திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 3

by Rajesh August 23, 2011   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

Chapter 1 – What is a Screenplay? (Contd)

ஆரம்பம் – நடுப்பகுதி – முடிவு = Setup – confrontation – Resolution .

இந்த மூன்று பகுதிகளே, திரைக்கதையின் துண்டுகளை ஒன்றிணைத்து, முழுக்கதையாக்கும் பகுதிகள்.

சரி. ஆனால், ஒரு கேள்வி வருகிறது அல்லவா? முதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்கு எப்படிக் கதையை நகர்த்துவது? அதேபோல், இரண்டாம் பகுதியில் இருந்து மூன்றாம் பகுதிக்குக் கதை எப்படிச் செல்லும்?

இதற்கு விடை, மிகச்சுலபம்.

Plot Points.

சென்ற அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட திரைக்கதை வடிவத்தின் படம் இங்கே மறுபடியும் கொடுக்கப்படுகிறது. இதனை இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படத்தில், Plot Point 1 மற்றும் Plot Point 2 என்று இரண்டு விஷயங்கள் இருப்பதைக் கவனித்தீர்கள் அல்லவா ?

திரைக்கதையில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியாயிற்று. அடுத்தது என்ன செய்ய வேண்டும்? நடுப்பகுதியை நோக்கிக் கதை நகர வேண்டும். அதாவது, பிரதான கதாபாத்திரம் அடைய நினைக்கும் விஷயத்தின் பாதையில், தடைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உதவுவதுதான் Plot Point 1. அதாவது, திரைக்கதையின் முதல் பகுதியில் இருந்து இரண்டாம் பகுதிக்குக் கதையை நகர வைக்கும் ஒரு காரணி. இந்த Plot Point இல்லாமல் , திரைக்கதை எழுதவே முடியாது. எப்படி முக்கினாலும், திரைக்கதையின் ஆரம்பத்தில் இருந்து கதை நகர்வதற்கு, ஏதோ ஒரு காரணி இல்லாமல் முடியாது. அதே போல் திரைக்கதையின் இறுதியை நோக்கிச் செலுத்தும் காரணியும் அவசியம் தேவை (Plot Point 2 ).

Plot Point என்பதற்கு சிட் ஃபீல்ட் கொடுக்கும் விளக்கம் – ஏதோ ஒரு சம்பவம் , கதையின் போக்கை திசைதிருப்பி, வேறொரு பக்கம் பயணிக்கச் செய்தால், அதுவே Plot Point.

இந்த விளக்கத்தை வைத்து, கதையின் போக்கை, திரைக்கதையின் ஆரம்பத்தில் (setup) இருந்து திசைதிருப்பி, இரண்டாம் பகுதிக்குச் செலுத்துவது Plot Point 1 என்றும், இரண்டாம் பகுதியில் (confrontation) இருந்து திசைதிருப்பி மூன்றாம் பகுதிக்குச் (resolution) செலுத்துவது, Plot Point 2 என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்போது, Plot Point என்பதற்கு சில உதாரணங்கள் பார்க்கலாம். பெரும்பாலான நண்பர்கள், தமிழ்ப்பட உதாரணம் கேட்டிருப்பதால், அவ்வப்போது இனி தமிழ்ப்பட உதாரணங்களும் வரும்.

ஆரண்ய காண்டம் படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படம், மிகத்தெளிவாக எழுதப்பட்ட ஒரு படம். படத்தின் முதல் பகுதி – Setup – இதில், கதாபாத்திர அறிமுகங்கள் (சிங்கப்பெருமாள், அவனது இளம் மனைவி, சப்பை, சம்பத், கொடுக்காப்புளி, அவனது தந்தை ஆகிய கதாபாத்திரங்கள், அவர்கள் செய்யும் தொழில், ஒருவருக்கொருவர் சம்மந்தப்பட்டிருக்கும் விதம்) சொல்லப்பட்டிருக்கும். அதேபோல், இரண்டாம் பகுதி – confrontation – இதில், பிரதான கதாபாத்திரமான சம்பத் தப்பிக்க முயற்சி செய்வது, அதற்கு ஏற்படும் இன்னல்கள், கொடுக்காப்புளியும் அவனது தந்தையும் போதை மருந்தை எடுத்துக்கொண்டு தப்பிப்பது, அவர்களுக்கு ஏற்படும் தடைகள், சிங்கப்பெருமாள் சம்பத்தைக் கொல்ல முயல்வது, சப்பையும் சிங்கப்பெருமாளின் மனைவியும் தப்பிக்க முயலுதல், அதற்கு ஏற்படும் தடைகள் என மிகத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். மூன்றாம் பாகம் – resolution – இந்தக் கதாபாத்திரங்கள் அடைய நினைத்த விஷயங்கள் என்னவாயின? என்பதனை விளக்கும். சிங்கபெருமாள், சம்பத்தைக் கொல்லமுடியாமல், இறக்கிறான். சம்பத், தாதாவாக ஆகிறான். எதிரி தாதா கும்பலைக் கொல்கிறான். கொடுக்காப்புளி, தனது தந்தையைக் காப்பாற்றுகிறான். சிங்கப்பெருமாளின் மனைவி, தப்பிக்கிறாள்.

இப்படி, தெளிவான ஒரு திரைக்கதையாக இருக்கிறது ஆரண்யகாண்டம்.

இதில், Plot Pointகள் எங்கே வருகின்றன?

முதல் பகுதியில், கதாபாத்திர அறிமுகத்துக்குப் பின்னர், கதை எங்கே துவங்குகிறது? கவனியுங்கள். எந்தப் புள்ளி, முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் இணைக்கிறது? இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.

முதல் நிகழ்ச்சி – ‘நீங்க என்ன டொக்காயிட்டீங்களா?’ என்று சிங்கப்பெருமாளிடம் சம்பத் கேட்பது.

இரண்டாம் நிகழ்ச்சி – காரில் சென்றுகொண்டிருக்கும் சம்பத்தின் அடியாட்களை, சிங்கப்பெருமாள் ஃபோனில் அழைப்பது. ‘சம்பத்தைக் கொன்றுவிடுங்கள்’ என்று கட்டளையிடுவது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளில், எந்தச் சம்பவம், திரைக்கதையின் முதல் பாகத்திலிருந்து, இரண்டாம் பாகத்துக்குக் கதையை செலுத்துகிறது? முதல் நிகழ்ச்சி என்று சிலரும், இரண்டாம் நிகழ்ச்சி என்று சிலரும் சொல்லக்கூடும். என்னதான் சம்பத் கேட்ட கேள்வி சிங்கப்பெருமாளைக் கடுப்பாக்கினாலும், சிங்கப்பெருமாளின் வெளிப்படையான மூவ் – சம்பத்தைக் கொல்வது – எங்கே தெரியவருகிறது? இரண்டாம் நிகழ்ச்சியில் தானே? அதேபோல், ‘டொக்காயிட்டீங்களா’ என்று சம்பத் கேட்கும் கேள்வியால், இரண்டாம் பகுதியான சம்பத் துரத்தப்படுவது ஆரம்பிப்பதில்லை. சம்பத்தைக் கொல்லச்சொல்வதன் மூலமாகவே , சம்பத் ஓடும் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது.

ஆகவே, ஆரண்ய காண்டத்தின் Plot Point 1, சிங்கப்பெருமாள் சம்பத்தைக் கொல்லச் சொல்வது.

இதில் இருந்துதான், இரண்டாம் பகுதி தொடங்குகிறது என்பதை இதற்குள் கவனித்திருப்பீர்கள்.

சரி. Plot Point 2, இந்தப் படத்தில் எங்கு வருகிறது?

மறுபடியும் ஒருமுறை Plot Point என்பதற்கு விளக்கத்தைப் பார்த்துக்கொள்வோம்.

ஏதோ ஒரு சம்பவம் , கதையின் போக்கை திசைதிருப்பி, வேறொரு பக்கம் பயணிக்கச் செய்தால், அதுவே Plot Point.

இரண்டாம் பகுதியான துரத்தப்படுதல் என்பது, எப்போது க்ளைமேக்ஸான மூன்றாம் பகுதியை நோக்கிப் பயணிக்கிறது?

ஒரு மிகச்சிறிய நிகழ்ச்சியின் மூலம்.

சம்பத், இன்ஸ்பெக்டரிடம், எதிரி தாதா கும்பலிடம் தூது செல்லச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா?

படத்தில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு காட்சியைப் போல் மேலுக்குத் தோன்றினாலும், படத்தின் முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று என்பது, சற்றே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும். இந்தக் காட்சி வரும் சூழலைக் கொஞ்சம் யோசிப்போம்.

அதுவரை, சிங்கப்பெருமாளாலும், எதிரி தாதா கும்பலாலும் துரத்தப்படும் சம்பத், யோசிக்கிறான். தன்னைத் துரத்தும் இந்த இரண்டு கும்பல்களுக்கும் சண்டை மூட்டிவிட்டால், தனது எதிரிகள் காலி. இதன்மூலம், பிழைத்திருப்பது சிங்கப்பெருமாளும், வேறு சில சில்லறை அடியாட்களும் தான். ஆகவே, அவர்களை எளிதில் கொன்று விடலாம். அவர்களில் சிலர் தன்னுடைய ஆட்களாகவும் இருந்ததால், எளிதில் அவர்களை பயமுறுத்தியும் விடலாம். ஆகவே, இரண்டு கும்பலுக்கும் சண்டை மூட்டிவிட என்ன செய்ய வேண்டும்?

எதிரிக்கு எதிரி நண்பன்.

இதுதான் சம்பத் யோசிப்பதன் சாராம்சம்.

