Bramayugam (2024) – Malayalam

February 20, 2024

ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய...

Tenet (2020) – English – 2

May 20, 2021
/   Cinema articles

TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு...

Tenet (2020) – English – 1

December 8, 2020
/   Cinema articles

Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர்...

Sports films and biopics of Hollywood

July 4, 2020
/   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக...

Psycho (2019) – Tamil

February 4, 2020
/   Cinema articles

தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த...

Ishq (2019) – Malayalam

May 29, 2019
/   Malayalam

Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது,...

Brightburn (2019) – English

May 28, 2019
/   English films

  வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள...

John Wick 3 – Parabellum (2019) – English

May 27, 2019
/   English films

ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம். ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான...

Vikram Vedha (2017) – Tamil

July 24, 2017
/   Tamil cinema

விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு,...

Doctor Strange (2016) – English

November 7, 2016
/   English films

முன்குறிப்பு –  இதற்கு முன்னர் எழுதியிருக்கும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இந்த வருடம் வந்திருக்கும் மார்வெலின் இரண்டாவது படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். முதல் படம், Captain America – Civil war. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் பார்த்தாலே உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின்...

Kaashmora (2016) – Tamil

November 3, 2016
/   Tamil cinema

காஷ்மோரா ஒரு ஃபேண்டஸி. தமிழில் ஃபேண்டஸிக்கள் குறைவு. பலத்த விளம்பரங்களுக்கு இடையே வெளிவந்திருக்கும் காஷ்மோரா எப்படி இருக்கிறது? கார்த்தியின் காஷ்மோரா கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர் துவக்கத்திலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளதால் படம் முழுக்க அவரோடு நாம் பயணிக்க முடிகிறது. அவர் பேசும் வசனங்களில் இருக்கும்...

Spotlight (2015) – English

March 12, 2016
/   English films

பாஸ்டன் நகரில் பல்லாண்டு காலமாகக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்களது பாலியல் வெறிக்கு உட்படுத்தி சின்னாபின்னம் செய்துவந்த ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்னையை வெளிப்படையாக உலகுக்கு அறிவித்த சில பத்திரிக்கையாளர்களின் உண்மைக்கதைதான் ஸ்பாட்லைட் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆஸ்கரில் சிறந்த பட விருதும், சிறந்த...

Bahubali: The Beginning (2015) – Tamil & Telugu

July 14, 2015
/   Tamil cinema

‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’...

Mad Max: Fury Road (2015) – English: 3D

May 19, 2015
/   English films

‘I’ve gone from being very male dominant to being surrounded by magnificent women. I can’t help but be a feminist’ – George Miller. ஜார்ஜ் மில்லர் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. எந்தப் படம் வந்தாலும் அது பரவலாகப் பேசப்பட்டால்தான்...

உத்தம வில்லன் (2015) – Tamil

May 3, 2015
/   Tamil cinema

கட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். இருப்பினும் படம் பார்க்க அவை தடையாக இருக்காது. எனது ‘விஸ்வரூபம்’ விமர்சனத்தின் ஆரம்ப சில வரிகள் இவை. இவற்றுக்கும் உத்தம வில்லனுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவற்றை இங்கேயும் கொடுக்கிறேன்.   கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில்...

Avengers: Age of Ultron (2015): 3D – English

April 24, 2015
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.   ச்சிடாரி (Chitauri) என்ற வேற்றுக்கிரக கும்பலை அடியோடு வேரறுத்த பின்னர், HYDRA என்ற எதிரி...

கத்தி (2014) – Review

October 24, 2014
/   Tamil cinema

தமிழில் சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி அடைந்தே வந்திருக்கின்றன. முன்னரே தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் (’தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்றவை), எனக்குத் தெரிந்து சிவாஜி, கமல்ஹாஸன் நடித்து 1977ல் வெளிவந்த ’நாம் பிறந்த மண்’ படம்தான் ஒரு சூப்பர்...

Tesis (1996) – Spanish

September 3, 2012
/   world cinema

அலெஹாந்த்ரோ அமினாபார் (Alejandro Amenábar) பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். The Sea Inside என்ற அற்புதமான ஸ்பானிஷ் படத்தைக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய The Others படமும் ஒரு நல்ல த்ரில்லர். தனது திரைவாழ்க்கையின் துவக்கத்தில் இவர் இயக்கிய முதல் முழுநீளப்...

