Hellboy

by Rajesh August 6, 2011   Comics Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

யானை பலம். எதற்கும் பயப்படாத தெனாவெட்டு. எப்போதும் கோபமாகவே இருக்கும் குணம். கையில், எதையும் பொடிப்பொடியாகும் பலம்வாய்ந்த துப்பாக்கி.

ஹெல்பாய்.

முதன்முதலில் இப்படியொரு படம் வருவதைக் கேள்விப்பட்ட நான், அச்சமயத்தில் , இது கட்டாயம் மொக்கையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், அதன்பின் சில வருடங்கள் கழித்தே படத்தைப் பார்த்தேன். அட்டகாசமான action படங்களில் ஹெல்பாயும் ஒன்று என்று அறிந்தேன். ஹெல்பாய் சீரிஸில் இருக்கும் காமிக்ஸ்களை மொத்தமாகப் படித்துவருகிறேன். அவை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டன. ஆகவேதான் இந்தக் கட்டுரை.

ஹெல்பாய் என்ற பெயருக்கு, ‘நரக மனிதன்’ அல்லது நரகச்சிறுவன் என்று பொருள் தோன்றுகிறது அல்லவா? ஹெல்பாய், நரகத்திலிருந்தே வந்து குதித்த ஒரு ஜந்து தான். எப்படி? இரண்டாம் உலகப்போரின் உக்கிரமான கடைசி நிமிடங்கள். எப்படியாவது நேச நாடுகளை வென்றுவிடவேண்டும் என்ற வெறியுடன் ஹிட்லர். ஹிட்லரின் வலதுகரமாகத் திகழ்ந்தது, ஹிம்லர். ராணுவத்தை நேசநாடுகளின் படைகளின்மீது ஏவியதுமட்டும் ஹிட்லருக்குப் போதவில்லை. ஆகையால், ஒரு கொடூர சக்தியைப் பயன்படுத்த முடிவு செய்தான்.

Cut to . .

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். ரஷ்யா. ஸார் மன்னர் இரண்டாம் நிகலஸின் ஆட்சி. இளவரசர் அலெக்ஸி நிகலாவிச்சின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் கிடந்தது. அவருக்கு இருந்தது, ஹீமோஃபீலியா என்ற நோய். இந்நோய் இருப்பவர்களுக்கு, காயங்களிலிருந்து ரத்தம் வெளிப்படுகையில், உறையும் தன்மையை இழந்துவிடும். ஆதலால், ரத்த இழப்பு அதிகரிக்கும். எனவே, அலெக்ஸி, அரச குடும்பத்தினரால் வெகுவாகப் பாதுகாக்கப்பட்டார். எங்காவது சிறிதாக இடித்துக்கொண்டால்கூட ரத்தம் வெளிவந்துவிடும் வாய்ப்பு இருந்ததால், எங்குமே அவரை வெளியே அனுப்பாமல், அரண்மனைக்குள்ளேயே வைத்திருந்தனர். அதேசமயம், அரசி அலெக்ஸான்ட்ரா, இவ்வியாதியைக் குணமாக்கும் மருத்துவர்களைத் தேடியலைந்தபடியே இருந்தார். இச்செய்தி, சைபீரியாவில் அலைந்துகொண்டிருந்த ஒரு மனிதனின் செவிகளை எட்டியது.

அம்மனிதனை, அவனைச்சுற்றி இருந்தவர்கள், பயம் கலந்த மரியாதையுடனே அதுகாறும் நடத்தி வந்தனர். திடீரென்று தன்வசம் இருக்கும் அமானுஷ்ய சக்தியினால் அவன் எதையாவது செய்துவிடுவானோ என்பதே அவர்களின் பயத்துக்குக் காரணம். அதேசமயம், அவனிடம் சென்றால், தனது வழிபாட்டினால், தீராத நோய்களையும் அவன் குணமாக்கிவிடுவான் என்றும் மக்கள் நம்பினர். இப்படி, ஒரு புதிராகவே வாழ்ந்துகொண்டிருந்த அம்மனிதனது பெயர். . .

க்ரிகோரி எஃபிமாவிச் ரஸ்புடீன்.

