War of the Ring – மின்புத்தக ரிலீஸ்

by Karundhel Rajesh June 4, 2012   series

ஹாய் friends…

எங்களது மூன்று மாத முயற்சி, இதோ இப்போது உங்கள் பார்வைக்கு. இந்த இணைப்பில் ‘War of the Ring’ – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய மின்புத்தகத்தை download செய்துகொள்ளலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் அனுப்புங்கள —> waroftheringtamil@gmail.com (update – 4th June 2014 – id not used now. Hence please comment in this post for feedback).

மின்புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

இந்த மின்புத்தகம், திரைப்படங்களில் ஆர்வமுடைய ஒவ்வொரு ரசிகனுக்கும் டெடிகேட் செய்யப்படுகிறது.

இப்போது, இந்த மின்புத்தகத்தைப் பற்றிய சில இறுதித் தகவல்கள்.

  • புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள்  – 280
  • புத்தகம், முழுத்திரையில் ஓபன் ஆகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அப்படி ஓபன் ஆகாவிட்டால் ctrl + L அமுக்கி, முழுத்திரையில் காணலாம்.
  • புத்தகத்தின் இறுதியில் இப்படங்களைப் பற்றிய சில லிங்க்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தக அனுபவத்தை முழுமையாக்கும் லிங்க்கள் இவை.
  • புத்தகத்தை இந்த அளவு கஷ்டப்பட்டு டிஸைன் செய்தவர் – ஹாலிவுட் பாலா.
  • புத்தகத்தின் டிஸைன் வேலையில் உதவிய நண்பர்கள் – இலங்கையைச் சேர்ந்த  சஜீவன் மற்றும் மும்பையைச் சேர்ந்த மோகன் பொன்ராஜ்
  • புத்தகத்தின் ப்ரூஃப் ரீடிங்கில் பெரிதும் உதவிய நண்பர்கள் – சுப தமிழினியன், கார்த்திகேயன் வாசுதேவன் (கீதப்ரியன்) மற்றும் கொழந்த
  • இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் – கொழந்த
  • கடைசி சில வாரங்களில் எண்ணற்ற கூகிள் hangoutகளின் மூலமாகவே பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், புத்தகத்தின் உருவாக்கத்தில் நான், பாலா, சரவண கணேஷ் (கொழந்த), சஜீவன் ஆகியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலேயே இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இணையத்தின் நன்மைகளில் இதுவும் ஒன்று.
  • எங்களுக்குத் தெரிந்து, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்திலும் சரி – புத்தகத்திலும் சரி – கொடுக்கப்பட்டுள்ள பிரதான விஷயங்கள் அனைத்துமே இந்தப் புத்தகத்தில் கவர் செய்யப்பட்டுவிட்டன. ஏதாவது சில தகவல்கள் அங்குமிங்கும் இருக்கலாம். ஒருவேளை நேரம் அனுமதித்தால், அவைகளையும் உள்ளே போட்டு இந்த மின்புத்தகத்தின் version 2 வருங்காலத்தில் வந்தாலும் வரலாம்
  • புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டு, படங்களை ஒருமுறையாவது பார்க்க முயலுங்கள். பல அட்டகாசமான தகவல்கள் அப்போது தெரியவரும்.

இறுதியாக… இந்தப் புத்தக உருவாக்கத்தில் அமைந்த டீம் – அட்டகாசம். ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலிலோ அல்லது ஹேங்கவுட்களிலோ அல்லது தொலைபேசியிலோ பரிமாறிக்கொள்ளப்பட்ட கிண்டல்கள், இப்புத்தகத்துக்குத் தேவையான அசுர உழைப்பின் (குறிப்பாக பாலா) கனம் தெரியாமல் எங்களை இந்த வேலையை எஞ்சாய் செய்து முடிக்க வைத்தது. எப்படி ‘Sir’ பீட்டர் ஜாக்ஸன் இந்தப் படங்களை பல ஆண்டுகள் செலவழித்து பல குழப்பங்களுக்கு இடையில் எடுத்து முடித்தாரோ அப்படி எங்களுக்குப் பல ஆண்டுகள் ஆகாவிட்டாலும், இந்த புத்தக உருவாக்கத்துக்கு செலவான சில மாதங்களை எங்களால் மறக்க முடியாது.

சரி. இன்றோடு ஒரு பெரிய வேலை முடிந்தது. அடுத்து……..?

