மொத்தக் கதைகள் 36 – 3

by Rajesh April 16, 2013   Cinema articles

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

சென்ற மூன்று கட்டுரைகளை இங்கே படித்துக்கொள்ளலாம். படித்தால் இந்தக் கட்டுரை புரியும் வாய்ப்புகள் அதிகம்.

1. மொத்தக் கதைகள் 36
2. மொத்தக் கதைகள் 36 – 1
3. மொத்தக் கதைகள் 36 – 2

[divider]

இப்போது, இந்தக் கட்டுரைக்குள் செல்லுமுன்னர் ஒரு சிறிய விளக்கம். சென்ற கட்டுரையின் பின்னூட்டத்தில் நண்பர்கள் கார்த்திக் நாகேந்திரன் & விருச்சிகம் ஆகியவர்களின் பின்னூட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருந்தனர். அதன் விளக்கமே இது.

இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு விஷயத்தை நான் தெளிவாக எழுதவில்லை. அதாவது, போல்டி அவரது புத்தகத்தை எழுதியபோது மொத்தமே 36 கதைகள் தான் இருக்கின்றன என்று சொல்லவில்லை. அவர் சொல்லியது என்னவென்றால், எந்தக் கதையாக இருந்தாலும் (நாடகங்கள் மற்றும் கவிதைகளில் வரும் கதையையும் சேர்த்துதான் கதை என்று சொல்கிறேன்), அவைகளை மொத்தம் முப்பத்தாறு சிச்சுவேஷன்களில் அடக்கிவிடலாம் என்று சொல்லியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாவலிலோ அல்லது நாடகத்திலோ இந்த சிச்சுவேஷன்கள் (அதாவது சூழ்நிலைகள்) பலவும் இடம்பெறலாம். மொத்தம் ஒரே ஒரு சிச்சுவேஷன்தான் இடம்பெறவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இடம்பெறும் சிச்சுவேஷன்களை ஆராய்ந்துதான் அவரது புத்தகத்தையே போல்டி எழுதியிருந்தார். எனவே, மேற்கொண்டு படிக்கும் நண்பர்கள் இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.

[divider]

Situation 11: The Enigma – புதிர்

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் மூன்று.

கதாபாத்திரம் 1: புதிரை உருவாக்குபவர்
கதாபாத்திரம் 2: புதிரைத் தீர்த்து வைப்பவர்
புதிர்.

எத்தனை நாவல்களில் ஏதோ ஒரு மர்மத்தைத் தீர்ப்பதற்காக போராடும் கதாபாத்திரங்களை சந்தித்திருக்கிறோம்? ஒரு கொலை – அதனைத் தொடர்ந்து துப்பறிதல், அல்லது ஆள் கடத்தல் – அதனைத் தொடர்ந்து கடத்தியவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவை இந்த சிச்சுவேஷனில் அடக்கம். ஏதேனும் ஒரு புதிரை கதையின் பிரதான கதாபாத்திரங்கள் தேடிச்சென்று அதன் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பதே இந்த சிச்சுவேஷன்.

இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.

1. மரணத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு நபரையோ அல்லது சில நபர்களையோ கண்டுபிடித்து விடுவித்தல் (இந்த சூழ்நிலையில் சில சமயம் நபர்கள் அல்லாமல் ஏதேனும் ஒரு பொருளைக் கூட தேடும் நிலை வரலாம். அந்த சூழ்நிலையில் மரணம் என்பது இருக்காது. கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ ஏதேனும் ஒரு பொருளைத் தேடும் சிச்சுவேஷனே இது).

