Julia's Eyes (2010) – Spanish

by Rajesh August 23, 2012   world cinema

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

பார்வை பறிபோய் இந்த உலகில் வாழும் நிலை எத்தகையது? நம்முடைய சராசரி வாழ்க்கையிலேயே அப்படி வாழ்வது கடினம். பார்வை போவதற்குமுன்வரை நாம் கண்டுணர்ந்த வண்ணமயமான உலகம், அதன்பின் ஒரேபோன்ற இருண்ட தன்மை உடையதாகிவிடுகிறது. அந்த இருளில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நம்முடைய மனதில் குழப்பங்களையும் பயத்தையுமே உருவாக்குவதாக இருக்கிறது. இறந்துவிடலாம் என்ற முடிவை எடுக்க நம்மை அது தூண்டுகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதையே இந்த Julia’s Eyes.

ஸாரா தட்டுத்தடுமாறி அவளது வீட்டின் நிலவறையில் நடந்துகொண்டிருக்கிறாள். அவளது கண்களில் வெண்மை படர்ந்திருக்கிறது. பார்வை பறிபோன நிலை. மிகுந்த பரபரப்புடன் கைகளை விரித்துக்கொண்டே பயத்துடன் அங்குமிங்கும் அலைபாய்கிறாள். அவளது காலில் எதுவோ தட்டுப்படுகிறது. ஒரு ஸ்டூல். அதில் ஏறி, கூரையிலிருந்து தொங்கும் ஒரு சுருக்குக்கயிறை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறாள்.

திடீரென அங்கே யாரோ இருப்பது அவளுக்குத் தெரிகிறது.

“இங்குதான் இருக்கிறாயா? உன் கண்முன் இறந்து, நான் துடிதுடித்துச் சாகப்போகும் இன்பத்தை உனக்குத் தரமாட்டேன். இங்கிருந்து போய்விடு”.

உச்சபட்ச பயத்திலும் பரபரப்பிலும் தனது கழுத்தில் இருக்கும் சுருக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். அவளது கைகள் நடுங்குகின்றன.

திடீரென அவள் நின்றுகொண்டிருக்கும் ஸ்டூல் உதைக்கப்படுகிறது.

தொங்கிக்கொண்டே துடிக்க ஆரம்பிக்கிறாள் ஸாரா.

ஹூலியா ஸாராவின் இரட்டைச் சகோதரி. மிகச்சரியாக அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துகொண்டிருக்கும் ஹூலியா மயங்கி விழுகிறாள். அவளால் மூச்சு விட முடிவதில்லை.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்தப்படம்.

சகோதரிக்கு எதுவோ நடந்திருக்கிறது என்ற பரபரப்பில் அவளது வீட்டுக்கு ஹூலியாவும் அவளது கணவன் இஸாக்கும் வருகின்றனர். எங்குமே ஸாராவைக் காணாமல் நிலவறைக்கு வரும் இஸாக், அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் ஸாராவைப் பார்க்கிறான்.

ஸாராவிற்கு இருந்தது ஒருவித பார்வைக்குறைபாடு நோய். சிறுகச்சிறுக பார்வையைப் பறிக்கக்கூடிய ஒரு வியாதி அது. கண்ணில்லாமல் வாழ விருப்பப்படாத ஸாரா தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக போலீஸ் முடிவு செய்கிறது.

ஆனால், அந்த வீட்டை துழாவிக்கொண்டே வரும் ஹூலியா, தவறுதலாக ரிமோட்டை ஆன் செய்துவிட, அங்கிருக்கும் ஹோம் தியேட்டரில் ஒரு காதல் பாடல் இசைக்கத் துவங்குகிறது. வாழ்வின் விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒரு பெண், இறப்பதற்கு முன்னர் எப்படி இப்படிப்பட்ட ஒரு காதல் பாடலைக் கேட்டிருக்க முடியும்?

ஹூலியாவின் மனதில் சந்தேகத்தின் விதை தூவப்படுகிறது.

ஹூலியாவுக்கும் அவளது சகோதரியின் அதே கண்நோய் இருப்பதால், அவளுக்குமே தற்போது பார்வை பாதியாகக் குறைந்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் முழுமையாக அவளது பார்வை பறிபோய்விடும். இத்தகைய சூழலில், ஸாராவின் உடல் புதைக்கப்படுகிறது. அப்போது ஹூலியா அந்த இடத்தில் வேறு ஒரு அந்நிய ஆணின் இருப்பை உணர்கிறாள். யார் அது?

ஸாராவிற்கு ஒரு காதலன் இருந்ததாக அவள் சென்றுகொண்டிருந்த கண்ணிழந்தோர் மையத்தில் இருக்கும் பெண்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது அங்கே அதே ஆணின் இருப்பை மறுபடியும் உணர்கிறாள் ஹூலியா. அது யார்?

