The Thieves (2012) – South Korean

by Rajesh May 16, 2013   world cinema

Sharing is caring!

சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள் அல்ல. கதையோடு ஆக்‌ஷன் கலந்து, படம் பார்க்க சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் படங்களே நான் சொல்லவந்தவை. சில உதாரணங்களாக A Bittersweet Life, I saw the Devil, The Chaser, The Good, bad and the Weird போன்ற படங்களை சொல்லலாம். இது தவிர பேய்ப்படங்கள், சைக்கலாஜிகல் த்ரில்லர்கள், காதல் படங்கள் போன்றவையும் சௌத் கொரியன் படங்களில் உண்டு. இது எதுவாக இருந்தாலும் கதாபாத்திரங்களின் பின்னணியை அலசி, கேரக்டரைஸேஷன் என்ற கதாபாத்திர வடிவமைப்பை அட்டகாசமாக இப்படங்களில் செய்திருப்பதைக் காணலாம். குறிப்பிட்ட கதாபாத்திரம் திருடனாக இருந்தால் அவன் திருடனாகத்தான் இருப்பான். இடையே ’நல்ல திருடன்’ போன்ற மேட்டரெல்லாம் இவற்றில் காணமுடியாது (கொழந்த கவனிக்க). இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நல்ல பின்னணி இருக்கும்.

ஹாலிவுட் மசாலாக்களில் ஒரு குறிப்பிட்ட ஜானர் உண்டு. Heist films என்பதைப் படித்திருப்பீர்கள். கொள்ளையை மையமாக வைத்து இயக்கப்படும் படங்கள். குறிப்பாக அதில் ஒரு கொள்ளைக்கும்பல் இருக்கும். டக்கென்று நினைவுபடுத்திக்கொள்ள Ocean’s Eleven படத்தை நினைத்துப் பார்க்கலாம். இந்த ஹாலிவுட் ஹீஸ்ட் படங்களுக்கு எப்படி திரைக்கதை வடிவமைப்பது என்பதைப் பற்றியே தனியாக புத்தகங்கள் எழுதும் அளவு பிரம்மாண்டமான ஒரு பிரிவு இது.

இதுவரை நீங்கள் பார்த்த்திருக்கும் ஹீஸ்ட் படங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவற்றில் என்னென்ன பொதுவான விஷயங்களை கண்டுபிடிக்கமுடிகிறது?

1. ஒரு கொள்ளை கும்பலை உருவாக்குவது. கும்பலில் ஒரு பெண், ஒரு வயதான நபர், ஒரு மிக இளைஞன் ஆகியவர்கள் அவசியம். யாராவது ஒரு நபர் ரிடையர் ஆகியிருப்பார். அவரை தேடிக்கண்டுபிடித்து கும்பலில் சேர்ப்பார்கள்.

2. கும்பலின் தலைவன் விட்டேற்றியான மனநிலையிலேயே இருப்பான். எல்லாரையும் அவ்வப்போது திட்டுவான். அவனிடம்தான் திட்டம் இருக்கும்.

3. கும்பலின் இலக்கு பெரும்பாலும் ஒரு கேஸினோவாகத்தான் இருக்கும்.

4. கேஸினோ (அல்லது) கொள்ளையடிக்கப்படும் இடத்தின் ரகசிய கேமராக்கள், செக்யூரிடிகள், மக்கள் நடமாட்டம், தப்பிக்கும் வழிகள் போன்றவற்றை ஒரு மாதம் முன்னரே நோட்டமிட்டு வைத்திருப்பார்கள். கொள்ளை நடக்கத் துவங்கும்போது இந்த நோட்டமிட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் இண்டர்கட்டாக இடம்பெறும்.

5. மேலே பாயிண்ட்கள் ஒன்றிலிருந்து நான்கு வரையிலான காட்சிகள்தான் திரைப்படத்தின் முதல் அரைமணி நேரமாவது இடம்பெறும்.

6. கும்பலில் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட திறமையில் கெட்டிக்காரர்கள்.

7. கொள்ளை அடிக்கப்படும்.

8. கொள்ளையினால் பிரச்னை வெடிக்கும். கும்பலில் யாராவது துரோகி இருப்பான்(ள்). அந்தத் துரோகி பணத்துடன் ஓட்டம்.

9. கும்பலில் மீதம் இருப்பவர்கள் ஒவ்வொருவராக இறத்தல். இறப்பு பெரும்பாலும் போலீஸ் Shoot-out அல்லது தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாவது என்றே இருக்கும்.

10. உயிரொடு பிழைத்த கும்பலின் எச்சங்கள், பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிய நபரை கண்டுபிடித்தல்.

11. இறுதியில், படத்தின் பாதியில் கொள்ளையடிக்கப்பட்ட வில்லன் எண்ட்ரி. மூன்று சாராரும் அடித்துக்கொண்டு சாதல்.