முகமூடி (அல்லது) சோடாமூடி (அல்லது) புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? – 2012

September 1, 2012
/   Tamil cinema

ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்… இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, ‘முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை… பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு...

Julia’s Eyes (2010) – Spanish

August 23, 2012
/   world cinema

பார்வை பறிபோய் இந்த உலகில் வாழும் நிலை எத்தகையது? நம்முடைய சராசரி வாழ்க்கையிலேயே அப்படி வாழ்வது கடினம். பார்வை போவதற்குமுன்வரை நாம் கண்டுணர்ந்த வண்ணமயமான உலகம், அதன்பின் ஒரேபோன்ற இருண்ட தன்மை உடையதாகிவிடுகிறது. அந்த இருளில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நம்முடைய மனதில் குழப்பங்களையும் பயத்தையுமே உருவாக்குவதாக...

The Orphanage (2007) – Spanish

August 20, 2012
/   world cinema

ஹாரர் படங்கள் என்பது ஒரு தனி வகை. இவற்றில் எடுத்தவுடன் கைகால்களை வெட்டுவது, கைமா செய்வது போன்ற படங்கள் மிக அதிகம். அதேபோல், அவற்றுக்கு நேர் எதிராக, அழகான, கலைநயமிக்க ஹாரர் படங்களும் உள என்று அறிக. அத்தகைய ஒரு அழகிய ஹாரர் (???!!) படத்தைத்தான் இப்போது...

Expendables 2 (2012) – எ பதிவு பை ஹாலிவுட் பாலா

August 18, 2012
/   English films

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… ரெண்டு வருஷத்துக்கு முன்னால டகால்னு அப்ஸ்காண்ட் ஆன ஹாலிவுட் பாலா இதோ இப்போ ரீ-எண்ட்ரி. நம்ம ப்லாக் மூலமா.. பழைய காரம் இதுல இருக்கா? படிச்சிட்டு கமெண்ட் போடுங்க.. அவரு வந்து ரிப்ளை பண்ணுவாரு… அப்போ இனி அடுத்து? ஹா ஹா ஹா ஹா...

Gangs of Wasseypur II (2012) – Hindi

August 13, 2012
/   Hindi Reviews

கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் முதல் பாக விமர்சனங்கள் இங்கே: Gangs of Wasseypur (2012) – Hindi Gangs of Wasseyppur- Contd . . முதல் பாகத்தில் சர்தார் கானின் வாழ்க்கையைப் பார்த்தோம். ரமாதீர் ஸிங்குடனான அவனது மோதல், அதனால் ஏற்பட்ட பகை, சர்தார்...

The Raven (2012) – English

August 7, 2012
/   English films

எட்கர் அலன் போ ஒரு பூங்காவின் பெஞ்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அவர் முகம் வாடியிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறார். சூரியன். அதனைச்சுற்றி ஒரு காகம் பறந்துகொண்டிருக்கிறது. அக்டோபர் 7. 1849. இறக்கும் தருவாயில் இருந்த எட்கர் அலன் போ, பால்டிமோரின் ஒரு பூங்காவின் பென்ச்சில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது இறுதி நாட்களில்...

Why is The Dark Knight Rises Nolan’s worst yet?

July 22, 2012
/   English films

இணையத்தில் The Dark Knight Rises படத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது நோலனின் (இதுவரையில்) மோசமான படம் என்று நானும் நண்பர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது மோசமான படமில்லை. இது நல்ல படம்தான் என்று பிற நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், இந்தப் படம் பற்றிய எனது கருத்துகளை...

The Dark Knight Rises (2012) – English

July 20, 2012
/   English films

அழுத்தமான கதை கிடைக்கும்வரை பேட்மேன் ஸீரீஸின் மூன்றாம் பாகத்தை நான் எடுக்கப்போவதில்லை. இதுவரை வெளிவந்த எந்த மூன்றாம் பாகத்தை மக்கள் கதைக்காக நினைவுவைத்திருக்கிறார்கள் சொல்லுங்கள்? — Christopher Nolan. இந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், பேட்மேன் பற்றிய இந்தக் கட்டுரைகளை வரிசையாகப் படித்துமுடித்துவிடுங்கள் நண்பர்களே. 1 &...

