A Serbian Film (2010)–Serbian

by Karundhel Rajesh May 23, 2011   world cinema

நமது தளத்தில், இதுவரை பார்த்துவந்த படங்களுக்கு நேர் எதிரானதொரு படத்தை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். ‘நேர் எதிர்’ என்று நான் சொன்னதற்குக் காரணம், வழக்கமான மென்சோக உணர்வையோ, அல்லது நகைச்சுவை உணர்வையோ, அல்லது இவற்றைப் போன்ற உணர்வுகளையோ இப்படம் தராது. இப்படம் தரக்கூடிய உணர்வு, பயம் – அல்லது அருவருப்பு – அல்லது கோபம் – அல்லது இனம்புரியாத வெறுப்பு ஆகிய உணர்வுகளையே. எனவே, ‘எந்தக் காட்சி வந்தாலும் பார்ப்பேன். திரைப்படம் என்பது வெறும் நடிப்பு மட்டுமே’ என்னும் உணர்வுடைய நண்பர்கள் மட்டும், இப்படத்தைப் பார்க்கலாம். திரையில் வரும் காட்சிகளால் மனம் பாதிக்கப்படும் நண்பர்கள், இப்படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு சிறிய உதாரணமாக, Salo or the 120 days of Sodom மற்றும் Cannibal Holocust ஆகிய படங்களை நினைவுறுத்துகிறேன். இப்படங்கள் – குறிப்பாக Salo படத்தின் காட்சிகள் உங்களைப் பாதித்திருக்கவில்லை என்றால், இப்படத்தைப் பார்க்கலாம். நான் இப்படத்தைப் பார்த்ததற்கு மூலகாரணம், நமது ஹாலிவுட் பாலா. அவர்தான் இப்படத்தைப் பற்றிச் சொல்லி, கீதப்ரியனைப் பார்க்க வைத்தார். இந்த இரண்டு பெரும் என்னிடம் சொல்லி, என்னை இப்படத்தைப் பார்க்க வைத்துவிட்டனர்.

இப்படத்தைப் பார்ப்பதற்குமுன், இப்படம் கிளப்பிய அதிர்வு அலைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இப்படம் வெளிவந்தவுடன், செர்பிய அரசு, இப்படத்தைப் பற்றிய ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கும் அளவு, இப்படம் அரசைப் பாதித்திருந்தது. அதேபோல், பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்படுவதற்குமுன், பார்வையாளர்களை எச்சரித்த பின்னரே திரையிடப்பட்ட வரலாறு இதற்கு உண்டு. இன்றும், பல திரைப்பட விமர்சகர்கள் இதனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே, செர்பியாவில் தணிக்கைமுறை இல்லை என்பது, உலகப்பட ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படி இருப்பினும், இந்தப் படத்தைப் பற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருப்பது, இப்படத்தின் extreme தன்மைக்கு உதாரணம்.

இப்படத்தின் பிரதான கதாபாத்திரம், மிலாஸ் என்ற முன்னாள் நீலப்பட நடிகன். தற்சமயம், எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறான். அவனது மகனின் பள்ளி வகுப்புகளுக்குக் கட்டப் பணம் இல்லாமல், வேலை தேடி வருகிறான். இவனது மனைவியின் பெயர் மரியா. ஒரு சிறிய வயது மகனும் இவர்களுக்கு உண்டு. ஓர்நாள், வீட்டுக்கு வரும் மிலாஸ், தனது மகன், இவன் நடித்த ஒரு நீலப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காண்கிறான். மரியா, அந்தத் திரைப்படத்தை நிறுத்தி, இது வயதுவந்தவர்களுக்கான கார்ட்டூன் படம் என்று மகனிடம் சொல்கிறாள். இதன்பின், மிலாஸிடம் பேசும் அவனது மகன், அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அவனது உடலில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகவும், அது அவனுக்குப் பிடித்திருந்ததாகவும் சொல்கிறான். அந்த மாற்றம், அவனது அடிவயிற்றில் ஒரு சக்கரம் சுழலுவதைப் போல இருந்ததாகவும் சொல்கிறான். இதைக் கவனிக்கும் மிலாஸ், உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறான். மனைவியிடம், தனது மகனைப்போன்ற வயதில்தான் தனது முதல் நீலப்பட அனுபவம் ஏற்பட்டதாகவும், இதில் தவறு இல்லை எனவும் அவன் சொல்ல, மனைவி, அந்த நீலப்படத்தில் அவனது தந்தை நடித்திருக்கவில்லை எனவும், தற்போது இவர்களது மகன், தந்தை நடித்திருக்கும் நீலப்படத்தைப் பார்ப்பது, அவனது மனதில் பல்வேறு கேள்விகளை விளைவிக்கும் என்றும் சொல்லி, மிலாஸைக் கண்டிக்கிறாள்.

திடீரென தனது பழைய நீலப்படங்களை மிலாஸ் பார்த்துக்கொண்டிருப்பதைக் காணும் மரியா, இதுகுறித்து மிலாஸிடம் பேச, தனக்கு ஒரு புதிய வாய்ப்பு வந்திருப்பதாக மிலாஸ் சொல்கிறான். இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, நீலப்பட உலகில் இருந்தே வெளியேறி, வேறு ஏதாவது ஒரு ஊரில் சென்று புதியதொரு வாழ்க்கையை அமைக்கவேண்டும் என்பதே அவனது எண்ணம்.

தனது பழைய சகாவான லெய்லா என்ற பெண்ணை மிலாஸ் ஒரு உணவு விடுதியில், அவளது அழைப்பின் பேரில் சந்திக்கிறான். லெய்லா, இந்தப் புதிய வாய்ப்பினைப் பற்றி மிலாஸிடம் விவரிக்கிறாள். இந்த வாய்ப்பில் அவனுக்குக் கிடைக்கக்கூடிய பணம், அளவில்லாதது என்றும், இதனை அவன் உபயோகப்படுத்திக் கொண்டால், அவனது வாழ்க்கைக்கு நல்லது என்றும் திரும்பத் திரும்ப அவனிடம் சொல்கிறாள். மிலாஸுடன், அவனது இளைய சகோதரனான மார்க்கோவும் அங்கு அமர்ந்திருக்கிறான். மார்க்கோ, ஒரு கறைபடிந்த போலீஸ் அதிகாரி. மிலாஸின் அழகிய மனைவியான மரியாவின் மேல், மார்க்கோவுக்கு ஒரு கண் உண்டு. இந்த வரியை மனதில் குறித்துக்கொள்ளுங்கள். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, வுக்மிர் என்ற மனிதனை மிலாஸ் சந்திக்கிறான். மிலாஸின் புதிய வாய்ப்பு, வுக்மிரின் காரணமாகவே சாத்தியப்படப்போகிறது என்பது மிலாஸுக்குத் தெரிகிறது. மிலாஸிடம் பேசும் வுக்மிர், தன்னை ஒரு போர்னோக்ராபி ரசிகன் என்று சொல்லிக்கொள்கிறான். மிகச்சாதாரண முறையில், பெண்கள் கிடைக்காதவர்கள் தங்களைத்தானே மகிழ்வித்துக்கொள்ள எடுக்கப்படும் நீலப்படங்கள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும், இயற்கையான முறையில் எடுக்கப்பெறும் நீலப்படங்களே தனது விருப்பம் என்றும் பலவாறாகப் பேசுகிறான். பல வருடங்களாக மிலாஸின் ரசிகனாக வுக்மிர் இருப்பதையும், மிலாஸின் இயல்பான நடிப்பே, இந்த வாய்ப்பை அவன் வழங்குவதற்கான காரணம் என்றும் மிலாஸிடம் சொல்கிறான். ஆனால், இந்தப் புதிய படம் பற்றிய எந்தத் தகவலையும் தன்னால் வெளிப்படுத்த இயலாது எனவும், அப்போதுதான், மிலாஸ், இயற்கையான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தமுடியும் எனவும் சொல்கிறான். மிலாஸுக்கான ஒப்பந்தமும், அவனிடம் வழங்கப்படுகிறது. குழம்பும் மிலாஸ், தனது மனைவியிடம் இதுகுறித்து விவாதிக்கவேண்டும் என்று சொல்லி, அன்று இரவு, அவனுக்கு வழங்கப்பெறும் பெரும்பணத்தைப் பற்றி மனைவியுடம் விவாதிக்கிறான். மனைவிக்கு இதில் சம்மதம் என்று தெரிந்துகொண்டு, முடிவாக, ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டுவிடுகிறான்.

இதன்பின், புதிய படத்துக்காக மிலாஸ் தயாராகும் காட்சிகளைப் பார்க்கிறோம். சில நாட்கள் தன்னைத் தயார் செய்துகொண்டபின், படத்தில் மிலாஸ் நடிக்கக்கூடிய முதல்நாள் வருகிறது. வுக்மிர் சொன்ன இடத்தில், மிலாஸ் விடப்படுகிறான். காரில் இருந்து இறங்கியதுமே, அங்கு நிற்கும் மனிதன் ஒருவன், மிலாஸைப் படமெடுக்க ஆரம்பிக்கிறான். மிலாஸின் காதில் உள்ள சிறிய மைக்ரோபோனில், வுக்மிரின் குரல் கேட்கிறது. மெல்ல நடந்து, எதிரில் உள்ள கட்டிடத்தின் கதவைத் திறக்கச்சொல்லி, வுக்மிர் கட்டளையிடுகிறான். அந்தக் கட்டிடமோ, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு காப்பகம். குழம்பியபடியே, கதவைத் திறக்கிறான் மிலாஸ். உள்ளே, இன்னொரு மனிதன், கேமராவோடு காத்திருக்கிறான். அவனும் மிலாசைப் படமெடுக்க, மெதுவே உள்ளே நடந்துசெல்லுமாறு கட்டளை வருகிறது. நடக்கத்துவங்குகிறான் மிலாஸ்.

