சாருவின் நாநோவும் எனது ஆங்கில மொழிபெயர்ப்பும்

by Rajesh August 28, 2012   Charu

Sharing is caring!

நண்பர்களே. ஒரு மிகவும் சந்தோஷமான செய்தி. நமது சாருவின் ‘நாநோ’ சிறுகதை எனது ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘The Four Quarters’ என்ற இலக்கியப் பத்திரிக்கையில் இன்று வெளிவந்திருக்கிறது. 115 பக்கங்கள் கொண்ட அந்தப் பத்திரிக்கையில், பக்கம் 13ல் இந்த மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. அதன் கூடவே, மொழிபெயர்ப்பாளனான எனது கருத்து – இச்சிறுகதையைப் பற்றியும், எப்படி நான் மொழிபெயர்த்தேன் என்பது பற்றியும் – கிட்டத்தட்ட ஒரு பக்க அளவில் வெளிவந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படிக்கும் அத்தனை நண்பர்களும் தவறாமல் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்தை மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்தினால், இன்னமும் எனது ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேம்படுத்திக் கொள்ள அது ஏதுவாக அமையும்.

இதோ இங்கே க்ளிக்கி, Four Quarters பத்திரிகையின் ஆகஸ்ட் 2012 பதிப்பைப் படிக்கலாம். அதில் 13ம் பக்கத்தில் நாநோவின் மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது. திரையின் நடுவே க்ளிக்கினால் திரை பெரிதாகும்.

The Four Quarters Magazine – August 2012

சாருவின் கதைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு அவராலேயே வந்தது. எனக்கு நம்பிக்கையில்லாதபோதும், முடியும் என்ற ஊக்கத்தைக் கொடுத்தவர் சாருவேதான். அவருக்கு நன்றி சொன்னால், எனது தந்தைக்கு நானே நன்றி சொல்வது போல. இருந்தாலும் – Charu .. Cheerz!! Many more to go 🙂

இந்தக் கதையை ப்ரூஃப் பார்த்துக் கொடுத்து இன்னமும் செழுமைப்படுத்திக் கொடுத்த ஷ்ரீக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இப்போது – எனது Translator’s Note இங்கே படிக்கலாம்.

 

Translator’s Note

Is it possible to scribe the naked thought flow inside the mind? That was my predicament when I sat to translate the short story of Charu Nivedita titled ‘Nano’ which was originally published in Tamil in the year 1991. I was in my sixth grade then. Now, a short story, according to me is a series of lines, beautifully written with all the quotes and the punctuations, and which tells me a story with a few characters in it. That was until I met Charu Nivedita. I started to read his works after the meeting, which happened in early 2009.  When I read his work, I was in a world of shock. All the inhibitions I had were thrown out by his writings. His works didn’t fit in to the ‘decent’ benchmark which I had set in my mind after reading a few literary works in Tamil. For the first time ever, I felt embarrassed to read something, as it reflected the thoughts I had hidden deeply inside the trenches of my mind. Gradually, all my inhibitions left me. Well, that’s what a mediocre reader like me would feel after venturing in to the ‘tabooed’ territory of Charu Nivedita.

Coming back to the translation of Nano, I have read the original Tamil version during the initial days of my meeting with Charu. At that time, since I found it difficult to stomach it, I had skipped a few lines and paragraphs. But after getting in to translating his works, I repeatedly read Nano word by word, all the while getting more skeptical about the translation.
Why is it difficult to translate Nano?

The first point would be that there are no periods or punctuations in the Tamil original, and the entire short story is quite similar to the flow of thoughts in our mind, which are very difficult to capture on paper, in their original form. While translating the story in English, I found it impossible not to use any punctuation marks, and so had used them.

The second point is the language he had used. Biblical. The Tamil original, if read aloud, has the rhythm of the biblical language which is quite popular in Tamil. The biblical verses in Tamil have their own language and nuances.  Again, I found it impossible to capture the unique biblical tone of the Tamil story.

Thirdly, the pun Charu Nivedita is famous for. He plays with his language, coining new phrases, idioms and names, which are otherwise non-existent. For example, consider the name he uses in the English translation – Ozhuthalan. In Tamil, a writer is generally called as ‘Ezhuthalan’ – the one who writes. Out of this word, Charu creates the word Ozhuthalan – the one who fucks.  How can I bring this phrase in English and quantify it? Hence, I have used the same term ‘Ozhuthalan’ and have indeed given a footnote.

These were the major challenges towards translating the story in English. Charu Nivedita often quotes the schizophrenic frame of mind when he writes, which is quite evident in this particular story. While translating it, I too attained that frame of mind as I felt like a mad man running through a dark forest in the night. At certain points, I was totally clueless so as to where I was in this translation. Nevertheless, I had completed the story somehow. Yes, ‘somehow’ is the word. I had sent this translation to few of my close friends who would comment about the work, and as expected, they all had the same thing to say – they were able to read only a part of the story, as they too, after going deep in to the story felt like they had become crazy. Such are his stories.

