வேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு காப்பிகள்?

by Rajesh October 25, 2011   Copies

Sharing is caring!

இந்த தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள், வேலாயுதமும் ஏழாம் அறிவும். வேலாயுதம் படம், Assassin’s Creed விளையாட்டிலிருந்து எப்படி சுடப்பட்டது என்பதை நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். அது விஜய் படம். ஆகவே, வெளிப்படையாக சுடப்பட்டிருக்கிறது. வேலாயுதத்தின் ட்ரைலர் பார்த்தால், எப்படி அந்தக் கேமின் பல ஷாட்கள், அப்படியப்படியே வேலாயுதத்தில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன என்பது எளிதில் தெரிந்துவிடும். இதெயெல்லாம் ஆரம்பத்திலேயே பார்த்தாகிவிட்டது. Ubisoft நிறுவனமும், தனது Facebook பக்கத்தில், வேலாயுதம் படத்தின் மீது வழக்கு போடப்போவதாக அறிவித்திருந்தது.

இப்போது, அடுத்த பெரிய பட்ஜெட் படமான ஏழாம் அறிவுமே, இதே Assassin’s Creed விளையாட்டிலிருந்தே காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்பது, அதன் ட்ரைலரில் இருக்கிறது. எளிமையாக விளக்கினால், Assassin’s Creed விளையாட்டின் முக்கிய அம்சமே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Al Tair என்ற கொலையாளியின் பரம்பரையில் வந்த Desmond என்னும் தற்போதைய காலத்தில் வாழும் மனிதனை, Animus என்ற சாதனத்தின் மூலம், பழைய காலத்தில் வாழ்ந்த அவனது மூதாதையரான அல் தாய்ர் ஜீன்களுடன் (genes) இணைத்து, அந்த அல் தாய்ர் சென்ற இடங்களுக்கெல்லாம் அனுப்புவதே. இப்போது, இதோ இந்த ஏழாம் அறிவு ட்ரெய்லரை கவனியுங்கள். இதில், படத்தின் கதாநாயகியான ஸ்ருதி, இதே விஷயத்தை இம்மி பிசகாமல் பேசுவதைக் காணமுடியும். அதேபோல், விளையாட்டில் வரும் Animus சாதனத்தைப் போலவே இதிலும் சூர்யா, ஒரு சாதனத்தைத் தன்னுடன் பிணைத்துக்கொள்கிறார். இறந்தகாலத்துக்குச் செல்ல வேண்டி.

ஆக, இம்முறை தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு முக்கியப் படங்களுமே, ஒரே மூலத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவையே. இதைவிட அசிங்கம் தமிழ்த்திரையுலகிற்கு வேண்டுமா?

நாளை ஏழாம் அறிவு படம் பார்ப்பவர்கள், இந்த genes இணைப்பு விஷயத்தைப் பற்றி எனக்கு எழுதுங்கள். அப்படித்தானா என்று. அப்படி இருந்தால், இப்படம் காப்பிதான் என்பது சந்தேகமில்லாமல் தெரிந்துவிடும்.

ஒருவேளை அப்படி இல்லை என்றால், இந்தப் பதிவிலேயே, படத்தைப் பற்றித் தவறாக எழுதியதற்கு மன்னிப்பு கேட்பேன்.

ஒருவேளை படம் காப்பி என்பது உண்மை எனில், காப்பியடித்தே பேர் வாங்கும் இயக்குநர் முருகதாஸ் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுவிடும். ஆக, ஏழாம் அறிவு படத்தைத் திருட்டு டிவிடியில் பார்ப்பதே முறை என்பதும் உண்மையாகிவிடும். பின்னே? காப்பியடித்து எடுக்கப்படும் படத்தை, திருட்டு டிவிடி அல்லது டவுன்லோட் செய்து பார்ப்பதுதானே முறை?

இந்த இடத்தில், இன்னொரு விஷயம். தமிழ்ப்படங்களை நான் எதிர்க்கிறேன் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். யோசித்துப்பாருங்கள். தமிழ்ப்படங்களை வேறு மொழியில், உரிமைகள் வாங்காமல் காப்பியடித்தால், தமிழ்ப்பட இயக்குநர்கள் சிரித்துக்கொண்டே அதனை வரவேற்பார்களா? கட்டாயம் வழக்குகள் பாயுமல்லவா? ஆனால், அதே இயக்குநர்கள், வேறு மூலங்களில் இருந்து தயங்காமல் இப்படிக் காப்பியடிப்பதை எதிர்த்தால், அது தவறு. என்ன நியாயம் இது?

