Hercules (2014): 3D – Review

by Rajesh August 3, 2014   English films

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

ஹெராக்கிள்ஸ் என்ற ஹெர்குலீஸை மையமாக வைத்துப் பல படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. படங்கள் மட்டுமல்லாமல், God of War 2விலும் க்ராட்டோஸை எதிர்த்துப் போரிடுவான் ஹெர்குலீஸ். உலகின் அதிபயங்கர பலசாலி. நமது பீமனைப் போன்றவன் (அர்ஜுனன் = அக்கிலீஸ்). பொதுவாக ஹெர்குலீஸ் என்றதும் க்ரேக்க தேவதைகள், அவனது தந்தை ஸ்யூஸ், ராட்சஸ மிருகங்கள், மங்கைகள், படுக்கையறைகள், மது போன்றவை அவசியம் நினைவு வரும். ஆனால் ஹெர்குலீஸ் ஒரு மனிதனாக மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? ஹாலிவுட்டில் இந்த ஒரு வருடத்துக்குள் வந்திருக்கும் இரண்டாவது ஹெர்குலீஸ் படம் அதைத்தான் சொல்கிறது. முதலாவதாக இந்த வருட ஆரம்பத்தில் வந்த The Legend of Hercules படம் டப்பாவில் சுருண்டுவிட்டது. ஆனால் ட்வேய்ன் ஜான்ஸன் (The Rock) நடித்திருக்கும் இந்த ஹெர்குலீஸ், வெளியான ஒரு வாரத்திலேயே உலகெங்கும் 70 மில்லியன் வசூலித்து இன்னும் இரண்டு வாரங்களாவது பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (படத்தின் பட்ஜெட் – 100 மில்லியன்). வசூலுக்குக் காரணம் ராக்கின் புகழும் பிரபலமும்.

ஹெர்குலீஸின் கதையில் அவனது பனிரண்டு சாகஸங்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவை. அவற்றைப் பற்றியெல்லாம் நாம் முழுதாகக் கவனித்தால் அதற்கே பல கட்டுரைகள் எழுதவேண்டியிருக்கும். எனவே அவற்றை இங்லீஷில் இங்கே சென்று படித்துக்கொள்க. இந்தப் பனிரண்டு சாகஸங்களை ஹெர்குலீஸ் ஏன் செய்கிறான்? God of War க்ராட்டோஸைப் போலவே ஹெர்குலீஸும் அவனது மனைவியையும் ஆறு குழந்தைகளையும் தன் கைகளாலேயே கொன்றவன். ஏனென்றால், ஹெர்குலீஸின் தாய் ஆல்க்மீனீயின்மேல் ஸ்யூஸின் மனைவியான ஈரா (Hera என்ற பெயர், இங்லீஷில் ஹீரா என்றும் க்ரேக்க மொழியில் ஈரா என்றும் அழைக்கப்படுகிறது)வுக்குப் பொறாமை. ஸ்யூஸ் எந்தப் பெண்ணைக் காதலித்தாலும் அவனது மனைவியான ஈரா அவர்களை வெறுக்க ஆரம்பிப்பாள். அவர்களது குடும்பத்துக்கே கடுமையான தண்டனைகளையும் கொடுப்பாள். எனவே ஹெர்குலீஸின் மீதும் கோபம் கொண்ட ஈரா, அவனது மனதை மழுங்கடித்து, அவனது மனைவியையும் குழந்தைகளையும் அவனையே கொல்லவைக்கிறாள். இதனால் வருந்தும் ஹெர்குலீஸுக்குப் பிராயச்சித்தமாக மன்னர் யூரிஸ்தியஸிடம் சென்று பணியாற்றுமாறு கடவுளர்கள் ஹெர்குலீஸைப் பணிக்கிறார்கள். அவர் சொல்லும் வேலைகளைச் செய்துமுடித்துவிட்டால் அதுதான் ஹெர்குலீஸின் பிராயச்சித்தம். கூடவே அவனுக்கு சாகாவரமும் கிடைக்கும். இதனால்தான் பனிரண்டு சாகஸங்களை ஹெர்குலீஸ் செய்து முடிக்கிறான்.

அப்படிச் செய்து முடிக்கும்போதுதான் இந்தப் படம் ஆரம்பிக்கிறது. 2009ல் வெளிவந்த Hercules: The Thracian Wars என்ற காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. அந்த காமிக்ஸின் ஐந்து பாகங்களையும் படித்துவிட்டுத்தான் படம் பார்க்கச் சென்றேன். காமிக்ஸ் சுமார் ரகம்தான். ரத்தம் பீய்ச்சியடிக்கும் வன்முறையோடு வரையப்பட்டிருக்கும் காமிக்ஸ் அது.