To conclude, the period when the short story was written – twenty one years ago- was a time when writers like Charu would publish their works in small literary magazines which again, would be read only by them. The writer was the reader in such times, and the circulation would not even cross 100. This is one such story which got lost years ago, and I am quite joyous to translate such a story.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

16 Comments

 1. sema rajesh. நேநோ கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்ன கடைசியா படிச்சது, நிச்சயம் உங்க translationல அப்போ இருந்த அதே feel அப்டியே திரும்ப இருந்தது. way to go boss 🙂

  Reply
 2. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
  இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
  மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்வதிலோர் மகிமை இல்லை
  திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்……

  ரொம்ப நல்ல விஷயம் இது…….இங்கிலீஷ்ல இருந்தா நம்ம எழுத்தாளர்களின் ரீச் எங்கேயோ போயிரும். பல நல்ல தமிழ் சிறுகதைகள் இருக்கு…..ஆங்கில புலமை அருமையா உள்ள – பாலா ரொம்ப பிகு பண்றாரு – ஆளுங்க எல்லாம் தானா முன்வந்து இத செய்யலாம். எனக்கு அந்தளவுக்கு நம்பிக்க இருந்தா எப்பவோ பல கதைகள செஞ்சிருப்பேன்..

  Hats off…….நெசமா இது ரொம்ப பெரிய விஷயம்…..போன வருஷம் Wolrds best short storisன்னு ஒரு புக் வாங்குனேன்…..ஜப்பானீஸ்ல ஆரம்பிச்சு பல நாட்டு ஆட்களின் பேர் அதுல இருக்கு. நம்ம இந்தியாவுல இருந்து -V.S.naipaul பேரு மட்டும் இருந்தது,,அவர இந்தியன் வகையராவுல சேர்க்கலாமா – ஒருத்தர் தான் இருந்தார். இந்த மாதிரி ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தால் தமிழ் ரைட்டர்கள் பேர் நிச்சயம் வரும்…….

  தமிழ் சினிமா + உலக சினிமா ஒப்பீடு தான் நெறைய இருக்கு…..தமிழ் நடிகர்கள எதுனா சொன்னா திட்டுறாங்க…ரைட்டர்ஸ் பத்தி மட்டும்…லூஸ்ல வுட்டுர்றாங்க…

  தமிழ் இலக்கியம் + உலக இலக்கியம் குறித்து எப்ப முழு வேகத்தில் ஒப்பீடுகள் நடக்க ஆரம்பிகுமோ….

  ரொம்ப சந்தோஷமா விஷயம் மறுபடியும் வாழ்த்துக்கள்……சீக்கிரம் ஒரு இன்டர்நேசனல் பத்திரிகையில் இதுபோன்ற கதைகள் வரணும்…..அத நீங்க மொழிபெயர்த்திருந்தா கூடுதல் சந்தோஷம்….

  Reply
 3. சாருவ தவிர……வேற யாருடைய கதைகளையாவது மொழிபெயர்க்க சொன்னா யாருடைய கதைகள மொழிபெயர்ப்பீங்க ? (ஓவரா போறோமோ )

  Reply
 4. ஒரு தமிழ் கதையோட மொழிபெயர்ப்பு சர்வதேச பத்திரிக்கைல வந்து இருக்குன்னு நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு அதுலையும் எனக்கு ரொம்ப பிடிச்ச நேநோவோட மொழிபெயர்ப்பு வந்தது எச்ஸ்ட்ரா ஹேப்பி.., இதுவொரு அரம்பமா இருந்து முக்கியமான மத்த கதைகளுக்கும் நல்ல Recognisation கிடைக்கும்ன்னு நம்புவோம்..,
  Again

  ரொம்ப சந்தோஷம் பாஸ்..,

  Reply
 5. வாய்த்துகள்.

  //ஆங்கில புலமை அருமையா உள்ள – பாலா ரொம்ப பிகு பண்றாரு //

  எலேய் சும்மாவா உங்கள நக்கல் நாயகன்னு கூப்பிட்டாரு? டைப் பண்ணும்போது சிரிக்காமயே அடிச்சிருப்பீங்களே?

  Reply
 6. ராஜேஷ்…வாழ்த்துக்கள்.