2.
A. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரை கண்டுபிடித்தல். புதிரை அவிழ்த்தால் மரணம் தவிர்க்கப்படும் (புதிரைக் கண்டுபிடிக்கும் நாயகனின் மரணமாகக் கூட அது இருக்கலாம்).
B. மரணத்தில் முடியக்கூடிய ஒரு புதிரைக் கண்டுபிடித்தல். ஆனால் இந்த சிச்சுவேஷனில், புதிரை சொல்வதே அந்தக் கதையின் கதாநாயகிதான். கதாநாயகன் அந்தப் புதிரை அவிழ்க்காவிடில் அவனது மரணம் நிகழும் (ராஜா ராணி கதைகளில், யாராவது ஒரு இளவரசி எதாவது ஒரு புதிரை சொல்வாள். அதனைக் கண்டுபிடிக்க வருபவர்கள் தவறாக விடை சொல்லி சிரச்சேதம் செய்யப்படுவார்கள். இறுதியில் கதாநாயகன் வந்து சரியாகக் கண்டுபிடித்து இளவரசியை மணந்துகொள்வான்).

இதில் இன்னொரு மாறுபாட்டை, வில்லனை அறிமுகப்படுத்துவதன்மூலம் நுழைக்கலாம். புதிரை அவிழ்க்கும் பாதையில் வில்லனின் இடையூறுகள். பழைய தமிழ்ப்படங்களான ‘குலேபகாவலி’ போன்றவை இந்த ரீதியைச் சேர்ந்தவையே.

சில சமயங்களில், கதாநாயகியின் புதிரை ஏற்கும் கதாநாயகன், பதிலுக்கு தன்னுடைய பெயரை அவள் கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல்வதுண்டு. இதெல்லாம் பழங்கால ஐரோப்பிய நாடகங்கள் மற்றும் கதைகள் என்பதை மறக்கவேண்டாம். போல்டி கொடுக்கும் உதாரணங்கள் பலவும் சோஃபோக்ளிஸ் எழுதிய நாடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இதுவே மூன்றாவது பிரிவு.

3.
A. கதாநாயகியிடம் புதிரைக் கேட்கும் ஹீரோவின் பெயரைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்
B. பாலினத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி வரும் புதிர்கள்
C. மனநிலையை அறிய நடத்தப்படும் பரிசோதனைகள் (சைக்யாட்ரிஸ்ட்கள் கிரிமினல்களை ஆராய்தல்)

Situation 12: Obtaining – விரும்பியதை அடைய நினைத்தல்

பல சமயங்களில், நமக்கு எதாவது ஒரு பொருளோ வேலையோ பிறரிடமிருந்து தேவைப்படும். அப்போது அவர்களை நாம் அணுகுவதுண்டு. ஆனால், அவர்கள் நமது கோரிக்கைக்கோ மிரட்டலுக்கோ சம்மதிக்காவிட்டால்? நமக்குத் தேவையான பொருளை அவர்கள் நமக்குத் தர மறுத்தால்? பிரச்னைதான். நம்மால் முடிந்தால் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கலாம். அல்லது அவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் இருந்தால், மூன்றாவது நபர் அல்லது ஒரு குழுவிடம் சொல்லி, அவர்கள் மூலம் அந்தப் பொருளை அடைய நினைக்கலாம். இந்த மூன்றாவது நபரோ குழுவினரோ மத்தியஸ்தம் செய்பவர்களாக இருப்பார்கள்.

இப்படி இரண்டு தரப்புகளுக்கிடையே ஒரு பொருளை முன்வைத்து நடக்கும் போராட்டமே இந்த பனிரண்டாவது சிச்சுவேஷன்.

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான விஷயங்கள் இரண்டு வகைப்படும்.

ஒன்று – பொருளை அடைய நினைப்பவர் & பொருளைத் தர மறுப்பவர்
இரண்டு – மத்தியஸ்தம் செய்பவர் மற்றும் ஒருவருக்கொருவர் சண்டையிடும் இரண்டு தரப்புகள்

இந்த சிச்சுவேஷன் மூன்று வகைப்படுகிறது.

