சென்னை 13வது திரைவிழா – நியூஸ்7 பேட்டிகள் & My Movie List

by Rajesh January 14, 2016   Cinema articles

Sharing is caring!

நேற்று நடந்து முடிந்த சென்னை 13வது உலகத் திரைப்பட விழாவைப் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளின் திரைப்படங்கள் பற்றி விவாதிக்க முடிந்தது. இந்த விவாதத்தில் நான் எடுத்துக்கொண்ட படங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் முக்கியமானவை. சமூகப் பிரச்னைகள், வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட படங்கள், தேசங்களின் யுத்தங்கள், யுத்தத்தின் விளைவினால் நடக்கும் பிரச்னைகள், அரசுக்கும் மக்களுக்கும் நிகழும் பிரச்னைகள், பெண் இயக்குநர்கள் அவர்களின் திரைப்படங்கள் வாயிலாக அளிக்கும் அவர்களது அனுபவங்கள், LGBT சமுதாயத்தைப் பற்றிய படங்கள் etc..

இப்படிப்பட்ட படங்களாக நான் தேர்வு செய்த அத்தனை படங்களையும் இந்தக் கட்டுரையின் முடிவில் ஒரு excel ஷீட்டில் சேகரித்து வைத்திருக்கிறேன். அது உங்களுக்கு உதவினால் மகிழ்ச்சி.

இனி, ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பான எனது பேட்டிகள். இதில் பல தலைப்புகளில் எனது கருத்துகளைக் காணலாம். எனக்கு எது உண்மை என்று படுகிறதோ அதைப் பேசியிருக்கிறேன். இப்படிப்பட்ட பல கருத்துகளைப் பேச இடமளித்த நியூஸ்7 தொலைக்காட்சிக்கும், நண்பர்கள் ரமேஷ், உமா, நெல்சன் ஆகியோருக்கும், என்னைப் பேட்டியெடுத்த அழகருக்கும் நன்றிகள். குறிப்பாக, அழகர் உலக சினிமாக்களில் நல்ல பரிச்சயம் உடையவர் என்பதை அவரது கேள்விகள் வாயிலாக அறிந்தேன். பின்னர் தனிப்பட்ட முறையில் பேசும்போதும் இது உண்மை என்று தெரிந்தது.


 

முதல் நாள் – 6th Jan 2016


இரண்டாம் நாள் – 7th Jan 2016


 

மூன்றாவது நாள் – 8th Jan 2016


 

நான்காவது நாள் – 9th Jan 2016


ஐந்தாவது நாள் – 10th Jan 2016


 

ஆறாவது நாள் – 11th Jan 2016


 

ஏழாவது நாள் – 12th Jan 2016


 

எட்டாவது நாள் – 13th Jan 2016

இந்தக் கடைசி நாளில், உலக சினிமா பற்றிப் பொதுவாகவும், சென்னைத் திரைவிழாவின் முக்கியத்துவத்தையும், பிற திரைவிழாக்களிலிருந்து சென்னைத் திரைவிழா எப்படி மாறுபடுகிறது (on the lower scale) என்பதைப் பற்றியும், கல்லூரி மாணவர்களின் ரசனை, தமிழகத்திலிருந்து உலக சினிமா வருமா.. என்பது போன்ற பல பொதுவான தலைப்புகளில் பேசியிருக்கிறேன்.

 

Excel Sheet: 13th Chennai International Film Festival – My choices – click to download


இறுதியாக, புத்தாண்டுக்காக 31வது டிசம்பர் 2015 அன்று ஹலோ FMல் ஒலிபரப்பப்பட்ட எனது பேட்டியை இங்கே கேட்கலாம். இதில் 2015ன் மூன்று முக்கியமான படங்கள் பற்றியும், இன்று நேற்று நாளை, குற்றம் கடிதல் போன்ற படங்களைப் பற்றியும் பேசியிருக்கிறேன்.

விரைவில் இன்னொரு வீடியோவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

5 Comments

 1. Dany

  மாற்றம்
  முன்னேற்றம்
  கருந்தேள் “ராஜேஷ்”

  Reply
 2. Parthiban

  Really, those movies premiared at Chennai film festival 2015, but these clips showed to learn about world cinema and Indian cinema little bit from you.
  Thanks for the sharing.

  Reply
 3. Roshan

  Karundhel Sir ipo latest a teaser veliyeeduhal pattri oru revieiw podalame sir.. ipo athuku thane likes athigam.. ella teaser kum podhuvaana oru review..

  Reply
 4. N Velu Natarajan

  Dear Bro,

  I would to have some information about world famous historical, social related problem – movie like Panahi (Iran Director) and individual suffering due social or family issues. I await hopefully your kind response. I am immensely in need of achieving my life goal of a strong and worthy contribution to society.

  Reply
 5. N Velu Natarajan

  Dear Bro,

  I would to have some information about world famous historical, social related problem – movie like Panahi (Iran Director) and individual suffering due social or family issues. I await hopefully your kind response. I am immensely in need of achieving my life goal of a strong and worthy contribution to society.

  With kind regards

  Velu Natarajan N

  Reply

Join the conversation