Karundhel.com http://karundhel.com Reviews with a Sting Sun, 06 Sep 2020 14:37:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 http://karundhel.com/wp-content/uploads/2020/06/cropped-Logo-3-1-1-32x32.png Karundhel.com http://karundhel.com 32 32 Softwareம் கருந்தேளும் http://karundhel.com/software-and-the-politics/ http://karundhel.com/software-and-the-politics/#comments Sun, 06 Sep 2020 14:35:36 +0000 http://karundhel.com/?p=6880 அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை.

பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக் காரணம், அந்தச் சமயத்தில் சினிமாவிலும் சாஃப்ட்வேரிலும் ஒரே சமயத்தில் வேலை செய்ய முடியாததே.  நான் 2012ல் இருந்தே இரண்டு வேலைகளையும் செய்து வந்தாலும், 2015ல் ஏதோ ஒன்றுதான் செய்யமுடியும் என்ற இடத்தில் வந்து நின்றது. எனவே, எது வேண்டும் என்று யோசித்து, பென்பொருள் வேலையை விட்டேன். அதன்பின் சினிமாவுக்கு வந்து இன்றுவரை மனதுக்குப் பிடித்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன். 

இப்போது யோசித்துப் பார்த்தால், 2003ல் இருந்து 2015 வரை பன்னிரண்டு வருடங்கள் சாஃப்ட்வேரில் இருந்தது ஒரு பெரிய காலகட்டம். மென்பொருள் துறைதான் எனக்கு வீடு வாங்க உதவியது. பல நண்பர்கள் கிடைத்தனர். ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கல்லூரி முடித்துவிட்டு, வெளிவாழ்க்கை பற்றி எதுவும் தெரியாமல் இருந்த என்னை, ஒரு முழு மனிதனாக மாறுவதற்குப் பெரிதும் உதவியது சாஃப்ட்வேர் துறையே. இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். அவற்றில் சில நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறேன். அவற்றில் அவ்வப்போது நடத்தப்படும் சுயமுன்னேற்ற வகுப்புகள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். இதனால் பலருடனும் பேசி, நம் கருத்தை ஆணித்தரமாக நிறுவும் திறன் இயல்பிலேயே வந்துவிட்டது. இதுபோல் பல விஷயங்களை நான் சிறுகச்சிறுகக் கற்றுக்கொண்டது மென்பொருள் துறைதான். 

அதேசமயம், சினிமாவில் நான் இல்லாவிட்டாலும் எப்படியும் இந்த ஐந்து வருடங்களில் இன்னும் 2,3 நிறுவனஙக்ள் மாறியிருப்பேன் என்றே தோன்றுகிறது. காரணம், நான் சந்தித்த அரசியல். அதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். 

முதலில், மென்பொருள் நிறுவனங்களில் பல வகைகள் உண்டு. நான் சொல்வது சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் என்ற அளவுகோல் அல்ல. மாறாக, இந்த நிறுவனத்தில் சேர்ந்தால் பல வருடங்களுக்குப் பிரச்னை இருக்காது; இந்த நிறுவனத்தில் அடிக்கடி ஆட்குறைப்பு நடக்கும் – இதுபோன்ற பிரிவுகளையே சொல்கிறேன். இதெல்லாம், 2003ல் இருந்து 2015 வரையான காலகட்டம்.  இந்தப் பன்னிரண்டு வருடங்களில் நான் 6 நிறுவனங்கள் மாறினேன். இறுதியில் வேலை செய்த நிறுவனத்தில் மட்டுமே நான்கரை வருடங்கள். மற்ற நிறுவனங்களில் 1ல் இருந்து 2 வருடங்களுக்குள் மாறிவிடுவேன். காரணங்கள் பல. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரே ஒரு முக்கியமான காரணம் – அரசியல். 

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். நான் பெங்களூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் எனக்கு மேலாளராக இருந்தது ஒரு வட இந்தியப் பெண். என்னுடன் ஒரே சமயத்தில் இன்னொரு வட இந்தியரும் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கும் இந்த வட இந்தியப் பெண்தான் மேலாளர். இயல்பிலேயே இந்த இரண்டு பேரும் ஒரே ஊர், ஒரே மொழி என்பதில் ஒன்றுசேர்ந்துவிட்டனர்.  இது ஒரு புறம். அதேபோல், தமிழகம் – ஊட்டியைச் சேர்ந்த ஒரு நபரும் எங்கள் டீமில் இருந்தார். எனவே நானும் அவரும் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம். ஒரு நாள், அதே நிறுவனத்தின் பக்கத்துக் கட்டிடத்தில் இருந்த எனது கல்லூரி நண்பனுடன் மதிய உணவு சாப்பிடச் சென்றேன். அப்போது என் டெஸ்க்குக்குப் பக்கத்தில் இருந்த அந்த ஊட்டி நபருக்கு இந்த வட இந்திய மேனேஜரிடம் இருந்து ஃபோன். அவர் அப்போது எங்கோ போய்விட்டுக் காரில் அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார். ஊட்டிக்காரரிடம், ‘ராஜேஷ் அங்கே இருக்கிறாரா? இருந்தால் பேசச்சொல்லுங்கள்’ என்று சொல்ல, நான் அங்கே இல்லை. பக்கத்துக் கட்டிடத்தில் எனது நண்பனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஊட்டிக்காரர், ராஜேஷ் இங்கே இல்லை என்று சொல்ல, வட இந்திய மேனேஜர் ஃபோனை வைத்துவிட்டார். 

மறுநாள், எங்கள் அனைவருக்கும் பொதுவான மேலாளருடன் ஒரு மீட்டிங். நான் செல்கிறேன். வட இந்திய மேனேஜர் அங்கே இருக்கிறார். இருவர் மட்டுமே. அப்போதே புரிந்துவிட்டது. ஏதோ நடந்திருக்கிறது என்று. குறுக்குவிசாரணை ஆரம்பிக்கிறது. 

வட இந்திய மேலாளர் – நேற்று மதியம் உணவு இடைவேளையில் உங்களை நான் அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கு இல்லை. எங்கு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா? 

நான் – பக்கத்துக் கட்டிடத்தில் என் நண்பனுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

வ.இ. மே – இல்லை. நீங்கள் ஒரு பெண்ணை பைக்கில் பின்னால் வைத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தீர்கள். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்

நான் – துளிக்கூட வாய்ப்பே இல்லை. இங்குதான் இருந்தேன். வேண்டுமென்றால் இதே நிறுவனத்தில் பணி புரியும் என் நண்பனிடம் கேளுங்கள். 

வ.இ.மே – சரி நீங்கள் போகலாம்

என்ன விஷயம் என்றால், அவர் அலுவலகம் வரும்போது எவனோ ஒரு பெண்ணுடன் பைக்கில் செல்வதைப் பார்த்திருக்கிறார். அவர் கண்ணுக்கு அது நானாகத் தெரிந்திருக்கிறது. உடனே விசாரணை. அன்றில் இருந்து, அந்த வட இந்திய மேலாளர் என்னுடன் சகஜமாகப் பேசுவதை நிறுத்திவிட்டார். அவ்வப்போது வேலை சம்மந்தமாக மட்டுமே பேசுவார். 

இதன்பின் பல மாதங்கள் கழித்து, அலுவலகத்தில் திடீரென்று எனக்கு அழைப்பு. உங்களை வேலை நீக்கம் செய்யப்போகிறோம் என்று. நான் கவலைப்படவில்லை. அடுத்த வாரமே இன்னொரு பெரிய நிறுவனத்தில் 50% அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது. அங்கேதான் நான்கரை வருடங்கள் இருந்தேன். ஆனால் இங்கே சொல்லவந்தது, எதற்காக என்னை வேலையில் இருந்து எடுக்கிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. காரணம், என்னுடன் வேலைக்கு சேர்ந்த வட இந்திய நபர் முதலிலேயே என்னிடம் சொல்லிவிட்டார். முதலில் அவரைத்தான் தூக்குவதாக இருந்ததாகவும், என் வட இந்திய மேலாளர் அவரை அழைத்து, உன்னைத் தூக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று சொன்னதாகவும் (அப்படிச் சொல்லவே கூடாது. அது அலுவலக விதிகளுக்குப் புறம்பானது), அப்படிச் செய்யவேண்டாம் என்று இவர் கெஞ்சியதாகவும், ‘சரி.. நாம் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். எனவே உன்னைத் தூக்கமாட்டேன். மாறாக ராஜேஷைத் தூக்கிவிடுகிறேன்’ என்று அந்த வட இந்திய மேலாளர் சொல்லியிருக்கிறார். இதுதான் காரணம். 

நான் பார்த்தவரை, எனக்கு அமைந்த மேலாளர்களில் ஓரிருவர் மட்டுமே நியாயமானவர்கள். அவர்களில், அந்த வட இந்திய மேலாளரின் தலைமை மேலாளர் குறிப்பிடத்தக்கவர். அதாவது, வட இந்தியரின் நேரடி மேலாளர். அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். தனக்குக் கீழ் வேலை செய்பவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுக்கு உதவுபவர். அவரிடம், இந்த வட இந்திய மேலாளர் எனக்கு எதிராக இப்படி ஒரு பாலிடிக்ஸ் செய்கிறார் என்று சொல்லியிருந்தால் தக்க நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் அப்படி நடந்தாலும் எப்படியும் அந்த வட இந்தியருடன்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அவரை நான் அணுகவில்லை. அடுத்த நிறுவனம் மாறிவிட்டேன். 

இது ஒரு சாம்பிள் மட்டுமே. பொதுவாக, முதலில் இருந்தே என் வழக்கம், எனக்கு ஒரு பிரச்னை வந்தால் எங்கிருந்து வந்திருக்கிறதோ அந்தக் காரணத்தை நேரடியாகச் சென்று சந்திப்பதே. மென்பொருள் துறையில் ஒரு protocol உண்டு. ஒரு பிரச்னை வந்தால் நமது மேலாளரிடம்தான் முதலில் பேசவேண்டும். அதன்பின் அவர், அவரது மேலாளரிடம் பேசுவார். இப்படி இருக்கும். ஆனால் மேலாளரே பிரச்னை என்றால்? அந்தச் சமயங்களில் நாம் என்ன பேசினாலும் அது அவரது மேலாளருக்குச் செல்லாது. எனவே, நான் பொதுவாக இப்படிப் பிரச்னை வந்தால், நேரடியாக அலுவலகத்தின் மிகப்பெரிய தலை எதுவோ, அந்த VPயிடமே நேராகப் பேசுவது வழக்கம். இப்படிப் பேசி, பல பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல- பேசவே தயங்கும் சக நண்பர்களுக்காகவும்தான். இதனாலேயே வேறு சில நிறுவனங்களில் என் மேலாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் அவற்றைப்பற்றிக் கவலையே பட்டதில்லை. எது நல்லதோ அதைச் செய்யவேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது. Hierarchyயை எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீறுவேன்.

இந்த பாலிடிக்ஸ் என்பது எல்லாபக்கமும் இருப்பதுதான். கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மேலாளரின் காலில் விழுந்துவிட்டால் வேலைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் அது எனக்குப் பிடிக்காத செயல். மென்பொருள் துறையில் இது அவசியம் ஒரு பெரிய பிரச்னை. அங்கே வேலை செய்பவர்களுக்கு என்று எந்த யூனியனோ அமைப்போ கிடையாது. எனவே பல தொழிலாளர்களின் பிரச்னைகள் வெளியே வருவதே கிடையாது. இந்தக் கட்டுரை போன்று யாராவது எழுதினாலோ பேசினாலோதான் உண்டு. 

ஒருவேளை நான் இன்னமும் மென்பொருள் துறையில் இருந்திருந்தால் இப்போது ஒரு சீனியர் மேனேஜர் ஆகி, எனக்குக் கீழே ஒரு பெரிய டீம் இருந்திருக்கும். ஆனால் அப்போது நான் அவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாமல், அவர்களின் பிரச்னைகள் அறிந்து, அவர்களுடன் வெளிப்படையாகப் பேசும் மேனேஜராகவே இருந்திருப்பேன். அதுதான் தேவையும் கூட. அனைவரும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் இனம், மொழி, சாதி சார்ந்த பிரிவுகள் மென்பொருளிலும் உண்டு. அவற்றால் தேவையே இல்லாமல் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். 

உதாரணமாக, என்னுடன் வேலை செய்த வட இந்தியர்கள் அத்தனை பேரும், ‘நீ என்ன சாதி?’ என்று கேட்காமல் இருந்ததில்லை. சாதி வாரியாகத்தான் பழகுகிறார்கள் என்பதற்காக இதைச் சொன்னேன். அப்போதெல்லாம், ‘சொல்ல முடியாது. இனி இப்படி யாரிடமும் கேட்கவேண்டாம்’ என்றே பதில் சொல்வேன். அதேபோல், நேரடியாக, அறிமுகம் இல்லாதவர்களிடமும் போய், ஹிந்தியில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள். ஒருவர் கூட விதிவிலக்கில்லை. அப்போதெல்லாம் பதிலுக்கு நான் தமிழில் பேசுவேன். புரியவில்லை என்பார்கள். நானும் எனக்கு ஹிந்தி புரியவில்லை என்பேன். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏராளம் உண்டு.  நான் வட இந்தியர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை. எனக்கு நடந்ததைச் சொன்னேன். என் நண்பனுக்கு ஒரு மேலாளர் இருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் கீழ் வேலை செய்யும் வட இந்தியர்களும், ஒரு சில தென்னிந்தியர்களும்  அவர் சொல்வதை மதிக்க மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார். சில நாட்கள் கழித்து வேறு நிறுவனம் சென்றுவிட்டார். 

இன்னும் நிறைய எழுத முடியும்.  ஆனால், சொல்ல வந்தது, மென்பொருள் மட்டுமில்லாமல் எல்லாத் துறைகளிலும் அரசியல் உண்டு. நாம் அவற்றைத் துணிவுடன் எதிர்க்கவே வேண்டும் என்பதையே. யார் கண்டது? ஒருவேளை மென்பொருள் நிறுவனத்தில் நான் இப்போதுவரை இருந்திருந்தால் இந்நேரம் ஒரு யூனியனைத் துவங்கியிருக்கலாம். 

]]>
http://karundhel.com/software-and-the-politics/feed/ 2
The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும் http://karundhel.com/the-art-of-screenplay-writing-a-few-questions-and-my-answers/ http://karundhel.com/the-art-of-screenplay-writing-a-few-questions-and-my-answers/#comments Tue, 14 Jul 2020 12:44:38 +0000 http://karundhel.com/?p=6858 இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில் விரிவாக அவரது திரைக்கதை சார்ந்த கேள்விகளையும், எனது விரிவான பதில்களையும் கொடுக்கிறேன். நன்றி.

முதலில் கேள்விகள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

அடுத்து, எனது பதில்கள்.

1. ஒரு நாளில் திரைக்கதை எழுதுவதற்கு எத்தனை மணிநேரங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

கண்டிப்பாக, வேலை ஆரம்பித்ததும், எப்படியும் 6-8 மணி நேரங்கள். சிலசமயம் தனியாக, நம் இடத்தில் இருந்து எழுதும்படி இருக்கும். அப்போதெல்லாம் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை fix செய்துகொண்டு 6-8 மணி நேரங்கள் எழுதுவேன். சிலமுறைகள் இயக்குநருடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டே எழுதும்படி இருக்கும். அப்போது இந்த நேரம் மாறுபடும். காரணம் காட்சிகளை இரண்டு பேர் அல்லது ஒரு குழு விவாதித்துக்கொண்டு, பின்னர் எழுதுவதால் 8 மணி நேரம் என்பது 5 அல்லது 6ஆக மாறலாம். (விவாதிக்கும் நேரம் தனி. எப்படியும் ஒரு நாளுக்கு எல்லாவற்றையும் சேர்த்து மினிமம் 8 மணி நேரம் எழுதுவேன்).

நாம் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் எப்போது ஷூட் போகப்போகிறது என்பதைப் பொறுத்தும் இது மாறும். பொதுவாகத் திரைக்கதை எழுதுவதற்கு – அதிலும் முதல் draft தயார் செய்வதற்குக் கண்டிப்பாக 1-2 மாதங்கள் ஒதுக்கப்படும். நாம் கமிட் ஆனதும், தயாரிப்பாளரிடம் சம்பளம் பேசி, நமக்கான அட்வான்ஸ் வாங்கிக்கொண்டுதான் திரைக்கதை எழுத ஆரம்பிக்கவேண்டும் என்பது என் கருத்து. நான் இப்படித்தான் செய்கிறேன். எனவே, இதெல்லாமே திரைக்கதை எழுதுவதை நேரடியாக பாதிக்கும். Pre production, ஷூட் எல்லாமே விரைவில் துவங்குகிறது என்றால் திரைக்கதையை வேகமாக முடிக்க வேண்டும். ஷூட்டுக்கு இன்னும் நேரம் உண்டு என்றால் நிதானமாக எழுதலாம். 

அதேபோல் திரைக்கதை எங்கே எழுதுகிறோம் என்பதும் முக்கியம். நமக்கான ஒரு இடம் வேண்டும். பொதுவாகத் திரைப்படங்களில் கமிட் ஆனபின்னர், ஒன்று – இயக்குநரின் அலுவலகத்திலோ, அல்லது இரண்டு – ஏதேனும் ரிசார்ட்டிலோ, மலைகளில் காட்டேஜ்களிலோ – இப்படி எழுதுவதற்கும் விவாதிப்பதற்கும் வசதியான இடங்கள் ஒதுக்கப்படும். எந்தத் தொந்தரவும் இல்லாமல் அங்கே எழுத முடியும். அல்லது நமது வீட்டில், நமக்கான இடத்தில் எழுதலாம். 

கூடவே, திரைக்கதை எழுதும் முன்னர், கதை, பக்காவாக லைன் ஆர்டர் போடப்பட்டு ஒவ்வொரு காட்சியிலும் என்னென்ன நடக்கிறது என்பது மிகத்தெளிவாக இருக்கவேண்டும். திரைக்கதை என்பது இறுதியான ப்ராசஸ். எனவே எல்லாமே தயாராக ஆனபின்னர்தான் திரைக்கதை.

இவை எல்லாமே திரைக்கதை எழுதுவதற்கு மிகவும் முக்கியம். 

2. எழுதும் வேலை ஆரம்பித்ததும் கதைக்குள் மூழ்குவதற்கு எத்தனை மணி நேரங்கள் பிடிக்கிறது?

உடனே. காரணம், கதையை விரிவாகப் பேசும்போதே கதைக்குள் மூழ்கிவிடவேண்டும். திரைக்கதை என்பது இருப்பதிலேயே கடைசி ஸ்டெப். கதையில் முதலில் இருந்து இறுதி வரை என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தான் திரைக்கதை எழுத வேண்டும். எழுத முடியும். எனவே, எழுதும் வேலை ஆரம்பிக்கும்போதே திரைக்கதைக்குள் – கதைக்குள் மூழ்கித்தான் எழுதவே முடியும். அப்படி இல்லாவிட்டால் திரைக்கதை மேல் interest போய்விடும்.

3. celtx, final draft, fountain pen, ball point, gel, pencil, a4, google docs, ms word. எல்லா வடிவங்களிலும் எழுதி இறுதியாக ஒரு வடிவத்திற்கு செட் ஆகியிருப்பீர்கள். எது?

நான் முதலில் எழுத ஆரம்பித்தது Wordல். ஆனால் அதில் formatting பிரச்னைகள் மிக அதிகம். ஒரு word templete உருவாக்கிக்கொண்டு, பின்னர் அதை ஃபாலோ செய்யலாம். ஆனால் word ஒரு திரைக்கதையை எழுதும் அனுபவம் கொடுக்காது எனக்கு. ஏதோ ஒரு official letter டைப் செய்வதுபோல்தான் இருக்கும். இதனால் celtxக்கு மாறினேன். அட்டகாசமான software அது. பிரம்மாதமாக எல்லா சஜஷன்களும் கொடுக்கும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். மற்ற சாஃப்ட்வேர்களில் தமிழில் எழுத முடியாது என்பதும் ஒரு காரணம். நீங்கள் தங்கிலீஷில் எழுதினால், என் சஜஷன் Final Draft.

எதில் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதும் process தடையில்லாமல், சலிப்பில்லாமல் தொடர வேண்டும். அது ஒன்றுதான் முக்கியம். எழுதும்போது நேரும் ஒரு சிறிய சலிப்பு கூட நமது மனதை முற்றிலும் மாற்றிவிடும் என்பதால், நமக்கு மிக வசதியானது எதுவோ அதை அல்லது அதில் எழுத வேண்டும். பென்சில் பிடித்துப் பேப்பரில் கூட எழுதலாம். 

4. யாருடைய திரைக்கதை எழுதும் பாணியை பின்பற்றுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது?

என் சொந்தப் பாணிதான். யாரையும் நான் திரைக்கதை எழுதும்போது ஃபாலோ செய்வதில்லை.

5. உங்களின் தனித்துவமான பாணியில் எழுதுகிறீர்களா? சுருக்கமாக அதைப்பற்றி சொல்லுங்கள்?

கண்டிப்பாக. எனக்கு என்று ஒரு பாணி உண்டு. அதைத்தான் பின்பற்றுகிறேன். பாணி என்பது என்ன? திரைக்கதை என்பது ஒரு standard form என்பதால், சீன் எழுதுவது, சீக்வென்ஸ் எழுதுவது என்பதெல்லாம் அனைவருக்கும் ஒரேபோன்றதுதான். ஆனால் எப்படிக் கற்பனை செய்கிறோம் – எப்படிக் காட்சிகளை உருவாக்குகிறோம் என்பது கண்டிப்பாக வேறுபடும். எனக்கு, எல்லாக் கதாபாத்திரங்களும் நம்பும்படி இருக்கவேண்டும். அவற்றுக்கான தனித்தனி உடல்மொழி, வேறுபாடுகள் இருக்கவேண்டும். இதெல்லாம் பக்காவாக இருந்தால், காட்சிகள் எளிதாக மாறும். இதுதான் என் பாணி.

கூடவே, கதையில் நடக்கும் சம்பவங்கள், கதை நடக்கும் உலகில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் புரிய வேண்டும். எடுத்துக்கொண்ட Genreக்கு முற்றிலும் நாம் குறைவைக்காமல் முடிக்க வேண்டும். இதை செய்திருக்கலாமே என்று படம் வந்ததும் தோன்றக்கூடாது. ஜஸ்டிஃபை செய்வது மிக மிக முக்கியம். லாஜிக் மீறக்கூடாது. ஓரிரு இடங்களில் மீறலாம். ஆனால் அப்படி மீறும்போது அதை சாமர்த்தியமாக மறைத்துவிடவேண்டும். சில பாக்யராஜ் படங்களில், லாஜிக் மீறும்போது அதை மிகச்சரியாக ஒரு கதாபாத்திரம் கேள்வி கேட்கும். அப்போது படம் பார்க்கும் நமக்கும், ‘அட ! நம்ம மனசுல இருக்குறதை அப்படியே கேக்குதே இந்தக் கேரக்டர்’ என்று தோன்றும். இதுதான் நான் சொல்லவந்தது. எனக்கு இது மிக மிக முக்கியம். 

6. Writers block பற்றிய உங்களின் புரிதல் என்ன? ப்ளாக்கை உடைக்க என்ன யுக்தியை கையாள்வீர்கள்?

என்ன முக்கினாலும் சிலசமயம் எதுவுமே தோன்றாது. இது எல்லாருக்குமே நடக்கும். இதை உடைக்க நான் என்ன செய்வேன் என்றால், அப்படியே திரைக்கதையை நிறுத்திவிட்டு, ஒரு படமோ, பாடல்களோ, தூக்கமோ, பப்புக்கு செல்வதோ, நடப்பதோ, புத்தகம் படிப்பதோ, கேம் விளையாடுவதோ – இப்படி எதாவது செய்வேன். ப்ளாக் வந்ததுமே ஒரே மேட்டர் என்னவென்றால், அன்றைய எழுதும் வேலை முடிந்தது என்பதே. இது எனக்கு மட்டும்தான். பிறருக்கு வேறுமாதிரி இருக்கலாம். எனவே இழுத்து மூடிவிட்டு, மற்ற வேலைகள் செய்து, அடுத்தநாள் திரும்பிவந்தால் அவசியம் சல்யூஷன் கிடைத்திருக்கும்.

என் கருத்து என்னவென்றால், இன்று ஒரு ப்ளாக் இருக்கிறது என்றால், இன்று அந்த ப்ளாக் வரும்வரை காலையில் இருந்து அந்தத் தருணம் வரை நம்மைச் சுற்றி நடந்தவை எல்லாமே அந்த ப்ளாக்குக்குக் காரணம் என்றே நினைப்பேன். எனவே, ஒரு நாள் முடிந்து, தூங்கி, மறுநாள் எழும்போது அவையெல்லாம் நம் மனதை விட்டு விலகிவிடுவதால், கட்டாயம் ஒரு நல்ல சல்யூஷன் கிடைத்து, ப்ளாக் விலகிவிடும். அப்படி விலகவில்லை என்றாலும், எப்படியும் விடை கிடைத்தே தீரும். நாம்தானே (உள்மனதில்) அதை உருவாக்கினோம்? அப்போது நாம்தானே அதை உடைக்கவேண்டும்? 

7. ஒரு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல கதைகளும், 1 லைன்களும், பல ஐடியாக்களும் வந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐடியாதான் எழுதுவதற்கு உகந்தது என எதைவைத்து முடிவு செய்வீர்கள்?

Gut feel. எனக்கு, தனிப்பட்ட முறையில், பல லைன்களை யோசித்தாலும், ஏதோ ஒரு லைன் டக்கென்று பிடிக்கும். ஒரு சில நாட்கள் கழித்தும் பிடிக்கும். அதைத் தேர்வு செய்வேன்.

ஆனால், கமர்ஷியலாக எழுதும்போது நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. இது திரைப்படமாக வந்தால் அனைவருக்கும் பிடிக்குமா என்பதுதான். தமிழ்நாட்டில் இப்படித்தான் யோசிக்க வேண்டும். தயாரிப்பாளர், மக்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய எல்லாருக்கும் இந்த ஐடியா பிடிக்குமா என்று யோசிக்கவேண்டும். அதுதான் ஒரு படம் கமர்ஷியலாக வெற்றிபெறுவதற்கான ஆரம்ப விதை.

தமிழில் பெரும்பாலும் நான் திரைப்படங்களில் கமிட் ஆகிவிடுவதால், ஒரிஜினல் ஐடியா என்பது இயக்குநருடையதாகவே இருக்கும். அதற்கேற்றவகையில் திரைக்கதை எழுதுவதே வழக்கம். எப்போதாவது சும்மா இருக்கும்போது மனதில் தோன்றிய லைன்களை விரித்து எழுதிக்கொள்வேன். அப்படி ஏராளமான லைன்கள் என்னிடம் உண்டு. அவற்றையும் விரிவாக எழுதி வைத்த ஒன்லைன் ஆர்டர்களும் நிறைய உண்டு. இவையெல்லாமே எனக்கு இன்றும் பிடித்தவையே. 

8. திரைக்கதை எழுத ஆரம்பித்து பாதி முடித்தபின்னர், “எழுத ஆரம்பித்தபோது இருந்த பெப்பு இப்போதில்லையே” என்ற உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பெப்பு வரும் வரைக்கும் மெருகேற்ற முற்படுவீர்களா? இல்லை எழுதியதுவரை போதுமென தூக்கிப்போட்டு விடுவீர்களா?, “வெத்து ஈகோ தேவையில்லை. திரைக்கதை எழுதுவது not my cup of tea” என எண்ணிக்கொண்டு ஒரு நல்ல திரைக்கதை எழுத்தாளரை அணுகுவீர்களா?

ஓகே. என்னைப்பொறுத்தவரையில், கதை பிடித்துவிட்டால், interest factor இறுதிவரை இருக்கும். காரணம், கதாபாத்திரங்கள் மற்றும் லைன். எனக்குப் பிடித்த ஒரு கதை, எனக்குப் போர் அடிக்கவே அடிக்காது. இது என் தனிப்பட்ட கருத்து.

ஆனால் நீங்கள் கேட்டதுபோல் என்னிடம் பலரும் வருகிறார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் – அவர்களின் வேலை படம் இயக்குவது என்று. எனவே என் வேலை திரைக்கதை எழுதுவதால், இருவரும் இணைந்து எளிதாக வேலை செய்ய முடிகிறது. 

9. திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு, அந்த ஐடியாவோ அல்லது ஸ்பார்க்கோ உங்களுக்குள் எதை demand செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?

எதையோ டிமாண்ட் செய்ததால்தான் அந்த ஸ்பார்க்கே முதலில் உருவாகிறது என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, கேள்வி ரிவர்ஸ் செய்யப்படவேண்டும். முடிந்தவரை நம்மால் முடிந்த justice அந்தக் கதைக்குக் கொடுத்துவிடவேண்டும்.

10. ஒரு நல்ல திரைக்கதைக்கான முன்னுதாரணக் காட்சி என்று எந்தக்காட்சியை முன்வைப்பீர்கள்?

எனக்கு அப்படி எந்தக் காட்சியும் எழுதும்போது தோன்றாது. ஆனால் சும்மா இருக்கும்போது அடிக்கடி டாரண்டினோவின் திரைக்கதைகள் படித்து, அவற்றைக் காட்சிகளாக எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்பேன். அதேதான் டேவிட் ஃபிஞ்ச்சரும். இந்த இருவரும் எடுத்திருக்கும் எந்தக் காட்சியுமே எனக்கு முன்னுதாரணம்தான். தமிழில் பாக்யராஜ். ஶ்ரீதர். இவர்களைத் தவிரவும், இன்னும் ஏராளமான திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள் உண்டு. உலகம் முழுக்க. அவர்களைப் பற்றியெல்லாம் எனது தளத்தில் முதலில் இருந்தே எழுதி வருகிறேன். 

இது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் வேலை செய்ய ஆரம்பித்ததும்தான் அதை உணர்ந்துகொண்டேன். அது என்னவென்றால், கமர்ஷியலாக உங்களுக்கு எழுத வருமா வராதா என்பதே. Cinematicஆக எழுதத் தெரியவேண்டும். கமர்ஷியலாக யோசிக்கும் திறமை வேண்டும். இது மிகவும் முக்கியம். நிஜவாழ்க்கைக்கும் சினிமா காட்சிக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசம் தெரியவேண்டும். ஒரு காட்சி எழுதினால் அது சுவாரஸ்யமாக இருக்கவேண்டும். அதில் உணர்வுகள் இருக்கவேண்டும். கதையை நகர்த்த வேண்டும். ஆனால் கதை நகர்கிறது என்றே ஆடியன்ஸுக்குத் தெரியக்கூடாது. ஒருவித cleverness வேண்டும். இது அவசியம் கமர்ஷியல் படங்களில் பணிபுரிந்தால்தான் வரும்.

இது உலகின் மிகப்பெரும் இயக்குநர்களின் படங்களிலேயே காணக் கிடைப்பதுதான். எடுத்துக்கொண்ட கதையைக் கமர்ஷியலாக, சினிமாட்டிக்காக யோசித்து எழுதத் தெரியவேண்டும். காட்சிகளை சொல்லிக்கொண்டே இருக்கத் தெரியவேண்டும். களங்களை டக் டக்கென்று மாற்றத் தெரியவேண்டும். ஒரு இயக்குநர் ஒரு காட்சியில் மாட்டிக்கொண்டால், அதை உடைத்து, காட்சியை பக்காவாக மெருகேற்றத் தெரியவேண்டும். இதில் எதுவுமே, வீட்டிலேயே அமர்ந்து திரைக்கதைகள் எழுதிக்கொண்டே இருந்தால் வராது. சினிமாவில் வேலை செய்து, அந்தப் படம் வெளியாகி, ஹிட்டோ ஃப்ளாப்போ ஆனால் மட்டுமேதான் சிறுகச்சிறுகப் புரியும். இது புரிந்தால்தான் நல்ல திரைக்கதைகள் நம்மிடம் இருந்து வரும். கள அனுபவம் மிக மிக முக்கியம்.

எனவே, ஒரு திரைக்கதை எழுத்தாளனுக்கு, சினிமாடிக்காக எழுதத் தெரிந்தே ஆகவேண்டும். நான் Exaggerate செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உண்டு. இந்த மொழியில் எழுதினால் இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் மக்களுக்கு எளிதாகப் போய்ச்சேரும் என்ற புரிதல் மிக முக்கியம். அதேபோல் ஒரு காட்சி எடுபடுமா எடுபடாதா என்று மக்களின் சார்பில் நின்று யோசிக்கத் தெரியவேண்டும். இதுவும் மிகவும் முக்கியம். அதற்குப் பலநூற்றுக்கணக்கான படங்கள் அந்தந்த மொழிகளில் பார்த்திருக்கவேண்டும். அப்படிப் பார்த்தால்தான் திரைக்கதை எழுதுவது ஓரளவுக்காவது வரும். ஏனெனில், தமிழுக்கு என்று ஒரு format உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் அது மாறும். அந்த ஃபார்மேட்டை நன்றாக உணரவேண்டும். உணர்ந்தால்தான் அதை உடைக்க/மெருகேற்ற/புரிந்துகொண்டு எழுத முடியும்.

உடனே நான் டெம்ப்ளேட்டாக எழுதச் சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. நான் சொல்வது, ஒவ்வொரு மொழிக்குமான வேறுபாடு புரிந்திருக்கவேண்டும். ஜான் ஆப்ரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை ஒரு நல்ல படம். ஆனால் அது மலையாளப் புரிதலுக்கேற்றது. தமிழில் எடுபடவில்லை. சூது கவ்வும் தமிழில் பட்டையைக் கிளப்பியது. ஆனால் மற்ற மொழிகளில் ஃப்ளாப். லூஸியா படம், எனக்குள் ஒருவன் என்று வந்து தமிழில் ஃப்ளாப் ஆகியது. அதுவே திருஷ்யம், எடுக்கப்பட்ட எல்லா மொழிகளிலும் சூப்பர்ஹிட். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று நன்றாக யோசித்தாலே நான் சொல்லவருவது புரிந்துவிடும். ஒவ்வொரு மொழிக்குமான ரசனை, உணர்வுகள், புரிதல் எல்லாமே வேறு. இது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். இதைப் பொறுத்துதான் காட்சிகள் வரவேண்டும். ஏனெனில் நாம் எழுதுவது மக்களுக்காக. அவர்களின் சந்தோஷத்துக்காக. எனவே ஆங்காங்கு காம்ப்ரமைஸ் செய்யலாம். 

இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இதை அழகாகச் சொல்லியிருக்கிறார். ‘என் படங்கள் எல்லாமே உங்களுக்காகத்தான். நீங்கள் திடீரென்று பதறுவது, மகிழ்வது, கைதட்டுவது – இப்படிப்பட்ட உணர்வுகளைக் குறிவைத்தே படங்கள் எடுக்கிறேன். உங்களின் கைதட்டல் எனக்கான போதை’ என்று. 

இது கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே பொருந்தும். கலைப்படங்கள் பற்றி இங்கே நான் சொல்லவில்லை. அவற்றுக்கு விதிகள் இல்லை. 

திரைக்கதை எழுதுவது என்பது அவசியம் ஒரு கலை. ஒரு வேலை. ஒன்றும் தெரியாமல் அதைத் துவங்கினால் கட்டாயம் வராது. எந்த வேலைக்குப் போகும்போதும் முன் அனுபவம் கேட்கிறார்கள் அல்லவா? திரைக்கதையும் அப்படித்தான். அவசியம் திரைக்கதை என்றால் என்ன என்று நன்றாகப் புரிந்திருக்கவேண்டும்.

நாவல், சிறுகதை எழுதத் தெரிந்தால் திரைக்கதை எழுதிவிடலாம் என்ற ஒரு புரிதலைக் கவனிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இவை எல்லாமே முற்றிலும் மாறுபட்ட மீடியம்கள். திரைக்கதை எழுதத் தெரிந்தால் மட்டுமே திரைக்கதை எழுதமுடியும்.

]]>
http://karundhel.com/the-art-of-screenplay-writing-a-few-questions-and-my-answers/feed/ 3
Sports films and biopics of Hollywood http://karundhel.com/hollywood-sports-films-and-biopics/ http://karundhel.com/hollywood-sports-films-and-biopics/#respond Sat, 04 Jul 2020 06:14:02 +0000 http://karundhel.com/?p=6835 அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.

இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக விளையாட்டுகளில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களும் பிரபலம். Sports biopics and sports films. இந்த இரண்டு வகைகளும் ஏன் பிரபலம் என்றால், இவைகளில் நடக்கும் சம்பவங்கள் நமது வாழ்க்கைக்கே உத்வேகம் அளிப்பவை. இவற்றில் வரும் கதைமாந்தர்கள், விழுந்து எழும்போது நமக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூடவே, மாபெரும் கூட்டம் ஒன்றை வசியப்படுத்த, ஒரு விளையாட்டு போதும். குத்துச்சண்டையோ, பேஸ்பாலோ, பேஸ்கெட்பாலோ, ஃபுட்பாலோ, கிரிக்கெட்டோ – இப்படி எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நிகழும் பிரச்னைகளையும் அவற்றின்மூலம் கதைமாந்தர்கள் பாதிக்கப்பட்டு உத்வேகம் பெறுவதையும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் ஒரு தியேட்டரில் பார்க்கும்போது அவசியம் ஒரு மேஜிக் நிகழ்கிறது. ‘லகான்’ படம் இந்தியாவில் வந்தபோது அதில் இடம்பெற்ற கிரிக்கெட் பந்தயத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். அதேபோல் ‘சக்தே இந்தியா’ படத்தில் வரும் ஹாக்கிப் பந்தயங்கள். நமக்கே, படத்தில் வருபவர்கள் வெல்லவேண்டும் என்ற வெறி கிளம்பியதா இல்லையா? இதன்மூலம் கிளம்பும் உற்சாகம்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்கப்படுவதற்கான காரணம். 

இந்த வகையில் அனைவராலும் மறக்கப்படமுடியாத படங்கள் பல உள்ளன. நிஜவாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த படங்களும் சரி, கற்பனையாக எடுக்கப்பட்ட விளையாட்டுப் படங்களும் சரி. அவற்றில் முக்கியமானவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி மற்றும் ராபர்ட் டி நீரோவின் ரசிகர்களால் ஜாக் லமோட்டாவை மறக்கவே முடியாது. நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மார்ட்டின் ஸ்கார்ஸேஸி பிரசித்தமானவர். கிட்டத்தட்ட அவரது அத்தனை படங்களுமே புத்தகங்களை வைத்து, நிஜவாழ்க்கையில் வாழ்ந்த மாந்தர்களை வைத்து, கொஞ்சம் மாற்றியும், சில சமயம் அப்படியேயும் எடுக்கப்பட்டவை. அதேபோல் ஜாக் லமோட்டா என்ற ஒரு நிஜக் குத்துச்சண்டை வீரர், தன்னைப்பற்றி எழுதிய சுயசரிதையான ‘Raging Bull: My Story’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே ‘ரேஜிங் புல்’ திரைப்படம். இந்தப் படத்தில் என்ன விசேடம் என்றால், ராபர்ட் டி நீரோ, மெதட் ஆக்டிங் என்ற திரைப்பட நடிப்பு வகைக்குப் பெயர்போனவர். நிஜமான ஜாக் லமோட்டாவை சந்தித்துப் பேசி, பழகியே இந்தக் கதாபாத்திரத்துக்குத் தயாரானார். ஜாக் லமோட்டா உண்மையில் ஒரு வெறிகொண்ட ஆசாமி. காதல், நட்பு, பொறாமை என்று எதுவாக இருந்தாலும் அதில் உச்சம் வரை போனவர். ஒருமுறை ஒரு ஹோட்டலில் உணவு சரியாக இல்லை என்பதற்காக ஒரு மிருகம் போலக் கத்திக்கொண்டு ஹோட்டலின் உள்ளே அங்கும் இங்கும் கோபத்துடன் அலைந்திருக்கிறார் லமோட்டா.  இளம்வயதில் ஒரு கிரிமினலாக இருந்து, பின்னர் சிறையில் திருந்தி, அதன்பின்னர் குத்துச்சண்டை கற்றுக்கொண்டு, பின்னர் வெளியே அக்காலத்தில் இருந்த மாஃபியாவுடன் பழகி, அவர்களுடன் நட்பாகவும், சில சமயங்களில் பிரச்னை செய்தும் (குறிப்பாக டெட்ராய்ட் நகரின் மாஃபியா) 95 வருடங்கள் வாழ்ந்து, 2017ல் மறைந்தவர் லமோட்டா. இவரை அப்படியே தத்ரூபமாக உள்வாங்கி நடித்த ராபர்ட் டி நீரோவுக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 1981க்கான பல விருதுகள் அப்படத்துக்குக் கிடைத்தன. இன்றும் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாக இப்படம் கருதப்படுகிறது. 

இருப்பதிலேயே தலைசிறந்த பேஸ்பால் படம் என்று அனைவராலும் பாராட்டுப் பெற்றது ‘புல் டர்ஹாம்’ திரைப்படம். காரணம் இதன் திரைக்கதை. பேஸ்பால் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரு நல்ல கதையோடு சேர்த்துப் படமாக்கப்பட்டதே காரணம். கூடவே, கெவின் காஸ்ட்னர் போன்ற ஒரு பிரம்மாண்டமான ஹீரோ வேறு. இயக்குநர் ரான் ஷெல்டன், தனது சொந்தக் கதையையே படமாக எடுத்தார். உண்மையில் இந்தப் படம், இருப்பதிலேயே நம்ர் 1 விளையாட்டுத் திரைப்படம் என்றும் பல பத்திரிக்கைகளாலும் பட்டியல் இடவும் பட்டிருக்கிறது. ரேஜிங் புல்லா புல் டர்ஹமா என்று பல விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இது ரேஜிங் புல் போல ஒவ்வொரு காட்சியிலும் தீவிரமாக எடுக்கப்பட்ட படம் இல்லை. பலவிதமான உணர்ச்சிகளின் கலவை. பன்னிரண்டு வருடங்கள் மைனர் லீக் என்ற பேஸ்பாலில் விளையாடிய கில்லாடி ‘க்ராஷ்’ டேவிஸ் என்ற கதாபாத்திரத்தில் கெவின் காஸ்ட்னர். இவர், டர்ஹாம் புல்ஸ் என்ற அணியால் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். எதற்காக? எப்பி கால்வின் என்ற, புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள மிகத்திறமையான பேஸ்பால் வீரனைத் தயார்படுத்த. இருவருமே திறமைசாலிகள் என்பதால் இருவருக்கும் துவக்கத்திலேயே பிரச்னை ஏற்படுகிறது. இருவராலும் ஒத்துப்போக முடியவில்லை. என்றாலும், அந்த அணிக்காகத் தொடர்ந்து கால்வினைத் தயார்படுத்துகிறார் க்ராஷ். பேஸ்பாலில் ஒரு பேட்டி கொடுத்தால் கூட எப்படியெல்லாம் பேசவேண்டும் என்பது உட்பட எல்லாமே சொல்லிக்கொடுக்கிறார். அப்போது ஆன்னி என்ற பெண் அவர்களுக்கு அறிமுகமாகிறாள். அவள், ஒவ்வொரு வருடமும் டர்ஹாம் புல்ஸ் அணியோடு சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விளையாட்டு வீரனுடன் நெருங்கிப் பழகுவது வழக்கம். மெல்ல மெல்ல க்ராஷுடனும் கால்வினுடனும் அவள் பழகுகிறாள். ஒரு கட்டத்துக்கு மேல், கால்வினை விடவும் க்ராஷைத்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பது அவளுக்கே புரிகிறது. அந்த சமயத்தில்தான் கால்வின், சட்டென்று, மைனர் லீக்கில் இருந்து மேஜர் லீக் பேஸ்பால் அணி ஒன்றுடன் திடீரென்று சென்றுவிடுகிறான். அவர்கள் கொடுத்த பணமும் புகழுமே காரணம். இதன்பின் என்ன ஆகிறது என்பதே படம். அவசியம் அனைவருக்கும் பிடிக்கும். 1988 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று இந்தப் படம். 

2014ம் ஆண்டின் கான் பட விருதுகளுக்காகப் பரிந்துசை செய்யப்பட்ட ஒரு படம்தான் அடுத்து நாம் பார்க்கும் படம். கானில், இந்தப் படத்தின் இயக்குநருக்கே சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இது தவிரவும் பல்வேறு விருதுகளை வென்ற படம் இது. Foxcatcher. மல்யுத்தத்தைப் பற்றிய அட்டகாசமான படம் இது. நிஜத்தில் வாழ்ந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களைப் பற்றியது.  டேவ் ஷூல்ட்ஸ் மற்றும் மார்க் ஷூல்ட்ஸ் ஆகிய இருவருமே சகோதரர்கள். 1984ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியவர்கள். இருவருக்குமே ஒவ்வொருவரின் மீதும் நல்ல மரியாதையும் பாசமும் உண்டு என்றாலும், அண்ணன் டேவின் மீது லேசான பொறாமை, தம்பி மார்க்குக்கு உண்டு. இவர்கள் இருவருக்குமே, அமெரிக்காவின் பில்லியனர் ஜான் டு பாண்ட் என்பவரிடமிருந்து, அவரது மல்யுத்த அகாடெமியில் சேர்ந்து பயிற்சி பெற அழைப்பு வருகிறது. மார்க் ஒப்புக்கொண்டு அவரது பண்ணைக்குச் செல்கிறான். ஆனால் டேவ், தனது குடும்பத்தைக் காரணம் காட்டி, வர மறுத்துவிடுகிறான். மார்க்கின் பயிற்சிகள் துவங்குகின்றன. அங்கே மார்க் சந்திக்கும் சம்பவங்கள், டு பான்ட்டின் வித்தியாசமான உணர்ச்சிகள், பின்னர் மார்க்குடன் சேரும் டேவ், இருவருக்கும் 1988 ஆண்டின் சியோல் ஒலிம்பிக்ஸில் நடக்கும் சம்பவஙகள் என்று உணர்ச்சிகரமாகச் செல்லும் படம் இது. முற்றிலும் நிஜமான சம்பவங்கள். படம் பார்த்ததும் மனதில் ஆழமான உணர்ச்சி ஒன்றினைக் கட்டாயம் எழுப்பும் வகையான படம். வழக்கமாக நகைச்சுவைப் படங்களிலேயே நடிக்கும் ஸ்டீவ் கேரலின் மிக வித்தியாசமான நடிப்பை இதில் பார்க்கலாம்.

அடுத்து நாம் பார்க்கப்போகும் படமும் இரண்டு சகோதரர்களைப் பற்றியதுதான். ஆனால் இது மல்யுத்தம் இல்லை. மாறாக, குத்துச்சண்டை. The Fighter – 2010ல் வெளியான படம். டேவிட் ஓ ரஸல் இயக்கியது. ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த ஆண் மற்றும் பெண் துணை நடிகர்களுக்கான விருதுகளை வாங்கிய படம். மிக்கி வார்ட் என்ற நிஜவாழ்க்கை குத்துச்சண்டை வீரர் பற்றிய படம். படத்தில், மிக்கி வார்டைத் தயார்படுத்துவது அவரது மூத்த சகோதரர் டிக்கி எக்லுண்ட். டிக்கி, ஒரு காலத்தில் குத்துச்சண்டையில் இருந்துவிட்டு, பின்னர் கோகெய்னுக்கு அடிமையானவர். இன்னொரு அப்பா மூலம் மிக்கியின் அம்மாவுக்குப் பிறந்தவர். மிக்கிக்கு மொத்தம் ஏழு சகோதரிகள். மிக்கியின் அம்மா அலீஸ் வார்ட் தான் மிக்கியின் மேனேஜரும்கூட. ஒரு நாள், ஒரு பந்தயத்தில் நடக்கும் சிறிய குழப்பம் காரணமாக, மிக்கி தோற்றுவிடுகிறான் (மிக்கியுடன் சம எடையில் போட்டியிடும் ஆசாமி வராமல், 20 பவுண்டுகள் அதிக எடையுள்ள இன்னொரு ஆசாமி வருகிறான். அம்மாவும் மூத்த சகோதரனும் பணத்துக்காக ஒப்புக்கொள்கின்றனர்). இதன்பின்னர் வெறுத்துப்போய் குத்துச்சண்டையில் இருந்தே வெளியேறிவிடுகிறான் மிக்கி. ஒரு பாரில் பணிபுரியும் சார்லீன் என்ற பெண்னுடன் பழகத் துவங்குகிறான். இதன்பின்னர் மிக்கியின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதே படம். மிக்கியாக மார்க் வால்பெர்க். இவர் நிஜவாழ்க்கையிலும் மிக்கியின் நண்பர். டிக்கி எக்லுண்டாக க்ரிஸ்டியன் பேல். அம்மாவாக மெலிஸா லியோ. இவர்களில் க்ரிஸ்டியன் பேலும் மெலிஸா லியோவும் சிறந்த துணைநடிகர்களுக்கான ஆஸ்கர்கள் வாங்கினர். இந்தப் படம், மிக்கியின் குடும்பத்தில் இருக்கும் ஆயிரம் சிக்கல்கள், மிக்கிக்கும் டிக்கிக்கும் இருக்கும் உறவு, அவனது சகோதரிகள், அம்மா, அவர்களது தந்தை ஆகியோரின் நோக்கஙக்ள் ஆகிய அத்தனையையும் விவரிக்கிறது. 

அடுத்து, ஒரு குதிரைக்கும் அதை ஓட்டும் ஜாக்கிக்குமான உணர்ச்சிபூர்வமான உறவு. இதுவும் ஏழு ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம். ஸ்பைடர்மேனாக நடித்துப் புகழ்பெற்ற டோபி மேகயர் நடித்தது. நாற்பதுகளில் மிகப் புகழ்பெற்று விளங்கிய சீபிஸ்கட் என்ற குதிரையைப் பற்றிய படம். 1938ல் அமெரிக்காவின் அந்த வருடத்துக்கான சிறந்த குதிரை விருதை வாங்கிய குதிரை இது. இன்றும், இறுதிப் படியில் இருந்து மேலே முன்னேறும் தன்னம்பிக்கைக்கான சிறந்த உதாரணங்களில் இந்தக் குதிரையின் கதையும் இடம்பெறும். சீபிஸ்கெட் என்ற குதிரையின் கதையோடு, அதன் ஜாக்கி, அதன் உரிமையாளர் மற்றும் அதன் பயிற்சியாளர் ஆகிய அனைவரின் கதையையும் சொல்லும் படம் இது. இந்தக் குதிரைக்கே ஒரு தனிப்பட்ட ஈகோவும் குணாதிசயமும் இருந்திருக்கிறது. அது இந்தப் படத்தில் ஆங்காங்கே அருமையாக இடம்பெறும். கூடவே, அதன் ஜாக்கி ஜான் போல்லார்டுக்கும் அந்தக் குதிரைக்குமான உறவு. இது எப்படி அமெரிககவின் தன்னம்பிக்கை சின்னமாக மாறியது என்பதே கதை. அனைவருக்கும் அவசியம் பிடிக்கக்கூடிய மென்மையான உணர்வுகள் நிறைந்த படம். 

இவை ஒரு சில சிறந்த படங்களே. இவைதவிரவும், இந்த நிஜவாழ்க்கை சம்மந்தப்பட்ட விளையாட்டுப் படங்களில் (Sports biopics), Cinderella man, Miracle, Ali, Remember the Titans, Chariots of Fire, Unbroken, The Damned United, Moneyball, Chariots of Fire, 42, Pride of the Yankees, Rush, Invictus உட்பட பல படங்கள் உண்டு. இங்கு கொடுத்திருப்பவை அவற்றில் முக்கியம் என்று நான் கருதிய படங்களே.

இப்போது, விளையாட்டை மையமாக வைத்த புனைவுகள் பக்கம் வரலாம். உண்மையில் இந்த வகையில்தான் ஆயிரம் படங்கள் இருக்கின்றன. ஒரு விளையாட்டு- அதில் எப்படி முக்கியக் கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகிறார்கள் – அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்ற இந்தக் கருவில், நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களின் அதே அளவுக்குப் புனைவுகளை மையமாகக் கொண்ட படங்களும் மக்களின் மனதைத் தொட்டு, அவர்களின் வாழ்க்கைக்கு ஈடு இணையில்லாத இன்ஸ்பிரேஷன்களாக இருந்திருக்கின்றன. இருந்தும் வருகின்றன. அவற்றில் சில படங்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக, சில்வஸ்டர் ஸ்டாலோனின் ‘ராக்கி’. இந்த சீரீஸீல் இதுவரை ஆறு படங்கள் வந்தாயிற்று. மேலும் ராக்கி ஒரு துணைக் கதாபாத்திரமாக இரண்டு படங்களில் நடித்தாயிற்று. ஸ்டாலோன் ஏற்று நடித்த ராக்கி கதாபாத்திரத்துக்குச் சிலை கூட உண்டு. உலகெங்கும் பலரின் வாழ்க்கை பாதித்த படம் இது. இந்தப் படத்தின் மூலம்தான் ஸ்டாலோன் சூப்பர்ஸ்டார் ஆனார். 1977ம் ஆஸ்கர்களில் பத்து விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று விருதுகளைப் பெற்ற படம். இந்தப் படத்தின் திரைக்கதையை எப்படி ஸ்டாலோன் எழுதினார் என்பது இன்றும் பல வெற்றிகரமான தன்னம்பிக்கைப் புத்தகங்களில் இடம்பெறும் அத்தியாயம்.  முஹம்மது அலி மற்றும் சக் வெப்னர் ஆகியோரிடையே மார்ச் 24, 1975ல் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டி இன்றுவரை பிரபலம். ஏனெனில், இந்தப் போட்டியில் சக் வெப்னர் யாரென்றே பலருக்கும் தெரியாது. முஹம்மது அலியோ, உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர். எனவே, பந்தயம் சில நொடிகளில் முடிந்துவிடும் என்று அனைவரும் நினைக்கையில், மொத்தம் பதினைந்து ரவுண்டுகள் போட்டி நடைபெற்றது. முஹம்மது அலீன் இடி போன்ற குத்துக்களை வெப்னர் நீன்ட நேரம் தாங்கி நின்றார். இறுதியில் வெப்னர் தோற்று அலி ஜெயித்தார் என்றாலும்,பதினைந்து ரவுண்டுகள் இப்போட்டி செல்லும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை. இதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போது சில்வஸ்டர் ஸ்டாலோன் மிக இளைஞர். தடதடதடவென்று ஒரு நோட்டுப்ப் புத்தகத்தையும் ஒரு பென்சிலையும் எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கிய ஸ்டாலோன், இதன் திரைக்கதையை மூன்றரை நாட்களில் முடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். பதினைந்து ரவுண்டுகள் உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரனுடன் போட்டிபோட்ட ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனையே ராக்கி. ஒரு மிகப்பெரிய குத்துச்சண்டைப் போட்டிக்கு, உலகின் ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான அப்போலோ க்ரீடுடன் மோத எதேச்சையாக ராக்கி என்ற இளைஞன், பெரிய அனுபவங்கள் இல்லாத வீரன் தேர்வுசெய்யப்பட்டு, அவன் எப்படித் தன்னைத் தயார் செய்துகொள்கிறான் என்பதைச் சொன்ன படம் இது. அவனைச் சுற்றி இனிமேல் இடம்பெறப்போகும் ராக்கி சீரீஸின் அத்தனை முக்கியமான கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றாக இதில் அறிமுகமாயினர்.  உலகம் முழுக்க ராக்கி கதாபாத்திரம் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. எதுவுமே இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கையில் உச்சத்துக்கு வரமுடியும் என்பதற்கு ராக்கி ஒரு மிகப்பெரிய உதாரணம்.

அடுத்து, ஸ்டாலோன் பிரம்மாண்ட ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த நடிகர் மிக்கி ரூர்க் நடித்த படம். The Wrestler. பிரபல இயக்குநர் டாரன் அரனாவ்ஸ்கி இயக்கியது. 2008ல் வெளியான படம். ராபின் ராம்ஸின்ஸ்கி என்ற மல்யுத்த வீரனைப் பற்றிய படம். WWF பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது பின்னர் WWE என்று மாறி, அதில் ஹிட்மேன் ப்ரெட் ஹார்ட், ஹல்க் ஹோகன், த ராக், ஸ்டோன்கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் முதலிய பலரும் இடம்பெற்றதும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒருவன் தான் ராபின். அவனுடைய பட்டப்பெயர், The Ram என்பது. எண்பதுகளில் மிகப்பிரபலமாக இருந்த ராபின், அதன்பின் அனைவராலும் மறக்கப்பட்டு, ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்துகொண்டு, சிறுசிறு போட்டிகளில் பங்குபெறுகிறான்.  ஒருநாள், அவனுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. எண்பதுகளில் இவனோடு பல பந்தயங்களில் பொருதிய அயதொல்லா’ என்பவனுடன் திரும்பவும் ஒரு பந்தயம். இது, அவர்களின் கடைசிப் பந்தயத்தில் இருந்து 20 ஆண்டுகள் கழித்து நடக்கிறது என்பதால் பரவலாகப் பேசப்படுகிறது. இதில் ராபின் எப்படிப் பந்தயத்துக்குத் தயாராகிறான் (ஸ்டீராய்ட் ஊசிகளும் போட்டுக்கொள்கிறான்), அவனுக்கு நேரும் இதய அறுவை சிகிச்சை, அவனை விட்டுப் பிரிந்த மகள் ஸ்டெஃப்னி, அவனுக்குப் பிடித்த காஸிடி என்ற பெண் (இவள் ஒரு stripper), ராபினின் முரட்டுத்தனம் கலந்த விளிம்பு நிலை வாழ்க்கை ஆகிய எல்லாமே அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும். படத்தில் முக்கியமான இறுதிப் பந்தயம் என்ன ஆனது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எதற்குமே லாயக்கில்லாத ஒரு அணி என்று சபிக்கப்பட்டு, எல்லோராலும் எள்ளி நகையாடக்கூடிய ஒரு கொடூரமான பேஸ்பால் அணிக்கு, முன்னாள் வீரனும் இந்நாளைய குடிகாரனுமான ஒரு ஆசாமி கோச்சாக நியமிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இதில், அந்த அணியே குட்டிப் பசங்கள் அடங்கியது, பசங்கள் எபதைவிட, பிசாசுகள் என்று சொல்லலாம். இதுதான் Bad News Bears. ஒரு வழக்கு. என்னவென்றால், இருப்பதிலேயே சிறந்த மாணவர்கள் பேஸ்பால் அணி ஒன்றில் இடம்பெறுபவர்கள் அனைவருமே திறமைசாலிகள். இவர்களில் குறைந்தபட்சத் திறன் அடங்கியோர் யாருமே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று ஒருவர் வழக்குப் போடுகிறார். அதனால், அந்த ஆண்டுக்கான போட்டிகளில், ஒரு அணி – இதில் இருக்கும் அனைவருமே திறமை துளிக்கூட இல்லாத பிசாசுகள் – இடம்பெறுகிறது. இந்த அணிக்குத்தான் குடித்துக்கொண்டே இருக்கும் முன்னாள் வீரர் மோரிஸ் கோச்சாகத் தேர்வுசெய்யப்படுகிறர். அதாவது, நீதிமன்றத்தின் கண்களுக்கு, திறமையே இல்லாதவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பதற்காக. இந்த அணி ஒரு போட்டி கூட ஜெயிக்காது என்பதே அனைவரின் எண்ணமும். அதேபோல்தான் ஆரம்பத்திலும் நடக்கிறது. எனவே, மோரிஸ், தனக்கு உதவ, தனது முன்னாள் காதலி ஒருத்தியின் மகளை தன் கோச்சிங் அணிக்குத் தேர்வுசெய்கிறார். கூடவே உள்ளூர் வட்டிக்கடைக்காரர்,  ரவுடி கெல்லியையும் தேர்வு செய்கிறார். அந்த அணிக்கு Bears என்று பெயர். இவர்கள் எல்லாரும் சேர்ந்து, அந்த டண்டணக்கா அணியை எப்படி நல்ல அணியாக மாற்றுகிறார்கள் என்பதுதான் படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இதில் பலதரப்பட்ட பசங்கள் வருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். மோரிஸாக நடித்தவர், பிரம்மாதமான நடிகர் வால்டர் மத்தாவ். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதேசமயம் உணர்வுகளுக்கும் படத்தில் நல்ல மதிப்பும் இருக்கும்.

மறுபடியும் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியிடமே வருவோம். இது அவர் எடுத்த விளையாட்டை மையமாக வைத்த புனைவு. படத்தின் ஹீரோ டாம் க்ரூஸ். ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் பால் ந்யூமேன். இவர் அறுபதுகளின் சூப்பர்ஸ்டார். அக்கால ஹாலிவுட் ரசிகர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். 1961ல் The Hustler என்ற திரைப்படம் வெளியானது. Pool என்று அழைக்கப்படும் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியும்தானே? பார்க்க பில்லியர்ட்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அது இங்கே நமக்கு வேண்டாம். இந்த பூல் விளையாட்டில் பல வித்தைகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் ஹீரோவின் கதைதான் The Hustler. அதில் பால் ந்யூமேன் தான் ஹீரோ. ஸ்கார்ஸேஸி, 25 வருடங்கள் கழித்து 1986ல் எடுத்த படம், Color of Money. இது ஹஸ்லரின் இரம்டாம் பாகம் என்று தாராளமாகச் சொல்லலாம். முதல் பாகத்தில் ஹீரோவான எட்டீ ஃபெல்ஸன், இதில் ரிடையர் ஆகி, இந்தப் பாகத்தில், பந்தயங்களை உருவாக்குவதிலும், அவற்றில் பெட்கள் கட்டுவதிலும் காலம் கழிப்பவர். அப்போது வின்செண்ட் என்ற இளைஞனைக் கவனிக்கிறார். அவன் பூல் விளையாட்டில் மிகுந்த திறமைசாலி. அவனது காதலி கார்மென், பந்தயத்தில் விருப்பம் இருப்பவர்களை நைஸாக உள்ளே அழைத்து, பந்தயம் கட்ட வைத்து, வின்செண்ட்டோடு சேர்ந்து அவர்களை ஏமாற்றுவதையும் கவனிக்கிறார். தனது பழைய காலம் எட்டீக்கு நினைவு வருகிறது. எனவே, வின்செண்ட் மற்றும் அவனது காதலியோடு ஒரு அணியாகச் சேர்ந்து, பிறரை ஏமாற்றிப் பணம் சேர்க்கலாம் என்று முடிவுசெய்கிறார். இதன்பின் நடக்கும் வேகமான சம்பவங்கள் நிறைந்த படம்தான் கலர் ஆஃப் மனி. இந்தப் படத்துக்காக, எட்டீ ஃபெல்ஸனாக நடித்த பால் ந்யூமேனுக்கு, பல வருடங்களில் பல சிறந்த நடிகர் பரிந்துரைகளுக்குப் பிறகு இதில் ஆஸ்கர் கிடைத்தது. 

இந்தப் படங்கள் தவிர, இந்த விளையாட்டுப் புனைவுப் படங்களில் ஏராளம் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான படங்களே நூற்றுக்கணக்கில் தேறும். உதாரணமாக, MIllion Dollar Baby, Happy Gilmore, Remember the Titans, The Karate Kid, Bed it like Beckam, Lagaan, Dangal, Dodgeball, A league of their own, The Longest Yard, Talladega Nights, Tin cup, White men can’t Jump, Any Given Sunday, Over the Top, Field of Dreams என்று துவங்கி, எக்கச்சக்கமான படங்கள் உண்டு. 

பொதுவாகவே, ஸ்போர்ட்ஸ் படங்கள், ஆடியன்ஸைக் கட்டுவிப்பதில் சிறந்தவை என்பது என் தனிப்பட்ட கருத்து. பிரம்மாண்டமான திரையில் காண்பிக்கப்படும் விளையாட்டு, அதில் இடம்பெறும் உணர்வுகள், கதாபாத்திரங்கள், அவை சந்திக்கும் பிரச்னைகள் என்பவையெல்லாம் அந்தக் கதையின் உணர்வுகளை அப்படியே ஆடியன்ஸுக்குக் கடத்திவிடும் திறன் மிகுந்தவை. எனவே, இத்தகைய விளையாட்டுப் படங்கள், மற்றும் அவைகளின் அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோடு நாமும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றால் உத்வேகம் பெற்று, வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்கலாம். அதற்கான உந்துதலை இவை அவசியம் அளிக்கின்றன என்றே சொல்லுவேன். 

]]>
http://karundhel.com/hollywood-sports-films-and-biopics/feed/ 0
‘வயதான’ ஹீரோக்கள் http://karundhel.com/aged-heroes-around-the-world/ http://karundhel.com/aged-heroes-around-the-world/#respond Wed, 24 Jun 2020 12:43:25 +0000 http://karundhel.com/?p=6818 அந்திமழையில் மார்ச் 2020 இதழுக்காக எழுதிய கட்டுரை இது. 50களுக்குப் பின்னரும் விடாப்பிடியாக ஹீரோக்களாக நடித்தவர்கள் பற்றியும், பின்னர் என்ன ஆனது என்பதைப் பற்றியும்.

************************

ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.  தனது 23 மற்றும் 24ம் வயதுகளில் அவர் நடித்த Saturday Night Fever (1977) மற்றும் Grease (1978) ஆகிய படங்களினால் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்கவே பிரபலமான ஸ்டாராக மாறினார். சாட்டர்டே நைட் ஃபீவர் படத்தை எழுபதுகளின் இறுதிகளில் ஹாலிவுட் படங்களைப் பார்த்த தமிழர்களும் இந்தியர்களும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். வெளீவந்து ஒரு வருடம் கழித்து 1978ல் இந்தியாவில் ரிலீஸ் ஆனது. இங்கும் நன்றாக ஓடியது. அதுவரை இல்லாத டிஸ்கோ வெறி இந்தப் படத்தால் இந்தியப் படங்களைப் பிடித்தும் கொண்டது. இதன்பின் பல டிஸ்கோ படங்கள், பாடல்கள், நடனங்கள் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாயின. 

இப்படி மிகச்சிறிய வயதிலேயே மிகப்பெரிய ஸ்டாராக மாறிய ட்ரவோல்டா, இந்தப் படங்களுக்குப் பிறகு மெல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் ஹாலிவுட்டில் இருந்தே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.  இந்த இரண்டு படங்களுக்குப் பின் 1980ல் Urban Cowboy படமும் நன்றாகவே ஓடியது. ஆனால் அதனைத் தொடர்ந்து 1989 வரை மிகச்சில ஹிட்களே அவருக்கு அமைந்து, பல தோல்விப்படங்களில் நடித்ததால், புகழை இழந்து, மக்களால் மறக்கப்படும் அளவு வாய்ப்புகள் இல்லாத நடிகராக மாறினார். இதன்பிறகு, Look Who’s Talking, 1989ல் வெளியாகிறது. மிரம்மாண்ட ஹிட்டாக மாறுகிறது. Grease வெளியாகிப் பதினோரு ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைப் போலவே மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகிறது இந்தப்படம். இப்போதுதான் ஜான் ட்ரவோல்டா நிமிர ஆரம்பிக்கிறார். ஆனாலும் கூட, க்வெண்டின் டாரண்டினோவின் Pulp Fiction 1994ல் வெளியான பின்னர்தான் மறுபடியும் இழந்த புகழை மீட்டு,  தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிரம்மாண்ட சூப்பர்ஸ்டாராக ஆக ட்ரவோல்டாவினால் முடிந்தது. Broken Arrow, Face-off போன்ற இந்தியாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படங்கள், பல்ப் ஃபிக்‌ஷனுக்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தன.  அதன்பின் கிட்டத்தட்ட அடுத்த 10-15 வருடங்கள் அவருக்குப் படங்கள் வந்துகொண்டே இருந்தன. இப்போது கடந்த சில வருடங்களாக, ஆங்காங்கே ஒன்றிரண்டு படங்கள் நடித்துக்கொண்டு ரிடையர்மெண்ட் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.

ஜான் ட்ரவோல்டா பற்றி ஏன் எழுதினேன் என்றால்,  மிக இளம் வயதில் பிரபலமாகி, பின்னர் பிஸியாக நடிக்கவேண்டிய வயதில் மார்க்கெட் போய், அதன்பின்னர் நாற்பது வயதுக்கு மேல் மறுபடியும் பிரபலம் ஆகியவர். இப்படி ஒரு பிரபலம் இந்தியாவிலும் உண்டு. பிரபல பாடகர் கிஷோர் குமார்.  ஐம்பதுகளில் நடிகர்- பாடகராக மிகப் பிரபலம். பின்னர் ஒரு பத்து வருட காலம் வாய்ப்பே இல்லாமல் இருந்து,  ஆராதனா படம் வந்ததும் மறுபடிப் புகழின் உச்சத்துக்குப் போய், அதன்பின் இறந்த 1987 வரையிலும் அசைக்கவே முடியாத அளவு முதலிடத்தில் இருந்தவர்.  

ஹாலிவுட்டில் ஒரு பாணி உண்டு. என்னவென்றால், நீ எத்தனை பிரம்மாண்டமான ஹீரோவாக இருந்தாலும் சரி – ஒரு காலகட்டத்துக்குப் பின்னர், உனக்கு வாய்ப்புகள் கட்டாயம் குறையவே செய்யும். அப்போது உன் இடத்தில் அடுத்த ஹீரோ வந்து சேருவான். அவனுக்குப் பின்னர் இன்னொருவன். இப்படித்தான் ஹாலிவுட் இயங்குகிறது. காரணம், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு ஹீரோ அங்கே பிரபலம் அடைவார். அவருக்கென்றே பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம் உருவாகும். அந்தத் தலைமுறை முடிந்து வேறொரு தலைமுறை ரசிகர்கள் வரும்போது அவர்களுக்குள்ளிருந்து அவர்களுக்குத் தேவையான ஹீரோ உருவாவார். அப்போது பழைய ஹீரோவுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கும். ஹாலிவுட்டில் மட்டும் இல்லாது, வணிகப்படங்கள் என்ற கமர்ஷியல் படங்கள் எங்கெல்லாம் எடுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தவறாது நடக்கும் நிகழ்வு இது.  இப்படித்தான் நடக்கவும் வேண்டும். 

அடுத்த உதாரணமாக, உலகெங்கும் பிரபலமான இரண்டு ஆக்‌ஷன் ஹீரோக்களை எடுத்துக்கொள்வோம். சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனெஹர்.  இவர்கள் இருவருமே, நம்மூர் ரஜினி கமல் போலக் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்துப் பிரபலம் ஆனவர்கள். இருவரும் உச்சத்தில் இருந்தபோது இருவருக்குள்ளும் ஒரு சில பிரச்னைகள் வந்திருக்கின்றன.  வெளிப்படையாகவே மேடைப்பேச்சுகளில் இருவரும் இருவரையும் விமர்சனம் செய்திருக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுக்க ஓடிய பிரம்மாண்டமான படங்கள் கிடைத்தன. ரேம்போ மற்றும் ராக்கி சீரீஸ்களில் ஸ்டாலோன் நடிக்க, அர்நால்டோ ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து True Lies, Terminator 1 & 2 ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். ஸ்டாலோனுக்கு ரு ஆஸ்கர் உண்டு (ராக்கி திரைக்கதை). இருவருக்கும் பிரம்மாண்டமான தோல்விப்படங்களும் உண்டு (ஸ்டாலோன் – Stop or my mom will shoot, Tango & Cash, Judge Dredd முதலியன. அர்நால்ட் – Last Action Hero, Junior, Jingle All the way முதலியன).  இருவருக்குமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் மார்க்கெட் போக ஆரம்பித்ததும் நடந்தது. உடனடியாக அர்நால்ட் அரசியலில் நுழைய, ஸ்டாலோனோ விடாப்பிடியாகப் படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு காலகட்டத்தில், தனக்கு முற்றிலுமாக மார்க்கெட் போய்விட்டது என்பதை உணர்ந்து, அவரது சமகால மார்க்கெட் இல்லாத ஆக்‌ஷன் ஹீரோக்கள் பலரையும் ஒருங்கிணைத்து The Expendables படத்தை இயக்குகிறார். படம் பிரம்மான ஹிட் ஆகிறது. அதன்பின் அந்தப் படத்துக்கு அடுத்ததாக இரண்டு பாகங்களும் தயாரித்து நடிக்கிறார்.  மூன்றாவது பாகம் அடிவாங்கியதும், சில படங்களில் சிறிய வேடங்கள் செய்து, தனது ராக்கி கதாபாத்திரமாகவே Creed & Creed 2 படங்களில் நடித்து, ஒருமுறை க்ரீடுக்காக சிறந்த துணை நடிகர் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டு, ரேம்போ படத்தின் கடைசி பாகத்தை சென்ற வருடம் (2019) எடுத்து, அது கொடூரமான தோல்வி அடைந்ததும் இப்போது சும்மா இருக்கிறார்.  அர்நால்டுமே அரசியல் வாழ்க்கை முடிந்ததும் ஒரு சில படங்களில் நடிக்கிறார். எக்ஸ்பெண்டபிள்ஸ் படத்தில் ஸ்டாலோனும் அர்நால்டும் இணைந்துவேறு நடிக்கிறார்கள். டெர்மினேட்டர் படங்களிலும் பின்னர் அர்நால்ட் நடிக்கிறார். ஆனாலும் எதுவும் உபயோகம் ஆகவில்லை. கடைசியாக வெளீவந்த Terminator Dark Fate, டெர்மினேட்டர் 2வின் அடுத்த பாகம் என்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் படுதோல்வி அடைகிறது. இத்தனைக்கும் உலகெங்கும் பிரபலமான வேடம் அது. அர்நால்டுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொடுத்த வேடம். இருந்தும் தற்போதைய காலகட்டத்தில் அர்நால்டுக்கு இடம் இல்லை என்று மக்களே அவரைத் தூக்கி வீசிவிட்டார்கள். ஸ்டாலோனுக்கும் இதே கதி. இருவருக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது என்பதும் ஒரு முக்கியமான விஷயம். 

சமகாலத்தை எடுத்துக்கொண்டால், பத்து வருடங்களுக்கு முன்னர் கூட உலகெங்கும் பிரபலமாக இருந்த டாம் க்ரூஸ் மற்றும் ப்ராட் பிட் ஆகியவர்களுக்கு இப்போது மார்க்கெட் குறைவுதான். இருவருக்கும் முறையே 57 மற்றும் 56 வயது ஆகிறது. இருவரும் நடிக்கும் சமீபத்திய படங்கள், அவர்களது படங்கள் முன்னர் ஓடியதுபோல ஓடுவதில்லை. டாம் க்ரூஸ், மிஷன் இம்பாஸிபிள் சீரீஸ் படங்களை நம்பியே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ப்ராட் பிட்டுக்கு அதுவும் இல்லை. சமீபத்தில் வெளியான க்வெண்டின் டாரண்டினோவின் Once upon a time in Hollywood படத்தில்,  மார்க்கெட் இல்லாத நடிகராக லியனார்டோ டிகேப்ரியோ நடிக்க, அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடும் நடிகராக ப்ராட் பிட் நடித்திருப்பார். அந்தப் படம் உண்மையில் நிஜவாழ்க்கையில் பழையபடி மார்க்கெட் இல்லாத லியனார்டோ மற்றும் ப்ராட் பிட்டைப் பற்றிய படம்தான் என்ற வதந்தி ஹாலிவுட்டில் ஓடியது. உண்மையில் லியனார்டோ டி கேப்ரியோவுக்கு இன்னும் மார்க்கெட் போகவில்லை. லியனார்டோவுக்கு 45 வயதுதான் ஆகிறது. இன்னும் குறைந்த பட்சம் 5-6 வருடங்கள் கட்டாயம் அவரது மார்க்கெட் சரியாது. 

இன்னும் கொஞ்சம் பழைய ஹீரோக்களை எடுத்துக்கொண்டால், ராபர்ட் டி நீரோ மற்றும் அல் பசீனோவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இருவருமே. காட்ஃபாதர் மூன்று பாகங்களிலும் அல் பசீனோ பிய்த்து உதறியிருக்க, அதன் இரண்டாம் பாகத்தில் இளம் வயது டான் கார்லியோனியாக ராபர்ட் டி நீரோ பிரம்மாதப்படுத்தியிருப்பார். இருவரும் ஒருசில படங்கள் சேர்ந்தும் நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே பிரம்மாதமான ஹிட்கள் உண்டு. ஆனாலும், வயதாக ஆக, மார்க்கெட் அவர்களின் கையை விட்டு நழுவவே செய்தது.  பழைய ஹீரோக்களில் உலக சூப்பர்ஸ்டாரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுகே இது நிகழ்ந்தது. ஆனால் அவர் உஷாராகி, படங்களை இயக்க ஆரம்பித்தார். இன்றுவரை நல்ல படங்களை இயக்கிக்கொண்டே இருக்கிறார். 

இந்தியாவில் அமிதாப் பச்சன் இதற்குச் சரியான உதாரணம். இந்தியாவின் வேறு எந்த சூப்பர்ஸ்டாரும் செய்யாததை, தனது ஐம்பதாவது வயதில் அமிதாப் செய்தார். இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர்ஸ்டாராக விளங்கிய அமிதாம், தனது ஐம்பதாவது வயதில் ஹுதா கவா (Khuda Gawah) என்ற படம்தான் தனது கடைசிப்படம் என்பதை அறிவித்தார். அதேபோல், அப்படம் வந்து அடுத்த ஒன்பது வருடங்கள் நடிக்கவே இல்லை. ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன்’. ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன. 

இப்போது, அமிதாப் போன்ற சூப்பர்ஸ்டார்களை எடுத்துக்கொண்டால், கன்னடத்தில் ராஜ்குமார், எழுபது வயதுக்கு மேலும் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருந்தவர். கன்னட விஷ்ணுவர்த்தனுமே இறக்கும் வரை ஹீரோதான். தெலுங்கின் சிரஞ்சீவியும் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறார். மலையாளத்தில் மம்மூட்டிக்கு 68 வயது. இன்றும் ஹீரோதான். மோகன்லால் – 59 வயது. இப்போதும் ஹீரோ. தமிழில் ரஜினிகாந்த் – 69 வயது. இப்போதுவரை ஹீரோ. இடையில் கபாலி மற்றும் காலாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். அவைகள் விமர்சன ரீதியில் அடிவாங்கியதுமே மீண்டும் ஹீரோவாக மாறிவிட்டார். லிங்கா போன்ற நடைச்சுவைப் படங்கள் வெளியாயின. இப்போது தர்பார். கமல்ஹாஸனுக்கு 65 வயது ஆகிறது. தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார். சில வருடங்கள் முன்னர் வரை அவருமே ஹீரோவாகத்தான் நடித்துக்கொண்டும் இருந்தார். தேவ் ஆதேவ் ஆனந்த் ஹிந்தியில் இறக்கும் வரையே ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது. சல்மான் கான், ஷா ருக் கான், ஆமிர் கான் ஆகியவர்களுக்கும் இதே கதைதான்.  மூவருக்கும் கிட்டத்தட்ட 55 வயது ஆகிறது. 

தமிழில் அஜீத்தை அவசியம் இதில் நாம் பாராட்ட முடியும். மங்காத்தாவில் 40 வயதுக் கதாபாத்திரம் என்றே சொல்லி நடித்திருக்கிறார். இப்போது நேர்கொண்ட பார்வை வரை ஓரளவு வயதுக்கு ஏற்ற வேடங்களையே செய்து வருகிறார்.

(இந்திய – குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பலருமே அறுபதுக்குப் பிறகும் தலையில் சாயம் பூசிக்கொண்டு இளமையாகத் தெரியவேண்டும் என்றே கஷ்டப்படுவதையும் நாம் பார்க்கலாம். இதெல்லாம் மொத்தமாகக் கவனித்தால், ஏதோ ஒரு உளவியல் சார்ந்த பிரச்னையாகக்கூட இருக்கலாம். தன் வயது என்னவோ அதன்படி இயல்பாக இருக்காமல், முகமே வயதைக் காட்டிக் கொடுக்கும்போதும் முடியைக் கறுப்பாக்கிக் கொண்டு பிரபலங்கள் நடமாடுவதால் அவர்களைப் பார்த்தாலேயே ஒருவித பயமான உணர்வு வருகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து).

இந்தியாவில், வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் என்ற கருத்தே முற்றிலுமாக மறக்கப்பட்டு, எல்லா ஹீரோக்களும் எல்லாக் காலகட்டத்திலும் இளமையாகவே நடிக்கவேண்டும் என்ற கருத்து இப்போதுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே அவர்கள் ரசிகர்களால் எள்ளி நகையாடவும் படுகிறார்கள். இப்போது தமிழில் ரஜினி படங்களைவிடவும் அஜீத், விஜய் படங்கள் நன்றாக வசூல் செய்கின்றன என்பது கண்கூடாகவே தெரிகிறது. மேலே ஹாலிவுட் படங்களில் ஒவ்வொரு தலைமுறை ஹீரோக்களையும் அவர்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள் ஓரம்கட்டுவதைப் படித்துப் பாருங்கள். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரை ரஜினி மற்றும் கமல் முந்தினர். காரணம் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வயதான காலகட்டத்திலும் இளமையாகவே நடித்துக்கொண்டு இருந்தது ரசிகர்களுக்கு அலுத்தது. அதையேதான் ரஜினியும் கமலும் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. கமலாவது அவ்வப்போது இந்தியன் 2 போல வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஆனால் ரஜினி? இதுதான் இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கும் வித்தியாசம். பிரம்மாண்டமான இமேஜ் வைத்திருக்கும் நடிகர்கள், அந்த இமேஜ் மறைந்து, ரசிகர்களால் இப்போது இணையங்களில் கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலே சொன்ன அத்தனை ஹீரோக்களும் இதில் அடக்கம். நம் ஊரில் இருக்கும் ‘வயதான’ ஹீரோக்கள், இனியாவது வயதுக்குத் தகுந்த பாத்திரங்களில் நடித்தால், அவசியம் அமிதாப் போலப் பேசப்படுவார்கள்.  விருதுகளும் வாங்க இயலும். அதைவிட்டுவிட்டு, இன்னுமே இளமையாகவே நடித்துக்கொண்டிருந்தால், அவசியம் ரசிகர்களால் ஓரம்கட்டப்படும் ஆபத்து இருக்கவே செய்கிறது. 

இது பற்றித் தொடர்பான இரண்டு கட்டுரைகள்.

ரஜினி Vs கமல் – 1
ரஜினி Vs கமல் – 2

PS- Header Image taken from this link. இதிலும் ஏன் அஜீத் படம் பெரிதாகவும் பிற நடிகர்கள் படம் சிறிதாகவும் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், அது ஒரு யூட்யூப் வீடியோவில் இருந்து எடுத்தேன். அதில் அப்படித்தான் இருந்தது. உட்கார்ந்து ஒரு இமேஜ் கொலாஜ் செய்து உருவாக்க நேரம் இல்லை என்பதால் அந்த வீடியோவுக்கும் முறைப்படி லின்க் கொடுத்துவிட்டேன். அவ்வளவே. 

]]>
http://karundhel.com/aged-heroes-around-the-world/feed/ 0
ஹாலிவுட் பேய்கள் http://karundhel.com/horror-film-history-of-hollywood/ http://karundhel.com/horror-film-history-of-hollywood/#comments Tue, 16 Jun 2020 03:27:03 +0000 http://karundhel.com/?p=6800  

அந்திமழை February 2019 இதழில் ஹாலிவுட்டின் பேய்ப்படங்கள் பற்றி எழுதியது இங்கே.

******************

தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை. பேய்பிடித்த காரில் இருந்து, பேய்பிடித்த மிருகங்கள், பேய்பிடித்த வீடு, பேய்பிடித்த ஆசாமிகள் என்று பேய்பேயாக எக்கச்சக்கப் பேய்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டோம். பேய்க்கதைகளிலேயே கொஞ்சம் ஜிகுஜிகுஜா படங்களும் உண்டு. கூடவே, ஒரு பேய்ப்படம் என்றால் அதில் பேய் எப்போது வரும், என்ன செய்யும் என்பதிலேயே நமக்கு ஒருவிதப் புரிதலும் இந்தப் படங்களைப் பார்த்ததாலேயே வந்தும்விட்டது. எனவே, பேய்ப்படம் எடுக்கையில், ‘இதோ இங்க பேய் வரப்போகுதா…? கொஞ்சம் மாத்தி, அப்புறமா வர வெய்யுங்க.. இந்த இடத்துல ஆடியன்ஸை பேய் வரப்போகுதுன்னு ஏமாத்துங்க’ என்றெல்லாம் டிஸ்கஷன்களிலேயே பேசப்படும் காலகட்டமாக இது மாறிவிட்டது.

ஆனால், முந்தைய காலகட்டத்தில் இப்படி இல்லை. தரமான பல பேய்ப்படங்கள் உலகின் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட பேய்ப்படங்களைப் பற்றிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முடிந்தவரை அனைவருக்கும் தெரிந்த பேய்ப்படங்களைப் பார்க்காமல், கொஞ்சம் தெரியாத, நல்ல படங்களைக் கவனிப்போம்.

முதன்முதலில் எடுக்கப்பட்ட பேய்ப்படம் என்ற பெருமையை லூமியர் சகோதரர்கள் எடுத்த Le Squelette Joyeux என்ற படம் பெறுகிறது. 1895ல் வெளியானது இது. ஒரு நிமிடத்துக்கும் குறைவானது. ஒரு எலும்புக்கூடு கண்டபடி கைகால் எலும்புகள் பிய்ந்து, ஒட்டி ஆடும் நடனம் இது (கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு நிறுவனம் பொறுப்பாகாது). இதன்பின் ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès – இதைத் தமிழில் உச்சரிக்கவே முடியாது) 1896ல், Le Manoir du Diable என்று ஒரு படம் எடுக்க, முதன்முதலில் ஒரு பேய்ப்படம் என்றால் அதில் என்னன்ன இடம்பெறும் என்ற டெம்ப்ளேட் உருவானது. மூன்று நிமிடப் படமான இது துவங்கியதுமே ஒரு வவ்வால் வரும். அதில் இருந்து ஒரு மனிதன் உருவாவான் (சூனியக்காரன்?). இதன்பின் ஒரு பெரிய பானையை உருவாக்கி, அதில் எதையோ காய்ச்ச, பின்னர் ஒரு சித்திரக்குள்ளன் உருவாகி, பின் ஒரு எலும்புக்கூடு தோன்றி அது வவ்வாலாக மாறி.. மூன்றே நிமிடப் படத்தில் இப்போது நான் சொன்னது முதல் நிமிடம் மட்டுமே. 

இப்படியாகப் பேய்ப்படங்கள் உருவாயின. ஃப்ரெஞ்ச்சில் இருந்து ஜெர்மனிக்கு இந்த அலை நகர்ந்தது, முதல் உலகப்போரின்போது. அந்தச் சமயத்தில் ஜெர்மன் அரசு, பிற நாட்டுப் படங்களைத் தடை செய்ததால், எக்கச்சக்கப் படங்கள் ஜெர்மனியிலேயே உருவாயின. (அக்காலத்தில்தான் சாப்ளினும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்). இக்காலகட்டத்தில், The Golem (1915), The Cabinet of Doctor Caligari (1919) ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் கேபினெட் ஆஃப் டாக்டர் காலிகாரி படம் இன்றும் பிரபலம். இப்போதும் எடுக்கப்படும் பல பேய்ப்படங்களின் முன்னோடியான படம் இது. இப்படங்களுக்குப் பின்னர்தான் Nosferatu (1922) வெளியாகிறது. இதற்கு முன்னர் வெளிவந்திருந்த படங்கள் எல்லாமே ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிஸத்தை அடிப்படையாகவே கொண்டு எடுக்கப்பட்டிருந்தன (எக்ஸ்ப்ரஷனிஸம் என்பது, நிஜவாழ்க்கையின் தருணங்களை வேண்டுமென்றே உருமாற்றி, அதைப் பார்ப்பவர்களுக்கு அந்தப் படைப்பைப் பற்றிய பல எண்ணங்களை உருவாக்குவது). முதன்முறையாக, நிஜவாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட விதமாகவே, எந்தப் பெரிதுபடுத்துதலும் இல்லாமல் உள்ளது உள்ளபடி (ரியலிஸம்) எடுக்கப்பட்ட முதல் பேய்ப்படமாக நாஸ்ஃபெராட்டூ விளங்குகிறது. இந்தப் படத்தை இயக்கியவர் F.W Murnau. இப்படம் ஒரு ரத்தக்காட்டேறியைப் பற்றிய வேம்ப்பையர் படம். இதில் வரும் ரத்தக்காட்டேறி வேறு யாரும் அல்ல- டிராகுலாவில் இருந்து அப்பட்டமாக சுடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் (ஓர்லாக் பிரபு). பெரிதாகப் பேசப்பட்ட படமும் கூட. பிற்காலத்தில் பிரபல இயக்குநர் வெர்நர் ஹெர்ஸாக் இப்படத்தை 1979ல் ரீமேக் செய்து வெளியிட்டார். அதுவும் சிறப்பாகவே இருக்கும். 

Nosferatu (1922) – FULL MOVIE.

நாஸ்ஃபெராட்டூ வெளியானபின்னர் Haxan (1922), The Hunchback of Notre Dame (1923 – USA), The Phantom of the Opera (1925 – USA) ஆகிய படங்கள் வெளியாயின. இதில் கடைசி இரண்டு படங்கள் யுனைடட் ஸ்டேட்ஸில் எடுக்கப்பட்டவை. இவற்றில் நடித்தவர் லியோனிடாஸ் செனி (Leonidas Cheney). அக்காலத்தில், The Man with a thousand faces என்றே அறியப்பட்ட நடிகர். பிறப்பிலேயே வாய்பேச, காதுகேட்க இயலாததால், அனைவருடனும் பழகியே, எப்பேர்ப்பட்ட விஷயத்தையும் வசனமே பேசாமல் நடிக்கத் தெரிந்தவர். பெலா லுகோஸி நடித்த புகழ்பெற்ற டிராகுலா (1931) படத்தில் நடிக்கவேண்டியவர், அப்படம் எடுக்கப்படுவதற்குள் தொண்டையில் வந்த புற்றுநோயால் அகால மரணம் அடைந்தார்.

இக்காலகட்டத்திலேயே திரைப்படங்கள் பேசத் துவங்கிவிட்டன. யுனைடட் ஸ்டேட்ஸ், உலகின் பெரிய திரைப்பட கேந்திரமாக உருவாகிவிட்டது. எனவே, பல திகில் படங்கள் எடுக்கப்பட்டன. மேலே கவனித்த டிராகுலா (1931) அதில் முக்கியமானது. இயக்கியவர் டாட் ப்ரௌனிங். இப்படம்தான் டிராகுலாவின் முதல் திரை அறிமுகமாக அமைந்தது. அதே வருடத்தில் Frankenstein படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியதால், தடதடவென்று பல திகில் படங்கள் இவற்றைத் தொடர்ந்து வெளியாகின. உதாரணத்துக்கு, 1932ல் வெளியான The Mummy படத்தைச் சொல்லமுடியும். இதைத்தான் தொண்ணூறுகளின் இறுதியில் ஸ்டீவன் சாம்மர்ஸ் ரீமேக் செய்து, உலகெங்கும் பிரம்மாண்ட ஹிட்டாக அமைந்தது. இதன்பின்னர் King Kong (1933)ல் வெளியாகிறது. இது பேய்ப்படம் அல்ல – ஒரு மான்ஸ்டர் படம் என்றாலும், அக்காலத்தில் மிகப்பெரும் ஹிட்டாக அமைந்த படம் இது. 1930ல் இருந்து 1934 வரையிலும் இருந்த காலகட்டத்தை, திகில் படங்களின் பொற்காலம் என்றே பத்திரிக்கைகள் வர்ணிக்கின்றன. அத்தனை திகில் படங்கள் அவ்வருடங்களில் வெளியாகியிருக்கின்றன. 

இப்படங்களுக்குப் பிறகு, Werewolve of London (1935) மற்றும் The Wolf man (1941) படமும் குறிப்பிடத்தக்கவை. ஓநாய் மனிதனைக் காட்டிய படங்கள். இவற்றுக்கு இடையிலேயே ஏராளமான திகில் படங்கள் வந்தாகிவிட்டன. அவற்றில் டிராகுலா, ஃப்ராங்கென்ஸ்டைன் படங்களுக்கு வெளியான பல பாகங்களைச் சொல்லமுடியும். 

இக்காலகட்டத்துக்குப் பிறகு, Creature Features என்று அழைக்கப்பட்ட, ஜந்துகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பிரபலமாகத் துவங்கின. இது ஐம்பதுகளின் துவக்கம். 1953ல் The Beast From 20,000 Fathoms வெளியாக, இதைத் தொடர்ந்தே இப்படிப்பட்ட ஜந்துப் படங்கள் எடுக்கப்பட்டன. உண்மையில் இந்தப் படம்தான் காட்ஸில்லா படத்தின் முன்னோடி. இப்படத்துக்குப் பிறகுதான் ஜப்பானில் காட்ஸில்லா (கோஜிரா என்று அங்கே அதற்குப் பெயர்) படங்கள் எடுக்கப்பட்டன. இப்படத்தின் கதையும் காட்ஸில்லாவின் கதையும் ஒரேபோன்றுதான் இருக்கும். 

இந்த creature படங்களுடனேயே, ஏலியன்களைப் பற்றிய வரிசையான படங்களும் அப்போது எடுக்கப்பட்டன. திகில் படம் என்ற கணக்கில் இவையும் வரும். Invasion of the Bodysnatchers (1956) ஒரு உதாரணம். ஐம்பதுகளின் இறுதிவரை இந்த இரண்டுவகைப் படங்களும் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.

ஐம்பதுகளின் முடிவில்தான் இதுவரை மறக்கமுடியாத ஒரு திகில் படம் வெளிவந்தது. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் எடுத்த ‘சைக்கோ’. இதைப் பேய்ப்படம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இந்தப் படம் எழுப்பிய தாக்கம் மிக முக்கியமானது. உலகெங்கும் இப்படம் பார்த்து அனைவரும் பயந்தனர். உளவியல் சார்ந்த திகில் படங்களுக்கு ஒரு அட்டகாசமான பாதை போட்டுக்கொடுத்தது சைக்கோ படமே. இன்றும் ராட்சசன் போன்ற படங்களுக்கு ஆரம்பப் புள்ளி இந்தப் படம்தான். இப்படத்தைத் தொடர்ந்து, இன்னொரு அட்டகாசமான படமாக ‘Birds’ வெளியானது. அதே ஹிட்ச்காக், இம்முறை பறவைகளை வைத்து ஆடியன்ஸை திகிலில் ஆழ்த்தினார். 

இதைத் தொடர்ந்து, ‘The Night of the Living Dead’ ஒரு புதிய அலையை எழுப்பியது. முப்பதுகளிலேயே ஸாம்பிகளை வைத்துப் படங்கள் வந்திருந்தாலும், அருமையான மேக்கப், நல்ல நடிப்பு, திகிலைக் கிளப்பும் jump scares என்று ஜார்ஜ் ஏ. ரொமேரோ எடுத்த படம் இது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை ஸோம்பிகளை வைத்துப் படங்கள் வெளிவர இப்படம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. 

அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முடிவு வரையிலும், திகில் படங்களில் குறிப்பாகக் குழந்தைகளை மையப்படுத்தும் வழக்கம் உருவானது. திகிலூட்டும் தீய சக்திகளால் குழந்தைகள் படும் பாடு இந்தக் காலகட்டம் முழுதுமே இருந்தது. அது இன்றுவரை அவ்வப்போது தொடர்கிறது. இது, 1973ல் வெளியான ‘The Exorcist’ படம் மூலம் உலகெங்கும் பரவியது. இன்றும், இப்படத்தின் ரசிகர்கள் உள்ளனர். கடவுளின் சக்தி Vs சாத்தானின் சக்தி என்ற, இன்றுவரை பிரபலமாக இருக்கும் கரு இப்படத்தில் பரக்கக் கையாளப்பட்டிருக்கும். இப்படத்தை மையமாக வைத்து எண்டமூரி வீரேந்திரநாத் ‘துளசிதளம்’ என்று ஒரு நாவல் எழுத, அது தமிழில் சுசீலா கனகதுர்காவால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழிலும் பலரைப் பயமுறுத்தியது. பின்னர் அது படமாகவும் வெளியானது. (எக்ஸார்ஸிஸ்ட், யுனைடட் கிங்டமில் 1999 வரை வீடியோவாக வரத் தடைவிதிக்கப்பட்டிருந்தது). இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிய வில்லியம் பீட்டர் ப்ளாட்டி மிகவும் பிரபலம் அடைந்தார். படத்தை இயக்கியவர் வில்லியம் ஃப்ரைட்கின். பல படங்கள் இயக்கியிருந்தாலும், எக்ஸார்ஸிஸ்ட்டே இன்றுவரை அவரது பெயரைப் பலருக்கும் நினைவுபடுத்தும் படமாக இருக்கிறது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டியால் 1971ல் நாவலாக எழுதப்பட்டு, அதன்பின் திரைப்படமாக வெளிவந்த படைப்பு இது. வில்லியம் பீட்டர் ப்ளாட்டிக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கரும் கிடைத்தது (மொத்தம் பத்து வகைகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது இப்படம்). சிறந்த படத்துக்கான ஆஸ்கருக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் திகில் படமாகவும் இது அமைந்தது. 


இப்படத்துக்குப் பின்னர் பல திகில் படங்கள் வரிசையாக வெளியாயின. அதேசமயம், இன்றுவரை திகிலுக்காகவே நினைவுகொள்ளப்படும் ஒரு மனிதரும் பிரபலம அடைய ஆரம்பித்திருந்தார். அவர்தான் ஸ்டீஃபன் கிங். திரைப்படமாக எடுக்கப்பட்ட அவரது முதல் நாவலாக, Carrie அமைந்தது. இப்படத்தை இயக்கியது ப்ரையன் டி பா(ல்)மா. அக்காலகட்டத்தின் மிகப்பெரிய ஹிட படமாகவும் இது அமைந்தது. பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் Carrie என்ற, பிறருடன் பொருந்திப் போகாத மாணவி, பிறரது அவமானப்படுத்துதலைத் தாங்கமுடியாமல் என்ன செய்கிறாள் என்பதே கதை. அவளுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்திகளை ஒரு கட்டத்தில் அவள் உபயோகிக்க ஆரம்பிக்க, அதனால் விளையும் அனர்த்தங்களே க்ளைமேக்ஸ். ஆனால், படத்தின் முதல் பாதியைப் பார்த்தால் ஒரு high school romance படமாகத்தான் இருக்கும். சிறுகச்சிறுக திகில் வெளிப்பட ஆரம்பிக்கும். இப்படத்தில் துவங்கி, ஸ்டீஃபன் கிங்கின் பல திகில் நாவல்கள் இன்றுவரை படமாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சில உதாரணங்களாக, The Shining, Pet Cemetary, Dream Catcher, The Mist, IT ஆகியவற்றைச் சொல்லலாம். திகில் அல்லாமல், அவரது பிற நாவல்களுமே நிறையப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் திகில் திரைப்பட வரலாற்றில் ஸ்டீஃபன் கிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

Carrie படத்துக்குப் பின், இன்னொரு மிக முக்கியமான படம் வெளியானது. இப்படமும் உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். பலரை பயமுறுத்திய படமும் கூட. தமிழிலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. The Omen. இதுவும் குழந்தை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இயக்கியவர் ரிச்சர்ட் டான்னர். நடித்தது க்ரெகரி பெக். சைத்தானின் குழந்தை பூமியில் பிறந்து, அந்த உண்மை தெரியாமல் வளர்த்தும் பெற்றோர்கள் மத்தியில் சிறுகச்சிறுக தனது சக்திகளை வெளிப்படுத்த ஆரம்பிப்பதே கதை. தமிழில் அர்ஜுன் நடித்து யார்? என்ற படமாக இப்படத்தின் தழுவல் வெளியானது. 

இந்தக் காலகட்டம்தான் திகில் படங்களின் மன்னரான ஜான் கார்ப்பெண்டர் முழுவீச்சில் வெளிவந்த காலமும் கூட. அவரது ‘Halloween’ 1978ல்தான் வெளியானது. அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களை அடுத்த பல வருடங்களுக்கு எடுத்துத் தள்ளினார். கார்ப்பெண்டருக்குப் பல முகங்கள் உண்டு. அவர் இசையமைப்பதிலும் கில்லாடி. அவர் எடுத்த ஹாலோவீன் படத்துக்கு நாற்பது வருடங்கள் கழித்து நேரடி இரண்டாம் பாகம் 2018ல் வெளியானது. பிரம்மாதமான வெற்றியும் அடைந்தது. இப்படத்துக்கு அவரே இசை (இடையில் ஹாலோவீனின் பல பாகங்கள் வெளியாகிவிட்டன). 

எழுபதுகளின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், அக்காலகட்டம்தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ப்ரையன் டி பா(ல்)மா, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, ஜார்ஜ் லூகாஸ் போன்ற இளைஞர்கள் முழுவீச்சில் திரைப்படங்களுக்குள் புகுந்த காலகட்டம். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்தனர். ஜார்ஜ் லூகாஸ் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பக்கம் தாவ, பாக்கி மூவரும் பலவகையான படங்கள் எடுத்தனர். அவற்றில் திகில் படங்களும் அடக்கம். ஸ்பீல்பெர்க்கின் Jaws வெளிவந்து, மிருகங்கள் மூலம் திகிலூட்டிய திரைப்பட வகையை மீட்டது. அதேபோல், எழுபதுகளில்தான் ஸ்பெஷல் எஃபெக்ட்கள் முழுவீச்சில் இறக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, எண்பதுகளில் வெளியான அத்தனை திகில் படங்களும், விஷுவலாகப் பிரம்மாதமாக எடுக்கப்பட்டன. இது இன்றுவரை தொடர்கிறது. ஸ்டான்லி க்யுப்ரிக் எடுத்த ‘The Shining’ 1980ல்தான் வெளியானது. இதுவும் ஸ்டீஃபன் கிங்கின் நாவலே. ஆனால் நாவலுக்கும் படத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இருவருக்கும் இதனால் விரோதமும் உருவானது. ஷைனிங் படத்தின் பிரத்யேக அம்சம் என்னவென்றால், இப்போது பார்த்தாலும் அது நேற்று எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும். அத்தனை செய்நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட படம் அது. 

ஸாம் ரெய்மி என்ற இளைஞன், தொண்ணூறாயிரம் டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, சில நடிகர்களுடன் காட்டுக்குள் புகுந்து எடுத்து வெளியிட்ட ‘The Evil Dead’ படம் 1981ல் வெளியானது. இப்போது கல்ட் படம் என்று சொல்கிறோமே – அப்படிப்பட்ட படமாக அது அமைந்தது. இந்தியாவிலும் இப்படம் மிகுந்த பிரபலம் அடைந்தது. இதற்குப் பின்னர் ஸாம் ரெய்மி மிகுந்த பிரபலம் அடைந்து, மூன்று ஸ்பைடர்மேன் படங்களையும் இயக்கினார். இவரும் குறிப்பிடத்தகுந்த திகில் பட இயக்குநர்களில் ஒருவர். இவரது Drag me to Hell திரைப்படம் குறிப்பிடத்தகுந்த திகில் படமாகும். 

ஜான் கார்ப்பெண்டர் இயக்கிய ‘The Thing’, 1982ல் வெளியானது. அக்காலகட்டத்தில் இப்படம் சரியாகப் போகவில்லை. இதில் வில்லன் ஒரு ஏலியன் ஜந்து. எந்த உயிரினத்துக்குள்ளும் புகுந்து, பிற உயிரினங்களைக் கொல்லக்கூடிய ஜந்து. அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு விண்வெளி ஓடத்தை அங்கே கண்டுபிடிக்க, அதனுள் இருந்து வெளிவந்திருக்கும் ஏலியன் ஜந்து ஒன்று, பிற உயிரினங்களின் உடலில் புகுந்து, பிறரைக் கொல்கிறது. யார் உடலில் ஜந்து இருக்கிறது என்பதே முதலில் தெரியாமல், தங்களைத் தாங்களே சந்தேகப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. ஆனால், இந்தக் காலகட்டத்தில்தான் நல்ல ஏலியன் ஒன்றை வைத்து ஸ்பீல்பெர்க் E.T படத்தை இயக்கியிருந்தார். அதற்கு நேர் மாறாக, அழிவு என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனால் இன்றுவரை திகில் பட ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இது இருக்கிறது. 

1984ல் Nightmare on Elm Street வெளியானது. இதுவும் இன்றுவரை பேசப்படும் ஒரு திகில் படம்தான். இந்திய ரசிகர்களுக்கு இப்படம் நினைவிருக்கலாம். அக்காலத்தில் ஈவில் டெட், Howling ஆகிய படங்களுடன் இதுவும் வெளியானது. வெஸ் க்ராவன் எடுத்த இந்தப் படத்தின் ஃப்ரெட்டீ க்ரூகர் என்ற கதாபாத்திரம், மனிதர்களைக் கொடூரமாகக் கொல்லும். அதுவும் குறிப்பாக, அவர்களின் கனவுகளுக்குள் புகுந்து அவர்களைக் கொல்லும். பயந்துபோய் விழிக்கும் அவர்களின் உடல்களில் கனவில் நடந்தவைகளின் அடையாளம் இருக்கும். இதன்பின் ஃப்ரெட்டீ என்ற ஜந்துவால் நிஜத்திலும் அவர்கள் கொல்லப்படுவார்கள். இந்தப் படத்துக்கு இதன்பின் பல பாகங்கள் வந்தன. 

தொண்ணூறுகளில் திகில் படங்களில் சைக்கோ கொலைகாரர்கள் அதிகம் இடம்பெற ஆரம்பித்தனர். Silence of the Lambs, Natural Born Killers, Se7en, American Psycho போன்ற படங்கள் சில உதாரணங்கள். அதேசமயம் ரொமாண்டிக்கான திகில் படங்களும் வர ஆரம்பித்தன. காதலியின் கண்முன்னர் கொல்லப்பட்ட காதலன், பேயாகத் திரும்பி வந்து காதலியைப் பல சிக்கல்களில் இருந்து காத்து, தனது கொலைகாரனை அடையாளம் காட்டும் படமாக Ghost வெளியாகி, உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடியது. டெமி மூர் மிகப்பிரபலம் ஆன படங்களில் இதுவும் ஒன்று. அதேபோல், Scream, I know what you did last summer போன்ற slasher வகையைச் சேர்ந்த படங்களும் வர ஆரம்பித்தன. எண்பதுகளிலேயே உருவாகிவிட்ட Friday the 13th படத்தின் பல பாகங்களையும் இங்கே சேர்த்துக்கொள்ளலாம். 

2000த்துக்குப் பின்னர், ஹாலிவுட் படங்கள், 2001 செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த பேரழிவினால் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் இறந்து, ஆறாயிரம் பேருக்கும் மேல் காயமடைந்த அந்தச் சம்பவம், அமெரிக்க மக்களின் மனதில் தீராத பயத்தை விதைத்தது. இதனால் அக்காலகட்டத்தில் வெளியான திகில் படங்கள் மக்களால் உளவியல் ரீதியாக ஒதுக்கப்பட்டன. இந்த நிலை ஒரு சில வருடங்கள் தொடர்ந்தது. ஆனால் ஆச்சரியகரமாக, இந்த அழிவுக்கு முன்னர் வெளியான சில படங்களில், இதைப்பற்றிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. உதாரணமாக, 2000ல் வெளியான Final Destination படத்தில் இதேபோன்ற ஒரு விமான விபத்து இடம்பெற்றிருந்தது. எதிர்பார்க்காத பேரழிவுகள் படங்களில் தொடர்ந்து இடம்பெற ஆரம்பித்தது இதற்குப் பிறகுதான். இதன்பின்னர் வெளிவந்த பல படங்களிலும், தீவிரவாதம், அழிவுகள் ஆகியன விளக்கப்பட்டன. 

இதற்குப் பின் வந்திருக்கும் பல திகில் படங்கள் பற்றி நமக்கே தெரியும். இக்காலகட்டத்தில்தான் ஆசிய நாடுகளின் ஹாரர் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமாயின. அவற்றின் உரிமைகளை வாங்கிப் படம் எடுக்கும் நோக்கம் அதிகரித்தது. குறிப்பாக Ringu (The Ring), A Tale of Two sisters (The Uninvited), Ju-On (The Grudge) ஆகிய திகில் படங்களைச் சொல்லமுடியும். இவற்றில் The Ring மற்றும் The Grudge ஆகியவை ஆங்கிலத்திலும் நன்றாக ஓடின. ஜேம்ஸ் வான் ஹாரர் படங்களுக்குள் வந்து Insidious, The Conjuring ஆகிய படங்களை இயக்குகிறார். அவை உலகெங்கும் ஹிட் ஆகின்றன. Annabelle வெளியாகிறது. It Follows, Lights Out, It comes at Night, The Babadook, Under the Shadow போன்ற வித்தியாசமான பரிசோதனை முயற்சிகள் நடைபெறுகின்றன (இவற்றுக்குப் பல ஆண்டுகள் முன்னர் வெளிவந்த ‘The Blair Witch Project’ படத்தை அவசியம் பாராட்டலாம். மிக வித்தியாசமான பரிசோதனை முயற்சி அது). மேலே சொன்ன படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்களும் எடுக்கப்படப்போகின்றன (ஒருசில பாகங்கள் ஏற்கெனவே வந்தும்விட்டன). 

பயம் என்ற உணர்வு உலகில் இருக்கும்வரை திகில் படங்களுக்கான தேவையும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதுவரை நாமும் இப்படங்களைப் பார்த்து, கொடூர சொப்பனங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கப்போகிறோம். தற்காலத்திய நிலையில் திகில் படங்களின் இன்றியமையாத அம்சமாக எது இருக்கிறது என்றால், ஆடியன்ஸை திடீர் என்று திடுக்கிட வைக்கும் தருணங்களே. Jump Scares என்று இந்தத் தருணங்கள் அழைக்கப்படுகின்றன. எத்தனைக்கெத்தனை இந்தத் தருணங்கள் அதிகமோ, அத்தனைக்கத்தனை படங்களின் திகில் தன்மை அதிகரிக்கிறது. காரணம், தற்காலத்தில் உலகின் அத்தனை விதமான திகில் கதைகளும் படமாக எடுக்கப்பட்டுவிட்டன. எனவே புதிதாக எதையும் உருவாக்குவது கடினம். எனவே, காட்சிகளில் கவனம் செலுத்தப்பட்டு, திகில் தருணங்கள் எழுதப்படுகின்றன – உருவாக்கப்படுகின்றன. கூடவே, ஆடியன்ஸும் பல்வேறு படங்களை இணையத்தின் மூலமாகப் பார்த்துப்பார்த்து, கதையையே கண்டுபிடிக்கும் தன்மையும் அதிகரித்து வருகிறது. எனவே வித்தியாசமான ட்விஸ்ட்களும் இப்போதைய தேவை. கூட்டிக்கழித்துப் பார்த்தால், இப்போதைய காலத்தில் திகில் படம் எடுப்பது சாதாரண வேலை இல்லை. நிறைய உழைப்பு தேவைப்படும் ஒரு விஷயம் இது. 

தொலைக்காட்சிகளில் பல ஹாரர் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அது ஒரு தனி உலகம். அவைகளைப் பற்றி எழுத இதுபோல் இன்னொரு கட்டுரைதான் தயார் செய்யவேண்டும் என்பதால், அவைகளைப் பற்றி நீங்களே தேடிப்பாருங்கள். 

]]>
http://karundhel.com/horror-film-history-of-hollywood/feed/ 3
இயக்குநர் மகேந்திரன் – தமிழ்த் திரைப்படங்களின் அதிசயம் http://karundhel.com/homage-to-director-jmahendran/ http://karundhel.com/homage-to-director-jmahendran/#comments Sat, 13 Jun 2020 14:05:34 +0000 http://karundhel.com/?p=6783 சென்ற ஆண்டு, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பிறகு மின்னம்பலம் இணைய இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. நம் தளம் பிரச்னைக்குள்ளாகி, அதன்பின் மீண்டதால் முதல் கட்டுரையாக இது இருந்தால் மகிழ்ச்சி என்பதால் இங்கே கொடுக்கிறேன்.
*********************
தங்கப்பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன். படம் பிரம்மாண்ட வெற்றி அடைகிறது. ஆனால் அதன்பின் ஒரு வருடத்துக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாருமே அவரைத் தேடி வரவில்லை. காரணம், தங்கப்பதக்கம் வெற்றி அடைந்தது, சிவாஜி கணேசனின் நடிப்பால்தான் என்று பலரும் எண்ணி, கதை வசனம் எழுதியவரைப் பற்றி முற்றிலும் மறந்துபோனதே. இருப்பினும், தானாகச் சென்று வாய்ப்புக் கேட்க அவரது தன்மானம் அனுமதிக்காததால், தங்கப்பதக்கம் படத்தின் வெற்றிவிழாக் கேடயம், விழாவில் சிவாஜி அணிவித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றில் இருந்த வெள்ளியை விற்றே குடும்பம் நடத்துகிறார்.

