Hitch (2005) – English

by Karundhel Rajesh August 13, 2010   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம்.

சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில் எத்தனை பேர், ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், அந்தப் பெண்ணிடம் சென்று ரைட்ராயலாகப் பேச்சைத் தொடங்கி, இயல்பாகப் பேச முடிகிறது? இது வரை எத்தனை பெண்களைப் பார்த்திருப்போம்? ’அட ! இந்தப் பெண்ணிடம் பேசியே தீரவேண்டும்’ என்று எத்தனை முறை நமது மனம் நம்மிடம் சொல்லியிருக்கிறது? மனம் சொல்லும் யோசனையை ஏதோ ஒரு வினாடி அவசர முடிவில் நிராகரித்து எவ்வளவு முறை அந்தப் பெண்ணைத் தாண்டிச் சென்றிருப்போம்?

Welcome to the club, gentlemen ! ?

நமக்குப் பிடித்த பெண்களிடம் சென்று பேசுவது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு நமக்கெல்லாம் தேவையானது ஒரே விஷயம் தான்.

தன்னம்பிக்கை !

அதற்கென்று, உடனே லேனா தமிழ்வாணன் எழுதும் / எழுதிய கட்டுரைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட வேண்டாம். அதற்குப் பதில், சில படங்களைப் பார்த்தாலே போதும்.

என்னைப் பொறுத்த வரை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் எனக்குப் பெருமளவில் உதவியவை, திரைப்படங்களே. அதிலும் சில படங்கள் உள்ளன. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை சற்றே தொய்வடைகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். உடனே, பின்னியெடுக்கும் எனர்ஜியோடு வேலையைப் (அது எதுவாக இருந்தாலும் சரி) பார்க்கக் கிளம்பி விடுவேன்.

அவற்றில் ஒன்றே Hitch (மற்ற படங்கள் : Top Gun, Hum Tum, Lethal Weapon).

ஹிட்ச்சில் வரும் சில வசனங்களைப் பார்த்தாலே போதும்.

அலெக்ஸ் ஹிட்சின்ஸ் – சுருக்கமாக, ஹிட்ச், என்பவன், தனக்குப் பிடித்த பெண்களிடம் சென்று பேசத் தயங்கும் ஆண்களுக்குப் பயிற்சியளித்து, புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்த்து வைப்பவன். சுருக்கமாக, ஆங்கில ‘ஷாஜஹான்’. இதில் அவன் ஒரு Professional. எத்தகைய பெண்ணிடமும் சென்று பேசி, அவளை Impress செய்துவிடும் திறமை அவனுள் இருக்கிறது. பல அப்பாவி ஆண்களை கோச் செய்து, அவர்களுக்கு, அவர்களது கனவுப் பெண்களை அடைவதற்கு உதவி செய்திருக்கிறான் ஹிட்ச்.

ஸாரா மீலாஸ் என்பவள், ஒரு கிசுகிசு எழுத்தாளினி. அமெரிக்காவின் பிரபலங்களைப் பற்றிய புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலே எடுத்து, பத்திரிகையில் வெளியிட்டு, பரபரப்பைக் கிளப்புவது அவளது வேலை.

ஒருநாள், ஆல்பர்ட் ப்ரென்னமேன் என்பவன், ஹிட்சைத் தேடி வருகிறான். தனது கனவுக்கன்னியைத் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறான். அந்தக் கனவுக்கன்னி யாரென்று பார்த்தால், அமெரிக்காவின் மிகப்பெரும் பணக்காரப் பெண்ணான ‘அலீக்ரா கோல்’. அந்த அலீக்ரா கோலின் வருமான வரி ஆய்வாளர்களில் ஒருவன் தான் இந்த ஆல்பர்ட். அப்படி ஒருவன் இருப்பதே அலீக்ராவுக்குத் தெரியாது.

தத்திப்பயல் ஆல்பர்ட்டுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறான் ஹிட்ச். முதல் பயிற்சி: ஆல்பர்ட் என்று ஒருவன் இருப்பதாக அலீக்ராவுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், ஹிட்ச் சொல்வதை மீறி, ஒரு மீட்டிங்கில், அலீக்ராவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி, தனது மேலதிகாரியைப் பகைத்துக் கொண்டு, தனது வேலையை ராஜினாமா செய்துவிடுகிறான் ஆல்பர்ட் – ஒரு உணர்ச்சி வேகத்தில்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அலீக்ரா, மெதுவாக ஆல்பர்ட்டிடம் வந்து பழகத் துவங்குகிறாள். ஹிட்ச் மற்றும் ஆல்பர்ட்டின் திட்டங்கள் வெற்றிபெறத் துவங்குகின்றன.

அதே சமயம், ஸாரா மீலாஸை ஒரு பப்பில் சந்திக்கும் ஹிட்சுக்கு, அவள் மேல் மெல்லக் காதல் உருவாகிறது. தனது கல்லூரிப் பருவத்தில் தத்திகளின் தலைவனாக இருந்த ஹிட்சுக்கு, அப்போது ஏற்பட்ட ஒரு காதல் தோல்வியின் காரணமாக, எந்தக் காதலியும் தற்போது இல்லை.

மெல்லத் தனது யுக்திகளை ஸாராவின் மேல் பிரயோகித்து, அவளுக்கு நெருக்கமாகிறான் ஹிட்ச். அதே சமயம், யாரோ ஒருவன், பெண்களை ஏமாற்றி, ஆண்களுக்கு உதவி, அவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக ஸாராவுக்குத் தகவல் கிடைக்கிறது. அவனது முகமூடியைக் கிழித்து, அவனைச் சந்தி சிரிக்க வைப்பதாக உறுதி பூணுகிறாள் ஸாரா.

மெல்ல மெல்ல அலீக்ராவிடம் நெருக்கமாகும் ஆல்பர்ட்டின் மேல் அலீக்ராவுக்கும் காதல் உருவாகிறது.

ஆனால், பெண்களை ஏமாற்றும் அந்தக் கயவனுக்குப் பொறியை விரித்துக் காத்திருக்கும் ஸாரா, ஹிட்ச் தான் அவன் என்று ஒரு முக்கியமான தருணத்தில் தெரிந்து கொள்கிறாள். திடுக்கிட்டும் போகிறாள். மறுநாள், ஸாரா வேலை செய்யும் பத்திரிக்கையில், ஹிட்ச்சின் புகைப்படத்தோடு, அலீக்ரா கோலை ஏமாற்றியவன் என்று ஆல்பர்ட்டைப் பற்றிய செய்தி வெளிவந்து விடுகிறது.

ஆல்பர்ட்டின் கனவு இதனால் தகர்கிறது. அலீக்ரா அவனை விட்டு விலகிவிடுகிறாள். ஹிட்ச்சுக்கும் ஸாராவுக்கும் இருந்த காதல் முறிகிறது.

இதன்பின் என்ன ஆனது? ஆல்பர்ட்டும் அலீக்ராவும் சேர்ந்தார்களா? ஹிட்ச் என்னவானான்? விடை தெரிய, படத்தைப் பாருங்கள்.

பொதுவாகவே வில் ஸ்மித், காமெடியில் பின்னுவார். இதில் ’ஷாஜஹான்’ வேடம் வேறு. கேட்க வேண்டுமா? மனிதர் பிய்த்து உதறுகிறார். முதல் காட்சியிலேயே வில் ஸ்மித்தின் அராஜகம் ஆரம்பித்து விடுகிறது. படம் முழுவதும், தன்னம்பிக்கை மிளிரும் தனது யோசனைகளாலும் செய்கைகளாலும் வில் ஸ்மித் சிக்சர் அடிக்கிறார்.

