திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 22

by Rajesh August 24, 2012   series

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான ஸீன்களால் விளக்கப்படும் சம்பவங்களைப் பற்றியது. அவற்றுக்குப் பெயரே ஸீக்வென்ஸ். இத்தகைய ஸீக்வென்ஸ் ஒன்றை The Dark Knight திரைப்படத்திலிருந்து உதாரணமாக எடுத்துக்கொண்டோம்.

இன்றைய கட்டுரையில், ஸீக்வென்ஸ் என்பதன் அவசியம் பற்றியும், ஒரு action திரைப்படத்தில் இந்த ஸீக்வென்ஸ்கள் எப்படி அமையவேண்டும் என்ற ஃஸிட் பீல்டின் கருத்து பற்றியும் பார்க்கலாம்.

இதோ இந்தத் தொடர் ஆரம்பித்த காலங்களில் நாம் கவனித்த திரைக்கதை அமைப்பின் வடிவம்.

எத்தகைய கமர்ஷியல் திரைக்கதை எழுதப்படும்போதும் நான்கு விஷயங்கள் நம்மிடம் இருக்கவேண்டும் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1. ஆரம்பம்
2. Plot Point 1
3. Plot Point  2
4. முடிவு

இவை தெளிவாக இருந்தால் மட்டுமே திரைக்கதையை எழுதத் துவங்கவேண்டும் என்பது ஸிட் ஃபீல்ட் அளிக்கும் பாடத்தின் ஆரம்பம்.

இந்த நான்கு விஷயங்களும், மிகச்சில சந்தர்ப்பங்களில் நான்கு ஸீக்வென்ஸ்களாக அமைந்துவிடுகின்றன என்று சொல்கிறார் ஸிட்.

Godfather திரைப்படத்தின் ஆரம்ப திருமண ஸீக்வென்ஸ், ஒரு படத்தின் ஆரம்பமே ஒரு பெரிய ஸீக்வென்ஸாக இருப்பதன் உதாரணம். இதே போல் Matrix திரைப்படத்தில் நியோ மார்ஃபியஸை சந்தித்து, மார்ஃபியஸ் அளிக்கும் இரண்டு மாத்திரைகளில் சிவப்பு வண்ண மாத்திரையை செலக்ட் செய்து, அதனால் நியோவாக மாற்றமடையும் ஸீக்வென்ஸ், Plot Point 1 ஒரு ஸீக்வென்ஸாக இருப்பதற்கு சிறந்த உதாரணம். இப்படியே Plot Point 2வும் ஒரு ஸீக்வென்ஸாக இருக்க முடியும். அதேபோல்தான் முடிவும் (டெர்மினேட்டர் 2 இதற்கு ஒரு சிறந்த உதாரணம்).

சரி. தமிழில் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றனவா?

பருத்தி வீரனின் ஆரம்ப ஸீக்வென்ஸ் ஒரு சிறந்த உதாரணம். அதேபோல் கில்லி படத்தில் கதாநாயகியை மதுரையில் காக்கும் ஹீரோ என்பது Plot Point 1 ஸீக்வென்ஸ். மகாநதி பட சிட்ஃபண்ட் ஸீக்வென்ஸும் ஒரு சிறந்த ஸீக்வென்ஸ் தான். ஆனால் என்ன? தமிழில் கொஞ்சம் தேட வேண்டும்.

ஆகவே, ஸிட் ஃபீல்டின் கூற்றுப்படி, சில திரைக்கதைகளில் அவசியமான நான்கு விஷயங்கள், ஸீக்வென்ஸ்களாகவே அமையும் வாய்ப்பு இருப்பதால், பொதுவாகவே ஸீக்வென்ஸ் பற்றி அறிந்துகொள்ள அவசியம் ஏற்படுகிறது.

இன்னொரு விஷயம். திரைக்கதையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ஸீக்வென்ஸ்கள் அமையவேண்டும் என்பது இல்லை. எத்தனை ஸீக்வென்ஸ்கள் வேண்டுமானாலும் நாம் எழுதலாம்.  நமக்குத் தேவையானதெல்லாமே, எழுதப்போகும் ஸீக்வென்ஸுக்குப் பின்னாலுள்ள ஐடியா மட்டுமே. அதாவது, context மற்றும் content. சூழ்நிலையின் முக்கியத்துவம் மற்றும் உள்ளடக்கம்.
சரி. எனக்கு ஒரு தரமான ஆக்‌ஷன் படம் எழுத ஆசை. எப்படி அதில் ஸீக்வென்ஸ்களை வைப்பது?