Well… Let’s keep our fingers crossed ?

பி.கு – பாலாவின் Pixar Story மின்புத்தகத்தை இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யலாம்.

எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே முழு மன நிறைவுடன் இந்த மின்புத்தகம் வைக்கப்படுகிறது. நன்றி

  Comments

85 Comments

  1. ஏதோ படம் ரிலீஸ் ஆகப்போற மாதிரி டென்ஷன் …..இந்த கவுன்ட் டவன் பண்ண வேலை எல்லாம் …இந்த சரித்திர புகழ் வாய்ந்த பதிவில் முதல் கமெண்ட் போட்ட பெருமை என்னையே சேரும்

    Reply
  2. I have downloaded the book.
    will update my comments soon.

    But A grt work.
    My heart wishes for the success of the book.

    Thanks
    Krishna

    Reply
  3. அருமை நண்பர்கள் கருந்தேள்,ஹாலிபாலி,கொழந்த மற்றும் வார் ஆஃப் த ரிங்ஸ் மின்புத்தகத்துக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும்,நன்றிகளும்,மிகவும் மகத்தான புத்தகம் இது,லார்ட் ஆஃப் ரிங்ஸ் சீரீஸ் படங்களை இதை படிக்கையிலேயே பார்க்க எண்ணியிருக்கிறேன்.இதை ஹாலி பாலி மலையாளத்திலும் மொழி பெயர்க்க எண்ணியுள்ளதை எண்ணி புல்லரிக்கிறோம்:)))

    நண்பர்கள் ஒரு டவுன் லோட் லேபிள் ஃப்ளாஷில் ரெடி செய்து கொடுத்த்தால் வலைப்பூவில் இணைத்துக்கொள்வேன்.நண்பர் எஸ்கே தான் ஹாலி பாலியின் பிக்ஸாருக்கு தயாரித்து தந்தார்.

    நான் எல்லாம் என்ன உழைத்தேன் என்று என் பெயரை போட்டீர்கள் நண்பா,உங்கள் பெருந்தன்மையே பெருந்தன்மை.அடுத்த ப்ராஜக்டில் என் உழைப்பும் இருக்குமாறு பார்த்துகொள்கிறேன்.

    நன்றி நண்பர்களே!!!

    Reply
  4. Ebook ரொம்ப சூப்பர் ஆக இருக்கிறது. நிஜமாகவே ஒவ்வொரு பகுதியும் அசத்தலாக இருக்கிறது. எனக்கு இந்தக் கதையில் ஆர்வம் இல்லை (sorry) ஆனால் இதை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வளவு சிறப்பாக நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

    Reply
  5. Congrats guys… Am so proud of this achievement…on ur behalf.
    Thanks bala, kolandha., geetha priyan, supa thamizhiyan, shageevan, mohan ponraj & all who made this happen. The trailer made us eager… And the designing…just WOW.
    Epdiyavadhu kashtapattu padikanum :-p

    Reply
  6. டவுன்லோட் செய்து வைத்துவிட்டேன். படங்கள் பார்த்திருக்கிறேன். புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்ததும் பொறுமை இழந்திருக்கிறேன்.

    இந்தப் புத்தகத்தின் அழகான வடிவமைப்பும் உள்ளடக்கமும் படித்து முடித்துவிடுவேன் என்று தோன்ற வைத்திருக்கிறது.

    நன்றி உழைத்தவர்களுக்கு.

    Reply
  7. அசுர உழைப்பு. அட்டகாசமான வடிவமைப்பு. அச்சில் பார்த்த நிறைவு. கண்களில் ஒற்றிக் கொள்ளும் துல்லியம்.

    கைகோர்த்து உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். வலையுலகில் இதுவொரு மைல்கல். அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்.

    டவுன்லோட் செய்து விட்டேன். வேகமாக புரட்டியும் பார்த்துவிட்டேன். அதனடிப்படையில்தான் மேற்கண்ட மறுமொழி.

    நிதானமாக படித்துவிட்டு பிறகு எழுதுகிறேன்.

    டீம் ஓர்க் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கும், கூட்டு உழைப்பே அனைத்து சாதனைகளுக்கும் முதன்மை என்பதற்கும் இந்த இ புக் ஓர் உதாரணம்.

    வலையுலகம் ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்திருக்கிறது.