The Dark Knight – Rises

July 17, 2012
/   English films

ஜோக்கர் மற்றும் டூ ஃபேஸ் ஆகிய வில்லன்களை முறியடித்தபின் பேட்மேன் என்ன ஆகிறார்? இந்தக் கேள்விக்குப் பதிலாக நோலனுக்கு ஒரு பொருத்தமான கதை கிடைக்காததால்தான், The Dark Knight படத்துக்குப் பின்னர் அடுத்த பாகம் உடனடியாக ஆரம்பிக்கவில்லை. Inception எடுக்கப் போய்விட்டார் நோலன். அப்போதுகூட, மூன்றாம் பாகம்...

Abraham Lincoln: Vampire Hunter: 3D (2012) – English

July 16, 2012
/   English films

பொதுவாகவே ஹாரர் படங்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும், அப்படங்கள் சரித்திரகால பின்னணியில் நடந்தால். குறிப்பாக, டிம் பர்ட்டனின் Sleepy Hollow. அந்தப் படமும், டிம் பர்ட்டன் இயக்காத From Hell படமும் எனக்குப் பிடித்தவை. பல நண்பர்களுக்கும் இந்த இரண்டு படங்களும் பிடித்திருக்கலாம். சரித்திர பின்னணியில் நடக்கும்...

The Dark Knight – Begins

July 13, 2012
/   English films

Batman என்ற கதாபாத்திரத்தின் பின்னணி என்ன?அதாகப்பட்டது என்னவென்றால் (என்று ஆரம்பித்து இந்த பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது (1939 ல் சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாப் கேனால் உருவாக்கப்பட்டது), அதன் குணாதிசயங்கள் என்னென்ன (இது எல்லாருக்குமே தெரியுமே), அதன் வில்லன்கள் யார் (யோவ். நிறுத்தமாட்டியா நீயி), இதுவரை...

The Dark Knight – மீண்டும் Bane – The Trailers

July 9, 2012
/   English films

Bane என்ற கதாபாத்திரமே இந்தப் படத்தின் வில்லன் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். யார் இந்த Bane? Baneன் உருவாக்கம் பற்றியும், எப்படி அவன் ஒரு கொடூர வில்லனாக மாறினான் என்பது பற்றியும் அடுத்த கட்டுரையில் விரிவாக எழுத நினைக்கிறேன். அதற்கு முன் – இதுவரை வந்துள்ள Dark...

The Dark Knight – Bane

July 5, 2012
/   English films

The Dark Knight Rises படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் தவிர்க்க முடியாத கதாபாத்திரமே Bane. The Batman is Gotham City. I will watch him. Study him. And when I know him and why...

The Dark Knight – Epilogue

July 4, 2012
/   English films

ஆக, சென்ற கட்டுரையில் சொல்லியிருந்தபடி Dark Knight Rises படத்தை முடித்தார் நோலன். Post – Production முடிந்து, தற்போது இறுதி பூச்சு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. படம் இந்த மாதம் இருபதாம் தேதி வெளியிடப்படுகிறது. இனி? நோலனின் பேட்மேன் ஸீரீஸ் முடிவடைந்துவிட்டதாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு திரைப்பட...

The Amazing Spider-Man (2012) – English

June 29, 2012
/   English films

ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம், உலகின் அத்தனை பேருக்கும் தெரிந்த கதாபாத்திரம் (உடனே ’எங்க தாத்தாவுக்கு தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் வி.எஸ். ராகவனும் புளிமூட்டை ராமசாமியும்தான்’ என்றெல்லாம் விதண்டாவாதம் பேசக்கூடாது). எப்படித் தெரியும் என்றால் ஆல்ரெடி மூன்று வசூல் சாதனைப் படங்கள் வந்துவிட்டன. அப்படங்களை எடுத்தவரோ திகில்...

Gangs of Wasseypur – Contd . .

June 28, 2012
/   Hindi Reviews

முன்குறிப்பு – இந்த விமர்சனத்தின் முதல் பாகம் படிக்க – Gangs of Wasseypur (2012) – Hindi Thanks to the Madurai Triumvirate – Bala, Ameer Sultan & Sasikumar For inspiring me to get back to my roots...

