமாளிக்கிறான்? இதுதான் படம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து, இறுதிக் காட்சிவரை, லேசான புன்முறுவலுடனே இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. திருடன் யூண்-டே-கூ செய்யும் காமெடிகள் அப்படி. ஆங்கிலப் படத்தில் வரும் அதே போன்ற கதாபாத்திரங்கள். ஓரிரு சீன்கள், அப்படத்தில் இருந்தே கையாளப்பட்டிருக்கின்றன. மூலப்படத்தின் காமெடி வடிவமாக எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

படம், படு சூப்பர் என்று சொல்லமாட்டேன். ஒரு ஜாலியான எண்டர்டெய்னர் மட்டுமே. கொரியப் படங்களில், இதுபோன்ற மசாலாக்களும் உண்டு. படத்தைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இந்தப் பதிவில் தேவையில்லை. இது போதும். பார்க்க முயற்சி செய்யுங்கள். லாஜிக், கதை, சீரியஸ்னெஸ் ஆகிய எதுவும் இப்படத்தில் இருக்காது. ஆகவே, உலகப் படத்தை எண்ணிக்கொண்டு இதைப் பார்த்தால், அம்பேல் ஆகிவிடுவீர்கள்.

The good, bad and the Weird படத்தின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு 1 – படத்தைப் பரிந்துரைத்த நண்பர் தமிழ்மசாலா ப்ரேம்ஜிக்கு நன்றி

பிகு 2 – கருந்தேளில் இதுவரையில் வந்த ஆகச்சிறிய திரைப்பட விமர்சனம் இதுதான். சும்மா ஜாலிக்கு. நாளை லார்ட் ஆஃப் த ரிங்ஸில் சந்திப்போம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

17 Comments

 1. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எதிர் பார்த்தேன். இந்தப்படமும் நல்லாத்தான் இருக்கும் போல.

  Reply
 2. //கருந்தேளில் இதுவரையில் வந்த ஆகச்சிறிய திரைப்பட விமர்சனம் இதுதான். சும்மா ஜாலிக்கு. நாளை லார்ட் ஆஃப் த ரிங்ஸில் சந்திப்போம்//
  ஆகச்சிறிய விமர்சனத்துக்கு நான்தான் காப்பி ரைட் வைத்துள்ளேன்.
  நீங்கள் எழுதியது செல்லாது…செல்லாது…
  LOTR9 வட்டியும் முதலுமா எழுதணும்.
  இது இந்த நாட்டாமையோட தீர்ப்புங்கோ…

  Reply
 3. இந்த படத்த சனிக்கிழமைதான் டவுன்லோடினேன்….பாதி பாத்துருக்கேன்..

  மீதியையும் பாக்க, உங்க பதிவு கண்டபடி தூண்டுது..

  அப்பாலிக்க இந்த படத்தின் டைரக்டர் தான் A Tale of Two Sisters , A Bittersweet Life , I Saw the Devil போன்ற படங்களின் டைரக்டர் என்ற உண்மையை மறைத்ததற்கு பின்னால் உள்ள நுண்ணரசியல் என்ன…

  Reply
 4. நண்பரே,

  இப்படத்தை பார்த்திருக்கிறேன். ஜாலியாக பார்க்கலாம். க்ளைமாக்ஸ் கொஞ்சம் ஓவர் என்பது என் கருத்து 🙂 என்னது இதுதான் சிறிய பதிவா, இது பயங்கரமான ஒரு எச்சரிக்கை போல் தெரிகிறதே 🙂