அந்த ஒரு வருட முடிவில் அவரது வீட்டுக்கு எஸ்.எஸ். கருப்பசாமி என்று ஒருவர் வருகிறார்.  ஒரு திரைப்படம் தயாரிப்பதாகவும், அப்படத்தைப் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியவர்கள் இயக்கப்போவதாகவும், அதற்கு மகேந்திரன் தான் கதை வசனம் எழுதவேண்டும் என்றும் கேட்கிறார். மகேந்திரன் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு எழுதிய அந்தப் படம்  ‘வாழ்ந்து காட்டுகிறேன்’. படம் நன்றாக ஓடுகிறது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 25 படங்கள் கதை, வசனம், திரைக்கதை என்று எழுதிக் குவித்ததாகவே சொல்கிறார் மகேந்திரன்.

அந்தச் சம்பவம் பற்றி எழுதும்போது, ஒரு வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தாலும், எஸ்.எஸ். கருப்பசாமி வந்து கதவைத் தட்டியபோது சும்மா தூங்கிக் கொண்டிருக்காமல், அப்போதும் தயார் நிலையில் இருந்ததால்தான் அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி, வாய்ப்பு என்பது எப்போது வந்தாலும், தயார் நிலையில் இருந்தே ஆகவேண்டியது நமது கடமை என்று தனது ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மிஸ்டர் மகேந்திரன் (அவர் எல்லாரையும் அப்படியே அழைப்பது வழக்கம்). 

தமிழ் சினிமாவில் மகேந்திரனின் பங்கு பற்றி இந்தச் சில நாட்களில் (2019ல் அவரது மறைவின்போது எழுதியது) பல கட்டுரைகள் எழுதப்பட்டாயிற்று. அவரது முக்கியத்துவம், அவரது கதை சொல்லும் விதம், அவர் எடுத்த படங்களின் தாக்கம் என்று எத்தனை எழுதினாலும் போதாது. காரணம், அவரே சொல்லியபடி, எப்போதும் தயார் நிலையிலேயே இருந்திருக்கிறார் மகேந்திரன். அவரை சில மாதங்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு சென்னையில் பாஃப்டா திரைப்படக் கல்லூரியில் கிடைத்தது.  டைரக்‌ஷன் துறைக்கு அவர் HOD. நான் திரைக்கதைத் துறையில் டைரக்டராகச் சேர்ந்திருந்தேன். என் துறைக்குத் தலைவர், திரு. பாக்யராஜ் அவர்கள். மாணவர்களுக்கு அற்புதமாக வகுப்புகள் எடுப்பார் மகேந்திரன். கூடவே, நூலகத்தில், தன்னைச் சுற்றிலும் மாணவர்களை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் அருமை பற்றிப் பலசமயங்கள் பேசியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை அங்கே அணுகிப் பேச முடியும். சிரித்த முகத்தோடு பொறுமையாகவும், இனிமையாகவும் அவருக்கே உரிய வேகமான உடல்மொழியோடு பேசி, நமது சந்தேகங்களைத் தெளிவு செய்வது அவரது வழக்கம். எப்போது பேசினாலும், ஏதேனும் ஒரு புதிய படமோ புத்தகமோ பற்றிச் சொல்லி, நம்மையும் பார்க்கும்படி தூண்டுவார்.  சிறுகதைகள், நாவல்கள், உலகப் படங்கள் என்று பல புதிய விஷயங்களைச் சொல்லுவார். பாஃப்டாவின் நூலகத்தில் அவரது பரிந்துரையின் கீழ் பல புத்தகங்களும் படங்களும் வாங்கி வைக்கப்பட்டன. அவருடன் பேசும்போதெல்லாம், இத்தனை எளிமையாக நம்மிடம் பேசும் இவரா உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள் போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குநர் மகேந்திரன்? என்ற சந்தேகம் வராமல் இருக்காது. அவரது நெருக்கம் அப்படிப்பட்டது.

மகேந்திரன், அடிப்படையில் ஒரு விமர்சகராகவே தனது வாழ்க்கையைத் துவங்கியவர். நாடோடி மன்னன் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள 1958ல் மதுரை வந்த எம்.ஜி.ஆர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷனின் திறப்பு விழாவுக்காக வருகைதரச் சம்மதிக்கிறார். அந்த விழாவில், தமிழ் சினிமா பற்றி மூன்றே நிமிடங்கள் பேசும் வாய்ப்பு மாணவராக இருந்த மகேந்திரனுக்குத் தரப்பட, தனது பேச்சுத்திறமையால் மொத்தம் 45 நிமிடங்கள் பேசி, கரகோஷம் வாங்கி, எம்.ஜி.ஆரிடம் பாராட்டுப் பெறுகிறார். அதன்பின் கல்லூரி முடித்து, சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அவருக்குப் பணம் அனுப்பிப் படிக்கவைத்த அத்தை திடீரென ஏழே மாதங்களில், பணம் இல்லை என்று சொல்லிவிட, வேறு வழியில்லாமல் ஊருக்கே கிளம்பத் தயாராகிறார் மகேந்திரன். சட்டக் கல்லூரியை விட்டு வெளியே வருகையில், காரைக்குடியைச் சேர்ந்த கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் எதிரே வந்து, மகேந்திரனிடம் பேசுகிறார். இருவருக்கும் முன்கூட்டிய பழக்கம் உண்டு. மகேந்திரன் அன்று ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதை அறிந்து, ‘இன முழக்கம்’ என்ற பெயரில் தான் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகவும், எம்.ஜி.ஆர் முன்னாலேயே கல்லூரியில் மிகச்சிறப்பாகப் பேசியதால், பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் எழுதச்சொல்லி, உதவி ஆசிரியர் வேலையையும் கொடுக்கிறார். மகேந்திரன், மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார். 

அந்தப் பத்திரிக்கையில்தான் விமர்சனங்கள் எழுதுகிறார் மகேந்திரன். இன முழக்கம் என்பது தி.மு.கவைச் சேர்ந்த பத்திரிக்கை. தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் வேலை செய்த படங்களையும் கூட விட்டுவைக்காமல் மிகக்கடுமையாகவும் கறாராகவும் அவரது விமர்சனங்கள் இருந்ததால் ஆசிரியர் சி.பி. சிற்றரசுக்கு நெருக்கடி வரும் அளவு எழுதினார் மகேந்திரன். அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க விரும்ப, இன முழக்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்று ஒரு ஓரமாக நிற்கும் மகேந்திரனை சில வருடங்கள் கழித்துக் கச்சிதமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தன்முன் அவர் பேசியதை நினைவுகூர்ந்து, மறுநாள் லாயிட்ஸ் ரோடு வீட்டுக்கு வரச்சொல்லி, ஒரு நல்ல வேலை கொடுக்கப்போவதாகச் சொல்கிறார். உதவி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் செல்கிறார் மகேந்திரன். அங்கே, முதல் மாடியில் ஒரு அறையைக் கொடுத்து, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் கொண்டுவந்து கொடுத்து, அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதச் சொல்கிறார் எம்.ஜி.ஆர். திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத மகேந்திரன், எழுதும் வேலையை ஆரம்பிக்கிறார்.

மூன்று மாதங்களில் திரைக்கதையை முடிக்கிறார். எம்.ஜி.ஆரை ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து, திரைக்கதையைக் கொடுக்கிறார். அப்போதுதான், வீட்டில் இருந்து மகேந்திரனுக்கு எந்தப் பணமும் வரவில்லை; மூன்று மாதங்களாக, தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு, ஒரு நண்பனின் உதவியால் சமாளித்து மகேந்திரன் வாழ்ந்ததை எம்.ஜி.ஆர் அறிகிறார். உடனடியாகக் கண் கலங்கி, தன்னைத்தானே திட்டிக்கொண்டு, மறுநாள் ஆயிரம் ரூபாயை அளிக்கிறார். 

இதன்பின் எம்.ஜி.ஆருக்கு அனாதைகள் என்று ஒரு நாடகம் எழுதித் தருகிறார் மகேந்திரன். அதைப் படமாக எடுக்க விரும்பி, மூன்று நாள் படப்பிடிப்பும் நடக்கிறது. ஆனால் ஃபைனான்ஸியர் இறந்ததால் நின்றுவிடுகிறது (அப்படம் வாழ்வே வா – இயக்குநர் : டி. யோகானந்த்).

இதன்பின்னர் காஞ்சித் தலைவன் (சிவகாமியின் சபதத்தைத் தழுவிய படம்) படத்தில் உதவி இயக்குநராக மகேந்திரனை சேர்த்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அப்படம் முடிந்ததும், எம்.ஜி.ஆருடனேயே மகேந்திரன் இருந்ததால் அறிமுகமான கே. பாலன், மகேந்திரனிடம் கதை கேட்க, அவர் சொல்லிய கதை பிடித்துப்போய் நாம் மூவர் என்று படம் ஒன்று தயாரிக்கிறார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியவர்கள் நடிக்க, அப்படம் வெற்றிபெறுகிறது. இதுதான் மகேந்திரனின் முதல் படம். கதையாசிரியராக.  இதற்குப் பின்னர் வரிசையாகக் கதைகளும், திரைக்கதைகளும், வசனங்களும் எழுதுகிறார். ஆனால் அவருக்கு அப்போது இருந்த ஒரே ஆதங்கம் – எதைப் பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுதினாரோ, அதேபோன்ற படங்களையே எழுத வேண்டியிருக்கிறதே என்பதுதான். அந்த ஆதங்கம் சிறுகச்சிறுக வளர்ந்து, ஒரு தருணத்தில் துக்ளக் பத்திரிக்கையில் சோவிடம் வேலை செய்வதில் நிற்கிறது. அதன்பின்னர் வேணு செட்டியார் தேடி வந்து, ஒரு படம் இயக்கக் கேட்டுக்கொள்ள, நாவல்களில் இருந்துதான் படம் எடுப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று மகேந்திரன் எடுத்த படம்தான் முள்ளும் மலரும். 

மகேந்திரனின் வாழ்க்கையே முற்றிலும் தற்செயல்களால் ஆனது. சினிமாவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்க்காத நபராகவே கல்லூரியில் இருந்தவர், பின் சென்னையில் சட்டம் படிக்க வந்தது, அது பாதியில் நின்று, ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இன முழக்கத்தில் விமர்சனங்கள் எழுதும் வேலை கிடைத்தது, பின் எம்.ஜி.ஆர் இவரைத் தற்செயலாகப் பார்க்க, பொன்னியின் செல்வன் எழுதியது, அதன்பின் அதன்மூலமே சினிமாவில் கதை எழுதும் வேலை, பின்னர் துக்ளக்கில் வேலை, அதன்பின்னர் அந்த அலுவலகத்தில் பார்த்த ஒரு ஜான் வேய்னின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தங்கப்பதக்கம் உருவானது, அதன்பின் ஒருவருடம் யாருமே அழைக்காமல், பின்னர் ஒரு படம் கிடைத்தது, அதன்பின்னர் பல படங்கள் கதை வசனம் திரைக்கதை எழுதியது, பின்னர் முள்ளும் மலரும் இயக்கியது என்று பல தற்செயல்கள். இறுதிவரை ஒரு திட்டம் போட்டு ப்ளான் செய்யாமல், வாழ்க்கையின் தற்செயல்களையே எதிர்கொண்டவர் மகேந்திரன். இதனை அவரது புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அப்படியே, ‘என்னைப்போல் இருக்கவேண்டாம். வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு வாழுங்கள்’ என்றும் நமக்குச் சொல்லியும் இருக்கிறார்.

மகேந்திரனின் படங்களில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி ஆகிய படங்களைப் பற்றிப் பலரும் விரிவாகவே எழுதியாயிற்று. எனவே, அவரது பிற படங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். அவரது பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி போன்ற, தற்காலத்தில் பெரிதே மறக்கப்பட்டுவிட்ட படங்கள் பற்றிக் கவனிக்கலாம்.

உதிரிப்பூக்கள் பெருவெற்றி அடைந்து, விருதுகளைக் குவித்தபின்னர், 1980ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘பூட்டாத பூட்டுக்கள்’. எழுத்தாளர் பொன்னீலனின் ‘உறவுகள்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் (முள்ளும் மலரும் – உமா சந்திரன், உதிரிப்பூக்கள் – புதுமைப்பித்தனின் சிற்றன்னை ஆகியவற்றைத் தொடர்ந்து, அவரது மூன்றாவது படமும் இப்படியே). பூட்டாத பூட்டுக்கள், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் ஆகிய படங்களை விடவும் சற்றே தீவிரமான படம். இப்போது art house என்று சொல்லப்படும் படங்களின் தன்மையைக் கொண்டது. குழந்தை இல்லாத கணவன் மனைவி, மனைவி இன்னொருவரிடம் உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது, மனைவியை ஊரே வெறுப்பது போன்றவற்றைக் கையாண்ட படம். நாயகி, தனக்குப் பிடித்த நபருடன் இருக்க விரும்பி ஊரை விட்டே ஓடி அவனிடம் செல்ல, அவன் இவளை அவமானப்படுத்திவிட, திரும்பி வரும் மனைவியைக் கணவன் புரிந்துகொள்வான். இறுதியில் அந்த ஊரை விட்டே அவர்கள் சென்றுவிடுவார்கள்.  ஆனால், படம் இத்தனை எளிமையானது அல்ல. இதே படத்தில், இன்னொரு பெண், என்ன நடந்தாலும் பார்வையில்லாத தன் கணவனை விட்டுக்கொடுக்காமல் இருப்பாள். அவள் கதைக்கும் நாயகியின் கதைக்கும் இருக்கும் மாறுபாடுகளை அருமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மகேந்திரன் காட்டி இருப்பார். குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், பக்கம்பக்கமாக வசனங்கள் இப்படத்தில் இருக்கவே இருக்காது. ஓரிரு வரிகள் மூலமாகவே கதையின் முக்கியமான சம்பவங்கள் நகரும். படத்தில் நடித்தது மலையாள நடிகர் ஜெயன், மற்றும் சாருலதா. இப்படத்தைத் தற்போது நீங்கள் பார்க்க நேர்ந்தால், முக்கியமான காட்சிகளில் இசை, மௌனம், மிகக்குறைவான வசனங்கள் எப்படிக் கையாளப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவசியம் பூட்டாத பூட்டுக்கள் ஒரு மிகச்சிறந்த படமே. ஆனால் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போல, அக்காலகட்டத்துக்குப் பாதுகாப்பான கரு இல்லாமல், இப்போதுமே சற்றே பிரச்னைக்குள்ளாகும் கரு ஒன்றை எடுத்துப் படமாக்கியதால், ஆடியன்ஸின் ஒவ்வாமை காரணமாகப் படம் பெரிதும் பேசப்படவில்லை. 


இதற்குப் பிறகு ஜானி, அதன்பின் அதே 1980ல் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை இயக்கினார் மகேந்திரன். மணி ரத்னத்தின் மௌன ராகத்துக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இந்தப் படம்தான். 28வது தேசிய விருது விழாவில் மூன்று விருதுகளை வாங்கிய படம் இது (சிறந்த தமிழ்ப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு). இந்தப் படமும் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும், இளைய தலைமுறையின் உறவுப் பிரச்னைகளை வைத்து எடுக்கப்பட்டு, ஒரு கல்ட் க்ளாஸிக் என்றே பேசப்பட்ட படமாக ஆனது. இதன் பாடல்கள் இன்றும் கேட்கப்படுகின்றன (இளையராஜா). ஒளிப்பதிவில் இந்தப் படம் அடைந்த உயரங்கள் அற்புதமானவை (அசோக் குமார்). சுஹாஸினி நடித்த முதல் படம். இந்தப் படத்தையும் மௌன ராகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு இன்ஸ்பிரேஷனில் இருந்து முற்றிலும் ஒரிஜினலாக ஒரு படம் எப்படி எடுப்பது என்பதற்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமையும். 

இதன்பின் 1981ல் மகேந்திரன் இயக்கிய படம் ‘நண்டு’. இது எழுத்தாளர் சிவசங்கரியின் புத்தகம். இப்படத்தில், அலஹாபாத்தில் பெரிய பணக்கார வம்சத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தந்தை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்தும் பெண்ணைப் பிடிக்காமல், தந்தை வீட்டை விட்டுப் போகச் சொல்வதால் சென்னை வருகிறான். அவனுக்குத் துவக்கத்தில் இருந்தே ஆஸ்த்மா இருக்கிறது. சென்னையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். பின்னர் வீடு தேடும்போது, அதே பெண் குடியிருக்கும் இடத்துக்கே தற்செயலாக வந்து தங்குகிறான். இந்தப் பெண்ணுக்கு ஒரு குடும்பம். அவள் குடும்பத்தில் நிகழும் பிரச்னைகள், நாயகனைக் காதலிக்கும் வீட்டு ஓனரின் பெண், நாயகன் ராம்குமாருக்கு ஆஸ்த்மா என்று தெரிந்து அவனுக்கு உதவும் நாயகி, வீடு தேடி அலைவதில் இருக்கும் பிரச்னைகள், குடித்தனக்காரர்கள், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், வாடகை வீட்டில் போடப்படும் நிபந்தனைகள் என்று கதை நகருகிறது. பின்னர் ராம்குமார், அவனுக்குப் பிடித்த பெண்ணான நாயகி சீதாவையே திருமணம் செய்துகொள்கிறான். அவன் திருமணத்தை அவனது அலஹாபாத் தந்தை எதிர்க்கிறார். குழந்தை பிறக்கிறது. மனைவியோடு குழந்தையைப் பெற்றோருக்குக் காட்டச்செல்லும் நாயகன் மறுபடி அவமானப்படுகிறான். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.  இப்படத்திலும் இசை, பாடல்கள், மௌனம் ஆகியவை முக்கியமாகக் காட்டப்பட்டிருக்கும். ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’ பாடல் நினைவிருக்கிறதா? தனது ஊரான அலஹாபாத்தை தனது மனைவிக்கும் மகனுக்கும் நாயகன் காட்டும் பாடல் இது. கூடவே, கஸல் பாடகர் புபீந்தர் சிங் ஹிந்தியில் பாடும் ‘கைஸே கஹூ(ன்) குச் கெஹ்னா சக்ஹூ(ன்) பாடலும் கவனிக்கத்தக்கது. அவசியம் நண்டு படமும் முக்கியமானதொரு பிரச்னையைப் பேசும் மகேந்திரன் படமே. ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார். 

இதேபோல் இதற்கு அடுத்து மகேந்திரன் இயக்கிய ஒரு மென்சோகம் நிரம்பிய படமே ‘மெட்டி’. ராதிகா, வடிவுக்கரசி, சரத்பாபு, ராஜேஷ் ஆகியவர்கள் நடித்த படம். ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்துக்கு வரும் மகன் (தாயை விட்டு ஓடிப்போன கணவனின் மகன்), அவனுக்கும் அவனது அம்மாவுக்கும், இரண்டு சகோதரிகளுக்கும் நடக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள், அதன்பின் இரண்டு மகள்களும் திருமணம் பற்றி முடிவெடுப்பது, அதில் நிகழும் பிரச்னைகள், பின்னர் இவையெல்லாம் இறுதியில் எப்படி முடிக்கப்படுகின்றன என்று காட்டியிருப்பார் மகேந்திரன். ‘மெட்டி’ என்பது இப்படத்தின் முக்கியமான பங்கும் வகிக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸே ஒரு மெட்டியை வைத்தே எடுக்கப்பட்டிருக்கும். இளையராஜாவின் இசையில், ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல் இன்றும் மறக்கமுடியாததாக இருக்கிறதுதானே?  இப்படத்துக்கும் அசோக் குமாரே ஒளிப்பதிவு. எடிட்டிங், லெனின் செய்தார். 

இதன்பின் மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கையில் ரஜினிகாந்த் மறுபடி நடித்தார். கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல் கன்னடத்தில் இயக்கிய கதா சங்கமா என்ற படம், இப்போதைய குறும்படங்கள் anthologyக்களாக வருவதற்கு முன்னோடி. அதில் வரும் ஒரு அரை மணி நேரப் படமான முனித்தாயி என்ற கதையே, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முழுநீளப் படமாக மகேந்திரனால் எழுதி இயக்கப்பட்டது. ஆனால் இக்காலகட்டத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியிருந்ததால், மகேந்திரன் கதையில் இரண்டு மாற்றங்களைச் செய்கிறார். ஆனால் பின்னால் அந்த மாற்றங்கள் வேண்டாம்; உள்ளது உள்ளபடியே எடுக்கப்படவேண்டும் என்ற பிரச்னை வர, ‘படம் உறுதியாகவே தோல்வி அடையும்’ என்று சொல்லிவிட்டே இயக்குகிறார். படமும் தோல்வி அடைகிறது. 

இதன்பின்னர் கண்னுக்கு மை எழுது என்ற படத்தை இயக்குகையில், சில தனிப்பட்ட நிகழ்வுகளால் முற்றிலும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அந்த மன உளைச்சலாலேயே படத்தில் கவனம் செலுத்த முடியாமல், படம் தோல்வி அடைந்ததாகவும் மகேந்திரனே அவரது புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இதன்பின் சாசனம் படத்தை எடுத்தபின் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் பின்னர் வெளியே கொண்டுவந்தார். அந்தப் படம் சில மாதங்கள் முன்னர் வரை எங்கிருக்கிறது என்பதே தெரியாமல், இப்போது கட்டணம் வாங்கிக்கொண்டு படங்களை ஆன்லைனில் பார்க்கும் ஒரு தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. 

தமிழுக்கு எப்படி ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் தங்கள் பாணியில் வித்தியாசமான படங்களைக் கொடுத்தார்களோ, அப்படி மகேந்திரன், தனக்கே உரிய பாணியில், offbeat படங்களையே தொடர்ந்து கொடுத்தார். பாசு பட்டாச்சார்யா, பாசு சாட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜீ ஆகியோர்களின் கதை சொல்லும் பாணி அது. சத்யஜித் ரேவின் ரசிகராக விளங்கிய மகேந்திரன், தான் இயக்கிய படங்களை அப்படிக் கொண்டுவந்ததில் ஆச்சரியம் இல்லைதானே? மகேந்திரனின் இன்னொரு சிறப்பம்சம், தன் படங்களை விழாக்களுக்கு அனுப்ப அவர் ஆர்வமே காட்டியதில்லை என்பது. இதனாலேயே ஒளிப்பதிவாளர் அசோக் குமாருக்குக் கிடைக்கவிருந்த இன்னும் பல விருதுகள் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று மகேந்திரன் வருத்தப்பட்டிருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்பவை ஒரு படத்தை எப்படியெல்லாம் பல படிகள் மேலேற்றுகின்றன என்பதற்கு மகேந்திரனின் படங்கள் எடுத்துக்காட்டுகள். கூடவே, இலக்கிய வாசிப்பிலும் அவர் சிறந்தவர். புத்தகங்களை மையமாக வைத்தே படம் இயக்கவேண்டும் என்று உறுதியான கொள்கை கொண்டிருந்தவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மிகச்சிறந்த, அன்பான, மென்மையான மனிதர். அவருடன் பழகிய யாருக்குமே அவருடன் மீண்டும் மீண்டும் பேசவேண்டும் என்ற எண்ணமே தோன்றும். 

தமிழ் சினிமாவின் முன்னோடிகள் என்ற இடத்தில் மகேந்திரனுக்கு ஒரு அழகான இடம் உண்டு. இனிமையான இசை, அன்பான, மென்மையான உறவுகள் சூழ்ந்த இடம் அது. அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் உலவும் அந்த அற்புதமான வெளியில் தற்போது மகேந்திரனும் கலந்துவிட்டார். இனி தமிழில் மட்டுமல்லாமல், படங்கள் உருவாக்கும் ஒவ்வொருவரும் மகேந்திரன் சொன்னவற்றையும் செய்துகாட்டியதையும் பின்பற்றினாலே தமிழ்ப் படங்கள் கட்டாயம் வேறொரு தளத்துக்குச் செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.  அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாமல் அப்படியே இருக்கிறது. இன்னும் இருக்கும்.

]]>
http://karundhel.com/homage-to-director-jmahendran/feed/ 4
Yellowstone (Series) – Review http://karundhel.com/yellowstone-series-review/ http://karundhel.com/yellowstone-series-review/#comments Fri, 15 May 2020 10:47:00 +0000 http://karundhel.com/?p=6759 காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின் தளபதியாக வரும் டாம் ஹேகன் ஆகியோர்களை,  கதை நடக்கும் பழைய காலகட்டத்தில் இருந்து அப்படியே கொண்டுவந்து 2018ல் அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை(Ranch)யில் விட்டுவிட்டு, காட்ஃபாதரை அந்தப் பண்ணையின் முதலாளி ஆக்கிவிட்டால்?

இதுதான் யெல்லோஸ்டோன். மாண்டனாவின் போஸ்மேன் பிராந்தியத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் ஜான் டட்டனுக்கு, ஒருசில எதிரிகளால் என்ன விதமான எதிர்ப்பு வருகிறது? அந்த எதிர்ப்பை ஜான் டட்டன் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த சீரீஸ் சொல்லும் கதை.

உங்களுக்கு டெய்லர் ஷெரிடன் பற்றித் தெரிந்திருக்கலாம். ஹெல் ஆர் ஹை வாட்டர் படத்தின் திரைக்கதை எழுத்தாளர். இந்தப் படம் பல விருதுகளில் பங்கு கொண்டது. அட்டகாசமான வெஸ்டர்ன் படம். இவரேதான் சிகாரியோ படத்தையும் எழுதினார். இவர் ஒரு நடிகரும் கூட. வெஸ்டர்ன் பின்னணி அழுத்தமாக இருக்கும் ஆள். யெல்லோஸ்டோனை எழுதி இயக்கியிருப்பவர் இவர்தான். யெல்லோஸ்டோனில் நடித்திருப்பவர், பழம்பெரும் நடிகர் கெவின் காஸ்ட்னர். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்குச் சமமாகப் பல வெஸ்டர்ன் படங்களில் நடித்து, எழுதி, இயக்கியிருப்பவர்.  மிகப் பிரபலமான நடிகர். இவர்தான் ஜான் டட்டன்.

இந்த சீரீஸில், மாண்டனாவில் வாழும் செவ்விந்தியர்கள் காட்டப்படுகிறார்கள். பல நூறு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்வ குடிகள் இவர்கள்தானே? அமெரிக்கோ வெஸ்புச்சி, கொலம்பஸ் போன்றவர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்தனர் என்பது வெற்றியடைந்த இவர்கள் சொல்லும் வரலாறு. ஆனால் இவர்கள் போன்றவர்கள் வந்தபின் தான், அங்கு வாழ்ந்துகொண்டிருந்த செவ்விந்தியர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். பூர்வகாலத்தில் இருந்து சுதந்திரமாக வாழ்ந்து திரிந்த செவ்விந்தியர்கள, வெள்ளையர்கள் வந்தபிறகுதான் அடிமைப்படுத்தப்பட்டு, இன்றுவரை ரிசர்வேஷன்கள் என்று சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ஙின்றனர். இதை நாம் மறக்க இயலாது.

இப்படிப்பட்ட செவ்விந்தியர்களின் புதிய தலைவராக, தாமஸ் ரெய்ன்வாட்டர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு, பரந்துவிரிந்த பூர்வநிலமான அமெரிக்காவில் இருக்கும் வந்தேறி வெள்ளையர்களைத் துரத்திவிட்டு, அமெரிக்கா முழுமையும் செவ்விந்தியர்கள் பழையபடி நிம்மதியாக வாழவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. மாண்டனாவில் இருக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்புக்குத் தலைவரானதுமே, பக்கத்தில் உள்ள ஜான் டட்டனின் பண்ணையைத்தான் குறிவைக்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய பண்ணையாக அது இருப்பதால், முதலில் அதை விலைக்கு வாங்கி, ஜான் டட்டனைத் துரத்திவிட்டு, அங்கே செவ்விந்தியர்களை வாழ விட்டு, அதன்பின் ஒவ்வொரு நிலமாக வாங்கவேண்டும் என்பது அவரது எண்ணம்.

அதேசமயம், டான் ஜென்கின்ஸ் என்ற மிகப்பெரிய பணக்காரர் ஒருவர், மாண்டனாவில் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஒரு சூதாட்ட விடுதி (கஸீனோ) கட்டவேண்டும் என்று அங்கே வருகிறார். அவரிடம் இல்லாத பணம் இல்லை. அரசியல் செல்வாக்கும் மிகுந்தவர்.  ஜான் டட்டனின் நிலத்துக்குப் பக்கத்து நிலத்தில் ஹோட்டல் கட்டவேண்டும் என்று நினைக்கிறார்.

இப்போது, ஜான் டட்டனுக்கு இயல்பாகவே இரண்டு எதிரிகள் உருவாகின்றனர். ஒருபக்கம் லட்சிய வெறியுடன் இருக்கும் செவ்விந்தியத் தலைவர் தாமஸ் ரெயின்வாட்டர். மறுபக்கம் அகந்தையுடன் வரும் டான் ஜென்கின்ஸ்.

ஜான் டட்டன் இந்த இருவரையும் கவனிக்கிறார். அவருடன், அவரது லவதுகையாக இருப்பது ரிப். ஜான் டட்டன் காப்பாற்றிக்கொண்டு வந்த ஒரு பையன். இப்போது அவரது மூத்த மகன் போல வளர்ந்து, ஒரு தளபதியாக நிற்கிறான். இதுதவிர, ஜான் டட்டனின் மகன் கேய்ஸீ, ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, தந்தையின் ஆளுமை பிடிக்காமல் ஒரு செவ்விந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்கிறான். தந்தை இரக்கமில்லாமல் எடுக்கும் பல முடிவுகள் அவனுக்குப் பிடிக்காததே காரணம். டட்டனுடனே வாழும் இன்னொரு மகன் ஜாமி டட்டன், ஒரு அட்டர்னி (வக்கீல்).  தந்தையின் நிழலைத் தவிற வேறொன்றும் தெரியாதவன். காட்ஃபாதரின் ஃப்ரெடோ போன்றவன். ஜான் டட்டனுக்கு ஒரு மகள். ரூத். இவள் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிகிறாள். தந்தையைப் போலவே அறிவு மிகுந்தவள். சாமர்த்தியசாலி. ஆனால் சிறுவயதில் நடந்த ஒரு சோகத்தால், எப்போதும் போதையிலேயே உழல்பவள்.

இதுதான் ஜான் டட்டனின் படை. இவர்களை வைத்துக்கொண்டு, எப்படி எதிரிகளை சமாளிக்கிறார் என்பது, தமிழில் தேவர் மகன் போன்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் சீரீஸ் இது. இதுவரை இரண்டு சீசன்கள் வந்திருக்கின்றன. இன்னும் ஒரு புதிய சீசன், இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிறது. தவறாமல் பாருங்கள்.

இதைப்பற்றி விகடனில் நான் பேசியிருக்கும் வீடியோ இங்கே.

]]>
http://karundhel.com/yellowstone-series-review/feed/ 1
Psycho (2019) – Tamil http://karundhel.com/psycho-2019-tamil/ http://karundhel.com/psycho-2019-tamil/#comments Tue, 04 Feb 2020 03:00:06 +0000 http://karundhel.com/?p=6049

தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன் – மிஷ்கின் பற்றிய கட்டுரை. karundhel.com. 2017 May.

தமிழில் வந்துகொண்டிருப்பவை, மிகப்பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள்தான். வணிகத்திரைப்படங்கள் என்று அழைக்கப்படும் இவைகள், கலைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஆர்ட் படங்களில் இருந்து பெரும்பாலும் வேறுபட்டிருப்பவை. இவற்றுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கே தெரியும். கமர்ஷியல் – மசாலாப் படங்கள் பற்றி இன்னும் ஆழமான எனது கட்டுரையை இங்கே படிக்கலாம். படித்துவிட்டு வாருங்கள். பின்னர் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம்.

அதேசமயம், தமிழின் பிரச்னை என்ன என்றால், ஒரு கமர்ஷியல் இயக்குநர் சற்றே கலைப்படங்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் வைத்துவிட்டால், உடனே அவர்களை இந்தியாவின் கலைப்பட இயக்குநர்களின் பட்டியலில் வைத்துவிடுவதுதான். பாலசந்தர், விஸ்வநாத், மணி ரத்னம் என்று இந்தப் பட்டியலை நாம் எழுதமுடியும். அதில் மிஷ்கினும் தன்னையே சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்று இந்தப் படம் பார்த்ததும் தோன்றியது.

மிஷ்கின் பற்றி ஏற்கெனவே பலமுறை விபரமாகவும் எழுதியிருக்கிறேன். மிஷ்கினின் படங்கள் – ஒரு விரிவான விமர்சனம்.

இதையும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அப்போது இந்த சைக்கோ விமர்சனத்தில் மிஷ்கின் பற்றி எழுதப்பட்டிருக்கும் கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியலாம்.

Spoiler alert.

இப்போது சைக்கோ படத்தை எடுத்துக்கொள்வோம். சைக்கோவின் கரு என்ன? ஒரு சைக்கோ கொலைகாரன், வரிசையாகக் கொலைகள் செய்கிறான். போலீஸ்துறையில் அவனைப் பிடிக்கமுடியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும்போது, பார்வையற்ற ஒரு இளைஞனும், கைகால்கள் இயங்காமல் இருக்கும் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியான பெண்ணும் இணைந்து அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். இப்போது, சைக்கோ பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். சைக்கோ படம் ஒரு கலைப்படமா? அல்லது கமர்ஷியல் படமா? அவசியம் அது கமர்ஷியல் படம்தான் இல்லையா? அப்படியென்றால், ஒரு கமர்ஷியல் படத்தைக் கலைப்படம் போல எடுக்கலாமா? எடுக்கலாம். அதற்கென்று எந்த விதிமுறையும் இல்லை. கலைப்படம் என்பது, ஆழ்ந்த அழகியல் கூறுகளுடன், இயக்குநரின் மனதில் தோய்ந்த கருத்துகளை வைத்து, எந்த விதமான காம்ப்ரமைஸ்களும் இல்லாமல் எடுக்கப்படும் படம். உதாரணமாக, அலஹந்த்ரோ ஹோடரோவ்ஸ்கியின் El Topo படத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள். அதேபோல் அவரது Holy Mountain படமும். இந்த இரண்டு படங்களும் பார்த்தால், மிஷ்கின் சைக்கோவில் வைத்திருக்கும் க்ளைமேக்ஸ் போன்ற வேறு சில கருத்துகள் கிடைக்கும்.

இதோ ஹோடரோவ்ஸ்கியின் படங்களைப் பற்றிய ஒரு விஷுவல். இதையும் பாருங்கள். மிக வித்தியாசமான விஷுவல்களின் மூலமும், பலவிதமான குறியீடுகளின் மூலமும் தான் நினைத்தவற்றைப் படங்களாக எடுத்தவர் ஹோடரோவ்ஸ்கி. இந்த வீடியோ பார்த்தால், குறியீடுகள் என்பவற்றைப் படத்தில் வைப்பது எத்தனை கடினம் என்று புரியும். இஷ்டத்துக்கு சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் தோன்றியவற்றை வைத்துவிட்டால் அவை குறியீடுகள் அல்ல என்பதும் புரியும்.

இப்போது மிஷ்கினுக்கு வந்தால், அவரது படங்களிலும் சமீபமாகப் பல்வேறு குறியீடுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. யுத்தம் செய் படத்தில் இருந்து இது தொடங்கியது. அதில் ரஷோமான் படத்தின் reference வரும். கூடவே ஆங்கிலப் புத்தகம் ஒன்றும் இறுதியில் காணப்படும். இதுவே பின்னர் புத்தர், zen என்றெல்லாம் வெளிப்பட ஆரம்பித்தது. அவைகளைப் பற்றிய வரிகளும் காட்சிகளும் படத்துக்கு சம்மந்தம் இல்லாமல் துருத்திக்கொண்டும் தெரிய ஆரம்பித்தது. இதை இன்றுவரை காணலாம்.

சைக்கோ அவசியம் ஒரு கலைப்படம் கிடையாது. அது ஒரு வணிகப்படமே. இருந்தும், சைக்கோவின் மிஅப்பெரிய பிரச்னை, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில அம்சங்களை இந்தப் படத்தில் மிஷ்கின் வைக்க நினைத்து, இதனாலேயே கலைப்படமும் இல்லாமல் வணிகப்படமும் இல்லாமல் ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில் படம் மாட்டிக்கொண்டு, படம் பார்க்கும் பெரும்பாலானவர்களைப் பதம் பார்த்ததுதான். ஒரு சைக்கோவை வைத்து, மிஷ்கினின் யுத்தம் செய் பாணியில் எடுக்கப்படும் படம், அட்லீஸ்ட் யுத்தம் செய் அளவுக்காவது இருக்கவேஎண்டாமா? இத்தனைக்கும் சென்ற வருடம்தான் தமிழின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர்களில் ஒன்றான “ராட்சசன்” வெளியாகியிருக்கிறது. கூடவே தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் அவசியம் கொரியன், ஜாப்னீஸ் படங்கள் பார்க்க ஆரம்பித்தாயிற்று. இந்தக் காலகட்டத்தில் வந்து, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல் ஒரு படத்தை எடுத்துவைத்துவிட்டு, “அன்பை ரசியுங்கள்.. லாஜிக்கே தேவையில்லை.. Suspension of Disbelief என்பதே முக்கியம்” என்றெல்லாம் பேட்டி கொடுக்க மிஷ்கின் ஒருவரால் மட்டுமே முடியும்.

ஒரு உதாரணம் கொடுக்கிறேன். படத்தின் நாயகன், கௌதம். அவனுக்குப் பார்வையில்லை. படத்தின் நாயகி, தாஹினி என்ற ஆர்.ஜே. அவளது குரல் அவனுக்குப் பிடிக்கிறது. அவளையே காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறான். அவள் பின்னாலேயே (சாரி. முன்னாலேயே) சுற்றுகிறான். அவள் எங்கெங்கு செல்கிறாளோ, அங்கெல்லாம் அவன் முன்னாலேயே வந்து நின்றுகொள்கிறான். ஏற்கெனவே சிலமுறைகள் (மூன்று என்று நினைவு) அவனிடம் சொல்லிப் பார்த்துவிட்டதாகவும், ஆனால் பயனே இல்லாமல் மீண்டும் இப்படியே சுற்றுகிறான் என்றும் தனது தந்தையிடம் தாஹினி சலித்துக்கொள்கிறாள். இப்படி ஹீரோ, ஹீரோயினின் பின்னாலேயே அவளுக்குப் பிடிக்காமலேயே சுற்றுவது Stalkingதானே? பார்வை இல்லாமல், கை கால் இல்லாமல், வேறு எதுவுமே இல்லாமல் இருந்தாலுமே அதை நாம் எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? உலகிலேயே இந்தியாவில்தான் இந்த stalking பிரச்னை மிக அதிகம் என்று நமக்கே தெரியும். மிஷ்கின் வைத்தால் மட்டும் அது நியாயமா? கூடவே, ஒரு திருமண நிகழ்ச்சியில் தாஹினி வருகையில் அங்கே ஏற்கெனவே கௌதம் இசையை conduct செய்துகொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்த கடுப்பில் பார்வையில்லாத கௌதமை அவமானப்படுத்திவிடுகிறாள் தாஹினி. உடனடியாக வெகுண்டு எழும் சிங்கம்புலி, அவனை ஒரு நாற்காலியில் அமர வைத்து, கையில் ஒரு வயலினையும் கொடுத்து, “இந்தா.. பாடு.. உன் காதலைப் பாடுடா” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். உடனடியாக கௌதம், இதயம் முரளி போல, அதில் வரும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடல் போலவே அதே இளையராஜா இசையமைத்த இன்னொரு பாடலைப் பாடுகிறான். இதைக் கேட்கும் நாயகிக்கு ஒரு க்ளோஸப். அதில் அவள் உருக ஆரம்பிப்பது தெரிகிறது.

80களின் படங்களில் வரும் அதே காட்சியை வைப்பது.இதுதான் மிஷ்கினின் குறியீடா? இந்தக் காட்சி முடிந்ததுமே நாயகி, கௌதமிடம் தன்மையாகப் பேசுகிறாள். கூடவே ஒரு போட்டியும் வைக்கிறாள். அவள் மறுநாள் செல்லும் இடத்தை சரியாகக் கண்டுபிடித்து கௌதம் வரவேண்டும். அப்படிச் செய்தால் அவளது பிறந்தநாளுக்கு கௌதம் வரலாம். இதுவுமே அதே 80களின் காட்சிதானே? இதை எடுக்க மிஷ்கின் எதற்கு? கேட்டால், இதில் ஒரு குழந்தைத்தனம், கலை, அன்பின் வெளிப்பாடு என்றெல்லாம் முழ நீளத்துக்குப் பேட்டிகளும், மிஷ்கின் ரத்தத்தின் ரத்தங்களின் வெறிகொண்ட கருத்துகளும் வரும். இந்தக் காட்சியே எதற்கு என்று பார்த்தால், கதை துவங்கும் புள்ளி அடுத்த காட்சியில் வருகிறது. அதற்காக (??!!?!?).

இப்படி ஆரம்பிக்கும் படத்தில், மிகச்சில காட்சிகளே நம் கவனத்தைக் கவர்கின்றன. போலீஸ் அதிகாரி கமலாதாஸின் வீட்டுக்கு கௌதம் செல்லும் காட்சி அதில் ஒன்று. அதேபோல் அவனைத் தேடி கமலாதாஸ் வரும் காட்சியும். இவைகளைத் தவிர, வில்லனின் அறிமுகம், அதைத்தொடர்ந்து படத்தில் காட்டப்படும் முதல் பிணம், போலீஸீன் விசாரணை, இரண்டாம் கொலை – இவைகளில் எதுவுமே புதிதாக இல்லை என்பது மட்டுமல்ல, துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாமல், மிக மிக lazy writing என்றே சொல்லும்படி எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரீதியில் யோசித்துப் பார்த்தால், இந்தப் படத்தில் காட்சிகளை விட, சில ஷாட்களே நம் கவனத்தைக் கவர்கின்றன. கமலாதாஸ், Bone Collector படத்தைப் போலவே, போலீஸ் அலுவலகத்துக்குள் கௌதமை அனுப்பி, இருளில் ஃபைல்களைத் தேடச்சொல்லும் காட்சியில், ஒரு இடத்தில் கௌதமை மேலே டார்ச் அடிக்கச்சொல்லி, அங்கே இருக்கும் தன் படத்தைப் பார்க்கும் ஷாட் அவைகளில் ஒன்று.

படம் முழுக்கவே இப்படித்தான் செல்கிறது. போலீஸால் எதுவுமே கண்டுபிடிக்க முடிவதில்லை என்பதை நம்பும்படியாகவும் மிஷ்கின் எடுக்கவில்லை. கூடவே, காட்சிகள் மிக மிக லேசாக, எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாமலேயே பெரும்பாலும் செல்கின்றன. ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளுக்கும், மிஷ்கினின் ரசிகர்களால் கண்களை மூடிக்கொண்டு பல்வேறு சப்பைக்கட்டுகள் கட்டவும் முடியும். அதையும் பலவாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என் கேள்வியெல்லாம், எந்தவிதமான சார்புநிலையும் இல்லாமல் இப்படத்தைப் பார்த்தாலேயே இந்த ஓட்டைகள் புரிந்துவிடும். அப்படி இருக்க, யாரைத் திருப்திப்படுத்த இப்படி எழுதுகிறார்கள் என்பதே.

படத்தின் வில்லன் ஏன் சைக்கோவாக மாறினான்? எல்லா சைக்கோப் படங்களிலும் வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வரும். நல்லவேளையாக இந்தப் படத்தில் அது இல்லை. இது அவசியம் பாராட்டத்தக்கதுதான். இந்த வில்லனுக்கு ஒரு காரணம் இருந்தாலும், அந்தக் காரணம் வசனங்களிலேயே வந்துவிடுகிறது. அது என்ன காரணம் என்பது பரவலாக அனைவருக்குமே தெரிந்திருக்கும். ‘அவன் கையடிச்சான்’ என்று ரேச்சல் டீச்சர் அலறுவதைப் பார்த்திருப்பீர்கள். கையடிப்பதைக் கண்டுபிடித்து, தனக்கே உரிய ஒரு சைக்கோத்தனத்துடன் அது தப்பு என்று ஆணித்தரமாக ரேச்சல் டீச்சர் நிறுவுகிறார். இதில், தாஹினிக்கு முன்னால் வில்லனும் ரேச்சல் டீச்சரும் அதே சம்பவத்தை அரங்கேற்றும் நாடகமும் படத்தில் உண்டு. ரேச்சலாக நடித்திருக்கும் ப்ரீதம் சக்கரவர்த்தி, அவசியம் நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும், இந்த நாடகக் காட்சிகள், க்ளைமேக்ஸ், அதில் தாஹினியின் கருத்து (அம்மா, குழந்தை), அதைப் பார்த்து மனம் திருந்தும் வில்லன்… எதுவுமே ஒட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம், முதலில் கூறியதுதான். படம் கலைப்படம் இல்லை. கமர்ஷியல் படம். அதில் வந்து, ஒரு கலைப்படத்துக்கே ஆன சில காட்சிகளை வலிந்து திணித்தால் என்ன ஆகும்? கூடவே, இத்தனை கொலைகள் செய்த கொலைகாரனை மன்னித்துவிடுவது, அதைப் பார்த்து அவன் திருந்துவது எல்லாம் மிகப்பெரிய விஷயங்கள். அவற்றுக்கான மிக மிக அழுத்தமான காட்சிகள் வேண்டும். ஆளவந்தானின் க்ளைமேக்ஸில் நந்து அழுவது எத்தனை நம்பமுடியாமல் இருந்ததோ அதைவிட இது நம்பமுடியாமல் இருக்கிறது. இதுவுமே மிக மேலோட்டமான எழுத்தே. இவ்வளவு எளிதில் மன்னித்துவிடமுடியுமா தாஹினி? இறந்தவர்களின் குடும்பத்தார்களை நினைத்துப் பார்த்தீர்களா? அதுசரி. ஒரே பாட்டில் உங்களை விடாமல் stalk செய்த ஹீரோவையே நம்பிவிட்டீர்களே? உண்மையில் இப்படி மிஷ்கின் ஆரம்பத்தில் வைத்தது ஒரு குறீயீடு. காரணம், பின்னால் க்ளைமேக்ஸில் இப்படி வரப்போகிறது என்று படம் பார்ப்பவர்களுக்கு foreshadowing செய்கிறார் (??!!?). இதுதான் படத்தின் மிகப்பெரிய “குறியீடு”.

இவை மட்டும் இல்லாமல், என்னதான் படத்தை நம்பவேண்டும் என்று பிடிவாதமாக அமர்ந்தாலுமே, ஒரு கமர்ஷியல் படமாக சைக்கோவை நம்பிக்கொண்டு இருந்தாலும் எடுபடாத காட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் சோஷியல் மீடியாவில் மீம்கள் போட்டே குவித்துவிட்டார்கள். உதாரணம், கௌதம் கார் ஓட்டுவது. இதை அட்டகாசமான, விறுவிறுப்பான, பார்ப்பவர்கள் நம்பும்படியான காட்சியாக எடுக்க மிஷ்கினால் அவசியம் முடியும். ஆனால் பின்னணியில் பாட்டு, கலைப்படக் கூறுகள் என்று போட்டுத் தள்ளிவிட்டார் என்றுதான் சொல்வேன். அதேபோல் போலீஸ்காரர் முத்துராமன் பழைய பாடல்கள் பாடுவது, வில்லனிடம் மாட்டியபின்னர், அக்கடா என்று படுத்துக்கொண்டு, ரொம்ப டயர்டா இருக்கும்மா (??!??) என்று சொல்வது, அப்போது தனது குடும்பம் பற்றி ஹீரோயினிடம் சொல்வது, ந்தா கழுத்தை வெட்டப்போறாய்யா… எதுனா பண்ணு என்ற நேரத்தில் இன்னொரு பழைய பாடல் பாடுவது…. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம் – லாஜிக்கே இல்லாத மிகச் சோம்பலான எழுத்து. இஷ்டத்துக்கு எழுதிவிட்டு, அன்பு, ஞானம், அத்வைதம், புத்தர், Suspension of Disbelief என்று பேசுவது. அஞ்சாதே, யுத்தம் செய் படங்களில் இருந்த விறுவிறுப்பு இதில் துளிக்கூட இல்லாமல், தான் ஒரு auteur என்று முழுக்க முழுக்கத் தன்னையே கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்துவிட்ட மிஷ்கினின் அலட்சியம்தான் படம் முழுக்கவே தெரிகிறது (சில காட்சிகள் மற்றும் ஷாட்கள் தவிர்த்து). எனவே, கமர்ஷியலும் இல்லாமல், கலைப்படமாகவும் இல்லாமல், மிக மிக மெதுவான காட்சிகளுடன் கூடிய ஒரு படமாகவே சைக்கோ எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்திலும் மிஷ்கினின் டிரேட்மார்ட் குறியீடுகள் இல்லாமல் இல்லை. கௌதம், புத்தர் (என்ன? இதிலுமா? ஆமாம். இதிலும்தான்), அங்குலிமாலா, கமலாதாஸ், zen, கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எழுத்தாளர்கள் என்று படம் முழுக்கவே குறியீடுகள் மயம். அதேபோல், மிகச்சரியாக, இதற்கு முந்தைய மிஷ்கினின் படங்களில் எப்படி அவர் வலிந்து திணித்து வைத்தாரோ, அதேபோல் இதிலும் பக்காவாக இந்தக் குறியீடுகள் படத்தைப் பின்னால் இழுத்து ப்ரேக் போடுகின்றன.

படத்தில் இன்னொரு பிரச்னை, பல காட்சிகளில் வரும் மிக மிக அதீதமான, jarring இசை. இவ்வளவு இசைக்கான அழுத்தமான காட்சிகளே படத்தில் இல்லை. எனவே, பாஆஆஆம்ம்ம்ம்ம்ம் என்று இளையராஜாவின் இந்த இசை ஒலிக்கையில், எதுக்கு இந்த பில்டப் என்றே கேட்கத் தோன்றுகிறது. இந்தப் பிரச்னை மிஷ்கினின் முந்தைய படங்களிலும் உண்டு. மேலே மிஷ்கின் பற்றிய அலசலில் இதனை முன்னரேயே எழுதியிருக்கிறேன்.

நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மிஷ்கினின் படங்களைப் பாராட்டிய நான் தான் இங்கே விமர்சனம் வைக்கிறேன். எனது முந்தைய கட்டுரைகளிலுமே, மிஷ்கினின் படங்களின் பிரச்னைகள், பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்களை விரிவாக எழுதியே இருக்கிறேன். மிஷ்கினைப் பற்றி மிக மிக விரிவாக critique எழுதியவர்களில் நானும் ஒருவன் தான். இந்த டிஸ்க்ளய்மர் ஏன் என்றால், மிஷ்கினிடம் இருந்து நல்ல படம் வந்தால் எனக்கு மிக மிக மகிழ்ச்சி. அதற்கு அவர் qualified தான். ஆனால் ‘தனது பேட்டிகளில் சைக்கோ பற்றி அவர் ஜஸ்டிஃபை செய்து பேசுவது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது’ என்று ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததுபோலதான் நானும் உணர்கிறேன். பழையபடி அட்டகாசமான படங்களை மிஷ்கின் எடுக்கவேண்டும். எடுப்பாரா? சத்தியமாக பயம்தான்.

நமது தளத்தில் மிஷ்கின் படங்களின் விமர்சனங்கள் – Mysskin”s films from Karundhel.com

]]>
http://karundhel.com/psycho-2019-tamil/feed/ 4
Ishq (2019) – Malayalam http://karundhel.com/ishq-2019-malayalam/ http://karundhel.com/ishq-2019-malayalam/#respond Wed, 29 May 2019 20:09:47 +0000 http://karundhel.com/?p=6039 Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது, நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டால்? (இது பெங்களூரில் ஒவ்வொரு New year அன்றும் இரவில் நடக்கும்). இதைப்போல் நம்மில் பலருக்கும் பல traumaக்கள் இருக்கும். வன்முறை என்பது பல வடிவங்களில் நம் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கிறது. சிலருக்கு அது, உறவினர்களோ அல்லது வேறு நபர்களோ நம்மை மீறிச் சிறுவயதில் நம்மீது பாலியல் பலாத்காரத்தை இறக்கும்போது நடக்கும். சிலருக்கு, மரணங்களில் அது நடக்கலாம். சிலருக்கு எதிர்பாராத விபத்துகள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தால் என்ன நடக்கிறது என்பதுதான் Ishq. நான் கதையை இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு சம்பவத்தில், எதுவுமே செய்ய முடியாமல் மாட்டிக்கொள்ளும்போது நம் மனம் எப்படிக் காயமடையும்? தலைக்கு மேல் கோபம் வரக்கூடும். ஆனால் அந்தக் கோபத்தை வெளியே காட்டவே முடியாது. அப்படிக் காட்டினால் அவசியம் நாம் அந்த இடத்தில் பாதிக்கப்படுவோம் என்னும்போது, அது நம்மை எப்படிப்பட்ட செயல்களைச் செய்யவைக்கிறது?

இது ஒரு புறம் இருக்க, நமது நாட்டில் பெண்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? இரவில் எங்கும் செல்லக்கூடாது; உடைகளைப் பார்த்துப்பார்த்து அணியவேண்டும்; பிறருடன் சிரித்துப் பேசக்கூடாது – இப்படியெல்லாம் இன்னும் ஆயிரம் விதிமுறைகளை அவர்கள் மேல் திணித்துத்தானே நாம் இதுவரை வந்திருக்கிறோம்? நாம் என்று நான் இங்கே சொல்வது, misogynistic என்று சொல்லப்படும் பெரும்பாலானவர்களைக் கொண்ட நமது சமுதாயத்தைத்தான். பெண்கள் மீது ஆழமான விரோதம் – ஆனால் அதை வெளிப்படுத்தமுடியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது அதை அவர்கள் மேல் கொட்டிவிடுவது – இதனால் அவர்களின் மனங்களில் ஆழமான காயத்தை உண்டுசெய்துவிடுவது என்பதுதான் இப்படிப்பட்ட சமுதாயத்தின் செயல்திட்டம். இதை அறிந்து செய்பவர்களும் உண்டு – அறியாமல், மனதில் பதிந்துவிட்ட ஆணாதிக்கக் கருத்துக்களால் தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டு செய்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும், பெண்களின் மீது வைக்கப்படும் கேள்விகளின் ஆழத்தில் ஒரே ஒரு கருத்துதான் உண்டு – அவன் கூட நீ என்ன செஞ்ச? அல்லது  செய்யப்போற? இதை வெளிப்படையாகக் கேட்கத் தயங்கியே, பலவிதமான கேள்விகளின் மூலம் அதைப் பூசி மெழுகி, விடையைத் தெரிந்துகொள்ளப் பார்க்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். கணவர்கள், பாய்ஃப்ரெண்ட்கள் ஆகிய யாருக்குமே, ஏதோ ஒரு சமயத்தில், இன்னொரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கும் மனைவி – காதலி ஆகியவர்களைப் பற்றிய இந்தச் சந்தேகம் நம்மூரில் வந்தே தீருகிறதுதானே? ராமாயணமே அதைத்தானே சொல்கிறது? அந்தக் காலத்தில் இருந்தே பெண்களுக்குப் பலவிதமான விதிமுறைகளை விதித்தவர்கள்தானே நாம்?

தற்போது அதிகரித்துக்கொண்டே வரும் வன்முறைச் சம்பவங்கள் என்னென்ன? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து, இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்லியே வன்முறையை வீசுவதுதானே இந்த எல்லாச் சம்பவங்களுக்கும் அடிப்படை? இதில் கலாச்சாரத் தாலிபான்கள், மதவெறியர்கள், சாதி வெறியர்கள், ஆணவக்கொலைகள், தனிப்பட்ட விரோதம், பாலியல் வன்முறை ஆகிய எல்லாமே வந்துவிடும்.

இப்படிப் பாதிக்கப்பட்ட நபர்கள், ஒன்று – எதுவுமே செய்ய முடியாமல், முடங்கி, மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை முழுதுமே நடைப்பிணங்களாக (அட்லீஸ்ட் மனதளவில்) நடமாடப் பல வாய்ப்புகள் உண்டு. வெளியே என்னதான் இயல்பாக இருக்க நினைத்தாலும், இந்தச் சம்பவங்களின் பாதிப்பு அவர்களை இயல்பான மனிதர்களாக ஆக முடியாமல் தடுத்துக்கொண்டே இருக்கும். வெளியே நடமாடுகையில், தனியாகவோ அல்லது எங்காவது அசந்தர்ப்பமான சமயங்களிலோ, அவசியம் அந்த பயம் வெளியே வந்தே தீரும். எத்தனை கவுன்சிலிங் கொடுத்தாலும் அந்த வடு முழுதாகச் சரியாவது மிகவும் கடினம்.

அடுத்ததாக, அப்படிப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு, அந்தப் பாதிப்பை சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்தால்? நான் சொல்வது, பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவந்து இயல்பு வாழ்க்கையை வாழ்வது அல்ல. அந்த பாதிப்பு நடந்த சூட்டோடு சூட்டாகவே, தன்னை பாதித்தவர்களின் ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களை நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்? உதாரணமாக, ஹே ராம் படத்தில், சாகேத்ராமின் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த டெய்லரைத் தேடி சாகேத் ராம், கலவரம் நடக்கும் கல்கத்தாவின் தெருக்களில் அலைகிறான் இல்லையா? அப்படி. இது நடந்தால், அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் மனம் என்ன சொல்லும்? அடிக்கு அடி, உதைக்கு உதை, ரத்தத்துக்கு ரத்தம் என்று சொல்லுமா? அல்லது மன்னித்து விட்டுவிடலாம் என்று சொல்லுமா? இது ஆளுக்கு ஆள் மாறும் அல்லவா?

இந்த விஷயங்கள் எல்லாமே, Ishq திரைப்படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றின.

படத்தில் மொத்தம் நான்கே நான்கு முக்கியமான கதாபாத்திரங்கள்தான். பாக்கி அனைவரும் ஒரு சில காட்சிகளில் வருவதோடு சரி. இந்த நான்கு பேருக்குள் நடைபெறும் உரையாடல்களும், செயல்களும்தான் படம். எந்தக் காட்சியும் அலுக்காமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதிலேயே படம் பயணிக்கிறது. இவர்கள் அனைவருமே பிரம்மாதமாக நடித்திருக்கின்றனர்.

க்வெண்டின் டாரண்டினோ, ஒரு விறுவிறுப்பான திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கையில், ஒரு ரப்பர்பேண்டை எத்தனை இழுக்க முடியுமோ அத்தனை இழுக்கவேண்டும் – ஆனால் அது பிய்ந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பார். முடிந்தவரை முழுக்க இழுத்துவிட்டு, டப்பென்று அதை விட்டுவிட்டால் எப்படி இருக்குமோ அதுதான் ஒரு நல்ல திரைக்கதையின் அடையாளம் என்பது அவரது கருத்து. அதற்கு ஏற்றபடியே, அவரது படங்களில் நீளமான சீக்வென்ஸ்கள் இருக்கும். ஆனால் அவை அலுக்கவே அலுக்காது. அதேபோல், இந்தப் படத்தில் மிக முக்கியமான இரண்டு மிகப்பெரிய சீக்வென்ஸ்கள் உள்ளன. அந்த சீக்வென்ஸ்கள்தான் படமே. அந்த இரண்டு சீக்வென்ஸ்களையும், மிகக் கச்சிதமாக, மிகவும் விறுவிறுப்பாக, பார்க்கும் நமது மனம் பதைபதைக்கும்படி எழுதி, அதை அருமையாக எடுத்திருப்பதுதான் இந்தப் படத்தின் ப்ளஸ்.

 படத்தில் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையில் எழுதியவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூ இல்லாமல், கதாபாத்திரங்களின் பாயிண்ட் ஆப் வியூவாகவே அமைத்திருப்பது படத்தின் அடுத்த சிறந்த விஷயம். எனக்கு வன்முறை பிடிக்காது -எனவே படத்தில் வன்முறை வரக்கூடாது என்றெல்லாம் எண்ணாமல், சம்பவங்கள் – அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் என்றே எழுதி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நமக்கு சில விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவை நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன. இப்படித்தான் இந்தப் படம் எனக்குத் தோன்றியது.

இந்தப் படத்தைத் தமிழில் எடுப்பது மிகக்கடினம். காரணம் படத்தின் இரண்டாம் பாதி பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். எடுத்தாலும் தமிழில் இப்படிப்பட்ட காட்சிகள் மிகமிக மேலோட்டமாகவேதான் எடுக்கப்படும்.

ஒருவகையில் மலையாளத்தில் இது வந்திருப்பது ஆச்சரியமே இல்லை. அவர்கள் பரிசோதனை முயற்சிகளையும் தாண்டி, இயல்பான ஒரு திரைக்கதையையே எங்கோ கொண்டுசென்றுவிட்டார்கள். அந்த இடத்துக்கு வேறு யாராலும் போட்டிபோடவே முடியாது என்பது என் உறுதியான கருத்து.

முடிந்தால் பார்க்க முயற்சி செய்யலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, படம் பாருங்கள். பல கேள்விகளை இப்படம் எழுப்பும் என்றே நம்புகிறேன். Moralistic point of view என்று ஒன்று உண்டு. அதாவது, குழந்தைகள் டிவியில் வன்முறைக் காட்சிகளைப் பார்க்கக்கூடாது; நல்லவனாகவே இருக்கவேண்டும்; யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்றறெல்லாம். ஆனால், மனித மனம் என்பது எத்தனை விசித்திரமானது என்பதும், அது எதையெல்லாம் செய்யுக்கூடியது என்பதும் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன. படம் பார்க்கையில், ஆங்காங்கே கோபம், பயம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் எழுந்தன. ரத்தம் சூடாவதை என்னால் உணர முடிந்தது.

இக்காலத்தில் சீதை வாழ்ந்திருந்தால், ராவணனுடன் பலகாலம் இருந்தாயே? உன் கற்பை நீ நிரூபி என்று ராமன் சொன்னதற்கு அவளது பதில் என்னவாக இருந்திருக்கும் என்பது இப்படத்தின் க்ளைமேக்ஸில் அட்டகாசமாக சொல்லப்பட்டிருக்கிறது.

பி.கு – இந்தப் படத்துக்கு எப்படி டிரெய்லர் கட் செய்திருக்கமுடியும் என்று ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆனால் அதையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

எழுதிய ரதீஷ் ரவியும், இயக்கிய அனுராஜ் மனோகரும் அவசியம் பாராட்டத்தக்கவர்கள்.

]]>
http://karundhel.com/ishq-2019-malayalam/feed/ 0
Brightburn (2019) – English http://karundhel.com/brightburn-2019-english/ http://karundhel.com/brightburn-2019-english/#respond Tue, 28 May 2019 17:24:37 +0000 http://karundhel.com/?p=6034  

வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள அந்தப் பெற்றோர்கள் உதவுவார்கள். அதன்பின் அது ஒரு சூப்பர்ஹீரோவாக மாறி, மனிதகுலத்தின் மேன்மைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். இதுதான் பொதுவான டெம்ப்ளேட். இதற்கு சூப்பர்மேன்ஹெல்பாய், Silver Surfer, He-Man என்பதில் துவங்கி, இன்னும் நிறைய உதாரணங்கள் உண்டு. இதனிலேயே, பூமியில் பிறந்து, பிற கிரகங்களில் சூப்பர்ஹீரோ ஆனவர்களும் உண்டு (Star Lord, Captain Marvel போல). ஆனாலும், இவர்கள் அனைவருமே நல்லவர்களே.

அப்படி இல்லாமல், ஒருவேளை பூமியில் வந்து விழுந்த குழந்தை ஒரு சூப்பர் வில்லனாக இருந்தால்? அதுதான் Brightburn.

Guardians of the Galaxy திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தயாரிப்பில், அவரது இரண்டு சகோதரர்கள் திரைக்கதை எழுதி, டேவிட் யாரோவெஸ்கி இயக்கிய (இரண்டாவது படம்) இது. இதன் பட்ஜெட் மிகச்சிறியது. வெறும் ஆறு மில்லியன் டாலர்கள். எண்பதுக்கும் மேற்பட்ட ம்யூஸிக் வீடியோக்களும் விளம்பரப் படங்களும் எடுத்திருப்பவர் டேவிட் யாரோவெஸ்கி. ஜேம்ஸ் கன்னின் நீண்டகால நண்பரும் கூட. கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி படத்துக்கும் முன்னரே, ஜேம்ஸ் கன்னும் டேவிட் யாரோவெஸ்கியும் திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று பல காலம் முயற்சித்திருக்கின்றனர். ஒரு நாள் ஜேம்ஸ் கன்னின் சகோதரர்கள் ப்ரயன் கன் & மார்க் கன் ஆகிய இருவரும், இந்தப் படத்தின் கதையை யாரோவெஸ்கியிடம் சொல்ல, உடனே கதையும் அவருக்குப் பிடித்துவிட, ஜேம்ஸ் கன்னிடமும் கதையைச் சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்று, அதன்பின் தயாரிப்பாளர்களைப் பிடித்து, எடுக்கப்பட்ட படம் இது.

இத்தனை காலமாகவே, ஏலியனாக இருந்தால் அது சூப்பர்ஹீரோதான் என்பதை உடைக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

இதற்கு, ஒரு பேட்டியில், அருமையான உதாரணம் கொடுக்கிறார் யாரோவெஸ்கி. பேட்மேன் படங்களிலும் கதைகளிலும், அவர் பொதுவான ஹீரோவாகவே இருந்தாலும், படங்களிலும் கதைகளிலும் வரும் திருடர்கள், கெட்டவர்கள் ஆகியவர்களுக்கு அவர் வில்லன் தானே? ஒரு இருட்டுத் தெருவில் நிற்கும் ஒரு அடியாளின்மீது, திடீரென்று தலைகீழாக இறங்கும் ஒரு முரட்டு உருவம், யாரென்று தெரிவதற்கு முன்னரே தபதப என்று அவனை அடித்துப்போட்டுவிட்டுப் பறந்துசென்றால், அடிவாங்கியவனுக்கு எவ்வளவு பயமாக இருக்கும்? இந்தக் காரணம்தான் இப்படி ஒரு படத்தை இயக்கக் காரணமாக இருந்தது என்பது டேவிட் யாரோவெஸ்கியின் கருத்து.

இந்தத் திரைப்படம் இந்தியாவில் மிகச்சில ஊர்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிருஷ்டவசமாக, நான் பெங்களூரில் இருப்பதால், சுலபமாகப் பார்க்கவும் முடிந்தது. நான் பார்த்த தியேட்டரில் (கோபாலன் க்ராண்ட் மால்), நான் தான் இரண்டாவது கஸ்டமர். மொத்தம் ஐந்து பேர் வந்தால்தான் படத்தைப் போடமுடியும் என்று சொன்னதால், காத்திருந்தேன். சரியாகப் படம் துவங்கும் நேரத்தில் மூன்றே பேர் மட்டும் வந்து டிக்கட் வாங்க, படம் துவங்கியது.

இந்தப் படத்தை ஒரு Prequel கதை என்றே சொல்லமுடியும். பொதுவாக எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும், ஒரு சூப்பர்ஹீரோ எப்படி உருவானான் என்று காட்டுவார்கள் இல்லையா? Batman Begins, Man of SteelSpidermanIron man ஆகியவை போல. அப்படி, ப்ராண்டன் ப்ரேயர் (Brandon Brayer) என்ற குட்டி சூப்பர்ஹீரோ எப்படி உருவாகிறான் என்பதுதான் இந்தப் படம். ஆனால், மற்ற படங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், மேலே சொல்லப்பட்ட படங்களில், முதல் 30-45 நிமிடங்களுக்குள்ளாக ஒரு சூப்பர்ஹீரோ உருவாகிவிடுவான். அதன்பின் அந்த சூப்பர்ஹீரோவோடு மோத ஒரு சூப்பர் வில்லன் வருவான். இருவருக்கும் போராட்டம் நடந்து, இறுதியில் சூப்பர்ஹீரோ, தன் சக்திகளை நன்றாக உணர்ந்துவிடுவான். அடுத்த பாகங்களில் இன்னும் பிரம்மாண்டமான வில்லன்களுடன் மோதுவான். அதுவே ப்ரைட்பர்ன் படத்தில், சூப்பர் வில்லனாக ஒரு சிறுவன் எப்படி உருவாகிறான் என்ற – முதல் 30ல் இருந்து 45 நிமிடங்களுக்குள் சொல்லப்படவேண்டிய கதையே, ஒண்ணரை மணி நேரமும் ஓடுகிறது. படத்தின் இறுதியில்தான் அந்தச் சிறுவன் சூப்பர் வில்லனாக முழுமையான அவதாரம் எடுக்கிறான். அத்துடன் படம் முடிகிறது.

இதனால் என்ன நடக்கிறது என்றால், படம் பார்க்கும் நமக்கே, அடுத்தது என்ன நடக்கப்போகிறது, யார் இறக்கப்போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. படத்தின் துவக்கத்தில் இருந்து அறிமுகமாகும் கதாபாத்திரங்களே மிகக்குறைவு (சிறிய பட்ஜெட் படம்). எனவே அவர்களின் அறிமுகத்தின்போதே, அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதற்கும் சில leading வசனங்கள் வைக்கிறார்கள். இது புரிந்துவிடுவதால், அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதில் சந்தேகம் இன்றி, எப்படி இறக்கப்போகிறார்கள் – அதையாவது பார்க்கலாமே என்று தோன்றிவிடுகிறது. இவைதான் படத்தின் இரண்டு பிரச்னைகள்.

இது சூப்பர்ஹீரோ genreஇலேயே ஒரு ஹாரர் படமும் கூட. கிட்டத்தட்ட slasher படங்களில் வரும் அளவு வன்முறை தெறிக்கிறது. அதுவும், அவைகள் ஒரு சிறுவனால் நிகழ்த்தப்படுகின்றன. மண்டையைப் பிளப்பது, முகரக்கட்டை அறுந்து தொங்குவது, உடலையே ரத்தக்களறியாக்கிப் பிய்த்து வீசுவது போன்ற காட்சிகள் அனைத்தும் இதில் வருகின்றன (இதிலும் ஒரு இடத்தில் ஒரு உடல் தொங்குகையில் நம்மூர் சென்சார் புத்திசாலிகள் அதை blur செய்யச்சொல்லி இருக்கிறார்கள். இதுவே ஒரு A சர்ட்டிஃபிகேட் படம். இதிலுமா?). ‘ஒரு சிறுவன், ஒரு முகமூடி அணிந்ததுமே அவன் பயம்கொள்ளத்தக்க ஆளாக மாறிவிடுகிறான்’ என்பதும் இயக்குநர் டேவிட் யாரோவெஸ்கியின் கருத்துதான். அது உண்மையாகவே அப்படித்தான் இருக்கிறது (Orphanage படம் ஒரு உதாரணம்). படத்தில் மிகச்சில பயமுறுத்தும் தருணங்களும் உண்டு.

ஒருவேளை இதற்கு ஒரு sequel வந்தால்,  இந்தச் சிறுவன் யாருடன் மோதப்போகிறான் என்பது தெரியலாம். ஒரு வித்தியாசமான முயற்சி என்ற வகையில் இப்படத்தைப் பார்க்கமுடியும். ஆனால் நான் சொன்னபடி, கதை ஆரம்பத்திலேயே தெரிந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

படத்தில், ப்ரைட்பர்ன் என்ற சூப்பர் வில்லனாக வரும் சிறுவனுக்கு, சூப்பர்மேனுக்குரிய அத்தனை சூப்பர்பவர்களும் உண்டு. இதனால் சூப்பர்மேன் கதாபாத்திரத்தையே subvert செய்து, மாற்றி அளித்திருக்கிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

 

]]>
http://karundhel.com/brightburn-2019-english/feed/ 0
John Wick 3 – Parabellum (2019) – English http://karundhel.com/john-wick-3-parabellum-2019-english/ http://karundhel.com/john-wick-3-parabellum-2019-english/#respond Mon, 27 May 2019 18:57:05 +0000 http://karundhel.com/?p=6027 ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம்.

ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே, படத்தின் இரண்டாம் பாகமும் 2017ல் வெளியானது. ஆனால் இந்தக் காலகட்டத்தில், ஜான் விக்கைப் போலவே ஒருசில ஸ்டண்ட் படங்கள் வந்தாகிவிட்டன (ஜான் விக் வெளியான அதே அக்டோபரில் டென்ஸல் வாஷிங்டன் நடித்த The Equalizer வெளியாகிறது. அப்படமும் இதேபோல் வெற்றிபெற்று, இரண்டாம் பாகமும் வெளியானது. அதுவும் ஒரு ரிவெஞ்ச் படம்தான். கூடவே, Jack Reacher series. Marveலின் டெட்பூல் இன்னொரு உதாரணம். இவைகளில் எல்லாமே ஆக்‌ஷன் கோரியோக்ராஃபி பிரம்மாதமாக இருக்கும். இதனுடன், சார்லீஸ் தெரான் நடித்த Atomic Blonde. இதன் இயக்குநர், டேவிட் லெடிச் – ஜான் விக்கின் இயகுநர்களில் ஒருவர். டெட்பூல் 2 படத்தையும் இவர்தான் எடுத்தார். இவற்றுடன், ஜான் விக் படத்துக்குப் பிறகு வந்த Fast & Furious படங்களின் பாகங்களையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்).

தபதப என்று இத்தனை படங்கள் வெளியானதால், ஜான் விக் மூன்றாம் பாகம் எப்படி இருக்குமோ என்று ஒரு கேள்வி இருந்தது. இரண்டாம் பாக விமர்சனத்தின் இறுதியில், மூன்றாம் பாகம் கட்டாயம் வரும் – அது நன்றாகவும் இருக்கும் என்று எழுதியிருந்தேன்.

இரண்டாம் பாகம் விட்ட இடத்தில் இருந்து மூன்றாம் பாகம் துவங்குகிறது (என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்). இந்தப் படத்திலும் பிரம்மாதமான பல ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் இருக்கின்றன. இந்தப் படத்திலும் கொத்துக்கொத்தாகப் பலரும் சாகிறார்கள். இதிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை உண்டு (நம்ம சென்சார் போர்டுதான் பல காட்சிகளை வெட்டிவிட்டது). ஆனால், நாம் வேறு பல ஆக்‌ஷன் படங்களையும் பார்த்துவிட்டதால் – அது இயக்குநருக்கும் தெரிந்ததால், கொஞ்சம் Melodramaவை இப்படத்தில் வைத்திருக்கிறார்கள். படத்தின் இடையில் தடால் என்று வெட்டு விழுந்து, கதை வேறு எங்கெங்கோ பயணிக்கிறது. அது படத்தின் வேகத்தைப் பாதிக்கிறது என்றே தோன்றியது. முதல் இரண்டு பாகங்களில், ஒரு உறுதியான கதை இருக்கும். அந்தக் கதையைச் சுற்றியே ஆக்‌ஷன் நடக்கும். ஆக்‌ஷன் கதைக்கு வெளியே போகாது. ஆனால் இதில், ஏற்கெனவே இரண்டு பாகங்களில் ஜான் விக் நடைபெறும் உலகத்தைப் பற்றிப் பல விஷயங்கள் சொன்னதால், புதிதாக எதை வைப்பது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது. பல வெப் சீரீஸ்களில் வரும் அதே பிரச்னை. முதல் சில சீசன்கள் நன்றாக இருக்கும். பின்னர் மாட்டிக்கொள்ளும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல.

அப்படி, இதிலும், ஒரு பிரச்னையில் இருந்து தப்பி ஓடும் ஜான் விக் என்ன செய்கிறான் என்று பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம்தான். தனக்கு சம்மந்தமே இல்லாத சில விஷயங்களை செய்கிறான். அவற்றுக்கான காரணங்கள் பெரிதாகவும் இல்லை. Halle Berry ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகளைத்தான் சொல்கிறேன். ஜான் விக்குக்கு முதல் இரண்டு படங்களில் படுபயங்கர பில்டப் கொடுத்துவிட்டு, இந்தப் படத்தில் சட்டென்று அவரை இறக்கிவிட்டுவிட்டதுபோல்தான் தெரிந்தது. அதேபோல் படத்தில் தேவையே இல்லாமல் வரும் drama – ஜான் விக் மொராக்கோ செல்வது, அங்கே பாலைவனம், அதன்பின் High Table, பின் திரும்பி வருவது – நடுவே ஒரு விரலையும் காவு கொடுக்கிறார் – இது எல்லாமே, என்ன நடக்கிறது என்று நன்றாகப் புரிந்தும், நெளியவைத்த காட்சிகள்.

இவையோடு சேர்ந்து, ஜான் விக்குக்கு இரண்டாம் பாகத்தில் உதவிய போவெரி கிங் (லாரன்ஸ் ஃபிஷ்போர்ன்), வின்ஸ்டன் ஆகியோர்களுக்கு இப்படத்தில், High table க்ரைம் சிண்டிகேட்டில் இருந்து வரும் Adjudicator என்ற பெண் கதாபாத்திரம் வழங்கும் தண்டனைகள், பின்னர் ஜான் விக் மொராக்கோ செல்வதற்கு அவன் அணுகும் மர்மப் பெண்மணி (இந்தப் பெண்மணி யார் என்பதும் படத்தில் வரும்), ஜான் விகின் திடீர்ப் பின்னணி ஆகியவையெல்லாம் துளிக்கூட ஒன்ற முடியாமல் போன காட்சிகள்.

ஆனால் இந்தக் காட்சிகளுக்குப் பின்னர், எப்போது ஜான் விக் காண்டினெண்டல் ஹோட்டலுக்குத் திரும்பி வருகிறானோ, அதன்பின் இறுதிவரை ஆக்‌ஷன் மழைதான். அந்தக் காட்சிகள் பிடித்திருந்தன. இரண்டாம் பாகத்தின் க்ளைமேக்ஸ் போலவே, மூன்றாம் பாகக் க்ளைமேக்ஸும் ப்ரூஸ் லீயின் Enter The Dragon & Game of Death படங்களுக்கான tributeஆகவே வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கேம் ஆஃப் டெத். ஒவ்வொரு தளமாகச் செல்கையில் அங்கே இருக்கும் சக்திவாய்ந்த வில்லன்களை முறியடிப்பது கேம் ஆஃப் டெத்தின் க்ளைமேக்ஸ்.

இதற்கும் அடுத்த பாகம் வரப்போகிறது என்று தெரிகிறது. ஆனால் அவை அவசியம் முதல் இரண்டு படங்களைப் போல இருந்தால் நன்றாக இருக்கும். இருக்கவேண்டும்.

]]>
http://karundhel.com/john-wick-3-parabellum-2019-english/feed/ 0
Avengers: Infinity War (2018) – English : Part 2 http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part-2/ http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part-2/#comments Wed, 02 May 2018 09:07:40 +0000 http://karundhel.com/?p=6021
  • For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com
  • இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1

  • சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity War படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகிய தானோஸ் பற்றிக் கவனிப்போம்.

    தானோஸ் யார்? அவனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

    சனிக்கிரகத்தின் நிலாக்களில் ஒன்று டைட்டன். இந்த டைட்டனில் வாழ்ந்த மக்கள், கடவுட்களைப் போன்று சாகாவரம் படைத்தவர்கள். அவர்களில் ஒருவர் அலார்ஸ் (Alars). அலார்ஸ், ஒரு விஞ்ஞானி. அவர்களின் இனத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தியவர். அவருக்குப் பிறந்த மகன் தான் தானோஸ். தானோஸ் பிறக்கையிலேயே, அவனது முகத்தில் இருந்த விகாரத்தைக் கண்டு அலார்ஸ் பயந்தார். சிறுகச்சிறுக தானோஸ் வளர்ந்தபோது பிற டைட்டன்களும் அவனை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தனர்.

    டைட்டனில் மக்கள்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. அங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் பங்குபோட்டுக்கொண்டே வாழும்படியான காலகட்டம் வந்தது. அப்போது, தன்னை யாரும் பெரிதாக மதிக்காவிட்டாலும், இந்தப் பிரச்னையைத் தோர்க்க ஒரு வழி சொல்கிறான் தானோஸ். இதைப்பற்றி அவனே Infinity War படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் சொல்லும் காட்சி இருக்கிறது. அது – பாதி டைட்டன்களை அழித்துவிடுவது. அப்போதுதான் அங்கே இருக்கும் இயற்கையான வளங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை டைட்டன்கள் செயல்படுத்தவில்லை. அது மிகவும் அபாயகரமான யோசனையாக இருந்ததே காரணம். ஆனால் சிறுகச்சிறுக வேறுவழியில்லாமல், வளர்ந்துவரும் மக்கள்தொகையால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அனைத்து டைட்டன்களும் இறந்துவிட்டனர். இதனால் தானோஸின் சொந்த பூமி அழிந்துபோனது.

    இதன்பின்னர் தானோஸ் அண்டவெளியில் வேறு ஒரு பக்கம் சென்று, தனது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தான். அண்டவெளியின் மக்கள்தொகையில் பாதியாவது அழிந்தால்தான் மீதமிருப்பவர்களுக்கு அண்டவெளியின் பற்பல வளங்கள் முழுதாகக் கிடைக்கும் என்பது அவனது எண்ணம். இதனால் ஒவ்வொரு கிரகமாக, ஒவ்வொரு நிலாவாக, ஒவ்வொரு பால்வீதியாகச் சென்று படையெடுத்து, அவர்களில் பாதியையோ அல்லது முழுமையாகவோ அனைவரையும் அழிக்கத் துவங்கினான். அப்படிச் செல்கையில், அங்கே அவனுக்குப் பிடித்த குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கவும் துவங்கினான். அவர்களுக்கு, Children of Thanos என்றும், Black Order என்றும் பெயர். கமோராவையும் நெபுலாவையும் இப்படியாக எடுத்து வளர்த்து, தனது மகள்களாக மாற்றிக்கொண்டான். இவர்களில் கமோராவைப் பார்த்து ஒட்டுமொத்த அண்டவெளியும் பயப்பட்டது. யாராலும் வெல்லமுடியாத வீராங்கனையாக அவளை வளர்த்தான். இதனாலேயே நெபுலாவுக்கும் கமோராவுக்கும் சண்டைகள் நிகழ்ந்தன. ஒரு சமயம், நெபுலாவின் உடலிலிருந்து அவளை கமோராவைத் தாண்டிய வீராங்கனையாக ஆக்கவேண்டிய ஒரு உறுப்பை தானோஸே அகற்றவேண்டி வந்தது. இதனால் நெபுலாவுக்கு தானோஸ் மீது கோபம். கமோராவோ, தன்னை ஈவு இரக்கம் இல்லாத ஒரு உயிராக தானோஸ் உருவாக்கியது கண்டு தானோஸ் மீது வெறுப்பு.

    இந்த இருவரைத் தவிர, தன் மீது அளவுகடந்த விசுவாசம் உடைய நால்வரையும் தானோஸ் உருவாக்கினான். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்கள்தான் Corvus Glaive, Ebony Maw, Cull Obsidian மற்றும் Proxima Midnight. இவர்கள் நால்வருமே Infinity War படத்தில் தானோஸின் குழந்தைகளாக அறிமுகம் ஆவார்கள். இவர்களில் எபொனி மா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். டாக்டர் ஸ்ட்ரேஞ்சை சிறைப்பிடிக்கும் கொடூர முகம் கொண்டவர்தான் எபோனி மா. கல் அப்ஸிடியன் என்பவன் அப்படத்தில் மாவுடன் பூமிக்கு வரும் ராட்சதன்.  கார்வஸ் க்ளேவ் மற்றும் ப்ராக்ஸிமா மிட்நைட் ஆகியவர்கள், விஷனுடனும் ஸ்கார்லெட் விட்ச்சுடனும் சண்டை இடுபவர்கள். கேப்டன் அமெரிக்கா மற்றும் அவருடன் இருக்கும் பிற அவெஞ்சர்களால் வெல்லப்பட்டு மறைபவர்கள். 

    அவெஞ்சர்ஸ் சீரீஸில் தானோஸின் பாகம் என்ன?

    எல்லாவற்றுக்கும் முதலில், அண்டவெளியின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துக்கு தானோஸ் வந்ததுமே, அவனுக்கு நினைவு வந்தது இன்ஃபினிடி கற்கள்தான். அவைகள் தன் வசம் இருந்தால் யாரும் தன்னை எதிர்க்க இயலாது என்பதை தானோஸ் உணர்ந்துகொண்டான். எனவே, முதன்முதலில் அவன் கைப்பற்றிய கல் – Mind Stone. இதை ஒரு ஈட்டி போன்ற ஆயுதத்தில் பதித்துவைத்துக்கொண்டான். அந்த ஆயுதம் அவனுக்கு வலிமையைக் கொடுக்கும் ஆயுதமாக மாறியது.

    இதன்பின் அடுத்த கல்லைத் தேடிய தானோஸ், அது ஒரு டெஸராக்டினுள் வைக்கப்பட்டு, அது பூமியில் இருக்கிறது என்று புரிந்துகொண்டான்.  அந்தக் கல்தான் Space Stone. தன்னுடன் இருக்கும் மாபெரும் படையாகிய சிடாரி (Chitauri) என்ற ராட்சதப் படையை, பூமியைக் கைப்பற்றவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த லோகியை அழைத்து, அவன் வசம் ஒப்படைத்தான். அவன் லோகியிடம் போட்ட ஒப்பந்தம் – பூமியைக் கைப்பற்றிய பின்னர், டெஸராக்டைத் தன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்பது. லோகி ஒப்புக்கொண்டபின்னர், மைண்ட் ஸ்டோன் பதிக்கப்பட்ட ஈட்டியை லோகியின் வசம் ஒப்படைத்தான் தானோஸ். பிரம்மாண்டமான சிடாரி படையைத் தலைமைதாங்கி, பூமியின் மீது லோகி படையெடுத்த கதைதான் The Avengers.

    ஆனால் பூமியில் இருக்கும் வீரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் லோகியை முறியடித்துவிட்டனர் என்பதைத் தானோஸ் உணர்ந்துகொள்கிறான். இப்போது டெஸராக்ட் தோர் வசம் இருக்கிறது. எனவே முழுபலம் வாயந்த ஆஸ்கார்டைத் தாக்குவது கடினம் என்று புரிந்துகொண்டும், அதன்பின்னும் சும்மா இருக்காமல், அடுத்த கல்லைத் தேட ஆரம்பித்தான். இந்த அடுத்த கல்தான் Power Stone. அது, ஒரு கோளத்தினுள் வைக்கப்பட்டு, எங்கோ இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறான். முதலில் தன்னுடைய மகள்களாகிய கமோராவையும் நெபுலாவையும் அதனைக் கண்டுபிடிக்கச்சொல்லி அனுப்ப, அது Cloud Tombs of Praxius என்ற பறக்கும் பிரமிடுகள் அடங்கிய பிராந்தியத்தில் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் கமோராவால் அதைக் கைப்பற்ற முடியாமல், நெபுலாவும் அங்கே சிக்கிக்கொண்டு அவளது கையை நெபுலா இழக்க நேர்கிறது.

    இதன்பின்னர் Guardians Of Galaxy படத்தில் வரும் இன்னொரு வில்லனான Ronan The Accuser என்பவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, பவர் ஸ்டோனை அவன் கைப்பற்றிக் கொடுத்தால், அவனது லட்சியமான அவனது எதிரி கிரகமான நோவாவையும், அதன் மக்களான ஸாண்டாரியன்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துக்கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் போடுகிறான். ஆனால் அந்தக் கல் இருக்கும் கோயிலான மோராக்கில் ஸ்டார் லார்ட் என்பவன் கையில் அது சிக்கிவிட, இந்த முயற்சியும் தோல்வி. ஆனால் கொஞ்ச காலத்திலேயே ரோனானிடம் அக்கல் சிக்கிவிடுகிறது. ஆனால் அதை தானோஸீடம் கொடுப்பதற்குப் பதில் அவனே அதைப் பயன்படுத்திக்கொண்டு அதன் சக்தியை கிரகித்துக்கொள்ள, தானோஸ் அவனுடன் அத்தனை தொடர்புகளையும் அறுத்துக்கொள்கிறான். பின்னர் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி அணியினரிடம் ரோனான் மாட்டிக்கொண்டு இறக்கிறான். அந்தக் கல், ஸாண்டார் கிரகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களான நோவா கார்ப்ஸிடம் பத்திரமாக சேர்ப்பிக்கப்படுகிறது. இம்முறையும் தானோஸுக்குத் தோல்வி.

    இனி யாரை நம்பியும் பயனில்லை என்று புரிந்துகொள்கிறான் தானோஸ். தானே செயலில் இறங்குகிறான். முதலில் Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். இந்தக் கையுறையை வைத்துக்கொண்டே ஒவ்வொரு கல்லாக தானே சென்று எடுக்கிறான். இந்தக் கையுறைக்கு Infinity Gauntlet என்று பெயர்.

    இடையில், கமோராவை அழைத்து, Soul Stone என்ற கல் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்கிறான் தானோஸ். அவள் அவனிடமிருந்து பிரிந்து, அவனைப் பிடிக்காமல், கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி அணியினரோடு சேர்ந்துவிடுகிறாள். ஆனால் அவளது சகோதரியான நெபுலாவைப் பிடிக்கும் தானோஸ், Soul Stoneஇன் இருப்பிடம் பற்றிக் கமோரா தனக்குத் தெரியும் என்று சொன்னதை அறிந்துகொள்கிறான். இதனால் Infinity War படத்தில் கமோராவைப் பிடித்துக்கொண்டு அவளிடமிருந்து அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்கிறான்.

    இப்படியாகத்தான் தானோஸ் இன்ஃபினிடி கற்களை சேகரிக்க ஆரம்பித்தான். அந்தக் கதைதான் Infinity War படத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. எனவே இப்படம் தானோஸைப் பற்றிய படம் என்றே சொல்லிவிடமுடியும். தானோஸுக்கு இருக்கும் பின்னணிக் கதையைப் படத்தில் காட்டவேண்டும் என்று விரும்பியதாகவும், பின்னர் கடைசி நிமிடத்தில் அது வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதையும், அதற்குப் பதில் வசனங்களில் ஆங்காங்கே அவற்றை சொருகிவிட்டதாகவும் இயக்குநர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் சொல்லியிருக்கின்றனர்.

    இதோ இந்த வீடியோவைப் பார்த்தால், இந்தக் கட்டுரையில் நான் சொன்னதையெல்லாம் கச்சிதமாக ஆங்காங்கே மார்வெல் அவர்களின் படங்களில் எப்படி நுழைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.

    அடுத்த கட்டுரையில் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கலாம்.

    (தொடரும்)

    ]]>
    http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part-2/feed/ 1
    Avengers: Infinity War (2018) – English : Part 1 http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part1/ http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part1/#respond Tue, 01 May 2018 15:27:42 +0000 http://karundhel.com/?p=6014 அவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com


    கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும் புள்ளியாக, பல வருடங்களாக நாம் மார்வெல் படங்களில் ஆங்காங்கே கேட்டுக்கொண்டும், போஸ்ட் க்ரெடிட்கள் மற்றும் ஒரு சில காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்த தானோஸ் (Thanos). கெவின் ஃபீய்ஜ் பத்து வருடங்கள் முன்னர் போட்ட அட்டகாசமான திட்டத்தின் முதற்கட்ட க்ளைமாக்ஸ் இது. இதற்குப் பின்னும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் தொடரத்தான் போகிறது என்பது கெவின் ஃபீய்ஜ்ஜின் கருத்து. அதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

    முதலில், Infinity Stones.

    Guardians of The Galaxy படத்தில் இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் பற்றிய விரிவான அறிமுகம் வருகிறது. அந்தப் படத்தில் Collector என்ற கதாபாத்திரம் இதை விளக்குகிறது. அதேபோன்ற விளக்கம் Infinity War படத்திலும் துவக்கத்தில் வரும். அண்டவெளி என்பது ஒன்று உருவாவதற்கு முன்னாலேயே ஆறு பிரம்மாண்ட சக்திகள் இருந்துவந்தன. Cosmic Entities என்ற பெயரில் இருக்கும் சக்திகளால் உருவாக்கப்பட்டவையே இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ். Lord of the Rings படங்களில் வரும் மோதிரங்கள் போன்றவை இவை. ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு சக்தி. இவைகளை வைத்துக்கொண்டு பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பலரும் அவற்றின் சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். Entrophy, Infinity, Death & Eternity என்பதே இந்தக் கற்களை உருவாக்கிய சக்திகளின் பெயர். இந்தக் கற்களை சாதாரண நபர்களால் கட்டுப்படுத்த இயலாது. எனவே, அந்தக் கற்களைச் சுற்றி ஒரு கவசம் போன்ற ஒன்றை உருவாக்கி, அதன்பின் அவற்றைப் பயன்படுத்தியவர்கள் பலர்.

    உதாரணமாக, முதன்முதலில் மார்வெல் படங்களில் நாம் பார்த்த இன்ஃபினிடி கல்லான Tesseract என்பதைச் சொல்லலாம். அதனுள் இருந்தது Space Stone. அந்தக் கல்லை நேரடியாக உபயோகிக்காமல், டெஸராக்டினுள் வைத்து உபயோகித்து வந்தனர். அதைத்தான் லோகி Avengers படத்தின் முதல் காட்சியில் S.H.I.E.L.D அமைப்பிடம் இருந்து திருடினான். இந்தக் கல்லை வைத்துக்கொண்டு பல portalகளை உருவாக்கி, வெவ்வேறு விண்வெளிகளுக்கு இடையே செல்லமுடியும்.

    Captain America: The First Avenger திரைப்படத்தில், ரெட் ஸ்கல் என்ற வில்லனிடம் இருந்தது இந்த டெஸராக்ட்தான். இதைவைத்துக்கொண்டுதான் HYDRA அமைப்பினால் பல ஆயுதங்களை உருவாக்க முடிந்தது. இதைத்தான் கேப்டன் அமெரிக்கா அந்தப் படத்தின் இறுதியில் விமானம் மூலம் அழித்தார். அதைத்தான் S.H.I.E.L.D அமைப்பினர் கண்டுபிடித்து, தங்களிடம் வைத்துக்கொண்டனர் (THOR படத்தின் End Credits). அதைத்தான் அவெஞ்சர்ஸ் படத்தின் துவக்கத்தில் லோகி திருடினான். அந்தப் படத்தின் இறுதியில் தோர் லோகியைக் கைதுசெய்து, ஆஸ்கார்ட் கிரகத்துக்குக் கொண்டுசென்றுவிடுவார். அவருடன் அந்த டெஸராக்டும் பயணப்படும். Thor: Ragnarok படத்தில், அந்த டெஸராக்ட் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் லோகி செல்வது காட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தக் கல் லோகியிடம் சென்றுவிட்டது. அந்தப் படத்தின் இறுதியில், ஆஸ்கார்ட் அழிந்தபின் அனைவரும் ஒரு விண்கலத்தில் பயணப்படும்போது, ராட்சத விண்கலம் ஒன்று இவர்களின் கப்பலை வழிமறிக்கும். Infinity Wars பார்த்தவர்களுக்கு, அது தானோஸின் விண்கலம் என்று புரிந்திருக்கும். இதனால், இன்ஃபினிடி வார்ஸ் படத்தின் முதல் காட்சியிலேயே தானோஸிடம், லோகி வைத்திருந்த Space Stone சென்றுவிட்டது.

    அடுத்து, Mind Stone.

    Avengers படத்தில், லோகியின் கையில் இருக்கும் ஆயுதத்தில் ஒரு கல் பதிக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் கல்தான் மைண்ட் ஸ்டோன். இதை வைத்துக்கொண்டு பிறரின் மனங்களை எளிதில் கட்டுப்படுத்த இயலும். அந்த ஆயுதத்தை எல்லாரின் நெற்றியிலும் லோகி வைத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதை அப்படத்தில் காணமுடியும். இந்தக் கல்லை லோகியிடம் கொடுத்தது யார் தெரியுமா? தானோஸே தான். லோகியால் பூமியைக் கைப்பற்ற முடியும் என்று நம்பியே தானோஸ் அக்கல்லை லோகியிடம் கொடுத்தான். இந்தக் கல், Age of Ultron திரைப்படத்தில் டோனி ஸ்டார்க்கின் வசம் வருகிறது. இந்தக் கல்லின் அபரிமிதமான சக்தியால்தான் அப்படத்தில் Ultron என்ற சுயமாகச் சிந்திக்கக்கூடிய ப்ரோக்ராமை டோனி ஸ்டார்க் உருவாக்குகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் அந்தப்படம். அப்படத்தின் இறுதியில், Vision என்ற சூப்பர்ஹீரோவாக அந்தப் ப்ரோக்ராம் உருமாறுகிறது. அதன் தலையில் Mind Stone பதிக்கப்படுகிறது.

    Reality Stone

    இந்தக் கல்லால், எந்தப் பொருளையும் கட்டுப்படுத்த முடியும். Malekith என்ற கொடூரமான வில்லன், இந்தக் கல்லை வைத்துக்கொண்டுதான் ஆதிகாலத்தில் ஆஸ்கார்டின் மீது படையெடுத்தான். Dark Elves என்ற அவனது இனம், ஈதர் (Aether) என்ற சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்பது உலகங்களையும் தாக்கி வெல்லப்பார்க்கிறது. இந்த ஈதர் என்பது ஆயுதம் என்று நான் சொன்னது சரியல்ல. அது ஒரு சக்தி. ஆனால், அஸ்கார்டில் இருந்து, தோரின் தாத்தா போர் (Bor) பாய்ந்து வந்து, இந்த இருண்ட தேவதைகளை தடுக்கிறார். அந்த நேரத்தில், அவர்களின் தலைவன் மாலெகித் (Malekith) அங்கிருந்து தப்பித்து, எங்கோ அண்டவெளியில் தனது சில சகாக்களோடு சென்று ஒளிந்துகொள்கிறான். அப்படியே அந்த விண்கலம் பிறரது பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது. அந்த ஈதர் என்ற சக்தி, போரினால் எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது. அவன் பின்னர் Thor: The Dark World படத்தில் திரும்புவான். அதே ஈதரை உபயோகிக்க நினைப்பான். இந்த ஈதர் என்பது ரியாலிடி ஸ்டோனால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

    அந்தப் படம் முடிந்ததும் ஆஸ்கார்டில் இருந்து இருவர், கலெக்டரிடம் சென்று இந்த ரியாலிடி ஸ்டோனைக் கொடுப்பார்கள். இப்படித்தான் இந்தக் கல், கலெக்டரிடம் வந்து சேர்ந்தது. அந்தக் கல்லைத்தான் தானோஸ், Infinity War படத்தில் கலெக்டரை எளிதில் அடித்துப்போட்டுவிட்டு எடுத்துக்கொண்டு செல்வான். கூடவே கமோராவையும் கவர்ந்துசென்றுவிடுவான்.

    The Power Stone

    இந்தக் கல்லின் சிறப்பம்சம், இதை வைத்துக்கொண்டு மாபெரும் சக்தியை உருவாக்கி, ஒரு கிரகத்தையே அழிக்க முடியும். Guardians of the Galaxy திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், ஸ்டார் லார்ட், ஒரு இருண்ட இடத்துக்கு வந்து, The Orb என்ற உருண்டையான வஸ்துவைத் திருடுவான் அல்லவா? அதற்குள் இருந்ததே இந்தப் பவர் ஸ்டோன். அந்த இடம் சாதாரணமான இடம் அல்ல. Infinity Stones உருவாக்கப்பட்டபோது, இந்த இடத்தில்தான் Entrophy, Infinity, Death & Eternity ஆகிய நான்கு மாபெரும் சக்திகள் அவற்றை உருவாக்கின. அந்தப் படத்தில், அந்தக் காட்சியிலேயே பின்னணியில் வரும் சுவற்றில் இவர்களின் உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தின் பெயர் மோராக் (Morag). அது ஒரு கோயில்.

    இந்தக் கல்லை, ஸ்டார் லார்டிடம் இருந்து Ronan The Accuser என்பவன் பறித்துக்கொள்கிறான். அவன் வேலை, அக்கல்லை தானோஸிடம் அளிப்பது. மாறாக, அதைத் தானே வைத்துக்கொண்டு, அப்படத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கப்போவதாக தானோஸிடமே சவால் விடுவான்.

    அந்தப் படத்தின் இறுதியில், இக்கல்லை கார்டியன்ஸ் கைப்பற்றி, Nova Corps என்ற விண்வெளி போலீஸிடம் அளிப்பார்கள் (படத்தின் துவக்கத்தில் ஸ்டார் லார்ட் கைதுசெய்யப்படுவான் அல்லவா? அவனைக் கைது செய்பவர்களே நோவா கார்ப்ஸ்).

    ஆனால் இந்த நோவா கார்ப்ஸை மிக எளிதாக அழித்துவிட்டு, அக்கல்லை தானோஸ் கைப்பற்றிவிடுகிறான். Infinity Wars படத்தின் துவக்கத்திலேயே தானோஸின் மூலம் இதை நாம் அறிந்துகொள்கிறோம். படத்தில் அக்காட்சிகள் காட்டப்படவில்லை. ஒருவேளை அடுத்த படத்தில் அக்காட்சி ஒரு ஃப்ளாஷ்பேக்காக வரக்கூடும்.

    The Time Stone

    காலத்தை மிக எளிதாக முன்னும் பின்னும் கட்டுப்படுத்துவதே இக்கல்லின் வேலை. Doctor Strange படத்தில், ஸ்டீஃபன் ஸ்ட்ரேஞ் இக்கல்லை, Library of Kamar-Taj கட்டிடத்தில் கண்டுபிடிப்பார். படத்தின் இறுதியில் வில்லன் டோர்மாம்முவை டைம் லூப்பில் சிக்கவைத்து கடுப்பேற்றி விரட்டுவாரே – அது இந்தக் கல்லின் உதவியால்தான். இக்கல்லை, Eye of Agamotto என்ற ஒரு பெண்டண்ட்டினுள் வைத்து, டாக்டர் ஸ்ட்ரேஞ்சே தன்னுடன் வைத்துப் பாதுகாத்து வருகிறார். இக்கல்லைத்தான் அவரே முன்வந்து தானோஸிடம் அளித்துவிடுவார், இன்ஃபினிடி வார் படத்தில். அதற்கான காரணம் எளிது. அவரால் இக்கல்லின் உதவியால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று பார்க்க இயலும். எனவே தானோஸை எப்படி வெல்வது என்பதை எதிர்காலத்துக்குள் சென்று பார்த்து, அதனாலேயேதான் அக்கல்லை அவனிடம் கொடுப்பார். அப்படித் தானோஸிடம் அக்கல் கிடைத்தால்தான் அவெஞ்சர்கள் அவனை வெல்ல முடியும் என்பதே காரணம். அதனால்தான் தானோஸினால் மரண அடி வாங்கிய டோனி ஸ்டார்க்கையும் விட்டுவிடச்சொல்லி, தானோஸிடம் சொல்வார். இதன் விளைவை அடுத்த படத்தில் காணமுடியும்.

    Soul Stone

    Infinity War படத்தின் மிக முக்கியமான கல் இது. அடுத்த படத்தில் இது இன்னும் நன்றாக உபயோகிக்கப்படப்போகிறது. இக்கல்லினால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும். அதேபோல், உயிரோடு இருப்பவர்களை மறையவைத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களின் உயிரை அடைத்துவைக்கவும் முடியும். இந்தக் குறிப்பிட்ட இடம், Infinity War படத்தில் வருகிறது. அதில் தானோஸ், குட்டிப்பெண்ணாக இருக்கும் கமோராவைப் படத்தின் இறுதியில் ஒரு இடத்தில் சந்திப்பான். அந்த இடம்தான் இது. காலம், வெளி ஆகிய எதுவும் அற்ற இடம். இந்தக் கல்லுக்கேயான பிரத்யேகமான உலகம் அது.

    ஓகே. இப்போது எல்லாக் கற்களையும் பார்த்தாயிற்று. இந்தக் கற்களையெல்லாம் யாருமே தங்களின் கைகளில் வைத்திருக்கவே முடியாது. அவற்றின் சக்தி அவர்களை அழித்துவிடும். எனவே, Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். அவன் ஒரு தேவதச்சன் போன்றவன். ஆயுதங்களை உருவாக்குவதில் கில்லாடி. இறந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியால் தோருக்கு, Stormbreaker என்ற ஆயுதத்தை உருவாக்கிக் கொடுக்கிறான் எய்த்ரி. இந்த ஆயுதத்தால் தானோஸின் இதயத்தைக் கிழிக்க தோரால் முடிகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தானோஸ், Soul Stone இன் உதவியால் அவெஞ்சர்களில் சரிபாதியை அந்தக் கல்லின் உலகத்துக்குள் சிறைப்பிடித்துவிடுகிறான்.

    இவைதான் கற்களைப் பற்றிய விவரங்கள். அடுத்த கட்டுரையில் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்.

    (தொடரும்)..

    ]]>
    http://karundhel.com/avengers-infinity-war-2018-english-part1/feed/ 0
    Mukkabaaz (2018) – Hindi http://karundhel.com/mukkabaaz-2018-hindi/ http://karundhel.com/mukkabaaz-2018-hindi/#respond Fri, 26 Jan 2018 14:56:07 +0000 http://karundhel.com/?p=6005 இந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு  இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் நேரடியாகவே முகத்துக்கு நேராகவே, ‘நீ எந்த சாதி?’ என்றே கேட்டிருக்கின்றனர். அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம் அவர்களுக்குள், அவர்களின் பெயர்களைக் கேட்டதுமே அது புரிந்துவிடுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பெயருக்குப் பின்னால் தகப்பன்களின் பெயர்களைப் போட்டுக்கொள்வதால் அவர்களுக்கு இந்தக் குழப்பம். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது என்றாலுமே, இன்றும் இங்கும் சாதியின் பெயரால் நடக்கும் பிரச்னைகளை நாம் படித்துக்கொண்டும் கேள்விப்பட்டுக்கொண்டும்தான் இருக்கிறோம். ஆனாலும் ஒருசில விஷயங்களில் வட-கிழக்கு-மேற்கு இந்தியாவுக்கு நம் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

    இந்தச் சூழலில், வட இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு சாதியின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் என்னென்ன என்பதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு பேசியிருப்பதே ‘முக்காபாஸ்’ படத்தின் பிரதான அம்சம்.

    அனுராக் காஷ்யப் இப்படத்தில் செய்திருப்பது என்னவென்றால், ஒரு சாதாரண காதல் கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு இப்படிப்பட்ட உண்மையான பிரச்னைகள் சார்ந்த காட்சிகளைப் பின்னணியில் வைத்திருப்பதுதான். இதனாலேயே இந்த சாதாரணமான கதை, அசாதாரணமான ஒரு தளத்தில் வைக்கப்பட்டுவிடுகிறது. படத்தின் வில்லனின் பெயர் ‘பக்வான் தாஸ் மிஷ்ரா’. மிஷ்ரா என்பது பிராம்மணர்கள் உபயோகிக்கும் சாதிப்பெயர். அவனுமே படம் முழுதுமே, ‘நாமெல்லாம் பிராமணர்கள். நம்மை விடக் கீழ்சாதியினரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். அந்த ஊரின் பெரிய மனிதனாகவும் இருக்கிறான். அவனால் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிடமுடியும். இந்தச் சூழலில், ‘டாக்குர்’ சாதியைச் சேர்ந்த ஒருவன், இவனது பிராம்மண சாதியைச் சேர்ந்த ஒரு நெருங்கிய உறவுக்காரப்பெண்ணைக் காதலித்துவிட்டால்? (இவனது சகோதரன் மகள்).  இவனது உதவியில்லாமல் அவனால் குத்துச்சண்டை வீரனாக ஆகவே முடியாத சூழ்நிலை என்றால்?

    இதுதான் முக்காபாஸ். இதில் இருக்கும் இரண்டு விஷயங்கள் – எளியவன் ஒருவன் குத்துச்சண்டை வீரனாக மாறுவது மற்றும் ஏழை ஒருவன் பணக்காரப் பெண்ணைக் காதலிப்பது ஆகியவை இந்திய சினிமாவில் மிகப்பழைய விஷயங்கள். ஆனால் அவைகளை மிக இயல்பாக, சாதி சார்ந்த பின்னணியில் காட்டியதுதான் அனுராக் காஷ்யப்பின் சாமர்த்தியம். அதனாலேயே முக்காபாஸ் பலராலும் பேசப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

    இதில் ஒருசில குறியீடுகளை அனுராக் காஷ்யப் வைத்திருக்கிறார். முதலாவது, கதாநாயகிக்கு வாய்பேச இயலாது. அவள் ஒரு பெண். அதிலும் ஆணாதிக்க சிந்தனைகள் உச்சத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த பெண். எனவே, வாய்பேச முடிந்தாலும் அவளால் இவைகளுக்கெதிராகக் குரல் எழுப்ப இயலாதுதான். இதுதான் அவளால் பேச முடியாமல் இருப்பதற்கான குறியீடு. ஆனால் அவளது செய்கைகளின் மூலம் தன்னைக் காதலிப்பவனை மணந்துகொண்டுவிடுகிறாள். அவன் தனது லட்சியத்தை அடைவதற்கு உற்ற துணையாகவும் இருக்கிறாள். மிகவும் தைரியமான, வெளிப்படையான ஒரு பெண் இப்படத்தின் நாயகி.

    படத்தின் நாயகன், தனது விளையாட்டுத் திறமையால் ஒரு அரசு அலுவலகத்தில் சேர்கிறான். அவனுக்கு மேலதிகாரியாக இருப்பவர் ஒரு யாதவ். இவனோ ஒரு டாக்குர். யாதவ் இனம், டாக்குர்களிடம் பல்லாண்டுகாலம் அடிமையாக இருந்தது என்பது நமக்கே தெரியும். இந்த சூழலில், யாதவ் சாதியைச் சேர்ந்த அந்த மேலதிகாரி, டாக்குர் சாதிக்காரன் ஒருவன் அவருக்கு அடிமையாக வேலை செய்வதை – குறிப்பாக அவன் மேஜையைத் துடைப்பதை புளகாங்கிதத்தோடு வீடியோ எடுக்கிறார். எடுக்கும்போதே அவனிடம் சொல்லவும் செய்கிறார் – ‘காலம் எப்படி மாறிவிட்டது பார்த்தாயா? என் தந்தை, உங்கள் இனத்தினரிடம் வேலைக்காரராக இருந்தார் தெரியுமா?’ என்று. இதுபோன்ற வசனங்கள் படம் நெடுகிலும் ஆங்காங்கே இருக்கின்றன. ஒரு இடத்தில், மகள் விருப்பப்படும் நாயகனுக்கே தனது பெண்ணை மணம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிடும் சகோதரனை அழைத்து, ‘அடேய். அவள் உனது பெண் தானே? அப்படியென்றால் உன் முடிவுதானே அங்கே எடுக்கப்படவேண்டும்? அவள் நினைப்பதையெல்லாம் நாம் செய்துவிடலாமா? நம் குடும்பத்தில் எப்போதுமே பெண்களின் முடிவுகளை நாம் மதிக்காமல்தானே இருந்திருக்கிறோம்?’ என்று கேட்கிறான். இதுபோன்ற வசனங்களால், அந்தப் பிராந்தியம் இன்றும் எப்படி இருந்துகொண்டிருக்கிறது என்பதை அனுராக் அட்டகாசமாகக் காட்டியிருக்கிறார்.

    படத்தில் காண்பிக்கப்படும் இன்னொரு விஷயம் – இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு அமைப்புகளில் ஏன் நல்ல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. குறிப்பாக, மூளை வீங்கிய முதலாளிகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளால் எப்படித் திறமையான வீரர்களை வீணடிக்கிறார்கள் என்பதைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது இப்படம்.

    படத்தில் தற்கால இந்தியாவைத் தோலுரித்துக் காட்டும் பல வசனங்கள் இருக்கின்றன. ‘பாரத் மாதா கீ ஜேய்’ என்று கத்திக்கொண்டே ஹீரோ வில்லனை அடி வெளுக்கும் காட்சி ஒரு உதாரணம். படம் ஆரம்பிப்பதே மாட்டுப் பிரச்னை  சம்மந்தப்பட்ட காட்சியோடுதான். அதேபோல், ஒரு காட்சியில், தன்னிடம் வந்து இறைஞ்சும் ஹீரோவை எப்படி வில்லன் அவமானப்படுத்துகிறான் என்று கவனியுங்கள்.

    ஒட்டுமொத்தமாக, இப்படத்தைப் பற்றி அனுராக் காஷ்யப் சொல்லியிருப்பதே போதும். ‘தற்கால இந்தியாவில் நடக்கும் பல பிரச்னைகளை இப்படத்தில் வைக்க விரும்பினேன். ஆனால் சென்சாரில் வெட்டுப்படக்கூடாது என்பதால், சாமர்த்தியமாக அவைகளை உள்ளே நுழைத்தும் விட்டேன்’. இதுதான் இப்படத்தின் அடித்தளம். இதற்கு மேல்தான் பிற சம்பவங்கள். வழக்கமான அனுராக்கின் ப்ளஸ் பாயிண்ட்களான இயல்பான நடிப்பு, பாடல்கள், காட்சிகள் ஆகிய எல்லாமே இப்படத்தில் உண்டு என்பதால், படம் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் செல்கிறது. இருப்பினும், படத்தின் நீளம் என்னைக் கொஞ்சம் நெளியவும் வைத்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டும் என்று இருந்திருந்தால் இன்னும் வேகமாகவும் அட்டகாசமாகவும் இருந்திருக்கும்.

