Malayalam Films – The New Wave

January 22, 2018
/   Cinema articles

ஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன். சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த...

Thithi (2015) – Kannada

June 10, 2016
/   Kannada films

கடந்த வருடம் வெளியான ‘திதி’ படம் தற்போது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது வீட்டுக்கு மிக அருகே இருக்கும் முகுந்தா தியேட்டரில் ஒரே ஒரு ஷோ மட்டும் போடப்படுக்கொண்டிருப்பதால் அதைப் பார்ப்பது மிக எளிதாக முடிந்துவிட்டது. இங்கு மட்டுமல்லாமல், பெங்களூர் முழுதும் பல தியேட்டர்களில் திதி...

சென்னை 13வது திரைவிழா – நியூஸ்7 பேட்டிகள் & My Movie List

January 14, 2016
/   Cinema articles

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம். Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்   ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில்...

Jafar Panahi & Taxi (2015)

January 12, 2016
/   Cinema articles

தமிழ் ஹிந்துவுக்காக எழுதப்பட்டு அவர்கள் சார்பில் சென்னைத் திரைப்பட விழாவில் விநியோகிக்கப்பட்ட கட்டுரை இது.   பிரபல இரானிய இயக்குநரான அப்பாஸ் கயரோஸ்தாமியின் உதவி இயக்குநராக இருந்தவர்; கான் படவிழாவில் கேமரா டோர் ( Caméra d’Or) விருது வாங்கிய முதல் இரானியப் படத்தின் இயக்குநர்; இரானில் தடை...

Winter’s Sleep (2014) – Turkey

December 19, 2014
/   BIFFES 2014

நூரி பில்கே ஜேலான் (அல்லது ஜெய்லான் – Ceylan என்பதில் C பொதுவாக J என்றே டர்க்கியில் சொல்லப்படும்) இயக்கியிருக்கும் இப்படத்தை பெங்களூரின் திரைப்பட விழாவில் நான் பார்த்தபோது, ஆரம்பித்து அரை மணி நேரத்தில் இருந்து ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. காரணம் இது 196 நிமிடப் படம்....

Now or Never (2014) – France

December 11, 2014
/   BIFFES 2014

Bangalore Film festival posts – 1 இனி கொஞ்ச நாட்களுக்கு இன்று முடிவடைந்த பெங்களூர் திரைப்பட விழாவில் நான் பார்த்த நல்ல படங்களைப் பற்றிய மினி கட்டுரைகள் வரும். இந்தப் படத்துடன் துவங்குவோம். உணர்வுரீதியாக ஒரு த்ரில்லரை இயக்குவது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். கதாபாத்திரங்களின் நிலைமை,...

A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை

May 27, 2014
/   world cinema

மே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய...

Instructions Not Included (2013) – Mexican

May 3, 2014
/   world cinema

மெக்ஸிகோவின் யூஜீனியோ டெர்பெஸ் (Eugenio Derbez) ஒரு பிரபலமான நடிகர். ஹாலிவுட் படங்களின் ரசிகர். ‘Life is beautiful’ மற்றும் ‘Little Miss Sunshine’ படங்களைப் பார்த்துவிட்டு அதேபோன்ற மனதைத் தொடும் படங்கள் எடுக்க ஆசைப்பட்டவர். பன்னிரண்டு வருடங்கள் தனது மனதில் இருந்த கதைக்கு மெல்ல மெல்ல...

Snowpiercer (2013) – South Korean

March 23, 2014
/   world cinema

ஒரு கற்பனை. ஏதோ ஒரு விபத்தால் உலகம் முழுதும் பனியாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் இறந்துவிடுகிறார்கள். உலகில் மிச்சம் இருப்பவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அவர்கள் அனைவரும் ஒரு ரயிலில் இருக்கிறார்கள். அந்த ரயில் நிற்காமல் உலகம் முழுக்கவும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பிரயாணத்தில் முடிவு என்பதே இல்லை. இறக்கும்வரை...

