Mukkabaaz (2018) – Hindi

January 26, 2018
/   Hindi Reviews

இந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு  இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள்...

Amitabh Bachchan – The Phenomenon

January 25, 2018
/   Cinema articles

சில வாரங்கள் முன்னர் தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை இது. அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது...

Piku (2015) – Hindi

May 10, 2015
/   Hindi Reviews

பாஸ்கோர் பானர்ஜீ என்ற எழுபது வயதுக் கிழவர், எப்போது பார்த்தாலும் தனக்கு எக்கச்சக்கமான வியாதிகள் வந்துவிடுமோ என்று புலம்பிக்கொண்டே இருப்பவர். ஆனால் நிஜத்தில் அவருக்கு எதுவுமே இல்லை. அவரைப் பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரன் உண்டு. பாஸ்கோருக்கு ஒரு மகள். பெயர் Piku. தில்லியில் ஒரு ஆர்க்கிடெக்ட். பாஸ்கோர்...

Shamitabh (2015) – Hindi

February 9, 2015
/   Hindi Reviews

இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று ஆக்ரி ராஸ்தா. தமிழில் ‘ஒரு கைதியின் டைரி’ என்று கமல்ஹாஸனை வைத்து வெளிவந்த பிரம்மாண்ட ஹிட் படத்தின் ஹிந்தி ரீமேக். எழுதி இயக்கியவர் பாக்யராஜ். இந்தப் படம் வந்தது 1986....

PK (2014) – Hindi

December 24, 2014
/   Hindi Reviews

இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச்...

Salim Javed – Amitabh & Rajni

October 7, 2014
/   Cinema articles

‘இந்திய அதிநாயகர்களின் பிரம்மா’ என்ற பெயரில் அக்டோபர் மாத காட்சிப்பிழையில் வெளிவந்த கட்டுரை இது. படித்துப் பாருங்கள். மறவாமல் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்களையும் பாருங்கள்.   இந்தியத் திரையுலகில் அறுபதுகளின் காலகட்டம் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழில் ஸ்ரீதர் மிகவும் வித்தியாசமான வணிகப்படங்களைக் கொடுத்துவந்த காலம்....

Haider (2014) – Review

October 6, 2014
/   Hindi Reviews

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகம்தான் ஹைதரின் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குநர் விஷால் பரத்வாஜ் சொல்லியிருப்பதால் ஹைதரைப் பார்க்கும் முன் முதலில் ஹேம்லெட்டைப் பார்ப்போம். கண்டபடி குழப்பிக்கொள்ளாமல் எளிமையாகக் கவனிப்போம். இது அவசியம் ஹைதரைப் பார்க்கும்போது உதவும். இதில் வரும் பல காட்சிகள் ஹைதரில் உண்டு. ஹேம்லெட் என்பவன் டென்மார்க்...

Queen (2014) – Hindi

April 9, 2014
/   Hindi Reviews

எப்போதுமே தந்தை சொல்வதைக் கேட்டே நடக்கும் ஒரு சராசரி தில்லிப் பெண், திடீரென ஃப்ரான்ஸுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் தனியாகச் சென்றால் என்ன ஆகும்? ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து English Vinglish படம் 2012ல் வந்தது அல்லவா? அந்தப் படத்தில் பக்கா இந்தியப் பெண்ணாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, ஹிந்தி...

Highway (2014) – Hindi

February 26, 2014
/   Hindi Reviews

பொதுவாக Road movies என்றால் ஜாலியாக அமர்ந்து பார்க்கலாம்; நாம் சென்றிருக்கும்/சென்றிராத இடங்களையெல்லாம் நன்றாகக் காட்டுவார்கள்; அதில் ஒரு நாஸ்டால்ஜியா கிளம்பும் – இப்படியெல்லாம் ஒரு பொதுவான கருத்து உண்டு. தனது திருமணத்துக்கு முந்தைய இரவு, வீட்டிலேயே அடைந்து கிடப்பது பிடிக்காத பெண், தனது வருங்காலக் கணவனுடன்...

Tum Tak . . . . .

August 15, 2013
/   Hindi Reviews

பனாரஸ். இந்த நகரத்தைப் பற்றி நினைத்தாலே, ஆங்காங்கே நடக்கும் சாதுக்கள், வண்ணமயமான கொடிகள், கடைகள், பசுக்கள் போன்ற பல நினைவுகள் வருவதை தடுக்க முடியாது. பனாரஸின் மற்றொரு பெருமை – உஸ்தாத் பிஸ்மில்லா கான். பனாரஸ் என்றாலே கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டு நதியைப் பார்த்தபடியே இசைக்கும் அவரது ஷெனாயின்...

Raanjhanaa hua mein tera . . . . . .

