பிணந்தின்னிகளும் நானும் – 2 – இஸங்கள் நான்கு

by Rajesh December 13, 2012   Book Reviews

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

சென்ற கட்டுரையில் (பின்)நவீனத்துவம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். ஃபேஸ்புக்கிலும் இங்கும் பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பர்கள் அந்தக் கட்டுரை புரிவதற்குக் கடினமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தனர். ஆகவே இந்தக் கட்டுரையில் இன்னும் எளிமையாக நண்பர்களைக் குழப்பப் பார்க்கிறேன்.

கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அது இங்கே:

[quote]ரொமான்ற்றிசிசம் -> மார்டனிசம் -> போஸ்ட்மார்டனிஸம் -> நியோரொமான்ற்றிசிஸம்’ என்று இந்த வரிசையில் எழுதினால் இன்னும் எளிதாகப் புரியும்; பயனுள்ளதாகவும் அமையும். எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கினால் நல்லது.[/quote]

அவர் சொல்லியிருக்கும்படி பார்ப்பதற்கு முன்னர், நேற்றே சொல்லியிருந்த Death of the Author என்பதைப்பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். இதுவும் எனது புரிதலின்படிதான். தவறாக இருக்கும்பட்சத்தில் எது சரி என்று விஷயம் தெரிந்தவர்கள் திருத்தினால் மகிழ்வேன்.

ஒரு படைப்பு – ஒரு புத்தகம் – நம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தை திறப்பதற்கு முன்னரே, ‘இது சாரு எழுதியது; இது சுஜாதா எழுதியது; இது ஜெயமோகன் எழுதியது’ என்று நமக்குத் தெரிகிறது. எனவே, அவர்களைப்பற்றி ஒரு புரிதல் ஏற்கெனவே நம்முள் இருப்பதால், அப்புத்தகத்தைத் திறந்து படிக்கும் முன்பாகவே நமக்கு சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுவிடுகின்றன. குறிப்பிட்ட எழுத்தாளரின் ஸ்டைல், அவரது எழுத்தின் தன்மை, அந்த எழுத்தாளரின் அரசியல் கோட்பாடுகள், அவரது அழகியல், அவரது ஜாதி, மதம், அவரது வாழ்க்கை பற்றிய செய்திகள் – இத்தனை விஷயங்களும், ஒரு புத்தகத்தின் அட்டையில் எழுதிய எழுத்தாளரின் பெயரைப் பார்த்ததும் நமக்குத் தெரிந்துவிடுகின்றன. ஆகையால் அந்தப் புத்தகத்திலும் இவை இருக்கும் – இருக்கக்கூடும் – என்ற எண்ணமே, அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே நமக்குள் ஒருவித விமர்சனத்தை உருவாக்கிவிடுகிறது.

உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ரஜினி படம் என்ற அறிவிப்பு வந்தவுடன், அப்படத்தில் ‘இன்னின்ன காட்சிகள் இருக்கும்; இப்படிப்பட்ட வசனங்கள் இருக்கும்’ என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது அல்லவா? அதேபோல் கமல் படத்திலும் அப்படித்தான். விஜய், அஜீத், சிம்பு ஆகிய அல்லாருடைய படங்களிலுமே இப்படித்தான். எனவே, படம் பார்ப்பதற்கு முன்னரே நம்முள் ஒருவித கருத்து உருவாகிவிடுகிறது.

இப்படி ஒரு எழுத்தாளரைப் பற்றிய முன்முடிவு, அந்த எழுத்தைப் படிக்க ஒருவித தடையை உருவாக்குகிறது.

ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ரோலான் பார்த் (Roland Barthes), இப்படி இருத்தல் கூடாது என்று ஒரு தியரியை முன்வைத்தார். ஆண்டு – 1967. அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது (இவரைப் பற்றி சாரு நிறைய எழுதியிருக்கிறார்). பார்த்தின் கட்டுரைப்படி, படைப்பைப் பற்றிய புரிதல், ஆசிரியரின் மூலமாக இல்லாமல், படிக்கும் வாசகனின் மூலமாகவே இருக்கவேண்டும். அதாவது, படைப்பாளியிடமிருந்து ஒரு இலக்கியப் படைப்பை வாசகன் பிரித்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்தும் விடுதலை பெறும் (Wikipedia).