    தோழமையுடன்
    சிவராமன்

    Reply
  8. கடினமான உழைப்பும் அருமையான படைப்பும்,
    வாழ்த்து நண்பர்களே

    டவுன்லோட் செஞ்சுடேன், இனி அடுத்து…

    Reply
  9. தமிழில் இப்படி பல முயற்ச்சிகள் தொடர பிள்ளையார் சுழி போட்டு விட்டீர்கள்.
    என் போன்ற தமிழ் படிக்கும் பாமரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
    ஒருங்கிணைந்து…பணியாற்றிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    Reply
  10. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    Reply
  11. Ethu pala jackie kalakum bruce lee kum mun mathriyai irukum

    Reply
  12. Ethu pala jackie kalakum bruce lee kum mun mathriyai irukum

    Reply
  13. Pages are moving from left to right, usually it moves from right to left direction.

    Reply
  14. fantastic and best wishes for continuing this enthu for ever.

    Reply
  15. டவுன்லோடு போட்ட நொடி இதை எழுதுறேன்..நீண்ட நாட்கள் காத்திருந்த புத்தகம்..டைம் பார்த்து முழுதாக படிக்க போறேன்..தங்கள் அனைவரது உழைப்பும் மிக சிறந்தது.பாராட்டத்தக்கது,,நன்றிக்கு மேல் நன்றிங்க.

    Reply
  16. சிறந்த வடிவமைப்பு! வாழ்த்துக்கள்! 🙂 படித்து விட்டு பின்னொரு நாளில் கருத்திடுகிறேன்!

    Reply
  17. ROFL னாவே என்னான்னு ரொம்ப நாளு தெரியாம இருந்துச்சு…

    அப்புறம் எப்படியோ கேட்டு தெரிஞ்சுகிட்டேன்…

    அதே மாதிரி LOTRனதும் நானே சுயமா கண்டுபிடிக்கலாம்னு லாப் ஆப் த போட்டு ஆர்னா என்னாவாக இருக்கும்னு ரொம்ப காலம் யோசிச்சி யோசிச்சி கடைசில ச்சே லார்ட் ஆப் த ரிங்ஸான்னு தெரிஞ்ச்சுகிட்டேன்,,,,

    சப்ப மேட்டரு இதுக்கே எனது தேடுதல் குறைவாக இருக்கு…

    புக் நடுவிலே ”போர்வீரர்களாக நடித்தவர்களை நியூசிலாந்து ராணுவத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் ஆர்வமிகுதியில் கொடுக்கப்பட்ட அட்டை கத்திகளை அடிக்கடி உடைத்துவிடுவார்கள்” என்ற பொட்டி செய்தி வருகிறது…

    எவ்ளோ டீப்பா உள்ளே போனா இந்த மாதிரி சின்ன சின்ன பொட்டி செய்திகளை கூட சேகரிக்க முடிஞ்சிருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது….

    புத்தகம் இன்னும் படிக்க ஆரம்பிக்கலை…. இப்போதிக்கு மேலோட்டமா பார்த்ததே பிரமிக்கதக்க வகையில் இருக்கு….

    புத்தகம் உருவாகக்காரணமான நால்வர் குழுவை மனமுவந்துப்பாராட்டுகிறேன்….

    Reply
  18. Hi Rajesh!

    Though I am regular reader of your blog, I don’t put comments (I am tooo lazy.). But this time I should thank you for the wonderful book. Its making me so excited. Its like waiting for a big star’s movie.

    We miss Hollywood Bala a lot. We want him to write again.

    Thanks to the whole team for the wonderful effort.

    Reply
  19. பிரமாதமான வொர்க் நண்பர்களே! டவுன்லோட் செய்து சில பக்கங்களை மட்டுமே புரட்டினேன். அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    Reply
  20. அருமையான நூல்……….வாழ்த்துக்கள் கருந்தேள் அண்ணே கலக்கிட்டீங்க!!!!!!!! நூல் வடிவமைப்பு செய்த அண்ணன் ஹாலிவுட் பாலா, கொழந்த, கீதப்ரியன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்….

    கடைசி End Cardல Blog Readersனு போட்டிருந்ததை பார்த்து நாங்களும் பெருமைப்பட்டோம்..

    மீண்டும் வாழ்த்துக்கள் கருந்தேள் அண்ட் கோ அண்ணன்ஸ்..

