The Raven (2012) – English
August 7, 2012
/ English films
எட்கர் அலன் போ ஒரு பூங்காவின் பெஞ்ச்சில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அவர் முகம் வாடியிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறார். சூரியன். அதனைச்சுற்றி ஒரு காகம் பறந்துகொண்டிருக்கிறது. அக்டோபர் 7. 1849. இறக்கும் தருவாயில் இருந்த எட்கர் அலன் போ, பால்டிமோரின் ஒரு பூங்காவின் பென்ச்சில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது இறுதி நாட்களில்...