Muthu Engira Kaattaan (2026) – Tamil

April 15, 2026
/   series

இந்த சீரீஸ் எனக்கு மிகவும் பிடித்ததுபற்றி எழுதுவதாக இரண்டு வாரங்கள் முன்னால் ஃபேஸ்புக்கில் சொன்னேன். ஆனால் உடனேயே இடைவிடாத சில பயணங்கள் அமைந்ததால் எதுவுமே எழுத முடியவில்லை. இப்போதுதான் நேரம் கிடைத்தது. இந்த சீரீஸ் வெளியானதும் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களைப் பார்த்தேன். ஆனாலும் சீரீசை எப்படியாவது பார்க்கவேண்டும்...

Harlan Coben Collection – Netflix – Must Watch

March 19, 2026
/   Web Series

ஹார்லான் கோபென் ஒரு புகழ்பெற்ற த்ரில்லர் நாவல் எழுத்தாளர். அவரது 12 நாவல்களை நெட்ஃப்ளிக்ஸ் மொத்தமாக வாங்கி, பனிரண்டு சீரீஸ்களாக எடுத்திருக்கிறது. எல்லாமே ஒரே ஒரு சீசன் மட்டுமே. Limited Seriesகள். கொரோனா காலத்தில் மிகவும் பிரபலம் ஆன Innocent நினைவிருக்கிறதுதானே? அது இந்த ஹார்லான் கோபென்...

Parasakthi (2026) – Tamil: A Detailed Analysis

January 14, 2026
/   Tamil cinema

பராசக்தி திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. அந்தப் படம் பரவலாக எதிர்பார்க்கப்பட்டும் வந்தது. இப்போது திரைப்படம் வெளியான நிலையில் அந்தப் படம் பற்றிய மிக விரிவான ஒரு analysisஐ எழுதியிருக்கிறேன். எந்தவித சார்புநிலையும் இல்லாமல், திறந்த மனதோடு இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்கவும். முதலில், பராசக்தி என்ன...

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 3

November 7, 2025
/   Cinema articles

இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1 Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2 உக்ரம் முடித்ததுமே ப்ரஷாந்த் நீல் துவக்கிய படம்தான் KGF என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப்...

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2

July 22, 2025
/   Cinema articles

சென்ற பாகத்தில் ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகளுக்கு அடிப்படையாக அமைந்த இந்திப் படங்கள் பற்றிப் பார்த்தோம். எல்லாமே சலீம்-ஜாவேத் எழுதியவை. அமிதாப் பச்சன் நடித்தவை. இனி, ப்ரஷாந்த் நீலின் திரைக்கதைகள் எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்று கவனிக்கலாம். முதலில் அவரது கதைகளின் பின்னணி எப்படி எழுதப்பட்டிருக்கிறது? அதன்பின் அவரது கதாபாத்திர...

Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1

July 18, 2025
/   80s Tamil

KGF இயக்குநர் ப்ரஷாந்த் நீல் இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரது எந்த அறிவிப்பு வெளியானாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களுமே (முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பெரிய ஹிட்) மிக நன்றாக ஓடியதாலேயே அவருக்கு இந்த எதிர்பார்ப்பு...

சினிமா ரசனை 2.0 – புதிய புத்தகம்

July 2, 2025
/   Announcements

இந்து தமிழ் திசை பத்திரிக்கையில் சென்ற வருடம் பல வாரங்கள் தொடராக வந்து, இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘சினிமா ரசனை 2.0’. இதற்குச் சில வருடங்கள் முன்னர் தமிழ் இந்து பத்திரிக்கையில் ‘சினிமா ரசனை’ என்ற தொடரை விரிவாக எழுதினேன். அதில் சினிமா ரசனை என்றால்...

திரை புத்தகம் – புதிய தொடர்

March 20, 2025
/   Cinema articles

Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின் பதிப்பாசியர்களாக Ramjee & Gayathri மற்றும் பொறுப்பாசிரியராக Deepa Janakiraman ஆகியவர்கள் இருக்க, பல கட்டுரைகள் இந்த முதல் இதழில் வெளிவந்திருக்கின்றன. இந்த முதல் இதழில் இருந்து இனி நமது புதிய...