    Reply
  21. அட்டகாசமான படைப்பு… அபரிதமான உழைப்பு… கலக்குங்கள் கருந்தேள்.

    Reply
  22. biggest hard work ever in this field!! couldn’t go away jus like tht without appreciating your hard work & ur sweet baby!!

    Keep Rocking!!

    Reply
  23. வாழ்த்துக்கள் பாஸ்!

    உண்மையில் LOTR படங்களில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. Return of the King மட்டும் பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று உங்கள் மின்புத்தகம் பார்த்த பொது அசந்துவிட்டேன். இந்தளவுக்கு எதிர்பார்க்கல! சும்மா அப்ப்பப்பிடி இருக்கு! முடிவெடுத்துவிட்டேன் முழுவதையும் ‘தீர’ வாசித்து, படங்களையும் பார்த்து விடுவதென்று!

    உண்மையிலேயே அசுர உழைப்பு! ‘தல’ பாலா, கொழந்த மற்றும் உங்களோடு சேர்ந்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!!

    Reply
  24. கருந்தேள், ஹாலிவுட் பாலா,கொழந்த உங்கள் மாபெரும் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்…!!

    Reply
  25. இந்த மாபெரும் படைப்பை உருவாக்கிய, உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..!

    Reply
  26. எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே முழு மன நிறைவுடன் இந்த மின்புத்தகம் வைக்கப்படுகிறது. நன்றி.
    பெருந்தன்மையான வார்த்தை
    ஒவ்வொருவரையும் வணங்கிகொள்கிறேன் .அருமையான பணி .இது உங்களின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சி எனும்போது எதோ ஒரு உணர்வு உங்களுடன் எங்களை பிணைத்து இருக்கிறது .மிகவும் நன்றி .இதை எப்போதாவது படித்து பதில் போட நேரமில்லாத நண்பர்கள் சார்பிலும் இங்கு நன்றி சொல்லி கொள்கிறோம் .

    *என்றென்றும் அன்புடன் ,*
    *கிருஷ்ணமூர்த்தி*

    Reply
  27. EXCELLENT WORK GUYZ..HARD WORK PAYS!!

    Reply
  28. அருமையான முயற்சி கருந்தேள் ராஜேஷ்… தயாரிப்பில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Reply
  29. Dear Rajesh,

    I can only simply Admire you.

    I used to tell my friends and cousins to read your articles and cinema reviews..

    God has blessed you with such talents and energy, and you are using those in correct way..

    will talk to you soon.

    Regs,
    Celestine Fernando

    Reply
  30. Awesome work Rajesh… A big thanks for you n the team involved !!

    Reply
  31. Extraordinary Work Rajesh and Team ! We all miss Hollywood Bala a lot. We want him to write again. Atleast once in a Month.

    Reply
  32. இங்கே பின்னூட்டம் இட்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது டீமின் மனமார்ந்த நன்றிகள். இப்படியொரு வரவேற்பை இந்த மின்புத்தகத்துக்கு நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை நண்பர்களே. சரவெடி போல சரமாரியாக இணையமெங்கும் இந்தப் புத்தகம் பரவிக்கொண்டிருகிறது. புத்தகத்தைப் படித்தபின்னர் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்களது அன்பான ஆதரவுக்கு எங்களது நன்றிகள் மீண்டும்.

    Reply
  33. வாழ்த்துகள் நண்பர்களுக்கு

    Reply
  34. வணக்கம் தோழர் கருந்தேள்,
    உங்கள் மின்புத்தகம் மிகவும் அருமை . உங்கள் குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அனைவரின் திறமையும் போற்றத்தக்கது.
    நான் சிறிது நாட்களுக்கு முன்பிருந்து தான் உங்கள் வலைதளத்தை பார்த்து வருகிறேன். ( அறிமுகம் இப்பொழுதுதான் கிடைத்தது ).
    அது முதல் உங்கள் தீவிர ரசிகராக ஆகிவிட்டேன் . பல ஹாலிவுட் படங்களை உங்கள் விமர்சனம் மூலமாகத்தான் பார்த்து வருகிறேன் .
    LOTR தொடரை விடாமல் படித்து வந்தேன். மிகவும் அழகாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது ஒரு மைல்கல்லாக இந்த மின்புத்தகம். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் . வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

    பின் குறிப்பு : மின்புத்தகத்தில் அடுத்த பக்கம் செல்லும் போது இடதுபுறத்தில் இருந்து வலது புறம் செல்லும்படி உள்ளது . அதை சாதரணமாக புத்தகம் படிப்பது போல வலது புறத்தில் இருந்து இடது புறம் செல்லும் படி வைத்திருக்கலாம்.