    ]]>
    http://karundhel.com/mukkabaaz-2018-hindi/feed/ 0
    Amitabh Bachchan – The Phenomenon http://karundhel.com/amitabh-bachchan-the-phenomenon/ http://karundhel.com/amitabh-bachchan-the-phenomenon/#respond Thu, 25 Jan 2018 15:24:43 +0000 http://karundhel.com/?p=6000 சில வாரங்கள் முன்னர் தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை இது.


    அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ்வளவு ஏன்? கன்னடத்தின் ராஜ்குமார், இறக்கும்வரை ஹீரோ. விஷ்ணுவர்த்தனும் அப்படியே. சிரஞ்சீவி அரசியலில் இருந்து திரும்பிவந்தபின் இப்போதும் ஹீரோதான். இன்னும் இந்தப் பட்டியலில் மம்மூட்டி, மோகன்லால் என்று பலரும் உண்டு. இவர்கள் யாருமே செய்யத் துணியாததை, ஐம்பது வயதிலேயே அமிதாப் செய்துவிட்டார் (ஆனால் கமல்ஹாஸன், கடந்த சில வருடங்களாகத் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் செய்து வருவதை அவசியம் குறிப்பிடவேண்டும்).

    இதற்கும் முன்னரே நடிப்பில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்த அனுபவம் அமிதாபுக்கு உண்டு. 1986ல், ‘ஒரு கைதியின் டைரி படத்தின் ரீமேக்கான ‘ஆக்ரி ராஸ்தா படத்தில் நடித்துமுடித்ததோடு நடிப்பை விட்டுவிட்டு, அரசியலில் புகுந்தார். அதன்பின் 1988ல்தான் மறுபடி நடித்தார். இந்த இடைவெளியில், அலஹாபாதில் இந்தியாவின் மிகப்பெரிய வோட்டு வித்தியாசங்களில் ஒன்றில் பகுகுணாவுக்கு எதிராகப் போட்டியிட்டு ஜெயித்தார். பின் மூன்றே வருடங்களில் பதவியை ராஜினாமா செய்து, திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

    ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன். ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன.

    அப்படி வெளியான படங்களில் மிக முக்கியமானது ‘அக்ஸ் (Aks). அமிதாப் எழுபதுகளில் மாபெரும் ஹீரோவாகத் திகழ்ந்தபோது, அவரது வெற்றிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த இயக்குநர் ப்ரகாஷ் மெஹ்ராவின் மகன் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா இயக்கிய படம். மிக வித்தியாசமான கதைக்களம் கொண்டது. அமிதாபுக்கு எதிராக நடித்தவர் இன்னொரு அட்டகாசமான நடிகரான மனோஜ் பாஜ்பாய். படம் பெருவெற்றி அடையாவிட்டாலும், அமிதாப்பின் வில்லத்தனமான நடிப்பை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. இதன்பின்னர் நடிகர் அமிதாப் பச்சனின் காட்டில் அடைமழை பெய்யத் துவங்கியது (இதுதான் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் தொகுப்பாளராக மாறிய தருணமும் கூட. அது அவரை இந்தியாவின் அத்தனை வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது).

    இதோ இந்தப் பாடலை மறக்காமல் பாருங்கள்.

    ஆனால் இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் சில கொடூரங்கள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. கரன் ஜோஹர் இயக்கிய ‘கபி குஷி கபி கம், சஞ்ஜய் குப்தா இயக்கிய ‘காண்டே (க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய ரிஸர்வாயர் டாக்ஸின் அப்பட்டமான நகல்), கைஸத் குஸ்தாத் இயக்கிய ‘பூம், ரவி சோப்ரா இயக்கிய ‘பாக்பான் (இந்தப் படம், எண்பதுகளில் விசு இயக்கிய ‘வரவு நல்ல உறவு படத்தின் ரீமேக். யோசித்துப் பாருங்கள். விசு செய்த கதாபாத்திரத்தை அமிதாப் பச்சன் செய்தால் எப்படி இருக்கும்? பிழியப் பிழிய அழவைக்கும் ஒரு குடும்ப சீரியல் போன்ற படம் இது) என்று வரிசையான கொடுமைகள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. அமிதாப் பச்சன் என்ற ஹீரோ, நடிகராக மாறிவிட்டார் என்று தெரிந்ததும், பாலிவுட்டின் அத்தனை மொக்கை இயக்குநர்களும் அமிதாப்பின் மீது வெறியுடன் பாய்ந்து விழுந்து கடித்து விட்டனர் என்றுதான் இந்தக் காலகட்டத்தைச் சொல்லமுடியும். அவ்வப்போது அமிதாப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் என்று ஃபர்ஹான் அக்ஹ்தர் (லக்‌ஷ்யா), யாஷ் சோப்ரா (வீர்  ஸாரா – இதுவே ஒரு கண்ணீர்க் காவியம்தான். ஆனால் காலம் சென்ற மதன் மோஹனின் நல்ல இசையால் தப்பியது), அமோல் பாலேகர் (பஹேலி), நிஷப்த் (ராம் கோபால் வர்மா) போன்றவர்கள்தான். இதில் ராம் கோபால் வர்மா, அமிதாப்பை விடாமல் பிடித்துக்கொண்டு, அவரது திரைவாழ்க்கையிலேயே ஆகச்சிறந்த கொடூரமான ‘ஆக் (ஷோலேவின் ரீமேக்) படத்தை எடுத்தார். இதற்குப் பிறகும் சர்க்கார் படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களில் நடித்தது அவசியம் அமிதாப்பின் பெருந்தன்மை என்றுதான் சொல்லவேண்டும்.

    அமிதாப் நடிகராக மாறிய காலகட்டத்தில் ஒரு சில மறக்கமுடியாத படங்கள் உண்டு. அவற்றில் ‘ப்ளாக் படத்துக்குத் தனி இடம் உண்டு. அந்தப் படம் பார்த்தவர்கள், பார்வையற்ற ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்துக்கும், அமிதாப்பின் கதாபாத்திரத்துக்கும் இருக்கும் அற்புதமான தொடர்பை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியாது. சஞ்சய் லீலா பன்ஸாலி எடுத்த அபூர்வமான நல்ல திரைப்படம் இது (இப்போதெல்லாம், ராஜஸ்தானி அங்கிகள் அணிந்துகொண்டு, ஐம்பது – நூறு பேரை மிகப் பிரம்மாண்டமான செட்களில் நடனமாட விட்டு, தீபிகா படுகோனேவை நடுவில் நடனமாட வைப்பதையேதான் பல வருடங்களாக இவர் செய்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களின் பெயரை மட்டும் மாற்றுவார்).

    அதேபோல், The Last Lear படமும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பலரின் கவனத்துக்கு ஆளாகாமலேயே போய்விட்டது. எனக்குத் தனிப்பட்ட முறையில் அமிதாப் நடித்து மிகவும் பிடித்த படம் இது. இதைப்பற்றி எப்போதோ ஒரு காலத்தில் நான் எழுதிய கட்டுரை – The Last Lear.

    ராம் கோபால் வர்மா எடுத்த ‘சர்க்கார் படத்தையும் அவசியம் சொல்லியே ஆகவேண்டும். காட்ஃபாதரை நகலெடுத்திருந்தாலும் (நம்மூர் ‘நாயகன் போல), அற்புதமான தனித்தன்மையுடன் அமிதாப்பின் பிரம்மாண்டத்தை உணர்த்திய படம் அது. அக்னீபத் படத்தில் விஜய் தீனாநாத் சௌஹான் என்ற பெயரில் அட்டகாசமான நடிப்பை அமிதாப் கொடுத்திருப்பார். அதைவிட இது பிரம்மாண்டமான கதாபாத்திரம். இதேபோல், நம்மூர் பால்கி இயக்கிய ‘சீனி கம் (Cheeni Kum) படத்தையும் மறக்கமுடியாது. அமிதாப் பச்சன் காதலில் சிக்கியவராக நடித்த படங்கள் மிகக்குறைவு. அவற்றில் இது முக்கியமான ஒன்று. அறுபது வயதுக்கு மேற்பட்ட செஃப் ஒருவருக்குக் காதல் வந்தால் என்னாகும்? இளையராஜா தமிழில் இசையமைத்திருந்த அற்புதமான சில பாடல்களை ஹிந்திக்குக் கொண்டுசென்ற படம் இது. நன்றாகவும் ஓடியது. இதன்பின் பால்கி அமிதாப்பை வைத்து மேலும் இரண்டு படங்கள் இயக்கியாகிவிட்டது.  இரண்டுமே நல்ல படங்களே.

    Paa – Review & Shamitabh – Review

    இதன்பிறகு பல படங்கள் வந்தாலும், ஷூஜித் சர்க்கார் இயக்கிய ‘பிகு (Piku) மற்றும் அவர் கதை எழுதிய ‘பிங்க் (Pink) படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இவை இரண்டையும் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள். இவற்றில் பிகுவே எனக்கு மிகவும் பிடித்த படம்.

    நம் காலத்தின் மாபெரும் சூப்பர்ஸ்டார்களில் முதன்மையானவர் அமிதாப் பச்சன் என்ற வகையில், ஹீரோவாக இருந்தபின்னர் நடிகர் என்று மாறி, தன்னைக் கச்சிதமாக சினிமாவில் பொருத்திக்கொண்டவர் – அவர் இல்லாமல் அப்போதும் திரைப்படங்கள் இல்லை; இப்போதும் இல்லை என்ற நிலையைக் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தக்கவைத்துவருபவர் – எனது பள்ளி நாட்களை மறக்கமுடியாமல் ஆக்கிய ஹீரோ – என்று எப்படி எண்ணிப் பார்த்தாலும் அமிதாப் பச்சனை மறக்கவே முடியாது. தமிழில் ரஜினியும் கமலும் இப்படி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை (ஹீரோவாகவே இல்லாமல் பிற கதாபாத்திரங்களையும்) சரமாரியாக நடித்துப் பெயர் வாங்கும் காலகட்டம் எப்போது வரும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அனேகமாக எனது ஐந்து வயது மகன் கல்லூரி சேரும்போதாவது அது வந்துவிட்டால் மகிழ்ச்சி.

    ]]>
    http://karundhel.com/amitabh-bachchan-the-phenomenon/feed/ 0
    The Post (2017) – English http://karundhel.com/the-post-2017-english/ http://karundhel.com/the-post-2017-english/#respond Wed, 24 Jan 2018 17:03:19 +0000 http://karundhel.com/?p=5995 அமெரிக்கப் படங்களில், உண்மைச் சம்பவங்களைச் சார்ந்த அரசியல் படங்கள் ஏராளம். அவற்றைப் பற்றி ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அங்கே என்ன நல்ல விஷயம் என்றால், அரசையும் அரசியல் அமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் விமர்சிக்கலாம். நம்மூர் போல் அல்ல. அப்படி ஒரு படம் – மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட உண்மைச் சம்பவம் – அதையும் ஸ்பீல்பெர்க் இயக்கினால்? எதிர்பார்த்தபடியே ஆஸ்கர்களில் இப்படம்இரண்டு பிரிவுகளில் – சிறந்த நடிகைக்கான பிரிவில் மெரில் ஸ்ட்ரீப்புக்காகவும், சிறந்த படத்துக்கான பிரிவிலும் – நாமினேட் ஆகியிருக்கிறது.

    ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். ஒரு நாட்டின் ரகசியங்கள் ஒரு செய்தித்தாளில் வெளியானால், அது சரியா தவறா? அதனால் அந்த நாட்டுக்கு அவப்பெயர்தான் கிடைக்கப்போகிறது என்ற நிலையில், இது தர்மமா அதர்மமா? இதுதான் இந்தப் படத்தின் மைய இழை. சுருக்கமாக – வியட்நாம் போரில் அமெரிக்க அரசு பலத்த முன்னேற்றம் கண்டுகொண்டிருப்பதாகவே யுனைடட் ஸ்டேட்ஸின் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அரசின் பிரச்சாரமே காரணம். ஆனால் கடந்த இருபது வருடங்களாகவே போரில் யுனைடட் ஸ்டேட்ஸின் படைகளுக்குப் பின்னடைவே என்பதுதான் உண்மை. இது போரில் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

    டேனியல் எல்ஸ்பெர்க் என்ற நபர், போர் நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். போரைக் கண்ணால் கண்டும் இருக்கிறார். அவர் அரசின் மேல்மட்ட அதிகாரிகளுடன் போருக்குச் சென்றவர். அப்போதே, போரில் யுனைடட் ஸ்டேட்ஸுக்குப் பின்னடைவுதான் என்பதைக் கண்டுகொண்டவர். அரசு அதிகாரிகளும் இதையேதான் நினைக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, சில வருடங்களுக்குப் பிறகு, அவர் கையில் கிடைக்கும் அத்தனை ரகசிய ஆவணங்களையும் – இவையெல்லாம் போரில் அமெரிக்க அரசின் உண்மை நிலவரத்தை சுட்டிக் காட்டும் ஆவணங்கள் – தயக்கமே இல்லாமல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வேலைசெய்யும் ஒரு ரிப்போர்ட்டருக்கு அனுப்பிவிடுகிறார்.

    இதுதான் இப்படத்தின் துவக்கம். யுனைடட் ஸ்டேட்ஸ் அரசு, மக்களை நம்ப வைப்பதற்காக இருபது வருடங்களுக்கு மேல் நடத்திய ஒரு நாடகத்தின் முக்கியமான நிஜ ஆவணங்கள், இப்படியாக ஒரு செய்தித்தாளின் கைக்கு வந்து சேருகின்றன. இந்த இடத்தில், ஒரு சிறிய நிகழ்வாக, வாஷிண்டன் போஸ்ட் இதழின் நிறுவனர் கேதரீன் க்ரஹாம் என்ற பெண்மணி பற்றிய ஒரு சிறிய கதையும் விரிகிறது. அந்தப் பத்திரிக்கை, முதன்முதலாக ஒரு பப்ளிக் ஆஃபர் செய்யப்போகிறது. மக்களிடம் நிதி வசூலித்து, பங்குகள் விற்கப்போகிறது. பரம்பரை பரம்பரையாகத் தனது குடும்பத்திடம் இருந்த செய்தித்தாள் இப்போது மக்களுக்கு சொந்தமாகப்போவது பற்றி அவருக்குத் தயக்கம். இதை எப்படி எதிர்கொள்வது என்ற கலக்கம். கூடவே, இத்தனை நாட்கள் தனது கணவரால் நடத்தப்பட்ட பத்திரிக்கையில் பல ஜாம்பவான்கள் இன்னமும் வேலை செய்துகொண்டு உள்ளனர் என்பதும், அவர்களுக்குத்தான் தன்னை விடவும் பத்திரிக்கை பற்றி நன்றாகத் தெரியும் என்பதுமே அவருக்குப் புரியும். எனவே, தன்னால் இப்பத்திரிக்கையை நடத்த இயலுமா என்ற பயமும் அவருக்குள் இருக்கிறது.

    இப்படி இருக்கையில், எல்ஸ்பெர்க், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடமும் அதே ரகசிய ஆவணங்களைச் சில திருப்பங்களுக்குப் பிறகு தருகிறார்.

    இதுதான் இப்படத்தின் களம். அத்தனை பெரிய அரசு ரகசியத்தை எப்படி இரண்டு பத்திரிக்கைகள் மக்கள் முன் வைக்கப் பாடுபடுகின்றன என்பதும், நிக்ஸனால் ஆளப்படும் அரசு, எப்படி ஒரு இரும்புக்கரம் கொண்டு இதைத் தடுக்க நினைக்கிறது என்பதும்தான் கதை. இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைதான் பணக்காரப் பத்திரிக்கை. அதன் செல்வாக்கு மிகவும் பிரசித்தம். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையோ ஒரு ‘குடும்பப் பத்திரிக்கை’ என்றே படத்தில் ஒரு வசனம் வருகிறது. படத்தின் துவக்கத்தில் ஜனாதிபதி நிக்ஸனின் மகளுக்குத் திருமணம் நடக்கும். அந்தத் திருமணத்துக்கு ஒரே ஒரு ரிபோர்ட்டரைக் கூட அனுப்ப முடியாத பத்திரிக்கை அது. இதுதான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட். இப்படி ஒரு சொங்கி பத்திரிக்கை, அவ்வளவு பெரிய ரகசியங்களை எப்படிக் கையாளப்போகிறது?

    இந்தக் கதையின் விசேட அம்சம் என்னவெனில், நமது தளத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்திருக்கும் ‘All the President’s Men‘ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும் தொடர்புதான். உண்மையில் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்றே அழைக்கப்பட்ட இந்த சம்பவத்துக்குப் பின்னர்தான் ‘வாட்டர்கேட் ஊழல்’ என்ற பிரபல ஊழல் நடந்தேறியது. அதை வெற்றிகரமாக வெளிக்கொண்டுவந்த நிருபர்களின் கதைதான் ‘All the President’s Men’. எனவே, இந்தப் படம் அப்படத்துக்கு ஒரு வெற்றிகரமான prequel. இப்படத்தின் இறுதிக் காட்சிதான் All the President’s Men படத்தின் துவக்கக் காட்சி.

    படத்தில் மெரில் ஸ்ட்ரீப்பும் டாம் ஹேங்ஸும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். மெரில் ஸ்ட்ரீப் எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. இப்படத்துக்காக அவருக்கு ஆஸ்கர்களில் நாமினேஷன் கிடைத்துள்ளது. அது அவருக்கு 21வது நாமினேஷன். இவற்றில் 2 தடவைகள் சிறந்த நடிகை விருதும், ஒரு முறை சிறந்த துணை நடிகை விருதும் வென்றுள்ளார். ஹாலிவுட் சரித்திரத்தில் யாருமே 21 முறைகள் நாமினேட் செய்யப்பட்டதும் இல்லை. இம்முறை அவர் இந்த விருதை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.

    இத்தனை வருடங்கள் கழிந்தபோதும், ஒரு இயல்பான, குறைந்த பட்ஜெட் படத்தை ஸ்பீல்பெர்க் இயக்கியிருப்பது எனக்குப் பிடித்தது. அவர் தற்சமயம் இன்னொரு பெரிய பட்ஜெட் படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவ்வப்போது இப்படி இறங்கி நல்ல படங்களையும் கொடுத்தே வந்திருக்கிறார். படத்தின் சிறப்பம்சம் அதன் இயல்புத்தன்மை. ஆனால் அதுவே அதன் நெகட்டிவ் அம்சமாகவும் ஆகலாம். காரணம் படம் முழுதும் வசனங்களாலேயே ஓடுகிறது. அது சிலருக்கு அலுப்பைக் கொடுக்கக்கூடும்.

    இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதன் வசனங்கள். குறிப்பாக, நிக்ஸன் பற்றிய வசனங்கள் அத்தனையுமே டொனால்ட் ட்ரம்புக்குக் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். கூடவே, டாம் ஹேங்ஸும் மெரில் ஸ்ட்ரீப்பும் இணைந்திருக்கும் காட்சிகளில் எல்லாம், இந்த இருவரின் பிரமாதமான நடிப்பைக் கவனிக்காமல் இருக்கவே முடியவில்லை. ஆரோக்கியமான போட்டி அது.

    பலருக்கும் Spotlight படத்தின் நினைவு இப்படம் பார்த்தபின் வரலாம். எனக்கு வந்தது. படத்தின் உணர்வுபூர்வமான க்ளைமேக்ஸ் எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் அவசியம் பிடிக்கும்.

    ]]>
    http://karundhel.com/the-post-2017-english/feed/ 0
    Carbon (2018) – Malayalam http://karundhel.com/carbon-2018-malayalam/ http://karundhel.com/carbon-2018-malayalam/#respond Tue, 23 Jan 2018 17:56:41 +0000 http://karundhel.com/?p=5987 நம் வாழ்க்கையில், நிலையான வேலை இல்லாமல், தெளிவான மாதச் சம்பளம் இல்லாமல், அங்கே இங்கே அலைந்து திரிந்து, ஏதோ ஒரு வேலையைச் செய்து, இந்திந்த வேலையில் இந்திந்தப் பலன்கள் உள்ளன என்றெல்லாம் தானாகவே மனக்கணக்கு போட்டுக்கொண்டு திரியும் எத்தனை பேரை நாம் சந்தித்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். நம்மில் பலரும் நிலையான மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் (நான் 12 வருடங்கள் ITயில் அப்படி இருந்து, தற்போது இரண்டரை வருடங்களாக சினிமாவில் இருப்பதால் நானுமே அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம்). இவர்களில் பலரிடம் உள்ள ஒரே ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், செய்துகொண்டிருப்பதை மலை போல் நம்புவார்கள். அதில் இருந்து அவசியம் பெரும் பணம் ஒரு காலத்தில் வரப்போகிறது என்று உறுதியாக இருப்பார்கள். உண்மையில் எனது அனுபவத்தில் அப்படி ஒரு மிகப்பெரிய கூட்டத்தையே கோவையில் சந்தித்திருக்கிறேன். வைரம், வைடூரியம், மரகதக்கல் என்று என்னென்னமோ சொல்லிக்கொண்டு, கும்பல் கும்பலாக பேக்கரிகளில் டீ குடித்துக்கொண்டிருப்பார்கள். என் வீட்டின் அருகிலேயே. ஒரு பத்து வருடங்களாக இதே கும்பல் தினந்தோறும் அங்கே சந்தித்துக்கொண்டிருந்தது. இதே காரணங்கள். எல்லாருமே பத்து வருடங்களாக ஒரே நம்பிக்கை. ஒரே புன்சிரிப்பு. வாழ்க்கை விரைவில் மாறப்போகிறது என்ற உறுதியான எண்ணம். ஒரு நாள் அதில் தலைவர் வயதாகி இயற்கை மரணமே அடைந்துவிட்டார். உடனே அதில் இன்னொருவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுபோல ஒருவன் தான் சிபி செபாஸ்டியன். தனது வீட்டுக்கே வாரக்கணக்கில் வராமல் இருப்பவன். கையில் கிடைத்த வியாபாரங்களைச் செய்பவன். ஒரு காலகட்டத்தில் வைரக்கல் விற்கவேண்டும் என்பான். ஆனால் வைரம் அவனிடம் இருக்காது. வேறு ஒருவன் இவனிடம் அப்படிச் சொல்லியிருப்பான். ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒரு டீலரைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து ஓரளவு பணமும் கிடைக்கும். இப்படியே நிலையற்ற வாழ்க்கையை எப்படியும் பெரும் பணம் ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஓட்டிக்கொண்டு இருப்பவன்தான் சிபி. இவனைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என் சிறுவயதில் பார்த்த பல நிஜமான மனிதர்கள் நினைவு வந்தனர். எப்போதோ பணம் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் தினம்தோறும் ஓட்டாண்டியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். தங்கள் குடும்பங்களிடமும் இதே காரணங்களைச் சொல்லி, அவர்களுக்கும் இலக்கில்லாத ஒரு நம்பிக்கையைக் கொடுத்து வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள். பணம் வரப்போகுதுங்க.. இப்போ கடன் கொடுங்க. பின்னால மொத்தமா திருப்பிர்ரேன்.. என்று சொல்லிப் பணம் வாங்கியிருப்பவர்கள். சிபியும் அப்படி வாங்குகிறான். ஆனால் பணம் கொடுக்க முடிவதில்லை.

    இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு, மிகப்பெரும் பணம் பற்றிய ஒரு செய்தி கிடைத்தால் என்னாகும்? அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று நிரூபிக்கக்கூடியவர்கள் யாருமே இல்லை. ஒருவேளை அந்தப் பணம் இல்லை என்றால் உயிரே போய்விடும் என்ற சூழல். அதற்காக மனிதத் தடமே பதியாத பல பகுதிகளில் அலையவேண்டும் என்ற பிரச்னை. அதெல்லாம் சிபிக்குத் தடைகளாகவே இல்லை. மாறாக, பணம் கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கைதான் அவனை எங்கெல்லாமோ செலுத்துகிறது. அந்த நம்பிக்கை இறுதியில் அவனை என்ன செய்தது என்பதே படம்.

    ‘கார்பன்’ படத்தின் மிகப்பெரிய பலமே, வாழ்க்கை நிம்மதி ஆகிவிடும் என்ற உறுதியான குருட்டு நம்பிக்கைதான். அத்தகைய நம்பிக்கையை நான் பலரிடமும் பார்த்திருக்கிறேன். அதனாலேயே யாரும் செய்யத் துணியாதவற்றை தடால் என்று செய்துவிடுவார்கள். அது நல்லதாக முடியுமா கெட்டதாக முடியுமா என்பதெல்லாம் secondary. ஆனால் அந்த நம்பிக்கை அவர்களை என்னவெல்லாமோ செய்ய வைத்துவிடுகிறது என்பதுதான் இங்கே விஷயம். கூடவே, சிபி கெட்டவன் இல்லை. அவனும் நம்மைப்போலவே ஒரு சராசரி மனிதன்தான். அவனுக்கும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்தான். படத்தில் ஒரு இடத்தில், நாயகி அவனிடம், இந்த வேலைக்கு முன்னர் என்ன செய்தாய் என்று கேட்கும்போது பதில் பேச மாட்டான். இறுதியில், அதை அவளிடம் சொல்லி, இனிமேல் அப்படி வெறுமனே survive மட்டுமே செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றும், நன்றாக வாழவேண்டும் என்ற தாபம் இருப்பதாகவும் சொல்லி, ஒரு முடிவை எடுக்கிறான். அவனது கதாபாத்திரம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தது.

    அது மட்டும் இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே அவனது கதாபாத்திரம் செய்யும் எல்லா வேலைகளிலும் அந்தப் பதற்றம் உண்டு. ஒருவிதப் பதைபதைப்புடன், எதையாவது செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருந்துவிடவேண்டும் என்று பல வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறான் சிபி. அவனைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படிச் செயல்படும் பலரும் நினைவுக்கு வரலாம்.

    படத்தில் வரும் பல கதாபாத்திரங்களுமே இயல்பாகவே இருக்கின்றன. நாயகி சமீரா இன்னொரு உதாரணம். அவளது நோக்கம் என்று படத்தில் எதுவுமே இல்லை. She is just another ‘mountain Junkee’. ஆனால் அந்தக் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவனித்துப் பாருங்கள். அதேபோல்தான் படம் நெடுக வரும் பாலன் பிள்ளை. மிக அட்டகாசமான நடிப்பு. பாலன் பிள்ளையாக கொச்சு ப்ரேமன் பிறிகட்டி அடித்திருக்கிறார். ஸ்டாலின், கண்ணன் ஆகிய பாத்திரங்களும் அருமையானவை. இவர்களையெல்லாம் மீறி, சிபி என்ற நிலையற்ற தன்மை கொண்டு வாழ்க்கை முழுதும் பதைபதைப்புடன் ஓடிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாஸில். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் ஒன்றாக இது மாறிப்போனது. சிபி, தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இடங்களிலும், இனி என்ன செய்யப்போகிறான் என்று முடிவெடுக்கும் இடங்களிலும் அந்தக் கதாபாத்திரம் உதிர்க்கும் சிரிப்பை கவனித்துப் பாருங்கள். அது ஒன்றே அதன் இயல்புத்தன்மையைப் பிரதிபலித்துவிடும். அதன் உடல்மொழியும் அபாரம். நான் மிகவும் ரசித்தேன்.

    இதுதான் படம். சிபியின் பயணம். படம் பார்க்கும் சிலருக்கு, அது பிடிக்காமல் போகலாம். காரணம் படம் ‘மெதுவாக’ச் செல்கிறது என்று நீங்கள் எண்ணக்கூடிய எல்லாக் காரணங்களும் படத்தில் உண்டு. படத்தில் ட்விஸ்ட்கள் இல்லை. ஜகஜக பாடல்களோ காட்சிகளோ இல்லை. வாவ் சீன்ஸ் இல்லை. மிக இயல்பாக வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் இது. ஆகவே எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். படத்தின் துவக்கத்தில் இருந்து, முடிவு வரை எனக்கு எல்லாக் காட்சிகளுமே பிடித்தன. குறிப்பாக முடிவு.

    இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கண்டுபிடித்து, அதைச் சுற்றியும் ஒரு கதையை அமைத்த வேணுவை அவசியம் நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, படத்தில் சில காட்சிகளுக்கு முன்கூட்டியே அமைக்கப்படும் foreshadowing கூட இல்லை. இயல்பாக அப்படியப்படியே அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதன் திரைக்கதையையும் பாராட்டுகிறேன். எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் மாட்டாமல், சிபி என்ற கதாபாத்திரத்தின் பயணத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறார் வேணு.

    படத்தில் விஷால் பார்த்வாஜ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிஜிபால் பின்னணி இசை.

    பி.கு
    1. இந்தப் படம், ஏனோ எனக்கு வெர்னர் ஹெர்ஸாக்கின் சில படங்களை நினைவுபடுத்தியது.
    2. சென்ற ஆண்டு, கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருவோடு, இலங்கையைச் சேர்ந்த ‘Red butterfly dream / Rathu Samanala Heenayak’ என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைவிடவும் இதுதான் பிரமாதம். ஒருவேளை இயக்குநர் வேணு அந்தப் படம் பார்த்திருக்கக்கூடும். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

    ]]>
    http://karundhel.com/carbon-2018-malayalam/feed/ 0
    The political films of Hollywood http://karundhel.com/the-political-films-of-hollywood/ http://karundhel.com/the-political-films-of-hollywood/#respond Tue, 23 Jan 2018 01:07:42 +0000 http://karundhel.com/?p=5982 சில மாதங்கள் முன்னர் ‘அந்திமழை’ பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.


    ஹாலிவுட்டின் James Bond, உலகெங்கும் பிரபலம். எப்போதுமே ஜேம்ஸ்பாண்டின் படங்களில் ரஷ்யர்கள், கொரியர்கள், ஜெர்மானியர்கள் என்று பிற நாட்டவர்களே பெரும்பாலும் வில்லன்கள். அவர்களை ஒரு இங்லீஷ்காரரான பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். ப்ரிட்டிஷ் ஏஜெண்ட்டான பாண்டை வைத்து யுனைடட் ஸ்டேட்ஸைச் சேர்ந்த ஹாலிவுட்டில் படங்கள் எடுக்கப்படும் அரசியல் பின்னணியைச் சற்றே யோசியுங்கள். அமெரிக்காவின் பிற நாடுகளின் வளர்ச்சி மீதான பயமே அதில் மறைபொருளாக வெளிப்பட்டிருக்கும். இதுதான் பாண்ட் படங்களின் அரசியல். ‘ஹாலிவுட்டின் அரசியல் சினிமாக்கள்’ என்பதில் இதுபோன்ற படங்களும் அடக்கமே.

    ஹாலிவுட்டில் அரசியல் திரைப்படங்கள் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றதுமே, ‘அரசியல்’ என்ற அம்சம் கையாளப்பட்ட படங்களை ஒரு பட்டியலாகக் கொடுத்துவிடமுடியும். ஏனெனில், அங்கே அவ்வளவு படங்கள் அரசியல்வாதிகளைப் பற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் என்பது ஒரு மிகப்பெரிய வார்த்தை. பொதுவாக, politics என்பது மட்டும் அல்லாமல், ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியுமே இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு நாம் விவாதிக்க முடியும். கூடவே, சரி – தவறு என்ற நிலையில் விவாதிக்கப்படும் எதற்குமே ‘அரசியல்’ என்ற வார்த்தை பொருந்தும்.

    அதற்கு முன்னர், இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். பொதுவாகவே ஆங்கிலப் படங்களில் கையாளப்படும் கட்டமைப்பு என்னவெனில், எப்போதுமே எதிரி வெளியே இருந்து வருவான். பல படங்களில் ரஷ்யர்களை வில்லன்களாக அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். அதேபோல் கொரியர்கள். வியட்நாமை மையமாக வைத்தே பல படங்கள் வந்துள்ளன. முஸ்லிம்களையும் இப்படியே காட்டியிருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே இதுபோன்ற படங்கள் வந்ததால், அங்கே மக்களின் மனோபாவத்திலுமே, அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மீது நேசபாவமான மனநிலை இல்லாமல், அவர்களை விரோதிகளாகப் பார்க்கும் எண்ணங்கள் ஒளிந்தே இருக்கின்றன. இதனாலேயே அவர்கள் ஒருவிதப் பாதுகாப்பின்மையை எப்போதும் உணர்கிறார்கள். இதுதான் ஹாலிவுட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல். எனவே, ஒட்டுமொத்தமாக, ‘அரசியல்’ என்ற வார்த்தையால் நாம் என்னென்ன முக்கியமான படங்களை விவாதிக்க முடியுமோ, அவை அத்தனையையும் சுருக்கமாகக் கவனித்துவிடலாம்.

    முதலில், ஹாலிவுட்டின் அரசியல் படங்களுக்கெல்லாம் முன்னோடியான ஒரு படம் பற்றிப் பார்க்கலாம். இந்தப் படத்தில் நாயகன் ஒரு அரசியல்வாதி. ஆனால் அதனால் இப்படம் அரசியலைப் பேசுகிறது என்று சொல்ல இயலாது. மாறாக, இப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த சமூக நிலையைப் பற்றியே இப்படம் அதிகமான தகவல்களைத் தருகிறது. ஒரு காலகட்டத்தில் யுனைடட் ஸ்டேட்ஸில் செல்வந்தர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் அடைய நினைத்த அத்தனையையும் அடைந்துவிட்டார்களா? ஒருவேளை செல்வம் சேர்ப்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததா? அவர்களின் மன நிம்மதி என்னவாயிற்று? அவர்கள் பிறருடன் பழகுகையில் பிறர் அவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள்? இப்படிப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடையாகவே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். இதனாலேயே, வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடையாக இப்படம் இன்றுவரை விளங்குவதாலேயே இது பிரபலம் அடைந்திருக்கிறது. அதுதான் ஆர்ஸன் வெல்லிஸ் இயக்கிய ‘Citizen Kane’. 1941ல் வெளியான படம். ஒரு பிரம்மாண்டமான ஆளுமை- உலகத்தையே தனது கைக்குள் வைத்து இயக்க நினைத்த நபர், உண்மையில் தன் மனதுக்குள் நினைத்தது கிடைக்காமல் வாழ்க்கை முழுதும் ஏங்கிய சிறுவனே என்பதில் எத்தனை காவிய சோகம் இருக்கிறது? இதுதான் சிடிஸன் கேன் பேசும் அரசியல்.

    உலகம் முழுக்கத் தற்போது பீதியை விளைவிக்கும் விஷயம் என்னவென்றால், எந்த நாடு வேண்டுமானாலும் பிற நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுத்துவிடலாம் என்பதுதான். ஸ்திரத்தன்மை இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எத்தனை கொடூரமானது? இதற்குக் காரணம் என்ன? அதிகாரம் என்பதை மூளைக்குள் எடுத்துச்செல்லும் ஒரு சில தனி நபர்களின் சுயநலம் தானே? இதைப் பொட்டில் அடித்தாற்போல் விளக்கிய படம், ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘Doctor Strangelove or: How I learned to stop worrying and Love the Bomb’ திரைப்படம். 1962ல் வெளியான படம் இது. படம் முழுக்கவே, வரப்போகும் யுத்தம் பற்றிய ஒரு மிகப்பெரும் விவாதம் நடக்கும் அறையில்தான் நடக்கிறது. மறைகழன்ற ஒரு அமெரிக்க ஜெனரல் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், ஜனாதிபதிக்கே தெரியாமல் ஒரு ந்யூக்ளியர் யுத்தத்தைத் துவங்கிவிடலாம் என்பதுதான் இந்தப் படம் தெரிவித்த ஆபத்தான உண்மை. கூடவே, நியூக்ளியர் குண்டு போடப்படும்போது, அதன்மீது ஒரு அமெரிக்கன், கௌபாய் தொப்பியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது இன்றுவரை மறக்கமுடியாத ஒரு குறியீடு. அப்படி அந்தக் குண்டை வீசச்சொல்லி ஆணையிடும் ஜெனரலின் பெயர் – ஜாக்.D.ரிப்பர் என்பதும் இன்னொரு பிரமாதமான குறியீடு (ஜாக் த ரிப்பர் என்பவன் இன்றுவரை தேடப்படும் கொலைகாரன் என்பது தெரிந்திருக்கும். From Hell திரைப்படம் மற்றும் க்ராஃபிக் நாவலைப் படித்துப் பாருங்கள்). குப்ரிக்கின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. அற்புதமான அரசியல் பகடி.

    நிக்ஸனின் ஆட்சியில், வாட்டர்கேட் என்ற மாபெரும் பிரச்னை வெடித்தது. நிக்ஸனின் அரசாங்கம், அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டது. அவர்கள் மீது விசாரணைகளைத் தந்திரமாக நிகழ்த்தியது. முதலில் இவை எல்லாமே மிகவும் ரகசியமாகவே நடந்தன. ஆனால், இதன்பின்னர் ஒரு குறிப்பிட்ட சம்பவம், இந்தப் பிரச்னையைப் பொதுவில் கொண்டுவந்து நிறுத்தியது. வாஷிங்டனில் இருந்த Democratic National Committee (DNC) என்ற அலுவலகத்தில், ஜூன் 17, 1972வில் அடையாளம் தெரியாத சில நபர்கள் இரவில் நுழைந்தனர். இதைப் பற்றிய விசாரணையில், அவர்கள் கைது செய்யப்பட்டு, க்யூபாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று தெரியவந்தது. இவர்களைப் பற்றி விசாரிக்கையில், நிக்ஸனின் அரசுக்கும் இவர்களுக்கும் இருக்கும் மெல்லிய தொடர்பு தெரியவர, நிக்ஸனின் அரசு இதை மறைக்கப் பிரயத்தனம் செய்தது. இதைத் தொடர்ந்து இரண்டு பத்திரிக்கை நிருபர்கள் (கார்ல் பெர்ன்ஸ்டீன் மற்றும் பாப் வூட்வேர்ட்), இந்தப் பிரச்னையைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தனர். நிக்ஸனின் அரசையே ஆட்டம்காண வைத்த அறிக்கை அது. இதனை மையமாக வைத்து வெளியான திரைப்படம்தான் ‘All the President’s Men’. ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம். அங்கே, நேரடியாக ஒரு முன்னாள் ஜனாதிபதியை விமர்சித்து இப்படி ஒரு படம் இப்போதும் எடுக்க முடியும். அதுதான் ஹாலிவுட்டின் பலம். நம் நாட்டில் குஜராத் கலவரங்களைப் பற்றி ஒரு படம் வெளிப்படையாக எடுக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள். நந்திதா தாஸ் பட்ட பாடுகளைப் பற்றி நீங்களே படித்துப் பார்க்கலாம்.

    பொதுவாக நம்மூரில், ஏதாவது அரசியல்வாதி எதிலாவது மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? அரசியல்வாதியோ, அரசோ பிரச்னைகளில் சிக்கிக்கொள்ளும்போதெல்லாம், வேறொரு பிரச்னையை இவர்களாகவே உருவாக்கி\கசியவிட்டு, தங்களின் மீது இருக்கும் கறையை மக்கள் மறக்கும்படி பார்த்துக்கொள்வதை இந்தியாவெங்கும் நாம் பார்த்தே வருகிறோம். அதுவேதான் ‘Wag the Dog’ படத்தின் கதையும். ஒரு பாலியல் பிரச்னையில் அமெரிக்க ஜனாதிபதி மாட்டிக்கொள்கிறார். தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் வரப்போகிறது என்ற நிலையில், இதனை மக்கள் மறக்கவேண்டும் என்றால் என்ன செய்வது? உடனடியாக ஒரு அரசியல் ராஜதந்திரி (ராபர்ட் டி நீரோ) அழைக்கப்படுகிறார். அவரது யோசனையின்படி, போலியான ஒரு போர் உருவாக்கப்படுகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் (டஸ்டின் ஹாஃப்மேன்) அழைக்கப்பட்டு, போலியாக வீரர்களை வைத்து அல்பேனியாவில் ஒரு யுத்தத்தை உருவாக்கப் பணிக்கப்படுகிறார். அதில் ஒரு அமெரிக்க வீரன் மாட்டிக்கொண்டதாக மீடியாவெங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவனைக் காப்பாற்ற ஒரு அணி கிளம்புகிறது. இப்படிச் செல்லும் கதையில், இறுதியில் அந்தத் தயாரிப்பாளர், தான் செய்த வேலைகளுக்காக க்ரெடிட்ஸ் கோர, அந்த அரசியல் ராஜதந்திரி அவரையும் கொன்றுவிடுகிறான். இறுதியில் போரை முடித்ததற்காகப் பழைய ஜனாதிபதியே மறுபடியும் தேர்வு செய்யப்படுகிறார். இதைப்போல் யுனைடட் ஸ்டேட்ஸின் அரசியலைப் பகடிக்குள்ளாக்கிய படங்கள் குறைவே. இப்படத்தை எழுதியது, திரைக்கதை ஜீனியஸ்களில் ஒருவராகக் கருதப்படும் டேவிட் மாமெட். படம் இன்றுவரை முக்கியமான அரசியல் படமாகக் கருதப்படுகிறது.

    உலகம் முழுக்க மிகப்பிரபலமாக இருந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதி, ஜான் எஃப். கென்னடி. இவரது மரணத்துக்குப் பின் பல சர்ச்சைகள் இன்றும் உலவிக்கொண்டு இருக்கின்றன. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு விடையாகப் பலரும் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். கென்னடியின் மரணத்தைப் பற்றிய ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் ‘JFK’. இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், இதுவரை மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளைப் பற்றிய படங்கள் எடுத்திருக்கிறார். ஜே.எஃப். கே படத்துக்குப் பின்னர் நிக்ஸன் மற்றும் W ஆகிய இரண்டு படங்கள். JFKவில், கென்னடி கொல்லப்பட்டது ஒரே ஒரு கொலைகாரனால் அல்ல (லீ ஹார்வி ஆஸ்வால்ட்) என்றும், மொத்தம் மூன்று கொலைகாரர்கள் சுட்டதால்தான் கென்னடி உயிரிழந்தார் என்றும் வாதாடும் வக்கீல் ஜிம் கேரிஸனாகக் கெவின் காஸ்ட்னர் நடித்திருந்தார். நியூ ஆர்லியன்ஸில் வாழ்ந்துவந்த க்ளே ஷா என்ற நபர்தான் கென்னடியின் மரணத்தில் முக்கியப் பங்கு வகித்தார் என்று இந்தத் திரைப்படம் சொல்லும். கென்னடியின் மரணம் என்பது, வியட்நாம் போரில் இருந்து யுனைடட் ஸ்டேட்ஸை வாபஸ் வாங்கவும், அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIAவைக் கலைக்கக் கென்னடி நினைத்ததனாலும்தான் நிகழ்ந்தது என்பது இந்தப் படம் சொல்லும் செய்தி. இதில் உதவி ஜனாதிபதி லிண்டன் ஜான்ஸனுக்கும் பங்கு இருந்தது என்று இத்திரைப்படத்தில் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கும். பல பிரச்னைகளைச் சந்தித்த படம் இது. தகவல்களை இஷ்டத்துக்கு ஆலிவர் ஸ்டோன் மாற்றியமைத்திருந்ததாகவும் பல பத்திரிக்கைகள் எழுதின. இச்சமயத்தில், நம்மூரில் ‘குற்றப்பத்திரிக்கை’ படத்துக்கு நேர்ந்த தலைவிதி நினைவு வருகிறது. பல வருடங்களாக வெளிவராமலேயே இருந்து, கண்டபடி சிதைக்கப்பட்டு வெளியான படம் அது. இதுதான் இந்தியாவுக்கும் யுனைடட் ஸ்டேட்ஸுக்கும் வித்தியாசம்.

    யுனைடட் ஸ்டேட்ஸில் வெளியாகியிருக்கும் அரசியல் படங்கள் எக்கச்சக்கம். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு சில படங்களைத்தான் இங்கே கொடுத்திருக்கிறேன். இவைகளைத் தவிர, இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில், சில முக்கியமான படங்கள்: Malcolm X, Bulworth, The Manchurian Candidate, Milk, Lincoln, All the King’s Men, Election, The Great Mcginty, The Ides of March, Frost/Nixon, Fahrenheit 9/11 (Documentary), Duck Soup, Three Days of the Condor, Syriana, Reds, The Candidate, Inglourious Basterds, Seven Days in May, The Conender மற்றும் பல. கூடவே, டிவி சீரீஸ்களான The West Wing & House of Cards ஆகியவைகளையும் தவறாமல் பார்க்கலாம்.

    ]]>
    http://karundhel.com/the-political-films-of-hollywood/feed/ 0
    Malayalam Films – The New Wave http://karundhel.com/the-new-wave-malayalam-films/ http://karundhel.com/the-new-wave-malayalam-films/#respond Mon, 22 Jan 2018 10:08:09 +0000 http://karundhel.com/?p=5975 ஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன்.


    சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த இரண்டிலும், New Wave என்று அழைக்கப்படக்கூடிய புதிய அலை, கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கியது. ட்ராஃபிக் திரைப்படம் மலையாளத்தில் வெளியான ஆண்டு 2011 ஜனவரி. தமிழில் ‘அட்டகத்தி வெளியான ஆண்டு 2012 ஆகஸ்ட். தமிழில் வேண்டுமானால் இந்தப் புதிய அலை ஒரு குறிப்பிடத்தகுந்த சொல்லாக இருக்கலாம். ஆனால் மலையாளத்தில், ஏற்கெனவே ஒரு புதிய அலை எப்போதோ வந்திருக்கிறது. கே.ஜி. ஜார்ஜ், அடூர் கோபாலகிருஷ்ணன், பரதன், பத்மராஜன் அரவிந்தன் முதலிய இயக்குநர்கள் உருவான எழுபதுகளைத்தான் சொல்கிறேன். இவர்கள் கையாளாத கருக்களே இல்லை என்னும் அளவு, அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முற்றிலும் வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர்கள் இவர்கள். இதுதான் மலையாள சினிமாவின் முதல் புதிய அலை. இதன்பின்னர்தான் தற்போது மற்றொரு புதிய அலை வந்திருக்கிறது எனலாம்.

    இப்போதைய புதிய அலையில், ராஜேஷ் பிள்ளை, லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, வினய் கோவிந்த், ரோஷன் ஆண்ட்ரூஸ், அன்வர் ரஷீத், வினீத் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அல்ஃபோன்ஸ் புத்திரன், ஆஷிக் அபு, சமீர் தாஹிர், அமல் நீரட், அஞ்சலி மேனன், மார்ட்டின் ப்ரக்கட், திலீஷ் போத்தன் முதலியவர்கள் உட்பட்ட ஒரு பெரும் படையே வந்து குதித்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இந்த இயக்குநர்கள் தவிர, இவர்களது படங்களில் ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரியும் ஷைஜு காலித், சுஜித் வாசுதேவ், ஜோமோன்.டி. ஜான், லோகநாதன் ஸ்ரீனிவாசன், ராஜீவ் ரவி, அமல் நீரட், சமீர் தாஹிர் (இவர்கள் இயக்குநர்களும் கூட), ப்ரதீப் நாயர், அபிநந்தன் ராமானுஜம், ப்ரதீஷ்.எம்.வர்மா, கிரீஷ் கங்காதரன், ஆர். திவாகரன், ஆனந்த். சி. சந்திரன் முதலியவர்களும் சரி, இசையமைப்பாளர்களாக இருக்கும் ராஜேஷ் முருகேசன், கோபி சுந்தர், ப்ரஷாந்த் பிள்ளை, ரதீஷ் வேகா, அல்ஃபோன்ஸ் ஜோஸஃப், பிஜிபால், ரெக்ஸ் விஜயன், ராஹுல் ராஜ் முதலியவர்களும், எடிட்டர்களாகப் பணிபுரியும் டான் மேக்ஸ், மகேஷ் நாராயணன், வி.சாஜன், விவேக் ஹர்ஷன், ப்ரவீன் ப்ரபாகர் ஆகியவர்கள் அத்தனை பேரும் இளைஞர்களே. எங்காவது ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இவர்கள் அத்தனை பேரும், ஒரே காலகட்டத்தில், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வந்து குதித்தது ஆச்சரியகரமான விஷயம். இது மட்டும் இல்லாமல், இப்படங்களில் நடிக்கும் ஃபஹத் ஃபாஸில், துல்கர் சல்மான், நிவின் பாலி, இஷா தல்வார், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன், ரீமா கலிங்கல், ஆஸிஃப் அலி உட்பட்டவர்களும் இதேபோல இளைஞர்கள்.

    இப்படி ஒரு பெரும் பட்டாளமாக இவர்கள் வந்து, பலப்பல படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டம் போல மலையாளப்படவுலகம் இத்தனை பரந்துவிரிந்து  இருந்ததில்லை என்றுவேண்டுமானால் அவசியம் சொல்லமுடியும்.

    இந்த மலையாளப் புது அலையுடன் தமிழில் ஏற்பட்ட புது அலையை ஒப்பிட்டால், இங்கே தமிழில் வெறும் சலனங்களே இதுவரை நிகழ்ந்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும். அட்டகத்தி என்ற அற்புதமான படத்தில் துவங்கிய இந்தப் புதிய அலை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜிகர்தண்டா, தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை, துருவங்கள் பதினாறு, மாநகரம், மரகத நாணயம், அறம், அருவி மற்றும் இவற்றைப் போன்ற பல்வேறு புதிய படங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தாலும், ஒரு மகேஷிண்டே ப்ரதிகாரம் போலவோ, ஒரு நார்த் 24 காதம் போலவோ, ஒரு கிளி போயி போலவோ, ஒரு அன்னையும் ரசூலும் போலவோ, உஸ்தாத் ஹோட்டல் போலவோ, இன்னும் மும்பை போலீஸ், 1983, தட்டத்தின் மறையத்து, சாப்பா குரிசு (தமிழில் வந்து படுதோல்வி அடைந்தது) போன்ற படங்கள் நமக்கு அளித்த மிக வித்தியாசமான களங்களும் கதாபாத்திரங்களும் போலவோ தமிழில் நமக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சொன்ன தமிழ்ப்படங்கள் நல்ல படங்கள்தான். சந்தேகமே இல்லை. ஒவ்வொன்றும் அவை எடுத்துக்கொண்ட genreக்கு தவறாமல் எடுக்கப்பட்ட படங்களே. ஆனால் நான் சொல்ல வருவது – தமிழில் பல restrictions இன்னமும் இருக்கின்றன.

    தமிழில் வந்த புதிய அலையைச் சேர்ந்த பல திரைப்படங்களும், வணிக வெற்றி என்ற ஒரு விஷயத்தையே கருத்தில் கொண்டு அமைந்தன. இதற்குத் தயாரிப்பாளர்களே பெரும்பாலும் காரணம். நார்ட் 24 காதம் போன்ற ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு, காரணம், எந்தச் செயலுமே செய்யாமல், ஒரு கும்பலின் கூடவே அலைந்துகொண்டிருக்கும் கதாபாத்திரத்தை இங்கே செய்ய நாயகர்களே நம்மிடம் இல்லை. இதுதான் தமிழின் புதிய அலையின் பிரச்னை. அதேபோல், இந்தப் புதிய அலையில் வெளிவந்த இயக்குநர்களான பா. இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமரசாமி, பாலாஜி தரணிதரன், தெகிடி ரமேஷ், முண்டாசுப்பட்டி ராம், இன்று நேற்று நாளை ரவிக்குமார், காக்காமுட்டை மணிகண்டன், பிரம்மா, கோபி நயினார் முதலியவர்கள் திறமைசாலிகளே. ஆனால் அவர்களுக்கேற்ற புதிய களங்களை அவர்கள் தேர்வுசெய்துகொண்டு படங்கள் இயக்குவதற்கு, தமிழின் வணிகப்பட ஃபார்முலா குறுக்கே நிற்கிறது. இல்லையென்றால் இவர்களாலும் அழகான, மனதைத்தொடும் படங்களை அளிக்க இயலும் என்பது என் கருத்து.

    இந்தப் புதிய அலையில் வெளிவந்த மலையாளப்படங்களை சற்றே உன்னிப்பாகக் கவனித்தால், அவற்றின் கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகின்றன என்பதிலும், வணிகப்படங்களே ஆனாலும், அந்தப் படங்களின் கதைகள் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் நம்மால் எளிதில் அறிய முடியும். அறுபதுகளில் துவங்கி எண்பதுகளில் முடிந்த ஹிந்தி Off beat படங்களை இங்கே நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படங்களின் பிதாமகர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர். இவர்களின் படங்களில் மத்தியதரக் குடும்பங்களே பிரதானமான கதாபாத்திரங்கள். அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவர்களுக்குள் இருக்கும் உறவுமுறைகள், அவர்களின் கனவுகள், இடம்பெயர்ந்து வேறு இடத்துக்குச் செல்லும் அவர்களின் இடர்ப்பாடுகள் ஆகியவையே முக்கியமான அம்சங்களாக இருக்கும். இத்தனைக்கும் இவைகள் கலைப்படங்கள் இல்லவே இல்லை. இவையுமே தரமான வணிகப்படங்களாகவே அமைந்தன. ஆனால் எடுத்துக்கொண்ட கருப்பொருளால் இவை Off beat படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட இப்படிப்பட்டவைதான் இந்தப் புதிய அலையைச் சேர்ந்த மலையாளப்படங்கள்.

    இயக்குநர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் சமீபத்திய ‘அங்கமாலி டைரீஸ் படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அங்கமாலி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த சில பொடியர்கள், அந்த ஊரில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ரவுடிகளாக எப்படி மாறுகிறார்கள்; அப்படி ரவுடிகள் ஆனதும் அவர்களுக்குள் என்னென்ன நடக்கிறது என்பதைத் துளிக்கூட சுவாரஸ்யம் குன்றாமல் அவரால் முற்றிலும் புதுமுகங்களைப் போட்டுச் சொல்ல முடிந்திருக்கிறது. படத்தின் மையமான கருப்பொருள் – பன்றி இறைச்சி வணிகம். அந்த ஊரில் இதுதான் பிரதான தொழில். அந்த ஊரில் இருந்து சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அத்தனை ஊர்களுக்கும் பன்றி இறைச்சி அனுப்பப்படுகிறது என்பதைப் படத்தின் வாயிலாகவே அறியலாம். அங்கமாலி என்ற ஊரைப்பற்றிய மிகச்சிறப்பான அறிமுகமாகவும் இப்படத்தை நாம் கருத முடியும். படத்தில் வரும் கதாபாத்திரங்களான வின்ஸெண்ட் பெபே, 10ML’ தாமஸ், ரவி, U Clamp ராஜன், வர்க்கி, மரம்கொத்தி சிஜோ, கானாகூனா மார்ட்டி, லிச்சி ஆகியோரின் பின்புலத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் எப்படியெல்லாம் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தமிழில் வரவே இயலாது என்று புரியும். பன்றி இறைச்சியை மையமாகக் கொண்ட படம் ஒன்றைத் தமிழில் எடுக்க முடியுமா என்றே தெரியவில்லை.

    கூடவே, திருமணம் ஒன்றுக்குச் செல்லும் பெண் ஒருத்தி, அங்கே மது கிடைக்குமா என்று வினவுகிறாள். மது அருந்திவிட்டு, அட்டகாசமான கொண்டாட்டத்துடன் விழுந்து புரண்டு ஆடுகிறாள். ஆசைதீர ஆடிவிட்டு, மெல்லத் தள்ளாடிக்கொண்டே, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சாலையில் தள்ளாடிக்கொண்டே நடந்துசெல்கிறாள். லிச்சியின் கதாபாத்திரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் போகிற போக்கில் இப்படி நம்முன் கொட்டப்படுகின்றன. எதை எடுப்பது, எதை விடுவது என்பதே தெரிவதில்லை. அது மட்டும் அல்ல – அங்கமாலி டயரீஸ் படம் பார்த்தால், நாட்டு வெடிகுண்டு செய்யும்போது மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டுதான் தயாரிக்கவேண்டும் என்ற தகவலும் தெரியவருகிறது. கூடவே, பன்றிகளின் முகத்தில் எப்படித் துணியைப் போடுவது, அங்கமாலியில் அதிகம் உண்ணப்படும் உணவுகள் என்னென்ன, அங்கமாலியில் போய் வெஜிடேரியன் உணவை ஆர்டர் செய்தால் எப்படி இருக்கும், அங்கமாலியில் தலையெடுக்கும் மதவாதக் கட்சிகளின் பின்னணி, கடுமையான ரவுடிகளாக இருந்தாலும், பிரச்னை முடிந்துவிட்டது என்றால் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்திக் கொண்டாடும் மனிதர்கள் என்று ஏராளமான தகவல்கள். இவற்றுடன் சேர்ந்து, துளிக்கூட அலுக்காத ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

    லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ‘ஆமென் படம்தான் எனக்குத் தனிப்பட்ட அளவில் மிகவும் பிடித்தமானது. அந்தப் படத்தின் அளவு அங்கமாலி டயரீஸ் என்னைப் பாதிக்கவில்லைதான். இருந்தாலும், படத்தில் குறை என்று எதுவுமே சொல்ல இயலாது என்பதே படத்தின் வெற்றி.

    அங்கமாலி டயரீஸ் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இன்னும் இதுபோன்ற படங்களான கம்மட்டிப்பாடம், இயோபிண்டே புஸ்தகம், ஒழிவு திவசத்தே களி முதலிய படங்களைப் பற்றி ஏராளமாக எழுத இயலும். சுருக்கமாகக் கவனித்தால், கம்மட்டிப்பாடத்தில் ஒரு வரலாறே சொல்லப்பட்டது. எர்ணாகுளத்தின் கம்மட்டிப்பாடம் என்ற குப்பத்தில் வாழ்ந்துவந்த தலித்கள் எப்படி ஏமாற்றப்பட்டு அவர்களின் நிலங்களை சொற்ப விலைக்கு விற்றுவிட்டுச் சென்றார்கள், அவர்களின் வியர்வை சிந்திய இடங்கள் எப்படி மாடமாளிகைகளாக ரியல் எஸ்டேட் கும்பல்களால் மாற்றப்பட்ட்டன என்ற துயரம் நிரம்பிய வரலாறு. ஆனால் அப்படம் துயரமான மெலோடிராமாவாகவா இருந்தது? எத்தனை கொண்டாட்டத்துடன் அப்படம் இருந்தது? அதிலும் எத்தனை விதம்விதமான கதாபாத்திரங்கள்? நண்பனைத் தேடிவரும் ஒரு நபரின் வழியாக, கம்மட்டிப்பாடத்தின் ஒட்டுமொத்தப் பின்னணியும் எப்படி உலகுக்கே சொல்லப்பட்டது? நான்கு முக்கியமான கேரள அரசு விருதுகளை இப்படம் அள்ளியது.

    இவைபோன்ற கனமான பின்னணி இல்லாமல், எளிய காதல் கதைகளை எடுத்துக்கொண்டாலும், தட்டத்தின் மறையத்து, உஸ்தாத் ஹோட்டல், சால்ட் அண்ட் பெப்பர், அன்னையும் ரசூலும், என்னு நிண்டே மொய்தீன், பெங்களூர் டேஸ், ப்ரேமம், கிஸ்மத், சார்லீ, ஆமென், நேரம், 100 டேஸ் ஆஃப் லவ், ஓம் சாந்தி ஓசானா, அனார்கலி, நீனா, மகேஷிண்டே ப்ரதிகாரம் (இதை ரொமாண்டிக் படம் என்று குறுக்கிவிட இயலாதுதான். ஆனால் காதல் இதில் அருமையாகக் கையாளப்பட்டிருப்பதால் இங்கே கொடுக்கிறேன்) என்று துவங்கி ஏராளமான படங்களைப் பற்றி எழுதிவிடமுடியும். இவை ஒவ்வொன்றிலும் இடம்பெறும் காதல், தனித்துவமானது. ஒரே போன்ற உணர்வைத் தராமல், இந்த ஒவ்வொரு படமும் மிகவும் வித்தியாசமான உணர்வுகளைத் தரவல்லவை. உதாரணமாக, உஸ்தாத் ஹோட்டலில், கரீம் பாயின் காதல் எத்தனை குறும்பானது? எத்தனை ஆழமானது? சுலைமானி ச்சாய் குடிக்கும்போதெல்லாம் இவரது நினைவுதான் இப்போதெல்லாம் வருகிறது (பெங்களூரில் மூலைக்கு மூலை சுலைமானி கடைகள் உண்டு. அத்தனையும் அருமையான தேநீர் வழங்கவல்லவை). இதைப்போலவே, ஆமென் படத்தில், பாதிரியாரான வின்ஸெண்ட் வட்டோளிக்கும் வெளிநாட்டுப் பெண்ணான மிஷெலுக்கும் இடையே மலரும் அன்பு, சால்ட் அண்ட் பெப்பரில் பரம்பில் காளிதாஸனுக்கும் மாயா க்ருஷ்ணனுக்கும் இடையே துளிர்க்கும் காதல், என்னு நிண்டே மொய்தீனில் மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையே தோன்றிய பிரேமம்.. இப்படி ஒவ்வொரு படத்தையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

    காதல் படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், முற்றிலும் வித்தியாசமான பின்னணி கொண்ட பல படங்கள் மலையாளத்தில் உண்டு. கிளி போயி படம் ஒரு உதாரணம். Stoner படங்கள் என்றே வெளிநாடுகளில் ஒரு வகை உண்டு. கஞ்சா, ஹெராயின் முதலிய லாகிரி வஸ்துக்களால் உண்டாகும் பிரச்னைகள் பற்றிய படங்கள். இவைகளில் இடம்பெறும் பிரதான கதாபாத்திரங்கள், இவைகளை உபயோகித்து, ஒருவித மயக்க நிலையில் செய்யும் காட்சிகள் படங்களில் இடம்பெறும். Fear and Loathing in Las VegasThe Big LebowskiHerold & Kumar சீரீஸில் ஒன்றிரண்டு படங்கள், Pinapple Express ஆகியவை ஒருசில உதாரணங்கள். இந்த வகையிலும் மலையாளப் படங்கள், இந்தியாவுக்கே முன்னோடிகளாகத் திகழ்கின்றன. கிளி போயி அப்படிப்பட்ட ஒரு ஸ்டோனர் படம். படத்தில், நாயகனும் அவன் நண்பனும், கோவா சென்று வருகையில் அவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஹெராயினும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுமே படம். இதில் உபயோகிக்கப்படும் ‘கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படும் cuss wordsகளின் உபயோகம் பிரம்மாதமாக இருக்கும். உண்மையில் இளைய தலைமுறையினர் இப்படித்தான் வாழ்கின்றனர். இதைப்போன்ற வசனங்கள் தமிழில் இடம்பெற்றால் படமே வெளிவர இயலாது. குறிப்பாக, இதில் ஒரு பெண் ஒரு காட்சி முழுக்க fuck fuck fuck fuck என்று சொல்லிக்கொண்டே ஜாலியாக கஞ்சா புகைப்பார். இவற்றையெல்லாம் தமிழில் யோசிக்கவே முடியாது. கிளி போயி போலவே, இடுக்கி கோல்ட் படமும் குறிப்பிடத்தகுந்த படம். இதிலும் இடுக்கியில் விளையக்கூடிய உலகத்தரமான கஞ்ஜா பற்றிச் சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கரு வேறு. தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை நினைவுகூர்ந்து, அங்கே பயணப்படும் சில நடுத்தர வயது மனிதர்களின் கதை. இதிலும் ஒரு உணர்வுபூர்வமான திருப்பம் உண்டு.

    இவை மட்டும் அல்லாமல், heist films என்று உலகப்படங்களில் கையாளப்படும் வகையும் மலையாளத்தில் உண்டு. கொள்ளையடிப்பது. ஏதேனும் பெரிய அளவு பணத்தையோ அது போன்ற விலையுயார்ந்த வஸ்துக்களையோ திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது. Con என்று அழைக்கப்படும் விதமான படங்கள். உதாரணமாக, சப்தமஸ்ரீ தஸ்கரஹா படத்தைச் சொல்லலாம். இதில் ஏழு திருடர்கள் ஒன்றுசேர்ந்து, அவர்களில் ஒருவரை வஞ்சித்த வில்லனின் பணத்தை ஒட்டுமொத்தமாக எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள் என்று சிரிக்கச்சிரிக்கச் சொல்லப்பட்டிருக்கும். இதேபோல் கோஹினூர் படமும், எண்பதுகளில் ஒரு நகைக்கடை சில பலே திருடர்களால் எப்படி சாமர்த்தியமாகக் கொள்ளையடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடிய படம். இந்த இரண்டு படங்களிலும், குறிப்பிடத்தகுந்த திருப்பங்கள் உண்டு.

    தமிழில் Feel good என்ற வகையைச் சேர்ந்த படங்களை நான் அதிகமாகக் கண்டதில்லை. மிகவும் அரிது. ஆனால் மலையாளத்தில் இதுவும் சர்வசாதாரணமாகக் கையாளப்படுகிறது. தட்டத்தின் மறையத்து துவங்கி, இன்றைய ப்ரேமம் வரை ஏராளமான படங்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தகுந்த படம் – சார்லீ. இந்தப் படம் எனக்கு ஏற்படுத்திய மனமாற்றம் பற்றி ஏராளமாக எழுதமுடியும். எத்தகைய துயரமோ சோகமோ இருக்கும் எப்பேற்பட்ட நபரையும், இரண்டே மணி நேரத்தில் மனம் முழுக்க மகிழ்ச்சியை நிரம்பச் செய்துவிடக்கூடிய படம் இது. ஒரு வகையில், Amelie படத்தை ஓரளவு நினைவுபடுத்தக்கூடிய கரு. ஆனால் முற்றிலும் மலையாள மண்ணுக்கேற்ற கதை. நாயகன் சார்லீ ஒரு மர்ம மனிதன். பலரது வாழ்க்கையிலும் சார்லீயின் பாதச்சுவடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் அனைவராலும் மறக்கவே இயலாத அற்புதமான மனிதனாக சார்லீ இருக்கிறான். டெஸ்ஸா என்ற பெண், இப்படிப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டுக்குக் குடிவர, அங்கே அவனே கைப்பட வரைந்திருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கிறாள். பாதியில் முடிந்துவிட்ட அந்தப் புத்தகத்தால் சார்லீயைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் வர, அக்கதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு திருடனைப் பிடித்து, அவன் மூலமாக ஒவ்வொருவராகச் சந்தித்து, இறுதியில் சார்லீயைப் பார்க்கிறாளா இல்லையா என்பது கதை. இக்கதை, ஒவ்வொரு நொடியும் அத்தனை மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் நெகிழ்வான தருணங்களோடும் சொல்லப்படுகையில், வாழ்க்கையை இப்படியெல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை எவருக்கும் வராமல் போகாது. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அத்தனை அம்சங்களிலும் அற்புதமான சில மலையாளப் படங்களில் சார்லீயும் ஒன்று.

    அதேபோல், லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் ஆமென் படத்தையும் இங்கே மறுபடி சொல்லியே ஆகவேண்டும். குமரங்காரி என்ற கிராமத்தில், மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாகத் தங்கிவிட்ட பேண்டு வாத்தியக் குழு. ஒரு காலத்தில் சிங்கம் போல இயங்கிய எஸ்தப்பன் ஆசானின் மகன் சாலமன். எஸ்தப்பன் இறந்தபின்னர், அவரது நண்பரான லூயிஸ் பாப்பனின் ஆதரவில் பேண்டுக் குழு இயங்கி வருகிறது. எல்லாப் போட்டிகளிலும் தோற்கிறது. சாலமனுக்கு அந்தக் குழுவில் இணைந்து க்ளாரிநெட் வாசிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அவனது தாழ்வு மனப்பான்மை, அதனைத் தடுக்கிறது. அப்போது அந்தக் கிராமத்துக்கு வருகிறார் பாதிரியார் வின்ஸெண்ட் வட்டோளி. கிராமத்து மாந்தர்களை மெல்ல மாற்றி, ஒவ்வொருவரும் தங்களைப் புரிந்துகொள்ளவைக்கிறார். சாலமனின் பிரம்மாதமான வாசிப்பு வெளிப்பட, பேண்டுக்குழு ஜெயிக்கிறது. சாலமனின் காதலும் கூடவே சேர்ந்து வெல்கிறது. இத்தனை வேலைகளைச் செய்த வட்டோளி யார்? அதுதான் ஆமென். இந்தக் கதையை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மகிழ்ச்சியும் துடிப்பும் உணர்ச்சிகளும் பீறிட ஒரு படத்தில் அடக்க முடியுமா? அதுதான் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியின் மாயாஜாலம். இப்படத்தில் அச்சு அசலான கதை மாந்தர்கள் உண்டு. நகைச்சுவை உண்டு. ஆடல் உண்டு. பாடல் உண்டு. மனதைத்தொடும் உணர்வுகள் உண்டு. அங்கமாலி டைரீஸை விடவும் ஆமென் தான் லிஜோ ஜோஸின் மிகச்சிறந்த படைப்பு என்பது என் கருத்து.

    இவைதவிர, போலீஸ் படங்கள், சஸ்பென்ஸ் படங்கள், குடும்பச் சித்திரங்கள், பெண்ணியக் கருவை மையமாகக் கொண்ட படங்கள், வழக்கமான வணிக ஹீரோயிஸப் படங்கள், கலைப்படங்கள், பரீட்சார்த்தமான படங்கள் என்று ஒரு மிகப்பெரிய உலகமே மலையாளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. மும்பை போலீஸ் படம் எப்படிப்பட்ட கருவைக் கையாண்டது? படம் பார்க்காதவர்களுக்காக, அதன் கருவைச் சொல்லாமல் தவிர்க்கிறேன். மெமரீஸ் படத்தின் கதையை யோசித்துப் பாருங்கள். தவறு செய்த ஒருவன், அந்தத் தவறு நினைவில் இருந்து முற்றிலும் அழிந்துபோனபின்னரும், அதே தடயங்களை வைத்து, அந்தத் தவறைச் செய்தவன் அவன்தான் என்று புரிந்துகொள்ளும் வகையில் பிரம்மாதமாக எழுதப்பட்ட திரைக்கதை அது. அதேபோல், ஒரே ஒரு துளிக் கதையுடன், சம்பவங்களின் நகர்வையே மையமாக வைத்து எழுதப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படமும் குறிப்பிடத்தகுந்த போலீஸ் படமே. ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான எதிர்வினைகள் என்றே படம் முழுதும் நகரும்.

    இவைதவிர, வெளிப்படையாக அரசியல்வாதிகளின் நிஜப்பெயர்களை வசனங்களில் கொண்டுவந்து நக்கல் அடிப்பது, மதங்களையும் அரசியல் கட்சிகளையும் விமர்சிப்பது (கம்யூனிஸ்ட்களை விமர்சித்த படமான ‘தட்டத்தின் மறையத்து ஒரு உதாரணம். இதிலேயே முஸ்லிம்களின் மேலும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதேபோல் அங்கமாலி டைரீஸ் படத்தில் பி.ஜே.பி கட்சியின் மீது அப்பட்டமான ரவுடிகள் அடங்கிய கட்சி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது) போன்ற அம்சங்களை மலையாளப் படங்களில் மட்டுமே காணமுடியும். தமிழில் ஒரு படத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளை அவர்களின் கொடிகளைப் போட்டு விமர்சித்துவிட முடியுமா? கேரளத்தில் விமர்சனங்களுக்கு எப்போதும் தடையில்லை என்பதே மனதுக்கு மகிழ்வூட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது.

    ஏராளமான உணர்ச்சிகள் சார்ந்த கதைக்களங்கள், அவை நடக்கும் மண்ணின் இயல்பான கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றி அமைக்கப்பட்ட தெளிவான, பார்ப்பவர்களின் மனதில் தங்கிவிடக்கூடிய கதை என்பவைதான் மலையாளப்படங்களின் பலம்.

    நடிப்பு என்று வந்துவிட்டால், தமிழில் இல்லாத நடிகர்களே கிடையாது. ஒரு காலத்தில் எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன் என்று துவங்கி, இன்றைய குரு சோமசுந்தரம் வரை தமிழில் ஏகப்பட்ட நடிகர்கள் உண்டு. ஆனால் இந்த நடிகர்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையான படங்கள் தமிழில் உள்ளனவா? சிவாஜியையே எடுத்துக்கொண்டாலும், முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தன்னை ஒப்புக்கொடுத்த இயக்குநர்கள் யார் எவர் என்று கவனித்தால், மிகமிகப் பெரும்பாலும் முற்றிலுமான வணிகப்படங்கள் இயக்கிய இயக்குநர்களையே அவர் பெரிதும் நம்பியிருந்தார் என்று விளங்கும். வணிகப் படம் என்றால், தேவர் மகனும் ஒரு வணிகப்படம்தான். பட்டாக்கத்தி பைரவனும் ஒரு வணிகப்படம்தான். முதல் மரியாதையும் முற்றிலுமே ஒரு வணிகப்படமே. சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கத்தில் அவர் செய்த பல கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. நகைச்சுவை (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தெனாலிராமன்), வில்லன் (அந்த நாள், திரும்பிப்பார், கூண்டுக்கிளி), குணச்சித்திரம் (எதிர்பாராதது, தூக்கு தூக்கி, மங்கையர் திலகம்) என்று பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் சிவாஜி மிக அதிகமாக நடித்த காலகட்டம் இது. வீரபண்டிய கட்ட பொம்மன் படத்துக்குப் பின் இத்தகைய பரிசோதனைகளை அவர் பெரும்பாலும் மேற்கொள்ளாமல், ஒரு வசதியான வட்டத்தைத் தன்னைச்சுற்றி உருவாக்கிக்கொண்டு, அந்த வட்டத்துக்குள்ளேயே தனது நடிப்பை வெளிப்படுத்தியதோடு திருப்தி அடைந்துவிட்டார் என்றே சொல்வேன்.

    இதுவேதான் சிவாஜிக்குப் பின்னர் மிகப்பெரிய நடிகர் என்று பெயரெடுத்த கமல்ஹாஸனுக்கும் நடந்தது. கமல்ஹாஸனுக்குப் பின்னர் வந்தவர்களில் விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்றே பலரும் சொல்கின்றனர். அவருக்கும் இதுதானே நடந்தது? இவர்கள் எல்லாருமே, அற்புதமான இயக்குநர்களைத் தேடிச் செல்லாமல், தனக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அதிலேயே வணிகவெற்றி அடையக்கூடிய படங்களில் நடித்து வருகின்றனர் (கமலே தேடிச்சென்ற இயக்குநர்களில் முதன்மையானவர் என்று பரதனைச் சொல்லமுடியும். ஒரே ஒரு படம்தான் பரதனுடன் வேலை செய்தார்). அப்படியென்றால், இவர்களை நல்ல நடிகர்கள் என்று மனமார எப்படிச் சொல்லமுடியும்? பல்வேறு பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்பவன் தானே நல்ல நடிகன்? தனது வட்டத்தை விட்டு வெளியேறி, பல புதிய களங்களைத் தேடுபவன் தானே நல்ல நடிகன்? கமல்ஹாஸன், பல படங்களில் தனது நடிப்பை நிரூபித்திருக்கிறார்தான். ஆனால் அது எப்படிப் போதும்?

    இதை அப்படியே மலையாளப் புதிய அலைக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்தப் புதிய அலையின் தலைசிறந்த நடிகர் என்று யாரைத் திரைரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்? துல்கர் சல்மான்? நிவின் பாலி? ஆஸிஃப் அலி? ஜெயசூர்யா? பிருத்விராஜ்? இந்த்ரஜித்? ரீமா கலிங்கல்? ரெம்யா நம்பீசன்?பார்வதி? இவர்கள் எல்லாருமே நல்ல நடிகர்களே. ஆனால் இவர்களையும் தூக்கிச் சாப்பிடும் திறன் படைத்த ஒரு மகாநடிகன் தான் ஃபஹத் ஃபாஸில். இதை யாராலும் மறுக்கமுடியாது. ஃபஹத் ஃபாஸிலை மையமாக வைத்து, நடிப்பு என்ற அம்சத்தை இந்த மலையாளப் புதிய அலையில் சற்று அலசிப்பார்க்கலாம்.

    ஃபஹத் ஃபாஸில் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று மக்களுக்குத் தெரியவந்த படம் என்ன? கேரளா கஃபே, காக்டெய்ல், டோர்னமெண்ட் முதலிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், சாப்பா குரிசு என்ற படம்தான் ஃபஹத்தை அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அப்படத்தின் கரு என்ன? தன்னிடம் வேலை செய்யும் பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு பணக்காரன், தனது செல்ஃபோனைத் தொலைத்துவிட, அது இன்னொருவன் கைக்குக் கிடைக்கிறது. இந்த இருவருக்கும் நிகழும் போராட்டமே படம். இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் எந்த ஹீரோ நடிக்கக்கூடும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் ஃபஹத் ஃபாஸிலின் குணம் புரியும். கதாநாயகனாகவே நடிக்கவேண்டும் என்று இல்லாமல், கதாபாத்திரத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்பதுதான் அவரது குணம். இதை அவரது எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். அதேசமயம், ஃபஹத்தும் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இயோபிண்டே புஸ்தகம் ஒரு உதாரணம். ஆனால் அதிலும் கதையை ஒட்டியே அவரது நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.

    சரி. அடுத்து ஃபஹத் பிரபலமான படம் என்ன? 22 ஃபீமேல் கோட்டயம். அதில் அவரது கதாபாத்திரம் என்ன? தமிழில் ‘மாமா’ என்று மரியாதையாகச் சொல்லப்படும் பிம்ப்தான் அவரது கதாபாத்திரம். படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். இந்த பிம்ப் பாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள்? என்னதான் படத்தின் இறுதியில் ஃபஹத்தின் கதாபாத்திரம் மேல் நாம் கொண்ட எண்ணம் மாறினாலும், கிட்டத்தட்டப் படம் முழுக்கவே அவர் பிம்ப்தானே? இதற்கு அடுத்து அவர் நடித்த அன்னையும் ரஸூலும், ஆமென், 5 சுந்தரிகள், நார்த் 24 காதம், பெங்களூர் டேஸ், இயோபிண்டே புஸ்தகம், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், தொண்டிமுதலும் திருக்சாட்சியும் ஆகிய அத்தனை முக்கியமான படங்களிலும் ஃபஹத் ஃபாஸிலின் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவையே. இதுமட்டும் இல்லாமல், அந்தந்தப் படங்களில் அவரது நடிப்பைக் கவனித்துப் பாருங்கள். அப்போதுதான், தமிழின் சிறந்த நடிகர்கள் என்று கொண்டாடப் படுபவர்களுக்கும், ஃபஹத் ஃபாஸிலுக்குமான வித்தியாசம் புரியும். ஃபஹத் எப்போதும் தன்னை ஒரு ஸ்டாராக முன்னிலைப்படுத்திக்கொள்ளவே இல்லை. தனக்கென்று ஒரு வட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதுமே, நடிப்புக்குச் சவாலாக விளங்கக்கூடிய கதாபாத்திரங்களையே அவர் தேர்வு செய்கிறார். இதனால்தான் அவரது படங்கள் அவ்வளவு அற்புதமாக விளங்குகின்றன. ஃபஹத்தின் படங்களையே உதாரணமாக வைத்து யோசித்துப் பாருங்கள். அந்தக் கதாபாத்திரங்களைத் தமிழில் செய்யக்கூடிய அளவு நடிகர்கள் இங்கே யார்? ‘இமேஜ்’ என்ற சிறையில் மாட்டிக்கொண்டிருப்பவர்களாக அல்லவா இங்கே நம் நடிகர்கள் உள்ளார்கள்?

    இதுதான் தமிழுக்கும் மலையாளத்துக்குமான மிகப்பெரிய வித்தியாசம் என்று எண்ணுகிறேன். என்னவெனில், மலையாளத்திலுமே ஃபஹத் நடிக்கும் படங்கள், முற்றிலும் கலைப்படங்கள் அல்லவே அல்ல. அவைகளுமே வணிகப் படங்களே. ஆனால் வணிகப் படங்கள் என்று நாம் தமிழில் நினைக்கும் மாற்றவே முடியாத சட்டகம் அங்கே இல்லை. கதையைப் பொறுத்து அங்கே வணிகப்படங்களுக்குப் புதிய புதிய சட்டகங்கள் மாட்டப்படுகின்றன. எனவே அவைகளில் ஃபஹத் போன்ற நல்ல நடிகர்கள் நடித்துத் தங்களை நிரூபிக்க முடிகிறது. தமிழிலுமே அட்டக்கத்தி, குற்றம் கடிதல், விசாரணை, காக்காமுட்டை, ஆரண்யகாண்டம் என்று எப்போதாவது இப்படிப்பட்ட படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் தமிழில் முதன்மையான நடிகர்கள் என்று கருதப்படும் யாராவது இப்படிப்பட்ட படங்களில் நடித்துள்ளார்களா? ஏன் இல்லை என்று யோசித்துப் பாருங்கள். மலையாளத்தில், சூப்பர்ஸ்டார்களாகக் கருதப்படும் மம்மூட்டியும் மோகன்லாலுமே அற்புதமான பல படங்களில் நடித்துள்ளவர்கள்தான். ஆனால் தமிழில் ‘மாஸ்’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பல படங்களின் ஜீவனையும் குலைத்து, நல்ல படங்களை விரும்புபவர்களைத் திரையரங்கத்தின் பக்கமே வரவிடாமல் துரத்தித் துரத்தி அடிக்கின்றனர்.

    அடுத்ததாக, மலையாளப் படங்களைப் பற்றி நான் சொல்ல நினைப்பது, அவற்றின் கதையம்சம். சற்றே யோசித்துப் பார்க்கலாம். ஒரு காலத்தில், கல்யாணப்பரிசு, நெஞ்சிருக்கும் வரை, அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், புன்னகை மன்னன், கிழக்குச் சீமையிலே, சேது, பிதாமகன், அன்பே சிவம், மகாநதி என்றெல்லாம் நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது தமிழில் வரும் படங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். காட்சிகளாலேயே ஓடக்கூடிய படங்களாகவே அவை இருக்கின்றன. கடைசியாகக் கதையம்சத்தால் ஓடிய தமிழ்ப்படம் எது என்று உங்களால் சொல்லமுடியுமா? எப்போதாவது பருத்தி வீரன், சுப்ரமண்யபுரம் என்று ஏதாவது ஒரு படம் வரும். ஆனால், நான் சொல்ல வருவது, நாம் கதைகளை விட்டுவிட்டு, திரைக்கதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தால் ஒரு படம் ஓடக்கூடும்தான். ஆனால் அந்த விறுவிறுப்பான திரைக்கதைக்காக இவர்கள் வைக்கும் காட்சிகள் எல்லாமே ஒரேபோன்றவையாக அல்லவா இருக்கின்றன? எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல், கட்டமைப்பை மட்டும் நன்றாக முன்னிறுத்தினால் போதுமா?

    இதிலும் மலையாளப் படங்கள் முன்னோடிகளாகவே விளங்குகின்றன. நான் மேலே பட்டியல் போட்டுள்ள படங்கள் மட்டும் அல்லாமல், இன்னும் பல மலையாளப் படங்களையும் பாருங்கள். தற்காலத்தில் வெளியாகிப் புகழடைந்துள்ள படங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் கதை என்பது ஒரு இன்றியமையாத அம்சம் என்பது புரியும். அவர்கள் கதையைத்தான் முதலில் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தக் கதையை, மக்களின் மனதில் புகுத்தும் வண்ணம் படம் எடுக்கிறார்கள். அங்கும் விறுவிறுப்பான படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றுக்குள்ளும் மனதைத் தொடும் கதையை அவர்கள் எப்படியாவது வைத்துவிடுகிறார்கள். சப்தமஸ்ரீ தஸ்கரஹா, செகண்ட்ஸ், மும்பை போலீஸ், முன்னறியிப்பு, திருஷ்யம், மெமரீஸ், 7த் டே, ஒப்பம் முதலிய படங்களில் இல்லாத கதையா? மலையாளத்தில் முதலில் கதை. பின்னர்தான் திரைக்கதை. தமிழில், முதலில் வாவ் சீன்ஸ் வேண்டும் என்றேதான் அனைவரும் கேட்கின்றனர். அவற்றை வைத்துத் திரைக்கதையை உருவக்கி வெளியிட்டும் விடுகின்றனர். இதனால்தான் தமிழில் வெளியாகும் பல படங்கள் நம் நினைவை விட்டே சென்றுவிடுகின்றன என்று கருதுகிறேன்.

    இன்னும் பல பக்கங்கள் மலையாளப் புது அலையைப் பற்றி எழுதமுடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் சுருக்கமாக எழுதிய விஷயங்கள்தான் முதன்மையாக நான் சொல்ல நினைத்தவை. தமிழ்த் திரைப்படங்களில் வேலை செயும் ஒரு திரைக்கதை கன்சல்டண்ட்டாக, ஒரு திரைக்கதை எழுத்தாளனாக என் மனதில் தோன்றிய ஆற்றாமையையே இங்கே பதிவு செய்திருக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் உருவாகவேண்டும்; அவற்றின் மூலம் நல்ல நடிகர்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை. அதனை நோக்கிய பயணத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறேன். இக்கட்டுரையைப் படிக்கும் நண்பர்கள், தயவுசெய்து இதில் இருக்கும் விஷயங்களை எண்ணிப் பார்த்தால், அதுவேகூடத் தமிழில் அட்டகாசமான பல படங்கள் வருவதற்கு ஒரு ஆரம்ப விதையாக இருக்கலாம்.

    ]]>
    http://karundhel.com/the-new-wave-malayalam-films/feed/ 0
    Vikram Vedha (2017) – Tamil http://karundhel.com/vikram-vedha-2017-tamil/ http://karundhel.com/vikram-vedha-2017-tamil/#comments Mon, 24 Jul 2017 12:38:47 +0000 http://karundhel.com/?p=5967 விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு, ஃபேஸ்புக்கில் இரண்டு ஸ்டேட்டஸ்கள் போட்டிருந்தேன். ஆனால் இவற்றில் கதை பற்றி எதுவும் கூறவில்லை. இந்தக் கட்டுரையில்தான் கதையையும் சேர்த்துக் கவனிக்கப்போகிறோம். Spoiler Alert. 

    1. முதல் ஸ்டேட்டஸ்

    2. இரண்டாம் ஸ்டேட்டஸ்

    இனி, படத்தைப் பற்றி விரிவாகக் கவனிக்கலாம்.

    முதலில், படத்தின் நல்ல அம்சங்களைப் பார்க்கலாம்.

    1. கதையின் பின்னணி

    முதலாவதாக, படத்தின் நல்ல அம்சம், ஒரு பழைய கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு நவீனகாலப் பூச்சைப் பூசியிருப்பதுதான். விக்கிரமாதித்தன் – வேதாளம் என்பது என் பள்ளிக்காலத்தில் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அம்புலிமாமா போன்ற சிறுவர் பத்திரிக்கைகள். கூடவே, விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெரிய புத்தகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸால் அருமையான முறையில் அப்போது வெளியிடவும் பட்டிருந்தது. நான் அந்தப் புத்தகத்தைப் பள்ளி நாட்களில் படித்தும் இருக்கிறேன். அதேபோல், அப்போது ராமானந்த் சாகர் வழங்கிய ‘விக்ரம் ஔர் வேதாள்’ என்ற தொலைக்காட்சி சீரியலும் மிகப்பிரபலம். அதில், பின்னாட்களில் ராமனாக நடித்த அருண் கோயல் விக்கிரமாதித்தனாக நடித்தார்.

    சில வருடங்களுக்கு முன்னர், ‘கரிகாலன்’ என்ற திரைப்படம் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இயக்குநர் எல்.ஐ. கண்ணன் இயக்கிக்கொண்டிருந்த படம் இது. கரிகாலனின் கதையை நல்ல சிஜியோடு அளிக்க முயன்ற படம். அதேபோல், ஆங்கிலத்தில் Sherlock என்ற பிபிசி சீரியல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாகசங்கள் புரிந்த ஷெர்லக் ஹோம்ஸை, இருபத்தோராம் நூற்றாண்டில் நம்மிடையே உலவவிட்டது. இப்படி, பழைய விக்கிரமாதித்தன் கதையைத் தற்போதைய உலகுக்கு எடுத்துவந்தது உண்மையிலேயே நல்ல முயற்சிதான் (அதே சமயம், இப்படி எடுக்க நினைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மணி ரத்னத்தின் ‘ராவணன்’ படமும் நினைவுக்கு வருகிறது.  அவரது ‘தளபதி’, முற்றிலும் வேறுபட்ட அட்டகாசமான முயற்சி).

    வேதாளத்தைக் கைப்பற்ற நினைக்கும் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டு, வேதாளம் பல கதைகளைச் சொல்கிறது. சரியான விடையளித்தால் அவனை விட்டுவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிடும்.  பின்னர் மறுபடியும் போய் வேதாளத்தைக் கைப்பற்றுவான். பின்னர் மறுபடியும்… இப்படியேயே அவனது வாழ்க்கைக்குத் தேவையான பல தத்துவங்களை வேதாளம் சொல்லிக்கொடுக்கும். விக்கிரமாதித்தன் அந்தத் தத்துவங்களைத் தெரிந்துகொண்டு இன்னும் நல்ல மனிதனாக, நல்லரசனாக வேதாளத்தின் துணையோடு மாறுவான்.

    இதே கதையைத்தான் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்பக் கொடுத்திருக்கிறார்கள் புஷ்கரும் காயத்ரியும். படத்தில் வேதாளம் மூன்று கதைகளைச் சொல்கிறது. அக்கதைகளின் முடிவில் என்ன நடக்கும் என்று விக்ரமைக் கேட்கிறது. அப்போது விக்ரமுக்கு ஏற்படும் புரிதல்கள் மூலமாகக் கதை நகர்கிறது என்பது அவசியம் ஒரு சுவாரஸ்யம் ஊட்டக்கூடிய கட்டமைப்புதான்.

    2. விக்ரம்

    விக்ரமாக நடித்துள்ள மாதவன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான போலீஸ் அதிகாரி.  சுற்றி நடக்கும் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் எதுவும் கவனிக்காமல், எடுத்துக்கொண்ட வேலையை மட்டுமே தீவிரமாகக் கவனிக்கும் கதாபாத்திரம்.இறந்துபோன தந்தையைப் போலவே முரட்டுத்தனமான நேர்மையுடைய நபர். மனைவியைக் காதலிக்கும் அதிகாரி. இயல்பாகவே ஒரு நேர்மையாளன், தன்னை இஷ்டத்துக்குப் பணிபுரிய விடாமல் தடுக்கும் மேலதிகாரிகளின் மீதும், இப்படிப்பட்ட சூழலை உருவாக்கிய சமூகத்தின் மீதும் ஓரளவு கோபத்துடனும் அலட்சியத்துடனும்தான் இருப்பான். அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் மாதவன். அந்தக் கதாபாத்திரம் வேலையில் காட்டக்கூடிய புத்திசாலித்தனமும், நிஜவாழ்க்கையில் பிற விஷயங்களில் மெத்தனமாக இருப்பதையும் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் இதனாலேயே ஒரு பிரச்னையும் கதையில் துருத்திக்கொண்டு தெரிகிறது. அதை விரிவாகப் பின்னால் கவனிக்கலாம்.

    3. கதைக்குள் கதைகள்

    விக்கிரமாதித்தன் கதையில், கதைக்குள் கதை என்ற கதைசொல்லல் முறை மிகவும் பிரபலம். படித்தால் உங்களுக்கும் தெரியும். போஜராஜனுக்குக் காட்டில் சிம்மாசனம் ஒன்று கிடைக்க, அது விக்கிரமாதித்தன் உபயோகப்படுத்திய சிம்மாசனம் என்று உணர்கிறான். பெருமையுடன் அதில் அமரப் போகையில், அதன் ஒவ்வொரு படியிலும் இருக்கும் பதுமைகள், பல கதைகளை அவனுக்குச் சொல்கின்றன. அவன் கருத்தையும் கேட்கின்றன. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி வீதம் 32 நாட்களில் 32 படிகளை ஏறி அந்தச் சிம்மாசனத்தில் அமர்கிறான் போஜன். அப்படி ஏறுகையில் அதில் ஒரு பதுமை சொல்வதுதான் விக்கிரமாதித்தனின் கதை.

    அதேபோல், படத்திலும், கதைக்குள் கதையாக மூன்று கதைகள் வருகின்றன. ஒவ்வொரு கதையையும் வேதா என்ற கேங்ஸ்டர், போலீஸ் அதிகாரி விக்ரமுக்குச் சொல்கிறான். அதில் அவனது கருத்தையும் கேட்கிறான். இது இயல்பாகவே நான்-லீனியர் வடிவம். அதனை எடுத்துக்கொண்டு, கதையையும் நான் – லீனியராக வடிவமைத்திருப்பது நன்றாக இருந்தது. அதாவது, அந்தத் திரைக்கதைக் கட்டமைப்பு. இயல்பாகவே க்வெண்டின் டாரண்டினோ ஸ்டைலில் கதைக்குள் மூன்று அத்தியாயங்களை இப்படித் திரைக்கதையில் அமைக்க, புஷ்கர் காயத்ரியால் முடிந்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.

    4. இசை

    படத்தின் இசை, எனக்குப் பிடித்திருந்தது. ‘ஆடு பாம்பே’ மெட்டில் அமைக்கப்பட்ட ‘கறுப்பு வெள்ளை’ பாடல் படம் முழுதும் வருகிறது. அதேபோல், அதன் மாறுபட்ட வடிவமான ‘ஒரு கதை சொல்லட்டா’, ‘டசக்கு டசக்கு’ ஆகிய பாடல்களும் நன்றாக இருந்தன. திடீரென்று இடம்பெறும் மெக்ஸிகன் கிடார், அவ்வப்போது இடம்பெறும் இசைத்துணுக்குகள் என்று இசையில் எந்தப் பிரச்னையும் இல்லை. படம் முழுதும் அதன் இசையை ரசித்தேன். இசையமைத்திருக்கும் ஸாம் சி.எஸ் நன்றாக அவரது வேலையைச் செய்திருக்கிறார்.

    5. வசனங்கள்

    படத்தில் கூடுதல் வசனங்களை மணிகண்டன் எழுதியிருக்கிறார். படத்தில் சந்தானம் என்ற போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். இவரது வசனங்களைப் படத்தில் இனம்காண முடிந்தது. படத்தில் எங்கெல்லாம் இயல்பான வசனங்கள் வருகின்றனவோ, அதெல்லாம் மணிகண்டனின் வேலை என்பது, அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். மணிகண்டனுக்குப் பாராட்டுகள்.

    படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள் இவை. சரி. படத்தின் மைனஸ் பாயிண்ட்கள்?

    1. வேதா

    படத்தில் வேதாவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதே குழப்பமாக இருந்தது. படத்தின் துவக்கத்தில் கெத்தாக வந்து சரணடையும் கதாபாத்திரம், வெளியில் வந்ததுமே சூது கவ்வும் தாஸாக மாறிவிடுகிறது. பின்னர் ஒரு சில காட்சிகளில் காதலும் கடந்து போகும் கதிரவனாக மாறிவிடுகிறது. அதன்பின்னர் மறுபடியும் வேதாவாக மாறுகிறது. இந்தக் கதாபாத்திரம் வில்லனா அல்லது ஆண்ட்டி ஹீரோவா என்பதில் புஷ்கர் காயத்ரிக்குமே குழப்பம் இருந்திருக்கிறது என்று கணிக்கிறேன். ஜிகர்தண்டாவில் அசால்ட் சேது இரண்டாம் பாதியில் எப்படி மாறினார்? அப்படி, இதில் ஆங்காங்கே கேரக்டர் ஜம்ப் அடிக்கிறது (அதிலாவது அதற்கு நல்ல justification இருந்தது). விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை நல்லவன் என்று காட்டுவதற்காக இப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதும் நன்றாகப் புரிகிறது. இந்த ஜம்ப்தான் எனக்கு நெருடிக்கொண்டே இருந்தது. மாதவனின் கதாபாத்திரத்தில் பெரும்பாலும் எந்தப் பிரச்னையும் இல்லை (ஒரு பிரச்னை. அதைப் பின்னால் கவனிப்போம்). ஆனால் விஜய் சேதுபதி, கெத்தான வில்லனா, இல்லை காமெடிக் கதாபாத்திரமா, இல்லை மொக்கை ரவுடியா, இல்லை குணச்சித்திர வேடமா? ஆரம்பத்தில் இருந்து இப்படி மாறி மாறி, அந்தக் கதாபாத்திரத்தில் சுவாரஸ்யமே போய்விடும்படி எழுதப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் வந்த அளவு பலமான கதாபாத்திரமாகவே படம் முழுக்க இருந்திருக்கவேண்டும். அப்படி இருந்திருந்தால் (ஒரு கனமான வில்லனாக), இந்தப் படம் இன்னொரு தளத்துக்குச் சென்றிருக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என்னால் வேதாவோடு ஒன்றவே முடியவில்லை.

    அடுத்து, இந்தக் கதாபாத்திரம் பலரையும் கொன்றிருக்கிறது. அப்படியென்றால் அது வில்லன் தானே? இதே பிரச்னைதான் கபாலியில் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்துக்கும் இருந்தது. கபாலி ஒரு கடத்தல்காரன். ஆனால் அவனை காந்தியாக சித்தரிக்க முயன்றதால், அந்தக் கதாபாத்திரம் பல இடங்களில் ஜம்ப் அடித்தது. அதேதான் இங்கும்.

    2. விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி, ஒரு மாஸ் ஹீரோவாக உருமாறிவிட்டார். ஆனால், அவரது இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஆராய்ந்து பாருங்கள். வேதா என்ற வடசென்னை ரவுடியாக அவரால் நன்றாக நடிக்க முடிந்திருக்கிறதா? (வடசென்னை ரவுடி என்பதே ஒரு கொடூரமான க்ளிஷே. சென்னையைப் பற்றியே அறியாமல் இருந்தால்தான் வடசென்னை ரவுடி என்ற, அடித்துத் துவைக்கப்பட்ட அரதப் பழைய க்ளிஷேவை உபயோகப்படுத்தமுடியும். அதை விட்டுவிடுவோம்).

    சூது கவ்வுமில் விஜய் சேதுபதி நடித்தபோது, தாஸ் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தினார். அதேபோல், காதலும் கடந்து போகும் படத்திலும் கதிரவனாக அப்படியே இருந்தார். காரணம், விஜய் சேதுபதியை நன்றாக அறிந்த நலனால் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் எழுதப்பட்டிருந்தன. அதுவே, இப்போது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தர்மதுரை’, ‘இறைவி’, ’கவண்’, ‘றெக்க’, ‘ஆண்டவன் கட்டளை’, ’சேதுபதி’, ’நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களில் எப்படி நடித்திருந்தார்? நடிப்பதற்கென்று எந்தவிதமான முயற்சியும் செய்யாமல், ஜஸ்ட் லைக் தட் வசனங்களைப் பேசிவிட்டுச் செல்பவராகவே இருந்தார். ஆரம்பகால ‘பீட்ஸா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களில் இந்தப் பிரச்னை இல்லை. அதாவது, அதிலெல்லாம் உடலையும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓரளவு நடிக்கவும் செய்தார். ஆனால் அவற்றுக்குப் பிறகு, கதாபாத்திரமாக மாறி நடிக்கும் தன்மை அவரிடம் குறைந்துகொண்டே வருகிறது. உடலும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாப் படங்களிலும் ஒரேபோன்று நடித்தால் எப்படி? இந்தப் படத்தில், தாராளமாக சூது கவ்வுமில் இருந்தே நான்கைந்து சீன்களை வெட்டி வைத்திருந்தாலும் தெரிந்திருக்காது. அப்படி இருக்கிறது அவரது நடிப்பு (எனது பீட்ஸா விமர்சனத்தில், 2012ல், விஜய் சேதுபதி பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் தெரியுமா? இதோ – //விஜய் சேதுபதி, இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். ஜாலியாக நடிப்பதுபோன்ற மாயை – சசிகுமார் பாணி expressionless நடமாட்டம் உதவாது// – இந்த வரிகள்தான்).

    அவசியம் விஜய் சேதுபதி தன்னை ஒருமுறை கவனிக்கவேண்டும். இனியாவது படத்துக்குப் படம் கொஞ்சமாவது மாறுபட்டு நடிக்கவேண்டும். ஒரேபோன்ற நடிப்பு இனி உதவாது. அவரது டயலாக் மாடுலேஷன், உடல்மொழி, நடனம் எல்லாமே கடந்த நான்கைந்து வருடங்களில் துளிக்கூட மாறவில்லை. கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைப்பதால் தப்பித்து வருகிறார் (இனியும் அது நடக்காது. ஒரே போன்ற கதாபாத்திரத்தையே சூது கவ்வும், காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா என்று நடித்துக்கொண்டே இருக்கிறார்).

    3. திரைக்கதை

    படத்தின் மிகப்பெரிய பிரச்னை, இதன் திரைக்கதை. ஏன் என்று சொல்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, இதன் கட்டமைப்பு பலமானது. விக்கிரமாதித்தன் கதை – அதில் வேதாளம் கூறும் கதைகள் – அதில் விக்கிரமாதித்தன் முடிவைச் சொல்வது – அதன்மூலம் தன் வாழ்க்கையைப் பற்றியே அறிவது என்பது உண்மையில் அட்டகாசமான கட்டமைப்பு. ஆனால் அதில் வருவது என்ன என்று பார்த்தால், மூன்றுமே ஃப்ளாஷ்பேக் கதைகள். ஃப்ளாஷ்பேக்கில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் அதில் இறுதியில் வேதா கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை, பள்ளியில் படிக்கும் மாணவன் கூடச் சொல்லிவிடுவானே? அத்தனை சுலபமான கேள்விகள் அவை. கூடவே, முதல் கதையைத் தவிர, பாக்கி வரும் இரண்டு கதைகளுமே மிகவும் மெதுவானவை. தொய்வு நிறைந்தவை.

    அடுத்ததாக, படத்தில் முன்வைக்கப்படும் கதை என்ன? வேதாவின் கேங்ஸ்டர் கும்பல், அதன் நடுவே ஒரு துரோகி, அவனால் போலீஸ் அதிகாரி விக்ரமுக்கு நேரும் இழப்பு என்பதுதானே? இதுதானே ரிசர்வாயர் டாக்ஸ் காலகட்டத்தில் இருந்தே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்? இந்தக் கதை வலுவான கதை இல்லையே? இதில் என்ன புதுமை இருக்கிறது? தன்னைச்சுற்றி இருக்கும் சதிவலையை விக்ரம் உணர்கிறான் என்ற கருத்து நல்ல கருத்துதான். ஆனால் எப்படி என்று கவனித்தால், வேதாவுடன் இருக்கும் ஒரு நபர், தான் தான் கேங்ஸ்டராக ஆகியிருக்கவேண்டும் என்ற கோபத்தால் போலீசுக்குப் பணம் கொடுத்து, வேதாவின் கும்பலில் ஒவ்வொருவராகத் தீர்த்துக்கட்டுகிறான் என்பதில் சுவாரஸ்யமான விஷயமே இல்லையே? மிக எளிதில் யூகிக்கக்கூடிய விஷயமாக அல்லவா அது இருக்கிறது?

    இதை, ட்விஸ்ட் என்ற பெயரில் இறுதியில் கொண்டுவதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்னை. உண்மையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருந்தால், தமிழில் வந்திருக்கக்கூடிய சிறந்த க்ரைம் த்ரில்லர்களில் ஒன்றாக இந்தப் படம் மாறியிருக்கும். ஏனென்றால், விக்ரம் திறமையான போலீஸ்காரன். ஆனால் துவக்கத்தில் இருந்து, தன்னைச்சுற்றி இருக்கும் போலீஸ்காரர்கள் பணத்தில் திளைப்பதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறான் என்பது நம்பவே முடியவில்லை. ஒரு மொக்கை போலீஸ் என்றால் நம்பலாம்.  விக்ரமோ, ராகவன் போலத் தனது இன்ஸ்டிங்க்ட்டை உபயோகப்படுத்தும் அளவு திறமைசாலி. ஆனால் அவனுக்கு யாரைப்பற்றியும் தெரியவில்லை என்பது துளிக்கூடப் பொருந்தாமல் இடிக்கிறது. துவக்கத்தில் இருந்தே மெல்ல மெல்ல அவன் ஒவ்வொரு விஷயமாக வேதாவின் மூலமாகப் புரிந்துகொண்டு, இவர்களைப் பற்றி மெல்ல மெல்ல அறிந்து, இரு குறிப்பிட்ட இடத்தில் எல்லாமே அவனுக்குப் புரிந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக, அத்தனை உண்மைகளும் ஒரே இடத்தில் பளிச் என்று புரிவதுதான் திரைக்கதையின் பலவீனம். அதுவும் எப்படி? ஆரம்பத்தில் வந்த டயலாக்- மகனைப் பள்ளியில் எக்கச்சக்க ஃபீஸ் கட்டிச் சேர்ப்பது, தங்கைக்கு எஞ்சினியரிங் மாப்பிள்ளை – எல்லாமே ஒரே காட்சியில் வந்துவிடுகிறது. இவைகளே இயல்பில் மிகவும் வீக்கான சம்பவங்கள். அவற்றின் மூலம்தான் ஹீரோவுக்கு எல்லா உண்மைகளும் புரிகிறது என்பதை எப்படி நம்பமுடியும்?

    ஒரு நல்ல கதைதான் நல்ல திரைக்கதையாக மாறும். ஒரு சராசரிக் கதை, நல்ல திரைக்கதையாக மாறும் வாய்ப்புகள் குறைவே. அந்தப் பிரச்னைதான் இது.

    ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆடியன்ஸுக்கு எதெல்லாம் பிடித்திருக்கிறது என்பது அவர்களின் responseஇலேயே தெரிகிறது. விஜய் சேதுபதியின் எண்ட்ரி, அவர் மாதவனை அடித்துவிட்டுத் தப்பிப்பது, க்ளைமாக்ஸ் ட்விஸ்டை மாதவன் புரிந்துகொள்ளும் இடம், க்ளைமாக்ஸ் சண்டை, மற்றும் படம் முடியும் நேரத்தில் வரும் standoff. இவைகள் ஓரளவு எனக்குமே பிடித்திருந்தன. தனிப்பட்ட காட்சிகளாகப் பார்க்கும்போது. ஆனால் ஒட்டுமொத்தப் படத்தில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் இந்தக் கைதட்டல் காட்சிகளால்  மறந்துவிடவேண்டும் – படத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அது என்னால் இயலாது. உண்மையில் அட்டகாசமாக வந்திருக்கவேண்டிய கதையில், பல இடங்களைக் கோட்டை விட்டுவிட்டனர் என்றே சொல்ல நினைக்கிறேன். அதுதான் விக்ரம் வேதாவைப் பற்றிய எனது விமர்சனம்.

    ஸ்லோ மோஷன் காட்சிகளும், அதற்கேற்ற நல்ல பின்னணி இசையும், பில்டப் காட்சிகளும் எப்போதும் படத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கமுடியாது. திரைக்கதையில் அதனைச் சாதிக்கவேண்டும். திரைக்கதை வலுவாக இல்லாவிட்டால், இந்தப் பிற விஷயங்கள் படத்தைக் காப்பாற்றுவது இயலாது. ஆனால், ஒரு விஷயம் – தமிழ்நாட்டில் கட்டாயம் ‘தலைவா’ என்று அலறவைக்கும் பில்டப் காட்சிகள், ஸ்லோ மோ, பின்னணி இசை, ஸ்டார்களின் கால்ஷீட் ஆகியவையே, மெதுவான காட்சிகளை மறக்கடித்துவிட்டு ஒரு படத்தைக் காப்பாற்றப் போதுமானவைதான். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் விக்ரம் வேதா. ஆரண்ய காண்டம், சூது கவ்வும், தனி ஒருவன் போன்ற படங்களின் வரிசையில் வந்திருக்கவேண்டிய படம் – அப்படித் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால், ஒரு வெற்றிப் படமாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விடப்போகிறது. சில வாரங்களில் இப்படம் மறக்கப்பட்டுவிடக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம். அதில் எனக்கு வருத்தமே.

    ]]>
    http://karundhel.com/vikram-vedha-2017-tamil/feed/ 1
    Wonder Woman 3D: English (2017) http://karundhel.com/wonder-woman-3d-english-2017/ http://karundhel.com/wonder-woman-3d-english-2017/#respond Sat, 03 Jun 2017 16:01:04 +0000 http://karundhel.com/?p=5959 ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், பெண் இயக்குநர்கள் எத்தனை பேர் என்று யோசிக்க முடிகிறதா? தமிழின் அதே பிரச்னைதான் அங்கும். பெண் இயக்குநர்கள் மிகமிக சொற்பம். ஹாலிவுட்டின் ஒவ்வொரு பெண் இயக்குநருக்கும் மொத்தம் 24 ஆண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வேனிடி ஃபேர் எடுத்த ஒரு சர்வே தெரிவிக்கிறது. யோசித்துப் பார்த்தால், மீரா நாயர் (Mira Nair), கேதரின் பிகலோ (kathryn Bigelow), சோஃபியா காப்புலா (Sofia Coppola), குரீந்தர் சாதா (Gurinder Chadha), மார்த்தா கூலிட்ஜ் (Martha Coolidge) என்று மிகக் குறைவான இயக்குநர்களையே பட்டியல் இட முடியும். இந்தப் பட்டியலில் பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) மிகவும் முக்கியமானவர். 2003ல் வெளியாகிப் பரவலாகப் பாராட்டுகளைக் குவித்த Monster படத்தை இயக்கியவர். இப்படத்துக்காக நாயகி சார்லீஸ் தெரானுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இப்படத்தின் திரைக்கதையையுமே பேட்டி ஜென்கின்ஸேதான் எழுதியிருந்தார் என்று சொல்லியே ஆகவேண்டும். மிகுந்த திறமைசாலி.

    ஆனால், மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2003ல் வெளியான மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர், 2017ல் வெளியாகியிருக்கும் ‘வொண்டர் வுமன்’தான் அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னர் 2011ல் ஒரு tv movie இயக்கியிருக்கிறார் (Five). இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இதுவரை ஹாலிவுட்டில் எந்தப் பெண் இயக்குநரும் 100 மில்லியன் டாலர் படம் ஒன்றை இயக்கியதே இல்லை! அதேபோல் சூப்பர்ஹீரோ படம் ஒன்றையும் எந்தப் பெண்ணுமே இயக்கியது இல்லை! கூடவே, பெண் சூப்பர்ஹீரோ படம் ஒன்றை இயக்கியிருக்கும் முதல் பெண் இயக்குநரும் பேட்டி ஜென்கின்ஸ் தான்.

    ஒரு சிறிய தகவல் – பேட்டி ஜென்கின்ஸுக்கு 2011ல் ஒரு சூப்பர் ஹீரோ படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு மாதங்கள் அந்தப் ப்ராஜெக்டில் இருந்தபின்னர் அவர் தயாரிப்பு நிறுவனத்தால் நீக்கப்பட்டார். அந்தப் படம் – Thor: The Dark World. தயாரிப்பு நிறுவனம் – மார்வெல்! அதன்பின் மார்வெலின் போட்டி நிறுவனமான டிசியில் இப்போது இன்னொரு சூப்பர்ஹீரோ படம் ஒன்றை அவர் இயக்கியிருப்பது ஆச்சரியமே.

    போலவே, ஒரு மிகப்பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரமான வொண்டர் வுமன், 2017ல்தான் முதல் திரைப்படத்தைக் காண்கிறது என்பது ஆச்சரியம் இல்லையா? இதுவரை வொண்டர் வுமன் படங்களுக்கான முயற்சிகள் எப்படி நடந்தன?

    வொண்டர் வுமனுக்கான முயற்சிகள் துவங்கியது 1996ல். அப்போது அதை இயக்க முடிவானவர் இவான் ரெய்ட்மேன். 1971ல் இருந்து இன்றுவரை படம் எடுத்துக்கொண்டிருப்பவர். பிரபல இயக்குநர். ஆனால் அது நடக்கவில்லை. சில வருடங்கள் இழுத்துக்கொண்டு படுத்துவிட்டது. பின்னர் 2005ல், இன்னொரு தற்போதைய மார்வெல் பிரபல இயக்குநர் உள்ளே நுழைந்தார். ஜாஸ் வீடன்! அவெஞ்சர்ஸ் இரண்டு பாகங்களையும் இயக்கியவர். ஆனால் அவரும் சில வருடங்கள் முயன்று, பின்னர் திரைக்கதையைப் பாதியில் விட்டுவிட்டு வெளியேறிவிட, அந்தச் சமயத்தில் பேட்டி ஜென்கின்ஸ் எடுத்திருந்த மான்ஸ்டர் வேறு நல்ல பெயர் வாங்கியிருந்தது வார்னர் ப்ரதர்ஸுக்குத் தெரியவர, அப்போதே பேட்டியை வொண்டர் வுமன் படத்தை இயக்கச் சொல்லி வார்னர் அணுகியது. உண்மையில் ஜாஸ் வீடன் எழுதும் திரைக்கதையை பேட்டி இயக்குவதாக ஏற்பாடு. ஆனால் ஜாஸ் வெளியேறியதால் பேட்டிக்கும் வாய்ப்பு பறிபோனது.

