Lord of The Rings EBook Release – Trailer

by Rajesh May 7, 2012   series

Sharing is caring!

நண்பர்களே… லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரை இதுநாள் வரை பொறுமையாகப் படித்துவந்த உங்களுக்கு எங்களது நன்றிகள். இனிமேல் அந்தத் தொடர் நமது தளத்தில் வராது. மின்புத்தகமாகவே மொத்தமாக வந்துவிடும். மின்புத்தகம் எப்போது வரப்போகிறது? ட்ரய்லரைப் பாருங்கள். இந்த மின்புத்தக உருவாக்கத்தில் பங்குபெறுபவர்கள் யார் யார்? கீழே இருக்கின்றன விபரங்கள். 

ட்ரய்லரைப் பாருங்கள். உங்களது கருத்தை மறக்காமல் எழுதுங்கள். விரைவில்…வெகுவிரைவில்.. இதுவரை இந்தத் தளத்தில் எழுதப்பட்ட விபரங்கள் மட்டுமல்லாமல், இன்னும் எக்கச்சக்கமான புதிய தகவல்களோடு, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தமிழ் மின்புத்தகம் உங்களைத் தேடி வருகிறது. மின்புத்தகத்தின் மாதிரி பக்கங்கள் ட்ரய்லரில் காணலாம்.

இந்த மின்புத்தகத்தைப் போல் தமிழில் இதுவரை எந்த இலவச மின்புத்தகமும் வந்ததில்லை என்று மட்டும் எங்களால் சொல்லமுடியும். மொந்தையாக தேமேயென்று ஒரு PDF புத்தகத்தை அளிக்காமல், படு கலர்ஃபுல்லாக ஒரு அட்டகாசமான மின்புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இதோ… இன்னும் சில நாட்களில். நீங்கள் இதுவரை படித்திராத, பிரம்மாண்டமான மின்புத்தகம்.

Trailer created by – Saravanaganesh (alias) கொழந்த

Ebook creation – Bala Murugan (alias) ஹாலிவுட் பாலா

Ebook release date is updated in the trailer. Take a look and pass the feedback friends. Happy viewing.

Note:- Please magnify and see, for better effects.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

26 Comments

 1. பட்டய களப்புது போங்க… கொழந்த கலக்கிட்டிங்க… தமிழ் உலகில் எக்சைலுக்கு அப்புறம் ஒரு புத்தகத்துக்கு ட்ரைலர்னா இது தான்.. பதிவுலகின் சாருவே…:) 🙂 🙂 🙂 வெயிட்டிங் பார் தி புக் ரிலீஸ்…

  Reply
 2. கலக்கி புட்டீங்க கொழந்த ,பாலா ,………..கொழந்த கிட்ட இருந்து இதை எதிர்ப் பார்க்கல ……இ புக் கை ஆவலுடன் எதிர்ப் பார்கிறேன்

  Reply
 3. டிரைலரின் இறுதியில் கொழந்தையின் நடிப்பு அபாரம்

  Reply
 4. டிரெயிலர் அருமை!

  Reply
 5. ada da!

  nalla muyarchi!

  Reply
 6. ரொம்பவும் மகிழ்வா இருக்கு..
  அருமையான முயற்சி ராஜேஷ்..
  வாழ்த்துக்கள்..

  Reply
 7. மின் புத்ததகத்தின் பங்கங்கள் எல்லாம் கலக்குது தல!
  ஜுன் 4ந் திகதியில இருந்து ஒரு வருஷத்துக்கு best seller உங்க புத்தகம் தான்!

  Reply
 8. ஜார்ஜ் க்ளூனியின் பெயரை தமிழகத்துக்கு உச்சரிக்கத் தந்த மேதகு வரலாறே, நின் புகழ் வாழ்க, நின் வீடியோ வாழ்க, நின் மென் புத்தகம் வாழ்க.

  ஜெய் கருந்தேள் கொலைவெறிப்படை
  ஹாலிபாலி தொண்டர் படை
  கொழந்த ரசிகர் மன்றம்

  !அமேசான் கிளை!

  Reply
 9. Great effort , waiting…

  Reply
 10. அய்யா…ராஜேஷ் அவர்களே…..ஒத்துகுறோம்..நீங்க க்ரெடிட் விஷயத்தில் கறாரான ஆளுதான். அதுக்காக வார்த்தைக்கு வார்த்த – // All credit goes to Kolanda & Bala // இத சொல்லித்தான் ஆகனுமா…..

  இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா…..டெடிகேஷனோட எழுதுறதும் அத வேறொருத்தர் பாத்து பாத்து செதுக்குறதும் (சத்தியமா செதுக்குறார்) தான் பெருசு..

  —————-

  // இந்த மின்புத்தகத்தைப் போல் தமிழில் இதுவரை எந்த இலவச மின்புத்தகமும் வந்ததில்லை //

  கடுமையான ஆட்சேபங்கள்…….எந்த மின்புத்தகமும் வந்ததில்லை – ன்னு இருக்கணும். தமிழ்ல வந்த மின்புத்தகங்கள் எல்லாம் பிங்கல நிகண்டு ஃபான்ட்லைல இன்னும் இருக்கு. இதுவொரு ப்ரேக்த்ரூவா இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல….(எதுனா பதிப்பகத்தார் கவனத்திற்கு)

  Reply
 11. பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி….இது வெறும் ட்ரைலர் தான்…படம் வரட்டும் ஆடி போயிருவீங்க…

  ———–

  அதென்ன saravanaganesh (அது Saravana Ganesh) alias கொழந்த…..ஆனா….பால முருகனுக்கு மட்டும் alias கெடையாதா ???

  Reply
 12. டிரைலர் கலக்கல் சார்.புத்தகத்துக்கு ரொம்ப வெயிட் பண்றேன்.நன்றி.

  Reply
 13. //இலவச மின்புத்தகமும்//

  அப்பாடா.. ஒவ்வொருமுறையும் நீங்க ஈ புக்கு புக்குன்னு சொல்லும்போதும் நெஞ்சு பக்கு பக்குன்னு அடிச்சுகிட்டிருந்துது… எங்கே காசு குடுக்கச் சொல்லிடுவீங்களோன்னு… (நீங்க torrent-ல டவுன்லோட் பண்ணவும் விடமாட்டீங்க.. :))

  ட்ரைலர் அற்புதம்… இலவச புத்தகம் இவ்வளவு அருமையா.. சான்சே இல்லை… வாழ்த்துக்கள்… Cant wait….

  Reply
 14. என்னாது ப்ரீயா……. ஏங்க அவனவன் கட் ,காபி,பேஸ்ட்ல புத்தகமே ரிலீஸ் பண்றான் …..இணையத்தளத்தில் இருந்து எடுத்தாலும் தமிழ் படுத்தி ,எங்களுக்கு [அதிலயும் எனக்கு எல்லாம்]புரியற மாதிரி நல்ல நேரேசன்ல எழுதி ,….டிரைலர் வேற சூப்பரா இருக்கு ….வருமானத்துக்காக வேண்டாங்க …..நீங்க நேரம் ஒதுக்கி இத எழுதி பண்றதுக்காக மினிமம் ப்ரைஸ் வைக்கலாமே….இவ்ளோ கலர் புல்லா ஒரு மின் புத்தகத்த இப்பதான் பாக்குறேன்…..

  Reply
 15. நண்பா,
  இந்த அரிய பொக்கிஷத்தை மின்புத்தகமாக படிக்க கொடுக்க இருப்பதற்கு நன்றி,இதை முதல்நாளே ஆஃபீசில் ப்ரிண்ட் எடுத்துவிடுவேன்.;))

  நண்பர் கருந்தேள்,தல ஹாலிவுட் பாலா,மற்றும் சரவணகணேஷ் மூவர் கூட்டணியில் ட்ரைலர் அமர்க்களம்,உழைப்புக்கு வணக்கமும் நன்றியும்

  Reply
 16. ட்ரெய்லரைப் பற்றி வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் டீமின் நன்றிகள். மின்புத்தகத்தை இதுவரை வந்திராத அளவு சிறப்புடன் எடுத்துவர உழைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழில் இப்படி ஒரு மின்புத்தகம் வந்ததே இல்லை என்பதே இந்த மின்புத்தகத்தைப் பற்றிய சுருக்கமாக இருக்க முடியும். அடுத்த மாதம் மின்புத்தகம் உங்கள் கையில்.

  Reply
 17. சூப்பர் அண்ணா TRAILER பக்கா

  Reply
 18. ஆஹா ஆஹா பின்னறீங்க ஜி!

  Reply
 19. congrats to you all .

  Reply
 20. In net there r famous english novels and essay books available as pirate edition in pdf format…r they ebook?

  Reply
 21. well done…..Ebookuku Video Trailer Arimugam saiytha first team neengala thaan…..irukum…..
  —–BALA kaga matumae padikae kathu irukum sangham….

  Reply
 22. வாழ்த்துக்கள்

  Reply

Join the conversation