The Day of the Jackal – TV Series

March 11, 2025
/   Cinema articles

பள்ளி படிக்கும்போது முதல்முறையாக the day of the jackal நாவலைப் படித்தேன். அப்போதைய காலகட்டத்தில் மிக விறுவிறுப்பான pulp நாவலாக இது இருந்தது. சிறுவயதில் நாம் படித்து அசந்து போனவை இன்று வரை நினைவிருக்கும் அல்லவா? அப்படி அந்த நாவலும் நினைவுள்ளது. அதன்பின் அதே போல...

Bramayugam (2024) – Malayalam

February 20, 2024

ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய...

OTT Platforms & Films – An analysis

September 20, 2021
/   Cinema articles

அந்திமழை மே 2021 இதழுக்காக எழுதியது. நான் சாஃப்ட்வேரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பெங்களூரில், 2008ன் இறுதி மாதங்களின்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் Bigflix என்ற திட்டத்தின்கீழ், வாரம் மூன்று டிவிடிக்கள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இதில் ஒரு மெம்பராக சேர்ந்து, கிட்டத்தட்ட 2011 ஜூன், ஜூலை வரை ஏராளமான...

Tamil Multistarrer films – an Analysis

September 19, 2021
/   Cinema articles

February 2021 அந்திமழை இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றியும் பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே பேட்ட, இறைவி போன்ற படங்களில் ரஜினி,...

Tenet (2020) – English – 2

May 20, 2021
/   Cinema articles

TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு...

Nayattu (2021) – Malayalam

May 14, 2021
/   Cinema articles

நாயாட்டு படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் பற்றி விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. படத்தில் தலித்களை வில்லன்களாக சித்தரித்து, அவர்கள் வேண்டுமென்றே எதிர்தரப்பான போலீஸைப் பழிவாங்க நினைத்து, அதை அரசியல் ஆக்கி, இறுதியில் தேர்தலில் மக்கள் மனதை மாற்றக்கூடிய சக்திகளாக ஆக்கப்பட்டு இருப்பதைப் பலரும் விமர்சிப்பதைக் காண முடிகிறது. அப்படி...

எஸ்.பி. பாலசுப்ரமணியம்: பிறமொழிப் பாடல்கள்

May 11, 2021
/   Cinema articles

சென்ற வருடம் இந்தியா டுடேயின் எஸ்.பி.பி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. எஸ்.பி.பி பாடிய, தமிழைத் தவிர்த்த பிறமொழிப் பாடல்கள் பற்றியது. எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் தெலுங்கு என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் அவர் பாடிய இரண்டாம் பாடல், கன்னடம். இதையும் எஸ்.பி....

Tenet (2020) – English – 1

December 8, 2020
/   Cinema articles

Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர்...

Soorarai Pottru (2020) – Tamil

November 15, 2020
/   Tamil cinema

ஒரு ஏழை இளைஞன் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்துகொண்டு, ஒரு பைசா கூட இல்லாத இடத்தில் இருந்து மேலே வந்து அந்தக் கனவை நிறைவேற்றுகிறான். இந்த வகையான inspiring படங்கள் உலகெங்குமே நிறைய வந்திருக்கின்றன. தமிழில் இவை மிகக் குறைவு. ஒரு காலகட்டம் வரை தமிழில் அண்ணாமலை,...

Softwareம் கருந்தேளும்

September 6, 2020
/   Social issues

அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை. பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக்...

The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும்

July 14, 2020
/   screenplay

இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில்...

Sports films and biopics of Hollywood

July 4, 2020
/   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக...

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

September 11, 2010
/   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...

கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

October 27, 2010
/   Copies

கமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

September 5, 2010
/   Copies

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...

எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்

October 5, 2010
/   Copies

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...

எந்திரன் – எதிர்வினைகள்

October 7, 2010
/   Copies

சென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். 1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்....

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்

June 16, 2010
/   80s Tamil

இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...