    அதன்பின்னர், ஓரிரு முயற்சிகளுக்குப் பின்னர், மிஷெல் மெக்லாரன் என்ற இன்னொரு பெண் இயக்குநர் அழைக்கப்பட்டார் (Breaking Bad & Walking Dead சீரீஸில் சில எபிஸோட்கள் இயக்கி, எம்மி விருது வென்றவர்). ஆனால் ஆறு மாதங்களில் மிஷேலும் வெளியேறினார். பின்னர்தான் ஸ்டுடியோ மறுபடியும் பேட்டி ஜென்கின்ஸையே அழைத்தது. இம்முறை, ஸாக் ஸ்னெய்டர் உள்ளே நுழைந்து, கதையை டெவலப் செய்தார். அவருடன் Geoff Johns, Jason Fucks, Allan Heinberg ஆகியோரும் இணைந்து கதையை எழுதினர். பின்னர் அந்தக் கதையில் இருந்து ஒரு திரைக்கதையை அலன் ஹெயின்பெர்க் எழுத, அந்தப் படம்தான் தற்போதைய வொண்டர் வுமனாக மாறியது.

    பேட்டி ஜென்கின்ஸ் ஒரு நூறு மில்லியன் டாலர் சூப்பர்ஹீரோ படத்தை இயக்கியதைத் தொடர்ந்து, சோனியும் மார்வெலும் இரண்டு பெண் இயக்குநர்களைத் தேர்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மார்வெலின் Captain Marvel படம், அன்னா போடெனால் இயக்கப்படப்போகிறது (அவருடன் இணை இயக்கம் ரையான் ஃப்ளெக்). சோனி, அதன் Silver & Black படத்தை இயக்க, ஜினா – ப்ரின்ஸ் பைத்வுட்டிடம் கோரியிருக்கிறது. எனவே, இனி வரும் காலத்தில் பெண் இயக்குநர்கள் பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து இயக்கவே போகிறார்கள். பேட்டி ஜென்கின்ஸ் அடுத்த வொண்டர் வுமன் படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

    சரி. படம் எப்படி? Rotten Tomatoes தளத்தில் தற்போதைய ஸ்கோர் 94%. அதுவும் விமர்சகர்களின் ஸ்கோர் இது. பொதுவாக அந்தத் தளம் மிக மிக உறுதியான, கறாரான ரேட்டிங்கையே கொடுக்கும். அதுவும் விமர்சகர்கள் இணைந்து கொடுக்கும் ரேட்டிங்தான் (IMDB எல்லாம் டுபாக்கூர் ஆகி நீண்ட காலம் ஆகிறது. அதைப் பார்ப்பதையே நான் நிறுத்தியாகிவிட்டது). ராட்டன் டொமாட்டோஸில் இவ்வளவு ரேட்டிங் வாங்கிய சூப்பர்ஹீரோ படங்கள் மிக மிக சொற்பம்.

    என்னைப்பொறுத்தவரை, வொண்டர் வுமனும் இன்னொரு சூப்பர்ஹீரோ படமே. வழக்கமான சூப்பர்ஹீரோ படங்களில் என்னென்ன இருக்குமோ அதெல்லாமே வொண்டர் வுமனிலும் இருக்கின்றன. ஆனால் வொண்டர் வுமனின் ப்ளஸ் பாயிண்ட், அதன் பெண் ஹீரோ. இதை நான் சொல்லக் காரணம் என்னவென்றால், டயானா ப்ரின்ஸ் அனுபவிக்கும் உணர்ச்சிகள் கதைக்குத் தனி ஏற்றம் கொடுக்கின்றன. துவக்கத்தில் குட்டிப்பெண்ணாக இருந்து, போர்க்கலைகளைக் கற்று, பின்னர் அந்தத் தீவிலேயே மிகச்சிறந்த warriorஆக அவள் தேர்வடைந்து, தீவில் இருந்து வெளியேறி, உலகப்போர் நடக்கும் இடத்துக்குச் சென்று நிகழ்த்தும் சாகசங்கள் முழுதுமே உணர்ச்சிகளோடு கலந்ததாக இருக்கிறது.

    இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு சூப்பர்ஹீரோ படத்தை எடுப்பதால் எந்த விஷயமும் இங்கே compromise ஆகவே இல்லை. இதுதான் வொண்டர் வுமனுக்கும் பாஹுபலிக்கும் வித்தியாசம். பாஹுபலியில் பல்வேறு டுபாக்கூர்கள் இருந்தன. ஆனால் வொண்டர் வுமனில் அவை இல்லை. காரணம், எடுத்துக்கொண்ட கதைக்கு ஒவ்வொரு காட்சியிலும் நியாயம் வழங்குகிறது வொண்டர் வுமன். ஆனால் பாஹுபலி, ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்கியது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும்.

    வொண்டர் வுமன் என்ற டயானா ப்ரின்ஸ் ஒரு தேவதை. ஸ்யூஸுக்கும் (Zeus) இவளுக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. களிமண்ணால் ஆன உருவத்த்துக்கு உயிர் கொடுத்துக் குட்டிப்பெண்ணாக ஆக்கியது ஸ்யூஸ். அதைத தவிரவும் இன்னும் சில தொடர்புகளும் உண்டு. அதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். எனவே, இவளிடம் சில விசேட சக்திகளும் உண்டு. அவற்றை டயானா உபயோகிப்பது கச்சிதமாக அவளது பிறப்போடு பொருந்துகிறது. எனவே படத்தை ஒன்றிப்போய்ப் பார்க்கவும் முடிகிறது. இது பாஹுபலியில் இல்லை.

    ஆனால் ஒரு குறை என்னவென்றால், டயானா, அவளது தீவில் இருந்து வெளியேறுவது வரை, படத்தில் கதை இருந்தது. அதன்பின் கதை மறைந்துபோய், காட்சிகளினால் மட்டுமே திரைக்கதை நகர்கிறது. எனவே, அக்காட்சிகளில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரிந்தே இருக்கிறது. இதனால்தான் படத்தின் இரண்டாம் பாதி, ஏனைய சூப்பர்ஹீரோ படங்கள் போலவே இருந்தது. அவற்றில் என்னென்ன நடக்குமோ அதெல்லாமே இதிலும் நடக்கிறது.

    இருந்தாலும், படத்தின் சுவாரஸ்யம், நான் சொன்னபடி இதன் உணர்ச்சிகளில் இருக்கிறது. டயானாவின் காதலன், அவன் செய்யும் வேலைகள், அவனது mission, அவனுடன் டயானா சிறுகச்சிறுக நெருங்குவது என்று அந்த எபிஸோட் நன்றாக இருக்கிறது.

    அதேபோல், படத்தில் சொல்லப்படும் செய்தி கட்டாயம் தற்போதைய உலகுக்குத் தேவை. மனிதர்களை விட சக்திவாய்ந்த ஒரு தேவதையின் பார்வையில் உலகம் எப்படி அவளுக்குள் evolve ஆகிறது என்பது இதில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், போர்களின் அழிவு, அந்த அழிவுகளில் இருந்து மனிதகுலம் காக்கப்படவேண்டும் என்றால் என்ன தேவை என்பதெல்லாம் டயானாவின் வாயிலாக நமக்குச் சொல்லப்படுகிறது. இதனால், டயானா என்ற கதாபாத்திரத்தின் இயல்பு, அவளது நோக்கம் எல்லாமே தெளிவாக விளக்கப்பட்டு, நமது மனதில் இடம்பெற்றுவிடுகிறது. இதுதான் ஒரு பெண் சூப்பர்ஹீரோவின் ப்ளஸ் பாயிண்ட். அது இப்படத்தில் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது.

    உண்மையைச் சொல்லப்போனால், டயானாவாக நடித்திருக்கும் கேல் கடாட்டுக்காக இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. கேல் கடாட்டாக ஒருவேளை ஏதாவது மொக்கை ஹீரோயின் நடித்திருந்தால்கூட இப்படம் கட்டாயம் ஆடியன்ஸுக்குப் பிடித்தேதான் இருந்திருக்கும். காரணம் அந்தக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம். டயானாவின் கதாபாத்திரமும், படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் உணர்வுபூர்வமான தருணங்களுமேதான் இப்படத்தை நான் பார்க்கக் காரணம்.

    இப்படம் DCயின் பயணத்தில் ஒரு அட்டகாசமான மைல்கல். கட்டாயம் உலகெங்கும் இப்படம் வெற்றிபெறப்போகிறது. டிசியின் சூப்பர்ஹீரோ பயணத்தில் இதற்கு முன்னர் வெளியான Batman Vs Superman படமும், Suicide Squad படமும் மிகவும் சராசரிப் படங்களே. ஆனால் இப்படம் அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு, இன்னும் பல வருடங்கள் டிசியின் பெயரைப் பறைசாற்றப்போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதேபோல், இந்த வருட இறுதியில் வரப்போகும் Justice League படமும் கட்டாயம் சிறப்பாக இருக்கும் என்றும் கருதுகிறேன் (காரணங்கள் பல உண்டு. அதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்). எனவே, மார்வெல் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சூப்பர்ஹீரோ உலகில், முதன்முறையாக டிசி ஒரு அணுகுண்டை வொண்டர் விமன் மூலமாக இறக்கியிருக்கிறது. அந்தக் குண்டு வெடிக்கத் துவங்கியாகிவிட்டது. இனி உலகம் முழுதும் டயானா ப்ரின்ஸின் ஆதிக்கம் இன்னும் சில வாரங்கள் கட்டாயம் இருக்கும்.

    பி.கு – எனக்கு இதுவரை மிகப்பிடித்த சூப்பர்ஹீரோ தீமாக வொண்டர் வுமனின் தீம் இசை மாறி ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த இசையை Tina Guoவின் கைவண்ணத்தில் இங்கே காணலாம்.

    இது வொண்டர் வுமனின் ட்ரெய்லர். Extended.

    ]]>
    http://karundhel.com/wonder-woman-3d-english-2017/feed/ 0
    குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம் http://karundhel.com/so-called-symbolism-semiotics-kuriyeedu-farce-in-tamil-films-an-analysis/ http://karundhel.com/so-called-symbolism-semiotics-kuriyeedu-farce-in-tamil-films-an-analysis/#comments Fri, 26 May 2017 06:25:01 +0000 http://karundhel.com/?p=5950 நான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வழக்கம்.

    உதாரணமாக, புரட்சி என்ற அருமையான வார்த்தையை நாம் ‘புர்ச்சி’யாக மாற்றிவிட்டோம். சினிமாவில் நாலு புர்ச்சி வசனங்கள் பேசி நடித்தால் புரட்சித் தலைவர் என்று பட்டம். அதுவே அந்தப் புரட்சித் தலைவருடன் நடித்தாலே போதுமானது – புரட்சித் தலைவி பட்டத்தை எடுத்து வழங்கிவிடுவோம். இதுகூடப் பரவாயில்லை. இங்லீஷ் மொழியின்மேல் தமிழர்களாகிய நமக்கு இருக்கும் வெறி கட்டுக்கடங்காதது. பின்னே? ஒரு தமிழ்த் தலைவர் இங்லீஷில் நன்றாகப் பேச, எழுதத் தொடங்கிவிட்டாலேயே பெர்நாட்ஷாவை வம்புக்கு இழுத்து, வம்படியாக ‘தென்னாட்டு பெர்நாட்ஷா’ என்று பட்டம் கொடுத்து விடுவோம். இதுபோல் தளபதி, புரட்சி தளபதி, புரட்சித் தமிழன், இளைய தளபதி என்று இந்தப் புரட்சி வாங்கும் அடி கொஞ்சநஞ்சம் அல்ல. இதைப் பற்றிச் சாரு விரிவாகவே எழுதியிருக்கிறார்.

    இதேதான் குறியீடு என்ற விஷயத்துக்கும் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.

    திரைப்படங்களில் குறியீடு என்றால் என்ன?

    ஏதோ ஒரு மறைபொருளான கருத்தை, வெளிப்படையான ஒரு சம்பவத்தின் மீதோ காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள்/பொருட்கள் மீதோ சுமத்திக் காட்டுவதே குறியீடு. இதில் என்ன முக்கியம் என்றால், ‘இதோ பாருங்கள் குறியீடு.. இதோ இங்கே குறியீடு வைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் இயக்குநர் கூவக்கூடாது. அதாவது, எதையாவது பார்த்தவுடனேயே வெளிப்படையாகக் குறியீடு என்பது தெரிந்துவிட்டது என்றால் அது குறியீடே அல்ல என்று பொருள்.

    உதாரணமாக, பழங்கால, சங்ககாலத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் கூட, முத்தக் காட்சி என்றதுமே ஹீரோ & ஹீரோயின்கள் டகால் என்று குனிந்துகொள்ள, இரண்டு அசிஸ்டெண்ட்கள் கேமராவுக்கு வெளியே தயாராகக் காத்திருந்து, நீட்டும் இரண்டு பெரிய பூக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். முத்தத்தைப் பூக்கள் ஒன்று சேர்வதாகக் காட்டுகிறார்களாம். இதுதான் குறியீடு என்று பலரும் இன்றும் நம்புகிறார்கள் (!!!???). அஸிஸ்டெண்டுக்குக் கற்பனை வளம் அதிகமாக இருந்தால், அந்த இரண்டு பூக்களும் கண்டபடி பின்னிப் பிணைந்து கில்மா செய்வதும் உண்டு (!!!!???). அப்படியென்றால், ஹீரோவும் ஹீரோயினும் ‘பெரிய’ வேலை செய்கிறார்கள் என்று அர்த்தமாம்.

    இது அல்ல குறியீடு. இரண்டு பேரும் குனிந்தவுடனேயே, ரசிகனுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அங்கே பூக்களே தேவையில்லை. பூக்கள் என்பது ரசிகனை அண்டர் எஸ்டிமேட் செய்யும் வேலை.

    குறியீடு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘சிடிஸன் கேன்’ படத்தில், ‘ரோஸ்பட்’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே கேன் இறந்துபோகிறார். அது என்ன என்று படம் முழுக்க ஒருவன் தேடுகிறான். இறுதியில்தான் தெரிகிறது – அது அவர் சிறுவயதில் வைத்திருந்த ஒரு Sled – பனியில் சறுக்கும் சாதனம். அப்படியென்றால் என்ன? மரணப்படுக்கையில் அந்த sledஐ அவர் மிஸ் செய்கிறார் என்றா அர்த்தம்? அது கிடைத்தால் ஜிங் என்று படுக்கையில் இருந்து குதித்துப் பனியில் சறுக்கித் துள்ளி விளையாட ஆரம்பித்துவிடுவாரா?

    இல்லை. அந்த ஸ்லெட் என்பது அவர் முற்றிலுமாக இழந்த அவரது இளமைப்பருவத்தையே குறிக்கிறது. மரணப்படுக்கையில் இதை நினைவுகூரும் கேன், ‘என்னுடைய அருமையான இளமையை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டேனே’ என்று ஆற்றாமையால் வருந்தியே இறக்கிறார்.

    இதுதான் குறியீடு. ஒரு குறியீடு இப்படித்தான் மறைபொருளாகப் படம் முழுக்க விரவியிருக்கவேண்டும். இப்படி இருந்தால்தான், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை underestimate செய்யாமல், அவர்களை மதித்து, ஒரு இயக்குநர் அவர்களையும் தனது ஆட்டத்தில் விளையாட அழைக்கிறார் என்று அர்த்தம்.

    சிடிஸன் கேன் எடுக்கப்பட்ட வருடம் – 1941 என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் இங்கே மிகவும் முக்கியம்.

    ஆக, 1941இலேயே, ஒரு இயக்குநருக்கு இப்படிப்பட்ட குறியீடுகள் பற்றிய முழுமையான புரிதல் இருந்திருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது? நாம் இந்தியா முழுக்க, நமது புராணங்களில் இருந்து பக்திக் கதைகளை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த காலம். இதுகூடப் பரவாயில்லை. அதற்கும் பல ஆண்டுகள் முன்னரே, 1925இலேயே செர்கய் ஐஸன்ஸ்டீன் என்ற மேதை, ‘பேட்டில்ஷிப் போடம்கின்’ என்ற படத்தை ரஷ்யாவில் இயக்கிவிட்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும், அந்த நாட்டின் மண் சார்ந்த படங்கள்தான் ஆரம்பகாலத்தில் எடுக்கப்பட்டிருக்கும். யுனைடட் ஸ்டேட்ஸில் கூடத் துவக்ககாலத்தில் பல்வேறு genreகள் இப்படி முயற்சிசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் விடாப்பிடியாகப் புராணங்களையே நாம் பலவருடகாலம் பிடித்துத் தொங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். அப்படியே ஹாலிவுட்டிலிருந்து கவலையே படாமல் காப்பிகளும் துவக்ககாலத்திலேயே அடித்துத் தள்ளியிருக்கிறோம். ஆனால் இவை அல்ல நான் சொல்ல வருவது.

    எந்தக் குறியீடுமே, இயக்குநர் வலிந்து திணிப்பதாக இருக்கக்கூடாது. அதுதான் முக்கியம். அப்படித் திணித்தால், அது ‘குறி ஈடு’ ஆகிவிடும். அதாவது, வெளிநாட்டில் புரட்சி என்றால் என்ன? அதுவே தமிழ்நாட்டில் அதற்கு அர்த்தம் என்ன என்று பார்த்தோம் அல்லவா? அப்படிப்பட்ட பரிகாசத்துக்கு உரிய வார்த்தை ஆகிவிடும்.

    இது ஒரு புறம் என்றால், ஒன்றுமே இல்லாத ஒரு காட்சியில்கூட, ரசிகர்களுக்கு அந்த இயக்குநரைப் பிடித்துவிட்டால், அவர்களே உருவாக்கும் குறியீடுகள் பற்றிப் பல பக்கங்கள் எழுதலாம். பரத்வாஜ் ரங்கன் என்ற மணி ரத்ன ஆழ்வாரின் பக்தர், இப்படி மணி ரத்னத்திடமே ஓயாமல் பல குறி ஈடுகளைப் பற்றிக் கேட்க, ‘நான் சும்மா வைத்தவை அந்தக் காட்சிகள்.. அவற்றில் குறி யீடும் இல்லை ஒரு மண்ணும் இல்லை’ என்று மணி ரத்னம் இந்த பக்தரை curtஆக வெட்டிவிடுவதை Conversations with Mani Ratnam புத்தகத்தில் காணலாம். அந்த மட்டில் மணி ரத்னத்தின் நேர்மையை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

    தமிழில் ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டும் இந்த ‘குறி ஈட்டுக் குவியல்’ பட்டம் எப்போதுபார்த்தாலும் ரசிகர்களால் வெறித்தனமாகக் கொடுக்கப்படுவதைக் காணலாம். மிஷ்கின் ஒரு உதாரணம். அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பா. இரஞ்சித். இவர்களின் எந்தக் காட்சியிலும்- ஏன் போஸ்டர்களில் கூட – பல்வேறு குறியீடுகளை ரசிகர்களாகக் கண்டுபிடித்து ஆர்கசம் எய்துவது சமீபகாலங்களில் நடந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக, பிசாசு படத்தில் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு ஒரு அம்மணி ஒரே ஷாட்டில் கொடூரமாக முறைத்துக்கொண்டு நிற்பார். அந்த அம்மணி பற்றி இணையமெங்கும் பல கருத்துகள் கொட்டப்பட்டன. அவற்றையெல்லாம் படித்தால், தன்னை ஒரு செர்கய் ஐஸன்ஸ்டைன் என்றே மிஷ்கின் நம்ப ஆரம்பித்துவிடலாம். அப்படிப்பட்ட கருத்துகள் அவை.

    நேற்று வெளியான ‘காலா’ போஸ்டர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறி ஈடுகளின் எண்ணிக்கை இதுவரை 132438756321. இன்னும் சில நாட்களில், இந்த எண் infinity கூட ஆகலாம். ரஜினி அமர்ந்திருக்கும் வண்டியின் எண், அம்பேத்கர் இறந்த வருடம் என்று துவங்கி, அதில் வரும் நாய், ரஜினியின் தாடி வெள்ளையாக இருப்பது, மீசை கறுப்பாக இருப்பது, காலா என்ற பெயர்க்காரணம், ஸ்தல புராணம், தண்டவாளம், அதில் இருக்கும் கட்டைகளின் எண்ணிக்கை, மனிதர்கள் நடப்பது என்று துவங்கி, இரஞ்சித்தை ஒரு தேவதூதன் ஆக்கும் வேலை இணையம் முழுக்கவே பயங்கரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரஞ்சித் இயல்பான மனிதர் என்பதால் இவற்றைப் படித்து சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்.

    இவற்றையெல்லாம் குறியீடு என்று எப்படி ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பதே புதிராக இருக்கிறது. அம்பேத்கர் இறந்த வருடம் பற்றி அம்பேத்கரைத் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது எப்படிக் குறியீடு ஆகும்? அதன்மூலம் சொல்லவரும் விஷயமல்லவா குறியீடு? வெறுமனே ஒரு எண்ணை ஒளித்துவைத்துவிட்டால்  அது குறியீடு ஆகிவிடுமா?? இதேபோல், ‘நீலம்’ என்ற அமைப்பு இரஞ்சித்தினுடையது. அது மிகவும் வெளிப்படையான கருத்துதானே? அது எப்படிக் குறியீடு ஆகும்? இரஞ்சித் வெளிப்படையாகத்தான் தனது கருத்துகளை எடுத்துவைக்கிறார். இவையெல்லாம் ரசிகர்களால் மிகமிக அதிகமான பில்டப் கொடுக்கப்பட்டு அவர்களைப் பொறுத்தவரை குறியீடுகளாக மாறி, இரஞ்சித்தைக் கடவுள் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டு இருக்கிறது என்றுதான் இதை அவதானிக்க இயலும்.

    Symbolism மற்றும் Semiotics என்பது ஒரு சமுத்திரம். அவற்றைப் பற்றி இணையத்தில் படித்துப் பாருங்கள். ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் – அவற்றை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பது நிஜமாகவே நமக்குத் தற்போதைய காலகட்டத்தில்தான் தேவை. அவற்றை முதலில் நாம் உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டால்தான் குறியீடுகள் என்று நாம் நம்பும் விஷயங்கள் உண்மையில் வெறும் ‘குறி  ஈடு’கள்தான் என்று நமக்குப் புரியும். துவக்ககாலத்தில் இருந்து நமது முன்னோர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் என்ன செய்தார்களோ (உணர்ச்சிவசப்பட்ட ஆர்கச நிலையில் அவர்களுக்குப் பட்டம் கொடுத்து அவர்களைக் கடவுள் ஆக்குவது), அதையேதான் நாமும் தற்போது செய்துகொண்டிருக்கிறோம் என்பதாவது நமக்குப் புரியவேண்டும்.

    ஒரு இயக்குநரை நிம்மதியாகப் படம் எடுக்க விட்டாலே போதும். அவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பில்டப் கொடுப்பதால் எரிச்சலே மிஞ்சும். இதுவேதான் தற்போதைய அஜீத் பற்றி எழுதப்பட்டு வரும் சம்பவங்களும். அஜீத்தைப் புனிதர் ஆக்கும் வேலை கனகச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது. விட்டால் செய்ண்ட் பால் போல அஜீத்தையும் ஒரு செய்ண்ட்டாக இவர்களே உருமாற்றி, போப்பையும் நம்பவைத்துவிடுவார்கள் போல. இப்படி எதையும் நாம் செய்யாமல், அவர்களை அவர்களின் இயல்பில் விட்டுவிட்டாலே போதும் – திரைப்படங்கள் நல்லதாக மாறும்.

    எனவே, எதைப்பற்றி நாம் எழுதினாலும், முதலில் அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வோம். புரிந்துகொண்டு எழுதினால்தானே அவை உண்மை? இல்லாவிட்டால் நாம் எழுதுவது வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையின் சில வரிகள் என்றுதானே பொருள்? ஆகையால், குறியீடுகளின் நிஜப் பொருளை முதலில் அறிவோம். பின்னர் எல்லாவற்றிலும் குறியீடுகளைக் கண்டுபிடித்துக் கன்னாபின்னா என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதைப் பார்த்துக்கொள்ளலாம்.

    Lebowski Image source – http://imgur.com/jo5bjEB

    ]]>
    http://karundhel.com/so-called-symbolism-semiotics-kuriyeedu-farce-in-tamil-films-an-analysis/feed/ 3
    Hollywood & A few Punch Dialogues http://karundhel.com/some-popular-hollywood-one-liners/ http://karundhel.com/some-popular-hollywood-one-liners/#respond Tue, 16 May 2017 15:30:23 +0000 http://karundhel.com/?p=5941 அந்திமழையின் மே 2017 இதழில், ஹாலிவுட் படங்களின் பஞ்ச் டயலாக்குகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை இது.


    தமிழ்ப்படங்களில் இப்போதெல்லாம் பஞ்ச் டயலாக் என்ற ஒரு வஸ்து தவறாமல் இடம்பெறுகிறது. ரஜினியில் இருந்து நேற்று திரைப்படங்களுக்கு வந்த இளம் ஹீரோ முதல் இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் தவறாமல் வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சிகளுக்கு இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு இருப்பதே காரணம். இதனாலேயே, கதைக்கே சம்மந்தமில்லாமல், நடிக்கும் கதாநாயகனை மனதில் வைத்துக்கொண்டே இப்படிப்பட்ட பஞ்ச்கள் எழுதப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில்தான் இப்படிப்பட்ட பஞ்ச்கள் அதிகம். ஹிந்தியில் ஓரளவு உண்டு. ஆனாலும், தமிழர்களுக்கு இப்படிப்பட்ட நாயகரளின் பின்னால் கண்மூடித்தனமாக ஓடும் வியாதி இருப்பது கண்கூடு. அதன் விளைவுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்த எழுதப்படும் பஞ்ச் டயலாக்குகள் என்பதிலும் சந்தேகமில்லை. இதுவேதான் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நடக்கிறது.

    சரி. உலகிலேயே அதிகமான படங்களை ஒரு குடிசைத்தொழில் போல உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டில் இப்படிப்பட்ட பஞ்ச்கள் உள்ளனவா? அங்கெல்லாம் ரசிகர்களைத் திருப்தி செய்வது நடிகர்களுக்கு அவசியம் இல்லையா?

    ஹாலிவுட்டிலும் பஞ்ச்கள் உண்டு. ஆனால் அவை எப்போதுமே கதையோடு சேர்ந்தே இருக்குமே தவிர, நடிக்கும் நாயகனுக்காக எழுதப்படாது. இதுதான் ஹாலிவுட் வசனங்களின் சிறப்பு. இதனாலேயே அங்கெல்லாம் பஞ்ச்கள் என்று அழைக்கப்படாமல், ‘ஒன் லைனர்ஸ்’ என்றே இவை அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களின் சிறந்த சில ஒன் லைனர்களை நாம் இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம். இவைகளைத் தவிரவும் ஏராளமான ஒன் லைனர்கள் உண்டு என்றாலும், அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றி எழுதுவதே நோக்கம்.

    ஹாலிவுட்டின் முதல் பேசும் படமாகிய ‘ஜாஸ் சிங்கர்’ (1927) படத்தில் ஒரு வசனம் உண்டு. “Wait a minute! Wait a minute! You ain’t heard nothin’ yet. Wait a minute, I tell ya, you ain’t heard nothin’! Do you wanna hear ‘Toot, Toot, Tootsie!’? என்று துவங்கும் வசனம் அது. இதைத்தான் உலகின் முதல் பஞ்ச் வசனம் என்று சொல்லவேண்டும். காரணம் இதுதானே உலகின் முதல் பேசும் படம்? அதில் வரும் துவக்க வசனத்தை உலகின் முதல் பஞ்ச் என்றுதானே சொல்லவேண்டும்? ஆடியன்ஸைப் பார்த்து ஜாக் ராபின் என்ற கதாபாத்திரம் இதைப் பேசும். ‘ஒலி திரைப்படங்களில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. இனி ரகளைதான்’ என்று பொருள்படும் வசனம் இது.

    இதன்பின் பெரிதும் நினைவுகொள்ளப்பட்ட வசனம் என்ன தெரியுமா? 1931ல் வெளியான Frankenstein படத்தில், ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரத்துக்கு உயிர் வந்து அது கைகளை அசைக்கும்போது, அதற்கு உயிர் கொடுத்த மருத்துவர், ஆச்சரியம் கலந்த வெறியோடு “Look! It’s moving. It’s alive. It’s alive… It’s alive. It’s moving, it’s alive, it’s alive, it’s alive, it’s alive, IT’S ALIVE!” என்று கத்தும் வசனம்தான். அது இன்றுவரை பிரபலம். ஹாலிவுடின் சாகாவரம் பெற்ற ஒன் லைனர் இது.

    யுனைடட் ஸ்டேட்ஸின் மிகப்பிரபலமான நாவல் ‘Gone with the wind’. மார்கரெட் மிட்செலால் எழுதப்பட்டது. இந்த நாவல் ஹாலிவுட்டில் 1939ல் படமாக்கப்பட்டது. அந்த நாவலின் ஹீரோ (ஆண்ட்டி ஹீரோ) ரெட் பட்லர், கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாராவிடம், “Frankly, my dear. I don’t give a damnஎன்று சொல்லும் வசனம் உலகப் பிரசித்தம் அடைந்தது. ரெட் பட்லராக நடித்தவர் க்ளார்க் கேபிள். ஹாலிவுட்டின் கனவு நட்சத்திரம். எனவே இந்தப் படமும் சரி, இந்த வசனமும் சரி, இன்றும் மறக்கப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது.

    அடுத்த பன்ச் டயலாக், 1941ல் வெளியான ‘Citizen Kane’ படத்தின் பிரபல வசனம். படத்தில் சிடிஸன் கேனாக நடித்து இயக்கியிருந்த ஆர்ஸன் வெல்லிஸ், தனது மரணப்படுக்கையில் உச்சரிக்கும் பெயர்.  “R-o-s-e-b-u-d.” இந்தக் காட்சியில் ஒரு சஸ்பென்ஸ் உண்டு. படத்தின் துவக்கம்  முதலே இதற்கு என்ன அர்த்தம் என்ற சஸ்பென்ஸ் ஏற்படும். இதற்கு விடை, படத்தின் இறுதிக்காட்சியில் விளங்கும். ஒருவேளை படத்தை இன்னும் பார்க்காத நபர்களுக்காக, அந்த சஸ்பென்ஸை உடைக்காமல் விடுகிறேன். ஆனால் ரோஸ்பட் என்பது இன்றும் பல லட்சக்கணக்கான சினிமா ஆர்வலர்களுக்கு ஆர்ஸன் வெல்லிஸை நினைவுபடுத்தாமல் போகாது.

    அடுத்த பஞ்ச் வசனம், “Of all the gin joints in all the towns in all the world, she walks into mine” என்ற வசனம். இது 1942ல் வெளியாகி உலகெங்கும் பிரம்மாதமாக ஓடிய ‘Casablanca’ திரைப்படத்தில் இடம்பெறும் வசனம். ஒரு உடைந்துபோன காதல் மறுபடி துளிர்க்கையில் வரும் வசனம் இது. சுருக்கமாக: காதலன் காதலி. திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்தன்று காதலி காணாமல் போகிறாள். சில வருடங்கள் கழித்து, இவனை ஒரு இடத்தில் சந்திக்கிறாள். அப்போது நாயகன் பேசும் காட்சி இது. காதலி எங்கே போனாள்; இப்போது ஏன் இவனை சந்தித்தாள் என்பதெல்லாம் படம் பார்க்கையில் புரியும். கிட்டத்தட்ட இதே உணர்வுகளை ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் காணமுடியும்.

    “Well, uh – a boy’s best friend is his mother.” இதுதான் உலகைக் கலக்கிய அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம் – ‘Psycho’. ஹிட்ச்காக்கின் அமரத்துவம் வாய்ந்த படம். படத்தின் அடிநாதமே, தாயின் பிணத்தைத் தன்னுடனேயே வைத்திருக்கும் சைக்கோ மகன் பற்றியது. அவனது குணத்தை ஆடியன்ஸுக்குத் தெரியப்படுத்தும் வசனம் இது. ஆனால் இது வரும்போது படத்தில் இதெல்லாம் யாருக்கும் தெரியாது. க்ளைமேக்ஸ் முடிந்ததும்தான் இந்த வசனத்தின் முக்கியத்துவம் எல்லாருக்கும் புரியும். படத்தின் கருவை முதலிலேயே வெளிப்படையாகப் பேசும் வசனம் இது. படத்தில் சைக்கோவாக வரும் நார்மன் பேட்ஸ், படத்தில் குளியலறையில் கொல்லப்படும் (இன்னொரு புகழ்பெற்ற காட்சி) விவியன் லேயிடம் படத்தின் துவக்கத்திலேயே பேசும் வசனம். இதுதான் ஹிட்ச்காக்கின் ஜீனியஸ்.

    இதற்கு அடுத்த பஞ்ச், இன்றுவரை பல படங்களில் சொல்லப்பட்டுவிட்டது. உலகுக்கு என்றும் அழியாத ஒரு ஹீரோவை அளித்த முதல் படமான ‘Doctor No’ (1962)வில் வரும் வசனம் இது. “…Bond. James Bond.” பேசியவர் ஷான் கானரி. இதுவரை அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் வந்துவிட்ட பஞ்ச் இது.

    செர்ஜியோ லியோனி இயக்கிய புகழ்பெற்ற வெஸ்டர்ன் படமான ‘The Good, The Bad, and the Ugly (1966) படத்தில் இடம்பெற்ற “You see, in this world there’s two kinds of people, my friend: Those with loaded guns and those who dig. You digஎன்பதுதான் அடுத்த பஞ்ச். இந்தப்படத்தில் நாயகனாக நடித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அடிக்கடி பேசும் வசனம் இது. படத்தின் க்ளைமேக்ஸில், சமாதிக்கு உள்ளே இருக்கும் புதையலைத் தோண்டுகையில் வரும் வசனம். இதன் முதல் பகுதியான “You see, in this world there’s two kinds of people, my friend:மட்டும் அடிக்கடி வரும். அதன் இரண்டாம் பகுதி மட்டும் மாறும். என்றும் அழியாமல், மனதில் பசுமையாக நினைவிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

    “I’m gonna make him an offer he can’t refuse.” இது அடுத்த பஞ்ச். இது இடம்பெற்ற படம், நம்மூரில் குஞ்சு குளுவானுக்குக் கூடத் தெரியும். ’1972ல் வெளியான ‘The Godfather’. உலகெங்கிலும் வெளியான பல கேங்ஸ்டர் படங்களுக்கு முன்னோடி. தமிழில் நாயகன் திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கிய படம். காட்ஃபாதராக நடித்த மார்லன் ப்ராண்டோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பெற்றுத்தந்த படம் (அவர் அதை வாங்கவில்லை என்பது வேறு விஷயம். காரணத்தைத் தேடிப்படித்துக்கொள்க).

    இதற்கடுத்த பஞ்ச், 1977ல் வெளியாகி, இன்றுவரை உலகின் அத்தனை பேராலும் விரும்பப்பட்ட கல்ட் படங்களில் ஒன்றாக விளங்கிக்கொண்டிருக்கும் படம் ஒன்றில் இடம்பெறுவது. இதை இயக்கியவர் ஜார்ஜ் லூகாஸ். இப்போது எளிதில் விளங்கியிருக்குமே? Star Wars. The Force will be with you, always”படத்தில் அடிக்கடி இடம்பெறும் வசனம் இது. ஜெடாய் போராளிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது அவர்கள் உச்சரிக்கும் வசனம். இன்றுவரை பல ஸ்டார் வார்ஸ் படங்களில் இது வந்துவிட்டது. இதைச் சொன்னாலே புல்லரிக்கும் வகையில் இந்த வசனம் படத்தில் கையாளப்பட்டிருக்கும். அதே ஸ்டார் வார்ஸ் சீரீஸில் 1980ல் வெளியான இரண்டாம் படமான ‘Empire Strikes Back’ படத்தில், ஒரு முக்கியமான கட்டத்தில், வில்லன் டார்த் வேதெர், ஹீரோ லூக் ஸ்கைவாக்கரிடம் சொல்லும் “No, I am your fatherஎன்ற உலகப்பிரசித்தமான வசனத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இருவருக்குமான உறவு முதன்முறையாக ஸ்கைவாக்கருக்குத் தெரியும் இடம் இது. ஆடியன்ஸ் அதிர்ச்சியடைந்த இடமும் கூட.

    “I’ll be back – இது என்ன படம் என்று தெரிகிறதல்லவா? ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘The Terminator’ (1984) படத்தில் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கரின் கதாபாத்திரம் பேசும் வசனம். அந்தப் படத்தில் அதுதான் வில்லன். ஆனால் பின்னர் கெமரூன் இயக்கிய ‘Judgement Day’ படத்தில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரம் இது. அப்படத்திலும் இதை சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டாலே அர்நால்டின் முகம் மனதில் தோன்றுவதுதான் இதன் விசேடம். இதன் இரண்டாம் பாகத்தில் அர்நால்ட் பேசும் “Hasta la vista, baby” வசனமும் மறக்கமுடியாதது.

    அடுத்த பஞ்ச்சின் விசேடம், அது ஒரு கெட்ட வார்த்தை என்பதே. ஆனால், அது உச்சரிக்கப்படும் இடம், மிகுந்த ஜாலியான இடம். ஒரு கட்டிடம். அதனுள் வில்லனிடம் பணயக்கைதியாக மாட்டியிருக்கும் மனைவி. அந்த மனைவியோடு பிரச்னை என்றாலும், அவளைப் பார்க்க வரும் கணவன், இதை உணர்கிறான். தன்னந்தனியாக அவளைக் காப்பாற்ற உள்ளே ரகசியமாக நுழைகிறான். ப்ரூஸ் வில்லிஸை உலகம் முழுக்கவும் சூப்பர்ஸ்டாராக மாற்றிய படம், ‘Die Hard’ (1988). இதில், வில்லனைப் பார்த்து ப்ரூஸ் வில்லிஸ் கதாபாத்திரம் பேசும் வசனமான “Yippie ki-yay, motherfuckerஇன்றும் பிரபலமான வசனம். ப்ரூஸ் வில்லிஸின் கதாபாத்திரமே, ஆபத்தில் குருட்டு தைரியத்தோடு நுழைந்து அதிரடிகள் புரியும் பாத்திரம் என்பதால் இந்த டயலாக் மிகவும் பிரபலம் ஆனது.

    1991ல் வெளியான ‘The Silence of the Lambs’, உலகுக்கு ஒரு புதுவகையான வில்லனை அறிமுகப்படுத்தியது. தனக்குப் பிடிக்காதவர்களைக் கொன்றுவிடுவதோடு மட்டும் அல்லாமல், அவர்களை சமைத்துச் சாப்பிட்டுவிடும் கதாபாத்திரம் இது. மட்டுமல்லாமல், அந்த சமையலை, தன் நண்பர்களுக்கும் அவர்கள் அறியாமல் பறிமாறும் சைக்கோவான டாக்டர் ஹான்னிபல் லெக்டர் பேசும் வசனம் இது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் க்ளாரீஸ் ஸ்டார்லிங்கிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, “A census taker once tried to test me. I ate his liver with some fava beans and a nice Chianti என்று சொல்வார். அவரது குரூரத்தை முழுக்க வெளிக்கொணர்ந்த வசனம் இது. அப்படி அவர் பேசுவதைக் கவனித்தாலே நம் முதுகெலும்பு சில்லிட்டுப் போகும். இந்தக் கதாபாத்திரத்துக்காக ஆண்ட்டனி ஹாப்கின்ஸுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றிச் சொல்லவே தேவையில்லை.

    1994ம் வருடத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்போது அட்டகாசமான படங்களாகக் கொண்டாடப்படும் ஷஷாங்க் ரிடெம்ப்ஷன், பல்ப் ஃபிக்ஷன், ஃபாரஸ்ட் கம்ப், ஜுராஸிக் பார்க் ஆகியவை எல்லாமே ஒரே சமயத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில், ஆஸ்கர்களை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தில், “My Mama always said, ‘Life was like a box of chocolates; you never know what you’re gonna getஎன்ற வசனம் உலகப்புகழ் பெற்றது. இன்றும் பலரால் அடிக்கடி பகிரப்படும் வசனம் இது. ஃபாரஸ்ட் கம்ப்பின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை இந்த ஒரே வசனத்தில் நம்மால் புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

    The greatest trick the Devil ever pulled was convincing the world he didn’t exist என்ற வசனம் The Usual Suspects (1995) படத்தில் பேசப்பட்டபோது, அதுவரை படம் பார்த்த ஆடியன்ஸ், சஸ்பென்ஸின் உச்சகட்டத்துக்குப் போயிருந்தார்கள்> காரணம், படத்தின் வில்லன் யார் என்பதை அந்த வில்லனே பேசும் காட்சி இது. அதுவரை படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் யாரெல்லாம் வில்லனாக இருக்கக்கூடும் என்ற கேள்வி ஆடியன்ஸின் மண்டையைக் குடைந்துகொண்டிருந்த நேரத்தில், துளிக்கூட சம்மந்தமில்லாத ஒரு நபர் (ஆனால் படம் முழுக்க வந்துகொண்டிருந்த நபரும் கூட)தான் வில்லன் என்று ரகசியத்தைப் போட்டு உடைத்தால் எப்படி இருக்கும்? இன்றுவரை ஹாலிவுட்டின் மிகச்சிறந்த சஸ்பென்ஸ் தருணங்களில் இதுவும் ஒன்று. இத்திரைக்கதையை எழுதிய க்ரிஸ்டோஃபர் மெக்வார்ரீ, இன்று ஹாலிவுடின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர்.

    காமிக்ஸ் கதாபாத்திரங்களை வைத்துப் படங்கள் எடுக்கும்போது, காமிக்ஸின் ஃபீல் கச்சிதமாக வரும்படியேதான் படங்கள் எடுக்கவேண்டும். ஆனால் பல இயக்குநர்கள் தவறவிடும் இடம் இது. உதாரணமாக, பேட்மேனை மையமாக வைத்து Batman, Batman Returns, Batman Forever, Batman & Robin என்ற நான்கு படங்கள் வார்னர் ப்ரதர்ஸால் எடுக்கப்பட்டது. இவைகளில் முதலிரண்டு பாகங்களை இயக்கியவர் டிம் பர்ட்டன். இந்த நாங்கு படங்களில், இறுதி இரண்டு படங்கள் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாக இருக்கும். எனவே இதன்பின் சில வருடங்கள் பேட்மேனைக் கிடப்பில் போட்டது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். அதன்பின் க்ரிஸ்டோஃபர் நோலன் என்ற இளைஞர் வந்து Batman Begins என்ற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியில் அது நல்ல பெயர் வாங்கியது. பின்னர் இதற்குள் பிரபல இயக்குநராக மாறியிருந்த நோலன், The Dark Knight என்ற படத்தை இயக்க, உலகின் மிகச்சிறந்த காமிக்ஸ் தழுவலாக அது மாறியது. இன்றுவரை உலகின் சிறந்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில், ஜோக்கரின் கதாபாத்திரம் ஹீத் லெட்ஜரால் நடிக்கப்பட்டது. நடித்ததும் அவர் இறந்தும் போனார். அவருக்கு சிறந்த துணை நடிகர் ஆஸ்கரும் இறப்புக்குப் பின்னர் வழங்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரம் பேசிய “Why so serious?”என்ற வசனம் உலகப்பிரசித்தி அடைந்தது. ஜோக்கருக்கு உண்டான பின்னணியை ஜோக்கரே இரு இடங்களில் விவரிப்பான். அப்போது அவன் சொல்லும் வசனங்களில் இது ஒன்று. இந்தப் படம் வந்ததும்தான், இன்று டிஷர்ட்களில் ஜோக்கரின் படத்தைப் போட்டுக்கொண்டு சுற்றும் பலருக்கும் ஜோக்கர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியே தெரிந்தது.

    இவைகளே உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹாலிவுட் பஞ்ச் வசனங்கள். இவைகளைத் தவிரவும் இன்னும் ஏராளம் உண்டு. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறேன். எது எந்தப் படம் என்று நீங்களே தேடிப்பாருங்கள். பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும்.

    “He-e-e-e-re’s Johnnie!”  

    “Snakes. Why’d it have to be snakes?”

    “E.T. phone home.”

    “Say ‘hello’ to my little friend!”

    “Go ahead, make my day.”

    “Get away from her, you BITCH!”

    “I’ll have what she’s having.”

    “As far back as I can remember, I always wanted to be a gangster…To me being a gangster was better than being president of the United States.”

    “You can’t handle the truth!” 

    “Get busy livin’, or get busy dyin’.” 

    “Houston, we have a problem.”

    “They may take our lives, but they’ll never take our freedom!”

    “To Infinity and Beyond!”

    “I’m the king of the world!”

    “The first rule of Fight Club is: you do not talk about Fight Club”

    “Are you not entertained! Are you not entertained! Is this not why you are here!”

    ]]>
    http://karundhel.com/some-popular-hollywood-one-liners/feed/ 0
    Mysskin & His Films – a Critique http://karundhel.com/mysskin-his-films-a-critique/ http://karundhel.com/mysskin-his-films-a-critique/#respond Mon, 15 May 2017 07:44:02 +0000 http://karundhel.com/?p=5934 இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் ‘பிரதிபிம்பம்’ பக்கத்தில் மிஷ்கினைப் பற்றி விரிவாக எழுதிய இரண்டு பாகக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் புதிய விஷயங்கள் பலவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன்.


    மிஷ்கினைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக் கட்டுரையின் கீழ்பாதிக்குப் போய்விடலாம்.

    ‘Auteur’ என்பதை ‘ஆட்டெர்’ என்றும் ’ஓத்தர்’(ஃப்ரெஞ்ச்) என்றும் சொல்லலாம். ஒரு எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது நடையையும் அவரது சமூக நோக்கத்தையும் அவரது பல படைப்புகளிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடமுடியும். தனது படைப்புகளின் வழியே தான் எப்படி தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைக் கவனிக்கிறோம் என்பதைப் பதிப்பகங்கள், பக்கங்கள், விலைகள் போன்றவைகளிலெல்லாம் கவனம் செலுத்தாமல்/பாதிக்கப்படாமல் முத்திரை போலப் பதிப்பவரே ஆட்டெர். அவர் படங்களிலோ அல்லது எழுத்துகளிலோ ஒரே ஒரு பக்கம்/ஒரு காட்சியைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இன்னார் என்பதை விளக்கமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில் டாரண்டினோ, ரித்விக் கடக், சத்யஜித் ரே, ஹிட்ச்காக், ஸான் ரென்வா (Jean Renoir), ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut), லார்ஸ் வான் ட்ரையர், ஃபெலினி, டேவிட் லின்ச், ஆந்த்தோனியோனி, கிம் கி டுக், கிம் ஜீ வூன், போங் ஜூன் ஹோ, தகாஷி கிடானோ போன்று பலரும் ஆட்டெர்கள்தான். இவர்களது படங்களில் எந்தக் காட்சியைப் பார்த்தாலும் அது இவர்கள் இயக்கியது என்பதைச் சொல்லிவிடமுடியும். இதில் ஒரு பாடபேதம் என்னவென்றால், ஆட்டெர்கள் இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை எழுதுவதும் முக்கியம் என்றும் ஒரு பள்ளி இருக்கிறது. த்ரூஃபோதான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இதைப்பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முடிந்தால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இப்போது ஆட்டெர் என்றால் என்ன என்பதே முக்கியம். ஆட்டெர் பற்றி என்ன என்று தெரிய மேலே கொடுக்கப்பட்டுள்ளவர்களின் படங்களைப் பார்த்திருப்பதும், த்ரூஃபோ போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்திருப்பதும் அவசியம்.

    அடுத்ததாக, தமிழில் உலகப்படங்கள் இல்லை என்று பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் என்று கவனித்தால், கமர்ஷியல் படங்களே இங்கே முக்கியம். பணம் சம்பாதிப்பது ஒன்றே லட்சியம். அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழில் உலகப்படங்கள் வர வாய்ப்பே இல்லை. கூடவே, எந்த இயக்குநருக்கும் தனிப்பட்ட சமூகப் பார்வை அவசியம். சமூகப்பார்வை உலகப்படங்கள் பார்த்தால் மட்டும் வந்துவிடாது. இலக்கியங்கள் படிக்கவேண்டும். காமன் சென்ஸ் வேண்டும். உலகின் burning issues பற்றியும், அதனால் பாதிக்கப்படும்/கொத்துக்கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் பற்றியும் empathy வேண்டும். இன்னும் முக்கியமாக, மனிதனை மனிதனாகப் பார்க்கும் பார்வை வேண்டும். இதெல்லாம் ஐரோப்பா, கொரியா போன்ற இடங்களைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு இயல்பாகவே வருகிறது. எனவே அங்கே ஆட்டெர்கள் அதிகம். அவர்கள் மூலமாக உலகப்படங்களும் அதிகம்.

    இனி, தற்காலத் தமிழ்ப்பட சூழலுக்கு வந்தால், இன்றைய தேதியில் ஆட்டெர் என்ற பதத்துக்கு மிஷ்கினே முதல் ஆள். ஆனால் மிஷ்கின் முழுமையான ஆட்டெர் அல்ல. அவர் ஒரு flawed auteur. நல்ல இயக்குநர் என்ற இடத்துக்கு ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று அவசியம் சொல்வேன். அப்படிச் சொல்வதற்குப் பிசாசு வரை அவரது பயணமே காரணம். இன்னும் நான்கு படங்கள் போதும்; மிஷ்கின் ஒரு முழுமையான உலக இயக்குநர் ஆகிவிடுவார் என்பது என் கருத்து.

    தமிழில் இருக்கும் ஒரு இயக்குநரை உலக இயக்குநர் ஆகப்போகிறார் என்று சொன்னால் உடனே ஒரு கும்பல் எள்ளி நகையாடத் தயாராக இருக்கும். ஏன் அப்படி ஆகக்கூடாது? இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சிரிப்பதற்கு முன்னர் போய் ஆட்டெர் என்றால் என்ன; உலக சினிமா என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அனுபவித்துத் தயாராக வந்தால்தான் அவர்கள் முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கலாம். ஒரு விஷயம் என்னவென்றே தெரியாமல் இருப்பவர்களுடன் பேசவே முடியாது.

    மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.

    மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும்.

    இவையெல்லாம்தான் மிஷ்கினை ஒரு flawed auteur என்று நான் அழைக்கக் காரணங்களாக இருக்கின்றன. ஒருவிதமான திரைமொழியைத் தனது சொந்த முத்திரையாகப் பாவிப்பதே ஒரு ஆட்டெரின் பாணி. ஆனால் அவருக்கு இவையெல்லாம் இயல்பிலேயே வரும். எடுத்துத் திணிப்பதைப்போல் இருக்காது. எனவே திரைப்படத்தின் போக்கை இதுபோன்ற முத்திரைக் காட்சிகள் பாதிக்காது. ஆனால் மிஷ்கினின் படங்களில், அவரது ‘முத்திரைக் காட்சிகள்’ வரும்போதெல்லாம் படத்தில் இருந்து நமது கவனம் சிதறுகிறது. இக்காட்சிகள் எப்படி ஒரேபோன்று இருக்கின்றன என்றெல்லாம் எண்ணம் செல்கிறது. இதனால்தான் மிஷ்கின் ஒரு flawed auteur.

    மிஷ்கினின் கடைசிப் படமான ‘பிசாசு’ அவசியம் ஒரு அருமையான படம். இந்தப் படம் ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள்ளேயே 3 Iron மற்றும் Bittersweet Life படங்களைப் பார்க்கையில் எப்படிப்பட்ட அனுபவம் கிடைத்ததோ அதன் சில துளிகள் தென்பட ஆரம்பித்தன. முழுமையாக அல்ல; அதனால்தான் மிஷ்கினை flawed auteur என்று சொன்னேன். இன்னும் அவர் ஒரு முழுமையான இயக்குநர் ஆகவில்லை. அதற்கு இன்னும் சில படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தூரம் சென்றுவிட்டார் என்றுதான் சொல்வேன் (முழுமையான இயக்குநர் என்றால் தமிழில் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் எவரது படங்களை மொழி வித்தியாசம் இல்லாமல் ரசிக்கிறார்களோ அவரே முழுமையான இயக்குநர்). ‘பிசாசு’ ஒரு பேய்ப்படம் அல்ல. உணர்வுரீதியில் அமைந்த ஒரு நல்ல படம். நம்மூரில் பேய் என்றாலே சில க்ளிஷேக்கள் உள்ளன. பேய் ஏன் அதற்கு நேர் எதிராக இருக்கக்கூடாது? பேய் என்றால் கொடூரமாகத்தான் இருக்கவேண்டுமா? 3 Iron படத்தில் கதாநாயகி ஸுன் – ஹ்வா எப்படி நாயகன் டே-சுக்கின் பின்னாலேயே சென்றுவிடுகிறாள்? இத்தனைக்கும் டே-சுக் அவள் வீடுபுகுந்து அங்கே வாழ வந்திருப்பவன். ஆனால் ஒரு பேச்சு கூட பேசாமல் அவனுடனேயே அவள் சென்றுவிடுகிறாள் என்பதைப் படம் பார்க்கையில் கவனிக்கலாம். அதில் வசனங்கள் மிகக்குறைவு. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான அன்பும் காதலும் பிணைப்பும் எளிதில் யார் வேண்டுமானாலும் புரிந்துகொண்டுவிடலாம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் கிம் கி டுக் யார் என்றாவது தெரியவேண்டும். அப்படித்தான் பிசாசும். ’இது ஒரு வழக்கமான தமிழ் மசாலா பேய்ப்படம்’ என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இந்தப் படம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பிடிக்கும்.

    இதேபோல்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படமும். உணர்வுபூர்வமான ஒரு நல்ல படம் அது. ஆனால் இப்படத்தில் ஒருசில பிரச்னைகள் உண்டு. கதாபாத்திரங்களின் உடல்மொழி (குறிப்பாகப் படத்தில் வரும் வில்லன். மிகவும் செயற்கை). வில்லன் மட்டும் இல்லாமல், படத்தின் பல நடிகர்களின் உடல்மொழியுமே செயற்கைதான். இதுபோன்று மிஷ்கினின் ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டே சொல்லக்கூடிய அளவு செயற்கை ஷாட்கள் இருக்கும். எனவேதான் மிஷ்கினை flawed auteur என்று குறிப்பிட்டேன்.

    அதுவே மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, மிகத் தரமான திரைப்படம். வாயுரிஸம் என்று சொல்லப்படும், பிற மனிதர்கள், தனித்தோ அல்லது அவர்களுடைய இணையுடனோ இருக்கையில், அவர்களின் தனிப்பட்ட செய்கைகளை மறைந்திருந்து பார்த்து சந்தோஷம் அடையும் செயல் பற்றிய கச்சிதமான படம். இந்த வாயுரிஸத்தைக் கருவாகக் கொண்ட சில முக்கியமான படங்கள் உண்டு. ஒரு சிறந்த உதாரணமாக, 8mm படத்தைச் சொல்லலாம். Snuff படங்கள் எடுக்கும் ஒரு கும்பலையும், அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியையும் பற்றிய படமான இதில், அந்த அதிகாரிக்கு ஒரு ஸ்னஃப் படத்தைக் கொடுத்துத் துப்பறியச் சொல்வதே, ஒரு இறந்துபோன செல்வந்தரின் வயதான மனைவி. அவரது அலமாரியில் இந்த ஸ்னஃப் படம் அகப்படுகிறது (ஸ்னஃப் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு – ஸ்னஃப் படங்களில், சம்மந்தப்பட்ட பெண்களைப் படத்தின் இறுதியில் சித்ரவதை செய்து கொல்லும் காட்சிகளும் இருக்கும்). ஜோயல் ஷூமேக்கரின் இயக்கத்தில், நிகலஸ் கேஜ் நடித்த இப்படம், பார்ப்பவர்களின் மனதை விட்டு அகலாது. இதன் தாக்கம் அப்படிப்பட்டது. அதேபோல், Sex. lies and videotape (1989) படத்தையும் சொல்லமுடியும். ஸ்டீவன் ஸாடர்பர்க்கின் அறிமுகப்படமான இதில், பெண்களுடன் பேசி, அவர்களின் செக்‌ஷுவல் அனுபவங்களையும் ஆசைகளையும் வீடியோவில் பதிவு செய்யும் ஒரு நபரையும், தனது கணவன் மீது உள்ள வெறுப்பினால் (கணவன், இந்தப் பெண்ணின் தங்கையுடன் உறவு கொண்டிருக்கிறான்), அவனுடன் படுத்து, தானும் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பதிவு செய்யும் ஒரு பெண்ணையும் பற்றிய படம் இது (எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று). இன்னமும் பல படங்கள் இருந்தாலும் (Peeping Tom இன்னொரு உதாரணம்), எனக்குப் பிடித்த இரண்டு ஆங்கிலப் படங்கள் இவை.

    இப்படிப்பட்ட படங்களின் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படமே யுத்தம் செய். படத்தின் மிகப்பெரிய பலம்,  ஜேகே என்ற கதாநாயகனின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமே. ஜேகே, ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. அவன், உங்களைப் போலவும், என்னைப்போலவும், நமது பக்கத்துவீட்டு ராமசாமியைப் போலவும் ஒரு சராசரி மனிதன். அவனுக்கும் பல மனக்குறைகள் உண்டு. அந்த மனக்குறைகளுக்குத் தீர்வு காண முயலும் அதே சமயத்தில், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலையையும் முடிக்க முயலும் நம்மைப்போன்ற அதே மனிதன் தான் அவன். இது, படத்தின் பெரிய பலமாக அமைந்துவிடுகிறது. அதேபோல், ஜேகே செய்யும் காரியங்களும் ஹீரோத்தனமாக இல்லை. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன் செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. உடன்வரும் கான்ஸ்டபிள், முன்வந்து திட்டும்வரை, அவன் தலைகுனிந்தே நின்றிருக்கிறான் (’அடி செருப்பால’ என்று அந்தக் கான்ஸ்டபிள் திட்டத் தொடங்கும் காட்சி, படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று).

    அதுவே, யுத்தம் செய்யின் பலவீனம், மிஷ்கின் என்றே சொல்லமுடியும். மிஷ்கின், தனது உலக சினிமா அறிவையும், தனது ஆங்கிலப் புத்தக அறிவையும் இப்படத்தில் திணிக்கிறார். அந்த வசனங்களும் தேவையே இல்லாதவை (படத்தில், சேரனின் கதாபாத்திரம், ரஷோமான் திரைப்படத்தை refer செய்து பேசும் வசனத்தையும், இறுதியில், ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் க்ளோஸப்போடு தொடங்கும் காட்சியையும் பற்றித்தான் சொல்கிறேன்). மிகவும் செயற்கையாக, படத்தின் flowவிலிருந்து தனித்துத் துருத்திக்கொண்டு இந்த வசனங்கள் தெரிந்தன. இது மிஷ்கினின் பல படங்களில் வருவதை நான் கவனித்திருக்கிறேன். அதேபோல், அஞ்சாதே படத்தை நினைவுபடுத்திய ஒரு காட்சி, இப்படத்தில் உண்டு. பாலத்தின் மேல், சேரன் அடியாட்களுடன் இடும் சண்டைக்காட்சி. அஞ்சாதே படத்தில், மருத்துவமனையில், நரேனிடம் ஒவ்வொருவராக வந்து, சரமாரியாக அடிவாங்கிக்கொண்டு, பின்னர் மீண்டும் போய், வரிசையில் நின்றுகொள்ளும் இளிச்சவாய் முகமூடி ஆட்களை நினைவிருக்கிறதா? அதேபோல், இதிலும் வரிசைகட்டி வந்து சேரனிடம் குத்து வாங்கும் அடியாட்கள் உண்டு. ஒவ்வொரு படத்திலும் மிஷ்கின் ஒரேபோன்று சில காட்சிகள் அமைப்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனாலும், இந்த பலவீனங்களையெல்லாம் மறந்துவிட்டுப் பார்க்கும்படியான மிகத்தரமான படம் ‘யுத்தம் செய்’.

    மிஷ்கினின் ‘நந்தலாலா’, அவசியம் நல்ல அனுபவத்தைத் தரும் படமே. ஆனால் என்ன பிரச்னை என்றால், ‘கிகுஜிரோ’ படத்தை அப்படியே தழுவி எடுக்கப்பட்ட படம். அதுதான் அப்படத்தை ரசிப்பதில் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. சில காட்சிகள், தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணம், பாட்டியுடன் அகி கழிக்கும் அந்த ஆரம்ப நிமிடங்கள், அகியின் பணத்தைத் திருடும் திருடன் (கிகுஜிரோவில், சிறுவனிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் பாத்திரம் வரும்), அகியின் தாயாரை பாஸ்கர் மணி சந்திக்கும் காட்சிகள், தனது தாயாரை பாஸ்கர்மணி சந்திக்கும் காட்சி, நரிப்பல் காட்சி (இது கிகுஜிரோவில், ஏஞ்சல் பெல்லாக வருகிறது), லாரி டிரைவரிடம் ஹார்ன் திருடும் காட்சி (கிகுஜிரோவில், கல்லால் லாரிக்கண்ணாடியை உடைப்பான் கிகுஜிரோ), பாஸ்கர் மணியின் பெயர் நமக்கு முதன்முதலில் அறிமுகமாகும் இறுதி நிமிடங்கள் (கிகுஜிரோவிலும், அவனது பெயர், இறுதிக்காட்சியில் தான் நமக்குத் தெரியவரும்) ஆகிய சில உதாரணங்களைச் சொல்லலாம். பார்த்த உடனே கிகுஜிரோவில் இருந்து அப்படியே எடுத்துவைத்திருக்கும் காட்சிகள் புரிந்துவிடுவதால் அலுப்பே மேலிடுகிறது.

    திருடப்படாத, மிஷ்கினே சொந்தமாக வைத்துள்ள காட்சிகளே அருமையாக இருக்கையில், அவர் ஏன் இப்படிச் சுட வேண்டும்? சுடாமலேயே நல்ல படம் ஒன்றை நமக்குத் தந்திருக்க முடியும் இல்லையா?

    அதேபோல், கிகுஜிரோவில் இருந்த தெளிந்த நீர் போன்ற அமைதியும் அறியாமையும் (innocence) நந்தலாலாவில் இல்லை. உதாரணம்: கிகுஜிரோவின் தாயாரை, மனநோய் விடுதியில் சென்று சந்திக்கும் காட்சி. ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அக்காட்சி படத்தில் இருக்கிறது. தாயாரைத் தூரத்தில் இருந்து பார்க்கும் கிகுஜிரோ, உடனேயே வெளியே வந்துவிடுகிறான். ஆர்ப்பாட்டமே இல்லாமல் – ஆனால் அதே சமயம் நமது நெஞ்சைத் தொடும் காட்சி இது. நந்தலாலாவிலோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் ,இக்காட்சியின் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட’ வடிவம் நமக்குக் கிடைக்கிறது. ஒருவேளை ஒரு ஒரிஜினல் காட்சியாக இருக்கும்பட்சத்தில், நமக்கு இது பிடிக்கக்கூடும். ஆனால், கிகுஜிரோ ஏற்கெனவே நம் கண்ணுக்குத் தெரிவதால், இக்காட்சி படத்தில் சரியாக அமையவில்லை என்று தெரிகிறது.

    கிகுஜிரோவில், தாயை வைத்துக்கொண்டு கிகுஜிரோ அல்லல்படுவதில்லை. தன்னுடன் வந்திருக்கும் சிறுவனை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்பதிலேயே அவனது சிந்தனை செல்கிறது. அது, படத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது. ஏனெனில், இப்படம், கிகுஜிரோவின் தாயைப் பற்றிய படமே அல்ல. இது முழுக்க முழுக்க அந்தச் சிறுவனின் உள்ளத்தில் நிகழும் மாற்றங்களையும் அவனது மென்சோகத்தையும் நமக்கு உணர்த்தும் படம். இவை நிகழ்வதாலேயே, அந்தச் சிறுவனும் தனது நிலையில்தான் இருக்கிறான் என்ற உணர்ச்சி, கிகுஜிரோவின் உள்ளத்தில் ஆணியடித்ததைப் போல் பதிந்துவிடுகிறது. இதுதான் அவன் அந்தச் சிறுவனைப் புரிந்துகொள்வதற்கும் முதல்படியாக இருக்கிறது. ஆனால் நந்தலாலா, பாஸ்கர்மணியின் தாயாரை மையப்படுத்தியே இரண்டாம் பாதியில் செல்வதால், கதை சற்றே தனது நேர்க்கோட்டில் இருந்து பிறழ்ந்துவிடுகிறது. நந்தலாலாவில், ‘ஓ.. நீயும் என்னப்போலதான் அம்மாவைத் தேடிப்போறியா’ என்று பாஸ்கர்மணி வெளிப்படையாகக் கேட்டு, இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவே, பாஸ்கர் மணியும் தனது தாயாரைத் தேடிப் பயணிப்பது போன்ற ஒரு ஜோடனையை மிஷ்கின் செய்யவேண்டியிருந்திருக்கிறது. இது, கதையின் போக்கைச் சற்றே அசைத்துப்பார்க்கிறது.

    இவையெல்லாம்தான் நந்தலாலாவின் பிரச்னைகள். ஒருவேளை கிகுஜிரோ பார்க்காமல் நந்தலாலா பார்த்தால் படம் பிடிக்கக்கூடும். ஆனால் அதற்காக, கிகுஜிரோவில் இருந்து வெட்டிவைக்கப்பட்ட காட்சிகளை எப்படி மன்னிக்க முடியும்?

    ஒருவேளை, கிகுஜிரோவின் இரண்டாம் பாதியைப் போல் நந்தலாலாவை எடுத்திருந்தால், மக்கள் அலுப்படைந்துவிடுவார்களோ என்பதுகூட மிஷ்கினின் கவலையாக இருந்திருக்கலாம். இதுதான் மூலப்படத்தில் இருந்து சுடும்போது நேரும் அவலம். சொந்தமாகப் படமெடுப்பதன் மூலம், இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கப்படுகின்றன.

    மிஷ்கினின் ‘அஞ்சாதே’ பற்றி யோசித்துப் பார்த்தால், தமிழின் மிகத்தரமான  ஆக்‌ஷன் த்ரில்லர்களில் அஞ்சாதே முதலிடத்தை வகிக்கக்கூடும் என்று தோன்றுகிறது. காரணம், அஞ்சாதேவில் உணர்வுகள் கலந்த காட்சிகள் மிக அதிகம். இக்காட்சிகளின் வழியாகவே கதை சொல்லப்படுவதால், படம் முழுக்கவும் கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுகிறோம். அதேசமயம் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் கதை எத்தகையது? படம் பார்க்கும் ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமரவைக்கும் தன்மையுடைய கதை இது. அதுதான் அஞ்சாதேவின் பலம். இப்படத்தின்மூலம் மிஷ்கின் விஸ்வரூபம் எடுத்தார். மிஷ்கினின் முழுமையான படம் என்று அஞ்சாதேவைக் கட்டாயம் சொல்ல இயலும்.

    மிஷ்கினின் இசை பற்றி யோசித்தால், அரோல் கொரேலியாகட்டும் (பிசாசு); இளையராஜாவாகட்டும் (நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்); சுந்தர் சி பாபுவாகட்டும் (அஞ்சாதே); கேவாகட்டும் (யுத்தம் செய்); இந்த எல்லாப் படங்களையும் கவனித்தால், இசையை மட்டும் ஒலிக்க வைத்தாலே அது மிஷ்கின் படம் என்று யாராலும் உடனேயே சொல்லிவிடமுடியும். அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம். யாராக இருந்தாலும் அங்கே அந்த இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு பேனாதான். அந்தப் பேனாவை வைத்துக்கொண்டு அந்த இயக்குநர் எழுதுவதுதான் எழுத்து. அப்படித்தான் மிஷ்கினின் எல்லாப் படங்களின் இசையுமே. அவசியம் தனது படங்களின் இசையிலும் மிஷ்கின் முத்திரை பதிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. உதாரணமாக, பிசாசு படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் லிஃப்ட் சீக்வென்ஸில் இசை மிகவும் அதிகம். அதேபோல் வசனங்களிலும் காட்சிகளிலும் என்ன சொல்லப்படுகிறதோ அதை இசையும் தனியாக சொல்லப்பார்க்கிறது. அது கூறியது கூறல். ஒரே விஷயத்தை இருமுறை சொல்வது. அது நன்றாகத் தெரியவும் செய்கிறது. அடுத்த சில படங்களில் இது அவசியம் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைவிடவும் பிசாசு படத்தில் இசை நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் சொல்கிறேன்.

    சித்திரம் பேசுதடி ஒரு சராசரிப் படமே. அதன்பின் வந்த அஞ்சாதே ஒரு தரமான ஆக்‌ஷன் படம். அதில் உணர்வுகளும் சமபங்கு வகித்தன. யுத்தம் செய் படத்தில் ஆக்‌ஷனை விட உணர்வுகள் மிக அதிகமாக இருந்தன. இருந்தாலும் அது மக்களுக்குப் பிடித்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் முற்றிலும் உணர்வுரீதியான படம். பிசாசும் அப்படியே. ஆனால் இதில் உணர்வுகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிஷ்கினின் மனதின் அடியாழத்திலிருந்தே வருகிறது. அதுதான் ஒரு ஆட்டெரின் அடையாளம்.

    இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தருவதன்மூலம் நமக்கு என்ன லாபம் என்றால், நல்ல படங்கள் எப்படி இருக்கும் என்று தமிழிலேயே நமக்குத் தெரிவதுதான். இந்தப் படத்திலேயே அவரது பிரத்யேக உருவாக்கமும் எண்ணங்களும் பிரதிபலிக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இப்படிப்பட்ட படங்கள் வெற்றியடைந்தால் அவசியம் மிஷ்கின் இன்னும் சிறப்பான, முழுமையான படங்கள் எடுப்பார் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் இந்தியாவின் சார்பிலும் வருங்காலத்தில் தரமான உலகப்படங்கள் எடுக்கப்படும். அவைகளை மிஷ்கினே இன்னும் சில வருடங்களில் எடுக்கக்கூடும். இருந்தாலும், தான் ஒரு ஆட்டெர் என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மிஷ்கின் மாறிப் பல்லாண்டுகள் ஆகின்றன. அவரால்மட்டுமே சிறப்பாக எடுக்கப்படக்கூடிய கருக்களை எளிதில் இனம்கண்டுகொண்டு, தனக்கே உரிய பாணியில் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னளவில், உலகத்தின் பல்வேறு பகுதியில் வாழக்கூடிய மக்களும் ரசித்துப் பார்க்கும் அளவு சிறப்பான படங்களைத் தமிழில் இருந்து எடுக்கக்கூடிய ஒரே இயக்குநராக நான் மிஷ்கினையே சொல்வேன். அவருக்கு அந்தத் திறனும், ரசனையும், ஆழமான அனுபவ அறிவும் உண்டு என்றே கருதுகிறேன். அப்படிச் சில படங்களை மிஷ்கின் எடுக்கக்கூடிய காலகட்டம் வந்துவிட்டது என்றும் நினைக்கிறேன். உலகத் திரை அரங்கில் தமிழகத்தை அடையாளம் காட்டக்கூடிய அப்படிப்பட்ட சிறந்த மிஷ்கினின் படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

    Image courtesy – https://silverscreen.in/tamil/features/mysskin-interview-the-lone-wolf/

    ]]>
    http://karundhel.com/mysskin-his-films-a-critique/feed/ 0
    Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu http://karundhel.com/baahubali-2-the-conclusion-2017-tamil-telugu/ http://karundhel.com/baahubali-2-the-conclusion-2017-tamil-telugu/#comments Sat, 29 Apr 2017 18:21:58 +0000 http://karundhel.com/?p=5917 ‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது.

    பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். ‘ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை’ என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவை செய்யவைத்து அட்ராசிடி செய்தார். ஹீரோ இப்படி என்றால், வில்லனோ மாமிசமலை சைசில் உள்ள எருமையை அடக்குவது என்றெல்லாம் டபிள் டைனாசாராக மாறினான்.

    இதெல்லாமே ட்ரிப்பிள், எட்டு மடங்கு, ஆயிரம் மடங்காக இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் பாஹுபலி 2. ஹீரோ அட்ராசிடீஸ் இதில் உச்சகட்டம். காட்ஸில்லாவை மனிதனாகக் காட்டும் புதுவித சூப்பர்ஹீரோ படம் இது. பக்காவான, அக்மார்க் தெலுங்கு டப்பிங் படம். No doubt.

    வானில் பறக்கிறார்கள்.. மரத்தைப் பிடுங்கி அடிக்கிறார்கள்.ஐம்பதடி அறுபதடி பாலத்தை வெறும் குதிரை மேலிருந்து ஹீரோ அசால்ட்டாகத் தாண்டுகிறான்..கல்லாலான பிரம்மாண்டமான தேரில், அதைவிட பிரம்மாண்ட பிள்ளையார் சிலையை ஜாலியாக இழுத்து வீசுகிறான்.. ஏ யப்பா.. மனுசப்பயலா எதாச்சும் செய்யுங்கடா என்று அலறலாம் போலவே தோன்றியது. அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை. ஆனால், மதில் சுவற்றுக்கு வெளியே இருந்து ஹீரோவின் அத்தனை படைகளும் கோட்டைக்குள் ஜிங்ஜிங் என்று குதிப்பதற்கு ஒரு ஐடியா செய்திருக்கிறார் பாருங்கள் ராஜமௌலி.. (ரயில் விரலசைவால் ரிவர்சில் போவதை நினைத்துக்கொள்ளவும்). அசல் தெலுங்கு இயக்குநர் ஒருவர், அசல் தெலுங்கு ஆடியன்சுக்காக எடுத்திருக்கும் அச்சு அசல் தெலுங்குப்படம் என்பதற்கு அதுவே போதும்’.

    –இந்தப் பதிவை ஃபேஸ்புக்கில் நேற்று பாஹுபலி 2 பார்த்ததும் எழுதியிருந்தேன். அது எப்படி இந்தியாவின் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றைச் செய்த ஒரு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி எழுதலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். உண்மையைச் சொன்னால், எனக்கு எந்தப் படத்தின் மீதும் வெறுப்பு இல்லை. நான் பாஹுபலியைப் பற்றி மேற்சொன்னவாறு எழுதியதற்குப் பல காரணங்கள் உண்டு. விரிவாகக் கவனிக்கலாம்.

    முதலில், எனது முதல் பாக விமர்சனம் இங்கே. படிக்க விரும்புபவர்கள் படித்துக் கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், இரண்டு பாகங்களின் பின்னணியைப் பற்றியும் அதில் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.

    Baahubali 1- The Beginning- Review


    Spoiler Alert.

    முதலில், படத்தைப் பற்றிய என் கருத்து. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது, படத்தின் சில காட்சிகள் எனக்குப் பிடித்தே இருந்தன. துவக்கத்தில், சிவகாமியின் ஆணைப்படி, நாட்டைச் சுற்றிவந்து, மக்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கட்டப்பாவோடு மாறுவேடத்தில் பாஹுபலி கிளம்பும் காட்சியைத் தொடர்ந்த, குந்தளநாட்டுக்கு அவன் செல்வது, அங்கே தேவசேனாவைப் பார்ப்பது, காதல் கொள்வது, பன்றி வேட்டைக்கு அவர்கள் செல்வது, காதல் காட்சிகள் ஆகிய காட்சிகள்தான் அவை. படத்துவக்கத்தில் வரும் இக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் feel சுவாரஸ்யமாக உள்ளது.  அனுஷ்காவை இவ்வளவு அழகாக எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை. போலவே படத்தின் இடைவேளைக் காட்சியும் மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. எனக்குப் பிடித்தது.

    ஆனால், இவற்றுக்குப் பின்னர் வரும் காட்சிகளில் பல பிரச்னைகள் உள்ளன. அவை, கதைக்குள் போகமுடியாமல் தடுத்தன. எவை அவை என்று சொல்கிறேன்.

    1. சிவகாமிதேவி, முதல் பாகத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? ஒரு நேர்மை தவறாத ராணியாக, குடிமக்கள் மேல் பாசம் உள்ள ராணியாகவே, மிகுந்த கம்பீரத்துடன் அவர் காட்டப்படுகிறார். பாஹுபலியை முதல் பாகத்தில் இளவரசனாகவும் அறிவிக்கிறார். ஆனால் இந்தப் பாகத்தில், தேவசேனாவை பாஹுபலி அழைத்துவரும் இடத்தில் எப்படிக் காட்டப்படுகிறார்? பாஹுபலியைத்தான் தேவசேனா விரும்புகிறாள்; பல்வாள் தேவனை அல்ல என்ற உண்மை புரிந்ததுமே, மகனுக்கு வாக்குக்கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால், குடிமக்களின் மேல் அத்தனை பாசம் உள்ள ராணி, அந்தக் குடிமக்களுக்கு பாஹுபலியின் மீது எத்தனை பாசம் உள்ளது என்பதை நன்றாக அறிந்த ராணி, ஒரே கணத்தில், பாஹுபலியைப் பதவி இறக்கி, பல்வாள் தேவனை இளவரசன் ஆக்கிவிடுகிறாள். ஒரு ராணி, தனது சொந்தக் காரணங்களுக்காக இப்படி இஷ்டத்துக்குப் பதவிமாற்றம் செய்துகொண்டிருக்கலாமா? செய்யலாம். ஒரு கொடுங்கோல் ராணி அப்படிச் செய்யலாம். மண்டையில் மசாலா இல்லாத ராணி அப்படி தாராளமாகச் செய்யலாம். ஆனால் எல்லா அம்சங்களிலும் சிறந்தவர் என்று நமக்குக் காட்டப்பட்ட சிவகாமியின் கதாபாத்திரம் இப்படிச் செய்தால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? இத்தனைக்கும் பாஹுபலி மக்களுக்காகச் சேவை செய்வதில் எந்தக் குழப்பமும் செய்யவில்லை. மக்களை நட்டாற்றில் விடவில்லை. கொஞ்சகாலம் முன்னர்தான் குந்தள தேசத்தில் நடைபெற்ற மாபெரும் படையெடுப்பைத் தோற்கடித்து, மகிழ்மதியையே காப்பாற்றியுள்ளான் வேறு (குந்தள தேசம், மகிழ்மதியின் எல்லையில் உள்ளது என்று படத்தில் சொல்லப்படுவதை மறந்துவிடவேண்டாம்).  எனவே, தான் தனது மகனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக, டமால் என்று     பாஹுபலியைப் பதவி இறக்கிவிட்டு, மகனை இளவரசனாக அவசரமாக அறிவிக்கும் சிவகாமிக்கும், முதல் பாகத்தில் அத்தனை சிறப்பாகக் காட்டப்பட்ட சிவகாமிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? ஏன் இத்தனை பெரிய முரண் இந்தக் கதாபாத்திரத்தில்? இத்தனைக்கும் இந்தப் பதவி மாற்றம் மக்களுக்காக அல்லவே அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முற்றிலும் சுயநலமான மாற்றம் இது. ஒரு  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் ஒரு லாஜிக் வேண்டாமா? இப்படித்தான் கண்டபடி ஒரு கதாபாத்திரத்தைச் சிதைப்பதா?

     

    1. பாஹுபலி தேவசேனாவைத் திருமணம் செய்கிறான். வில்லன் பல்வாள்தேவன், ஒன்பது மாதங்கள் சும்மாவா இருந்தான்? எந்தப் பிரச்னையும் செய்யவில்லையா? கரெக்டாகக் குழந்தை பிறக்கப்போகும் நேரத்தில்தான் பிரச்னை செய்வானா? அப்படியென்றால் அவன் வில்லனா இல்லை பைத்தியமா? ஏனெனில், ஒன்பதாவது மாதம்தான் பாஹுபலி மனைவியோடு அரண்மனை விட்டு வெளியேறவேண்டும். அப்போதுதான் குழந்தை பிறக்கையில் பாஹுபலியைக் கட்டப்பா கொல்ல முடியும். எனவே, நடுவே எதையும் காட்டத் தேவையில்லை. ஆடியன்ஸ்தான் நாம் எதைக் காட்டினாலும் நம்புவார்களே? பக்கா தெலுங்கு டெக்னிக். அப்படியே, பல்வாள்தேவனின் நோக்கம்தான் என்ன? நாட்டை ஆளவேண்டும். இதைத்தவிர, பாஹுபலியைப் போட்டுத்தள்ள வேண்டும். ஓகே. ஆனால் பல்வாள்தேவனைப்பற்றி எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. ஆங்காங்கே வருகிறான். க்ளைமேக்ஸில் சண்டை போடுகிறான். அவ்வளவே. ஒரு உறுதியான வில்லனாக இல்லாமல், சப்பை வில்லனாக மட்டுமே பல்வாள்தேவன் இருக்கிறான்.

     

    1. தன் மனைவியை மட்டும் இல்லாமல், போகிற, வருகிற அத்தனை பெண்களையும் கண்டபடி தடவும் ஒருவனை பாஹுபலி கொல்கிறான். கொல்வதற்கு முன்னர், அவனது விரல்களை வெட்டியதற்காக தேவசேனாவைக் கைது செய்து இதே சிவகாமிக்கு முன்னர் நிறுத்துகின்றனர். அப்போது விசாரணை நடக்கிறதா? குற்றம் சாட்டப்பட்டவனை மட்டுமே விசாரிக்கின்றனர். தேவசேனா, உண்மையைச் சொல்ல, அதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். சத்தியசந்தையாகப் போற்றப்படும் சிவகாமி கூட உண்மையைத் தீரவிசாரிக்காமல், அவசர அவசரமாக தேவசேனாவுக்கு தண்டனையே கொடுக்க நினைக்கிறாள். ஏன்? தன்னை முகத்துக்கு நேராகக் கேள்வி கேட்டவள் தேவசேனா என்ற காழ்ப்பினால் மட்டுமே. மறுபடியும் கேட்கிறேன். அப்படியென்றால் சிவகாமியின் கதாபாத்திரம் உண்மையில் எப்படிப்பட்டது? ஏன் கண்டபடி இந்தக் கதாபாத்திரத்தை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார்கள்? அவ்வளவு பெரிய சபையில் இதைக்கூடவா சரியாக விசாரிக்காமல் டுபாக்கூர்தனமான தீர்ப்பு வழங்குவார்கள்? இது ஏனென்றால், அரண்மனை விட்டு பாஹுபலி வெளியேற்றப்படவேண்டும் . அப்படியென்றால் என்ன செய்யலாம்? எழுது ஒரு சீனை. வெட்டு விரல்களை. யாரையும் விசாரிக்காதே. கொல்லு அவனை. அவசரமான தீர்ப்பு வழங்கு.. வெளியேற்று இருவரையும். இதற்குத்தான்.

     

    1. பாஹுபலி அரண்மனையை விட்டு வெளியேறியாகிவிட்டது. இதன்பின் வில்லன் பல்வாள்தேவன் என்ன செய்கிறான்? ஒருவனைத் தேர்வு செய்து, அவனிடம் தந்தை பிங்களதேவனை விட்டு, பல்வாள்தேவனைக் கொன்றால்தான் இனி பாஹுபலி நிம்மதியாக இருப்பான் என்று சொல்கிறான். அவன் ஒரு மரமண்டை (???!!) என்பதால் பல்வாள் தேவனைக் கொல்லச் செல்ல, அங்கே பல்வாள்தேவன் இதை எதிர்பார்த்து, அவனைக் கொல்கிறான். இதெல்லாம் எதற்கு? சிவகாமியிடம் இதைச் சொல்லி, பாஹுபலிதான் பல்வாள்தேவனைக் கொல்ல ஆள் அனுப்பினான் என்று சொல்லி, பாஹுபலியைக் கொல்ல ஆணை பிறப்பிக்கவேண்டுமாம் (??!!). இதில் எங்காவது லாஜிக் இருக்கிறதா? எதைச்சொன்னாலும் சிவகாமி நம்பிவிடுவாள் என்றால், முதல் பாகத்தில் பெரிய சூரி (சூரனுக்கு எதிர்ப்பதம்) போல அவளை ஏன் காண்பித்தீர்கள்? ஏனெனில் அது முதல் பாகம். அப்போது எதை வேண்டுமானாலும் சொல்வோம். இது இரண்டாவது பாகம். இதிலும் எதை வேண்டுமானாலும் சொல்வோம். நாங்கள் எதைச் சொன்னாலும் நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்ற தெலுங்கு டெக்னிக்தான். கூடவே, அந்த மரமண்டை, பாஹுபலியின் கத்தியை வைத்துக்கொண்டு இறந்தால், உடனடியாக பாஹுபலியை அழைத்து விசாரிக்காமல், முட்டாள் போல அவனைக் கொல்ல வேண்டும் என்றா சிவகாமி தீர்ப்பு சொல்வாள்? இதில் ஏதேனும் லாஜிக் உள்ளதா?

     

    1. பாஹுபலியைக் கொல்லவேண்டும். உடனடியாகக் கட்டப்பா வரவழைக்கப்படுகிறான். அவனிடம் சிவகாமி, போய் பாஹுபலியைக் கொல் என்று சொல்கிறாள். கட்டப்பா மறுக்கிறான். உடனே சிவகாமி சொல்வது என்ன? நீ கொல்கிறாயா நானே கொல்லட்டுமா? உடனே கட்டப்பா சம்மதித்து விடுகிறார். பாஹுபலி என்ன கசாப்புக்கடையில் இருக்கும் ஆடா யார் கொல்லலாம் என்று ஷாட் பூட் த்ரீ போட்டுப் பார்த்து ஜாலியாக முடிவுசெய்வதற்கு? நாடே போற்றும் வீரன். ஒரு முன்னாள் இளவரசனை, சேனாதிபதியை இப்படித்தான் படுமுட்டாள்தனமாகத் திட்டம் (???!!) போட்டுக் கொல்வார்கள்? இதில் துளிக்கூட எந்த லாஜிக்கும் இல்லை. இல்லவே இல்லை.

     

    1. சரியப்பா. கட்டப்பா ஒத்துக்கொண்டுவிட்டார். கொன்றும் விட்டார். திரும்பி வந்து பல்வாள்தேவனின் சதியை சிவகாமியிடம் சொல்கிறார். உடனே சிவகாமி உண்மையை உணர்ந்துவிடுகிறாள். அப்படிப்பட்ட கட்டப்பா, படத்தின் ஆரம்பத்திலேயே, பிங்களதேவன், தன் மனைவி சிவகாமியைக் கொல்லவேண்டும் என்று பேசுவதை ஒட்டுக்கேட்டபின்னரும் ஏன் அதை சிவகாமியிடம் சொல்லாமல் மவுன விரதம் காத்துவந்தார்? அடேய் லூசு கட்டப்பா. இதை முன்னாலேயே சிவகாமியிடம் சொல்லியிருந்தால் பல்வாள் தேவனையும் பிங்களதேவனையும் கம்பி எண்ணவைத்துக் களி தின்ன வைத்திருக்கலாமே? சிவகாமிதேவிதான் யார் எதைச் சொன்னாலும் மண்டையை மண்டையை ஆட்டும் முட்டாள் என்றுதானே இந்தப் படத்தில் ராஜமௌலி எழுதிவைத்திருக்கிறார்? பின் ஏன் சிவகாமியிடம் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை? சொன்னால் படமே முடிந்துவிடும் என்பதால்தானே?

     

    1. இதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். சிவகாமி, இளம் பாஹுபலியுடன் தப்பிக்கும்போது கட்டப்பா என்ன செய்கிறார்? பல்வாள் தேவனைப் பொடனியிலேயே ஒரு அடி போட்டுத் தள்ளிவிட்டுவிடுகிறார். கட்டப்பா ஒரு அடிமை. சொன்னசொல் தவறாத அடிமை. இதைக் கட்டப்பாவே ஒத்துக்கொள்ளும் வசனமும் படத்தில் உண்டு. அப்படிப்பட்ட ஒரு அடிமை, இளவரசனை அள்ளையிலேயே போடும்போது இளவரசன் என்ன செய்திருக்கவேண்டும்? கட்டப்பாவைக் கைமா செய்திருக்கவேண்டாமா? ஆனால் இதன்பின்னரும் கட்டப்பா 25 வருடங்கள் அங்கேயே சேவகம் செய்கிறார். இத்தனைக்கும் பெற்ற தாய் சிவகாமியைப் பல்வாள்தேவனே அம்புவிட்டுக் கொல்வதையும் இரண்டு முட்டைக் கண்களால் பார்க்கிறார் வேறு. அப்படியென்றால் கட்டப்பாவும் லூசுதானே? எவனாவது, தன் அன்புக்குப் பாத்திரமான இளவரசன் இறந்து, அதைவிட அன்புக்குப் பாத்திரமான அரசியைப் பெற்ற மகனே கொன்றதைப் பார்த்துக்கொண்டும் அடிமுட்டாள் போல 25 வருடங்கள் அங்கேயே வேலை செய்வானா? இது ஏன் என்றால், அப்போதுதான் மகேந்திர பாஹுபலி வருவான்.. அவனிடம் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல ஒரு வீணாகப்போன தண்டம் வேண்டும். அது கட்டப்பாவைத்தவிர வேறு யார் என்று ராஜமௌலிகாரு யோசித்து ஆஸ்கர் வெல்லும் திரைக்கதை எழுதியதால்தான் (???!!). பின்னால் ஒரு இடத்தில், ராஜமௌலி இதை சமாளிக்க ஒரு வஜனம் எழுதியிருக்கிறார் பாருங்கள் – அற்புதமான வஜனம் அது. இந்த வஜனம் ஒன்றே ஆஸ்கர் பெறும் தகுதி கொண்டது – ‘அரசி குழந்தையுடன் இறந்துவிட்டாள் என்று எண்ணிதான் இங்கேயே 25 வருடங்கள் வேலை செய்தேன்’. இதுதான் அந்த வஜனம். அட மண்டையில் மசாலா இல்லாத கட்டப்பாவே- உன் அரசியை உன் கண் முன்னரே அவள் மகன் கொன்றிருக்கிறான். அதைப் பார்த்தபின்னுமா வெட்கம் கெட்டு அங்கேயே இருந்தாய்? ஒரே ஒரு எதிர்ப்பைக் கூடக் காட்டாத நீ ஒரு வெட்டி முண்டம் வீணாகப்போன தண்டம் தானே?

     

    1. இத்தனை ஃப்ளாஷ்பேக்கையும் கேட்கும் ஷிவு என்ற ஜுனியர் பாஹுபலி, உடனடியாக வீரம் கொண்டு கிளம்புகிறான். ஒரு பயிற்சியும் இல்லை. ஆனால் கச்சிதமாக அம்பெய்கிறான். அந்த அம்போ, ஒரு தலையைப் பல கிலோமீட்டர்கள் carry செய்து, பல்வாள்தேவனின் மண்டையின் அருகே போடுகிறது. ஒரு sniper போல இவ்வளவு துல்லியமாக அம்பெய்தும் ஜூ.பாஹுபலி, ஒரே அம்பில் பல்வாள்தேவனை அங்கிருந்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே? படம் சீக்கிரம் முடிந்திருக்குமே?

     

    1. ஜூ.பாஹுபலி, கோட்டையின் வெளியே இருக்கிறான். பல்வாள்தேவன், பாஹுபலியின் அம்மா தேவசேனாவைக் கடத்திக்கொண்டு கோட்டைக்குள் போய்விட்டான். பாஹுபலி, 50-60 அடி உயரம் உள்ள கோட்டையின் வாசலை ஒரே தாண்டாகத் தாண்டி (???!!) உச்சிக்குப் போய்விட்டான். பல்வாள் தேவன் அம்பெய்து அவனை வீழ்த்திவிட்டான் (தனது பரம எதிரி – குழந்தையிலேயே அவனைப் போட்டுத்தள்ளவேண்டும் என்று நினைத்தவன் மீது அம்பெய்கிறான். ஆனால் காயம் மட்டுமே படுத்துகிறான். கொல்லவில்லை. ஏன்? ஏனெனில் க்ளைமேக்ஸில் கிங்காங் Vs காட்ஸில்லா சண்டையை இருவரும் போடவேண்டுமே?).  இப்போது எப்படிக் கோட்டைக்குள் செல்வது? சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவனைப்போலவே ராஜமௌலியும் புஜங்கள் துடிக்க அங்குமிங்கும் பார்த்தபடி யோசிக்கிறார். ஆ!! கோட்டை வாயிலைச்சுற்றிப் பனைமரங்கள் உள்ளன. ஐடியா!! பாஹுபலி ஓடிச்சென்று பனைமரத்தை வளைக்கிறான். வீரர்கள் பிடித்துக்கொள்கின்றனர். எப்படியும் 60-70 வயதாகியிருக்கும் கட்டப்பாவை இழுத்துக்கொண்டு (முதியோர் வன்கொடுமை!) வளைக்கப்பட்ட பனைமரத்தின் மீது ஏறுகிறான். இவனுடன் 3-4 வீரர்களும் ஏறுகின்றனர். உடனே என்ன செய்கிறார்கள்? பனைமரத்தை விடுகின்றனர். வளைக்கப்பட்ட பனைமரம் சொய்ங் என்று நிமிர்கிறது. அத்தனை பேரும் மதிலைத் தாண்டி உள்ளே தூக்கி எறியப்படுகின்றனர். உடனேயே வானில், பல அடி உயரத்தில் அனைவரும் கச்சிதமாக இணைந்துகொள்கின்றனர். உள்ளே எறியப்பட்டதும் அதைவிடக் கச்சிதமாக, செம்மையாக லாண்டிங் ஆகிப் போர் புரிகின்றனர். அட்டகாசம்! அற்புதம்! இதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும் (???!!!). விஜய் ரயிலைத் தாண்டியது, ரஜினி பலூனில் ஜம்ப் செய்து சறுக்கியது ஆகியவற்றையெல்லாம் பார்த்துச் சிரித்தவர்கள், இந்தக் காட்சிக்குப் புளகாங்கிதம் அடைவதைப் பார்க்கவேண்டுமே?

     

    1. நான் முதலிலேயே சொன்னதுபோல, ஒரு நடமாடும் கிங் காங் குரங்கைப்போல் பாஹுபலி ஸ்டண்ட் செய்கிறார். ஒரு மனிதனால் துளிக்கூட முடியாத பல வேலைகளை ஜாலியாகச் செய்கிறார். இதெல்லாம் எப்படிச் சாத்தியம்? இதைக் கொஞ்சம் கூட ராஜமௌலி எங்கேயும் விளக்கவில்லை. பாஹுபலி ஒரு ஹல்க் போல உலா வருகிறான். அவ்வளவுதான். எந்தவிதமான லாஜிக்கோ பின்னணியோ இல்லாமல் எப்படி இதை நம்புவது? (இதற்கு நான் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பருக்குக் கொடுத்த பதில் இது – ‘சிம்பிளா சொல்லணும்னா, கதாபாத்திரத்தை நம்பத்தகுந்ததா உருவாக்கணும். அந்தக் கதாபாத்திரத்துக்கு நம்பத்தகுந்த பின்னணி இருக்கணும். பாஹுபலி ஒரு மனிதன். கடவுளோ கந்தர்வனோ இல்லை. சாதாரண மனிதன் ஒருத்தன் அவ்ளோ பெரிய சிலையை எப்படி அசைக்க முடியும்? என்ன காரணம்? எந்த ஃபேண்டஸி படமா இருந்தாலும், நல்ல படமா இருந்தா இப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பா உருவாக்கிருப்பாங்க. ஒருத்தன் மரத்தைப் பிடுங்கி அடிக்கிறான்னா அவனுக்கு அது எப்படிச் சாத்தியம்? எதுவுமே சொல்லாம, இஷ்டத்துக்கு ஒருத்தன் என்ன வேணா செய்யலாம்னு உருவாக்குவது ஆடியன்சை ஏமாற்றும் செயல்’. இது ஃபேண்டஸியே இல்லையே?). 
    2. முதல் பாகத்தில் என்ன நடந்தது? ஜூனியர் பாஹுபலி உள்ளே வரும்போது அத்தனை படைவீரர்களும் சந்தோஷப்பட்டு, பூமி அதிர வரவேற்பு கொடுக்கிறார்கள்தானே? அனைவருக்கும் பாஹுபலி மறுபடியும் வந்தது சந்தோஷம். ஆனால், இந்தப் பாகத்தில் என்ன நடக்கிறது? க்ளைமேக்ஸ் சண்டையில், அப்படி பாஹுபலியை ஆதரித்த ஒரு படைவீரன் கூட இவன் பக்கம் வரவில்லையே? அது ஏன்? ஏனென்றால் ராஜமௌலி அப்படி எடுத்துவைத்திருக்கிறார். அதனால்தான்.

     

    மேலே நான் சொன்ன காரணங்களை நன்றாக ஒருமுறை படித்துப் பாருங்கள். உலகம் முழுக்கவே பல ஃபேண்டஸிக்கள் வெளியாகி உள்ளன. அவற்றில், தரமான ஃபேண்டஸிக்கள், ஆடியன்ஸின் புத்திசாலித்தனத்தை அறவே மதிக்காமல், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடியன்ஸ் வளைவார்கள் என்று ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்காது. மாறாக, ஆடியன்ஸைப் பரிவுடன் நண்பர்களாகவே நடத்தும். பாஹுபலி அப்படிப்பட்ட ஃபேண்டஸி அல்ல. அல்லவே அல்ல. அது ஒரு சரிதிரப்படம். அவ்வளவே. இது ஃபேண்டஸி என்ற genreக்குள்ளேயே வராது.

    நான் சொல்லும் விஷயம் எளிமையானது. உங்களுக்குப் பாஹுபலி இத்தனை அபத்தங்களையும் தாண்டிப் பிடித்திருக்கலாம். தவறே இல்லை. ஆனால், அதில் இந்த அபத்தங்கள் உள்ளன என்பதைக் கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் என்பதையே நான் சொல்கிறேன். ராஜமௌலி ஒரு அக்மார்க் தெலுங்கு இயக்குநர். தெலுங்கு ஆடியன்ஸுக்காக இத்தனை ஓட்டைகள் உள்ள ஒரு திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் என்பது என் கருத்து. அதை நான் படம் பிடித்திருக்கிறது என்று சொல்பவர்கள் மேல் திணிக்கவே இல்லை. அதேபோல், இதுதான் இந்தியாவின் தலைசிறந்த காவியம்.. ஹா ஹூ என்று உணர்ச்சிவசப்பட்ட கருத்துகளை என் மீது திணீக்காதீர்கள். இந்தப் பதிவில் நான் சொல்லியிருப்பவைகளை ஒருமுறையேனும் படித்து, யோசித்துப் பாருங்கள்.

    வெறும் ஸிஜியை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு படத்தை – சொல்லப்பட்ட கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வளைக்கப்பட்ட படத்தை – எப்படிக் கண்மூடித்தனமாகப் பாராட்ட முடியும்?

    பின்குறிப்புகள்

    பி.கு 1- இந்தக் காட்சி, பாஹுபலி 2வில் எங்கே வருகிறது என்று தெரிகிறதா?

    பி.கு 2- பலபேர் செய்யும் வேலை என்னவென்றால், ஒரு படத்தின் சில காட்சிகள் பிடித்தாலேயே, படமே சிறந்தது என்று சொல்வதே. எனக்கும்தான் பாஹுபலி 2வின் சில காட்சிகள் பிடித்தன. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் மிகப்பெரும் ஓட்டைகள் இருப்பதும் தெளிவாகவே தெரிகிறது. அவைகளை விரிவாகவும் எழுதியிருக்கிறேன். இவைமட்டுமல்லாமல், எதைக் காட்டினாலும் ஆடியன்ஸ் தலையை ஆட்டுவார்கள் என்று ஆடியன்ஸைக் குறைந்த மதிப்பீடு செய்தே ராஜமௌலி பாஹுபலி இரண்டு பாகங்களையும் எடுத்திருக்கிறார். இப்படி ஆடியன்ஸை மதிக்காமல் எடுக்கப்படும் படங்களின் பிரச்னைகளைத்தான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

    பி.கு 3 – பாஹுபலி படம் உண்மையில் ஒரே படமாக எடுக்க நினைத்தே எடுக்கப்பட்டது. பின்னர், அதில் footage அதிகமாக இருக்கவே, இரண்டு பாகங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டாவது பாகத்தில், ஃப்ளாஷ்பேக் முடிந்து ஜூனியர் பாஹுபலி படைதிரட்டிக்கொண்டு செல்வதில் இருந்து இறுதிக்காட்சி வரையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முதல்பாகத்திலேயே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம் பாகத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் எவை என்றால், படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பெரும்பாலானவைதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் துளிக்கூட நம்பமுடியாமல், கிங்காங்கும் காட்ஸில்லாவும் மனித உருவில் மோதிக்கொள்வதைப் போலவே இருக்கின்றன. காரணம் அவை மூன்று வருடங்கள் முன்னரே முடிக்கப்பட்டுவிட்டதால்தான். முதல்பாகத்தில் இப்படிப்பட்ட நம்பமுடியாத காட்சிகள் பல உண்டு. அதுவே, இரண்டாம் பாகத்துக்கென்றே எடுக்கப்பட்ட புதிய காட்சிகளில் பல காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எவை என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன். இந்த வேறுபாட்டைக் கவனித்துப் பாருங்கள்.

    பி.கு 4 – எனது முதல்பாக விமர்சனத்திலேயே, படத்தைப் பற்றி நான் சொல்லியிருக்கும் ஒட்டுமொத்தக் கருத்துகள் உள்ளன. இவையெல்லாமே இரண்டாம் பாகத்துக்கும் பொருந்தும் என்பதால் அவற்றைத் திரும்பவும் சொல்லவில்லை. பாஹுபலி விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு இல்லை. எந்தப் படைப்பு வந்தாலும் விமர்சிக்கப்படவேண்டியதே என்பதை, உணர்ச்சிவசப்படுவதற்கு முன்னர் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.

     

    ]]>
    http://karundhel.com/baahubali-2-the-conclusion-2017-tamil-telugu/feed/ 12
    காற்று வெளியிடை (2017) http://karundhel.com/kaatru-veliyidai_2017-maniratnam-film-review/ http://karundhel.com/kaatru-veliyidai_2017-maniratnam-film-review/#comments Thu, 13 Apr 2017 18:23:04 +0000 http://karundhel.com/?p=5907 மணி ரத்னத்தின் படங்களைப் பற்றி விரிவாக அனலைஸ் செய்து நான் எழுதிய கட்டுரையை முதலில் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்ளலாம் – Mani Ratnam – The Waning Trajectory?

    இந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்த இறுதிப் பத்தி இங்கே.

    ‘தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த நூறு படங்கள் பட்டியலில் இடம்பெற்ற மணி ரத்னம், அவரது பாணியை அழுத்தமாகப் பதிக்கும் சிறந்த படம் ஒன்றை எடுக்கப்போவதற்காகத் தமிழ்த்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.  மணி ரத்னம் தமிழ்த்திரை ரசிகர்களிடம் ஏற்படுத்திய தலைமுறை மாற்றங்கள் அப்படிப்பட்டன. ஏற்கெனவே ‘நாயகன்’, ‘இருவர்’ போன்ற அற்புதமான படங்களைக் கொடுத்திருக்கும் மணி ரத்னத்தால் அது இன்னமும் முடியும் என்றே மனதில் தோன்றுகிறது.  மூளையோ, இனிமேல் அவரால் அப்படியெல்லாம் எடுத்தல் முடியாத காரியம் என்கிறது. பொறுத்துப் பார்க்கலாம்’.


    மீண்டும் ஒரு முறை காதலைப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் மணி ரத்னத்தின் திரைப்படம். மணி ரத்னத்தின் அத்தனை முந்தைய திரைப்படங்களிலும் காதல் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. படத்தில் கையாளப்படும் பிரச்னை பம்பாய்க் கலவரமாக இருந்தாலும் சரி, தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இன்னும் தாயைத் தேடும் குழந்தை, தொழிலதிபராக நினைக்கும் கிராமத்து ஆள், இரண்டு அரசியல்வாதிகளின் போட்டி, பெரும்புதையல் கிடைத்த கிராமவாசிகள் என்பதுபோல எதுவாக இருந்தாலும் சரி, அவரது பெரும்பாலான படங்களில், காதல் ஒரு தனி எபிஸோடாகவே வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அஞ்சலி மட்டும்தான் காதல் அவ்வளவாக explore செய்யப்படாத மணி ரத்னத்தின் படம். ஆனால் அதிலும் வேறுவகையான, லேசான காதல் ஒன்று உண்டு. இந்த அத்தனை படங்களிலும் படத்தின் பிரச்னை பேசப்படுகிறதோ இல்லையோ, காதல் அழுத்தமாகவே பேசப்பட்டிருக்கிறது. மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்படும் பிரச்னைகள் அழுத்தமாக இராது. அவற்றைச் சரியாகக் காண்பிப்பதில் அவருக்கு ஏதேனும் குழப்பங்களோ தயக்கங்களோ இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் சரியாக இல்லை என்றாலும், இதுவரை அவரது படங்களில் காதல் மேலோட்டமாகக் காட்டப்பட்டதே இல்லை. கடும் திராபையான ராவணனிலும் கூட ஓரளவு அழுத்தமான காதல் இடம்பெற்றிருந்தது. எல்லோராலும் விமர்சிக்கப்பட்ட கடல் படத்தில்கூட, காதல் comparitively நன்றாகவே காட்டப்பட்டிருந்தது. ஓ காதல் கண்மணி மேலோட்டமான படம்தான். ஆனால் படம் முழுக்கக் காதலே முக்கியமான பிரச்னை.

    இப்படி, எந்தப் படமாக இருந்தாலும் காதலை அழுத்தமாகக் காட்டியிருந்தவர் மணி ரத்னம். வேறு பிரச்னைகளைக் கையாளும் படங்களிலேயே இப்படி என்றால்,  காதல் பற்றிய படமாக இருந்தால்? பல்லவி அனுபல்லவி, மௌன ராகம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), தில் ஸே, அலைபாயுதே என்று காதல் படங்களில் பிரம்மாதமான காட்சிகளை அமைத்தவர் மணி ரத்னம். அலைபாயுதேவில், திருமணத்துக்குப் பின் தாலியை மாதவன் ஒளித்து வைக்கும் காட்சி எப்படி? கேஷுவலாக, இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையை விமர்சித்திருப்பார். தில் ஸேயில், மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வட இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் சீக்வென்ஸ் ஒன்று உண்டு. இப்போது பார்த்தாலும் மனதைக் கவ்வும். இருவரில் எவ்வளவு அழுத்தமான காட்சிகள் இருந்தன? குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம், தனது கணவனுடன் ஓடிவரும் காட்சி எப்படி? கணவனுடன் படுத்துக்கொண்டே அவனுடன் போலியாகச் சண்டை போட்டு, அளவில்லாக் காதலுடன் முடியும் காட்சி எப்படி இருந்தது? தளபதியில் ரஜினியிடம், தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதை ஷோபனா சொல்லும் காட்சி இன்னும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. இதேபோல் நாயகன், மௌன ராகம், கீதாஞ்சலி, அக்னி நட்சத்திரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் காதலைக் கையாண்ட வணிக இயக்குநர்கள் பலர் உள்ளனர். அவர்களில் கட்டாயம் முதல் சில இடங்களுக்குள் மணி ரத்னத்தை அவசியம் வைக்க இயலும்.

    எனவே, காற்று வெளியிடை என்ற, காதலை முன்வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வெளியாகப்போகிறது என்றதுமே, என் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருந்தது. படத்தில் எதைப் பேசினாலும் சரி, காதல் கட்டாயம் தனி எபிஸோடாக, அழுத்தமாகக் காண்பிக்கப்படப்போகிறது என்றுதான் நினைத்தேன். இதனாலேயே, படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை. குடும்பத்தோடு (ஐந்து பேர்) இன்று மாலை படம் பார்த்தோம். எங்களில் ஒருவருக்குக் கூட, படம் திருப்தி அளிக்கவே இல்லை. நானாவது அவ்வப்போது வந்த சில ஷாட்களை ரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் Shreeக்கும் சரி, அவளது பெற்றோருக்கும் சரி, படம் தலைவேதனை அளித்தது என்று அறிந்துகொண்டேன். படம் பார்த்ததில் ஒரே நன்மை, ஒன்றரை வயது நிலா, கைதட்டி ஆரவாரம் செய்து படம் முழுக்கப் பார்த்ததுதான். இதுதான் அவளது முதல் படம். துளிக்கூட அழாமல், சிரித்துக்கொண்டே பார்த்தாள்.

    படம் ஏன் எனக்குப் பிடிக்கவில்லை என்று விரிவாகச் சொல்ல முயல்கிறேன்.

    1.  படத்தின் கரு 

    ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒருவனுக்கும், மனம் முழுக்க இனிமை நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் கரு. அப்படி ஆணாதிக்க மனப்பான்மை உடையவன் ஒரு போர் விமானி. அந்தப் பெண் ஒரு மருத்துவர். இவர்களுக்கு அறிமுகம் நேரும் காட்சி நன்றாக இருக்கிறது. விபத்தில் படுகாயம் அடைந்த விமானியை, புதிதாக மருத்துவமனைக்கு வந்திருக்கும் அந்தப் பெண் சிகிச்சை அளித்துக் குணமாக்குகிறாள். ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னர், வேறு எந்தக் காட்சியிலும் அழுத்தம் இல்லை. மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட காட்சிகளாகவே அவை இருந்தன. ஏர்ஃபோர்ஸ் தலைமையகத்தில் நடக்கும் நடனக்காட்சி, அதன்பின் நாயகன் வருண் சக்கரபாணிப் பிள்ளை (தேவையே இல்லாத சாதி reference வேறு நடுவில் வந்து குதிக்கிறது), நாயகி லீலாவை விமானத்தில் அழைத்துச் செல்வது, இருவருக்கும் காதல் வருவது, லீலாவைத் தொடர்ந்து வ.ச பிள்ளை அவமானப்படுத்திக்கொண்டே இருப்பது, இருவரும் பிரிய நேர்வது, பின்னர் சேர்வது ஆகிய எந்தக் காட்சியிலும், நின்று நிதானித்து நகரக்கூடிய அழுத்தம் இல்லை. அவசரமாகவே காட்சிகள் நகர்கின்றன. இதனால் அந்தக் காட்சிகளில் ஒன்ற முடிவதில்லை (இந்த இடத்தில் ஒரு பழைய நினைவு – நாம் மேலே பார்த்தோமே, குருவின் மனைவிக்கும் குருவுக்கும் கட்டிலில் நேரும் செல்லச்சண்டை, அதை மறுபடி ஒருமுறை பாருங்கள் – நான் சொல்வது புரியும். அதில் சொல்லப்படும் உணர்ச்சிகள் அத்தனை இருக்கும்). காட்சிகளில் ஒன்ற முடியாததால், அவர்களின் பிரச்னையை நாம் தள்ளி நின்று தூரமாகக் கவனிக்கும்படி நேர்கிறது. இதனால் துளிக்கூடப் படத்தோடு ஒன்ற முடிவதில்லை.

    கூடவே, நாயகன் போர்விமானி என்பது எதற்காக? நாயகன் சார்ந்த விமானக் காட்சிகள் படத்தில் எங்கேயும் முக்கியமான பங்கு வகிக்கவில்லையே? உதாரணமாக, நாயகனில், ஹீரோ தாதா என்றால், அவனது தாதா வேலைகள்தான் படத்தில் முக்கியமானவை. அதனுள் ஆங்காங்கே பிற சம்பவங்கள் காட்டப்படும். போர்விமானி என்பது, ஜாலியாக வேலைக்குச் செல்வதுபோன்ற விஷயம் இல்லை. அது கட்டாயம் தனிப்பட்ட, வித்தியாசமான வேலைதான். அப்படி ஒரு வேலையில் இருக்கும் நாயகன், அது சார்ந்த எதையுமே செய்யாமல் ஹீரோயின் பின்னாலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறானே? அது ஏன்? ஏதோ சடங்கு போல, குண்டுவீசச்சென்று கைதாகிறான். அந்தப் பாகிஸ்தான் எபிஸோடிலும் அழுத்தம் இல்லையே? சிறையில் ஜாலியாக ஹீரோ மழையில் வாக்கிங் செல்கிறான்; சுவற்றை நோண்டுகிறான்; தப்பிக்கிறான். அதுகூடப் பரவாயில்லை. தப்பித்தபின்னர் என்ன செய்கிறான்? முன்பு இருந்ததை விடவும் கேஷுவலாக, ஏதோ இன்பச்சுற்றுலா செல்வதுபோல பஸ் பயணம் செய்து ஆஃப்கன் எல்லையை அடைகிறான். பிடித்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்னும் ஜாலியாக பாம் செய்து வெடிக்கிறார்கள். பின்னால் வீரர்கள் துரத்துகிறார்கள். வழியில் ஒரு லாரியில் ஏறித் தப்பிக்கிறான். உடனேயே பின்னல் துரத்தும் கமாண்டர் என்ன சொல்கிறார்? “அவனைச் சுடாதீர்கள். அவன் உயிரோடு வேண்டும்”. அடப்பாவிகளா? எந்த ஊர் ராணுவத்தில் இவ்வளவு நல்ல கமாண்டர்கள் கிடைக்கிறார்கள்?