இந்த யோசனை, செயல்வடிவம் பெறுவது எப்போது? இன்ஸ்பெக்டரிடம் சம்பத் பேசும் சிறிய காட்சியில். அந்தக் காட்சிக்குப் பின்னர்தான் தாதா கும்பலின் ஆள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவதும், அவன் கொல்லப்படுவதும். அதுதான் எதிரி தாதாவின் மனதில் சந்தேகத்தை விளைவிக்கிறது. அதுதான் இறுதியில் அவர்களை, சம்பத் சொல்லுமிடத்துக்குத் தயங்காமல் வர வைக்கிறது. அதுதான் அவர்களின் மரணத்துக்கும் காரணமாகிறது.

ஆகவே, சம்பத் இன்ஸ்பெக்டரிடம் பேசும் காட்சியே, ஆரண்ய காண்டத்தின் Plot Point 2 .

இந்த ரீதியில் யோசித்தால், எந்தப் படமாக இருந்தாலும், பிரதான இரண்டு Plot Point களை மிகச்சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். நண்பர்கள், உங்களுக்குப் பிடித்த படங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

ஆங்கில உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். Fellowship of the Ring படத்தின் Plot Point கள் எவை?

Plot Point 1 – ஃப்ரோடோ , ஷையரிலிருந்து கிளம்பும் காட்சி. இதுதான் படத்தின் இரண்டாம் பகுதியான, ஃப்ரோடோவையும் ஃபெலோஷிப்பையும் சாரோன் மற்றும் சாருமானின் ஆட்கள் துரத்தும் பகுதிக்குக் காரணமாவதால்.

Plot Point 2 – லாத்லாரியனில், கலாட்ரியேல், மோதிரத்தை அழிக்காவிடில், மிடில் எர்த்தின் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று ஃப்ரோடோவுக்கு விளக்கும் காட்சி. இந்தக் காட்சிதான், மோதிரத்தை அழிக்கும் முயற்சியில் ஃப்ரோடோவை மிகத்தீவிரமாக ஏவிவிடுகிறது என்பதால்.

Plot Point களைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை, பரபரப்பான ஒரு காட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மிகச்சிறிய ஒரு ஷாட்டாகக்கூட இருக்கலாம். ஆனால், கதையை, ஒரு பகுதியிலிருந்து சரெக்கென்று அடுத்த பகுதியை நோக்கி அது திருப்ப வேண்டும். அதுவே ஒரே ரூல். இது, சிட் ஃபீல்டின் கூற்று.

இப்போது ஒரு கேள்வி. திரைக்கதை, தெளிவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ப்ளாட் பாயின்ட்கள் சரியாக அமைந்திருந்தால், அந்தப் படம் சுவாரஸ்யமாகி விடுமா?

பதில் – கட்டாயம் இல்லை. ஒரு திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றால், கதை உறுதியாக இருக்க வேண்டும். கதையே இல்லாமல், திரைக்கதையை மட்டும் டெக்னிகலாகப் பிரித்தால், அந்தப் படம் மொக்கை தான். ஒரு உதாரணமாக, மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தை அலசுவோம். Amores Perros படத்தின் காப்பி என்னும் பாயிண்ட்டை விட்டுவிடுவோம். ஒரு தமிழ்ப்படமாக, ஆய்த எழுத்து படத்தின் குறைபாடு என்ன? ஏன் அந்தப் படம் ஓடாமல் போனது?

காரணம் மிக எளிது. என்னதான் திரைக்கதையின் விதிகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டிருந்தாலும், படம் ஓடாமல் போனதற்குக் காரணம், நடைமுறை வாழ்வில் சாத்தியமில்லாத விஷயங்கள், திரைக்கதை முழுதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்ததே காரணம். மாதவனின் கதாபாத்திரம் ஒரு உதாரணம். முன்னுக்குப்பின் முரணாக, தன் அண்ணனைக் கொலைசெய்த அதே அரசியல்வாதியிடம் சரண்டர் ஆகி, அவனது கைப்பாவையாக மாறிவிடுகிறது இந்தக் கதாபாத்திரம். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், பவர் வேண்டும் என்று தேய்ந்துபோன காரணம் ஒன்றை சொல்கிறது. அதேபோல், மாபெரும் அரசியல்வாதியுடன் பொருதி, அந்த அரசியல்வாதியை மண்ணைக்கவ்வச் செய்யும் கதாநாயகன் யார் என்று பார்த்தால், ஒரு மாணவன். அடப்பாவிகளா. தமிழகத்தில் அப்படியா இருக்கிறது? ஒரு பேச்சுக்கு, மந்திரி ஒருவரை, ஒரு மாணவன் எதிர்ப்பதாக வைத்துக்கொள்ளலாம். அடுத்த நொடியே, குடும்பத்தோடு அழிக்கப்பட்டுவிடமாட்டானா அவன்? இந்தப் படத்தில் வருவதுபோன்ற நிகழ்ச்சிகள், மணிரத்னத்தின் கனவுகளில் மட்டுமே சாத்தியம். கூடவே, சாரமே இல்லாத காதல் கதை வேறு (த்ரிஷா -சித்தார்த்), படத்தையே ஜவ்வு போல் இழுக்கிறது.

ஆக, திரைக்கதை சரியாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டால் மட்டும், படம் ஓடிவிடாது என்பதற்கு ஆய்த எழுத்து ஒரு உதாரணம்.

இன்னொரு உதாரணம், ஹே ராம்.

கமல், திரையுலகின் டெக்னிகல் விதிகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதர் என்பது அனைவருக்குமே தெரியும். இருந்தாலும், ஏன் ஹே ராம் தோல்வியுற்றது? (ஹே ராம் மட்டுமல்லாது, கமல் திரைக்குப்பின் பங்கேற்கும் படங்கள் பெரும்பாலும் தோல்வியுறுவது ஏன்?)

மணிரத்னத்துக்குச் சொன்ன அதே காரணங்கள், கமலுக்கும் பொருந்தும். ஒரே சீரான திரைக்கதை என்பது கமல் எழுதும் படங்களில் இருப்பதில்லை. திரைக்கதையின் கட்டமைப்பு – அதாவது, மூன்று பகுதிகள், இரண்டு ப்ளாட் பாயிண்ட்கள் என்பதெல்லாம் கச்சிதமாகக் கமல் எழுதியிருந்தாலும் (ராணி முகர்ஜியின் மரணம் – முதல் ப்ளாட் பாயின்ட். ஷா ருக் கானின் கதாபாத்திரம் இறப்பது, இரண்டாவது ப்ளாட் பாயின்ட்), கதை – அதில் கோட்டை விட்டுவிடுகிறார். அதுதான் காரணம். ஹே ராமில், உலகத்தரம் என்று எண்ணி அவர் வைத்த பல காட்சிகள் – சிம்ஃபனி போன்ற இசை பின்னணியில் ஒலிக்க, உடலுறவு கொள்வது, முஸ்லிம்களை மட்டும் தொடர்ந்து வில்லன்களாக சித்தரிப்பது, அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் அங்கத்தினர்களையே தொடர்ந்து படங்களில் காண்பிப்பது, தானுமே அச்சமூகத்தைச் சேர்ந்தவனாகவே நடிப்பது போன்ற பல காரணங்கள் உண்டு. டெக்னிகல் விஷயங்கள் சிறந்திருந்தால் மட்டுமே படம் ஓடிவிடாது என்பதற்கு, கமலும் மணிரத்னமுமே இரண்டு சிறந்த உதாரணங்கள்.

திரைக்கதை எழுதுவதன் கோல்டன் ரூல் என்னவெனில், நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத – சமூக வாழ்வுக்கு அந்நியமாக இருக்கும் படங்கள், பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் இனம்புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வெறுப்பு அவர்களுக்கே தெரியாமல் உருவாகி, படத்தைப் பற்றிய நெகட்டிவ் கருத்தைக் கிளப்பிவிட்டு, அதனால் படம் ஓடாமல் போகிறது. இதற்கு எதிர்வெட்டாக, ‘தெய்வத்திருமகள்’ போன்ற அழுவாச்சி காவியங்கள் ஓடவும் செய்கின்றன.

இத்துடன், இந்த முதல் அத்தியாயம் – திரைக்கதை என்றால் என்ன? – முடிவடைகிறது.

இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த விஷயங்கள் என்னென்ன?

திரைக்கதை என்றால் என்ன என்று பார்த்தோம். திரைக்கதையின் மூன்று பகுதிகளைப் பற்றிப் பார்த்தோம். Plot Point பற்றித் தெரிந்துகொண்டோம்.

என்னதான் இவையெல்லாம் இருந்தாலும், கதை உறுதியாக இருக்கவேண்டும்; அது, சம்மந்தமில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டோம்.

இப்போது, ஒரு சிறிய கோரிக்கை. இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள், தங்களுக்குப் பிடித்தமான படங்கள் என்னென்னவோ, அவைகளிலெல்லாம் இந்த விஷயங்கள் இருக்கின்றனவா என்று யோசித்துப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்லாது, இனி நீங்கள் பார்க்க நேரும் எந்தப் படமாக இருந்தாலும் சரி, கதை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா? ப்ளாட் பாயிண்ட்கள் இருக்கின்றனவா? என்று கவனித்து வாருங்கள். ஒரு சில படங்களிலேயே, இந்தக் கலை உங்களுக்குக் கைவரப்பெற்றுவிடும். அதன்பின், திரைப்படங்களை வெகு சுலபமாக அலசிவிடலாம்.

திரைக்கதையின் அடிப்படையைப் பற்றிப் பார்த்தாயிற்று. அடுத்து?