த்ராஸ் என்பது க்ரேக்கத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் இடம். அங்கே ஆண்டுகொண்டிருக்கும் மன்னர் கோட்டிஸ், தனது நாட்டைத் துன்புறுத்தும் ரீஸியஸ் என்ற கொள்ளைக்காரனிடமிருந்து நாட்டைக் காக்கச்சொல்லித் தனது மகளை ஹெர்குலீஸிடம் தூது விடுகிறார். எடைக்கு எடை பொன் என்ற நிபந்தனையோடு த்ராஸுக்கு வருகிறான் ஹெர்குலீஸ். அந்த நாட்டுப் படையினரைப் பயிற்றுவிக்கிறான். இந்த முயற்சியில் எப்போதும் ஹெர்குலீஸோடு இணைபிரியாத நண்பர்கள் மற்றும் வீரர்களான அடலாண்டா என்ற பெண், ஆம்ஃபியாரஸ் என்ற எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய வீரர், டைடியஸ் என்ற மனித மிருகம், ஒடாலிகஸ் என்ற சிறுவயதுத் தோழன், இயோலஸ் என்ற அவனது உறவினன் ஆகியவர்கள் ஹெர்குலீஸுக்குக் கைகொடுக்கிறார்கள். கடுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையினரை வைத்துப் பரிசோதனை முயற்சியாக அங்கிருக்கும் காட்டுவாசிகளை வேட்டையாடுகிறான் ஹெர்குலீஸ். அதில் அவர்கள் தேறியதும் வில்லன் ரீஸீயஸைத் தேடிக் கிளம்புகிறார்கள். ரீஸீயஸுடன் பெரும்போர் நடக்கிறது.

இதன்பின் என்ன ஆனது என்பதுதான் ஹெர்குலீஸ் படம்.

பொதுவாக ஹெர்குலீஸ் போன்ற வேடங்களில் நடிப்பவர்கள் மிகவும் கவனிக்கப்படுவார்கள். லெஜண்ட் ஆஃப் ஹெர்குலீஸில் ஹெர்குலீஸாக நடித்த கெல்லன் லுட்ஸைப் பார்த்தாலே அந்தப் படம் ஏன் ஃப்ளாப்பாகியது என்பது புரிந்துவிடும். எந்த உணர்ச்சியும் இல்லாத தகரம் போன்ற முகம். போதாததற்கு நாடகம் போன்ற ஒரு ட்ரெய்லர். இதோ இந்த ட்ரைலரைப் பாருங்கள்.

இப்போது ஹெர்குலீஸாக அர்நால்ட் ஷ்வாட்ஸெனிக்கரை யோசித்துப் பாருங்கள். கச்சிதமாகப் பொருந்துவார் தானே? அதையேதான் ட்வேய்ன் ஜான்ஸனும் செய்திருக்கிறார். ஹெர்குலீஸாக ராக்கை நினைத்துப் பார்க்கும்போதே திருப்தியாகத்தானே இருக்கிறது? படத்துக்காக எட்டு மாதம் கடுமையாக உடற்பயிற்சி செய்து வழக்கத்தை விடவும் உடலை இரும்பாக்கியிருக்கிறார். படத்தைப் பார்த்தாலே அது தெரிகிறது.

படத்தில் ஹெர்குலீஸ் ஒரு கடவுளின் மகன் என்பதைக் குறிக்கும் எந்தக் காட்சியும் (நல்லவேளையாக) இல்லை. முழுதும் மனிதனாகவே, மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையே சந்தித்து சாகஸம் செய்கிறான் ஹெர்குலீஸ். இன்னும் புத்திசாலித்தனமாக, ஹெர்குலீஸின் பனிரண்டு சாகஸங்களைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே படத்தில் வரும்போதெல்லாம், அதெல்லாம் கட்டுக்கதைகள் நிரம்பிய வதந்திகள் என்று ஹெர்குலீஸே அவற்றைக் கிண்டல் செய்கிறான். அதேபோல் ஹெர்குலீஸோடு இருக்கும் ஐவர் அணிதான் எல்லா சாகஸங்களிலும் ஹெர்குலீஸுக்கு உதவியிருக்கிறது என்பது படம் முடிந்ததும் ஆரம்பிக்கும் டைட்டில்களில் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் படம் எப்படி? ராக் நடித்த படத்துக்கு எந்த நம்பிக்கையில் செல்வோமோ அப்படித்தான் இருக்கிறது படம். அடிதடி, ரத்தம், வன்முறை போன்றவை படத்தில் உண்டு. இது ஒரு டிபிகல் ஹாலிவுட் மசாலா. சீக்கிரமாகவும் முடிந்துவிடுகிறது. சிங்கத்தின் தோலை அணிந்துகொண்டு, கையில் மிகப்பெரிய கதையுடன் ராக் அறிமுகமாகும்போதே படத்தின் Tone அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது.

