Instructions Not Included (2013) – Mexican

by Rajesh May 3, 2014   world cinema

Sharing is caring!

மெக்ஸிகோவின் யூஜீனியோ டெர்பெஸ் (Eugenio Derbez) ஒரு பிரபலமான நடிகர். ஹாலிவுட் படங்களின் ரசிகர். ‘Life is beautiful’ மற்றும் ‘Little Miss Sunshine’ படங்களைப் பார்த்துவிட்டு அதேபோன்ற மனதைத் தொடும் படங்கள் எடுக்க ஆசைப்பட்டவர். பன்னிரண்டு வருடங்கள் தனது மனதில் இருந்த கதைக்கு மெல்ல மெல்ல உருவம் கொடுத்து, அதன்பின் எடுத்து வெளியிட்ட படம்தான் இது. இயக்குநர் + ஹீரோ அவரே.

‘பன்னிரண்டு வருடங்கள்’, மனதைத் தொடும்’ போன்ற வார்த்தைகளைப் பார்த்துவிட்டு இது நம்மைப் போட்டு சாகடிக்கும் படமாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். மிகவும் ஜாலியாக ஆரம்பித்து மெல்ல மெல்ல உணர்ச்சிகரமாக மாறி, பின்னர் மென்மையாக முடியும் படம் இது.

வேலண்டின் ஒரு மெக்ஸிகோ கேஸனோவா. அதேசமயம் மிகவும் பயந்த சுபாவம் உடையவன். அகபுல்கோ நகரில் வாழ்பவன். அவனது தந்தையின் பெயர் ஹ்வான் ஜான்னி ப்ராவோ (Juan ‘Johnny’ Bravo). மகனை ஒரு தைரியசாலியாக வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் கண்டபடி அவனை பயமுறுத்தி அந்தப் பயங்களை மனதளவில் அனுபவித்து அவற்றை வெற்றிகொள்ளச் சொல்கிறார். ஆனால் இதனால் மிகவும் பயந்தவனாக வளர்கிறான் வேலண்டின்.

அவனது பல கேர்ல்ஃப்ரெண்ட்களில் எப்போதோ ஒரு நாள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜீலியைச் சந்தித்திருக்கிறான். ஒருநாள் இவனது வீட்டில் இரண்டு பெண்களோடு ஜாலியாக இருக்கும் நேரத்தில் கதவு தட்டப்பட, வெளியே ஜூலி. கையில் ஒரு குழந்தை. ஒன்றரை வயது. அந்தக் குழந்தை இவனுடையதுதான் என்று சொல்லும் ஜூலி, இவனிடம் பத்து டாலர்கள் வாங்கிக்கொண்டு டாக்ஸி ட்ரைவருக்குக் கொடுப்பதற்காக வெளியே செல்கிறாள். கம்பி நீட்டிவிடுகிறாள்.

மனதில் கூட நினைத்துப் பார்த்திருக்காத படுபயங்கர சிச்சுவேஷனை சந்திக்கிறான் வேலண்டின். எப்போது பார்த்தாலும் அழும்/ஆய் போகும் குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அமெரிக்காவுக்கே சென்று ஜூலியிடம் குழந்தையைக் கொடுத்துவிடுவது என்று திருட்டுத்தனமாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்கிறான்.

Cut to – 7 வருடங்கள் ஓவர். அமெரிக்காவில் ஒரு ஸ்டண்ட் டபிளாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் வேலண்டின். பணத்துக்குக் குறைவில்லாத வாழ்க்கை. அவனது வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையாக அவனது குழந்தை. அவள் பெயர் மேகி. வாழ்க்கை சந்தோஷமாகச் சென்றாலும், அதில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. மருத்துவரிடம் ஒரு நாள் செல்லும்போது அதைத் தெரிந்துகொள்கிறான் வேலண்டின். அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்ற உண்மை.

இதன்பின் ஒருநாள், வேலண்டினுக்கு ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனில் ஜூலி. ஏழு வருடங்கள் கழித்து இவனைத் தொடர்பு கொள்கிறாள்.