தொடரும்…

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

71 Comments

 1. வட
  பட்ட ஜிலேபி
  கார பூந்தி

  Reply
 2. ” இப்போது, ஒரு சிறிய கோரிக்கை. இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள், தங்களுக்குப் பிடித்தமான படங்கள் என்னென்னவோ, அவைகளிலெல்லாம் இந்த விஷயங்கள் இருக்கின்றனவா என்று யோசித்துப் பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்லாது, இனி நீங்கள் பார்க்க நேரும் எந்தப் படமாக இருந்தாலும் சரி, கதை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா? ப்ளாட் பாயிண்ட்கள் இருக்கின்றனவா? என்று கவனித்து வாருங்கள். ஒரு சில படங்களிலேயே, இந்தக் கலை உங்களுக்குக் கைவரப்பெற்றுவிடும். அதன்பின், திரைப்படங்களை வெகு சுலபமாக அலசிவிடலாம் “

  அண்ணாத்த படம் பொழுது போக்குக்கு தானே பர்க்குறோம்…. அப்போ நாங்க படத்தை பாக்கிறதா இல்லை படத்தில நீங்க சொன்ன விஷயங்கள் இருக்கான்னு பாக்கிறதா ??? சரி விடுங்க நாங்க இதை எல்லாம் பார்க்கிறோம் but நீங்க முதல்ல போய் ஒரு நல்ல doctora பாருங்க eeeeeeeee…………….

  Reply
 3. நண்பரே ஆனந்த் ஷா…

  நீங்க பொழுதுபோக்குக்கு பாக்குறதால எல்லாரும் அதேமாறியே பாப்பாங்கன்னு அர்த்தமா ??

  உங்களுக்கு புடிக்கலைனா எதுக்கு சிரமப்பட்டு படிச்சுகிட்டு……….

  Reply
 4. கொழந்த அண்ணே yeahh அதையே தான் நானும் கேக்கிறேன் உங்களுக்கு புடிக்கல்லைன்னா சிரமப்பட்டு எதுக்கு தமிழ் சினிமா பார்த்துகிட்டு ???

  Reply
 5. என்னங்க…உங்க பிரச்சன ???

  இப்புடி கமென்ட் போட்டு கருந்தேள ஒட்டிட்டீங்க – மடக்கிட்டீங்கன்னு அர்த்தமா ?? கமென்ட் போடுறதுக்கு முன்னால கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா………..

  என்னமோ போங்க……….

  Reply
 6. // கொழந்த அண்ணே yeahh அதையே தான் நானும் கேக்கிறேன் உங்களுக்கு புடிக்கல்லைன்னா சிரமப்பட்டு எதுக்கு தமிழ் சினிமா பார்த்துகிட்டு //

  யாரு என்ன பாக்குறதுன்னு முடிவு பண்ண வேண்டியது அவுங்கவுங்கதான்…………..

  உங்களுக்கு எந்த அளவுக்கு – ஒரு படம் புடிச்சு போனா அத தூக்கி வெச்சு கொண்டாடுறதுக்கும் அதுதான் உலகமகா படம் – அவர்தான் உலகமகா நடிகர் என்று சொல்வதற்கும், உரிமை இருக்கோ…..

  அதே அளவுக்கு அத புடிக்காதவங்களுக்கும் அத குப்ப என்று விமர்சிக்க உரிமை இருக்கு…

  உங்களுக்கு புடிக்காத படத்த பத்தி யாராவது திட்டினா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க…இதேது உங்களுக்கு புடிச்ச படங்கள சொன்னா, ஒடனே எதுக்கு பாயனும் ???

  Reply
 7. சினிமா ஒண்ணும், அதுவும் குறிப்பா தமிழ் சினிமா ஒண்ணும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் கெடையாது…..

  சினிமாவுல மட்டும் போற போக்குல – தீவிரவாதம், மொழி, அரசியல், டாக்டர்கள் அவுங்க இவுங்க அது இதுன்னு எத பத்தி வேணாலும் அப்பத்தமா காமிப்பாங்க…ஆனா, சினிமாவ சொன்னா மட்டும், கஷ்டப்பட்டு எடுக்குறாங்கன்னா அது என்ன நியாயம். எல்லா தொழிலும் கஷ்டம் தான்.

  இங்க சினிமா வெறும் வியாபரம்.தொழில்.
  அதுல கண்டமேனிக்கு கமென்ட் வரத்தான் செய்யும்.

  Reply
 8. sir யாரு யோசிக்கணும் நானா நீங்களா ??? உங்களுக்கு plot point தெரியும், கருந்தேளுக்கு உங்களை விட நல்லா தெரியும்… படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு தெரியுமா ??? அவன் எதுக்கு படம் பார்க்கிறான் விமர்சனம் எழுதவா ??? இல்லை blogல எழுதவா ??? அவனை பொறுத்த வரைக்கும் அது சினிமா அந்த படம் அவனை சந்தோஷப் படுத்தினா, திருப்திபடுத்தினா போதும் அவளவுதான்…

  sthephan king storkku
  Syd Field screen play எழுதி
  Stanley Kubrick direct பண்ணாலும்

  சாக்கடை அள்ற சாதாரண ரசிகனை திருப்தி படுத்தல்லைன்னா படம் அவளோதான்… சார் வெள்ளைக்காரனுக்கு வயித்த கலக்கிச்சுன்னா இருந்திட்டு பேப்பரால துடைப்பான் நம்மளால முடியுமா ??? சீனாக்காரன் ரெண்டு குச்சிய வச்சுகிட்டு எத எதையோ சாப்பிடுறான் இது எல்லாத்தையும் எங்களால செய்ய முடியுமா ??? சார் ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு ரசனை அதை எங்களோட ஒப்பிட்டு பேசறதுதான் மடத்தனம்….. இங்க memento மாதிரி screen play எழுதி ஒரு படம் எடுத்தா மக்களுக்கு புரியுமா ??? இல்லை அப்பிடி ஒரு படம்தான் ஓடுமா ??? ஓடும் சார் எப்போ தெரியுமா எல்லாரும் படத்தை பார்க்கிற கோணத்தை மாத்தணும், தொழிநுட்ப ரீதியா ரசிக்கணும்,அதுக்கு இங்கையும் கல்வி வளர்ச்சி அதிகரிக்கணும் படிச்சவங்க தொகை அதிகரிக்கணும் கல்வி,அரசியல், பொருளாதாரம், இப்பிடி எல்லா துறைகள்லையும் வளர்ந்து இந்த நாட்ல இருக்கிற எல்லா குடிமகன்களுக்கும் தன்னோட கையெழுத்தை எண்ணைக்கு ஒழுங்கா போடத்தெரியுதோ அண்ணைக்கு கேளுங்க சார் தமிழ் சினிமாவபார்த்து கேள்வி…..

  அதை விட்டிட்டு மணிரத்னத்துக்கு திரைக்கதை எழுத சொல்லிக் குடுக்கிறது எல்லாம் 2011 ஓட மிகச்சிறந்த காமெடி…..

  Reply
 9. ” உங்களுக்கு எந்த அளவுக்கு – ஒரு படம் புடிச்சு போனா அத தூக்கி வெச்சு கொண்டாடுறதுக்கும் அதுதான் உலகமகா படம் – அவர்தான் உலகமகா நடிகர் என்று சொல்வதற்கும், உரிமை இருக்கோ…. அதே அளவுக்கு அத புடிக்காதவங்களுக்கும் அத குப்ப என்று விமர்சிக்க உரிமை இருக்கு “

  கண்டிப்பா இருக்கு இப்போ யாரு இல்லைன்னு சொன்னா ??? அதே மாதிரி எங்களுக்கு தோணுற கருத்துகளை நாங்களும் தைரியமா சொல்லணும் இல்லையா ??? இங்க மட்டும் என்ன வாழுதாம் இங்க எழுதிற முக்கால் வாசிப்பேர் எதுக்காக எழுதறாங்கங்க hits க்காகவும் publicity க்காகவும்தானே அப்பிடி இல்லைன்னா எதுக்கு அவங்க கருத்துக்கு முரணா யாராச்சும் comment பண்ணா அளிக்கிறாங்க, அப்பிடி எல்லாம் இல்லை நாங்க மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லத்தான் எழுதறோம்ன்னா எதுக்கு சினிமா பத்தி எழுதணும் நாட்டுக்கு பிரயோசனமா வேற எதையாவது பற்றி எழுதலாமே ???

  இன்றைய தமிழ் சினிமாவ ஏத்துக்க முடியாத எல்லாருக்கும் ஒரு பொதுவான கேள்வி…. நீங்க எப்பிடியான ஒரு படத்தை எதிர் பார்க்குரிங்க ??? கண்டிப்பா உங்களோட பதில் அவசியமா தேவை இங்க சொல்ல கஷ்டம்ன்னா…. http://amanidiot.blogspot.com/ இது என்னோட ப்ளாக் இங்க சொல்லுங்க அப்பிடியும் இல்லைனா ananth@live.com இங்க சொல்லுங்க…….

  Reply
 10. எனக்கு என்னமோ ஆரண்யகாண்டம் விட வேற படத்தை வெச்சு விளக்கியிருக்கலாம்னு தோணுது especially since its talk about hit movies :-)…..ஆயுத எழுத்து, ஹேராம் மாதிரியே ஆரண்யகாண்டம் படமும் மக்கள்கிட்ட ஆதரவு பெறாத படம்தான்(திரைக்கதை, கதை நல்லா இருந்தும்)என்பதை நாம மறக்ககூடாது…..எந்த படம் ஓடும்ன்ன்னு நம்மால கண்டிப்பா சொல்லவே முடியாது….Even Shawshank Redemption is commercially failure when it released i guess …..

  Reply
 11. ஹே ராம் மற்றும் ஆய்த எழுத்து தோற்றதுக்குக் காரணம் வலுவில்லாத தடை காரணங்களாகவும் இருக்கலாம். ஆ.எ-ல் கூடுதலாக த்ரிஷா -சித்தார்த் காதல்பகுதி.

  Reply
 12. யோவ் கொழந்த எங்கயா உன் நசுங்கின மூஞ்சி. வந்து ஷா கேட்டதுக்கு பதில் சொல்லுயா. நானா இருந்தா இந்நேரம் தொங்கியிருப்பேன்.

  Reply
 13. கருந்தேள் நீங்க ஆரண்ய காண்டத்தை ரொம்ப கொண்டாடுறீங்க. ஆனா அதுவொரு டைம் பாம் மாதிரி. என்னைக்காவது அதன் ஒரிஜினல் படத்தின் பெயர் தெரியும் போது… வெடிக்கும்.