????????

’அதென்ன ஹாலிவுட் படமாக இருந்தால்மட்டும் டிபிகல் மசாலா என்று சொல்லிவிட்டுப் பார்க்கிறாய்; வேலையில்லா பட்டதாரி போன்ற டிபிகல் தமிழ் மசாலாவை மட்டும் ஆயிரத்தெட்டு நொள்ளை சொல்கிறாய்?’ என்று கேட்கும் நண்பர்களுக்காக: வேலையில்லா பட்டதாரியில் கதை சுத்தமாக இல்லை. திரைக்கதையும் இல்லை. ’தனுஷ்’ என்ற நடிகரை ஒரு சூப்பர் ஹீரோவாகக் காண்பித்த ஒரு பழைய டெம்ப்ளேட் படம் அது. ஆனால் ஹாலிவுட்டில், மட்டரகமான படமாக இருந்தாலும் திரைக்கதையை நன்றாகவே செய்திருப்பார்கள். ஹெர்குலீஸிலும் கதை மிகமிக வீக்கானதுதான். ஆனால் அது தெரியாதவகையில் திரைக்கதையைக் கொஞ்சம் வேகமாக வைத்திருப்பதால் படம் அலுக்கவில்லை. போதாததற்கு ஹெர்குலீஸின் நினைவுகள் ஆங்காங்கே ஆடியன்ஸுக்கு வந்து, அவன் எப்படிப்பட்ட பலசாலி என்பதைக் காட்டும்வகையில் பல காட்சிகள் இருக்கின்றன. இவைதான் இந்தப் படத்தின் பலம்.

ராக்கின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஹெர்குலீஸின் அபிமானிகளும் படத்தைப் பார்க்கலாம். பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், இருக்கும் சரக்கே போதுமானது. தொண்ணூறுகளில் வெளியான இங்லீஷ் ஆக்‌ஷன் படங்களைப் போன்ற படம் இது.  இயக்கம்: ப்ரெட் ராட்னர்.  ரஷ் ஹவர் படங்களின் இயக்குநர். அவரது Red Dragon எனக்கு மிகவும் பிடிக்கும்.

பி.கு – இதுவரை நமது தளத்தில் எழுதப்பட்ட Greek Mythology படங்களைப் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

 

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

4 Comments

 1. chinnamalai

  சின்ன வயதில் ஹெர்குலிஸ் கார்டுனாக பார்த்தது அந்த 12சாகசங்களை பார்த்து உள்ளேன். சாதாரண மனிதன் என்கிறிர்கள் அப்ப ஹெர்குலிஸ் பீலிங் வராதே ஹெர்குலிஸ் எதையும் சர்வசாதாரணமாக செய்து முடிப்பவர் மிக பெரிய முக்கியமாக கடவுள் அவர்!!!!

  Reply
 2. chandra

  boss i have a small problem with you, u are good at analysing this, but cinema is sometimes beyond logical things, hercules film is so boring, that u should not advise people to watch. VIP comment has gone too much into your head, forget it sometimes you cant fit some films in logic, VIP is one such film.

  Reply
 3. கிரிஷி

  உண்மைய சொன்ன இதுல ராக் “நடிச்சு” இருக்கார்!!!

  உன் மனைவியையும், மகனையும் நான் தான் ஓநாய்களை விட்டு கொன்னேன்னு மன்னன் சொல்லும் போது! ராக்கோட முகபாவம் செம!!

  செம மாஸ்!!

  Reply
 4. Sarav

  Rajesh,
  Once again a good review, In fact I was waiting for this. since this is not in the Avengers league or in the Ring’s list , I may not watch this in Theatre. but definitely I was waiting for your review. Why don’t you write about those 12 stories of Hercules ? Wikipedia is just a documentary. But you do magic while writing ! if u recollect, I have mentioned you as a Mutant –Scorpio Skill- good writing ! cheerio ! !

  Reply

Join the conversation