The Best Offer (2013) – Italian

March 21, 2014
/   world cinema

விர்ஜில் ஓல்ட்மேன் என்பவர், இடாலியில் வாழ்பவர். வயது – கிட்டத்தட்ட அறுபது. அவரது தொழில் – பழங்காலப் பொருட்களை மதிப்பீடு செய்வது. கூடவே, மிகவும் பிரபலமான ஒரு auctioneerராகவும் அவர் இருக்கிறார் (இதை தமிழில் சொன்னால் ‘ஏலம் விடுபவர்’ என்று தட்டையாகத்தான் இருக்கும். அதனால் இங்லீஷிலேயே இருக்கட்டும்...

BIFFES 2013: Heli (2013) – Mexico

January 2, 2014
/   BIFFES 2013

ஆள்கடத்தல், கொடூர தண்டனைகள், வன்முறை ஆகியவற்றை தினசரிகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். திரைப்படங்களிலும் அவற்றைப் பார்க்கிறோம். ஆனால் திரைப்படங்களில், இப்படிப்பட்ட நிகழ்வுகளின் நாடகத்தனமான வெளிப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. அதாவது, நிஜத்தில் எப்படி நடக்கிறதோ அப்படிக் காட்டாமல், அவற்றை Stylize செய்து, மிகைப்படுத்தியே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இப்படங்களில், வன்முறை...

BIFFES 2013 – Day 2 – The good, the bad and the realistic . .

December 30, 2013
/   BIFFES 2013

Day 1 பற்றிப் படிக்க இங்கே அமுக்கி முதல் படத்தைப் படித்துவிட்டு, இங்கே அமுக்கி இரண்டாவது படத்தைப் படிக்கலாம். Day 2: 28th Dec 2013 இரண்டாம் நாளில், The German Doctor படத்துக்குப் போகவேண்டும் என்பது திட்டம். ஆனால், கடைசி நிமிடத்தில் அது மாறியதால், முதலில்...

BIFFES 2013 – Day 1 – Like Father Like Son (2013) – Japanese

December 29, 2013
/   BIFFES 2013

நேற்று (27ம் டிஸம்பர்) மதியம் Harmony Lessons என்ற அருமையான கஸக்ஸ்தான் படத்தைப் பார்த்ததும், அரக்கப்பரக்க ஓடி, பக்கத்து ஸ்க்ரீனில் இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்க இருந்த இந்தப் படத்துக்குள் நுழைந்தேன். ஏற்கெனவே அங்கு வந்திருந்த ஷ்ரீ இடம் பிடித்து வைத்ததனால், கிட்டத்தட்ட ஹௌஸ்ஃபுல் நிலையில் இருந்த...

BIFFES 2013 – Day 1 – Harmony lessons (2013) – Kazakhstan

December 28, 2013
/   BIFFES 2013

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எங்கள் ஊரான பெங்களூரிலும் உலகப்படவிழா வந்துவிட்டது. 27ம் டிஸம்பர் முதல் 2ம் ஜனவரி வரை, 150க்கும் மேலான உலகப்படங்கள் வரப்போகின்றன. எனவே, அவற்றில் நான் பார்ப்பதை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் கட்டுரைகளை எழுதப்போகிறேன். இதோ இன்றுதான் முதல் நாள். இரண்டு படங்கள் பார்த்தேன்....

The Yellow Sea (2010) – Korean

December 19, 2013
/   world cinema

சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடத்தின் பெயர் – யான்பியான். சைனாவின் ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியின் சிறப்பம்சம் – வடக்கிலும் மேற்கிலும் எல்லையாக சைனாவும், தெற்கில் வடகொரியாவும், கிழக்கில் ரஷ்யாவும் இருப்பதே. இப்படி மூன்று நாடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதி,...

குழந்தைகள் மனச்சிதைவும் உலகத் திரைப்படங்களும்

September 27, 2013
/   Cinema articles

முன்குறிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘வலசை‘ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரை இது.  குழந்தைகள் மனச்சிதைவு என்பது உலகத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இதன் மூல வடிவத்திலிருந்து சற்றே எளிமையாக எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். கட்டுரை கொஞ்சம் பெரியது. ஆகவே,...

