Iraivi (2016) – Tamil

June 9, 2016
/   Tamil cinema

தந்தையின் இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் இன்றுதான் இறைவி பார்க்க நேரம் கிடைத்தது. தமிழ் இணையம் முழுதும் இறைவி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ பத்தோடு பதினொன்றாக எனதும். படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் எங்கும் விவாதிக்கப்போவதில்லை என்பதால் தைரியமாகப் படிக்கலாம். சில கதாபாத்திரங்களைப்...

Kamalhassan & Rajinikanth – the 80s

March 3, 2016
/   Cinema articles

தமிழ் ஹிந்துவின் பொங்கல் மலர் – 2016க்காக ஜனவரியில் எழுதப்பட்ட கட்டுரை இது.   தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே எந்தப் பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டாலும் அங்கே இரண்டு பிரபல நட்சத்திரங்கள் இருந்தே வந்திருக்கின்றனர். எம்.கே.தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி என்று...

Visaranai (2016) – Tamil

February 9, 2016
/   Cinema articles

தமிழ்த் திரைப்படங்களில் மாற்று சினிமா என்பது மிகவும் தீனமான நிலையில் உள்ளது; நல்ல கலைப்படங்களும் மாற்று சினிமாவும் தமிழில் வந்தே ஆகவேண்டும் என்று பல வருடங்களாகத் தமிழ்த் திரைப்படங்களின்மீது ஒரு விமர்சனம் இருந்துகொண்டு இருக்கிறது. இங்கு வணிகப்படங்களே எந்த வருடத்தை எடுத்துக்கொண்டாலும் மிக அதிகமாக வரவும் செய்கின்றன....

சென்னை 13வது திரைவிழா – நியூஸ்7 பேட்டிகள் & My Movie List

January 14, 2016
/   Cinema articles

நேற்று நடந்து முடிந்த சென்னை 13வது உலகத் திரைப்பட விழாவைப் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளின் திரைப்படங்கள் பற்றி விவாதிக்க முடிந்தது. இந்த விவாதத்தில் நான் எடுத்துக்கொண்ட படங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் முக்கியமானவை. சமூகப் பிரச்னைகள், வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட...

அடுத்த சூப்பர்ஸ்டார் – யாருப்பா?

December 24, 2015
/   Cinema articles

கடந்த ஜூன் 4ம் தேதி, ‘ஜன்னல்’ இதழில் வெளியான கட்டுரை இது. காட்சி 1: மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்ற தியாகராஜ பாகவதர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது ஒரு தமிழ்ப்பத்திரிக்கை, அப்போதைய சிறந்த நடிகர் யார் என்ற கேவியை வாசகர்களிடம் கேட்கிறது. பெருவாரியான ஜனங்கள் பாகவதரையே...

காதலிக்க நேரமில்லை & ஸ்ரீதர்

December 23, 2015
/   Cinema articles

ஒரு வருடத்துக்கு முன்னர் எழுதப்பட்டு, டிசம்பர் ‘15 காட்சிப்பிழை இதழில் வெளியான கட்டுரை இது. தமிழில் இளைஞர்களுக்கான படங்கள் எப்போது வர ஆரம்பித்தன? யோசித்துப் பார்த்தால், கல்லூரியில் படிக்கும்/படித்துமுடித்தவுடன் இருக்கும் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான படங்கள் மணி ரத்னத்தின் வருகைக்குப்பிறகுதான் பெருமளவில் வர ஆரம்பித்திருந்தன என்பது தெரிகிறது. இது...

கோவை, அதன் சினிமா தியேட்டர்கள் & ஒரு சிறுவன் (நானேதான்)

October 2, 2015
/   80s Tamil

முன்குறிப்பு – 2013ல் ஒரு பிரபல பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை இது. கோவையில் நான் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த அனுபவங்கள். ஆனால் அப்பத்திரிகையில் கட்டுரை வெளியாகாமல், சில வாரங்கள் முன்னர் ‘அம்ருதா’ இதழில் வெளியானது. எனவே, அதன்பின் இங்கே வெளியிடுகிறேன். மூன்று வருடங்கள் முன்னர் எழுதியிருந்தாலும், எனக்கு...

Maya (2015) – Tamil

September 22, 2015
/   Tamil cinema

கட்டுரையில் மிகச்சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். ஒரு திகில் படத்தின் வேலை என்ன? ஆடியன்ஸை அவ்வப்போது பயமுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனைக்கெத்தனை இத்தகைய த்ரில் மொமெண்ட்கள் படத்தில் இருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை ஆடியன்ஸ் அந்தப் படத்தோடு ஒன்றமுடியும். ‘ஜம்ப்ஸ்’ என்று சொல்லக்கூடிய இத்தகைய திடும் தருணங்கள் மாயா திரைப்படத்தில் ஆங்காங்கே சரியாகவே...

Bahubali: The Beginning (2015) – Tamil & Telugu

July 14, 2015
/   Tamil cinema

‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’...

பாபநாசம் & Drishyam

July 7, 2015
/   Tamil cinema

ஒரு படத்தின் ஒரிஜினலைப் பார்த்துவிட்டு அதன் ரீமேக்கைப் பார்த்தால் அதில் சில பிரச்னைகள் வரும். ஒரிஜினலைப் பார்த்தவர்கள் ரீமேக்கை ஒத்துக்கொள்ளாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். உளவியல் ரீதியாக அதுதான் சாத்தியம். அதேசமயம் 95% ஒரிஜினலின் தரத்துக்கு ரீமேக் வர இயலாது என்பதும் உண்மை. நான் பாபநாசம் படத்தைத்தான்...