    சிறையில் இருந்து தப்பிக்கும் பகுதிகள் எல்லாமே நிஜக்கதைதான். ஃப்ளைட் லெஃப்டினண்ட் திலீப் பாருல்கர் என்பவர், 1971 பங்களாதேஷ் போரின்போது இதேபோல் பிடிக்கப்பட்டு இதைப்போலவே சுவற்றில் ஓட்டை போட்டு பஸ்ஸில் தப்பித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லவந்தது, அப்படிப்பட்ட சம்பவங்களை மேலோட்டமாகக் காண்பித்திருக்கத் தேவையே இல்லை. பாகிஸ்தான் எபிஸோடெல்லாம் தனிப்படத்துக்கான சம்பவங்கள். அதேபோல் ஆணாதிக்க வெறியுள்ள நபர் ஒரு பெண்ணைக் காதலிப்பதெல்லாம் இன்னொரு தனிப்படம். இரண்டு படங்களையும் இணைத்து அரைவேக்காட்டாக ஆக்கிவிட்டார் மணி ரத்னம் என்றுதான் படம் முடிகையில் தோன்றியது.

    2. கதாபாத்திரங்கள்

    கதாநாயகனாக வரும் வ.ச பிள்ளை எப்படிப்பட்ட நபர்? ஈகோயிஸ்ட். அப்படிப்பட்ட ஒரு நபர், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கட்டாயம் பல பிரச்னைகள் ஏற்படும்தான். ஆனால் அவைகளையெல்லாம், மிகவும் தட்டையாக, அந்தப் பெண்ணைப் பலர் முன்னிலையில் கத்துவது, சொன்ன தேதிக்கு ரிஜிஸ்டர் திருமணம் செய்ய வராமல் இருப்பது போன்ற சம்பவங்களிலேயே எஸ்டாப்ளிஷ் செய்ய முயன்றிருப்பதுதான் படத்தை அலுப்புள்ளதாக்குகிறது. உண்மையில் இந்த ஒட்டுமொத்தப் படத்தின் கதையையும் ஒரே மணிநேரத்தில் சொல்லிவிடமுடியும். அவ்வளவுதான் தாங்கும். அப்படிப்பட்ட, குறைவான கனமுடைய கதையை இரண்டேகால் மணி நேரம் சொன்னால் எப்படி எடுபடும்?

    படத்தின் ஹீரோ இயல்பிலேயே பெண்களை இஷ்டத்துக்குக் கையாள்பவன் என்றுதான் வசனங்களிலேயே சொல்லியாயிற்றே? பின் எதற்கு வ.ச பிள்ளையின் தந்தை பெரிய பிள்ளையை வேறு காட்டி, அவர்கள் குடும்பத்தைக் காட்டி, அவர் தனது மனைவியை எடுத்தெறிந்து பேசுவதைக் காட்டி, ‘ஆகமொத்தத்தில் வ.ச பிள்ளையின் முரட்டுக்குணம் எங்கிருந்து வந்தது தெரியுமா? அவன் தந்தை பெரிய பிள்ளையிடமிருந்துதான்’ என்று காட்டுவதற்காக எதற்கு அந்த மருத்துவமனைக் காட்சி? அதிலும் பெரிய பிள்ளையின் குடும்பமே பாஸந்தியில் முக்கியெடுத்த சேட்டுகள் போலவே இருக்கிறார்கள் வேறு. அப்படி இருந்தாலும், நாயகன் தமிழண்டா என்று நிரூபிப்பதற்குத்தான் பெரிய பிள்ளையைக் காட்டினார்கள் போலும். சாதிப்பெயரைப் படத்தில் திணிப்பது என்று முடிவெடுத்தபின்னர், நாயகனுக்குப் பேசாமல் நான் முதலிலிருந்து எழுதுவதுபோல, வ.ச பிள்ளை என்றே பெயர் வைத்திருந்தால் முடிந்தது. தமிழன் லிங்க் எஸ்டாப்ளிஷ் ஆகியிருக்கும். இத்தனை பெரிய சேட்டுக்குடும்பத்தைக் காட்டி, மன்மோகன்சிங் தமிழ் பேசுவது போல ஒரு கலர் கலர் பாட்டை வேறு கா……ட்டியிருக்கத் தேவையே இல்லை என்று தோன்றியது. அந்தக் குடும்பம் சார்ந்த காட்சிகள் முழுக்க முழுக்க திராபைகளாகவே இருந்தன (இன்னொரு ஒப்பீட்டை செய்யாமல் இருக்க முடியவில்லை. தில் ஸே படத்திலும் ஒரு பெரிய குடும்பம் நாயகனுக்கு இருக்கும். ஆனால் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு இயல்பானவை அவை?)

    அதேபோல், இந்தப் படத்திலும் பாரதியார் வெறி. ராவணனில், நாயகியைக் கடத்தும் வில்லன், பாரதியார் பாட்டை எசப்பாட்டாகப் பாடிக்கொண்டுதான் நாயகியைக் கடத்துவான். அப்போதே பயங்கர எரிச்சல் வரும். இதிலும், துவக்கத்திலேயே, பாரதியார் பாட்டை வ.ச பிள்ளை பாடத் துவங்கியதுமே அதே கடுப்பு எழுந்தது. அனேகமாகப் படத்தின் வேறு காட்சிகளிலும் இது வரும் என்று நினைத்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் வரவில்லை. மீன்குழம்புடன் பாரதியார் பாடலை ஊட்டி வளர்த்த தாய், ராஷ்ட்ரபாஷாவில் இறுதி பண்டிட் பரீட்சையெல்லாம் பலமுறை எழுதித் தேர்ச்சி பெற்றிருப்பவர் போலவே தோன்றியது. எனவே அந்த வசனம் வந்ததும் சிரிப்பு வந்துவிட்டது. பிள்ளை, பாரதியார் பாடல் என்ற ரெஃபரன்ஸ் எல்லாமே நாயகன் பச்சைத் தமிழன் என்று எஸ்டாப்ளிஷ் செய்வதற்குத்தானா? ஆம் எனில் எடுபடவில்லை என்றுதான் சொல்லமுடியும்.

    உலகிலேயே, மணி ரத்னம் படத்தில்மட்டும்தான் நாயகன், ‘என் ஆசை ராணியே.. பச்சக்கிளியே’ என்றெல்லாம் நாயகியை அழைப்பான் போலும். எத்தனை செயற்கையான வசனங்கள் இவை? கேட்கும்போதே எரிச்சல் வந்தது. இதையெல்லாம் யாருமே மணி ரத்னத்திடம் சொல்வதில்லையா? ஆனால் இதெல்லாமே ராவணனில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது (??!!).

    அடுத்ததாக, நாயகி. நாயகியின் பின்னணிக்கு மணி ரத்னம் கஷ்டமெல்லாம் படவில்லை. எப்படி மணி ரத்னத்தின் சிஷ்யர் அழகம்பெருமாள், வி.கே.ராமசாமியை டும் டும் டும்மில் வைத்தாரோ, அப்படி டெல்லி கணேஷை ஒரு செட் ப்ராப்பர்ட்டியாக வைத்துவிட்டார். முடிந்தது கதை. இவ்வளவுதான். மேலும் அவளது குடும்பம் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வருகின்றன. அவளது அண்ணன், அவள் பனிரண்டாவது படிக்கும்போதே இறந்துவிட்டான் என்பது கட்டாயம் ஒரு முக்கியமான, கனமான தகவல்தான். ஆனால் அதுவுமே திரைக்கதைக்குப் பயன்படவே இல்லை. ஓரிரு இடங்களில் ஹீரோ பரிதாபமாக வசனம் பேசுவதற்கு மட்டுமே உதவுகிறது.

    எனவே, ஹீரோ, ஹீரோயின் ஆகிய இருவரின் பின்னணிகளுமே தட்டையாக உள்ளன. ஆனால் மணி ரத்னத்தின் பிற படங்களில் ஹீரோ ஹீரோயின்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். மௌன ராகம் டைட்டில்களிலேயே ரேவதியின் சிறுவயதுப் புகைப்படங்கள் இருக்கும். அவற்றின்மூலம் நாயகியின்மீது ஆடியன்ஸுக்கு ஒரு பரிவு வந்திருக்கும். அலைபாயுதேவில் ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி எவ்வளவு அழுத்தமாக இருந்தது? ஏன்? சமீபத்திய ஓ காதல் கண்மணியில் கூட அது நன்றாகவே இருந்தது. ஹீரோ ஹீரோயின்களின் பின்னணி தட்டையாக இருந்தால், இயல்பிலேயே அவர்கள் மீது நமது கவனம் செல்லாது. இந்தப் படத்திலும் அவர்கள் மீது நம் கவனம் செல்லவில்லை.

    3. நடிப்பு

    ஹீரோ வருண் சக்கரபாணிப் பிள்ளையாக கார்த்திக். இந்தப் படம் பார்க்கையில்தான் எனக்கு மிகப்பெரிய உண்மை ஒன்று விளங்கியது. இத்தனை காலம் கார்த்திக்கை மீசை இல்லாமல் பார்த்ததே இல்லை என்பதால், அவரது நடிப்பில் பெரிய குறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இதில் மீசையில்லாமல் அவர் வசனம் பேசி நடிக்கையில்தான், இத்தனை நாள், மீசை அவரது முகபாவங்களை மறைத்து திசைதிருப்பியுள்ளது என்று புரிந்தது. தெளிவாகச் சொல்கிறேன். கார்த்தி இயல்பாகச் சிரிக்கையில், அவரது வாய் லேசாகக் கோணிக்கொள்கிறது. மீசை இருந்ததால் அது நமக்குத் தெரியவில்லை. மீசை இல்லாமல் முகமே மொழுக்கட்டீர் என்று இருப்பதால் இப்படத்தில் அந்தக் கோணல் நன்றாகத் தெரிகிறது. இதுவேதான் அவரது பிற முகபாவங்களுக்கும். மீசைதான் கார்த்தியின் காவலன். இனி மீசை இல்லாமல் கார்த்தி நடித்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அட்லீஸ்ட் ஒட்டுமீசையாவது ஓக்கே. எனவே, க்ளோஸப் மற்றும் மிட்ஷாட்களைத் தவிர்த்து லாங்ஷாட், முதுகைக் காண்பிப்பது ஆகியவற்றில் அவரது நடிப்பு பரவாயில்லை.

    நாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி (ஹைதாரி என்று நினைத்தேன். டைட்டிலில் ஹைதரி என்றுதான் போடுகிறார்கள்) மட்டும்தான் என்னைப்பொறுத்தவரையில் படத்தைத் தாங்குகிறார். அவரது முகபாவங்கள் பிரமாதம். குறிப்பாக, முதன்முதலில் வ.ச பிள்ளையோடு ஃப்ளைட்டில் ஏறிச்செல்லும்போது, ‘கத்தட்டுமா’ என்று கேட்டுவிட்டு, ஒரு கணம் தயங்கிவிட்டுக் கத்தும் காட்சி அட்டகாசம். அந்தத் தயக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். நான் சொல்வது புரியும். இப்படிப் பல காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார் அதிதி. எனவே அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

    அலைபாயுதேவில் இரண்டே காட்சிகளில் வீணடிக்கப்பட்ட விவேக் போல, இதில் ‘வீரத்தமிழர்’ ஆர்.ஜே.பாலாஜி. ஸ்கோப்பே துளிக்கூட இல்லாத கதாபாத்திரம். அந்த ‘ஓ’ காட்சி மட்டும் நன்றாக இருந்தது.

    இவர்களைத் தவிர, வேறு எந்தக் கதாபாத்திரமும் நினைவில் கூட வரவில்லை.

    படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாமல், தேமே என்று நான் பார்த்த இரண்டாவது மணி ரத்னம் படம் இது (அப்படிப்பார்த்த முதல் படம், ராவணன்). ராவணனிலாவது பாடல்கள் நன்றாக இருந்தன. இதிலோ நிஜமாகவே பாடல்கள் மிகவும் ஆவரேஜாகத்தான் இருந்தன. ஒரே ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. ரஹ்மான், யாரோ புதுமுக  இயக்குநருக்கு அவசரமாகப் போட்டுக்கொடுத்ததுபோலவே இருந்தன பாடல்கள்.  மிகமிக average பாடல்கள். பின்னணி இசை நன்றாக இருந்தது. குறிப்பாகக் க்ளைமேக்ஸில் அந்தக் குட்டிப்பெண் வருகையில் வரும் இசை. அது ரஹ்மானின் குரல்தானே?

    ஒளிப்பதிவும் பிரமாதம். ரவிவர்மன் அனுபவித்துச் செய்திருக்கிறார்.இந்தப் படம் பேசப்படுகிறது என்றால் அது இவரால் மட்டுமே என்பது என் கருத்து. அதிலும், ரெவனண்ட் போல மிகவும் செயற்கையான ஒளிப்பதிவு அல்ல ரவிவர்மனுடையது. காட்சிகளோடு சேர்ந்த இயல்பான ஒளிப்பதிவு என்பதால் மிகவும் பிடித்தது.

    4. படத்தின் பிரச்னை

    படத்தின் தலையாய பிரச்னை, இதன் கரு. உண்மையில் மிகவும் நல்ல கரு இது. பெண்களைப் பொருள்களைப் போல உபயோகிப்பவனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வந்தால் எப்படி இருக்கும்? இதில் explore செய்ய ஏராளமான விஷயங்கள் உண்டு. அவற்றை மட்டுமே கவனித்து ஆழமாக எழுதியிருந்தால், அவசியம் இது நல்ல படமாக வந்திருக்கும். இந்த சப்ஜெக்ட்டில் எனக்கே ஆழமான அனுபவங்கள் எல்லாம் உண்டு. அதை விட்டுவிட்டு, நாயகன், பைலட், பாகிஸ்தான், எஸ்கேப் என்றெல்லாம் கதை தாறுமாறாக வழிதவறியதால், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் படுத்துவிட்டது. அதிலும், இப்படிப்பட்ட ஒரு ஈகோயிஸ்ட் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, இப்படத்தில் வருவதுபோலமட்டும்தானா நடக்கும்?உண்மையில் இந்தப் பிரச்னை படத்தில் பேசப்படவே இல்லை என்றுதான் சொல்வேன். மணி ரத்னமா இதை எழுதினார்? ஆச்சரியமாக உள்ளது. நான் முதலிலேயே சொன்னதுபோல, உளவியல் பிரச்னைகளை அத்துபடியாகக் கையாளக்கூடிய திறமைபெற்றவர் அவர். ஏதோ அவசரகதியில் ஏன் இப்படியெல்லாம் தட்டையாக எழுதவேண்டும்? புரியவில்லை. போலவே, இறுதிக் காட்சியில், சந்தூர் சோப் விளம்பரத்தில் நாம் பல வருடங்களாகப் பார்க்கிறோமே? அப்படி, நாயகனும் நாயகியும் பேசுகையில் ஒரு குழந்தை ஓடிவந்து ‘மம்மீ’ என்று அழைக்கிறது. ‘அம்மாவா? இவளா?’ என்று அந்த சோப் விளம்பரத்திலேயே பலமுறை பார்த்தாயிற்று. சொல்லவருவது, துளிக்கூட ஒட்டாத பல காட்சிகளை வம்படியாக இதில் மணி ரத்னம் புகுத்தியுள்ளார் என்பதே.

    படத்தின் இரண்டாம் பிரச்னை அந்த பாகிஸ்தான் விவகாரம். ஏற்கனவே சொன்னதுபோல, இது ஒரு உண்மைச் சம்பவம். அதைப் படத்தில் வைக்க மணி ரத்னம் விரும்பியிருக்கிறார். எனவே, இரண்டு தனிப்பட்ட கதைகளை ஒன்றிணைத்து வெளியிட்டுவிட்டார். அதுதான் பிரச்னை. இரண்டு கதைகளும் சேரவே மாட்டேன் என்கின்றன. விடாப்பிடியாக இரண்டையும் பிடித்து இணைத்திருக்கிறார். படாரென்று இணைப்பு பிய்ந்து, இரண்டு கதைகளும் தெறித்துக்கொண்டு இரண்டுபக்கமும் ஓடிவிட்டன என்பது படம் பார்க்கையில் புரிகிறது.

    படத்தின் மூன்றாம் பிரச்னை, கார்த்தியை மீசையை மழிக்க வைத்தது. அட்லீஸ்ட் மீசையோடாவது கார்த்தி நடித்திருந்தால், இப்போது அவரது முகபாவங்களைக் கழுவி ஊற்றுபவர்கள் அமைதியாக இருந்திருக்கலாம். இனி மீசையை எடுத்துவிடவேண்டாம் என்றுதான் நம்மால் கோரிக்கை விடுக்கமுடியும் (இந்தப் பிரச்னை சூர்யாவுக்கு இல்லை என்பது கொஞ்சம் ஆசுவாச செய்தி).

    ஒரே ஒரு பாடல் கூடப் பிடிக்காமல், திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த முதல் மணி ரத்னம் படம் இது. கூடவே, average காட்சிகளும் சேர்ந்துகொண்டு, மிக மிக அலுப்பான, அசுவாரஸ்யமான ஒரு உணர்வையே அளித்தன. ஒரு மணி நேர டெலிஃபிலிமைப்போய் இரண்டேகால் மணி நேரம் எடுத்து, நம் பொறுமையைச் சோதித்துவிட்டாரே இந்த மணி ரத்னம் என்ற ஆற்றாமையும் தோன்றியது (படத்தில் ஒருசில நல்ல காட்சிகள் உண்டு. அறிமுக மருத்துவமனைக் காட்சி, முதன்முறை வானில் பறப்பது,  பனிப்புயல் வருகையில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்வது, க்ளைமேக்ஸின் வசனங்கள் என்று. ஆனால் படத்தின் நெகட்டிவ் அம்சங்கள் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டன).

    மணி ரத்னம் எப்போதும் bounce back செய்யக்கூடிய ஆள்தான். கடல் முடிந்ததும் ஓ காதல் கண்மணியை எடுத்தார். எந்த ஆடியன்ஸுக்காக அதை எடுத்தாரோ, அவர்கள் அப்படத்தைக் கொண்டாடவே செய்தார்கள். அப்படி, அனேகமாக அடுத்த படத்தில் குறிப்பிட்ட ஆடியன்ஸை அவர் குறிவைக்க முயலலாம். பொறுத்துப் பார்க்கலாம்.

     

    ]]>
    http://karundhel.com/kaatru-veliyidai_2017-maniratnam-film-review/feed/ 1
    Thor: Ragnarok (2017) – Sneakpeek http://karundhel.com/thor-ragnarok-2017-sneakpeek-teaser-breakdown/ http://karundhel.com/thor-ragnarok-2017-sneakpeek-teaser-breakdown/#comments Mon, 10 Apr 2017 18:58:06 +0000 http://karundhel.com/?p=5894 இதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம்.

    The Avengers – Detailed posts at karundhel.com


    Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை. Hope it is interesting to read.

    First things first. டீஸரை இங்கே பார்த்துவிடுங்கள்.

    பார்த்தாயிற்றா? இனி, உள்ளே போகுமுன்னரே, Spoiler Alert. இப்படத்தில் என்ன நடக்கப்போகிறது என்றெல்லாம் தெரியவேண்டாம் என்று நினைக்கும் நபர் என்றால், கிளம்பிவிடுங்கள்.


    முதலில், Ragnarok என்றால் என்ன?

    நம்மூரில் பிரளயம் என்று சொல்லப்படுவதுதான் ராக்னராக். ஓடினில் இருந்து தோரில் இருந்து அனைத்து தேவதைகளும் இந்தப் பிரளயத்தில் அழிந்து, ஆஸ்கார்ட் மற்றும் பிற உலகங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு வெள்ளத்தில் இருந்து எழும். அப்போது மறுபடியும் சிருஷ்டி துவங்கும். இதுதான் ராக்னராக் என்ற வார்த்தைக்கு அர்த்தம்.

    இந்தப் படத்தில், அஸ்கார்டுக்கு அழிவு வரப்போகிறது. எனவே இப்படத்தின் பெயர் அதைக் குறிக்கிறது.

    அஸ்கார்டுக்கு யாரால் அழிவு வரும்?

    பல படங்களிலும், பல கதைகளிலும் வரக்கூடிய விஷயம்தான் இது. சமீபத்தில் Wrath of the Titans படத்தில்கூட இது இடம்பெற்றது. கடவுளர்களின் தலைவர் ஸ்யூஸ் (ஸீயஸ் என்று தப்பாக அழைக்கப்படும் கடவுள்), தனது தம்பி ஹேடெஸ்ஸுடன் சேர்ந்து செய்யும் சாகஸம் அது. ஹேடெஸ்தான் பாதாளலோகத்தில் இருந்து வரும் ஆவிகளின் கடவுள். இந்த ஹேடெஸ், ஸ்யூஸின் இடத்துக்கு வரவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பது உண்டு.

    இதேபோல், நம் கதையில், அஸ்கார்டின் அரசர் ஓடின், இறந்தவர்களின் கிரகங்களான ஹெல் மற்றும் நிஃபல்ஹீம் ஆகிய கிரகங்களை அரசாள நியமித்த நபர்தான் ஹெலா. இவள்தான் ராக்னரோக்படத்தில் ஓடினுக்கும் அஸ்கார்டுக்கும் எதிராகப் புரட்சி செய்யப்போகிறாள். படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை கேட் ப்ளாஞ்செட் ஏற்று நடித்திருக்கிறார்.

     

     

    ஹெலா பற்றி ஒரு பேட்டியில் கேட் ப்ளாஞ்செட் சொல்கையில், ‘பல்லாண்டு காலமாக – பல யுகாந்திரங்களாக ஹெலா அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு இருந்திருக்கிறாள். ஒரு நாள் அதெல்லாம் சேர்ந்து வெடித்துச் சிதற, இப்படத்தில் நீங்கள் பார்க்கப்போகும் ஹெலா பிறக்கிறாள்’ என்று பேசியிருக்கிறார். எனவே ஹெலாவால் அஸ்கார்ட் பேரழிவுக்குள்ளாகப்போகிறது என்றே தெரிகிறது.

    அடுத்ததாக, இந்தப் படத்தில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு கதாபாத்திரம்- வாக்கெரீ (Valkyrie). இவளுக்கும் ஹெலாவுக்கும் பழைய கணக்கு ஒன்று உண்டு. டீஸரிலேயே அது வருகிறது. ஹெலாவோடு வாக்கெரீ சார்ந்த அஸ்கார்டின் படை மோதுகிறது. அதில் வாக்கெரீ தோற்கிறாள். தோற்றபின் அங்கிருந்து வெளியேறி, பிரபஞ்சத்தின் வேறொரு இடத்தில் தஞ்சம் அடைகிறாள்.

    வாக்கெரீ சேரும் இடம், க்ராண்ட்மாஸ்டர் என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் அதிக வயதான நபரின் இடம். இந்த க்ராண்ட்மாஸ்டர், Guardians of the Galaxy படத்தில் நாம் பார்த்த Collector என்ற கதாபாத்திரத்தின் சகோதரன். இந்த க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட். அப்படித்தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெஃப் கோல்ட்ப்ளம் விவரித்திருக்கிறார். ‘க்ராண்ட்மாஸ்டர் ஒரு ஹெடோனிஸ்ட்; வாழ்வின் பலவிதமான சுவைகளையும் மணங்களையும் தேடித் திரிபவர்’ என்று. டீஸரில்கூட, தன்னிடம் வரும் வாக்கெரீயிடம், ‘இன்று என்ன கொண்டுவந்திருக்கிறாய்?’ என்று க்ராண்ட்மாஸ்டர் கேட்கும் காட்சி உள்ளது.

    எனவே, அஸ்கார்டில் இருந்து பிரிக்கப்படும் தோர், அண்டவெளியின் வேறொரு இடத்தில் இருக்கும் க்ராண்ட்மாஸ்டரிடம் வந்து சேர்கிறான் என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. ஏன்? இந்தப் போட்டியில்தான் ஹல்க்க்உடன் அவன் மோதப்போகிறான். இந்தப் படமே, ஹல்க்கும் தோரும் இணைந்து செயலாற்றும் ஒரு Buddy Movie என்றுதான் சென்றவருடம் மார்வெல் அறிவித்திருந்தது. இந்த இருவரும் யதேச்சையாகச் சேராமல், மார்வெல்லின் கதைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் க்ராண்ட்மாஸ்டரின் முன்னிலையில் மோதல் ஒன்று நிகழ்ந்து, அதில் இருவரும் சேர்வது ஜாலியான அம்சம்தானே?

    சரி, டீஸரின்படி, தோர், ஹெலாவிடம் அகப்படுகிறான். ஹெலாவின் இருண்ட, ஆவிகள் சூழ்ந்த உலகில் சங்கிலிகளால் கட்டிப்போடப்பட்டு இறக்கப்படுகிறான். தோரின் பலம்வாய்ந்த ம்யோல்நீர் என்ற சுத்தியல், ஹெலாவால் சுக்கல்சுக்கலாக உடைக்கப்படுவதைக் காண்கிறோம்.  இதற்கு முன்னர் காமிக்ஸில் தோரின் சுத்தியல் மூன்றுமுறை உடைக்கப்பட்டிருக்கிறது (Thor Vs The Destroyer, Thor Vs Molecule Man & Thor Vs Bor). ஆனால் ஹெலாவினால் தோரின் சுத்தியல் உடைக்கப்படுவது இதுவெ முதன்முறை. எனவே, தன்னைவிடப் பலம்வாய்ந்த ஒரு எதிரியை முதன்முறையாக தோர் சந்திக்கிறான் என்றே பொருள்.

    டீஸ்ரில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. ஷாட் பை ஷாட்டாகக் கவனித்தால் தெரியும். ஹெலாவின் தலைக்கவசம் அதில் முக்கியமானது. பெரிய மான்கொம்புகள் போன்ற வஸ்துக்களுடனான அவளது தலைக்கவசம், ஒரு ஆயுதம். அது அசையக்கூடியது. எனவே, அந்த ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு அவள் ஏதேனும் சாகசங்கள் செய்யக்கூடும். அடுத்தபடியாக, அஸ்கார்டின் பாதுகாவலனான ஹெய்ம்டால் இதிலும் வருகிறான். இட்ரிஸ் எல்பா நடிக்கும் கதாபாத்திரம் இது. அதேபோல், தோர் காமிக்ஸ்களில் வில்லனாக இடம்பெறும் Skurge the Executioner இந்த டீஸரில் இருக்கிறான். மொட்டைத்தலையுடன் மிஷின்கன்னால் சுடும் ஷாட்டை கவனியுங்கள். இவனும் தோரும் பல காமிக்ஸ்களில் மோதியிருக்கிறார்கள். இவன் ஹெலாவுடன் இருக்கக்கூடும். அல்லது, ஹெலாவிடம் இருந்து தோர் தப்பிக்க உதவியிருக்கவும் கூடும் (அப்படி ஒரு இடம் காமிக்ஸ்களில் வருகிறது). ஹெலாவின் படையைப் பார்க்கிறோம். அவர்கள் செய்யும் அழிவைக் காண்கிறோம்.

    டீஸரைப் பார்க்கையில், இது கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி ட்ரெய்லர்கள் போலவே இருப்பதாகவும் தோன்றியது. இதற்குமுன்னர் வெளியான இரண்டு தோர் படங்களின் டீஸர்களை எடுத்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்வது புரியும். அவற்றில் துளிக்கூட நகைச்சுவையே இருக்காது. இதில் நகைச்சுவை உண்டு. கூடவே, கார்டியன்ஸின் ட்ரெய்லர்கள் போலவே, இதிலும் ஒரு குறிப்பிட்ட பாடல் வருகிறது. பாடல்களை எடுத்து உபயோகிப்பதில் கார்டியன்ஸ் ட்ரெய்லர்கள் புகழ்பெற்றவை. Blue Swede குழுவின் Hooked on a Feeling பாடல் முதல் கார்டியன்ஸ் டீஸரில் வந்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். அதேபோல, இதில் Led Zeppelin குழுவின் The Immigrants பாடல் வருகிறது. இப்பாடலின் வரிகளைப் படித்துப் பாருங்கள். வைக்கிங் கடவுளர்கள் பற்றியும், தோர் பற்றியும், அவனது சுத்தியல் பற்றியும் வரிகள் வருவது புரியும். எனவே, கார்டியன்ஸ் ட்ரெய்லர் போலவே இந்த டீஸர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இதைப் பார்த்தாலேயே புரிந்துவிடும். அதனாலேயேதான் இதில் நகைச்சுவையும் இருக்கிறது.

    அதேபோல், படத்தின் டீஸரில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் எண்பதுகளின் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களின் font. இதுவுமே மிகவும் ஜாலியான ஒரு மனநிலைக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது.

     

    என் அனுமானம் என்னவென்றால், இந்த டீஸரில் காட்டப்பட்ட அனைத்துமே, படத்தின் முதல் சில நிமிடங்களில் நடக்க நிறைய வாய்ப்பு உண்டு என்பதே. ஹெலா அஸ்கார்டைத் தாக்குகிறாள். தோர் சிறைப்படுத்தப்பட்டுத் தப்பிக்கிறான். வேறொரு பக்கம் போகிறான். அங்கே வாக்கெரீயால் சிறைப்படுத்தப்பட்டு, க்ராண்ட்மாஸ்டரிடம் வருகிறான். ஹல்க்குடன் மோதுகிறான். மோதியபின் இணைகிறான். இருவரும் சேர்ந்து ஹெலாவைப் பந்தாடுகிறார்கள். இதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

    நவம்பர் மூன்றாம் தேதி Thor: Ragnarok வெளியாகிறது. அதற்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் DC குழுமத்தின் Justice League வெளியாகிறது. பொதுவாகவே, பல்லாண்டுகளாகக் கவனித்து வருகையில், மார்வெல்லே டிஸியைவிடவும் மார்க்கெட்டிங், விளம்பரங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர். கூடவே, மார்வெல் படங்களில்தான் நாம் எதிர்பார்க்கும் அனைத்துமே இருக்கின்றன. டிஸியின் படங்கள் இதுவரை நகைச்சுவையைத் தொட்டதே இல்லை. எப்போதும் அழுதுவடியும் ஹீரோக்கள் டிஸியின் மற்றோரு சாபக்கேடு. இவையனைத்தையும், இதற்கு முன்னர் வெளியான பேட்மேன் Vs சூப்பர்மேன் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கட்டாயம் தோர்: ராக்னராக் தான் பிரம்மாண்டமாக ஜெயிக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. பேட்மேன், வொண்டர்வுமன், சைபோர்க், ஃப்ளாஷ், அக்வாமேன் ஆகிய ஐவரும், கூட சூப்பர்மேனும் இடம்பெறப்போகும் ஜஸ்டிஸ் லீக்கைவிடவும், தோரும் ஹல்க்கும் சேர்ந்து அதிரடி சாகஸங்கள் செய்யப்போகும் ராக்னராக்கில் நான் எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தான் நான் காத்திருக்கிறேன்.

    Will post more the moment new updates are available about Thor:Ragnarok.

    சென்ற வருடம் வெளியான வெகேஷன் ட்ரெய்லர் இங்கே.

     

    ]]>
    http://karundhel.com/thor-ragnarok-2017-sneakpeek-teaser-breakdown/feed/ 1
    மாநகரம் (2017) http://karundhel.com/maanagaram-2017-tamil/ http://karundhel.com/maanagaram-2017-tamil/#comments Sun, 02 Apr 2017 08:00:27 +0000 http://karundhel.com/?p=5889 முதலில் தாமதமான விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னர்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. கடும் திரைக்கதை வேலைகள்தான் காரணம்.

    திரைக்கதை என்பது எழுத்தாளனும் ஆடியன்ஸும் ஆடும் ஆட்டம். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் இருவருமே பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் ஆட்டம் பிரமாதப்படுத்தும். இல்லாவிட்டால், ஆடியன்ஸ் முட்டாள் என்று எழுதுபவன் நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு ஆடியன்ஸை அவமானப்படுத்துவதுதான் நடக்கும். தமிழில் பல படங்கள் இப்படிப்பட்டவையே. ஆடியன்ஸுக்கும் சிந்திக்கத் தெரியும்; அவர்களுக்கு உண்டான மதிப்பை அளிக்கலாம் என்று புரிந்துகொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் சொற்பம். அப்படி ஆடியன்ஸைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் மாநகரம் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

    படத்தின் துவக்கத்திலேயே, முதல் காட்சியில் இருந்தே கதை துவங்கிவிடுகிறது. கதையில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்கள் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்துவிடுகிறோம். அங்கிருந்து, இவர்களுக்குள் நிகழும் சிக்கல்களால் கதை நகர்ந்து, முடிவை எட்டுகிறது. இந்த முதல் காட்சியில், அனைவரும் ஒரே டாஸ்மாக்கில் சந்திப்பது மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது.  காரணம், ஒன்றிரண்டு தற்செயல்கள் என்பது மன்னிக்கப்படலாம். ஆனால் அத்தனை பேரும் எந்தவிதமான முன் காரணமுமே இல்லாமல் தடால் என்று ஒரு இடத்தில் இருப்பது – அங்கிருந்து பிரச்னை வெடிப்பது என்பது மிகமிகத் தற்செயல். நம்புவதற்கு மிகவும் கடினமானது.  இதைப்போலவே ஒரு காட்சி சூது கவ்வும் படத்தில் உண்டு. தாஸை மூவரும் சந்திக்கும் காட்சி. ஆனால் இது தற்செயலாக இருக்காது. காரணம் அவர்கள் அனைவருக்குமே அங்கு வரக்கூடிய காரணங்கள் முன்கூட்டியே தெளிவாக இருக்கும்.

    மாநகரம் திரைப்படத்தின் பெரிய பிரச்னை இதுதான். எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும், இவர்களுக்குள்ளேயேதான் கதை நகர்கிறது. யார் எங்கே சென்றாலும், அந்த இடத்துக்குப் பிற கதாபாத்திரங்களும் ஜாலியாக, கச்சிதமாக வந்துவிடுகிறார்கள். எனவே, எந்தக் காட்சி வந்தாலும், அங்கே என்ன நடக்கப்போகிறது என்று எளிதாக யூகித்துவிடமுடிகிறது. இது ஒன்றுதான் படத்தின் பிரச்னை.

    ஆனால் இந்தப் பிரச்னையும் முதலில் சில நிமிடங்களுக்கு மட்டும்தான்.  காரணம் திரைக்கதை. டாஸ்மாக் காட்சி முடிந்ததுமே படத்தில் நம்மால் ஒன்றிவிடமுடிகிறது. என்னதான் எல்லாக் காட்சிகளிலும் தற்செயல் சம்பவங்கள் நிகழ்ந்து,  பிற கதாபாத்திரங்கள் டாண் என்று வந்து நின்றுவிட்டாலும், படத்தை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் முழுதாக ரசித்துப் பார்க்க முடிகிறது. அதுதான் மாநகரத்தின் வெற்றி. இப்படி ஒரு தமிழ்ப்படத்தை முற்றிலுமாக ரசித்தது சூது கவ்வும் படத்தில்தான். அதற்கு முன்னர் ஆரண்யகாண்டம்.

    படத்தின் மிகப்பெரிய பலம், ராம்தாஸ். ராம்தாஸ் என்றால் யாருக்குமே புரியாமல், முனீஸ்காந்த் என்றால்தான் அனைவருக்கும் புரியும் அளவு முண்டாசுப்பட்டியில் பிரமாதப்படுத்தியவர். இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் எளிமையும், அதற்கு நேர் எதிரான அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அட்டகாசம். ராம்தாஸ் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஆடியன்ஸ் பிரம்மாதமான வரவேற்பு கொடுத்ததைக் காண முடிந்தது. வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். எனக்குமே மிகவும் பிடித்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் சிறுவனின் தலையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு earphoneல் போலீஸிடம் கேட்டுக்கேட்டு செயல்படும் காட்சி தமிழுக்குப் புதியது. அவசியம் அனைவருக்கும் பிடிக்கக்கூடியது. Black Humor.

    ராம்தாஸின் கதாபாத்திரத்துக்கு அடுத்தபடியாக, சந்தீப் கிஷன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். இவர் அறிமுகம் ஆகும்போது, இது ஹீரோவா இல்லை ரவுடியா என்று யோசித்தேன். காரணம் ஆஸிட் அடிக்கிறார். முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார். ஆனாலும் சற்று நேரத்துக்குப் பின் இவரது கதாபாத்திரம் இயல்பானதாக மாறிவிட்டது. எனக்குப் படத்தில் ஸ்ரீயின் கதாபாத்திரத்தை விட சந்தீப்பின் கதாபாத்திரம்தான் பிடித்தது. இவர்தான் படத்தின் active ஹீரோ. இவரால்தான் பல காட்சிகள் நகர்கின்றன. ஸ்ரீயும் நன்றாக நடித்திருக்கிறார்தான். ஆனால் அவர் எப்போதுமே react மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார். சார்லியும் அப்படித்தான். சார்லியும் ஸ்ரீயும் படத்தின் உணர்வுபூர்வமான தருணங்களுக்குச் சொந்தக்காரர்கள். இருவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

    ஆனால், ஒரு சிறிய விஷயத்தை மறக்க முடியவில்லை. ஆரண்யகாண்டத்தில் வரும் காளை கதாபாத்திரம் நினைவிருக்கிறது அல்லவா? அந்தக் கதாபாத்திரம் அப்படத்தின் உணர்ச்சிபூர்வமான தருணங்களை நமக்கு வழங்கியது. அதனால் அப்படமும் முழுமையான படமாக மாறியது. ஆனால் மாநகரத்தில் அப்படத்தை முழுமையானதொரு அனுபவமாக மாற்றக்கூடிய விஷயங்கள் சற்றே குறைவாக இருந்தன. ஏனெனில், படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் துண்டான மனிதர்கள்தான். அவர்களுக்கு எந்தவிதமான பின்னணித் தகவல்களும் படத்தில் இல்லை. இதுபோன்ற பல த்ரில்லர்களும் அப்படித்தான் இருக்கும். சூது கவ்வுமில் எந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி நமக்குத் தெரிந்தது? ஆனால் நாம் சொல்ல வருவது, ஆரண்யகாண்டத்தில் காளை, சூது கவ்வுமில் தாஸ் போன்ற கதாபாத்திரங்கள் வழங்கிய உணர்வுபூர்வமான தருணங்களை. மாநகரத்தில் சார்லிக்கு ஒரு பின்னணி உண்டு. நோய்வாய்ப்பட்டிருக்கும் மகன். ஆனால் அது படத்தில் ஒரு செய்தியாக மட்டும்தான் வருகிறது. அதனால் நேரும் உணர்ச்சிகள் ஆடியன்ஸின் மனதுக்குக் கடத்தப்படுவதில்லை. அதேபோல், ஸ்ரீயும் சார்லியும் இரண்டாம் பாதியில் நீண்டநேரம் எதுவும் செய்யாமலேயே சுற்றிக்கொண்டிருப்பது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. இதனால், படம் முழுதும் விறுவிறுப்பாகச் சென்றாலும் கூட, படம் முடிந்து வருகையில் ஒருசில காட்சிகள் மட்டுமே மனதில் தங்குகின்றன.

    எல்லாக் கதாபாத்திரங்களும் எல்லாக் காட்சிகளிலும் எல்லா இடங்களிலும் இருப்பது – இவர்களை எப்போதுபார்த்தாலும் இணைத்துக்கொண்டே இருக்கும் தற்செயல் சம்பவங்கள் – இதுமட்டும்தான் படத்தின் பிரச்னை. ஆனால், நான் சொன்னபடி, ஆடியன்ஸுக்கு இது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை என்பது படம் பார்க்கையில் உணரமுடிந்த விஷயம். மாநகரம் போன்ற வேகமான படங்கள் அவசியம் தமிழுக்குத் தேவை. நான் முதலிலேயே சொன்னபடி, இஷ்டத்துக்குத் தான்தோன்றித்தனமாக, ஆடியன்ஸ் முட்டாள்கள் என்று நினைத்து டுபாக்கூர் காட்சிகளுடன்  போலியாக எடுக்கப்படும் படங்களே ஓடும்போது, மாநகரத்தை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ]]>
    http://karundhel.com/maanagaram-2017-tamil/feed/ 3
    Life (2017) – English http://karundhel.com/life-2017-english/ http://karundhel.com/life-2017-english/#comments Sun, 26 Mar 2017 18:25:05 +0000 http://karundhel.com/?p=5885 ஒரு ஏலியன் படம் எப்படி இருக்கவேண்டும்? நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து இம்மி கூடப் பிசகாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Life. ரிட்லி ஸ்காட் எடுத்த Alien (1979) படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘ஏலியன்’ படத்தை இப்போது எடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான் இந்தப்படம் என்றே சொல்லிவிடலாம். பல காட்சிகள், ‘ஏலியன்’ படத்தில் இருந்து அப்படியப்படியே எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதில் எதுவுமே புதிதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் அதற்காக இந்தப்படம் மொக்கை என்றும் சொல்லமுடியாது. ஏன் என்று சொல்கிறேன்.

    ஒரு ஏலியன் இடம்பெறும் த்ரில்லர் எப்படி இருக்கவேண்டும்? ஏதோ ஒரு இடம். அந்த இடத்தில் ஒருசில நபர்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம். இவர்களுக்கு இடையே வந்து மாட்டிக்கொள்ளும் ஏலியன். அந்த ஏலியனால் ஒவ்வொருவராகக் கொல்லப்படும் நபர்கள். இறுதியில் இவர்களில் உயிர்பிழைத்திருக்கும் ஓரிரு நபர்களின் மூளையில், இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் இடையே இருந்து திடீரென்று ஒரு புதிய உண்மை ஃப்ளாஷ் ஆகி, அதனால் அவர்கள் அந்த ஏலியனை வெற்றிகொள்ளுதல். வெற்றியோடு வீடு திரும்புதல். இதுதான் ஏலியன் வில்லனாக இருக்கும் படத்தின் டெம்ப்ளேட். ஏலியன் வில்லனாக நடித்திருக்கும் படங்களையெல்லாம் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். Alien, Alien2, Alien3, Prometheus, Species, The Blob என்று ஏராள உதாரணங்கள் உண்டு. இவைகள் எல்லாமே நான் சொன்ன டெம்ப்ளேட்டின்படிதான் இருக்கும். ஏனெனில், விண்கலத்தில் மாட்டிக்கொள்ளும் ஏலியனை வில்லனாகச் சித்தரிக்கவேண்டும் என்றால் இப்படித்தான் காட்டமுடியும். இந்தக் கதையில் விண்கலம் என்பதற்குப் பதில் வீடு, ஏலியன் என்பதற்குப் பதில் பிசாசு என்று வைத்துக்கொண்டால் ஈவில் டெட் போன்ற படங்களை எடுத்துவிடலாம். எனவே இது ஒரு பொதுப்படையான டெம்ப்ளேட்.

    ஆனால், இந்தக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, படம் பார்க்க வரும்முன்னரே படத்தின் கதையைத் தெரிந்துகொண்டு திரையரங்கு வரும் ஆடியன்ஸை எப்படியெல்லாம் அதிரவைக்கமுடியும் என்று யோசித்தே எழுதப்பட்டிருக்கிறது இந்தப்படம். இதன் திரைக்கதையை எழுதியவர்கள், Deadpool படத்தை எழுதிய அதே Rhett Reese & Paul Wernick ஜோடிதான். ‘ஏலியன்’ படத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தத் திரைக்கதையையும் இவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஏலியன் படத்தில் இல்லாத இரண்டு விஷயங்கள் இதில் உண்டு. இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். Spoiler Alert. ஒன்று – படத்தின் ஹீரோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் முதலில் மண்டையைப் போடுகிறது. இரண்டு – படத்தின் முடிவு. அதை நான் சொல்லப்போவதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

    பிற ஏலியன் படங்களுக்கும் இதற்கும் உள்ள இன்னொரு வித்தியாசம், ஏலியனின் உருவ அமைப்பு. ஒரு பிரம்மாண்ட ராட்சதன் போல இல்லாமல், ஜெல்லி மீனும் ஆக்டோபஸும் கலந்த கலவை போல உள்ள ஏலியன், பயத்தை மேலும் கூட்டுகிறது. அதேபோல், ஏலியனைப்பற்றிய வசனங்கள் (ஏலியன் நம்மை விரோதியாக நினைப்பதில்லை; ஆனால், இரண்டு வித்தியாசமான உயிரின வகைகள் இருக்கும் ஒரு இடத்தில், அவற்றில் வலிமையான உயிரினம் கட்டாயம் பிற உயிரினத்தைக் கொன்றே தீரவேண்டும். அப்போதுதான் அது உயிர்பிழைக்க முடியும்) நன்றாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல், இதில் ரத்தம் சார்ந்த வன்முறை கொஞ்சம் அதிகம்.

    ஆனால், படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்களாக, எந்தக் கதாபாத்திரத்துக்கும் பின்னணியே இல்லை. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தனது மனைவிக்குக் குழந்தை பிறப்பதைப் பார்க்கிறது. அவ்வளவுதான். அனைவருமே துண்டான மனிதர்கள். ஒரு கேங்க்ஸ்டர் படத்தில் இப்படி வரலாம். சூது கவ்வும், Snatch, Lock stock and Two Smoking Barrels போன்ற படங்களில் இப்படிப்பட்ட மனிதர்கள்தான் வருவார்கள். பழைய ஏலியன் படங்களிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என்றாலும், இப்போது எடுக்கப்படும் படங்களில், உணர்வுபூர்வமான காட்சிகளின்போது ஆடியன்ஸ் படத்தோடு ஒன்ற, கதாபாத்திரங்களின் பின்னணி அவசியம் தேவை. அது இல்லாதது, படத்தின் பெரிய மைனஸ். கூடவே, எப்படியும் ஒவ்வொருவராக எல்லோரும் இறக்கப்போகிறார்கள் என்பது எளிதில் தெரிந்துவிடுகிறது. கதையில் புதுமையே இல்லாதது அடுத்த மைனஸ். ஆனால், இந்த மைனஸ்களை ஆடியன்ஸ் மறந்துவிடவேண்டும் என்ற நோக்கில்,ஒருசில திடுக் தருணங்களோடு விறுவிறுப்பான திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தருணங்கள் வருகையில் படம் விறுவிறுப்பாகவே செல்கிறது.

    அதுவே, விறுவிறுப்பான தருணங்களைத் தெளிவாக உணர்த்தியிருக்கும் திரைக்கதையில், சில முக்கியமான சம்பவங்கள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக, இவர்களின் distress signal கிடைத்ததும் கொஞ்சம் தள்ளி வரும் ஆளில்லாத விண்கலம் dock செய்யப்படும் காட்சி ஒரு உதாரணம். அது குழப்பத்தையே விளைவிக்கிறது. அதேபோல், அவ்வளவு நேரம் விண்வெளியில் காற்றே இல்லாதபோதுகூட சர்வைவ் செய்யத் தெரிந்த ஏலியனுக்கு, படத்தில் ஒரு கதாபாத்திரம் ஆக்ஸிஜனை உபயோகித்து எரியும் விளக்கைக் காட்டும்போது அதை ஓடிவந்து கட்டிப்பிடித்து கருணாஸ் பியர் பாட்டிலைக் கன்னத்தோடு வைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவதுபோலக் காட்சிகள் அமைத்திருப்பது சற்றே நகைச்சுவையாக இருந்தது. இதுபோலப் படத்தில் சில காட்சிகள் உண்டு. ஏலியனை சரியாக டிஃபைன் செய்யவில்லை.

    உங்களுக்குக் கேள்விகள் இல்லாமல், ஓரளவு விறுவிறுப்பான காட்சிகளோடு நன்றாகத் தெரிந்த கதையோடு ஒரு ஏலியன் த்ரில்லர் பார்ப்பதில் விருப்பம் இருந்தால் தாராளமாக இப்படத்தைப் பார்க்கலாம். ஆனால் என் கவலையெல்லாம், இதே கதையை வைத்துக்கொண்டு தாத்தா ரிட்லி ஸ்காட் அடுத்த ஏலியன் படத்தோடு கிளம்பிவிட்டார். விரைவில் Alien: Covenant படம் வெளியாகப்போகிறது. அது, அதே ஏலியன் கதைதான். அதுதான் பயமாக இருக்கிறது.

    ]]>
    http://karundhel.com/life-2017-english/feed/ 1
    ஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை http://karundhel.com/oscars-2017-awardshow-review-criticism/ http://karundhel.com/oscars-2017-awardshow-review-criticism/#respond Tue, 14 Mar 2017 20:00:45 +0000 http://karundhel.com/?p=5874 இந்தக் கட்டுரை, விருதுகள் வழங்கப்பட்டபின்னர் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதியது.


    சில நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருதுகளின் க்ளைமேக்ஸில், ‘லா லா லேண்ட்’ பட்டமே சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாகத் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, ’மூன்லைட்’ படத்துக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதைக் கவனித்திருப்பீர்கள். இந்த மாபெரும் தவறு எப்படி, ஏன் நடந்தது என்பதைவிடவும் (PWC நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்றுள்ளது), சிறந்த படமாக அறிவிக்கப்பட்ட மூன்லைட்டின் குழுவினர், லா லா லேண்ட் படத்தின் குழுவோடு மேடையைப் பகிர நேர்ந்தது என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. மூன்லைட், கறுப்பினத்தவர்களைப் பற்றிய படம். வெள்ளையர்களுக்குக் கறுப்பின மக்களின்மேல் எப்போதுமே ஒருவித அசூயை உண்டு. விருது மூன்லைட்டுக்கு என்று திருத்தி அறிவிக்கப்பட்டபின்னர், விழாவைத் தொகுத்தளித்த ஜிம்மி கிம்மெல், லா லா லேண்டுக்காகவே முதலில் பரிதாபப்பட்டார். இதனை நீங்கள் வீடியோவில் பார்த்தால் தெரியும். வெள்ளையர்களால், வெள்ளையர்களுக்காகவே நடத்தப்படும் ஒரு நிகழ்வில், சிறந்த படமாக ஒரு கறுப்பினப்படம் அறிவிக்கப்படும்போது, வெள்ளையர்களின் படம் தோற்றுவிட்டதே என்ற பரிதாப உணர்வே அரங்கில் அதிகம் மேலிட்டது. கூடவே, மூன்லைட்டுக்குக் கிடைத்திருக்கவேண்டிய உச்சபட்ச மரியாதை கிடைக்காமல், லா லா லேண்ட் குழுவோடே மேடையைப் பகிர நேரிட்டது.

    இதைத்தான் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

    மூன்லைட்டுக்கே சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது (மஹெர்ஷாலா அலி). அதேபோல், சிறந்த adapted திரைக்கதையையும் மூன்லைட் பெற்றது.

    சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டவர், பென் ஆஃப்லெக்கின் சகோதரர் கேஸி ஆஃப்லெக் – ’மேன்செஸ்டர் பை த ஸீ’ படத்துக்காக. இது மிகவும் நல்ல தேர்வு. இவருடன் போட்டியில் இருந்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். ஆனால், இதில் நகைச்சுவையான அம்சம், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவைத் துணைநடிகராக ஆஸ்கர் கமிட்டி எப்படித் தேர்வுசெய்தது என்பது ஆஸ்கர் கமிட்டிக்கு மட்டுமே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பது யோசிக்கப்படவேண்டிய அம்சம்).

    சிறந்த நடிகைக்கான விருது, எதிர்பார்க்கப்பட்டபடியே எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது (லா லா லேண்ட்). சிறந்த இயக்குநருக்கான விருதும் லா லா லேண்டுக்காக, டேமியன் சஸலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. முப்பத்து இரண்டே வயதில், இவ்விருதை வாங்கும் மிகவும் இளமையான இயக்குநர் இவரே. இவரது ‘விப்லாஷ்’ படத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். 2014ல் வெளியான அப்படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மிகவும் திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவர். அதேசமயம், மூன்லைட்டின் இயக்குநர் பேரி ஜென்கின்ஸும் லேசுப்பட்டவர் இல்லை. இவரும் ஒரு இளம் இயக்குநர்தான். 2008ல் வெளியான ’மெடிசின் ஃபார் மெலன்கலி’ படத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர். இம்முறை இவருக்குத்தான் இவ்விருது வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆஸ்கர் படங்களைப் பார்த்த பல விமர்சகர்களின் கருத்து. இவ்விருவருக்கும் பலத்த போட்டி நிலவியது. ஆனால் இறுதியில் லா லா லேண்ட் வென்றது.

    சிறந்த திரைக்கதைக்காக, மான்செஸ்டர் பை த ஸீ படம் விருது வென்றிருக்கிறது. இதுவும் நல்ல தேர்வே. இத்துடன் இடம்பெற்ற படங்களில், ‘ஹெல்ல் ஆர் ஹை வாட்டர்’ படம் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது. மிகவும் நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

    சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரப் பிரிவில், ‘சூசைட் ஸ்க்வாட்’ படம் விருது பெற்றிருக்கிறது. வழக்கமாக இப்படிப்பட்ட ஒரு வணிகப்படம் இவ்விருதை வெல்லும் வாய்ப்பு குறைவு. இந்தப் படமே ஒரு சராசரியான படமும் கூட என்றாலும், இந்தப் பிரிவில் பல்வேறு சூப்பர்ஹீரோக்களைக் கச்சிதமாக உருவாக்கியிருந்ததால், சரியாகவே இவ்விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் (ஆனால் இப்படத்தை விடவும் சிறந்த படமான ‘டெட்பூல்’, எந்தப் பிரிவிலும் தேர்வு செய்யப்படவில்லை).

    சிறந்த அனிமேஷன் படங்களில், ‘ஸூடோஃபியா’ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் வெளியான மிகச்சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. சந்தேகமில்லை. ஆனால், அத்துடன் இடம்பெற்ற ‘கூபோ அண்ட் த டூ ஸ்ட்ரிங்க்ஸ்’ படமும் மிகச்சிறந்ததொரு படம். உண்மையில் ஸூடோஃபியா ஒரு வழமையான கமர்ஷியல் படமே. ஆனால் கூபோ, சொல்லும் கதையிலும், எடுத்துக்கொண்ட கருவிலும் மிகச்சிறந்த கருத்துகள் பலவற்றைச் சொல்லியது.

    இந்த விழாவில், மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்று, இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் ‘சைலன்ஸ்’ படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது. வழக்கமாக ஸ்கார்ஸேஸி எடுக்கும் படங்கள் எப்போதும் ஆஸ்கர்களில் கவனிக்கப்படும். ஆனால், அவரது முப்பது வருடக் கனவுப்படமான சைலன்ஸ் இம்முறை எந்தப் பெரிய பிரிவிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

    இன்னும் பிற பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதுகள் குறித்து நீங்களே இணையத்தில் படித்திருக்கலாம்.

    ஆஸ்கர்களைத் தொடர்ந்து கவனிக்கையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இம்முறை அந்தக் கொடூரம் நடக்காமல், பல வெள்ளையரல்லாதோரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது ஓரளவு ஆசுவாசம் தரக்கூடியது. ஆனால், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துக்ளக் தனமாக அறிவித்திருக்கும் பல முட்டாள்தனமான சட்டங்களால் (சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் யுனைடட் ஸ்டேட்ஸினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது அவற்றில் ஒன்று), இரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹதி, இவ்விழாவைப் புறக்கணித்திருப்பதாக அறிவித்திருந்தார். அவருக்குத்தான் சிறந்த வெளிநாட்டுப் பட விருது வழங்கப்பட்டது (’த சேல்ஸ்மேன்’). இது எவ்வளவு பெரிய நகைமுரண்? அதேபோல், இவ்விழாவில், மெக்ஸிகோவைச் சேர்ந்த கேல் கார்ஸியா பெர்னால் விருது ஒன்றை வழங்க வருகையில், ‘ஒரு மெக்ஸிகனாக, ஒரு வெளிநாட்டுக்காரனாக, அங்கிருந்து யுனைடட் ஸ்டேட்ஸுக்கு வேலை நிமித்தம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளியாக, ஒரு மனிதனாக, நம்மையெல்லாம் பிரித்தாள நினைக்கும் எல்லாவிதமான சுவர்களையும் நான் எதிர்க்கிறேன்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்களால் பெரும்பான்மையான வெள்ளையர்களுக்காக விருதுகளை வழங்கும் ஆஸ்கர்களில் இதுபோன்ற பிரச்னைகளை நான் தீவிரமாகக் கவனிக்கிறேன். இவைதான் எனக்கு முக்கியமானதாகப்படுகின்றன. குறிப்பாக, நான் முதல் பத்தியில் சொல்லியிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

    ]]>
    http://karundhel.com/oscars-2017-awardshow-review-criticism/feed/ 0
    ஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை http://karundhel.com/oscar-nominations-2017-kumudam-article/ http://karundhel.com/oscar-nominations-2017-kumudam-article/#comments Mon, 13 Mar 2017 20:00:32 +0000 http://karundhel.com/?p=5870 குமுதத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டபோது எழுதிய கட்டுரை இது. விருதுகள் அளிக்கப்படுவதற்கு முன்னால். விருதுகள் அளித்ததற்குப் பின் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நாளை வெளியிடுகிறேன்.


    ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளின் நாமிநேஷன்களில் ஏதேனும் பிரச்னைக்குரிய அம்சம் இல்லாமல் இருக்காது. பொதுவாக ஆஸ்கர்கள் என்பது ஒரு whitewash. அதாவது, வெள்ளையர்களின் விழா. ஏதேனும் ஒப்புக்குச் சப்பாணியாக, வெள்ளையர்கள் அல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது ஒவ்வொருமுறையும் பிரச்னையாக விவாதிக்கப்படும். இதுபோலவே, இந்த முறையும் சர்ச்சைக்குரிய நாமினேஷன்கள் இல்லாமல் இல்லை. விரிவாகக் கவனிப்போம்.

    முதலில், சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில், La La Land மொத்தம் பதிநான்கு பிரிவுகளில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் எதிலெல்லாம் விருதுகளை அள்ளும் என்பது விரைவில் தெரிந்துவிடும். இது ஒரு சாதனை. இதற்கு முன்னர் இரண்டே படங்கள்தான் இத்தனை பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன (All about Eve – 1950 & Titanic – 1997). லா லா லேண்டின் இயக்குநர், டாமியன் சஸெல் (Damien Chazelle), ஆஸ்கர்களுக்குப் பரிச்சயமானவர்தான். 2014ல் வெளியான Whiplash படத்துக்காகச் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (ஆனால் வெல்லவில்லை). விப்லாஷ் உலகெங்கும் பெற்ற வரவேற்பு நமக்கே தெரியும். இது இவரது இரண்டாவது படம். இப்போது லா லா லாண்டை ஒரு ம்யூஸிகலாக எடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படக்கூடிய படமாக இருக்கிறது லா லா லாண்ட். அவசியம் ஒருசில விருதுகளை வாங்கப்போகிறது. இதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் படங்களில், Hell or High Water கட்டாயம் நல்ல தேர்வு. Hacksaw Ridge, இயக்கிய மெல் கிப்ஸனுக்காகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக, மெல் கிப்ஸனை ஆஸ்கர் கமிட்டி ஒதுக்கியே வைத்திருந்தது (2006ல், குடித்துவிட்டு வண்டி ஓட்டிக் கைதாகும்போது யூதர்களைக் கண்டபடி கெட்டவார்த்தையில் திட்டியிருந்தார் மெல் கிப்ஸன். இது இணையமெங்கும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து பலரும் கிப்ஸனின் மேல் கடுப்பாயினர்).

    இந்தப் பட்டியலில் இருக்கும் Arrival, ஒரு கடும் திராபை (திரைக்கதை ரீதியிலும், வசூல் ரீதியிலும்). இந்தப் படத்தை, இண்டர்ஸ்டெல்லாரை விஞ்சிவிட்டது என்றே இணையத்தில் சில விமர்சகர்கள் கருத்து இட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தெரியும்- இது ஒரு overhyped படம் என்று. ஒருவன், ஒரு மணி நேரமாக ஒரு வெங்காயத்தை உரித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அரைவல் அப்படிப்பட்டது. இதை இயக்கியவர் டெனிஸ் வில்லன்யூவ். இவரது முந்தைய படங்களான Prisoners மற்றும் Sicario ஆகியவையும் இதேபோன்று overhype செய்யப்பட்டவையே. இதனாலேயே இவருக்கு ஒரு அறிவுஜீவி இமேஜ் இருப்பதால் இந்தப் படமும் இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கும் Lion மற்றும் Fences ஆகியவையும் ஓரளவு நல்ல தேர்வுகளே.

    ஆனால், எந்தப் படம் உலகம் முழுக்க எதிர்பார்க்கப்பட்டதோ, எந்தப் படத்தை முப்பது வருடங்களாக இயக்கவேண்டும் என்ற கனவைச் சுமந்துகொண்டிருந்தாரோ, அத்தகைய இயக்குநரான மார்ட்டின் ஸ்கார்ஸேஸியின் Silence படத்தை ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவே இல்லை. இது இந்த ஆண்டின் மாபெரும் ஏமாற்றம். அதில் சந்தேகமே இல்லை. அரைவல் போன்ற அரத திராபைகளைத் தேர்வு செய்யும் கமிட்டி, சைலன்ஸை விட்டுவிட்டது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும், ஸ்கார்ஸேஸி போன்ற ஜீனியஸ் இயக்குநருக்கு எதிராக இத்தனை கொடூரமாக ஆஸ்கர் கமிட்டி செயல்படும் என்பது முற்றிலும் மனக்கசப்பையே தருகிறது (இப்படத்துக்கு, சிறந்த ஒளிப்பதிவின் கீழ் ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே). அதேபோல், சென்ற வருடக் கான் (Cannes) விழாவில் பெரிதும் பாராட்டப்பட்ட Loving படத்தையும் சிறந்த படத்துக்கான ஆஸ்கர்களில் கண்டுகொள்ளவில்லை.காரணம்? லவிங் படத்தின் கதை, அதில் உள்ள கதாபாத்திரங்களின் நிறம் ஆகியவையே.

    சிறந்த நடிகர் பிரிவில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (ஹாக்சா ரிட்ஜ்), ரையன் காஸ்லிங் (லா லா லாண்ட்), டென்ஸல் வாஷிங்டன் (ஃபென்ஸஸ்) ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான். இவர்கள் மூவருக்குமே பலத்த போட்டி உண்டு. மூவரில் யாருக்குக் கிடைத்தாலும் நல்லதுதான். நான்காவதாகக் கேஸி ஆஃப்லெக் (பென் ஆஃப்லெக்கின் சகோதரர்), ஐந்தாவதாக விக்கோ மார்டென்ஸன் (காப்டன் ஃபண்டாஸ்டிக்) ஆகியோரும் உள்ளனர். விக்கோவுக்குக் கிடைப்பது மிக மிக சந்தேகம். இந்தப் பட்டியலில் இருக்கும் மிகப்பெரிய நகைமுரண், Lion படத்துக்காகச் சிறந்த நடிகராகத் தேர்வுசெய்யப்படவேண்டிய தேவ் படேல், அதே படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவில் இடம்பெற்றிருப்பதே. ஒரு படத்தின் ஹீரோவை எப்படித் துணைநடிகராகத் தேர்ந்தெடுக்கமுடியும்? ஆஸ்கர் கமிட்டிக்கே வெளிச்சம் (தேவ் படேல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வெள்ளையர் அல்ல என்பதை நினைவில் வைக்கவும்).

    சிறந்த நடிகை பிரிவில், மெரில் ஸ்ட்ரீப், இருபதாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் (Florence Foster Jenkins). இது ஒரு சாதனை. ஆனால் அதேசமயம், இப்படத்துக்காக இவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. முந்தைய இரண்டு மூன்று விருது விழாக்களில், டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக மேடையில் விமர்சித்திருந்தார் ஸ்ட்ரீப். இந்தப் பேச்சுக்கள் கொடுத்த பப்ளிஸிடிதான் இதற்குக் காரணம் என்றே பலரும் கருதுகின்றனர். இதை இங்கே சொல்லநேர்வது ஏனென்றால், அரைவல் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஆமி ஆடம்ஸ், பட்டியலில் இடம்பெறவே இல்லை. படம் கடும் மொக்கை என்றாலும், நடிப்பு என்று கவனித்தால் கட்டாயம் ஆமி ஆடம்ஸ் ஸ்கோர் செய்வார். ஸ்ட்ரீப்புக்குப் பதில் ஆமி ஆடம்ஸின் பெயரே இடம்பெற்றிருக்கவேண்டும். இந்தப் பட்டியலில் எம்மா ஸ்டோனின் பெயர் (லா லா லாண்ட்) எதிர்பார்க்கப்பட்டதே. நாம் ஏற்கெனவே பார்த்த லவிங் படத்துக்காக, அதன் கதாநாயகி ரூத் நெக்காவின் பெயரும் பட்டியலில் உண்டு.

    மற்றபடி, இன்னொரு பெரிய ஏமாற்றம், Finding Dory படத்தையும் இம்முறை ஆஸ்கர்கள் கண்டுகொள்ளவில்லை. உலகெங்கும் பிரமாதமான வரவேற்புப் பெற்ற அனிமேஷன் படம் இது. அதேசமயம், இதைவிட சுவாரஸ்யத்தில் மிகக் குறைவான Moana படம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    இன்னொரு முக்கியமான விஷயம், சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் சரித்திரத்திலேயே முதன்முறையாக, கறுப்பினத்தைச் சேர்ந்த ப்ராட்ஃபோர்ட் யங் (அரைவல்) தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. யோசித்துப் பாருங்கள். இதுவரை 88 ஆஸ்கர் விழாக்கள் நிகழ்ந்துள்ளன. எண்ணற்ற கறுப்பின ஒளிப்பதிவாளர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் சரித்திரத்திலேயே முதன்முறையாக இப்போதுதான் அப்படிப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வதா கோபப்படுவதா? இதுதான் ஆஸ்கர் கமிட்டியின் மெத்தனம்.

    அடுத்ததாக, உலகெங்கும் கிழித்துத் தோரணம் கட்டப்பட்ட ‘சூஸைட் ஸ்க்வாட்’ படத்துக்கு ஒரு ஆஸ்கர் நாமினேஷன். சிறந்த சைகை மற்றும் ஒப்பனைக்காக. அதேசமயம், உலகெங்கும் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘டெட்பூல்’ படத்துக்கு எந்த நாமினேஷனும் இல்லை (கோல்டன் க்ளோப்களில் இது நாமினேட் செய்யப்பட்டது). இதுவும் நகைமுரணே.

    ஆனால், இந்த ஆஸ்கர்களின் ஒரே நல்ல அம்சம் என்னவெனில், இதுவரை இல்லாத அளவு, இம்முறை அமெரிக்கர்கள் அல்லாதவர்களில் ஓரளவு கணிசமான சதவிகிதத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதே. உண்மையில், சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும், சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை ஆகிய இருபது பெயர்களில் ஒருவர் கூட வெள்ளையரல்லாதோர் இல்லை! இதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டேன். ஆனால் இம்முறை, மொத்தமாகப் பதினெட்டு ஆஃப்ரோ அமெரிக்கர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வருடமும் வெள்ளையரல்லாதோர் இடம்பெறாமல் இருந்திருந்தால் கட்டாயம் மிகப்பெரிய பிரச்னை வெடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இப்படியாக, அமெரிக்கர்களுக்கு மட்டுமே சொறிந்துகொடுக்கும் விருது விழாவான ஆஸ்கர்கள் இம்முறை, கொஞ்சம் ‘உலகளாவிய’ விழாவாக மாறுவதாகத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களல்லாதோருக்கு விருதுகள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதில் இனும் சில நாட்களில் திரைக்கதையின் முடிவு தெரிந்துவிடும். என்ன இருந்தாலும், இது கச்சிதமாக எழுதப்பட்ட திரைக்கதை என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை.

    ]]>
    http://karundhel.com/oscar-nominations-2017-kumudam-article/feed/ 2
    John Wick: Chapter Two (2017) – English http://karundhel.com/john-wick-chapter-two-2017-english/ http://karundhel.com/john-wick-chapter-two-2017-english/#comments Sun, 12 Mar 2017 13:28:43 +0000 http://karundhel.com/?p=5865 ஜான் விக் படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. படத்தை இயக்கியவர்கள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் (Chad Stahelski & David Leitch). திரைக்கதை எழுதியவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). முதல் பாகம்தான் அவரது முதல் முக்கியமான திரைக்கதை. இதெல்லாம் எனது முதல் பாக விமர்சனத்தில் நீங்கள் படித்துக்கொள்ளலாம். முதல் பாகத்தைப் பற்றி விரிவாக அதில் எழுதியிருக்கிறேன்.

    இம்முறை, போன படத்தை இயக்கிய இருவரில் ஒருவரான சாட் ஸ்டாஹெல்ஸ்கி மட்டும் தனியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். திரைக்கதை, அதே டெரெக் கோல்ட்ஸ்டாட்தான்.

    நான் இந்த இரண்டாம் பாகத்துக்காகப் பல வாரங்கள் காத்திருந்தேன். ஹாலிவுட்டில், இரண்டாம் பாகம் என்பது பெரும்பாலும் மொக்கையாக இருப்பதற்குப் பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. என்றாலும், முதல் பாகத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவு அருமையாக இருந்தன. கூடவே திரைக்கதையும் மிக வேகமாகச் சென்றது. எனவே, இரண்டாம் பாகத்தில் திரைக்கதை மொக்கையாக இருந்தாலும், ஸ்டண்ட்களுக்காகவே எப்படியும் படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    உண்மையில் படம் முதல் பாகத்தின் அளவு நன்றாக இருக்கிறது. எங்கும் சொதப்பவில்லை. முதல் பாகத்தில் எப்படியெல்லாம் கியானு ரீவ்ஸின் ஜான் விக் கதாபாத்திரத்துக்கு டயலாக்கிலேயே பில்டப் வைத்திருந்தார்களோ, அதே டயலாக் அப்படியே இதிலும் வருகிறது (I once saw him kill three people in a bar, with a pencil). அதே பாபா யாகாவாக (the BoogeyMan) கியானு வருகிறார். அந்தக் கதை முடிந்து ஒரு சில நாட்களிலேயே இந்தக் கதை துவங்கிவிடுகிறது. முதல் பாகத்தின் இறுதியில், வில்லன் விக்கோவை ஜான் விக் மரண அடியோடு விட்டுவிட்டுப் போய்விடுவான். விக்கோ இறந்துவிடுவான் என்று அர்த்தம். அதில் இருந்து துவங்குகிறது இந்தப்பாகம். தனது கார் இன்னும் விக்கோவின் சகோதரன் ஆப்ராமிடம் இருப்பதால், அவனைத் தேடி ஜான் விக் செல்கிறான். அவனது ஆட்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஆப்ரமிடம் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு, ஆப்ரமை சந்தித்து, சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு விடைபெறுகிறான். இதுதான் படத்தின் ஓப்பனிங் சீக்வென்ஸ். ஒவ்வொரு ஷாட்டும் அதிரடியோடு, துப்பாக்கிக்குண்டுகள், ஸ்டண்ட்கள் ஆகியவையோடு அடி பிரிக்கிறது இந்த சீக்வென்ஸ்.

    இதன்பின் கதை துவங்குகிறது. சாண்டினோ டி அண்டோனியோ என்ற இடாலியைச் சேர்ந்த பிரபல தாதாவின் உதவியால்தான் அடிதடியில் இருந்து ரிடையர் ஆகி, தனது காதலியைக் கைப்பிடிக்க ஜான் விக்கால் முடிகிறது (இது முதல்பாகத்துக்கும் முதலில் நடந்த prequel story. வசனங்களால் மட்டுமே உணர்த்தப்படுகிறது). எனவே, பதிலுக்கு, க்ரைம் உலகின் முக்கியமான புள்லியாக விளங்கும் அவனது சகோதரியைக் கொல்லவேண்டும் என்ற கோரிக்கையோடு ஜான் விக்கை சாண்டினோ சந்திக்கிறான். ஆனால், தொழிலிலிருந்து ரிடையர் ஆகிவிட்டதால் இனி அடிதடியில் இறங்க முடியாது என்று ஜான் விக் மறுத்துவிட, அவனது வீட்டை எரித்துவிடுகிறான் சாண்டினோ. இவர்களின் அடிதடித் தொழிலில் சில விதிகள் உண்டு. ந்யூ யார்க்கின் காண்டினெண்டல் ஹோட்டலின் நிறுவனர் வின்ஸ்ட்டன்தான் தொழிலின் முக்கியப் புள்ளி. விதிகள் அவர் உருவாக்கியவை. அதன்படி, blood oath என்ற, இன்றியமையாத உதவியை யார் செய்திருந்தாலும், அவருக்கு அதை நாம் திருப்பிச் செய்தாகவேண்டும். எனவே, வேறு வழியின்றி, சாண்டினோவின் சகோதரியைக் கொல்ல ரோம் செல்கிறான் ஜான் விக்.

    இதுதான் படத்தின் துவக்கம். இதன்பின் என்ன நடந்தது என்பதைப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

    கிட்டத்தட்ட ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல பில்டப் கொடுக்கிறது ஜான் விக் சாப்டர் டூ. ஆனால் அப்படத்தில் இருப்பதுபோன்ற lighter moments இதில் கிடையாது. பற்றவைத்த பட்டாசு போல, சர்ரென்று துவங்கி முடிகிறது படம். ரோமில் சாண்டினோவின் சகோதரியைக் கொல்வது சாதாரண விஷயம் கிடையாது என்று ஜான் விக்குக்குத் தெரியும். எனவே, நன்றாகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். ஒவ்வொரு ஆயுதமாக, தற்காப்புக்கான அத்தனையையும் சேகரித்துத் தயாராக வைத்துக்கொள்கிறான். இதெல்லாம் அப்படியே பாண்ட் படம்தான். மிஸ்டர் Q போல இதில் பலர் உண்டு. அனைவருக்கும் ஜான் விக்கைத் தெரியும். அனைவரும் அவன்மீது மரியாதையும் பயமும் வைத்துள்ளனர். The Ghost, BoogeyMan என்றெல்லாம் பல பெயர்கள் ஜான் விக்குக்கு உண்டு. ஜான் விக் ரோமுக்கு வந்துவிட்டான் என்ற தகவல் தெரிந்ததும், போப்பைக் கொல்லத்தான் வந்திருக்கிறானோ என்றெல்லாம் சந்தேகப்படும் மனிதர்கள் படத்தில் உண்டு.

    சாதாரண மனிதர்களைப்போலவே, கொள்ளைக்கூட்டத்தாருக்கும் உறுதியான விதிகள் உண்டு என்பது ஜான் விக் universeஇன் முக்கிய அம்சம். இந்த விதிகள்தான் படத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. இந்த விதிகளால்தான் இறுதியில் ஜான் விக் அனைவரிடமும் இருந்து தப்பித்து ஓடமுடிகிறது. இதே விதிகள்தான் அவனை இப்படத்தின் இறுதியில் the most wanted criminal ஆகவும் ஆக்குகின்றன (போலீஸால் அல்ல. பிற கிரிமினல்களால். அவன் தலைமேல் ஏழு மில்லியன் டாலர் தொகை விலையாக வைக்கப்படுகிறது).

    படத்தின் ஸ்டண்ட் கோ ஆர்டினேட்டர் J.J Perry. இப்படத்தின் ஒவ்வொரு ஸ்டண்ட்டும் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகே கோரியோக்ராஃப் செய்யப்பட்டுள்ளது. ஜு-ஜிட்ஸு, ஜூடோ மற்றும் சாம்போ (Sambo – a Russian martial arts variety) ஆகிய மூன்றோடு, மூன்றுவிதமான துப்பாக்கிகளையும் (ரைஃபிள், ஷாட்கன் & பிஸ்டல்) வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்டண்ட்கள் இவை. படத்தின் ஸ்டண்ட்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருட்களையும் சேர்த்துக்கொண்டே சண்டைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன (ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் எதிராளியைக் கொல்லலாம் என்பதற்கு இதில் கிட்டத்தட்ட முடிவின் அருகே வரும் ஒரு சீக்வென்ஸ் உதாரணம்). இவைகளால், முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக இல்லாமல், அதே போன்ற flavorஓடு இப்படம் இருக்க முடிகிறது. இரண்டுக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. முதல் பாகத்திலேயே ஜான் விக் என்னவெல்லாம் செய்துவிடுவான் என்பது நமக்கு நன்றாகவே சொல்லப்பட்டுவிடுவதால், இதில் அவன் கொல்லும் ஏராளமான அடியாட்களைக் கண்டு நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.

    அதேபோல், படத்துக்காகக் கியானு ரீவ்ஸ், மூன்றரை மாதம் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஸ்டண்ட்கள் மட்டுமல்லாமல், உலகின் சிறந்த துப்பாக்கி மேதைகளும் கியானுவுக்குப் பல டிப்ஸ்களை அளித்துள்ளனர். அதேபோல், பாண்ட் படங்கள் போல இதில் நம்பமுடியாத ஸ்டண்ட்கள் எல்லாம் இல்லை. மாறாக, கியானு பல தடவைகள் சுடப்படுகிறார். காயம் அடைகிறார். நம்பும்படியாகத்தான் இவையெல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், துப்பாக்கிகளின் ரிதத்தை வைத்து இதன் soundtrackகில் ஆங்காங்கே இசைக்கோர்ப்புகளும் எழுதப்பட்டுள்ளன.

    கீழுள்ள வீடியோவில், கியானு எப்படியெல்லாம் துப்பாக்கிப் பயிற்சி செய்கிறார் என்று கவனியுங்கள். அவரது aim துல்லியமாக இருப்பதையும் கவனிக்கலாம்.

    இந்த வீடியோவில், எப்படியெல்லாம் பயிற்சிகளை கியானு மேற்கொண்டார் என்று பார்க்கமுடியும்.

    இதனாலேயே, படத்தின் ஸ்டண்ட்கள் அவ்வளவுமே மிகவும் நம்பத்தகுந்த வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள்.

    இதோ, படத்தின் துவக்கத்தில் இடம்பெறும் கார் சேஸ் காட்சி. முழுக்க நான்கு நிமிடங்கள் ஓடக்கூடியது. ஆக்‌ஷன் பிரியர்களுக்குக் கட்டாயம் பிடிக்கும்.

    ஒட்டுமொத்தமாக, முதல் பாகம் பிடித்தால் கட்டாயம் இதுவும் உங்களுக்குப் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. படத்தின் அத்தனை பின்னணித் தகவல்களும் முதல் பாகக் கட்டுரையிலேயே உண்டு. அதையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.

    பி.கு

    1. படத்தின் க்ளைமேக்ஸ், ப்ரூஸ் லீயின் எண்டர் த ட்ராகன் படக் க்ளைமாக்ஸுக்கு ஒரு tribute. படம் பார்க்கையில் புரிந்துகொள்வீர்கள்.

    2. ஒரிஜினல் ஜாங்கோவில் ஜாங்கோவாக நடித்த Franco Nero இதிலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

    3. படத்துக்கு அவசியம் மூன்றாம் பாகம் உண்டு. அது கட்டாயம் நன்றாகவும் இருக்கும்.

    ]]>
    http://karundhel.com/john-wick-chapter-two-2017-english/feed/ 3
    Kong: Skull Island-3D (2017) – English http://karundhel.com/kong-skull-island-3d-2017-english/ http://karundhel.com/kong-skull-island-3d-2017-english/#comments Sat, 11 Mar 2017 13:40:24 +0000 http://karundhel.com/?p=5858 காங்: ஸ்கல் ஐலாண்ட் படம், வார்னர் ப்ரதர்ஸ்/லெஜண்டரி பிக்சர்ஸ் வழங்கும் ஒரு மான்ஸ்டர் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வழக்கமான மான்ஸ்டர் படங்களைப் போல் அல்லாமல், இப்படம் உலகெங்கும் நல்ல விமர்சனங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். உண்மையில் ஜுராஸிக் வேர்ல்ட் படத்தோடு இதனை ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் விமர்சகர்கள். அப்படம் இதற்கு முன்னர் ஜுஜுபி என்பதுதான் ஏகோபித்த கருத்து. அது உண்மையா? படம் எப்படி?

    முதலில், இந்த மான்ஸ்டர்வெர்ஸ் பற்றிய சில தகவல்கள். எப்படி மார்வெல் நிறுவனம், அவெஞ்சர்கள் சீரீஸை ஒவ்வொன்றாக வெளியிட்டு வெற்றி அடைந்ததோ (மார்வெல்லின் இந்த சக்ஸஸ் ஃபார்முலா ஹாலிவுட்டில் விரிவாக அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது), அப்படித்தான் லெஜெண்டரியும், தன்னிடம் உள்ள மான்ஸ்டர்களை வைத்து சில படங்கள் எடுக்க முடிவு செய்தது. அப்படி reboot செய்யப்பட்டதுதான் 2014ல் வெளியான Godzilla படம். ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை எப்போதோ (தொண்ணூறுகளிலேயே) எழுதப்பட்டுவிட்டது. 1994ல் டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் இதனை எழுதி முடித்துவிட்டனர் (இந்த இருவரும் தற்கால ஹாலிவுட் திரைக்கதையில் ஜாம்பவான்கள். அலாதீனில் தொடங்கி, பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் முதல் மூன்று படங்கள் இவர்களின் கைவண்ணமே. ஆனால், படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருக்கவே, இந்தத் திரைக்கதை கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஒரு சில வருடங்கள் கழித்து, இண்டிபெண்டன்ஸ் டே படத்தை எடுத்துப் பிரம்மாதப்படுத்தியிருந்த ரோலாண்ட் எம்மரிச் மற்றும் டீன் டெவ்லினை அப்போது காட்ஸில்லாவின் உரிமம் பெற்றிருந்த ட்ரைஸ்டார் நிறுவனம் அணுகியது. அவர்கள் விதித்த ஒரே கண்டிஷன், பழைய திரைக்கதையை எடுத்துக்கொள்ளமாட்டோம் – எங்கள் இஷ்டத்துக்குத் திரைக்கதை எழுதுவோம் என்பதே. ட்ரைஸ்டார் ஒப்புக்கொள்ள, நாம் கண்ட காட்ஸில்லா (1998) வெளியானது.

    அப்படத்தில் காட்ஸில்லா வில்லன். எனவே இறுதியில் இறந்துவிடும். ஆனால் உண்மையில் காட்ஸில்லாவின் பழைய திரைப்படங்களில் காட்ஸில்லா என்பது ஒரு ஹீரோ. தேசியச்சின்னமாகவே அறிவிக்கப்படக்கூடிய அளவு புகழ்பெற்றது. இதையொட்டியே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் தங்களது திரைக்கதையை அமைத்திருந்தனர். ஆனால் அதை முற்றிலும் மாற்றி, ரோலாண்ட் எம்மரிச்சும் டீன் டெவ்லினும் காட்ஸில்லாவைக் குரூரமான வில்லனாக (வில்லியும் கூட. முட்டையிடும் காட்ஸில்லாவை நினைவிருக்கிறதா?) மாற்றிவிட்டனர்.

    காட்ஸில்லாவை எடுத்த ட்ரைஸ்டாரின் உரிமையை அந்நிறுவனம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. எனவே 2003ல் அவ்வுரிமை பணால் ஆகிவிட, அதன்பின்னர் 2009ல் லெஜண்டரி நிறுவனம் காட்ஸில்லாவின் உரிமையை வைத்திருந்த ஜப்பானிய நிறுவனம் டோஹோவிடம் இருந்து ஹாலிவுட்டில் படமெடுக்கும் உரிமையைப் பெற்றது. அப்போது, ஏற்கெனவே டெர்ரி ரோஸியோவும் டெட் எலியட்டும் எழுதிக் கைவிடப்பட்டிருந்த ஒரிஜினல் திரைக்கதையை எடுக்கலாம் என்று லெஜண்டரி முடிவுசெய்தது. அதன்பின்னர் அந்தத் திரைக்கதையை வைத்துக்கொண்டு மேலும் அதில் பல மாற்றங்கள் செய்து வெளிவந்ததுதான் 2014ல் வெளியான காட்ஸில்லா. இக்கதையில் காட்ஸில்லாதான் ஹீரோ.

    இப்படித்தான் லெஜண்டரியின் மான்ஸ்டர்வெர்ஸ் துவங்கியது.

    இந்த சீரீஸில் அடுத்த rebootஆக, கிங்காங்கை உருவாக்க முடிவுசெய்தனர். காட்ஸில்லா கதைகளில் கிங்காங் இடம்பெறுவது அதன் ஜாப்னீஸ் படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு பல ராட்சத ஜந்துக்களும் காட்ஸில்லா கதைகளில் வரும். எனவே, இப்படிப்பட்ட ஜந்துக்களை வைத்து சில படங்கள் எடுக்கலாம் என்பது லெஜண்டரி நிறுவனத்தின் முடிவு.

    கிங் காங் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு, எண்பதுகளில் இங்கே வெளியான கிங் காங் படம் நினைவிருக்கலாம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பழைய கிங்காங்கின் ரீமேக் அது. இந்தப் படத்தை அடுத்து, கிங் காங் லிவ்ஸ் என்ற இன்னொரு படமும் வெளியானது. அதுவும் நன்றாக நினைவிருக்கிறது. அப்படத்தில் கிங் காங்குக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடக்கும். அதற்கு ஒரு ஜோடியும் இருக்கும். இரண்டு ராட்சத apeகள் நகரில் அட்டகாசம் செய்யும். இறுதியில் இவர்களுக்கு ஒரு குட்டி பிறக்கும்.

     

    கிங் காங் லிவ்ஸ் படத்துக்கும், நேற்று வெளியாகியிருக்கும் Kong: Skull Island படத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே, பிரச்னை செய்யும் ராணுவ மேஜரைக் கிட்டத்தட்ட ஒரே போன்றுதான் கிங்காங் கொல்லும். ஒரே அடி. சட்னி. ட்ரெய்லரில் கூட அதைக் கவனிக்கலாம்.

    போலவே பீட்டர் ஜாக்ஸன் எடுத்த கிங் காங் படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

    படம் எப்படி?

    கதை துவங்குவது எழுபதுகளில். எனவே, சென்ற படமான காட்ஸில்லாவுக்கு இது prequel. இக்கதை நடக்கையில் காட்ஸில்லா ஆர்ட்டிக்கில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

    மான்ஸ்டர்களை வைத்துக்கொண்டு மொக்கையைப் போடாமல் நன்றாகவே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் கிங்காங் இருக்கும் ஸ்கல் தீவில் வேறு பல ஜந்துக்களும் வாழ்கின்றன. சில நல்ல ஜந்துக்கள். பல கொடிய ஜந்துக்கள். டெர்ரோடாக்டில் போன்ற ரத்தவெறி பிடித்த பறவைகளும் உண்டு. இவற்றுக்கு நடுவே, கிங்காங் ஒரு மன்னனைப் போல வாழ்கிறது. அது ஓரளவு குட்டிதான். இன்னும் முழுமையாக வளரவில்லை (அதற்கே 104 அடி). அதன் பெற்றோர்களையும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிற குரங்குகளையும், பூமிக்கு அடியே இருக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டப் பல்லி கொன்றுவிட்டிருக்கிறது. எனவே அந்த ஜந்துக்கள்மீது கொலைவெறியில் இருக்கிறது கிங்காங். ஸ்கல் தீவை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தீவில் பல குண்டுகளைப் போட்டுவிடுகிறார்கள் நம் ஆராய்ச்சியாளர்கள். இதனால் பூமிக்கு அடியே வாழக்கூடிய அந்தக் கொடூரமான பல்லிகள் மேலே வந்துவிடுகின்றன. இவற்றால் நாசம் விளைகிறது. கிங்காங்குக்கும் இப்பல்லிகளுக்கும் சண்டை நடக்கிறது.

    ஒரு மான்ஸ்டர் படம் என்றால் திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்று ப்ளேக் ஸ்னைடர் (‘Fade In முதல் Fade Out வரை‘) சொல்லியிருக்கிறார். அதை என் காட்ஸில்லா பதிவிலேயே பார்க்கலாம். சுருக்கமாக:

    1. ஒரு வெறிபிடித்த ஜந்து.
    2. அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள்.
    3. அந்த ஜந்து அதகளம் செய்ய ஒரு இடம்.
    4. அந்த ஜந்து வெளிவந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பிக்க ஒரு சம்பவம். இந்தச் சம்பவம் பொதுவாக ஏதேனும் ஒரு பாவச்செயலாகத்தான் இருக்கும். சுயநலத்துக்காக யாராவது ஒரு மனிதன் செய்யும் இந்தப் பாவம்தான் அந்த ஜந்துவை வெளிக்கொண்டுவரும்.
    5. அந்தப் பாவம் செய்தவர்களை எதேச்சையாகவோ அல்லது குறிப்பாகவோ அந்த ஜந்து வேட்டையாடும்.
    6. இதற்குப் பிறகு எல்லாமே அந்த ஜந்துவை எப்படி நாயகன் துரத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது.

    இது அனைத்துமே இதிலும் உண்டு. வெறிபிடித்த ஜந்து என்பது இங்கே ஓரளவு கிங்காங்கையும், பெருமளவு ராட்சதப் பல்லியையும் குறிக்கும். அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள் கதையில் உண்டு. ஜந்து அதகளம் செய்யும் இடமாக, ஸ்கல் தீவு. மனிதர்களின் பேராசையில் போட்ட குண்டுகளின் பலனாகத்தான் பல்லிகளும் கிங்காங்கும் கடுப்பாகின்றன. அதேபோல், குண்டு போட்டவர்களை இரண்டுமே வேட்டையாடுகின்றன.

    இவற்றைக் கட்டாயம் சுவாரஸ்யமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் இதுவரை பல மான்ஸ்டர் படங்களைப் பார்த்திருப்பதால் இப்படம் புதிதாக இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. இருப்பினும், ஜுராஸிக் வேர்ல்ட் படம் பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கும். ஸிஜி அட்டகாசமாக உள்ளது. 3டியில் நிஜமாகவே வேலை செய்திருக்கிறார்கள். ஜந்துக்களின் உருவாக்கத்தில் நல்ல க்ரியேட்டிவிடி.

    An as usual film. But if you wanna go lose your mind on these monsters, this is a film for you. எனக்குப் பிடித்தது.

    பி.கு

    படத்தில் ஒரு போஸ்ட் க்ரெடிட் சீன் உண்டு. அதைப் பார்க்க மறக்காதீர்கள். அடுத்த படத்துக்கான ட்ரெய்லர் அது. இந்த சீரீஸில் அடுத்த படத்தின் ஹீரோ பற்றிய குறிப்புகள் இதில் உண்டு.

     

    ]]>
    http://karundhel.com/kong-skull-island-3d-2017-english/feed/ 2
    Sex Comedies and Tamil Films http://karundhel.com/sex-comedies-and-tamil-films-dec-2016-andhimazhai-article/ http://karundhel.com/sex-comedies-and-tamil-films-dec-2016-andhimazhai-article/#respond Mon, 02 Jan 2017 05:11:40 +0000 http://karundhel.com/?p=5850 அந்திமழையின் டிசம்பர் 2016 இதழில் வெளியான கட்டுரை இது


    ஹாலிவுட்டில் செக்ஸ் காமெடிகள் என்று ஒரு பதம் உண்டு. பெயரைக் கேட்டதும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஓடிவிடாதீர்கள். செக்ஸ் காமெடி என்பது உலகெங்கும் பிரபலமான ஒரு வகைதான். நாடகங்கள், திரைப்படங்கள், புதினங்கள் என்று இந்த வகையைச் சேர்ந்த படைப்புகள் உலகெங்கும் ஏராளம் உண்டு. யுனைடட் ஸ்டேட்ஸில் வருடம் தோறும் பல படங்கள் இவ்வகையில் வருகின்றன. அவைகளுக்கு அங்கே ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். செக்ஸ் காமெடித் திரைப்படங்கள் எடுத்தே மிகப்பிரபலமாக ஆனவர்களும் அங்கே உண்டு. இந்த வகையில் அனைவருக்கும் சட்டென்று நினைவு வருவது ‘அமெரிக்கன் பை’ திரைப்பட சீரீஸாகத்தான் இருக்கும். செக்ஸ் சார்ந்த விஷயங்களில் நகைச்சுவையைக் கலந்து அளிப்பது – அதன்மூலம் நமக்குச் சிரிப்பைக் கிளப்புவதுதான் செக்ஸ் காமெடிகளின் பிரதான அம்சம்.

    அமெரிக்கன் பை படங்களுக்கு முன்னரே, போலீஸ் அகாடமி, Some Like it Hot, The Apartment, The Seven Year Itch ஆகிய பிரபல செக்ஸ் காமெடிகள் உண்டு. இதில் சம் லைக் இட் ஹாட் மற்றும் த செவன் இயர் இட்ச் படங்களில் மர்லின் மன்றோ நடித்திருந்தார். அவரது உடை காற்றில் பறக்க ஒரு பிரபலமான புகைப்படம் உண்டல்லவா? அது செவன் இயர் இட்ச் படம்தான். இந்த மூன்று படங்களையும் பில்லி வைல்டர் இயக்கினார். பில்லி வைல்டர், ஹாலிவுட்டின் மிகப்பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். அக்காலகட்டங்களில் திரைப்படங்களுக்கே பிரத்யேகமான விதிகள் உண்டு. Hays Code என்று இவ்விதிமுறைகள் அழைக்கப்பட்டன. கடுமையான பல விதிகளின் தொகுப்பு இது. திரைப்படங்களில் நிர்வாணம் காண்பிக்கப்படக்கூடாது; போதை மருந்துகள் வரக்கூடாது; மத அமைப்புகளைக் கிண்டல் செய்யக்கூடாது; கெட்ட வார்த்தைகள் உபயோகப்படுத்தப்படக்கூடாது.. இதுபோன்ற கடுமையான விதிகள் ஹேய்ஸ் கோடில் உண்டு. ஆனால் கொஞ்சமும் கவலைப்படாமல் பில்லி வைல்டர் இந்த விதிகளை அவரது படங்களில் தகர்த்தார். அதனாலேயேதான் மேற்சொன்ன படங்கள் பிரபலமாயின. இன்றுவரை ஹிட்களாகவும் விளங்குகின்றன. பில்லி வைல்டரின் அபார்ட்மெண்ட், ஐந்து ஆஸ்கர்கள் வாங்கிய படமும்கூட.

    இதுபோலவே ஹாலிவுட்டில் பல செக்ஸ் காமெடிகள் உண்டு. ஒருசில உதாரணங்களாக, There is Something about Mary, American Pie, Police Academy, National Lampoon series, Porky’s, The 40 Year old virgin, Sex tape, Harold & Kumar go to White Castle, Knocked up, Zack and Miri Make a Porno ஆகிய படங்களைச் சொல்லமுடியும். இந்த ஒவ்வொரு படத்திலும், காதல், திருமணம் என்று பல தலைப்புகள் கையாளப்பட்டாலும், அவற்றினூடே செக்ஸ் என்பது எப்படி இன்றியமையாததாக வருகிறது என்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையில் செக்ஸுக்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் உண்டு. அதனை இப்படங்கள் கச்சிதமாகக் கையாளும். உதாரணமாக, அமெரிக்கன் பை படத்தில், இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளப்போவது தற்செயலாக இண்டர்நெட்டில் ப்ராட்காஸ்ட் செய்யப்பட்டுவிடும். அனைவரும் இதனை வெறித்தனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இளைஞனுக்கு விரைவில் ஸ்கலிதம். இதனை மறுநாள் கல்லூரியே கிண்டலடிக்கும். இதேபோல், அதன் மூன்றாவது பாகத்தில், நாயை வைத்துக்கொண்டு அவர்கள் செய்வதையெல்லாம் நினைத்தே பார்க்க இயலாது.

    இந்தியாவில் செக்ஸ் காமெடிகள் உண்டா? ஹிந்தியில் தற்போது ஏராளமான செக்ஸ் காமெடிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தோஸ்தானா, க்ராண்ட் மஸ்தி சீரீஸ், ஹண்டர்ர், குச் குச் லோச்சா ஹை, க்யா கூல் ஹை ஹம் சீரீஸ் போன்ற படங்கள் உண்டு. இவைகளில் பல படங்கள் பெரிய ஹிட்களாகவும் விளங்குகின்றன. வசூலை வாரிக்குவிக்க இப்போதெல்லாம் செக்ஸ் காமெடி ஒன்றை எடுத்தாலே போதுமானது. சன்னி லியோனியை யுனைடட் ஸ்டேட்ஸின் porn இண்டஸ்ட்ரி சரியாகப் பயன்படுத்திக்கொண்டதோ இல்லையோ – ஹிந்தியின் செக்ஸ் காமெடி இண்டஸ்ட்ரி மிகச்சரியாக அவரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சன்னி லியோனி மட்டுமல்ல; இன்னும் பல நட்சத்திரங்கள் உள்ளனர். அதேசமயம், ஹிந்தியில் செக்ஸ் காமெடி என்பது இப்போது வந்த விஷயமும் இல்லை. எண்பதுகளின் துவக்கத்தில் பிரபல இயக்குநர் பாஸு சாட்டர்ஜீ இயக்கிய படம் ஷௌகீன் (Shaukeen). இப்படத்தில், மூன்று வயதான ஆசாமிகள், ஒரு இளம்பெண்ணுக்காகப் போராடுவதை மிகுந்த நகைச்சுவையாக சொல்லியிருப்பார். அஷோக் குமார், உத்பால் தத், ஏ.கே. ஹங்கல் ஆகிய மூன்று பிரம்மாதமான நடிகர்களை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட படத்தை எப்போதோ ஹிந்தியில் எடுத்துவிட்டனர்.

    டெல்லி பெல்லியை மறக்க முடியுமா? இது செக்ஸ் காமெடி அல்ல என்றாலும், படத்தின் வசை வார்த்தைகள், காட்சிகள் ஆகியவை செக்ஸ் காமெடிகளைக் கட்டாயம் நினைவுபடுத்தும். தமிழில் சேட்டை என்ற பெயரில் பல வெட்டுக்களோடு வெளியாகிப் படுத்துவிட்ட படம்.

    சரி. தமிழில் ஏன் தரமான செக்ஸ் காமெடிகள் சாத்தியமில்லாமல் உள்ளன? அல்லது, தமிழில் செக்ஸ் காமெடிகள் உள்ளனவா?

    மன்மதலீலை என்று கமல்ஹாஸன் படம் ஒன்று உண்டு. இயக்கம் பாலசந்தர். பலருக்கும் நினைவிருக்கக்கூடும். இந்தப் படத்தை ஒரு செக்ஸ் காமெடி என்று தாராளமாகச் சொல்லலாம். காமெடி என்றதும், விழுந்து புரண்டு சிரிக்கவைக்கும் நகைச்சுவை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. படத்தின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்கள் தொடர்ந்து நமக்குப் புன்சிரிப்பை ஏற்படுத்தினாலே அது செக்ஸ் காமெடிதான். அதேபோல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தையும் ஒரு செக்ஸ் காமெடி என்று உறுதியாகவே சொல்லமுடியும். அந்தப் படத்தில் அத்தனை விதமான சிச்சுவேஷன்கள் உண்டு. உதாரணமாக, ஒரு செக்ஸ் வொர்க்கரிடம் விடலை மாணவர்கள் செல்லும் காட்சி. யாருமே எதையுமே செய்யாமலேயே, பெரிய சாதனை செய்தவன் போல அவர்கள் நடிக்கும் களம். இதுபோல அந்தப் படத்தில் பல காட்சிகள் உண்டு. விடலைகள் சமுதாயத்தோடு பழகுகையில், அவர்கள் எப்படி தட்டுத்தடுமாறி, தங்களின் லட்சியமாக ஏதோ ஒன்றை அடைகிறார்கள் என்பதைச் சொன்ன படம் அது. வெளியான சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம், அதுவரை இளைஞர்களுக்கான முழுமையான செக்ஸ் காமெடி தமிழில் வந்தே இருக்கவில்லை.

    பாய்ஸுக்குப் பின், செக்ஸ் காமெடி என்ற களத்தைக் கையில் எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவரது நியூ படத்தின் பல காட்சிகள் செக்ஸ் காமெடி என்பதற்கு உதாரணம் (இந்தக் கருத்தை பாக்யராஜ் அவரது சில படங்களில் ஒருசில காட்சிகளில் கையாண்டிருப்பார். உதாரணம் – பவுனு பவுனுதான் ஐஸ்ஃப்ரூட் அய்யர். ஆனால் தொடர்ச்சியாக செக்ஸ் காமெடிகளை அவர் எடுக்கவில்லை. ஜனரஞ்சகமான படங்களையே எடுத்தார்). நியூ படத்துக்குப் பின்னர், ’திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம்தான் செக்ஸ் காமெடி என்ற tagகால் பிரபலமானது. அதில் நடித்தவர் ஜி.வி.பிரகாஷ். செக்ஸ் காமெடியா? கூப்பிடு ஜி.வி.பிரகாஷை என்ற நிலையே தற்போது உருவாகிவிட்டது. இதில், திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் கிட்டத்தட்டத் தமிழகத்தின் அத்தனை பேராலும் பார்க்கப்பட்டது. நம் அனைவருக்குமே செக்ஸ் மீது ஒரு குறுகுறுப்பு உண்டு. இதனை உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்துக்கொண்டிருப்பதால், இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்றதுமே எப்படியாவது அதனை நாம் அனைவரும் பார்த்துவிட்டோம். இதுதான் காரணம். ஆனால் பார்த்துவிட்டு, அந்தப் படத்தைப் பரவலாகத் திட்டிக்கொண்டிருந்தோம் (படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பது வேறு டாபிக்).

    கல்யாண சமையல் சாதம் என்று ஒரு படம், பிரசன்னா நடிப்பில் வெளியானது. தரமான செக்ஸ் காமெடி என்றால் அது இந்தப் படம்தான். Erectile Dysfunction என்ற பிரச்னையால் அவதிப்படும் இளைஞன் ஒருவன் திருமணம் செய்துகொண்டால் என்னாகும் என்ற பிரச்னையை மிகுந்த நகைச்சுவையோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் எடுத்திருந்தனர். இயக்கியது ஆர்.எஸ். பிரசன்னா. மிக வித்தியாசமான ஒரு கரு இது.

    இருந்தும், ஹிந்தியில் வந்துகொண்டிருப்பதுபோன்ற செக்ஸ் காமெடிகளை இன்னும் தமிழில் பார்க்க முடிவதில்லை.  வெளிப்படையான, பட்டவர்த்தனமான வசனங்கள், காட்சிகள் முதலியவைகளைத் தமிழில் கண்டிப்பாக யோசித்தல் இயலாது. இவ்வளவு ஏன்? செக்ஸ் காமெடி என்ற வகையை அடல்ட் காமெடி என்று மேற்பூச்சுப் பூசித்தானே நாம் அழைத்துக்கொண்டிருக்கிறோம்? காரணம், முதலில் நமது சமுதாயம். இங்கே இன்னுமே செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே ஒரு பிரச்னை. இளைஞர்கள் பத்து-இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததுபோல் இல்லாமல், ஏராளமான எக்ஸ்போஷருடன் இப்போது விளங்குவது உண்மைதான். அவர்களுக்கு இப்போதெல்லாம் உலகம் முழுக்க வெளியாகும் பல்வேறு படங்கள், புத்தகங்கள் முதலியவைகள் விரல் நுனியில் கிடைப்பதும் உண்மைதான். ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னமுமே, தாங்கள் பழமையான கலாச்சாரம் சார்ந்த மக்களாகவே இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளவே (பீற்றிக்கொள்ளவே) விரும்பும் இடம் இது. அந்தக் கலாச்சாரத்தில், நாம் முன்னர் ஹாலிவுட்டில் இருந்ததாகப் பார்த்தோமே – ஹேய்ஸ் கோட் என்ற விதிமுறைப் புத்தகம் – அப்படிப்பட்ட விதிமுறைகளை இன்னமும் அமல்படுத்திப் பார்க்கவே நினைக்கும் மக்களே அதிகம்.

    முதலில் நமது தணிக்கை விதிகளை நாம் சரிபார்க்கவேண்டிய தேவை உள்ளது. செக்ஸ் காமெடி தப்பு என்றால் பில்லி வைல்டருக்கு எப்படி ஆஸ்கர்கள் கிடைத்தன? அவரால் ஹேய்ஸ் கோடே தகர்க்கப்பட்டது. அப்படி முதலில் நமது மனநிலை மாறவேண்டும் என்றே நினைக்கிறேன். செக்ஸ் காமெடிகளைப் பார்த்தால் நாம் கெட்டுப்போய்விடுவோம் என்றே இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். தணிக்கை சீர்படுத்தப்பட்டால் அவசியம் செக்ஸ் காமெடிகளிலேயே நல்ல படங்கள் நமக்குக் கிடைக்கும் என்பதுதான் உண்மை. போலியான கலாச்சாரப் பின்னணியை முகமூடியாக மாட்டிக்கொண்டு உலகிலேயே நல்லவன் போல நாம் நடிக்கத் தேவையிருக்காது. மாறாக, இயல்பாக இருப்போம். அதுதான் இங்கே முதல் படியாக இருக்கவேண்டும்.

    குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகள் சென்று, சென்சாரில் U சான்றிதழ் தரப்பட்ட படங்களில் வரும் அரைநிர்வாணப் பாடல் காட்சிகளைக் கண்டு உற்சாகம் எய்தும் நமக்கு, செக்ஸ் காமெடி என்ற பெயரில் வெளிப்படையாக எடுக்கப்படும் படங்கள் மீது வெறுப்பு ஏன் என்பதை நாம் அனைவரும் ஆராயவேண்டும்.  இந்தப் பாடல்களுக்கு நம் குழந்தைகள் ஆடினால் கைதட்டி உற்சாகமும் படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் செக்ஸ் காமெடிப் படம் வருகிறதா? கொளுத்து தியேட்டரை. உண்மையில் உளவியல் ரீதியாக ஆராயப்படக்கூடியவர்கள் இந்தியர்களே. நம்மை இப்படிப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினால், பல்வேறு புதிய புதிய உளவியல் பிரச்னைகள் ஏராளமாக வெளிவரும்.

    ]]>
    http://karundhel.com/sex-comedies-and-tamil-films-dec-2016-andhimazhai-article/feed/ 0
    Arrival (2016) – English http://karundhel.com/arrival-2016-english/ http://karundhel.com/arrival-2016-english/#comments Sun, 27 Nov 2016 08:06:25 +0000 http://karundhel.com/?p=5840 அரைவல் ஒரு ஏலியன் படம். அதன் டைட்டிலிலேயே சொல்லியிருப்பதுபோல், they arrive one fine day. ஏன் வந்தார்கள்? வந்ததால் என்ன நேர்கிறது? ஆகிய கேள்விகளுக்கான பதிலை விவாதிக்கும் படம்தான் அரைவல்.

    ஆனால் படத்தைப் பார்க்குமுன்னர், இது ஒரு சிறுகதையை வைத்து எழுதப்பட்டுள்ளது என்பது ஒருசிலருக்குத் தெரிந்திருக்கலாம். அந்தக் கதையின் பெயர்: Story of Your Life. எழுதியவர் Ted Chiang. இவர் இதுவரை மிகச்சில சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். ஆனால் சைன்ஸ் ஃபிக்‌ஷனில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவர். இந்தக் கதையை முழுக்கவும் விபரமாகப் படித்தேன். இது ஒரு 32 பக்கக் கதை. திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு மிகவும் ஏற்றது.  நீங்களும் இந்தக் கதையைப் படிக்கலாம். திரைப்படத்தை விடவும் பல தகவல்கள் அடங்கிய கதை இது. ஆனால் it is less cinematic. இந்தக் கதையை எடுத்துக்கொண்டு, இதை சினிமாடிக்காக மாற்றுவது கட்டாயம் ஒரு கலை. அதை சரியாகச் செய்திருக்கின்றனர். இருந்தும், அதில் பிரச்னைகள் உண்டு. என்ன என்று இறுதியில் சொல்கிறேன்.

    சிறுகதை சற்றே abstractஆனது. ஏலியன்களின் வருகை பற்றியும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் மனிதர்கள் பற்றியுமானது. கூடவே, சிறுகதை முழுக்கவும், தனது மகளுடன் கதையின் நாயகி பேசும் தருணங்கள் உண்டு. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு.

    திரைப்படத்தின் நாயகி டாக்டர் லுயீஸ் பேங்க்ஸ், ஒரு மொழி வல்லுநர். ஒரு நாள் திடீரென்று உலகெங்கும் மொத்தம் பனிரண்டு ஏலியன் விண்கலங்கள் இறங்கியிருப்பதை செய்தியில் காண்கிறார். விரைவிலேயே யுனைடட் ஸ்டேட்ஸின் ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் வெபர் லுயீஸைத் தொடர்பு கொள்கிறார். ஏலியன்கள் பேசும் கரகர பாஷையை மொழிபெயர்த்துத் தரச்சொல்கிறார். ஆனால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றும், அப்படிச் செய்யவேண்டும் என்றால் அந்த இடத்தில் தான் இருந்து ஏலியன்களுடன் பேசவேண்டும் என்றும் லுயீஸ் சொல்கிறார். அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாண்டானாவில் ஏலியன் விண்கலம் தரையிறங்கியிருக்கும் இடத்துக்கு வெபர் லுயீஸைக் கூட்டிச்செல்கிறார். அதே பயணத்தில், இயன் டானல்லி என்ற தியரடிகல் பிஸிஸிஸ்ட்டையும் லுயீஸ் சந்திக்கிறார். இருவரும் சேர்ந்துதான் இந்தப் ப்ராஜக்டில் பணிபுரியப்போகிறார்கள்.

    இருவரும் ஏலியன் விண்கலம் இருக்கும் இடத்துக்குச் சென்றபின்னர் என்ன ஆனது என்பதே பாக்கிப்படம்.

    ஏலியன்கள் பூமிக்கு வருகின்றன என்று வைத்துக்கொள்வோம். இதுவரை வந்த படங்களில், அவை ஏன் வருகின்றன என்ற கேள்வி எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது? இண்டிபெண்டன்ஸ் டேவ் வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ், மார்ஸ் அட்டாக்ஸ், க்ளோஸ் என்கௌண்டர்ஸ் ஆஃப் த தேர்ட் கைண்ட், இண்டிபெண்டன்ஸ் டே 2 முதலிய பல ஏலியன் படங்களில், எடுத்த எடுப்பில் பூமியை அவை தாக்கும். இதனால் பிரச்னை நேரும். இதுதான் கதையாக இருக்கும். ஆனால், யோசித்துப் பாருங்கள் – மனித இனம், அதன் சரித்திரத்தில் பல புதிய இடங்களுக்குச் சென்றிருக்கிறது. நாகரிக மனிதன் கால்பதிக்காத பல கண்டங்கள் – தீவுகள் முதலிய இடங்கள். சென்று இறங்கியதும் நாம் என்ன அந்த இடத்தில் டமால் டுமீல் என்று யுத்தமா செய்கிறோம்? முதலில் அந்த இடத்தில் இருக்கும் ஆட்களுடன் பழக முயல்கிறோம். அதன்பின் தானே எதுவாக இருந்தாலும்?

    அப்படி, மொழியின் அடிப்படையில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றிய படம்தான் இது. மிக இயல்பான கதையோடு, எந்தவிதப் பரபரப்பும் இன்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், மெதுவாக நகர்ந்தால் அப்படம் சுவாரஸ்யமாக இருக்காது என்பது நமது நம்பிக்கை. அப்படியென்றால், Inglourious Basterds படத்தின் ஓப்பனிங் 20 நிமிடக் காட்சிகள் எத்தனை மெதுவாக நகர்ந்தன? ஆனால் அவை மிகவும் விறுவிறுப்பாகத்தானே இருந்தன? இப்படிப் பல உதாரணங்கள் உண்டு. எனவே, மெதுவாக நகர்தல் என்பது விறுவிறுப்பின்மையைக் குறிக்காது. அப்படித்தான் இந்தப் படத்திலும், காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், கதை என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நாடுகளுக்கிடையே இருக்கும் இரும்புத்திரை இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது.

    மொழியின் அடிப்படை என்ன? உலகின் அத்தனை மொழிகளும் sequentialஆனவை. அதாவது, ஒரு எழுத்துக்குப் பிறகு அடுத்த எழுத்து, ஒரு வார்த்தைக்குப் பின் அடுத்த வார்த்தை, ஒரு வாக்கியத்துக்குப் பின்னர் அடுத்த வாக்கியம், பத்தி, பக்கம், புத்தகம் என்று வரிசையாகவே நகர்தல்தான் உலக மொழிகள் அத்தனையுமே. இதனால் நமது எண்ணமுமே ஒருவித sequential வடிவையே பெறுகிறது. வரிசையாகவே சிந்திக்கிறோம். செயல்படுகிறோம். எனவே, மனிதனின் சிந்தனை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது மொழி என்று சொல்லமுடியும்.