ஸாராவும் அவளது காதலனும் இறப்பதற்கு முன்னர் சென்றிருந்த ரெஸ்டாரெண்ட்டின் பணியாளன் ஒருவன், ஹூலியாவை ஸாரா என்று எண்ணிக்கொண்டு, சாராவைப் பற்றிய ஒரு மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறான். அதிலிருந்தே ஸாரா கொல்லப்பட்டிருப்பதை ஹூலியா உணர்கிறாள். அந்தக் கேள்வி என்ன?

ஸாராவின் அண்டை வீட்டு நபர் மிகவும் அந்நியமாக, ஏதோ மறைவான குறிக்கோளுடன் தன்னிடம் பழகுவது ஹூலியாவுக்குத் தெரிகிறது. அந்த நபருக்கு ஒரு மகளும் உண்டு. ஆனால் அவளது முகம் நமக்குக் காண்பிக்கப்படுவதில்லை. அது ஏன்?

இதுபோன்ற பல மர்மங்கள் ஹூலியாவின்முன் விரிகின்றன. ஒவ்வொன்றாக இவை, ஸாராவின் மரணத்துக்கே அவளைக் கொண்டுசேர்க்கின்றன.

எப்படி என்பதே இப்படம்.

படம் துவங்கியபின் படுவேகமாக க்ளைமாக்ஸை நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மர்மம் இருக்கிறது. ஆனால், இப்படத்தின் க்ளைமாக்ஸ் எனக்கு உவப்பாக இல்லை. படத்தின் முக்கால்வாசி படுவேகமாகச் செல்லும் இப்படம், க்ளைமாக்ஸில் வேகமிழந்துவிட்டதாகவே தோன்றியது. இப்படத்தைப் பார்த்திருக்கும் நண்பர்கள் அவர்களுக்கும் அப்படித் தோன்றியதா என்று சொல்லலாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர், கில்லர்மோ டெல் டோரோ.

என்ன இருந்தாலும், பார்வையிழப்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இக்கதை சுவாரஸ்யமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழில் காப்பியடிக்கப்படுவதற்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய படம் இது. மிக விரைவில் தமிழில் அல்லது ஹிந்தியில் எடுக்கப்படலாம். எடுக்கப்படாவிட்டால்தான் ஆச்சரியம்.

Julia’s Eyes படத்தின் ட்ரெய்லர் இங்கே.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

20 Comments

 1. karundhel,”criticly acclimed”film.padam pakka aasi thundukirathu.

  Reply
 2. ‘ஜூலியா’ என்ற பெயரை ‘ஹுலியா’ என்று மாற்றிவிட்டீர்கள் என நினைக்கிறன்.

  Reply
 3. அருண் – Julia என்ற பெயரின் உச்சரிப்பு ஹூலியா என்றுதான் வரவேண்டும். படத்தில் அப்படித்தான் வருகிறது;

  Reply
 4. உங்கள் எழுத்து நடையே ஏதோ மர்ம நாவல் வாசிப்பது போல இருக்கிறது! கண்டிப்பாக பார்க்கனும்..

  //தமிழில் காப்பியடிக்கப்படுவதற்கு சர்வ லட்சணங்களும் பொருந்திய படம் இது.//
  நல்ல கதையாய் இருந்தால் நல்ல படமாக வரலாம். பிராப்ளம் என்னன்னா முதன்மைக் கதாப்பாத்திரம் பெண்ணாக இருப்பதால், தமிழில் தமன்னாவோ, இலியானாவோ, காஜலோ கையில் சிக்கிப் படம் சீரழியத்தான் முடியும்!

  நீங்கதான் படம் பார்த்துட்டீங்களே.. யாரைப் போட்டால் நல்லா வரும்??

  Reply
 5. கேள்விப்பட்டது கூட இல்ல….எனக்கே தெரியாமல் ஒரு படம் வெளியாகியிருப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

  Reply
 6. கேள்விப்பட்டது கூட இல்ல….எனக்கே தெரியாமல் ஒரு படம் வெளியாகியிருப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.

  Reply
 7. ரொம்ப நன்றி…ராஜேஷ்.
  இப்படத்தின் ஒரே ஒரு டிவிடி சீந்துவாரின்றி கடையில் கிடக்கிறது.இனி அதை தைரியமாக சிபாரிசு செய்வேன்.

  Reply
 8. நல்ல விமர்சனம்

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  Reply
 9. படுவேகமான படம் என்பது உண்மைதான். .
  கிளைமாக்ஸில் மிகச் சிறிதே வேகமிழப்பினும் ஆரம்பத்திலிருந்து பயணித்த வேகத்தில் அது மறந்து போகிறது. .

