Prometheus (2012) – English

by Rajesh June 9, 2012   English films

Sharing is caring!

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், ‘வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்‘ தொடரில், க்ளாட் என்ற மனிதர், அவரை ஏலியன்கள் கடத்திவிட்டதாக ஒரு புத்தகம் எழுதி, அந்தப் புத்தகம் சக்கைப்போடு போட்டதைப் பற்றிப் பார்த்தோமல்லவா? அந்தப் புத்தகத்தில், ஏலியன் ஒருவர் இவருக்குமுன் இறங்கிவந்து, ‘பூமியைப் படைத்தவர்கள் நாங்கள்தான். எங்கள் கிரகத்தின் விஞ்ஞானிகள்தான் இங்கே வந்து ஒவ்வொரு உயிராக டிஸைன் செய்தனர்’ என்றெல்லாம் சொல்லியதாகவும் படித்தோமே? இதே கதையை சினிமாவாக எடுத்தால் என்ன ஆகும்? (இந்தப் புத்தகத்தில், மனிதர்களை உருவாக்கியவர்கள் ஒருவகை எஞ்ஜினியர்கள் என்றே க்ளாட் சொல்லியிருப்பார். படத்திலும் இதே வார்த்தை வருகிறது).

என்றோ ஆதிகாலத்தில் ரிட்லி ஸ்காட் என்ற இளைஞர், Alien என்று ஒரு பிரம்மாண்ட வெற்றிப்படத்தை எடுக்க, அவருக்கே இப்போது முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து கிழடுதட்டியபின், அந்தப் படத்துக்கு ஒரு prequel – முதல் பாகம் – எடுக்க ஆசை வந்தால் என்ன ஆகும்?

நமது முன்னோர்கள் ஏலியன்கள் என்ற இந்த வசீகரமான கற்பனை, உலகின் பல பண்டைய மதங்களிலும் உண்டு. மெசபடோமியா, கிரேக்கம், மாயன்கள் போன்ற பல கலாச்சாரங்களிலும் பண்டையகால ஓவியங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம் (உயிர்மையில் வெளிவந்த ராஜ் சிவாவின் தொடர் நினைவிருக்கிறதா?). இந்த ஓவியங்கள் சிலவற்றில், சில மனிதர்கள் வானில் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் எண்ணிக்கையிலும் அமைந்த நட்சத்திரங்களைக் காட்டுவதுபோல இருக்கும் ஒற்றுமையை வைத்து, அந்த இடம் தொலைவில் உள்ள ஒரு பால்வீதியில் இருப்பதாகவும், அந்தப் பால்வீதியில் ஒரு சூரியன் இருப்பதாகவும், அங்கே பூமியைப் போன்ற ஒரு கிரகம் இருப்பதாகவும், அந்த கிரகத்தில் உள்ள மனிதர்கள்தான் நமது பூமியில் உள்ள உயிர்களைப் படைத்திருப்பதாகவும் ‘சில’ உண்மைகளைக் கண்டறியும் ஒரு குழு, பெரும் செல்வந்தர் பீட்டர் வெய்லான்ட் ஸ்பான்ஸர் செய்யும் ஒரு விண்வெளிப் பிரயாணத்தில் பங்கேற்கிறது. வருடம் – 2089.

இது எப்படி சாத்தியமாகிறது? சுவற்றில் வரைந்துள்ள சில மொக்கை ஓவியங்களிலிருந்து, காலக்ஸியில் அமைந்துள்ள நட்சத்திரக் கூட்டமைப்பை எப்படிக் கண்டறிந்தார்கள்? சுவர்களில் பண்டையகாலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் உள்ள சில உருண்டைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அதே patterனில் உள்ள ஒரு தனி சூரிய மண்டலத்தையே கண்டுபிடிப்பது என்ன ஜிலேபி சாப்பிடுவது போன்ற வேலையா? என்னாங்கடா இது?

உடனேயே தெருவில் அங்குமிங்கும் நடக்கும் பிச்சைக்காரர்களை சத்யராஜும் வடிவேலுவும் கவ்விக்கொண்டு கிரிக்கெட் மாட்சுக்கு ஆள் சேர்ப்பார்களே அப்படி ஒரு கும்பலை விண்கலத்துக்குள் போட்டுவிடுகிறார்கள். இந்த விண்கலத்தின் பெயர் – ப்ராமிதியஸ் (அய்யா ஜாலி… டைட்டிலை எப்படியோ படத்துக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்).