இதன்பின் என்னென்ன நடக்கின்றன என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

படத்தில் பல சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கின்றன. சில நெஞ்சைத் தொடும் காட்சிகளும் உண்டு. படத்தைத் துவக்கும்போது அது ஒரு ஆண் குழந்தையை வைத்துத்தான் துவக்கப்பட இருந்தது. ஆனால் மெக்ஸிகோவில் சுத்தமான இங்லீஷ் + ஸ்பானிஷ் பேசும் ஆண் சிறுவர்கள் யாரும் இல்லாததால், கடைசியாக அது பெண் குழந்தை என்று மாற்றப்பட்டது. அப்போதும் யாரும் முன்வராமல், ட்விட்டரில் குழந்தைகளைத் தேடி அலையும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் டெர்பெஸ். பின்னர் வந்து சேர்ந்தவள்தான் லோரெடா பெரால்டா. இதற்குமுன்னர் எந்தவிதமான திரைப்பட அனுபவமும் இல்லாத குழந்தை. அவளிடம் வேலை வாங்கியதை மறக்கமுடியாத அனுபவமாக டெர்பெஸ் குறிப்பிடுகிறார். அதேபோல் மெக்ஸிகோவில் அமெரிக்கா போன்று கடினமான விதிகள் இல்லாததால், குழந்தைகளை வைத்து எளிதாகப் படப்பிடிப்பு நடத்த முடிந்ததையும் சொல்கிறார். அவர் சொல்லும் சம்பவம் படத்தில் ஆரம்பத்தில் வருகிறது. காயும் வெய்யிலில் குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்கும் காட்சி. அது அமெரிக்காவில் இருந்திருந்தால் அவசியம் தன்னை அரெஸ்ட் செய்திருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கும்போதே அந்தக் குழந்தையின் மீது ஒரு பரிதாப உணர்ச்சி எழுந்தது.

படத்தில் ஹாலிவுட் படங்களையும் ஹாலிவுட் நடிகர்களையும் அவ்வப்போது கிண்டல் அடித்திருக்கிறார் டெர்பெஸ். அவரது சொந்தப் படங்களையும் ஓட்டியிருக்கிறார். படத்தின் இறுதியில் ஜானி டெப் போன்ற ஒரு மனிதரும் வருகிறார். பார்ப்பதற்குப் பிரேம்ஜியைப் போலவே இருக்கும் டேனியல் ரேமாண்ட்டும் படத்தில் உண்டு.

மெக்ஸிகன் படங்கள் பெரும்பாலும் போதை மருந்து, கொலைகள், வன்முறை போன்ற தீம்களையே கொண்டிருப்பதால், கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து எடுத்த படம் இது என்பது இயக்குநர்/நடிகர் யூஜீனியோ டெர்பெஸின் கருத்து. மெக்ஸிகோ அப்படிப்பட்ட இடம் இல்லை என்றும், இதனால்தான் அடல்ட்ஸ் படமாக இல்லாமல் குடும்பத்துடன் எல்லாரும் வந்து பார்ப்பதற்காக இதனை எடுத்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார். படமும் ஐந்தே மில்லியன் டாலர்களில் எடுக்கப்பட்டு மொத்தம் தொண்ணூறு மில்லியன் வசூலைக் குவித்திருக்கிறது. ஒன்றிரண்டு மறக்க முடியாத கதாபாத்திரங்களும் படத்தில் உண்டு.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

7 Comments

 1. Thanks for this review. I will add this to my list of movies to watch.

  Reply
  • Rajesh Da Scorp

   Sure. It’s actually a good one too

   Reply
 2. Thala I am waiting for amazing spiderman review from u in Tamil

  Reply
  • Rajesh Da Scorp

   The review will be posted tomo night boss 🙂

   Reply
 3. raymond

  “amazing spiderman 2” is not like first part thala, but i like it….. innum ethana part vanthalum namma paapom la……!

  Reply
 4. very nice news

  Reply
 5. muthuventhan

  “amazing spiderman 2 ” is not good.

  Reply

Join the conversation