July 31, 2013
/   Hindi Reviews

ஹிந்திப்பாடல்களைப் பொறுத்தவரையில், கும்பலாக சேர்ந்து மிகவும் கலர்ஃபுல்லாக ஆடும் வகையிலான பாடல்கள் அங்கே மிகவும் பிரபலம். எனக்குத் தெரிந்து, தற்கால ஹிந்தி சினிமாவில் இப்பாடல்கள் பிரபலம் ஆனது ஜதின் – லலித் ஜோடியினர் அமைத்த பாடல்களில்தான். அதற்கு முன்பே ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ போன்ற படங்களில்...

மரியான் & Raanjhanaa – 2013

July 30, 2013
/   Hindi Reviews

மரியான் மற்றும் ராஞ்ஜனா ஆகிய இரண்டுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால், தனியே இவற்றைப்பற்றி எழுதி, படிப்பவர்களின் பொறுமையை சோதிப்பதற்குப் பதில் இரண்டு படங்களையும் ஒரே போஸ்ட்டில் போட்டுவிடலாம் என்று தோன்றியது. முதலில், ஒரு கடற்கரை கிராமத்துக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நமது அனுபவம்...

Talaash (2012) – Hindi

December 3, 2012
/   Hindi Reviews

நண்பர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அமீர் கானின் ரசிகரா? தலாஷை பார்த்தே தீருவேன் என்று கங்கணம் (கங்னம் அல்ல) கட்டிக்கொண்டு நிற்பவரா? ஆம் எனில் உங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போகக்கூடும். ரைட். அமீர் கான் படங்களைப் பற்றி நான் இதுவரை எழுதியதில்லை. பெரிதான காரணம் எதுவுமில்லை....

Gangs of Wasseypur II (2012) – Hindi

August 13, 2012
/   Hindi Reviews

கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் முதல் பாக விமர்சனங்கள் இங்கே: Gangs of Wasseypur (2012) – Hindi Gangs of Wasseyppur- Contd . . முதல் பாகத்தில் சர்தார் கானின் வாழ்க்கையைப் பார்த்தோம். ரமாதீர் ஸிங்குடனான அவனது மோதல், அதனால் ஏற்பட்ட பகை, சர்தார்...

Gangs of Wasseypur – Contd . .

June 28, 2012
/   Hindi Reviews

முன்குறிப்பு – இந்த விமர்சனத்தின் முதல் பாகம் படிக்க – Gangs of Wasseypur (2012) – Hindi Thanks to the Madurai Triumvirate – Bala, Ameer Sultan & Sasikumar For inspiring me to get back to my roots...

Gangs of Wasseypur (2012) -Hindi

June 27, 2012
/   Hindi Reviews

ஒரு சிறிய கற்பனை. நாம் ஒரு திரைப்படம் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில், வில்லன் ஒருவனை ஹீரோ கொல்வதாக வருகிறது. இந்த ஸீனை எழுத அமர்கிறோம். நமது கற்பனை எப்படி ஓடும்? முதலில், ஹீரோ தயாராவதைக் காட்டுகிறோம். லெதர் ஷூ அணிகிறார். அதில் ஸிப் வைத்திருக்கிறது. பாலீஷ் போடவே...

Swades (2004) – Hindi

May 18, 2012
/   Hindi Reviews

Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress. காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது...

Dev Anand – Abhi Na Jao Chhod Kar. .

December 5, 2011
/   Hindi Reviews

Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும் முதலாவது...

Kun Faya Kun – ரஹ்மானின் அடுத்த அற்புதம்

October 10, 2011
/   Hindi Reviews

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியைக் கொண்டு, ரஹ்மானின் மூன்று சூஃபி பாடலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அதற்குப் பின், தற்போது ரஹ்மானின் நான்காவது அருமையான சூஃபி பாடல் வெளிவந்துள்ளது. Rockstar படத்தில். பாடலின் பெயர், Kun Faya Kun. அதன் மொழிபெயர்ப்பு இதோ....

That Girl in Yellow Boots (2010) – Hindi

September 26, 2011
/   Hindi Reviews

அனுராக் காஷ்யப். நான் முதன்முதலில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரது படத்தைப் பார்த்தது No Smoking (2007). படு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படம். அதன்பின் தேவ்-டி. பின்னர் குலால். இந்த இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, குலால் படம், சுதீர் மிஷ்ராவின் ‘ஹஸாரோ(ன்) க்வாயிஷேன்...

Amu (2005)–English (அல்லது) சீக்கியக் கொலைகள்

May 5, 2011
/   Hindi Reviews

இந்தியாவைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்று பொதுவாக ஒரு சர்வே எடுப்பதாக வைத்துக்கொள்வோம். என் கணிப்புப்படி, மக்களின் கருத்து, இப்படியாக இருக்கலாம். இந்தியா ஒரு தெய்வீக பூமி இந்தியா ஒரு சாத்வீக நாடு இந்தியா, சக மனிதனை மதிக்கத் தெரிந்த நாடு இந்தியா, அவதார புருஷர்கள்...