இந்த விண்கலத்தில் ஒரு ஆண்ட்ராய்ட். காக்காசாயிடு மூக்காசாயிடு போன்ற ஒருவித சாயிடு இது. அதாவது ஒரு ரோபோ. பெயர், டேவிட். நம்ம எந்திரன் ஸ்டைல் (மைக்கேல் ஃபாஸ்பெண்டர் என்ற நல்ல நடிகனை ஒரே படத்தில் வெட்டியாக்கிவிட்டனர்). இந்த ரோபோவுக்கும் எந்திரனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சொந்தமாகவே எண்ணங்களையும் குணங்களையும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல். இந்த டேவிடின் வேலை, அந்த விண்கலத்தின் ப்யூன். ஆஃபீஸ் பாய். கக்கூஸ் உட்பட எல்லாவற்றையும் கழுவுபவன்.

அந்த புதிய கிரகத்தில் (அந்த கிரகத்தின் சந்திரன் இது) என்ன நடக்கிறது என்பதை இதுவரை ஆங்கிலப்படங்களே பார்த்திராத மனிதர்கள் கூட சொல்லிவிடலாம். அவ்வளவு திராபையான ஒரு கதை இது.
ஆல்ரெடி ஆயிரத்தெட்டு ஏலியன் படங்களில் நாம் பார்த்திருக்கும் அதே களம். புதிய கிரகத்தில் மனிதர்கள் போய் இறங்கியதும், அங்கிருக்கும் ஜந்துகள் இவர்களை அட்டாக் செய்வது. இந்த அட்டாக்குக்கு பயந்து அவர்கள் ஓடுவது. அந்த ஜந்து எப்படியோ இவர்களின் விண்கலத்துக்குள் வந்துவிடுவது. அங்கிருக்கும் அத்தனை பேரும் சாவது.

இந்தப் படத்தின் ஒரே வித்தியாசமான அம்சம் என்ன என்றால் (அல்லது, அது என்ன என்று நான் நினைத்தேன் என்றால்), படத்தின் ஆரம்பத்தில், புல் பூண்டு இல்லாத பூமியில், ஒரு ஏலியன் மனிதன் வந்து இறங்கி, அவனது DNAக்களை கடலில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குவது. இதைப் பார்த்ததும், அடடே – ரிட்லி ஸ்காட் இன்னமும் இருக்கிறார் – என்று நினைத்துக்கொண்டுவிட்டேன். அந்தப் பாவத்துக்காக, அதன்பின் படத்தின் அத்தனை சாவடிக்கும் ஸீன்களையும் பார்த்துத் தொலையவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானேன்.

புதிய கிரகத்தில் ஜாடி ஜாடியாக (அம்மன் கோயிலில் தீச்சட்டிகள் அடுக்கி வைப்பார்களே அப்படி) ஏலியன்கள் அடக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அந்த கிரகமே ஒரு பரிசோதனைக்கூடம் என்பது அந்த கிரகத்தைப் பார்க்கும்போதே நமக்குப் புரிந்துவிடுகிறது. சரி. இப்போது சில பாயிண்ட்கள்:

 1. ஏலியன் கிரகம் ஒன்றில் மனிதர்கள் போய் இறங்கும்போது அந்த கிரகத்தில் ஏலியன் விண்கலம் ஒன்று புதைந்திருக்குமா இல்லையா?
 2. அந்த விண்கலத்தின் கண்ட்ரோல்கள், பூமியின் ரோபோ ஒன்றுக்கு ஜாலியாக கைபோனபோக்கில் தெரிந்துவிடுமா இல்லையா?
 3. அந்த மனிதர்களின் குழுவில் ஒரு கறுப்பின மனிதர் இருப்பாரா இல்லையா? இந்த ஆள்தான் கேப்டனாகவும் இருப்பான். எல்லாரையும் ‘அது வந்துகிட்டு இருக்கு…. எல்லாரும் உள்ள வாங்க’ என்று கூப்பாடு போடுவது மட்டுமே இந்த மெண்டலின் வேலை.
  3.1 – இந்த குழுவே ஏதோ மெண்டல் அஸைலத்திலிருந்து தப்பித்து வந்தவர்கள் போல் இருப்பார்களா இல்லையா? ஆதிகால ஏலியன் படத்திலிருந்து நாம் பார்க்கும் அதே ஸீன் – இந்த மடையர்கள் உட்கார்ந்து வழவழாவென்று எதையோ தின்னும்போது இந்த கும்பலிலேயே அசல் பைத்தியம் போல தோற்றமளிக்கும் ஒருவன் வந்து இவர்களிடம் பேசப்போய் வாங்கிக்கட்டிக்கொள்வது.
 4. அதே குழுவில் எகத்தாளம் பேசிக்கொண்டே இருந்து, முதன்முதலில் ஏலியன்களால் அட்டாக் செய்யப்பட்டு சாகும் அடிமுட்டாள் ஒருவன் இருப்பானா இல்லையா?
 5. கடைசியில் தப்பிக்கும் மனிதன் (அல்லது மனிதி) ஒரு பெண்ணாக இருக்குமா இல்லையா?
 6. மனிதர்களின் வாய்க்குள் நுழைந்து வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும் பாம்பு ஷேப் ஏலியன் இதுபோன்ற படங்களில் இருக்குமா இருக்காதா?
 7. ஏலியன் கிரகத்தில் ஒரு பெரிய குகை இருக்குமா இருக்காதா?
 8. அந்த குகைக்குள் அந்த கிரகவாசிகளின் பிணங்கள் கிடைக்குமா கிடைக்காதா?
 9. ஏலியன்களின் விண்கலம், படத்தின் இறுதியில் அந்த கிரகத்தை விட்டு கிளம்புமா கிளம்பாதா?

இந்த எல்லா பாயிண்டுகளுக்கும் ‘ஆம்’ என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் ஒரு ஏலியன் புலி என்று அர்த்தம். இதே பாயிண்ட்களை வரிசையாக வைத்துக்கொண்டு புதிய ஏலியன் படம் ஒன்றை உருவாக்கிவிடலாம். உங்கள் பெயரையும் ’இட்லி ஸ்காட்’ என்று மாற்றிக்கொண்டுவிடலாம்.

ரிட்லி ஸ்காட்டை எனக்கு (இந்தப் படத்துக்கு முன்னர்) பிடிக்கும். அவரது Thelma & Louise, Matchstick Men, Kingdom of Heaven, A Good Year, Body of Lies ஆகிய படங்களுக்கு நான் வெறியன். குறிப்பாக, ரிட்லி ஸ்காட் எடுக்கும் லோ பட்ஜெட் ஜாலி படங்கள் (Matchstick Men, A Good Year வகையறா) எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பெரிய பட்ஜெட் படங்கள் என்னை அந்த அளவு கவர்ந்ததில்லை. ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து. மனிதர் பல்லாண்டுகளுக்குப் பிறகு அவருக்குப் பிடித்தமான ஏலியன் ஜானரில் பிரவேசிக்கிறார் என்பதால், இந்தப் படத்தை நம்பித்தொலைத்துவிட்டேன். அதற்கான பயன் – ரோலான்ட் எமரிச் பாணியில் அவர் எடுத்துவைத்துள்ள இந்த சனியன்.

வேறு வழியே இல்லை என்ற நிலையிலும் கூட இந்த திராபையை பார்த்துத் தொலைத்து விடாதீர்கள். இதைத் தொட்டீர்கள் – செத்தீர்கள்!

இந்தப் படத்தின் ட்ரெய்லர் – அடப்போங்கய்யா! ரிட்லி ஸ்காட் தாத்தா டப்பியை சாத்திக்கொண்டு ஒரு பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கும் காலம் வந்தே விட்டது.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

22 Comments

 1. சென்னையில் (குறிப்பாக சத்யமில்) இப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்துள்ளனர். ப்ரோமெதியஸ் போகலாமா என்றொரு யோசனை இருந்தது. டீ கேன்சல்ட். வீக்கெண்ட் மூவி…இம்முறை எனது சாய்ஸ் திபாகர் பேனர்ஜியின் ‘ஷாங்காய்’(ஹிந்தி).