ஸிட் ஃபீல்ட் இதுவரை ஆயிரக்கணக்கான ஆக்‌ஷன் திரைக்கதைகளைப் படித்திருக்கிறார். அவையெல்லாவற்றிலும் தவறாமல் இடம்பெற்ற விஷயம் – அத்தனை பக்கங்களும் ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியிருப்பது. டமால் டுமீல் என்று எல்லா பக்கங்களிலும் அதிரடிக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். அக்காட்சிகள் நன்றாகவே இருந்தாலும் கூட,ஒரு குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பின்னர் அவற்றையே தொடர்ந்து படிக்க/ பார்க்க இயலாது. கவனம் சிதறி விடும். ஆகவே, படம் பார்க்கும் ஆடியன்ஸின் கவனத்தை நமது திரைக்கதையின் பக்கம் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தவேண்டியதே நமது லட்சியம். இதற்கு நாம் செய்யவேண்டியது: ஒரு ஆக்‌ஷன் திரைக்கதையை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு, அந்தக் கதையின் தன்மையையும், அந்தக் கதை சொல்லவருவது என்ன என்பதையும் அறிந்துகொள்வதே.

அப்படியென்றால் என்ன?படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி ஆடியன்ஸுக்குப் புரியவைப்பது.அவர்களைப் பற்றி ஆடியன்ஸுக்கு சொல்வது. இதற்குச் சிறந்த உதாரணம்: டெர்மினேட்டர் 2. அதில் படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் வந்தாலும், ஸாரா பற்றி நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. படத்தின் இடையில் வரும் அந்த பாலைவன ரெஸ்ட் காட்சிகள் ஒரு உதாரணம். ஆகவே,எந்த ஆக்‌ஷன் திரைக்கதையை எழுதினாலும், action & character (ஆரம்ப அத்தியாயங்களில் நாம் பார்த்த இந்த இரண்டு விஷயங்களை நினைவிருக்கிறதா?) என்ற இரண்டு விஷயங்களை நாம் மறக்கவே கூடாது. சுருக்கமாக: Action என்பது கதை நகர்தல். Character என்பது கதாபாத்திரங்கள்.இந்த இரண்டுமே பக்கம்பக்கமாகவே பயணிக்கவேண்டும். ஆக்‌ஷன் அதிகரித்துவிட்டால் அது கதாபாத்திரங்களைப் பற்றிய கவனத்தை சிதறவிட்டுவிடும். அதுவே கதாபாத்திரங்களைப் பற்றி நிறைய காட்சிகள் வந்துவிட்டால், அது திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். ஆகவே இந்த இரண்டும் சமமாக இருக்கவேண்டும். கில்லி படத்தின் நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் கதாநாயகனைப் பற்றிய விபரங்கள் ஆடியன்ஸுக்கு சொல்லப்படுகின்றன அல்லவா? அப்படி.

மேலே சொன்னது, ஆக்‌ஷன் படத்துக்குப் பொதுவாக ஒரு திரைக்கதை அமைக்கும் முறை. இப்போது கொஞ்சம் உள்ளே செல்வோம்.

ஒரு ஆக்‌ஷன் படம் எவ்வகையில் நமக்கு நினைவிருக்கிறது? உதாரணத்துக்கு, ஒரு படத்தில் வரும் அதே போன்ற கார் சேஸ்தான் மற்ற படங்களிலும் வருகிறது. ஆனால், எப்படி நம்மால் டெர்மினேட்டர் 2 படத்தை மட்டும் நன்றாக நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது?