    Reply
  35. பயங்கரம், இதுவரை லார்ட ஆஃப் ரிங்ஸ் பார்த்ததில்லை, இனிமேலும் பார்க்கப் போவதில்லை, இந்த மின்னூல் ஒன்றே போதும்.. மிக அற்புதம்……அசத்தல்

    Reply
  36. புத்தகத்திற்கு மிகவும் நன்றி . தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் 🙂

    Reply
  37. நிருப்பிச்சிட்டியே பாலா.. Xlent.. Great work.Love you Guys..

    Reply
  38. ஒரு அற்புதமான ,உயற்சி.வெற்றி பெற்றிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.அடுத்த ஆட்டத்துல நம்பிள்கி ஒரு சீட். 🙂

    Reply
  39. Hai Team for Karunthel,

    First I wishes your Works. Today I read Dinakaran Newspaper and I know your Book for How to taken Hollywood Cinema. Now I am download and completly read the book after I will share for my thoughts.

    Many More wishes from
    G.Mehalingam, GG DIGITAL WORKS, VIRUDHUNAGAR.

    Reply
  40. வாழ்த்துக்கள் !

    Reply
  41. அருமையோ அருமை புத்தகம் பக்கா தங்கள் அனைவரும்கும் என் நன்றி இவ்வளவு அருமையான புத்தகத்தை இலவசமாய் அளித்து நீங்கள் மட்டுமே…

    Reply
  42. படிக்க ஆரம்பித்திருக்கிறேன்… ஆனால், ஒரு ஆர்வத்தில் சில பல பக்கங்களை கடந்து செல்கையில் ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை! புத்தகத்தின் பின்னால் இருக்கும் மிகக் கடினமான உழைப்பு தெரிகிறது! வெறும் பாராட்டுக்கள் என்பது மிகச் சாதரணமான வார்த்தையாக இருக்கும்!!!

    நண்பர்களின் உழைப்பிற்கு தலைவணங்குகின்றேன்…

    Reply
  43. அன்பு நண்பர்களே
    வார் ஆப் த ரிங்ஸ் என்ற மின்புத்தகத்தினைப் பற்றி தினகரன் வெள்ளி மலரில் படித்தேன். உடனடியாக டவுன் லோடும் செய்து விட்டேன். என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஆவேசமான உழைப்பு. பராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதன் லேஅவுட் பிரமிக்க வைக்கிறது. நான் இதுவரை லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்தையும் பார்க்கவில்லை, நாவலையும் படிக்கவில்லை. விரைவில் படம் பார்க்க உள்ளேன்.

    நன்றி

    Reply
  44. i am read your book details in dinakaran veali malar. this time very thanks to your team members bala, saravana ganesh, saingivan and all work members godful thanks.

    Reply
  45. // மின்புத்தகத்தில் அடுத்த பக்கம் செல்லும் போது இடதுபுறத்தில் இருந்து வலது புறம் செல்லும்படி உள்ளது . அதை சாதரணமாக புத்தகம் படிப்பது போல வலது புறத்தில் இருந்து இடது புறம் செல்லும் படி வைத்திருக்கலாம். //

    அதுவந்து…நண்பரே……வேண்டுமென்றே தான் வைத்தது….வித்தியாசமா முயற்சிக்கலாமே……..பின்நவீனத்துவம்…….(இப்படி சொல்ல ஆச தான்…ஆனா, இந்த ஒரு option தான் adobe indesignல இருந்திச்சு…)

    Reply
  46. நண்பர்களுக்கு மிக்க நன்றி…படிச்சிட்டு ரிவ்யூ மாதிரி யாராவது எழுதினா……..உபயோகமாயிருக்கும்….

    Reply
  47. many thanks friends.. its a very good guide for kodambakkam

    Reply
  48. Its a gud team n congratz to my cousin bala

    Reply
  49. டாய் பேமானி… கமென்ட் எல்லாம் போட ஆரம்பிச்சிட்டியா?