  Reply
  • Ravi

   அந்த கதை அப்படியே அல்லாமல் the Usual suspects பாணிக்கு ஒத்து போகிறது

   Reply
 14. தேள், சபை களைகட்டுது. வாழ்த்துக்கள். 🙂

  நீங்கள் சொன்ன திரைக்கதை யுக்திகள் அனைத்தும் நல்ல masala படங்களில்(?) சரியாக இருக்கும்.

  உதாரணம் – கில்லி

  Plot point 1- விஜய் த்ரிஷாவை பிரகாஷ்ராஜிடமிருந்து காப்பாற்றுவது
  Plot point 2- விஜயின் அப்பா, த்ரிஷா தன் வீட்டில் மறைந்து இருப்பதை கண்டுபிடிப்பது.

  Reply
 15. //சிம்ஃபனி போன்ற இசை பின்னணியில் ஒலிக்க, உடலுறவு கொள்வது, முஸ்லிம்களை மட்டும் தொடர்ந்து வில்லன்களாக சித்தரிப்பது, அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் அங்கத்தினர்களையே தொடர்ந்து படங்களில் காண்பிப்பது, தானுமே அச்சமூகத்தைச் சேர்ந்தவனாகவே நடிப்பது போன்ற பல காரணங்கள் உண்டு//

  நிஜமாவே இதுவெல்லாம்தான் காரணம்னு நினைக்கிறீங்களா?
  ==

  நிச்சயமா இருக்காது. நீங்க சொல்லியிருக்கும் காரணிகளை வச்சி நூறு படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கு. அவரோட படங்களே. ஹேராமின் தோல்விக்கு முக்கிய காரணமா சொன்னது, அதில் உபயோகப்படுத்தி இருக்கும் பல மொழிகள். தமிழ், ஆங்கிலம், பெங்காலி – ன்னு எந்த சப் டைட்டிலும் இல்லாம படம் முழுக்க வரும்.

  கமல் இதை ஒத்துக்கிட்டார். ஆனா.. கூடவே ‘இதுதான் காரணம்னா என் இந்தியா.. கெக்கே பிக்கே’-ன்னு எதையோ சொன்னார். மறந்துட்டேன். ஆனா நீங்க சொல்லும் காரணத்தை நீங்களும், வினவும் இதுக்கு முன்னாடியே ஒரு முப்பது தடவ சொல்லிட்டீங்க. 🙂

  ஒரு படம் ஏன் ஜெயிக்குது தோக்குதுன்னு தெரிஞ்சிட்டா… அப்புறம் எல்லாரும் ஜெயிக்க மாட்டாங்களா தல?!! கமல், மணி மீதான வெறுப்பிலிருந்து வெளிவந்து இதை இன்னும் ஆராய வேண்டுகிறேன்.

  Reply
 16. இன்னொரு பிரச்சனை, இந்தியப் படங்களில் எப்படி த்ரீ ஆக்ட் ப்ளே-வையும், பிளாட் பாய்ன்ட்-களையும் எதிர் பார்க்கரீங்கன்னும் புரியலை.

  திரைக்கதை திருப்பங்கள் என்பதும், என்னை பொறுத்தவரை சினிமா ரசனை போலவேதான். யார் வேணும்னாலும் எந்த படத்தில் வேணும்னாலும், எத்தனை பிளாட் பாய்ன்ட் வேணும்னாலும் கண்டு பிடிக்க முடியும். உதாரணத்துக்கு… ஆரண்ய காண்டத்தையே எடுத்துக்குவோம். இதே படத்தை.. ஒரு பத்து பேர் கிட்ட பிளாட் பாய்ன்ட் -ஐ கண்டு பிடிக்க சொன்னா.. மொத்தமா நமக்கு இருபது பிளாட் பாய்ன்ட் கிடைக்கும்.

  சுறா படத்தில் கூட… என்னால் மூணு பிளாட் பாய்ன்ட் கண்டு பிடிக்க முடிஞ்சது.
  1. படம் போடுவதற்கு முன்னால்
  2. இடைவேளை
  3. எண்ட் கிரெடிட்.

  Reply
 17. // உங்களுக்கு plot point தெரியும், கருந்தேளுக்கு உங்களை விட நல்லா தெரியும்… படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு தெரியுமா ??? அவன் எதுக்கு படம் பார்க்கிறான் விமர்சனம் எழுதவா ??? இல்லை blogல எழுதவா ??? அவனை பொறுத்த வரைக்கும் அது சினிமா அந்த படம் அவனை சந்தோஷப் படுத்தினா, திருப்திபடுத்தினா போதும் அவளவுதான்…சாக்கடை அள்ற சாதாரண ரசிகனை திருப்தி படுத்தல்லைன்னா படம் அவளோதான் //

  மொதல்ல எனக்கு plotலாம் தெரியும் என்று யார் sir சொன்னா?

  அப்பறம் இந்த பாமரன் – சாக்கடை அள்ளுற சாதாரண ரசிகன் போன்ற வார்த்தைகள் பிடிக்காது.irritating.

  அது எப்புடி சார்….s0 – called அவுங்களுக்கெல்லாம் ரசனை கம்மின்னு முடிவு பண்றீங்க ? அதுக்கு எதுனா அளவுகோல் இருக்கா ?

  இங்க பல பிலிம் சொசைட்டிகள் பல கிராமங்களுக்கு போயி நெறைய உலக திரைபப்டங்களை போட்டு காமிக்குறாங்க. பெரும்பான்மையான மக்கள் ரொம்ப ரசிச்சு உணர்ந்து பாக்குறாங்க. குழந்தைகளுக்கு இயக்கம் ஒண்ணு சமீபத்துல ஆரம்பிச்சாங்க.அதுல கூட இதே மாதிரியான நல்ல feedback கெடச்சது. வேணா இதுல தொடர்ந்து ஈடுபட்டு வரும் நண்பர் ஒருவர் இருக்கார். சந்தேகமிருந்தா அவர்ட கேட்டுப் பாருங்க.

  பெரும்பாலான தமிழ் படங்களில் ரௌடிங்கன்னா – ராயபுரம் ஏரியா, தீவிரவாதியா – உடனே பின்னாடி பாங்கு ஊதுற சத்தம், இன்னுமொவ்வொரு காரேக்டருக்கும் ஒவ்வொரு ஆளுங்க வெச்சிருக்காங்க …..இதுவும் எப்படி ? பொழுதுபோக்கு ல தான் வருமா ?குறிப்பிட்ட ஆட்களையே எப்படி திரும்ப திரும்ப காட்டுறது ஒரு வகையான character assassination இல்லையா ?

  கோன்னு – ஒரு கேடுகெட்ட படம் வந்திச்சு. நக்சல் இயக்கம் எவ்வளவு முக்கியமான பிரச்சன, எத்தன பேர் செத்துகிட்டு இருக்காங்க …..அத போறபோக்குல என்னமோ லெட்டர் பேட் கட்சி ரேஞ்சுக்கு காட்டீட்டு…….அதையும் பொழுதுபோக்குல தான் எடுத்துகுவீங்களா ?

  உன்னை போல் ஒருவன் – அதுல ஒரு முஸ்லிம்ம பாத்து ஒருத்தன் சொல்வான் – “அவனுக்கு என்ன, ஒண்ணு போன இன்னொன்னு இருக்கும்ல” இந்த மாதிரி டயலாக்கையும் பொழுதுபோக்கா தான் எடுத்துக்கணுமா ??

  வெள்ளைக்காரனோட இங்க யாரும் கம்பேர் பண்ணல………

  செய்யுற முயற்சிய நேர்மையா செய்யணும் என்று எதிர்பார்ப்பது தவறா ? எனக்கு அங்காடி தெரு படம் புடிக்கல.ஆனா வசந்த்பாலன் அந்த விசயத்த சொல்லணும் என்று மெனக்கெட்டு அட்டெம்ப்ட் பண்ணது ரொம்ப புடிச்சது.

  Reply
 18. // அதே மாதிரி எங்களுக்கு தோணுற கருத்துகளை நாங்களும் தைரியமா சொல்லணும் இல்லையா ??? இங்க மட்டும் என்ன வாழுதாம் இங்க எழுதிற முக்கால் வாசிப்பேர் எதுக்காக எழுதறாங்கங்க hits க்காகவும் publicity க்காகவும்தானே அப்பிடி இல்லைன்னா எதுக்கு அவங்க கருத்துக்கு முரணா யாராச்சும் comment பண்ணா அளிக்கிறாங்க, அப்பிடி எல்லாம் இல்லை நாங்க மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லத்தான் எழுதறோம்ன்னா எதுக்கு சினிமா பத்தி எழுதணும் நாட்டுக்கு பிரயோசனமா வேற எதையாவது பற்றி எழுதலாமே ???

  இன்றைய தமிழ் சினிமாவ ஏத்துக்க முடியாத எல்லாருக்கும் ஒரு பொதுவான கேள்வி…. நீங்க எப்பிடியான ஒரு படத்தை எதிர் பார்க்குரிங்க //

  யார் என்ன எழுதுறது – அத படிக்கலாமா வேண்டாமான்னு அவுங்கவுங்களுக்கு தெரியும். நீங்க கருந்தேள் ப்ளாக்க குப்பை – hitsக்காக பண்றார் அதுஇதுன்னு விமர்சனம் செஞ்சுட்டு போங்க…அது ஒங்க உரிமை. ஆனா அவர் ப்ளாக்ல படிக்கலாமா வேணாமானு முடிவு செய்ய வேண்டியது நாணு…..

  அதேமாதிரி – குப்பையா மண்ணு மாதிரி படம் இருக்குன்னு சொல்றது என் உரிமை. அத பாக்கலாமா வேணாமானு முடிவு பண்ண வேண்டியது நீங்க. அதவுட்டுட்டு ஏன் அத குப்பையினு சொல்றன்னு கேட்டா என்ன பண்றது சார் ? உங்களுக்காக எல்லாம் என் கருத்த மாத்த முடியுமா ?

