The Amazing Spider-Man (2012) – English

by Rajesh June 29, 2012   English films

Sharing is caring!

ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம், உலகின் அத்தனை பேருக்கும் தெரிந்த கதாபாத்திரம் (உடனே ’எங்க தாத்தாவுக்கு தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் வி.எஸ். ராகவனும் புளிமூட்டை ராமசாமியும்தான்’ என்றெல்லாம் விதண்டாவாதம் பேசக்கூடாது). எப்படித் தெரியும் என்றால் ஆல்ரெடி மூன்று வசூல் சாதனைப் படங்கள் வந்துவிட்டன. அப்படங்களை எடுத்தவரோ திகில் மன்னன் ஸாம் ரெய்மி. இதோ ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் அதன் முந்தைய ஸீரீஸின் கடைசிப்படம் வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு அந்த மூன்று படங்களும் மறக்கவேயில்லை.

இந்த சூழ்நிலையில், நான்காவது பாகத்தை கான்ஸல் செய்துவிட்டு, மறுபடியும் ‘அடியைப் பிடிடா பாரத பட்டா’ (அப்பாடி… இந்த மாதிரி எதாவது ஒரு பழமொழியை உபயோகிக்கவேண்டும் என்ற பலநாள் ஆசை இன்று நிறைவேறியது) என்று முதலிலிருந்து ஆரம்பித்தால், அந்த முயற்சி எடுபடுமா?

ஸாம் ரெய்மியால் நான்காவது பாகம் எடுக்க முடியவில்லை. அதற்கேற்ற நல்ல கதை தயார் செய்யமுடியவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டு இந்த ஸீரீஸிலிருந்தே விலகிவிட்டார். ஆகவே, நான்காவது பாகம் வெளியாக இருந்த 2011 வருடத்திலிருந்து இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போட்டுவிட்டு இந்த வருடம் படத்தின் ரீ-பூட் (அதாவது கதை மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தல்) வெளிவரும் என்று ஸோனி பிக்சர்ஸ் அறிவித்தது. இதற்குமுன் ஒரே ஒரு படம் இயக்கியிருந்த – (500) Days of Summer – மார்க் வெப் (Marc Webb) என்ற இயக்குநரிடம் இந்தப் பொறுப்பை அளித்தது அந்நிறுவனம்.

இந்தப் புதிய படத்துக்கு, ஒரிஜினல் காமிக்ஸின் பெயரான ‘Amazing Spider-Man’ என்பதே சூட்டப்பட்டது. படத்தில், காமிக்ஸில் வருவது போலவே கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது (கதாபாத்திரங்களிலும் சம்பவங்களிலும் ஸாம் ரெய்மி சில மாற்றங்களை செய்திருப்பார்.உதாரணம்: ஸ்பைடர் மேனின் கையில் இருந்து இயல்பாகவே வலை பாயுமாறு இப்படங்களில் இருக்கும். ஆனால் காமிக்ஸில், பீட்டர் பார்க்கர், வலையை உமிழும் சாதனத்தை செயற்கையாக உருவாக்கி, அவனது கையில் இணைத்துக்கொள்வான்). அதிலும், குறிப்பாக, இந்தப் புதிய படத்தில் பழைய படங்களில் காட்டப்பட்ட காதலி மேரி ஜேன் இல்லை. உண்மையில், காமிக்ஸில், மேரி ஜேனுக்கும் முன்னர் பீட்டர் பார்க்கரின் பள்ளியில் அவனுடன் படித்த க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) என்ற கதாபாத்திரமே ஸ்பைடர் மேனின் காதலியாகக் காட்டப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த க்வென் ஸ்டேஸி, பழைய ஸ்பைடர்மேன் 3ம் பாகத்தில், பீட்டர் பார்க்கரின் பரிசோதனைக்கூட தோழியாக கொஞ்ச நேரம் வருவாள். மேரி ஜேனை டென்ஷன் படுத்த பீட்டர் பார்க்கர் இவளுடன் சுற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும்.காமிக்ஸில், இந்தக் கதாபாத்திரம் 1973ல் கொல்லப்பட்டது. அதன்பின்னர் ஸ்பைடியின் காதலியானவளே மேரி ஜேன்.

படத்தின் வில்லன் யார்? பேட்மேன், சூப்பர்மேன் போல, ஸ்பைடர் மேனின் வில்லன்கள் நம்மூரில் அந்த அளவு பிரபலம் இல்லை. சென்ற மூன்று பாகங்களில் மூன்று வில்லன்களைக் காட்டியாகிவிட்டது. இந்த ஸ்பைடர்மேன் ரீபூட்டில் சில உன்னிப்பான விஷயங்களை கான்ஸண்ட்ரேட் செய்ய இருந்ததால் (பீட்டர் பார்க்கரின் வாழ்க்கை. அவனது பயங்கள்), தந்தை தாய் இல்லாத பீட்டர் பார்க்கருக்குப் பொருத்தமாக, ஒரு கை இல்லாத கர்ட் கான்னர்ஸ் (Curt Connors) என்ற ராட்சத பல்லியை வில்லனாக்க முடிவுசெய்தனர்.