இந்த இடத்தில், Snuff படங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தே ஆகவேண்டும். மனித மனத்தில் படிந்துள்ள வக்கிரத்தின் சாட்சியாக விளங்கிக்கொண்டிருப்பது, இந்த Snuff வகைப் படங்கள். அடுத்த உயிர் துடிதுடித்துச் சாவதைப் பார்க்கையில், orgasm அடையும் மனிதர்கள் இவ்வுலகில் உண்டு. இந்த மனிதர்களைத் திருப்தி செய்யவே இந்த Snuff படங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஸ்னஃப் வகைப் படங்களில், உறவு கொள்ளும்போதே, அதில் பங்கேற்பவர்களைச் சித்ரவதை செய்து கொல்லும் குரூரம் இடம்பெறும். நடிப்புக்காக அன்றி, நிஜத்திலேயே இவர்கள் கொல்லப்படுவர். இந்த ஸ்னஃப் படங்கள், உலகெங்கும் தடைசெய்யப்பட்டிருந்தாலும், எங்காவது ஒரு மூலையில் இவை எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலும், இதில் கொல்லப்படுபவர்கள், நடிப்புக்காகவே அப்படிச் சாவதே இந்த ஸ்னஃப் படங்களின் தற்போதைய வழக்கம். இருந்தாலும், போலியாகச் சாகிறார்களா அல்லது நிஜமாகவே கொல்லப்படுகிறார்களா என்பது தெரியாத அவல நிலை. இப்படிப்பட்ட ஸ்னஃப் படங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய படங்களில், இந்தத் தளத்தில் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் 8MM முக்கியமானது.

மெதுவே நடந்துசெல்லும் மிலாஸ், அங்கே இருக்கும் ஒரு பெண் மருத்துவரைப் பார்க்கிறான். அதே சமயம், அங்கே ஒரு சிறுபெண் ஓடிவருவதையும், அவளை அவளது தாய் அடிப்பதையும் பார்க்கிறான். எதுவும் புரியாமல் மிலாஸ் நின்றுகொண்டிருக்கும் நிலையில், காட்சி மாறுகிறது. தனது வீட்டில், மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறான் மிலாஸ். அன்றைய படப்பிடிப்பு எப்படி இருந்தது என்று மனைவி கேட்க, மிலாஸின் கண்முன்னர், அன்றைய நிகழ்ச்சிகள் ஓடத்துவங்குகின்றன.

(ஸ்னஃப் படங்களில் வரும் காட்சிகள், இனி இக்கட்டுரையில் இடம்பெறப்போகின்றன. மனத்திடம் உள்ளவர்கள் மட்டும் மேலே படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இளகிய மனம் கொண்டவர்கள், இக்கட்டுரையிலிருந்து வெளியேறிவிடலாம்).

ஒரு அறையில் நுழைகிறான் மிலாஸ். அங்கே, உடலெங்கும் காயங்களுடன், நாம் ஏற்கெனவே பார்த்த அந்தச் சிறுபெண்ணின் தாய், விலங்கிடப்பட்டிருக்கிறாள். மிலாஸைப் பார்த்ததும், அவனருகே வரும் அப்பெண், அவனுடன் உறவுகொள்ள ஆயத்தமாக, மிலாஸின் கண்களில் அதிர்ச்சி அறைகிறது. சற்றுத் தொலைவில், அந்தச் சிறுபெண், இவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். உடனடியாக அங்கிருந்து வெளியேறும் மிலாஸ், இனிமேல் அப்படத்தில் தன்னால் நடிக்க இயலாது என்று வுக்மிரிடம் சீறுகிறான். அப்போது மிலாஸிடம் பேசத்துவங்கும் வுக்மிர், அடிப்பவன், அடி வாங்குபவன் என்று இருக்கும் பாகுபாடுகளைப் பற்றிப் பேசி, நரகவேதனையில் துடிக்கும் ஒரு மனிதன், அகில உலக சந்தையில் நன்றாக விலைபோவான் என்று சொல்லி, இதனை நிரூபிக்க, ஒரு திரைப்படத்தைப் போட்டுக் காட்டுகிறான். அத்திரைப்படத்தில், ஒரு பெண், வ்லியால் துடித்துக்கொண்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, அந்தக் குழந்தையுடன் உறவு கொள்கிறான் வுக்மிரின் அடியாள் ஒருவன். இதனைக் கண்டு கோபத்திலும் இயலாமையிலும் துடிக்கும் மிலாஸ், அந்த இடத்திலிருந்தே ஓடத்துவங்குகிறான். வெளியே வந்து தனது காரைச் செலுத்திக்கொண்டு செல்லும் மிலாஸை, ஒரு அழகிய பெண் நெருங்குகிறாள்.

கண் விழிக்கிறான் மிலாஸ். நாள்காட்டியில், மூன்று நாட்களுக்குப் பிந்தைய தேதி காட்டப்படுகிறது. மிலாஸின் முகம் முழுதும் ரத்தம். என்ன நடந்தது என்றே நினைவில் இல்லாத நிலையில், திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே செல்கிறான் மிலாஸ். தனிமையான அந்த இடத்தில், இப்படத்தின் வீடியோ டேப்கள் அவனுக்குக் கிடைக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு, ஒரு தனிமையான இடத்துக்குச் சென்று, ஒவ்வொன்றாகப் பார்க்கத் துவங்குகிறான் மிலாஸ். முதல் டேப் ஓடுகிறது. வுக்மிரின் மருத்துவப்பெண், மாடுகளுக்குப் போடப்படும் வயாகரா ஊசியை மிலாஸுக்குப் போடும் காட்சி ஓடுகிறது. இதன் பாதிப்பினால், மிருகத்தைப் போன்று மாறிவிடும் மிலாஸ், துடிக்க ஆரம்பிக்கிறான். அவனுக்குத் தற்போதைய தேவை, ஒரு பெண்ணின் உடல் என்று சொல்லும் வுக்மிர், அவனை இழுத்துச் சென்று, ஒரு அறையில் விடுகிறான். அங்கே, விலங்கிடப்பட்ட நிலையில், நாம் ஏற்கெனவே பார்த்த பெண். அவளோடு வெறித்தனமாக உறவுகொள்ளும் மிலாஸின் காதில் உள்ள ஒலிவாங்கியின் மூலமாக, அந்தப்பெண், அவளது கணவனுக்குத் துரோகம் செய்தவள் என்று ஒரு குரல் ஆவேசமாகப் பேசுகிறது. அவளது துரோகத்துக்குத் தண்டனை, அவளை அடிப்பதே என்று சொல்லும் அக்குரல், பலம் கொண்டமட்டும் அந்தப் பெண்ணை அடிக்கச்சொல்லி மிலாஸுக்கு உத்தரவிடுகிறது. வெறித்தனமான மிருகத்தின் நிலையில் இருக்கும் மிலாஸ், தனது கைகளால், அப்பெண்ணை அடிக்கத் துவங்குகிறான். பலத்த அடிகளுக்கு மத்தியில், அவளோடு உறவும் கொள்கிறான். அந்தப் பெண் அலறித் துடிக்கும் நேரத்தில், இவனிடம் ஒரு பெரிய கத்தி தரப்படுகிறது. வெறியில் அவளது தலையை வெட்டுகிறான் மிலாஸ். திமிறிக்கொண்டிருக்கும் அவனை, வுக்மிரின் ஆட்கள் பிடித்துக்கொள்கின்றனர். இத்தோடு டேப் முடிகிறது. மற்றொரு டேப். இதில், மிலாஸ், ஆடையின்றிக் குப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறான். அவனை நெருங்கும் ஒரு அடியாள், அவனுடன் உறவுகொள்கிறான் (Sodomised). இதற்குப் பின், மறுபடி மிலாஸுக்கு ஊசி போடப்படுகிறது. இன்னொரு டேப்பில், ஒரு அறையில் கட்டிப்போடப்பட்டிருக்கிறாள் லைலா. அவளைச் சுற்றி, அவளது பற்கள் கிடக்கின்றன. அவளை நெருங்கும் முகமூடியணிந்த அடியாள் ஒருவன், அவளோடு oral sex கொள்கிறான்.

இந்த டேப்களைப் பார்த்து, நடந்ததைப் புரிந்துகொள்ளும் மிலாஸ், இடையில் நடந்த சம்பவங்களையும் நினைவுகூர்கிறான். மிலாஸுக்கு ஊசி போடும் மருத்துவப்பெண்ணிடம் இருக்கும் ஊசியைப் பிடுங்கி, அவளது கழுத்தில் குத்துகிறான் மிலாஸ். அவள் மயங்கி விழுகிறாள். இதைத்தொடர்ந்து, ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்கும் இரண்டு உருவங்களோடு உறவுகொள்ளவைக்கப்படுகிறான் மிலாஸ். அவர்களின் முகம் மூடப்பட்டிருக்கிறது. பக்கத்து உடலோடு அந்த முகமூடியணிந்த மனிதன் உறவுகொள்கிறான். மெல்ல அவர்களைச் சுற்றியிருக்கும் போர்வை விலக்கப்பட, அவர்கள் மிலாஸின் மனைவியும் மகனும் என்ற உண்மை மிலாஸுக்கு உறைக்கிறது. தனது மகனையே ரேப் செய்துகொண்டிருக்கும் அவலத்தை உணர்ந்து, திகைக்கும் மிலாஸ், பக்கத்தில் இருக்கும் முகமூடியணிந்த மனிதன், அவனது தம்பி மார்க்கோ என்பதனையும் தெரிந்துகொள்கிறான். கோபத்தின் உச்சியில், அங்கிருக்கும் அனைவரையும் கொன்றுவிடுகிறான் மிலாஸ். வுக்மிரை, மிலாஸின் மனைவி, கொன்றுவிடுகிறாள். மனைவியையும் மகனையும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லும் மிலாஸ், அவர்களை ஒரு அறையில் தனித்து விடுகிறான். அன்று இரவு, மூவரும் அணைத்தபடி படுத்திருக்க, மிலாஸின் கையில் இருக்கும் துப்பாக்கி இயங்குகிறது. அதே நேரத்தில், காமெராவோடு அங்கு நுழையும் மனிதன் ஒருவன், தனது அடியாட்களிடம், இந்தப் பிணங்களின் அருகில் சென்று வேலையை ஆரம்பிக்கச்சொல்லிக் கட்டளையிடும் காட்சியோடு படம் முடிகிறது.