காரணம், டெர்மினேட்டர் 2வில் வரும் கதை மற்றும் கதாபாத்திரங்களின் பிரத்யேகத்தன்மை – uniqueness. இரண்டு ரோபோக்கள் ஒன்றையொன்று எதிர்ப்பது இந்தப் படத்தின் பிரத்யேகத் தன்மை. கூடவே, அதன் ஆக்‌ஷன் காட்சிகளிலெல்லாம் இந்த ரோபோக்களின் மோதல் எத்தனை சுவாரஸ்யமாக நமக்குக் காட்டப்பட்டிருக்கிறது? கில்லி படம் எப்படி நமக்கு இன்னமும் நினைவிருக்கிறது? பாட்ஷா எப்படி மறக்காமல் இருக்கிறது? தேவர் மகன் எப்படி பசுமையாக இருக்கிறது? சத்யா – வெற்றி விழா (ஜிந்தா), வேட்டையாடு விளையாடு, தளபதி – இவையெல்லாம் நமக்கு மறக்காமல் இருப்பதற்குக் காரணங்கள் என்ன? அப்படங்களின் கதாபாத்திரங்களின் பிரத்யேகமான பாத்திரப் படைப்பு மற்றும் அவை வெளிப்பட்ட காட்சிகளின் சுவாரஸ்யங்களே காரணம். இந்தப் படங்களில் உங்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் காட்சிகள் என்னென்ன? அவை எப்படி படமாக்கப்பட்டிருக்கின்றன? இந்தக் காட்சிகளை, பிற தமிழ்ப்படங்களின் இவைகளையொத்த காட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது எது? யோசியுங்கள்.


ஹாலிவுட்டின் திரைப்பட வரலாற்றில் திரைக்கதை பிரம்மாக்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் கிட்டத்தட்ட முக்கியமாக சுட்டிக்காட்டப்படுபவர்  – டேவிட் கோயெப் (David Koepp). ஹாலிவுட்டின் அந்தந்த காலகட்டத்தில் எப்போதெல்லாம் ’கல்ட்’ படங்கள் வெளியாகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றுக்குத் திரைக்கதை எழுதி அவை சூப்பர்ஹிட் ஆவதற்குக் காரணமானவர் இந்த கோயெப். இதோ சில உதாரணங்கள்:

 • Death Becomes Her
 • Jurassic Park
 • Carlito’s Way
 • The Shadow
 • Mission : Impossible
 • The Lost World
 • Snake Eyes
 • Panic Room
 • Spider-Man

எப்படி இருக்கிறது லிஸ்ட்?

(இவரைப் பற்றி தற்போது பிரதான  செய்தி என்னவெனில், இவர் இயக்கியுள்ள லேட்டஸ்ட் படமான  Premium Rush படத்தின் திரைக்கதையை வேறொருவரிடமிருந்து உருவிவிட்டார் என்பதே. ஹாலிவுட்டில் இது தற்போது ஒரு செம்மையான காண்ட்ரவர்ஸி. இதைப்பற்றி மிக விரைவில் ‘கல்ட் பதிவர் ஒருவர் எழுதுவார்).

இப்படிப்பட்ட கில்லாடி கோயெப், ஆக்‌ஷன் படங்களையே எழுதிவந்தவர். இவரது டிப்ஸ் என்ன? இதோ ஸிட் ஃபீல்டுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில முக்கியமான விஷயங்கள். கோயெப்பின் வாய்மொழியாகவே:


’ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ் என்பது, ’ஒரு மனிதன் ஓடுகிறான்’ என்ற வாக்கியத்தை எப்படியெல்லாம் வித்தியாசமாக உங்களால் எழுத முடியும் என்பதில் இருக்கிறது. இதோ – ‘அந்த மனிதன் பாறைகளின் பின்னால் ஓடிப் பதுங்குகிறான்’; ‘பாறைகளை நோக்கிப் புயல்வேகத்தில் பறக்கிறான்’; ‘பாறைகளின் மீது தொபேலென்று விழுந்து உடலெங்கும் காயப்பட்டுக்கொண்டான்’; ‘பாறைகளின் மீது கஷ்டப்பட்டு கால்களால் தவழ்ந்து அடிவயிற்றில் பாறைகளால் கிழிபட்டான்’ – எப்படியெல்லாம் எழுத முடிகிறது பார்த்தீர்களா? ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தில் வினைச்சொற்கள் (Verb) அதிகமாக இருக்கும். ’தலைதெறிக்க’, ‘பரபரக்க’, ‘குதிக்கிறான்’, ‘பாய்கிறான்’, ‘பறக்கிறான்’, ‘மோதுகிறான்’ ஆகியவற்றைப் போன்ற வினைச்சொற்கள் (Hurries, trots, slams, sprints, dives, leaps, jumps, slams)’