12. யாராவது ஒரு நபர் பணத்தை அடைதல். இது பெரும்பாலும் கும்பலின் எதிர்பாராத நபராகவே இருக்கும்.

13. சுபம் (என்று எழுதுவதற்குள் அடுத்த பாகம் டுமீலென்று வந்தாலும் வந்துவிடும்).

உலகில் எந்த மூலையில் ஒரு ஹீஸ்ட் படம் எடுத்தாலும் இந்தப் பாயிண்ட்கள்தான்.

ஆனால், எல்லாருக்கும் தெரிந்த இந்தப் பாயிண்ட்களை வைத்துக்கொண்டே படு சுவாரஸ்யமான படம் ஒன்றைக் கொடுக்க முடியுமா? அதுவும் ஆயிரத்தெட்டு ஹீஸ்ட் படங்கள் வந்துவிட்ட பின்னர், 2012ல்?

The Thieves படத்தைப் பாருங்கள்.

இதுபோன்ற ஹீஸ்ட் படங்கள் எடுப்பதில் இன்னொரு முக்கியமான திரைக்கதை விதி என்னவென்றால், படத்தின் இரண்டாம் பாதியில் பணம் திருடுபோனபின்னர் ஏற்படும் ட்விஸ்ட்களுக்கு (திருப்பங்கள்) படத்தின் முதல் பாதியிலேயே காரணங்களை எழுதியிருக்கவேண்டும். அதாவது, படத்தின் முதல் பாதியில், இறுதியில் வரப்போகும் பிரச்னைகளுக்கான ஆரம்பங்கள் இருத்தல் வேண்டும். முன்பின்னாக திரைக்கதையை கோர்ப்பது. இப்படி கோர்த்திருந்தால்தான் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தப்படம் தென்கொரியாவில் வெளிவந்தபின், அதன் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை இன்றுவரை பெற்றிருக்கிறது. படம் அதற்கேற்றவாறுதான் இருக்கிறது. ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் படங்களில் இதை தாராளமாக சேர்க்கலாம்.

படத்தில் சௌத் கொரியாவின் பிரபல நடிகர்கள் பலர் நடித்திருக்கின்றனர். அவர்களில் Macao Park என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிம் யூன் ஸியோக் என்ற நடிகரை எனக்கு மிகவும் பிடித்தது. ஏன் என்று படத்தில் தெரிந்துகொள்வீர்கள். நான் சொன்ன ஒருங்கிணைக்கும் நபர் இவர்தான்.

நான் சில படங்களைப் பற்றி எழுதும்போது, தமிழில் சுடப்படும் வாய்ப்பு மிக அதிகம் என்று எழுதியிருப்பேன். இதோ இந்தப்படம் எப்போது வேண்டுமானாலும் தமிழில் வெளியாகலாம். எனவே அதற்குமுன்னர் இப்படத்தைப் பார்த்துவிடுவது சாலச்சிறந்தது.

இதற்குமேல் இப்படத்தைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. பட விமர்சனம் என்று இதுபோன்ற மசாலாக்களுக்கு செய்வதில் எந்த பலனும் இல்லை என்பதால் நோ விமர்சனம்.

பி.கு – கருந்தேள் டாட் காமில் இதுவரை எழுதப்பட்டுள்ள தென்கொரியப் படங்களைப் பற்றிப் படிக்க இங்கே க்ளிக் செய்யலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

10 Comments

 1. vemdhan

  Rajesh u shows me diffrent kind of worlds, diffrent kind of films , and sydfield screenplsy series is one of the best work u did ..thank u rajesh hats off to u..

  Reply
  • Rajesh Da Scorp

   All the credits go to the masters who had filmed their best so far boss. I am just a small observer, trying to count the stones on the vast sea shore…

   Reply
 2. sekar

  இன்னாபா??? கடைசில இப்டி ஏமாத்திட்ட???

  Reply
  • Rajesh Da Scorp

   இன்னாபா ஏமாத்தம்? சொல்லுபா இன்னான்னு பார்த்திருவோம்.

   Reply
   • sekar

    படத்தோட ஹைலைட் விஷயங்களை கூட சொல்லாம விட்டுடீங்களே

    Reply
    • Rajesh Da Scorp

     அத்த சொன்னா சஸ்பென்ஸ் போயிருமே? அதுனாலதான் எவ்வளவு கம்மியா சொல்லமுடியுமோ அவ்வளவு கம்மியா சொல்லுறது

     Reply
 3. sekar

  Downloading Now….

  Reply
 4. prabu

  thalaiva i luv korean movies..but na youtube matum than pathutu irukan…eanga cds kedaikum nu solla mudiyuma pls…

  Reply
 5. படம் பார்காதவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை இந்த பதிவில் சொல்லப்பட்ட 12 பாய்ன்ட்ஸ்ல வந்துறது…………

  Reply

Join the conversation