  ஜனநாயகம் – ஜனநாயகம்ன்னு ஒண்ணு சொல்வாங்களே..அது மொதல்ல நம்பகிட்ட இருந்து வரணும். அப்பறம் ஹசாரேக்கு கொடி புடிக்கலாம்.

  நீங்கதான் சொல்றீங்க…..உங்களுக்கு தமிழ் சினிமா முக்கியமில்ல……..புடிக்கலைனா.மக்களுக்கு எதுனா நல்லது பண்ணனுமா வேற எழுதுங்கன்னு…………..

  நீங்க அளவுக்கு அதிகமா சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்ரதுனாலதான் இந்த மாதிரி வரீஞ்சு கட்டிட்டு வரீங்க………………….

  ஹாலிவூட்ட தவிர – மத்த பெரும்பான்மையான நாட்டின் படங்கள பாருங்க. இந்த அளவுக்கு அபத்தமா வேற எங்கயும் படங்கள் வர மாதிரி தெரியல.

  அரபு நாடுகள் சிலதுலலாம் படம் எடுப்பதே பயங்கர கஷ்டம் (இப்ப நெலம பரவாயில்ல). பைக்குள்ள கேமேராவை ஒளிச்சு வெச்சு, ஒளிச்சு ஒளிஞ்சு படம் எடுத்தை எல்லாம் பத்தி ஏராளமான டாகுமெண்டரிகள் இருக்கு.
  எவ்வளவு சுந்ததிரம் இருக்கு இங்க ? எவ்வளவு காசிருக்கு ? அத எச்சு உருப்படியா ஒண்ணும் பண்ண முடியாதா ?

  // அண்ணாத்த படம் பொழுது போக்குக்கு தானே பர்க்குறோம்…. அப்போ நாங்க படத்தை பாக்கிறதா இல்லை படத்தில நீங்க சொன்ன விஷயங்கள் இருக்கான்னு பாக்கிறதா ??? சரி விடுங்க நாங்க இதை எல்லாம் பார்க்கிறோம் but நீங்க முதல்ல போய் ஒரு நல்ல doctora பாருங்க eeeeeeeee……………. //

  இந்த கமென்ட்ட வெச்சுதான் இவ்வளவும் ஆரம்பிச்சுது. அந்த கமென்ட்க்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?

  ஆனா.அனானி பேருல வராம…சொந்த பேருல (??) வந்தமைக்கு நன்றிகள்.

  Reply
 19. // யோவ் கொழந்த எங்கயா உன் நசுங்கின மூஞ்சி. வந்து ஷா கேட்டதுக்கு பதில் சொல்லுயா. நானா இருந்தா இந்நேரம் தொங்கியிருப்பேன். //

  யாருப்பா அது ………..அப்புடியே என்ன வெறி ஏத்தி இங்கவொரு சண்டைய உண்ட பண்ணலாம்னு பாக்குறீங்களா ??

  தொங்குறதுக்கு நாட்டுல ஆயிரம் விஷயங்கள் இருக்கு. இந்த மாதிரி உப்புசப்பு இல்லாத விசயங்களுக்கு தொங்க ஆரம்பிச்சா, ஒருநாளைக்கு – ஆயிரம் தடவ தொங்கணும்.

  அபப்ரம் ஹேராம் – அதுல எங்க சாகேத் ராம் தெரிஞ்சார் ??? Frameக்கு frame கமலஹாசன் தான தெரிஞ்சார்……….

  Reply
 20. பதிவவுட பெருசா – இவ்வளவு பெரிய கமென்ட் இப்பதான் போடுறேன்.

  அட…போங்கயா………………ஆள விடுங்க

  Reply
 21. @ ஆனந்த் ஷா –
  //அண்ணாத்த படம் பொழுது போக்குக்கு தானே பர்க்குறோம்…. அப்போ நாங்க படத்தை பாக்கிறதா இல்லை படத்தில நீங்க சொன்ன விஷயங்கள் இருக்கான்னு பாக்கிறதா ??? சரி விடுங்க நாங்க இதை எல்லாம் பார்க்கிறோம் but நீங்க முதல்ல போய் ஒரு நல்ல doctora பாருங்க eeeeeeeee…………….//

  போழுதுபோக்குக்குப் படம் பார்க்குரவங்களுக்காக இந்தத் தொடர் ஆரம்பிக்கல. திரைக்கதைன்னா என்னன்னு அனலைஸ் பன்னுரவங்களுக்காகத்தான் இந்தத் தொடர். நீங்க பொழுதுபோக்குக்காகப் படம் பார்க்குற ஆள்னா, அதைச் செய்யுங்க. இந்தப் பக்கம் வந்து வெட்டியா டென்ஷன் ஆயிட்டு, பாயைப் பொறாண்டுற வேலையெல்லாம் வேணாம் 🙂

  //சார் ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு ரசனை அதை எங்களோட ஒப்பிட்டு பேசறதுதான் மடத்தனம்..// –

  உங்க ரசனையை யாரும் எது கூடவும் ஒப்பிட்டு பேசலை. இங்க, தொடரை ஆரம்பிக்கும்போதே திரைக்கதையை அனலைஸ் செய்யலாம் வாங்கன்னு சொல்லிட்டுத்தான் ஆரம்பிச்சேன். அப்ப, நம்மூர்லயும் so -called ‘ஒலகப் படங்கள்’ எல்லாம் இருக்கு இல்லையா? அதையும் அனலைஸ் செஞ்சிதான் ஆகணும். எதுக்கெடுத்தாலும் ‘எங்க ரசனை எங்க ரசனைன்னு’ சொல்லி , சாக்கடை அள்ளுற ரசிகன் அது இதுன்னு pseudo உதாரணங்கள் கொடுக்குறதை நிறுத்திட்டு, ஒப்பன் மைண்டடா இந்தத் தொடரைப் படிங்க. புடிக்கலையா, இந்தப் பக்கமே வந்துராதீங்க 🙂 . . நான் எழுதுறது புடிக்காம, இங்க வந்து, அதைப் படிச்சிட்டு, டென்ஷன் ஆகி உங்க பீப்பீயை ஏத்திக்கினு கமெண்ட்டு போட்டு நீங்களே மண்டை காயுறதை நிறுத்தினா, உங்க ஹெல்த்துக்கு நல்லது 🙂

  //இங்க எழுதிற முக்கால் வாசிப்பேர் எதுக்காக எழுதறாங்கங்க hits க்காகவும் publicity க்காகவும்தானே அப்பிடி இல்லைன்னா எதுக்கு அவங்க கருத்துக்கு முரணா யாராச்சும் comment பண்ணா அளிக்கிறாங்க, அப்பிடி எல்லாம் இல்லை நாங்க மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லத்தான் எழுதறோம்ன்னா எதுக்கு சினிமா பத்தி எழுதணும் நாட்டுக்கு பிரயோசனமா வேற எதையாவது பற்றி எழுதலாமே ???//

  சினிமாவால நாட்டுக்குப் பிரயோஜனம் இல்லைன்னு உங்களுக்கு யாரு சொன்னாங்க? சினிமா, ஒரு ஆர்ட். அதைப்பத்தி எதுவுமே தெரியாம, அது பொழுதுபோக்கு சமாசாரம் மட்டும்தான் அப்புடீன்னு நீங்க நினைச்சா, அதுக்குன்னே சில பிளாக்ஸ் இருக்கு. அங்க போயி கும்மியடிங்க 🙂 . .

  //இன்றைய தமிழ் சினிமாவ ஏத்துக்க முடியாத எல்லாருக்கும் ஒரு பொதுவான கேள்வி…. நீங்க எப்பிடியான ஒரு படத்தை எதிர் பார்க்குரிங்க ??? கண்டிப்பா உங்களோட பதில் அவசியமா தேவை இங்க சொல்ல கஷ்டம்ன்னா…. http://amanidiot.blogspot.com/ இது என்னோட ப்ளாக் இங்க சொல்லுங்க அப்பிடியும் இல்லைனா ananth@live.com இங்க சொல்லுங்க…….//

  அங்கெல்லாம் எதுக்கு? இங்கயே சொல்றேன். இன்றைய தமிழ் சினிமாவை நாங்க ஏத்துக்கலைன்னு உங்களுக்கு யாரு சொன்னது? உங்க பிரச்னை என்ன தெரியுமா? ஏகப்பட்ட முன் முடிவுகளோட இங்க வந்து , அதை இங்க கொட்டப் பார்க்குறதுதான். இன்றைய தமிழ் சினிமாக்களில், எங்களுக்குப் புடிச்ச படங்களும் இருக்கு. எதுவுமே தெரியாம ஏங்க இங்க வந்து வாந்தி எடுக்கணும்? 🙂

  கொழந்த கரெக்டா சொல்லிருக்கு. அவரோட பதிலே உங்களுக்குப் போதும். இருந்தாலும், இதையும் படிங்க. அப்புறம் வாங்க.

  Reply
 22. @ குறளரசன் – எவண்டா அது? மொதல்ல உன் ஒரிஜினல் பேர்ல வாடா. அத்த உட்டுட்டு, பம்பிக்கினு கமெண்ட்டு போடுற நீ தாண்டா மொதல்ல தொங்கணும் 🙂

  Reply
 23. இங்கு பிளாட் பாய்ண்ட்ஸ் உள்ள கமர்சியல் படங்கள் வெற்றி பெற்று விடும். ஆனால் பிளாட் பாய்ண்ட்ஸ் உள்ள non கமர்சியல் படங்கள் இங்கு வெற்றி பெறுவது கஷ்டம்.

  தமிழ் மக்களின் ரசனையின் ஆழம் மிக குறைவு. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பிரச்னை இல்லை. படித்தவர்களே தெய்வ திருமகளை கொண்டாடியும் ஆதரித்தும் பேசும் போது, உங்கள் பேரன் தாத்தாவாக ஆனாலும் தமிழ்படத்தின் தரம், மக்களின் ரசனை மாறாது.

