The Dark Knight – மீண்டும் Bane – The Trailers

by Rajesh July 9, 2012   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

Bane என்ற கதாபாத்திரமே இந்தப் படத்தின் வில்லன் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். யார் இந்த Bane? Baneன் உருவாக்கம் பற்றியும், எப்படி அவன் ஒரு கொடூர வில்லனாக மாறினான் என்பது பற்றியும் அடுத்த கட்டுரையில் விரிவாக எழுத நினைக்கிறேன். அதற்கு முன் – இதுவரை வந்துள்ள Dark Knight Rises ட்ரைலர்களில், படத்தின் ரசிகர்களுக்கு என்ன செய்திகள் தரப்பட்டுள்ளன என்பதை ஒரு அலசு அலசிவிடலாம். இதிலேயே Bane பற்றிய பல தகவல்கள் நம்முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

(இப்படித்தான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் நான் லீனியராக எழுதினால் ஒரு மண்ணும் புரியாது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்)
இதோ ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியான முதல் டீஸர்.

இந்த டீஸர் மிகச்சிறியது. Teaser பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.

பேட்மேன் பிகின்ஸ் படத்து க்ளிப்பிங்குடன் டீஸர் துவங்குகிறது. ப்ரூஸ் வேய்ன் தனது வேர்களைத் தேடிச் செல்லும் காட்சியுடன். இதன்பின் மருத்துவமனையில் படுத்திருக்கும் ஒரு நபரைக் காண்கிறோம். அது – கமிஷனர் கோர்டன். அவரது முன் அமர்ந்திருக்கும் ஒரு நபரிடம் மிகுந்த சிரமத்துடன் பேசுகிறார்.

We were in this together, and then you were gone.
Now this evil rises. Batman must come back.

அவரது எதிரில் இருக்கும் மனிதர் – ப்ரூஸ் வேய்ன்.

ப்ரூஸ் வேய்ன், பேட்மேன் இனி வரமாட்டான் என்பது போன்று பேசுகிறார்.

What if he doesn’t exist anymore?

இதற்கு கோர்டனின் பதில் –

He must… he must…

முகமூடி அணிந்துகொண்டுள்ள Baneன் இண்டர்கட் காட்சிகளுடன் இந்த டீஸர் முடிகிறது. உண்மையில் இந்த மூன்றாவது பாகம், இரண்டாம் பாகம் முடிந்து எட்டு வருடங்கள் கழித்தே ஆரம்பிக்கிறது என்று பேட்மேன் விசிறிகளுக்குத் தெரிந்திருக்கும். ஹார்வி டென்ட் என்ற டூ ஃபேஸை கொன்ற பழியை தன்மீதே போட்டுக்கொண்டு, போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியாக மாறிப்போகிறார் பேட்மேன். இது ஏனெனில், இரண்டாம் பாகத்தில், ஹார்வி டென்ட்டின் பாதி முகம் சிதைவதற்கு ஜோக்கர் தான் காரணம் என்பதாலும், ஹார்வி டென்ட் வில்லனாக மாறியபின்னரே இறந்தார் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தால், அது அவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதாலுமே. இதுவும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆகவே, ப்ரூஸ் வேய்ன் தனது பேட்மேன் அவதாரத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தனது வேய்ன் மேனர் என்ற மாளிகையின் கீழே அமைந்துள்ள குகையில் வாழ்ந்துவருகிறார் (என்பது இணையத்தில் கண்டுள்ள தகவல்).

ஆக, இதையெல்லாம் இந்த முதல் டீஸர் கன்ஃபர்ம் செய்கிறது. கூடவே, வில்லனின் உருவத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.


இதன்பின்னர், படத்தின் முதல் ட்ரைலர் வெளிவந்தது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலர், இதோ இங்கே.

இந்த ட்ரைலர், பலவித தகவல்களை நம்முன் வைக்கிறது.  ட்ரைலர் ஆரம்பிக்கும் காட்சியே, மிக அமைதியான ஒரு கூட்டம். அதில் ஒரு சிறுவன் பாடுகிறான். அந்தக் காட்சியுடன், Bane படியேறி வரும் ஷாட். இதன்பின், ப்ரூஸ் வேய்னின் நம்பிக்கைக்குகந்த ஆல்ஃப்ரெட், அவருடன் பேசுகிறார்.