ஆஸ்கார்ப் (Oscorp) தெரியும் அல்லவா? ஸ்பைடர் மேன் முதல் பாகத்தில் வரும் வில்லன் Green Goblin என்ற நார்மன் ஆஸ்போர்னின் நிறுவனம். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் புகழ்பெற்ற விஞ்ஞானியே கர்ட் கான்னர்ஸ். அவருக்குக் கை இல்லாத காரணத்தால், செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் பளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயல்பவர். ஒரு சக்திவாய்ந்த, எந்தக் குறைபாடும் இல்லாத மனிதனை உருவாக்க முனையும் விஞ்ஞானி. இவர், பீட்டர் பார்க்கரின் தந்தையான ரிச்சர்ட் பார்க்கருடன் வேலை செய்தவரும் கூட. சிறுவயதிலேயே பீட்டர் பார்க்கரை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டவர். அதன்பின் ஒரு விமான விபத்தில் தந்தை தாய் ஆகிய இருவருமே இறந்துவிடுவதைக் கேள்விப்படுகிறான் சிறுவன் பீட்டர். அவனுடைய தந்தையின் தம்பியான பென் பார்க்கர் (மார்ட்டின் ஷீன் இப்படி ஒரு ரோலில் வருவதை முதலில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை), இளவயது பீட்டரை வளர்க்கிறார். பள்ளியில் படிக்கையில் அவனுக்கு, அவனது தந்தை விட்டுச்சென்ற பரிசோதனையைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இதைத்தொடர்ந்து ஆஸ்கார்ப் சென்று, விஞ்ஞானி கர்ட் கான்னர்ஸை சந்திக்கிறான் பீட்டர். அங்கே அவனை சிலந்தி கடிக்கிறது. இதன்பின் அவன் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். அதேசமயம் நல்ல விஞ்ஞானியான கானர்ஸ், ஆஸ்கர்ப்பிலிருந்து வெளியேற்றப்படுவதால் (மனித உடலில் பீட்டர் பார்க்கர் கண்டுபிடித்துக்கொடுக்கும் மருந்தை செலுத்த மறுத்ததால் கல்தா), வேறு வழியேயின்றி அவரது உடலிலேயே அந்த மருந்தை செலுத்திக்கொள்ள, வில்லன் பல்லி ரெடி. இதன்பின் என்ன நடக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் செப்பி விடலாமே?
படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும், ஸ்பைடர்மேன் காமிக்ஸைப் பற்றிய தகவல்களும் இதோ ஆல்ரெடி லக்கி லிமட் எழுதிவிட்டதால், அவரது இரண்டு கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம். இந்த இரண்டு கட்டுரைகளும் படத்தைப் பற்றிய பல பின்னணித் தகவல்களை உங்களுக்கு அளிக்கும்.

 1. The Amazing Spider-Man (Comics)
 2. The Amazing Spider-Man reboot

படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள்? பழைய படங்களை விட இது தேவலாமா அல்லது மொக்கையா?

இந்தப் படத்தில் 3D உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தில், சமீபகாலமாக வேறு எந்தப் படத்திலும் 3Dயை நான் அனுபவித்திருக்கவில்லை. ஸ்பைடர்மேன் தாவுவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். அசத்தல்! இந்தப் படத்தை 3Dயிலேயே பாருங்கள். IMaxல் பார்க்கப்போகும் புண்ணியவான்களே !! பார்த்துவிட்டு ‘நானு ஐமேக்ஸில்தான் பார்த்தேன்’ என்று என்னுடைய ஃபேஸ்புக் சுவற்றில் எழுதிவிடாதீர்கள். கொன்றே விடுவேன்.

ஒரு விஷயம் ஆல்ரெடி இருந்தால், அதையே புதிதாக எடுக்கும்போது எல்லாவற்றிலும் அந்தப் பழைய மேட்டருக்கு ஆப்போஸிட்டாகவே எடுப்பது வழக்கமல்லவா? அதைப்போல் இதிலும், பழைய படங்களுடன் ஒப்பிட்டால் எக்கச்சக்க நுண்ணிய மாற்றங்கள் உள்ளன. அவற்றை வெளியே சொல்லிவிட்டால் படத்தின் சுவாரஸ்யங்கள் போய்விடும். படம் பார்க்கப்பார்க்கவே அந்த ஆப்போஸிட் மேட்டர்கள் உங்களுக்குப் புரிந்துவிடும்.