ரஷ்ய ஸார் குறிப்புகளின்படி, அரசி அலெக்ஸான்ட்ரா ரஸ்புடீனைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அவரை அழைத்ததாகத் தெரிகிறது. அரசியின் அழைப்பை ஏற்று அரண்மனை சென்ற ரஸ்புடீன், இளவரசன் அலெக்ஸியைப் பெருமளவு குணப்படுத்தியதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு முறை அலெக்ஸி காயமுறும்போதும், அவனருகில் சென்று அமர்ந்துகொள்ளும் ரஸ்புடீன், கண்களை மூடிக்கொண்டு, பலமணிநேரம் கட்டையைப் போல் அமர்ந்திருந்ததாகவும், மெதுவே இளவரசனின் ரத்தப்போக்கு நின்றதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால், வெகுவிரைவிலேயே அரசகுடும்பத்தினரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானார் ரஸ்புடீன். இங்கே ஒரு செய்தி என்னவெனில், ஆரம்பத்தில் அரசியின் அழைப்பு கிடைத்தவுடன், தனது மரணம் நெருங்குவதாக சைபீரியாவில் இருந்த சில நண்பர்களிடம் ரஸ்புடீன் சொன்னதாகவும் ஒரு தகவல் உண்டு.

செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் செல்வந்தர்களிடையே, ரஸ்புடீனின் பெயர் வெகுவாக அடிபட ஆரம்பித்தது. பணக்கார வீட்டுப் பெண்கள் ரஸ்புடீனை சந்தித்த வண்ணம் இருந்தனர். அவர்களைத் தவறாகப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார் ரஸ்புடீன் என்று அறிகிறோம். இக்காலத்தில், முதல் உலகப்போர் நிகழ்ந்தது. உடல்நலக்குறைவில் இருந்த ஸார் மன்னர் நிகலஸ், ரஸ்புடீனால் தைரியம் சொல்லப்பட்டு, யுத்தமுனைக்குப் பயணமானார். அதன்பின் அரசிக்கும் ரஸ்புடீனுக்கும் இருந்த உறவின் நெருக்கம் அதிகரிக்கவும் தொடங்கியது. குடித்துவிட்டு, தனது முக்கியத்துவம் பற்றி மதுக்கூடங்களில் உளறினார் ரஸ்புடீன். இது, அரசகுடும்பத்தின் காதுகளை எட்டியது.

அரசகுடும்பத்தின் பிரபுக்களில் ஒருவராக இருந்த ஃபெலிக்ஸ் யுசுபோவ், ரஸ்புடீனின் செல்வாக்கினால் கோபம் கொண்டார். டிமிட்ரி பாவ்லோவிச் என்ற தனது நண்பருடனும், வ்ளாடிமிர் புருஷ்கேவிச் என்ற மற்றொரு அரசியல்வாதி நண்பருடனும், ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, பாவ்லோவிச்சும் புருஷ்கேவிச்சும் ரஸ்புடீனை விருந்து ஒன்றுக்கு பிரபு யுசுபோவ் அழைப்பதாகக் கூறி, அவரது அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அங்கே, நிலவறையில், ஐந்து பேரைக் கொல்லத் தேவையான அளவு சயனைட், கேக்குகளில் கலக்கப்பட்டு ரஸ்புடீனுக்காகக் காத்திருந்தது. அதை எந்தச் சந்தேகமும் இல்லாமல், முழுமையாகச் சாப்பிட்டார் ரஸ்புடீன். மிகக்கொடுமையான அளவு சயனைடாக இருந்தும், ரஸ்புடீனுக்கு எதுவுமே ஆகவில்லை. இவர்களுடன் சிரித்துப் பேசியவண்ணமே இருந்தார். பதற ஆரம்பித்த யுசுபோவ், நிலவறையில் இருந்து மாடிக்குச் சென்று, தனது ரிவால்வரை எடுத்து வந்தார். ரஸ்புடீனின் முதுகிலும் சுட்டார். ரஸ்புடீன் அலறியபடி கீழே விழுந்ததும், இந்த மூவர் குழு, அரண்மனையை விட்டு அகன்றது. சிறிதுநேரம் கழித்து நிலவறைக்கு மறுபடி வந்த இவர்கள், ரஸ்புடீன் திடீரென்று கண்களைத் திறந்ததையும், யுசுபோவின் மீது பயந்ததையும் கண்டு, மறுபடி மூன்று முறை ரஸ்புடீனைச் சுட்டதாகத் தெரிகிறது. அப்படியும் சாகாத ரஸ்புடீன், தள்ளாடியபடியே தங்களை நோக்கி நடந்து வந்ததைப் பார்த்த அவர்கள், தங்கள்வசம் இருந்த பிரம்புகளால் ரஸ்புடீனைப் பலம் கொண்ட மட்டும் தாக்கினர். படுமோசமாகச் சிதைக்கப்பட்டபின்னரும், ரஸ்புடீன் சாகவில்லை. எனவே, அவரை ஒரு பெரிய துணியில் கட்டி (அதற்கு முன்னரே ரஸ்புடீனின் பிறப்புறுப்பை வெட்டியாகிவிட்டது), அருகில் இருந்த நேவா ஆற்றில் வீசினர்.