‘ஒரு ஆக்‌ஷன் திரைக்கதையைப் படிக்கும்போது, படத்தில் படுவேகமாக செல்லக்கூடிய காட்சி ஒன்று படிக்கையில் விறுவிறுப்பு இல்லாமல் தேமேயென்று இருக்கக்கூடும். உங்களின் ஒரே பெரிய சவால் எதுவென்றால், திரைப்படத்தில் எத்தனை வேகத்துடன் அந்தக் காட்சி பயணிக்கிறதோ, அதே வேகத்தை திரைக்கதையிலும் கொண்டு வருவதே.அதுமட்டும் நடந்துவிட்டால் நீங்கள் ஒரு வெற்றிகரமான திரைக்கதையாசிரியராக ஆகிவிடலாம். இதை எப்படி சாத்தியமாக்குவது? திரைக்கதை எழுதும்போது கடினமான நீண்ட வாக்கியங்கள் இல்லாமல், சிறிய வார்த்தைகளில் இதுபோன்ற வினைச்சொற்களை உபயோகித்து, படிக்கும் நபருக்கு மிக எளிதில் அந்தக் காட்சியைப் புரியவைக்கவேண்டும். இதுதான் ஒரே ரகசியம்’.


ஆகவே, ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸீக்வென்ஸை எப்படி எழுதுவது என்றால், அந்த ஸீக்வென்ஸுக்கு ஒரு ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை இருக்கவேண்டும். தெளிவான காரணம் தேவை. கதாபாத்திரங்களின் குணங்கள் புரியவேண்டும். அவற்றின் பிரத்யேகத் தன்மைகள் தேவை. நாம் எழுதியதைப் படிக்கும்போதே அந்தக் காட்சியின் அழுத்தமும் வேகமும் பிறருக்குப் புரியவேண்டும். அதற்கு எளிய வழி என்னவெனில், நீண்ட புரியாத பத்திகளில் அந்தக் காட்சியை விளக்காமல், எளிய வார்த்தைகளில் சுருங்கச் சொல்லி -அதேசமயம் அந்தக் காட்சி நீர்த்தும் போகாமல் – ஆடியன்ஸுக்குப் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் இருண்ட திரையரங்கில் அக்காட்சி காண்பிக்கப்படுகையில் ஆடியன்ஸும் ஸீட் நுனியில் அமர்ந்துகொண்டு கைதட்டி ஆராவாரம் செய்து அக்காட்சியை ரசிப்பார்கள்.

சரி. இதோ ஒரு உதாரணம். ஒரு ஆக்‌ஷன் காட்சி எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை என்கிறார் ஸிட் ஃபீல்ட். ஒன்றரை பக்கங்கள் மட்டுமே இடம்பெறும் இக்காட்சி, திரைப்படத்தில் கிளப்பிய சஸ்பென்ஸும் பரபரப்பும் கொஞ்சநஞ்சமல்ல. ஆயிரத்தெட்டு கடினமான வரிகளால் எழுதப்பட்டிருக்காமல், மிக மிக எளிய முறையில் இக்காட்சி எழுதப்பட்டிருப்பதை கவனியுங்கள். முதலில் ஒரிஜினல் ஆங்கிலத்தில் அப்படியே இந்தக் காட்சி இருக்கும். அதன்பின் என்னால் இயன்ற அளவு தமிழில் அக்காட்சியை மொழிபெயர்த்திருக்கிறேன். இத்தொடரைப் படித்துவரும் நண்பர்களுக்கு இது அடுத்த ஹோம்வொர்க். அஸைன்மெண்ட். ஒவ்வொரு வரியாக இக்காட்சியைப் படித்துப் பார்த்து, கற்பனை செய்துபாருங்கள். அதன்பின் படத்தையும் பார்த்து இக்காட்சி படமாக்கப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு தரமான ஆக்‌ஷன் காட்சி எழுதுவதன் சூட்சுமம் எளிதில் விளங்கி விடும்.


படம் – Jurassic Park. இக்காட்சியின் சிச்சுவேஷன் – தீவில் மின்சாரம் இல்லை. டைனோஸார் மரபணுக்களை திருடிச்செல்லும் ஒருவனால் அத்தனை பாதுகாப்பு கருவிகளும் முடக்கப்பட்டுவிடுகின்றன. இரண்டு ரிமோட் கண்ட்ரோல் மின்சார கார்களில் படத்தின் சில கதாபாத்திரங்கள், டைனோஸார்களை தீவின் மக்களிடமிருந்து பிரிக்கும் மின்சார வேலியின் வெளியே பயத்துடன் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். நினைவுவைத்துக்கொள்ளுங்கள் – எங்கும் மின்சாரம் இல்லை.

