Assassin's Creed: Revelations – PS3 Game review

by Rajesh February 22, 2012   Game Reviews

Sharing is caring!

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையைப் படிக்குமுன், Assassin’s Creed கேமின் முதல் மூன்று பாகங்களைப் பற்றி விரிவாக நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு வருதல் நலம். அப்போதுதான் கேம் நன்றாகப் புரியும். இதோ இங்கே படிக்கலாம்.

இந்த மூன்று கட்டுரைகளையும் படிக்காமல் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு பாயைப் பிறாண்டுபவர்களை இப்போதே எச்சரித்து விடுகிறேன். சரி. இப்போது மேலே படியுங்கள்.

தீபாவளியின்போதே போட்டிருக்கவேண்டிய கேம் ரிவ்யூ இது. அப்போதே ஆடி முடித்தாயிற்று. இப்போதுதான் எழுத முடிகிறது. பிஸி என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். சோம்பல். அவ்வளவே.

அஸாஸின்’ஸ் க்ரீட் வெறியர்களுக்கு அதன் கதை இதுவரை தெரிந்திருக்கும். முதல் பகுதியில் அல் தாய்ர் என்ற ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கொலையாளிதான் கதாநாயகன். அவனது சாகஸங்களை அதில் தொடர்ந்தோம். அதன்பின்னர், இரண்டாம் பகுதியில், அந்தக் கொலையாளியின் வழிவந்த எஸியோ என்ற கதாநாயகன். அவனது கதையின் தொடர்ச்சியே மூன்றாம் பாகமாகவும் வந்தது. இந்த எல்லா பாகங்களிலும், நடைமுறை உலகைச் சேர்ந்த அவர்களது பரம்பரையில் வழிவந்த டெஸ்மாண்ட் மைல்ஸின் ஜீன்களை வைத்து, ’Animus’ என்ற கருவியில் அவனைப் பிணைத்து, இவனது இரண்டு மூதாதையர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கண்டுபிடித்து, அவற்றின் மூலம் பண்டைய உலகின் ரகசியங்களைக் கண்டுபிடிப்பதே விளையாட்டு (ஏழாம் அறிவு நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இதிலிருந்து சுடப்பட்டதே ஏழாம் அறிவு). இப்போது, அல் தாய்ரும் எஸியோவும் இணைந்து மிரட்டும் நான்காம் பாகம்.

சென்ற மூன்றாம் பாகத்தில், தனக்கு இணைபிரியாத தோழியாக விளங்கிய லூஸியை, டெஸ்மாண்ட் மைல்ஸ் குத்திக் கொன்றதன்பின், கோமாவில் விழுந்து விடுகிறான். அதிலிருந்து இந்தப் பாகம் ஆரம்பிக்கிறது. டெஸ்மாண்டின் மனம், ‘Black Room’ என்ற பகுதியில் வைக்கப்படுகிறது. ஏனெனில், இந்தக் கோமா, கொடியது. அதிலிருந்து வெளியேறி, சுயநினைவு அடையவேண்டும் என்றால், இந்தக் கறுப்பு அறையில் இருக்கும் டெஸ்மாண்டின் மூதாதையர்களான அல் தாய்ர் மற்றும் எஸியோவின் மீதம் இருக்கும் அத்தனை நினைவுகளையும் அலசிப்பார்த்து, அவற்றை அனுபவிக்க வேண்டும். ஒரு நினைவு கூட மீதமில்லாமல் அத்தனையும் முடிந்த பின்னரே, அந்த ஆனிமஸ் கருவி, டெஸ்மாண்டின் கோமாவில் இருந்து அவனை விடுவிக்கும். இதை, அந்தக் கறுப்பு அறையில் அடைபட்டுக் கிடக்கும் ‘Subject 16′ என்ற, டெஸ்மாண்டுக்கு முன்னர் பரிசோதிக்கப்பட்டுப் பார்த்து, அதனால் இறந்துபோன ஒரு மனிதனின் மிச்சமுள்ள நினைவுகள், டெஸ்மாண்டுக்குச் சொல்கிறது.

ஒவ்வொரு நினைவாக நுழைகின்றான் டெஸ்மாண்ட். விளையாட்டு ஆரம்பிக்கிறது.

பலநூறு வருடங்களுக்கு முன் செல்கிறோம். எஸியோ, தனது மூதாதையரான அல் தாய்ர் சென்ற இடங்களுக்கெல்லாம் தானும் செல்வதைப் பார்க்கிறோம். எஸியோ இப்படி அலைவதற்குக் காரணம், அல் தாய்ர் ஒளித்துவைத்துள்ள ‘எதையோ’ கண்டுபிடிப்பதே. அல் தாய்ரின் பழைய கோட்டையான ‘Masyaf’ நகருக்கு வருகிறான் எஸியோ. சிறைபிடிக்கப்பட்டு, அங்கிருந்து தப்பிக்கிறான். அந்தக் கோட்டையில், அல் தாய்ரின் நூலகத்தைக் கண்டுபிடிக்கிறான் எஸியோ. உள்ளே நுழையவேண்டும் என்றால், அதற்கு ஐந்து சாவிகள் தேவை. ஒவ்வொன்றாகக் கண்டுபிடிப்பதே மீதி விளையாட்டு.