மூன்று நாட்கள் கழித்து ரஸ்புடீனின் உடல், ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கரம், உலகுக்கு ஆசி கூறுவதைப் போல் உயர்ந்திருந்ததாகவும் அறிகிறோம். பிரேதப் பரிசோதனையின்போது, ஆற்றிலும் ரஸ்புடீன் சாகவில்லை என்பதும், சிறுகச்சிறுகத் தண்ணீர் நுரையீரலில் புகுந்ததனால், மூச்சுத்திணறியே இறந்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவு சயனைட் அவர் வயிற்றில் இருந்ததும், அவரது உடலில் பல துப்பாக்கிக்குண்டுகள் இருந்ததும்கூட கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு ரகசிய இடத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த ஆண்டு – 1916. (பின்னாட்களில் அவரது உடல், சில புரட்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, எரிக்கப்பட்டது).

Cut to . .

ஹிட்லர். தனது வலதுகரமான ஹிம்லர் சொன்ன ஒரு தகவல், ஹிட்லரின் முகத்தில் இளிப்பை வரவழைத்தது.

ஆண்டு – 1944 . ஸ்காட்லாந்தின் டார்மகன்ட் தீவு. நாஜிக்களின் கொடூர ஆப்ரேஷன் ஒன்றைத் தடுத்து நிறுத்துமாறு அமெரிக்க கமாண்டோ படை ஒன்றுக்குக் கிடைத்த தகவலை வைத்து, கமாண்டோ படை இத்தீவுக்கு வருகிறது. அவர்களுடன், அமானுஷ்ய சக்திகளைப் பற்றி ஆராயும் ட்ரெவர் ப்ரட்டன்ஹோம் என்ற இளைஞனும், சிந்தியா ஜோன்ஸ் என்ற மீடியமும் வருகின்றனர். சிந்தியா, அங்கே கொடூர நிகழ்வு ஒன்று நடக்கப்போவதாகச் சொல்கிறாள்.

அந்த இடத்தில், ரஸ்புடீன் நின்றுகொண்டிருக்கிறான்.

நரகத்தைச் சேர்ந்த கொடிய தெய்வங்களான ஓக்ரு- ஜஹாத் என்ற ஏழு பேய்களை பூமிக்கு வரவழைப்பதே அவனது லட்சியம். இதன்மூலம், ஹிட்லருக்கு வெற்றி கிடைக்கும் (ஆனால், அதன்பின் அவை ஹிட்லரையே கொன்றுவிடும் என்பது ஹிட்லருக்குத் தெரியாது). திடும்மென ஒரு ஒளிவெள்ளம். பேரிடியைப் போன்ற சத்தம்.

அங்கே . .

சிகப்பு வண்ணத்தில், சிறிய குரங்குக் குட்டியைப் போல ஒரு ஜந்து.

அந்த ஜந்தை, ட்ரெவர் ப்ரட்டன்ஹோம் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான். ரஸ்புடீனின் முயற்சி தோல்வியுற்றது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஹிட்லர் இறக்கிறான்.

ஐம்பது வருடங்கள் கழித்து . . .

1994 . இரண்டு வருடங்களாகத் தொலைந்துபோயிருந்த ட்ரெவர் ப்ரட்டன்ஹோம் – தற்போது, Bureau for Paranormal Research and Defense (சுருக்கமாக B .P .R .D ) என்ற அமைப்புக்குத் தலைவர் – திடீரென அவரது அலுவலகத்தில் அமர்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். தனக்குத்தானே பேசிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கும் அவரிடம், ஒரு குரல் , பேசுகிறது. மெல்ல, அந்த உருவம், இருட்டிலிருந்து வெளியேயும் வருகிறது.