1. சூழ்ச்சியாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ ஒரு பொருளை அடைய நினைத்தல்
2. பேச்சுத்திறமை அல்லது வாதத்திறமையினால் மட்டுமே ஒரு பொருளை இறுதியில் அடைதல்
3. மத்தியஸ்தம் செய்பவர் ஒருவரை வைத்துக்கொண்டு வாதிட்டு ஒரு பொருளை அடைதல்

இந்த பனிரண்டாவது சிச்சுவேஷனில் இன்னொரு சிறிய மாறுபாடும் இருக்கிறது என்கிறார் போல்டி. அதாவது, ஒரு பொருளை இன்னொருவரிடமிருந்து அடைய முயற்சிக்கும்போதே அவரது மனதையும் கவர்ந்து வசப்படுத்திக் கொள்ளுதல். இந்த சிச்சுவேஷனில் இயல்பாகவே ஒருவர் ஆண் – இன்னொருவர் பெண் என்ற கதாபாத்திர உருவாக்கம் கதைக்கு வலு சேர்க்கிறது அல்லவா?

Situation 13: Enmity of Kinsmen – உறவினர்களின் பகை

உறவினர்களிடையே பகை என்பது எப்போதும் பல கதைகளிலும் திரைப்படங்களிலும் இடம்பெறும் கரு. ஒரு குறிப்பிட்ட உறவினர் இன்னொருவரையோ அல்லது பல உறவினர்களையோ வெறுப்பார். அவர்களிடையே சண்டை நடைபெறும். உதாரணத்துக்கு நமது மகாபாரதம். இதில் ஒரு உறவினருக்கோ அல்லது பல உறவினர்களுக்கோ எதிராகப் பல உறவினர்கள் ஒன்றுசேர்வதும் ஒரு பகுதி.

இந்த சிச்சுவேஷனைப் பற்றி போல்டி சொல்கையில் மூன்று விதிகளை எப்போதும் முன்னுணர வேண்டியிருக்கும் என்கிறார். அவையாவன:

ஒன்று: உறவினர்கள், பகையின் கீழ் ஒன்றாகத் திரளும்போது, எத்தனைக்கெத்தனை ஒன்றுபடுகிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களது வெறுப்பின் வெளிப்பாடு ஆபத்தாகவும் கொடூரமானதாகவும் இருக்கும்.

இரண்டு: வெறுப்பு என்பது இரண்டுபுறமும் இருந்தால், இந்த சிச்சுவேஷன் பலம் பெறும். இல்லையேல் ஒருபக்கம் வில்லன்களாகவும் மற்றொருபக்கம் அவர்களிடம் கஷ்டப்படுபவர்களாகவும் ஆகிவிடும். இந்த நிலைக்கு உதாரணமாக 5,7,8 மற்றும் 30வது சிச்சுவேஷன்களை உதாரணமாகக் கொடுக்கிறார் போல்டி (5.Pursuit, 7. Falling prey to cruelty or misfortune, 8. Revolt & 30. Ambition).

மூன்று: ஒற்றுமையாக இருக்கும் உறவினர்களிடையே வெறுப்பை உண்டுசெய்து அவர்களின் உறவுப்பிணைப்பை அறுத்து எறிந்து அவர்களை பரம்பரை எதிரிகள் ஆக்குவதற்கான காரணம் ஒன்றை உருவாக்குதல். இந்தக் காரணம் சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்படி ஒரு காரணத்தை உருவாக்குவதும் அவ்வளவு எளிதல்ல.

இப்போது, இந்த சிச்சுவேஷனின் பல வகைகளைப் பார்ப்போம்.

1. சகோதரர்களிடையே நிலவும் வெறுப்பு

A. ஒரு சகோதரனை பல சகோதரர்கள் வெறுத்தல்
B. சகோதரர்கள் ஒவ்வொருவரும் பிறரை வெறுத்தல் (இந்த வகையில், இருபுறமும் ஒருவரையொருவர் வெறுப்பதைக் கண்டு அல்லலுறும் தாயையும் புதிய கதாபாத்திரமாக சேர்க்கலாம்)
C. உறவினர்களிடையே நிலவும் பகை. இந்தப் பகைக்கு, சுயநலமே காரணம்.

2. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் பகை

A. மகன் தந்தையை வெறுத்தல்
B. தந்தையும் மகனும் ஒருவரையொருவர் இருபுறமும் வெறுத்தல்
C. மகள் தந்தையை வெறுத்தல்

3. தாத்தா, பேரனை வெறுத்தல் (இதிலேயே தாய்மாமா, மருமகனை வெறுப்பதும் வந்துவிடுகிறது)
4. மாமனார் மருமகனை வெறுப்பது
5. மாமியாருக்கு மருமகளின் மீது உள்ள வெறுப்பு
6. குழந்தைகளைக் கொல்லுதல்

உறவுநிலைகள் பலவகைப்படுவதால், இந்த ‘உறவினர்களின் பகை’ என்ற சிச்சுவேஷனும் உள்ளுக்குள் பல வகைப்படுகிறது. சகோதரர்களின் பகை என்பதை சகோதரிகளின் பகை என்றும் எடுத்துக்கொள்ளலாம். தாய் மகளை வெறுப்பது, சகோதரன் சகோதரியை வெறுப்பது போன்ற பல உதாரணங்கள் இதில் அடங்கும். போலவே, சகோதர சகோதரிகளின் பகையினால் மனம் உடைந்து கஷ்டப்படும் பெற்றோர் என்ற புதிய கோணத்தையும் இங்கே கொண்டுவரலாம்.

Situation 14: Rivalry of Kinsmen – உறவினர்களிடையே நிலவும் போட்டி & பொறாமை

டக்கென்று கவனித்தால் இந்த சிச்சுவேஷன் இதற்கு முந்தைய சிச்சுவேஷன் போலவேதான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இந்த சிச்சுவேஷனில் இரண்டு உறவினர்களுக்கு இடையே நிலவும் போட்டியும் பொறாமையும் இருவருக்கும் பொதுவான ஒரு பொருளைச் சார்ந்து இருக்கும். உதாரணம் – ஒரு பெண்ணை சார்ந்து இருக்கும். அதாவது, ஒரு பெண்ணுக்காக இருவரும் அடித்துக்கொள்ளுதல். கூடவே, இதில் அந்தப் பெண், ஒரு உறவினரையே விரும்புவாள். இன்னொரு உறவினரை வெறுப்பாள். பெண்ணுக்குப் பதில் சில நேரங்களில் ஆணும் இருக்கலாம். அல்லது சில நேரங்களில் அந்தப் பொதுவான பொருள், ஒரு அஃறிணையாகவும் இருக்கலாம்.

இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படுகிறது.

1.
A. ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனின்மீது வன்மம் கொண்டு அவனை விரோதித்தல் (இதில் ஒரு சகோதரன் நல்லவன். இரண்டு சகோதரர்களுக்கிடையே ஒரு பொதுவான பொருள் இருக்கும். உதாரணம் – இருவரின் தாய். இதில் தாய் ஒருவன் மீதே அன்பு வைத்திருப்பாள். அல்லது இரண்டு சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் பெரும் பணம் கிடைக்கும். இங்கே பொதுவான பொருள் என்பது சொத்து)
B. இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு விரோதித்துக் கொள்ளுதல்
C. இரண்டு சகொதரர்களின் வெறுப்பு, ஒரு சகோதரன் இன்னொருவனின் மனைவியை விரும்புதலால் நேர்வது
D. சகோதரிகளின் வெறுப்பு

2.
A. தந்தையும் மகனும், திருமணமாகாத ஒரு பெண்ணின் காரணமாக விரோதித்துக்கொள்ளுதல் (இதிலேயே தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதிலுள்ள பல காம்பினேஷன்களிலும் புகுந்து விளையாடலாம்).
B. திருமணமான ஒரு பெண்ணின் காரணமாக தந்தையும் மகனும் விரோதித்துக்கொள்ளுதல்
C. ஒரு பெண்ணின் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நேரும் விரோதம். ஆனால் இதில் அந்தப் பெண் ஏற்கெனவே தந்தையை மணந்துகொண்டிருப்பாள்
D. தாயும் மகளும் விரோதித்துக்கொள்ளுதல்

3. Cousinகளுக்கிடையே நேரும் விரோதம்
4. நண்பர்களுக்கிடையே நேரும் விரோதம்

இந்த சிச்சுவேஷனுக்கும் முந்தைய சிச்சுவேஷனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை மறந்துவிடாதீர்கள்.