Ship of Theseus (2013) -English

August 18, 2013
/   world cinema

நமது சமுதாயத்தில், ‘நல்லது’ செய்பவர்களுக்கும், அவர்களின் பார்வையில் சும்மா இருந்து வாழ்க்கையை ‘வீணடிப்பவர்களுக்கும்’ இடையே எப்போதுமே விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும். இங்கே இந்த இரண்டு வார்த்தைகளையும் கோட்ஸினுள் கொடுத்திருப்பதற்குக் காரணம் உண்டு. சமுதாயத்துக்கான நாம் நல்லது செய்கிறோம் என்ற எண்ணம் மிகவும் போதை தரக்கூடியது. அந்த எண்ணத்தில்...

Headhunters (2011) – Norway

May 26, 2013
/   world cinema

ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது. ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரூல்...

The Bullet Vanishes (2012) – Chinese

May 20, 2013
/   world cinema

ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர்...

The Thieves (2012) – South Korean

May 16, 2013
/   world cinema

சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள்...

மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -1- ஸ்டானிஸ்லாவ்ஸ்கி

March 1, 2013
/   Cinema articles

Try acting, dear boy..it’s much easier – Laurence Olivier.   ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கிடையே இன்றும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடப்படுபவர், ஸர் லாரன்ஸ் ஒலிவியர். ’நடிகர்களுக்கெல்லாம் நடிகர்’ என்று அழைக்கப்படுபவர். ப்ரிடிஷ் நடிகராக இருந்தபோதிலும், ஹாலிவுட் இவரை தத்தெடுத்துக்கொண்டது. இங்க்லாண்டிலும் அமெரிக்காவிலும் பல ஷேக்ஸ்பியரின்...

The Intouchables (2011) – French

February 26, 2013
/   world cinema

கழுத்துக்குக் கீழே இருக்கும் எந்த உறுப்பும் செயல்படாமல் போய், vegetable என்று சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்துவரும் மனிதர்களை, Quadriplegic என்ற பதத்தால் குறிப்பிடுவார்கள். ஹாலிவுட் திரைப்பட நடிகர் க்ரிஸ்டோஃபர் ரீவ் (சூப்பர்மேன் புகழ்) ஒரு உதாரணம். ஹிந்தியில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘Guzaarish‘ திரைப்படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தைக்...

[REC] – Spanish (2007)

January 14, 2013
/   world cinema

Blair Witch Project திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் இது. படம் முழுக்கவே ஹேண்டிகேமை வைத்தே எடுக்கப்பட்டதுபோன்ற எஃபக்டைக் கொடுக்கும். இந்தப் படத்தின் தீம், குறிப்பிட்ட சிலர் ஒரு பகுதியில் பலகாலமாக பேசப்பட்டுவரும் சூனியக்காரி ஒருத்தியைப் பற்றிய வீடியோ...

Tesis (1996) – Spanish

September 3, 2012
/   world cinema

அலெஹாந்த்ரோ அமினாபார் (Alejandro Amenábar) பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். The Sea Inside என்ற அற்புதமான ஸ்பானிஷ் படத்தைக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய The Others படமும் ஒரு நல்ல த்ரில்லர். தனது திரைவாழ்க்கையின் துவக்கத்தில் இவர் இயக்கிய முதல் முழுநீளப்...

Julia’s Eyes (2010) – Spanish

August 23, 2012
/   world cinema

பார்வை பறிபோய் இந்த உலகில் வாழும் நிலை எத்தகையது? நம்முடைய சராசரி வாழ்க்கையிலேயே அப்படி வாழ்வது கடினம். பார்வை போவதற்குமுன்வரை நாம் கண்டுணர்ந்த வண்ணமயமான உலகம், அதன்பின் ஒரேபோன்ற இருண்ட தன்மை உடையதாகிவிடுகிறது. அந்த இருளில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நம்முடைய மனதில் குழப்பங்களையும் பயத்தையுமே உருவாக்குவதாக...