You are as precious to me as you were to your own mother and father. I swore to them that I would protect you, and I haven’t

இதன்பின் கமிஷனர் கோர்டனைக் காண்கிறோம். அவரைப் பற்றி ஒரு நபர் இன்னொருவரிடம் இப்படி சொல்கிறார்:

The Mayor is going to dump him this spring. மற்றவர், கோர்டன் ஒரு போர்க்கால ஹீரோவாயிற்றே என்று கேட்க, முதலில் பேசியவர், இது போர்க்காலம் அல்லவே; இது அமைதியான காலம் அல்லவா? அதனால்தான் கோர்டனின் பதவி பறிபோகப்போகிறது என்று பதில் சொல்கிறார்.

இதன்பின்னர் செலீனா கேய்லின் முதல் அறிமுகம். இவள்தான் Catwoman. ப்ரூஸ் வேய்னுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறாள். அவள் பேசும் வசனம் இதோ:

You think this can last…There’s a storm coming Mister Wayne.I’m adaptable. But you and your friends better batten down the hatches. Cause when it hits, you’re all gonna wonder how you ever thought you could live so large and leave so little for the rest of us.

Batten down the hatches என்ற வாக்கியத்துக்கு, புயலைத் தாங்க தயாராகுங்கள் என்பது அர்த்தம். இன்னும் சொல்லப்போனால், மிகக்கடுமையான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது – ஆகவே அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள எப்போதும் தயாராக இருங்கள் – என்று பொருள்படும்.

இதன்பின்னர் ப்ரூஸ் வேய்ன் ஒரு பழைய டன்னலுக்குள் செல்ல, அங்கே ஆல்ஃப்ரெட்.

What does this mean?

Rise.

சிறையின் சுவர் பிளக்கப்படுகிறது. கைதிகள் வெளியே ஓடிவருகின்றனர்.

மிகப்பெரிய அமெரிக்கன் ஃபுட்பால் அரங்கம். மக்களின் chanting காதைப் பிளக்கிறது. Bane அங்கே ஒரு மூலையில், ஒரு நுழைவாயிலில் வந்து நிற்கிறான். கையில் ஒரு ரிமோட் கண்ட்ரோல். அழுத்துகிறான்.

அந்த விளையாட்டு அரங்கம் படிப்படியாக வெடிக்கத் துவங்குகிறது.

இதன்பின் வரிசையான ஆக்‌ஷன் காட்சிகள். நகரில் நடக்கும் மிகப்பெரிய கிளர்ச்சி ஒன்றை நமக்குக் காண்பிக்கின்றன இவை. பல்வேறு வாகனங்களுக்கு இடையே,  பேட்மேனின் வாகனம் பளிச்சென்று தெரிகிறது.

இவற்றுக்கு இடையே, ஒரு காட்சியில், ப்ரூஸ் வேய்ன் அடிபட்டுக் கிடக்கிறார். அவரைத் தன்னை நோக்கி இழுத்து – When Gotham is ashes, you have my permission to die – என்று தனது கரகரப்பான குரலில் கர்ஜிக்கிறான் Bane.

இத்துடன் இரண்டாவது ட்ரைலர் முடிகிறது.

இந்த ட்ரைலரில் நமக்குக் கிடைக்கும் செய்திகள் என்ன?