குறிப்பாக, முதல் காட்சியில், பெண்களின் மனப்பான்மை குறித்து அவர் பேசும் நீண்ட வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். அது புரிந்தால், எந்தப் பெண்ணிடமும் சென்று நம்மால் ஜாலியாகப் பேச முடியும்( ஹீ ஹீ).

ஸாரா மீலாஸாக, ஈவா மெண்டிஸ். கால பைரவனில் (கோஸ்ட் ரைடர் ) நமது கவனத்தைக் கவர்ந்த பெண்.

படத்தில் சீரியஸாக எதுவுமே இல்லை. மிக ஜாலியாகச் செல்லும் ஒரு படம் இது. நண்பர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள், மறுபடி பார்க்கலாம். பெண்ணின் மனதைத் தொடுவதற்கு நமக்குத் தேவையான அத்தனை டிப்ஸ்களும் இப்படத்தில் உள்ளன ?

ஹிட்ச் திரைப்படத்தின் ட்ரெய்லர் இங்கே

  Comments

156 Comments

  1. ஹை,ஒரு ஜாலி படம் பத்தின போஸ்ட்..இருங்க படிச்சிட்டு வர்றேன்… 🙂

    Reply
  2. கொஞ்சம் பழைய படம்தான்.. என்னை வில்ஸ்மித்தின் ரசிகனாக மாற்றிய படம் :).. கிளைமாக்ஸ் சான்ஸே இல்லாம இருக்கும் 🙂

    Reply
  3. @ இலுமி – ஹீ ஹீ.. இது ஜாலியோ ஜாலி 😉

    @ இராமசாமி கண்ணன் – அது ! படம் பழசுதான்.. ஆனா நானு இதுவரை பத்து தடவைக்கும் மேல பார்த்துட்டேன் 😉 க்ளைமாக்ஸ்ல வில் ஸ்மித் பேசுற வசனங்கள் கேட்டா முடி குத்திக்கினு நிக்கும்ல 😉

    Reply
  4. ணா..
    தினமும் ஒரு பதிவா கலக்குங்க.. அது ஏன் சரியா 11 மணிக்கு பதிவு போடுறீங்க(இன்னிக்கு வேற Friday 13th) இந்தப்படம் ஹிந்தில த்ராப்பையா காப்பியடிச்சு கோர்ட் வரைக்கும் போகத் தெரிந்ததே.. அதயும் எடுத்து விடுங்க

    Reply
  5. ஆஹா,வாழ்க்கைக்கு ரொம்ப தேவையான படமா இருக்கும் போலயே. 🙂
    ரைட்.சீக்கிரமே பார்க்கலாம்.
    அப்புறம்,ஹீரோ பாத்திரம்,மின்சாரக் கனவு பிரபுதேவா கேரக்டர் மாதிரியே இல்ல? 🙂
    அதிமுக்கியமான ஒரு விஷயம்: இந்த eva பீசுக்கு அந்த இன்னொரு பீசு பெட்டர் ன் உஎனக்கு தோணுது.எப்படி? 😉

    Reply
  6. @ கொழந்த – அந்த ஹிந்திக்காப்பி விஷயம் பதிவுல சொல்ல மறந்துட்டேன். அது ‘பார்ட்னர்’னு ஒரு படு திராபையான படம். இந்த பஸ்ஸுல பெங்களூர்ல இருந்து சென்னை போரப்ப அதப் பார்த்து திடுக்கிட்டுப் போயிட்டேன்.. அட்டக்காப்பி அடிச்சிட்டானுங்க பல சீன்களை.. அதுவும் தொடர்பே இல்லாம.. இதுல கோவிந்தா வேற வந்து கொடூரமா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாரு வேற ;-(

    Reply
  7. @ இலுமி – ஹாஹ்ஹா… மின்சாரக் கனவு பிரபுதேவா மாதிரி இது இல்ல. ஆனா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ரொம்பப் புடிச்சது.

    ஈவாவுக்கு அந்த இன்னொரு லேடி ரொம்ப அழகு தான். அது நம்ம நடாஷா ஹெய்ன்ஸ்ட்ரிச் (ச்பீஷீஸ்) போலவே இருக்கும். அட்டகாசம் 😉

    Reply
  8. ஹாஹா…கோவிந்தாவும்,டான்சும்…

    என்ன ஒரு combination.. 🙂

    Reply
  9. கிம் பட விமர்சனத்திலிருந்து, ஜாலியான படத்திற்கு விமர்சனம். நல்லாயிருக்கு. இது வரை பார்த்ததில்லை. பார்க்கவேண்டும்

    Reply
  10. ஐயா.. இதுக்கு மேல ஒரு எழுத்து அடிச்சாலும்.. எனக்கு RSI வியாதி வந்துடும்.

    முடியல. திரும்ப வாரேன்.

    Reply
  11. என்னைய மாதிரி குழந்தைகள் விரும்பும் வில் ஸ்மித் படமான MIBயையும், உங்களைப் போன்றவர்கள் விரும்பும் Aliயையும் சீக்கிரம் எடுத்து விடுங்க (சீரியஸா அலி பதிவை எதிர்பர்கிறேன்)

    Reply
  12. ஆமா……. போட்டோ கேட்டீங்களா???

    ஹும்… உனக்கு ஓட்ட வாய்டா பாலா

    Reply
  13. @ பின்னோக்கி – ஹீ ஹீ… இப்புடியும் இனி அடிக்கடி வரும்.. படிச்சிட்டு கருத்து சொல்லுங்க 😉 பாருங்க இதை. உங்களுக்குப் பிடிக்கும்

    @ பாலா – RSI வியாதியா? இப்பதான் கூகிள் பண்ணி கண்டுபிடிச்சேன் 😉 – Repetitive strain injury . ஹாஹ்ஹாஹ்ஹா.. சரியான காமெடி 😉

    //ஆமா……. போட்டோ கேட்டீங்களா???

    ஹும்… உனக்கு ஓட்ட வாய்டா பாலா//

    ஹீஹீ 😉

    ஃபோட்டோ பின்னுது தல.. இருவது வயசுக்கு மேல சொல்லவே முடில .. (அட நிசம்மா)

    @ கொழந்த – MIBயா? சரியாப்போச்சு.. அப்புரம் பாலா வந்து, ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்.. அப்படியே சைலண்ட் படத்துக்கெல்லாம் விமரிசனம் எழுதிருங்க’ன்னு கலாய்க்குறதுக்குக் கரெகிட்டா ஐடியா சொல்றீங்களே தல 😉 அலி.. இது ஓகே .. எழுதிரலாம் 😉

    Reply
  14. //என்னைப் பொறுத்த வரை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் எனக்குப் பெருமளவில் உதவியவை, திரைப்படங்களே. அதிலும் சில படங்கள் உள்ளன. எப்போதெல்லாம் தன்னம்பிக்கை சற்றே தொய்வடைகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் படங்களைப் பார்ப்பது எனது வழக்கம்//

    என்னக்கும் அதே பழக்கம் தான். இதுல அந்த டான்ஸ் training செம காமெடி boss

    Reply
  15. @ ShaggyLad – //என்னக்கும் அதே பழக்கம் தான். இதுல அந்த டான்ஸ் training செம காமெடி boss//

    😉 அது !! அதைப் பார்க்கும்போதெல்லாம், கண்டபடி சிப்பு வரும் 😉 சரியா புடிச்சீங்க 😉

    Reply
  16. அடடே, நம்ம படம்.