    இப்போது, இப்படி யோசித்துப் பாருங்கள். ஒவ்வொன்றாக வராமல், ஒரே நேரத்தில் ஒரு மிகப்பெரிய வாக்கியத்தை டக்கென்று உருவாக்கினால்? ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் உருவானால்? இந்தக் கட்டுரையை ஒவ்வொரு எழுத்தாக நான் டைப் செய்யாமல், அதற்கான பிரத்யேக ஏற்பாடுகளின் மூலம், டகால் என்று ஒரே முறையில் ஒரு கட்டுரையாக நான் அப்லோட் செய்துவிட்டால்? அதாவது, simultaneous processing. இப்படி ஒரு சமுதாயம் உருவாகியிருக்கும் என்றால், அவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கும்? அவர்களின் சிந்தனைகளுமே simultaneousஆகவே இருக்கும். இதனால் அவர்களால் ஒரே சமயத்தில் பல்வேறு பக்கங்களிலும் சிந்திக்க முடியும். எழுத முடியும். பேச முடியும்.

    இதுதான் அரைவல் படத்தின் அடிப்படை.

    Story of your Life சிறுகதை இதுபோன்ற பல தியரிக்களை முன்வைக்கிறது. படத்தில் இல்லாத பல விஷயங்கள் இந்தக் கதையில் உண்டு. உண்மையில் இந்தக் கதை அப்படியே படமாக எடுக்கப்படவில்லை. கதையில் அப்ஸ்ட்ராக்ட்டாக இருக்கும் பல விஷயங்கள் படத்தில் இறுதியான முடிவோடு மாற்றப்பட்டுவிட்டன. கூடவே, கதையின் அப்ஸ்ட்ராக்ட் தன்மைக்கு எதிராக, படத்தில் ஆடியன்ஸுக்குப் புரியவேண்டும் என்றே சில புதிய விஷயங்களையும் கொண்டுவந்துள்ளனர். இதுதான் படத்தின் மிகப்பெரிய பிரச்னை.

    ஏனென்றால், படம் பார்க்கையில், ஒன்றிரண்டு இடங்கள் மிகவும் மொக்கையாக இருந்தன. உதாரணத்துக்கு, இப்படத்தில் ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டிய காரணம் என்ன என்று விளக்கும் இடம்தான் படத்தின் மிகவும் மொக்கையான இடம். ஏனெனில், இந்தக் காரணத்துக்காக ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டிய தேவையே இல்லை. அதற்குப் பதிலாக ஒன்றிரண்டு கருவிகளே போதும். அதேபோல், அந்தக் காரணம் மிக மிக மேலோட்டமாகவும் சொல்லப்பட்டுள்ளது. பூமிக்கும் ஏலியன்களுக்கும் இனிவரும் காலத்தில் ஒரு தொடர்பு ஏற்படப்போகிறது என்றும் புதிய காரணம் சொல்லப்படுகிறது. அதற்கு எந்தவித ஜஸ்டிஃபிகேஷனும் இல்லை. சும்மா ஜஸ்ட் லைக் தட் போகிறபோக்கில் அடித்துவிடுகிறார்கள். இந்தக் காட்சிகளிலெல்லாம் எரிச்சலே மிஞ்சியது. இன்று காலை சிறுகதையைப் படிக்கும்போதுதான், இது எதுவும் கதையில் இல்லை என்று புரிந்தது. சிறுகதையில் உள்ளவற்றை அப்படியப்படியே படத்தில் காட்டிய இடங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. சிறுகதையில் இல்லாமல் இவர்களாகப் புகுத்திய அத்தனை அம்சங்களும் மொக்கை. இது படம்பார்க்கும்போதே நிரடியது. இன்று சிறுகதை படித்ததும் தெளிவானது.

    சிறுகதையில், பூமியெங்கும் 112 விண்கலங்கள் இறங்கியிருக்கும். ஆனால் படத்தில் வெறும் 9. எண்ணிக்கை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், இத்தனை விண்கலங்கள் இறங்கியிருப்பது ஏன் என்று நம்மை யோசிக்க வைக்கும். அதேபோல் சிறுகதையில், கதாநாயகி லுயீஸின் வாழ்க்கையின் சில சம்பவங்கள் மிகவும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டிருக்கும். படத்தில் அந்த சம்பவங்கள் மிகவும் குறைக்கப்படுவிட்டன. சுருக்கமாகச் சொல்லப்போனால், சிறுகதை படித்தபின் நம் மனதில் எழும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவை திரைப்படம் பார்த்தபின் எழுவதில்லை. இத்தனைக்கும் நான் படத்தைத்தான் முதலில் பார்த்தேன். ஏற்கெனவே சொன்னபடி, படத்தின் சில இடங்கள் உச்சபட்ச மொக்கையாக இருந்தன. எனவே கதையைப் படித்தேன். அதன்பின் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் எளிதில் புரிந்தன. இப்படம் ஒரு மோசமான அடாப்டேஷன். அதையும் மீறிப் படத்தில் கதையில் உள்ள உணர்வுகளை ஓரளவு கொண்டுவந்துள்ளனர். அதுவே, பலரையும் இப்படத்தைப் பாராட்ட வைக்கிறது என்று புரிகிறது. படத்தைப்பற்றிய பல விமர்சனங்கள் பாஸிடிவாக உள்ளன. ஆனால் என்னை இப்படம் அந்த அளவு கவரவில்லை. கதைதான் மிகவும் கவர்ந்தது.

    அப்படியென்றால் படம் மொக்கையா? பார்க்கத் தேவையில்லையா? இல்லை. படத்தை அவசியம் பாருங்கள். வித்தியாசமான ஒரு உணர்வைப் படம் கண்டிப்பாகக் கொடுக்கும். படத்தில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அதைப்பற்றி எக்கச்சக்கமாக எழுதமுடியும். நான் மேலே சொன்ன, மொழியின் sequential & simultaneous இயல்புகளுக்கும் இந்த ட்விஸ்ட்டுக்கும் சம்மந்தம் உண்டு. ஆனால், படம் பார்ப்பதோடு நிறுத்தாமல், இந்தச் சிறுகதையையும் முழுதாகப் படியுங்கள். அப்போதுதான் இதன் கதையின் பிரம்மாண்டம் நமக்கு முழுதாகப் புரியும்.

    எழுத்தாளர் டெட் சியாங் அவரது கதையைப் படிக்கும் ஒரு reading session இங்கே. இதிலேயே கேள்வி பதில்களும் உண்டு.

    இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் எரிக் ஹெய்ஸரர். இதுவரை திகில் படங்களையே எழுதியிருக்கிறார் (Lights Out, The Thing, Nightmare on Elm Street etc..). இப்படிப்பட்ட ஒரு அருமையான கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொத்துக்கறி போட்டிருக்கிறார். இருந்தும், அதையும் மீறிப் படம் நமக்குப் பிடிப்பது கட்டாயம் சிறுகதையின் ஆழத்தால்தான்.

    இயக்குநர் – டெனிஸ் வில்லென்யூ. சற்றே வித்தியாசமான இயக்குநர். இவரது முந்தைய படங்களான Sicario, Enemy, Prisoners, Maelström முதலியவற்றை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

    ஒரு நல்ல கதையை மோசமாக, டெம்ப்ளேட்டாக எழுதி எடுத்திருக்கும் படம். ஆனால் அதையும் மீறி, கதையின் depth உங்களைக் கவரும். மறக்காமல் சிறுகதையைப் படித்துவிடுங்கள்.

    ]]>
    http://karundhel.com/arrival-2016-english/feed/ 1
    Achcham Yenbadhu Madamaiyada (2016) – Tamil http://karundhel.com/achcham-yenbadhu-madamaiyada-2016-tamil/ http://karundhel.com/achcham-yenbadhu-madamaiyada-2016-tamil/#comments Sat, 26 Nov 2016 16:38:08 +0000 http://karundhel.com/?p=5834 இரண்டு வாரங்கள் முன்னரே பார்த்துவிட்ட படம். இப்போதுதான் எழுத முடிந்தது. வேலை.

    Spoiler Alert. Please read at your discretion.

    காட்ஃபாதரின் ஒரு குறிப்பிட்ட தருணத்தால் இன்ஸ்பையர் செய்யப்பட்ட படம் என்ற டிஸ்க்ளெய்மருடன் அச்சம் என்பது மடமையடா துவங்குகிறது. என்ன தருணம் அது? மைக்கேல் கார்லியோனி, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் காட்ஃபாதரைப் பார்க்க வருகிறான். அப்போது அங்கே இவர்களது ஆட்கள் யாருமே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறான். உடனடியாக அங்கிருக்கும் ஒரு நர்ஸின் உதவியுடன் அப்பாவை வேறொரு அறைக்கு மாற்றுகிறான். அண்ணன் சான்னிக்கு அழைத்து, ஆட்களை அனுப்பிவைக்கச் சொல்கிறான். இதெல்லாம் தெரியாத சோலெஸ்ஸோ, தத்தாலியா குடும்பத்தின் அடியாட்களுடன் டான் கார்லியோனியைக் கொல்ல அங்கு வர, எதேச்சையாக காட்ஃபாதரைப் பார்க்கவந்த ஒரு இளைஞனுடன் வாசலில் நின்றுகொண்டு, ஆட்கள் அதிகமாக இருப்பதுபோன்ற ஒரு பிரமையை மைக்கேல் ஏற்படுத்துகிறான். திட்டம் பாழான கடுப்பில், தங்களின் ஆளான போலீஸ்காரர் மெக்லஸ்கியை சோலெஸ்ஸோ அனுப்ப, மெக்லஸ்கி மைக்கேலின் முகத்தில் அடித்துவிடுகிறான். அதுதான், அதுவரை ராணுவவீரன் மைக்கேல், இடாலியைச் சேர்ந்த கடத்தல் குடும்ப வாரிசாக உருவெடுக்கும் முதல் காட்சி. இதுதான் காட்ஃபாதர் படத்தின் மிகவும் முக்கியக் காட்சிகளில் ஒன்று. இதன்பின்னர்தான் படமே வேகமெடுக்கிறது.

    இந்தக் காட்சியால் இன்ஸ்பையர் ஆகித்தான் அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்ததாக மிகவும் நேர்மையாக கௌதம் வாசுதேவ் குறிப்பிடுகிறார். டைட்டிலில் இதைச் சொன்னதற்கு வாழ்த்துகள். அவரது நேர்மையைப் பாராட்டுகிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அக்னி நட்சத்திரம் படத்தின் ஒட்டுமொத்த க்ளைமேக்ஸும் இதே காட்சிதான். ஆனால் அதில் எங்குமே க்ரெடிட்ஸைப் பார்த்ததாக நினைவில்லை. கௌதமுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும். அதனால்தான் – இக்காட்சி ஏற்கெனவே தமிழில் சுடப்பட்டுவிட்டது என்பதால்தான் – நேர்மையாக டைட்டிலில் அக்காட்சியைப் பற்றிச் சொன்னார் என்பது என் அனுமானம்.

    இதோ இந்தக் காட்சியில் 12:00ல் இருந்து பார்க்கவும்.

    ஓகே. டைட்டில் இன்ஸ்பிரேஷன் பற்றி விரிவாகவே பார்த்துவிட்டோம்.

    படத்தின் முதல் பாதி, முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை என்பது இன்னேரம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பாடல்கள், காட்சிகள் ஆகிய எல்லாமே ஒரு முழுநீள ரொமான்ஸ் படம் பார்க்கும் உணர்வையே கொடுக்கின்றன. கூடவே, எங்கும் அலுக்காமல் படம் செல்கிறது. அதற்கு கௌதம்+ ரஹ்மான் கூட்டணி ஒரு முக்கியமான காரணம். வெறுமனே கேட்கையில் இப்படத்தின் பாடல்கள் அப்படியொன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் படத்தோடு பார்க்கையில் அட்டகாசமாக இருந்தன.

    படத்தின் இரண்டாம் பாதி பற்றிப் பலரும் என்னிடம் பேசினர். பலருக்கும் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என்றே தெரிந்துகொண்டேன். இதற்கு வலுவான காரணங்கள் உண்டு. முதல்பாதி முழுக்க ஒரு ரொமான்ஸ் படமாகச் செல்லும் கதை, இடைவேளைக்கு சற்றுமுன்னர் டக்கென்று மாறி, இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் கதையாகச் செல்கிறது. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் படத்தின் க்ளைமேக்ஸில் வரும் பல விஷயங்கள் நம்பும்படி இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகவும் இருந்தது. எனக்கும் அதே கருத்துதான். ஆனால் அதில் ஒரு வித்தியாசம். கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள இயலாத இறுதி நிமிடங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஆடியன்ஸை இரண்டாம் பகுயை முழுக்க முழுக்க நிராகரிக்கவே அவர்களின் மனம் தூண்டுகிறது. இதை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் சொல்லிய வித்தியாசம் என்னவென்றால், இரண்டாம் பகுதி ஆரம்பித்து, க்ளைமேக்ஸ் நோக்கிச் செல்லும் தருணம் வரை இப்படத்தின் கதை ஓரளவு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது என்பதே என் கருத்து. ஆனாலும், முதல் பாதி குற்றம் சொல்ல முடியாமல் இருந்த அளவு இரண்டாம் பாதி இல்லை என்பது உண்மையே.

    இரண்டாம் பாதியின் பிரச்னைகள்:

    1. எதிரிகளால் துரத்தப்படும் சிம்புவுக்குத் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. அவருக்கு சுடத்தெரியாது என்பதை சொல்லும்விதமாகவே காட்சிகள் நகர்கின்றன. இருந்தாலும், அவரது துப்பாக்கியில் குண்டே தீராதா?

    2. எதிரிகளிடம் இருந்து தப்பித்து, புல்லட்டைத் திருடிக்கொண்டு செல்லும் சிம்பு, திடீரென்று திருப்பித்தாக்க முடிவுசெய்கிறார். அதுவரை ஓகே. ஆனால் அப்படி முடிவு செய்து வீறுகொண்டு எழுந்து வேகமாக வரும் சிம்பு என்ன செய்கிறார்? முதலில் ஒளிந்துகொண்டு எதிரிகளைக் கண்காணிக்கிறார். பின்னர் அவர்கள் தங்கும் அதே ஹோட்டலில் அறை எடுக்கிறார். காதலியை அங்கே தங்கச்செய்கிறார். அதே ஃப்ளோர் (ஒருவேளை வேறு ஃப்ளோராக இருந்தாலுமே அது பிரச்னைதான்). சரி. தங்கச்செய்துவிட்டார். அடுத்து என்ன செய்கிறார்? திடீரென்று காதலியைக் கிளம்பிவரச்சொல்கிறார். ஏன்? அவருக்கே தெரியாது. ஏனெனில் அது கௌதம் திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த முடிவு. அப்படித்தான் தோன்றியது. ‘நீ முன்னால போ.. அப்புறமா வெளில வா.. கிளம்பிடலாம்’ என்றுதான் இந்தக் காட்சியே இருக்கிறது. ஆக, வீறுகொண்டு எழும் சிம்பு எப்படி அவரது ஆத்திரத்தையும் பழி உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்? ரூம் போடுவதன் மூலம்தான்.

    3. சரி. இதன்பின் என்ன நடக்கிறது? அங்கிருந்து சிம்பு தப்புகிறார். தமிழகம் வருகிறார். அவரைத் தேடி ரவுடி போலீஸ் பாபா சேகல் தமிழகம் வருகிறார். ஆனால் சிம்புவின் வீட்டில் அவரது பெயரில் இருப்பது வேறு ஒரு ஆள். ஃபோட்டோக்கள் உட்பட மாறியிருக்கின்றன. சிம்பு அட்ரஸே இல்லை. எங்கே சென்றார்? எங்கோ தனியாக ஒளிந்துகொண்டு போலீஸாகவேண்டும் என்று படித்துக்கொண்டிருக்கிறார் (!!!??). படித்துமுடித்து, பரீட்சையில் பாஸாகி, ஐ.பி.எஸ் தேர்வு செய்து பாபா சேகலுக்கே தலைமையதிகாரியாக வருகிறார்.

    சினிமா பார்க்கும் ஆடியன்ஸை ஏமாளிகள் என்று கண்மூடித்தனமாக நம்பினால்தான் இப்படி ஒரு க்ளைமேக்ஸை எழுத/யோசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. சினிமாவே தெரியாத ஒரு ஸ்கூல் பையன் கூட இதை யோசிக்கமாட்டான். அதிலும் சந்தேகமில்லை. லாஜிக்கே இல்லாத, கோமாளித்தனமான காட்சி இது. இதெல்லாம் எப்படி சாத்தியம்? ஒரு போலீஸ் அதிகாரியால் கண்டுபிடிக்க முடியாமல், அவரது ஒட்டுமொத்த ஐடெண்டிடியையும் இரண்டரை வருடங்கள்  மாற்றிக்கொண்டா சிம்பு வாழ்ந்தார்?

    4. ஹீரோயினுக்கான கதையாக வரும் மிகப்பெரிய வாய்ஸ் ஓவர் கதை அடுத்த பிரச்னை. அறுபதுகளின் படங்களில்தான் இப்படிப்பட்ட கதையைச் சொல்லலாம். இப்போதெல்லாம் இதை ஒரு வார்த்தை கூட பேசவோ எழுதவோ கூடாது. அப்படிப்பட்ட ஓட்டை இது. துளிக்கூட நம்பமுடியாத, மொக்கையான கதை.

    5. இந்த இரண்டு பாயிண்ட்களிலும் ஆடியன்ஸின் மனது டுமீரென்று வெடித்துவிட்டது. இதனால்தான் படமே மொக்கை என்றும், இரண்டாம் பாதி கொடூரம் என்றும் பலரும் சொல்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை.

    அதுதான் நிஜம். ஒரு மறக்கமுடியாத படமாக ஆகியிருக்கவேண்டிய படம், இந்தப் பிரச்னைகளால் எளிதில் மறக்கப்படக்கூடிய படமாக மாறிவிட்டது.

    படத்தில் ஒருசில ப்ளஸ்கள் உண்டு. ஹீரோ & ஹீரோயின் புல்லட்டில் செல்லும் பயணம். இப்படி ஒரு பயணத்தைத் தமிழில் பார்த்ததே இல்லை. பாடல்கள்+காட்சிகளோடு சேர்ந்து இவை ஜாலியாக அமைந்திருக்கின்றன. அடுத்து, தள்ளிப்போகாதே பாடலின் சிச்சுவேஷன். காக்க காக்க படத்தில், உயிரின் உயிரே பாடலின் சாகக்கிடக்கும் ஹீரோ-கொல்லப்படும் தருவாயில் ஹீரோயினுடன் டூயட் என்ற அதே சிச்சுவேஷனை அப்படியே இதில் உபயோகப்படுத்தியிருக்கிறார் கௌதம். எனவே, இது முற்றிலும் புதிய சிச்சுவேஷன் இல்லை. ஆனால், அந்தப் பாடலை அட்டகாசமாக எடுத்திருக்கிறார். பாடலுக்கேற்ற படமாக்கம். அதேபோல், விபத்திலேயே ஹீரோ & ஹீரோயின் பரஸ்பரம் காதலை முதலிலும் இறுதியிலும் பேசிக்கொள்ளும் வசனங்கள் & சிச்சுவேஷன். சிம்புவின் நடிப்பு இன்னொரு ப்ளஸ். கதாபாத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்.

    ஆனால் இந்தப் ப்ளஸ்கள் போதாது. அல்டிமேட்டாகப் பாடல்கள் & முதல்பாதிக்காக மட்டுமே படம் பார்க்கலாம் என்ற பொதுவான கருத்தையே இவைகளால் உருவாக்க முடிந்திருக்கிறது.

    தன்னுடைய திரைக்கதை எழுதும் ஸ்டைலைப் பற்றி கௌதம் பலமுறை சொல்லியிருக்கிறார். 60%-70% மட்டுமே எழுதப்பட்ட திரைக்கதையோடு, படப்பிடிப்புக்கு சென்று, அங்கே நடிகர்கள் கதாபாத்திரத்தில் நடிப்பதை வைத்துக்கொண்டு பிற காட்சிகளை முழுமையாக்குவதுதான் அது. இதனால் பல பிரச்னைகள் உண்டு என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். இதை யாரும் ஃபாலோ செய்யவேண்டாம் என்று அவரே சொல்லவும் செய்கிறார். ஆனால் தொடர்ந்து அப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமா? முழுத் திரைக்கதையையும் தெளிவாகத் தயார் செய்துவைத்துக்கொண்டபின்னர்கூட, ஷூட்டிங்கில் காட்சிகளை ஆங்காங்கே மாற்றலாமே? இதனால் இப்படத்தில் வருவதுபோன்ற, ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்க முயலும் காட்சிகள் தவிர்க்கப்படுமே? ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இதுபோன்ற சம்மந்தம் இல்லாத காட்சிகள் உண்டு. வாரணம் ஆயிரம் படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்மந்தமே இருக்காது. இதுபோல் தொடர்ந்து அவரது படங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூலகாரணமே அவரது திரைக்கதை எழுதும் முறைதான் என்பதைத் தெரியாமல் இருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆனால் தன் தவறை முழுக்கமுழுக்கத் தெரிந்துகொண்டபின்னரும், அதையே விடாமல் செய்துகொண்டிருந்தால் எத்தனை காலம்தான் அது தெரியாததுபோலவே நடிப்பது?

    அடுத்த படத்திலாவது கௌதம் இதை சரிசெய்யவேண்டும். ஒரு திரைப்படம் முழுமையான அனுபவம் தந்தால்மட்டுமே அது நல்ல படமாக இருக்கும். பாதி படம் ஓகே – பாதி மொக்கை என்ற கருத்துகள் பரவுவது அந்தப் படத்துக்கும் இயக்குநருக்கும் நல்லதல்ல.


    கௌதமின் பிற படங்கள் பற்றி நமது தளத்தில் எழுதப்பட்ட விமர்சனங்கள்.

    ]]>
    http://karundhel.com/achcham-yenbadhu-madamaiyada-2016-tamil/feed/ 3
    இங்கு(ம்) நல்ல படங்கள் விற்கப்படும் http://karundhel.com/hollywood-independent-and-arthouse-cinema/ http://karundhel.com/hollywood-independent-and-arthouse-cinema/#respond Wed, 16 Nov 2016 03:47:27 +0000 http://karundhel.com/?p=5828 தமிழ் இந்துவின் 2016 தீபாவளி மலரில், ‘மசாலாவைத் தாண்டிய சில முயற்சிகள்’ என்ற பெயரில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.


    ஹாலிவுட் படங்கள் என்றாலே பலருக்கும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர், சில்வஸ்டர் ஸ்டாலோன், வின் டீஸல், ஜேஸன் ஸ்டதாம், அவெஞ்சர்கள் வகையிலான சூப்பர்ஹீரோ படங்கள், அனிமேஷன் படங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர் சீரீஸ் முதலிய மசாலாப்படங்கள்தான் எடுத்த எடுப்பில் தோன்றும். இன்னும் ஒருசிலருக்கு டேவிட் லீன், ஸ்பீல்பெர்க், நோலன், டாரண்டினோ, கய் ரிட்சீ, ஜேம்ஸ் கேமரூன், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி முதலியவர்களின் படங்கள் நினைவு வரலாம். உலகெங்கும் மிகப்பெரியதொரு திரைப்பட மார்க்கெட்டை வைத்திருப்பது ஹாலிவுட் படங்களே. ஜேம்ஸ் பாண்ட், ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் முதலிய மிகப்பெரிய ஃப்ராஞ்ச்சைஸ்கள் எல்லாமே உலகெங்கும் பல மில்லியன்கள் (ஏன்? பில்லியன்கள் கூட) சம்பாதித்துள்ளன.

    இருப்பினும், இந்தப் படங்களைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் மிகத்தரமான, உணர்வுபூர்வமான படங்கள் எப்போதாவது வருவதுண்டு. அத்தகைய படங்களை இயக்கும் இயக்குநர்களை மிகப்பெரும்பாலான ஹாலிவுட் ரசிகர்கள் அறியமாட்டார்கள். ஏனெனில் இப்படங்கள் விருது விழாக்களுக்கு மட்டுமே செல்கின்றன. டமால் டுமீல் படங்களே உலகெங்கும் பிரபலமாகி வசூல் வேட்டையில் இறங்கும் நிலையில், அமைதியான, தரமான இப்படங்கள் மிகச்சில நாடுகளுக்கே செல்கின்றன. கான் முதலிய படவிழாக்களை அறிந்த திரைரசிகர்களே இத்தகைய படங்களையும் இயக்குநர்களையும் அறிவர்.

    எனவே, ஹாலிவுட் என்ற பதத்துக்குப் பொதுவாக வெளியே இருக்கும் அர்த்தம் தவிர, வேறொரு நல்ல அர்த்தமும் உண்டு என்பதை நாம் உணரவேண்டும். ஏராளமான மசாலா ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், உலகின் பிற நாடுகளில் இருக்கும் தலைசிறந்த உலக இயக்குநர்களுக்கு சவால் விடும் திறமைசாலிகள் அவசியம் உண்டு.

    அதற்கு முன்னர், ஹாலிவுட்டில் படங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். வார்னர் ப்ரதர்ஸ், யுனிவர்ஸல், பாரமௌண்ட், சோனி, MGM, 20th Century Fox ஆகிய ஆறு ஸ்டுடியோக்களே தற்போது ஹாலிவுட்டின் பெரும்பாலான திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றன. இவர்களின் படங்கள் கட்டாயம் மசாலாக்களே. மில்லியன் கணக்கில் டாலர்கள் கொட்டி எடுக்கப்படும்போது, உலகெங்கும் ஓடவேண்டிய கட்டாயம் இவற்றுக்கு உண்டு. எனவே முடிந்தவரை மசாலாக்களாகவே இவை எடுக்கப்படுகின்றன (ஹாலிவுட் மசாலாவுக்கும் இந்திய மசாலாவுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு என்பதும் முக்கியம். இந்தியாவில் (தமிழையும் சேர்த்துதான்) தரமான மசாலாக்கள் சொற்பம். ஹாலிவுட்டில் அவை அதிகம்). இந்தப் படங்களிலெல்லாம், நிஜவாழ்க்கையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் காட்சிகள் இருக்காது; சற்றேறக்குறைய நிஜத்தையே பெரிதுபடுத்தி, பிரம்மாண்டமாக்கி, படத்தில் தானும் பங்கேற்கும் சிந்தனை முறையை ஆடியன்ஸுக்குக் கொடுக்காமல், எல்லாவற்றையும் எளியமுறையில் விளக்கியே காட்சிகள் எழுதப்பட்டிருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தனது நோக்கத்தில் ஹீரோ வெல்கிறானா இல்லையா என்பதே பிரதானமாக இருக்கும். எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் தெளிவாக இருக்கும். ஆடியன்ஸை எந்தவகையிலும் சிந்திக்கத் தூண்டாத வகையிலேயே பெரும்பாலான இவ்வகை ஸ்டுடியோ தயாரிப்புகள் இருக்கும். ஒட்டுமொத்தமாகக் கவனித்தால், படம் சுவாரஸ்யமாகச் சென்றாலும், முடிந்து வீட்டுக்கு வருகையில் அந்தப் படம் நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது.

    ஆனால், ஹாலிவுட்டில் இத்தகைய பிரம்மாண்டமான ஸ்டுடியோக்கள் இல்லாமல், குட்டிக்குட்டிப் படங்களும் வருவதுண்டு. சிறிய பட்ஜெட்டுடன், தனிநபராலோ அல்லது ஒரு சிறிய குழுமத்தாலோ, பெரிய ஸ்டூடியோக்களின் ஆதரவு இல்லாமல் எடுக்கப்படும் இத்தகைய படங்கள், இன்டிபென்டண்ட் சினிமா’ (Independent Cinema) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட படங்களில் ஹாலிவுட் படங்களின் வழக்கமான மசாலாத் தன்மைகள் இருக்காது. மாறாக, இயக்குநரின் நோக்கம், அவரது கதைசொல்லல் முறை ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் இருக்கும். பொதுவாகத் திரைக்கதைகளுக்கான எந்தவகையான விதிகளும் இப்படங்களில் இருக்காது. எனவே, ‘சுவாரஸ்யம்’ என்ற பதத்தின் உலகளாவிய அர்த்தம் இவற்றில் மாறும். சில படங்கள் மெதுவாகவும் செல்லக்கூடும். (வேகமாக இருந்தால்தான் சுவாரஸ்யம் என்ற பொதுவான கருத்து நம்மிடம் உண்டுதானே?)இப்படங்கள் தரும் உணர்வுகளே முக்கியம். வழக்கமான ஹாலிவுட் படம் தரும் உணர்வைவிடவும் பலமடங்கு அதிகமான தாக்கம் இப்படங்களில் இருக்கும். எனவே நம்மால் மறக்க இயலாத உணர்வை இப்படங்கள் அளிக்கும்.

    அத்தகைய ஒருசில முக்கியமான இயக்குநர்களை இந்தக் கட்டுரையில் கவனிக்கலாம்.

    ஹாலிவுட்டின் முதல் ‘ஆர்ட்’ ஃபிலிம், புகழ்பெற்ற இயக்குநர் D.W க்ரிஃப்ஃபித் எழுதி இயக்கிய ‘Intolerance’ என்பதே என்று பரவலாக நம்பப்படுகிறது. இது வெளியான வருடம் 1916. மொத்தம் மூன்றரை மணி நேரங்கள் ஓடக்கூடிய மௌனப்படம் இது. நான்கு கதைகள் இதில் சொல்லப்பட்டன. நான்கு கதைகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருந்தன. மொத்தம் மூவாயிரம் எக்ஸ்ட்ராக்கள் நடித்த படம் இது. மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டது. ஹாலிவுட்டின் மிக ஆரம்ப கட்டத்தில் இப்படி ஒரு படம் வந்தால் என்ன ஆகும்? பலருக்கும் படம் பிடிக்கவில்லை. படுதோல்வியடைந்தது. ஆனால் அதன்பின் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த ஆரம்பகால ஆர்ட் படங்களில் ஒன்றாகவே இண்டாலரன்ஸ் திகழ்கிறது. க்ரிஃப்ஃபித்தின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியில் பதம்பார்த்த படம் இது.

    இதன்பின்னர் ஒருசில வருடங்களுக்கு ஹாலிவுட் படங்கள், இத்தகைய படங்களை எடுக்கவே துணியவில்லை. உலகின் பிற நாடுகளில் பேட்டில்ஷிப் போடெம்கின் (செர்கய் ஐஸன்ஸ்டீன்), Un Chien Andalou (புனுவெல் எடுத்த குறும்படம் – உலகைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் என்று அறிய இப்படத்தைப் பார்க்கவும்), L’Age d’Or (இதுவும் புனுவெல் எடுத்த படமே. இப்படத்தில் புனுவெலோடு சால்வதோர் டாலியும் திரைக்கதையில் பணியாற்றினார்) முதலிய படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம். இச்சமயத்தில் ஹாலிவுட்டில் சாப்ளின், பஸ்டர் கீட்டன், மார்க்ஸ் சகோதரர்கள் முதலியவர்களின் நகைச்சுவைப் படங்களே பெருவாரியாக வரவேற்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஹாலிவுட்டின் பிரதான ஸ்டுடியோக்களாக அப்போது புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருந்த MGM, 20th Century Fox, Paramount முதலிய ஸ்டுடியோக்களில் வெஸ்டர்ன்கள், நகைச்சுவைப் படங்கள், ம்யூஸிகல்கள், க்ளாஸிக் கதைகளைப் படமாக்கிய திரைப்படங்கள் ஆகியவையே பெரிதும் எடுக்கப்பட்டன. இதுதான் ஹாலிவுட் படங்கள் உலகின் பிற நாடுகளில் பிரபலமாகிய காலகட்டம்.

     

    இக்காலத்தில், பொழுதுபோக்குத் திரைப்படங்கள் பார்க்காமல், உலகின் பிற நாடுகளில் வெளியாகும் தரமான படங்கள்தான் பார்ப்போம் என்று அப்போதே யுனைடட் ஸ்டேட்ஸில் பலர் இருந்தனர். இவர்களின் முயற்சியால், ஆர்ட் படங்களை மட்டுமே திரையிடக்கூடிய அமைப்புகள் உருவாகின. இது நடந்தது நாற்பதுகளின் முடிவில். ’வழக்கமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போய், ஆர்ட் படங்களைப் பார்க்கப்போகிறோம்’ என்றே இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரகடனம் செய்தனர். பிற நாடுகளைச் சேர்ந்த ஆர்ட் படங்கள், யுனைடட் ஸ்டேட்ஸில் எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள், ஸ்டுடியோக்களின் தயாரிப்பாக இல்லாமல், சுயாதீனமாக எடுக்கப்பட்ட இண்டிபெண்டண்ட் படங்கள் ஆகியன இங்கே திரையிடப்பட்டன. இருப்பினும், அப்போதுகூடப் பிறநாடுகளின் ஆர்ட் படங்கள்தான் உள்ளே வந்தனவே தவிர, பெருவாரியாக ஹாலிவுட்டில் ஆர்ட் படங்கள் எடுக்கப்படவில்லை.

    அதேசமயம், கிட்டத்தட்ட நாற்பதுகளிலிருந்தே ஓரளவு ஹாலிவுட்டில் இன்டிபெண்டண்ட் படங்கள் எடுக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில், சொல்ல விரும்பிய கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற கேளிக்கை அம்சங்கள் திரைப்படத்தைக் கெடுக்காமல், நல்ல நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட இப்படிப்பட்ட படங்களில் 1953-ல் வெளியான ‘லிட்டில் ஃப்யூஜிட்டிவ்’ (Little Fugitive) முக்கியமானது.

    இந்தப் படம் இன்றளவும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல குறைந்த பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டன. ‘தி ஃபில்ம்-மேக்கர்ஸ்’ கோஆப்பரேட்டிவ்’ (The Film-Makers’ Cooperative) போன்ற சில அமைப்புகளும் நிறுவப்பட்டு, ஸ்டூடியோ முறைக்கு வெளியே, இதுபோன்ற நல்ல படங்களை விநியோகிப்பதற்காகத் துவங்கப்பட்டன. இக்காலகட்டம்தான் ஹாலிவுட்டில் பொழுதுபோக்குப் படங்கள்மட்டுமே எடுக்கப்படும் என்ற நிலையை மாற்றிய காலம். இண்டிபெண்டண்ட் படங்கள் பெற்ற வெற்றியால் பல சுயாதீனப் படங்கள் எடுக்கப்பட ஆரம்பித்தன.

    இச்சமயத்தில்தான், ஐம்பதுகளில் ஃப்ரான்ஸில் French New Wave என்ற ஒரு பதம் புழக்கத்துக்கு வந்தது. ஐம்பதுகளில், அகிரா குரோஸவா போன்ற திரைப்பட மேதைகள் படங்கள் எடுக்கத்துவங்கியிருந்த காலம். இந்தியாவில் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே ஆகியோர் மூலம் நல்ல சினிமா பரவிக்கொண்டிருந்த காலம். ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut) என்ற இருபத்தேழு வயது இளைஞன் எடுத்த ‘400 Blows’ என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம், குழந்தைகள் சிறுவயதில் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றிய துல்லியமான பதிவாக உலகெங்கும் புகழ்பெற்றது. த்ரூஃபோ ஒரு விமர்சகராக அவரது திரைவாழ்வைத் துவங்கியவர். ஆண்டோய்ன் டாய்னல் என்ற பனிரண்டு வயது சிறுவனைப் பற்றிய படம் அது. இப்படம் பலருக்கும் நினைவிருக்கக்கூடும்.

    பழைய, க்ளாஸிக் கதைகளை அப்படியே திரைப்படமாக எடுப்பது என்ற முறையை அடியோடு ஒழித்ததுதான் ஃப்ரெஞ்ச் ந்யூ வேவ். அதில் முக்கியமானவர்கள் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ, கொதார் (Godard), க்ளாட் சாப்ரோல் Claude Chabrol  ஆகியோர். இவர்களின் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவருமே விமர்சகர்களாக இருந்தவர்கள். இந்த சமயத்தில்தான் இவர்கள் மூலமும், இவர்கள் சார்ந்திருந்த பத்திரிக்கை மூலமும் (Cahiers du Cinema), உருவாக்கப்பட்ட சில கருதுகோள்களே நியூ வேவ் சினிமாவின் துவக்கம். இப்பத்திரிக்கையில் இவரும் பிறரும் எழுதிய சூடான விமர்சனங்கள் மிகப் புகழ்பெற்றவை.

    இந்த ஃப்ரெஞ்ச் ந்யூ வேவின் பாதிப்பு ஹாலிவுட்டில் பலமாக எதிரொலித்தது. அதுவரை மிகச்சில இண்டிபெண்டண்ட் படங்களும் ஆவணப்படங்களுமே எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஹாலிவுட்டில், ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) முதலியவர்கள் பரிசோதனைப் படங்கள் எடுக்கத் துவங்குகின்றனர். வார்ஹோல் ஒரு மிகப்பிரபலமான ஆர்டிஸ்ட். இப்போது சர்வசகஜமாகப் புழங்கும் ‘பாப் ஆர்ட்’ என்ற, நடைமுறையில் பிரபலமாக இருக்கும் விஷயங்களை ஓவியங்களில் வெட்டி வைத்து, அவற்றின் மூலம் அந்த ஓவியத்தின் பின்னணியையும் பொருளையும் வேறொரு தளத்துக்கு எடுத்துச்செல்லும் முறையில் மிகச்சிறந்து விளங்கியவர். அவர் திரைப்படங்களும் எடுத்துள்ளார். அவர் எடுத்த அனைத்துப் படங்களுமே மிகவும் வித்தியாசமானவை. ஒரு கவிஞர் தூங்குவதை ஆறு மணி நேரங்கள் படமாக எடுத்தல் (Sleep), ஓரல் செக்ஸில் ஈடுபடும் ஒரு நபரின் முகத்தை மட்டும் காட்டுவது (Blow Job), ஒரு காளானை 45 நிமிடங்கள் சாப்பிடும் மனிதன் ஒருவனைப் பற்றிய படம் (Eat), ஒரே படத்தில், பக்கம்பக்கமாக இரண்டு படங்களை ஓட்டுதல் (Chelsea Girls) என்றெல்லாம் முற்றிலும் வேறுபட்ட பல படங்களை எடுத்தவர் வார்ஹோல். இவரது படங்கள், ஆர்ட் சினிமா என்ற பதத்தை ஹாலிவுட்டில் பிரபலப்படுத்தியது. மென் இன் ப்ளாக் மூன்றாவது பாகத்தில், இவர் சிறிது நேரம் வருவார். இவரை ஒரு உளவாளியாகக் காட்டியிருப்பார்கள். இது அறுபதுகளில்.

    இதன்பின்னர் பொதுவாகவே ஆர்ட் ஃபிலிம் என்றால் அது இண்டிபெண்டண்ட் படங்களையே யுனைடட் ஸ்டேட்ஸில் குறிக்க ஆரம்பித்தது. இந்த சுயாதீனப் படங்களில்தான் பல வித்தியாசமான கருக்கள் கையாளப்பட்டன. திகில், செக்ஸ், போதை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதைகள் வெளியாயின. இந்தச் சமயத்தில்தான் ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் காப்புலா (Francis Ford Coppola), ‘தி ரெய்ன் பீப்புள்’ (The Rain People) மூலம் அறிமுகமாகிறார். இதன் பின்னர் ஜார்ஜ் லூகாஸும் ‘டிஎச்எக்ஸ் 1138’ (THX 1138) படத்தை எடுக்கிறார். இவர்கள் மூலம் இந்த இண்டிபெண்டண்ட் படங்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

    இதே சமயத்தில்தான் டேவிட் லிஞ்ச்சும் Eraserhead படத்தை எடுக்கிறார். அந்தப் படம் மிகவும் பிரபலம் அடைகிறது. உடனடியாக Elephant Man படத்தையும் லிஞ்ச் எடுத்து வெளியிடுகிறார். இப்படத்துக்கு எட்டு ஆஸ்கர் பரிந்துரைகள் கிடைத்தன (அதேசமயம், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி எடுத்த Raging Bull படத்துக்கும் அதேபோல எட்டு ஆஸ்கர் பரிந்துரைகள். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்றை எடுத்த மைக்கேல் ஆப்டட்டின் Coal Miner’s Daughter படத்துக்கு ஏழு பரிந்துரைகள். ராபர்ட் ரெட்ஃபோர்ட் இயக்கிய Ordinary People படம் ஆறு பரிந்துரைகளைப் பெற்றது. முடிவில் Elephant Man படத்துக்கு எந்த ஆஸ்கரும் கிடைக்கவில்லை).

    டேவிட் லிஞ்ச் ஹாலிவுட்டின் முக்கியமான ஆர்ட் இயக்குநராக மாறுகிறார். தொடர்ந்து பல படங்களை இயக்குகிறார். அவற்றில் மல்ஹோலாண்ட் ட்ரைவ் (Mulholland Drive) படம் மிகவும் முக்கியமானது. இந்தப் படம்தான் 2001ம் வருடம் கான் விருது விழாவில் லிஞ்ச்சுக்கு சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றும் தந்தது. வழக்கப்படி ஆஸ்கர்களில் அவருக்குப் பரிந்துரை மட்டுமே மிஞ்சியது. இன்றுவரை யுனைடட்  ஸ்டேட்ஸின் ஆர்ட் படங்களில் டேவிட் லிஞ்ச்சின் இடம் மிகவும் முக்கியமானது.

    இவரைப்போலவே இன்னொரு மிக முக்கியமான இயக்குநர், ஜிம் ஜார்முஷ் (Jim Jarmusch). 1980ல் இருந்து பல படங்கள் எடுத்துள்ளார். இவரது Permanent Vacation, கான் படவிழாவில் சிறந்த முதல் பட விருது வாங்கியது. இவரது படங்களில் Dead Man, Ghost Talk, Coffee and Cigarettes ஆகியவை மிகவும் பிரபலமானவை.

    அதேபோல், கஸ் வான் சாண்ட்டும் (Gus Van Sant) மிகவும் முக்கியமானவர். இவர் எப்போதும் ஆர்ட் படங்களே எடுப்பவர் அல்ல. குட்வில் ஹண்டிங் படம் இவருடையதுதான். இவர் எடுத்த My Own Private Idaho மிகவும் முக்கியமான படம். பல விருதுகளை உலகெங்கும் வாங்கியுள்ளது. மிகச்சிறந்த இண்டிபெண்டண்ட் படம் என்று உலகம் முழுக்க இன்றுவரை பிரபலமான படம் இது.

    ஜெஃப் நிகோல்ஸ் (Jeff Nichols), தற்காலத்தில் யுனைடட் ஸ்டேட்ஸில் அருமையான இண்டிபெண்டண்ட் படங்கள் இயக்கிக்கொண்டிருக்கும் நபர். இவரது Shotgun Stories, Take Shelter, Mud, Midnight Special, Loving ஆகிய ஐந்து படங்களுமே பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கின்றன. தற்காலத்தின் மிகச்சிறந்த ஹாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் என்று இவரை ரோலிங் ஸ்டோன்ஸ் பத்திரிக்கை பாராட்டியுள்ளது.

    சார்லி காஃப்மேன் (Charlie Kaufman), யுனைடட் ஸ்டேட்ஸின் ஒரு முக்கியமான இயக்குநர். இவரது படங்களை முழுநீள ஆர்ட் படங்கள் என்று சொல்லிவிட இயலாது. வணிகப் படங்களின் போக்கிலேயே துவங்கி, தடாலென்று மிகவும் வித்தியாசமான ஒரு தளத்துக்கு நம்மை இழுத்துச்செல்லும் வகையிலான படங்களே இவரது தனித்தன்மை. Being John Malkovich, Eternal Sunshine of the Spotless Mind ஆகிய இரண்டு படங்களுக்கும் இவரே திரைக்கதை. பின்னர் Synecdoche, New York படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். திரைக்கதை ஜாம்பவான். இவரது படங்களை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும்.

    ரமீன் பஹ்ரானி (Ramin Bahrani) எடுத்துக்கொண்டிருக்கும் படங்களும் ஹாலிவுட்டில் மிக முக்கியமானவை. இவரது Man Push Cart, Chop Chop, Goodbye Solo, Plastic Bag, At Any Price ஆகிய ஐந்து படங்கள், உலகம் முழுதும் பல திரைவிழாக்களில் பங்குபெற்று விருதுகளை அள்ளியிருக்கின்றன.

    இயக்குநர் டாரன் அரநாவ்ஸ்கி (Darren Aronofsky)யும் அவசியம் குறிப்பிடப்படவேண்டிய இயக்குநரே. இவரது முதல் படம் Pi, மிகவும் வித்தியாசமானது. இவர் இயக்கிய Requiem for a Dream, இயல்பான மென்சோகம் நிரம்பிய கதை. இவரது படங்கள், வாழ்வில் நாம் சந்திக்கும் வெற்றிடங்களையும் வெறுமையையும் பற்றி விரிவாக அலசும் தன்மையுடையன. இவரது Black Swan, வெளியிடப்பட்டு ஒரே மாதத்தில், அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளில் தேர்வாகி, அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறது. அவரது பெயரைத் தேர்வு செய்து கருந்தேளில் அவரைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்கலாம்.

    ஹாலிவுட்டில், மெய்ன்ஸ்ட்ரீம் படங்கள் என்ற கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்களும் பல அற்புதமான படங்கள் எடுத்துள்ளனர். அவர்களில் ஹிட்ச்காக், ஸ்டான்லி க்யுப்ரிக், வூடி ஆலன், ஸ்கார்ஸேஸி, டாரண்டினோ, கோயன் சகோதரர்கள், ஃப்ராங்க் டாரபாண்ட் (ஷஷாங்க் ரெடெம்ப்ஷன்), க்ரிஸ்டோஃபர் நோலன், ரிச்சர்ட் லிங்க்லேட்டர், ஸ்பைக் லீ, சோஃபியா காப்புலா ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களைத் தவிரவும் ஒரு படையே இருந்தாலும், இவர்களே அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர்கள்.

    ஹாலிவுட்டில் வெளியாகும் மசாலாக்களுக்கு இணையாக அங்கு நல்ல படங்கள் வருவதில்லை. நாம் பார்த்த இண்டிபெண்டண்ட் படங்கள், ஆர்ட் படங்கள் ஆகியவை அங்கே எடுக்கப்பட்டாலும், அவற்றின் தரம், பிற நாடுகளின் (உதா: இரான், ஃப்ரான்ஸ், தென்னமெரிக்க நாடுகள், தென் கொரியா, டென்மார்க் etc..) கலைப்படங்களோடு ஒப்பிடப்படுவது கடினம்தான். இருந்தும், நாம் இந்தக் கட்டுரையில் பார்த்த இயக்குநர்களின் படங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், யுனைடட் ஸ்டேட்ஸிலும் தரமான படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர்வீர்கள். திரைப்படங்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் யுனைடட் ஸ்டேட்ஸில் அந்த அளவு தரமான கலைப்படங்கள் வெளிவருவதில்லை என்பது அவசியம் நகைமுரண்தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் இருக்கும்வரை இந்த நிலை மாற அங்கே வாய்ப்பு இல்லை. அதேசமயம், ஹாலிவுட்டின் மசாலாக்களை விடாமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தரமான படங்களின்மேல் நாம் கவனம் செலுத்தினால், அவசியம் நம்மைத் திருப்திப்படுத்தும் படங்கள் இருந்தே தீருகின்றன என்பதும் உண்மை.

    ]]>
    http://karundhel.com/hollywood-independent-and-arthouse-cinema/feed/ 0
    Doctor Strange (2016) – English http://karundhel.com/doctor-strange-2016-english/ http://karundhel.com/doctor-strange-2016-english/#comments Mon, 07 Nov 2016 15:29:46 +0000 http://karundhel.com/?p=5815 முன்குறிப்பு –  இதற்கு முன்னர் எழுதியிருக்கும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.


    இந்த வருடம் வந்திருக்கும் மார்வெலின் இரண்டாவது படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். முதல் படம், Captain America – Civil war.

    டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் பார்த்தாலே உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின் பின்புலம் தெரிந்துவிடும். படத்தில் வரும் அதே கதைதான் காமிக்ஸிலும். எனவே டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் கதையைத் தெரிந்துகொள்வதற்குப் பதில், படத்தில் வரும் பிற சுவாரஸ்யமான விஷயங்களைக் காணலாம்.

    நமது மில்க்கி வே கேலக்ஸியில் கணக்கற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உண்டு. மில்க்கி வே கேலக்ஸி போன்றே அண்டவெளியெங்கும் லட்சக்கணக்கான கேலக்ஸிகள் உண்டு. இவையெல்லாம் சேர்ந்ததே அண்டவெளி. இதுபோலப் பல அண்டவெளிகள் உண்டு. அதாவது, நாம் அனைவரும் இருக்கும் பூமி இடம்பெற்றிருக்கும் மில்க்கி வே அடங்கிய அண்டவெளி ஒன்று. இதைப்போல் பலப்பல முற்றிலும் பிரம்மாண்டமான அண்டவெளிகள் உண்டு. இத்தகைய அண்டவெளிகளுக்குள் புகுந்து புறப்பட்டு வெளிவரும் சக்தி, மிகச்சிலருக்கே உள்ளது. அத்தகைய சக்திவாய்ந்தவர்களுள் தலைசிறந்த, எப்போது தோன்றியது என்றே சொல்ல இயலாத, மிகப்பழமையான ஒரு ஜீவனின் பெயர் – The Ancient One. இந்த ஜீவன் தற்போது நமது பூமியில் இருக்கிறது. பூமியின் மூன்று மூலைகளில் மூன்று மடாலயங்கள் உண்டு. இந்த மடாலயங்களை ஒருங்கிணைத்தால் இவைகளை இணைக்கும் சக்தி உருவாகி, பூமியைப் பிற கிரகங்கள், அண்டவெளிகள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கொடிய சக்திகளிடம் இருந்து காக்கும்.

    டோர்மாம்மு (Dormammu) என்ற கொடூர சக்தி, வேறோர் அண்டவெளியில் இருக்கும் சக்தி. இதன் ஒரே நோக்கம், பூமியைக் கைப்பற்றுவது. டோர்மாம்மு இருக்கும் இடத்தில் பூமியின் பௌதீக விதிகள் வேலை செய்யாது. அங்கே காலம், நேரம், புவியீர்ப்பு ஆகிய எதுவுமே இல்லை. எனவே அங்கு வாழ்பவர்களுக்கு அழிவும் இல்லை. அந்த அண்டவெளியில் இருந்து நமது அண்டவெளிக்குள் நுழைந்து பூமியைக் கைப்பற்றி அனைவரையும் அழிக்க நினைப்பதே டோர்மாம்முவின் வேலை. அதைத் தடுக்கும் வேலை, ஏன்ஷியண்ட் ஒன்னின்  வேலை. வேறு யாருக்கும் டோர்மாம்முவைப் பற்றியே தெரியாது.

    ஏன்ஷியண்ட் ஒன் யார்? அவரது சக்திகள் என்னென்ன? அவர் வயது என்ன? இதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர் பழமையான ஒரு குருநாதர் என்பது மட்டுமே தெரியும். இந்த ஏன்ஷியண்ட் ஒன்னிடம் மிகவும் விசுவாசமாக இருக்கும் ஒரு சில நபர்கள் உண்டு. அவர்களில் வோங் என்பவன் முதன்மையானவன் (மார்க்கோ போலோ குப்ளாய்கான் பெனடிக்ட் வோங்). மோர்டோ என்பவன் இன்னொருவன். இவர்களைத் தவிரவும் இன்னும் சிலரும் ஏன்ஷியண்ட் ஒன்னிடம் பயிற்சிகள் பெறுகிறார்கள். இந்தப் படையின் நோக்கம், தீயசக்திகளிடமிருந்து உலகைக் காப்பது.

    கேசீலியஸ் என்பவன் இந்த ஏன்ஷியண்ட் ஒன்னிடம் பயின்றவன். தலைசிறந்த மாணவன் என்று பெயரெடுத்தவன். ஆனால் திடீரென, தீய எண்ணங்களால் உந்தப்பட்டு ஏன்ஷியண்ட் ஒன்னிடம் இருந்து விலகிச் சென்றுவிட்டவன். ஏன்ஷியண்ட் ஒன்னிடம் ஒரு மிகப்பெரிய நூலகம் உண்டு. அந்த நூலகத்தில் ஏராளமான ரகசியமான புத்தகங்கள் உண்டு. அந்தப் புத்தகங்கள் ஒன்றின் ஒரு சில பக்கங்களை மட்டும் ஓர்நாள் கேசீலியஸ் திருடிச் சென்றுவிடுகிறான். அந்தப் பக்கங்களில் இருக்கும் மந்திரங்களால், டோர்மாம்முவை பூமிக்கு வரவைத்தல் சாத்தியம்.

    இந்தத் தருணத்தில்தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் துவங்குகிறது.

    ஸ்டீஃபன் ஸ்ட்ரேஞ்ச் என்ற நரம்பியல் மருத்துவர், கிட்டத்தட்ட ஷெர்லக் ஹோம்ஸ் போன்றவர். தன்னால்தான் எல்லாமே முடியும் என்ற எண்ணம் உடையவர். ஈகோயிஸ்ட். அவருக்கு ஒரு நாள் ஒரு விபத்து நேர்கிறது. அந்த விபத்தால் அவரது கைகளின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. கைகளை நம்பியே இத்தனை காலம் இருந்தவருக்கு, இனி அறுவை சிகிச்சைகள் செய்ய இயலாது என்பது மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. இருக்கும் பணம் முழுக்கச் செலவு செய்கிறார். பயனில்லை. அப்போதுதான், தன்னைப்போலவே பிரச்னைகள் இருந்த ஒரு மனிதன் குணமடைந்ததை அறிகிறார். அந்த மனிதனைச் சந்திக்கும்போது, அவன் நேபாள் சென்று குணமானதை விவரிக்கிறான். காமர் -டாஜ் (Kamar-Taj) என்ற இடம் அது. அந்த இடத்துக்கு டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் செல்கிறார். அங்கே மோர்டோவையும் ஏன்ஷியண்ட் ஒன்னையும் சந்திக்கிறார். முதலில் இவரது ஈகோவினால், இவருக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது. ஆனால் மோர்டோவின் வற்புறுத்தலால் சிகிச்சை வழங்க சம்மதிக்கிறார் ஏன்ஷியண்ட் ஒன்.

    இதன்பின்னர் என்ன நடந்தது? டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இழந்த சக்தியை மீண்டும் பெற்றாரா? ஏன்ஷியண்ட் ஒன், மோர்டோ என்ன ஆனார்கள்? கேசீலியஸ் திருடிச்சென்ற பக்கங்களால் அவன் என்ன செய்தான்? எல்லாக் கேள்விகளுக்கும் விடை, படத்தில் உள்ளது.

    படத்தில் முக்கியமான விஷயங்களாக வருவன இரண்டு. ஒன்று – Infinity Stone. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உபயோகிக்கும் ஒரு சிறிய கருவியினுள் பதிந்திருக்கும் விஷயமாக இந்த இன்ஃபினிடி ஸ்டோன் உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்தது. இந்தக் கருவியின் பெயர்  – Eye of Agamotto. அகமோட்டோ என்ற புராதன, சக்திவாய்ந்த மனிதர் உபயோகித்த கருவி இது. இந்தக் கருவியால் ஆகாத வேலையே இல்லை. காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும். இதை வைத்திருந்தால், எதிரில் இருப்பவர் எந்த வேடம் அணிந்திருந்தாலும் இது சொல்லிவிடும். தீயசக்திகளின் சக்தியை இது குறைக்கும். பல்வேறு வெளிகளுக்கு இது பாலமாகச் செயல்படும். இதை வைத்துக்கொண்டுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அவரது காமிக்ஸ்களில் பல சாகசங்களைப் புரிவார்.

    இரண்டாவது விஷயம் – ஒரு உடை. அதன் பெயர் – Cloak of Levitation. இதை அணிந்திருப்பவரை இது மிதக்க வைக்கும். பறக்கவும் வைக்கும். இது, டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் குருநாதரான ஏன்ஷியண்ட் ஒன் வைத்திருந்த உடை என்று தெரிகிறது. இதைத்தவிர, இதைப்பற்றிய எந்தத் தகவலும் தெரியாது. இந்த உடை, ஹாரி பாட்டரில் வரும் மந்திரக்கோல்கள் போல, தன்னை அணிபவரைத் தானே தேர்ந்தெடுக்கும். வழக்கமான காமிக்ஸ்களில், அகமோட்டோவின் கண் என்ற கருவிதான் சிலசமயம் சுயமாக முடிவெடுக்கும் திறன் உடையதாக இருக்கும். ஆனால் திரைப்படத்தில் அந்தக் கருவியை அப்படிக் காட்டாமல், உடைக்கு மட்டும் அந்த சக்தி இருக்கும்படி வைத்தனர். அதேபோல், காமிக்ஸ்களில் ஏன்ஷியண்ட் ஒன் என்பவர் ஆண். படத்திலோ பெண். அதைக்குறிக்கத்தான் படத்தில் ஏன்ஷியண்ட் ஒன் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கு அறிமுகமாகும் காட்சியில் அங்கே அமர்ந்திருக்கும் முதியவர்தான் ஏன்ஷியண்ட் ஒன் என்று நினைத்து வணங்குவார் ஸ்ட்ரேஞ்ச்.


    வழக்கமான மார்வெல் படங்கள் எப்படி இருக்கும்? (கேப்டன் அமெரிக்காவைத் தவிர்த்து) self centered Hero- அடுத்தவர்களிடம் sarcasticகாகப் பேசும் கதாபாத்திரமாக இந்த ஹீரோ இருப்பார்; ஆங்காங்கே நகைச்சுவையான டயலாக்குகள், அவ்வப்போது ஆக்‌ஷன் – சுபம். இதே ஃபார்முலாவில்தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் உள்ளது. ஆனால் பிற மார்வெல் படங்களிடம் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவது, இப்படம் கையாண்டிருக்கும் பிரம்மாண்டமான தீம். Multiverses என்ற, பல யூனிவெர்ஸ்களைப் பற்றிய சப்ஜெக்ட்.

    இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். யோசித்துப் பாருங்கள். நமது அண்டவெளியைப்போலவே இன்னும் ஏராளமான அண்டவெளிகள் இருக்கலாம் என்ற எண்ணம் வசீகரமானதுதானே?

    இப்படி யோசித்துப் பார்க்கலாம். நமது அண்டவெளியின் வயது என்ன? 13.8 பில்லியன்  வருடங்கள். ஏன்? பிங் பாங் என்ற பெருவெடிப்பு நிகழ்ந்து 13.8 பில்லியன் வருடங்கள் ஆயிற்று என்று விஞ்ஞானிகள் வரையறுத்திருக்கிறார்கள். எனவே நமது அண்டவெளியின் வயதும் அதேதான். அப்படியென்றால், 13.8 பில்லியன் வருடங்களுக்கு அப்பால் இருக்கும் பிரதேசங்கள்? அப்படி ஏதேனும் இருந்தால், ஒளி அந்தப் பகுதிகளுக்குப் பரவும்வரை அவை தனியாகத்தான் இருக்கும். எனவே அவை நமது அண்டவெளியிடமிருந்து துண்டாக்கப்பட்ட பிரதேசங்கள். எனவே அவை தனி அண்டவெளிகள் என்று சொல்லமுடியும். இது, மல்ட்டிவெர்ஸஸ் பற்றிய விஞ்ஞானிகளின் கணிப்பு.

    இது, சுற்றிவளைத்து மல்ட்டிவெர்சஸ் பற்றிப் பேசும் கருத்து. இதைத்தவிர, Brane Multiverse, Quantum Multiverse, Inflationary Multiverse என்று பலவகையான மல்ட்டிவெர்ஸ்கள் உண்டு. இவையெல்லாமே தியரிகள் மட்டுமே. காரணம், உண்மையில் பல்வேறு அண்டவெளிகள் உண்டா இல்லையா என்பதுபற்றி இன்னும் நமக்கு அறுதியாகத் தெரியவில்லை. நமது அண்டவெளியினுள்ளேயேகூட, சூரியக்குடும்பத்தைத் தாண்டியே இப்போதுதான் கோள்களை நாம் விட ஆரம்பித்துள்ளோம். இன்னும் நமக்கு இருக்கும் வானசாஸ்திர அறிவு குறைவே. எனவே நம்மால் எதையும் உறுதியாகச் சொல்லிவிட இயலாது.

    பிங் பேங் என்ற பெருவெடிப்பு நடந்தபின் ஒரே ஒரு அண்டவெளி மட்டும் அதிலிருந்து உருவாகவில்லை; மாறாகப் பல அண்டவெளிகள் அதிலிருந்து உருவாயின என்பதுதான் எளிமையான மல்ட்டிவெர்ஸ்கள் பற்றிய கருத்து.

    இத்தகைய மல்ட்டிவெர்ஸ் என்பதைத்தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் தன்னுள் கொண்டிருக்கிறது.

    மல்ட்டிவெர்ஸ்கள் நமக்குப் புதிதல்ல. இண்டர்ஸ்டெல்லார் பற்றிய கட்டுரை ஒன்றில், ஆரம்பத்தில் லீக் செய்யப்பட்ட அதன் திரைக்கதை பற்றி நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில், இந்த மல்ட்டிவெர்ஸ் கான்செப்ட்டைத்தான் நோலன்கள் எழுதியிருப்பார்கள். ஆனால் ஏனோ அதைப் படமாக்காமல், கதையை மாற்றிவிட்டனர். உண்மையில் அந்தத் திரைக்கதை அட்டகாசமாக இருக்கும்.

    மல்ட்டிவெர்ஸ்கள் மட்டுமல்லாமல், டைம்லூப்பும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சில் கையாளப்பட்டுள்ளன. (Spoiler Alert). படத்தின் க்ளைமேக்ஸில், திரும்பத்திரும்ப டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஒரே வேலையைச் செய்வது வருகிறது. Groundhog Day, Edge of Tomorrow போன்ற படங்களில் ஏற்கனவே வந்துவிட்ட விஷயம்தான் இந்த டைம்லூப். இதிலும் சூப்பராகக் கையாளப்பட்டிருக்கிறது.

    இந்த மல்டிவெர்ஸ்கள் மார்வெலுக்கு எப்படிப் பயன்படும்?

    ஏற்கெனவே, X Men: Days of the Future Past படத்தில், டைம்ட்ராவலை எக்ஸ்ப்ளோர் செய்து, இறந்திருந்த பல கதாபாத்திரங்களை மீட்டுக் கொண்டுவந்துவிட்டனர். அதேபோல், இப்போது மல்டிவெர்ஸ்கள் என்ற பல அண்டவெளிகளை அறிமுகப்படுத்தியிருப்பதால், பல்வேறு வித்தியாசமான அவெஞ்சர் கதாபாத்திரங்களும் உள்ளே வரலாம். ஒரேபோன்ற ஹல்க்குகள், டோனி ஸ்டார்க்குகள், கேப்டன் அமெரிக்காக்கள் என்று என்னென்னமோ செய்யலாம். புகுந்து விளையாடலாம்.

    டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சாக பெனடிக்ட் கம்பர்பேட்ச். ஷெர்லக்காகக் கலக்கியவர். அதேபோன்ற கதாபாத்திரம்தான் இதிலும். இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை. அதேசமயம் டோனி ஸ்டார்க்குக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரத்துக்கும்கூட ஒற்றுமைகள் உள்ளன.

    மார்வெல் படங்களிலேயே டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வித்தியாசமானது. ஒரே கதைதான் என்றாலும், இதில் வரும் மல்ட்டிவெர்ஸ்கள், டைம்லூப் போன்றவைகளால் படம் பிற மார்வெல் படங்களைவிடவும் சூப்பராக உள்ளது. எனவே இப்படத்தைத் தவறவிடவேண்டாம்.

    பி.கு – படத்தில் இரண்டு போஸ்ட் க்ரெடிட் சீன்கள் உண்டு. அதில் முதல் சீன் – தோர் பற்றியது. இதில் Thor: Ragnarok படத்துக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. எனவே அடுத்த தோர் படத்தில் கட்டாயம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உண்டு என்று தெரிகிறது. இரண்டாவது போஸ்ட் க்ரெடிட் சீனில், டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் அடுத்த வில்லன் யார் என்று சொல்லப்படுகிறது. காமிக்ஸ் படித்திருந்தால் இது படம் துவங்கும்போதே புரிந்துவிடும். காமிக்ஸ் படிக்காதவர்களுக்கானது இந்த சீன்.

     

    ]]>
    http://karundhel.com/doctor-strange-2016-english/feed/ 3
    Kaashmora (2016) – Tamil http://karundhel.com/kaashmora-2016-tamil/ http://karundhel.com/kaashmora-2016-tamil/#comments Thu, 03 Nov 2016 13:36:19 +0000 http://karundhel.com/?p=5801 காஷ்மோரா ஒரு ஃபேண்டஸி. தமிழில் ஃபேண்டஸிக்கள் குறைவு. பலத்த விளம்பரங்களுக்கு இடையே வெளிவந்திருக்கும் காஷ்மோரா எப்படி இருக்கிறது?

    கார்த்தியின் காஷ்மோரா கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர் துவக்கத்திலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளதால் படம் முழுக்க அவரோடு நாம் பயணிக்க முடிகிறது. அவர் பேசும் வசனங்களில் இருக்கும் நகைச்சுவை நன்றாக எடுபடுகிறது. இதுவேதான் விவேக்குக்கும். அவரது டைமிங் இதில் சில காட்சிகளில் நன்றாக வந்திருக்கிறது. சமகால சமூக வாழ்க்கையில் போலி சாமியார்கள்/ஆவியை வைத்து கல்லா கட்டும் நபர்கள் ஆகியோரைப் பற்றிய விமர்சனம் பக்கா. கூடவே பங்காரு அடிகளாரையும் கலாய்த்துள்ளனர். விவேக்=பங்காரு.

    ஆனால் ஒட்டுமொத்தமாகப் படம் எப்படி?

    முதலில், காஷ்மோராவின் மிகப்பெரிய பிரச்னை என்ன என்று கேட்டால், கதையின் முக்கியமான இடங்கள் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளதுதான். இதை விரிவாகப் பார்க்கலாம். காஷ்மோராவின் கதை என்ன? (Spoiler Alert) ஆவிகள் நிபுணனாக ஊரை ஏமாற்றிப் பப்ளிசிடி தேடிக்கொண்டு ஃப்ராடு நபராக வலம்வரும் காஷ்மோரா, ஒரு நிஜமான ஆவியை சந்திக்கிறான். அந்த ஆவியோ, 700 ஆண்டுகளாக பூமியிலேயே கிடக்கும் தன்னை மேலுலகம் அனுப்பக் காஷ்மோராவால்தான் முடியும் என்று அவனை வரவழைத்துக் குடும்பத்தோடு சிறைப்படுத்திவிடுகிறது. அதிலிருந்து காஷ்மோரா எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை. இந்தக் கதையில், வில்லனாக ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கதை காஷ்மோராவுக்கும் ராஜ் நாயக்குக்கும் இடையே மட்டும் நடந்தால் அலுப்பாக இருக்கக்கூடும் என்ற காரணம்தான் அரசியல்வாதி வில்லனை உருவாக்கியதற்குப் பின்னணியாக இருக்கமுடியும். கூடவே, கதையில் ஒருசில திருப்பங்கள் தேவை என்பதற்கும் அந்த வில்லனை உருவாக்கியிருக்கலாம்.

    இந்தக் கதையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

    1. அரசியல்வாதி, சாமியாரைக் கேட்டுத்தான் கொலைகூட செய்வான். அவர் சொல்லும்படியே ஆயுதங்கள் இல்லாமல்கூடக் கொல்வான். அத்தனை தீவிரமான மூடநம்பிக்கை உடையவன்.

    2. காஷ்மோரா, ஃப்ராடுத்தனம் செய்யக் கடைபிடிக்கும் வழிமுறைகள். Constantine Styleல் காஷ்மோராவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பது

    3. படம் முழுக்கவும் காஷ்மோராவின் வசனங்கள். கரகாட்டக்காரன் ரெஃபரன்ஸுக்குத் தியேட்டரே அதிர்கிறது.

    4. ராஜ்நாயக்கின் கதாபாத்திரத்தின் பின்னணி. பெண்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்ற தகவல். இந்தக் கதாபாத்திரத்தை சந்திரமுகி வேட்டையன் ஸ்டைலில் உருவாக்கியிருப்பது.

    ஆனால் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒருங்கிணைத்து, படம் பார்ப்பவர்களை இந்த ஃபாண்டஸியினுள் இழுக்கக்கூடிய திரைக்கதையில் பல பிரச்னைகள் இருக்கின்றன. படம் பார்க்கையில் என்ன உறுத்தியது என்றால், ஆரம்பம் முதல் இறுதிவரை கதை மிக மிக மேலோட்டமாகவே செல்கிறது என்பதுதான். எனக்கு இந்தப் படத்தில் சில கேள்விகள் இருக்கின்றன.

    1. படத்தில் வரும் அரசியல்வாதி கதாபாத்திரம் அறிமுகக்காட்சியில் நன்றாக இருக்கிறது (சாமியாரைக் கேட்டுத்தான் கொலைகூட – அதுவும் அவர் சொல்லும்படியே-செய்பவன்). ஆனால் இந்தக் காட்சிக்குப் பின்னர் அந்தக் கதாபாத்திரம் முற்றிலும் காமெடியனாக மாறிவிடுகிறது. அதிலும், அந்த அரசியல்வாதி கதாபாத்திரம் வரும் காட்சிகளையெல்லாம் கவனித்தால், காஷ்மோராவுக்கும் அவன் குடும்பத்துக்கும் கதையில் பின்னால் சிக்கல்கள் வரவேண்டும்; அதனால் அவற்றை விளைவிக்கும் கதாபாத்திரமாக ஒரு ஆள் வேண்டும். எனவே அரசியல்வாதியை உருவாக்கலாம் என்ற நோக்கமே பெரிதாகத் தெரிகிறது. காரணம் இந்தக் கதாபாத்திரத்தில் கனம் இல்லை. ஒரு தட்டையான கதாபாத்திரமாக மாறிவிடுகிறது. ஏனெனில் கதையின் இரண்டாம் பாதியில் இந்தக் கதாபாத்திரத்துக்கு வேலையே இல்லை. காஷ்மோராவுக்கு சிக்கல்கள் அதிகமாகவேண்டும் என்ற நோக்கத்தை மறைத்து, அரசியல்வாதியை இன்னும் நன்றாக உருவாக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட குறைகள் தெரியாமல் மறைத்து ஆடியன்சை நைஸாக ஏமாற்றுவதுதானே திரைக்கதை?

    2. அரசியல்வாதிக்குக் காஷ்மோரா பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் ரெய்டு வருகிறது என்றதுமே காஷ்மோராவின் வீட்டில்தான் 500 கோடியைப் பதுக்குவாரா? ஒரு அரசியல்வாதிக்கு- அதிலும் கொலை கூடச் செய்யத் தெரிந்த அரசியல்வாதிக்குப் பணத்தைப் பதுக்க வேறு இடமே இல்லையா? நானும் நீங்களும் இப்படித்தான் செய்வோமா? பணத்தைக் காஷ்மோரா வீட்டில் பதுக்கினால்தான் காஷ்மோராவின் தந்தை அதை எடுத்துக்கொண்டு ஓடுவார்; அப்போதுதான் எல்லோரும் பங்களாவில் மாட்டுவார்கள் என்பதற்காகவே உருவாக்கித் திணிக்கப்பட்ட காட்சி இது என்று எளிதில் புரிந்துவிடுகிறதே? (விவேக், பணத்தை அமுக்கிக்கொண்டு ஓடுவதாக கார்த்தியிடம் தெரிவிக்கும் காட்சி உண்மையிலேயே சிரிப்பை வரவழைத்தது).

    3. ரத்னமஹாதேவி, ராஜ்நாயக்கைக் கொல்லவேண்டும் என்றே பல பிறவிகளாகத் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிறவியில் எங்கோ ஒரு அமானுஷ்ய கோயிலில் உடனிருக்கும் தாத்தா சகிதம் எப்போது பார்த்தாலும் கறுவிக்கொண்டே இருக்கிறார். ரைட். அக்செப்டட். கட் செய்தால் இங்கே காஷ்மோரா ராஜ் நாயக்கிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறான். அந்த சமயத்திலேயே ரத்ன மஹாதேவி ஆவியாக வந்து ராஜ்நாயக்கைப் போட்டுத் தள்ளியிருக்கலாமே? காஷ்மோராவுக்குத்தான் ஆல்ரெடி பிணம் இருக்கும் காட்சிகளெல்லாம் விஷுவலாகவே டேட்டா ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டாரே? க்ளைமேக்ஸ் வரை காத்திருந்து அட்டாக் செய்யும் ரகசியம் என்ன? அன்றுதான் கதையில் சொல்லப்படும் புனித நாள் என்பதாலா? அப்போது தாக்கினால்தான் ராஜ் நாயக்கின் ஆவி பிரியுமா?

    4. சரி. காஷ்மோராவின் ஆவியை அட்டாக் செய்யவேண்டும். க்ளைமேக்ஸில். கிளம்பி வந்துவிட்டார் ரத்னமஹாதேவி. ராஜ் நாயக்கின் லட்சியம் என்ன? பூவுலகில் ஆவியாகி அலைவதை விட்டுவிட்டு மேலுலகம் செல்லவேண்டும்/மறுபிறப்பு எடுக்கவேண்டும். அதற்குத்தானே இத்தனை பாடு? அதையேதானே ரத்னமஹாதேவியின் ஆவி இறுதியில் ராஜ்நாயக்கைக் கொன்று நிறைவேற்றி வைக்கிறது? அப்போது ராஜ்நாயக், கொண்ட லட்சியத்தில் வெற்றியடைந்துவிட்டான் என்றுதானே அர்த்தம்? இதற்குத்தான் தொண்டுகிழவர் சகிதமாக கறுவிக்கொண்டே இருந்தாரா ரத்னமஹாதேவி?

    5. ராஜ்நாயக்கின் ஃப்ளாஷ்பேக் ஏன் இத்தனை வீக்காக இருக்கிறது? அவர் தளபதி. இளவரசி மேல் ஆசைப்படுகிறார். இளவரசியை மணம் புரிய முடிவுசெய்கிறார். இந்த சம்பவத்தை சொல்ல ஏன் அந்த மாபெரும் போர்க்களம்? ஒரே ஆளாக அனைவரையும் கொல்வது etc? வெறும் பில்டப்புக்காக உருவாக்கப்படும் இப்படிப்பட்ட காட்சிகளால் கதைக்கு என்ன நன்மை? இதற்கும், பிற டாப்ஸ்டார்கள் இதையே செய்வதற்கும் என்ன வேறுபாடு?

    6. இளவரசியைக் காணவில்லை. எங்கே சென்றார் என்று யோசித்தால், காதலனுடன் கம்பி நீட்டிவிடுகிறார். இது எவ்வளவு சாதாரணக் காட்சி? இதைத் தடுக்க இரண்டு சேவகர்கள் போதுமே? கூடவே, இளவரசியைக் காணவில்லை என்றதும் எந்த ராஜா உடனடியாக என்ன ஏது என்றே விசாரிக்காமல், ராஜ்ஜியத்தில் பாதியைத் தருகிறேன்; இளவரசியை மணமுடித்து வைக்கிறேன் என்று அறிவிப்பான்? சுத்த முட்டாள் ராஜாவாக இருக்கிறாரே? அதிலும் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி. கொஞ்சமாவது சுயசிந்தனை இல்லாமலா இருப்பார்? எல்லாவற்றுக்கும் தளபதிகளையே நம்பியிருப்பாரா? இளவரசி மேல் ராஜ்நாயக்குக்கு ஒரு கண் என்று இவருக்கே தெரியும். அதனால்தான் இளவரசியைக் காணவில்லை என்றதும் ராஜ்நாயக் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பான் என்று நம்புகிறார். அப்படிப்பட்ட ஒருவனை எளிதில் இவர் செய்ய நினைத்ததை செய்துவிடலாமே? எந்தத் திறமையும் இல்லாமல் ராஜாவாக இத்தனை பெரிய சாம்ராஜ்யத்துக்கு ஒரு அதிபதி இருப்பாரா? அப்படியென்ன ராஜ்நாயக் தோர், ஹல்க், பேட்மேன், முகமூடி ஆகியவர்களின் அவதாரமா? அரசவையில் ஒரு ஆள் கூடவா இவனை எதிர்க்க மாட்டார்கள்?

    7. இளவரசி சாபம் கொடுக்கிறாள்; அது பலிக்கிறது என்பதெல்லாம் விட்டலாச்சாரியா கான்செப்ட் இல்லையா? அப்படி சாபம் கொடுக்க இளவரசி என்ன தெய்வப்பிறவியா? அதற்கேற்ற ஜஸ்டிஃபிகேஷன் என்ன? எதைக் காட்டினாலும் நாம் நம்ப வேண்டுமா? இது என்ன உலகமகா புருடாவாக உள்ளது?

    8. அரசியல்வாதியின் பணம் முழுக்க இறுதியில் காஷ்மோரா குடும்பத்தால் சுருட்டப்படுகிறது. அந்த அரசியல்வாதி என்ன டொம்மை அரசியல்வாதியா? இழந்த பணத்தை ஒரே நொடியில் கைப்பற்றத் தெரியாத ஆளா அவர்? ஆரம்பத்தில் படு சீரியசாக இவரை அறிமுகப்படுத்திவிட்டு, இறுதியில் இப்படி கையாலாகாத காமெடியனாக மாற்றிவிடுகிறார்கள். இந்த அரசியல்வாதி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன? Refer point #1.

    9. ராஜ்நாயக் கதாபாத்திரத்தின் ஆவி படுபயங்கர சக்திவாய்ந்ததாக இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே பயங்கர ஆவி வேலையெல்லாம் செய்கிறது. தனக்குத்தானே யாகமும் நடத்துகிறது. மந்திர தந்திரம், யாகம் வளர்த்துதல் எல்லாம் தெரிந்த ஆவி போலும். இத்தனை சக்தி படைத்த ஆவிக்கு, பூமியில் இருந்து மேலே செல்ல முடிவதில்லை என்ற ஒரே ஒரு பிரச்னைதான் என்ற கருத்து கதையில் கன்வே ஆகவில்லை; அல்லது அது கன்வின்சிங்காக இல்லை.

    நான் மேலே சொல்லிய அத்தனை பிரச்னைகளையும் மிக எளிதாகத் திரைக்கதையில் சரிசெய்திருக்கமுடியும். அப்படிச் செய்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும். தமிழில் மறக்க முடியாத ஒரு ஃபேண்டஸியாக மாறியிருக்கும். இப்போதோ மிக சராசரியான ஒரு ஃபேண்டஸியாக மட்டுமே உள்ளது காஷ்மோரா.

    காஷ்மோராவின் பெரிய பிரச்னை என்னவென்றால், இஷ்டத்துக்குக் கதையில் பல சம்பவங்களை வைத்து, எல்லாவற்றையும் ஆடியன்ஸ் எந்தக் கேள்வியும் இல்லாமல் நம்பிவிடுவார்கள் என்று நினைத்ததுதான். கேள்வியே கேட்காமல் இத்தனை பெரிய லாஜிக் ஓட்டைகளை எப்படிக் கடக்கமுடியும்? இப்படி எதிலுமே லாஜிக் இல்லாமல் ஒரு திரைக்கதை எழுதுவது மிக எளிது. எது கடினம் என்றால், இருக்கும் லாஜிக் ஓட்டைகளை நாமே நன்றாக அடைத்து, நம்பும்படி ஒரு ஃபேண்டஸியை உருவாக்குவது. அதுதான் இருப்பதிலேயே மிகவும் கடினமான காரியம். ஆனால் அப்படித்தான் பல நல்ல ஃபேண்டஸிகள் மாதக்கணக்கில் அமர்ந்து எழுதப்படுகின்றன. அப்படிச் செய்தால்தான் படம் அனைவரின் நினைவிலும் நிற்கும். காஷ்மோராவின் பிரச்னை இதுதான் என்பது என் கருத்து.

    காஷ்மோராவில் வரும் பல இன்ஸ்பிரேஷன்களை இத்தனைக்கும் நான் சொல்லவே ஆரம்பிக்கவில்லை. காஷ்மோராவின் ஓப்பனிங் காட்சி, Constantine படத்தின் ஓப்பனிங் காட்சியிலிருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்டுள்ளது என்பது இரண்டு படங்களைப் பார்ப்பவர்களுக்கும் புரிந்துவிடும். காஷ்மோராவின் ட்ரெய்லர் வந்ததுமே இதை நான் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். இதோ கான்ஸ்டண்டீன் படத்தின் துவக்கக் காட்சி.

    அதேபோல்  ஹாரி பாட்டர் சீரீஸிலிருந்து இதில் இரண்டு இன்ஸ்பிரேஷன்கள் உள்ளன. கார் ஒன்று மரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டு மரத்தால் சின்னாபின்னம் செய்யப்படும் காட்சி, மற்றும் தலையில்லா ராஜ்நாயக்கின் காட்சிகள்.. ஹாரி பாட்டரின் இரண்டாம் பாகமான Chamber of Secrets படத்தில் இதேபோன்றதொரு காட்சி உண்டு. அதை இங்கே காணலாம். ஆனால் புத்திசாலித்தனமாக, கார் பறப்பதெல்லாம் காட்டப்படாமல், இந்தக் காட்சியில் இருக்கும் முக்கியமான எலிமெண்ட் – மரத்தில் கார் சிக்குவது – மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் இது இன்ஸ்பிரேஷன் என்கிறேன். இது, முதல் இன்ஸ்பிரேஷன்.

    அடுத்த ஹாரி பாட்டர் இன்ஸ்பிரேஷன், இதில் வரும் Nearly headless nick என்ற கதாபாத்திரத்தில் இருந்து எடுத்தது. ஹாரி பாட்டர் படங்கள் முழுதுமே இவர் வருவார். தனது தலையைக் கழற்றி எடுத்துக்கொண்டு உலவுவார். இவரும் ஒரு மன்னர். அரச உடையில்தான் சுற்றிக்கொண்டிருப்பார்.

    அடுத்ததாக, ராஜ்நாயக் கதாபாத்திரத்தைப் பார்த்ததில் இருந்தே எனக்கு God of War கேமின் நாயகன் க்ராடோஸின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவனும் ஒரு தளபதி. அவனும் ஒரு வெறியன். காட் ஆஃப் வாரில் க்ராடோஸ் பல பெண்களுடன் உறவு கொள்ளும் எக்ஸ்ப்ளிஸிட் காட்சிகளே உண்டு. இதோ க்ராடோஸ். நீங்களே பார்த்துக்கொள்ளலாம். எனக்கு மிகவும் பிடித்த கேம் இது. அதைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன் —> God Of War Games Review

    kratos

     

    kratoslow

    இவைகளில் இருந்து காப்பி அடிக்காமல், புத்திசாலித்தனமாக இன்ஸ்பையர் மட்டும் ஆகியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.

    ஒட்டுமொத்தமாக, காஷ்மோரா சில காட்சிகளில் மட்டும் நம்மைச் சிரிக்க வைக்கிறது. கண்டிப்பாகக் காஷ்மோராவின் அட்டகாசமான ப்ளஸ் பாயிண்ட் அதன் வசனங்களே. வசனங்கள் எழுதிய ஜான் மகேந்திரன், ஆர். முருகேசன் மற்றும் கோகுல் பாராட்டப்படவேண்டியவர்கள். பல காட்சிகளின் பின் எந்த லாஜிக்கும் இல்லாமல் மனம்போனபோக்கில் எழுதப்பட்டுள்ளது. இதனாலேயே காஷ்மோரா முழுமையாக  நம் மனதைக் கவராமல் போய்விடுகிறது.

    ]]>
    http://karundhel.com/kaashmora-2016-tamil/feed/ 5
    iru mugan (2016) – Tamil http://karundhel.com/irumugan-2016-tamil/ http://karundhel.com/irumugan-2016-tamil/#comments Thu, 20 Oct 2016 04:06:06 +0000 http://karundhel.com/?p=5788 அக்டோபர் 2016 காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இங்கே.


    தமிழில் ‘மசாலா’ என்ற வகையினுள் இடம்பெறும் படங்கள் பற்றி ஏற்கெனவே காட்சிப்பிழையில் விரிவாக எழுதியிருக்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள், தமிழில் மசாலாப்படங்களில் இன்னின்ன அம்சங்கள் இருந்தே ஆகவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு (அல்லது ஏற்கெனவே பல படங்களில் உபயோகிக்கப்பட்ட பட்டியல்களை அப்படியே எடுத்து) உருவாக்கப்படுபவை. இப்படிப் படம் எடுப்பதால் என்ன பிரச்னை என்றால், அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கே எளிதாகப் புரிந்து, படம் முடியும்வரை முழுக்கதையையும் நம்மால் எளிதில் கூறமுடிந்துவிடுவதுதான்.

    வணிகப்படம் என்றால் என்ன? பார்ப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி, இறுதிவரையில் திரையரங்கில் முணுமுணுப்பு காட்டாமலோ, எழுந்து ஓடிவிடலாம் என்ற பீதியை வரவழைக்காமலோ, வீட்டில் கேஸ் அணைத்துவிட்டோமா, நாளை அலுவலகத்தில் என்ன செய்யலாம் போன்ற எண்ணங்கள் வரவழைக்காமலோ இருப்பதே ஒரு நல்ல வணிகப்படம். ஆனால் இரு முகன் பார்க்கையில், இவற்றைத்தவிரவும் ஏராளமான எண்ணங்கள் எழுந்து, சலிப்பு/பீதி/கோபம்/கழிவிரக்கம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் மனதில் கதகளி ஆடின. சலிப்பு, முப்பது வருடங்கள் முன்னரே கமல்ஹாஸன் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’, சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்துத் தமிழகத்தில் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘ரேம்போ 3’ ஆகிய படங்களின் காட்சிகளை மறுபடியும் திரையில் பார்க்கிறோமே என்பதால் ஏற்பட்டது. பீதி என்பது, துளிக்கூட மனதில் ஒட்டாத காட்சிகள் படம்முழுக்க வந்துகொண்டே இருந்ததால் வந்தது. கோபம், இப்படி ஒரு படத்தைக் கோடிகளைக் கொட்டி எடுத்திருக்கிறார்களே என்பதால் உருவானது. திரைக்கதை என்ற வஸ்துவைத் துளிக்கூடத் தயார் செய்துகொள்ளாமல், விக்ரம் என்ற நாயகன், பலகோடி பட்ஜெட், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல்கள், படம் நெடுக நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தை அறுக்கும் காமெடியன், வில்லனும் நானே ஹீரோவும் நானே என்ற அரதப் பழைய தமிழ் நாயக டெம்ப்ளேட், இதற்கு முன் வந்துள்ள படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் ஆகிய ’மசாலா’ அயிட்டங்கள் அனைத்துமே இம்மி பிசகாமல் இடம்பெற்று உருவாகியிருக்கும் இப்படத்தைப்போன்ற பல படங்களைப் பார்த்து சவுக்கடி வாங்கியிருந்தாலும் மறுபடி மறுபடி நம்பி நம்பி ஏமாறுகிறோமே என்ற உணர்வால் கழிவிரக்கம்.

    கீழே இருக்கும் காட்சியைப் பாருங்கள். இதுதான் ரேம்போ 3ல் இருந்து சுடப்பட்ட இருமுகன் துவக்கக்காட்சி.

    படத்தைப் பற்றி மேலும் பார்க்கப்போகுமுன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஒரு படம் நன்றாக இருக்கிறது/இல்லை என்பது படத்தின் வசூலைப் பொறுத்ததே அல்ல. இதை நாம் நன்றாக உணர்ந்துகொள்ளவேண்டும். இரு முகன் வசூல் நன்றாக இருக்கிறது. ஆனால் அதைமட்டும் வைத்துக்கொண்டு படம் நன்றாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்தால், நாய்கள், யானைகள் ஆகியவை பேசி, ஆடி நடித்த பேபி ஷாம்லி படங்களை ஒட்டுமொத்தமாகத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடத் தயாராக இருக்கவேண்டும். இதனால் அப்படங்கள் மோசமானவை என்று சொல்லவரவில்லை. வணிகப்படம் என்றால் என்ன என்ற புரிதல் இயக்குநர்களுக்கே மிகமிகக் குறைவாக இருப்பதைக் குறித்துதான் பேச்சு. ‘நோகாமல் நோம்பி கும்பிடுவது’ என்பது இப்படிப்பட்ட படங்களை உருவாக்குவதால்தான். திரைக்கதைக்காக மண்டையை உடைத்துக்கொள்ளவேண்டியதில்லை. ஏற்கெனவே வந்துள்ள படங்களின் காட்சிகளை அப்படியே உருவி வைத்துவிட்டால் படம் ரெடி. இதுதான் இரு முகனின் மிகப்பெரிய பிரச்னை. இதையும், இப்படத்தின் பிற பிரச்னைகளையும் பற்றித்தான் இனி பார்க்க இருக்கிறோம்.

    அருண்குமார் விக்ரம் ஒரு உளவுத்துறை அதிகாரி. இவர், இந்தியாவுக்கே பெரிய தலைவலியாக விளங்கும் ஒரு வில்லனைப் பிடிக்கவேண்டும் என்று இவரது மேலதிகாரி நினைக்கிறார். அப்போது விக்ரம் தேநிலவில் இருக்க, அந்த வில்லனின் அடியாளால் இவரது மனைவி நெற்றியில் சுடப்பட்டு உயிரிழக்க, வீறுகொண்டு எழும் விக்ரம் வில்லனை ஒரு பெண்ணின் துணையோடு அழிக்கிறார். இதுதான் கமல்ஹாஸன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் கதை. இதை அப்படியே உருவி, லொகேஷனை மாற்றித் தயார்செய்தால் இருமுகன் படத்தின் கதையாக மாறிவிடும். விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு இதில் வரும் நாசர், நித்யா, நயன்தாரா, லவ் என்ற பெயரில் வில்லனாக வரும் விக்ரம் ஆகியவர்களுக்கும் விக்ரம் படத்துக்கும் உள்ள ஒற்றுமை அப்படியப்படியே புரிந்துவிடும். இருமுகனில் நாசர் விக்ரம் பற்றி ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பிக்கும்போது, ‘விக்ரம் பண்ணுவான். ஆனா கொஞ்சம் கஷ்டம்’ என்று சாருஹாஸன் ராணுவ அதிகாரிகளிடம் ஒரு ஃபைலைத் திறந்து பேசும் காட்சி அப்படியே உருவப்பட்டிருப்பது புரியும். அந்தக்காலத்தில் ப்ரொஜெக்டர் இருந்திருந்தால் ஒருவேளை அப்போதே விக்ரமின் ப்ரொஃபைலை ப்ரொஜெக்டரில் ஸ்க்ரீன் செய்திருக்கலாம்.

    இதிலிருந்து, உளவுத்துறை வேலை வேண்டாம் என்று ஹீரோ ஒதுங்கி இருப்பது, அம்பிகா இறப்பது, ஹீரோவின் கோபம், வேறு ஒரு நாயகியுடன் கூட்டு சேர்வது ஆகிய சகல அம்சங்களும் விக்ரமில் இருந்து இருமுகனில் அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு ரேம்போ 3யில் ஹீரோ தாய்லாந்தில் ஆரம்பக் காட்சியில் கூண்டுக்குள் வெறித்தனமாக சண்டையிடும் காட்சி, அப்போது அவனது பழைய தலைமை அதிகாரி தாய்லாந்து வந்து அவனை மீண்டும் பணியில் அமர்த்துவது, அவனுக்கு அசைன்மெண்ட் கொடுப்பது என்ற சீக்வென்ஸ் அப்படியே உருவப்பட்டுள்ளது. இப்போதைய இண்டர்நெட் யுகத்தில், மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படும் காட்சிகளைக்கூட எந்த உழைப்பும் இல்லாமல் உருவி வைப்பதைத்தான் நோகாமல் நோம்பி கும்பிடுவது என்று ஏற்கெனவே குறிப்பிட்டேன். அதேபோல, இரண்டாம் பாதியில், லவ் என்ற கதாபாத்திரம் நர்ஸ் வேடம் போட்டு மருத்துவமனைக்குள் வரும்போது ஒலிக்கும் பின்னணி இசை, The Dark Knight படத்தில் ஜோக்கர் வரும்போதெல்லாம் ஒலிக்கும் Why so Serious என்ற இசைக்குறிப்பின் டிங்கரிங் செய்யப்பட்ட இசை. இது படம் பார்க்கும்போதே மிகத்தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

    இவைதவிர, இப்படத்தின் பாடல்கள் எங்கிருந்தெல்லாம் உருவி வைக்கப்பட்டுள்ளன என்று இணையவாசிகள் ஏற்கெனவே பட்டியல் இட்டுவிட்டனர். இப்படி, இருமுகன் படத்தின் அஸ்திவாரமே பிற படங்களில் இருந்தும் பாடல்களில் இருந்தும் உருவி எடுக்கப்பட்டு நோகாமல் உருவாக்கப்பட்டதுதான்.

    சரி – இவற்றை மறந்துவிடுவோம். இதெல்லாம் கவனிக்காமல், படம் எப்படி?

    இப்போது முதல் பத்தியைப் படித்துக்கொள்ளவும். எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாத காட்சிகள்; அப்படி வரும் காட்சிகளையே கவனிக்க விடாமல் கொட்டாவி வரவழைக்கும் பாடல்கள் (ஸ்பீட்ப்ரேக்கர்கள்); எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை; அடுத்து நடக்க இருக்கும் காட்சிகளை நன்றாக யூகிக்க முடிதல் ஆகிய அம்சங்களின் கலவையே இருமுகன்.

    தமிழ் இயக்குநர்களுக்கு ஒரு பிரச்னை உண்டு. பெரிய பட்ஜெட் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததுமே, ’தமிழ்நாட்டின் கிராமங்கள் உட்பட எல்லா இடங்களிலும் இந்தப் படம் ஓட வேண்டும்’ என்ற சிந்தனை. இதனால் அந்தத் திரைக்கதையின் வகை (Genre) என்னவோ அதை மட்டும் சிறப்பாக செய்யாமல், உலகில் உள்ள அத்தனை வகைகளையும் உள்ளே போட்டுக் குழப்பி எடுப்பது. இதனால் படம் ரொமாண்டிக்  படமா, ஆக்‌ஷன் படமா, திரில்லரா, நகைச்சுவைப் படமா, சயன்ஸ் ஃபிக்‌ஷனா – இப்படி எதுவுமே தெரியாமல், அரைவேக்காடாக அந்தத் திரைக்கதை அமைந்துவிடுகிறது. இதுதான் இருமுகனின் பிரச்னை. விக்ரம், நயன் தாரா, நித்யா ஆகியவர்கள் இருந்துவிட்டால் போதுமா? கதை உறுதியாக இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் ஆனந்த் ஷங்கரின் முதல் படமான ‘அரிமா நம்பி’ பரபர என்று ஓடக்கூடிய த்ரில்லர். இன்னும் பலருக்கும் நினைவிருக்கும் படம். அப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு, இப்போது பொதேலென்று இப்படி ஒரு படம் எடுக்கும் நிலைக்கு ஆனந்த் ஷங்கர் தள்ளப்பட்டிருக்கும் காரணம் என்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம் (ஆனால் அரிமா நம்பியிலும் சந்தேகமே இல்லாமல் ‘Bourne Supremacy’ படத்தில் இருந்து  அந்தக் குறுகலான குடியிருப்பில் நடக்கும் சேஸிங் காட்சி வெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் வரும் கண்ட்ரோல் அறையில் நிகழும் trackingகும் அதே படத்தில் இருந்துதான் காப்பியடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அரிமா நம்பியிலேயே ஒரு சில காட்சிகளை சுட்டுத்தான் இருக்கிறார் ஆனந்த் ஷங்கர். அதையேதான் இருமுகனில் பெரிதாகச் செய்திருக்கிறார்).

    இப்படித்தான் ‘மாரி’ படம் வெளியானது. படம் விமர்சன ரீதியில் படுதோல்வி. இருந்தும் ஓரளவு பணம் சம்பாதித்ததால், அதன் இயக்குநரே, ஒரு மேடையில் இதன் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஆடியன்ஸுக்கும் இயக்குநர்களுக்கும் இருக்கும் இந்த மிகப்பெரிய இடைவெளியைப்பற்றி இயக்குநர்களுக்கே தெரியாததன் அனர்த்தம் இது என்றுதான் சொல்லமுடியும். அப்படித்தான் இப்போது இருமுகனையும் எடுத்திருக்கிறார் ஆனந்த் ஷங்கர் என்றே தோன்றுகிறது.

    இருமுகனில் ஒரு ‘முக்கியமான’ ட்விஸ்ட் என்று முன்னிறுத்தப்படும் காட்சியைப் படம் பார்த்தவர்கள் நினைத்துப் பார்க்கலாம் (Spoiler alert). நாயகி அத்தனை பெரிய இடத்தில் இருந்து குண்டுபட்டுக் கீழே விழுந்தபின்னரும், ஆதிவாசிகளால் காப்பாற்றப்பட்டு அம்னீஷியாவால் பாதிக்கப்படுவதெல்லாம் எத்தனை பழைய டெம்ப்ளேட்? இப்படித்தான் வரும் என்று எளிதில் யூகிக்கமுடிகிறதே? எத்தனை படங்களில் இதைப் பார்த்துவிட்டோம்? (தலையில் குண்டு பட்டதால் நடந்ததை மறந்துவிடும் கதாநாயகன் என்பது ஏற்கெனவே ராபர்ட் லுட்லும் எழுதிய ‘Bourne Identity’ நாவலில் வந்து, அதை உருவி வெற்றிவிழா திரைப்படத்திலும் வந்துவிட்டது. தமிழில் ‘ரத்தப்படலம்’ என்ற பெயரில் லயன் காமிக்ஸில் எக்கச்சக்க பாகங்கள் வந்து பிரமாத வெற்றியடைந்த காமிக்ஸும் உண்டு).

    vikram-nayanthara-iru-mugan-movie-stills-3-1

    படத்தின் முக்கியமான காட்சிகளாக முன்னிறுத்தப்படும் காட்சிகள் எவற்றிலுமே துளிக்கூட ஆடியன்ஸை நம்பவைத்து உள்ளிழுக்கும் தன்மையே இல்லையே? (Suspension of disbelief). உதாரணமாக, வில்லன் லவ்வை அடைத்துவைத்திருக்கும் சிறைச்சாலை ஏன் அவ்வளவு சாதாரணமாக, பார்த்தாலே செட் என்று சொல்லத்தகுந்த வகையில் உள்ளது? லவ் தப்பிக்கும் காட்சிகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்கவில்லையா? உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்து, துவண்டு விழுந்து, மருந்தை உபயோகப்படுத்தித் தப்புவதெல்லாம் கற்பனை வறட்சியா இல்லையா? மலேஷிய போலீஸ் படம் முழுக்கவே காமெடியன்கள் போலவேதான் வருகின்றனர். லாஜிக் வறட்சி என்றுதான் இதையெல்லாம் சொல்லமுடியும். மருந்தால் பாதிக்கப்படும் ஹீரோ, உடனடியாக வீறுகொண்டு எழுந்து வர எப்படி முடிகிறது? உலகின் அத்தனை பேரின் புகைப்படங்களும் அடங்கிய டேடாபேஸா? அடப்பாவிகளா? இது உலக ரீலாக இருக்கிறதே? அதிலும் அது மின்னல் வேகத்தில் வேறு தகவல்களைத் தேடித் தருகிறதே? இதைக் காட்டலாம்தான். ஆனால் இப்படி ஒரு டேட்டாபேஸ் இடம்பெறுவதற்கான பின்னணியைத் தெளிவாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது. ஆனால் இதுதான் பிரபல ஸ்டார் நடிக்கும் ‘அக்மார்க்’ மசாலா ஆயிற்றே?  நல்லவேளை.. டபக்கா டபக்கா என்று முதுகில் திடீரென்று தோன்றும் இறக்கைகளை உபயோகித்து விக்ரம் வானில் பறப்பதைப் போலக் காட்டவில்லை. அந்தமட்டில் ஓரளவு பிழைத்தோம். எம்.ஜி.ஆர் படங்களில்கூட இப்படியெல்லாம் லாஜிக் மீறப்படாது.

    வில்லனாக (வில்லி?) வரும் லவ் என்ற கதாபாத்திரம் யார்? திருநங்கையா? அல்லது gayவா? லவ் வில்லனாக ஆனது ஏன்? என்ன காரணம்? எதுவும் கிடையாது. விக்ரம் நடிக்க விரும்பியதால் அப்படி ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. அவ்வளவுதான். காரணம் தமிழ் மசாலா.

    எந்தப் படமாக இருந்தாலும், அடிப்படையில் உணர்வுரீதியாக ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆவது மிகவும் முக்கியம். அதுதான் வருடங்கள் பல சென்றாலும் ஆடியன்ஸ் மனதில் அந்தப் படத்தை மறந்துபோகாமல் நிலைநிறுத்தும். ஆனால் அப்படி எதுவுமே இருமுகனில் இல்லை. இன்னும் ஓரிரண்டு மாதங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால்கூட இருமுகன் பற்றி எதுவும் நினைவு வராது என்றே தோன்றுகிறது.

    விக்ரம் போன்ற ஒரு பெரிய ஸ்டாரின் கால்ஷீட் கிடைத்தும், மறக்கமுடியாத ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக்குவதை விட்டுவிட்டு, எளிதில் மறக்கக்கூடிய படமாக இருமுகனை உருவாக்கியிருப்பதுதான் படம் பார்த்துமுடித்தபின்னர் பெரிய பிரச்னையாக இருந்தது. இது இருமுகனின் பிரச்னை மட்டும் இல்லை. பெரும்பாலும் அஜீத், விஜய், தனுஷ் போன்ற சூப்பர்ஸ்டார்களின் படங்களுமே இப்படியே உருவாக்கப்படுபவைதான். வெறித்தனமான ரசிகர்கள் ஆரவாரம் செய்யவேண்டும் என்றே உருவாக்கப்படும் காட்சிகளால்தான் இவர்களின் படங்கள் பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. எனவே எளிதில் மறக்கப்பட்டும் விடுகின்றன. இணையத்தில் பரவலாகக் கிண்டலும் செய்யப்படுகின்றன. இருந்தும் இயக்குநர்கள் விழித்துக்கொள்ளுவதற்கு எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியக்காணோம். கபாலியுமே மிக மிக மெதுவாக நகரும் படமாகவே இருந்தது என்பதை இதைப் படிப்பவர்கள் நினைத்துப் பார்க்கலாம்.

    இத்தனை பிரச்னைகள் இருப்பதால், இந்தப் படத்தில் துளிக்கூட என்னால் ஒன்ற முடியவில்லை. தட்டையான, உட்புறம் எதுவும் இல்லாமல் வெறுமே சத்தம் மட்டும் போடும் படங்களுக்கு இருமுகனைத்தான் இனி உதாரணம் சொல்லவேண்டும். தேவையில்லாத ஸ்பீட்ப்ரேக்கர் பாடல்கள், அடிமட்ட மொக்கையான நகைச்சுவை, பல படங்களில் இருந்து உருவப்பட்ட, எந்தவித உணர்ச்சியையும் மனதில் தோற்றுவிக்காத காலியான காட்சிகள் போன்றவற்றை வைத்துப் படம் எடுத்தால் இருமுகன் போலத்தான் இருக்கும். இனியும் பல படங்கள் இப்படி வருவதற்கே சாத்தியக்கூறுகள் அதிகம். காரணம் பணம் ஒன்றை மட்டும் வைத்தே எதையும் யோசிக்கும் தயாரிப்பாளர்கள், உயிரைக்கொடுத்து ஒரு திரைக்கதையை எழுதாமல் நோகாமல் நோம்பி கும்பிட ஆசைப்படும் இயக்குநர்கள் மற்றும் இத்தகைய இயக்குநர்களை நம்பும் ஸ்டார்கள். உண்மையில் ஹாலிவுட்டில் மலிவான இயக்குநர்களாகக் கருதப்படும் மைக்கேல் பே, ரென்னி ஹார்லின் முதலியவர்களின் கொடூர மொக்கைகளை எடுத்துப் பார்த்தால்கூட இருமுகனை விடவும் நேர்த்தியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். ‘தரம்’ என்பது இங்கே நடிக நடிகையர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியவர்கள் கொடுக்கும் பில்டப்களில் மட்டுமே உள்ளது என்பதுதான் அடிப்படைப் பிரச்னை.

    இனியாவது லாஜிக் மீறப்படாமல், எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட்டில் விறுவிறுப்பு கலந்து, படம் பார்ப்பவர்களுக்கு எந்த அலுப்பும் இல்லாமல் அவர்களைப் படத்தில் ஒட்டுமொத்தமாக ஒன்றவைக்கும் படங்கள் இத்தகைய சூப்பர்ஸ்டார்களை வைத்து வருமா என்று யோசித்தால், நிலைமை மிகுந்த கவலைக்கிடம் என்றே புரிகிறது. இதுதான் தமிழ் வணிக சினிமாவின் தலையாய பிரச்னை. இது முதலில் சரியாக வேண்டும். அதற்குக் கதாநாயகர்கள் வானில் பறக்காமல் தரைக்கு வரவேண்டும். ஒழுங்காகக் கதை கேட்கவேண்டும். அப்போதுதான் மறக்கமுடியாத பல படங்கள் (ஆக்‌ஷன் படங்களே கூட) வெளிவரும்.

    ]]>
    http://karundhel.com/irumugan-2016-tamil/feed/ 8
    திரைப்படங்களைப் பேசும் புத்தகங்கள் http://karundhel.com/best-books-to-learn-films/ http://karundhel.com/best-books-to-learn-films/#comments Wed, 19 Oct 2016 03:40:34 +0000 http://karundhel.com/?p=5785 செப்டம்பர் 2016- திரைப்படங்கள் & புத்தகங்கள் சிறப்பிதழ்-படச்சுருளுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.


    திரைத்துறையில் கால்பதிக்கவேண்டும் என்று யாரேனும் நினைத்தாலும் சரி, அல்லது திரைத்துறை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்/திரை ஆளுமைகளின் படைப்புகளின் வாயிலாக அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் சொல்லிய அரசியலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் சரி, உடனடியாக நமக்கு உதவுபவை புத்தகங்களே. உலகின் அத்தனை மொழிகளிலும், உலகின் அத்தனை திரை ஆளுமைகளையும் பற்றிப் பல புத்தகங்கள் உண்டு. இவற்றில், என் பார்வையில், ஒருசில முக்கியமான புத்தகங்கள் பற்றிச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தப் புத்தகங்கள் அவசியம் படிப்பவர்களுக்குப் பல தகவல்கள் சொல்லக்கூடியவையே.

    முதலில், தமிழிலிருந்தே துவங்கலாம். தமிழ் சினிமா பற்றி இப்போது இருக்கும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால், அதற்குத் தேவையான புத்தகம் என்ன?

    தமிழ் சினிமா வரலாறு பற்றிப் பல புத்தகங்கள் உண்டு. ஆனால் அவைகளில் கிட்டத்தட்ட எல்லாமே, தமிழ் சினிமாவை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு எழுத்தாளனின் பார்வையிலிருந்தே எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்களில் இருந்து பல தகவல்கள் தெரிந்துகொள்ளமுடியும் என்றாலும், அவைகளில் எல்லாமே தமிழ் சினிமாவைப் புகழும் புத்தகங்கள். ஒரு தெளிவான விமர்சனப் பார்வை அவற்றில் இருக்காது. தியடோர் பாஸ்கரன் இதில் விதிவிலக்கு. இவரது புத்தகங்கள் அனைத்துமே தெளிவான விமர்சனப் பார்வையை முன்வைக்கும் தன்மையுடையவை. எனவே, தியடோர் பாஸ்கரன் எழுதிய பாம்பின் கண், எம் தமிழர் செய்த படம், சித்திரம் பேசுதடி, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே முதலிய புத்தகங்களை அவசியம் நாம் படிக்கலாம். இவைகளில் தமிழ் சினிமா பற்றிப் பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடியும். அரிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் புத்தகங்கள் இவை.

    ஆனால் இவைகளுக்கும் மேலாக, ஒரே புத்தகத்தில் ஆரம்பம் முதல் 80கள் வரையிலான தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் உண்டு. அதுதான் ‘தமிழ் சினிமாவின் கதை’. எழுதியவர் அறந்தை நாராயணன். இது நியூ செஞ்சுரி புத்தக வெளியீடு. இதன் விலை ரூ.350\-. இந்தப் புத்தகத்தின் விசேடம் என்ன?

    இதோ அறந்தையே பேசுகிறார்.

    ‘நான் ஆராய்ச்சியாளனல்ல; ஆனால் தமிழ் சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராயப்போகிற ஓராயிரம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவப்போகிற, தமிழ் சினிமா குறித்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையானதும் முதலாவதுமான ஒரு நூலை நான் தமிழுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

    பல்லாண்டுகாலம் ஜீவித்து வாழப்போகிற இந்தப் புத்தகத்தில் ’மயக்கும் மாயாலோகத்தில்’ வாழும் சமகால சினிமாக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்து எழுதும்போது, அந்த ‘மயக்கும் மாயாலோகத்தின்’ எந்தவிதக் கவர்ச்சிக்கும் மயங்கிவிடாமல், சமரசம் செய்துகொள்ளாமல், பாட்டாளிவர்க்க ஒழுக்க நெறியில் பிறழாது எழுதியிருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்’.

    இதுதான் அறந்தை நாராயணனின் முன்னுரையில் ஒரு பகுதி. இதுதான் அவரது விசேடம். எந்தவித சமரசமும் இல்லாமல், கூரிய விமர்சனப் பார்வையில், கறாராக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.

    இந்தியாவுக்கு வந்த முதல் சினிமாப்படமான ‘யேசுவின் வாழ்க்கை’ (1896)ல் ஆரம்பித்து, அப்படத்தை சாமிக்கண்ணு வின்செண்ட் எப்படி ஊர் ஊராகப் போட்டுக்காட்டினார் என்பதில் இருந்து, ஊமைப்படங்கள், கிருஷ்ணசாமிப் பாவலர், நாடக சபாக்கள், அவற்றில் ஒன்றில் இருந்து ஆசிரியர் திட்டி அடித்தார் என்பதற்காக அங்கிருந்து ஓடிய சிறுவன் பிந்நாட்களில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்த கதை (பி.யூ.சின்னப்பா), சுதந்திர தாகத்தை நாடகங்களில் போற்றி வளர்த்த விஸ்வநாத தாஸ், டி.கே சகோதரர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், ’சினிமா ராணி’ டி.பி ராஜலட்சுமி, சுதந்திரப் போராட்டம் தமிழ் சினிமாவை பாதித்த கதை, சென்னையின் முதல் டாக்கி ஸ்டுடியோ (சவுண்ட் சிடி/சீனிவாச சினிடோன் – உருவாக்கியவர் ஏ.நாராயணன்) என்று போய், எம்.கே.தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, சுந்தராம்பாள் என்று விவரித்து, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை, கலைவாணர், நடிகவேள், கருணாநிதி என்று விரிவாகப் பேசி, ரஜினி, கமல் காலகட்டம் வரை மொத்தம்750 பக்கங்களில் இவ்வளவு விரிவாகவும் சுவையாகவும் தமிழ் சினிமா பற்றிப் பேசும் ஒரு புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை. இடையிடையே பிரபலங்களைப் பற்றிய நக்கல் தெறிக்கும் வாசகங்களும் உண்டு. இங்கெல்லாம் கறாரான விமர்சகராக எப்படியெல்லாம் அறந்தை நாராயணன் அக்காலகட்டத்தில் கட்டுரைகள் எழுதிப் பிரபலங்களை நிலைகுலையவைத்திருப்பார் என்று நம்மால் அறியமுடிகிறது.

    இந்தப் புத்தகம் தமிழ் சினிமா ஆர்வலர்களின் கையில் கட்டாயம் இருக்கவேண்டிய புத்தகம் என்பதில் சந்தேகமே இல்லை.

    அடுத்து, உலகைக் கலக்கிய ஒரு புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

    ஐம்பதுகளில், அகிரா குரோஸவா போன்ற திரைப்பட மேதைகள் படங்கள் எடுக்கத்துவங்கியிருந்த காலம். ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ (François Truffaut) என்ற இருபத்தேழு வயது இளைஞன் எடுத்த ‘400 Blows’என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம், குழந்தைகள் சிறுவயதில் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றிய துல்லியமான பதிவாக உலகெங்கும் புகழ்பெற்றது. ஃட்ரூபோ ஒரு விமர்சகராக அவரது திரைவாழ்வைத் துவங்கியவர். ஆண்டோய்ன் டாய்னல் என்ற பனிரண்டு வயது சிறுவனைப் பற்றிய படம் அது. இப்படம் பலருக்கும் நினைவிருக்கக்கூடும்.