Gangs of Wasseypur (2012) -Hindi

June 27, 2012
/   Hindi Reviews

ஒரு சிறிய கற்பனை. நாம் ஒரு திரைப்படம் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில், வில்லன் ஒருவனை ஹீரோ கொல்வதாக வருகிறது. இந்த ஸீனை எழுத அமர்கிறோம். நமது கற்பனை எப்படி ஓடும்? முதலில், ஹீரோ தயாராவதைக் காட்டுகிறோம். லெதர் ஷூ அணிகிறார். அதில் ஸிப் வைத்திருக்கிறது. பாலீஷ் போடவே...

Soul Kitchen (2009) – German & கலகலப்பு

June 25, 2012
/   Copies

உலகப்படங்களிலிருந்து நமது தமிழ்ப்படங்கள் ரகவாரியாகத் திருடப்படுவதைப் பற்றி நமது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். சிலபேர் (கே.வி. ஆனந்த் & Co) பயங்கர வெளிப்படையாக, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணத்தில் ஆனந்தின் ‘அயன்’ படத்தில் டிவிடி கடையில் வந்து இயக்குநர்களின் ஜூனியர்கள் விசாரிப்பதைப்போல், ’Maria...

Not One Less (1999) – Chinese

June 20, 2012
/   world cinema

முன்குறிப்பு – தமிழ்ஸ்டுடியோ டாட் காம் இந்த வருடம் மே மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவுக்கான புத்தகத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. புத்தகம் விரைவில் வெளியாகும். உலகப்பட ரசிகர்கள், சைனாவின் ஸாங் யிமோவை (Zhang Yimou) மறக்கவே முடியாது. பல்வேறு விதமான...

Game of Thrones: Season 2 (2012) – English

June 18, 2012
/   TV

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் (என்னது மறுபடியும் லார்ட் ஆஃப் த ரிங்ஸா என்று அலறிவிடாதீர்கள். சும்மா ஒரு சின்ன reference தான்) டோல்கீன் உருவாக்கியிருந்த மிடில் எர்த் என்ற உலகை அந்த நாவல் படித்திருக்கும் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போதைய உலகின் காலத்துக்கு ஆறாயிரம்...

The Man From Earth (2007) – English

June 12, 2012
/   English films

பிரம்மாவைப் பற்றிய ஒரு சிறிய கணக்கு. எனதில்லை. அஃப்கோர்ஸ் நமது புராணங்களிலிருந்துதான். இவற்றின்படி நமது உலகத்தின் காலம், நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம் மற்றும் கலியுகம். இதன் வருடங்கள், reverse chronologyயின்படி எண்ணுவது சுலபம். கலியுகத்துக்கு 4,32,000...

Prometheus (2012) – English

June 9, 2012
/   English films

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், ‘வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்‘ தொடரில், க்ளாட் என்ற மனிதர், அவரை ஏலியன்கள் கடத்திவிட்டதாக ஒரு புத்தகம் எழுதி, அந்தப் புத்தகம் சக்கைப்போடு போட்டதைப் பற்றிப் பார்த்தோமல்லவா? அந்தப் புத்தகத்தில், ஏலியன் ஒருவர் இவருக்குமுன் இறங்கிவந்து, ‘பூமியைப் படைத்தவர்கள் நாங்கள்தான். எங்கள் கிரகத்தின் விஞ்ஞானிகள்தான் இங்கே...

Men In Black 3 – 3D (2012)

May 26, 2012
/   English films

பிரம்மாண்டமான க்ரைஸ்லர் கட்டிடத்தின் உச்சியில் நிற்கிறான் ஏஜெண்ட் ஜே. அவனது கையில் மிகச்சிறிய கருவி ஒன்று. அதில் ஏதேதோ எண்கள் தெரிகின்றன. பலத்த காற்று. அவனுக்குப் பின்னால் ப்ரின்ஸ் என்பவன் நின்றுகொண்டிருக்கிறான். ’குதி’ என்கிறான் ப்ரின்ஸ். ஜேவின் முகம் முழுக்கவே பயம். இங்கேயிருந்து குதிக்கவேண்டும் என்பதை அவனால்...