ஹெல்பாய்.

பெரிய உருவம். தலையில் இரண்டு வெட்டப்பட்ட கொம்புகள். கல்லால் ஆன வலது கை. குரங்கைப் போன்ற முகம். பெரிய வால். உடற்பயிற்சியால் முறுக்கேறிய உருவம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஆர்க்டிக் காண்டத்துக்குச் சென்ற தனது பயணத்தை விவரிக்க ஆரம்பிக்கிறார் ட்ரெவர். அங்கே, ஒரு குகையினுள், பெரியதொரு சிலை இருந்ததையும், அந்தச் சிலையின்முன்னர், ஒரு மனிதனின் சிலையைப் பார்த்ததாகவும், அந்தச் சிலையைத் தொட்டபோது, அது உயிர்ப்புடன் இருந்ததைக் கண்டதாகவும் சொல்லும் ட்ரெவர், அதன்பின் எதுவும் நினைவில்லையென்று புலம்புகிறார்.

அப்போது அந்த அறையில் பல தவளைகள் பிரவேசிக்கின்றன. கூடவே . . . . .

இதுதான் Hellboy: Seed of Destruction காமிக்ஸின் துவக்கம்
.

இதன்பின் என்ன நடக்கிறது என்பதைக் காமிக்ஸைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தக் காமிக்ஸை வைத்து, 2004 ல் Hellboy என்று ஒரு திரைப்படம் வந்ததை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள்.. அந்தத் திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்கவில்லை என்றால், பார்க்க முயலவும். விறுவிறுப்பாகச் செல்லும் action படம் அது. அதில் ஹெல்பாயாக நடித்திருப்பவர், ரான் பேர்ல்மன். படத்தை இயக்கியது, கில்லர்மோ டெல் டோரோ.

ஹெல்பாய் காமிக்ஸைப் பொறுத்தவரையில், அமானுஷ்ய சக்திகள் – அவைகளை எதிர்த்துப் போராடும் ஹெல்பாயும் அவனது குழுவும் – என்ற வகையில் கதைகள் எழுதப்பட்டிருக்கும். கதையினூடே அட்டகாசமான அதிரடி சண்டைகள் நிரம்பியிருக்கும். ஹெல்பாயின் அணியில் இருக்கும் மற்றவர்கள் – ஏப் ஸாஃபியன் மற்றும் எலிஸபெத்.

Hellboy முதல் பகுதியின் ட்ரெய்லர் இது.

Hellboy II: The Golden Army படத்தின் ட்ரெய்லர் இது. Rammstein குழுவினரின் அட்டகாசமான பாடல் – Mein Herz Brennt , இந்த ட்ரெய்லரின் பின்னணியில் வரும். எனக்கு மிகப் பிடித்தமான ட்ரெய்லர்கலில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலுக்காகவே.

Hellboy: Sword of Storms அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர்.

Hellboy: Blood and Iron அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

25 Comments

 1. நன்றி நண்பா…..இந்த படத்துக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்களா….நன்றி

  Reply
 2. நண்பா,
  காமிக்ஸை விவரித்த விதமே படத்தை பார்க்க ஆவல் கொள்ள செய்கிறது,விரைவில் பார்த்து விடுகிறேன்,இன்றூ விடுமுறையா?

  Reply
 3. sherlock holmes பாத்தாச்சு அடுத்து இந்த series அரம்பிகவேன்டியதுதான்.இன்னிக்கே download start….

  Reply
 4. good..

  Reply
 5. hell boy 1 பார்த்திருக்கேன் நல்லாதான் இருக்கும். ஆனா அதில அந்த புரொபசர் செத்திடுவாரு அதான் கஷ்டமா இருந்திச்சு:-)

  Reply
 6. ஹெல் பாய் ரெண்டாவது பாகத்தில் நம்மூர் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரங்களும் அவுங்களோட எடிட்டிங் திறமைய காமிச்சிருப்பாங்க இது எனக்கு அந்த படத்த பின்னாளில் சீடீல பார்க்கும் பொது தான் தெரிஞ்சுச்சு.guillermo del toro அருமையான இயக்குனர் இவர் தயாரித்த the orphanage பார்த்துருக்கேன் அதுவும் அருமையான படம்.