பார்ப்பவர்களை மனநடுக்கம் கொள்லவைக்கும் இப்படம், இயக்குநர் ஸ்பஸொயெவிக் (Srđan Spasojević) என்பவரின் முதல் படம். இதன் திரைக்கதையை எழுதியவர், செர்பியாவின் பிரபல திரைக்கதையாசிரியரான அலெக்ஸாந்தர் ராடிவோயெவிக் (Aleksandar Radivojevic). இந்தப் படம், வெறும் ஷாக் வேல்யூவுக்காக எடுக்கப்பட்டதல்ல என்று கூறும் அலெக்ஸாந்தர், இந்தப் படத்தின் மூலமாக, செர்பியாவின் நிலையற்ற மனித வாழ்வையே வடித்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார். செர்பியா, ஒரு யுத்த பூமி. அங்கே, சந்தோஷமான வாழ்க்கை என்பது கானல் நீரைப் போன்ற ஒரு விஷயம். இப்படிப்பட்ட ஒரு நாட்டில், சினிமா என்று எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வணிகத் திரைப்படங்களைத் தாங்கள் அடியோடு வெறுப்பதாகவும், பல சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளிவரும் திரைப்படங்களில், செர்பிய வாழ்வின் அவலத்தை வெளிப்படுத்த முடியாததால், இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்ததாகவும், இந்த இயக்குநர் – திரைக்கதையாசிரியர் கூட்டணி சொல்லியிருக்கிறது. மட்டுமல்லாமல், இத்திரைப்படம் முழுவதும் உவமைகளால் நிரப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆங்கிலத்தில், ‘my boss is fucking me’ என்று சொன்னால், அதற்கு அர்த்தம் வேறு. இதைப்போலத்தான், இந்தப் படத்தில் வரும் நீலப்பட கதாநாயகனது அவலமான வாழ்வு, இதைப்போன்ற மனநிம்மதியளிக்காத வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் உலகமக்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்றும் சொல்கிறார்கள். அதேபோல், வியட்நாம் யுத்தத்துக்குப் பின்னர், அமெரிக்கத் திரையுலகில் நிகழ்ந்த வியக்கத்தக்க மாறுதலையும், அமெரிக்காவின் திரைவரலாற்றை மாற்றிய புகழ்பெற்ற இயக்குநர்கள், வியட்நாம் யுத்தத்துக்குப் பின்னரே பெருமளவில் வெளிப்பட்டதையும் நினைவுகூரும் அலெக்ஸாந்தர், இத்திரைப்படம், செர்பியாவின் Post – Vietnam எதிர்வினை என்றும் சொல்கிறார். இப்படம் முழுவதும் உவமைகளால் ஆனதால், fuck you என்று சொல்வதற்குப்பதில், அதனைக் காட்சியால் காட்டும் முறையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதையும் விளக்குகிறார். இப்படம், ஒரு பின்நவீனத்துவ திரைப்படம் என்று தெளிவாக விளக்கும் இவர்களது பேட்டி, இங்கே உள்ளது. சுட்டியைக் க்ளிக்கிப் படிக்கலாம்.

இப்படத்தைப் பற்றிய எனது எண்ணம்: நமது நாட்டில், இத்திரைப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கு கட்டாயம் எரிக்கப்படும். இத்திரைப்படத்தின் விநியோகஸ்தர், கொல்லப்படுவது உறுதி. நமது நாட்டில், இத்திரைப்படத்தில் வருவது போன்ற சித்ரவதைக் காட்சிகள், வருடம்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பஞ்சாப் பிரிவினை, இந்திரா காந்தி கொல்லப்பட்ட கலவரம், குஜராத் கலவரம் போன்ற கலவரங்களில், இத்திரைப்படத்தில் வருவதைவிடவும் அவலமான சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மட்டுமல்லாமல், வருடம் முழுவதும் நடக்கும் பல்வேறு கலவரங்களையும் கணக்கில் கொண்டால், இப்படம் தூசிக்குச் சமம். நிஜவாழ்வு இந்த ரீதியில் இருக்க, வெறும் நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படத்தைத் தடைசெய்வதே நமது வழக்கம். அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறோம். காரணமாக நம்மால் சொல்லப்படுபவை – கலாச்சாரம், மதம் இத்யாதி. இது எவ்வளவு முரணான விஷயம்!

என்னால் இத்திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. இது, வெறும் நடிப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு படம் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால், எந்த பாதிப்பும் நான் அடையவில்லை. இத்திரைப்படத்தைப் பார்க்காமல், இது அருவருப்பு என்று சொன்னால், அது ஒருவகையான அரசியல் என்பது என் எண்ணம். அதாவது, இது, நாம் வளர்க்கப்பட்ட முறையோடு சம்மந்தப்பட்டது. இப்போது கலாசாரம், லொட்டு , லொசுக்கு என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது அல்லவா? இவர்களைப் பொறுத்தவரையில், நாம் செய்யும் எதுவுமே, கலாசாரம் சம்மந்தப்பட்டது. உயர்ஜாதிகள் பின்பற்றும் எதையுமே, கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்; அதுதான் இவர்களைப்பொறுத்தவரை, நடுநிலைமை. இதைப்போன்ற கொள்கைகளை வைத்திருக்கும் மதவாதிகள், இப்போது இலக்கியத்திலும் புகுந்து, ‘தூய கலாசாரம்’, ‘தூய அத்வைதம்’ என்று, எதைப் பேசினாலும் ‘தூய’, ‘தூய’ என்று ஒரு அடைமொழியை அத்துடன் இணைத்து, போலிப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அவர்களுக்கு இப்படம் பற்றிய தகவல் கிடைத்தால், கட்டாயம் இது எதிர்க்கப்படக்கூடிய படம் என்றே எழுதுவார்கள். அதுவே, அயோத்தியில் நடந்ததும் குஜராத்தில் நடந்த முஸ்லிம் கொலைகளும் சரி என்று ஒரு படம் எடுக்கப்பட்டால், அதனை மறைமுகமாகவாவது ஆதரிப்பதே இவர்களின் வேலையாக இருக்கும்.

திரைப்படங்களை, திரைப்படங்களுக்காகவே விரும்பும் மனிதன் ஒருவன், அவற்றைப் பார்ப்பதில் பாகுபாடு கொள்ளக்கூடாது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அதனாலேயே இப்படத்தைப் பார்த்தேன்.

A Serbian Film படத்தின் trailer இங்கே.

  Comments

93 Comments

  1. இத விட வேகமா உலகத்திலேயே எவனும் கமெண்ட் போட்டிக்க

    Reply
  2. மாட்டான்….உட்டு போச்சு…

    சூப்பர் பதிவு தல….அருமையான அலசல்…..சான்சே இல்ல…

    Reply
  3. கண்டிப்பா படம் பாக்க தூண்டும் பதிவு….

    Reply
  4. தூக்கம் வருது….நாளைக்கு வந்து படிச்சிக்குறேன்..இது படம்தான…..நாடகமா….எதா இருந்தாலும் நாளைக்கு….

    // இந்த இரண்டு பெரும் என்னிடம் சொல்லி, என்னை இப்படத்தைப் பார்க்க வைத்துவிட்டனர் //

    அடேங்கப்பா…இங்கபார்றா…..பார்க்க வச்சுட்டாங்கலாம்ல….கிம் கிக் டுக் டிக் டக் படத்த பாக்குறவரு பேசுறத பாத்தீங்களா…

    Reply
  5. நீர் ஒரு விதிசமைப்பவர்…அதுனாலேயே இந்த மாதிரி படங்களின் தூய ஆன்மாவை குப்புற கவுத்தி உங்களால் வெளிக்கொணர முடிகிறது….

    Reply
  6. அதுஒண்ணுமில்ல…ஒரே கமெண்ட் ரிபீட் ஆயிருச்சு…அதான்….நா ஏதோ ஆபாசமா கமென்ட் போட்டு டெலீட் பண்நேன்னு நெனச்சுராதீங்க…..அந்த இழிச்சொல் பழிச்சொல்ல என் நெஞ்சு தாங்காது…

    Reply
  7. கொழந்த, ஏன் இப்படி ஒரு கமென்ட் போட்டு அப்படி ஒரு சிந்தனை வரச் செய்யுறீங்க? உங்கள யாராவது அப்படி சொல்வாங்களா?

    கிங் விஸ்வா
    வேதாளரின் (முகமூடி வீரர் மாயாவியின்) புத்தம் புதிய காமிக்ஸ் கதைகள் – யூரோ புக்ஸ்

    Reply
  8. தல படம் அந்த அளவிற்கு நல்ல படம் கிடையாது என்பது என் கருத்து,ஆனால் நீங்கள் எழுதி இருக்கும் விதம் மிக அருமை,திரும்பவும் சொல்கிறேன் படத்தைவிட நீங்கள் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்,முடிந்தால் inside பார்த்துவிட்டு அதற்க்கு விமர்சனம் எழுதுங்கள்,

    Reply
  9. inside,matrys போன்ற படங்கள் உண்மைலையே கொழந்த மாதிரியான ஆட்கள் பார்க்ககூடாத படங்கள்,இதில் matrys மிக அருமையாக இருக்கும்,A Serbian Film பார்த்து தூக்கம் தான் வந்தது,

    Reply
  10. //ஒரு பெண், வ்லியால் துடித்துக்கொண்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, அந்தக் குழந்தையுடன் உறவு கொள்கிறான் வுக்மிரின் அடியாள் ஒருவன்.//

    //ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்கும் இரண்டு உருவங்களோடு உறவுகொள்ளவைக்கப்படுகிறான் மிலாஸ். அவர்களின் முகம் மூடப்பட்டிருக்கிறது. பக்கத்து உடலோடு அந்த முகமூடியணிந்த மனிதன் உறவுகொள்கிறான். மெல்ல அவர்களைச் சுற்றியிருக்கும் போர்வை விலக்கப்பட, அவர்கள் மிலாஸின் மனைவியும் மகனும் என்ற உண்மை மிலாஸுக்கு உறைக்கிறது. தனது மகனையே ரேப் செய்துகொண்டிருக்கும் அவலத்தை உணர்ந்து, திகைக்கும் மிலாஸ், பக்கத்தில் இருக்கும் முகமூடியணிந்த மனிதன், அவனது தம்பி மார்க்கோ என்பதனையும் தெரிந்துகொள்கிறான்.//

    நீங்கள் சொன்னது உண்மைதான் ஹாஸ்டல் ஒரு கொடூரம் நிரைந்த படம் மட்டுமே அனால் மனதளவில அதன் பாதிப்பு இல்லை , இது எழுத்துவடிவில் இருக்கும் பொழுதே கண்டிப்பாக பலரை மிரட்ச்சிக்கு உண்டாக்கும். நீங்கள் சொன்னது போல ஒரு நடிப்பாக மட்டும் எண்ணி இந்த படத்தை பார்க்க துனிகிரேன். நாளை காலை இந்த படத்தின் பாதிப்பை பற்றி எனது கருத்தை சொல்கிரேன்.

