வேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது

by Rajesh October 17, 2011   Copies

Sharing is caring!

வேலாயுதம் திரைப்படம், Assassin’s Creed கேமில் இருந்து அப்பட்டமாக ஈயடிச்சாங்காப்பி அடிக்கப்பட்டதைப் பற்றி ஒரு கட்டுரை சில வாரங்கள் முன்பு எழுதியிருந்தேன். அதில், யார் வேண்டுமானாலும் இந்த விஷயத்தை Ubisoft நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தேன். நானுமே என் பங்குக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப்போல், எனது நண்பர்கள் பலரும் அனுப்பியிருந்தனர்.

இதைப்போலவே, Assassin’s Creed கேமின் விசிறிகள் அனைவருமே கொதிப்படைந்துதான் போயிருக்கின்றனர். ஆகவே, Ubisoft ஃபேஸ்புக் பக்கத்தில், இதனைப்பற்றிச் சரமாரியாகப் புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

படு முக்கியமான விஷயம் என்னவெனில், Ubisoft நிறுவனத்தார் தரப்பில் இருந்து, முதன்முறையாக அவர்களது கருத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலே இருக்கும் படத்தைப் பார்க்கவும். அதில், Ubisoft நிறுவனம், வேலாயுதம் படத்தின் மீது கேஸ் போடப்போவதாகப் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது !

இது, Assassin’s Creed விசிறிகளுக்கும் சரி, காப்பிகளை வெறுப்பவர்களுக்கும் சரி – ஒரு நல்ல செய்தி.

நான் காப்பி பற்றிக் கட்டுரை எழுதியிருந்தபோதும், அதன்பின்னும், காப்பிகளைப் பற்றி மின்னஞ்சல் அனுப்புவதை, சில ‘பிர்ரபல’ பதிவர்கள் கிண்டல் செய்திருந்தனர். அவர்களது தரப்பு வாதம் என்னவெனில், காப்பி அடிப்பது சரிதான் என்பது. திரைப்படத் துறையைச் சார்ந்திருப்பதாலோ என்னமோ, அவர்கள் செய்யும் தவறுகளுக்குத் தெரிந்தே உடந்தையாகும் பதிவர்கள் இவர்கள். வேலாயுதம் மேல் கேஸ் வருவது உறுதியாக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில்,ஈகோவினால் தலை வீங்கிப்போயிருக்கும் இப்பதிவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. I pity them.

பி.கு – இப்புகைப்படத்தை அனுப்பி, இந்த இனிய செய்தியைச் சொன்ன நண்பர் முரளி கிருஷ்ணனுக்கு நன்றி. இப்படிப்பட்ட வழக்குகள் பாய்ந்தால்தான் காப்பிகள் நிற்கும். ஒரிஜினல் படங்கள் வெளிவரும் என்பதால், இதனை முழுதுமாக ஆதரிக்கிறேன்.

இது, Ubisoft facebook page – https://www.facebook.com/ubisoft?sk=wall&filter=1

இனிமேல், இதுதான் வழி. சம்மந்தப்பட்ட ஒரிஜினல் திரைப்படத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று உண்மையைச் சொல்லுங்கள். எந்தப் படமாக இருந்தாலும் சரி.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

14 Comments

 1. சொல்லி முடிச்ச மைக்ரோ மினி செக்கண்டில் பதிவை தயாரித்த உங்களை என்ன சொல்வது… நீங்களே பதிவுலகின் மன்னன் 🙂 🙂

  Reply
 2. இது மட்டுமில்ல இதே கேம் மோட கதை காப்பி தான் ஏழாம் அறிவு ன்னு ஒரு பேச்சு அடி படுது.. ஒரு சில பட ஸ்டில்ஸ் களும் அப்படி தான் தெரியுது… பாக்கலாம்….

  Reply
 3. ///சம்மந்தப்பட்ட ஒரிஜினல் திரைப்படத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று உண்மையைச் சொல்லுங்கள். எந்தப் படமாக இருந்தாலும் சரி. ////

  செம ஐடியா இது… 🙂 🙂

  Reply
 4. கருந்தேள்.. நான் ஆதரிக்கிறேனா இல்லையா என்பது இல்லை..இங்கு கேள்வி.. நீங்கள் சொன்ன ப்ரபல பதிவர் நானாக இல்லாவிட்டாலும். எனக்கென்னவோ இப்பவும் தோன்றுகிறது எதுவும் ஆகாது என்று.. பார்ப்போம்.