The Orphanage (2007) – Spanish

August 20, 2012
/   world cinema

ஹாரர் படங்கள் என்பது ஒரு தனி வகை. இவற்றில் எடுத்தவுடன் கைகால்களை வெட்டுவது, கைமா செய்வது போன்ற படங்கள் மிக அதிகம். அதேபோல், அவற்றுக்கு நேர் எதிராக, அழகான, கலைநயமிக்க ஹாரர் படங்களும் உள என்று அறிக. அத்தகைய ஒரு அழகிய ஹாரர் (???!!) படத்தைத்தான் இப்போது...

Soul Kitchen (2009) – German & கலகலப்பு

June 25, 2012
/   Copies

உலகப்படங்களிலிருந்து நமது தமிழ்ப்படங்கள் ரகவாரியாகத் திருடப்படுவதைப் பற்றி நமது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். சிலபேர் (கே.வி. ஆனந்த் & Co) பயங்கர வெளிப்படையாக, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணத்தில் ஆனந்தின் ‘அயன்’ படத்தில் டிவிடி கடையில் வந்து இயக்குநர்களின் ஜூனியர்கள் விசாரிப்பதைப்போல், ’Maria...

Not One Less (1999) – Chinese

June 20, 2012
/   world cinema

முன்குறிப்பு – தமிழ்ஸ்டுடியோ டாட் காம் இந்த வருடம் மே மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவுக்கான புத்தகத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. புத்தகம் விரைவில் வெளியாகும். உலகப்பட ரசிகர்கள், சைனாவின் ஸாங் யிமோவை (Zhang Yimou) மறக்கவே முடியாது. பல்வேறு விதமான...

Birdcage Inn (1998) – South Korean

May 7, 2012
/   world cinema

கிம் கி டுக் சீசன் 2 இன்றிலிருந்து ஆரம்பம். அவரது புகழ்பெற்ற படங்களை சீசன் ஒன்றில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இனி, அவரது அதிகம் புகழ்பெறாத – ஆனால் தரத்தில் பிற படங்களுக்குக் குறையாத படங்களைப் பார்க்கப்போகிறோம். ஒரு படத்தைக் கூட விடுவதில்லை. அட்லீஸ்ட் மாதம் ஒரு படம்....

The Artist (2011) – French

February 25, 2012
/   world cinema

பல நாட்களாகவே, இந்தப் படத்தைப் பற்றிப் பல விஷயங்கள் கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனையுமே, இது ஒரு டாப்க்ளாஸ் படம், இதுவரை இப்படியொரு படம் வந்ததில்லை, அற்புதம், அபாரம் என்ற முறையிலேயே இருந்தன. ஆகவே, இயல்பாகவே, இப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. கடைசியாக, இன்று படத்தைப் பார்த்தே...

சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா – சில குறிப்புகள்

December 13, 2011
/   Tamil cinema

நாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec 2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும்...

13 Assassins (2010)–Japanese

October 5, 2011
/   world cinema

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜப்பானில், நாரிட்ஸுகு என்ற ஒரு கொடுங்கோல் பிரபு வாழ்ந்துவந்தான். அக்காலத்திய ஜப்பானில், ‘ஷோகனேட்’ (Shogunate) என்ற பெயரில் ஆட்சி புரிந்துவந்த ராணுவ தளபதிகள் இருந்தனர். மன்னராலேயே நியமிக்கப்படும் அதிகாரம் உடைய இவர்கள், ஸாமுராய் மரபினர். தங்களது தளபதிகளை ‘ஷோகன்’ என்ற பெயரில் அழைத்து, அவர்களிடம்...

Inside (À l’intérieur – 2007) – French

September 5, 2011
/   world cinema

அடுத்த நொடியில் உயிர் போகப்போகிறது என்ற சூழலில், எந்த எல்லை வரை மனித உயிரால் செல்ல இயலும்? அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும்? ஸாரா, ஒரு கர்ப்பிணி. கொடூரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் ஸாராவின்...