  Reply
 7. ஷெர்லாக் சீரீஸை அறிமுகப்படுதுனதுக்கு நன்றி அருமையா இருந்துச்சு அடுத்த சீசனுக்காக வெய்டிங் நவ்:)

  Reply
 8. //செத்திடுவாரு அதான் கஷ்டமா இருந்திச்சு:-)//

  இந்த மெஸெஜுக்கும்.. ஸ்மைலியா? 😉 🙁

  Reply
 9. //இந்த மெஸெஜுக்கும்.. ஸ்மைலியா? 😉 :(//
  படத்தில் நிறைய விசயம் இருக்க நான் கவலைப்பட்டது அதுதான்கிறது நினைச்சு பார்த்தா எனக்கே சிரிப்பாதாங்க இருந்திச்சு!

  Reply
 10. @ விக்கியுலகம் – இந்தப் படம் மட்டுமில்ல. வேற எந்தப் படமாக இருந்தாலும், அவைகளுக்குப் பின் கண்டபடி இன்பார்மேஷன் இருக்கத்தானே செய்யும் 🙂 .. நன்றி

  @ கீதப்ரியன் – ரைட். உங்களுக்கு இந்த மாதிரி டமால் டுமீல் படங்கள் புடிக்குமான்னு தெரியல. ஆனா முடிஞ்சா காமிக்ஸ்கள் பக்கம் வாங்க. அது ஒரு அட்டகாச உலகம் நண்பா 🙂

  @ மதன் – நன்றி மீண்டும் வருக 🙂

  @ தெறச்சி வால் – வெரிகுட் 🙂 . . அடுத்த சீசன் ஷெர்லாக் ஹோம்ஸ் வரப்போவுது சீக்கிரமா. ரெடியா இருங்க 🙂

  @ பாலு – //good..// – என்ன எழவுடா இது? இதுதான் உன்னோட மொத்த ரியாக்ஷனுமா? வெண்ணை . . . 🙂

  @ எஸ். கே – //ஆனா அதில அந்த புரொபசர் செத்திடுவாரு அதான் கஷ்டமா இருந்திச்சு:-)// – உங்களுக்குள்ள இருக்குற ஒரு கொழந்தையையும், அது கொஞ்சம் சாடிஸ்டா இருக்குறதையும் இந்த கமென்ட் காட்டுது 🙂 ..

  @ நவநீதன் – //ஹெல் பாய் ரெண்டாவது பாகத்தில் நம்மூர் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரங்களும் அவுங்களோட எடிட்டிங் திறமைய காமிச்சிருப்பாங்க இது எனக்கு அந்த படத்த பின்னாளில் சீடீல பார்க்கும் பொது தான் தெரிஞ்சுச்சு// – ஹஹ்ஹா . . ரொம்ப உண்மை. ரெண்டாவது பாகத்தின் பல முக்கிய conversation காட்சிகள் கைமா பண்ணிருப்பாங்க. அதான் எல்லாப் படத்துக்கும் இப்ப நடக்குதே. ஆனா இனிமே இந்த மாதிரி படங்களை மால்ல பார்த்தா அதுல இந்த வேலை இருக்காது 🙂 . . எனக்கும் கில்லர்மோ ரொம்பப் புடிச்ச இயக்குனர் நண்பா.. ஷெர்லாக் உங்களுக்கும் புடிச்சது குறிச்சி சந்தோஷம் 🙂

  @ நன்றி! – எந்தப் பேர்ல நீங்க வந்தாலும் கண்டுபுடிச்சிரலாம் 🙂 . . ஹீஹ்ஹீ

  Reply
 11. அவ்வளுதான் கமென்ட் போட்டாரா……….இனி பதில் கமென்ட் வர வாய்பில்லை……

  ஒருதடவ லைப்ரரில இருந்து ரஸ்புடின் பத்தி ஒரு புத்தகம் எடுத்திட்டு வந்து படிச்சேன். செமாயா இருந்திச்சு..மனுசன சும்மா சொல்லக் கூடாது……..