  Reply
 5. இந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, இது போன்ற முயற்சிகள் தொடரும்பட்சத்தில் நிச்சயம் ஒருநாள் நல்ல பலனை தரும் என நம்புகிறேன்!

  Reply
 6. @ கேபிள் – எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கு 🙂 . ஏன்னா, வேலாயுதம் ட்ரைலர்ல , அப்பட்டமா அந்த கேமின் வீடியோவை அப்புடியே புடிச்சி போட்ருக்காங்க. அதுமட்டுமில்லாம, யூபிசாப்ட் மாதிரி கம்பெனிங்க, சொன்னா கட்டாயமா செய்யும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்புடி மட்டும் கேஸ் வந்துட்டா, அதுக்கப்புறம் காப்பிகள் கட்டாயமா கொறையும். அது நல்ல விஷயம்தானே. என்ன சொல்றீங்க?

  @ sampath – 🙂 இது Assassin ‘s creed கேமின் ரசிகர்களுக்குக் கிடைத்த வெற்றி பாஸ் 🙂

  @ முரளி – ஏழாம் அறிவு படம் வரட்டும். அதுல அசாசின்’ஸ் க்ரீட் கேமோட animus டெக்னிக்கை காப்பியடிச்சிருந்தா, அவங்களே அதைப் புரிஞ்சிக்கினு கேஸ் போட்ருவாங்க. ஏன்னா, ஆல்ரெடி அதைப்பத்தி யூபிசாப்ட் பேஜ்ல நெறைய மெசேஜ் வந்திருக்கே . பார்ப்போம் 🙂

  @ எஸ். கே – கண்டிப்பா. ஒரு கேஸ் போதும். அப்புறம் காப்பிகள் இருக்காது. அதைத்தான் நானும் விரும்புறேன்.

  Reply
 7. இந்த game தமிழ்நாட்டில் பிரபலமாவதற்கான வாய்ப்பும் நிறைய இருக்கே…அதனால் நடவடிக்கை இதுவும் இருக்காது…ஆனால் சலசலப்பு செய்வார்கள்…பிரபலப்படுத்துவதற்காக…அல்லது இந்த game பற்றி பேசப்படுவது பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்…this is how corportations functioning…taking advantage of the situation…இவ்வளவு மலிவான விளம்பரம் கிடைக்குமா…

  Reply
 8. @ மாயன் – இந்த படத்துக்கு வேணும்னா கேம் வச்சி விளம்பரம் கிடைக்கும்

  Reply
 9. Dear karundhel
  still i am supporting your actions / efforts on plagiarism. keep it up. whatever be the result we will protest and fight. for sake : indian independence struggle started in 1857 and got independence on 1947 only. this is just a start whether failure or success that does not matter. we will keep on unmasking these cheap copiers who makes fame and money from others’ hard work and creativity. we have not got independence on a single day or overnight but few incidents like vellore mutiny, meerut mutiny, kattabomman etc and non violence. these kind of activities become a snowball in future and will do the good thing for tamil cinema. for me still tamil has very good novels and short stories aplenty for filming but our directors are mostly drop outs / copying students so we can expect this much. one day surely deserving people will come into the tamil cine field making a tamil cinema worldwide. keep it up. thanks

  anbudan
  sundar g

  Reply
 10. இது படக்கம்பெனி அல்ல. அதனால் வழக்கு தொடர மாட்டால் என்றே தோன்றுகிறது. ஆனால் முயற்சி தொடர்ந்தால் கூடிய விரைவில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் கவனம் திரும்பி ஒரு விடிவுகாலம் வரும். என்ன…அதற்குள் உலகநாயகன் retire ஆகியிருப்பார் என்று நம்பலாம்.

  http://ahamumpuramum.blogspot.com/2011/10/7-7-habits-of-highly-effective-people.html

  Reply

Join the conversation