Situation 15: Murderous Adultry – கள்ளத்தொடர்பும் கொலையும்

இந்த சிச்சுவேஷனை விளக்கவே தேவையில்லை. அன்றாடம் செய்தித்தாள்களில் நாம் காணும் விஷயம் இது. கள்ளத் தொடர்பு, அதனால் பாதிக்கப்பட்ட கணவன் அல்லது மனைவி, இதன்விளைவாக நிகழும் கொலை என்பதே இந்த சிச்சுவேஷன்.

இது இரண்டு வகை.

1.
A. கள்ளக்காதலனுக்காகவோ அல்லது கள்ளக்காதலனாலோ கணவன் கொல்லப்படுதல்
B. கள்ளக்காதலனோ அல்லது காதலியோ கொல்லப்பட்டுவிடுதல்

2. காதலிக்காக மனைவியைக் கொல்லுதல்

இந்த சிச்சுவேஷனை சுவாரஸ்யப்படுத்த சில வழிகளை சொல்கிறார் போல்டி. துரோகமிழைக்கப்பட்ட மனைவியோ கணவனோ ஒன்று – பலம் பொருந்தியவர்களாக இருக்கலாம் அல்லது, இரண்டு – பலமில்லாதவர்களாக, செல்வாக்கில்லாதவர்களாக இருக்கலாம். அதேபோல் இறக்கப்போகும் நபருக்கு எதுவுமே தெரியாமல் இருக்கலாம் அல்லது லேசுபாசாக சந்தேகம் இருக்கலாம்.

அதேபோல், கொலையானவருக்கும் கொலை செய்பவருக்கும் எப்போதோ பரிச்சயம் இருந்து, நட்பு, அன்பு, நன்றி போன்ற உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அவர்கள் உறவினர்களாக இருக்கலாம். ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம். இரண்டு காதலர்களில் ஒருவர், இந்தக் கொலையைச் செய்தபின் இன்னொருவரால் விலக்கப்படலாம். அந்த நபரை இன்னொருவர் காதலித்த நோக்கமே இந்தக் கொலையைச் செய்யவைக்கக்கூட இருக்கலாம். அல்லது இருவருமே கொலையைச் செய்யாமல் மூன்றாவதாக ஒரு நபர் அதை செய்திருக்கலாம். அவர் இந்த இரண்டு காதலர்களில் ஒருவருக்கு நண்பராக இருக்கலாம். அல்லது ஒரு கும்பலே இதில் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்தக் கொலை நிகழும்போது பலர் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி எத்தனையோ புதிய விஷயங்களை உருவாக்கலாம்.

தொடரும்…

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

5 Comments

 1. Viruchigam

  11-source code
  11/1-Sherlock Holmes ,the Raven,the Bone Collector
  11/2/A-
  11/2/B-
  11/3/A-
  11/3/B-
  11/3/C-Shutter Island
  12/1-the Prestige
  12/2-Flash of Genius
  12/3-
  13-Black Swan,Margaret
  13/1/A-
  13/1/B-
  13/1/C-
  13/2/A-M.குமரன் son of மாகாலட்ச்சுமி
  13/2/B-
  13/2/C-
  13/3-
  13/4-
  13/5-
  13/6-
  14/1/A-
  14/1/B-
  14/1/C-
  14/1/D-
  14/2/A-
  14/2/B-
  14/2/C-
  14/2/D-
  14/3-
  14/4-Spiderman,Harry Potter
  15-சென்னையில் ஒரு நாள்
  15/1/A-
  15/1/B-
  15/2-

  இந்த இடைவெளிகள பார்க்கும் போதுதான் இன்னும் பார்க்க எவ்ளவோ படம் இருக்கின்னு புரியுது.