ஆகவே, நண்பர்களே. நான் சொல்லியிருக்கும்படி ஏழாம் அறிவில் அசாஸின்’ஸ் க்ரீட் விளையாட்டில் இருக்கும் அந்த genes இணைப்புக் காட்சிகள் இருந்தால், எனக்கு எழுதுங்கள். அப்படியே, Ubisoft Facebook பக்கத்திலும் சென்று comment போடுங்கள். அட்லீஸ்ட் நம்மால் முடிந்த அளவுக்கு இந்தக் காப்பிகளை எதிர்ப்போம்.

இது, Ubisoft facebook page – https://www.facebook.com/ubisoft?sk=wall&filter=1

பி.கு –

 • முருகதாஸின் கருத்து – ‘ஏழாம் அறிவு, காப்பி அல்ல. வேண்டுமெனில், ஹாலிவுட்டிலிருந்து இப்படத்தைக் காப்பியடிக்கலாம்’ – இதற்குப் பெயர் தான் கடப்பாறையை விழுங்கிவிட்டு சுக்குக்கஷாயம் குடிப்பது போலும் 🙂
 • (Updated on 24th Apr 2012) ஏழாம் அறிவு காப்பியில்லை என்று பேசும் நண்பர்களுக்காக இந்த லிங்க் –  7aum Arivu inspired by a video game?

டைம்ஸ் ஆஃப் இந்தியா மிகத்தெளிவாகவே இப்படம் ஒரு காப்பி (Assassin’s Creed) என்று சொல்லிவிட்டது. படித்துப் பார்த்து இன்புறுங்கள்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

33 Comments

 1. ஏழாம் அறிவு காப்பி அடிக்கப் பட்டது மாதிரி தெரியவில்லை ,ஆனால் படம் முதல் பாதி பயங்கர மெதுவாகவும் ,இரண்டாம் பகுதி முழுக்க கொஞ்சம் பரவாஇல்லை எனவும் கேள்வி பட்டேன், ஆதலால் படம் படு மொக்கை என முடிவு செய்வோம் ஆக

  Reply
 2. இருந்தாலும் இன்று இரவு படம் பார்த்துவிட்டு வந்து விளக்கமாக கமெண்ட் போடுகிறேன் தல

  Reply
 3. கண்டிப்பா மோகன். sure . அந்த விமர்சனம் படிச்சேன். பயங்கர அவரசத்துல எழுதிருக்காரு. அது விமர்சனம் இல்ல. அது, துணுக்குச்செய்தி 🙂

  Reply
 4. இல்ல நான் தான் தவறாக விமர்சனம்னு குறிப்பிட்டுடேன்,அது படம் பார்க்கும் போது அவர் செய்த live update

  Reply
 5. அது உண்மைதான். அது live update மாதிரியேதான் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

  Reply
 6. நண்பா
  நலமா?
  நானும் இதை வரவேற்கிறேன்.பர்மா பஜாரில் டிவிடி வாங்கி படம் எடுக்கும் விஜய் போன்ற இழிபிறவி ஈயடிச்சான் காப்பி இயக்குனர்களால் கற்பனைவளமும் நல்ல ஆக்கதிறனும் கொண்ட இளம் இயக்குனர்களுக்கு அழிவு காத்திருக்கிறது,

  Reply
 7. The hype being given by the SUN PICTURES,CLOUD NINE and RED GIANT with their own media is killing the natural expectations of movies… its right to say that if they advertise some thing it’s great… then best we should avoid it …

  Reply
 8. இந்த இரண்டு படங்களே தமிழ்நாட்டின் தியேட்டர்
  மொத்தத்தையும் ஆக்கிரமித்துள்ளது.
  ஆட்சி மட்டும் மாறி உள்ளது.
  காட்சிகள் மாறவில்லை.

  Reply
 9. பெரும் ஏமாற்றத்தை தந்த 7 ஆம் அறிவு….hypnotism என்ற பெயரில் கொலையா கொல்றாங்க
  அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய திரை படங்கள் ஒரு அலசல் :(BASED ON SCREENPLY & STORY{from start to end})
  RAJINI- ENTHIRAN(SHANKAR)-ABOVE AVG
  KAMAL-DHASAVATHARAM-GOOD
  VIJAY- KURUVI(DHARANI)- BELOW AVG
  AJITH-MANKAATHA(V PRABHU)-ABOVE AVG
  VIKRAM- KANTHASAMY(SUSI)- AVG
  NOW
  7 M ARIVU- AR MURUGADAS-AVG

  Reply
 10. dear karundhel
  i have not played assassin’s creed. but during the shooting progress of 7am arivu news spread that it is a copy of christopher nolan’s INCEPTION. shruti hassan too denied it in a weekly magazine at that time. whatever be the case director vijay, murugadoss shankar ….. are all copying criminals and blocking the genuine talented young upcoming directors.
  @ geethapriyan: vazhimozhikiraen. it is true.
  let the success of UBISOFT case pave the way for the good talented tamil cine directors.
  wish you a happy deepavali.
  anbudan
  sundar g

  Reply
 11. may be inception + assassin’s creed = 7am arivu

  these cheap criminal plagiarists will copy one or more films and (Cut copy edit paste mix) make a single film

  deepavali & other festivals timela ithu pondra over hype copied padangal vanthaal kooda tamil cine rasigargalai thiruthamudiyathu athanaal thaan intha thirudargal paadu kondattamaga ullathu

  erichaludan
  sundar g (rasanai)

  Reply
 12. படம் பார்த்தாச்சு..