  Reply
 5. ஆமா தமிழலியே நாயகன், தேவர் மகன் அப்புறம் ஹிந்தியில் பல படங்கள் என எடுத்தாலும் ஒரிஜினல் காட்பாதரை என்னால் எதோடும் ஒப்பிட முடியவில்லை.மார்லன் பிராண்டோ அல் பசினோ,ராபர்ட் டி நிரோ, ராபர்ட் டுவால் என பெரிய தலைன்கேல்லாம் பூந்து வெளையாடியிருப்பங்க.எனக்கு மூன்றாம் பக்கம் பிடிக்கலை.இரண்டாம் பாகத்தின் அல் பசிநோவின் கெத்து அதில் இல்லை அதனால்.மற்றபடி இயக்கம் இசை ஒளிப்பதிவு(இன்னிக்கு ப்ளூரே பாத்தாலும் எந்த வருஷம் படம் வந்துதுன்னு சொல்ல முடியாது.அப்படி ஒரு ஒளிப்பதிவு).காட்பாதர் படமல்ல ஒரு வாழ்க்கை.இந்த படம் பாக்கவில்லை(வழக்கம் போல…)பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  Reply
 6. வந்தோம்ல வந்தோம்ல……… படத்தில் வரும் குதிரை சண்டை காட்சிகளுக்கும்.தீம் மியூசிக்கும் நான் அடிமை,அதுவும் தி குட் கிளைமாக்ஸ்ல் ஓடும் குதிரையில் நின்றபடி சாட் ஃகன்னை (short gun) லோட் செய்யும் காட்சி மிக ஸ்டைலிஷ்ஸாக படமாக்கப்பட்டு இருக்கும்,படத்தில் சலிப்பு வருவதற்கு படத்தின் நீளமும் ஒரு காரணம்,மற்றபடி நீங்கள் சொன்ன மாதிரி என்டேர்டைன்மென்ட் காக பார்க்கலாம்

  Reply
 7. you cud ve said few words abt the cinematography, especially in climax chase sequence…. thats worth mentioning !!

  Reply
 8. எல்லாம் இருக்கட்டும் நான் உங்க கிட்ட ஹாரி பாட்டர எதிர் பார்த்து கண்ணெல்லாம் பூத்து போய் காத்துட்டு இருக்கன்…
  இதுக்காக lord of the rings ஸ pending போட வேண்டாம்… But I want Harry Potter…

  Reply
 9. Rajesh,stylish is the word which comes to my mind when I watched this movie.Superb picturisation, the landscapes covered in this movie was amazing, also wondered how come a small country Korea can have these kind of varied lanscapes. A superb comical-Action entertainer.

  Reply
 10. common format of getting posts just only from a particular category is

  http://blogname.blogspot.com/feeds/posts/default/-/labelname?max-results=500

  for example i add the following in my google reader…

  http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/நீட்ஷே?max-results=500

  http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/தத்துவம்?max-results=500

  if the label name appearing in address bar(after clicking label name on side bar) has only one word use it in the above common format as it is…if the label name appearing in adres bar has more than one word replace space between words by %20

  for example if one of your label is philosophers i like with spaces between them(in address bar after clicking it in side bar)
  then common format is

  http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/philosophers%20i%20like?max-results=500

  Reply
 11. இன்றுதான் உங்க பதிவைப் முதன் முதலில் பார்த்தேன். அருமையான வலைப்பதிவு.

  Reply
 12. கமென்ட் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் கருத்தைப் பார்த்தால், இப்படம் உங்களில் பல பேருக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. எனக்கும்தான். குறிப்பாக, டெனிம் சொன்ன க்ளைமேக்ஸ் காட்சி டக்கரா இருக்கும். குதிரை மேல நின்னுக்கினு ஈரோ தன்னோட வின்செஸ்டர எடுத்து டுமீல் டுமீல்னு சுட்டுத் தள்ளுற காட்சிகள் அட்டகாசம் 🙂

  நண்பர் ரதியழகன் – ஹாரி பாட்டர் எழுதனும்னு எனக்கும் ஆசைதான். லார்ட் ஆப் த ரிங்க்ஸ் முடியட்டும். அப்பப்ப ஒன்னொன்னா எழுதறேன்.

  Reply
  • Rasul mydin

   நன்றி..

   Reply
 13. Abdulkalam Azad

  ஆரன்ய காண்டம் படம் இதுலிருந்து வந்தது தானே!!, Pls confirm

  Reply
  • No Boss. ஆரண்ய காண்டமும் இதுவும் கம்ப்ளீட்டா வேற. இந்தப்படம், ஆங்கில Good bad and the Ugly படத்தோட இன்ஸ்பிரேஷன்

   Reply

Join the conversation