  Reply
 24. @ நம்பி – இங்க , ஹிட் படங்களை வெச்சி தான் விளக்கனும்னு நான் நினைக்கலை. நல்ல, தரமான படங்களை வெச்சிதான் எக்சாம்பிள் குடுக்கனும்னு நினைச்சேன். ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன் failure தான். ஆனா, அது த்க்ரமான படம் அப்புடீங்குறதுல மாற்றுக் கருத்து கருக்க முடியாதில்லையா? அதே மாதிரி தான் . ஆரண்ய காண்டத்துக்கு, ஹே ராம் & ஆய்த எழுத்துக்குக் கிடைச்ச விளம்பரமும் ப்ரோமோக்களும் கிடைச்சிருந்தா, கட்டாயம் அது ஓடிருக்கும். ஆனா அது இங்க கிடைக்கலையே .. நீங்களும் இதை ஒப்புக்குவீங்கன்னு நினைக்கிறேன்.

  @ இளங்கன்று – எஸ். பேசிக்கலா, ஹே ராம் & ஆய்த எழுத்துக்கு , அவைகளின் வலுவில்லாத தடைக்காரனங்கள் பெரிய காரணம். அதுக்கும், கதைல ஸ்ட்ரெந்த் இல்லாதுதானே பேசிக் ரீசன். என்ன சொல்றீங்க?

  உங்க கில்லி உதாரணம், ரொம்ப கரெக்ட். 🙂

  Reply
 25. @ கும்தலக்கடி – என்னாது வினவு இதையே சொல்லிச்சா? நான் வினவே படிக்கிறது கிடையாது. எதாச்சும் FB ல யாராச்சும் ஷேர் பண்ணாத்தான் உண்டு. அதையே ஸ்கிப் பண்ணி படிக்கிறதுதான் என் வழாக்கம். வினாவை, எனக்கு மொதல்லருந்தே அறவே பிடிக்காது. தாலிபான்களின் எதிரி நானு 🙂

  அண்ட், கமல், ஹே ராமின் மொழி பிரச்னையை பத்தி சொல்லிருக்காருன்றது நானும் ஒத்துக்குறேன். ஆனா, அது அவரோட சப்பைக்கட்டுன்னுதான் நான் நினைக்கிறேன். கமல் கிட்ட வெளிப்படையாவே தெரியுற முஸ்லிம் எதிர்ப்பை மறுக்கவே முடியாது. கொழந்த சொன்ன உன்னைப்போல் ஒருவன் வசன உதாரணம் ஒரு எக்சாம்பிள். தான் ஒரு அன்பயாஸ்ட் மனிதன் அப்புடீன்னு கமல் சொல்லிகிட்டே, இந்த முஸ்லிம் எதிர்ப்பைத் தன்னோட படங்கள்ல தீவிரமா சொல்றது என்னைப்பொறுத்தவரை , ஹிபாக்ரசி தான்.

  கமல் , மணி மேல எனக்கு பெர்சனல் வெறுப்பெல்லாம் இல்ல. மணி மேல இருக்குற கோபம் – அந்தாள் அடிக்கிற காப்பிகள். அண்ட், மொக்கையான சமூகப் பிரச்னை தீர்வுகளை மக்கள் மீது திணிக்குற மனோபாவம். அது அவரோட மனைவி கிட்டயும் நிறைய இருக்கு.

  கமல் மேல கோபம், இந்த முஸ்லிம் எதிர்ப்பும், ஜாதியைத் தூக்கிப் புடிக்குற மனோபாவமும்தான். அது அவரோட படங்கள்ல , இப்ப ரொம்ப எவிடென்ட் தல. இதுக்கு பல உதாரணங்கள் என்னால கொடுக்க முடியும். ஹே ராம், ஒரு ஆர் எஸ் எஸ் கொள்கை விளக்கப் பிரச்சாரம் மாதிரிதான் இருக்கு. படம் பூரா அசிங்கமான இனவாத கருத்துகளைச் சொல்லிட்டு, கடைசில காந்தி வாழ்கன்னு சொன்னா, மக்கள் எப்புடி ஒத்துக்குவாங்க?

  அதேபோல், இந்தியப் படங்கள்ல த்ரீ- ஆக்ட் ஸ்ட்ரக்சர். இப்ப பரவலா எல்லாருமே இதை பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே. மணிரத்னம் , ஷங்கர், கௌதம் மாதிரி ஆளுங்க, இதை ஆரம்பத்துல இருந்தே பாலோ பண்ணுறாங்க. இதை சுஜாதாவே எழுதிருக்காரு. அவரோட புக்ல. இப்ப இருக்குற இயக்குநர்கள், இதை கண்டிப்பா பாலோ பண்ணுறாங்கன்னு தான் தோணுது. இது என் ஒபீனியன்.

  எந்தப் படத்துலயும் பல பிளாட் பாயின்ட் புடிக்க முடியும்தான். ஆனா அதுல எது, அடுத்த பகுதிக்கு கதையைத் திருப்புதுன்னு பார்த்தா, முக்கியமான ரெண்டு பாயிண்ட்டைப் புடிச்சிரலாம்.

  @ katz – //தமிழ் மக்களின் ரசனையின் ஆழம் மிக குறைவு. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பிரச்னை இல்லை. படித்தவர்களே தெய்வ திருமகளை கொண்டாடியும் ஆதரித்தும் பேசும் போது, உங்கள் பேரன் தாத்தாவாக ஆனாலும் தமிழ்படத்தின் தரம், மக்களின் ரசனை மாறாது.//

  உங்க கருத்தை முழுமையா ஒத்துக்குறேன். அதுதான் இங்க பிரச்னை. என்ன பண்ணலாம் சொல்லுங்க? 🙁

  Reply
 26. இங்க ஒப்பன் டிஷ்கஷன் இப்புடி நடக்கிறது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. பயங்கரமான லேர்னிங் இது. எனக்கு. 🙂

  Reply
 27. அப்பறம் , ரசனைக்கும் so called படிப்பு – வேலை போன்றவைகளுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா ?

  இந்த பாமரன் – சாதாரண ரசிகன் போன்ற வார்த்தைகள படிக்கும் போது ரொம்ப வருத்தமாகவும் சங்கடமாகவும் இருக்கு..

  Reply
 28. அதே மாதிரி, ஒரு வேளை ஆரண்ய காண்டம் படம், காப்பின்னு நிரூபிக்கப்பட்டால், நான் இதுவரை அந்தப் படத்தைப் பத்தி போட்ட போஸ்ட் எல்லாமே, அந்த ஒரிஜினல் படத்துக்குப் போயிச் சேரட்டும்னு எழுதுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. சப்போஸ் அது காப்பின்னா, அதை இதுவரை நம்பின நான் குற்றவாளி இல்ல. அப்புடி காப்பியடிச்சி படம் எடுத்த குமாரராஜா தான் குற்றவாளி.

  Reply
 29. @ கொழந்த – //அப்பறம் , ரசனைக்கும் so called படிப்பு – வேலை போன்றவைகளுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா ?

  இந்த பாமரன் – சாதாரண ரசிகன் போன்ற வார்த்தைகள படிக்கும் போது ரொம்ப வருத்தமாகவும் சங்கடமாகவும் இருக்கு..//

  கட்டாயம் ரசனைக்கும் இந்தப் படிப்பு, வேலை மாதிரி விஷயங்களுக்கும் சம்மந்தமே கிடையாதுதான். பாமரன், கக்கூஸ் கழுவுறவன் அப்புடீன்னு எழுதி, அவங்களுக்கு ரசனை இல்லைன்னு நிரூபிக்கப் பாக்குற நம்ம நண்பர் ஆனந்த் ஷா வோட என்னவோட்டமே தப்பு. அதை அவரு மாத்திக்கிட்டா நல்லது 🙂

  Reply
 30. திரைக் கதையின் அடிப்படை கட்டமைப்புகளை மிக நுட்பமாய் அணுகியிருக்கிறீர்கள்.நல்ல முயற்சி…தொடருங்கள்.

  வாழ்த்துக்கள்!

  @ ஆனந்ஷா, குறளரசன் : இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை!! 🙂

  Reply
 31. என்னாது…………குறளரசன் வேற ஆளா ??????

  நா என்னமோ நம்ம நண்பர்களில் ஒரு ஆளுன்னு நெனச்சிருந்தேன்…….

  தம்பி குறளரசா…கெளம்புப்பா
  ………வீட்டுல யாரும் பெரியவங்க இருந்தா வரச்சொல்லு..

  Reply
 32. கருந்தேள் அண்ணே GUD MRNG, முதல்ல ஒரு thankz இல்லை என்னோட கமெண்டை நீங்க பார்த்ததும் அளிச்சிருவிங்கன்னு நினைச்சேன்…… பாஸ் எனக்கு ஒரு habit இருக்கு daily குறைஞ்சது 2 உலக சினிமா பார்ப்பேன் ok வா இதுவரைக்கும் நிறைய பார்த்திருக்கேன்… சரி அதை விடுங்க பாஸ் உங்க favorite director’s ல kim-ki-duk இருக்கார்ல…. சரி கிம்-கி-டக் கொரியால பிறக்கல தமிழ்நாட்ல பிறந்திருக்கார்ன்னு வச்சுக்கோங்க இங்க the bow படத்தை எடுக்கிறார், கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லாம இப்போ இருக்கிற படத்தை அப்பிடியே தமிழ்ல எடுத்திருந்தார்னா என்ன ஆகி இருக்கும் அதுக்கு audienceஓட response, விமர்சகர்களோட response எப்பிடி இருந்திருக்கும்.
  ஒண்ணு கிம்-கி-டக் நாடு கடத்தப் பட்டிருப்பார் இல்லை கம்பி எண்ணிட்டு இருந்திருப்பார்…..
  ( கொரியாலையே அந்த படம் தோல்வின்னு நினைக்கிறேன் சரியாய் தெரியல்ல )

  SMARTIAN GIRL,DELTA, I SAW THE DEVIL, OLD BOY , THE WALL, THE PIANO TEACHER, ALEXANDRA’S PROJECT,…………….