ஓவரால், படம் எனக்குப் பிடித்தது. பழைய ஸ்பைடர்மேன் படங்களைவிட, ஏனெனில், எப்படி பியர்ஸ் ப்ராஸ்னனைவிட தற்போது டானியல் க்ரெய்க்கின் ஜேம்ஸ்பாண்ட் மிகவும் சீரியஸாக, ஒரு கொலைகாரனைப் போலவே காட்டப்படுகிறாரோ (இந்த புதிய பாண்ட் தான் என் சாய்ஸ்), அதேபோல், பழைய பீட்டர் பார்க்கரைவிட, இந்தப் புதிய பார்க்கர் இன்னும் கொஞ்சம் சீரியஸானவன். அதேசமயம் ஒருவித ஆளுமையும் உள்ளவன். டோபி மாகையரின் ஸ்பைடர்மேன் சித்தரிப்பு, அதாரிடி இல்லாத ஒரு காமெடி சிறுவன் போல. ஆனால் ஆண்ட்ரூ கார்ஃபீல்டின் சித்தரிப்பு எனக்கு அதன் சீரியஸ்னெஸ்ஸுக்காகவே பிடித்தது.

பிற கதாபாத்திரங்கள் வழக்கப்படியே. பீட்டர் பார்க்கரின் முதல் காதலியாக வரும் க்வென் ஸ்டேஸி, இப்படத்தின் மூலம் பிரபலமாகிவிடுவாள். மேரி ஜேன் மெதுவாக இனி மறக்கப்படலாம்.
படம் கட்டாயம் பார்க்கலாம். It’s interesting! Better than the predecessors!

The Amazing Spider-Man படத்தின் ட்ரய்லர் இங்கே.

பிகுக்கள்

 1. ஸ்பைடர்மேன் காமிக்ஸின் பிரம்மா ஸ்டான் லீ, வழக்கப்படி இந்தப் படத்திலும் கச்சிதமாக நான்கே செகண்டுகள் காமியோவில் வந்துபோகிறார். படம் பார்க்கும் நண்பர்கள், எங்கே வருகிறார் என்று ஃபேஸ்புக்கிலோ அல்லது இங்கேயோ சொல்லுங்கள் பார்க்கலாம் (இந்தக்கேள்வி, ரஜினியின் பெயர் என்ன என்பதைப்போல் படுசுலபமானது).
 2. வழக்கமான அவெஞ்சர்ஸ் படங்களைப்போல், டைட்டில்கள் முடிந்தவுடன் இதிலும் ஒரு ஸீன் உண்டு (ஆனால் அதில் அவெஞ்சர்களோ அல்லது நிக் ஃப்யூரியோ வருவதில்லை).
 3. படத்தின் tagline – The untold story என்பது ஒருவகையில் சரி. ஸ்பைடர்மேன் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டவர்களுக்கு அது புரியும். இரண்டிலும் ஒரே போன்று வரும் ஸீன்கள் எப்படி முடிகின்றன என்பதைக் கவனியுங்கள்.
 4. படத்தின் வில்லனாக வரும் ரைஸ் இஃபான்ஸ் (Rhys Ifans), இந்த ட்ரெய்லரைப் பார்த்ததுமுதலே, Silence of the Lambs படத்தில் வில்லன் ஜேம் கம்ப்பாக நடித்த டெட் லவைனுடன் குழப்பிக்கொண்டுவிட்டேன். இன்றுதான் அந்த சந்தேகம் தீர்ந்தது. இந்த இருவருக்கும் உள்ள முகப்பொருத்தத்தை நண்பர்கள் கவனித்திருக்கிறீர்களா?
Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

8 Comments

 1. Razor sharp machi. நானும் இப்போதான் படம் பாத்துட்டு வரேன். 3D செம கலக்கல். I MAX- ல டிக்கெட் போட்டுட்டு, கடைசி நேர ஆபிஸ் இம்சையால போக முடியல. But definitely, The Dark Knight Rises ஹைதராபாத்லதான். 🙂

  Reply
 2. அப்ப படம் ஓகேயா…இன்று வந்த பல விமர்சனங்கள் படம் சரியில்லை என கூறின…நாளைக்கு காலைல முதல் ஷோ போறேன்…அப்புறம் ஆக்சன் காட்சிகளை பற்றி சொல்லவேஇல்லையே…