[quote]எழுத்து என்பது பலதரப்பட்ட கலாச்சார மையங்களிடமிருந்து தருவிக்கப்பட்ட ஒரு நூற்கண்டு. ஒரே ஒரு தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து பெறப்பட்டது அல்ல. ஒரு படைப்பின் அர்த்தம், எழுத்தாளனின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் இருந்தோ அல்லது அவனது ரசனையிலிருந்தோ உருவாகாமல், படிக்கும் வாசகனின் புரிதலிலிருந்தே உருவாகிறது.[/quote]

[quote]”text is a tissue [or fabric] of quotations,” drawn from “innumerable centers of culture,” rather than from one, individual experience. The essential meaning of a work depends on the impressions of the reader, rather than the “passions” or “tastes” of the writer; “a text’s unity lies not in its origins,” or its creator, “but in its destination,” or its audience.[/quote]

 

இப்படி யோசித்தால் – எழுத்தாளன் என்பவன் இங்கே தனது எழுத்தால் படிக்கும் வாசகனின் மீது செல்வாக்கு செலுத்தாமல், ஆசிரியனாக அதிகாரம் செலுத்தாமல் (author = authority)- வெறும் எழுதுபவனாக (scriptor) மட்டுமே இருக்கிறான்.

இதனால் எழுத்தாளன் என்பவன் ஒரு படைப்பை உருவாக்க மட்டுமே செய்கிறான். அதனை விளக்குவது அவனது வேலையாக இருப்பதில்லை. இதனாலேயே எழுத்தாளன் என்பவன் எழுத்தோடு கூடவே தானும் பிறக்கிறான். ஒவ்வொரு வாசிப்பு அனுபவத்தின்போதும் அந்தப் படைப்பு புதிதாகப் படைக்கப்படுகிறது. காரணம் வாசகனின் புரிதலில் மட்டுமே அந்தப் படைப்பின் பொருள் அடங்கியிருக்கிறது.

இதுதான் Death of the Author. எனக்குப் புரிந்ததை வைத்து. சுருக்கமாக – ஒரு படைப்பு என்பது அதன் ஆசிரியரால் படிக்கும் வாசகனின் மேல் திணிக்கப்படக்கூடாது (Authority). மாறாக, அந்த வாசகன், அவனது புரிதலை வைத்தே அந்தப் படைப்பை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அந்தப் படைப்பு பிறக்கிறது. ஒவ்வொருமுறையும் ஒரு புதிய அர்த்தம் வெளிப்படுகிறது. இதனால் அதனை எழுதிய ஆசிரியன் அங்கே இல்லை (காரணம், அவனது கொள்கைகள் அந்தப் படைப்பில் இல்லை).

The author’s authority over the reader dies.

[divider]

நேற்று மாடர்னிஸம் & போஸ்ட் மாடர்னிஸம் ஆகியவற்றைப் பார்த்தோம். இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியபடி, கவிஞர் ராஜசுந்தரராஜன் சொல்லிய மற்ற இரண்டு இஸங்கள்.

முதலில் ரொமாண்டிஸிஸம்.

இதுபற்றி எம்.ஜி சுரேஷ் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஆகவே அதைப் படித்தாலே ரொமாண்டிஸிஸத்தைப் புரிந்துகொள்ளமுடியும். இதோ இந்தத் தொடரில்:

‘1787ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வந்த போது சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போதுதான் மனிதன் பிறந்தான் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அது வரை மனிதன் என்ற மாண்பை மனிதன் பெற்றதில்லை. மன்னன் பெரியவன். மக்கள் அவன் முன் உடைமைகள் அல்லது கீழ்ப்படிதலுள்ள (Subjects) பிராணிகள் மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சிதான் சமத்துவம், விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம் போன்ற புதிய சிந்தனைகளைப் பிறப்பித்தது. அது வரை பெண் என்பவள் இரண்டாம்தரக் குடிமகளாகவும், ஆண்களின் போகப்பொருளாகவும் மட்டுமே இருந்தாள். ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்து தோன்றியதும் அப்போதுதான். அத்தகைய புதிய சூழ்நிலையில்தான் ஒரு ப்திய கோட்பாடு பிறந்தது. அதன் பெயர் ரொமாண்டிசிசம். இதைத் தமிழில் மிகையுணர்ச்சிக் கோட்பாடு எனலாம்.

மறுமலர்ச்சி யுகம், பரோக் யுகம், அறிவொளி யுகம் ஆகியவை கடந்து போன பின் வந்த ரொமாண்டிக் யுகம் மனித சிந்தனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதான் வாழ்க்கை பற்றிய மனிதனின் கடைசி அணுகுமுறை எனலாம். ‘உணர்தல்’, ’கற்பனை’, ‘அனுபவம்’, ‘ஏக்கம்’ ஆகியவை ரொமாண்டிக் யுகத்தின் சொல்லாடல்களாகும்.