    Reply
  11. பார்க்க வேண்டும் என்று தூண்டுகின்றது. இந்த விமர்சனம்.. தம்பி கார்த்தியின் விவரனை அசத்தல்..

    Reply
  12. இப்போ எல்லாம் நான் Tamil/English படம் பாக்குறதுன்னா ஒங்கட siteல விமர்சனம் நல்லா இருந்தா தான் பாக்குறது.மொக்கை படங்கள் பாக்காததால Time ரொம்ப மிச்சமாகுது. Thanx. 🙂

    Reply
  13. உண்மையாலுமே அசத்தலான படம் கருந்தேள் ஆனா ஒரு முறைக்கு மேல பாக்க முடியல, அதுவும் அந்த கடைசி சீன்ல அப்பனே அவனோட பையன புணரும் போது அந்த பையன் தலையும் கையும் தூக்க முயலுவான் அத அடக்கி மறுபடியும் புணரும் காட்சி கண்ணுகுல்லையே நிக்குதுயா, அவன் மனைவி அவள புணர்ந்தவன கொன்னுட்டு அவனோட கணவன் அவன் அருகில் வரும் போது கத்தியோட எம் பக்கத்துல வராதன்னு சொல்ற கட்சி மெய் சிலுக்குதுயா, அந்த மொட்டையன கொல்ற சீன் A ஒன் சான்சே இல்ல, படத்தோட மெயின் வில்லன் 300 ஹீரோமாதிரி தெரியுது

    கண்டிப்பா இந்தப்படம் ஹாஸ்டல தூக்கி சாப்டுடிச்சி,
    இன்னுமும் ஒரு இறுக்கமான மனதுடன் தான் இதை எழுதி கொண்டு இருக்கேன்.

    படத்த பாக்கணும்ன்னு நெனைக்கரவங்களுக்கு படத்தோட லிங்க்கு http://gundusmoves.blogspot.com/2011/05/serbian-film-2010.html

    Reply
  14. நண்பரே,

    அதிர வைத்து விட்டீர்கள். சமூக அறவொழுக்க நிர்ப்பந்தங்களை மீறியும் தம் ஜீவிதத்தை கொண்டோடும் மனிதர்கள் பலரில் ஒருவனின் கதையாக இது அமைந்துவிடுகிறது. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.

    Reply
  15. குஜராத் வரைக்கும் ஏன் போவானேன்….வீரப்பன் தேடுதல் வேட்டைகிற பேருல STF செஞ்ச அட்டுழியங்கள் கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கும்….

    சோளகர் தொட்டி படிச்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன்….நண்பர்கள் முழுசும் படிச்சவங்க இருக்கீங்களா….என்னால முழுவதும் இன்னமும் படிக்க முடியல…

    Reply
  16. Saw, Hostel படங்கள விடுங்க…அது படம்ன்னு தெரியும்…ஆனா இந்த மாதிரி படங்கள் – சோளகர் தொட்டி மாதிரி நெஜமா நடந்த நிகழ்வை பார்க்கும் போதோ படிக்கும் போதோ….எனக்கு அதிலிருந்து சகஜநிலைக்கு வெளிய வரவே ரொம்ப சிரமமா இருக்கு…இதை இப்படி எதிர்கொள்வது….

    Reply
  17. நண்பா! ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தற்செயலாய் இந்தப் படத்தைப்பார்த்தேன், எந்த அறிமுகமும் இல்லாமல், ஆனால் ஸ்கிப்பண்ணி பார்க்கவே முடியலை. அதனால் நீங்க சொன்ன அதே அருவருப்புடன் விட்டுவிட்டேன்.
    ஆனால் உங்கள் விமர்சனம் படித்தப்பிறகு பார்க்கலாமாவென ஒரு ஐடியா வருது… ஆனாலும் வேண்டாம்ன்னுதான் நினைக்கிறேன்.

    Reply
  18. Hostel மொத்த படத்தையும் பத்து நிமிசத்தில ஓட்டி உட்டு ஓட்டி உட்டு பாத்திட்டேன்….ஆனா இந்த படங்கள விட – இந்த ஞாயிற்றுக்கிழம திருப்பாச்சியோ சிவகாசியோ டிவில போட்டிருந்தாங்க…..அதுல வர பன்ச் டயலாக்ஸ் சண்ட இதெல்லாம் ரொம்பவும் கொடூரமா தெரியுதே….எனக்கும் மட்டும் தான் அப்புடியா….உங்களுக்கும் வேற நண்பர்களுக்கும் அப்புடி தெரிஞ்சிருக்கா……இன்னொரு சரத்குமார் படம்…ரவிகுமார் டைரக்டர்ன்னு நெனைக்கிறேன்..ஒரு கொழந்தய மாடில இருந்து தூக்கி எறிவாங்க….அத விட A Serbian Film கொடூரமாக இருக்க போகுதா..

    Reply
    • Arun

      i too watched this movie in 10 minutes today (without volume).

      Reply
  19. கீதப்ரியனின் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று……சீ…பின்னுடங்களில் ஒன்று மேல அவுரு எழுதியிருப்பவை….

    @தல கீதப்ப்ரியன்…….கருந்தேள் எழுதிட்டாறேன்னு நீங்க எழுதாம இருந்துறாதீங்க…..நீங்களும் கண்டிப்பா எழுதணும்….

    // inside,matrys போன்ற படங்கள் உண்மைலையே கொழந்த மாதிரியான ஆட்கள் பார்க்ககூடாத படங்கள்,இதில் matrys மிக அருமையாக இருக்கும்,A Serbian Film பார்த்து தூக்கம் தான் வந்தது//

    மக்களே….இந்த டெனிம் மோகன் சொன்னறேன்னு ஒரு பேய் படத்த பாத்தா………அதுல ஒரு பொம்பள பேய் சேலைக்கு ஓரம் அடிச்சிகிட்டு இருக்குது….ஆம்பள பேய் சட்டைக்கு காஜா வெச்சிகிட்டு இருக்குது…….பல்லிய வெளக்குமாத்தால அடிச்சு வாலை துண்டிகிறது – கரப்பான்பூச்சி மீசைய கத்திரி வெச்சு கட் பண்றது இதான் டெனிம் மோகன் சொல்லும் கொடூர காட்சிகள்……

    Reply
  20. உண்மையிலேயே மிக பிரமாதமான விமர்சனம்…..படிக்கும் போதே….படத்தின் தாக்கம் மண்டையில நச்சுன்னு ஆணி அடிச்ச மாதிரி இறங்குது……

    இந்த அளவுக்கு தாக்கத்துடன் எழுதுற நீங்க ஒரு இலக்கியவாதிதான் போங்க….இதுல பின் நவீனத்துவம் என்ற வார்த்தைய வேற உபயோகிச்சிருக்கீங்க…இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா பின் நவீனத்துவவாதி ஆயிரலாம்….

    @கீதப்ரியன்..
    செமையான பின்னூடம்……அப்பா…இந்த கடனுக்கே பின்னூடம் போடுறவங்க இத கொஞ்சம் பாருங்க…..

    Reply
  21. @ கொழந்த – வீரப்பன் வேட்டையைப் பற்றி நீங்க சொல்லிருக்குற கருத்தை முழுமையா ஆமோதிக்கிறேன். அதேபோல, சகஜநிலைக்கு வர சிரமமா இருக்கிறது குறித்து – உண்மையில் நடந்த நிகழ்வுகள், கட்டாயம் ஒரு தாக்கத்தை நமது மனதில் ஏற்படுத்தியே தீரும். அது, ஒருவகையில் நல்லது. நடந்த அநியாயத்தைப் பற்றிய கோப உணர்வு, நமக்கு உள்ளிருந்து எழ அது உதவுகிறது அல்லவா? இதிலிருந்து வெளியே வர கொஞ்ச காலம் ஆகும். ஆனால், அது பரவாயில்லை. நமது மனதை விசாலப்படுத்த இது உதவுகிறது. நமது கொள்கைகள், நம்பிக்கைகள், சாதி உணர்வு ஆகிய விஷயங்கள் நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. அடுத்த மனிதனுக்காக நாம் குரல் கொடுக்க ஆரம்பிக்கிறோம். எனவே, நேரம் எடுக்கட்டும்.

    திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களே, உலகின் தலைசிறந்த ஹாரர் படங்கள் என்னும் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சீட்டில் இருக்க விடாமல் துரத்தியடிக்கும் படங்களை வேறு எப்படிக் கூறுவது?

    டெனிம் மோகன் சொன்ன படங்களைப் பார்க்கலாம் என்று நினைத்தேன் 🙂 . . ஆனால் இப்போது யோசிக்கிறேன் 🙂

    அப்புறம், என்ன அது? இலக்கியவாதியா? அய்யோ எஸ்கேப் !