    வழக்கம் போல ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இந்த படத்தை பார்த்து விட்டேன்.

    Reply
  17. இத தமிழ்ல எடுக்க ரெண்டு மூணு வருஷத்திற்கு முன்னாடி முயற்சி நடந்ததா கேள்வி.

    Reply
  18. கருந்தேள்,

    //அவற்றில் ஒன்றே Hitch (மற்ற படங்கள் : Top Gun, Hum Tum, Lethal Weapon)//

    ஹம் தும் ஒரு கல்ட் கிளாசிக். சைப் அலி கானை மற்ற கான்களுடன் ஸ்டாராக மாற்றியது அந்த படம்தான். அதுமட்டுமில்லாமல் சைப் தனி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற முதல் படமும் அதுவே. ஆனால் என்னை பொறுத்தவரையில் அந்த படத்த்தின் ஹீரோ குணால் கோஹ்ளிதான் (இயக்குனர்).

    அதைப்பற்றி கூட எழுதலாமே?

    Reply
  19. என்ன மக்கா தேளு? தன்னம்பிக்கை கொறஞ்சா நீர் படம் பார்பீரோ? நானெல்லாம் சுவாமிஜியின் அருளுரைகள் கேட்பேன்….நித்யா த்யான் பெற்று எல்லாம் ரஞ்சிதமாய் நடந்துவிடும் 🙂

    Reply
  20. பாலா,

    உங்க புரொபைல்ல யார் அது?

    Reply
  21. அன்பின் ராம்சாமி எங்கிருந்தாலும் குஜாலா வரவும் 🙂

    Reply
  22. மயில்ராவணன் said…

    அன்பின் ராம்சாமி எங்கிருந்தாலும் குஜாலா வரவும் 🙂


    வந்தாச்சு மயில்.. தேளு எங்க 🙂

    Reply
  23. மயில்ராவணன் said…

    தேளு வந்துகினு இருக்காரு………….

    அவரு கடைல எதுக்குப்பா அவரே குறிப்பு வரையனும்..

    Reply
  24. @ விஸ்வா – அதானே 😉 என்னாது தமிழ்ல இந்தப் படத்தயா? அப்ப அதுக்குப் பேரு ஷாஜஹான் பார்ட் டூ வோ? அய்யய்யோ நாம செத்தோம்.. அது வருது.. எல்லாரும் ஓடுங்க 😉

    ஹம்தும் பத்தி எழுதலாம் தான்.. ஆனா, Before Sunsetடின் அப்பட்டமான காப்பியாச்சேன்னு தான் இன்னமும் எழுதாமல் இருக்கிறேன் 😉 .. நீங்க சொல்லிட்டீங்கல்ல.. இதோ எழுதிர்ரேன்.. அடுத்த பதிவுக்கு அடுத்த பதிவு – ஹம் தும்.. அடுத்த பதிவு – நாளை இரவு 11 மணிக்கு 😉 ஹம் தும், சண்டே – இல்லையெனில் மண்டே 😉

    @ மயிலு – யோவ்.. சுவாமிஜியின் அருளுரை எல்லாம் வேனாம்.. அந்த ஒளிப்படம் ஒண்ணே போதும்யா 😉 பின்னணி பாட்டோட வந்துச்சே… ஜாலி. . நீங்க சொல்றது பித்துக்குளி முருகதாஸ் தானே 😉

    @ இராமசாமி கண்ணன் – 😉 அது சரி.. யாருங்க அது அம்சவல்லி கஜக்கோல் 😉

    Reply
  25. @ மயிலு – யோவ்.. சுவாமிஜியின் அருளுரை எல்லாம் வேனாம்.. அந்த ஒளிப்படம் ஒண்ணே போதும்யா 😉 பின்னணி பாட்டோட வந்துச்சே… ஜாலி. . நீங்க சொல்றது பித்துக்குளி முருகதாஸ் தானே 😉


    இல்லிங்கோ பிராமானந்தாகாரு

    @ இராமசாமி கண்ணன் – 😉 அது சரி.. யாருங்க அது அம்சவல்லி கஜக்கோல் 😉

    சுத்த விடராங்க தேளு ஒன்னும் தெரியல 🙂

    Reply
  26. பித்துக்குளி முருகதாஸே தான். மனுசன் பாட ஆரம்பிச்சா.
    ………………………ஆரம்பிச்சா……………

    Reply
  27. மயில்ராவணன் said…

    அது ஆருண்ணே ஸ்வேதா பாப்பா……..லிங்க் ப்ளீஸ்


    ஸ்வேதா பாப்பாவ தெரியாதுன்னு சொன்ன ஆனியவாதி மயிலு ஒழிக 🙂

    Reply
  28. யோவ் நிமிசத்து ஒரு கமெண்டு விழனும் .. இல்லேன்னா நான் இந்த ஆட்டத்துக்கு கா 🙂

    Reply
  29. @ இராமசாமி கண்ணன்
    // இந்த படத்தோட ஹீரோயின் யாரு//

    அண்ணே தெரியாத மாதிரி கேக்காதீங்க…நீங்க மட்டும் பாருங்க . இதோ ஒங்களுக்காக ஈவா மெண்டிஸின் பெர்ர்ர்ர்ரிய படம் – http://www.vivagoal.com/images/wallpapers/eva_mendes_wallpaper.jpg.. போதுமா 😉

    Reply
  30. நேயர் விருப்பத்தை ஏற்ற கருந்தேள் வாழ்க.

    பை தி வே, ஸ்வேதா எங்கே? பாலா எங்கே?

    Reply
  31. இன்னிக்கு இங்க எப்படியும் ஒரு ஆயிரத்துகாது கொண்டு வந்து நிப்பாட்டனும் .. இன்னும் மாவாட்ட போறதுக்கு எனக்கு 2.30 மணி நேரம் டைம் இருக்கு 🙂

    Reply
  32. //யோவ் நிமிசத்து ஒரு கமெண்டு விழனும் .. இல்லேன்னா நான் இந்த ஆட்டத்துக்கு கா 🙂

    டீல்…………

    Reply
  33. King Viswa said…

    நேயர் விருப்பத்தை ஏற்ற கருந்தேள் வாழ்க.

    பை தி வே, ஸ்வேதா எங்கே? பாலா எங்கே?