Swades (2004) – Hindi

May 18, 2012
/   Hindi Reviews

Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress. காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது...

Birdcage Inn (1998) – South Korean

May 7, 2012
/   world cinema

கிம் கி டுக் சீசன் 2 இன்றிலிருந்து ஆரம்பம். அவரது புகழ்பெற்ற படங்களை சீசன் ஒன்றில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இனி, அவரது அதிகம் புகழ்பெறாத – ஆனால் தரத்தில் பிற படங்களுக்குக் குறையாத படங்களைப் பார்க்கப்போகிறோம். ஒரு படத்தைக் கூட விடுவதில்லை. அட்லீஸ்ட் மாதம் ஒரு படம்....

The Avengers (2012) – English

April 27, 2012
/   English films

  முன்குறிப்பு- நீண்டநாட்கள் கழித்து இக்கட்டுரையைப் புதிதாக வாசிக்கும் நண்பரா நீங்கள்? இதைப் படிப்பதற்கு முன்னர் நீங்கள் படிக்கவேண்டிய பிற கட்டுரைகள்: Avengers – 1 – Stan Lee Avengers – 2 – The Three Monsters Avengers – 3 – The...

Avengers – 5 – The Film

April 25, 2012
/   English films

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை நிதானமாகப் படிக்கும்படி நண்பர்களைக் கெட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை நன்கு புரிந்துகொள்ளமுடியும். ‘The Avengers‘ காமிக்ஸ் சம்மந்தப்பட்ட அத்தனை பிரதான விபரங்களையும் பார்த்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இனிமேல், இந்தக் கட்டுரையில், இந்தத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்....

Avengers – 4 – Nick Fury

April 24, 2012
/   English films

இதுவரை வெளிவந்துள்ள அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களான ‘Iron Man’, ‘The Incredible Hulk’, ‘Iron Man 2’, ‘Thor’ மற்றும் ‘Captain America: The First Avenger’ படங்களிலெல்லாம் ஒரு பொதுவான இழை உண்டு. அந்த இழையைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையை எழுதாமல் Avengersதிரைப்படத்தைப் பற்றி...

Avengers – 3 – The Avengers

April 22, 2012
/   English films

சென்ற கட்டுரையில் நாம் பார்த்த மூன்று மான்ஸ்டர்கள்தான் அறுபதுகளில் அமெரிக்க காமிக்ஸ் உலகின் மிக விரும்பப்பட்ட கதாபாத்திரங்களில் சிலர். இந்த மூவரையும் உருவாக்கிய பிரம்மா ஸ்டான் லீ, ஒரு பிரம்மாண்டமான ஹீரோக்கள் குழுமத்தை உருவாக நினைத்தார். அப்படி ஏற்கெனவே DC காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக்குக்குப் போட்டியாக அவர்...

Avengers – 2 – The Three Monsters

April 20, 2012
/   English films

சென்ற பாகத்தில், ஐம்பதுகளில் Fantastic Four காமிக்ஸ்கள் சக்கைப்போடு போட்டன என்று படித்தோம் அல்லவா? இதன்பின்னர், கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக்கினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு...

Avengers – 1- Stan Lee

April 18, 2012
/   English films

அடுத்த வாரம் Avengers படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? இந்த கும்பல் ஏன் அவெஞ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் எப்படி உருவானார்கள்? இதுபோன்ற சில விஷயங்களை ஓரிரு கட்டுரைகளில் பார்த்துவிடுவதே நோக்கம். இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால், படம் பார்க்கும் அனுபவம் இன்னமும்...

Periyar (2007) – Tamil (அல்லது) கலகக்காரர் தோழர் பெரியார்

April 16, 2012
/   Tamil cinema

சென்ற வருடம், நண்பர்களால் நடத்தப்படும் ‘குலேபகாவலி’ blogகில், ‘அத்தனையையும் உடைப்போம்’என்று ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்தக் கட்டுரையை எழுதிய நண்பரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். அக்கட்டுரையை அவர் எழுதியதே, பெரியாரின் மேல் இருக்கும் மதிப்பினால்தான். பெரியாரைப் பற்றித்...