    @ அமிழ்தினி – அட உங்களுக்கு இப்புடி ஒரு பேரு கூட இருக்குதா? பரவாயில்லையே 🙂

    @ லக்கி – 🙂 ப்ரீயா உடுங்க. சீக்கிரம் ஆக்ஷன் படங்களைப் பார்க்கலாம் 🙂

    @ ராஜகோபால் – மேலே நண்பர் கீதப்ரியன் போட்டிருக்கும் கருத்தைப் படித்துப் பாருங்கள். படம் பார்க்கும்போது இவற்றையும் நாம் எண்ணிப் பார்த்தல், படத்தை இன்னமும் நன்றாகப் புரிந்துகொள்ள வைக்கும். நன்றி

    @ கீதப்ரியன் – இதைவிட நல்லா இந்தப் படத்தைப் பத்தி சொல்லவே முடியாது. உங்களோட கருத்து, இந்தப் படத்தைப் பற்றிய ஒரு அட்டகாசமான பிற்சேர்க்கை. கட்டாயம் இது, படத்தைப் பத்தி ஒரு முடிவுக்கு வர எல்லாருக்கும் உதவப் போகுது. ரொம்ப ரொம்ப நன்றி . . எனக்கு ஒரு கருத்து என்னன்னா, இங்க இந்தியாவுலயும் இந்த மாதிரி நடந்துருக்கே.. இதைப் பத்தியும், இப்படி யாராவது வெளிநாட்டு வாழ் இந்தியர், படம் எடுத்து, இந்த இந்திய அரசியல்வாதிகளை நோக்கி நடுவிரலைக் காமிச்சா அதைக் கட்டாயம் ஆதரிப்பேன்.

    @ ஜாக்கி – நன்றி

    @ பிரணவகானன் – உங்க ஆதரவுக்கு நன்றி. எனக்குப் புடிச்ச படங்கள், இங்கே எழுதுவதால், எனக்கும் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இது mutual feeling. அடிக்கடி வந்து உங்கள் கருத்தை எழுதவும்.

    @ காதலரே – உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் இன்னும் பல உள்ளன. இவையெல்லாம், மனித மனத்தின் வக்கிரங்களையும், நாட்டின் குரூரத்தையும் பற்றிப் பரக்கப்பேசுகின்றன. அவைகளை சிறுகச்சிறுகப் பார்க்கலாம். மிக்க நன்றி

    @ முரளிகுமார் – வாங்க 🙂 . . இதை ஸ்கிப் பண்ண வேணாம்.. ஜஸ்ட் நடிப்புதான்னு நினைச்சிக்கிட்டே பாருங்க. பார்த்தால், ஒரு அதிர்வு கிடைக்கும். அந்தக் கோபம் நமக்கு நல்லதுதானே .. நன்றி

    Reply
  22. நான் எல்லா வகையான படங்களையும் பார்ப்பவன் என்றாலும் ரொம்ப நாளாவே ஒரு டவுட் .., யாருக்காக எதற்காக இந்த மாதிரியான படங்கள் எடுக்க படுகின்றன்… நிச்சயமாக இந்த படங்களை கலை சார்ந்த அனுபவமாகவோ பொழுதுபோக்காகவோ பார்க்க முடியாது …

    Reply
  23. ஆனந்த். . இது கட்டாயம் பொழுதுபோக்கு அல்ல. ஆனால், இது கலை அனுபவம் அல்ல என்று நீங்கள் கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. இந்த ரீதியில் யோசியுங்கள்: இந்தியாவில், திடீரென ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு விடுகிறது. எங்கு நோக்கினாலும், ராணுவம், மக்களைக் கொல்வதைப் பார்க்கிறோம். கடுமையான தணிக்கை விதிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்நிலை, பல காலம் நீடிக்கிறது. எப்படியோ எனது நாட்டை விட்டு வெளியே போகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அந்தச் சூழலில், எப்படியாவது எனது நாட்டில் நடைபெறும் அவலங்களை வெளியுலகின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றத்தான் செய்யும். அப்படி நான் எடுக்கும் படமே, இப்படிப்பட்ட படமாக அமைகிறது. இப்படிப்பட்ட படங்களை எடுப்பதன்மூலம், உள்நாட்டில் நடைபெறும் அசிங்கங்களை வெளியே சொல்லும் முயற்சியே இது. இலக்கியத்தில் கூட, Literature of Trash என்று இருக்கிறது. குரூரம், அசிங்கம் என்று நாம் கருதும் விஷயங்களின் மூலம், உயரிய நோக்கம் ஒன்றினை வெளிப்படுத்துவது. எனவே, இதுவும் ஒருவித கலை அனுபவமே. கட்டுரையிலேயே உள்ள இயக்குனரின் பேட்டியைப் படியுங்கள். நன்றி

    Reply
  24. கொஞ்சம் அவசரப்பட்டுடேன்னு நினைக்குறேன் .., இயக்குனரோட பேட்டியும் கீதப்ரியன் அவர்களோட பின்னோட்டமும் படிச்சதும் தான் தெளிவாச்சு .., நா ‘Cannibal Holocaust’ மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன் எனக்கு அந்த படம் பிடிக்காது.., Taxi to the Dark Side பாத்து இருகிங்களா C.I.A ஆப்கன்ல பண்ண அட்டகாசத்தோட சின்ன சாம்பிள் …,

    என்ன இருந்தாலும் ‘வீராசாமி’ அளவுக்கு டெரரா யாராலும் எடுக்க முடியது.., 🙂

    Reply
  25. தல அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதீங்க,இந்த கொழந்த இந்தப் படத்த பார்த்தாலும் இப்படி தான் சொல்லும்,அது பேச்ச கேட்டுகிட்டு அவசரப்படாதீங்க,கொழந்த பாத்து பயந்த படம்னு ஏதாவது படத்தின் பெயர சொல்ல சொல்லுங்க (வீராசாமி,காவலன் னு சொல்லி தப்பிக்கும் பாருங்க)

    Reply
  26. நான் உண்மைலையே ஹாரர் திர்ல்லர் வகைப் படங்கள் விரும்பி,படம் ரீலீஸ் ஆனதும் தேடி பிடித்து எப்படியாவது பார்த்து விடுவேன்,நீங்கள் சொல்லுவது போல் இதுவரை வந்தவகைகளில் இது தான் பயங்கர ஹாரர் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,சொல்ல போனால் இது ஒரு Exploitation film ,

    //என்னால் இத்திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. இது, வெறும் நடிப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு படம் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால், எந்த பாதிப்பும் நான் அடையவில்லை. //

    நீங்கள் சொல்லும் இந்த வாக்கியங்கள் இவகைப் படங்களுக்கு பொருந்தாது என்றே நினைகின்றேன்,
    இந்த படத்தை இயக்கிய இயக்குனர் untalented என்றே சொல்லுவேன்,தன்னை பிரபலப்படுத்த இவர் இந்த படத்தினை எடுத்துள்ளார்,குழந்தை கற்பழிப்பு,பிணத்துடம் உடலுறவு,தகாத புணர்ச்சி இவைகள் மூலம் எந்த காலங்களிலும் ஒரு நல்ல படம் எடுத்துவிட முடியாது,இந்த படத்தினை நான் யாருக்கும் இதுவரை பார்க்கும் மாறு பரிந்துரை செய்தது கிடையாது,படத்தில் உண்மைலையே சில கொடூரமான காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன,ஆனால் படம் பார்த்து முடிந்ததும் மனதில் நிற்பது ஒன்னுமே கிடையாது ,சிம்பிள்லா சொல்லனும்னா இது ஒரு மிக மோசமான படம், இந்த படத்தினை பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளை விட்டு கொஞ்சம் தள்ளி இருங்கள்,இதை பற்றி விவாதிக்க கூட இதற்கு அருகதை கிடையாது,

    ஓர் அளவிற்கு சுமாரான படங்களையே அடிச்சு துவம்சம் பண்ணும் நீங்கள் இந்தப் படத்தினைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லவில்லையே தல, மொக்க படங்கள் எந்த மொழியாக இருந்தாலும் எதிர்போம்

    Reply
  27. ஒரு தடவை matrys பார்த்துவிட்டு நான் சொல்லும் படங்களை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ளுங்கள்

    Reply
  28. மோகன் – உங்க கருத்தோட நான் மாறுபடுகிறேன். இந்தப் படம் வெறும் ஷாக் வேல்யூக்காக எடுக்கப்பட்ட படம் இல்ல. ஒரு பொதுவான கருத்தையே நீங்க பிரதிபலிக்கிறீங்கன்னு எனக்குத் தோணுது. அதாவது, ‘எதுவா இருந்தாலும், செக்ஸ், வன்முறை இத்யாதி சமாச்சாரமெல்லாம் இருந்தா அது எனக்குப் புடிக்காது’. ஒருவேளை உங்க கருத்து அதுதான்னா, அதை என்னால ஒத்துக்க முடியாது. அதைத்தான், கலாசாரம் சார்ந்த கருத்துன்னு நான் கடைசி பேரால சொல்லிருக்கேன். அது ஒருவகை தாலிபானிசம். கலாச்சாரத் தாலிபானிசம். உங்களோட இந்த வரிகள், அப்புடித்தான் ஒரு இம்ப்ரஷன் குடுக்குது. //குழந்தை கற்பழிப்பு,பிணத்துடம் உடலுறவு,தகாத புணர்ச்சி இவைகள் மூலம் எந்த காலங்களிலும் ஒரு நல்ல படம் எடுத்துவிட முடியாது//. இந்தக் காட்சிகள் ஏன் அந்தப் படத்தில் இருக்குன்றதை அவர் தெளிவாவே சொல்லிருக்காரு. இது ஒரு சினிமான்றதை நாம மறந்துரக்கூடாது. வெறும் நடிப்பு. ஆனா, அந்த நடிப்பின் மூலமா, செர்பியாவின் நிலையற்ற தன்மையையே அவரு சொல்லிருக்காரு. இந்தப் படத்துல வர்ற சம்பவங்களெல்லாம் செர்பியாவில் சாதாரணமாக நடப்பவை. செர்பியாவை ஏன் எடுத்துக்கணும்.. இங்க.. நம்ம இந்தியாவிலயே, குஜராத் கலவரத்தின்போது, கர்ப்பிணிப் பெண்களோட வயித்தைக் கிழிச்சி, கொழந்தையை எடுத்து நெருப்புல வீசினாங்கன்னு, அந்தச் சமயத்தில் வெளிவந்த சில கட்டுரைகள்ல படிச்சிருக்கேன். இந்தப் படத்தில் வருவதைவிடவும் கேவலமான விஷயங்கள் இந்தியால, கலவரங்களின்போது நடக்குது. திண்ணியம், மேலவளவு முருகேசன் கொலை இதெல்லாம் சில உதாரணங்கள். முருகேசனைக் கொன்னுட்டு, அவரோட ரத்தத்தை எடுத்து, அவரோட உறவினர்கள் வாயில ஊத்தின காட்டுமிராண்டிங்க வாழுற மாநிலம் நம்ம தமிழ்நாடு. இந்த மாதிரி விஷயங்களைத்தான் காட்சிப்படுத்திருக்காங்க. ஸோ, அதில் தவறு இல்லைன்றது என் எண்ணம். நீங்க மேலே சொன்ன அதே விஷயங்களைப் பயன்படுத்தி, இலக்கியங்களும் இருக்கு. தென்னமெரிக்காவில் நடந்த கொடுமைகளைப் பத்தி யோசா எழுதிருக்காரு. எனவே, இதில் தவறில்லை என்பது என் எண்ணம்.