    தே ஆர் இன் டீப் டிஸ்கஷன் ஜீ 🙂

    Reply
  34. //@ இராமசாமி கண்ணன் – 😉 அது சரி.. யாருங்க அது அம்சவல்லி கஜக்கோல் 😉

    சுத்த விடராங்க தேளு ஒன்னும் தெரியல :)//

    ஆஹா… இத நானு நம்பணுமாக்கும் 😉

    Reply
  35. @ இராமசாமி கண்ணன்
    // இந்த படத்தோட ஹீரோயின் யாரு//

    அண்ணே தெரியாத மாதிரி கேக்காதீங்க…நீங்க மட்டும் பாருங்க . இதோ ஒங்களுக்காக ஈவா மெண்டிஸின் பெர்ர்ர்ர்ரிய படம் – http://www.vivagoal.com/images/wallpapers/eva_mendes_wallpaper.jpg.. போதுமா 😉

    இல்லிங்கோ பத்தாது 🙂


    எனக்கு அந்த படம் பிடிக்க்

    Reply
  36. //–
    ஸ்வேதா பாப்பாவ தெரியாதுன்னு சொன்ன ஆனியவாதி மயிலு ஒழிக 🙂
    //

    இந்த பதிவுலயே நிறைய ஆணாதிக்கம் இருக்கு…….அத விட்டுப்போட்டீங்க………………அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    Reply
  37. கருந்தேள் கண்ணாயிரம் said…

    //@ இராமசாமி கண்ணன் – 😉 அது சரி.. யாருங்க அது அம்சவல்லி கஜக்கோல் 😉

    சுத்த விடராங்க தேளு ஒன்னும் தெரியல :)//

    ஆஹா… இத நானு நம்பணுமாக்கும் 😉


    என்னைய மாதிரி சின்ன கொழந்த சொன்னா அது கடவுளே சொன்ன மாதிரி.. நம்பனும் 🙂

    Reply
  38. //இன்னிக்கு இங்க எப்படியும் ஒரு ஆயிரத்துகாது கொண்டு வந்து நிப்பாட்டனும் .. இன்னும் மாவாட்ட போறதுக்கு எனக்கு 2.30 மணி நேரம் டைம் இருக்கு :)//

    அடப்பாவிகளா… இதே முடிவாத்தேன் அலையுறாங்களோ ?? மேல பாலா கமெண்டு பாருங்க.. அப்புறம் RSI வியாதிதேன் சொல்லிபுட்டேன் 😉

    Reply
  39. அண்ணே தெரியாத மாதிரி கேக்காதீங்க…நீங்க மட்டும் பாருங்க . இதோ ஒங்களுக்காக ஈவா மெண்டிஸின் பெர்ர்ர்ர்ரிய படம் – http://www.vivagoal.com/images/wallpapers/eva_mendes_wallpaper.jpg.. போதுமா 😉


    மயிலு அந்த படத்துல சிலதுல்லாம் கிளியரா இல்ல.. வேற படம் எதுனா இக்கிதா 🙂

    Reply
  40. //என்னைய மாதிரி சின்ன கொழந்த சொன்னா அது கடவுளே சொன்ன மாதிரி.. நம்பனும் :)//

    எங்க அந்தச் சின்னக்கொழந்த மொகத்த கொஞ்சம் காட்டுங்க … ஊஊஊஊஊஊஊஊ 😉

    Reply
  41. தல,

    //தே ஆர் இன் டீப் டிஸ்கஷன் ஜீ//

    கேள்வியே இங்கதான். டிஸ்கஷன் எப்படி? தனியாவா (இவரு ஒரு டிஸ்கஷன்லையும், அவங்க ஒரு டிஸ்கஷன்லையும்) இல்லை ஒன்றாகவா?

    Reply
  42. அதெல்லாம் ஒன்னியும் பயம் இல்ல…நாங்கதான் தாத்தா காப்பீட்டு திட்ட அட்டைவெச்சிக்கினு இருக்கமே? இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?

    Reply
  43. கருந்தேள் கண்ணாயிரம் said…

    //இன்னிக்கு இங்க எப்படியும் ஒரு ஆயிரத்துகாது கொண்டு வந்து நிப்பாட்டனும் .. இன்னும் மாவாட்ட போறதுக்கு எனக்கு 2.30 மணி நேரம் டைம் இருக்கு :)//

    அடப்பாவிகளா… இதே முடிவாத்தேன் அலையுறாங்களோ ?? மேல பாலா கமெண்டு பாருங்க.. அப்புறம் RSI வியாதிதேன் சொல்லிபுட்டேன் 😉


    அவரு கத செப்பினாரு 🙂 பாலாகாரு டிஸ்கஷன்ல உன்னாரு… சப்த நேரம் களிச்சு ஹி வில் பி ஜாயினிங் கும்மி 🙂

    Reply
  44. தல,

    //தே ஆர் இன் டீப் டிஸ்கஷன் ஜீ//

    கேள்வியே இங்கதான். டிஸ்கஷன் எப்படி? தனியாவா (இவரு ஒரு டிஸ்கஷன்லையும், அவங்க ஒரு டிஸ்கஷன்லையும்) இல்லை ஒன்றாகவா?


    பாலாஜி ஆவோஜி… உங்களுக்கு இங்க ஒரு குட் கொஸ்டின் விஸ்வாஜி கேட்ருக்காரு ஜி 🙂

    Reply
  45. //கேள்வியே இங்கதான். டிஸ்கஷன் எப்படி? தனியாவா (இவரு ஒரு டிஸ்கஷன்லையும், அவங்க ஒரு டிஸ்கஷன்லையும்) இல்லை ஒன்றாகவா?//

    இது ஒரு நல்ல கேள்வி. மூளையிலே இருக்கும் ஞாபக சக்தியின் அடுக்குகளில் மின்சாரத்தைப் பாய்ச்சக்கூடிய ஒரு ஞானமிக்க கேள்வி.. இதுக்கு பாலா வந்து பதில் செப்புவாருனு நினைக்குறேன் 😉

    Reply
  46. @ king Viwa
    //தல,

    //தே ஆர் இன் டீப் டிஸ்கஷன் ஜீ//

    கேள்வியே இங்கதான். டிஸ்கஷன் எப்படி? தனியாவா (இவரு ஒரு டிஸ்கஷன்லையும், அவங்க ஒரு டிஸ்கஷன்லையும்) இல்லை ஒன்றாகவா
    //

    அண்ணே விஸ்வாண்ணே நீங்க நல்லவருன்னு தெரியும்,,,,,இப்படி பச்சைபுள்ளயா இருக்கீயளேண்ணே..

    ஒத்தையில் எங்கிட்டு டிஸ்கஷன் பண்ண?

    Reply
  47. அய்யாமாரே… இதுவே என்னால முடில.. கையெல்லாம் வலிக்குது. ரெண்டாயிரமெல்லாம் எப்புடிய்யா உங்களால முடியுது? இதுக்குன்னே ஆளு செட்டப்பு பண்ணி டைப்பிங்கா? 😉 அப்புடிக்கூட முடியாதே நைனா.. என்னமோ போங்க 😉

    Reply
  48. ஆமா பாபா ஏதோ மாட்ரிட் போறேன்னாரே…….. எத்தினி நாள் டூர்? எதுனா விசேடமா? பேயோன் ஒன்னியும் சொல்ல மாட்டேங்குறாரு?

    Reply
  49. scorpy எனக்கு அதுல பிடிச்சது ஆல்பர்ட்ட டான்ஸ் பண்ண வைக்க ஒரு மூவ் கத்து குடுப்பார் பாத்துருகீங்களா?????

    அத ரொம்ப நேரமா ட்ரை பண்ணேன்………
    ரெண்டு ஸ்டெப்தான்னாலும் வரதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு!!!!