The Good, the bad, the Weird (2008)–South Korean

June 19, 2011
/   world cinema

செர்ஜியோ லியோனியின் (நம்ம திண்டுக்கல் லியோனியின் தூரத்து உறவுக்காரர் அல்ல) ஸ்மேஷ் ஹிட் படமான ‘The Good, bad and the Ugly’ படத்தை யாராலும் மறக்க இயலாது. படு ஸ்டைலிஷான படம் அது. ஒரு காலத்தில், காட்ஃபாதர் படம் ஆங்கிலத்தில் வந்தபின், தொடர்ந்து பல நாடுகளிலும்...

ஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்

June 15, 2011
/   Tamil cinema

தமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல்...

A Serbian Film (2010)–Serbian

May 23, 2011
/   world cinema

நமது தளத்தில், இதுவரை பார்த்துவந்த படங்களுக்கு நேர் எதிரானதொரு படத்தை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ‘நேர் எதிர்’ என்று நான் சொன்னதற்குக் காரணம், வழக்கமான மென்சோக உணர்வையோ, அல்லது நகைச்சுவை உணர்வையோ, அல்லது இவற்றைப் போன்ற உணர்வுகளையோ இப்படம் தராது. இப்படம் தரக்கூடிய உணர்வு, பயம் –...

I saw the Devil (2010) – South Korean

May 17, 2011
/   world cinema

கருந்தேளில், கிம் கி டுக் இல்லாத தென் கொரியப் படம் ஒன்றின் விமர்சனம் வருவது அவ்வளவு எளிது அல்ல என்பதை நண்பர்கள் அறிவீர்கள். இருப்பினும், அப்படியும் பல நல்ல படங்கள் இருப்பதால், இனி அவற்றைப் பற்றியும் அவ்வப்போது பார்க்கலாம். படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இப்படம் எப்படி என்னிடம்...

Amu (2005)–English (அல்லது) சீக்கியக் கொலைகள்

May 5, 2011
/   Hindi Reviews

இந்தியாவைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்று பொதுவாக ஒரு சர்வே எடுப்பதாக வைத்துக்கொள்வோம். என் கணிப்புப்படி, மக்களின் கருத்து, இப்படியாக இருக்கலாம். இந்தியா ஒரு தெய்வீக பூமி இந்தியா ஒரு சாத்வீக நாடு இந்தியா, சக மனிதனை மதிக்கத் தெரிந்த நாடு இந்தியா, அவதார புருஷர்கள்...

The Coast Guard (2002) – South Korean

April 6, 2011
/   world cinema

இந்த உலகின் சிறந்த தற்கால இயக்குநர்களில் ஒருவரான கிம் கி டுக்கின் படங்களைப் பார்ப்பது ஒரு தேர்ந்த கலாபூர்வமான அனுபவமாக இருப்பதற்குக் காரணம், அவரது படங்களில் வெளிப்படும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், பொதுவாகத் தங்களது உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தாமல், அவர்களது...

Dersu Uzala (1975) – Russian

December 22, 2010
/   world cinema

மறுபடியும் குரஸவா. இம்முறை, ஆஸ்கர்களில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது (1976ல்) பெற்ற ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம். ஆனால், இது ஜப்பானியப் படம் அல்ல. ரஷ்யப் படம். குரஸவா முதன்முதலில் இயக்கிய ஜப்பானியப் படமல்லாத ஒரு வெளிநாட்டுப் படம் இது. தலைசிறந்த இயக்குநர்களுக்கு எங்கே சென்றாலும்...

நந்தலாலா – மூலமும் நகலும்

December 2, 2010
/   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....

நந்தலாலாவை முன்னிட்டு…

November 30, 2010
/   Copies

தமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால்,...

கோமல் கந்தார் (1961) – வங்காளம்

November 19, 2010
/   world cinema

இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் யார்? இந்தக் கேள்விக்கு, நம்மில் பல பேர், மணிரத்னம் என்று சொல்லக்கூடும். இன்னும் சில பேர், ஷங்கர் என்று கூடக் கூறலாம் (அடப்பாவிகளா). சில பேர் சத்யஜித் ரே என்று சொல்லலாம். இன்னமும், கேத்தன் மேத்தா, நிமாய் கோஷ், அபர்ணா சென், ரிதுபர்ணோ...