    இப்படிப்பட்ட த்ரூஃபோ, அக்காலகட்டத்தின் மற்றொரு புகழ்பெற்ற இயக்குநராகிய ஹிட்ச்காக்கை விரிவாக ஒரு பேட்டி எடுத்தார். இந்தப் பேட்டிகள், புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டன. அந்தப் புத்தகம் தான் ‘Hitchcock by François Truffaut’.

    ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ ஒரு மிகக்கறாரான திரைவிமர்சகர் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். அவர் சார்ந்த Cahiers du Cinéma என்ற பத்திரிக்கையில் ஃப்ரெஞ்ச் நியூ வேவ் என்ற பதத்தையும் த்ரூஃபோவை அறிந்தவர்கள் நினைவுகூர்வார்கள். பழைய, க்ளாஸிக் கதைகளை அப்படியே திரைப்படமாக எடுப்பது என்ற முறையை அடியோடு ஒழித்ததுதான் ஃப்ரெஞ்ச் ந்யூ வேவ். அதில் முக்கியமானவர்கள் த்ரூஃபோ, கொதார் (Godard), க்ளாட் சாப்ரோல் Claude Chabrol  ஆகியோர். இவர்களின் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவருமே விமர்சகர்களாக இருந்தவர்கள். இந்த சமயத்தில்தான் இவர்கள் மூலமும், இவர்கள் சார்ந்திருந்த பத்திரிக்கை மூலமும் (Cahiers du Cinema), உருவாக்கப்பட்ட சில கருதுகோள்களே நியூ வேவ் சினிமாவின் துவக்கம். இப்பத்திரிக்கையில் இவரும் பிறரும் எழுதிய சூடான விமர்சனங்கள் மிகப் புகழ்பெற்றவை.

    ஃப்ரெஞ்ச் பழம் படங்களை விளாசித் தள்ளிய த்ரூஃபோ, எப்படி ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு மசாலா இயக்குநரை வானளாவப் புகழ்கிறார் என்ற சந்தேகம் பல அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களுக்கு இருந்தது. ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோ படத்துக்கு த்ரூஃபோ எழுதிய விமர்சனத்தைப் படித்த பத்திரிக்கையாளர்கள், ரியர் விண்டோவில் நியூ யார்க் நகரமே தவறாகக் காட்டப்பட்டுள்ளது என்று இவரை மடக்க எண்ணிக் கேள்வி கேட்டனர். இவர்களுக்கு த்ரூஃபோ சொன்ன பதில் உலகப்பிரசித்தம். “Rear Window is not about Greenwich Village,New York or anything. It is a film about cinema, and I do know cinema” என்பதே அந்தப் பதில்.

    இந்தக் கேள்விபதில்களால் த்ரூஃபோ பாதிக்கப்பட்டார். ஒரு மகாகலைஞனை ஏன் பத்திரிக்கை உலகம் இப்படிச் சாதாரணமாக நினைக்கிறது என்பது அவருக்குள் எழுந்த கவலை. இதன் காரணமாக, தான் அறிந்த உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொல்லவேண்டியே த்ரூஃபோ எழுதிய புத்தகம் இது. 1962வில் ஹிட்ச்காக் அவரது புகழ்பெற்ற படமான The Birds படத்தின் எடிட்டிங்கை முடிக்கவிருந்த காலகட்டத்தில், மிக விரிவாக ஹிட்ச்காக்கோடு பேசி, அந்தப் பேச்சை ஒலிப்பதிவு செய்கிறார் த்ரூஃபோ. ஆனால் அந்த ஒலிப்பதிவை முழுதாக எழுதி முடிக்க அவரது டீமுக்கு நான்கு வருடங்கள் ஆகின்றன. இடையில் எப்போதெல்லாம் ஹிட்ச்காக்கை அவர் சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் பல கேள்விகள் மேலும் மேலும் கேட்டுப் புத்தகத்தை மேம்படுத்துகிறார் த்ரூஃபோ.

    அதன் பலனாக நம்மிடம் உள்ளதே இந்தப் புத்தகம். திரைப்படங்கள் குறித்து ஆழமான அறிவு கொண்டிருந்த இரண்டு மாபெரும் கலைஞர்கள் மனம்விட்டுப் பேசிக்கொள்வதை இந்தப் புத்தகம் போல வேறெந்தப் புத்தகமும் விளக்கிச் சொன்னதில்லை என்ற முறையில், இது ஒரு மிக முக்கியமான புத்தகம். இந்தப் புத்தகத்தை உள்ளது உள்ளபடி படித்தாலேயே, திரைக்கலையைப் பயிலும் நண்பர்களுக்கு அற்புதமான திரைஞானம் கிட்டும்.

    ஹிட்ச்காக் மொத்தம் ஐம்பத்து மூன்று படங்கள் எடுத்திருக்கிறார். அந்த எல்லாப் படங்கள் பற்றிய ஹிட்ச்காக்கின் விரிவான கருத்துகள் இதில் உள்ளன. இடையிடையே ஹிட்ச்காக் சந்தித்த பல பிரச்னைகள், அவர் படமெடுக்கும் முறை, ஹிட்ச்காக் திரைக்கதைகளை செம்மைப்படுத்திய விதம், பல லோகேஷன்களில் படமெடுப்பதில் ஹிட்ச்காக் சந்தித்த சிக்கல்கள், உலகப்போருக்குத் தன் பங்காக ஹிட்ச்காக் அளித்த திரைப்படங்கள், சால்வதோர் டாலியுடன் ஹிட்ச்காக்கின் அனுபவங்கள், ஹிட்ச்காக்கை FBI கண்காணித்த தருணங்கள், திரைப்படங்களில் சஸ்பென்ஸ் வைப்பது குறித்த அட்டகாசமான ஹிட்ச்காக்கின் கருத்துகள்,  ஹிட்ச்காக் எடுத்த ஒரே ஒரு 3டி படம் (கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்), ஹிட்ச்காக் எடுக்காமல் விட்ட இரண்டு படங்கள், சைக்கோ படம் பற்றிய ஹிட்ச்காக்கின் கருத்துகள், அவரது கடைசி நாட்கள் என்று ஹிட்ச்காக் பற்றிய ஒரு விரிவான புதையலே இந்தப் புத்தகம். ஒரு தேர்ந்த இயக்குநரிடம் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கலாம் என்பதற்கும் இந்தப் புத்தகமே ஒரு சிறந்த உதாரணம். த்ரூஃபோவும் ஒரு இயக்குநர் என்பதால் தயக்கமே இல்லாமல் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே செல்கிறார்.

    இந்தப் புத்தகம் ஒன்றே, உலகில் உள்ள அத்தனை ‘எப்படி’ புத்தகங்களையும் விட உங்களுக்கு சினிமாவைக் கற்றுக்கொடுக்கும்.

    இந்த இரண்டு புத்தகங்கள் தவிர, இன்னும் ஏராளமான புத்தகங்கள் சினிமா பற்றி உண்டு. என்னிடம் திரைக்கதை பயிலும் மாணவர்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைக்கும் சில புத்தகங்களின் பட்டியல் இதோ. படித்துப் பாருங்கள்.

    1. Shot by Shot – Steven Katz (விரைவில் இது தமிழ்ஸ்டுடியோ சார்பில் புத்தகமாகத் தமிழில் வரும்)
    2. Rebel Without a Crew – Robert Rodriguez
    3. On directing Film – David Mamet
    4. Directing: Film Techniques & Aesthetics by Michael Rabinger and Mick Hurbis-Cherrier
    5. Sculpting in Time – Andrei Tarkovsky
    6. Herzog on Herzog – Edited by Paul Cronin
    7. Hitchcock – revised edition – By Francois Trauffaut
    8. Scorsese on Scorsese (revised edition)- David Thompson
    9. Save the Cat – Blake Snyder (விரைவில் தமிழில் வெளிவர இருக்கிறது)
    10. Syd Field Screenplay – Syd Field (தமிழில் திரைக்கதை எழுதலாம் வாங்க)
    11. Story – Robert Mckee
    ]]>
    http://karundhel.com/best-books-to-learn-films/feed/ 5
    ஜாக்கி நம் தோழன் http://karundhel.com/jackie-chan-the-legend/ http://karundhel.com/jackie-chan-the-legend/#comments Wed, 12 Oct 2016 05:12:04 +0000 http://karundhel.com/?p=5780 அந்திமழையில் ஜூலையில் வெளிவந்த கட்டுரை இது. அந்திமழை வலைத்தளத்திலும் இந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.


    இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஜாக்கி சானுக்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம், வேறு எந்த வெளிநாட்டு நடிகருக்கும் இருந்ததில்லை என்பதை அவசியம் அடித்துச் சொல்லலாம். ப்ரூஸ் லீ படங்களை ரசிப்பவர்கள் வேறு; அவருக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் வேறு. இதுவேதான் ஜெட்லிக்கும். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தமிழகத்தில் ஜாக்கி சான் அலையே வீசியது. எங்கள் ஊரான கோவையில், என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு ஜாக்கி சான் படமும் மாருதி தியேட்டரிலேயே திரையிடப்படும். ஒவ்வொரு முறை இப்படங்கள் வரும்போதெல்லாம் தியேட்டரில் கூட்டம் ஏதோ புதிய படம் போல அமர்க்களப்படுவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக அக்காலகட்டத்தில் போலீஸ் ஸ்டோரி படங்களும் ஆர்மர் ஆஃப் காட் படமும் சூப்பர் ஹிட்கள். மாருதியில் இவ்விரு படங்களுக்கும் நூறாவது நாள் ஷீல்டே வைத்திருப்பார்கள்.

    உலக அளவில் ஜாக்கி சான் போல மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களில் சூப்பர்ஸ்டாராக விளங்குபவர்கள் மிகவும் சொற்பமே. ப்ரூஸ் லீ துவக்கிவைத்த இந்தப் பாரம்பரியத்தை உலக அளவில் வெற்றிகரமாக அவருக்குப் பின் சாதித்துக் காட்டியவர் ஜாக்கி சான். அவருக்குப் பின்னர் ஜெட் லியும் ஸ்டீஃபன் சோவும் டோனி ஜாவும் இதை சாத்தியமாக்கிக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும், இவர்கள் அனைவரை விடவும் ஜாக்கி சானின் ஸ்டைல் முற்றிலும் மாறுபட்டது. மார்ஷல் ஆர்ட்ஸோடு தனது பிரத்யேகமான நகைச்சுவையையும் கலந்து அளித்ததே இவரது ஸ்டைல். இதைப் பிந்நாட்களில் ஸ்டீஃபன் சோவும் சரியாகச் செய்தார் (ஸிஜியை மார்ஷல் ஆர்ட்ஸில் புகுத்தியதில் ஸ்டீஃபன் சோவின் பங்கு மிகவும் முக்கியமானது).

    ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் எழாம் தேதி பிறந்த ஜாக்கி சானுக்கு சான் கோங் சாங் என்ற பெயர் வைக்கப்பட்டது. சிறு வயதிலேயே, இவரது தந்தை அவரது மனைவியுடன் வேலைக்காக ஆஸ்த்ரேலியா சென்றுவிட, ஹாங்காங்கில் உள்ள பிரசித்தி பெற்ற பீகிங் ஆப்ரா பள்ளியில் விடப்பட்டார் ஜாக்கி சான். அங்கே பத்து வருடங்கள் தங்கி, மார்ஷல் ஆர்ட்ஸ், நாடகம், அக்ரோபாடிக்ஸ் மற்றும் இசை/பாட்டு ஆகியவற்றைக் கற்றார் (ஜாக்கி சான் உண்மையில் ஒரு நல்ல பாடகர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது படங்களில் வரும் டைட்டில் பாடல்களைப் பெரும்பாலும் அவரேதான் பல்லாண்டுகளாகப் பாடிவருகிறார். ஜாக்கி சான் பாடும் வீடியோக்கள் யூட்யூபில் ஏராளம் உண்டு. அவற்றைத் தேடிப்பிடித்து அவசியம் பார்க்கலாம்).

    பள்ளியில் இக்கலைகளில் மிகச்சிறந்து விளங்கியதால், அங்கேயே சக சிறுவர்களுடன் ஒரு குழு பள்ளியின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டு, தங்களின் கலைகளை இச்சிறுவர்கள் டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டுவது நடந்தது. இந்தச் சமயத்தில்தான் 1962வில் அவரது முதல் படத்தில்(Big and Little Wong Tin Bar) குழந்தை நட்சத்திரமாக ஜாக்கி சான் அறிமுகமாகிறார். அப்போது அவருக்கு வயது எட்டு. இதைத்தொடர்ந்து, இன்னும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.

    1971ல் படிப்பை முடித்துவிட்டு, திரைப்படங்களில் ஸ்டண்ட் மேனாக நடிக்க ஆரம்பிக்கிறார். அப்போதே, பிறர் செய்யத் தயங்கும் பல ஸ்டண்ட்களை ஜாக்கி சான் மனமுவந்து செய்ததாக அறிகிறோம். அப்போது ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (1971) படத்தில் சான் யுவென் லுங் என்ற பெயரில் பதினேழு வயதில் நடித்தார் ஜாக்கி சான். இந்தப் படத்தில், அப்போதைய சைனீஸ் படங்களிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து அவர் விழுந்து சாதனை படைத்ததாக அவரைப்பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ப்ரூஸ் லீயின் பாராட்டும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது எண்டர் த ட்ராகன் படத்திலும் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் பணிபுரிந்தார். இவற்றைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் நடிக்க, அவரது தொழில் நேர்த்தி, அப்போதைய பிரபல இயக்குநரான லோ வெய்யின் கவனத்தைக் கவர்ந்தது. லோ வெய் சாதாரண இயக்குநர் அல்ல. ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரியின் இயக்குநர் இவர். ஜாக்கி சான் நடித்திருந்த Hand of Death (1976) படத்தில், நடிகராக மட்டுமன்றி, ஹீரோவுக்கு ஸ்டண்ட் டபிளாகவும் பல காட்சிகளில் இவர் துடிப்புடன் பணியாற்றியிருந்தது லோ வெய்க்குத் தெரியும். இதனால் ஜாக்கி சானை அழைத்து, New Fist of Fury என்ற படத்தை இயக்குகிறார். இதுதான் ஜாக்கி சான் ஹீரோவாக நடித்த முதல் படம். இது, ப்ரூஸ் லீயின் படத்துக்கு இரண்டாம் பாகம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மிக சீரியஸான ப்ரூஸ் லீ டைப் கதாபாத்திரத்திலேயே ஜாக்கி சான் நடித்திருப்பார்.

    ந்யூ ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஓடவில்லை. ப்ரூஸ் லீயின் இடத்தில் புதிய நடிகர் ஒருவரை வைத்துப் பார்க்க மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்கள் விரும்பவில்லை. இருந்தாலும், வரிசையாக இதன்பின் சில மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களை ஜாக்கி சானை வைத்தே லோ வெய் இயக்கினார். அந்தப் படங்கள் அனைத்துமே சரியாகப் போகாதவையே.

    இதன்பின் தான் Snake in the Eagle’s Shadow (1978) படம் வெளிவருகிறது. இது தமிழ்நாட்டு மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான படம். சென்னையில் ஓரளவு நன்றாகவே ஓடியது. இந்தப் படத்தில்தான், அதுவரை ப்ரூஸ் லீயின் நிழலிலேயே அவரைப்போலவே நடித்துக்கொண்டிருந்த ஜாக்கி சான், முதன்முறையாக அவரது ஸ்டைலை மாற்றியமைத்துக்கொண்டார். கங் ஃபூவுடன் நகைச்சுவையை சேர்த்தார். இந்தப் புதிய ஸ்டைல் நன்றாக எடுபட்டு, ஜாக்கி சானுக்கு அவரது முதல் ஹிட் கிடைத்தது (இதற்கு முன்னர், இரண்டு படங்களில் செக்ஸ் காட்சிகளில் கூட ஜாக்கி சான் நடித்துப் பார்த்தார்.. ம்ஹூம். எந்தப் பயனும் இல்லை. போலவே, கங் ஃபூ காமெடி என்பது இதற்கும் முன்னரே 1975ல் Spiritual Boxer படத்திலேயே முயற்சிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் ஜாக்கி சான் வந்துதான் இந்த வகையான படங்கள் உயிர்த்தெழவேண்டும் என்பது விதி போலும்).

    இந்தப் படத்துக்குப் பின்னர்தான் இன்றும் நினைவுகூரப்படும் Drunken Master (1978) படம் வெளியானது. இது ஜாக்கி சானின் ஸ்டார் ஸ்டேட்டஸை உறுதி செய்தது. இதன்பின் வரிசையாக இதுபோன்ற கங் ஃபூ காமெடிகள் வெளியாகி நன்றாக ஓடின. இதனால் ஹாங்காங்கின் நம்பர் ஒன் மார்ஷல் ஆர்ட்ஸ் ஸ்டார் என்ற இடத்தை ஜாக்கி சானால் அடைய முடிந்தது.

    1980ல் ஹாலிவுட்டில் தனது தடத்தை முதன்முறையாகப் பதிக்க முயன்றார் ஜாக்கி சான். The Big Brawl படத்தில் நடித்தார். படம் ஓடவில்லை. இதன்பின் Cannonball Run படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜாக்கி சான் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இருந்தும் பயனில்லை (இந்த இரண்டு படங்களையும் தூர்தர்ஷன் சென்சார் செய்யாமல் படங்களை ஒளிபரப்பிய தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு கண்டிருக்கிறேன். ‘சென்சார் செய்யப்படாமல்’ என்று எழுதியதன் காரணம், இவற்றில் இடம்பெறும் குட்டியான nude காட்சிகளே).

    1980ல் ஹாங்காங்கில் வசூல் சாதனை படைத்த படம் ஒன்று வெளியானது. The Young Lord என்ற அந்தப் படம், இதற்கு முன்னர் தனது படங்களால் ப்ரூஸ் லீ செய்திருந்த வசூல் சாதனைகளை முறியடித்த படம். இதன்பின் ஹாங்காங்கிலேயே பல படங்களில் ஜாக்கி சான் நடித்தார். அவைகளில் பல படங்கள், அத்தனை தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவையே. Project A (1983), Police Story (1985), and Armor of God (1986) ஆகிய படங்கள் ஆசியாவெங்கும் சூப்பர்ஹிட்கள் ஆயின.  அதேபோல் அவரது ஸ்டண்ட் காட்சிகளும் மிகவும் பிரபலம் ஆயின. தனது படங்களின் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தோன்றுவது ஜாக்கி சானுக்கு இயல்பான விஷயமாக ஆகிப்போனது. ஆனால் அவற்றுக்கு அவர் கொடுத்த விலை அதிகம். உதாரணமாக ஆர்மர் ஆஃப் காட் படத்தில், நாற்பதடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொள்ளக் குதிக்கும் ஸ்டண்ட் ஒன்றில் அவரது மண்டையோட்டில் விரிசல் ஏற்பட்டது.

    ஜாக்கி சான் படங்களில் இடம்பெறும் இப்படிப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளால் (குறிப்பாக போலீஸ் ஸ்டோரி), பல ஸ்டண்ட் நடிகர்கள் அவரது படங்களில் நடிக்கமுடியாது என்று மறுத்ததும் நிகழ்ந்தது. இதனால் Jackie Chan Stuntman Association என்ற அமைப்பை அவர் நிறுவி, பல ஸ்டண்ட் நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவர்களின் மருத்துவ செலவையும் அவரே ஏற்றார். போலீஸ் ஸ்டோரி படத்துக்கும் ட்ரங்கன் மாஸ்டர் படத்துக்கும் பல பாகங்களை எடுத்து வெளியிட்டார். அனைத்துப் படங்களும் ஹிட்கள் ஆயின.

    1995ல் ஜாக்கி சான், தனது காமிக்ஸ் கதாபாத்திரத்தை வெளியிட்டார் (Jackie Chan’s Spartan X சீரீஸில் இடம்பெறும் ஜாக்கி சான் கதாபாத்திரம் இது). அதே வருடத்தில், M TV விருது வழங்கும் நிகழ்ச்சியில், க்வெண்டின் டாரண்டினோ, ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனை விருதை வழங்கினார். அடுத்த வருடத்தில், Rumble in the Bronx வெளியானது. இதுதான் ஜாக்கி சானின் முதல் அமெரிக்க ஹிட். இதன்பின்னர் சில வருடங்களில் Rush Hour படம் 1998ல் வெளியாகி, உலகம் முழுக்கப் பிரமாதமாக ஓடியது. 2000ல் Shanghai Noon படமும் இதேபோல் ஹிட் ஆனது. இந்த இரண்டு ஹாலிவுட் படங்களுக்கும் இரண்டாம் பாகங்களும் எடுக்கப்பட்டு வெளியாகின (ரஷ் ஹவருக்கு மூன்றாம் பாகமும் எடுக்கப்பட்டது). ரஷ் ஹவர் வெளியான காலகட்டத்தில் அவரது சுயசரிதையையும் ஜாக்கி சான் வெளியிடுகிறார் (I am Jackie Chan).

    ரஷ் ஹவர் வெளியாகும்போதே உலகம் முழுக்க ஜாக்கி சான் ஒரு சூப்பர்ஸ்டார். எனவே அவரது அடுத்தடுத்த படங்கள் உலகம் முழுக்க வெளியாகி ஓடியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ரஷ் ஹவர் சீரீஸ் மற்றும் ஷாங்காய் நூன் சீரீஸைத் தவிர்த்து அவர் நடித்த ஹாலிவுட் படங்களான The Tuxedo (2002) மற்றும் The Medallion (2003) ஆகியவை மிகவும் சுமாராகவே ஓடின. இவற்றில் கதையம்சமோ, ஜாக்கி சானுக்கான வித்தியாசமான வேடங்களோ, அவரது நகைச்சுவை கலந்த ஸ்டண்ட்களுக்கான முக்கியத்துவமோ இருக்காது. இந்தப் படங்களில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்க முடியும் என்பதே இவற்றின் தோல்விக்குக் காரணம்.

    கூடவே, ஹாலிவுட்டில், ஜாக்கி சானுக்குத் திரைப்படங்கள் எடுப்பதில் முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. அவை பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் சார்ந்த படங்களாகவே இருந்தன. ஆனால் ஹாங்காங்கிலோ, கிட்டத்தட்ட நாயகனாக நடிக்க ஆரம்பித்திருந்த எழுபதுகளின் முடிவிலிருந்தே ஜாக்கி சானின் கையில்தான் அவரது அத்தனை திரைப்படங்களும் இருந்தன. இதுவும் மேலே சொன்ன படங்களின் தோல்விக்குக் காரணம்.

    இதன்பின்னர் ஹாங்காங் திரும்பி, தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை ஜாக்கி சான் துவங்கினார் (JCE Movies Limited- Jackie Chan emperor Movies Limited). இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்கள் ஹாங்காங்கில் நன்றாக ஓடின (New Police Story, The Myth, Rob-B-Hood முதலானவை). இதன்பின், ஹாங்காங்கின் மற்றொரு சூப்பர்ஸ்டாரான ஜெட்லியோடு சேர்ந்து ஜாக்கி சான் நடித்த முதல் படம் – The Forbidden Kingdom வெளியானது.

    இதன்பின் ஜாக்கி சானின் அடுத்த ஹாலிவுட் படம் – The Spy Next Door வெளியாகி, சுமாராக ஓடியது. பின்னர் வெளியான The karate Kid(2010) படத்தில்தான் ஜாக்கி சான் முதன்முறையாக, ஹாலிவுட்டில் உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். இதன்பின் ஜாக்கி சானின் 100வது படமான 1911, 2011ல் வெளியானது. இப்படத்துக்குப் பின்னர், இனி ஆக்‌ஷன் காட்சிகளில், உடல்நிலை காரணமாக அதிகமாகக் கவனம் செலுத்தப் போவதில்லை என்று ஜாக்கி சான் அறிவித்தார்.

    ஜாக்கி சான் உலகம் முழுக்க ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகப் பிரபலம் அடைந்ததற்கான காரணங்களை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். தற்போது, அவர் எந்த நிலையில் இருக்கிறார்? எப்படிப்பட்ட படங்களை எடுக்க விரும்புகிறார்?

    ‘பல ஆண்டுகளுக்கு முன்னர், கட்டிடங்களின் மாடியில் இருந்தும், ஓடும் பஸ்களில் இருந்தும் கண்டபடி குதித்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்தேன். அவற்றை இப்போது நினைத்தால் எனக்கே மிகவும் நகைச்சுவையாக உள்ளது. எனது படங்களின் டைட்டில்களில் இருந்து இறுதிக் காட்சி வரையிலுமே ஸ்டண்ட்களை செய்துகொண்டே இருந்துவிட்டேன். இனி, நடிப்பில் அதிகக் கவனம் செலுத்த விரும்புகிறேன். இப்போதைய காலகட்டத்தில், கதை என்பதில் ஆடியன்ஸ் கவனமாக இருக்கிறார்கள். இதனால் எனது ஸ்டைலை மாற்றிக்கொள்ளவே விரும்புகிறேன். மிக அழுத்தமான கதை இருந்தால், ஒரே ஒரு பஞ்ச்சை வைத்தாலே ஆடியன்ஸ் கரகோஷம் எழுப்பி அதை ஆதரிப்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்’ என்பதே இப்போதைய ஜாக்கி சானின் கருத்து.

    இதற்கேற்ப, அவரது 2015 படமான Dragon Blade படத்தில் இவரது குறும்புத்தனங்கள் இல்லாமல் சீரியஸான வேடம் ஒன்றில் நடித்திருப்பார். அதேபோல், 2013ல் வெளியான Police Story 2013 படத்திலும் ஒரு மிகவும் சீரியஸ் கதாபாத்திரத்தை செய்திருப்பார். 2010ன் கராத்தே கிட் படத்திலிருந்தே அவரது வேடங்கள் பெரும்பாலும் இப்படியே இருக்கின்றன (அனிமேஷன் படங்களான கங் ஃபூ பாண்டா சீரீஸில் மட்டும் இன்னும் நகைச்சுவையான பாத்திரமான Monkey என்பதற்கு ஜாக்கி சான் குரல் கொடுத்திருப்பார்). எப்போதோ ஒரு முறை பழையபடி ஆக்‌ஷன் காமெடிகளில் நடிக்கிறார். ஜூலையில் வெளியாக இருக்கும் Skiptrace படம் இப்படிப்பட்டதே. இதேபோல் Kung Fu Yoga என்ற படம் வரும் ஆண்டு இந்தியாவில் வெளியாகிறது. இதுவும் ஆக்‌ஷன் காமெடிதான்.

    வயதாகிவிட்டாலும், ஜாக்கி சானின் கால்ஷீட் 2020 வரையிலுமே ஃபுல்தான். எராளமான படங்கள் ஹாங்காங்கிலும் யுனைடட் ஸ்டேட்ஸிலும் அவருக்காகக் காத்திருக்கின்றன. போலவே, இன்னமும் ஹாங்காங்கில் ஜாக்கி சானின் பல படங்கள் வருடம்தோறும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவரது பழைய படங்கள் போலப் புதிய படங்களை அவர் நடிப்பதில்லை. அதனால் என்ன? எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஜாக்கி சானைக் கிட்டத்தட்டத் தமிழகத்தின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராகவே பாவித்து நடத்திவந்த நமக்கு, அவரது பழைய படங்கள் இருக்கவே இருக்கின்றன.

    எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நமது பள்ளி/கல்லூரி நாட்களைப் பரவசப்படுத்திய ஸ்டார்களில் முதன்மையானவர் என்ற முறையில், ஜாக்கி சான் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பல படங்கள் நடிக்க வாழ்த்துவோம்.

     

     

    ]]>
    http://karundhel.com/jackie-chan-the-legend/feed/ 1
    பஞ்சு அருணாசலம் – சூப்பர்ஸ்டார்களின் சூப்பர்ஸ்டார் http://karundhel.com/panju-arunachalam-superstar-of-superstars/ http://karundhel.com/panju-arunachalam-superstar-of-superstars/#comments Tue, 11 Oct 2016 05:46:55 +0000 http://karundhel.com/?p=5769 செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இது.


    தமிழ்த்திரையில் பல்வேறு முக்கியமான ஆளுமைகளை நாம் கடந்துவந்திருக்கிறோம். அவர்களை இரண்டுவிதங்களில் வகைப்படுத்த முடியும். தனது ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்து, மக்களின் மனதில் இடம்பெற்றவர்கள். எம்.கே.டி, எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், பானுமதி, ஸ்ரீதர், பீம்சிங், நாகேஷ், சந்திரபாபு, பாலசந்தர் முதலியவர்கள் இந்த வகை. இரண்டாம் வகையினர் இருப்பதும் நமக்குத் தெரியாது; அவர்கள் நம்மை விட்டு மறைந்ததும் நமக்குத் தெரியாது. இவர்களைப் பற்றி நமக்கு நிறையத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகளை இவர்கள் புரிந்திருப்பார்கள். நாம் இப்போது ரசிக்கும் பல விஷயங்களுக்கு இவர்களே மூலகாரணமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் தனது ஆளுமையைப் பறைசாற்றிக்கொள்ளாமல், அமைதியாகத் தங்களது வேலையை மட்டும் செய்துவிட்டு விடைபெற்றிருப்பார்கள்.

    பஞ்சு அருணாசலம் இந்த வகையைச் சேர்ந்தவர்.

    பனிரண்டு வருடங்களில், கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர்; கதையாசிரியர்; திரைக்கதை எழுத்தாளர்; இயக்குநரும் கூட; வெற்றிகரமான பல படங்களைத் தயாரித்திருக்கிறார்; ரஜினிகாந்த், கமல்ஹாஸன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர்களுடன் கூட்டணி அமைத்துப் பஞ்சு அருணாசலம் எடுத்த படங்கள் இன்றும் மறக்கமுடியாதவை; ரஜினிகாந்த்துக்கு ஆரம்பகாலத்தில் வரிசையாக சூப்பர்ஹிட்களை அளித்தவர் இவர்தான்; ’ப்ரியா’தான் ரஜினிக்கு முதல் சில்வர் ஜூப்ளி. அதை எடுத்தது இவரே; ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படம் மூலமாக மறுவாழ்வு அளித்தவர்; இது மட்டுமல்ல. இளையராஜாவைத் தமிழுக்கு அளித்தவர் பஞ்சு அருணாசலமே. அவர் எடுத்த அன்னக்கிளி படம் எப்படி பிய்த்துக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் தமிழகத்தில் ஓடியது என்பது அக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதுமட்டுமல்லாமல் ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். நாம் திரையில் பார்த்து ரசித்த பல படங்கள், பஞ்சு அருணாசலம் கைவைத்தபின்னர்தான் முழுமையான படங்களாக மாறியிருக்கின்றன. இது சினிமாவுக்குள் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்தவர். ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான பல ஹிட்களை எழுதியுள்ளார். மிக வெற்றிகரமான சூப்பர்ஹிட் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் என்று தாராளமாகப் பஞ்சு அருணாசலத்தைப் பற்றிச் சொல்லமுடியும்.

    இருந்தும், புகழ் வெளிச்சம் தன்மீது அவ்வளவாக விழாமல் ஒதுங்கியே நின்றுகொண்டார். அதில் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.

    பஞ்சு அருணாசலத்தின் தந்தை கண்ணப்பன், கவிஞர் கண்ணதாசனின் அண்ணன். கண்ணப்பனுக்கு அடுத்தவர், ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன். இவர் எஸ்.வரலட்சுமியின் கணவர். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பல புகழ்பெற்ற படங்களைத் தயாரித்தவர். விநியோகஸ்தராக வாழ்க்கையைத் துவங்கி, கிட்டத்தட்ட முப்பத்தைந்து படங்களைத் தயாரித்தவர். தென்னிந்திய ஃபிலிம் சேம்பரின் தலைவராகப் பதிமூன்று வருடங்கள் இருந்தவர்.

    காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியூசி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்த பஞ்சு அருணாசலம், அவரது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் கோபப்பட்டு, அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலேறிய சம்பவமே பஞ்சு அருணாசலத்தின் திரைவாழ்க்கையின் ஆரம்பம். அப்படி ரயிலேறியவர், சென்னையில் நேராக ஏ.எல்.எஸ்ஸின் வீட்டுக்குத்தான் வந்திருக்கிறார். ஏ.எல்.எஸ், இவரைப் படிக்கவைக்கவேண்டும் என்று முயற்சிகள் எடுக்க, கதைகள் எழுதுவதற்காக சென்னையிலேயே ஏதேனும் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிடவேண்டும் என்பதே பஞ்சு அருணாசலத்தின் விருப்பமாக இருந்தது. இது ஏ.எல்.எஸ்ஸுக்குக் கடுங்கோபம் வரவழைக்கிறது. இறுதியில், தனது ஸ்டுடியோவிலேயே பஞ்சு அருணாசலத்தை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார் ஏ.எல்.எஸ்.

    திரைப்படங்கள் எடுப்பதன் நுணுக்கங்களை இங்குதான் பெருமளவில் பஞ்சு அருணாசலம் கற்றுக்கொள்கிறார். அதேசமயத்தில், மாலைவேளைகளில் எப்போதுமே கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிக்கை அலுவலகத்தில் நேரம் கழிப்பதே பஞ்சு அருணாசலத்தின் வழக்கம். அங்கே கதைகள், கவிதைகள் எழுதுவார். அப்பத்திரிக்கையிலேயே இவரது சில கவிதைகளும் அச்சமயத்தில் இடம்பெறுகின்றன. கண்ணதாசனின் அறிமுகம் கிடைக்கிறது. லியோ டால்ஸ்டாய், மாப்பஸான், காண்டேகர், தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜீ ஆகியோரின் கதைகளைப் படித்திருந்த அருணாசலம், அவைகளைப் பற்றிச் சொல்லிக் கண்ணதாசனின் கவனத்தைக் கவர்கிறார். இதன்பின் அவரது ஒரு தலையங்கத்தைச் சொல்லச்சொல்ல எழுதித் தர, இவரது எழுத்தும் வேகமும் பிடித்துப்போய், தன்னுடனேயே தங்கச் சொல்லிவிடுகிறார் கண்ணதாசன்.

    அப்போதுதான், ஒரு சித்தப்பாவான ஏ.எல்.எஸ்ஸின் ஸ்டியோவில் இருந்து திரைப்படங்களுக்குள் நுழைவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த பஞ்சு அருணாசலம், சிந்தனை வயப்படுகிறார். அவரது வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான முடிவு என்று அவருக்குத் தெரிகிறது. ஸ்டுடியோவிலேயே இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் செட் அஸிஸ்டெண்ட்டாகவே இருந்தால் அவசியம் விரைவில் திரைப்படங்களுக்குள் நுழைந்துவிடலாம். ஆனால் அக்காலகட்டத்தில், அப்போதுதான் திரைப்படப் பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்த இன்னொரு சித்தப்பாவான கண்ணதாசனுடன் சென்றால், என்ன ஆவோம் என்பதே தெரியாது. ஸ்டுடியோவில் நிலையான சம்பளம் உண்டு. ஆனால் கண்ணதாசனோ அப்போதெல்லாம் சிரமதசையில்தான் வாழ்ந்துவந்தார். மாலையிட்ட மங்கை படத்தைப் பல சிரமங்களுக்கு இடையே கண்ணதாசனும் பங்குதாரர்களும் தயாரித்து, அதன்பின் ஏ.எல்.எஸ்ஸிடமே விற்று, படம் சூப்பர்ஹிட் ஆனபின் சிவகங்கைச் சீமை படம் எடுத்து, அது தோல்வியடைந்த காலகட்டம் அது. அதன்பின்னர் கவலை இல்லாத மனிதன் படத்தைக் கண்ணதாசன் எடுத்துக்கொண்டிருந்த நேரம்தான் பஞ்சு அருணாசலத்தைத் தன்னோடு வந்து சேரச்சொல்கிறார்.

    அப்போது, ’எப்படியும் எழுத்தாளன் ஆகவேண்டும் என்றுதானே நினைத்தோம்? எனவே முத்தண்ணனுடன் (முத்தையா என்ற கண்ணதாசன்) இருந்தால் கவிதைகள், கதைகள் என்று எழுத வாய்ப்புக் கிடைக்கும். ஸ்டுடியோவில் வேலை செய்தால் எப்படி எழுத்தாளன் ஆகமுடியும்?’ என்ற முடிவை எடுத்துவிட்டு, நேராகப் போய்க் கண்ணதாசனுடன் சேர்ந்துவிடுகிறார் பஞ்சு அருணாசலம். அப்போது கவிஞர், எம்.எஸ்.வியுடன் கம்போஸிங்கில் இருக்கிறார். இவர் அங்கு சென்றதும், ஒரு பாடலைச் சொல்லி, அப்படியே எழுதச்சொல்கிறார் கண்ணதாசன். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து பஞ்சு அருணாசலம் எழுதிக்கொண்ட அந்த முதல் பாடல்- ‘பிறக்கும்போதும் அழுகின்றாய்… இறக்கும்போதும் அழுகின்றாய்’..

    இப்படியே கண்ணதாசனுடன் பஞ்சு அருணாசலம் வளர்கிறார். கண்ணதாசன் புகழடைய ஆரம்பிக்கிறார். கண்ணதாசனின் பணம் இவரிடமேதான் இருக்கும். அதிலிருந்து அவ்வப்போது இவரைப் பணம் எடுத்துக்கொள்ளச்சொல்வார் கவிஞர். இதன்பின் பஞ்சுவே கவிஞரின் திரை அப்பாயிண்ட்மெண்ட்களை கவனித்துக்கொள்ளும் மேனேஜராகவும் வளர்கிறார். இச்சமயத்தில்தான் ஒருநாள், கவிஞர் ஊரில் இல்லாதபோது ‘சாரதா’ படத்தில் ஒரு பாடல் எழுதவேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இவரிடம் வந்து இவரையே பாடல் எழுதச்சொல்கிறார். தயக்கத்துடன் இவரும் ஒரு பாடலை எழுதிக்கொடுக்கிறார். அந்தப் பாடல் பிந்நாட்களில் சூப்பர்ஹிட் ஆனது, இன்றுவரை தமிழகத்தின் அத்தனை திருமணங்களிலும் மாறிமாறி ஒலிக்கும் அந்தப் பாடல்தான் – ‘மணமகளே மருமகளே வா வா… உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா’.

    இப்பாடலுக்குப் பின் அவ்வப்போது பாடல் எழுதும் வாய்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வருகின்றன. இதே காலகட்டத்தில் ஒருசில கதை விவாதங்களிலும் பஞ்சு அருணாசலம் பங்கேற்க ஆரம்பிக்கிறார். இவர் பல படங்களைப் பார்ப்பவர் என்பதே காரணம். அடையாறு காந்தி மண்டபத்தில் அதிகாலையில் சென்று வி.சி.குகநாதனுடன் அமர்ந்து கதை விவாதங்களைச் செய்திருக்கிறார் பஞ்சு அருணாசலம். குகநாதனுடன் ஓரிரு படங்களில் உதவி இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறார். அப்போது ஒரு நாள், ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்கிறது (ஜே.எல். ஃபிலிம்ஸ்). அவர்களுக்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதுகிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவான திரைக்கதை அது. கதை பிடித்துவிட்டதால் ஜெமினி, சரோஜாதேவி, சோ, சந்திரபாபு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்துவிட்டது. இயக்குநர், தெலுங்கு இயக்குநரான கோபிநாத் (நடிகர் சுரேஷின் தந்தை). இரண்டே மாதங்களில் படம் முடிந்தும் விட்டது. ஆனால் படத்துக்கு மீடியேட்டராக இருந்த சேதுராமனுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படத்தின் பார்ட்னர்ஷிப் பற்றி ஏற்பட்ட மோதல் ஒன்றினால், படத்தை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துவிடுகின்றனர். இதனால் இறுதிவரை அந்தப்படம் வெளியாகவே இல்லை.

    இதன்பின் சித்தப்பா ஏ.எல்.எஸ்ஸுக்கே ஒரு கதை பண்ணித் தருகிறார். ஒரு மாதம் கழித்துப் படப்பிடிப்பு. படத்தின் இயக்குநர்கள் ராம்நாத்-ஃப்ரான்ஸிஸ், இந்தப் படத்தை இயக்குமுன்னர் ஒரே மாதத்தில் இன்னொரு படத்தை இயக்கிவிட்டு வரலாம் என்று சென்றதால் கோபம் அடைந்த ஏ.எல்.எஸ், அந்தப் படத்தையே நிறுத்திவிடுகிறார். இதன்பின் இன்னொரு கதையும் ஏ.எல்.எஸ்ஸுக்குச் செய்துதருகிறார் பஞ்சு அருணாசலம். ஒரு வாரம் படப்பிடிப்புக்குப் பின்னர், படத்தைப் போட்டுப் பார்க்கும் ஏ.எல்.எஸ், படம் எளிமையாக இருக்கிறது. பாவமன்னிப்பு, பாசமலர் என்றெல்லாம் உணர்ச்சிகரமான படங்கள் வரும் வேளையில் எளிமையான படங்கள் எல்லாம் ஓடாது என்று முடிவுசெய்து, அந்தப் படத்தையும் அப்படியே நிறுத்திவிடுகிறார்.

    இப்படி, தொட்ட படங்கள் எல்லாம் பாதியிலேயே நிறுத்தப்படுவதால், ‘பாதிக்கதை பஞ்சு’ என்றே பஞ்சு அருணாசலம் அழைக்கப்பட்டதை அவரே விரிவாக எழுதியிருக்கிறார்.

    இதன்பின்னரும் பல படங்கள் இப்படியே செல்ல, மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் யோசித்திருக்கிறார். பின்னர் திருமணம் நடக்கிறது. சில வருடங்கள் இப்படியே கழிகின்றன. ’ஹலோ பார்ட்னர்’ என்ற கதை படமாகிறது. கதை நன்றாக இருந்தாலும், படம் குப்பையாக எடுக்கப்பட்டதால் பஞ்சு அருணாசலம் பயந்துவிடுகிறார். நாகேஷ் ஹீரோ. அவர் அப்போது புகழின் உச்சத்தில் இருந்ததால், படம் மூன்று நான்கு வாரங்கள் ஓடிவிடுகிறது. எனவே படம் தோல்வி இல்லை. ஆனால் அப்படம் பற்றி ஒரு நாள் நாகேஷ், ‘நீ சரியா எழுதல.. அதான் படம் ஓடல’ என்று சொல்லிவிடுகிறார். அன்றில் இருந்து மைக்கேல் மதன காமராஜன் வரை பஞ்சு அருணாசலம் எடுத்த எந்தப் படத்திலும் நாகேஷ் இல்லை. மைக்கேல் மதன காமராஜனிலும் இவராக அவரை புக் செய்யவில்லை. அவராகவே கேட்டதால்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகப் பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார்.

    பின்னர் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற அடுத்த படத்துக்குத் திரைக்கதை எழுதுகிறார். படம் வெளிவந்து பிரமாதமாக ஓடுகிறது. ’பாதிக்கதை பஞ்சு’ என்ற பெயர் அப்போதுதான் பொய்த்தது. அதற்கு ஆன ஆண்டுகள் – பனிரண்டு. பன்னிரண்டு வருடங்களாகப் பஞ்சு அருணாசலம் எழுதிய எந்தப் படமும் வெளிவரவில்லை ! இது எத்தனை பெரிய துயரம்? இதனால்தான் தற்கொலை எண்ணங்கள் அருணாசலத்தின் மனதில் எழுந்தன. ஆனால் விடாமுயற்சியுடன் சினிமாவிலேயே இருந்துகொண்டிருந்ததால், பன்னிரண்டாவது வருடம் வெளியான ‘கல்யாணமாம் கல்யாணம்’ படம் பஞ்சு அருணாசலத்தின் திரைவாழ்க்கையின் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாகத் துவக்கிவைத்தது.

    1974 ஜனவரியில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ வெளிவந்து நன்றாக ஓடுகிறது. அதைத் தொடர்ந்து, வரிசையாகப் பத்து படங்கள் பஞ்சு அருணாசலத்தின் எழுத்தில் வெளிவருகின்றன. ஆனால் இவையெல்லாமே 1974ம் ஆண்டுக்குப் பின் வெறும் ஒன்றரை வருடங்களில் வெளியானவை! இக்காலகட்டத்தில்தான் ஜெய்சங்கரின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றான துணிவே துணை, பஞ்சு அருணாசலத்தின் எழுத்தில் வெளியாகிறது. அப்படம் இன்றும் பலருக்கும் நினைவிருக்கக்கூடிய படம். ஒரு ஆங்கிலப் படம் போலவே வேகமான திரைக்கதையோடு எழுதப்பட்டிருக்கும்.

    இக்காலகட்டத்தில்தான் ஹிந்திப்படங்கள் தமிழகத்தில் பிரமாதமாக ஓடுகின்றன. காரணம், அவற்றின் பாடல்கள். எனவே, தமிழ்ப்படங்களையும் தாண்டிப் பிரம்மாண்டமாக ஓடும் ஹிந்திப் படப் பாடல்களை மீறி, அவற்றைவிடவும் நல்ல இசையைக் கொடுக்கும் ஒருவரை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் பஞ்சு அருணாசலத்துக்குள் எழுகிறது. அறுபதுகளில் பிரபலமாக இருந்த விஸ்வநாதன், மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்களின் இசை, எழுபதுகளில் சற்றே கேட்டதையே திரும்பக்கேட்கும் உணர்வை அளித்துவந்த காலம் அது.

    அப்போதுதான் பஞ்சு அருணாசலத்தின் உதவியாளராக இருந்துவந்த கதாசிரியர் ஆர்.செல்வராஜின் சிபாரிசின்பேரில் அறிமுகமாகிறார் இளையராஜா. அவரை அழைத்து, பாடச்சொல்லிக் கேட்கிறார் பஞ்சு அருணாசலம். பிடித்துவிடுகிறது. இந்தப் பாடல்களுக்கு ஏற்ப ஒரு படம் வேண்டுமே? எனவே மனதிலேயே அப்பாடல்களை வைத்துக்கொண்டு, ஒரு வருடம் கழித்து ஒரு படத்தைத் துவக்குகிறார். அதுதான் அன்னக்கிளி. அப்போது ராஜாவை அழைத்து, வாசிக்கச்சொல்லி ரிகார்ட் செய்துகொள்கிறார். அப்பாடல்களை மது அருந்திவிட்டுக் கேட்டும் பார்க்கிறார். திரும்பத்திரும்பக் கேட்டுப்பார்த்தபின் அந்த ட்யூன்கள் அவருக்கு மிகவும் பிடித்துவிடுகின்றன. உடனடியாக அந்த இசைக்கு ஏற்பப் பாடல்களும் எழுதிவிடுகிறார். படம் எடுக்கப்படுகிறது. அன்னக்கிளி படம் வெளியானபின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. இளையராஜாவை இப்படியாக, ஹிந்திப்பாடல்களின் ஆதிக்கத்தை அடியோடு குறைத்து, தமிழ்ப்பாடல்களை மறுபடி பிரபலப்படுத்திய கலைஞன் என்று சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

    panju-arunachalam-mahendran-ilaiyaraja

    இதன்பின்னர் ரஜினிகாந்த் என்ற இளைஞர் தமிழில் அறிமுகமாகிறார். அவரைவைத்து கவிக்குயில் என்ற படம் எடுக்கிறார் பஞ்சு அருணாசலம். படம் சரியாகப் போகவில்லை. இருந்தும் ரஜினியின் நடிப்பு பிடித்துவிடுகிறது. எனவே காயத்ரி படம் துவங்குகிறது. அது சுஜாதா எழுதிய கதை. அதை சற்றே தனக்கேற்ப மாற்றி எடுத்து வெளியிடுகிறார். படம் பெரிய வெற்றி அடைகிறது. படத்தில் ரஜினி வில்லன். ஹீரோ ஜெய்சங்கர். ஆனால் ரஜினி அடிவாங்கும்போது ஜெய்சங்கரை ஆடியன்ஸ் திட்டுவதை கவனிக்கிறார் அருணாசலம். அப்போதே, ரஜினி என்ற இந்த இளைஞனிடம் மக்களைக் கவரும் சக்தி உள்ளது என்று புரிந்துகொள்கிறார் (சில வருடங்கள் கழித்து, இதே ரஜினிகாந்த்-ஜெய்சங்கர் காம்பினேஷனை உல்டா செய்து, ரஜினிக்கு ஜெய்சங்கரை வில்லனாக்கி பஞ்சு அருணாசலம் எடுத்த முரட்டுக்காளை மிகப்பிரம்மாண்ட வெற்றியடைந்தது வரலாறு).

    காயத்ரி அடைந்த வெற்றியால், ரஜினிகாந்த்தையும் சிவகுமாரையும் வைத்து புவனா ஒரு கேள்விக்குறியை எடுக்கிறார் அருணாசலம். அதில் சிவகுமார் வில்லன். ரஜினி பாசிடிவ் கதாபாத்திரம் செய்திருப்பார். சிவகுமாரை வில்லன் என்று தெரியாமல் வந்து படம் பார்த்த ஆடியன்ஸ் ஆச்சரியம் அடைந்தனர். இது அருணாசலத்தின் முடிவுதான். படம் நன்றாக ஓடியது. இதன்பின்னர் சுஜாதாவிடம் மறுபடி ரைட்ஸ் வாங்கி, ப்ரியா எடுக்கப்படுகிறது. அதிலும் ரஜினிகாந்த்தே ஹீரோ. அதுவும் சூப்பர்ஹிட்.

    கமல்ஹாஸனும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்து, பின்னர் தனித்தனியாக நடிக்க முடிவெடுத்து, அப்படி நடிக்கத் துவங்குகையில், இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற முடிவில் இருவரின் கால்ஷீட்டையும் வாங்கிவைத்திருந்த அருணாசலம், இருவரும் பிரிந்தபின்னரும் சளைக்காமல் இருவருக்கும் தனித்தனிப் படங்களை எழுதி, அவற்றைத் தயாரித்து வெளியிட்ட கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவைதான் கல்யாணராமன் & ஆறிலிருந்து அறுபது வரை. இரண்டுமே பிரமாதமாக ஒடிய படங்கள்.

    இதன்பின்னர் ரஜினியிடம் இன்னொரு படத்துக்காக வாங்கி வைத்திருந்த கால்ஷீட்டை, அப்போது மறுபடியும் ஒரு இடைவெளிக்குப் பின்னர் படம் எடுக்க வந்திருந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் சரவணன் வேறு வழியில்லாமல் கேட்க, அவர்களுக்காக இவரிடம் இருந்த ரஜினியின் கால்ஷீட்டை விட்டுக்கொடுத்து, பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதிக்கொடுத்த படம்தான் முரட்டுக்காளை. பிரம்மாண்டமான முறையில் ஏ.வி.எம் தயாரித்த படம். ரஜினி விக் வைத்துக்கொண்டு நடித்த படம். ரஜினிக்கு வில்லனாக, ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருந்த ஜெய்சங்கர் நடித்த படம். இப்படம் எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். போலவே கமலுக்காக உல்லாசப்பறவைகள், எல்லாம் இன்பமயம் போன்ற படங்களும் அருணாசலம் எழுதியிருக்கிறார்.

    இதன்பின், க்ளாஸ் ஹீரோவாக இருந்த கமல்ஹாஸனுக்காகவே சகலகலா வல்லவனை ஏ.வி.எம்முக்காக எழுதினார் அருணாசலம். ஏற்கெனவே, இப்படம் இறங்கி அடிக்கவேண்டும் என்று சரவணன் அருணாசலத்திடம் சொல்லியிருந்தார். அதேபோல் அப்படம் கமல்ஹாஸனை அனைவரிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. படமும் பெரிய ஹிட்.

    இப்படங்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ரஜினி மற்றும் கமலுக்குத் திரைக்கதைகள் எழுதித் தள்ளுகிறார் பஞ்சு அருணாசலம். போக்கிரி ராஜா, பாயும் புலி, தூங்காதே தம்பி தூங்காதே, அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு, ஜப்பானில் கல்யாணராமன், உயர்ந்த உள்ளம், மனிதன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள், அதிசய பிறவி, தர்மதுரை, பாண்டியன், சிங்காரவேலன், வீரா என்று இத்தனை ரஜினி கமல் படங்களுக்கு எழுத்து வேலை செய்தவர்கள் வேறு எவரும் இல்லை. இப்படங்களுக்கு இடையில், சிவாஜி, கார்த்திக், ராமராஜன், விஜயகாந்த், ராம்கி, சரத்குமார் என்றெல்லாம் மற்ற ஹீரோக்களுக்கும் எழுதியிருக்கிறார்.

    kamalrajini

    ’கமர்ஷியல் படம்’ என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பஞ்சு அருணாசலம் எழுதிய படங்களே மிகச்சிறந்த உதாரணங்கள். மிக எளிமையான கதை, அக்கதையில் ஒருசில திருப்பங்கள், அலுப்பே தட்டாத காட்சிகள், பாடல்கள், எல்லாமே சிறப்பாக முடித்துவைக்கப்படும் க்ளைமாக்ஸ் என்று அவரது படங்கள் அத்தனை தரப்பு ஆடியன்ஸையும் நிறைவுபடுத்தின. மாஸ் ஆடியன்ஸுக்காக முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எல்லாம் இன்பமயம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள்; க்ளாஸ் ஆடியன்ஸுக்காக புவனா ஒரு கேள்விக்குறி, அன்னக்கிளி, நதியைத் தேடிவந்த கடல் போன்ற படங்கள்; மாஸ்+க்ளாஸ் கலந்து உயர்ந்த உள்ளம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் என்று பஞ்சு அருணாசலம் எழுதாத திரைக்கதைகளே இல்லை. பொதுவாக, திரைப்படங்களில் எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு சரக்கு விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தமிழில் உண்டு. உலகம் முழுக்க, மிகவும் வயதானர் இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். இருந்தாலும் தமிழில் அப்படி நடப்பதில்லை (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து). பஞ்சு அருணாசலம் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் வற்றாத கற்பனைத்திறனைக் கொண்டிருந்தவர். அவரிடம் யாரும் சென்று ஆலோசனை கேட்கமுடியும். குறீப்பாகக் கமல்ஹாஸனுக்கு அவர் அளித்துள்ள ஆலோசனைகள் அளப்பரியவை என்று திரைவட்டாரங்கள் சொல்லும். எப்படிப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு, அப்படத்தின் பிரச்னைகள், எப்படி எடிட் செய்யலாம், எப்படி அப்படத்தை சுவாரஸ்யமாக மாற்றலாம் என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் பலருக்கும் ஆலோசனைகள் வழங்குவதில் தேர்ந்தவர்.

    தமிழில் மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படங்களிலேயே, ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் திரைப்படங்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, வெளியிட்டு வந்திருக்கும் அஷ்டாவதானிகள் மிகக்குறைவு. அவர்களில் பஞ்சு அருணாசலம் தலையாய இடத்தை அவசியம் பெறுவார். ஒரு தலைமுறையின் ரசனையையே மாற்றியமைத்தவர்; மூன்று தலைமுறைகளின் சூப்பர்ஸ்டார்களையும் அவர்களின் படங்களையும் நிர்ணயித்தவர்; பலரையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்ற முறையில், பஞ்சு அருணாசலத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள் போதவே போதாது. இருபினும் அதையெல்லாம் அவர் பெரிதாக நினைக்கவும் இல்லை. எப்போதுமே எளிமையுடனேயே வாழ்ந்துவந்தவர் அவர். அதனாலேயே பெரும்பாலான ஆடியன்ஸுக்கு அவரது பெயர் பரிச்சயம் ஆகிய அளவு அவர் திரைப்படங்களுக்காகச் செய்தது பரிச்சயமாகவில்லை. அதை ஒரு பொருட்டாகவே அவரும் நினைக்கவும் இல்லை. அவர் கடன் பணி செய்து இருப்பதே என்றே இறுதிவரை வாழ்ந்து மறைந்தும் விட்டார்.

    பஞ்சு அருணாசலம் தனது திரைவாழ்வின் உச்சத்தில் இருந்தபோதுதான் நான் படங்கள் பார்க்கத் துவங்கினேன். அவர் திரைக்கதை எழுதியுள்ள படங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்தும் இருக்கிறேன். இன்றும் அவைகளைப் பலமுறை பார்க்கமுடியும். அப்படங்களில், ஒரு வணிகத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற பாடம் அவசியம் உள்ளது. அவற்றை முறைப்படி கவனித்தாலே இப்போதும் ஆடியன்ஸின் மனதில் நிற்கக்கூடிய பிரம்மாண்டமான மாஸ் ஹிட்களை உருவாக்க இயலும். அதுதான் பஞ்சு அருணாசலம் உருவாக்கிவைத்திருக்கும் பாணி. பி.ஏ ஆர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற அவரது நிறுவனத்தின் பெயர் சினிமா ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் அழியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். பஞ்சு அருணாசலம் உருவாக்கியிருக்கும் legacy அப்படிப்பட்டது.

    சரி. இதுவரை பஞ்சு அருணாசலம் பற்றிப் பார்த்தோம். தமிழ் சினிமாவின் அட்டகாசமான திரைக்கதை எழுத்தாளராக இருந்து மறைந்த இவர், திரைக்கதை எழுதுவது பற்றிச் சொன்னதெல்லாம் என்ன? இதோ சுருக்கமாக. இந்தப் பத்தி விகடனில் வெளிவந்தது.


    திரைக்கதை எழுதுவது எப்படி? பஞ்சு அருணாசலம் பாணி

    ”சினிமாவுக்கு என்று இல்லை… `இப்படித்தான் எழுத வேண்டும்’ என்று யாரும் அறிவுரை சொல்லி எல்லாம் எதுவும் எழுத முடியாது. அது சிறுகதை, நாவல், சினிமா, நாடகம்… என எதை எழுதுவதாக இருந்தாலும், கற்பனையில் ஒரு விஷயத்தை உருவாக்கும் திறன் வேண்டும். அது அனுபவம், வாசிப்பு, பார்த்த படங்கள், கேட்ட இசை… என ஒவ்வொருவரைப் பொறுத்தும் கொடுக்கப்படும் வாய்ப்புகள், சுதந்திரத்தைப் பொறுத்தும் அது மாறும்.

    ஓ.கே. சினிமாவில் கதை, ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் உண்டு. ஆனால் நாவல், குடும்ப நாவல், பெருங்கதை, குறுங்கதை, சிறுகதை… இவற்றுக்கு ஸ்க்ரீன்ப்ளே, ட்ரீட்மென்ட் எதுவும் கிடையாது. ‘கதை, ட்ரீட்மென்ட் எழுதுவதில் கல்கி கெட்டிக்காரர்’, ‘கதை, ஸ்க்ரீன்ப்ளே எழுதுவதில் புதுமைப்பித்தன் கெட்டிக்காரர்…’ என்று யாராவது சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி இருக்கும்போது சினிமாவில் மட்டும் இந்த ஸ்க்ரீன் ப்ளே, ட்ரீட்மென்ட் எப்படி வந்தது?

    ஸ்க்ரீன்ப்ளே… இதில் ‘ப்ளே’ என ஏன் சொல்கிறார்கள்? கிரிக்கெட் விளையாட்டு உலகம் முழுவதும் ஒன்றுதான். அதில் சிலர் டெண்டுல்கராகவும் சிலர் தோனியாகவும் சிலர் கோஹ்லியாகவும்… அந்த விளையாட்டை எத்தனைவிதமாக விளையாடுகிறார்கள். அதே கிரிக்கெட்தான். ஆனால், அதை ஒவ்வொருவரும் எத்தனைவிதமாக, எத்தனை வருடங்களாக விளையாடுகிறார்கள்? போரடிப்பதே இல்லை.

    அதுபோன்ற ப்ளேவை திரையிலும் பண்ணலாம். அதுதான் ஸ்க்ரீன்ப்ளே. ‘அடுத்த பந்தை அடிப்பானா, அது சிக்ஸரா, ஃபோரா, விக்கெட்டா..?’ இப்படி விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் ப்ளே போல. ‘நல்ல கதையைச் சொல்கிறேனே…’ என எந்தவித ப்ளேயும் இல்லாமல், கதையைச் சொல்லிக்கொண்டே இருந்தால், ‘அடப்போய்யா… நீயும் உன் கதையும்’ எனக் கொட்டாவி விட்டுவிட்டு எழுந்துபோய்விடுவார்கள். அதனால் நல்ல கதைகளைக்கூட சரியாக ப்ளே பண்ண வேண்டும்.

    அடுத்து ‘ட்ரீட்மென்ட்’. இந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் இடம் மருத்துவமனை. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பது டாக்டர்களின் வேலை. அப்படி இருக்கையில் சினிமாவில் எங்கிருந்து வந்தது அந்த ட்ரீட்மென்ட்? நம் உடலில் செயல்படாத உறுப்புகளைச் செயல்படவைப்பதுதானே ட்ரீட்மென்ட். அதேபோல்தான் எவ்வளவு மிகச் சிறந்த கதையாக இருந்தாலும், திரைக்கதை என்ற ஒன்றை நீங்கள் எழுதி முடிக்கும்போது, நம்மை அறியாமல், ஆங்காங்கே சில வீக் பாயின்ட்ஸ் வந்துவிடும். அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதை ‘ட்ரீட்’ பண்ண வேண்டும். அப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் புரியும்படியாகவும் செய்யக்கூடியதுதான் நல்ல ட்ரீட்மென்ட்.

    இன்று படம் இயக்கும் பல இயக்குநர்களிடம் நான் கதை கேட்டிருக்கிறேன். ‘இது என்ன கதை?’ என ஆரம்பம் முதல் கடைசி வரை கதையை முடிவுபண்ணாமல், அவர்கள் சிந்திக்கும்போதே சினிமாவாகவே, அதாவது ட்ரீட்மென்டாகவே சிந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது தவறு. முதலில் முழுக் கதையைத் தயார்செய்த பிறகே ப்ளே, ட்ரீட்மென்ட்டுக்குப் போக வேண்டும்.

    ஆனால் இவர்கள், கதையையே ரெடி பண்ணாமல், ‘ஓப்பன் பண்ணினா பெரிய கார் வந்து நிக்குது’ என்று ஷாட் பை ஷாட்டாகவே சிந்தித்து, ‘இந்த இடத்தில் பாட்டு, அந்த இடத்தில் காமெடி ட்ராக்’ எனக் காட்சிக் காட்சியாக எடுத்துக் கோத்து சினிமா ஆக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காட்சிகளைக் கோத்துப்பார்த்தால், அதில் கதை இருக்கிறதா, இல்லையா என்றுகூட பார்ப்பது இல்லை. அப்படியே அதில் கதை இருந்தாலும், அது நன்றாக இருப்பது இல்லை.

    ஆனால், நான் ஒரு படத்துக்கு முதலில் அடிப்படையான ஒரு கதையை ரெடி பண்ணுவேன். பிறகு அந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என முக்கியமான கேரக்டர்களில், யாரை நடிக்கவைக்கலாம் என நடிகர், நடிகைகளை ஃபிக்ஸ் பண்ணுவேன். அந்தக் கதையையும், அந்த நடிகர்- நடிகைகளையும் மனதில் வைத்து திரைக்கதை அமைப்பேன். அந்த ஃப்ளோ இழுவையாக இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பார்க்கும் வகையில் பரபரப்பாக இருக்கிறதா என, பிறகு ட்ரீட் பண்ணுவேன்.

    இப்படி நான் எழுதியதை எஸ்பி.முத்துராமன் சார் அழகாக எடுத்துத் தருவார். அவர் தேவைக்கு அதிகமாக எடுத்து, பிறகு வெட்டித் தூக்கி எறிந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. தனித்தனியாக இருந்த நாங்கள் இருவரும், அப்படி ஒரே மாதிரியான அலைவரிசையில் இயங்கி பல வெற்றிகளைத் தந்திருக்கிறோம். ஆனால் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என அனைத்தையும் ஒரே ஆளாக, கன்ட்ரோலில் வைத்துள்ள இன்றைய இயக்குநர்கள் எங்களைத் தாண்டியும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தரலாம். அது உங்கள் ப்ளே, ட்ரீட்மென்டைப் பொறுத்தது”

    பஞ்சு அருணாசலம், தனது திரைக்கதை எழுதும் கலையை நமக்குச் சொல்லித்தராமலேயே மறைந்துவிட்டார் என்பது துரதிருஷ்டவசமானது. ஒருவரும் அவரிடம் இருந்து இதைத் தெரிந்துகொண்டு உலகுக்கு அறிவிக்க முயலவில்லை என்பது எத்தனை கொடுமை? தனது திரைக்கதை எழுதும் முறையைப் பற்றிப் பஞ்சு அருணாசலம் சொன்னது மேலே இருக்கும் வரிகள் மட்டுமே. நாம் அவரை சரியாக உபயோகப்படுத்தாமலேயே விட்டுவிட்டோம் என்பதை நினைத்தால் நெஞ்சில் வலிக்கிறது.


    இனி, ஒருசில பஞ்சு அருணாசலம் பற்றிய வீடியோக்கள்.

     

     

     

     

     

    படங்கள் உதவி: விகடன் & ஞானம்

    இந்தக் கட்டுரைக்கு விகடனில் வெளிவந்துகொண்டிருக்கும் ‘திரைத்தொண்டர்’ தொடர் உதவியது. பெரும்பாலான பஞ்சு அருணாசலத்தின் படங்களை நானே பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றியும் நன்கு தெரியும். இருப்பினும், ஒரு சில முக்கியமான தகவல்கள்+அவரது திரைக்கதை எழுதும் முறை ஆகியவை விகடன் திரைத்தொண்டர் தொடரிலிருந்தே எடுத்திருக்கிறேன். விகடனுக்கு எனது நன்றிகள்.

    ]]>
    http://karundhel.com/panju-arunachalam-superstar-of-superstars/feed/ 3
    Kabali, James Bond & The Product Placement History http://karundhel.com/kabali-james-bond-product-placement-history/ http://karundhel.com/kabali-james-bond-product-placement-history/#comments Mon, 10 Oct 2016 04:48:43 +0000 http://karundhel.com/?p=5762 ஆகஸ்ட் மாத அந்திமழையில் எழுதப்பட்ட கட்டுரை இது.


    சென்ற வாரம் கபாலி வெளியானதில் இருந்தே இணையம் முழுதும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. இவைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று – கபாலியின் விமர்சனங்கள்; அல்லது கபாலி முன்வைக்கும் ‘அரசியல்’. ஆனால் கபாலி திரைப்படத்தின் மிக முக்கியமான ஒரு அம்சத்தை இவைகள் கவனிக்கவில்லை – அல்லது கபாலி திரைப்படம், இந்த விஷயத்தை மக்களின் கவனத்தில் இருந்து சாதுர்யமாக மறைத்துவிட்டது. இதுதான் உலகம் முழுக்கப் பல்வேறு திரைப்படங்களின் வசூலை நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு திரைப்படம் வெளிவரும் முன்பே கொழுத்த லாபம் சம்பாதிக்க இதுதான் பெருமளவில் உதவுகிறது. தமிழ்நாட்டில் இந்த விஷயத்தைக் கபாலி கில்லாடித்தனமாக உபயோகித்துக்கொண்டிருக்கிறது என்று அடித்துச் சொல்லமுடியும்.

    கார்ப்பரேட் பார்ட்னர்ஷிப்கள். ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்கள்.

    கபாலியில் ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய பெயர் இருக்கிறது. இந்தப் பெயரை வைத்துக்கொண்டே பொதுவாக யாரானாலும் படத்தை நல்ல லாபத்துக்கு விநியோகஸ்தர்களுக்கு விற்க முடியும். இருந்தாலும், அதை மட்டும் கபாலி செய்யவில்லை. அதற்கும் மேலாக, மார்க்கெட்டிங்கின் உச்சம் என்றே கபாலியின் ப்ரமோஷன்களைச் சொல்லமுடியும். எங்கு திரும்பினாலும் கபாலிதான் அனைவரின் கண்களிலும் பட்டுக்கொண்டிருந்தது. எதைப் பேச ஆரம்பித்தாலும் கபாலியில்தான் அந்தப் பேச்சு முடிந்தது. பத்திரிகைகள், இணையம் ஆகியவை வழியாகக் கபாலி காய்ச்சல் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. இவற்றுக்கு நடுவில்தான் கார்ப்பரேட் பார்ட்னர்ஷிப்கள் உள்ளே நுழைந்தன. பல நிறுவனங்கள், கபாலியை முன்னிட்டுத் தங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தின.

    கபாலி திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு, அதில் சம்மந்தமே இல்லாமல் வரும் சில ப்ராண்ட்கள் நினைவு வரலாம். மெர்ஸிடிஸ், ஏர் ஆஷியா விமான நிறுவனம், லெ மெரிடியன் ஹோட்டல் முதலிய ப்ராண்ட்கள் மிக வெளிப்படையாகப் படத்தில் காட்டப்பட்டன. இதற்குப் பின்னால் இருக்கும் காரணம், யூகிப்பதற்கு மிகவும் சுலபமானது. ஆனால், படத்தைப் பற்றிய விவாதங்களே பெருமளவில் இங்கே ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை கண்டிப்பாக முக்கியம்தான். அதேசமயம், இந்தவிதமான ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்களும் அவசியம் விவாதிக்கப்படவேண்டியவையே.

    ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்வது என்றால், ஒரு காலத்தில் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களும், சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்படும் பேனர்களும் போஸ்டர்களும் மட்டுமே நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது ஒரு திரைப்படம் மார்க்கெட் செய்யப்படவேண்டும் என்றால், கனவில்கூட நினைத்துப் பார்க்கமுடியாத பல வழிகள் உள்ளன. திரைப்படங்களை மார்க்கெட் செய்வது ஒரு புறம் என்றால், பலகோடி ரூபாய்கள் கொட்டி எடுக்கப்படும் பிரம்மாண்டமான திரைப்படங்களை விநியோகம் செய்வதற்கு முன்னரே – திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னரே கூட போட்ட பட்ஜெட்டுக்கு மேலேயே எடுக்கப்படும் பலவிதமான வழிமுறைகள் உலகம் முழுக்க – குறிப்பாக ஹாலிவுட்டில் நடைமுறையில் உள்ளன. திரைப்படத்தில் மறைமுகமாகப் பல பொருட்களுக்கு விளம்பரம் கொடுப்பது அவற்றில் தலையாய, உத்தரவாதமான வழிமுறை. இதுதான் ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்.

    ஜேம்ஸ் பாண்ட் படங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தோமேயானால், பாண்ட் அணிவது ஏதேனும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஸூட்டாகத்தான் இருக்கும். உதாரணத்துக்கு, சமீபத்தில் வெளியான Spectre படத்தில், பாண்டாக நடித்த டானியல் க்ரெய்க், டாம் ஃபோர்ட் நிறுவனத்தின் டக்ஸீடோ ஜாக்கெட் அணிந்திருப்பார். படத்தின் போஸ்டர்களிலேயே, கையில் துப்பாக்கியுடன் வெண்ணிற ஸூட் ஒன்றை பாண்ட் அணிந்திருந்ததை நாம் பார்த்திருக்கக்கூடும். அதுதான் இந்த டாம் ஃபோர்ட் டக்ஸீடோ ஜாக்கெட்.

    இந்த ஜாக்கெட்டைத் தவிரவும், டாம் ஃபோர்ட் நிறுவனத்தின் பல்வேறு உடைகளை இப்படம் முழுக்க பாண்ட் அணிந்திருப்பார். இதன்மூலம் டாம் ஃபோர்ட் நிறுவனம் வழக்கமான விளம்பரங்களில் இந்த உடைகளைக் காட்டுவதைவிடவும் அதிகமான வியாபாரத்தைப் பெற்றுவிடும். ஏனெனில் டாம் ஃபோர்டின் விளம்பரங்கள் செல்லமுடியாத இடங்களில் கூட பாண்ட் எளிதில் நுழைந்துவிடுவார். உலகம் முழுக்கத் தியேட்டர்களில் வெளியான டாம் ஃபோர்டின் நீளமான விளம்பரம் என்றுகூட Spectre படத்தை நாம் கிண்டலடிக்கமுடியும்.

    startup-2012

    பாண்ட் உபயோகிக்கும் கடிகாரம், ஷூ, கார், கண்ணாடிகள், கோட்டில் மாட்டிக்கொள்ளும் cuff links, சிகரெட் லைட்டர், கார் சாவி இருக்கும் கீச்செய்ன், அவர் உபயோகிக்கும் பைகள், சூட்கேஸ், க்ரெடிட் கார்ட், ரேஸர், ஷாம்பூ, ஷேவ் செய்துகொள்ளும்போது உபயோகிக்கும் bowl, மோதிரம், மது அருந்தும் கோப்பை, அவர் உட்காரும் லெதர் சோஃபா, கையுறைகள் – ஏன் – அவர் உபயோகிக்கும் பென்சில் உட்பட் எல்லாமே உலகின் மிகப்பிரபல ப்ராண்டுகளின் பொருட்கள். திரைக்கதை முடிவானதுமே இந்தப் ப்ராண்டுகளை மிகச்சாமர்த்தியமாக எங்கேயெல்லாம் நுழைக்கலாம் என்பதும் முடிவாகிவிடும். அதைத்தொடர்ந்து, துருத்திக்கொண்டு இடைச்சொருகல்களாகத் தெரியாமல், இயல்பாக இந்தப் ப்ராண்டுகள் படத்தில் இடம்பெறும்.

    இதன்மூலம், படத்தின் பட்ஜெட்டுக்கு மிஞ்சிய வருமானத்தைப் படப்பிடிப்பின்போதே ஸ்டூடியோ அடைந்துவிடும். அதன்பின்னர்தான் வெளிப்படையான மார்க்கெட்டிங், விளம்பரங்கள், டிவி உரிமை முதலியவைகளில் கிடைக்கும் பணம்.

    இந்த வழிமுறைதான் ஹாலிவுட்டின் அனைத்துப் படங்களிலும் பின்பற்றப்படுகிறது. பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்கள், சீரீஸ்கள் என்றெல்லாம் இருந்தால் அவசியம் பிரபல ப்ராண்ட்களின் விளம்பரங்கள் அதில் இருக்கும். இனி கவனித்துப் பாருங்கள்.

    இந்தியாவைப் பொறுத்தவரை, ஹிந்தியில்தான் முதலில் இப்படிப்பட்ட ப்ராண்ட் விளம்பரங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டன. முதன்முதலில் இப்பட்டிப்பட்ட ப்ரமோஷன், 1967ம் வருடத்தில், ‘An Evening in Paris’ படத்தில் Coca Colaவுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்று அறிகிறோம் (முதல் முதலில் கவனிக்கப்பட்ட விளம்பரமாகவும் இது இருக்கலாம்). ஷர்மிளா டாகூர், ஒரு 200 மிலி கோக் பாட்டிலில், கேமராவில் அதன் பெயர் தெரியவேண்டும் என்று வேண்டுமென்றே அதை செயற்கையாகப் பிடித்தபடி உறிஞ்சுவதைக் காணமுடியும். இதேபோல் ராஜ் கபூரின் ‘பாபி’ படத்தில் ராஜ்தூத் மோட்டார்சைக்கிள் உபயோகப்படுத்தப்பட்டது. இதுபோல் பல உதாரணங்கள் ஹிந்திப்படங்களில் இருந்து கொடுக்கமுடியும். ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘க்ரிஷ்’ திரைப்படத்தில், ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் ஒவ்வொரு ப்ராடக்டின் விளம்பரம் இடம்பெறவேண்டும் என்பது ஒரு உறுதியான முடிவாகவே இருந்தது. அந்தப் படத்தில் மொத்தம் 40 ப்ராடக்ட்கள் காட்டப்பட்டன. இதன்மூலம் படம் வெளியாகுமுன்பே எக்கச்சக்க லாபம் கிடைத்தது. இதுவேதான் சுபாஷ் கை இயக்கி, க்ரிஷ்ஷுக்கு முன்னரே வெளியான ‘யாதே(ய்)ன்’ திரைப்படத்திலும் நடந்தது. அந்தப் படம் வசூல்ரீதியாகத் தோல்வியே அடைந்தாலும், போட்ட பணத்துக்கும் மேலாக இந்த ப்ராண்ட் விளம்பரங்களிலேயே தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்தது. DDLJ படத்தில் ஒரு குறிப்பிட்ட பியரின் பெயரை ஷா ரூக் கான் சொல்வார் (Stroh’s Beer). ’கஹோ நா ப்யார் ஹை’ படத்தில் மாக்டொனால்ட்ஸில் சாப்பிடப் போகவில்லையா? என்று ஹ்ரிதிக் திரையைப் பார்த்தே கேட்பார். தமிழில் வந்த ‘வரவு நல்ல உறவு’ படத்தின் ரீமேக்கான ‘பாக்பான்’ படத்தில் அமிதாப், ஃபோர்ட் ஐகான், டாடா டீ, ICICI முதலிய ப்ராடக்ட்களுக்கு விளம்பரம் கொடுப்பார்.

    இவ்வளவு ஏன்? ஹிந்தியில் வெளியான ’தபாங்க்’ (தமிழில் சிம்புவின் ‘ஒஸ்தி’) படத்தில், ஜண்டு பாமின் பெயர் ஒரு பாடலிலேயே வெளிப்படையாக வந்தது (முன்னி பத்னாம் ஹுயி). இதற்கெல்லாம் சிகரமாக, ஹிந்தியில், படங்களின் பெயர்களிலேயே ப்ராடக்ட்கள் இடம்பெற ஆரம்பித்தாயிற்று. ‘Ferrari Ki Sawaari’, Mere Dad Ki Maruti’ ஆகியவை உதாரணங்கள்.

    இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு வரையிலும் இந்த ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் துறையே அரசால் அங்கீகரிக்கப்படாமல்தான் இருந்துவந்தது என்று அறிகிறோம். இதன்பின் தான் அரசு விழித்துக்கொண்டு இந்தத் துறையை முழுவதுமாக அங்கீகரித்தது.

    இனி, தமிழ்ப் படங்களுக்கு வந்தால், தமிழில் இந்த ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் அத்தனை சுறுசுறுப்பாக இல்லை என்பது நமக்கே தெரியும். In film branding என்று அழைக்கப்படும் இந்தவிதமான ப்ராண்டிங்கில் தமிழ்சினிமா இன்னும் மிக மிக ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இருப்பினும், தமிழ்ப்படங்களிலும் ஆங்காங்கே இப்படிப்பட்ட ப்ராடக்ட்கள் எப்போதாவது வரும். உதாரணமாக, ’இன்று போய் நாளை வா’ படத்தில், ஹிந்தி வாத்தியார் தன் வீட்டுக்கு வரக்கூடாது என்று ராஜேந்திரன் என்ற கதாபாத்திரம் ஒரு நாயை அவிழ்த்துவிட்டுவிடும். ஆனால் நாய் ஹிந்தி வாத்தியாரைக் கடிக்காது. உடனடியாகத் திரையைப் பார்த்து நின்றுகொண்டு, ‘நாய்க்கும் எனக்கும் ஒரு பிணைப்பு உண்டு.. அதனால்தான் எங்கு சென்றாலும் க்ராக் ஜாக்கோடு செல்கிறேன்’ என்று ஹிந்தி வாத்தியார் பேசுவார். தமிழ்த்திரைப்படங்களில் மிகவும் புத்திசாலித்தனமான ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்டுக்கு, பாக்யராஜ் எழுதிய இன்று போய் நாளை வாவின் இந்தக் காட்சி உதாரணம்.

    கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ படத்தில், பீட்சாக்கடை வரும்போதெல்லாம் உள்ளே இருக்கும் கோக், லேஸ், ரெட்புல் முதலியவை காண்பிக்கப்படும். வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமான ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்டுக்கு இது ஒரு உதாரணம்.

    பல தமிழ்ப்படங்களில் வெளியாகும் செய்தி சேனல்களின் க்ளிப்பிங்குகள் ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட்டுக்கு மற்றொரு உதாரணம். அந்தந்த சேனல்களுக்கு இப்படி ஒரு விளம்பரம் திரைப்படங்களின் மூலமாகக் கொடுக்கப்படுகிறது (கபாலியிலேயே இப்படி மலேஷிய செய்தி சானல் ஒன்று வரும்). ‘ஹே ராம்’ திரைப்படத்தில், பழையகாலக் காட்சிகள் வரும்போது அதில் கமல்ஹாஸனின் சாகேதராமன் கதாபாத்திரத்தின் கையில் பழங்கால ஆனந்த விகடன் இருக்கும். அந்தக் காட்சியின் பழமைத்தன்மைக்கு உதவிய ஒரு ப்ராப்பர்ட்டியாகவே அங்கு விகடன் பயன்பட்டிருந்தாலும், ஒருவகையில் விகடனுக்கு இது மறைமுகமான ஒரு விளம்பரமே.
    ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ‘ராஜா கைய வெச்சா’ பாடலில் வரும் கார் தயாரிப்புத் தொழிற்சாலை ஒரு உதாரணம். ’3’ திரைப்படத்தில், ‘வொய் திஸ் கொலவெறி’ பாடலில் இடம்பெறும் பலவிதமான பொருட்களைக் கவனித்துப் பாருங்கள். அவசியம் இது ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் தான் என்பதில் சந்தேகமில்லை.

    இப்படிப்பட்ட சமயத்தில்தான் ‘கபாலி’ படம் வெளியாகிறது. படத்துக்காகப் பலவிதங்களில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. ஷங்கர் படங்களில் வருவதுபோல, ஏர் ஏஷியா விமானத்தின் மேலேயே ரஜினியின் பிரம்மாண்டமான முகத்துடன் கபாலியின் விளம்பரம் இடம்பெற்றது. இது ஏன் என்ற கேள்விக்கு விடை படத்தில் ஏர் ஏஷியா விமானம் இடம்பெற்ற காட்சியில் புரிந்தது. எந்தெந்த வகையில் மார்க்கெட்டிங் செய்யமுடியுமோ அத்தனை வகைகளிலும் கபாலிக்கு மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. முத்தூட் ஃபின்கார்ப், PVR, இமாமி, ஃபேர் அண்ட் லவ்லி, Shop Cj, கேட்பரி, ஆமஸான், ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் ஆரம்பித்து, இன்னும் ஏராளமான நிறுவனங்கள் கபாலியுடன் கைகோர்த்தன. Freshdesk என்ற சென்னை நிறுவனம், வேலைசெய்யும் அத்தனை பேருக்கும் கபாலியைப் போட்டுக்காட்டியது. இப்படியாக, படத்தை விற்கும் முன்னரே கில்லாடித்தனமான ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் + கார்ப்பரேட் பார்ட்னர்ஷிப்களால் கபாலி ஏராளமாக சம்பாதித்தது.

    திரைப்படம் ஒன்று வெளிவருவதற்கு முன்னரே அதனை எப்படி எல்லாப் பக்கங்களிலும் கொண்டு சேர்ப்பது என்ற Content marketing என்ற துறைதான் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. ஹலிவுட்டில், இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பட்ஜெட் என்பது அதன் தயாரிப்புச் செலவை விடவும் பல மடங்குகள் அதிகம் (இன்றைய தேதியில், பெரிய ஸ்டுடியோ ஒன்றின் படம் வெளியானால், மார்க்கெட்டிங் செலவே 200 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது). எனவே இப்படிப்பட்ட ஏராளமான பணத்தைத் திரும்ப எடுக்க, ப்ராடக்ட் விளம்பரங்களே மிக முக்கியமான வழி.

    எனவே, கபாலி துவங்கியிருக்கும் முழுவீச்சான ப்ராடக்ட் விளம்பரங்கள் உலகெங்கும் பின்பற்றப்படுபவைதான். தமிழுக்குதான் இது மிகவும் தாமதமாக வந்திருக்கிறது. திரைப்படம் என்பது ஒரு ப்ராடக்ட் என்ற முறையில், அந்தப் ப்ராடக்டை விற்று லாபம் சம்பாதிக்க உதவும் ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் ஒரு புத்திசாலித்தனமான விஷயம்தான். கபாலியின் வெற்றியால் இனி இத்தகைய In-film branding தமிழில் அதிகரிக்கக்கூடும். புத்திசாலித்தனமான விளம்பரங்கள் அவசியம் மக்களால் ரசிக்கப்படும். அதேசமயம், வெறுமனே நுழைக்கப்படும் இத்தகைய விளம்பரங்கள் அவசியம் திரைப்படங்களின் சுவாரஸ்யத்தை பாதிக்கவே செய்யும் என்பதிலும் சந்தேகமில்லை.

    நன்றி

    1. Product Placement in Movies: The Bollywood Experience – a paper by Bimaldeep Kaur
    2. தமிழில் ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் பற்றிக் கலந்துரையாடிய ’வாசகசாலை’ அமைப்பின் நண்பர்கள்
    3. இன்று போய் நாளை வா உதாரணத்தை நினைவுபடுத்திய நண்பர் ராஜா ராஜேந்திரன்

    4. James Bond Product Placement image courtesy – http://tribunegraphics.tumblr.com/post/35569533926/111112

    ]]>
    http://karundhel.com/kabali-james-bond-product-placement-history/feed/ 3
    Joker (2016) – Tamil http://karundhel.com/joker-2016-tamil/ http://karundhel.com/joker-2016-tamil/#comments Thu, 18 Aug 2016 17:06:45 +0000 http://karundhel.com/?p=5754 ஒரு கமர்ஷியல் படத்தில் சமகாலத்தில் நடக்கும் பிரச்னைகளை வசனங்களின் மூலமோ காட்சிகளின் மூலமோ முழுக்க முழுக்க உணர்த்துவது தமிழில் மிகவும் அரிது. உதாரணமாக, ’கத்தி’ படத்தில் அலைக்கற்றை ஊழல் சம்மந்தமாக ஒரே ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதையே நம் ரசிகர்கள் ஓஹோ என்று குறிப்பிட்டு மகிழ்ந்தனர். ஏனெனில் அது சமூக விழிப்புணர்ச்சியை வலியுறுத்தியதாம். இதுபோல இன்னும் சில படங்களில் மிக மிக லேசாக சமகாலப் பிரச்னைகளைக் கோடிட்டுக் காட்டும் வசனங்கள் உண்டு. அவை வரும்போதெல்லாம் ஆடியன்ஸின் ரியாக்‌ஷன் ஏதோ சத்ய யுகமே திரும்பிவந்துவிட்டதுபோல இருக்கும். இதற்கு, அந்த வசனத்தைப் பேசும் நடிகர் யார் என்பதும் மிகவும் முக்கியமாக ஆடியன்ஸால் கவனிக்கப்படுகிறது. ரஜினிகாந்த் வந்து ‘நான் கோட் சூட் போடுவேண்டா’ என்று டிக்ளேர் செய்யும் வசனமும் இப்படிக் கொண்டாடப்பட்டதுதான்.

    ஆனால், ஒரு கள்ளக்கடத்தல் செய்யும் கேங்ஸ்டர், இப்படி ஒரு வசனத்தை உச்சரிப்பதன் காரணம் என்ன என்று நம்மில் பலரும் யோசிக்கவில்லை. ஏனெனில், அவனும் சரி, அவனுக்கு எதிரிகளாக இருப்பவர்களும் சரி – முக்கியமான தொழிலாகக் கள்ளக்கடத்தலையே செய்பவர்கள். அப்படியென்றால் அவர்கள் கெட்டவர்கள். சமூகத்துக்குத் தவறான முன்னுதாரணங்கள். அப்படிப்பட்டவர்கள் என்ன உடை போட்டால்தான் என்ன? அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், அவர்களின் உடையால் அவர்கள் சாதி முன்னுக்கு வந்துவிடுமா? ஒரு கேங்க்ஸ்டர் அப்படி முன்னுக்கு வரவேண்டும் என்றால் அந்த முன்னேற்றமே தேவையில்லையே? சமூகத்தை முன்னேற்றவேண்டும் என்றால், செய்துகொண்டிருக்கும் கள்ளக்கடத்தலை நிறுத்திவிட்டு,  அம்பேத்கர் செய்ததுபோலச் சமூக மக்களுக்காக ரோட்டில் வந்து போராடு. படி. முன்னேறு. அதைவிட்டுவிட்டு, அம்பேத்கர் கோட் சூட் போட்டார் என்பதால் கள்ளக்கடத்தல் தாதாவான நீயும் கோட் சூட் போட்டுக்கொண்டு, அப்படியே உன் தொழிலையே செய்துகொண்டிருக்கும் ஆட்களிடம் ‘போடுவேண்டா’ என்று கர்ஜிப்பதால் என்ன நன்மை?

    ஆனால் இந்த வசனத்தைப் பேசுபவர் ரஜினிகாந்த் என்பதால் நாம் இதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கிறோம். இந்த வசனத்தின் பின்னால் இருக்கும் மாபெரும் அரசியல் அபத்தம் நமக்கு விளங்குவதில்லை.

    சரி. இதையெல்லாம் ஏன் ஜோக்கர் பட விமர்சனத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், கத்தி, கபாலி போன்ற படங்களில் எப்படி சமூகப் பிரச்னைகள் மிக மிக லேசாகப் பேசப்பட்டனவோ – அந்தப் படங்களின் வசூலுக்காக மட்டுமே எப்படி சமூகப் பிரச்னைகள் வேண்டுமென்றே ஊறுகாயாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டனவோ,  அதற்கு நேர் எதிராக, சமகாலத்தில் நம்மைச் சுற்றியே நடந்துகொண்டிருக்கும் அத்தனை பிரச்னைகளும் செருப்பால் அடித்ததுபோல் உறுதியாகப் பேசப்பட்டிருக்கும் படம்தான் ஜோக்கர். ஆனால் ஜோக்கர் படத்தை நாம் வரவேற்கப்போவதில்லை. ஏனெனில் இப்படத்தில் ரஜினியோ விஜய்யோ நடிக்கவில்லை. முருகதாஸோ ரஞ்சித்தோ இயக்கவில்லை. ஹீரோயினாகக் காஜல் அகர்வாலோ ராதிகா ஆப்தேவோ நடிக்கவில்லை. மெகா பட்ஜெட் படமும் இது இல்லை. வந்ததே தெரியாமல், அப்படியே மறைந்துபோகக்கூடிய படமாகத்தான் இது இருக்கப்போகிறது (இதற்கு இன்னொரு வலுவான, கதை சார்ந்த காரணமும் உண்டு. அது அடுத்த பத்தியில்).

    அதேசமயம், ஜோக்கர் ஒரு க்ளாசிக்கும் இல்லை. ஜோக்கரில் ஒரு திரைப்படமாக சில பிரச்னைகள் இருக்கின்றன. எந்தப் படமாக இருந்தாலும், திரைமொழி என்பது அதில் அவசியம். என்னதான் சமூகப் பிரச்னைகள் என்றாலும், ஒரு திரைப்படமாக, ஆடியன்ஸை அந்தப் படம் சுவாரஸ்யப்படுத்தவேண்டும். கதையில் இடம்பெறும் சம்பவங்கள் ஆடியன்ஸின் மனதைத் தொடவேண்டும். உதாரணமாக Fandry படத்தைச் சொல்லலாம். Court படமும் இப்படிப்பட்டதே. ’விசாரணை நம் மனதைத் தொட்டதா இல்லையா? Thithi படத்தைப் பார்த்தீர்கள் என்றால், அதில் சொல்லப்படும் பிரச்னைகளைத் தாண்டி, படத்தின் கதாபாத்திரங்கள் நம் மனதைத் தொடுவதை உணரமுடியும். ஏன்? ’வீடு’ படத்தை இப்போது பார்த்தால்கூட அதில் வரும் உணர்ச்சிகள் நம்மால் மறக்கமுடியாதவையாக இல்லையா? ’தண்ணீர் தண்ணீர்’ இன்னொரு அருமையான உதாரணம். ஜோக்கரில் வரும் கழிப்பறைப் பிரச்னை போலவே அதில் தண்ணீர்ப் பிரச்னை. ஆனால் தண்ணீர் தண்ணீரை இப்போது ஒரு முறை பாருங்களேன் – அதில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சுரீர் என்று நம் மனதில் உறைக்கும். நம்மால் அக்கதையை உணர்வுபூர்வமாகப் பார்க்கவும் முடியும்.

    ஜோக்கரில் இந்த அம்சம் குறைவு. ஒரு டாக்குமெண்ட்ரியைப் பார்ப்பதுபோலத்தான் பல சம்பவங்களும் வந்துசெல்கின்றன. ராஜு முருகனின் மனதில் எதையெல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அவை அத்தனையையும் ஜோக்கரின் திரைக்கதையில் கொட்டியிருக்கிறார். எனவே, ஒன்றுக்கொன்று கோர்வையான தொடர்பில்லாத சம்பவங்களின் தொகுப்பாகவே ஜோக்கர் முடிந்துபோய்விடுகிறது.  ஜோக்கரில் வரும் ஃப்ளாஷ்பேக் மட்டுமேதான் ஓரளவு வலுவான கதையோடு, உணர்வுபூர்வமான சம்பவங்களோடு விளங்குகிறது. இந்த ஃப்ளாஷ்பேக்குக்கு முன்னாலும் பின்னாலும் வரும் காட்சிகள், வித்தியாசமாக இருந்தாலும் படம் பார்க்கையில் நம் மனதோடு ஒட்ட மறுக்கின்றன. அதேபோல் படத்தின் லாஜிக்கிலும் ஒருசில கேள்விகள் உள்ளன. உதாரணமாக, மன்னர்மன்னனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்னை உள்ளது. இருந்தும் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அந்தப் பிரச்னையால் அவன் மனதில் நிகழும் போராட்டம் வரவே இல்லையே? ஓரிரு வசனங்கள் மூலம் (ரிபோர்ட்டர்கள் கேட்கும் வசனம் & மன்னர்மன்னனே சிறையில் அவனது வாழ்க்கையைப் பற்றிக் கூறும் வசனம் etc..) இந்தப் பிரச்னை சொல்லப்பட்டாலும், அது போதவில்லை. ஏனெனில் படத்தின் துவக்கத்தில் இருந்தே மன்னர்மன்னன் ஒரு ஜோக்கர் போலவே செயல்படுகிறான். அவன் மூலம் அவனைச் சுற்றியிருக்கும் சமுதாயப் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அக்காட்சிகளில் எல்லாம் அவன் எங்குமே வீட்டில் இருக்கும் அவனது வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்னையைப் பற்றிய ஒரு சிறு சுணக்கம் கூடக் காட்டவில்லை. யாராக இருந்தாலும் இந்தப் பாரம் மிகவும் பெரிதுதானே? என்னதான் மன்னர்மன்னனின் மனநிலையில் பிரச்னை என்றாலும் கூட, ஆரம்பத்தில் ஒரே ஒரு வசனம் மூலம் அவனுக்கு இருக்கும் பிரச்னை பற்றிச் சொல்லப்படுவது அவசியம் போதவில்லை. எனவே மன்னர்மன்னனின் ஃப்ளாஷ்பேக்கில் உயிரோட்டமாக வரும் அவனது கதாபாத்திரத்தை நாம் ரசிப்பது, அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் காட்சிகளில் இல்லை.

    போலவே, படத்தின் பின்பாதியில் மன்னர்மன்னன் தில்லிக்குச் செல்வதெல்லாம் நமக்கு சம்மந்தமில்லாமல், ஏதோ திரையில் எதுவோ ஓடும் உணர்வையே கொடுக்கிறது. நான் சொன்ன திரைமொழிதான் காரணம். அதில் பேசப்படும் பிரச்னை உலக அளவில் மிக முக்கியமானது. ஆனால் அதன் தாக்கம் படத்தில் மிக மிக லேசானதாக இருக்கிறது. எனவே படத்தின் அந்தந்தக் காட்சிகளை மனதில் இருத்த முடியவில்லை.

    இருந்தாலும், தமிழில், இத்தனை பிரச்னைகளை மிகவும் வெளிப்படையாகப் பேசிய படம் இதுவரை வரவே இல்லை என்பதே நிஜம். படத்தின் வசனங்களிலும் சரி – காட்சிகளிலும் சரி, யாரையும் விட்டுவைக்கவில்லை ராஜு முருகன். திமுக, அதிமுக, சாதிக்கட்சிகள், மதங்கள், அரசு அலுவலகங்களில் நிரம்பிவழியும் மெத்தனம், ஊழல், அரசியல்வாதிகளும் பெருமுதலாளிகளும் நீதியை விலைக்கு வாங்குதல், சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத இந்த முதலாளிகளின் போக்கு, சமுதாயத்துக்காகப் போராடுபவர்களை மக்களே புரிந்துகொள்ளாமல் ஏளனம் செய்வது, சாராயத்தையும் பிரியாணியையும் போட்டே ஓட்டுகளை வளைக்கும் அரசியல் கட்சிகள், சமுதாயப் பிரச்னைகளைக் கொஞ்சம் கூட கவனிக்காமல் சினிமாவையே மையமாக வைத்து இயங்கும் ஊடகங்கள் (டைம்பாஸ் பத்திரிக்கையின் பெயர் ஒரு வசனத்தில் வருகிறது. ஆச்சரியம்! இதெல்லாம் பிறரால் செய்யமுடியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. இதுவரை நாம் பார்த்த இயக்குநர்கள், தமிழில் வெளிப்படையாகப் பேசத் தயங்கி, பயந்துகொண்டு மேலோட்டமான வசனங்களை வைத்தே படம் எடுத்தவர்கள்தான். எனவே ராஜு முருகன் அவசியம் பாராட்டப்பட வேண்டியவரே. அதிமுகவை நக்கல் அடிக்கும் அதே நேரத்தில், திமுகவையும் ராஜு முருகன் விட்டுவைக்கவில்லை. படம் மட்டும் இன்னும் இரண்டு மாதம் கழித்து வந்திருந்தால், தற்போது சட்டசபையில் நிகழும் கோமாளித்தனமான நிகழ்வுகளையும் விட்டு வைக்காமல் கிழித்திருப்பார் என்றே தோன்றியது) என்றெல்லாம் உண்மையில் நடுநிலையாக நாம் நின்றுகொண்டு கவனித்தால் என்னென்ன தெரியுமோ அவைகளையெல்லாம் படத்தில் வைத்திருக்கிறார். அவற்றையும் வெளிப்படையாக, எந்தவிதப் பூசிமெழுகுதலும் இல்லாமல் பளீரென்று அடித்திருக்கிறார். இது தமிழில் ஒரு நல்ல ஆரம்பம். அவசியம் இன்னும்கூடப் பிற இயக்குநர்கள் இனி இதைச் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒரு சார்பு நிலை தேவை. அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் இறங்கி வெளுத்திருக்கிறார் ராஜு முருகன். இப்படிப்பட்ட வசனங்கள்/காட்சிகளுக்காக மனமார்ந்த பாராட்டுகள்.

    மன்னர்மன்னன் கதாபாத்திரமாக வந்து அலட்டுவதிலும், ஃப்ளாஷ்பேக்கில் அப்பாவித்தனமாக வந்து கதலிப்பதிலும் குரு சோமசுந்தரம் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழியில் காணப்படும் வித்தியாசம் குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்புக்கு இணையாக, படம் முழுதும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் அருமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதிலும் சந்தேகமே இல்லை. மன்னர்மன்னனுக்காக ஒரு பாடல் இருக்கிறது. ’எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட’ என்ற பாடல் அது. கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாரதியார் பாடலின் மெட்டில் அமைக்கப்பட்டுள்ள பாடல். மன்னர்மன்னனின் கதாபாத்திரத்துக்கான தேவையைக் கச்சிதமாக விளக்கும் பாடல். இதே போலத்தான் ‘ஓல ஓலக் குடிசையில’ பாடலும் அருமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளாஷ்பேக்கில் வரும் இன்னொரு பாடலான ‘ஜாஸ்மின்னு’ பாடலின் பின்னணி பிரமாதம். இருப்பினும், படத்தின் மிகச்சிறந்த பாடல், ‘செல்லம்மா’தான். அப்பாடலின் பின்னணி அப்படி. படம் பார்த்துவிட்டு வந்தபின்னரும் மனதிலேயே சுற்றிக்கொண்டிருந்தது அப்பாடல். ஷான் ரோல்டனிடம் இருக்கும் குரல், ஒரு பொக்கிஷம் போன்றது. அதை மிகச்சரியாக இப்பாடலில் உபயோகித்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாடலை மறக்கவே முடியாது.

    பவா செல்லதுரை, மு.ராமசாமி ஆகியோர்கள் அருமையாக நடித்துள்ளனர். மு.ராமசாமி படம் முழுக்க வருகிறார். படமே அவரது வசனத்துடன்தான் முடிகிறது. ஒரு களப்போராளியாக அவரது உடல்மொழி, வசனங்கள், நடிப்பு ஆகிய அனைத்துமே அருமை.

    இருந்தாலும், நான் முதலிலேயே சொன்னபடி, ஒரு திரைப்படமாக ஜோக்கர் என்னைக் கவரவில்லை. காரணம் அதன் கோர்வையாக இல்லாத காட்சிகள். . இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே இயல்பானவை. அவைகளை வைத்துக்கொண்டு உலகநாடுகளிலெல்லாம் வலம்வரும் படம் ஒன்றை அவசியம் எடுத்திருக்கமுடியும். அதைத்தான் இப்படத்தில் ராஜு முருகன் செய்யாமல் விட்டுவிட்டார். நான் இந்தப் படத்தைப் பாராட்டுவதற்கான நோக்கம், படத்தில் கையாளப்பட்டுள்ள சமூகப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிய நேர்மைக்காக மட்டுமே. ஜோக்கரை அனைவரும் சென்று காணவேண்டும் என்பது என் ஆசை. காரணம், நம்மால் உணரமுடியாத பிரச்னைகளை ஒரு படமாக ஜோக்கர் நமது முகத்திலேயே செருப்பால் அடிக்கிறது. இப்பிரச்னைகளை உள்ளபடி புரிந்துகொண்டால் நம்மால் அவசியம் இனி நமக்காகப் போராடமுடியும். இப்படி ஒரு படத்தில் வெளிப்படையாக எக்கச்சக்கமான பிரச்னைகளைப் பற்றிப் பேசியதன்மூலம், இனி அப்பிரச்னைகளோடு அழுத்தமான தொடர்புடைய கதைகள் எழுதப்படுவதற்கான துவக்கமாக ஜோக்கர் அமையலாம்.

    குக்கூவை விட ஜோக்கர் அழுத்தமானதுதான். ஆனால் வலுவான கதை இல்லாததால், வெறும் சம்பவங்களின் தோரணமாகவே முடிந்துபோய்விடுகிறது. எனவே முக்கியமான காட்சிகளில் நம்மால் கதாபாத்திரங்களுடன் ஒன்றமுடியவில்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். இதுமட்டும் சரிசெய்யப்பட்டிருந்தால் ஜோக்கர் கட்டாயம் இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படமாக மாறியிருக்கும்.

    ]]>
    http://karundhel.com/joker-2016-tamil/feed/ 6
    அவன் பெயர் லீ . . . . http://karundhel.com/bruce-lee-a-detailed-history/ http://karundhel.com/bruce-lee-a-detailed-history/#comments Sat, 06 Aug 2016 13:00:46 +0000 http://karundhel.com/?p=5741 ஜூலை மாத அந்திமழையில் ப்ரூஸ் லீ பற்றி விபரமாக எழுதிய கட்டுரை இது. எழுதிக்கொடுத்ததைக் கிட்டத்தட்ட எடிட்டே செய்யாமல் ஏழு பக்கங்களுக்கு வெளியிட்ட அந்திமழைக்கு என் நன்றி.

    அந்திமழை வலைத்தளத்திலேயே ப்ரூஸ் லீ கட்டுரையைப் பத்திரிக்கையில் வெளிவந்த ஃபார்மேட்டில் இங்கே படித்துக்கொள்ளலாம்.

    ப்ரூஸ் லீ – மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன்

    கட்டுரையின் முழு வடிவத்தை, ஆங்காங்கே வீடியோ லிங்க்களோடு இங்கே கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள். உண்மையில் இது கொழந்த எழுதவேண்டியது. ஆனால் அவர் பிஸி என்பதால் நான் எழுதினேன். எனவே தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.

    கொழந்த எழுதிய ப்ரூஸ் லீ பற்றிய சுருக்கமான கட்டுரை இங்கே. கொழந்தையின் டைட்டில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதை நான் plagiarize செய்துவிட்டேன்.

    கட்டுரை மிகப் பெரியது என்பதால், நிதானமாகப் படித்துப் பாருங்கள். வீடியோக்களை அவசியம் பார்க்கவும். I think I am privileged to write about such a fantastic, dynamic personality. I feel grateful. நான் எழுதியதிலேயே இதுவரை இதுதான் எனக்கு மிகப்பிடித்த கட்டுரை.


     

    Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ….. Be water my friend’ – Bruce Lee.

    ப்ரூஸ் லீ என்றதுமே பலருக்கு, அவரது வேகமான மூவ்மெண்ட்கள் நினைவு வரலாம். சிலருக்கு அவர் அடிவயிற்றின் ஆழத்திலிருந்து கத்திக்கொண்டே சண்டையிடுவது நினைவு வரலாம். இன்னும் சிலரோ, பத்தோடு பதினொன்றாக இருந்த ஒரு மார்ஷல் (மார்ஷியல் அல்ல) ஆர்ட்ஸ் வீரர் என்ற அலட்சிய மனோபாவம் தோன்றலாம். எப்படி சே குவாராவின் பின்னணி தெரியாமல், அவரது உருவத்தை டி ஷர்ட்களில் போட்டுக்கொண்டு சுற்றுபவர்கள் அதிகமோ, அப்படி ப்ரூஸ் லீயைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவரது படம் போட்ட டிஷர்ட்களைப் போட்டுக்கொண்டு சுற்றுபவர்களும் அதிகமே. அதில் தவறில்லை என்றாலும்,  ப்ரூஸ் லீ என்ற மகத்தான, துடிப்பான, வசீகரமான, மிகவும் தெளிவான சிந்தனையை உடைய நபரை இந்த உலகம் அதிகமாகக் கண்டதில்லை. லீ ஜுன் ஃபான் என்ற இயற்பெயரோடு, சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் சைனாடௌனில் 1940 நவம்பர் 27ல் பிறந்த ப்ரூஸ் லீ, தனது 32ம் வயதில் ஜூலை 20, 1973யிலேயே மறைந்துவிட்டாலும், சைனாவிலும் பிற நாடுகளிலும் இன்னும் அவருக்கு இருக்கும் பிரம்மாண்டமான இளைஞர் கூட்டம் இதனாலேயே சாத்தியம். உள்ளது உள்ளபடி ப்ரூஸ் லீயைத் தெரிந்துகொள்பவர்கள் யாரானாலும் இந்த முடிவுக்கே வர இயலும்.

    ஆரம்ப நாட்கள்

    நடிகரான ப்ரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுவென், 1940ல் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக ஹாங்காங்கிலிருந்து யுனைடட் ஸ்டேட்ஸ் வந்திருந்த சமயம்தான் ப்ரூஸ் லீ பிறந்தார். மூன்று மாதங்களிலேயே ஹாங்காங் திரும்பச் சென்றுவிட்டனர் லீயின் பெற்றோர்கள். ஹாங்காங்கில் கௌலூன் பிராந்தியத்தில் லா சாலெ பள்ளியில் படித்தார் லீ. அப்போதே, சிறுவயதிலேயே தெருச் சண்டைகளில் அவருக்கு மிகுந்த சுவாரஸ்யம் இருந்தது. அவருடன் பள்ளியில் படித்த உள்ளூர் தாதா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை சண்டையில் லீ தோற்கடித்துவிட, அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லீயைப் பிடித்து அடித்தாகவேண்டும் என்று தேடிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. லீ படித்த பள்ளியில் அவருக்குப் பாடம் எடுத்த ஹென்றி என்ற ஆசிரியர், Life of Bruce Lee (1994) என்ற ஆவணப்படத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்காலகட்டத்தில் ஹாங்காங்கில் பல உள்ளூர் மாஃபியா குடும்பங்கள் இருந்தன. இவர்கள் அனைவருமே மார்ஷல் ஆர்ட்ஸிலேயே கவனம் செலுத்தினர். எனவே தெருச்சண்டைகள் அங்கே அடிக்கடி நிகழ்வது சாதாரண நிகழ்வு.

    ப்ரூஸ் லீயும் யிப் மேனும்

    சில தெருச்சண்டைகளில் வெற்றி; சிலவற்றில் தோல்வி என்ற நிலையில், தனது பதிநாலாவது வயதில் ஒரு பள்ளிச் சண்டையில் தோற்கிறார் ப்ரூஸ் லீ. அந்தத் தோல்வி அவரை பாதிக்கிறது. எப்படித் தோற்றோம் என்று தன்னைத்தானே ஆழமாகக் கேட்டுக்கொள்கிறார். உடல், தனது மனம் சொன்னபடிக் கேட்கவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. இஷ்டப்படி உடலை ஆட்டுவிப்பதில் பயிற்சி வேண்டும் என்று முடிவு செய்கிறார். மார்ஷல் ஆர்ட்ஸில் அவருக்கு இருந்த ஈடுபாட்டினால், லீயின் தந்தை, அந்தப் பிராந்தியத்தில் இருந்த புகழ்பெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் ஒருவரிடம், லீயின் பதினாறாவது வயதில் அவரைச் சேர்க்கிறார். அவர்தான் இன்றும் புகழோடு விளங்கும் யிப் மேன் (Ip Man). விங் சுன் (Wing Chun) என்பது சீனாவின் பழமையான மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்று. ஆயுதங்கள் இன்றி, அருகாமையில் நின்றுகொண்டு இருவர் சண்டையிடும்போது, கைகளையும் கால்களையும் உடலையும் பயன்படுத்தி எப்படி அந்தச் சண்டையில் வெல்வது என்பதே விங் சுன்னின் அடிப்படை. மூங்கில் எப்படி வளைந்து கொடுத்துக்கொண்டே மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்குகிறதோ அப்படி விங் சுன் பயின்ற நபரும் எதிராளியின் தாக்குதலை வளைந்து கொடுக்கும் உடலால் சமாளித்துக்கொண்டே, பலம் வாய்ந்த தாக்குதல்களால் எதிராளியை நிலைகுலையவைப்பார் (இந்தத் தத்துவத்தை ப்ரூஸ் லீ இயக்கிய அவரது இறுதிப் படமான Game of Death படத்தில் வசனமாகவே பேசுவார். இப்படம் முடிக்கப்படுவதற்குள்ளாகவே லீ இறந்துவிட்டார்).

    இந்த விங் சுன்னில் யிப் மேன் அசைக்கமுடியாத மாஸ்டராக இருந்தவர். லீயை விங் சுன்னில் முறைப்படி பயிற்றுவித்தார். பிற மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளைவிடவும் ப்ரூஸ் லீக்கு விங் சுன்னே பிடித்திருந்தது. ஏனெனில், பிற சண்டை முறைகளில், ஏராளமான, படிப்படியான பல ஸ்டெப்கள் இருந்தன. எதிராளியோடு பொருதும்போதும் இவற்றை ஒவ்வொன்றாக முறைப்படி செய்தே மோதவேண்டும். நிஜத்தில் இப்படி பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தால், எதிராளி நமது தலையை மிக எளிதாகக் கொய்துவிடுவான் என்பதால், நேரடியாக எதிராளியைக் குறைந்த ஸ்டெப்களில் நிலைகுலையவைக்கும் விங் சுன்னே ப்ரூஸ் லீயின் விருப்பத்திற்குறிய பாடமாக இருந்தது. இந்தக் கருத்தில் இறுதிவரை ப்ரூஸ் லீ உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிக் கட்டுரையில் அந்தந்த இடங்கள் வரும்போது பார்க்கலாம்.

    முதல் அமெரிக்கப் பயணம்

    முறையாகப் பயிற்சி ப்எறும்போது ப்ரூஸ் லீயின் சண்டையிடும் திறமை நன்றாக வளர்ந்தது. இதனால், அவரது சண்டைகளில் வன்முறை இன்னும் அதிகமானது. பள்ளியில் இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக வளர்ந்து, இன்னொருமுறை சண்டையில் ப்ரூஸ் லீ ஈடுபட்டால், அவர் கைதாகவேண்டிவரும் என்று போலீஸ் அவரை எச்சரிக்கும் அளவு சென்றுவிட்டது. இதனால், அவரது தந்தை, ப்ரூஸ் லீக்கு அவரது சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய மாறுதலை அறிமுகப்படுத்தும் பொருட்டு, யுனைடட் ஸ்டேட்ஸுக்கு லீயை அனுப்புகிறார். அது ஏப்ரல் 1959. ப்ரூஸ் லியின் பதினெட்டாவது வயது. அந்தக் கப்பல் பயணத்தில் தந்தை வெறும் 100 டாலர்கள் மட்டும் கொடுத்திருந்ததால், ஹாங்காங்கில் இருக்கும்போதே கற்றுக்கொண்ட நடனத்தைக் கப்பலில் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்குக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்தார் லீ. நடனத்திலும் ப்ரூஸ் லீக்குப் பெரிய ஈடுபாடு இருந்தது.

    சியாட்டிலில் தனது பள்ளி மேற்படிப்பைப் படித்தார் லீ. பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடகங்கள் பற்றிய படிப்பில் படித்துத் தேர்ந்தார். அப்போதே தத்துவங்கள் பற்றியும் அங்கேயே படித்தார். பிந்நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் வரும்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், வேறு எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தத்துவங்களையே இன்னும் ஆழமாக ப்ரூஸ் லீ படிக்கப்போவதற்கு ஆரம்பப் புள்ளி இது எனலாம். அந்தச் சம்பவம் வருகையில் அதனைக் கட்டுரையில் கவனிக்கலாம்.