    Reply
  29. . எந்த ஒரு சம்பவத்தையும் ஒரு நல்ல cinematography – யின் மூலம் நாசுக்காக காட்டமுடியும் .
    அதற்க்கு ஒரு நல்ல உதாரணம் perfume . perfume படமும் ஸ்டோரி லைன்னை மட்டும் பார்த்தால் கொடூரமானதாக தோன்றும் ,ஆனால் அதை அவ்வளவு அழகாக Tom Tykwer காட்டி இருப்பார்,அந்த படத்தில் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட குஜராத் சம்பவம் போல ஆரம்ப காட்சி இருக்கும்,கதாநாயகன் பிறக்கும் காட்சியை பாருங்கள்,அதை விட ஒரு அற்புதமான காட்சியை உதாரணமாக சொல்ல முடியாது ,இந்த படம் கொடூரத்தின் உச்சம்,வேண்டுமென்றே காட்டி இருக்கிறார்,

    Reply
  30. உங்க பதிவ படிக்கறதுக்கு முன்னாடியே பேர் மட்டும் பார்த்துட்டு டவுலோடி பார்த்துட்டேன். இப்போதான் விவரனைய படிச்சேன். படத்தவிட உங்க விவரணைல நல்லாருக்கு.

    Reply
  31. டெனிம் மோகன் – இப்பதான் Martyrs பார்த்து முடிச்சேன். அதை, முதல் பத்து நிமிஷத்துக்கு மேல என்னால ஓட்டாம பார்க்க முடியல. காரணம் – படம், படு மொக்கைங்க.. டவுன்லோட் பண்ண டைம் சுத்த வேஸ்ட். இந்த மாதிரி போரான படங்கள் வரிசைல கடைசியா நான் பார்த்தது – அஜீத் நடிச்ச ராஜா படம்தான். நான் ஜோக்கடிக்கல. நிஜம்மாவே, மொக்கைக்கடியா இருந்திச்சி படம். இப்ப என்னோட கவலை என்னன்னா, இன்ஸைட் படம், டவுன்லோட் ஆகி முடியப்போவுது 🙁 .. நீங்க என்னடான்னா, //இதில் matrys மிக அருமையாக இருக்கும்,A Serbian Film பார்த்து தூக்கம் தான் வந்தது,// இப்புடி சொல்லிருக்கீங்க. . Martyrs was dragging to the core. அனேகமா, inside பார்த்து மண்டகாய்ஞ்சி போயி, சரக்கடிக்க நேரும்னு நினைக்கிறேன் 🙁

    Reply
  32. அய்யா……போன் பண்ணி பிட்ட போட்டுட்டேன்…..இப்பதான் மனசு லேசா இருக்கு…..

    Reply
  33. என்னங்க டெனிம்…இப்புடி சொல்லிட்டாரு……..

    Reply
  34. / Martyrs was dragging to the core. அனேகமா, inside பார்த்து மண்டகாய்ஞ்சி போயி, சரக்கடிக்க நேரும்னு நினைக்கிறேன்/

    உச்சுச்ச்ச்ச்…அந்த அளவுக்கு ஒரு மனுசன ஓட ஓட வெரட்டுதுனா………..

    இருந்தாலும், படத்த நீங்க முழுசா பாககமா முடிவுக்கு வரக்கூடாது…..ஆமா……

    Reply
  35. மார்டைர்ஸ் பார்த்து நொந்த எம்மனசை நான் எப்புடி சரி செய்வது? யாராச்சும் சொல்லுங்களேன் ப்ளீஸ்

    Reply
  36. நொந்த மனசை insiders பாத்து ஆத்திக்கொள்ளவும்….

    Reply
  37. Inside was a gud one. I’ll write about it. liked it. நல்லவேளை மார்டைர்ஸ் போல இருந்திருமோன்னு நினைச்சேன். பட் இன்ஸைட், நல்லாவே இருந்தது. 🙂

    Reply
  38. பரவாயில்லயே….நாம பேசி வெச்சிருந்தபடி – ஒரேடியா மோகன் சொன்ன எல்லா படங்களயும் மொக்கைன்னு சொல்லக் கூடாதுன்னு டக்குனு இந்த கமெண்ட் போட்டிட்டீங்க….நல்ல மனசு உங்களுக்கு….என் பங்குக்கு நானும் சொல்லிறேன்…

    Inside ரொம்ப நல்ல படம் டெனிம்…சும்மா அதிர்ந்தது….

    Reply
  39. தல இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை,inside டை விட martyrs எனக்கு பிடித்து இருந்தது ,// முதல் பத்து நிமிஷத்துக்கு மேல என்னால ஓட்டாம பார்க்க முடியல///
    இதிலிருந்தே நீங்கள் படத்தினை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கவில்லை என்று தெரிகிறது,முதல் பத்து நிமிடம் பார்த்து விட்டு நானும் அப்படித்தான் நினைத்தேன்,ஆனால் போக போக படம் சுவாரியசமாக இருக்கும்,மர்ட்டிர்ஸ் பற்றி கொஞ்சம் நெட்டில் தகவல்களை தேடி பாருங்கள்,முடிந்தால் இந்த review படித்து பாருங்கள்,

    http://www.bloody-disgusting.com/review/2031

    drag me to hell பார்த்து பயந்த உங்களுக்கு இது எப்படி பிடிக்காமல் போனது என்று தெரியவில்லை,பிரெஞ்சு ஹாரர் என்று நெட்டில் அடித்து பாருங்க inside,martyrs,
    Irreversible,hightension இந்த நான்கு படங்கள் வந்து நிற்கும்,இதில் irreversible கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள்,மற்ற மூன்றும் உண்மைலேயே மிரட்டலான படங்கள்,எல்லாருக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் இருக்கு வாய்ப்பு இல்லை தான் ஆனால் //இதுவரை வந்த மொக்கை ஹாரர் படத்துல சிறந்த மொக்கைன்னு வெச்சிக்கலாம் // இந்த வார்த்தையை மட்டும் நான் எந்த காலத்திலும் ஒத்துக்கொள்ள மாட்டேன்,அப்படி என்றால் நீங்கள் இந்தப் படத்தினை பார்க்கவில்லை என்றே நான் எடுத்துக்கொள்வேன்,தயவு செய்து martyrs பக்கத்துல கூட A Serbian Film ,drag me to hell போன்ற படங்கள் நிற்க முடியாது

    Reply
  40. // //இதுவரை வந்த மொக்கை ஹாரர் படத்துல சிறந்த மொக்கைன்னு வெச்சிக்கலாம் ////

    இந்த வார்த்தையை நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள்,எதிர்காலத்தில் தேவைப்படும்

    Reply
  41. martyrs பார்த்தவர்கள் யாராவது இருந்தால் இங்கே வந்து விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்

    Reply
  42. பாஸ்….

    ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டுனத சொல்றேன்……உங்களுக்கு எந்த அளவிற்கு martyrs தான் இதுவரை வந்த படங்களிலேயே சிறந்த ஹாரர் படம் என்று சொல்ல உரிமை உள்ளதோ…..அதே அளவிற்கு மற்றொருவருக்கு அத மொக்க என்று சொல்ல பூரண உரிமை உள்ளது…..அத அவர முழுசா பாக்க வெக்குற அளவிற்கு அந்த படம் கொஞ்ச நேரத்திலேயே அவர இம்ப்ரெஸ் பண்ணலைனா அதுக்கு என்ன பண்ண முடியும்…..

    ஏதாவது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு இந்த அளவிற்கு வாதம் பண்ணால் பரவாயில்லை. இந்த படத்திற்கு இவ்வளவு நேர விரயம் தேவையா…உங்க பதிவுல கமெண்ட் – LOTR பதிவுல கமெண்ட் – இந்த பதிவுல கமெண்ட்……….ஸ்ஸ்ஸ்ஸ்……முடியல…….

    Reply
  43. @ டெனிம் & கொழந்த – நான் ஆக்சுவலி மார்டைர்ஸ் படம் முழுக்க பார்த்தேன். ஆனால், என்னை சத்தியமா அந்தப் படம் இம்ப்ரஸ் பண்ணவே இல்லை. ஓட்டிப் பார்த்தேன்னு நான் சொன்னது, சும்மா ஜாலிக்கி. உண்மையாவே, படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்ஹ்டுலயே, படம் எதை நோக்கி போயிட்டு இருக்குன்னு புரிஞ்சிருச்சு. அதேபோல், படத்தில் சொல்லப்படும் விஷயங்களும், ‘இதைத்தான் சொல்லப்போறாங்க’ ன்னு ஈசியா தெரிஞ்சிருச்சு. இது மட்டும் படம் மொக்கைன்னு சொல்றதுக்குக் காரணமில்லை. ஓவரால் படமே, படு ஸ்லோ. screenplay was way too dragging. ஸ்லோவா இருந்தாக்கூட , அதை இன்ரஸ்டிங்கா ஆக்கலாம். ஆனா இதுல அது எதுவுமே இல்லை. அதன் ரீசன். ப்ரீயா உட்றலாம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி இல்லையா? 🙂

    Reply
  44. //உண்மையாவே, படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்ஹ்டுலயே, படம் எதை நோக்கி போயிட்டு இருக்குன்னு புரிஞ்சிருச்சு. அதேபோல், படத்தில் சொல்லப்படும் விஷயங்களும், ‘இதைத்தான் சொல்லப்போறாங்க’ ன்னு ஈசியா தெரிஞ்சிருச்சு.//

    இல்லையே தல அப்படி guess பண்ண முடியாதே? அது கிட்ட தட்ட ரெண்டு படம் மாதிரி போகுமே முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் நெறைய வித்துயாசம் இருக்குமே,நீங்கள் வேற ஏதாவது படம் பார்த்தீங்களா ?