Hitch (2005) – English

August 13, 2010
/   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’

August 16, 2011
/   series

வெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. ஆசை என்பதைவிட, ஆர்வம் என்று சொன்னால் சரியாக இருக்கும். திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான வேலை. ஆகவே, திரைக்கதை என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன? திரைக்கதை வடிவம் என்பது எப்படி...

Bahubali: The Beginning (2015) – Tamil & Telugu

July 14, 2015
/   Tamil cinema

‘இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்’, ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி’, ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்’ என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி’ என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம். ‘ஹாலிவுட் ஃபாண்டஸிகளுக்கான இந்தியாவின் பதில்’...

ஆரண்ய காண்டம் (2010) – விமர்சனம்

June 15, 2011
/   Tamil cinema

தமிழ்ப்படங்களில் இதுவரை, பல பள்ளிகளை நாம் பார்த்து வந்திருக்கிறோம். படு சீரியஸான, அழுவாச்சிப் படங்கள் என்றால் அது பீம்சிங் பள்ளி. கொஞ்சம் நகைச்சுவை, சிறிது செண்டிமெண்ட், ரொமான்ஸ், கவர்ச்சி ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டுப் பரிமாறப்பட்டால், அது ஸ்ரீதர் பள்ளி (ஸ்ரீதரை, தமிழ்ப்படங்களில் ஒரு மைல்கல்...

Interstellar (2014) – English: Analysis – part 1

November 9, 2014
/   English films

இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன்.  முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன்...

War of the Ring – மின்புத்தக ரிலீஸ்

June 4, 2012
/   series

ஹாய் friends… எங்களது மூன்று மாத முயற்சி, இதோ இப்போது உங்கள் பார்வைக்கு. இந்த இணைப்பில் ‘War of the Ring’ – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய மின்புத்தகத்தை download செய்துகொள்ளலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் அனுப்புங்கள —> waroftheringtamil@gmail.com (update –...

A Serbian Film (2010)–Serbian

May 23, 2011
/   world cinema

நமது தளத்தில், இதுவரை பார்த்துவந்த படங்களுக்கு நேர் எதிரானதொரு படத்தை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ‘நேர் எதிர்’ என்று நான் சொன்னதற்குக் காரணம், வழக்கமான மென்சோக உணர்வையோ, அல்லது நகைச்சுவை உணர்வையோ, அல்லது இவற்றைப் போன்ற உணர்வுகளையோ இப்படம் தராது. இப்படம் தரக்கூடிய உணர்வு, பயம் –...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

July 22, 2010
/   80s Tamil

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும்...

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

July 13, 2010
/   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது...

விண்ணைத் தாண்டி வருவாயா …

February 28, 2010
/   Romance

நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...

உத்தம வில்லன் (2015) – Tamil

May 3, 2015
/   Tamil cinema

கட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். இருப்பினும் படம் பார்க்க அவை தடையாக இருக்காது. எனது ‘விஸ்வரூபம்’ விமர்சனத்தின் ஆரம்ப சில வரிகள் இவை. இவற்றுக்கும் உத்தம வில்லனுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவற்றை இங்கேயும் கொடுக்கிறேன்.   கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில்...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

June 10, 2010
/   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...

Inception (2010) – விமர்சனம்

July 17, 2010
/   English films

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக்...

இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் உன்மத்தம்

April 5, 2012
/   Tamil cinema

எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல்,...

ஸ்டான்லி குப்ரிக். இவரைப் பற்றி எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்களே போதும் இவரைப்பற்றிச் சொல்ல. உலக சினிமா மேதைகளில் ஒருவர். அவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த ‘Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb’ என்ற படம். இப்படம், இன்றும் ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒரு அரசியல் படமாகக் கருதப்படுகிறது. இது, Black Comedy வகையைச் சேர்ந்த படம். அதாவது, சமூகத்தில் நிகழும் அவலங்களுக்கு, என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டே போய், நமது அரசியலும், அரசியல்வாதிகளுமே காரணம் என்று சொல்லி, அவர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட ஒரு படமாகும் இது.