    🙂

    Reply
  50. பேயோண்ட்டயே ட்விட்டர்ல கேளும் மயிலு 😉 அவருதான் பாலான்னு அவரு ஒத்துக்க வெய்யும் 😉 அப்புறம் இருக்கு பதிவுலகத்துல சுனாமி 😉

    Reply
  51. கருந்தேள் கண்ணாயிரம் said…

    அய்யாமாரே… இதுவே என்னால முடில.. கையெல்லாம் வலிக்குது. ரெண்டாயிரமெல்லாம் எப்புடிய்யா உங்களால முடியுது? இதுக்குன்னே ஆளு செட்டப்பு பண்ணி டைப்பிங்கா? 😉 அப்புடிக்கூட முடியாதே நைனா.. என்னமோ போங்க 😉


    வெயிட் பார் பூயு மினிட்ஸ் பார் பாலி பாலி 🙂

    Reply
  52. @ ஆனந்த் – அது செம மூவாச்சே 😉 அது ட்ரை பண்ண ‘பழரசம்’ அருந்திட்டு பண்ணா தான் முழுசா வரும் 😉

    Reply
  53. @ ஆனந்த் – அது செம மூவாச்சே 😉 அது ட்ரை பண்ண ‘பழரசம்’ அருந்திட்டு பண்ணா தான் முழுசா வரும் 😉


    கண்டிப்பா வருமா 🙂

    Reply
  54. @ கருந்தேளு
    //பேயோண்ட்டயே ட்விட்டர்ல கேளும் மயிலு 😉 அவருதான் பாலான்னு அவரு ஒத்துக்க வெய்யும் 😉 அப்புறம் இருக்கு பதிவுலகத்துல சுனாமி ;- //

    ஒருவேளை நம்ம உஜிலாவா இருக்குமோ அது? அண்ணன் ராம்சாமி வெளக்கவும் 🙂

    Reply
  55. //வெயிட் பார் பூயு மினிட்ஸ் பார் பாலி பாலி :)//

    ஆஹா… எனக்கு கண்ண சொக்கிக்கினு வருது தல.. இதுக்கு மேல ஆன்னு அடிச்சா அது கீன்னு வருது 😉 அப்புறம், ’கிம்கிதரர்ஹ்ட்ன்ஃப்ஃப்ஹ்க்ஹ்ஃப்ட்’ன்னு எதையாவது புரியாம அடிச்சிருவேனோன்னு தோணுது 😉

    ஸோ, மீ ஸ்லீப்பிங் … பாலா வரட்டும்.. நாளை அவரு கமெண்டை பாக்குறேன் 😉

    Reply
  56. மயில்,

    //ஒத்தையில் எங்கிட்டு டிஸ்கஷன் பண்ண?// நம்ம பாலா ஆழ்நிலை தியானம் ஏதாவது செய்வாரோ? தனியா? அதனாலதான் ஒத்தையில டிஸ்கஷன் பண்றாரா என்று கேட்டேன்.

    மத்தபடி அவர் யாருடன் டிஸ்கஷன் செய்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனா சொல்ல மாட்டேன். கண்டுபுடிங்க பாக்கலாம்?

    Reply
  57. என்னாங்க.. இது… பதிவுக்கு சம்பந்தமில்லாம.. இந்த ஆனந்த் பாபு என்னென்னமோ படத்தை பத்தி பேசிகினு இருக்காரு???

    யோவ்.. விஸ்வா.. இன்னா தெகிரியம் இருந்தா, என்னப் பாத்து அந்த கேள்வி கேட்டிருப்பீங்க.

    மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, சென்னை முதலிய நகரங்களை எரிப்பேன்.

    Reply
  58. @ கருந்தேளு
    //பேயோண்ட்டயே ட்விட்டர்ல கேளும் மயிலு 😉 அவருதான் பாலான்னு அவரு ஒத்துக்க வெய்யும் 😉 அப்புறம் இருக்கு பதிவுலகத்துல சுனாமி ;- //

    ஒருவேளை நம்ம உஜிலாவா இருக்குமோ அது? அண்ணன் ராம்சாமி வெளக்கவும் 🙂


    இல்லிங்க அது ஜெஸ்ஸி 🙂

    Reply
  59. வெள்ளிக்கிழமை-ன்னதும்… எல்லாரும்.. தூங்காம இங்கன என்ன கும்மி?

    Reply
  60. //என்னாங்க.. இது… பதிவுக்கு சம்பந்தமில்லாம.. இந்த ஆனந்த் பாபு என்னென்னமோ படத்தை பத்தி பேசிகினு இருக்காரு???//

    😉 ஆ…….

    Reply
  61. என்னாது பாலா வர்றாரா?

    (ஜுராசிக் பார்க் ஸ்டைல்ல சவுண்ட் எப்பெக்ட் குடுங்க) ஒடுங்க, ஒடுங்க, ஹாலிபாலி வராரு. கமென்ட் பாக்சை மூடி வச்சுட்டு ஒடுங்க.

    Reply
  62. @ கிங் விஸ்வா

    அண்ணே அது தான் மேலேயே சொல்லிட்டேனே….அவுரு அவுகள பாக்கத்தான் போயிருக்காரு. திங்ககிழமைதான் ரிடர்ன்..

    Reply
  63. கருந்தேள் கண்ணாயிரம் said…

    கொர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்…. புர்ர்ர்ர்ர்…. டுர்ர்ர்ர்ர்…. 😉


    இந்த நாதம் எந்த வாத்தியத்திலிருந்து வரும் 🙂

    Reply
  64. //வெள்ளிக்கிழமை-ன்னதும்… எல்லாரும்.. தூங்காம இங்கன என்ன கும்மி?//

    அது வேற ஒன்யும் இல்ல தல.. நானு, கொஞ்சம் ‘லிம்கா’ குடிச்சேன்.. அதுல புத்துணர்ச்சி ஏறிச்சி.. மயிலு ‘ஃபேண்டா’ குடிச்சிருப்பாருன்னு நினைக்குறேன் 😉 விஸ்வா என்ன குடிச்சாருன்னு அவரைத்தான் கேட்கணும் 😉

    Reply
  65. அய்யா.. சாமி..

    இந்த ஏரியா.. லோட் ஆகறதுக்குள்ள.. நான் உஜிலாவுக்கு இன்னொரு பத்து கமெண்ட் டைப் பண்ணிடுவேன்.

    பேயோன் -ன்னு என்னை சொல்லுறதை நிறுத்த மாட்டீங்களா? பாவங்க அவரு.

    நானு இப்பத்தான் #0002 எழுதியிருக்கேன் இன்னும் 998 இருக்கு.

    Reply
  66. //இந்த நாதம் எந்த வாத்தியத்திலிருந்து வரும் :)//

    அது நாதமா இல்ல நாத்தமா 😉 (நல்லவேளை யாரும் கேட்குறதுக்கு முன்னயே நானே இப்புடி போட்டுகினேன் …. ஹீ ஹீ)

    Reply
  67. ஹாலிவுட் பாலா said…

    அய்யா.. சாமி..

    இந்த ஏரியா.. லோட் ஆகறதுக்குள்ள.. நான் உஜிலாவுக்கு இன்னொரு பத்து கமெண்ட் டைப் பண்ணிடுவேன்.

    பேயோன் -ன்னு என்னை சொல்லுறதை நிறுத்த மாட்டீங்களா? பாவங்க அவரு.

    தன்னடக்கம் இருக்கலாம்டா சாமி.. ஆனா இவ்வளவ்வா 🙂

    Reply
  68. ரைட்டு… யாருனா… 1-1000 இங்க எண்ணுறதுக்கு வர்றீங்களா? கருந்தேள்.. ஒவ்வொரு கமெண்டுக்கா பதில் சொல்லுறாராம்.