  Reply
 3. ஆகா.. அட்டகாசம் நண்பா. ஸபைடர்மேன் சீரீஸில் எனக்குப் பிடித்த படம் இதுதான். அதற்காக முந்தைய மூன்று பாகங்களும் மோசம் என்று நினைக்கவேண்டாம். அந்த மூன்று படங்களைவிட எனக்கு இது பெஸ்ட் ஆக தோன்றுகிறது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் இன்னும் பட்டையைக் கிளப்பலாம். சமீபத்தில் தான் அவெஞ்சர்ஸில் ஆக்‌ஷன் அதிரடிகளின் உச்சங்களையெல்லாம் பார்த்துவிட்டதால் ஸ்பைடர்மேனின் சாகஸங்களையெல்லாம் எதிர்பார்க்காமல் கதைப்போக்கும், திரைக்கதை உத்தியும் எப்பிடி கையாளப்பட்டிருக்கின்றன் என்பதை அறிந்துகொள்ளவே மிகவும் விரும்பினேன்.(ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையைக் கிளப்பின) முக்கியமாக இந்த ரீபூட், முழுக்க முழுக்க காமிக்ஸையொட்டியே படம் எடுக்கப்பட்டிருக்கிறது போன்ற செய்திகள் தான் என் ஆர்வத்தை அதிகரித்திருந்தன.

  எதிர்பார்ப்பு வீணாகவில்லை என்றுதான் சொல்வேன். மார்க் வெப் அசத்தியிருந்தார். வெப் ஸூட்டர், க்வென் ஸ்டேஸி என்று காமிக்ஸில் பார்த்த அதே விஷயங்கள். முந்தைய பாகங்களில் இடம்பெற்றிருந்த அதே காட்சிகள் இதில் கையாளப்பட்ட விதம். (வீட்டுக்கு வந்து பழைய ஸ்பைடர்மேன் படங்களை பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

  இதுவரைக்கும் ஸ்பைடர்மேன் படங்கள் பார்க்காதவங்க அமேஸிங்ல இருந்து ஆரம்பிக்கலாம்.

  Reply
 4. //ஸ்பைடர்மேன் காமிக்ஸின் பிரம்மா ஸ்டான் லீ, வழக்கப்படி இந்தப் படத்திலும் கச்சிதமாக நான்கே செகண்டுகள் காமியோவில் வந்துபோகிறார். படம் பார்க்கும் நண்பர்கள், எங்கே வருகிறார் என்று ஃபேஸ்புக்கிலோ அல்லது இங்கேயோ சொல்லுங்கள் பார்க்கலாம் (இந்தக்கேள்வி, ரஜினியின் பெயர் என்ன என்பதைப்போல் படுசுலபமானது).//

  ஹா ஹா.. எங்கியாச்சும் ஃப்ரேம்ல ஓரமா ஒளிஞ்சிருந்தாலே கண்டுபிடிச்சிடுவோம். இதுல தான் க்ளோஸ் அப்ல வந்து எல்லோரையும் சிரிக்க வைக்கிறாரே.. அதான் பாஸ், அந்த லைப்ரேரியன். பின்னால பிரளயம் நடந்துட்டு இருக்கும்போது, ஹெட்ஃபோன் மாட்டிக்கிட்டு ஜாலியா பாட்டு கேட்டுட்டு இருப்பாரே. தியேட்டரே கலகலத்த இடம் அது. :)))

  Reply
 5. எங்கள் இயக்குனர் கிறிஸ்டபர் நோலன்(அப்படி சொல்ல நினைத்தேன் சொல்கிறேன்)பேட்மேன் எடுத்ததை மீண்டும் பத்து வருஷம் கழித்து எவனாலும் எடுக்க முடியாது என தைரியமாக சொல்வேன்(எடுத்தாலும் சைக்கோ 1998 பட ரீமேக் கணக்காக போக கடவ) அவரை போலவே எனக்கும் த்ரீ டி பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வம இல்லை.எதனா பான்டசி படம்னா சரி.,…ஆனால் சும்மா சாதாரண படத்திலும் இதை த்ரீ டி இல் எடுக்கிறேன்(டைடானிக் எல்லாம் தேவையா?)கேமரா நோக்கி குத்துவது பாய்வது எதையாவது எறிவது இதில் உடன்பாடு இல்லை.அப கோர்ஸ் இந்த படம் த்ரீ டிக்கு தகுதியானதுதான்(ஆலிஸ் இன் வண்ட்ர்லேன்ட் போல).

  Reply
 6. Superb ! showing classical Pete and Gwen…Stan lee the music enjoying librarian in library where pete fights in background…

  Reply
 7. கட்டாயம் முந்தைய படங்களைவிட இது பெட்டர். எதிர்பார்ப்பு இப்படத்துக்கு வீணாகவேயில்லை. தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்

  Reply

Join the conversation