  Reply
 2. பக்கா அலசல்..நானும் டிரைகர் பார்த்தவுடன் படம் பார்க்கலாமுனு இருந்தேன்..என்ன ரொம்பவும் யோசிக்க வச்சிட்டீங்க./ நல்ல விமர்சனம்..நன்றி

  Reply
 3. வேற என்ன பண்ணுறது சனி ஞாயிறு …..பார்க்கதான் போறேன் தல

  Reply
 4. ////4. அதே குழுவில் எகத்தாளம் பேசிக்கொண்டே இருந்து, முதன்முதலில் ஏலியன்களால் அட்டாக் செய்யப்பட்டு சாகும் அடிமுட்டாள் ஒருவன் இருப்பானா இல்லையா?////////

  இத இன்னும் மாத்தலியா இவனுங்க……….?

  Reply
 5. கிளாடியேட்டர் எடுத்தவரா இப்படி…

  Reply
 6. 🙂

  Story z good, but screen play was so bad with too many holes and unanswered questions. Never expected such this bad movie from Ridley Scott. It could have been made better with modern directors. BluRay/DVD version with director’s cut might be better than theatrical version.

  Reply
 7. ஹாலிவுட்டுல ஆடிவெள்ளியை ரீமேக் பண்ணிருக்கான்னு சுருக்கமான்னு சொல்லவேண்டியதுதானே, இதுக்கு இம்மாம்பெரிய பதிவுாக்கும். 🙂
  அதென்ன தல டப்பி 🙂

  Reply
 8. @power thaz – நன்றி

  @ சிவகுமார் – இந்தப் படம் கண்டிப்பா வொர்த்தே இல்லாத படம். பார்த்துராதீங்க 🙂

  @ மோஹன் – பார்த்தீங்களா இல்லையா? எப்புடி இருந்திச்சி?

  @பன்னிக்குட்டி ராம்சாமி – ஹாஹ்ஹா :-).. அந்த டெம்ப்ளேட்டை இன்னும் அவனுங்க மாத்தலையே… அது மட்டும் இல்ல. இன்னும் நிறைய டெம்ப்ளேட் அப்படியப்படியே வெச்சிருக்கானுங்க 🙂

  @ chinna malai – அதிலென்ன சந்தேகம் 🙂

  @Yasin – Even if the Blu ray comes, watever we saw would most definitely be there. Unless and until the Blu ray contains a totally different picture, this ‘s gonna suck there too buddy. That’s wat I feel 🙂

  @ நாஞ்சில் பிரதாப்- ஹீ ஹீ.. ஆடிவெள்ளி நல்லாவே இருந்திச்சே :-)… இந்தப் படத்துல பொறுமையா ஒக்காந்து பார்க்குற மாதிரி ஒரு ஸீன் கூட இல்லையே 🙂

  Reply
 9. This comment has been removed by the author.

  Reply
 10. This comment has been removed by the author.

  Reply
 11. intha kathai aliens padam matumila pei padam, mirugam padam elathukum porunthum.

  Reply
 12. @ கார்த்திக் – உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குறதை தவிர வேற ஒன்னும் சொல்ல முடியாது. Welcome to the club, bro 🙂

  @roadside Romeo – yes. Music is okay. But in this kinda film where everything sucks, the music cannot be the consolation .. anyway, atleast it’s good to see one good thing here 🙂

  @Unknown – மிகவும் சரி. எந்த மாதிரி ‘அட்டாக்’ படத்துலயும் இந்த டெம்ப்ளேட் யூஸ் பண்ணிரலாம்

  Reply
 13. Raelism மாதிரியே தொடர் ரில் வருபவன ஒத்துபோகிறது…..Prometheus ….ரிலீஸ் ஆனதுல ஒரு நம்மை என்னன்னா…நமது ரசிகர்களுக்கு நீங்க ஸ்டாப் பண்ண Aliens தொடர் நினைவூட்டிவிட்டது….ஆகையால் Aliens தொடர் எப்போது ஸ்டார்ட் பண்ண போறீங்க ????? Pls consider and continue abt Aliens