    Reply
  69. @ இராமசாமி

    //கருந்தேள் கண்ணாயிரம் said…

    கொர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்…. புர்ர்ர்ர்ர்…. டுர்ர்ர்ர்ர்…. 😉


    இந்த நாதம் எந்த வாத்தியத்திலிருந்து வரும் 🙂

    இசை பல பரிமாணங்கள்ல இருக்கும்…. தூண்ல இருக்கும்,,,,,துரும்புல இருக்கும்….இரும்புல இருக்கும்….

    Reply
  70. //இந்த ஏரியா.. லோட் ஆகறதுக்குள்ள.. நான் உஜிலாவுக்கு இன்னொரு பத்து கமெண்ட் டைப் பண்ணிடுவேன்.//

    தல.. இந்த ஏரியா படு ஸ்லோ.. 😉 நாங்கெல்லாம் இப்பத்தான் கமெண்டு அடிச்சிப் பளகுறோம்.. 😉 பிக்கப்பு பண்ண கொஞ்ச காலம் ஆகும் 😉

    //பேயோன் -ன்னு என்னை சொல்லுறதை நிறுத்த மாட்டீங்களா? பாவங்க அவரு.//

    இதுக்கு முழுமுதல் காரணம், மயிலே தான். அவரைப் பிடிங்க 😉

    Reply
  71. பாலி இப்பதான் ஏதோ ஒன்னு ரெண்டு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்

    நீங்களா பாத்து ஏதாவது பண்ணா சரி ////

    ஏதோ பேயரஞ்ச மாதிரி ஒரு பீலிங் =)

    என்ன பண்ணலாம்!!!!
    !scorpy simple ah ஒரு ஆ வோட முடிச்சுடீங்க O.o

    Reply
  72. ஷேம்.. ஷேம்… கூகிள் ஷேம்…

    என்னோட வேகத்துக்கு கூகிளால ஈடு கொடுக்க முடியலை.

    ப்லாக் லோட் ஆக தடுமாறுகிறதே சாமி

    Reply
  73. //ரைட்டு… யாருனா… 1-1000 இங்க எண்ணுறதுக்கு வர்றீங்களா? கருந்தேள்.. ஒவ்வொரு கமெண்டுக்கா பதில் சொல்லுறாராம்.//

    அய்யய்யோ !! சாமிகளா !!! செத்தேன்… 😉 நிசம்மாவே கண்ணு இருட்டிகினு வருது 😉 நானு இப்ப எஸ்கேப்.. தூங்க 😉 நாளை வரேன் தல 😉

    Reply
  74. சரி இன்ரிலிருந்து பேயோன்னு ஹாபா வக் கூப்பிடாதீங்க…… சொல்லிட்டேன்

    Reply
  75. //ப்லாக் லோட் ஆக தடுமாறுகிறதே சாமி//

    அதே தான் இங்கயும் 😉 என்ன கொடுமை இது… மீ ஸ்லீப்பிங் தல… முடியல 😉

    Reply
  76. கருந்தேள் கண்ணாயிரம் said…

    //ரைட்டு… யாருனா… 1-1000 இங்க எண்ணுறதுக்கு வர்றீங்களா? கருந்தேள்.. ஒவ்வொரு கமெண்டுக்கா பதில் சொல்லுறாராம்.//

    அய்யய்யோ !! சாமிகளா !!! செத்தேன்… 😉 நிசம்மாவே கண்ணு இருட்டிகினு வருது 😉 நானு இப்ப எஸ்கேப்.. தூங்க 😉 நாளை வரேன் தல 😉


    பார்லி வாட்டர் குடிங்க தேளு.. தூக்கம் வராது 🙂

    Reply
  77. வாயு வேகம், மனோ வேகத்தினால் கூகிளின் வேகத்தை தோற்கடித்த எங்கள் தானைத்தலைவன் ஹாலிபாலி வாழ்க, வாழ்க.

    Reply
  78. பெங்களூரில் யாருனா இருந்தீங்கன்னா.. கருந்தேளை எழுப்பி விடுங்க.

    நானு பாட்டுக்கு ரொம்ப ‘பிஸி’யா இருந்தேன். இப்ப இந்தப் பதிவை போட்டுட்டு தூங்கப் போறாராம்.

    ஆனந்த் பாபு…. விடாதீங்க. என்ன செலவானாலும் பரவாயில்லை.

    Reply
  79. ஒருவேளை ப்ளாக்கும் லிம்கா சாப்பிட்டிருக்குமோ….

    Reply
  80. மயில்ராவணன் said…

    சரி இன்ரிலிருந்து பேயோன்னு ஹாபா வக் கூப்பிடாதீங்க…… சொல்லிட்டேன்


    அப்படின்னா ஹாபான்னு பேயோன்ன கூப்பிடலாமா 🙂

    Reply
  81. மயில்ராவணன் said…

    ஒருவேளை ப்ளாக்கும் லிம்கா சாப்பிட்டிருக்குமோ..

    இல்ல அக்காமாலா சாப்பிடிச்சு 🙂

    Reply
  82. பாலா,

    உங்க புரொபைல்ல யார் அது?

    Reply
  83. @ ஹாபா
    //என்ன செலவானாலும் பரவாயில்லை //

    இது என்ன ஏதோ ஒரு படத்துல கவுண்டமணி சொல்றமாதிரி கீது… “எவன் வந்தாலும் வெட்டுவேன்…எவன் வந்தாலும் வெட்டுவேன்னு…கி கி கி..

    Reply
  84. ஹும்…
    கும்மியின் மூடை
    கெடுக்கிறதே.. இந்த
    கூகிளின் வேகம்

    கவிதைகள் கொட்டுகிறதே
    கடமைகள் அழைக்கிறதே
    வா ஸ்வேதா
    என் முனியம்மா

    Reply
  85. அவரு..
    நல்ல கமெண்ட் போடுறவங்களுக்கு
    ஹாலிவுட் ஹீரோ…

    ஸ்பேம் போடுறவங்களுக்கு டெரர்

    Reply
  86. ஆனந்த் பாபு said…

    வேணும்னா நான் ஒரு பாட்டு பாடவா scorpy?????


    நாங்க தேளு மட்டும்தான் தூங்க வேண்டான்னு சொன்னோம்.. டோட்டல் இந்தியாவும் இல்ல 🙂

    Reply
  87. @ பாபா
    //அவரு..
    நல்ல கமெண்ட் போடுறவங்களுக்கு
    ஹாலிவுட் ஹீரோ…

    ஸ்பேம் போடுறவங்களுக்கு டெரர்
    //
    தானே உக்காந்த தானைத்தலைவர் ஹாபா வாழ்க வாழ்க..

    Reply
  88. இராமசாமி கண்ணன்,

    //King Viswa said…

    பாலா,

    உங்க புரொபைல்ல யார் அது?


    பாலாதான் ஜீ அது :)//

    நீங்க எத்துனை தடவை சொன்னாலும் நான் நம்பமாட்டேன். ரேஷன் கார்ட் ஜெராக்ஸ காட்ட சொல்லுங்க, இல்லன்னா கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைய காட்ட சொல்லுங்க.

    Reply
  89. யோவ் மயிலு நாங்க மாங்கு மாங்குன்னு கமெண்டு போட்டுட்டு இருக்கோம்.. சும்மா ஒக்காந்து வேடிக்க பாத்துகின்னு இருக்கிங்க..

    Reply
  90. நானு பாடுறேன் ஆனந்த்…

    என்னாடி முனியம்மா உன்
    கண்ணுல மைய்யி…

    யாரு வச்ச மைய்யி..
    இது நான் வச்ச மைய்யி..