 1. படம், கோதம் நகரின் அமைதியான சூழலில் துவங்குகிறது. குறிப்பிடத்தகுந்த சம்பவங்கள் ஏதுமில்லாத நிலை. கமிஷனர் கோர்டன் மாற்றப்படப்போகிறார்.
 2. செலீனா கேய்ல் என்ற Catwoman என்ட்ரி. விரைவிலேயே Bane மூலமாக கோதமின் அமைதியான சூழல் மாறப்போகிறது என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது.
 3. Baneனுக்கும் செலீனா கேய்லுக்கும் தொடர்பு இருக்கிறது.
 4. ப்ரூஸ் வேய்ன் மறுபடியும் பேட்மேனாக மாறுவதற்கு ஆல்ஃப்ரெட்டின் தூண்டுதல் ஒரு முக்கியமான காரணம்.
 5. படத்தில் வரும் கைதிகள் தப்பிக்கும் சம்பவம் – சென்ற கட்டுரையில் நாம் பார்த்த Bane காமிக்ஸான  Knightsaga – Knightfall காமிக்ஸ் சீரிஸில் விளக்கப்பட்டிருக்கிறது. கைதிகளைத் தப்புவித்து, அவர்களைப் பிடிப்பதன் மூலம் பேட்மேனின் எனர்ஜியை முழுதாக வடித்து, அதன்பின் பேட்மேன் என்பது ப்ரூஸ் வேய்ன் தான் என்று கண்டுபிடிக்கிறான் Bane. இதன்பின் வேய்ன் மேனரின் Batcaveல் பேட்மேனின் முதுகெலும்பை உடைக்கிறான் என்று படித்தோம் அல்லவா?

கிட்டத்தட்ட இதைப்போன்ற ஏதோ ஒரு சம்பவம் படத்தில் இருக்கிறது. ப்ரூஸ் வேய்னை தனது பிடியில் சிக்கவைக்கும் பேனின் காட்சியை ட்ரைலர் கொண்டிருக்கிறது.


இதன்பின் இரண்டாவது ட்ரைலரும் வெளிவந்தது.

இந்த ட்ரைலரில் நாம் பார்ப்பது . . .

 1. தப்பிக்கும் Bane
 2. பேனிடம் பிடிபடும் ப்ரூஸ் வேய்ன், என்னை ஏன் இன்னமும் கொல்லாமல் வைத்திருக்கிறாய்? என்று கேட்பது. அதற்கு Baneன் பதில் – உனக்கான தண்டனை இன்னமும் கடுமையாக இருக்கவேண்டும் என்று சொல்வது (again பேட்மேன் யார் என்பதை Bane கண்டுபிடித்து விட்டான் என்ற confirmation).
 3. பேட்மேன் ரீ என்ட்ரி கொடுப்பதைப் பற்றிய சில காட்சிகள் (சிறுவனிடம் போலீஸ்காரர் Joseph Gordon Levitt பேசுவது & ஆல்ஃப்ரெட் ப்ரூஸ் வேய்னிடம் கோபமாகப் பேசுவது etc. .), செலீனா கேய்ல் முதன்முறையாக Catwoman உடையில் சண்டையிடுவது, மறுபடியும் பெரிய போர்க்காட்சி, குழப்பம் இத்யாதி.
 4. பேட்மேனின் முகமூடியை அலட்சியமாக Bane எறியும் காட்சி.

குறிப்பாக இந்த ட்ரெய்லர், இதற்கு முந்தைய ட்ரெய்லரின் நீட்சி என்று சொல்லலாம். ஏனெனில், அந்த ட்ரெய்லரின் பல காட்சிகளின் தொடர்ச்சி இதில் உள்ளது. அதேபோல் இந்த ட்ரெய்லரின் சில காட்சிகளின் தொடர்ச்சி அதிலும் உள்ளது. இந்த ட்ரெய்லர்களை உன்னிப்பாக கவனித்தால் இது புரியும்.

உண்மையில் இந்த ட்ரய்லர்கள் வெளிவந்தபோது எனக்கு அவை பிடிக்கவில்லை. The Dark Knight படத்தின் ட்ரய்லர் உருவாக்கிய பாதிப்பை இவை உருவாக்கவில்லை. ஆனால், நிதானமாக இந்த ட்ரெய்லர்களை கவனித்தபோதுதான் அவற்றின் தொடர்பும், படத்தின் கதையை இந்த ட்ரெய்லர்களிலேயே புத்திசாலித்தனமாக நோலன் நுழைத்த முறையும் புரிந்தது.