  இப்பிடி ஏதாச்சும் ஒரு படத்தை தமிழ்ல எடுக்க முடியுமா ???? இல்லை அந்த படம்தான் ஜெயிக்குமா ???

  பாஸ் இப்போ உங்களுக்கு ரெண்டு option

  ஒரு கம்பனி உங்க hard work பார்த்து உங்களை ரொம்ப பாரட்டிது, உங்களை பற்றி company magazineல எல்லாம் புகழ்றாங்க, உங்களுக்கு ரொம்ப பெருமை தேடி கொடுக்குறாங்க…. but உங்களுக்கு சம்பளமே கொடுக்கல்ல…

  அதே நேரம் இன்னொரு கம்பனி நீங்க சதாரணமாத்தான் வேலை செய்றிங்க, but உங்களுக்கு கை நிறைய சம்பளம் கொடுக்கிறாங்க…

  இப்போ நீங்க எதை choose பண்ணுவிங்க ????

  Reply
 33. கொழந்தசார் நான் தொழிலுக்கும் ரசனைக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லல….. என்னோட கமெண்டை மறுபடியும் படிங்க inception படத்தை சும்மா ஒரு நூறு பேர்கிட்ட போட்டுக்குகாட்டி பாருங்க முக்கால் வாசிப்பேர் படம் புரியல்லைன்னுதான் சொல்லுவான்…..

  “அரபு நாடுகள் சிலதுலலாம் படம் எடுப்பதே பயங்கர கஷ்டம் (இப்ப நெலம பரவாயில்ல). பைக்குள்ள கேமேராவை ஒளிச்சு வெச்சு, ஒளிச்சு ஒளிஞ்சு படம் எடுத்தை எல்லாம் பத்தி ஏராளமான டாகுமெண்டரிகள் இருக்கு.
  எவ்வளவு சுந்ததிரம் இருக்கு இங்க ? எவ்வளவு காசிருக்கு ? அத எச்சு உருப்படியா ஒண்ணும் பண்ண முடியாதா “

  இங்க காசிருக்கு அதை ஒத்துக்கிறேன் சுதந்திரம் எங்க இருக்கு ??? அப்பிடி சுதந்திரம் இருந்திருந்தா இப்போ நான் இப்பிடி ஒரு கமெண்ட் பண்ண வேண்டிய தேவையே வந்திருக்காது சார்… சார் i saw the devil மாதிரி ஒரு படம் பண்ணனும்ன்னுதான் வெறித்தனமா அலைஞ்சு கிட்டு இருக்கேன் இந்தியால நீங்க சொன்ன சுதந்திரம் எங்க யார்கிட்ட இருக்குன்னு சொல்லுங்க இப்பவே புறப்படறேன் இந்தியாக்கு…….

  ” கோன்னு – ஒரு கேடுகெட்ட படம் வந்திச்சு. நக்சல் இயக்கம் எவ்வளவு முக்கியமான பிரச்சன, எத்தன பேர் செத்துகிட்டு இருக்காங்க …..அத போறபோக்குல என்னமோ லெட்டர் பேட் கட்சி ரேஞ்சுக்கு காட்டீட்டு…….அதையும் பொழுதுபோக்குல தான் எடுத்துகுவீங்களா ??? “

  சார் நக்சல்ஸ் பற்றி விரிவா சொல்லலாம் சொல்லும் போது இயக்குனரோட கற்பனைல எந்த இடத்திலையும் கத்திரி விழக்கூடாது, அவங்க கொள்கைகள் தேவைகள் எல்லாம் சரியா சொல்லப்படனும் இது சாத்தியமா ????

  சார் நீங்க சொன்ன கோ ரொம்ப பெரிய வெற்றி படம், ஆரண்ய காண்டம் ???? இங்க எல்லாருமே பணத்துக்காகத்தான் so ஆரண்யகாண்டாமோ, கோ வோ உங்களை பொறுத்தவரைக்கும் அது art, தயாரிப்பாளரை பொறுத்தவரைக்கும் அது business…. எதில லாபம் கிடைக்குதோ அங்கதான் inverse பண்ண முடியும்…….

  Reply
 34. @ ஆனந்த் – இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லவே இல்லை தான். உண்மையான கருத்தை வெளியுடுறவனை, மக்களே பயங்கரவாதி ரேஞ்சுல தான் பார்க்குறாங்க. அது உண்மை. அதுவேதான் மீடியாலையும் பிரதிபலிக்குது. ஆனா, அதுக்காக, ஒரு விஷயத்தின் இன்னொரு பக்க நியாயத்தை வெளிப்படுத்தவே கூடாது அப்புடீன்னு நீங்க சொன்னா, அதை எதிர்ப்பேன்.

  கிம் கி டுக் படங்கள், கொரியாவில் தோல்விதான். ஆனா அட்லீஸ்ட் அப்புடிப்பட்ட படங்கள் எடுத்தாரே . அதுக்குக் கொரியா அவரை அனுமதிச்சது இல்லையா? அதுகூட இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லைதான். இருந்தாலும், நம்ம பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லுவோமே.

  நம்ம மக்கள், பல்ப் நாவல்கள் தான் இலக்கியம்னு சொல்லிக்கினு திரியிறாங்க. அவங்களைப்பொருத்தவரை, சினிமா ஸ்டார் தான் கடவுள். பாலசந்தர் தான் உலக இயக்குனர்களின் தந்தை. மணிரத்னம் தான் அண்டவெளியின் சிறந்த இயக்குனர். கமல், நடிப்பு தெய்வம். இப்புடியெல்லாம் இருக்குற மக்களில் பல பேர், இப்ப மாற ஆரம்பிச்சாச்சு. உலகின் சிறந்த படங்களைத் தேடித்தேடி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம ஹாலிவுட் பாஸ்கரன் கிட்ட கேளுங்க. . சொல்லுவாரு .

  அதுனால, நான் என்ன சொல்ல வரேன்னா, நாம நல்ல படங்கள் பத்தி சொல்லுறதைத் தொடர்ந்து செய்வோம். தேவைப்பட்டவங்க அதை எடுத்துக்குவாங்க. let ‘s wait

  Reply
 35. அதேபோல், எந்த மாதிரி கமென்ட் ஆனாலும் இங்க வெளியிடப்படும். மாடரேஷன் இங்க அறவே கிடையாது. என்ன வேணாலும் கமென்ட் எழுதலாம். கேட்ட வார்த்தை ஆபாச கமெண்ட்கள் வந்தா மட்டும்தான் அதை சைபர் போலீஸ்க்கு அனுப்புவேன். மத்தபடி, ஆரோக்கியமான விவாதங்களுக்கு இங்க எப்பவும் இடம் உண்டு.

  Reply
 36. நா கருந்தேள் கமென்ட்ட இப்பதான் பாத்தேன்……….

  Reply
 37. // உங்களை பொறுத்தவரைக்கும் அது art, தயாரிப்பாளரை பொறுத்தவரைக்கும் அது business…. எதில லாபம் கிடைக்குதோ அங்கதான் inverse பண்ண முடியும்…….//

  இந்த பாயிண்ட்டுக்கு நீங்களா வந்ததுக்கு மகிழ்ச்சி………….

  அதான் businessன்னு தெரியுதே.அப்பறம், மத்த எல்லா business மாதிரியும் புடிச்சிருந்தா புடிச்சிருக்கு, இல்லையா – குடுத்த காசுக்கு நமக்கு ஒண்ணும் பிரயோஜமில்லைன்னு தோணுதா………….குப்பைன்னு தான் அத சொல்ல முடியும்…………அத சொன்னா அல்லது சொல்ல உங்களுக்கு என்ன கஷ்டம்

  இப்ப என்ன Battle of Algeirs மாதிரி படம் எடுங்கன்னா கேக்குறோம். செய்யுற attemptல நேர்மையா இருங்கன்னு எதிர்பார்க்கிறது தவறா ?? நா சரியா சொல்லலயா……………..உங்களுக்கு புரியலையான்னு தெரியல………. ஏற்கனவே மேல உள்ள கமென்ட்களில் சொல்லிட்டேன். கேனத்தனமா ஒரு படத்த எடுத்திட்டு பம்பாய் போயி U certificate வாங்கிட்டு வர தெரியுது. உருப்படியா பெரும்பான்மையானவர்கள் ஒரு முயற்சியும் பண்ணல (விதிவிலக்குகள் உண்டு).

  அதுக்காக கோ பட டைரக்டர்கள்(கோ படம் ஒரு உதாரணம் தான்) மாதிரியான ஆட்களுக்கு சொந்த கருத்து என்ற வஸ்துக்கள் இருக்கும்.அத வெளிப்படுத்த அவுங்களுக்கு சுதந்திரம் இல்லையின்னு சொல்றது என்னால ஒப்புக்க முடியாது…..

  இதுக்கு மேல சுய – விளக்கம் குடுக்க எனக்கு தெம்பில்ல.

  அப்பறம், சொந்த பேருல என்ன கமென்ட் வேணாலும் எங்க போடலாம். இதுவரைக்கும் கருந்தேள் ப்ளாக்க படிச்சதில்ல போல.எல்லாத்தையும் ஒருவித prenotionலயே அனுகுறீங்கன்னு நெனைக்கிறேன்.

  —————————————

  நீங்க எடுக்க இருக்கும் படத்திற்கு வாழ்த்துக்கள்.

  ஏற்கனவே போட்ட கமென்ட் தான்..business word…வுட்டு போச்சு

  Reply
 38. குழந்தாய், வொய் டெஞ்சன்? நோ டெஞ்சன்.