இதுவரை அறிவின் வெளிப்பாடு என்பது தத்துவவாதிகளின் கையில் இருந்தது. ரொமாண்டிக் யுகம் அதை மாற்றிப்போட்டது. அறிவின் வெளிப்பாடு என்பது கலைஞர்களின் கைக்கு வந்தது. எந்த ஒரு சிந்தனையையும் ஒரு தத்துவவாதியை விட கலைஞனால் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று கூறியது.

ஜெர்மன் தத்துவவாதியான இம்மானுவேல் காண்ட் ரொமாண்டிசிசத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். ‘சுய அனுபவவாதத்தின் மூலம் அறியப்படும் அறிவே உண்மையான அறிவு’ என்பது அவரது கொள்கை. எனவே சுயம் போற்றப்பட்டது. மனிதன் கொண்டாடப்பட வேண்டியவன் ஆனான். தன்முனைப்பு (Ego) வணங்கப்பட வேண்டியதாயிற்று. காண்டின் கருத்தை ஷில்லர் என்ற ஜெர்மன் கவி வளர்த்தெடுத்து, ‘கலை மட்டுமே நம்மை வெளிப்படுத்த முடியாததைக் கூட வெளிப்படுத்தும் தன்மைக்குக் கிட்டத்தில் கொண்டு போகிறது. எனவே, கலைஞன் கடவுளுக்குச் சமம்’ என்றார். இதன் விளைவாக கலைஞன் படைப்பாளி ஆனான். கடவுள் படைக்கிறார்; படைப்பாளியும் படைக்கிறான். எனவே படைப்பாளியும் ஒரு கடவுளே’ என்பது ரொமாண்டிசிசத்தின் கோட்பாடு எனலாம். ‘கலைஞன் என்பவன் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியதில்லை; சோம்பலே கலைஞனின் லட்சியம்’ என்றெல்லாம் ரொமாண்டிசிசத்தின் கோட்பாடுகள் நீட்சியடைந்தன.

ஒரு கலைஞன் தான்தோன்றியாக வாழலாம். ஒழுக்கம் மீறலாம். அதற்கான உரிமை அவனுக்கு உண்டு. அவனை அவனது கலைத்திறமைக்காகக் கொண்டாட வேண்டும். என்றெல்லாம் ரொமாண்டிசிசம் தனது கோட்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே போயிற்று. கலைஞனின் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் சுழன்றது. மாபெரும் கலைஞர்களான பீத்தோவன், பைரன், ஷெல்லி போன்றவர்கள் ரொமாண்டிசிசிஸ்டுகள்.

இதுவரை வந்த கருத்தியல்கள் கடவுளைக் கொண்டாடின; அல்லது நிராகரித்தன. ரொமாண்டிசிசமோ கடவுளைப் பொருத்தவரை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்தது. கடவுள் உண்டு; அவருக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் ஒளி வீசும் பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இருண்ட பக்கம் என்று புது விளக்கம் கொடுத்தது’.

இதன்பின் ரொமாண்டிஸிஸ கோட்பாடுகளைத் தகர்த்தது – நவீனத்துவம். நவீனத்துவத்துவத்துக்குப் பின்னர் பின்நவீனத்துவம். இவ்விரண்டையும் சென்ற கட்டுரையில் கண்டோம்.

அடுத்ததாக, நியோரொமாண்டிஸிஸம்

இதைத் தெரிந்துகொள்ள, நாச்சுரலிஸம் என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கவேண்டும். இணைய உதவியுடன் – இதோ நாச்சுரலிஸம்.

ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி பாவிப்பது என்று ஒன்று உண்டு. மேலே ரொமாண்டிஸிஸத்தில் படைப்பாளியைச் சுற்றி ஒரு ஒரு ஒளிவட்டத்தை ஸ்தாபித்ததைக் கண்டோம். அப்போதே அந்தப் படைப்பும் இப்படி கற்பனைகள் ஏற்றப்பட்டு அதன் இடம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிராக, நாச்சுரலிஸம் உருவானது. இங்கே எந்த ஒளிவட்டமும் இல்லை. அதாவது, ஒரு படைப்பு – இயற்கையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கூடவே, நேர்மை, எளிமை, இயல்புத்தன்மை  போன்ற வார்த்தைகளை சுவீகரித்துக்கொண்டது நாச்சுரலிஸம்.இயற்கை அழகு போன்றவற்றை படைப்புகளில் அப்படியே வெளிப்படுத்துதல் நாச்சுரலிஸம்.