    Reply
  50. I too am a fan of this book. Reading from Dinakaran about this, I came quickly to download this file. So, please wait for my comment in near future

    Reply
  51. நண்பர்கள்… கருந்தேள்,ஹாலிபாலி,கொழந்த வார் ஆப் த ரிங்ஸ் E BOOK is very nice…its good try.. Deen.

    Reply
  52. அருமையா… அருமை… இந்த மின் புத்தகத்தை படிக்கும் பொழுது, பீட்டர் ஜாக்சன் மட்டும் அல்ல.. ராஜேஷ்-ன் உழைப்பும் தெரிகிறது. எப்படி ஒரு வேலையில் இருந்துகொண்டு இப்படி அனாயசமான உழைப்புடன் ஒரு படைப்பை தர முடிகிறது. அதுவும் இலவசமாக….

    மிக்க நன்றி ராஜேஷ்… வேறு என்ன சொல்ல..

    Reply
  53. வடிவநேர்த்தியும், மொழியின் எளிமையும் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை…
    கடுமையான உழைப்பினை கொட்டி தயார் செய்துள்ளீர்கள்…

    மிக மிக அருமையான, பாதுகாக்க வேண்டிய படைப்பு.

    பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்…

    Reply
  54. It’s great work
    fantastic description
    page to page colourful images
    thanks a lot
    i know a movie behind

    Reply
  55. Superb work , but I can’t download the book directly from the iPhone but I can go through the pages , superb work ( now I will download from my system and I’ll transfer to my iPhone )

    Reply
  56. அருமை நண்பர்களே,

    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
    உங்கள் கடின உழைப்பு தெரிகிறது.
    அருமையான புத்தகத்தை இலவசமாய் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி..

    ராஜேஷ்

    Reply
  57. புத்தகத்தைப் பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தப் புத்தகம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Reply
  58. அன்புள்ள நண்பர்களே…. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவான கருத்துகளுக்கும் எங்களது குழுவின் மனமார்ந்த நன்றிகள். இத்தனை ஆதரவை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம். Thanks a lot folks !!

    Reply
  59. நீங்க எல்லோரும் நல்ல வருவிங்க பாஸ் ! நல்ல வருவிங்க பாஸ்.
    நச்சுனு ! ரெண்டு கமெண்டு போட 20 நிமிஷமா யோசிக்கிறேன் ! ஒன்னும் பிடிபடுல!
    ஆனா! 275 பக்கம் ebook எழுதிட்டு , Slient இறுகிக பாஸ் .
    You guys are really great …..
    Just now downloaded and overviewed the all the page…
    என்னக்கு ரொம்ப பிடிச்ச விசயம் , Detailed Picture with enough information,

    கருந்தேள் கண்ணாயிரம்ம்..
    நீ ebook இராயிரம் எழுத என் வாழ்த்துக்கள்
    Thanks to All…..

    Reply
  60. Guys
    Brilliant and amazing work, cant imagine the efforts you guys have put for bringing this ebook. Hatts off to you all.

    Thanks
    KV

    Reply
  61. இதை ஹாலி பாலி மலையாளத்திலும் மொழி பெயர்க்க எண்ணியுள்ளதை எண்ணி புல்லரிக்கிறோம்:))

    ஷங்கர் அன்றே சொன்னார் கார்த்திக். பாலா மலையாளத்தில் கத்துக்குட்டி என்று. நம்ப வேண்டாம்.

    இந்த மின் புத்தகத்திற்காக உழைத்த அத்தனை நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    பாலா நீர் நல்லா இருடே?

    Reply
  62. Congrats bro. I have read an article about the ebook in Dinakaran newspaper’s sunday supplementary Vasantham. Just started downloading.. By the way I have already seen all the three parts of Lord of the Rings back to back few months before and completely mesmerized. Now look forward to get mesmerized again, in different dimension after reading your book…

    Congrats..

    Reply
  63. Dear Scorp,
    ஆர்வம் என்றெல்லாம் சாதாரணமாக சொல்ல முடியவில்லை …நீங்கள் செய்து இருப்பது ஒரு மகத்தான வெ(ற்)றி படைப்பு என்று சொல்லலாம் . ஹாலிவுட் இல் ஆயிரக்கணக்கான நபர்கள் செய்த விசயங்களை ‘பஞ்சபாண்டவர்கள்’ தருமர் (scorp) ‘ தல’மயில் செய்துள்ளீர்கள்.Hats off team !