  Reply
 39. ஏற்கனவே போட்ட கமென்ட் தான்..business word…வுட்டு போச்சு
  __________________

  மக்களே கவனித்தீர்களா? இவர்தாம் டெடிகேஷனுக்கு உதாரணம். நீங்களெல்லாம் இவரிடமிருந்து கற்க வேண்டியது நிறைய.

  Reply
 40. @பாபாஜி

  // குழந்தாய், வொய் டெஞ்சன்? நோ டெஞ்சன் //

  ஷுவாமி……….
  உங்க அருள் இருக்கும் வரை நா ஏன் டன்சன் ஆகப்போறேன். நீங்க சொல்லிக்குடுத்த லிங்க பூஜைய தினமும் செஞ்சாலே சகல கவலைகளும் பறந்தோடிவிடுகிறதே

  Reply
 41. நீங்க எடுக்க இருக்கும் படத்திற்கு வாழ்த்துக்கள்
  _____________________

  கெக்.. கெக்.. கெக்.. கெக்.. கெக்.. கெக்.. கெக்.. கெக்கே..

  Reply
 42. ”ஆபாச கமெண்ட்கள் வந்தா மட்டும்தான் அதை சைபர் போலீஸ்க்கு அனுப்புவேன். மத்தபடி, ஆரோக்கியமான விவாதங்களுக்கு இங்க எப்பவும் இடம் உண்டு.”

  அனுப்பிடுவியா நீயி…. ஒண்டிக்கொண்டி பார்த்துடலாமா?

  Reply
 43. நண்பா,
  மூன்றாம் பகுதியும் நன்றாக வந்துள்ளது,திரைக்கதை எழுத நினைப்போருக்கும் சினிமா ஆர்வலருக்கும் உபயோகமான தொடர்

  Reply
 44. தல.. சூப்பரா இருக்கு பதிவு.. ரொம்ப அழகா புரியுற மாறி எழுதிருக்கிங்க.. ஒரு புது விஷயத்த கத்துக்கிற திருப்தி கிடைக்குது… இனிமே படம் பாக்கும்போது இத கண்டிப்பா மனசுல வச்சுக்கிட்டு பாப்பேன்…

  Reply
 45. கருந்தேள் கண்ணாயிரம் said:
  ……..
  ஹே ராம் & ஆய்த எழுத்துக்கு , அவைகளின் வலுவில்லாத தடைக்காரனங்கள் பெரிய காரணம். அதுக்கும், கதைல ஸ்ட்ரெந்த் இல்லாதுதானே பேசிக் ரீசன். என்ன சொல்றீங்க?
  —————————————————————–
  இல்லை தேள். நான் இங்கு சற்று மாறுபடுகிறேன். ஹே ராம் – ல் உள்ளது வலுவான கதையாகதான் தோன்றுகிறது. சற்று விரிவாக பார்ப்போம்.
  ஹே ராம் – ஒரு பெரிய தலைவர் கொல்லப்பட்டதன் பின்ணணியை ஒரு புனைவின் வழி அலசுதல். அடிப்படை கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் எந்த ஒரு ஏற்ற இறக்கம்மும் (தடைகளும், அதை உடைப்பதும்) இருக்காது. மாறாக, படம் ஒரு பிரச்சார தோணியில் இருக்கும். இதைத் தவிர, முஸ்லிம் எதிர்ப்பு, இந்துத்துவம், பல மொழிகள் அனைத்தும் கூடுதல் காரணங்கள்.
  எனக்கு Inglourious basterds பார்த்தபோது ஹே ராமின் பாதிப்பு அதில் இருந்ததாக தோன்றியது.

  ஆய்த எழுத்து – இப்படத்திற்கு நீங்க சொன்னது சரி. அடிப்படைக் கதையே தெளிவாக இருக்காது. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதா, சமூகத்தில் வெவ்வேறு தளங்களில் இருக்கும் இளைஞர்கள் அரசியலால் மோதுவதா என்பதில் குழப்பம்.
  இதில் சம்பந்தமே இல்லாமல் த்ரிஷா -சித்தார்த் காதல்.

  ஒரு நல்ல திரைக்கதை எழுத நல்ல கதை என்பது கூடுதல் பலமாக மட்டுமே இருக்கமுடியும். சராசரியான ஒரு கதைக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைக்க முடியும் (கில்லி). மேலும் ஒரு சிறந்த கதைக்கு மோசமான திரைக்கதையும் அமையலாம் (ஹே ராம்).

  மாற்றுக்கருத்துகளை தெரிவியுங்கள்.

  Reply
 46. //நண்பா,
  மூன்றாம் பகுதியும் நன்றாக வந்துள்ளது,திரைக்கதை எழுத நினைப்போருக்கும் சினிமா ஆர்வலருக்கும் உபயோகமான தொடர்//

  சிஷ்யா நலமா? எப்டி கீற?

  Reply
 47. யோவ் ஆனந்த்-ஷா, எங்கயா உன் நசுங்கின மூஞ்சி. வந்து கொழந்த கேட்டதுக்கு பதில் சொல்லுயா. நானா இருந்தா இந்நேரம் தொங்கியிருப்பேன்.

  Reply
 48. டேய் ஆனந்து… ஏன்டா இந்த ஒளறு ஒளறுற? பேசத்தெர்லன்னா இங்க இன்னாடா உன்கு வேல.

  உன்னால கொழந்த மாரி பேச வருமா? கொயந்த யாரு தெர்யுமா? அவரு பேக்குரவுண்ட், ஃபோர்க்ரவுண்டு அல்லாம் கேட்டா நீ மெர்லசாய்டுவ.

  மவுனே இன்னோர்தபா இந்த ஏர்யால உன்ன பாத்தேன் பக்கா கொயந்த கிட்ட சொல்லி வச்சிபுடுவேன்.

  Reply
 49. @குறளரசன்

  அய்யா…குரளரசரே……………..நா வுட்டுக்கு ஒரே புள்ள……………பாத்து எதுனா பண்ணுங்க…………

  Reply
 50. டேய் ஆனந்து… நீ டெய்லி ரண்டு ஒலக படம் பாரு இல்லீன்னா ரெண்டு தபா பாத்ரூமுக்கு போ! எங்களுக்கு இன்னாடா வந்துச்சி. உன்ன யாருடா அந்த டீடெய்லு எல்லாம் இங்க கொட்க சொன்னது.

  நீ இன்னா எங்க கொய்ந்த ஜி.கேவை வளத்துறீயா? கொய்ந்த ஆரு தெர்யுமா? அவ்ரு சம்கால இயக்கியம் அல்லாத்துலயும் லெப்டுல பூந்து லெப்டுலயே வெள்ய வந்தாளு. சோக்கா சொல்யான்யா ரண்டு படம் பாத்தேன், ரண்டு இண்டர்வல் உட்டானுங்கோன்னு.

  கொய்ந்த வாய்யா.. இன்னாயா இன்னும் தூங்க்ற.

  Reply
 51. நண்பர்களே இந்த குறளரசன் யாருன்னே எனக்கு தெரியாது………என்னமோ பெருசா திட்டம் போடுறார்…………………………………….நம்பாதீங்க…………..

  Reply
 52. வாய்யா கொய்ந்த. உன்னோட கெம்பீரத்த நானு இங்க கெட்டி காப்பாத்திகினு இர்க்கேன். நீ இன்னா பன்ற?

  Reply
 53. கரெக்டா நா இப்பதான் ஆபிஸ் வர நேராமா பாத்து இந்த கமென்ட்கள்…………………..என்னமோ ஒரு சதி………….என் வளர்ச்சி புடிக்காதவங்க யாரோ செய்றாங்க

  Reply
 54. ஹலோ..யாருங்க நீங்க ?????? கலைஞர் வுடுற அறிக்கை மாதிரி மொக்க கமென்ட் போட்டுக்கிட்டு……….

  எனக்கு சப்போர்ட்க்கு நெறைய பேர் இருக்காங்க….பாலா, கருந்தேள் மாதிரியான ஆட்கள்…careful

  Reply
 55. கருந்தேளையே டாக்குடர்ர பாருன்னு சொல்ல இன்னா தகிரியம் இருக்கோனும் உன்க்கு. இத்தினிக்கும் கொயந்த இந்த ஏர்யால இருக்கும் போதே.

  தக்கா கொய்ந்த கீச்சிபுடும் கீச்சி. நீ சொன்னா தேளு டாக்குடர பாத்துடுமா? கொய்ந்தயே ஒரு கவ்ரவ டாக்குடரு தெர்யுமா? அத்தயே தேளு பாக்காது.

  Reply
 56. கொய்ந்த… நம்ம தம்பி உனிக்குத்தாய்யா சப்போட்டு. நீ இன்னமோ சிலித்துக்கற.

  டேய் கொரளு.. வுடுடா வுடுடா கொயந்து எங்கியோ குப்பை கொட்டுதாம். வுடுடா வுடுடா.

  Reply
 57. அய்யே அண்ணாத்தீங்களா இங்க இன்னாயா மேஞ்சிகினு? அப்பு வூட்டுல தேடுது. போய் துன்னுட்டு ஒலக படம் பாரு.

  Reply
 58. எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
  இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.

  Reply
 59. என்னை பொருத்தவரை, ஹே ராமின் தோல்விக்கு காரணம் பல மொழி கலவையும்; அலைபாயும் திரைக்கதையும் தான். சொல்ல வந்ததை தெளிவாக காட்டவில்லை கமல்.

  How to analyze VANTAGE POINT?

  Reply
 60. cameron ansari

  intha web page director aaganumnu ambition ullavangalukaha mattumea migachchariaga porunthum nanbargalea..! avar movie la plot point, setup,resolution lam epti screen pannirukanga atha ungalala find panna mudiyumnu engalta than solluranga. avangala hurt pannathinga then nanga ethum therinjukha mudiyathu plz…..

  Reply
 61. ram

  சிறந்த தகவல் பாராட்டுகள்

  Reply

Join the conversation