இந்த நாச்சுரலிஸத்துக்கு ஒரு எதிர்வினையாக உருவானதே நியோ ரொமாண்டிஸிஸம். இங்கு என்ன நடக்கிறது என்றால், ரொமாண்டிஸிஸத்தின் கூறுகளை அப்படியே எடுத்துக்கொண்டு, எண்ணங்களின் தாக்கத்தையும், வாழ்வின் புதிர்களையும் அதனுடன் சேர்ப்பது. உதாரணத்துக்கு, அமானுஷ்யம், பயம், அன்பு, மலைத்து நிற்றல் போன்ற குணநலன்களை விரிவாக்கியது. இன்னமும் சொல்லவேண்டும் என்றால்,  தேசத்துக்காகத் தியாகம் செய்பவர்களை ஹீரோக்களாக வழிபடுதல், தூய காதல் போன்றவைகள்.

பத்தொன்பதாம் நூற்றாணில் உருவெடுத்தாலும், இன்னமும் நாச்சுரலிஸம் (பின்)நவீனத்துவங்களுக்கு ஒரு எதிர்வினையாக இருந்துகொண்டிருக்கிறது என்பதை இணையத்திலிருந்து அறிகிறோம்.

[divider]

இப்படியாக, பின்நவீனத்துவத்தைப் பற்றி ஆரம்பித்த கட்டுரை, சில இஸங்களைத் தொட்டுக்கொண்டு, Death of the Author என்பதையும் பார்த்துவிட்டு இங்கே முடிகிறது.

சரி – திடீரென்று இந்தக் கட்டுரை ஏன்? எனக்கு இலக்கியவாதியாக மாற ஆசை வந்துவிட்டதா? அப்படியென்றால் மற்ற தொடர்களின் கதி?

உண்மையில் எனக்கே இவைகளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்ததால், நான் கற்றுக்கொண்டவற்றைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று தோன்றியதாலேயே இந்தக் கட்டுரைகள். கூடவே, நாளை வரப்போகும் இன்னொரு பதிவுக்கு இவையெல்லாம் ட்ரெய்லர்.

அது என்ன பதிவு? எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு ஒன்றைப்பற்றியதே அது. நாளை அதனைப் பார்த்துவிட்டு, திரைக்கதை, ஏலியன்கள் போன்றவற்றைக் கவனிக்க ஆரம்பிக்கலாம்.

பி.கு – இந்தக் கட்டுரைகளில் ஏதேனும் பிழை இருப்பின், விவரம் அறிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம். தெரிந்துகொள்வேன்.

 

Image courtesy – http://www.uh.edu/engines/romanticism/brighton.jpg

 

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

9 Comments

 1. //இந்தக் கட்டுரைகளில் ஏதேனும் பிழை இருப்பின், விவரம் அறிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம். தெரிந்துகொள்வேன்//
  நீங்க எழுதி இருந்த விஷயத்துலையே எனக்கு புரியாத விஷயம் இதுதான்…..முடியல…ஆனா நான் ரொமாண்டிசிசம் வகையில இருக்கேன் அப்படிங்கிறதும், நேச்சுரளிசத்துக்கும் வரணும் அப்படிங்கிறதும் மட்டும் நல்லா புரிஞ்சது. ஆமா!!!!!நாளைக்கு என்ன எழுதப் போறீங்க? எனக்கு மட்டும் சொல்லுங் ப்ளீஸ்!!!

  Reply
 2. ராஜசுந்தரராஜன்

  எடுத்துக்காட்டுகள் (சில கவிதை வரிகளாவது) தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.

  Reply
  • Yes please, examples will help alot.

   Reply
 3. nalla vishayam naalu therinjukittaen! nandri! thamizhil eppadi karuthu type seivathu? please, help me.

  Reply
 4. nalla irundhadhu. sila doubts iruku , neenga clear pannuveenganu namburen. 1.death of the author endral ethu varai oru eluthalar enbavarin adayalangalai thavirthu punyabadum oru ilaakiyam endreergal..ok apdi paakum podhu agatha christie in ” The murder of roger ackroyd ” endra novel athu varai vandha anaitha detective novelgalin thanmayil irundhu vidhyasa pattu oru mudivai kuduthu irupar athu ponra novel galuku ” death of the genre ” or ” new phase of the genre ” ponra varathaigal unda…
  2.Bong joon ho voda rendu padangal “Memories of the murder ” and “The host”.. ithil modernisation endra nilai “Memories of murder”uku sollalama , yen yendral andha padam 1980’s la south korea la nadakura vishayangala pathi edutha padam,, athe pol “the host”, american militatry south koreavil seyum thavaran seyalagalai, oru kadal mirugam matrum oru kudumbathin pasam ponra sentiment vishayngal moolam solli irupar ithai post modernisation endru sollalama.. yen yendral nan ipadi than purindhu vauthu irukiren….

  Reply
 5. good article. Now you’ve made me to read more on this. There is a course in coursera on Modern and Post modern

  Reply
  • Rajesh Da Scorp

   That’s super cool 🙂

   Reply

Join the conversation