    இது தானானு ஒரு தடவ conform பண்ணிக்கோங்க,

    http://stagevu.com/video/onrteirukddx

    Reply
  45. //ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி இல்லையா? :-)//

    சரி anyway ப்ரீய விடுங்க

    Reply
  46. //நீங்கள் வேற ஏதாவது படம் பார்த்தீங்களா ? //

    ஆஹா.. ஏங்க? எந்த படம்னே தெரியாம இந்தப் படத்தை நான் பார்த்திருப்பேன்னு நினைக்கிறீங்களா? என்ன கொடுமை இது 🙂 . . லாஸ்ட் டைமா சொல்றேன். நீங்க சொல்ற அதே மார்டைர்ஸ் தான் பார்த்தேன். படம் ரொம்ப போர். இந்த டாபிக்கை விட்ரலாமே. என்ன சொல்றீங்க? மார்டைர்ஸ் எடுத்த டைரக்டரே வந்து சொன்னாக்கூட, இது மொக்கைன்ற என்னோட பீலிங்கி மாறாது 🙂 . . கடைசி தடவையா, இன்னொருவாட்டி சொல்றேன். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி 🙂 . .

    Reply
  47. என்னயிருந்தாலும் கருந்தேள் அப்புடி பண்ணியிருக்கக்கூடாது…….

    அதுமாதிரி டெனிம் “அத” சொல்லியிருக கூடாது……மனசு நோவுது….

    Reply
  48. யோவ் கொழந்த நீ ஒருத்தன் போதும் ரத்த பூமியாகிடுவ

    Reply
  49. என்னாது……மார்டைர்ஸ் பிரெஞ்சு படமா……..கருந்தேள் ஏதோ கொரிய படம்ன்னு சொன்னதா ஞாபகம்….

    (நேத்துலயிருந்து எனக்கு பொழுதுபோக்கே இதான்…அவ்வளவு சீக்கிரம் முடியவிட்டிருவோமா)

    Reply
  50. அதெலாம் நாங்க நேத்தே போன்ல பேசிட்டோம்……பாவம் இந்த பச்ச மண்ணு முரளி வேற உன்கிட்ட மாட்டிக்கிடாறு போல,அவர அந்த வில்பர் தான் காப்பாற்றனும்

    Reply
  51. // நீங்கள் வேற ஏதாவது படம் பார்த்தீங்களா ?

    இது தானானு ஒரு தடவ conform பண்ணிக்கோங்க,

    http://stagevu.com/video/onrteirukddx //

    வில்பர் சற்குணராஜ் விடியோவுக்கு அப்பறம் இந்த கமெண்ட்ட பாத்துதான் சமீபத்துல அதிகமா சிரிச்சது……..

    இந்த கமெண்ட்கப்பறமும் கருந்தேள் உயிரோட இருக்காரா…..

    Reply
  52. யோவ் நீ அடங்கப் போறியா இல்லையா ?

    Reply
  53. இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாகிறது,இனி உன் பாச்சா பலிக்காது

    Reply
  54. தேளு அப்ப inside பதிவ விரைவில் எதிர்ப் பார்க்கலாம் ?….நல்ல வேலை அதுவாது உங்களுக்கு புடிசுதே…..

    Reply
  55. அப்ப மற்றுமொரு படம் சொல்லுகிறேன் High tension பார்த்து இருக்கீங்களா ?

    Reply
  56. இதற்கு கொளந்தை எழுதும் கமெண்டை நான் படிப்பதாக இல்லை ,அது என்னவாக இருந்தாலும்,

    Reply
  57. சரி தல நான் கிளம்புகிறேன்……..

    Reply
  58. அப்பா நீங்க போட்ட கமெண்ட் லே உருப்படியான கமெண்ட் இதுதான்னு கொழந்த டைப் பண்ணிக்கிட்டு இருக்கும் பாருங்களே………

    Reply
  59. உங்க தளம் லோட் ஆக இன்னும் லேட் ஆகுது அதை கொஞ்சம் பாருங்கள்

    Reply
  60. // அதெலாம் நாங்க நேத்தே போன்ல பேசிட்டோம் //

    அது நேத்தே தெரியும்…ஏன் என் நம்பர குடுத்தேன்னு காய்ச்சி எடுத்துட்டார்…….விடிய விடிய அலாரம் வெச்சு திட்டுனார்யா…..அப்புடி என்னத்தான் சொன்னீங்களோ……காதுல ரத்தமே வந்திருச்சு…….மம்மி பாவம்ன்னு சொன்ன பிறகுதான் வுட்டார்…ஆனா அதுக்குள்ள விடிஞ்சிருச்சு…….

    நா எப்பவும் ஒருத்தர் நம்பர இன்னொருதருக்கு குடுக்கவே மாட்டேன்….நைட் தூக்க கலக்கத்துல உங்களுக்கு குடுத்திட்டேன்….இதுக்கு முன்னாடி Amu பதிவுகளுக்காக நம்பர் வாங்கி வாதம் பண்றதுல அர்த்தம் இருக்குற மாதிரி எனக்கு தோணுது….இந்த படங்களுக்கு தேவையா…..

    Reply
  61. என்னயிருந்தாலும்…….

    // நீங்கள் வேற ஏதாவது படம் பார்த்தீங்களா ?

    இது தானானு ஒரு தடவ conform பண்ணிக்கோங்க //

    முடியல பாஸ்….அதுல conformம மட்டும் கர்மசிரத்தையா இங்க்லீஷ்ல அடிச்சிருக்கீங்க பாருங்க…….அங்க நிக்கிறீங்க….

    Reply
  62. டெனிம் மோகன் – கட்டாயம் inside பத்தி நான் எழுதுவேன். எனக்கு அது புடிச்சுது. அதேபோல, ஹை டென்ஷன் இன்னும் பார்க்கல. அதையும் டௌன் லோடிர்றேன். என்ஜாய் த வீக்கென்ட் !!

    Reply
  63. இதே இயக்குநரின் ‘dildo the dragon’ என்ற படம், இதைவிட நன்றாக இருக்கும். அதைப் பார்த்திருக்கிறீர்களா? (இது புதிய ட்ரெண்டு. ஒரு படத்த பத்தி எழுதினா, அதைப்பத்தி சொல்றத விட்டுட்டு, ‘அந்தப்படம் பார்த்தியா’, ‘இந்தப்படம் பார்த்தியா’, இல்லேன்னா, ‘அந்தப்படம் அருமையா இருக்கும். அதைப்பாருங்க மொதல்ல’ அப்புடீன்னு நம்மாளுக உடுற சலம்பல் இருக்கே… உஸ்ஸ்ஸ்ஸ்

    // ஒரு தடவை matrys பார்த்துவிட்டு நான் சொல்லும் படங்களை பார்க்கலாமா //

    // தேளு அப்ப inside பதிவ விரைவில் எதிர்ப் பார்க்கலாம் //

    // அப்ப மற்றுமொரு படம் சொல்லுகிறேன் High tension பார்த்து இருக்கீங்களா ? //

    ஏதோ என்னால முடிஞ்ச பொதுச்சேவை…..

    Reply
  64. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை மட்டுமில்லை. ஒரு படத்தை பார்க்கும் போதான சூழ்நிலையும் நம் ரசனையை பாதிக்கலாம். கருந்தேளுக்கு பிடிச்ச பல படங்கள் எனக்கு மொக்கை. எக்ஸ்பெண்டபில்ஸ் எனக்கு நினைவிருக்கும் ஒரு உதாரணம்.

    ஹை டென்ஷன் படத்தை என்னை பார்க்க சொன்னது, செர்பியன் படத்தை ரெகமென்ட் செய்த நண்பர்தான். ஆனா ஹை டென்ஷன் மாதிரியான ஒரு மொக்கையை இனிமேதான் கண்டு பிடிக்கணும்னு நான் அவர் கிட்ட சொன்னேன். ஆனா செர்பியன் படத்தை பார்த்தப்ப திரும்ப எழுதனும்னா அதுக்கு இந்தப்படம் தான் காரணமா இருக்கும்னு சொன்னேன்.

    It depends!!

    Reply
  65. தல பாலா சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். எக்ஸ்பெண்டபிள்ஸ் பொறுத்தவரை, ஸ்டாலோன் ! ஸ்டாலோன் நடிச்ச ஒரு மேட்டர் படமா இருந்தாக்கூட எனக்குப் பிடிக்கும் 🙂 .. அதான் ரீஸன் 🙂 ..

    ஆனா, சந்தடிசாக்குல ஹை டென்ஷனும் மொக்கைன்னு சொல்லிட்டீங்களே தல . . டெனிம் என்னைப் பாக்க சொன்னாரு 🙂 .. எனிவே, யூட்யூப்ல எதாவது க்ளிப்பிங் பார்த்து, அப்பாலிக்கா டௌன்லோடிக்கிறேன் 🙂 ..