  ரஸ்புடினின் “முக்கிய” உறுப்பு பத்தி ஒரு செய்தி இருக்கு. யாரும் பாத்திருக்கீங்கலானு தெரியல(செய்திய சொன்னேன்).

  இந்த டாகுமேன்டரியையும் முன்னாடி எப்பவோ பாத்தது…..முடிஞ்சா நண்பர்கள் பார்க்கவும்..

  The most evil men in histroy………அந்த லிஸ்ட்ல இருக்கும் மத்த பிரபலங்கள்….

  http://topdocumentaryfilms.com/most-evil-men-in-history/

  Countess Dracula
  Bloody Mary
  Nero
  Pizaro
  Torquemada
  Rasputin
  Ivan the terrible
  “JOSEPH STALIN”
  and many more……..

  Reply
 12. Hell boy 2ல உருவமில்லாம வரும் கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சது..ஆனா ரெண்டு பார்ட்டிலும் ஹீரோயினி தான மொக்கயா தெரிஞ்சது..

  ரான் பெர்ல்மேன்..இவர் நடிச்ச ஒரு படத்த பத்தி நானும் எழுதியிருந்தேன்…..இதுபோன்ற கேரேக்டர்களில் நல்லாவே நடிக்கிறாரு..

  Reply
 13. // (அதற்கு முன்னரே ரஸ்புடீனின் பிறப்புறுப்பை வெட்டியாகிவிட்டது) //
  பத்தி சொல்லியிருக்கீங்க.அது ஏன், பின்னணியில் இருக்கும் விஷயம் என்ன என்று விளக்கி கூற வேண்டும்……….சுவைபட இதைக் கூற தங்களால் மட்டுமே முடியும் என்று உறுதியாக நம்பம் லட்சக்கனகான வாசகர்களில் ஒருவன்…..

  Reply
 14. இந்த மாதிரி படங்களைப் பார்க்கறதுக்கும் நிஜமாவே ஒரு தனி ரசனை வேணும்.. அது உங்களுக்கு நிறைய இருக்கு.. விவரிப்பு அருமை…

  நட்பின் தின வாழ்த்துக்கள்

  Reply
 15. @ கொழந்த – ரஸ்புடீன் பத்தி…

  நான் முதலில் இந்தாளைப் பத்தி படிச்சது நம்ம விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதுன ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’ புத்தகத்தில்தான். அதில் செம்ம சுவாரஸ்யமா இவரைப் பத்தி எழுதிருப்பாரு ரவிச்சந்திரன். அதுக்கப்புறம் பல புத்தகங்களைப் படிச்சி, இன்டர்நெட்டில் தேடி, அப்புறம் தெளிஞ்சேன்.

  ரஸ்புடீனின் முக்கிய உறுப்பைப் பற்றி – அது அங்க இருக்கு; இங்க இருக்கு ; அவன்ட்ட இருக்கு; எங்கிட்ட இருக்கு என்று அறிக்கை விட்டவர்களே அதிகம். அதைப் பத்தி இன்னொரு தகவல் – erect ஆ இருந்தப்ப அது பதிமூணு இன்ச் அப்புடீன்னு ரஸ்புடீனோட பொண்ணே சொல்லிருக்காங்க !!! அது தற்போது என்னாண்டதான் இருக்குன்னு ஒரு ரஷ்ய டாக்டர் சொல்லி, அதை மக்களுக்கும் காட்டிருக்காரு (ஆனா அது உண்மையா பொய்யான்னு தெரில ).. அதோட லென்த் – 11 இன்ச் !! 🙂 . . தன்னோட இந்த பிரம்மாண்டமான உறுப்பை வெச்சி ரஸ்புடீன் பூந்து வெளையாடுனாருனு அவரோட அத்தனை பயாக்ரஃபிலயும் தகவல் இருக்கு. ஒரு போலி உறுப்பை – அதான் அவரோடதுன்னு நம்பி, கும்புட்ட முட்டாள்கள் வேற இருக்காங்க.

  உங்க லிஸ்ட்ல இருக்குற countess Dracula மாதிரியான ஒரு பேய் (பாபா யாகா ), ஹெல்பாய் கதைகள்ல வருது.