இந்த இரண்டாவது ட்ரெய்லரைத் தொடர்ந்து, நோகியா ஸெல்ஃபோனுக்காக பிரத்யேகமாக வெளிவந்த ட்ரெய்லர் ஒன்றும் இருக்கிறது (The Dark Knight படத்தின் வெளியீட்டின்போதுதான் Nokia 5800 Music Xpress – நோகியாவின் முதல் டச்ஸ்க்ரீன் ஸெல்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது தெரிந்திருக்கும். அதில் அப்படத்தின் பிரத்யேக ட்ரெய்லர் இடம்பெற்றது. அந்த ஃபோனை நான் வாங்கினேன். படத்திலும் ஒரு காட்சியில் அந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்).

அந்த நோகியா லூமியா 900 பிரத்யேக ட்ரெய்லரில், இதுவரை இடம்பெற்ற ட்ரெய்லர்களின் காட்சிகள் மட்டுமன்றி, சில விசேஷ ஷாட்களும் உள்ளன. அதேபோல், மூன்றாவது ட்ரெய்லரில், செலீனா கேய்ல், ப்ரூஸிடம், “Baனைக் கண்டு என்னைப்போலவே நீங்களும் பயப்பட்டாக வேண்டும்” என்று சொல்வதாக ஒரு ஷாட் உண்டு. அதற்கான பேட்மேனின் பதில் இந்த ட்ரெய்லரில் இருக்கிறது.

இதோ அந்த Nokia Lumia 900 Xclusive Trailer.

இப்படி, நோலனின் படங்கள் மட்டுமல்லாது ட்ரய்லர்களும் இண்டர்கட் ஆகின்றன.

இப்போது இன்னொரு செய்தி.

இதற்கு முந்தைய மூன்றாவது ட்ரய்லரில், கேட்வுமன், பேட்மேனிடம் “இந்த கோதம் நகரத்து மக்களுக்காக நீ பல்வேறு தியாகங்களைப் புரிந்தாயிற்று. இது போதும்” என்று சொல்வதாக ஒரு ஷாட் உண்டு. அதற்கு பேட்மேன்,”இல்லை. இன்னமும் கொஞ்சம் இருக்கிறது” என்று பதில் சொல்லுவார்.

அப்படியென்றால் . . பேட்மேன் செய்யக்கூடிய அல்டிமேட் தியாகம் என்ன?

இந்தப் படத்துடன் இந்த ஸீரீஸ் முடிவடைகிறது என்பதையும் மறக்காதீர்கள்.

பி.கு –  நிதானமாக ஒவ்வொரு ட்ரெய்லரையும் அமைதியாக அமர்ந்து பார்க்கும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இன்னமும் கூட பல செய்திகள் அவற்றில் கிடைக்கலாம். அப்படி உங்களுக்கு எதாவது தகவல்கள் கிடைத்தால் இங்கே கமெண்ட் போடலாம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

14 Comments

 1. ட்ரைலருக்கே விமர்சனமா….அடிச்சு தூள் கிளப்புறீங்க…

  அப்பறம் தல…வீடியோவ கொஞ்சம் பெரிய சைஸா போடலாமே…

  Reply
 2. அருமையான விளக்கம்.
  வீட்டுக்கு போய் பொறுமையா பாக்கணும்.

  Reply
 3. donno y the hell catwoman came in. .but if anything happen 2 batman the fans (mee too) won’t dijust it. .

  but nolan already told “the epic ends its era”. .
  reboot panni nammala kollama irundha sari. .

  Reply
 4. முதன் முதலாய் ட்ரைலர் பார்த்த பொது ஒரு மண்ணும் புரியலை இருந்தாலும் வெளிவந்த அனைத்து ட்ரைலர் பார்த்தேன்…இப்ப நீங்க கொடுத்த விளக்கம் நல்லாவே புரிய வைக்குது…படம் பார்க்க ரொம்ப intrestingஆ உள்ளேன்,,,,

  Reply
 5. மற்றுமொரு ட்ரைலர் இன்று வந்துள்ளது…

  Reply
 6. Nice Article…

  Where is Amazing Spider Man review???

  Excellent writing….

  Keep it up….