Tim pulls off the goggles and looks at two clear plastic cups of water that sit in recessed holes on the dashboard. As he watches, the water in the glasses vibrates, making concentric circles—

—then it stops—

—and then it vibrates again. Rhythmically.

Like from footsteps.

BOOM. BOOM. BOOM.

Gennaro’s eyes snap open as he feels it too. He looks up at the rearview mirror.

There is a security pass hanging from it that is bouncing slightly, swaying from side to side.

As Gennaro watches, his image bounces too, vibrating in the rearview mirror.

BOOM. BOOM. BOOM.

GENNARO
(not entirely convinced)
M-Maybe it’s the power trying to come back on.

Tim jumps into the backseat and puts the night goggles on again. He turns and looks out the side window. He can see the area where the goat is tethered. Or was tethered. The chain is still there, but the goat is gone.

BANG!

They all jump, and Lex SCREAMS as something hits the Plexiglas sunroof of the Explorer, hard. They look up.

It’s a disembodied goat leg.

GENNARO
Oh, Jesus. Jesus.

When Tim whips around to look out the side window again his mouth opens wide but no sound comes out. Through the goggles he sees an animal claw, a huge one, gripping the cables of the “electrified” fence. He whips off his goggles and presses forward, against the window. He looks up, up, then cranes his head back farther, to look out the sunroof. Past the goat’s leg, he can see—

Tyrannosaurus rex. It stands maybe twenty-five feet high, forty feet long from nose to tail, with an enormous, boxlike head that must be five feet long by itself. The remains of the goat are hanging out of the rex’s mouth. It tilts its head back and swallows the animal in one big gulp.


இப்போது இந்த ஸீக்வென்ஸின் தமிழ் வடிவம்.

டிம் தனது பைனாகுலரில் பார்ப்பதை விட்டுவிட்டு, காரின் டேஷ்போர்டில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ப்ளாஸ்டிக் கப்களைப் பார்க்கிறான். அவற்றில் தண்ணீர். மெதுவாக – மிக மெதுவாக- தண்ணீர் அதிர்கிறது. சுழிகளை உருவாக்குகிறது –

-அதிர்வு நிற்கிறது

-மறுபடியும் அதிர்கிறது. ஒரே சீராக.

காலடித் தடங்களால் அதிர்வது போல.

திடும். திடும். திடும்.

ஜென்னரோ கண்களை அகல விரிக்கிறான். அவனுக்கும் அந்த அதிர்வு தெரிகிறது. ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்கிறான்.

ரியர்வ்யூ மிரரில் ஒரு சிறிய அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் அதிர்வுகளுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கிறது.

ஜென்னரோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கண்ணாடியில் பிரதிபலிக்கும் அவனது உருவமும் அதிர்கிறது.

திடும். திடும். திடும்.

ஜென்னரோ
(முற்றிலும் சமாதானமாகாமல்)

ஒ-ஒருவேளை மறுபடியும் மின்சாரம் வரப்போகிறது என்று நினைக்கிறேன்

டிம் மறுபடி காரின் பின்னிருக்கையில் குதித்து, கண்ணாடியை அணிந்துகொள்கிறான். அவனுக்குப் பக்கவாட்டில் இருக்கும் காரின் ஜன்னலைப் பார்க்கிறான். அங்கே வெளியேதான் ஆடு கட்டப்பட்டிருக்கிறது. அல்லது கட்டப்பட்டிருந்தது. கயிறு மட்டும் இருக்கிறது. ஆடு காணவில்லை.

தடால்!

அத்தனை பேரும் அலறுகிறார்கள். காரின் கூரையின்மேல் எதுவோ கனமாக விழுந்திருக்கிறது. பலமாக. கூரை உறுதியான கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால், அனைவரும் மேலே பார்க்கிறார்கள்.
அது ஒரு பிய்ந்த ஆட்டின் கால்.