நடப்பு உலகில் டெஸ்மாண்ட் சிறையிருக்கும் கருந்தீவு; அதிலிருக்கும் மூதாதையர்களின் நினைவுகள்; அந்த நினைவுகளுக்குள் இருக்கும் நூலகம்; அந்த நூலகத்துக்குள் இருக்கும் ஐந்து சாவிகள்; அவற்றைத் தேடும் சாகஸம் என்று ஒரே நேரத்தில் பல தளங்களுக்குள் புகுந்து புறப்பட்டு வரும் இந்த விளையாட்டு, அட்டகாசம் என்றே சொல்லலாம். மிகப்பெரிய நகரங்கள் இதில் வருகின்றன. கான்ஸ்டாண்டிநோபிள் (Constantin, Beyazid, Imperial, and Galata ஆகிய நான்கு ஊர்கள் இதில் அடக்கம்), கேப்படோசியா (Cappadocia) – இந்நகரத்தில், பெரிய பாதாள உலகம் ஒன்றும் உண்டு; மாஸ்யாஃப் நகரம் ஆகிய மூன்று பெரிய நகரங்கள், அவற்றின் ஊர்கள், அதில் வசிக்கும் மக்கள், அவர்களின் வீடுகள், கோட்டைகள், சமவெளிகள் ஆகிய அத்தனை இடங்களையும் மிகமிகத் தத்ரூபமாகப் பார்க்கிறோம். மட்டுமில்லாமல், இவற்றின் மீது ஏறி எஸியோ செய்யும் சாகஸங்கள் அருமை.

பழைய மூன்று கேம்களில் வரும் அதே கண்ட்ரோல்கள் மட்டுமில்லாமல், சில புதிய கண்ட்ரோல்கள் இதில் உண்டு. அதில் ஒன்றுதான் Hookblade எனப்படும் கொக்கி. அதை உபயோகப்படுத்தி, எந்தக் கட்டிடத்தின் மேலும் ஏறலாம். அதேபோல், இரண்டு இடங்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும்போது, வேகமாகப் பயணிக்க இந்த hookblade உதவுகிறது. அதேபோல், இதில் மிக உபயோககரமாக இருந்த இன்னொரு ஆயுதம் – வெடிகுண்டு! நகரங்களில் கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு, ஆங்காங்கே இருக்கும் கிடங்குகளுக்குள் சென்று, பல வகையான வெடிகுண்டுகளை எஸியோ உருவாக்குகிறான். அவற்றை வைத்துக்கொண்டு, எதிரிகளை திசைதிருப்பியும், சிதறடித்தும் அவன் செய்யும் சாகஸங்கள் டாப்.

இது தவிர, டெம்ப்ளார்களின் வசம் இருக்கும் சிறிய நகரங்களை எஸியோ கைப்பற்றூவது சுவாரஸ்யமான கண்ட்ரோல். பழைய கேம்களில், ஒருமுறை கைப்பற்றினால் முடிந்தது. ஆனால், இதில், தோற்றுப்போன டெம்ப்ளார்கள், மீண்டும் நகரைக் கைப்பற்ற வருவார்கள். அப்போது, தன்னிடம் உள்ள கொலைகாரர்களை வைத்து, அவர்களை முறியடிக்க எஸியோ முயற்சிப்பது போல் அமைந்திருக்கிறது இந்த கேம்.

முக்கியமான நோக்கங்கள் மட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற சிறு சிறு அஸைன்மெண்ட்கள் உள்ளன. இவற்றை செய்யப்புகுந்தால், காலம் போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கலாம்.

பழைய கேம்களில் இருப்பதுபோலவே, ஆபத்தில் இருக்கும் நகர மக்களைக் காப்பதன்மூலம், அவர்களைத் தனது படையில் சேர்த்துக்கொண்டு, கொலைகாரர்களாகப் பயிற்சி கொடுக்கும் சூப்பரான விஷயம் இதிலும் இருக்கிறது. எஸியோ கண்ட்ரோல் செய்யும் அந்தக் கொலைப்படையைக் கீழே காணலாம்.