  Reply
 14. ஏலியன் திரைப்படத்திற்கு பக்காவான திரைக்கதை மற்றும் ஏலியனின் உருவ அமைப்பு (நீளமான தலை கொண்ட ஏலியன் – சுவீஸ் ஓவியர் H.R.Giger உருவாக்கியது) எல்லாவற்றையும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு ரிட்லி ஸ்காட் கையில் கொடுக்கப்பட்டது. அவரும் நோகாமல் படம் எடுத்து பெயர் வாங்கிவிட்டார். படத்திலும் ஒன்றிரண்டு டிவிஸ்டுகள் (அண்ட்ரொஐட், நெஞ்சை கிழித்துக்கொண்டு ஏலியன் வருவது, ஸ்பேஸ் ஜாக்கி) இருக்கும், அவை கூட இவர் உருவாக்கவில்லை. மாறாக ப்ரோமெதீஸில் இவற்றில் எதுவுமே இல்லை.
  …
  …//இந்தப் படத்தின் ஒரே வித்தியாசமான அம்சம் என்ன என்றால் (அல்லது, அது என்ன என்று நான் நினைத்தேன் என்றால்), படத்தின் ஆரம்பத்தில், புல் பூண்டு இல்லாத பூமியில், ஒரு ஏலியன் மனிதன் வந்து இறங்கி, அவனது DNAக்களை கடலில் கலக்கவிட்டு, ஒரு செல் உயிரினத்தை உருவாக்குவது.//

  வேண்டுமென்றாஅல் நேரடியாக டி.என்.எ. வையோ, ஒரு செல் உயிரினத்தியோ தண்ணீரில் எரியலாமே, சுயமாக பலியாக வேண்டிய அவசியமில்லையே? ஸோ, இதுவும் ஒரு வெட்டி சீன் தான், B மூவி உக்தி தான்.

  imdb user reviews பக்கத்தில் இந்தப் படத்தை கிழித்துத் தொக்க போட்டிருக்கிறார்கள்.

  Reply
 15. chariots of god என்ற புத்தகம் கூட ஏலியன் பூமிக்கு வந்து போன கதையைத் தான் பேசுகிறது.

  Reply
 16. முதலாவதாகக் காட்டப்படும் “மனிதன்” ஒரு குற்றவாளியாக இருக்கலாம்; அவனை “நாடு” கடத்தி பூமிக்கு கொண்டு வந்திருக்கலாம்; “வாழப் பிடிக்கவில்லை / வாழ முடியவில்லை” எனத் தோன்றினால், விஷத்தை அருந்திக்கொள் என நஞ்சை அவனிடம் கொடுத்துவிட்டு அந்த விண்கலம் கிளம்பிக் கொண்டிருக்க; “அம்மனிதன்”, உடனேயே விஷத்தைப் பருகியிருக்கலாம்; அவனது சிதைந்த உடலும் நம் பூமியில் இருக்கும் ரசாயனங்களும் கலந்து, உயிரினங்கள் / சிவப்பணு கொண்ட “மனிதர்கள்” உருவாகியிருக்கலாம்; பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குப் பின், யதேச்சையாக பூமியை நோட்டம் விட்ட நம் “engineer”கள், பூமியில் புதிதாய் தோன்றியிருக்கும் குள்ள மனிதரிகளைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கலாம்; பூலோகவாசிகள் ஒரு கொடூரக் குற்றவாளியின் வம்சாவழியின் வநதவர்களாதலால், அவர்களுக்கும் அந்த கொடூர புத்தியிருக்கக் கூடும் (அல்லது) நமக்குப் போட்டியாக குள்ள மனித இனமா? எனக் கருதிய நம் “engineer”கள், நம்மை அழிக்க, “Alien”களை ஏவ எண்ணியிருக்கலாம்;

  …….

  Reply
 17. சதீஸ்

  Rajesh sir புடிங்க அண்ணன் parthibann-ஐ First scene ல அவன் எப்படி செத்தான்னு கதை கிடைச்சிடிச்சு.
  @Parthibann இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க…..

  Reply
 18. siva

  just now i saw this movie. after seeing the movie takunu ur review thoughts came. so i searched ur old prometheus review and putting comment. Movie starting is nice. but poga poga bore. often vala valanu pesikitae irukaanga. In English movies sure they are keeping a intercourse scene and an animal vala vala kola kolanu. why the hollywood people mind is always same? they always take movies in this same type of format. why so?

  Reply

Join the conversation