கோவை, அதன் சினிமா தியேட்டர்கள் & ஒரு சிறுவன் (நானேதான்)

October 2, 2015
/   80s Tamil

முன்குறிப்பு – 2013ல் ஒரு பிரபல பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை இது. கோவையில் நான் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த அனுபவங்கள். ஆனால் அப்பத்திரிகையில் கட்டுரை வெளியாகாமல், சில வாரங்கள் முன்னர் ‘அம்ருதா’ இதழில் வெளியானது. எனவே, அதன்பின் இங்கே வெளியிடுகிறேன். மூன்று வருடங்கள் முன்னர் எழுதியிருந்தாலும், எனக்கு...

ரத்தக் கலைஞர்கள் – ஜூன் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

June 23, 2014
/   80s Tamil

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தமிழ் சினிமா வில்லன்கள் பற்றி ஜூன் மாத ‘அந்திமழை’ இதழில் ‘ரத்தக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். இதோ கட்டுரையின் ஆரம்பம். ஒரு ட்ரெய்லருக்காக. “எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும்...

தமிழ்ப்படங்களும் மசாலாவும்

January 16, 2014
/   80s Tamil

மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 6 – கமல் ரஜினி யுத்தம்

April 13, 2012
/   80s Tamil

இந்தத் தொடரை ஆரம்பித்த முதல் கட்டுரையில் இருந்தே, இப்போது எழுதப்போகும் விஷயத்தை எழுதியே ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அதற்கு நேரம் இன்றுதான் கிடைத்தது. சும்மா எழுதவில்லை; கிட்டத்தட்ட ஒரு 25 பாடல்களை வரிசையாகக் கேட்டுவிட்டே எழுதுகிறேன். எண்பதுகளில் வந்த தமிழ்ப்படங்களில், கமலும் ரஜினியும் ஒருவரோடொருவர்...

80களின் தமிழ்ப்படங்கள் – 5 – நான் சிவப்பு மனிதனும் ரஜினியும்

October 30, 2011
/   80s Tamil

பல ரஜினி துதிபாடி கட்டுரைகளைப்போல் இது அமையாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ரஜினி என்கிற மனிதன் எனக்கு அறிமுகமாது எப்போது? அந்தத் தாக்கம் எப்படி என்னுள் இறங்கியது என்பதை எழுதுவதே நோக்கம். ஆண்டு. 1985. இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் வரிசையில், எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம்...

80’களின் தமிழ்ப்படங்கள்–4 – சத்யராஜ்

May 16, 2011
/   80s Tamil

சத்யராஜ் என்னும் நடிகரை நான் முதல்முதலில் பார்த்த படம், நான் சிகப்பு மனிதன். அதிலும், சிறுவனாக நான் இருந்தபோது, ரஜினியின் தங்கையைக் காட்டுத்தனமாக ரேப் செய்துவிட்டு சத்யராஜ் நிமிரும்போது, அவரது வாயெல்லாம் மல்லிகைப்பூ ஒட்டியிருக்கும் காட்சியைப்பார்த்துவிட்டு, நிஜமாகவே பயந்திருக்கிறேன். இதற்குப்பின் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்தேன். அதிலும் சத்யராஜை...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

July 22, 2010
/   80s Tamil

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும்...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்

June 16, 2010
/   80s Tamil

இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

June 10, 2010
/   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...