பாதாளத்தில் இருக்கும் நகரில் எஸியோவின் சாகஸங்கள் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்தன. ப்ளேஸ்டேஷனின் ட்யூவல்ஷாக் கண்ட்ரோலரைக் கையில் எடுத்தால், மீண்டும் கீழே வைக்கவே தோன்றாத வகையில் அவ்வலவு ஸ்வாரஸ்யமாக அமைந்திருக்கிறது இந்த கேம்.

அஸாஸின்’ஸ் க்ரீட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி என்னவெனில், 2012 இறுதியில் இதன் அடுத்த பாகம் வரப்போகிறது என்பதே.

இந்த கேமின் விலை: நான் வாங்குகையில் ரூ. 2300/-. ஃப்ளிப்கார்ட்டில் டிஸ்கௌண்ட்டில் கிடைக்கிறது (லின்க்கெல்லாம் கொடுக்கமாட்டேன். போய் தேடிப்பிடித்து வாங்கிக்கொள்ளுங்கய்யா).

இதோ Assassin’s Creed: Revelations கேமின் அட்டகாசமான ட்ரெய்லர். இதன் பின்னணியில் வரும் பாடலைக் கவனியுங்கள்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

11 Comments

 1. இப்போ தான் ஃபர்ஸ்ட் பார்ட் டவுண்லோட் பண்ணி வைச்சு இருக்கேன்.., நானெல்லாம் நாலாவது பார்ட் வர ரொம்ப வருஷமாகும் போல,…

  Reply
  • Es excemtaánte lo mismo. Esto es debido a una dieta muy rica en azúcar refinada, debes dejarla por completo y comer muchas frutas y verduras, mientras tanto usa un jabón neutro y exfoliante de avena.

   Reply
 2. Revelations, Brotherhood இரண்டின் Game Setups ஐயும் ரொம்பக் காலம் என் ஹார்ட் டிஸ்கில் சேவ் பண்ணி வைத்திருந்தாலும் கதையை தொடர்வதற்காக இப்பொழுது தான் Assassins Creed II விளையாடுகிறேன். Revelationsக்கு கொஞ்சம் டைம் ஆகும்.

  Reply
 3. Silent spectator…….

  எங்களுக்கும் ஒரு நாள் காலம் வரும்.

  ஆமா…PS3 வெச்சிருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஆரம்பிக்க கூடாது ? நீங்க ஏன் ஊ.எஸ்.ல இருக்குற “அவர” இதுல சேர்ந்துக்க கூடாது ? ஒருவேள அவர் சேர மாட்டேங்குறாரோ ?

  அபுதாபி இருக்குற ஒருஆள் கேம்ஸ் விளையாண்ட நேரம் போகத்தான் சாப்புடுறது – குளிக்கிறது – நம்மகிட்ட பேசுறது – கமென்ட் போடுறது – இதெல்லாம் செய்யுறாரு. ஏன் அவர் சேர்ந்து வெளையாட வர மாட்டேங்குறாரு ??

  (ஒரே கேம் இருந்தா தான் வெளையாட முடியும்றது எனக்கும் தெரியும்)

  ஏன் இப்புடி ? இதுக்கு என்ன செய்யலாம் ? யாரால இதெல்லாம் ?

  Reply
 4. அந்த ஊ எஸ் ல இருகரவரோட லிங்க் கிடைக்குமா?

  Reply
 5. @ போதைதர்மன் – என்னடா ரொம்ப நாளா பார்க்கலையேன்னு பார்த்தேன் 🙂

  @ ஆனந்த் – 🙂 கிளிஞ்சது. அதுக்கப்புறம் மூணு பார்ட் இருக்கு பாஸ். அதுக்குள்ள இதோட அடுத்த பார்ட் வந்திருமே 🙂

  @ சி.பி.செந்தில்குமார் – நன்றி 🙂

  @ ஹாலிவுட் ரசிகன் – மேலே ஆனந்துக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் 🙂

  @ கொழந்த – எனக்கு ஓகேதான். சீக்கிரமே ஏதாவது ஒரு கேமை அல்லாரும் வாங்கி, மல்ட்டிப்ளேயர் மோட்ல போட்டு விளையாடுவோம்னு நினைக்கிறேன். காலம்தான் இதுக்கு பதில் சொல்லணும் 🙂

  @ தகாரா – அவரு கடையை மூடிப்புட்டு ஓடிட்டாரே? இருந்தாலும், பேக்கப் இருக்கு. இங்க – http://hollywoodbalas.blogspot.com/

  Reply
 6. ஆட்டத்துல என்னையும் சேர்த்துக்கோங்க, சென்னைல இருந்து ஒரு ஓட்டு இருக்குபா.

  Reply
 7. இப்போதைக்கு red dead redemption PS 3 ல விளையாண்டுகிட்டு இருக்கேன், இனி தான் assasins greed ஸ்டார்ட் பண்ணனும்.

  Reply

Join the conversation