    முதல் படைப்பு போல் இல்லாமல், ரொம்ப skilled..a அட்டகாசமாக உள்ளது !

    LHS to RHS இல் (B.E!?) பக்கங்கள் திரும்புவது கண்டு ., ‘scorp’ இன் ஆதிக்கத்தை ரசித்தேன் . ராஜேஷ் எது செய்தாலும் ‘ top to bottom’ நுங்கெடுத்து விடுவார் என்பதை , சாருவின் 6Dec2011 நிகழ்ச்சிக்கு பேனரும் டிசைன் செய்து அதை காமராஜ் ஹால் நிர்வாகியிடம் போராடி, வைப்பதற்கும் ஓடியது நேரிலியே கண்டுள்ளேன் . Such a soldier with smiling face : ) படித்து கொண்டு இருக்கிறேன் …முடிந்ததும் இன்னும் நிறைய பேசணும் Scorp .bye..

    Reply
  64. Fantastic effort guys!

    How about a post on *making of e-book*?

    Reply
  65. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

    Reply
  66. திசைக்கு ஒருவராக இருந்தாலும் சாதனைக்கு தூரம் குறைவு என்பதை மெய்பித்துள்ளீர்கள். ராஜேஸ் ,ஹாலிவுட் பாலா மற்றும் தூக்கமின்றி விடாமுயற்சியுடன் உழைத்து தமிழ்கூறும் நல்லுகத்திற்கு மின் புத்தகம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முதல் எடுத்துக்காட்டாக உள்ளது. நம்ம ஊரை சேர்ந்தவர் ராஜேஸ் என்பதில் கோவைகாரனான நானும் பெருமைப்படுகிறேன். கிராபிக்ஸ் மற்றும் அனிமேசன் பற்றி படிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய மின் புத்தகம் என்பதில் ஐயமில்லை. இன்னொரு விசயம் மின்னூல் தரவிரக்கும் போது பக்ஸ் அலர்ட் வந்தது சரிசெய்ய வேண்டுகிறேன்.
    [கலாகுமரன்]

    Reply
  67. படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்…பிரமிப்பு ஊட்டுகிறது…முழுவதும் படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்…

    Reply
  68. It is an extra ordinary book that’s even free. unbelievable! great effort, kind of never seen before stuff….thanks a billion 2 all of U.

    Reply
  69. இந்தக் கதையை தமிழில் தந்த உங்களுக்கு எனது மிக்க நன்றி.. உங்கள் சேவை இனிதே தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

    Reply
  70. ஒரு ஆங்கில மேகஸினுக்கு நிகராக உள்ளது. எப்படி பாராட்டினாலும் தகும்.
    (இப்படி ஒரு நல்ல பதிவை என்க்கு காட்டிய தினகரனுக்கு நன்றி.மேலும் நான் கருந்தேளுக்கு புதிய வாசகர். சதிஸ்)

    Reply
  71. Jaya Prabhu Ronikk

    Wow !!! Dint expect the book like this from you guys … Have read 2 times … Enjoyed completly … Appreciate your hard works 🙂

    Reply
  72. Sakthi vel

    அசத்தல்….

    Reply
  73. ஏனோ இதுவரை LOTR பார்க்காமல் இருந்தேன், Hobbit படம் இதற்கு prequel + 3D அட்டகாசமாய் இருக்கு என்றதும், LOTR மூன்று பாகங்களையும் தொடர்ச்சியாய் பார்த்து பிரமித்து அமர்ந்திருக்கிறேன்.. twitterஇல் நண்பர் கிஷோர் (@iK2K) இந்த முகவரி பகிர்ந்ததும் மிக மிக மகிழ்ந்தேன்.. உடனே தரவிறக்கியாச்சு.. Hobbit க்கு முன் படிக்க முயற்சிக்கனும்.

    இது போலவே, Matrix Triology-க்கும் தகவல்கள், குறியீடுகள் என ஒரு சுவாரசியமான, கனமான புத்தகம் தேறும். உங்கள் குழுவிடம் அதற்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்..

    இதில் உழைத்த அத்தனைபேருக்கும் மிக மிக நன்றி…

    இப்படிக்கு,
    ஒரு சினிமா காதலன்

    Reply
  74. சூப்பர்யா நண்பா

    Reply
  75. paradox nagenthiran

    உண்மைய சொல்லனும்னா சூப்பர்

    Reply

Join the conversation