  போதி தர்மாவின் நினைவுகளோடு அரவிந்த் (நிகழ்கால சூர்யா) தன்னை இணைத்துக்கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்படவில்லை.. ஸ்ருதி ஹாசனின் ஆராய்ச்சிப்படி போதி தர்மாவின் பரம்பரையில் வந்த அரவிந்தின் ஜீன்கள் போதி தர்மாவின் ஜீன்களோடு 8…0 சதவீதம் ஒத்துப்போவதால் அரவிந்தின் ஜீன்களில் மறைந்திருக்கும் போதி தர்மாவின் கலை மற்றும் திறமைகளை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறார் சூர்யா. ஆனால் ஆராய்ச்சி நாட்கள் நகர நகர படம் பார்க்கும் சாதாரண ரசிகன் போதி தர்மாவே எழுந்து வரப்போகிறார் என்று எண்ணுமாறு தூண்டப்படுகிறான் (சந்திரமுகி-யில் ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்ததா அல்லது மனோதத்துவ ரீதியில் மனமாற்றம் அடைகிறாரா என்று ரசிகன் வித்தியாசப்படுத்த முடியாததைப்போல..) திடீரென்று எழும் சூர்யா போதி தர்மாவைப்போல சண்டையிடுகிறார், சைனாவின் ஸ்பெஷல் கலைகளுக்கான உத்திகளுடன்… பார்க்கும் ரசிகனுக்கு வெறியேறுகிறது “தமிழன்டா… அந்த சைனாக்காரனை சாவடிடா” எனுமளவுக்கு..

  Reply
 13. சார், ஜோன்னி இங்கிலீஷ் ரிபோர்ன் படம் பாத்துட்டீங்களா? அதுல சிவகாசி தளபதி இன்றோ சீன அப்பட்டமா காபி அடிச்சிருக்கான்களே அத என்ன சொல்லலாம்? படம் பார்கவில்லயாயின் பார்த்துவிட்டு சொல்லவும்.

  Reply
 14. படம் நான் எதிர் பார்த்தது போலவே செம மொக்கை ,படத்தைக்கூட நான் மன்னித்து விடுவேன் அந்த BGM போட்டவன் மாட்டும் கைல கெடச்சான் !!!!! சீனா வில்லன் ஒரு நாய்க்கு ஊசி போடுவான் ,அந்த நாய் மியூசிக் டைரக்டர்ர கடிசுடுசுனு நினைக்குறேன் ,நாய் ஊளை இடுரமாதிரி ஒரு கேவலமான BGM, மத்தபடி Assassin’s Creed இதை கம்பேர் பண்ணி அதை அசிங்கம் படுத்த வேணாம் ,

  Reply
 15. போதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.

  Reply
 16. velayudham thelugu padam Azad kaappinu nan yosichathu Mr. Raja unnmai aakitaaru.

  Reply
 17. வேலாயுதம்படம் பிளாப் ஆவது உறுதி, அதன் நாத்தம் பிடித்த கீரோவும், அந்த திருட்டுபயல் தயாரிப்பாளரும் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் கிடக்கும் காட்சி காண கண்கள் கோடி வேண்டும்.

  Reply
 18. முதலில் நான் காப்பியடித்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு ஆதரவாகப்பேசவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் தேவத்திருமகள் காப்பி என்பதை எல்லோரும் நான்கு அறிவோம் ஆனால் அந்த படத்தின்மீது யாரும் வளக்கு தொடுக்கவில்லை
  Genetic memory, short term memory loss, இது எல்லாம் biological concepts
  இந்த concepts உபயோகப்படுத்தி முன்பே படங்களோ அல்லது விளையாட்டோ வந்துவிட்டது என்பதர்க்காக அந்த படம் இதன் தழுவல் என்று சொல்வது நல்லாயில்ல முருகதாஸ் இதை (Assassin’s Creed) என்ற விளையாட்டை தழுவிதான் இந்த படத்த எடுத்திருபான் (மரியாதை தேவையில்லா)
  இந்தப்படத்தை காப்பி என்று சொன்னால் தேவத்திருமகளை என்ன சொல்வீர்கள் அந்த படத்திக்கே விழக்கு தொடுக்காதவர்களா இந்த படத்திற்கா விழக்கு தொடுப்பார்கள்
  வேலாயுதம் வேறு அவர்களின் ஆடைவடிவமைப்பாளரின் தனிப்பட்ட உழைப்பு
  ஆனால் 7ஆம் அறிவு அப்படியில்லை அவர்களால் வழக்கு தொடுக்கமுடியாது