    Reply
  66. ஹை டென்சன் மாதிரி 100 படம் ஏற்கனவே வந்தாச்சிங்க கருந்தேள். அதுல நாம 99 பார்த்திருப்போம். ஆனா இப்ப நான் சொல்லுறது கூட.. அப்ப படம் பார்க்கும் போது வந்த எண்ணம்தான். நீங்க செர்பியன் படம் மொக்கை ன்னு சொல்லி இருந்தாகூட நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

    Eat Pray Love இன்னொரு உதாரணம். 🙂 🙂

    Reply
  67. ஹாஹ்ஹா 🙂 .. Eat Pray Love – உங்களுக்குத்தான் தெரியுமே.. எனக்கு ரொமான்ஸ் படம்னா புடிக்கும். அந்தப் படம், அப்புடிப் புடிச்சதுதான் 🙂 … பாவம் ஒரு நண்பர் வந்து ‘ஏன்யா என்னைப் பாக்க சொன்னே வெண்ணை’னு என்கிட்ட கேட்டாரு 🙂 .. இனி ஒரு டிஸ்கி போடணும்னு முடிவு பண்ணேன் 🙂

    Reply
  68. எச்சுஸ்…..ரெண்டு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்கே வரேன்னு நெனைக்க வேண்டாம்…..சொல்லிட்டு போயிர்றேன்…

    High Tension படம்,Martyrs,Inside,A Serbian Film, Human Centipede இந்த படங்கள், இதையும் மிஞ்சிய படங்கள்ன்னு நாளைக்கு டெனிம் ஒரு பதிவு போடுறார்…என்னய வேற ஹை டென்சன் பாக்க சொல்லி டெண்சனாக்குறார். நாளைக்கு அத பாத்திட்டு படங்கள தரவிறக்காலாம் என்று தோணுது…

    டிஸ்கி: Expendables – Eat pray love வரிசைல Drive Angry உட்டுப்போச்சு. செம பல்பு வாங்குனேன்….

    Reply
  69. யோவ்.. ட்ரைவ் ஆங்ரி படத்தை 3டில தியேடர்ல பாக்கணும்யா.. டவுன்லோட் பண்ணா மொக்கையாத்தேன் இருக்கும்..அப்புறம், டெனிம் பதிவு போடட்டும். அவருக்குப் புடிச்ச படங்களை லிஸ்ட் போட அவருக்கு உரிமை உண்டு 🙂

    Reply
  70. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை மட்டுமில்லை. ஒரு படத்தை பார்க்கும் போதான சூழ்நிலையும் நம் ரசனையை பாதிக்கலாம்//

    கண்டிப்பாக இதை நானும் ஒத்துக்கொள்கிறேன்,அப்படி சில நேரங்களில் எனக்கும் ஆகி உள்ளது,

    Reply
  71. அது இருக்கட்டும் நீங்க திரும்ப எழுத வாங்க தல

    Reply
  72. @கொழந்த said:

    //High Tension படம்,Martyrs,Inside,A Serbian Film, Human Centipede இந்த படங்கள், இதையும் மிஞ்சிய படங்கள்ன்னு நாளைக்கு டெனிம் ஒரு பதிவு போடுறார்…என்னய வேற ஹை டென்சன் பாக்க சொல்லி டெண்சனாக்குறார். நாளைக்கு அத பாத்திட்டு படங்கள தரவிறக்காலாம் என்று தோணுது…//

    தங்கள் பணியை செவ்வனே செய்துளீர்

    Reply
  73. எல்லாம் சரி இனி அடுத்தவர்களுக்கு படங்களை பரிந்துரைக்கலாம வேண்டாமா ?

    Reply
  74. டெனிம் – கட்டாயம் பரிந்துரைக்கலாம். ஆனால், ஒரு சிறிய டிஸ்கியோடு. படங்கள் மட்டும், ஒரு ஆள் பாக்குற சமயத்துல எந்த மனநிலையை அடையுறானோ, அதே மனநிலை இன்னொருத்தருக்கு வர்ரதில்லை. இருந்தாலும், அவங்கவங்க சூஸ் பண்ணிக்கலாம். அதுக்கு, இப்புடி ஒரு படம் இருக்குன்னு தெரியுறது அவசியம். ஸோ, கண்டிப்பா பரிந்துரைக்கலாம்

    Reply
  75. 120 கோடி மக்கள தொகை உள்ள நாட்டில் இதை ஏற்று கொள்வது கடினமாக உள்ளது.நீலப்படங்களை அதீகமாக பார்க்கிற இந்திய நாட்டில், அதை பொதுவெளியில் ஏற்றுக் கொள்கிற அடிப்படை நேர்மை இல்லை.கலாச்சாரம் என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டு, மீகுபாலூணர்வு உள்ளவர்களிடம் வாழும் சூழல் நிலவுகிறது.ஆண்டிகிர்ஸ்ட்,கோல்டு பீஷ்,போன்ற பட வரிசையில் இதுவும் ஓர் சிறந்த படம்தான்.என்னுடைய நண்பர் பாவெல் நவகீதன் உலக பட விழாக்களில் படம் பார்த்தவுடன் கேட்பார்,படம் வேகமாக சென்றதா? இல்லை மெல்லமாக சென்றதா? ஆனால் இந்த படம் வேகமாக சென்றது.இன்னும் ஒரு தருணத்தில் விவாதிக்க இது பயன்படும்.

    Reply
  76. Hi, I watched the movie jus now, the last scene is the mile stone of the film, especially the villain told, “starts with the little one”. Your review is nice.

    Reply
  77. எல்லாம் முடிந்ததது என நினைக்கும்போது கிளைமாக்ஸ் ல் ஒரு ட்விஸ்ட் இருக்கும் ..என்னை தூங்க விடாமல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. இப்பிடியெல்லாம் மனிதர்கள் இருக்கிறர்களா.?? இப்படம் பார்க்கும்போது அடிக்கடி இது சினிமா எல்லோரும் நடிக்கிறர்கள் என்று நினைவுபடுத்தி பார்த்தேன்.

    Reply
  78. “நாம் செய்யும் எதுவுமே, கலாசாரம் சம்மந்தப்பட்டது. உயர்ஜாதிகள் பின்பற்றும் எதையுமே, கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்; அதுதான் இவர்களைப்பொறுத்தவரை, நடுநிலைமை. இதைப்போன்ற கொள்கைகளை வைத்திருக்கும் மதவாதிகள், இப்போது இலக்கியத்திலும் புகுந்து, ‘தூய கலாசாரம்’, ‘தூய அத்வைதம்’ என்று, எதைப் பேசினாலும் ‘தூய’, ‘தூய’ என்று ஒரு அடைமொழியை அத்துடன் இணைத்து, போலிப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். அவர்களுக்கு இப்படம் பற்றிய தகவல் கிடைத்தால், கட்டாயம் இது எதிர்க்கப்படக்கூடிய படம் என்றே எழுதுவார்கள். அதுவே, அயோத்தியில் நடந்ததும் குஜராத்தில் நடந்த முஸ்லிம் கொலைகளும் சரி என்று ஒரு படம் எடுக்கப்பட்டால், அதனை மறைமுகமாகவாவது ஆதரிப்பதே இவர்களின் வேலையாக இருக்கும்”.

    எவ்வளவு அளகா லிங்க் பண்ணி சொல்லியிருக்கீங்க…கெட்ட பயலுக இந்த உயர்ஜாதி இந்துத்துவா ஆளுங்க… முஸ்லீம், கிறிஸ்துவ, முற்போக்கு, மதச்சார்பற்ற, திராவிட ஆளுங்களுக்கு இந்தப்படத்தப் பாக்குறதுல ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனா இந்த இந்துத்துவா ஆளுங்களே இப்படித்தாங்க, முகமது பின் துக்ளக் படத்த தடை பண்ணச்சொல்லி கேஸ் போட்டாய்ங்க, சல்மான் ருஷ்டி புக்க தடை பண்ணினாய்ங்க, லெனின் படத்துக்கு தடை போட்டாய்ங்க, சினிமாவுல தண்ணி அடிக்கறது- சிகரெட் குடிக்கிறது கூடாதுன்னு கதாநாயகர்களுக்குஎச்சரிக்கை விட்டாய்ங்க, தஸ்லிமா நஸ்ரீன அடிச்சு வெரட்டினாய்ங்க, லாஸ்ட் பேஷன் ஆப் ஜீசஸ் க்ரைஸ்ட் படத்த தடை பண்ணினாய்ங்க, பாய்ஸ் படத்த எதிர்த்து மறியல் செஞ்சாய்ங்க, டா வின்சி கோட் படத்த தடை பண்ண சொன்னாய்ங்க, இவ்வளவும் பண்ணின உயர்ஜாதி இந்துத்துவா ஆளுங்கள கரெக்டா நூல் புடிச்சா மாதிரி முற்போக்கா ஒரு புடி புடிச்சிருக்கீங்க பாருங்க, அங்க நல்லா முற்போக்கா நிக்குறீங்க நீங்க.

    Reply
  79. This movie is not for all….

    i mean this movie is not for tender hearted persons….

    violence and vulgarity to the core…

    Reply
  80. நண்பர் கருந்தேள்….
    இப்படத்தில் வுக்மிரை marija, (maria அல்ல) கொன்று விடுகிறாள் என்று
    சொல்லி இருக்கிறீர்கள்.. ஆனால் வுக்மிரை கொள்வது மிலோஸ். மற்றும் அவன் சகோதரன் மார்கோ’வை கொள்வது மரிஜா…
    இது போன்ற தகவல் பிழைகளை இனியும் நேராமல் பார்த்துகொள்ளுங்கள்..
    நான் இத்திரைப்படத்தை வெறும் படம் என்ற மனநிலையிலேயே டவுன்லோட் செய்து பார்த்தேன், ஆனால் படம் முடிந்தவுடன் மனதை ஒரு வேண்டாத, இனம் புரியாத சோகமும் பதட்டமும் ஆக்கிரமித்துகொள்கிறது…..

    Reply
  81. யு ட்யூபில் ‘செர்பியன் பிலிம்’ பார்த்தேன். பார்க்காதே பார்க்காதே என்று மனம் சொன்னாலும், ஆர்வம தொடர வைத்துவிட்டது. எனக்கு தெரிந்து, கொடூரம் என்பதின் உச்சம் இந்த சினிமாதான்.

    Reply
    • //எனக்கு தெரிந்து, கொடூரம் என்பதின் உச்சம் இந்த சினிமாதான்.// – கண்டிப்பாக செல்வா. இதுதான் உச்சம். Same feeling here too.

      Reply
  82. Ramesh

    I was not a big fan of snuff movies but after watching this movie became big fan of snuff movies.Can you please give me list of such good movies ?

    Reply

Join the conversation