  @ ஷீ – நிசி – உங்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் 🙂 . . நன்றி

  Reply
 16. // ரஸ்புடீனின் முக்கிய உறுப்பைப் பற்றி – அது அங்க இருக்கு; இங்க இருக்கு ; அவன்ட்ட இருக்கு; எங்கிட்ட இருக்கு என்று அறிக்கை விட்டவர்களே அதிகம். அதைப் பத்தி இன்னொரு தகவல் – erect ஆ இருந்தப்ப அது பதிமூணு இன்ச் அப்புடீன்னு ரஸ்புடீனோட பொண்ணே சொல்லிருக்காங்க !!! அது தற்போது என்னாண்டதான் இருக்குன்னு ஒரு ரஷ்ய டாக்டர் சொல்லி, அதை மக்களுக்கும் காட்டிருக்காரு (ஆனா அது உண்மையா பொய்யான்னு தெரில ).. அதோட லென்த் – 11 இன்ச் !! 🙂 . . தன்னோட இந்த பிரம்மாண்டமான உறுப்பை வெச்சி ரஸ்புடீன் பூந்து வெளையாடுனாருனு அவரோட அத்தனை பயாக்ரஃபிலயும் தகவல் இருக்கு. ஒரு போலி உறுப்பை – அதான் அவரோடதுன்னு நம்பி, கும்புட்ட முட்டாள்கள் வேற இருக்காங்க. //

  Noooooooooooooooooooooooooo comments……….

  Reply
 17. // நம்ம விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதுன ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’ //

  யாரண்ணே அது ? அடிக்கடி இந்த பேர நீங்க சொல்லி பாத்திருக்கேன்..சரி..எதோ ஓட்றீங்கன்னு நெனச்சா, நெஜமா அப்புடி ஒரு ஆளு இருக்காரா ???

  Reply
 18. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனையும், ஆவி அமுதா-வையும் மறக்க முடியாது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்ச கூத்து இருக்கே…..

  ஆனா… அந்த டைமிலும் வயசிலும் இந்த மாதிரி விசயங்களில் இருந்த ஆர்வம்… எதோ.. நாமல்லாம் இதை படிச்சிட்டனால ஒரு ராக்கெட் சைண்டிஸ்ட்-ன்னு ஒரு மிதப்போட திரிவோம்.

  விக்கிரவாண்டி கல்லா நிரம்புனதுதான் மிச்சம்.

  Reply
 19. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை, அவரு எழுதுன புக்ஸ் எனக்குப் புடிக்கும். இப்பவும். அவரோட புக்ஸ்தான் எனக்கு ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன் பழங்குடியினர், துதன்காமேன், குக்குல்கன் (அஸ்டெக்ஸ் ) இன்னும் நிறைய அமானுஷ்ய மேட்டர்ல்லாம் அறிமுகப்படுத்திச்சி (இன்னும் அந்தப் பேரெல்லாம் மறக்கல). பேசும் ஆவிகள் ஒரு பெரிய collection வெச்சிருந்தேன். . interesting மனிதர்

  Reply
 20. அதேபோல், Erich Von Daniken பத்தின டீடேயில்ட் இன்ட்ரோ, எனக்கு ரவிச்சந்திரன் மூலமாத்தான் கிடைச்சது 🙂 . . டானிக்கன் புக்ஸ்லாம் செம்ம டக்கரா இருக்கும். ராமர், இயேசு பத்தியெல்லாம் அவரு செம்மையா கமென்ட் போட்டுருப்பாரு 😛

  Reply
 21. என்னப்பா.. உங்க ரெண்டு பேரோடயும் ஒரே அக்கப்போரா இருக்கு. நாங்க எதுனா.. லைட்டா ‘தெரிஞ்சா’ மாறி.. பதிவுக்கு சம்பந்தமான கமெண்ட் போட்டா.. இப்படி.. வரிசையா பத்து பேரை போட்டு டரியல் ஆக்குறீங்களே.

  இதுக்குத்தான்… தமிழ்க்குல கலாச்சாரமாம்.. ‘வட’,’மீ த ஃபர்ஸ்ட்’ மட்டும் போட்டுட்டு முக்கால்வாசி பேரு தப்பிச்சிக்கிறாங்க போல.
  ===

  மீ த.. ’இம்சை 23’ஆம் வட’.

  Reply
 22. thala i expect the same article with your side.

  Reply

Join the conversation