    நீ முன்னால போனா நான்
    பின்னாலே வாரேன்…ட்ட்டு ட்ட்டு..ட்ட்டுட்டுட்ம்

    கட்டப்புள்ள் குட்டப் புள்ள
    கருகமணி பொட்டப் புள்ள
    நாட்டுக்கு வந்த புள்ள கண்ணம்மா
    இனி நாந்தாண்டி உம்புருசன் பொன்னம்மா

    Reply
  91. Me the 100 (அப்படின்னு நினைக்குறேன்)

    Reply
  92. நானும் பாடறேன்
    —-

    ஸிங்க் இன த ரெயின்…
    ஐயம் ஸ்வங்க் இன் த ரெயின்…
    ஸிங்க் இன த ரெயின்…
    ஐயம் ஸ்வங்க் இன் த ரெயின்…
    ஸிங்க் இன த ரெயின்…
    ஐயம் ஸ்வங்க் இன் த ரெயின்…
    ஸிங்க் இன த ரெயின்…
    ஐயம் ஸ்வங்க் இன் த ரெயின்…
    ஸிங்க் இன த ரெயின்…
    ஐயம் ஸ்வங்க் இன் த ரெயின்…

    Reply
  93. நானு பாடுறேன் ஆனந்த்…

    என்னாடி முனியம்மா உன்
    கண்ணுல மைய்யி…

    யாரு வச்ச மைய்யி..
    இது நான் வச்ச மைய்யி..

    நீ முன்னால போனா நான்
    பின்னாலே வாரேன்…ட்ட்டு ட்ட்டு..ட்ட்டுட்டுட்ம்

    கட்டப்புள்ள் குட்டப் புள்ள
    கருகமணி பொட்டப் புள்ள
    நாட்டுக்கு வந்த புள்ள கண்ணம்மா
    இனி நாந்தாண்டி உம்புருசன் பொன்னம்மா


    அம்சு, ஜெஸ்ஸி, கண்ண்ம்மா, பொன்னம்மா எத்தினி பேரு ஜீ. நீ மெய்யாலுமே பெரிய ஆளுதான் 🙂

    Reply
  94. காத்தடிக்குது காத்தடிக்குது..
    காசிமேட்டு காத்தடிக்குது

    Reply
  95. //அவரு..
    நல்ல கமெண்ட் போடுறவங்களுக்கு
    ஹாலிவுட் ஹீரோ…

    ஸ்பேம் போடுறவங்களுக்கு டெரர்//

    என்ன கொடுமை பாலா இது? தெலுங்கு டான் படத்துல வர்ற பன்ச் டையலாக் மாதிரி இருக்கே?

    மன்ச்சிவால்லகி சூரி, சட்டவால்லகி டான்.

    (டிரான்ஸ்லேஷன் பை விஸ்வா – நல்லவங்களுக்கு சூரி, கெட்டவங்களுக்கு டான்).

    Reply
  96. ஏங்க… கருந்தேள்தான் தூங்கப் போய்ட்டாரே… நாம எந்தப் பாம்பை இப்ப அடிச்சிகிட்டு இருக்கோம்னு சொன்னீங்கன்னா.. பரவாயில்லை

    இப்பலாம்.. கும்மின்னு சொன்னா.. கூட்டத்துல குமுறுற மாதிரி ஒரு ஃபீலிங்

    Reply
  97. மயில்ராவணன் said…

    மீ தி 100………..மீ தி 101….

    அதெல்லாம் போயி பத்து நிமிசம் ஆச்சு மாமே 🙂

    Reply
  98. //மீ தி 100………..மீ தி 101…//

    கிழிஞ்சது.. நாங்க 110 போய்ட்டோம். இப்பத்தான்.. அண்ணன்.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு சொல்லுறாரு.

    Reply
  99. பாலா,

    //விஸ்வாவின் சதி முறியடிக்கப்பட்டது// என்ன ஒரு சந்தோஷம்? இருக்கட்டும், மீ தி தவுசண்ட் போடுரவரைக்கும் ஓயமாட்டேன்.

    Reply
  100. //மன்ச்சிவால்லகி சூரி, சட்டவால்லகி டான். //

    அதே அதே… பல மொழிகள் அறிந்த(பல டிவிடி கடைக்காரர்கள் அறிந்த) நம் தலைவர் கிங் விஸ்வா வாழ்க வாழ்க………

    Reply
  101. யாராவது போன் பண்ணி தேளு எழுப்புங்க.. இல்லேன்னா உஜ்ஜிலாதேவிய விட்டு குறிப்பு எழுத வேண்டி வரும் 🙂

    Reply
  102. //நல்லவங்களுக்கு சூரி, கெட்டவங்களுக்கு டான்//

    நல்லவங்களுக்கு சூரி-யா? சூரி-ன்னா சூலாயுதம் தானே? அது ஆப்பை விட டேஞ்சரில்லையா?

    Reply
  103. பாலா,

    எக்ஸ்பெண்டபிள்ஸ் ஓக்கேவா?

    Reply
  104. என்னது ஸ்வேதா பாலிய ………. விட்டுட்டு போய்ட்டாங்களா??????

    சொல்லவே இல்ல????

    Reply
  105. //அதெல்லாம் போயி பத்து நிமிசம் ஆச்சு மாமே :)//

    வட போச்சே……..இங்கன லோடு ஆவுறதுக்கே மாத்ருபூதம் வரணும் போல…என்னத்த செய்ய………நானும் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………

    Reply
  106. ஹும்… நான் சொன்னதை கேட்டு, தேளு இந்த அனானி ஆப்ஷனை எடுத்துட்டாரு.

    இல்லீன்னா.. இன்னைக்கு…

    குனிய வச்சி குமுறுவோர் சங்கத்தின் சார்பா அத்தனை குறிப்புகளையும் இங்க எழுதியிருக்கலாம்.

    பெங்களூரில் தெளிய வச்சி அடிப்போர் சங்கத்தின் சார்பா யாராவது அவரை எழுப்பி விடுங்க

    Reply
  107. பாலா,

    //நல்லவங்களுக்கு சூரி-யா? சூரி-ன்னா சூலாயுதம் தானே? அது ஆப்பை விட டேஞ்சரில்லையா//

    இதெல்லாம் ரொம்ப ஓவர். சூரி என்பது அந்த படத்துல வர்ற ஹீரோ நாகார்ஜுனா கேரக்டர் பேருங்க.

    Reply
  108. //எக்ஸ்பெண்டபிள்ஸ் ஓக்கேவா?//

    நேத்து நைட் போகலை விஸ்வா.

    இன்னும் 30 நிமிடத்தில் தியேட்டரில் இருப்பேன்.

    Reply
  109. என்ன ஒரு குரல்….. இப்பதைக்கு நம்ம மட்டும் தான் கிளம்பிருக்கோமா?
    இல்ல?????

    Reply
  110. //இதெல்லாம் ரொம்ப ஓவர். சூரி என்பது அந்த படத்துல வர்ற ஹீரோ நாகார்ஜுனா கேரக்டர் பேருங்க//

    எத்தனை மொழியில அடி வாங்கினாலும்.. சிரிச்சிகிட்டே இருக்கீங்களே.. என்ன ரகசியம்?