  சாருவை எனக்கு பிடிக்காது.
  இருந்தாலும் அவர் சினிமா பற்றி எழுதிய அனைத்தும் படித்து விடுவேன்.
  ஆச்சரியமாக ஆளவந்தானில் அவரது கருத்தும்…எனது கருத்தும் ஒத்துப்போனது.
  [ஹேராம் பற்றி அவர் எழுதியதை மறுத்து தனி தொடர் போடப்போகிறேன்.
  எத்தனை பாகம் என்பது நீங்கள் இடும் பின்னூட்டம் முடிவு செய்யும்]

  எனக்கு அன்றும்…இன்றும்….என்றும் சுஜாதாதான்.
  பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு அவர் தவித்ததை…நகைச்சுவையாக என்னிடம் விவரித்ததை…எழுதும் திறைமை சத்தியமாக எனக்கு இல்லை.கொழந்தையிடம் உள்ளது…ஆனால் அவர்…
  ஐயோ… வேண்டாம் காரிகன்,டூப்ளி உசிர,மார்டி வந்து விடுவார்கள்.

  Reply
 7. இனிமேல்தான் வாசிக்க போகிறேன். எனினும் அட்வான்ஸ் வாழ்த்துகள் தலைவரே!
  கண்டிப்பாக என்னுடைய விமர்சினத்தை பதிவு செய்வேன்.

  Reply
 8. // எலேய் சும்மாவா உங்கள நக்கல் நாயகன்னு கூப்பிட்டாரு? டைப் பண்ணும்போது சிரிக்காமயே அடிச்சிருப்பீங்களே? //

  ஒரு காலத்தில் இதுமாதிரி கமென்ட்களுக்கு நீங்க சீரியசா பதில் போட்டு கவனிச்சிருக்கேன்….

  ஆனா எங்க கூடெல்லாம் சேந்து சேந்து இதெல்லாம் ஓட்டுறதுக்குன்னு புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கீங்க……..நல்ல வளர்ச்சி….

  எப்ப உங்க ப்லாக் ஓப்பன் செய்வீங்க….எழுத்து நடை கண்ணுக்குள்ளேயே இருக்கு……

  Reply
 9. நல்ல முயற்சி! தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள் கருந்தேள்!

  Reply
 10. Nice…. Pls do more!

  Reply
 11. திண்டுக்கல் தனபாலன் – இந்தக் கட்டுரையைப் படிச்சீங்களா? அந்த பத்திரிகையில் இருக்கும் கதையைப் படிச்சீங்களா? எதுவுமே பண்ணாம சும்மா மொக்கையா டெம்ப்ளேட் கமென்ட் போடுறதை நீங்க நிருத்தாட்டி உங்களை ஸ்பேம் பண்ணிடுவேன்.

  Reply
 12. Good advice to Mr.Dhanabalan.

  Reply
 13. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி… தொடர வாழ்த்துக்கள்… ha ha ha.. lol

  Reply
 14. //ரொம்ப நல்ல விஷயம் இது…….இங்கிலீஷ்ல இருந்தா நம்ம எழுத்தாளர்களின் ரீச் எங்கேயோ போயிரும். பல நல்ல தமிழ் சிறுகதைகள் இருக்கு…..ஆங்கில புலமை அருமையா உள்ள – பாலா ரொம்ப பிகு பண்றாரு – ஆளுங்க எல்லாம் தானா முன்வந்து இத செய்யலாம். எனக்கு அந்தளவுக்கு நம்பிக்க இருந்தா எப்பவோ பல கதைகள செஞ்சிருப்பேன்..
  Hats off…….நெசமா இது ரொம்ப பெரிய விஷயம்…..போன வருஷம் Wolrds best short storisன்னு ஒரு புக் வாங்குனேன்…..ஜப்பானீஸ்ல ஆரம்பிச்சு பல நாட்டு ஆட்களின் பேர் அதுல இருக்கு. நம்ம இந்தியாவுல இருந்து -V.S.naipaul பேரு மட்டும் இருந்தது,,அவர இந்தியன் வகையராவுல சேர்க்கலாமா – ஒருத்தர் தான் இருந்தார். இந்த மாதிரி ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தால் தமிழ் ரைட்டர்கள் பேர் நிச்சயம் வரும்…….//

  மிக அருமை! என்னுடைய கருத்தும் இதுதான். ராஜேஷிடம் எனக்கு பிடித்தது
  1.உரைநடை வேகம்
  2.கடினமான விஷயத்தை எளிமையாக சொல்வது
  3.எள்ளல், நகைச்சுவை உணர்வு
  4. முக்கியமாக சுவாரஸ்யம்
  இவரே நிறைய கதைகளை மொழிப்பெயர்க்கலாம்.
  மற்றப்படி பெரியவாக்கலாம் அடக்கி வாசிக்கும்போது நாமளும் கொஞ்சம் பம்ம வேண்டியதாயிருக்கிறது.

  Reply
 15. மனமார்ந்த வாழ்த்துகள் ராஜேஷ்..ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதைக் காட்டிலும் தமிழிருந்து அதுவும் இலக்கியத்தை மொழிபெயர்ப்பது சவாலான வேலை. தொடர்ந்து எழுதி புகழ் பெற வாழ்த்துகள்..

  Reply

Join the conversation