ஜென்னரோ
கடவுளே.  எங்களைக் காப்பாற்று

டிம் மறுபடியும் பரபரப்புடன் பக்கவாட்டு ஜன்னலில் பார்க்கிறான். அவனது வாய் பயத்தில் சத்தமில்லாமல் பிளக்கிறது. கண்ணாடியினூடே ஒரு பிரம்மாண்டமான கூரியநகங்கள் உள்ள முன்னங்கால் தெரிகிறது. அந்த முன்னங்கால், ”மின்சார” வேலியை அலேக்காக பிய்த்துக்கொண்டிருக்கிறது. டிம் கண்னாடியை வீசுகிறான். காரின் ஜன்னலில் முகத்தை அழுத்திக்கொண்டு, மேலே …மேலே.. பார்க்க முயல்கிறான். மேலே… மேலே அண்ணாந்து பார்க்கும் டிம் கூரையில் உள்ள ஆட்டின் காலைத் தாண்டி சிரமப்பட்டு முகத்தை உயர்த்திப் பார்க்க..அவன் கண்ணுக்கு முன்..

டைரான்னோஸாரஸ் ரெக்ஸ். கிட்டத்தட்ட இருபத்தைந்து அடி உயரம். நாற்பதடி நீளம். அதன் பிரம்மாண்டமான தலை மட்டுமே ஐந்தடி இருக்கலாம். அதன் வாயின் ஓரங்களில் அந்த ஆட்டின் உடலின் பிய்ந்த பாகங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. தனது தலையை ஒரு ஆட்டு ஆட்டி, தொங்கிக்கொண்டிருக்கும் ஆட்டின் உடலை ஒரே அசைவில் லபக்கென்று விழுங்குகிறது அந்த டைனோஸார்.


எழுதப்பட்டிருக்கும் அதே விதத்தில் தமிழில் கொடுக்க முயன்றிருக்கிறேன்.

இந்த ஸீக்வென்ஸை ஸிட் ஃபீல் அக்குவேறு ஆணிவேறாக அலசுவது… அடுத்த கட்டுரையில். அதுவரை..

தொடரும் . .

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

10 Comments

 1. வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன்..

  David Koepp பத்தி நேத்து தினகரன் வெள்ளிமலரில் சிவராமன் எழுதியிருந்தார். படிக்கலைனா……..படிச்சு பாருங்க…..ஸ்க்ரிப்ட் டாக்டர்ன்னு சொல்லியிருந்தாரு….ஸ்க்ரிப்ட்கள பட்டிபாத்து டிங்கரிங் செய்வதில் அவர் எக்ஸ்பெர்ட்ன்னு…

  Reply
 2. // இவரைப் பற்றி தற்போது பிரதான செய்தி என்னவெனில், இவர் இயக்கியுள்ள லேட்டஸ்ட் படமான Premium Rush படத்தின் திரைக்கதையை வேறொருவரிடமிருந்து உருவிவிட்டார் என்பதே. ஹாலிவுட்டில் இது தற்போது ஒரு செம்மையான காண்ட்ரவர்ஸி.//

  அப்படி எதுனா கோர்ட்ல தீர்ப்பு சொல்லி – மிகப் பெரியஅளவுக்கு நஷ்டஈடு தரனணும்ன்னு சொன்னா………ரொம்ப ரொம்ப சந்தோசப்படுவேன். இவிங்க எத்தையோ ஸ்க்ரிப்ட்கள உருவி அடிச்சிருக்காங்க. ஆனா தனகுன்னு வரும்போது காபிரைட் ன்னு பிரச்சன பண்ணுவாங்க. யூடியுப்ல விடியோ கூட ஷேர் பண்ண முடியல…நல்லா வேணும்.

  // இதைப்பற்றி மிக விரைவில் ‘கல்ட் பதிவர் ஒருவர் எழுதுவா //

  நா ஒண்ணியும் எழுதுறதா சொல்லலையே…..என்னை மிஞ்சிய கல்ட்/பி. பதிவர் யார் இங்க இருக்கா ?

  Reply
 3. அசத்தலான மொழிபெயர்ப்பு

  Reply
 4. pl infrom me the remaning parts after 22..

  Reply
 5. Vikram

  please continue after parts sir.. i.m waiting for that…

  Reply
 6. balamurali

  அண்ணா, எப்போது இந்த தொடரை தொடர்வீர்கள்? மிகுந்த ஆவலுடன் உள்ளோம்/உள்ளேன்..

  Reply
  • Continuing very soon friends. Very soon. Thanks.

   Reply
   • sankara narayanan

    sample script ethum iruka boss

    Reply
 7. sudharshan

  Please continue this after 22 brother

  Reply
 8. KRISHNA

  Need ur book details abt screenplay writing

  Reply

Join the conversation