Broken Embraces (2009) – Spanish

November 18, 2010
/   world cinema

இதற்கு முன்னரே, பெத்ரோ அல்மதோவாரின் சில படங்களைப் பார்த்திருந்தும், அவற்றை எழுத அமரும்போதெல்லாம், எதாவது வந்து குறுக்கிடும். வேறு ஒரு படத்தைப் பார்க்க நேரும். அந்த ஜோரில், இந்தப் படம் பற்றி எழுத மறந்துவிடும். ஆனால் இம்முறை, எழுதியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பனிரண்டரைக்கு உட்கார்ந்து...

Time (2006) – South Korean

November 16, 2010
/   world cinema

மீண்டும் கிம் கி டுக். இப்படம், நமது தளத்தில் நாம் பார்க்கும் ஆறாவது கிம் கி டுக் படம். இதற்கு முன் எழுதிய ஐந்து கிம் கி டுக் படங்களையும் பற்றிப் படிக்க, இப்பதிவின் மேலுள்ள கிம் கி டுக் லேபிளைக் க்ளிக் செய்து படிக்கவும். இந்தப்...

Red Beard (1965) – Japanese

November 10, 2010
/   world cinema

அகிரா குரஸவா. இந்தப் பெயரை, உலக சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? இப்பொழுது திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்பெறும் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது படங்களைக் காப்பியடித்த ஹாலிவுட் நிறுவனங்கள் மீது தயங்காது வழக்குகள் தொடுத்து அவற்றில் வெற்றியும் பெற்றவர். இவரது படங்களின் டிவிடிக்களைப் பார்ப்பதில்...

Karakter (1997) – Dutch

October 19, 2010
/   world cinema

தந்தையின் பெயர் தெரியாமல் இச்சமூகத்தில் வாழும் புதல்வர்களை, சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? நமது ஊராக இருந்தால், அடித்தே கொன்றுவிடுவார்கள். அதுதான் வழக்கம். எனவே, வெளிநாடுகளைப் பற்றி யோசிப்போம். நெதர்லாந்து. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ட்ரெவர்ஹாவன் என்ற கோர்ட்...

Caramel (2007) – Arabic

October 13, 2010
/   world cinema

கேரமெல் என்பது…. நாமெல்லோரும் நினைக்கும் அதே கேரமெல் தான். சர்க்கரைப் பாகு. இந்தப் பாகு, சமைப்பதற்கு மட்டுமன்றி, வேறு பல உபயோகங்களையும் கொண்டது. அதில் ஒன்று தான் – இப்படத்தில் வருவது. பதமான சர்க்கரைப் பாகு, அழகு நிலையங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. நோக்கம்? உடலில் உள்ள முடிகளை நீக்குவது....

A Tale of Two Sisters (2003) – South Korean

September 17, 2010
/   world cinema

நல்ல த்ரில்லர்கள் என்றால் எங்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில், ஷ்ரீயின் செலக்‌ஷன் இப்படம். பொதுவாகவே, பேய்ப்படங்களைப் பார்க்கையில் நான் எந்த நிலையில் இருப்பேன் என்பதை, எனது முதல் பதிவான ‘Drag me to hell’ விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன். கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில்...

Breath (2007) – South Korean

September 15, 2010
/   world cinema

கடைசியாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதியது, போன மாதம் என்று நினைக்கிறேன். மங்கோல். அதன்பின்பு, அடுத்த திரைப்படம் இது. இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாஸன், கொடைக்கானல் என்று பிஸியாக இருந்துவிட்டேன். சரி. இந்த ‘ப்ரெத்’ என்பது, கிம் கி டுக் இயக்கிய ஒரு திரைப்படம். நாம் பார்க்கும் ஐந்தாவது...