  Reply
  • Rajesh Da Scorp

   நீங்க சொல்றது கரெக்ட். இன்னும் பார்க்கவேண்டியது எக்கச்சக்கமா இருக்கு. அதுக்கு இந்த லைஃப்டைம் போதாது 🙁

   Reply
 2. Karthick Nagendran

  Situation 11: The Enigma – புதிர்
  National.Treasure part I & II புதையலை தேடுதல் ( இந்த படத்தில் வரும் புதிர்கள் அருமையாக இருக்கும்) இந்த மாதிரி புதிர் அவிழ்க்கும் படங்கள் இருந்தால் கொஞ்சம் பகிருங்கள்
  மலையாளத்தில் Suresh Gopi நடித்த Detective படமும் ஒரு கொலையை பற்றி விசாரிப்பது இதுவும் ஒரு நல்ல படம் புதிரே கிடைக்காத ஒரு கொலைக்கு வித்தியாசமான கோணங்களில் புதிரை கண்டுபிடிப்பார்

  Situation 12: Obtaining – விரும்பியதை அடைய நினைத்தல்
  lord of the rings மோதிரத்தை அடைய நினைத்தல் (மூன்றாம் பாகத்தில் கோலன் வலுக்கட்டாயமாக மோதிரத்தை அடைதல்)

  Situation 13: Enmity of Kinsmen – உறவினர்களின் பகை
  பூவே உனக்காக ( இரு குடுபங்களின் பிள்ளைகள் காதல் திருமனத்தால் இரு குடும்பத்திற்க்கும் பகை அதை தீர்க்க விஜய் வருவது பி.கு இரண்டு குடும்பங்களும் முதலில் நண்பர்களே ஆனால் பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்களாக கொள்ள வேண்டும் )
  தெலுங்கில் பிரசாந்தம் என்ற படம் உள்ளது ( தமிழிழ் பதவி என மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) இதில் உறவுகளிக்கிடையேயான உனர்வுகள் மிக தெளிவாக உள்ளது எனக்கு தெரிந்து தமிழிழ் gray characters மிகவும் குறைவு இல்லை என்று கூட கூறலாம் அனால் இப்படத்தில் உள்ள characters அனைத்தும் gray characters தான் இப்படத்தை பார்த்திருந்தால் உங்கள் கருத்தை பகிறவும் அல்லது பார்க்கவும்

  Situation 14: Rivalry of Kinsmen – உறவினர்களிடையே நிலவும் போட்டி & பொறாமை
  எஜமான் ( பங்காளிகளிடையே மாமன் மகளை கட்டிக்கொள்ள போட்டி)

  Situation 15: Murderous Adultry – கள்ளத்தொடர்பும் கொலையும்
  திருட்டு பயலே ஒரு நல்ல உதாரணம் ஆனால் இதில் கொலை செய்யப்படுவது கள்ள காதலி அல்ல (அதற்க்கான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை ஆனால் மிக நல்ல (சரியான) முடிவு.
  உயிர் படத்திலும் கள்ள காதலி கணவனை கொலை செய்தல்
  ( தமிழில் கள்ள தொடர்பான கதைகள் மிகவும் குறைவு காரணம் தமிழ் படங்கள் காலாச்சாரத்தை பாதிக்கிறது என்கிற தப்பான அணுகுமுறைதான்)

  Reply
  • Rajesh Da Scorp

   நான் இன்னும் ப்ரசாந்தம் பார்க்கல கார்த்திக். தெலுங்குப்படங்கள் பார்த்ததே இல்ல. மிக அருமையான உதாரணங்கள். கடைசி வரி ரொம்ப உண்மை. தமிழ்ப்பட கலாச்சாரத்தைப் பத்தி.

   Reply
 3. situation 11: dial M for murder( most of the hitchhockfilms)
  situation 12:pirates of caribbean
  situation 13:devar magan
  situation 14: prestige
  situation 15:thiruttu payale

  Reply

Join the conversation