  Reply
 10. கதை படிக்கும்போதே பார்வை இழந்த பயத்தினை ஏற்படுத்துகிறது….

  Reply
 11. In some European languages, ‘J’ is pronounced as ‘Ya’
  Some example
  Jesus in English – Yesu (in tamil also)
  Jacob – Yacub
  Joseph – Yoseph

  Reply
 12. Are you hate Tamil Cinema or Tamil Cinema Director…
  Remake Film is not wrong but without a permission…
  because i want to be a director so every director not be copied(I Know you not mentioned everyone)Tamil Cinema also have some a world classical film… I hate a copycat directors. they are Damaged our Tamil cinemas…
  But your review is good. I loved it…
  By Friendly
  Avinash

  Reply
 13. //நல்ல கதையாய் இருந்தால் நல்ல படமாக வரலாம். பிராப்ளம் என்னன்னா முதன்மைக் கதாப்பாத்திரம் பெண்ணாக இருப்பதால், தமிழில் தமன்னாவோ, இலியானாவோ, காஜலோ கையில் சிக்கிப் படம் சீரழியத்தான் முடியும்!
  நீங்கதான் படம் பார்த்துட்டீங்களே.. யாரைப் போட்டால் நல்லா வரும்??//

  JZ, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி… பாத்து எழுதுங்க…
  Anyway, இப்படத்தை இதுவரை மூன்று முறை பார்த்துவிட்டேன்

  கருந்தேள், “இப்படத்தில் பார்வையற்ற பெண்கள் ஜூலியாவையும், மற்றொரு ஆணையும் கண்டுகொள்ளும் இடம், வீட்டில் அந்நியனின் இருப்பை அறிந்த ஜூலியா போனில் பேசிக் கொண்டே காலடிகளை கணக்கிட்டு வெளியேறுவது” போன்ற காட்சிகளை விரிவாக எழுதியிருக்கலாம்.

  Reply
 14. Gokul

  Rajesh.. I have read your reviews. You are a good critic writer. I found this movie in youtube, but no english subtitles. Could you please give me the link with subtitles or where can I download?

  Reply
 15. Gokul

  கருந்தேள்,
  உங்கள் விமரிசனத்தால் உந்தப்பட்டு இப்படம் பார்த்தேன். எனக்குப் பிடித்தது. ஒரு நல்ல thriller. பார்வையாளனுக்குப் பயத்தையும், ஆர்வத்தையும் இறுதி வரை தக்கவைத்தது. முடிவில் காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக இரு முறை பார்த்தேன். பக்கத்து வீட்டு பாட்டி தன் மகன் காணாமல் போனதாக சொல்லும்போதே ஊகிக்க முடிகிறது.
  பொதுவாக உங்கள் விமர்சனங்களில் இருந்து நான் புரிந்து கொண்டவை:
  1. உங்களுக்கு அபாரமான எழுத்துத் திறமை.
  2. நடுநிலையான விமரிசனம்.
  3. பலவகை படங்களை விமரிசித்தாலும், அதிகம் எழுதுவது அதீத வன்முறை, கொடூரம் நிரம்பிய படங்களை.
  4. ஒரு படத்தின் தொடக்கக் காட்சிகளை அல்லது சில காட்சிகளை அட்டகாசமாக வர்ணிக்கிறீர்கள் (ஒரு trailer போல). இது படிப்பவர்களை படம் பார்க்கத் தூண்டுகிறது அல்லது பார்க்க வேண்டாம் என்று முடிவெடுக்க வைக்கிறது. (serbian film போல). ஆனால், கதை, திரைக்கதை, நடிப்பு பற்றிய ஆழமான விமர்சனம் குறைவோ என்று தோன்றுகிறது.
  இவை என் கருத்துக்களே. சமீபத்தில்தான் உங்கள் எழுத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
  உங்கள் இந்தப் பணி பாராட்டுக்குரியது. தொடர்ந்து படிப்பேன். நன்றி.

  Reply
  • Rajesh Da Scorp

   கோகுல், நன்றி. உங்களது மூன்றாம் பாயிண்ட் – 🙂 எனக்கு அதீத வன்முறை பிடிக்கும் (திரைப்படங்களில் மட்டுமே). அதனால் அப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பேன். சரியாக யூகித்திருக்கிறீர்கள். அதேபோல், இதுமாதிரியான படங்களில் கதை, திரைக்கதை, நடிப்பு பற்றிய ஆழமான விமர்சனங்கள் எழுத வேண்டாம் என்பது என் முடிவு. காரணம் இவை மசாலாக்கள் மட்டுமே. அதேசமயம், எதாவது நல்ல படங்களை விமர்சிக்கும்போது அவற்றை எழுதி வருகிறேன். நன்றி.

   Reply
   • Please watch Man From Nowhere if you like action thrillers…

    Reply

Join the conversation