இப்படம் வெளிவந்த வருடத்தைக் கவனியுங்கள். 1964. உலக வல்லரசுகள் ஒருவரையொருவர் அழிக்க, அணுகுண்டுகளை முழுமுனைப்புடன் தயாரித்துக்கொண்டிருந்த காலம். அதிலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த காலம். இப்படத்தைப்பற்றி ஒரு உதாரணத்துக்குச் சொல்லவேண்டும் என்றால், இப்பொழுது, நம் இந்தியாவில் பல அணுகுண்டுகள் பல்வேறு மையங்களில், பாகிஸ்தானை நோக்கிக் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த ராணுவ மையங்களில், ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்த ஒரு மேலதிகாரி, திடீரென்று பைத்தியம் பிடித்து, அவரிடம் உள்ள அணு ஆயுதங்களை பாகிஸ்தானின் மேல் ஏவிவிட்டுவிடுகிறார்; இன்னும் சிறிது நேரத்தில் அவை வெடிக்கப்போகின்றன. அப்பொழுது, இந்த அதிகாரி செய்த முட்டாள்தனத்தின் முழு விளைவும் நம் பிரதமர் மேல் விழுகிறது. அவர் இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை என்று வைத்துக்கொள்ளலாம். இந்தியா, பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா, ரஷ்யா.

ஜாக் ரிப்பர், ஒரு ராணுவ ஜெனரல். திடீரென்று ஒருநாள், கம்யூனிஸ்டுகள் மேல் உள்ள வெறுப்பால், தன்னிடம் உள்ள அனைத்து அணு ஆயுத விமானங்களையும், ரஷ்யாவின் மேல் ஏவி விட்டு விடுகிறார். காரணம்: கம்யூனிஸ்டுகளால் தான், தண்ணீரில் ஃப்ளூரைட் கலக்கப்பட்டு, அதனை நாம் குடிப்பதனால், நமது உடலில் உள்ள திரவங்கள் கெட்டுவிடுகின்றன என்பதை அவர் தீவிரமாக நம்புவதுதான் (???!!!). ஏவிவிட்டவர், ஆபத்துக்காலத்தில் பின்பற்ற வேண்டிய ‘Wing Attack R’ என்ற ஒரு ஆணையைப் பிறப்பித்து விடுகிறார். இதனால், அந்த விமானங்களை, இவரிடம் உள்ள ஒரு ரகசியக் குறியீட்டின் மூலம் மட்டுமே திரும்ப அழைக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியே நினைத்தாலும், ஒன்றும் செய்ய இயலாது.

விமானங்களை ஏவிவிட்டபின், ரிப்பர் அவசரகால உத்தரவைப் பிறப்பித்து, தனது அறையினுள் சென்று, பூட்டிக்கொண்டு விடுகிறார். அவருடன் சேர்ந்து மாட்டிக்கொள்வது, அவரது எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசர் மேண்ட்ரேக். இந்த உத்தரவினால், முகாமை நெருங்கும் எந்த சக்தியாயினும் சரி, சுடப்படும்.

இத்தகைய ஒரு நெருக்கடி, அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்படுகிறது. பெண்டகனில் இருக்கும் ‘பக் டர்ஜிட்ஸன்’ என்ற ஜெனரல், இதனால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி, ஜனாதிபதியிடம் விளக்குகிறார். நன்மை: ரஷ்யாவைப் பூண்டோடும் வெங்காயத்தோடும் (நன்றி: சுஜாதா) அழித்துவிடுவது. தீமை: ரஷ்யா திருப்பித்தாக்கினால், பல மில்லியன் அமெரிக்கர்கள் இறக்க நேரிடும்.

ஆனால், ஜனாதிபதிக்கு இதில் விருப்பமில்லை. அவர், ரஷ்ய தூதரை வரவழைத்து, அவரிடம் நிலைமையை விளக்குகிறார். ஒரே வழிதான் உள்ளது என்று சொல்லும் ஜனாதிபதி, ரஷ்யாவிற்கு, தாக்கவரும் விமானங்கள் பற்றித் தகவல் கொடுத்து, அவற்றை அழிப்பதே அந்த வழி எனக்கூறி, ரஷ்ய உயரதிகாரியிடம் இந்த தூதரைப் பேசச் சொல்கிறார். அவரிடம் பிறகு தானே பேசும் ஜனாதிபதி, அவர் பயங்கரமாக சரக்கடித்துவிட்டு, படு மப்பில் இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இருவருக்கும் இடையில் வரும் உரையாடல், நகைச்சுவையின் உச்சம் என்று சொல்லிவிடலாம்.