    ப்ரூஸ் லீயின் முதல் கங்ஃபூ பள்ளி

    இதே காலகட்டத்தில், கையில் பணம் மிகக் குறைவாக இருந்த ப்ரூஸ் லீயிடம், அவரது நண்பர்கள், அவர் கற்றிருந்த கலையைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்து ஏன் கொஞ்சம் பணம் சம்பாதிக்கக்கூடாது என்று கேட்க, சுயமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்த ப்ரூஸ் லீ, யுனைடட் ஸ்டேட்ஸில் தனது முதல் பயிற்சிப் பள்ளியைத் துவங்குகிறார். தரைத்தளத்தில் ஒரே அறை. மாடியிலும் ஒரே அறை என்று மிகச்சிறிய அமைப்பில் உருவான பயிற்சிப் பள்ளி அது. ’ஜுன் ஃபான் கங்ஃபூ இன்ஸ்டிட்யூட்’ என்ற பெயரில் சியாட்டிலில், 1959ல் இந்தப் பள்ளி உருவானது. ப்ரூஸ் லீயின் பதினெட்டாவது வயது அது.

    இதன்பின்னர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார் லீ. அச்சமயத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே இன்னொரு மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிக் கூடத்தையும் துவங்கினார். அச்சமயத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு லீ சென்று, அவரது கலையை  டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டுவது வழக்கம். அப்படி ஒரு நாளில்தான் லிண்டா எமெரி என்ற பதினேழு வயதுப் பெண்ணைப் பார்க்கிறார். உடனடியாகக் காதல். இந்த லிண்டாதான் பின்னர் ப்ரூஸ் லீயின் மனைவியாக ஆனார். இவர்களுக்கு ப்ராண்டன் லீ & ஷான்னன் லீ ஆகிய குழந்தைகள் பிறந்தன.

    பயிற்சிகளில் ப்ரூஸ் லீ, பலமுறை ஒரு பெரிய பொம்மையை வைத்துக்கொண்டே சண்டை சொல்லிக்கொடுப்பது வழக்கம். மரத்தால் ஆன தலை மற்றும் உடல், இரும்புக் குழாய்களால் ஆன கால் பகுதி, இன்னொரு இரும்புக் குழாய் மற்றும் ஸ்ப்ரிங்குகளால் இணைக்கப்பட்ட முதுகுப்புறம் என்று மிகவும் வலுவான பொம்மை இது. இதன் தலை, உடல் மற்றும் கால் பகுதிகளில் பலமுறை தனது வலுவான கைகள் மற்றும் கால்களால் தாக்கியே, விங் சுன் கலையை மாணவர்களுக்கு லீ சொல்லிக்கொடுத்தார்.

    லாங் பீச்- கலிஃபோர்னியாவில் மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகள் அடிக்கடி நடக்கும். அப்படிப்பட்ட போட்டிகளில் இந்தச் சமயங்களில்தான் ப்ரூஸ் லீ விருந்தினராகச் சென்று, பல மார்ஷல் ஆர்ட் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார் (இந்த வீடியோக்கள் இன்றும் இணையத்தில் உள்ளன). இரண்டே விரல்களை வைத்துக்கொண்டு தண்டால் எடுப்பது, அவரது மிகப்பிரபலமான ‘One Inch Punch’ ஆகியவை அப்போதுதான் பிரபலமாயின (ஒன் இன்ச் பஞ்ச் என்பதன் மாறுபட்ட வடிவத்தை இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ, தனது ‘கில் பில்’ படத்தில் காட்டியிருப்பார்). எதிராளியின் மார்புக்கு ஒரே ஒரு இன்ச் முன்னர் தனது கையை வைத்துக்கொண்டு, வேறு எந்த பாகத்தையும் அசைக்காமல், இந்த முஷ்டியை வைத்துக்கொண்டே ஒரு ‘பஞ்ச்’ மூலம் எதிராளியை நிலைகுலையவைப்பதே அவரது ஒன் இஞ்ச் பஞ்ச். இதை அவர் செய்யும்போதெல்லாம், எதிராளிகள் அந்தத் தாக்குதலின் தாக்கத்தைத் தாங்க இயலாமல் பின்னால் நிலைகுலைந்து விழுவது வழக்கம். அந்த வலி, பல நாட்கள் இருந்துகொண்டே இருக்கும் என்பது அவர்களின் கூற்று.

    ப்ரூஸ் லீ அவரது பயிற்சிப் பள்ளிகளில் பலதரப்பட்ட மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு சைனாவின் பாரம்பரியம் மிக்க மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான விங் சுன்னை சொல்லிக்கொடுப்பது சைனாவைச் சேர்ந்த பிற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. முன்னரேயே, யிப் மேனிடம் ப்ரூஸ் லீ பயின்றபோதே, அவரது தாய் பாரம்பரியமான சீன வம்சாவளியைச் சேர்ந்தவராக இல்லாததால் அவருடன் பயின்ற பிற மாணவர்கள் ப்ரூஸ் லீயைத் தீண்டத்தகாதவரைப் போல் நடத்தியிருந்தது வரலாறு. இப்போதும் அவர் விங் சுன் பயிற்றுவிப்பதற்கு யுனைடட் ஸ்டேட்ஸில் இருந்த பிற சீனப் பயிற்சியாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    1964ல், ஓக்லாண்டில், வோங் ஜாக் மேன் என்ற மார்ஷல் ஆர்ட்ஸை நன்கு படித்த நபருடன் ப்ரூஸ் லீ பொருதினார். இந்தப் போட்டியில் ப்ரூஸ் லீ தோற்றால் அவர் இனிமேல் சைனாவைச் சேராத பிற நாட்டவருக்கு விங் சுன் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதே ஒரே நிபந்தனை. இந்தப் போட்டியின்போது உடனிருந்தவர் ப்ரூஸ் லீயின் மனைவி லிண்டா. The Life of Bruce Lee (1994) என்ற ஆவணப் படத்தில் அவர் இந்தப் போட்டியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ‘போட்டி நடந்தது வெறும் முன்றே நிமிடங்கள்தான். அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி ஜாக் மேன் பயத்தில் ஓட, அவர் மீது பாய்ந்து, அவரைத் தரையில் வீழ்த்தி, ‘தோல்வியை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?’ என்று ப்ரூஸ் லீ உறுமினார். உடனடியாகத் தனது தோல்வியை ஜாக் மேன் ஒத்துக்கொண்டார்’ என்பது அவரது கூற்று. இதனால் பிற சீனப் போட்டியாளர்களின் அதிருப்தி (ப்ரூஸ் லீ மீது இருந்த பயத்தால்) முடிவுக்கு வந்தது.

    Jeet Kune Do – The Way of the Intercepting Fist

    கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் உள்ளும் புறமும் விங் சுன்னைக் கற்றுத் தேர்ந்திருந்ததால், ப்ரூஸ் லீ அந்தக் கலையில் விற்பன்னராக இருந்தது ஆச்சரியம் அல்ல. ஆனால் அக்கலையைத் தனது வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவங்களால் செப்பனிட்டு மேலும் உறுதியாகவும் வேகமானதாகவும் மாற்றினார் ப்ரூஸ் லீ. அதுதான் அவரது சிறப்பியல்பு. எதிராளியின் மீது தாக்குதலை உடனடியாக நிகழ்த்த முடியுமா முடியாதா என்ற ஒரே விஷயமே அவரது தேடுதலுக்கு மூலகாரணமாக இருந்தது. அப்படி விரைவில் பலவிதமான தாக்குதல்களை எதிராளியின் மீது தொடுத்தலே அவர் சொல்லிக்கொடுத்த விங் சுன்னில் பிரதான அம்சமாகவும் இருந்தது.

    இதுதான் ஜீத் கூன் டோ (Jeet Kune Do) – ப்ரூஸ் லீ பிரத்யேகமாக உருவாக்கிய மார்ஷல் ஆர்ட்ஸ் முறை. விங் சுன் போன்ற பிற கலைகளை ஆழமாகப் படித்து, அவற்றில் இருக்கும் பிரதான அம்சங்களை எடுத்துக்கொண்டு, தனது புரிதலையும் அனுபவங்களையும் கலந்து ப்ரூஸ் லீ உருவாக்கிய மிக வேகமான, ஆபத்தான, சக்திவாய்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ் வடிவம். ஜீத் கூன் டோ என்ற பதத்துக்கு, ’இடைமறிக்கும் கையின் வழி (The way of the intercepting fist)’ என்பது பொருள். கைகளை வைத்துக்கொண்டு விரைவாகப் பலவிதமான சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடுக்கும் முறையாக இதனை ப்ரூஸ் லீ பிரபலப்படுத்தினார்.

    ஜீத் கூன் டோவை மிகச்சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சண்டையிடும் முன்னரே எதிராளியைத் தோற்கடிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? இதுதான் ஜீத் கூன் டோ. ‘You can call my style as the art of fighting without fighting’ என்பது அவரது மிகப்பிரபலமான மேற்கோள்களில் ஒன்று. ஆனால் இதை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டவர்கள் மிகச்சொற்பமே. இதனால் ஒரு காலகட்டத்தில் தனது வகுப்புகளையே ப்ரூஸ் லீ இழுத்து மூடவேண்டி வந்தது. அதைப் பிறகு பார்க்கலாம்.

    பயிற்சி கொடுக்கும்போது, குத்துச்சண்டை க்ளௌஸ்களையும் ஹெல்மெட்களையும் தனது மாணவர்களை அணியச்சொல்வார் ப்ரூஸ் லீ. யுனைடட் ஸ்டேட்ஸில் எந்த மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும் கண்டிராத வினோதம் இது. காரணம் பிற பள்ளிகளில், நாம் முன்னரே பார்த்ததுபோல, வரிசையான ஸ்டெப்களையே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் எதிராளி ஒரு ஸ்டெப் போடும்போது அதற்கு எசப்பாட்டாக இன்னொரு ஸ்டெப்பை நாம் போடவேண்டும். இப்படிப்பட்ட ஸ்டெப்களில் உள்ள நேர்த்தியை வைத்தே மதிப்பெண்கள் அளித்து, வெற்றியும் தோல்வியும் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ப்ரூஸ் லீயோ, எந்த ஸ்டெப்பும் நிரந்தரம் இல்லை; எதிராளி மயங்கி விழுவதே நிரந்தரம்; எனவே எதிராளி தோற்கும் வரை கை, கால், வாய் (ஆம்.. எதிராளி நம்மை உடும்புப் பிடி போட்டுப் பிடித்துவிட்டால், சமயத்தில் அவனைக் கடித்தும் கூட அவனை நாம் வெல்லலாம் என்று அடிக்கடி சொல்வார் லீ) முதலிய உறுப்புகளை வைத்துக்கொண்டு, இயல்பான, எந்தத் தூண்டுதலும் இல்லாத spontaneous மூவ்களால் எதிராளியை முறியடிக்கவேண்டும் என்பதையே தனது தாரக மந்திரமாக வைத்திருந்தார். இதனால்தான் குத்துச்சண்டை க்ளௌஸ்களும் ஹெல்மெட்களும் அவரால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சுருக்கமாக, எதிராளியை மனதளவில் பயமுறுத்துவது.

    இதனால் அவரது மாணவர்கள் மிக விரைவில் திறமைசாலிகளாக மாறினர். கூடவே, கராத்தே மற்றும் கங் ஃபூவில் பிரபலமாக விளங்கிய பலரையும் ஜீத் கூன் டோ ஈர்த்தது. யுனைடட் ஸ்டேட்ஸில் நடந்த பல மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகளில் ப்ரூஸ் லீயின் மாணவர்களே இதன்பின் பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    ஜனவரி 1970. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தனது மூன்று மிக வெற்றிகரமான மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகளையும் ப்ரூஸ் லீ திடீரென்று மூடிவிடுகிறார். மிகக்குறைந்த மாணவர்களையே அதன்பின் தனிப்பட்ட முறையில் பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார். காரணம், மார்ஷல் ஆர்ட்ஸ் என்பவைகளைக் கற்றுக்கொண்டு, தனிப்பட்ட மனிதனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் மாணவர்கள் இல்லாமல் இருந்ததே. கொஞ்சம் கூடத் தயங்காமல் இந்த முடிவை லீ எடுத்தார்.

    வாழ்க்கையை முடக்கிய மரண அடி

    சில மாதங்களுக்குப் பின்னர், ப்ரூஸ் லீயின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனை ஒன்று நிகழ்ந்தது. ஜிம்மில் சரியாக வார்ம் அப் செய்யாமல் எடைகளைத் தூக்கியதால், முதுகின் மிக முக்கியமான ஒரு நரம்பில் ப்ரூஸ் லீக்கு அடிபடுகிறது (4th sacral nerve in the lower back). உடனடியாகவே படுத்த படுக்கையாகிவிடுகிறார் லீ. இனிமேல் லீயால் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிகள் எதையும் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிடுகின்றனர். வாழ்க்கை முழுதும் முதுகுவலியோடுதான் கழிக்க நேரும் என்றும் சொல்லிவிடுகின்றனர்.

    இந்தச் சமயத்தில்தான், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் படுக்கையை விட்டு எழ இயலாத சூழலில், இயல்பாகவே கல்லூரியில் படித்த தத்துவம் ப்ரூஸ் லீயின் உதவிக்கு வருகிறது. இதுவரை எதைச் செய்தாலும் துடிப்போடும் ஈடுபாட்டோடும் செய்துவந்த லீ, வெறித்தனமாகத் தத்துவம் சார்ந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். உலகின் அத்தனை முக்கியமான தத்துவங்களையும் முழுமையாகப் படித்துத் தேர்கிறார். தத்துவம் மட்டுமன்றி, உளவியலும் படிக்கிறார். அவரது அத்தனை சக்தியையும் படிப்பதிலேயே செலவிடுகிறார்.

    இதனால், ஆறு மாதங்களின் முடிவில் வாழ்க்கை பற்றிய மிகத்தெளிவான புரிதலுக்கு வந்திருந்தார் லீ. இந்த ஆறு மாதங்களில் அவர் படித்த தத்துவஞானிகளிலேயே, இந்தியாவைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ’நீயே உனக்கான ஒளியாக இருக்கவேண்டும்; உன்னைப்பற்றிய உண்மையை அறிய, உனக்குள்ளேயே ஆழமாகப் பார்’ என்ற கிருஷ்ணமூர்த்தியின் எளிய – ஆனால் சக்திவாய்ந்த கூற்றுகளில் முழுமையாக ஈடுபடுகிறார் லீ. இந்தக் காலகட்டத்தில் தனது அனுபவங்கள் பற்றி ப்ரூஸ் லீ கைப்பட எழுதிய தொகுதிகள் மொத்தம் ஏழு என்று அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார்.

    மிகவும் தெளிந்த மனநிலையை ப்ரூஸ் லீ அடைந்திருந்ததால், ஆறு மாதங்களின் முடிவில் மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்து, பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து, ஒரு சில மாதங்களிலேயே முந்தைய நிலையை விடச் சிறந்த, மேம்பட்ட மார்ஷல் ஆர்ட்ஸ் வீரராக மாறினார் லீ.

    இந்தக் காலகட்டத்தில்தான், வெற்றி என்பது பலதரப்பட்ட ஸ்டைல்களில் இல்லை; மாறாக, அது ஒவ்வொருவரின் உள்ளேயும் தனிப்பட்ட முறையில் விளங்கும் உண்மையை வெளிக்கொணர்வதில்தான் இருக்கிறது என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார். இதை அப்போதில் இருந்து பேட்டிகள், புத்தகங்கள் வாலியாக எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார் லீ.

    அப்போது அவர் உருவாக்கிய மிகப் பிரபலமான சொற்றொடர்தான் ‘Using no way as way, and having no limitation as Limitation’ என்பது. இதைத் தனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த பதக்கத்தின் பின்புறம் பொறித்தே வைத்தார் லீ. இதற்கு என்ன பொருள் என்றால், எந்தச் சூழலிலும், உள்ளுக்குள் முடங்கிப் போய்விடக்கூடாது; மாறாக, அங்கே என்ன இருக்கிறதோ அதனைப் பயன்படுத்தி வெற்றிகாணவேண்டும் என்பதே. Adapt என்பதே இதன் சுருக்கம்.

    டிவி மற்றும் திரை அறிமுகங்கள்

    இந்தச் சமயத்தில்தான், Green Hornet என்ற தொலைக்காட்சி சீரீஸ் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ப்ரூஸ் லீயைப் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ப்ரூஸ் லீயை அணுக, ப்ரூஸ் லீயின் நெடுநாளைய கனவு நிகழும் தருணம் அவரை நெருங்கியது. இந்த டிவி சீரீஸில் கதாநாயகனாக இல்லாமல், நாயகனின் side kickஆக ப்ரூஸ் லீ நடித்தார். ஒரே ஒரு சீஸனோடு இந்தத் தொடர் நிராகரிக்கப்பட்டாலும், ப்ரூஸ் லீயின் நடிப்பு சார்ந்த முயற்சிகளுக்கு இதுவே துவக்கமாக அமைந்தது. இதன்பின் க்ரீன் ஹார்னெட்டில் அவரது கதாபாத்திரமான ‘காடோ’ வேடத்திலேயே அப்போதைய பிரபலமான டிவி சீரீஸான பேட்மேனிலும் மூன்று எபிஸோட்கள் நடித்தார் லீ. இதன்பின் இன்னும் மூன்று தொடர்களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.

    ஆனால், என்னதான் முயன்றாலும், ப்ரூஸ் லீ ஹாலிவுட் படங்களில் நடிக்க இயலவில்லை. காரணம், சீன நபர் ஒருவர் ஹாலிவுட் படங்களில் பிரதான வேடங்களில் நடிப்பது அப்போது இருந்த தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இவரால் படம் ஓடுமா? வசூல் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. டிவி சீரீஸ்களில் நடிக்கும்போதுதான் ‘Silent Flute’ என்று மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை எழுதுகிறார் லீ. ஆனால் இப்படம் தயாரிக்கப்படவில்லை. இதன்பின் ‘கங் ஃபூ’ என்ற பெயரில் ஒரு டிவி சீரீஸையும் உருவாக்குகிறார் லீ. ஆனால் அதன் தயாரிப்பாளர்கள், ப்ரூஸ் லீ மீது இருந்த தயக்கத்தால் ப்ரூஸ் லீயை நிராகரித்துவிட்டு, இன்னொரு நடிகரை ஹீரோவாகப் போட (அவர்தான் டேவிட் காரடீன். யுனைடட் ஸ்டேட்ஸின் மற்றொரு பிரபல மார்ஷல் ஆர்ட்ஸ் நடிகர். கில் பில் படத்தில் வில்லன் பில்லாக நடித்தவர்), இனியும் ஹாலிவுட்டில் இருக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார் லீ. அவரது தாய்நாடான ஹாங்காங் பயணிக்கிறார்.

    ஹாங்காங்கில் ப்ரூஸ் லீ

    ஹாங்காங்கில் அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள், பெரும்பாலும் சரித்திரப் பின்னணியையே கொண்டிருந்தன. கூடவே, நியாயமே கற்பிக்கமுடியாத அளவுகடந்த வன்முறையும் அவற்றில் இருந்தது. இதனை ப்ரூஸ் லீ மாற்ற முடிவு செய்கிறார். தன்னை இங்கே யாருக்கும் தெரியாது என்று லீ நினைக்க, க்ரீன் ஹார்னெட் டிவி சீரீஸ் ஹாங்காங்கில் சூப்பர் ஹிட் என்பதை அப்போதுதான் உணர்கிறார். இதனால் திரைப்பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கின்றன. இருந்தாலும் மிகக் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் ப்ரூஸ் லீ நாயகனாக நடித்த முதல் சைனீஸ் படம் வெளியாகிறது. அதுதான் ‘The Big Boss’ (1971). தனது படங்களில், கதாநாயகன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அதற்கேற்ற வலுவான காரணம் அவசியம் இருக்கும் என்பதை இப்படம் மட்டுமல்லாமல், தனது எல்லாப் படங்களிலும் காட்டினார் லீ. தேவையில்லாத வன்முறை என்பது போய், தேவைப்பட்டதால்தான் வன்முறை என்று அவரது படங்கள் நிலைநாட்டின.

    அதுவரை சைனீஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் பெற்றிராத பிரம்மாண்டமான வெற்றியை பிக் பாஸ் பெறுகிறது. ஆசியா முழுக்க சூப்பர்ஹிட்டாக ஓடுகிறது. இந்தியாவிலும் இப்படம் பிரபலம் என்பது ப்ரூஸ் லீ ரசிகர்களுக்குத் தெரியும். ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டார் ஆகிறார் லீ. இதன்பின் அவர் நடித்த அவரது இரண்டாவது படமான ‘Fist of Fury’ (1972), பிக் பாஸ் அடைந்த வெற்றியை அடித்து நொறுக்கி, அதைவிடப் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக ஆசியாவெங்கும் மாறுகிறது. ப்ரூஸ் லீயின் திரைலட்சியம் இவ்வாறாக அட்டகாசமாக வெற்றியடைந்தது.

    இதன்பின் அவரது மூன்றாவது படம் – ‘Way of the Dragon (1972)’ வெளியாகிறது. இம்முறை, இப்படத்தின் சகல அம்சங்களும் ப்ரூஸ் லீயாலேயே முடிவு செய்யப்படுகின்றன. திரைக்கதை மற்றும் இயக்கமும் ப்ரூஸ் லீயே. இப்படமும் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

    இதன்பின் தனது நான்காவது படமான ‘Game of Death’ பட வேலைகளில் 1972 முடிவில் ப்ரூஸ் லீ ஈடுபடுகிறார். படத்தின் பல காட்சிகளை எடுத்தார். படத்தில் ஒரு பௌத்த மடாலயம் வரும். அதன் ஒவ்வொரு தளத்திலும் ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன் இருப்பான். அவனை முறியடித்தே அடுத்த தளத்துக்குச் செல்லமுடியும். இப்படிப்பட்ட வேடங்களுக்குத் தன்னிடம் மார்ஷல் ஆர்ட்ஸ் படித்த வீரர்களைப் பொறுக்கிப் போட்டுப் படமாக்கினார் லீ. மிகக்கடுமையான உழைப்பை இப்படத்துக்கு நல்கினார்.

    இரண்டாம் அமெரிக்க விஜயம் – எண்டர் த ட்ராகன்

    இந்த நேரத்தில்தான், எந்த ஹாலிவுட் ப்ரூஸ் லீயை வெறுத்து ஒதுக்கியதோ, அதே ஹாலிவுட் ப்ரூஸ் லீயின் காலடியில் பணிந்து கெஞ்சிய தருணம் நிகழ்ந்தது. வார்னர் ப்ரதர்ஸ், ப்ரூஸ் லீயை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் ஹாலிவுட் மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை இயக்க முன்வந்தனர்.

    ப்ரூஸ் லீ, அவர்கள் செய்த வேலையை அவர்களுக்கே திருப்பிச் செய்யாமல், பெருந்தன்மையுடன் அவர்கள் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். இதனால் கேம் ஆஃப் டெத் படத்தின் வேலைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு, வார்னர் ப்ரதர்ஸின் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் Enter the Dragon (1973). இந்தப் படம்தான் முதன்முதலில் ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றினால் தயாரிக்கப்பட்ட சீன மார்ஷல் ஆர்ட்ஸ் படம். இந்தப் படத்தில், வழக்கப்படி நடிப்பு மட்டுமில்லாமல் படத்தின் ஒட்டுமொத்த உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகித்தார் லீ. படத்தின் அத்தனை ஸ்டண்ட் காட்சிகளையும் லீயே அமைத்தார். ப்ரூஸ் லீயின் அசைவுகள் மிகவும் வேகமாக இருந்ததால், அவற்றை வேகமாகப் படமெடுத்துப் பின்னர் ரிலீஸின்போது ஃப்ரேம்ரேட்டைக் குறைத்துக் காட்டியதும் நிகழ்ந்தது.

    பொதுவாகவே, திரைப்படங்களில் மார்ஷல் ஆர்ட்ஸைக் காட்டுவதில் ப்ரூஸ் லீக்கு ஒரு தனிப்பட்ட கொள்கை இருந்தது. மார்ஷல் ஆர்ட்ஸின் நோக்கம் என்ன? அவை மூலம் தனிப்பட்ட மனிதன் எப்படி மாறுகிறான்? என்பதெல்லாம் அவசியம் திரைப்படங்களால் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே ப்ரூஸ் லீயின் எண்ணம். அதன்படித்தான் அவரது அனைத்துப் படங்களும் இருக்கும். எண்டர் த ட்ராகனும் அப்படியே.

    உலகம் முழுக்க வெறித்தனமாக ஓடிய மார்ஷல் ஆர்ட்ஸ் படமாக எண்டர் த ட்ராகன் மாறியது. பலரையும் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளத் தூண்டிய படமாகவும் இருந்தது. தமிழகத்தில் பல மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகள் திறக்கப்பட்ட காலகட்டம் இது.

    இந்தப் படத்தை முடித்ததும், நின்றுபோயிருந்த கேம் ஆஃப் டெத் படத்தை மறுபடியும் ப்ரூஸ் லீ துவக்குகிறார். கேம் ஆஃப் டெத் பட வேலைகளை மறுபடியும் ஆரம்பித்தபின்னர், எண்டர் த ட்ராகன் வெளியாவதற்கு ஆறு நாட்கள் முன்னர், ஜூலை 20, 1973ல், ஹாங்காங்கில் மரணமடைகிறார். மரணத்துக்குக் காரணம், அன்று அவர் சாப்பிட்ட ஒரு மாத்திரை. அவர் அன்று தலைவலிக்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரையில் (Equagesic) இருந்த பொருட்களை அவரது உடல் ஏற்காததால் ஏற்பட்ட அலர்ஜி எதிர்வினை புரிந்ததால், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவினார் லீ. ஆனால், இந்த மரணத்துக்கு இரண்டு மாதங்கள் முன்னர், இதே போன்ற ஒரு தலைவலி ஏற்பட்டு, மூளையில் நீர் கோத்துக்கொண்டு, அது வலிப்பில் கொண்டு விட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணாமானார். அதேபோன்ற எதிர்வினைகளையே அவரது உடல் தூக்கத்தில் அந்த மாத்திரை உட்கொண்டதும் புரிய, அதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

    இறக்கையில் ப்ரூஸ் லீயின் வயது 32.

    கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ தனது கைப்பட எழுதி வரைந்த திரைக்கதை, வசனங்கள், வரைபடங்கள் ஆகியன அதன்பின்னர் பல வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவுக்குள் கண்டெடுக்கப்பட்டன. இவை இணையத்தில் இன்றும் கிடைக்கின்றன. கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ எடுத்த பல காட்சிகளும் 22 வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் கண்டெடுக்கப்பட்டன. அவை இப்போது பரவலாகக் கிடைக்கின்றன.

    ப்ரூஸ் லீயின் முக்கியத்துவம்

    நாலரைப் படங்கள். ஒருசில டிவி சீரீஸ்களில் குட்டியான வேடங்கள். இவற்றில் நடித்திருக்கும் ஒரு நடிகரை உலகமே எப்படி இன்றுவரை – அவர் இறந்து 43 வருடங்கள் கழித்தும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது? எப்படி இன்றுவரை உலகின் முக்கியமான நபர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவராக இருந்துகொண்டிருக்கிறார்?

    அவர் வெறுமனே மார்ஷல் ஆர்ட்ஸ் மட்டும் கற்றுக்கொண்டு திரைப்படங்களில் நடித்த நடிகராக இருந்திருந்தால் இப்படி நினைவுகொள்ளப்பட்டிருக்கமாட்டார். ஒரு முழுமையான ஆளுமையாக, தன் வாழ்க்கையே பிறருக்கு உதாரணமாக வாழ்ந்த நபராகவே ப்ரூஸ் லீ இருந்ததால்தான் இன்றும் அவரை உலகம் நினைவு வைத்திருக்கிறது. முழுமையான ஆளுமை என்றால், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை முழுமையாகப் பின்பற்றியவர். அவைகளை மேலும் செப்பனிட்டு உலகுக்கு வழங்கியவர். தனிப்பட்ட பெர்ஸனாலிடி உள்ளவர். யாரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தவர். இதனாலேயே மாணவர்களை அவரை விட்டுவிட்டுப் போகச்சொன்னவர்.

    ப்ரூஸ் லீயின் முக்கியமான கோட்பாடு – எப்போதுமே, உடல் பலத்தை மட்டுமே நம்பிக்கொண்டு எதிலுமே இறங்கக்கூடாது என்பதே. மாறாக, ஒரு மனிதனின் உண்மையான பலம் அவனது உள்ளத்தில் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக வாழ்ந்து காட்டியவர் லீ. மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன், தன்னை எப்போதுமே வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அரைகுறைகளே தங்களை வெளிக்காட்டுவதில் முழுவீச்சாக இறங்கிக்கொண்டே இருக்கின்றனர். துளிக்கூட பலம் இல்லாமல் இப்படிப்பட்டவர்களே எப்போதும் கத்திக்கொண்டே இருக்கின்றனர். ப்ரூஸ் லீயின் பல பேட்டிகளிலும் அவரது உறுதியான உடல்மொழியையும், ஒரு ஜென் குருவைப் போல விளங்கும் அவரது மனதையும் யாருமே எளிதில் படித்தறிந்துவிட முடியும். ப்ரூஸ் லீ, goal setting என்ற முறைமையை ஆழமாக நம்பியவர். ஒரு மனிதன், உள்ளப்பூர்வமாக ஒரு முடிவை எடுத்துவிட்டால், கடவுளே வந்து தடுத்தாலும் அது நடக்காமல் போகாது என்பதை வாழ்ந்தே காட்டியவர்.

    ப்ரூஸ் லீயின் மேற்கோள்கள் அடங்கிய பல புத்தகங்கள் தற்போது கிடைக்கின்றன. அவரைப்பற்றிய டாக்குமெண்ட்ரிகளும் ஏராளம். நேரம் கிடைக்கும்போது இவைகளைப் படித்தால்/பார்த்தால், ஒரு இரும்பு மனிதனைப் பரிச்சயம் செய்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அவசியம் அடையமுடியும். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மனிதர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவர் என்பதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. அவரைப்பற்றிய இந்தக் கட்டுரை உண்மையில் மிகவும் சுருக்கமானதே. இன்னும் எழுதவேண்டியது ஏராளம் உண்டு.

    பி.கு

    1. ப்ரூஸ் லீயைப் பற்றிய காமிக்ஸ்கள் தமிழில் உண்டு. ராணி காமிக்ஸில், எண்பதுகளில் வைரச்சுரங்கம், திசை மாறிய கப்பல், கார் பந்தயம் ஆகிய காமிக்ஸ்களில் ப்ரூஸ் லீயின் சாகஸங்களைப் படித்திருக்கிறேன். அவைகள் இன்றும் நினைவு இருக்கின்றன.
    2. ப்ரூஸ் லீயைப் பற்றிய டாக்குமெண்ட்ரிகளில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், Dragon – the Bruce Lee story, The Life of Bruce Lee, Bruce Lee – A Warrior’s journey, How Bruce Lee Changed the World ஆகியவைகளைப் பரிந்துரைக்கிறேன். ப்ரூஸ் லீயே எழுதிய ‘Wisdom for the Way’ என்ற புத்தகமும் அவசியம் நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

     

    ]]>
    http://karundhel.com/bruce-lee-a-detailed-history/feed/ 3
    Kabali (2016) – Tamil http://karundhel.com/kabali-2016-tamil/ http://karundhel.com/kabali-2016-tamil/#comments Sat, 23 Jul 2016 14:04:44 +0000 http://karundhel.com/?p=5730 கபாலியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் எப்படிச் சொல்லலாம்? இது ஒரு outright கேங்க்ஸ்டர் படம் என்று அவசியம் சொல்ல முடியாது. இது ஒரு மெலோட்ராமா என்றும் சொல்லமுடியாது. ஆக்‌ஷன் படம் என்றோ, டாகு-ஃபிக்‌ஷன் என்றோ – எப்படியுமே இதைச் சொல்ல இயலாது. ஆக்‌ஷன், ட்ராமா, செண்டிமெண்ட்ஸ் என்று எல்லாமே இந்தப் படத்தில் உள்ளன. ஆனால் இவை அத்தனையும் சேர்ந்தபின்னர் கூட, ஒரு முழுமையான படமாகக் கபாலி தோன்றவில்லை. இது ஒரு குழப்பமான படமாகவே உள்ளது. குழப்பம் என்றால், படத்தைப் புரிந்துகொள்வதில் குழப்பமே இல்லை. என்ன சொல்கின்றனர் என்பது தெளிவாகவே புரிகிறது. ஆனால் அப்படிப் புரிவது, மிக மிக மிக மெதுவாக இருப்பதுதான் பிரச்னை. கூடவே, பல காட்சிகளில் நம்மால் உள்ளூறச் சென்று ரசிக்க இயலவில்லை. அழுத்தமான கதை இதில் இல்லை. அந்தக் கதையை, படம் பார்ப்பவர்களுக்கு விளக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை இதில் குறைவு. இவைதான் கபாலியின் பிரச்னைகள்.

    விரிவாகக் கவனிக்கலாம். ஒருசில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். எனவே, படம் பார்க்காதவர்கள் (இதற்குள் கதை தெரிந்திருந்தாலும்), படிக்கவேண்டாம் என்று நினைத்தால் விலகிவிடலாம்.

    கபாலியில் ஒருசில பின்னணிகள் சொல்லப்படுகின்றன. மலேஷியாவில் வாழும் தமிழர்கள் என்பது அவற்றில் முதன்மையானது. என்ன பிரச்னைகளைக் கபாலி முன்வைக்கிறது?

    1. மலேஷியத் தமிழ்த் தொழிலாளிகளின் நிலை. அங்கேயே இருக்கும் மலாய் மக்கள், சீனர்கள் ஆகியவர்களிடையே தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கான பின்னணி என்ன? இது ஒன்று
    2. தலித்தாக இருக்கும் ஒரு தமிழன், பிற தமிழர்களின் முன்னிலையிலும், பிற நாட்டு மக்களின் முன்னிலையிலும் எப்படிக் கருதப்படுகிறான்? இது இரண்டு
    3. மலேஷியாவில், கேங்க்ஸ்டர்களோடு இருந்து, பின்னர் மனம் மாறித் திருந்தி, நல்ல வாழ்க்கை வாழ விரும்பும் தமிழர்களின் கதை. இது மூன்று
    4. முதல் மூன்று பிரச்னைகளோடு சம்மந்தப்பட்ட கபாலி என்ற மனிதனுக்குத் தனது மனைவியும் குழந்தையும் கிடைத்தார்களா இல்லையா? இது நான்கு

    இந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு, கபாலி திரைப்படம் இந்தப் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறது என்று கவனிக்கலாம்.

    முதலில், மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களின் நிலை

    இப்படத்தில், கபாலி என்ற மனிதன், தொழிலாளியாக இருந்து, மக்களுடைய பிரச்னைகளை அறிந்துகொண்டு, சீனத் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் தங்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பிரச்னை செய்து வெல்கிறான். அந்தத் தொழிலாளிகளுக்கு மத்தியில் ஒரு குட்டித் தலைவனாக உருவெடுக்கிறான். இது படத்தில் வரும் கதை. இந்தக் கதையின் பிரச்னை என்னவென்றால், இது ஒரு தகவலாக மட்டுமே மாறிவிட்டது. அதாவது, ஒரு செய்தியாக. செய்திகளைப் படங்களில் அப்படியே காட்டினால் அவை சுவாரஸ்யமாக இருக்காதுதானே? கபாலி என்ற மனிதனின் பின்னணி என்ன? இதுபற்றி இந்தச் சம்பவம் வரும்வரை நமக்கு எதுவுமே தெரியாது. இந்தச் சம்பவம் சொல்லப்படும்போதுகூட, மிக மேலோட்டமாகவேதான் இது காட்டப்படுகிறது. ஒரு சிறிய உதாரணமாக, நாயகன் படத்தில், குப்பத்து மக்களைக் காலிசெய்துவிட்டுச் செல்லும்படி ஒரு சேட் அலட்சியமாகப் பேசுவார். அந்தக் குப்பத்து மக்களின் பிரதிநிதி என்று கருதப்படும் நபரோ, சேட்டிடம் பணம்வாங்கிவிட்டு, சேட்டுக்கு சாதகமாகவே பேசி, இவர்களைக் காலிசெய்யச்சொல்வார். அப்போது வெகுண்டெழும் வேலு, தனது நண்பர்கள் மற்றும் குப்பத்தில் வசிப்பவர்களை அழைத்துச்சென்று, சேட்டின் வீட்டை துவம்சம் செய்வான்.

    நாயகன் படத்தில் இந்தச் சம்பவம் இப்போது பார்த்தாலும் அடிமனம் வரை சென்று தைக்கும் தன்மையுடையது. அந்தக் குப்பத்து மக்களின் பிரச்னையை உடனடியாக நம்மால் புரிந்துகொள்ளமுடிகிற காட்சி இது.

    ஆனால், கபாலியில், கபாலி தனது சக தொழிலாளர்களுக்குச் சீனத் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் வேண்டும் என்று வெள்ளைக்கார முதலாளியை டிமாண்ட் செய்யும்போது – போராடும்போது, நமக்கு எந்தவிதமான உணர்வுகளும் எழாமல், வெறுமனே ஏன் அமர்ந்திருக்கிறோம்? காரணம், இந்தக் காட்சிக்குப் பின்னணியில் எந்த உணர்வுகளும் இல்லாமல், இது ஒரு செய்தியாக மட்டுமே சொல்லப்படுகிறது என்பதே. இந்தக் காட்சி ஒரு ஃப்ளாஷ்பேக். எனவே இதைப் பெரிதாகக் காட்டமுடியாது. இருப்பினும்கூட, இப்படிப்பட்ட காட்சிகள் – ஒரு கதாபாத்திரத்தின் அடியாழமான உணர்வுகளை முதன்முதலில் விளக்கும் காட்சிகள், இவ்வளவு லேசான காட்சிகளாக வந்தால் அவசியம் பிரச்னைதான்.  கபாலி என்ற நபரின் முழுப்பின்னணியும் ஆடியன்ஸுக்குப் புரியும் முதல் காட்சி இது. ஆனால் அதற்கான முக்கியத்துவம் இல்லாமல், மிக மிக லேசான, ஆழமில்லாத காட்சியாக இது இருக்கிறது.

    எனவே, மலேசியத் தமிழ்த் தொழிலாளிகளின் நிலையும் நமக்கு விளங்காமல், செய்தியாகவே நின்றுவிட்டது. வெறும் வசனங்களில் ஓரிரு இடங்களில் மட்டும்தான் இது சொல்லப்படுகிறது. மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த கபாலி என்னும் ஒரு டான், அவனது வாழ்நாள் முழுதும் அவனது இனத்துக்காகப் போராடும் ஒரு பிரச்னை, ஏன் இப்படி எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாமல் வருகிறது? இப்படி வருவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லைதானே? தமிழர்களுக்குப் பிரச்னை, பிரச்னை என்று சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? அதைக் காட்டவேண்டும் அல்லவா? இல்லையெனில் பிரச்னையின் வீரியம் எப்படி நமக்குப் புரியும்?

    கபாலியின் பின்னணி

    சரி. கபாலியின் பின்னணி என்ன? அவன் எப்படி வளர்ந்தான்? அவன் என்ன படித்தான் என்பது கூட நமக்குச் சொல்லப்படுவதில்லை. ‘படித்தான்’, ‘படித்தவன்’ என்றுமட்டுமே நாம் அறிகிறோம். அவனது பூர்வீகம் பற்றி ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது. இதைத்தவிர, கபாலியின் பின்னணி பற்றிப் படம் முடியும்வரை நமக்கு எதுவுமே தெரியாது. கபாலியாக ரஜினிகாந்த் நடிப்பதாலேயே அந்தக் கதாபாத்திரத்துக்குக் கனம் ஏறிவிடுமா? முடிந்தவரை அந்தக் கதாபாத்திரத்தின் மீதான பிடிப்பை ஆடியன்ஸூக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்தானே? அது கபாலியில் இல்லை என்றே தோன்றியது. எனவே கபாலியுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகுதான் கபாலியின் மீது ஒரு பிடிப்பு எனக்கு வந்தது. ஏனெனில் கபாலியின் உணர்வுபூர்வமான பக்கம் அங்கே கிடைத்தது.

    இதில் ரஜினி நடிக்காமல் கபாலியாக வேறு யாராவது நடித்திருந்தால் உங்களுக்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் நான் சொல்லவரும் கருத்து புரியும். கேங்க்ஸ்டராகச் சொல்லப்படும் ஒரு கதாபாத்திரம் மீது பிடிப்பு வரவேண்டும் என்ற விஷயத்துக்கு, ரஜினி நடித்த தளபதியே சிறந்த உதாரணம். அந்தக் கதாபாத்திரம் எத்தனை தெளிவாக எழுதப்பட்டிருந்தது என்று யோசித்துப் பார்க்கலாம். முதல் காட்சியில் இருந்தே சூர்யாவுடன் எப்படி நம்மால் ஒன்றமுடிந்தது? அப்படிக் கபாலியுடன் நாம் ஒன்றினோமா என்பதை இதைப் படிக்கும் நண்பர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் (இன்னொரு உதாரணமாக, சித்தார்த் அபிமன்யுவை நமக்கு ஏன் பிடித்தது? அரவிந்த்ஸ்வாமி நடித்ததாலா? அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி மிகத் தெளிவாக எழுதப்பட்டதாலா?)

    தலித் தமிழன்

    அடுத்ததாக, ஒரு தலித் தமிழனின் நிலை. இதுவுமே வில்லன்கள் கபாலியிடம் ஆவேசமாகப் பேசும் வசனங்களில் (நீயெல்லாம் பொறந்திருக்கவே கூடாது, நீ என் நாயா இருக்கணும் etc…) மட்டுமே சொல்லப்படுகிறது. மலேசியாவில் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதே காட்டப்படாதபோது, அங்கே ஒரு தலித்தின் நிலை மட்டும் நமக்கு எப்படித் தெரியும்? எனவே, கபாலி எந்த சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலுமே நமக்கு உள்மனதில் எந்தவித மாற்றமும் உண்டாகப்போவதில்லை என்பது புரிகிறது. கபாலி தலித்தாகக் காட்டப்படவேண்டும் என்றால் அதன் முக்கியத்துவம் என்ன? ’கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி இடதுகைப்பழக்கம் உடையவராகக் காட்டப்படுவார். ஆனால் அந்தப் பழக்கத்தால் அந்தப் படத்தில் எந்தவித உபயோகமும் இருக்காது. ஜஸ்ட் லைக் தட் ஒரு வித்தியாசமான வழக்கம் என்பதே சஞ்சய் ராமசாமி ஒரு லெஃப்டீ என்பதற்குக் காரணமாக இருந்தது. இப்படித்தான் கபாலியின் சாதிப் பின்னணியும் எனக்குப் பட்டது. ஏனெனில், அதில் வலு இல்லையே?

    ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில், கதாநாயகர்களின் சாதி ஒரு முக்கியமான இடத்தை வகித்தது. அந்த இரண்டு படங்களிலும் அது அவசியம் தேவை. ஹௌஸிங் போர்ட்களில் வசிக்கும் மக்களின் நிலை, அவர்களின் ஆசாபாசங்கள், பின்னணிகள் ஆகியவை அட்டகாசமாக சொல்லப்பட்ட படங்கள் அவை. ஆனால் கபாலியில் தலித்களைப் பற்றி மிகச்சில வசனங்கள் தவிர வேறு எதுவுமே இல்லையே? ரஞ்சித்தின் forte என்பது முதலிரண்டு படங்களில் இருந்த இயல்புத்தன்மை. குறிப்பாக நாயகர்களின் தலித் பின்னணி – அதன் முக்கியத்துவம் என்பது. கபாலியில், நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், எப்படி நாயகனின் கேங்க்ஸ்டர் பின்னணி சொல்லப்படவில்லையோ அப்படி அவனது சாதியப் பின்னணி பற்றியும் எந்த மென்ஷனும் பெரிதாக இல்லை என்றபோது, தலித்தியம் சார்ந்து வைக்கப்பட்டுள்ள வசனங்கள் செயற்கையாகத்தான் தோன்றின. சம்மந்தமே இல்லாமல், ‘நீ என்ன ஆண்ட பரம்பரையாடா?’ என்று வீரசேகரன் கபாலியைப் பார்த்துக் கேட்கும் வசனம் சமகாலத்தில் கட்டாயம் முக்கியமான ஒன்றுதான். ஆனால், மலேசிய கேங்க்ஸ்டர் ஒருவரைப் பார்த்து இப்படிக் கேட்பதற்கான முக்கியத்துவம், நாயகனின் பின்னணியை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸின் மனதில் நுழைத்திருந்தால் எடுபட்டிருக்கும். அப்படி நடக்கவில்லை என்பதால் இதுபோன்ற வசனங்கள் எல்லாமே இந்தப் படத்தில் வேண்டுமென்றே நுழைக்கப்பட்டவையாகவே தோன்றின.

    அடுத்ததாக, கபாலி படத்தில் Free Life Foundation என்ற ஒரு அமைப்பு வருகிறது. அடிதடிகளிலும், போதைமருந்துக் கடத்தலிலும் – சுருக்கமாக அடியாட்களாக இருந்து வெளியேறும் தமிழர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத் தரும் அமைப்பாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கியத்துவம் என்ன? உண்மையில் இந்த அமைப்பு டீல் செய்யும் cause மலேஷியாவில் மிக முக்கியமான ஒன்று. அங்கே இப்படி வெளியேறும் நபர்கள் பலர். அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியும் மிகவும் கொடுமையானது. அந்தப் பின்னணி, டைகர் மற்றும் மீனாவின் பின்னணியாகப் படத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் அதுவுமே சர்ரென்று கடந்துபோய்விடுகிறது. இந்த ஃபௌண்டேஷன் தவிர, கபாலி என்னும் கேங்க்ஸ்டர் செய்யும் தொழில் என்ன? அவனுக்கு எப்படிப் பணம் வருகிறது? கபாலி இத்தனை பேரை மெயிண்டெய்ன் செய்வதற்கான source of income என்ன? கபாலி நல்ல தாதா என்றும், போதை மருந்து உள்ளே வரக்கூடாது என்றும் உறுதியாக இருக்கும் ஆள். அப்படியென்றால் extortion, ஆயுதக் கடத்தல், தீவிரவாதம் – என்னதான் மெயின் தொழிலாகக் கபாலி செய்கிறார்? இதுவும் படத்தில் எங்கேயும் காணோம். அப்படி தாதா தொழில் செய்தால், அவர் ஒருவித ஆண்ட்டி ஹீரோதானே? ஏன் காந்தி போலவே ஒரு இமேஜ் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது?

    தமிழ்நேசன் & கபாலி

    ’தமிழ்நேசன்’ என்ற தலைவரைப் பற்றிய கதை, ஃப்ளாஷ்பேக்கில் வருகிறது. அவர்தான் கபாலியின் குருநாதர். ஆதர்சத் தலைவர். இவருமே ஒரு கேங்ஸ்டர் தான் என்பது புரிகிறது. ஆனால் முற்றிலும் நல்லவனாக எந்த கேங்க்ஸ்டர் இருக்கமுடியும்? அப்படி நல்லவனாகவே இருந்தால் அவன் கேங்க்ஸ்டரா? தமிழ்நேசனுமே என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி, ஹீரோவின் பின்னணி எந்த வகையிலும் படத்தில் இல்லவே இல்லை. படம் முழுக்கக் கபாலி நல்லவர், நல்லவர் என்றே சொல்லிக்கொண்டிருப்பதால், நல்லவனுக்கு கேங்க்ஸ்டரா என்ன வேலை? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை (மறுபடியும் தளபதி/நாயகன் உதாரணங்களுக்கு மன்னிக்க. நாயகனில் வேலு போதை மருந்தே கடத்துவான். அவன் என்ன செய்கிறான் என்பது தெளிவாக இருக்கும். தளபதியில், சூர்யா தேவாவுக்கு வலதுகரமாக செய்யும் வேலைகள் தெளிவாக இருக்கும். இந்த இரண்டுமே நெகட்டிவ் ஷேட்கள் உள்ள கதாபாத்திரங்களே. முற்றிலும் நல்லவர்கள் இல்லை).

    தமிழர்களுக்காகப் போராடுபவர்தான் தமிழ்நேசன் என்பதுமட்டுமே நமக்கு சொல்லப்படுகிறது. வேலு நாயக்கர் போல. அதுதவிர வேறு எந்தவிதமான தகவல்களும் தமிழ்நேசன்/கபாலி கேங் பற்றி நமக்குக் கடைசிவரை தெரிவதில்லை. அதிலும், தமிழ்நேசனாக நடித்திருக்கும் நாஸர், இருவரில் அவர் செய்த அய்யா வேலுத்தம்பி கதாபாத்திரத்தையே தூசுதட்டி நடித்திருக்கிறார் போலும். அவ்வப்போது ‘நீ வரணும் தம்பி’, ‘போராடுவோம்’ என்பதைமட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரிரண்டு காட்சிகளில் எல்லாம் இத்தனை பிரம்மாண்டமான ஒரு போராட்டத்தையும், இனத்தையும், அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் தலைவர்களையும் அவ்வளவு எளிதில் உணர்வுபூர்வமாக ஆடியன்ஸின் மனதில் ஏற்றிவிட இயலாது. அதற்குச் சற்று நேரம் தேவைப்படும். அப்படி இல்லாமல், இவை எல்லாமே தடதடவென்று வந்துபோய்விடுவதால், மனதில் எந்தவித மாற்றத்தையும் impactஐயும் இவை ஏற்படுத்தத் தவறுகின்றன. எனவே, இவை வெறும் செய்திகளாக மட்டுமே மாறிவிடுகின்றன.

    உண்மையில் கபாலி என்ற படத்துக்கு முதுகெலும்பாக விளங்கவேண்டிய இந்தப் பிரம்மாண்டமான, முக்கியமான பின்னணிகள், வெறும் செய்திகளாகவே படம் முழுக்க வருவதால், கபாலி என்ற மனிதனுக்கும், அவன் முன்னிறுத்தும் causeக்கும் எந்தவிதமான நன்மையும் இவை செய்யவில்லை. அதனால்தான் இந்தப் படத்தில் கபாலி என்னும் கதாபாத்திரம் நமது மனதில் நிற்கத் தவறுகிறது (’ரஜினி’ என்று மட்டும் பார்க்கவேண்டாம். இந்தக் கதாபாத்திரம், கதை என்ற ரீதியில் யோசித்துப் பாருங்கள்).

    கபாலி செய்வது என்ன?

    அடுத்ததாக, கபாலி இந்தப் படத்தில் என்ன செய்கிறார் என்று கவனித்தால், ஜெயிலிலிருந்து வருகிறார். தனது சகாக்களிடம் பேசுகிறார். உடனடியாக எதிர் கேங்கில் ஒரு முக்கியமான மனிதன் இருக்கும் இடத்துக்குச் செல்கிறார். அவனை அடி பின்னியெடுத்து, ‘டோனி லீயும் வீரசேகரனும் என் முன்னால வந்தாகணும்’ என்கிறார். இதுவரை படம் எவ்வளவு வேகமாக இருந்தது? யாராக இருந்தாலும், இந்தக் காட்சி வரை ‘அட்டகாசம்.. செம்ம படமா இருக்கப்போவுது’ என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் இதன்பின் என்ன ஆகிறது? ஒரு நீளமான ஃப்ளாஷ்பேக். கபாலி ஜெயிலிலிருந்து வந்த ஆரம்பக் காட்சிகளின் வேகம் அப்படியே மட்டுப்பட்டு, நெருப்பு போலப் பற்றிக்கொண்டிருக்கவேண்டிய காட்சிகள் மிக மிக மிக மெதுவாகப் பல நிமிடங்கள் ஓடுகின்றன. இடையில் ஒரே ஒரு ஆளின்மீது காரை ஏற்றிக் கொல்கிறார். அங்கே அவரது மனைவியைக் கொன்ற வேலு என்பவன் பற்றித் தெரிகிறது. அவ்வளவே.

    இதன்பின், மலேஷியாவிலேயே பிரம்மாண்டமான கேங், கபாலியைக் கொல்ல என்ன ப்ளான் போடுகிறது என்று யோசித்தால்….யாரோ யோகி என்ற பெண்ணைக் கூப்பிட்டு, அவளிடம் அசைன்மெண்ட் கொடுக்கின்றனர். இந்த யோகி யார் என்றும் நமக்கு சொல்லப்படுவதில்லை. ஒரு பெண் கதாபாத்திரம். அவ்வளவே. ஏன்? கபாலியின் மகளாக வரும் கதாபாத்திரம் உயிரோடு இருக்கவேண்டும். எனவே யோகியை உருவாக்கியாகிவிட்டது. இப்படித்தான் எனக்குத் தோன்றியது. இப்படி திடீர் திடீரென உருவாகும் கதாபாத்திரங்கள் இப்படத்தில் மிக அதிகம். இத்தனை கதாபாத்திரங்களுக்கான தேவை எதுவுமே இல்லை என்பதே பிரச்னை. இதில் திடீரென்று குமரன் என்ற கதாபாத்திரம் வேறு உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் கதையை இழு…க்கிறது.

    மலேஷியாவின் பிரபல கேங்கே பயந்துகொள்ளும் தாதா கபாலி. ஆனால் அவரது வாழ்க்கை தாதா வாழ்க்கையாகவா இருக்கிறது? யார் வேண்டுமானாலும் கபாலியின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சுட்டுவிடலாம் என்பதைப்போலத்தானே உள்ளது? அவரைச் சுற்றியிருக்கும் ஆட்களும் ஜான் விஜய், கலையரசன் போன்ற ’சாதா’ ஆட்கள்தானே? (அந்த வகையில் ஒரு சமாதானம், நாயகன் & தளபதியிலும் இதேபோன்ற சா(சோ)தா ஆட்கள்தான் வேலுவையும் தேவாவையும் சுற்றி இருப்பார்கள்).

    படத்தின் இடைவேளை block சற்றே வித்தியாசமானதே. ஆனால், ரஜினியை ஹீரோவாகப் போட்டுவிட்டு, இடைவேளையில் ஐந்து குண்டுகளை அவரது உடலில் பாய்ச்சிவிட்டு, இடைவேளை முடிந்து ஒரு சில காட்சிகளில், சில நாட்கள் கழித்து ஜாலியாக அவரை உயிரோடு கொண்டுவருவதில் என்ன விறுவிறுப்பு உள்ளது என்பது புரியவில்லை. ‘சிவாஜி’ படத்தில் இப்படி சிவாஜியை fakeஆகக் கொன்றுவிடுவார்கள். ஆனால் உள்ளே வருவது எம்.ஜி.ஆர். அந்தக் காட்சிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன. என்ன சொல்ல வருகிறேன் என்றால், ரஜினியைச் சுடுவது, எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் ஜாலியாக அவர் மீண்டு வருவது ஆகிய காட்சிகள் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.

    கபாலியின் ப்ளஸ் பாயிண்ட்

    படத்தின் ஒரே ப்ளஸ்- இதன்பின் வரும் காட்சிகள். தனது மனைவிக்காகக் கபாலி வெளிப்படுத்தும் உணர்வுகள், அவளைத் தேடிச் செல்வது, அவளைக் கண்டுபிடிப்பது, அதன்பின் இருவருக்கும் இடையே நிகழும் உணர்ச்சிபூர்வமான அன்புப் பரிமாற்றம் ஆகியவை. இந்தக் காட்சிகள் கட்டாயம் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் இவற்றில் இருந்த உணர்ச்சிகள். ஒட்டுமொத்தப் படத்திலேயே ஆடியன்ஸின் மனதைத் தொடும் உணர்வுகள் இந்த காட்சிகளில் மட்டுமே உண்டு. ’சொல்லவருவது ஆக்‌ஷன் கதை இல்லை’ என்ற முடிவை எடுத்தபின், படத்தின் பெரும்பகுதி இத்தகைய உணர்வுகளில் பயணித்திருந்தால் அவசியம் கபாலி அனைவராலும் கொண்டாடப்பட்டு, தளபதிக்கு அடுத்து ரஜினியின் பெயர் சொல்லும் படமாக மாறி, ஒரு cult classicஆக மாறியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்தக் காட்சிகளில் ரஜினி & ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர். நமக்குமே, பல்லாண்டு காலம் கழித்து ரஜினி இயல்பாக நடிப்பதை முதன்முறையாகப் பார்ப்பதால் இக்காட்சிகள் மனதை உருக்குகின்றன (பல்லாண்டு காலம் கழித்து என்று சொல்கையில், வீட்டை விட்டு, சொத்துகளை எல்லாம் இழந்து மழையில் அழுதுகொண்டே ரஜினி போவது போன்ற ‘செண்ட்டிமெண்ட்’ காட்சிகளை நான் சொல்லவில்லை). ரஜினியை இப்படி நடிக்க வைத்தமைக்காக அவசியம் ரஞ்சித்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    படத்தின் இன்னொரு பலவீனம் – க்ளைமேக்ஸுக்குப் பின்னர், கபாலி சந்தோஷமாக இருக்கையில் வரும் சம்பவம். இந்தச் சம்பவத்தால் என்ன சொல்லவருகிறார் ரஞ்சித் என்று தெரியவில்லை. அந்தச் சம்பவத்துக்குக் காரணம், மிகக் கனமான பின்னணியெல்லாம் கூட இல்லை. ஜஸ்ட், டைகர் ஜெயிலில் இருக்கிறான்.. வெளியே வரவேண்டும் என்றால் அவன் ஒரு அசைன்மெண்ட் செய்யவேண்டும். அவ்வளவுதான். ஏன் இந்தக் காட்சி? அதைக் காட்டியதிலாவது நேர்மையாக என்ன நடந்தது என்று சொல்லவேண்டாமா? ஏன் இந்த ஒளிவுமறைவு? இதனால் ரஞ்சித் சொல்லவருவது என்ன? ஒன்றும் புரியவில்லை. கட்டாயம் இந்தக் காட்சி, நம்மை முகத்தை சுளிக்க வைக்கிறது.

    யாரைப் பாராட்டுவது?

    ’படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்’, ‘இது ரஞ்சித் படம்’ போன்ற விஷயங்களுக்கு மட்டுமே, இத்தனை பிரச்னைகளை எளிதில் ஒதுக்கிவிட்டுப் படத்தை எப்படிப் பாராட்டுவது என்று இதைப்படிக்கும் நண்பர்களே சொல்லலாம். ரஜினி இதில் இதற்கு முந்தைய பல படங்களைவிடவும் நன்றாகவே நடித்திருக்கிறார் என்பது சந்தேகமில்லாத உண்மைதான். ஆனால் அதற்காக மட்டும் எப்படி ஒட்டுமொத்தப் படத்தையும் பாராட்டுவது? அந்தந்தப் பகுதிகளை வேண்டுமானால் பாராட்டலாம். பாராட்டிவிட்டேன். ’தங்களது அபிமான நடிகர்’ என்று மட்டும் யோசிக்காமல், அதிலிருந்து வெளியே வந்து, ஒரு திரைப்படம் என்ற முறையில் இந்தக் கருத்துகளைப் பற்றி நண்பர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

    படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, படம் வெளியாகும் வரை, போஸ்டர்கள், பேட்டிகள், டீஸர், பாடல்கள் என்று எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் சொல்லி அடித்த படம் இது. இவை எதிலுமே எந்தவிதமான குறையும் இல்லாமல் (குறிப்பாகப் போஸ்டர்கள். ரஜினியை இப்படி இதுவரை எந்தப் படத்திலும் யாரும் காட்டியதில்லை. வின்சி ராஜ் அவசியம் பலத்த பாராட்டுக்குரியவரே. அதேபோல் சந்தோஷ் நாராயணன். படத்தில் ரஜினிக்கு அவர் உபயோகப்படுத்தியிருக்கும் விசில் தீம், என்னியோ மாரிகோனியின் ரசிகனாக எனக்கு மிகவும் பிடித்தது. பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையை நண்பர்கள் கவனித்துப் பாருங்கள். ஆங்காங்கே மௌனங்கள் நிரம்பிய நல்ல இசை) அட்டகாசமாகப் பின்னியெடுத்த படம் இது. பொதுவாக எனக்கு எந்தப் படம் பார்க்கும்போதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வதே வழக்கம். எனவே, ரஜினி என்ற எக்ஸைட்மெண்ட் என்னைப் பாதிக்கவில்லை. இருப்பினும், ரஞ்சித் போன்ற மிகத்திறமையான இயக்குநர் ஒருவர் ரஜினி படத்தைக் கையில் எடுத்திருப்பது எனக்கு சற்றே நம்பிக்கை அளித்தது. அது ஒன்றே ஒன்றுதான் நான் இரண்டாம் நாளே காலையிலேயே இப்படம் பார்த்ததற்குக் காரணம்.

    ரஜினிக்கு என்ன கதை சொல்லலாம்?

    ரஜினி என்ற நடிகருக்கு எந்த விதமான கதையைச் சொல்வது என்ற குழப்பம் இன்றும் நம்மிடையே இருக்கிறது. தனது வழக்கமான டெம்ப்ளேட்டை லிங்கா படத்துக்குப் பின் உதறிவிட்டு, வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் கபாலியில் ஒரு இளம் இயக்குநரின் கையில் தன்னை அவர் ஒப்படைத்திருப்பது அவசியம் உண்மைதான். ஆனால் அதற்காக மட்டும், கபாலியை மிகச்சிறந்த படம் என்று எப்படிச் சொல்வது? அப்படி வரும் படம், சுவாரஸ்யமாக இருந்தால்தானே அப்படிச் சொல்லமுடியும்? படத்தில் ஒருசில வசனங்கள் நன்றாக உள்ளன (பறவை.. காந்தி & அம்பேத்கர்.. நமக்குள்ள ஒற்றுமை மட்டும்? Etc..). அதற்காகவும், ஒட்டுமொத்தப் படத்தையும் எப்படிப் பாராட்ட இயலும்? அவைகளை மட்டும் பாராட்டலாம். தப்பே இல்லை.

    ஆடியன்ஸின் மனதில் நிற்காத ஏராளமான கதாபாத்திரங்கள்; அவற்றுக்காக உருவாக்கப்பட்ட சுவாரஸ்யம் இல்லாத கதைகள், இவற்றையெல்லாம் கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை; இடையே ஒருசில நல்ல காட்சிகள் – இவற்றின் கலவைதான் கபாலி. என்னைப்பொறுத்தவரை.

    ரஞ்சித் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் அவர் கையாண்ட களங்களை இதுவரை யாரும் தொட்டதில்லை. அப்படியே கபாலியிலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உணர்வுகள் நிறைந்த ஒரு கதையையும் திரைக்கதையையும் இப்படத்தில் அவர் கொண்டுவந்திருப்பாரானால், கபாலி அவசியம் மக்களால் மறக்க இயலாத ஒரு காவியமாக உருவாகியிருக்கும். ஆனால், ஆரம்பத்தில் சொல்லியதுபோல, இது எந்த வகையான படம் என்றே புரியாத குழப்பம் படம் நெடுகிலும் தெளிவாகத் தெரிகிறது. எப்படியும் அடுத்து வரவிருக்கும் எந்திரன் 2, ரஜினியின் டிபிகல் சூப்பர்ஹீரோ படமாகவே இருக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், அடுத்து எப்போதுதான் வயதுக்கேற்ற, அருமையான, உணர்வுபூர்வமான கதை ஒன்றில் ரஜினி இனி நடிப்பார் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அமிதாப் எப்போதோ செய்ய ஆரம்பித்து இப்போது பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு ஸ்பேஸ் அது.

    லிங்கா வந்த சமயத்தில் ரஜினி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைக் கீழே காணலாம். அதில் அமிதாப் & ரஜினி பற்றிய மிக விரிவான ஒரு ஒப்பிடல் உண்டு.

    Lingaa & Rajinikanth

    ரஞ்சித்தின் அடுத்த படத்துக்காக அவசியம் காத்திருக்கிறேன். ரஜினி என்ற நல்ல நடிகரை இக்காலத் தலைமுறை பார்த்ததே இல்லை. அவர்களுக்கு அந்த வாய்ப்பு ஒருவேளை கிட்டலாம் என்ற லேசான ஆசையில், எந்திரன் 2வுக்குப் பிறகான ரஜினியின் அடுத்த படத்துக்கும்.

    பி.கு

    ஜாஸ் சினிமாஸ் கபாலியை வாங்கியபின், இப்படத்தின் டிக்கெட் விற்பனையில் இதுவரை தமிழகம் காணாத அளவு ஆயிரக்கணக்கில் விலை வைத்து விற்கப்பட்டது. ரஜினியின் உண்மையான எளிய ரசிகர்களே அவரது பலம். அவர்களில் பலர் படம் பார்க்கமுடியாமல் நொந்துகொண்டதும் நிதர்சனம். வெளிநாடுகளிலும் – குறிப்பாக யுனைடட் ஸ்டேட்ஸில் கிட்டத்தட்ட 25-30 டாலர் விலை ! கபாலியை முன்வைத்து, தயாரிப்பாளர் தாணு ஆடிய இந்த மிகப்பெரும் வியாபார ஆட்டம் அவசியம் ரசிகர்கள் பலரையும் நோகடித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது வன்மையாகக் கண்டிக்கப்படக்கூடியதே. ஒருவேளை கபாலி வசூல் பாதித்தால் அதற்கு இதுதான் பிரதான காரணமாக உணரப்படும்.

    ]]>
    http://karundhel.com/kabali-2016-tamil/feed/ 15
    Time machine: The Paradoxes and the Films http://karundhel.com/time-machine-the-paradoxes-and-the-films/ http://karundhel.com/time-machine-the-paradoxes-and-the-films/#comments Thu, 23 Jun 2016 06:46:23 +0000 http://karundhel.com/?p=5724 ’காலப்பயணியின் மனைவி’ என்ற பெயரில் ஜூன் மாத அந்திமழை இதழில் டைம் மெஷின் படங்களையும், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் சில பேரடாக்ஸ்கள் பற்றியும் எழுதிய கட்டுரை இது.


    நிகழ்காலம் மட்டுமல்ல; இறந்தகாலமும் எதிர்காலமும் கூட எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பவைதான்’ – கர்ட் வனேகட், Slaughterhouse-Five

    ’சயன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானப் புனைவுப் படங்கள் உலகெங்கும் மிகவும் பிரபலம். அவற்றில் மிக முக்கியமான ஒரு வகைதான் டைம் ட்ராவல் படங்கள். நினைத்த நேரத்தில் நினைத்த காலகட்டத்துக்குப் போவது என்பது மனித இனம் சிந்திக்கத் துவங்கிய காலம் தொட்டே ஒரு வசீகரமான கற்பனையாகவே இருந்துள்ளது. அதில் அடங்கியிருக்கும் மர்மம் சார்ந்த கேள்விகளே காரணம். இத்தகைய டைம் ட்ராவல், பல கதைகளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பின்னர் திரைப்படங்களாகவும் ஏராளமானவை வெளிவந்துள்ளன.

    உலகின் முதல் டைம் ட்ராவல் கதை எது? இதற்குப் பலரும் ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய ‘த டைம் மெஷின்’ (1895) என்ற நாவல்தான் அது என்று சொல்லக்கூடும். இந்த நாவல்தான் மிகவும் பிரபலமானதாகவும் இருந்துள்ளது. ஆனால் இதற்கு முன்னரே 1888ல், ‘The Chronic Argonauts’ என்ற பெயரில் ஒரு கதையை அவர் எழுதியுள்ளார். இதற்கு அடுத்த வருடமான 1889ல், மார்க் ட்வெய்ன் எழுதிய ’A Connecticut Yankee in King Arthur’s Court’ என்ற கதையும் மிகவும் பிரபலம்.

    இந்தக் கதையை மையமாக வைத்து 1921ல் எடுக்கப்பட்ட ‘A Connecticut Yankee in King Arthur’s Court’ மௌனப்படம்தான் உலகின் முதல் டைம் ட்ராவல் படம். இந்தப் படமே 1931ல் பேசும் படமாகவும், 1949ல் ஒரு ம்யூஸிகலாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஹெச்.ஜி.வெல்ஸின் டைம் மெஷினும் ஹாலிவுட்டில் 1960ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது (டைம் ட்ராவல் படங்களில் ஆஸ்கர் வாங்கிய முதல் படமும் இதுதான் – விஷுவல் எஃபக்ட்ஸ்).

    மற்ற டைம் ட்ராவல் படங்களுக்குள் செல்லுமுன்னர், டைம் ட்ராவலின் பல பிரிவுகளையும் அறிந்துகொள்ளலாம். அது, நாம் பார்க்கப்போகும் படங்களை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும்.

    இறந்தகாலத்தை மாற்றுவது

    இதுதான் பல டைம் ட்ராவல் படங்களிலும் அடிக்கடி கையாளப்படும் கரு. டைம் மெஷின் ஒன்றில் ஏறிக்கொண்டு, ஏற்கெனவே நடந்த சம்பவம் ஒன்றை மாற்றுதல் மூலம் பின்னால் அந்தச் சம்பவமும், அதன் விளைவுகளும் நடக்கவே முடியாமல் மாற்றுவது. இதற்கு Back to the Futureல் இருந்து, டெர்மினேட்டர், தமிழின் முதல் டைம் ட்ராவல் படமாகிய இன்று நேற்று நாளை, அதன்பின்னர் வெளியான 24 என்று பல உதாரணங்கள் உண்டு.

    டைம் லூப் படங்கள்

    இந்த வகையான படங்களில், ஏதோ ஒரு காலகட்டம் மட்டும் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கும். கதாநாயகன் இத்தகைய காலகட்டத்தில் மாட்டிக்கொள்வான். இதனால் ஒரே காலகட்டத்தைத் திரும்பத்திரும்ப அவன் வாழவேண்டி வரும். டாம் க்ரூஸ் நடித்த Edge of Tomorrow படமும், பில் மரி நடித்த Groundhog Day படமும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.

    டைம் பாரடாக்ஸ்

    இந்த வகையின் கீழ், காலப்பயணத்தில் நடக்க இயலாத விஷயங்கள் நடந்துவிடும். ஆனால் அப்படி நடப்பவை நடக்காமல் இருந்தால்தான் காலப்பயணமே சாத்தியம் என்ற குழப்பம் வரும். அதுதான் பாரடாக்ஸ். உதாரணமாக, காலப்பயணம் செய்யும்போது நாம் இறந்தகாலம் போய், நமது தந்தை தாயின் திருமணத்தை நிறுத்திவிட்டால்? அப்போது வருங்காலத்தில் நமது இருப்பே இல்லமால் போய்விடும்தானே? அப்படியென்றால் நாம் எப்படி வருங்காலத்தில் இருந்து இறந்தகாலத்துக்குப் பயணிக்க முடியும்?

    இப்படி காலப்பயணத்தின் பாரடாக்ஸ்கள் பல உள்ளன. அவற்றில் சுவாரஸ்யமானவற்றையும் பார்க்கலாம்.

    பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ் (Bootstrap Paradox) என்பது, இருப்பதிலேயே சிக்கலான ஒரு பாரடாக்ஸ். இதன்படி, எதுவுமே, உருவாக்கப்படாமலேயே இருக்க முடியும். உதாரணமாக, தற்போது உள்ள மடிக்கணினியை எடுத்துக்கொண்டு இறந்தகாலத்துக்குச் சென்று, மடிக்கணினியின் மாதிரியைப் பற்றி முதன்முதலில் எழுதிய அலன் கேவிடம் சென்று, இதுதான் மடிக்கணினி; இதை ஆராய்ந்து, மடிக்கணினியின் வரைபடத்தை நன்றாக உருவாக்குங்கள் என்று நான் சொல்லிவிட்டு வந்தால், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மடிக்கணினிதான் அது முதன்முதலில் உருவாக்கப்பட்டதற்கே காரணம் என்று ஆகிவிடும். இது எப்படி சாத்தியம்? இதுதான் பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸ். இதன்படி திருவள்ளுவரை நாம் சந்தித்து, திருக்குறளின் பிரதி ஒன்றைக் கொடுத்துவிடலாம். அதிலிருந்து திருக்குறள் உருவாகும். ஐன்ஸ்டைனை சந்தித்து, ரிலேட்டிவிடி தியரியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கலாம். அதிலிருந்தே அவர் ரிலேட்டிவிடியை உருவாக்குவார்.

    பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸுக்கு உதாரணமாக, Somewhere in Time படத்தையும், Doctor Who சீரியலில் வரும் ’Blink’ ‘Under the Lake’ ஆகிய எபிஸோட்களையும் சொல்லமுடியும் (இந்தக் கருத்துகள் முழுதும் இதுவரிஅ வெளிநாட்டுப் படங்களில்தான் வந்துள்ளன என்பதால் இந்திய உதாரணங்கள் சொல்ல இயலவில்லை). Donnie Darko படமுமே பூட்ஸ்ட்ராப் பாரடாக்ஸுக்கு ஒரு சிறந்த உதாரணம். 12 Monkeys படமும்தான்.

    ப்ரிடெஸ்டினேஷன் பாரடாக்ஸ் – இது என்னவென்றால், காலப்பயணம் செய்வதற்குப் பொதுவாக ஒரு காரணம் இருக்கும் அல்லவா? எதையோ தடுக்க (அல்லது) நிறுத்தத்தானே பொதுவாகக் காலப்பயணம் செய்வார்கள்? அப்படி எதையோ தடுக்கச் செய்யும் காலப்பயணமே அந்த செயல் நிகழக் காரணமாக அமைந்துவிட்டால், அதுதான் ப்ரிடெஸ்டினேஷன் பாரடாக்ஸ்.

    நாங்கள் எழுதிய ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தொலைந்துபோன மெடலைக் கண்டுபிடிக்க இறந்தகாலத்துக்குச் செல்லும் கதாநாயகனும் அவனது நண்பனும், அங்கே ஒரு நாயை அவிழ்த்துவிடுவதால் ஏற்கெனவே இறந்துபோயிருந்த வில்லன் உயிரோடு திரும்பி இவர்களைத் துரத்துவதுதான் கதை. Predestination திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த ஹாலிவுட் உதாரணம். மேலும் Time Traveler’s Wife படத்தையும் சொல்லலாம்.

    டெம்போரல் பாரடாக்ஸ் – இது இரண்டு வகைப்படுகிறது.

    Causal Paradox – இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன என்று வைத்துக்கொள்ளலாம். ஒன்று, எதிர்காலத்தில் நடக்கிறது. இன்னொன்று இறந்தகாலத்தில் நடக்கிறது. எதிர்காலத்தில் நடக்கும் சம்பவம்தான் இறந்தகாலத்தில் நடக்கும் சம்பவத்துக்குக் காரணம் என்று வைத்துக்கொள்ளலாம். அதேசமயம், அந்த இறந்தகாலச் சம்பவமும் எதிர்காலச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்து, இரண்டில் எது முதலில் நடந்தது; எது அதன் விளைவாக நடந்தது என்றே புரியாமல் இருப்பதே காஸல் பாரடாக்ஸ்.

    Grandfather Paradox – டெம்போரல் பாரடாக்ஸின் இரண்டாவது வகையான Grandfather Paradox என்பது, எதிர்காலத்தில் இருந்து இறந்தகாலத்துக்கு நாம் செல்கையில், அங்கே நமது தாத்தாவை நாமே கொன்றுவிட்டால், இப்போது நாம் உயிரோடு இருப்பது சாத்தியமா என்பதை ஆராய்வது. இது சாத்தியமே இல்லைதானே? இதன்படி, ஒருவேளை அப்படி நம்மால் நமது தாத்தாவைக் கொல்ல நேர்ந்தாலும், திரும்பி நமது காலத்துக்கு வருகையில், அங்கே நம்மைப்பற்றிய எல்லாமே காலத்தால் அழிக்கப்பட்டு, நாம் ஒரு அந்நியனாக வந்திருப்போம். இதைத்தான் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் சொல்கிறது.

    இதற்கு ஒரு உதாரணமாக, க்ரிஸ்டோஃபர் நோலனின் இண்டர்ஸ்டெல்லார் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அப்படத்தின்படி, கதாநாயகன் கூப்பர் மற்றும் நாயகி அமேலியாவும் உருவாக்கும் புதிய உலகில் (எட்மண்டின் கிரகத்தில்) இருந்தே வருங்கால மனிதர்கள் உருவாகின்றனர். இவர்கள் விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியவர்களாக இருந்து, படத்தின் துவக்கத்தில் வானில் தோன்றும் வார்ம்ஹோலை உருவாக்குகின்றனர். எதற்கு? இறந்தகாலத்தில், விஞ்ஞானத்தில் பின்தங்கிய மனிதர்கள் இந்த வார்ம்ஹோலை உபயோகித்தே புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து விஞ்ஞானதில் முன்னேறவேண்டும் என்பதற்காக. இது புரிகிறதல்லவா? இதுதான் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸுக்கு ஒரு உதாரணம்.

    எப்படியென்றால், வருங்கால மனிதர்கள் விஞ்ஞானத்தில் உயர்ந்தவர்களாக இருக்க முதல் வார்ம்ஹோலை உருவாக்கியவர்கள் யார்? இவர்கள்தான் இறந்த காலத்தில் அந்த வார்ம்ஹோலை உருவாக்கியிருந்தால், முதன்முதலில் உருவான வார்ம்ஹோல் எப்படி உருவாக்கப்பட்டது? உலகமே அழிந்துவிடக்கூடாது என்றுதான் அது உருவாக்கப்படுகிறது. எனவே, முதன்முதலில் படிப்படியாக முன்னேறியவர்களாக ஆன மனிதர்கள் வார்ம்ஹோல் இல்லாமல் எப்படி அப்படி ஆகியிருக்கமுடியும்? இது சற்றே குழப்பினாலும், ஓரிருமுறை இதை யோசித்தால் க்ராண்ட்ஃபாதர் பாரடாக்ஸ் விளங்கிவிடும்.

    Let’s Kill Hitler Paradox – இது மிகவும் எளிமையானதொரு பாரடாக்ஸ். இதன்படி, நிகழ்காலத்தில் இருக்கும் நாம், இறந்தகாலத்தில் இருந்த ஹிட்லர் போன்ற யாரோ ஒரு கொடுமையான வில்லனைக் கொல்லக் கிளம்புகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம்; அப்படி இறந்தகாலத்துக்குச் சென்று, அந்த வில்லனைக் கொன்றும் விடுகிறோம். இதன்பின் என்ன ஆகும்? நாம் எந்தக் காரணத்துக்காக இறந்தகாலத்துக்குச் சென்றோமோ, அந்தக் காரணமே காலத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிடும். காரணம் என்னவென்றால், நாம்தான் அவனைக் கொன்றுவிட்டோமே? அவன் இறந்ததுமே, சடசடவென்று காலம் மாறி, அவனது இருப்பே இல்லாமல் செய்துவிடுவதால், வருங்காலத்தில் நமக்கு அவனைக் கொல்லவேண்டும் என்ற எண்ணமே தோன்றியிருக்காது. அவன் இருந்திருக்கவே மாட்டான் என்பதால். அப்படியென்றால் நாம் எப்படி அவனைக் கொல்லக் கிளம்பியிருக்க முடியும்?

    Let’s Kill Hitler என்ற பெயரிலேயே டாக்டர் ஹூ டிவி சீரீஸில் ஒரு எபிஸோட் இருக்கிறது. இந்த டாக்டர் ஹூ சீரீஸில்தான் எக்கச்சக்கமான டைம் ட்ராவல் சம்மந்தமான விஷயங்கள் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கின்றன என்பதால் அதைப் பார்ப்பது டைம் ட்ராவலைப் பற்றிய பல எண்ணங்களை நமக்குள் வளர்க்கும்.

    இவையே டைம் ட்ராவலைப் பொறுத்தவரை முக்கியமான சில சிக்கல்கள்-குழப்பங்கள் – பாரடாக்ஸ்கள்.

    இதுவரையில் உலகம் முழுக்க எக்கச்சக்கமான டைம் ட்ராவல் படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை எவை என்று என்னைக்கேட்டால், Slaughterhouse-five, Back to the Future Trilogy, Groundhog Day, Donnie Darko, Primer, Looper, Predestination, The Terminator (first two parts), 12 Monkeys, The Time Traveler’s Wife, Midnight in Paris, Edge of Tomorrow, Bill and Ted’s Excellent Adventure, Timecrimes, Safety Not guaranteed, Peggie Sue got Married, The Butterfly Effect, Il Mare, Source Code, Time After Time, Frequency, Les Visiteurs, Deja-vu, Ditto,  போன்ற படங்களைச் சொல்வேன்.

    டைம் ட்ராவல் என்பதே இப்போதைக்கு ஒரு கற்பனையாக இருந்தாலும், அதன் பல்வேறு சாத்தியக்கூறுகளே அந்தக் கருத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் டைம் ட்ராவல் என்பது பலமுறை கையாளப்பட்டிருந்தாலும், தமிழில் இதுவரை இரண்டே இரண்டு டைம் ட்ராவல் படங்கள்தான் வந்துள்ளன. முதல் படமாக எங்களின் இன்று நேற்று நாளையும், அதன்பின் இப்போது 24ம் வந்துள்ளன. சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை எடுக்கையில், அவசியம் எடுத்துக்கொண்ட கருவுக்கு நேர்மையாக இருக்கவே வேண்டும் என்பது என் கருத்து. குறிப்பாக டைம் ட்ராவல் என்ற கருத்தில், நாம் மேலே பார்த்தவற்றுடன் சேர்த்துப் பல தியரிக்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மனம் போன போக்கில் உபயோகப்படுத்தாமல், தெளிவான சிந்தனையுடன் எளிமையாக, விறுவிறுப்புடன் இன்று நேற்று நாளை படமாக எங்களால் எழுத முடிந்தது. அப்படி இனியும் தமிழில் பல சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வந்து, டைம் ட்ராவல் கதைகளும் பலவாறு எழுதப்பட்டு எடுக்கப்படவேண்டும் என்பது எனது ஆசை. அவசியம் நடக்கும் என்றே நம்புகிறேன்.


    தமிழில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் பற்றிய எனது விரிவான கட்டுரையையும் படித்துப் பார்க்கலாம்.

    ]]>
    http://karundhel.com/time-machine-the-paradoxes-and-the-films/feed/ 11
    Thithi (2015) – Kannada http://karundhel.com/thithi-2015-kannada/ http://karundhel.com/thithi-2015-kannada/#comments Fri, 10 Jun 2016 18:51:09 +0000 http://karundhel.com/?p=5714 கடந்த வருடம் வெளியான ‘திதி’ படம் தற்போது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது வீட்டுக்கு மிக அருகே இருக்கும் முகுந்தா தியேட்டரில் ஒரே ஒரு ஷோ மட்டும் போடப்படுக்கொண்டிருப்பதால் அதைப் பார்ப்பது மிக எளிதாக முடிந்துவிட்டது. இங்கு மட்டுமல்லாமல், பெங்களூர் முழுதும் பல தியேட்டர்களில் திதி ஓடிக்கொண்டிருக்கிறது (எல்லாத் தியேட்டர்களிலும் தினமும் ஒரே ஒரு ஷோ மட்டுமே).

    அவசியம் தவற விடக்கூடாத படம் இது. பெயரையும் போஸ்டர்களையும் பார்த்தால் ஏதோ சோகமான படம் போலக் காட்சியளிக்கும். ஆனால் நிஜத்தில் நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் படம். இதன் சிறப்பு, படத்தில் தொழில்முறை நடிகர்கள் யாரும் இல்லாமல், படம் எடுக்கப்பட்ட நோடெக்கொப்பலு (Nodekoppalu) கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களையே நடிக்கவைத்து எடுக்கப்பட்டதே. கொஞ்சம் கூட அலுக்காமல் இரண்டு மணி நேரமும் மிகவும் ஜாலியாகச் சென்ற படம். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஏராளமான குட்டிக்குட்டி விஷயங்கள் உண்டு. ஒட்டுமொத்தமாக, ஒரு நல்ல நாவலைப் படித்த அனுபவத்தை இப்படம் கொடுத்தது.

    இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ராம் ரெட்டி எடுத்த விதமே அலாதியானது. எந்தப் படமாக இருந்தாலும், பொதுவாக முதலில் ஒரு குட்டி ஐடியா தோன்றும். அதன்பின்னர் அந்த ஐடியாவை மெல்ல மெல்லப் பெரிதுபடுத்தியே திரைக்கதை எழுதப்படும். பின்னர் அது படமாக எடுக்கப்படும். ஆனால், இந்தப் படம், முற்றிலும் லொகேஷனை முதலில் தற்செயலாகக் கண்டபின்னர், அதை மனதில் வைத்துக்கொண்டே எழுதப்பட்டது. இது கிட்டத்தட்ட ராபர்ட் ரோட்ரிகஸ், தனது முதல் படமான ‘எல் மரியாச்சி’யை எழுதிய விதம். இதை அவரது Rebel Without a Crew புத்தகத்தில் படித்துக்கொள்ளலாம். அதைப்பற்றிய எனது இரண்டு கட்டுரைகளில் விபரங்கள் உண்டு.

    பதினைந்து வருடங்களாக ராம் ரெட்டியின் நண்பர் எரெகௌடா. அவரது கிராமம், நோடெக்கொப்பலு. கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தில் உள்ள கிராமம். இந்த கிராமத்துக்கு ஒரு நாள் நண்பரைக் காணத் தற்செயலாகச் செல்கிறார் ராம். அந்த கிராமமும், அதன் மக்களும் அவருக்கு மிகவும் பிடித்துவிட, ‘திரைப்படம் எடுத்தால் அதை இங்கேதான் எடுக்கவேண்டும்’ என்று முடிவுசெய்கிறார். இதன்பின் ப்ராக் (Prague) ஃபில்ம் ஸ்கூலுக்குச் சென்று ஒரு வருடம் திரைப்பட இயக்கத்தைப் படித்துவிட்டு, நேராக இதே கிராமத்துக்கு வருகிறார் ராம். அதன்பின்னர் கிராமத்தின் மக்களைச் சந்திக்கிறார்.பலரையும் சந்தித்தபின்னர், மூன்றுபேரை மையமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதத் தீர்மானிக்கிறார். மெல்ல மெல்ல ஒரு கதையை இவரது நண்பர் எரெகௌடாவுடன் சேர்த்து உருவாக்குகிறார். அதுதான் திதி. இதைப்பற்றி ராம் ரெட்டியே இன்னும் விபரமாகச் சொல்வதைக் கீழே இருக்கும் விரிவான வீடியோ பேட்டியில் காணலாம்.

    ’செஞ்சுரி கௌடா’ என்ற 101 வயதுத் தாத்தா, மிகவும் சுறுசுறுப்பாக, கிராமத்தில் உள்ள அனைவரையும் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் திரிந்துகொண்டிருக்கிறார். திடீரென்று அவர் இறந்துவிட, அவரது பேரன் தம்மண்னாவுக்கு செஞ்சுரியின் மகன் ட்டப்பா(தம்மண்ணாவின் தந்தை)வின் பெயரில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தின் மீது கண். அந்த நிலம் இன்னும் ட்டப்பாவின் பெயரில்தான் இருக்கிறது. ட்டப்பா ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம். எப்போது பார்த்தாலும் நடந்துகொண்டே இருப்பார். எங்கும் தங்கமாட்டார். இரவில் கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்வார். இவரிடம் வந்து, செஞ்சுரி இறந்ததால், அந்த நிலத்தை இனியாவது தனது பெயரில் எழுதித்தரும்படிக் கேட்கிறார் தம்மண்ணா. ட்டப்பா, நிலத்தை வைத்துக்கொண்டு தம்மண்ணா என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் ரெஜிஸ்டர் அது இது என்று அஃபிஷியலாகத் தன்னால் எதையும் செய்யமுடியாது என்றும் சொல்லிவிடுகிறார். இதனால் தம்மண்ணா கடுப்பாகிறார். பங்காளிகளிடம் இருந்து அந்த நிலத்தைக் காப்பாற்றவேண்டும் என்றால், அந்த நிலத்தை உடனடியாகத் தனது பெயரில் மாற்றிக்கொண்டுவிடவேண்டும். அதற்கு ட்டப்பா சம்மதிக்கமாட்டார். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவை எடுக்கிறார். அதேசமயம், செஞ்சுரி கௌடா இறந்ததால், பதினோராவது நாள் திதி செய்யவேண்டும். அதற்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் அத்தனை பேருக்கும் (500 பேர்) கறிவிருந்து போடவேண்டும். இது தம்மண்ணாவின் தலையில் விழுகிறது. காரணம், செஞ்சுரி கௌடாவின் மகன் கட்டப்பா போக்கற்றவர் போலத் திரிந்துகொண்டிருப்பதே. அதற்குப் பணம் செலவாகும். தம்மண்ணாவிடம் அவ்வளவு பணம் இல்லை.

    தம்மண்ணாவின் மகன் பெயர் அபி. இளைஞன். வேலையில்லாமல் திரிந்துகொண்டிருப்பவன். ஆற்றுமணல் திருடுபவன். தன்னைப்போன்ற ஊதாரிகளோடு சுற்றிக்கொண்டிருப்பவன். அங்கே கிராமத்தில் காவேரி என்ற ஒரு பெண்ணைப் பார்க்கிறான். பார்த்ததும் அவளைப் பிடித்துப்போகிறது. அவள் பின்னால் சுற்ற ஆரம்பிக்கிறான். காவேரி, கூர்க்கில் இருந்து 400 கிலோமீட்டர்கள் பயணித்து வந்திருக்கும் செம்மறியாடுகள் மேய்ப்பவர்களைச் சேர்ந்தவள். அவர்கள் நாடோடிகள்.

    இதுதான் கதையின் பின்னணி. இந்தப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கிறது? தம்மண்ணாவுக்கு நிலம் கிடைத்ததா? ட்டப்பா என்னவானார்? அபி – காவேரி காதல் ஒன்றுகூடியதா? இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பதிலாகவே படம் விரிகிறது.

    இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கவேண்டிய முதல் காரணம் இதன் நடிப்பு. மிகத்தேர்ந்த நடிகர்கள் போல நடித்துள்ள கிராமத்து மனிதர்கள். செஞ்சுரி கௌடாவாகத் துவக்கத்தில் வரும் சிங்ரி கௌடாவின் வயது உண்மையில் 97. 95 வயது வரை தென்னைமரங்களில் ஏறிக் காய் பறித்துக்கொண்டிருந்தவர். இவரது நடிப்பைத் துவக்கக் காட்சியில் கவனியுங்கள். அதேபோல, தம்மண்ணாவாக வரும் தம்மே கௌடா, படம் முழுக்க அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது தந்தையாக வரும் ட்டப்பாவாக நடித்துள்ள சன்னே கௌடா, உண்மையில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.அபியாக வரும் அபிஷேக், காவேரியாக வரும் பூஜா ஆகியவர்களும் பின்னியிருக்கிறார்கள். இவர்களின் இயல்பான உடல்மொழியோடு கூடிய நடிப்பில் அவ்வப்போது அவர்களின் அப்பாவித்தனமான ரியாக்‌ஷன்கள் அபாரம். அவர்களின் சிரிப்பு, உடல்மொழி, நடை, உடைகள் ஆகிய அனைத்தும் மிகவும் இயல்பு. அதுதான் படத்தின் முதல் ப்ளஸ் பாயிண்ட்.

    இந்தப் படத்தில் கையாளப்படும் கருக்கள் பல. குடும்பம், அதனுள் இருக்கும் உறவுகள் ஆகியவை இப்படத்தில் எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். குடும்பமாக வரும் நபர்களிடம் கிடைக்காத அன்பு, ட்டப்பாவுக்கு நாடோடிகளிடம் பின்னர் கிடைக்கும். இதில் இருக்கும் முரண் சுவாரஸ்யமானது. கூடவே, ட்டப்பாவுக்குப் பின்னால் மிகவும் உருக்கமான ஒரு கதையும் உண்டு. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மிஷ்கின் ஒரே டேக்கில் ஒரு சோகக்கதையைச் சொல்வதுபோலவே இதிலும் ட்டப்பா அவரது கதையைச் சொல்கிறார். அதைவிட இந்தக் கதையே நெஞ்சைத் தொடும். கவனித்துப் பாருங்கள். அதேபோல் மெடீரியலிஸம் என்பதன் பின்னர் இருக்கும் எண்ணங்கள், செயல்கள் ஆகியவை இந்தப் படத்தில் பிரதானமாக ராம் ரெட்டியால் சொல்லப்படுகின்றன. பொருட்பற்று என்பது மனிதர்களை எங்கேயெல்லாம் இழுத்துவிடுகிறது என்பதும், அதன் நேர் எதிர்வெட்டான பற்றில்லாமை என்பதனால் ஏற்படும் உறவுகள் பற்றியும் இப்படம் பரக்கப் பேசுகிறது. இதனிடையே, உள்ளது உள்ளபடி நடந்துகொண்டிருக்கும் கிராமத்துக் காதல், கிராமத்தில் இருக்கும் உறவுமுறைகள், நட்புகள், கிராம மக்களின் மானம் மரியாதையைக் காப்பாற்ற அவர்களுக்குள் நிகழும் போராட்டம் முதலியனவும் இப்படத்தில் சொல்லப்படுகின்றன.

    இவையெல்லாம் இருப்பதால் இது ஒரு சீரியஸ் படமும் இல்லை. துவக்கத்தில் இருந்து இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக, ஜாலியாக, நகைச்சுவையுடன் நகரும் படம் இது. இயக்குநர் ராம் ரெட்டி இரானியப் படங்களின் ரசிகர். எனவே இப்படிப்பட்ட படம் ஒன்றை அவரால் தர முடிந்திருக்கிறது.

    திதி படம் பல நாடுகளின் திரைப்பட விருதுகளை வாங்கியிருக்கிறது. இப்போது இந்தியா முழுதும் பரவலான கவனம் பெற்றிருக்கிறது. இதுபோன்ற படங்கள்தான் இன்றைய தேவை. இதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார் இந்த 25 வயது இளைஞர் (யெஸ்). அடுத்த படம் இதைவிட நேர் எதிராக, வேறு பாணியில் இருக்கும் என்பது ராம் ரெட்டியின் கருத்து. எதிர்பார்ப்போம்.

    இந்த வருடத்தில் நான் பார்த்த படங்களில் திதியே சிறந்தது. தவறவே விடக்கூடாத படங்களில் ஒன்று. எப்படியாவது இதைப் பார்த்துவிடுங்கள். சென்னையில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மிஸ் செய்துவிடவேண்டாம். பெங்களூரில் இருக்கும் திரைரசிகராக நீங்கள் இருந்தால் உடனடியாக இதைப் பார்த்துவிடவும். பல தியேட்டர்களில் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது.

    திரைப்படம் எடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இப்படிப்பட்ட படம் ஒன்றை எடுப்பதே சிறப்பு.

    ]]>
    http://karundhel.com/thithi-2015-kannada/feed/ 1
    Iraivi (2016) – Tamil http://karundhel.com/iraivi-2016-tamil/ http://karundhel.com/iraivi-2016-tamil/#comments Thu, 09 Jun 2016 15:08:32 +0000 http://karundhel.com/?p=5705 தந்தையின் இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் இன்றுதான் இறைவி பார்க்க நேரம் கிடைத்தது. தமிழ் இணையம் முழுதும் இறைவி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ பத்தோடு பதினொன்றாக எனதும். படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் எங்கும் விவாதிக்கப்போவதில்லை என்பதால் தைரியமாகப் படிக்கலாம். சில கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்க்கையில் அவர்களின் குணாதிசயங்கள் இதில் எழுதப்படலாம். ஆனால் அதனாலெல்லாம் கதைக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. இருந்தாலும், ஒருவேளை கதை எங்காவது லேசாக விவாதிக்கப்படலாம் என்பதால் இதோ ஸ்பாய்லர் அலர்ட்.

    முதலில், படம் மிகவும் மெதுவாகவே செல்கிறது என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எந்த இடத்திலும் வேகம் இல்லை. திரைப்படங்களை வேகமாகத்தான் எழுத/எடுக்கவேண்டும் என்று எந்தவித விதியும் இல்லை. இருந்தாலும், மெதுவாகச் செல்வதால் படத்துக்கு என்ன ப்ளஸ் பாயிண்ட்? உலகம் முழுக்கப் பல படங்கள் மிகவும் மெதுவான வேகத்தில் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. Slow Film Movement என்றே ஒரு கட்டுரை எனது தமிழ் ஹிந்து ‘சினிமா ரசனை’ தொடரில் உண்டு. கூடவே, எனக்கு மெதுவாக இருப்பது இன்னொருவருக்கு வேகமாக இருக்கலாம். படத்தின் வேகம் என்பது ஒரு relative விஷயம்தான். ஆனால், இது ஒரு கமர்ஷியல் படம். ஆர்ட் படம் அல்ல என்பதைக் கார்த்திக் சுப்பராஜே ஒப்புக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இதன் மெதுவான வேகம் எந்த விதத்திலும் படத்துக்கு வலு சேர்க்கவில்லை.

    இரண்டாவதாக, படத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மிகவும் பழையவை. ஒரு கதாபாத்திரம், தனது தோல்வியைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் குடித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொரு கதாபாத்திரம் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு, அவளிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளச்சொல்லி இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது. மூன்றாவதாக ஒரு கதாபாத்திரம், தான் ஒரு so called feminist என்பதை எப்போது பார்த்தாலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது. இது தவிர, படத்தில் வரும் இன்னும் சில கதாபாத்திரங்கள் தங்களின் வாழ்க்கையை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றன. இப்படி வருந்துபவர்களின் மனதில் அவர்களின் இணைகளிடம் உள்ள காதல், அவர்களின் இணைகளால் அவ்வப்போது ignore செய்யப்படுகிறது. இது தமிழ்ப்படங்களில் ஆதிகாலத்தில் இருந்தே காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கதை தானே? இதில் புதிதாக என்ன இருக்கிறது? இவர்களை வருத்துகிறோமே என்ற குற்ற உணர்ச்சி ‘ஷாவனிஸ்டாகக்’ காட்டப்படும் கதாபாத்திரங்களுக்கு அவ்வப்போது வந்து செல்கிறது. ’அடியே காந்தா’ என்று கர்ஜிக்கும் எம்.ஆர். ராதாவின் வடிவில் ரத்தக்கண்ணீர் படத்திலேயே இதெல்லாம் பார்த்துவிட்டோமே?

    உதாரணமாக, கே.எஸ். கோபாலகிருஷ்ணனை சினிமா ரசிகர்கள் நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஸ்ரீதரிடம் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர். சென்ற வருடம் மறைந்தவர். இவர் எடுத்த பல படங்கள், நமது பாட்டிகள்/அம்மாக்களுக்கு மிகவும் பிடித்தமானவை. சாரதாவில் ஆரம்பித்து, கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா, சித்தி, பேசும் தெய்வம், குலமா குணமா, படிக்காத பண்ணையார் போன்ற பல படங்களில் வரும் கதாநாயகிகளை நினைவுபடுத்திக்கொள்ளலாம். இவர்கள் அனைவருமே இறைவியில் வரும் நாயகிகளை ஒத்தவர்களே. இறைவியில், கமாலினி முகர்ஜி பேசும் ஆரம்ப வசனங்களால் அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்று நினைத்தால், அவரும் அரதப் பழைய தமிழ் சினிமா டெம்ப்ளேட்டாக, கணவனை விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். உண்மையில் படத்தின் துவக்கத்தில் அவர் பேசும் விஷயங்களில் அதன்பின் ஒரே ஒரு சதவிகிதம் கூட ஈடுபாடு காட்டவில்லை. என்னதான் ப்ரஷர் என்றாலும், தனக்குப் பிடித்த, தான் செய்யவேண்டும் என்று நினைத்தவைகளைக் கொஞ்சம் கூடச் செய்யமுடியாத சூழலிலா அவர் இருக்கிறார்? ஒரே ஒரு நிகழ்கால உதாரணமாக, இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இதுதான் நிதர்சனமே தவிர, இப்படத்தில் காட்டப்படுவது அல்ல. அவையெல்லாம் காலாவதி ஆகிப் பல ஆண்டுகள் ஆகின்றன.

    தற்கால சமூக வாழ்க்கையில் இது மிகவும் சர்வசாதாரணம். என்னதான் கணவன் மீது காதல் இருந்தாலும், குழந்தைக்காகவும் தனக்காகவும் மிகவும் ப்ராக்டிகலான முடிவுகளை எடுக்கும் பெண்கள்தான் இன்று அதிகம். எனவே இவரது கதாபாத்திரத்திலும் புதுமை என்பது எதுவும் இல்லை. அதேபோல், பூஜா தேவாரியாவின் கதாபாத்திரம், கணவன் இறந்தபின், காதல் என்ற உணர்வே மனதில் இல்லை என்றுசொல்லிவிட்டு, அவ்வப்போது தேவைப்படும் செக்ஸுக்காக மட்டுமே மைக்கேலிடம் உறவு கொள்வதாகக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரம், மைக்கேல் ஒரு காட்சியில் கோபத்துடன் சென்றதும் ஏன் அவனை நினைத்து அழுகிறது? மைக்கேலை அவளுக்குப் பிடித்திருப்பதால்தானே? ஒருவேளை மைக்கேல் வாழும் வாழ்க்கையால் அவளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்துப் பார்த்துக்கொள்ள இயலாது என்று அவள் நினைத்திருந்தால் அதையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய பெண் தானே அவள்? பின்னே ஏன் பழங்கால தமிழ்ப்பட நாயகி போல, ‘நீ வேறு யாரையாவது மணந்துகொள்’ என்று சொல்லி அவனை விரட்டுகிறாள்?

    உண்மையில் செக்ஸுக்காக மட்டும் ஒருவரிடம் உறவு கொள்பவர்கள் இப்படியா இருப்பார்கள்? அது முற்றிலும் வேறுவகையான plane. அதை இந்தப் படம் சரியாகக் காட்டவில்லை. செக்ஸுக்காக உறவு கொள்பவர்கள், முதலில் அது பற்றிய தெளிவு இருக்கும் இணையைத் தேர்ந்தெடுப்பதுதானே சரி? அப்படி இல்லை என்றால் அந்த உறவே சாத்தியமில்லைதானே? இதனாலேயே பூஜா தேவாரியாவின் கதாபாத்திரமும் மிகவும் செயற்கையாக மாறிவிடுகிறது. கூடவே அவர் அழும் காட்சி தேவையற்றது. அதை ஜஸ்டிஃபை செய்யவே முடியாது.

    அஞ்சலியின் கதாபாத்திரம் மட்டுமே சிறிதாவது இயல்பாக உள்ளது. அந்தக் கதாபாத்திரத்தின் தவறு எதுவுமே இல்லாமல் அது தண்டிக்கப்படுவது படத்தில் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் உண்மையிலேயே படத்தின் அட்டகாசமான நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்துகிறார்.

    அடுத்ததாக, இறைவி ஒரு social Drama என்று வைத்துக்கொண்டால், அதில் வரும் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் கதைக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல், வேண்டுமென்றே நுழைக்கப்பட்டதுபோன்ற உணர்வைத் தருகிறது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவுமே கதையோடு ஒட்டவில்லை. அது ஒரு தனியான, துண்டிக்கப்பட்ட கதையாகவே படம் முழுதும் வருகிறது. இவர் அடிக்கடி உதிர்க்கும் so called ’ஃபெமினிஸ’ வசனங்கள் அனைத்துமே, க்ளைமாக்ஸுக்கானவை என்பது துவக்கத்திலேயே நன்றாகப் புரிகிறது. உதாரணமாக, விருமாண்டி படத்தில், கதைக்குச் சம்மந்தமே இல்லாமல், மரண தண்டனை எதிர்ப்பு வசனங்கள் திடீரென்று படத்தில் இடம்பெறும். அவை வரும்போதெல்லாம் கண்டபடி நமது கவனம் இடறும். அதேபோல் ‘அரவான்’ படத்திலும் இதே மரண தண்டனை எதிர்ப்பு வசனங்கள்/வாசகங்கள் படத்தின் இறுதியில் வரும். அவற்றுக்கும் படத்தின் கதைக்கும் சம்மந்தமே இருக்காது. இதனாலேயே இவை வரும்போது ஒருவித சலிப்பே தோன்றும். இதேபோல்தான் இறைவியில் so called ‘ஃபெமினிஸ’ வசனங்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் க்ளைமாக்ஸில் வேண்டுமென்றே நுழைக்கப்படும் சம்பவங்களுக்காகவேதான் இவை என்பது எளிதில் விளங்கிவிடுவதால் படத்தில் இவை வரும்போதெல்லாம் சலிப்பே தட்டுகிறது. இன்னொன்று- இப்படி ஃபெமினிஸ்டாக இருப்பவன், வேறு எந்த moral valueவும் இல்லாமல் இப்படத்தில் வருவது போன்றா இருப்பான்?

    போலவே, சிலை திருட்டு பற்றிய அத்தனை காட்சிகளுமே படத்தைக் கண்டபடி மந்தப்படுத்துகின்றன. இதற்கும் கதைக்கும் தொடர்பே இல்லாமல், காட்சிகளை நிரப்பவேண்டும் என்றே எழுதப்பட்டதுபோலத்தான் இக்காட்சிகள் உள்ளன. சிலைத்திருட்டு – அதனால் அருளின் தந்தையை ஸ்தபதி ஆக்கிவிடலாம் – அவர்களுக்கு எழுது சில சீன்கள் – என்பதுபோலத்தான் எனக்குத் தோன்றின.

    அடுத்ததாக, கார்த்திக் சுப்பராஜின் அனைத்துப் படங்களிலும் இருக்கும் ஒரேபோன்ற அம்சங்கள். என்னவென்றால், படத்தில் திரைப்படம் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள்/கதை இடம்பெறுதல் (ஜிகர்தண்டா & இறைவி.. பீட்ஸாவில், திரைப்படம் இல்லாவிட்டாலும், சினிமா போலவே ஒரு திரைக்கதையைத் தயார் செய்து பிறரிடம் சொல்லும் ஹீரோ இருப்பான்); படத்தில் சொல்லப்படும் கதையைக் கடைசி சில நிமிடங்களில் மாற்றுவது; கதைக்கு சம்மந்தமே இல்லாத ரூட்டில் இறுதிச் சில நிமிடங்களின் சம்பவங்கள் பயணிப்பது முதலியன. முதல் இரண்டு படங்களில் இருந்ததுபோலவே இறைவியிலும் அதே டெம்ப்ளேட்டை கார்த்திக் சுப்பராஜ் வைத்திருப்பது இந்தப் படத்தில் உதவவில்லை. ஏனெனில் இதில் கதையே மிகவும் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு சோஷியல் ட்ராமாவா, த்ரில்லரா, ரொமாண்டிக் படமா, Heist படமா என்பதே முடிவு செய்யப்படாமல், இவை அனைத்தையும் கலக்கி எடுக்கப்பட்டிருப்பதால் இறுதியில் இந்த எந்த genreஐயும் திருப்திப்படுத்தாமல் மிகவும் அலுப்பான உணர்வையே இப்படம் தருகிறது.

    எஸ்.ஜே. சூர்யா நன்றாக நடித்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் படமே மிகவும் மெதுவாக நகர்வதால் அவரது நடிப்புமே படத்தை சுவாரஸ்யப்படுத்தவில்லை.

    ’கதை’ என்பதை எடுத்துக்கொண்டால், இதில் வரும் தயாரிப்பாளர் வேடம் உட்பட அனைத்துமே நாம் ஏற்கெனவே பார்த்தவையே. எத்தனை படங்களில், இதில் வரும் தயாரிப்பாளர் போன்ற வில்லனைப் பார்த்திருக்கிறோம்? காலில் விழச்சொல்லும் அதே வசனம் உட்பட? முற்றிலும் பழமைவாதம் சார்ந்த ஒரு படத்தை எப்படி ஃபெமினிஸம் சார்ந்த படம் என்று நம்மால் சொல்ல முடிகிறது? காரணம் எளிது. நமக்கு எக்ஸ்போஷர் குறைவு. வெளியே என்னென்ன இருக்கின்றன? எப்படியெல்லாம் ஃபெமினிஸம் விவாதிக்கப்படுகிறது என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாமல் இருப்பதாலேயே இப்படத்தை ஃபெமினிஸம் சார்ந்தது என்று நம்மால் சொல்லமுடிகிறது. கூடவே, கார்த்திக் சுப்பராஜுமே வாசிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியத்தை இந்தப் படம் தெளிவாகப் பேசுகிறது. வாசிப்புதான் நமக்கு எக்ஸ்போஷரைக் கொடுக்கும் . உலகளாவிய விஷயங்களைப் பற்றிய புரிதலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை வாசிப்புதான் தெளிவுபடுத்தும்.

    உண்மையில், பெண்களின் திருமண வாழ்வில் ஏற்படும் சலிப்பு/அலுப்பு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதனால் அவர்கள் திருமணத்தை உடைக்க நினைப்பது, அதனால் நிகழும் பிரச்னைகள் போன்ற கதைகள் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் பார்க்கவேண்டிய படங்கள்: Bridges of Madison County, In the Mood for Love, Kabhi Alwidha na Kehna, Silsila, Drowning by Numbers, Y tu mamá también, Queen, American Beauty, Arth, Mirch Masala முதலியவை. கூடவே, ஃபெமினிஸம் சார்ந்த படங்கள் என்றால் Thelma & Louise, The Color Purple, 9 to 5 (தமிழில் ’மகளிர் மட்டும்’ என்ற பெயரில் காப்பியடிக்கப்பட்ட படம்), Elizabeth, Frida, Amélie, Lolita, Talk to Her, Broken Embraces, Mad Max: Fury Road முதலியவை. இன்னும் ஏராளம் உண்டு.

    இறைவியின் ஒரு ப்ளஸ் பாயிண்ட் – அதன் வசனங்கள். பல இடங்களில் சுருக்கமாக இருந்தாலும் பெரிய கருத்துகளை ஜஸ்ட் லைக் தட் சொல்லக்கூடிய வசனங்கள். அவை கட்டாயம் பாராட்டத்தக்கவை. கூடவே, ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு genreல் எடுக்க முயலும் கார்த்திக் சுப்பராஜின் முயற்சிகள். மேலே சொன்னபடி, தன்னை நன்றாகத் தயார்படுத்திக்கொண்டு அவர் அதைச் செய்தால் நன்றாக இருக்கும்.

    இறைவியின் மிகச்சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், முழுப்படமாக, இது ஒரு அறுபதுகளின் படத்தைப் பார்த்த அனுபவத்தையே கொடுத்தது. என்னைப்பொறுத்தவரை,சுப்பராஜ் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. இறைவிக்கு முன் வரை, அவருக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸை இளம் திரைரசிகர்கள் கொடுத்திருந்தனர். இப்படம் ஒரு ஏமாற்றம் என்ற வகையில், அவரது அடுத்த படம் அவசியம் கவனிக்கப்படும். அதுவும் சொதப்பிவிட்டால் அந்த ஸ்டேட்டஸ் அவரை விட்டு விலகிவிடும். அடுத்த படத்தை கவனத்துடன் எழுதவேண்டிய பொறுப்பும் கட்டாயமும் கார்த்திக் சுப்பராஜுக்கு அவசியம் உண்டு. காத்திருக்கலாம்.

    பி.கு

    1. இதில் வரும் ராதாரவி பற்றிச் சொல்ல ஏதுமில்லை. எப்போது படத்தின் ஆடியோ விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் பற்றி இழிவாகப் பேசினாரோ, அப்போதே அந்தத் தகுதியை இழந்துவிட்டார். இது அவசியம் பலத்த கண்டனத்துக்கு உரியது. கூடவே, அதைச் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்த படக்குழுவினருமே பலத்த கண்டனத்துக்கு உரியவர்களே. வாசிப்பே மெச்சூரிட்டியைக் கொடுக்கும். அது இல்லையெனில் இப்படித்தான் மிருகத்தனமாக நடந்துகொள்ளத் தோன்றும்.

    2. படத்தில் வரும் referenceகள்: இளையராஜா பற்றியவை, மணி ரத்னத்தின் ஆய்த எழுத்து (மூன்று பேர்; ஒருவன் பெயர் மைக்கேல் etc, ரஜினி பற்றிய கார்த்திக் சுப்பராஜின் ஒவ்வொரு படத்திலும் இடம்பெறும் வசனங்கள், படத்தில் வரும் இரண்டு ‘குறியீடுகள்’ – ஜெயிலில் சட்டை விழுவது & குழந்தை – பொம்மை சம்மந்தப்பட்ட காட்சி (எம்.டி.எம் & co தயாராகலாம்), santha shishunala sharifaவின் கவிதைத் தொகுப்புப் புத்தகம் (இவர் ஒரு கன்னடிகர் – கன்னட இலக்கிய உலகின் முதல் முஸ்லிம்) முதலியவையெல்லாம் ஆங்காங்கே புருவத்தை உயர்த்த வைத்தாலும், படத்தோடு ஒன்ற வைக்கவில்லை.

    ]]>
    http://karundhel.com/iraivi-2016-tamil/feed/ 9