  Reply
 19. Movie is really good & entertaining for a normal rasigan. I saw this movie today in TIRUNELVELI with my family. Theatre is filled with lot of family. Everybody enjoyed the movie a lot; YEKSHA has mentioned it correctly.

  Reply
 20. இது படம் பார்க்காமல் எழுதிய வெத்துவேட்டு அலசல். வேலாயுதம் பார்த்திருந்தால் அந்த ஆடை எப்படி வந்தது என்று தெரிந்திருக்கும். Assassin’s Creed அதை தெரிந்துகொண்டு பின்னர் அதைபற்றீ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே

  Reply
 21. @ மதுரன் – வெத்துவேட்டு அலசலா? Assassin’s Creed கேமில் இருந்து அப்படியப்படியே கட் பேஸ்ட் செய்த சீன்கள் இதன் ட்ரைலரில் இருந்தன. அதேபோல், வேலாயுதத்தின் போஸ்டர்கள். இஐயெல்லாமே copyright violation தான். படம் வந்தபின்னும் இதுதான் என் உறுதியான நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை.

  Reply
 22. velayutham film:

  Kodutha kasuku nall entertainer-a irunthathu so velayuhtham is hit in this deepavali.

  7aum Arivy film:

  This film have a very super-b story but screenplay is not entertainer to fans.

  By
  Ananth Kumar P

  Reply
 23. என்ன ஒரு கேவலம் பா! இந்த ரெண்டு மொக்கை படத்துக்கெல்லாம் விமர்சனமா? shame shame பப்பி shame !!!!

  Reply
 24. என்ன ஒரு கேவலம் பா! இந்த ரெண்டு மொக்கை படத்துக்கெல்லாம் விமர்சனமா? shame shame பப்பி shame !!!!

  Reply
 25. it’s been proven 7am arivu is not a copy of assassin creed why don’t you apologize

  the person who said(BASED ON SCREENPLY & STORY{from start to end})

  RAJINI- ENTHIRAN(SHANKAR)-ABOVE AVG
  KAMAL-DHASAVATHARAM-GOOD
  AJITH-MANKAATHA(V PRABHU)-ABOVE AVG

  do you even know what is screenplay an story is go watch the below movie again

  Enthiran & mankatha story and screenplay is amazing

  DHASAVATHARAM story & screenplay is above average

  Reply
 26. When was it proven that 7m arivu is not a copy? The concept of gene tracking has been obviously stolen from Assassin’s Creed. So, there is no need to apologize. Whatever I mentioned still holds. 7th Sense is a copy.

  And, I still consider Endhiran as a worst attempt. Dasavatharam is a good one?? Excuse me !!
  Mankatha – it’s a copy from atleast 3-4 hollywood films my friend…

  Reply
 27. ஏழாம் அறிவு காப்பியில்லை என்று பேசும் நண்பர்களுக்காக இந்த லிங்க் – http://articles.timesofindia.indiatimes.com/2011-11-19/news-interviews/30422288_1_foreign-films-video-game-filmmakers

  டைம்ஸ் ஆஃப் இந்தியா மிகத்தெளிவாகவே இப்படம் ஒரு காப்பி என்று சொல்லிவிட்டது. படித்துப் பார்த்து இன்புறுங்கள்.

  Reply
 28. Vivek

  நம்மகிட்டே முருகதாஸ் ஒரு கேவலமான கேள்வி கேப்பாரு…. போதி தர்மன் யாரு-ன்னு உங்களுக்கு தெரியுமா? இந்தியாவுலயும் சீனாவுலயும் மாத்தி மாத்தி கேப்பாரு…

  போதி தர்மர் சீனாவுல போயி செட்டில் ஆயி, அங்கே இருந்தவங்களுக்கு குன்க்பூ கத்து கொடுத்தாரு, அதனால அவரு அங்கே பாமஸ்….

  இந்தியாவுல திருவள்ளுவர் யாரு-ன்னு கேக்கணும், அத வுட்டுட்டு, இங்கிருந்து வெளிநாட்டுக்கு போனவங்கள எல்லாம் நாங்க எதுக்கு ஞாபகம் வச்சுக்கணும்?

  Reply
 29. Your post is a timely conotibutirn to the debate

  Reply

Join the conversation