Guzaarish (2010) – Hindi

March 2, 2011
/   Hindi Reviews

சஞ்சய் லீலா பன்ஸாலியைப் பற்றிப் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. எந்தத் தயாரிப்பாளரையும் ஏழையாக்கி விடுவார் என்று. அந்த அளவுக்கு, ஒரே ஒரு ஷாட் என்றாலும் கூட, அதையும் மிகப் பிரம்மாண்டமாகப் படமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் அவர். அவர் இதுவரை எடுத்துள்ள படங்களில், எனக்குப் பிடித்த...

Kishore Kumar – Chalte Chalte..

October 16, 2010
/   Hindi Reviews

ஹிந்திப் பாடல்களுக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு, ரங்கோலி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய ஆரம்ப நாட்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அந்நாட்களில், இருந்த ஒரே தொலைக்காட்சி அதுதான் என்பதனால், தூர்தர்ஷனின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்ப்பது எங்களது வழக்கம். குறிப்பாக ரங்கோலி, சித்ரஹார், சித்ரமாலா ஆகியவை. என்னவென்றே புரியாமல் பார்க்கத்தொடங்கிய நாட்கள் அவை....

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

September 30, 2010
/   Hindi Reviews

இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச்...

Dil Toh Bachcha Hai Ji – Ishqiya . . .

April 25, 2010
/   Hindi Reviews

சமீபகாலங்களில் நான் பார்த்த ஒரு மிக அருமையான, அழகான படம், இஷ்கியா. இதைப் போன்ற ஒரு படத்தைப் பார்த்துப் பல காலமாகிவிட்டது. காதல், நகைச்சுவை இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்துள்ள இப்படம், ஹிந்திப் படங்களில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் விஷால் பரத்வாஜின் உதவியாளர் அபிஷேக் சௌபே...

Salaam Bombay ! (1988) – Hindi

April 15, 2010
/   Hindi Reviews

மிகப்பல நாட்கள் கழித்து ஒரு உலகப்படத்தைப் பற்றிய பதிவு. இனி அடிக்கடி இம்மாதிரிப் பதிவுகள் வரும்படி பார்த்துக்கொள்கிறேன். நண்பர்களுக்கு ஸ்லம்டாக் மில்லியனர் நினைவிருக்கலாம். அப்படம் வெளிவந்த போது, ஒரு சாரார், அது இந்தியாவின் ஏழ்மையை உலகிற்கு விற்கிறது என்றும், இப்படம் தடை செய்யப்படவேண்டும் என்றும் கருத்துகளை வெளியிட்டனர்....

My Name is Khan (2010) – Hindi

March 2, 2010
/   Hindi Reviews

பல காலம் தொட்டே, நமது நாட்டில், சில ப்ரச்னைகள் இருந்து வருகின்றன. இதுவரை இவைகளுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலே, அடிவிழும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான், முஸ்லிம்கள். இந்தியாவில் மட்டும் இல்லை – உலகத்தில் எந்த மேற்கத்திய நாடாக இருந்தாலும், அங்கு முஸ்லிம்கள் என்றாலேயே...

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

January 18, 2010
/   Hindi Reviews

எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த ‘Hazaron khwahishen Aisi’ என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர்...

The Last Lear (2007) – Hindi

January 11, 2010
/   Hindi Reviews

இம்முறை, ஒரு மாறுதலுக்காக, ஒரு அருமையான ஹிந்திப் படம். இந்தப் பதிவுக்குக் கிடைக்கப்போகும் வரவேற்பை அனுசரித்து, எப்போதாவது ஒரு நல்ல ஹிந்திப்படத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். ஹிந்திப்படம் என்பதைப் படித்தவுடன், நண்பர்கள் இப்பக்கத்தைக் ‘கிலோஸ்’ (நன்றி: மிஸ்டர் பாரத் ரஜினி) செய்யாமல், மேலே...

Paa (2009) – Hindi

December 5, 2009
/   Hindi Reviews

எத்தனையோ தடவை கண்டபடி திட்டு வாங்கியிருந்தாலும், நமது அப்பா மேல் நமக்கு உள்ள பாசம் போகவே போகாது. என்ன ஆனாலும் அது அப்படியே தான் இருக்கும். ஒருவேளை சில நிகழ்வுகள் நடந்து, அவர் நம்மை விட்டுப் பிரிந்து இயற்கை எய்தியிருந்தாலும் கூட, அப்பா என்றால் நமக்கு ஒரு...