அந்த தூதர், திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுகிறார். தங்களிடம் ஒரு அபாயகரமான கருவி இருப்பதாகவும், அக்கருவியின் மேல் ஒரு சிறிய குண்டு விழுந்தாலும், உலகையே அழிக்கக்கூடிய ஒரு கதிரியக்கத்தை அது உற்பத்தி செய்யும் என்றும், அடுத்த 93 வருடங்களில், உலகம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் சொல்கிறார்.

ஜனாதிபதிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியாமல், கடைசி முயற்சியாக, ஒரு படைப்பிரிவை ஏவிவிட்டு, இதற்கெல்லாம் காரணமான ஜாக் ரிப்பரைப் பிடித்துவரச் சொல்கிறார். அவரிடம் தான் அந்த ரகசியக்குறியீடு இருப்பதனால், அதனை வைத்து விமானங்களைத் திருப்பி அழைத்துவிடலாம் என்பது அவரது யோசனை.

இதன்பின் என்ன நடந்தது? ரஷ்யா அழிக்கப்பட்டதா? அல்லது விமானங்கள் திரும்பப்பெறப்பட்டனவா? ஜாக் ரிப்பர் என்ன ஆனார்? எல்லாக் கேள்விகளுக்கும், இந்தப்படத்தைப் பாருங்கள்.

இப்படம் வெளிவந்த காலத்தில், ஒரு மிக முக்கியமான அரசியல் படமாக (இப்போதும்தான்) கருதப்பட்ட இப்படத்துக்கு, பல விருதுகள் கிடைத்தன. கறுப்பு-வெள்ளைப் படமான இதிலும், குப்ரிக் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். கொஞ்சம் கூட போரே அடிக்காமல், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அதே விறுவிறுப்புடன் செல்லும் இந்தப்படம், உலக அரசியல் தலைவர்களை, வெகுவாகப் பகடி செய்கிறது. பொறுப்பே இல்லாமல், அணுஆயுதங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தத் தலைவர்கள் நினைத்தால், ஒரு சிறிய உத்தரவினால், இந்த உலகையே அழித்து விட முடியும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

முக்கியமாக, இப்படத்தில் வரும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ் என்ற விஞ்ஞானி, அமெரிக்க ஜனாதிபதியிடம், குண்டு வெடித்தால், அதன்பின் செய்ய்ய வேண்டிய பல்வேறு சாத்தியக்கூறுகளைப் பற்றி உரையாடும் காட்சி, கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதில் அவர், ஜனாதிபதியை, ஹிட்லர் என்றே உணர்ச்சி வேகத்தில் நினைத்துக்கொண்டு விடுகிறார். அவரது கை, அவரை மீறி, சல்யூட் செய்வதற்கு மேலெழும்புகிறது. அவருமே, அடிக்கடி, தன்னைமீறி, ‘ஃஃப்யூரர்’ என்றே ஜனாதி பதியை அழைத்து விடுகிறார் (ஃப்யூரர் என்பது ஜெர்மனியில் ஹிட்லர் அழைக்கப்படும் பெயர்).

குப்ரிக்கின் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்படம், மிகவும் சுவாரஸ்யமான ஒரு படம். இப்படத்துடன், புத்தாண்டை எதிர்நோக்குவோம். வரும் ஆண்டு, உலகமக்கள் அனைவருக்கும் ஒரு அருமையான ஆண்டாக இருக்கட்டும்.

நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

இப்படத்தின் டிரைலர் இங்கே.

பி. கு – இரவு, பயணம் செய்ய்ய இருப்பதால், பின்னூட்டங்களுக்கு மறுமொழி, நாளை இடப்படும்