  Reply
 7. NICE ARTICLE GO AHEAD

  Reply
 8. There is a new 30 second trailer released on 1st day of Comic-con. It starts with doctor reviewing Batmans x-ray. Expectation is building up.. I have reserved First day show in Imax 🙂

  Reply
 9. @ லக்கி – வீடியோவை பெருசாக்கிட்டேன். சஜஷனுக்கு நன்றி 🙂

  @ Gaja – நன்றி. அந்த லிங்க்ஸையும் பார்த்துட்டேன். எல்லாத்தையும் சேர்த்தி ஒரு பதிவு போட்டுறலாம் 🙂

  @ இரவுக்கழுகு – ரைட். பார்த்தீங்களா இல்லையா?

  @ John Peter – பார்த்தேன்.. செம்மையா இருந்தது. நோலன் பயங்கரமா எதுவோ வெச்சிருக்காரு போல :-)..

  @ துருவன் – ரீபூட் எப்படியும் சில வருடங்கள்ள வரத்தான் போகுது. அதுல சந்தேகமே இல்ல. ஆனா அதை நாம இக்னோர் பண்ணிரலாம் 🙂

  @ Chinna Malai – ரைட். நானும்தான் ஆவலாய் உள்ளேன். இன்னும் நாளே நாள் தான். ஹையா ஜாலி

  @ Baby ஆனந்தன் – அந்த லேட்டஸ்ட் ட்ரைலர், நான் போட்டிருந்த நோக்கியா ட்ரைலர்தான்னு உங்க லிங்க் பார்த்து தெரிஞ்சிக்கினேன்.. நன்றி

  @ Doha Talkies – இலவச விளம்பரத்துக்கும் நன்றி

  @ ganesan – ஒகே தலைவா

  @ Raaj – ஹா ஹா … செமையான ஓபனிங்கா இருக்கே இது. நானும் ஆல்ரெடி Pre book பண்ணிட்டேன். டிக்கெட்டுக்காக வெயிட்டிங்

  Reply
 10. Idhai Konjam padikalame (FB ilirundhu eduka pattadhu)

  வழக்கமாக “அந்த ஹாலிவுட் படத்தை காப்பியடித்தார் கமல்” …. “இந்த பிரன்ஞ்ச் படத்தை காப்பியடித்தார் கமல்”…என்றுதான் செய்திகளும், கிண்டல்களும் வரும். இந்த முறை அதிரடி தலைகீழாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

  கமல் படத்தை தழுவி(காப்பியடித்து)தான் நான் படம் எடுத்தேன் என்று பிரபல ஆங்கில பட இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்” என்பதுதான் அந்த அதிரடி தலைகீழ் செய்தி.

  அந்த பிரபல ஆங்கில பட இயக்குனர் – நம்முடைய பக்கத்தில் “இன்னொருவனின் கனவு” தொடரை எழுதும் குமரகுருபரனால் அடிக்கடி குறிப்பிடப்படும் – குவிண்டின் டொரான்டினோ. (Quentin Tarantino)

  Quentin Tarantino தழுவிய கமலின் அந்த படம் – “ஆளவந்தான்”. இதை வைத்து Quentin Tarantino எடுத்தது – கொலைவெறியுடன் ஓடிய “Kill Bill ” படமேதான்.

  “Kill Bill ” படத்தில் வரும் அனிமேஷன் வன்முறை காட்சிகளை ஆளவந்தான் பார்த்து தான் படமெடுத்ததாக கூறி இருக்கிறார் Quentin Tarantino. வெனீஸ் நகரத்தில் தன்னை சந்தித்த பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்-பிடம் இப்படி மனம் திறந்திருக்கிறார் Quentin Tarantino..

  Reply
 11. ராஜேஷ்! அந்த டன்னலில் ப்ருஸ் வெய்னுடன் இருப்பது ஆல்ஃப்ரெட் இல்லை. ஒரு சக கைதியாகத் தான் இருக்க வேண்டும். அப்பாலிக்கா அது ரக்பி ஸ்டேடியம் கிடையாது. இந்த ஊர்ல அதுக்கு பேரு புட்பால். :)))

  Reply

Join the conversation