    Reply
  111. பாலா,

    //பெங்களூரில் தெளிய வச்சி அடிப்போர் சங்கத்தின் சார்பா யாராவது அவரை எழுப்பி விடுங்க//

    தேளு இப்போ எல்லாம் ரொம்ப உஷார் ஆயிட்டாருங்க. அதனால இந்த மாதிரி டைம்ல அவரோடைய பக்கத்து வீட்டுக்காரங்க செல் போனை கூட சைலன்ட்ல போட்டுட்டு தான் தூங்குறாரு.

    Reply
  112. //என்னது ஸ்வேதா பாலிய ………. விட்டுட்டு போய்ட்டாங்களா??????

    சொல்லவே இல்ல?? //

    இது உஜிலாதேவி செய்த சதி. வேண்டுமென்றே பரப்பும் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம்.

    Reply
  113. பாலா,

    //இன்னும் 30 நிமிடத்தில் தியேட்டரில் இருப்பேன்//

    நான் நாளைக்குதான் போறேன். அப்போ நாளைக்கு பதிவு வந்துடுமா?

    Reply
  114. //அப்போ நாளைக்கு பதிவு வந்துடுமா?//

    உங்களோட இந்த வெள்ளை மனசுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது! 🙂

    Reply
  115. பை தி வே,

    மீ ஆல்சோ கோயிங் டு ஸ்லீப்.

    Gud Night to all.

    Reply
  116. @விஸ்வா & பாலி

    மீ டூ….. சீக்கிரமா அதுக்கும் பாலி விமர்சனம் போட்டாருன்ன நல்லா இருக்கும்….

    இல்லான இருக்கவே இருக்காங்க ஸ்வேதாவும் உஜிலா தேவியும்…

    🙂

    Reply
  117. சரி அனைவருக்கும் நன்றி…தூங்கப்போறேன் …பாலா சார் வழக்கம்போல ஸ்பெயின் போட்டோஸ தனி அஞ்சலில் அனுப்பிடுங்க…

    Reply
  118. தூண்டி விட்ட ராம்சாமியை காணாம். இது வெளிநாட்டு சதி.

    ஆனந்த்.. நானும் தியேட்டராண்ட கிளம்பறேன். பை.. பை

    Reply
  119. ஹாலிவுட் பாலா said…

    தூண்டி விட்ட ராம்சாமியை காணாம். இது வெளிநாட்டு சதி.

    ஆனந்த்.. நானும் தியேட்டராண்ட கிளம்பறேன். பை.. பை


    அண்ணே ஆனி வந்துடுச்சு … ஐயாம் சாரி 🙂

    Reply
  120. டூ லேட்… நான் கிளம்பிட்டேன். வெள்ளிக் கிழமையெல்லாம் யாரு ஆபீஸில் வேலை செய்யுறது.

    நான் ஞாயத்துக் கிழமை மட்டும்தான்.. ஆஃபீஸ் வொர்க் பாப்பேன்

    Reply
  121. செம படம்ல!

    Reply
  122. உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா சாமீமீமீ..!!

    டெக்னாலஜியை எப்படியெல்லாம் யோசிச்சி யூஸ் பண்ணுறீங்க?!! 🙂 🙂

    Reply
  123. மொத்தமா கமெண்ட்டையே மூடிட்டா எந்த நம்பர்ல இருந்து ஸ்ட்ராட் பண்ணுவீங்க??

    Reply
  124. நானும் இன்னிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்னு பார்த்தா…

    Reply
  125. நண்பரே,

    ஜாலியான படம். ஆனா ஸ்மித்திற்கே நான் ட்ரெயினிங் தர தயாராக உள்ளேன். இறுதியில் திருமணத்தில் இடம்பெறும் நடனம் சூப்பர். ஏவா மெண்டசை அவமதித்த இலுமினாட்டிக்கு விரைவில் 3வது திருமணம் நடக்கட்டும் :))

    Reply
  126. //உடனே, பின்னியெடுக்கும் எனர்ஜியோடு வேலையைப் (அது எதுவாக இருந்தாலும் சரி) பார்க்கக் கிளம்பி விடுவேன்.//

    ஹி ஹி ஹி

    //தனக்குப் பிடித்த பெண்களிடம் சென்று பேசத் தயங்கும் ஆண்களுக்குப் பயிற்சியளித்து, புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்த்து வைப்பவன்//

    ஹாலிவுட் விஜயா.. 🙂

    Reply
  127. //முதல் காட்சியில், பெண்களின் மனப்பான்மை குறித்து அவர் பேசும் நீண்ட வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். அது புரிந்தால், எந்தப் பெண்ணிடமும் சென்று நம்மால் ஜாலியாகப் பேச முடியும்( ஹீ ஹீ).//

    அப்படியா…தம்பிக்கு ஒரு டிவிடி பார்சேல்…

    Reply
  128. Boss i saw a hindi movie with same story. i think it was”partner” starring salman and govinda.
    Ada pavikala..atta copya?
    Its very nice to introduce such kind of films.

    Reply
  129. அடடே… இங்க.. இன்னும் 1-2 எக்ஸ்ட்ரா டெம்ப்ளேட் பின்னூட்டம் தேறும் போலயிருக்கே. நோட் பண்ணிக்கிறேன். 🙂 🙂

    Reply
  130. மிகவும் பிடித்த படம் நண்பா,
    எப்படித்தான் இவர் இதுபோல நடித்துவிட்டு சீரியஸான படமும் ஆட்டோகேப்பில் செய்கிறாரோ என வியந்திருக்கிறேன்.வில்ஸ்மித் நல்ல நடிகர்.

    Reply
  131. ஆமா.. வில்ஸ்மித்..நல்ல நடிகர்.. என்னா ஒரு கண்டுபிடிப்புப்பா.. 🙂

    கேபிள் சங்கர்

    Reply
  132. தல வாங்க,
    அது வேற ஒன்னுமில்ல முன்ன இவரை காமெடிஹீரோ போல நினைச்சிருந்தேன்.பின்னர் அலி,பர்சூட் ஆஃப் ஹாப்பிநெஸ்,செவன் பவுண்ட்ஸ் போல படம் பார்த்து வில்ஸ்மித் நல்ல நடிகர். கண்டுபிடிச்சிருக்கோம்.அதுதான்:))குறும்பு

    Reply
  133. டின்னெர் அப்ப Food allergy ல மூஞ்சி ஊதிபோக benadryl குடிச்ச உடனே சரியாயிடுட்சானு கண்ணாடிய பாக்கற scene நான் விழுந்து விழுந்து சிரிச்ச சீன். அதே சீன் நம்ம தமிழ் படம் கோவா ல எடுத்து சொதபீற்பனுங்க. ஹிந்திலயும் albert ihhaler அடிச்சிட்டு allegra வ பாக்கர சீன் கோவிந்தாவும் கத்தரீனவும் நடிச்சிருப்பாங்க (என்ன படம்னு தெரியல) நல்ல ரொமாண்டிக் காமெடி படம்

    Reply
  134. உங்களோட விமர்சனம் புரிந்துக்கொள்ள ரொம்ப கடினமாக உள்ளது

    Reply
  135. அடடா… இன்னமும் க்ளியராக, பிரச்னை எதனால் என்று சொன்னால், மாற்றிக் கொள்கிறேன் நண்பரே.. மிக்க நன்றி

    Reply
  136. yampa…

    telugu padangala pakka matengala

    telugula nalla padangaloda reviewsa pathiva podungalen

    nalla padangal entha mozhiya iruthalum ok!……….

    Reply

Join the conversation